Showing posts with label ARJUN. Show all posts
Showing posts with label ARJUN. Show all posts

Friday, November 07, 2014

ஜெய்ஹிந்த் 2 - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு கராத்தே  மாஸ்டர்.இந்த மாதிரி  முதல்லயே  காட்டிட்டா  பின்னால அடியாளுங்களை அடிக்கும்போது  50 பேரை ஒட்டுக்கா அடிச்சாலும்  ஒரு  பய  கேள்வி கேட்க மாட்டான். இவரு  எக்சசைஸ் பண்ணும்போது பிட்டுப்பட  ஹீரோயின்  ஒளிஞ்சிருந்து  ஹீரோவைப்பார்த்து  ரசிப்பது  மாதிரி  ஒளியாம அசால்ட்டா  ஹீரோயின் ரசிக்குது.


ஒரு வாட்டி மாடில  துணி  காய வை க்கும்போது   ஸ்லிப் ஆகி   ஹீரோயின்  கீழே  விழ  இருக்காரு. அப்போ  4 கிமீ தாண்டி வாக்கிங் போய்ட்டிருக்கும்  ஹீரோ  ஓடி வந்து  காப்பாத்த  2 பேருக்கும்  லவ்.


இப்டியே  போனா படம் பப்படம் ஆகிடும். அதனால  ஷங்கர்  , ஏ ஆர் முருக தாஸ்   மாதிரி  ஒரு  சமூக அக்கறை உள்ள  ஆளா  ஹீரோவைக்காட்டனும்.

அதுக்கு  ஒரு  கிளைக்கத,ஒரு  ஏழை  பெற்றோர். அவங்க  குழந்தையை  எல் கே ஜி ல சேர்த்த  பிரபல தனி  யார்  பள்ளில   ட்ரை  பண்றாங்க,டொனேசன் லட்சக்கணக்கில்  கேட்கறாங்க. அதைக்கட்ட  கிட்னியை வித்து  சமாளிக்கறார் அப்பா. ஆனா  முழுசாக்கட்ட  முடியல. போனாப்போகுதுன்னு அரசுப்பள்ளில  சேர்க்க வேண்டியதுதானே? அப்டி செஞ்சா படம் அப்பவே  முடிஞ்சிடுமே. எப்படி 2 மணி  நேரம்  இழுக்கறது?


சீட்  கிடைக்காத  துக்கத் தில் அந்த ஏழைப்பெற்றோர்  குடும்பத்தோட  தற்கொலை  செய்யுது.ஹீரோ   எல்லா  தனியார்  பள்ளிகளும் அரசுடைமை ஆக்கனும், அரசே  டேக் ஓவர்  பண்ணனும்னு மீடியா  மூலம்  போராடறார்,

உடனே  வில்லன்  இதை  முறியடிக்க  ஹீரோ  மேல  பொய்யான  ஒரு கொலைக்கேசில்  மாட்டி  விட்டு  ஜெயிலுக்கு அனுப்பறான். இதோட  இடை வேளை. 


 ஹீரோ  எப்படி  தன்  கொள்கைல  ஜெயிக்கறார்? என்பது  மிச்ச  மீதிக்கதை.


ஹீரோவா ஆக்சன் கிங் அர்ஜுன். இவ்வளவு வயசு ஆகியும்  இன்னும்  தன்  ஜிம் பாடியை மெய்ண்ட்டெயின் பண்ணும் அவரைப்பாராட்டலாம்.டைட்டிலைப்பார்த்ததும் நான்  கூட  பிரதமர்  மோடியை  ஹீரோ அந்நிய சக்தி சதி ல  இருந்து  காப்பாத்தும்  கத-னு நினைச்சேன். ஃபைட்  சீனில் அபளாஸ் வாங்கறார்.இதுகும் மேல  என்ன வேணும்?


ஹீரோயின் சுர்தீன் சாவ்லா. வித்யா பாலன் மாதிரிஅகல   முகம், ஆண்ட்ரியா மாதிரி அகல  முதுகு. அவர்  திரையில் வரும்போது  கண்கள் அவரை  விட்டு அகல  மறுக்குது. இருந்தாலும்  முகம்  கொஞ்சம்  முத்தல்  தான்.


காமெடிக்கு  மயில் சாமி. ஆந்திராவில்  வசூல் அள்ள  பிரம்மானந்தம்  இவர்கள் காமெடி  டிராக் ஆல்ரெடி  வடிவேலு  செஞ்சதுதான். இருந்தாலும்  சிரிக்க  முடியுது. 


ஸ்டண்ட்  மாஸ்டர்  பட்டையைக்கிளப்பறார்.  ஓப்பனிங்  ஃபைட்  , ஜெயில்  ஃபைட்  , க்ளைமாக்ஸ்  ஃபைட்  எல்லாம்  ஓக்கே ரகம் 


இசை  காது  வலிக்குது.  எப்போ பாரு  ஹரி பட சத்தம் மாதிரி  இருப்பது  எரிச்சல் . அந்த  குழந்தை நடிப்பு அருமை . கொள்ளை  கொள்ளும்  முகம், 


சும்மா அனுதாபம் தேட அந்த குழந்தையை சாகடித்திருப்பது தவிர்த்திருக்க   வேண்டியது














மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  என்னை மறந்துடு னு நீங்க சொல்லும்போது உங்க கண்ணில் தெரியும் வலியை உணர முடியாதவளா இருப்பேனா நான் ?எப்டி உன்னைக்காதலிச்சிருப்பேன்?-


2  அனைத்துத்தனியார் பள்ளிகளும் அரசுபள்ளி ஆகனும்.அரசே அதை எடுத்து நடத்தனும்.இதுதான் தீர்வு


3  
பில்டிங் FUND 50000 ரூபா. அய்யா.நீங்க கட்ற பில்டிங்க்கு நாங்க எதுக்குங்க டொனேசன் தரனும்?




12 வருசத்துக்கு முன் 15 வயசுப்பொண்ணு க்கு பொரி உருண்டை கொடுத்துக்கரெக்ட் பண்ணுனது நீ தானே? பிரம்மானந்தம் = ஹிஹி யா

5 தப்பை எப்போ உணர்ந்துட்டியோ அப்போவே யார்ட்டயும் மன்னிப்புக்கேட்கத்தேவை இல்லை # JH2

எதுவுமே சாதிக்காம வெறும் மூச்சு மட்டும் விடறது வாழ்க்கை இல்லை


 படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ்


1  
எந்த ஊரா இருந்தாலும் எந்த தியேட்டரா இருந்தாலும் ஷோ டைம்க்கு 10 நிமிஷம் லேட்டா போய் இருட்ல சீட் தேடி் தடவித்தடுமாறுவான் தமிழன்



பிரபல தனியார் பள்ளியில் குழந்தைக்கு LKGசீட் கிடைக்கலைன்னு ஒரு ஏழைக்குடும்பமே தற்கொலை செய்வதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை


LKG ஸ்கூல் FEES கட்ட கிட்னியை வித்து 3000 0 ரூபா ரெடி பன்றதெல்லாம் ஓவர்டோஸ் சென்ட்டிமென்ட்



ஹீரோ எக்சசைஸ் பண்ணும்போது ஹீரோயின் அவரை ஆச்சரியமாப்பாக்குது.அது பாக்கட்டும்னுதான் அண்ணன் ஜிம்க்கே போறாரு


 5
வசூல்வேட்டை நடத்தினாலும் தனியார் பள்ளியில் தன் குழந்தை படித்தால் தான் கவுரவம் என நினைக்கும் மக்களை ப்பற்றிய கதை


6 ஹீரோயின் 15 வது மாடி ல ஸ்லிப் ஆகி ஊசலாடிட்டு இருக்கும்போது ஹீரோ 15*25 = 375 படி ஏறி காப்பாத்திட்டாரு.உடனே லவ்.வாவ்  


 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   கதைக்கு சம்பந்தம்  இல்லைன்னாலும்  முதல் பாக பட ஹிட்  ராசிக்காக  ஜெய் ஹிந்த் 2 என  வைத்தது. டைட்டில்  டிசைன் , மார்க்கெட்டிங்  எல்லாம்  ஓக்கே


2 படம்  மொக்கைப்படம்னு  யாரும்  சொல்லிடக்கூடாதுன்னு சாமார்த்தியமா  சமூக நலக்கருத்தை  கதைக்கருவா  வைத்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   முதல்  பாக  ஹிட்  ராசிக்காக டைட்டிலை  அதே  போல்  வைச்சீங்க . ரைட்டு. ஏன் முதல் பாக நாயகி  ரஞ்சிதாவை இதிலும் நாயகி ஆக்கலை ?
செம  பர பரப்பா  இருந்திருக்கும்  . மிஸ்டு


2  இந்த  மாதிரி   ரமணா  டைப்  கதைல   ஹீரோயின்  காதல்   தியாகக்கதை  எப்பிசோடு  எதுக்கு?


3   பின்  பாதியில்  எதுக்கு   கதை  ஸ்கிப் ஆகுது ?  ஹீரோ  சிங்கப்பூர்  எல்லாம் ஏன்  போகறாரு?


4   சாதா ஆள்   சொல்லும்  அந்தக்கருத்து  எப்படி  மக்களிடம்  போய்ச்சேருது? டிவி  மூலம்னு சால்ஜாப்  சொன்னது  எடுபடலை





சி  பி  கமெண்ட் - செயற்கையான  சமூக அக்கறை,வலிந்து  திணிக்கப்பட்ட  அனுதாபம் சம்பாதிக்கும் காட்சிகள் ,முதல் பாகம் அளவு வரவில்லை, ரொம்ப  மோசம்  இல்லை. பாஸ்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  சுமார்



 ரேட்டிங் =  2.5 / 5







 Surveen Chawla



a







a




 Charlotte Claire

Tuesday, January 08, 2013

மூன்று பேர் மூன்று காதல் - இயக்குநர் வஸந்த் ஜாலி பேட்டி

http://www.starmusiq.com/movieimages/Moondru-Per-Moondru-Kaadhal_B.jpg

அர்ஜுன் எனக்கு சீனியர். சேரன் எனக்குக் கொஞ்சம் ஜூனியர். இந்த சிச்சுவேஷன் எனக்குப் புதுசு. ஏன்னா, இப்போ இருக்கும் அஜித் வேற. 'ஆசை’ சமயத்துல அஜித் வேற. அதே மாதிரிதான் 'நேருக்கு நேர்’ சமயம் விஜய், சூர்யாவும். என் படத்துல நடிச்ச பிறகுதான் பலருக்கு ஸ்டார் அந்தஸ்து வந்துச்சு. ஆனா, ஸ்டார் அந்தஸ்தோட இருந்த ஹீரோவை நான் முதன்முதலா இயக்கினது 'ரிதம்’ படத்தில்தான். அப்ப அர்ஜுன் செம ஆக்ஷன் கிங். ஆனா, 'ரிதம்ல ஆக்ஷன் இருக்காது. ஆக்டிங் மட்டும்தான்’னு ஆரம்பத்திலேயே ஓப்பனா சொல்லிட்டேன்.  



சேரன் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்போ அழகா நிறைவேறி இருக்கு. ஓ.கே. எல்லாரும் காதல்பத்திப் பேசலாமே. படத்தோட காதல் இல்லை... அவங்கவங்க காதல்பத்தி!'' என்று சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்தார் வஸந்த்.    



''இப்பவும் நான் சொல்லிக்கிறேன்... நான்தான் இங்கே ரொம்ப பொடிப் பையன். அதனால, சீனியர் அர்ஜுன் சார் இப்போ பேசுவார். அவரு எதுல சீனியர்னு கேட்கக் கூடாது. எல்லாத்துலயுமே அவர்தான் சீனியர்!'' என்று இப்போதும் விமல் செம ஸ்கோர் செய்து ஒதுங்கிக்கொண்டார்.



''என்ன இப்படி மாட்டிவிடுறீங்க? எனக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனா, அதை இப்ப சொன்னா வீட்ல மாட்டிக்குவேனே. சரி... பரவாயில்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங்ல ஒரு அப்பாவிப் பொண்ணு. பார்த்த நிமிஷமே எனக்குப் பத்திக்கிச்சு. பாரதிராஜா சாரோட 'கல்லுக்குள் ஈரம்’ படத்துல வர்ற மாதிரி. அப்ப நான் ரொம்பச் சின்ன பையன். அது ஒரு கிராமத்துப் பொண்ணு. ரெண்டு மூணு வாரம் க்ரஷ்ல திரிஞ்சேன். அப்புறம் அது அப்படியே மறைஞ்சுருச்சு. இப்ப காதல்னா, அது இந்தியா மேல மட்டும்தான். ஆனா, நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடினப்ப 'சினிமாக்காரனுக்குப் பொண்ணு தர மாட்டேன்’னு சொன்னவங்கதான் அதிகம். அந்த விஷயத்துல பரவாயில்லை விமல்... நீ கெட்டிக்காரன். காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட!'' என்று விமல் முதுகில் செல்ல மாகத் தட்டிக்கொடுக்கிறார் அர்ஜுன்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/3fe32aac-d24d-4db5-9c15-377b826bbbdf_S_secvpf.gif



''அதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். இப்போ வஸந்த் சார் அவரோட காதல்... ஸாரி காதல்கள் பத்திச் சொல்லுவார்!'' என்று விமல் அறிவிக்க, ''கொன்னு... கொன்னு'' என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டிவிட்டுப் பேசத் தொடங்கினார் வஸந்த்.


''எந்த விஷயத்துல அதீத ஆர்வமா இருக்கீங்களோ அல்லது யார் மேல எல்லாம் அதீத அன்பு செலுத்துறீங்களோ... அதுதான் லவ். அர்ஜுனைப் பாருங்க. சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் கழிச்சும் உடம்பை எவ்ளோ ஃபிட்டா வெச்சிருக்கார். அது அவர் தொழில் மேல அவருக்கு இருக்கிற லவ். சேரனுக்கு டைரக்ஷன் மேல லவ். எந்த நேரமும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கார். எனக்கு சினிமா மேல காதல். அது போக, என்ன சொல்ல... பெண்கள் மேல காதலே இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதுக்காக அதை இங்கே சொல்ல முடியாது. என்ன சேரன் கரெக்டா?''



''ரொம்பச் சரி... ஆனா, நீங்க பண்ண இன்னொரு விஷயம் ரொம்ப தப்பு. படத்துல எனக்கும் ஒரு காதல் இருக்குனு சொன்னீங்க. நானும் ஆசை ஆசையா வந்து நின்னா, கடைசி வரை என் ஜோடிகூட ஒரு வார்த்தைகூடப் பேசவிடலை. என் மேல உங்களுக்கு என்ன சார் கோபம்?'' என்று சேரன் பரிதாபமான குரலில் கேட்க, வெடித்துச் சிரித்துவிட்டார்கள் மூவரும்.  


''ஆனா, காதல் எந்த வயசுலயும் வரும். அதுவும் நம்ம கருத்தோட செட் ஆகுறவங்களோட அதிகமா வரும். அம்பது வயசுக்கு மேலயும் வரும். மத்தபடி வாழ்க்கையில ஒரே ஒரு முறைதான் காதல் பூக்கும்கிறதெல்லாம் சும்மா. அது பாட்டுக்கு அப்பப்ப பூத்துக்கிட்டே இருக்கும். அதுவும் வஸந்த் சார் மாதிரி ஆட்களுக்குஎல்லாம் தினம் தினம்கூடப் பூக்கும். ஏன்னா, பூமிக்கு அனுப்பப்பட்ட காதலின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்ல வஸந்தும் ஒருவர்!'' என்று சேரன் நிறுத்த, அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சிரித்த வஸந்த், பிறகு சமாளித்துப் பேசத் தொடங்கினார்.  



''இதுதான் சேரன். மனசுல பட்டதைப் பளிச்னு பேசிடுவார். ரொம்ப ஓப்பன் டைப். எல்லாரும் சேரன் சீரியஸான ஆளு... ஹேண்டில் பண்றது கஷ்டம்னு பயமுறுத்தினாங்க. ஆனா, அவர் என்னைவிட செம ஜாலி பார்ட்டி. நாகர்கோவில்ல ஷூட்டிங். பரபரனு வேலை பார்த்துட்டு இருக் கோம். எனக்குத் தாடியை ட்ரிம் பண்ணக்கூட நேரம் இல்லை. திடீர்னு சேரன் என்னைக் கூப்பிட்டு வம்பா உட்காரவெச்சு, 'அளவா இருந் தாத்தான் அது வஸந்த் தாடி’னு சொல்லிட்டு, அவரே ட்ரிம் பண்ண ஆரம்பிச்சுட்டார். 



இப்போ என்னோட நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் சேரனுக்கும் ஒரு இடம் இருக்கு!'' என்று நெகிழ்ந்த வஸந்தை இறுக்கி அணைத்துக்கொண்டார் சேரன்.


''ஓ.கே. எல்லாம் சூப்பரா முடிஞ்சிருச்சு. இப்போ அப்படியே வெளியே கிளம்பிப் போய் டீ, காபி, வடை, பஜ்ஜினு சில ஃபார்மாலிட்டீஸ் மட்டும் முடிச்சுட்டா, நான் கிளம்பிருவேன்!'' என்று விமல் எண்ட் கார்டு தட்ட, சட்டெனச் சுதாரித்தார் சேரன்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/33751_1.jpg



''டேய்... நானும் ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டே இருக்கேன். எஸ்கேப் ஆகிட்டே இருக்கே. நீ இப்ப ஏதாச்சும் உண்மை பேசியே ஆகணும். இல்லைன்னா உன்னை விடுறதா இல்லை!'' என்று சேரன் மிரட்ட,


''சார்...  நான் அவ்ளோ வொர்த் இல்லை சார். நான் பொறந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துல இருந்த தியேட்டருலதான் 'கேளடி கண்மணி’ படம் ஓடிட்டு இருந்துச்சு. கைக்குழந்தையா இருந்தப்ப அந்தப் பட வசனங்கள்தான் எனக்குத் தாலாட்டு. அப்படி வளர்ந்த நான், இப்ப எப்படி டைரக்டர் முன்னாடி பேசுறதுன்னுதான் கூச்சப்பட்டு ஒதுங்கி நிக்கிறேன்!'' என்று விமல் டபாய்க்க,
''அடப்பாவி... நான்லாம் அப்ப பொறக்கவே இல்லையே!'' என்று அர்ஜுன் சதாய்க்க... அப்புறம் அங்கே நடந்தது... நான்கு பேர்... நான்கு மணி நேர அரட்டை!


நன்றி - விக்டன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqx_fST3LZM3AWmPgpU7Y1B46cERZdgo8V4V2ch9gOIBRAUKiNQbyY-YdT51fRWY0QAPA3bjgW0u4IEE3n2AXOd0iUm8ualKLft8_vcRmMjuFKZUeBH72e-meeqDIFPp0RPdEfECH0rBh4/s1600/5.jpg

Monday, March 19, 2012

மாசி - என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட் ஆஃப் ஆடியன்ஸ் - சினிமா விமர்சனம்

http://farm5.static.flickr.com/4015/4665225547_5f2fba7b71.jpga


வணக்கம் டைரக்டர் சார்.. அது எப்படி ரொம்ப தைரியமா இப்படி ஒரு டப்பா படத்தை உங்களால எடுக்க முடிஞ்சது?


 ஹா ஹா எல்லாம் நேரம் தான்.. நீங்க என்னமோ சூப்பர் ஹிட் படங்கள்ல மட்டுமே நடிச்ச மாதிரியும், இது 1 தான் டப்பா படம்கற மாதிரியும் சொல்றீங்களே.ஹூம்.. என்னத்தை சொல்ல.?


சரி. தமிழர்கள்க்கு உங்க மேல கோபம் வந்தா  என்ன செய்வீங்க?

 அவங்க  நெம்ப நெம்ப நல்லவங்க பாஸ்.. ஒரு இனத்தையே அழிக்க உதவி செஞ்சவரை தமிழ் இனத்தலைவர்னு சொன்னதும் அவங்க தான்.. வெண்ணை மாதிரி வெளிநாட்ல இருந்து இங்கே வந்து நம் இனத்தை அழிக்க புறப்பட்டதொன்னையை அன்னை என்றதும் அவங்க தான்.. டப்பா படம் கொடுத்தாக்கூட டாப்பா வசூல் கொடுத்துடுவாங்க..

அய்யய்யோ.. எனக்கு அரசியல் வேணாம்.. மேட்டர்க்கு வாங்க .. படத்தோட கதை என்ன?

உங்களுக்கு லொள்ளு, குசும்பு எல்லாம் ஓவர்யா.. படம் புக் பண்றப்போ, ஷூட்டிங்க் போறப்ப எல்லாம் கேட்காம படம் ரிலீஸ் ஆகி அட்டர் ஃபிளாப்  ஆன பிறகு கேக்கறீங்களே.. இனிமே இந்தப்படத்தோட கதையை தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க?

 ஹி ஹி .. சும்மா சொல்லுங்க..

அதாவது நீங்க நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர்.. கவுண்டர் ஜாதியா இல்லைன்னாலும் என்கவுண்ட்டர் ஜாதி நீங்க.. பர்சனல் லைஃப்ல எப்படி நீங்க கிடைச்ச ஃபிகரை மடக்கி போடுன்னு ஒரு கொள்கை வெச்சிருக்கீங்களோ அந்த மாதிரி கண்ல தட்டுப்பட்ட ரவுடியை போட்டுத்தள்ளுங்கற கொள்கை உள்ளவர்.. விக்ரம் படத்துல அம்பிகா வை வில்லன்க ஓப்பனிங்க்லயே ஷூட் பண்ண மாதிரி உங்க சம்சாரத்தை தவறுதலா ஒரு கன் ஃபைட்ல கொன்னுடறாங்க.. ரவுடிங்க.. உடனே நீங்க பலி வாங்க.. ஆடியன்சை பழி வாங்க கிளம்ப்றீங்க..






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWLleXK21jjG-6vdvTJWFScRJHN_k32XATX3gNNk-MzY8-OtWMvzZs1Xwp9bzzPKjWiM9QO41dnHkMc5gYsw08IM1dgo0-c3kMw2moGkDR5CPl-IgRpiCmsKKP4DCAhImpbY3JekImms0K/s1600/Maasi-Movie8.jpg

ஆனா படத்துல வேற நிறைய  சீன் இருந்துச்சே..

 அட இருங்க.. வில்லன் உங்களை அடக்க உங்க மேலயே பழி சுமத்தி உங்களையே ஜெயில்ல போட்டுடறான்.. இப்போ இடைவேளை.. தியேட்டர்ல கேட் எல்லாம் மூடியே இருக்கு.. ஒரு பய எஸ் ஆக முடியாது..

 ஹி ஹி ஹி

 ஜெயில்ல இருக்கறப்ப ஹீரோவுக்கும், வில்லனுக்கும் டீல்.. வில்லனுக்கு ஹெல்ப் பண்றதா ஹீரோ சொல்ல வில்லன் கேனத்தனமா நம்பி ஹீரோவை ரிலீஸ் பண்ணி டியூட்டில ஜாயின் பண்ண வைக்கறான்.. ஹீரோ எப்படி 346 பேரை கொலை செஞ்சு 346 வது ஆளா வில்லனையும் கொல்றார்ங்கறது தான் மிச்ச சொச்ச கதை..

 அடேங்கப்பா.. லேடீஸ் கிட்டே வர முடியாது போல இருக்கே?சரி.. வழக்கம் போல எனக்கு 2 ஹீரோயின் புக் பண்ணீங்க.. ஆனா அவங்களை நீங்க சரியான படி படத்துல நீங்களும்  காட்டலை.. அவங்களையும் காட்ட விடலை.. அது ஏன்?

 யோவ்,, நான் கவுரமான டைரக்டர்யா.. சீன் எல்லாம் காட்ட விட மாட்டேன்..

ஓஹோ.. சரி நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு நேத்து ( 19.3.2012) பர்த்டே.. பிறந்த நாளும் அதுவுமா உங்க படத்துக்கு போய் மாட்டிக்கிட்டாராம். உங்க கிட்டே ஏதோ கேக்கனும்கறாரு. எப்படியும் நீங்க பதில் சொல்ல மாட்டீங்க.. அந்த கேள்வியை மட்டும் படிங்க..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_wsSTSt26WQdeK4poYCarTEd1eNh27anAEbpuO5xRComX19Zct4TcXaFb_5hXrTOuBek_Ksw2z1dD0wVHdgo6FhAWhTtIAis5zjvRrl2amNDo-gud-5mGHcFCgHVbeYUnAYZeP-jwQHk/s1600/Tamil+Movie+Maasi+2012+First+look%252CBanner%252CCast%252CWallpaper%252CStill%252CTrailer%252CCrew%252CMovie+Plot%252CBudget%252CPosters%252CPhoto%252C3.jpg

இயக்குநரிடம் கேட்க விரும்பும் கேள்விகள்


1. தன்னோட வாகனம் திருடு போனதை, அதை திருடுனது யார்?னு கண்டு பிடிச்ச ஹீரோயின் ஏன் அதை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லாம, புகார் குடுக்காம  ரவுடி கிட்டே புகார் தர்றார்?



2.  என்கொயரிக்காக ஹோட்டல் வந்த இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ரிசப்ஷன் கேர்ள் கிட்டே  ரூம் நெம்பர் 24 ல யார் தங்கி இருந்தாங்க? சாவி குடுங்கன்னு கேட்டதும் சுவர்ல மாட்டி வெச்சிருக்கற  சாவியை தராம ரெடியா கைல வெச்சிருக்காரு அந்த பொண்ணு ஹய்யோ அய்யோ.. ( அந்த ஜிகிடி ஒரு மஞ்ச மாக்கி போல மஞ்ச கலர் சுடிதார்க்கு மேட்சா ஹி ஹி சாரி சென்சார் கட் )

3.  ஹீரொ அர்ஜூன் தன் அம்மாவின் சிதைக்கு நெருப்பு வைக்க சுடுகாட்டுக்கு வேட்டி சட்டைல வராம என்னமோ காலேஜ்க்கு போற மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டும், ஸ்டோன் வாஸ் சர்ட்டும் போட்டுட்டு வர்றார்.. ஏன்?


4. சிபிஐ ஆஃபீசர்ஸ் அர்ஜூனை விசாரனை பண்றப்ப என்னமோ பிரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி நோட்ஸ் எடுக்கறாங்க.. ஏன் டேப் இல்லையா?

5. அதே மாதிரி அர்ஜூன்கிட்டே பேட்டி எடுக்கற பிரஸ் ரிப்போர்ட்டர் கைல பென்சில் வெச்சிருக்காரு.. பாவம் பேனா கூட இல்லையா?

6. ஹீரோ அர்ஜூன் கதைப்படி ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. ஆனா அவர் ஜீப்பை விட்டு இறங்குனா எங்கிருந்தோ 280 நிருபர்ங்க ஓடி வந்து பேட்டி கேட்கறாங்க..  ஓவர் பில்டப்.. கமிஷனர் வந்தாலே 4 நிருபர்ங்க தான் பாஸ் வருவாங்க..

 7. அர்ஜூன் கூட இருக்கற ஒரு போலீஸ் ஆஃபீசர் ஒரு லேடி ரிப்போர்ட்டர் தோளை பிடிச்சு தேவையே இல்லாம தள்ளி விடறார்.. அப்படி எல்லாம் லேடி ரிப்போர்ட்டரை டச் பண்ணுனா கிழிச்சுடுவாங்க

8. ஹீரோ படத்துல பிச்சைக்காரருக்கு 3 சீன்ல இடது கைல தர்மம் பண்றாரு.. வலது கை புட்டுக்கிச்சா?

9.  ஹீரோயின் மவுண்ட் ரோட்ல நைட் கவுன் போட்டுட்டு அல்லது ஒரு நைட்டி போட்டுக்கிட்டு பட்டப்பகல்ல டான்ஸ் ஆடுது.. அவ்வ்வ்வ்

10. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி.. வேலப்பொழப்பில்லைன்னு 2 ஹீரோயின் புக் பண்ணுனீங்களே.. ஒரு ஆளையாவது ஃபுல்லா யூஸ் பண்ணுனீங்களா?

http://cinespot.net/gallery/d/352360-1/Maasi+tamil+movie+photos+_6_.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எமன் கிட்டேயே எருமை மாடு திருடலாமா? இந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

2.  என்னப்பா ? இது லேடீஸ் வண்டி  மாதிரி தெரியுது?

 என் சம்சாரத்துது சார்..

நீ ஏன் உன் சம்சாரம் வண்டியை எடுத்துட்டு வந்தே?

 அடுத்தவன் சம்சாரம் வண்டியையா எடுத்தேன், என் சம்சாரம் தானே?

 ஓக்கே ஸ்டார்ட் பண்ணிட்டென் எடுத்துட்டு போ..

 என் சம்சாரம் வண்டி எனக்கே ஸ்டார்ட் ஆகலை.. உங்களுக்கு  எப்படி ஸ்டார்ட் ஆச்சு?

சிலருக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள்

3.  போலீஸ் என்னை 10  அல்லது 15 பேரை கொன்னதா சொல்றாங்க.. ராங்க் நெம்பர்..  ஜஸ்ட் 3 தான் இருக்கும்..

4.  நம்ம டிபார்ட்மெண்ட்ல நமக்கே சப்போர்ட் இல்ல சார்.. ஒவ்வொரு என்கவுண்ட்டருக்கும் நாம விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு..


5.  அட.. பின்னால இருந்து பார்க்க நல்லவர் மாதிரி இருக்கீங்களேன்னு வந்தேன்

6.  ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவங்க எல்லாம் பெரிய ஆள் ஆகிடறாங்க.. அவ்வ்வ்

7.  வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு.. ஆனா அதை விலை குடுத்து வாங்கத்தான் யார் கிட்டேயும் தில் இல்லை..

8.  வில்லன் - நான் ஏன் உன்னை இங்கே வரச்சொன்னேன் தெரியுமா>

 ஹீரோ - ஒரு பொறுக்கி  எதுக்கு போலீஸை வரச்சொல்லுவான்?விலை பேச.. அல்லது மிரட்ட..



http://hott.in/wp-content/uploads/2010/05/Maasi-Audio-Launch-7.jpg


சரி, பாட்டை பற்றி சொல்லவே இல்லையே?

 உனக்காக நான் வாழ்வேன், கண்ணே நீ காதல் தேவதையோ அப்டினு 2 பாட்டு தேறுது.. அதுவும் தியேட்டர் விட்டு வெளீல வந்ததும் மறந்துடுது../

ஹீரோயின்ஸ் பற்றி எதுவுமே சொல்லலையே?

 அர்ச்சனா, ஹேமா அப்டினு 2 பேரு.. மொத்தமே 2 பேரும் 20 நிமிஷம் தான் வர்றாங்க.. படம் பூரா ஹீரோ யாரையாவது சுட்டுட்டே இருக்காரு..

 இந்தப்படம் யார் எல்லாம் பார்க்கலாம்? பொழுதே போகாதவங்க... காது வலி வந்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கறவங்க ( டமார் டுமீல் டமார் ), கூட்டமே இல்லாத தியேட்டர் வேணும் ஒதுங்க என நினைக்கும் கள்ளக்காதலர்கள் இவங்க எல்லாம் பார்க்கலாம்..

 புத்திசாலித்தனமா  கேட்கறதா நினைச்சு அப்போ நீஎந்த கேட்டகிரி?ன்னு கேட்றாதீங்க ஹி ஹி ...

யார் எல்லாம் இந்தப்படத்தை பார்க்கக்கூடாது? ஆஃபீஸ்க்கு ஒழுங்கா வேலைக்கு போறவங்க.. வேலை வெட்டி உள்ளவங்க, பெண்கள் இந்த படத்தை டி வி ல கூட பார்க்கக்கூடாது..





http://freemp3.mobiblaze.com/Wallpapers/Movie_Wallpapers/Tamil/M/Maasi/Maasi%201.jpg

 எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர் பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!!!!!!!!!!!!!!!!

இந்த படு டப்பா படத்தை ஈரோடு அபிராமில பார்த்தேன்.. இந்த லட்சணத்துல இந்தப்படம் ஈரோட்ல 4 தியேட்டர்ல போட்டிருக்காங்க.. 


Tuesday, December 28, 2010

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.