Tuesday, December 28, 2010

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.

29 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்! வயிறு வலிக்க சிரித்தேன்!!

Philosophy Prabhakaran said...

// இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...? //

அட அப்படியா... ஆனா உண்மையாவே அவங்களோட மார்கெட்டிங் டெக்னிக்கை பாராட்டனும்... யாருக்கும் ஈசியா தெரியாத மாதிரி, தமிழ் படம் மாதிரியே விளம்பரப் படுத்துறாங்க...

Philosophy Prabhakaran said...

// மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன் //

என்ன இது... அப்படியே பாட்ஷா கட் காப்பி பேஸ்ட்...

Philosophy Prabhakaran said...

// வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..? //

இதெல்லாம் உங்களுக்கு அனானிகள் போட்ட கமென்ட் தானே...

Philosophy Prabhakaran said...

நல்லவேளை இந்த பதிவுக்கும் ஒரு நாலஞ்சு, பத்து பதினாறு டிஸ்கி போடலை :)))

ஜானகிராமன் said...

மிகச் சிறந்த நடை தோழா. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த ஒரு விமர்சனத்துக்காகவே, காந்திபுரம் படம் வெளிவந்திருக்கிறது என்று மகிழ்ந்துகொள்ளலாம்.

//நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?//

ஹா.. ஹா..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா.. ஹா..

மாணவன் said...

suberb........

ஜெயந்த் கிருஷ்ணா said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

வைகை said...

பாத்து சிபி! இவ்ளோ நல்லா விமர்சனம் எழுதினா.... படிக்கிறவுங்க படத்துக்கு போயிற போறாங்க!!

Unknown said...

விமர்சனத்துக்குன்னு ஏதாவது சினிமா தியேட்டர்ல சீசன் டிக்கட்டு வாங்கி வச்சிருக்கீங்களா!?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாத்து மொக்கை படம் பார்த்து தமிழ் சினிமா வை வாழ வைக்கிறதா சொல்லி பாராட்டு விழா எடுக்க போறாங்க!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

suberb........
//

மாணவன் தமிழ் பான்ட் என்ன ஆச்சு. அவங்களோட பொன்னான பணி என்ன ஆச்சு?

வெட்டிப்பயல் said...

//அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச பட//

போஸ்டர்ல ஜூனியர் என் டி ஆரையேக் காணோமே...

இந்தப் போட்டோல இருக்கறது ராம்.

புரட்சித்தலைவன் said...

like........

சேலம் தேவா said...

//புரொனொன்சேஷன் புரொஃபசரு,, //

:-))))))))) சூப்பர் காமெடி சி.பி..!!

THOPPITHOPPI said...

சூப்பர்

shortfilmindia.com said...

சி.பி. அது ஜூனியர் என். டி.ஆர் இல்லை.. ராம் என்று ஒரு நடிகர்.. நடித்த படம்..பேரு சட்டுனு ஞாபகம் வர மாட்டேங்குது.

karthikkumar said...

இந்த மாதிரி படங்களை எல்லாம் தேடி தேடி பார்பீங்களோ....

'பரிவை' சே.குமார் said...

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க.

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
உள்ளேன் ஐயா

தினேஷ்குமார் said...

karthikkumar said...
இந்த மாதிரி படங்களை எல்லாம் தேடி தேடி பார்பீங்களோ....

என்ன பண்றது பங்கு சித்தப்பு சொன்னா கேக்கமாட்றாரே

தினேஷ்குமார் said...

கவுண்டர் பாணில கலக்கியிருக்கீங்க பாஸ் சூப்பர்

தினேஷ்குமார் said...

ஹையா வட

செல்வா said...

//கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் /

ஹி ஹி ஹி .., கடைசியா மொக்க ப்ளாக்னு சொன்னதுக்கு நன்றி ..
ஆனா என்னோட மட்டும்தான் மொக்க ப்ளாக் .. ஹி ஹ ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்படம், டப்பிங் தமிழ்படம், பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாம பாக்கறீங்களே....எனக்கொரு சந்தேகம் தல....
நீங்க வேலை பாக்கறது சென்சார் போர்டிலா?

பாவாடை வீரன்... said...

என்ன இருந்தாலும்... இப்படி ஜாடைமாடையா படம் பயங்கர "ஹிட்" இன்னு சொல்லி இருக்கக்கூடாது.ஹிஹி...

Unknown said...

டப்பிங் படமா இது? என்னா வெளம்பரம் பண்ரானுங்க?

வெட்டிப்பயல் said...

//சி.பி. அது ஜூனியர் என். டி.ஆர் இல்லை.. ராம் என்று ஒரு நடிகர்.. நடித்த படம்..பேரு சட்டுனு ஞாபகம் வர மாட்டேங்குது//

ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா