Sunday, December 26, 2010

தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-சினிமா விமர்சனம்

Kollywood-news-1359.jpg (300×300)
பெரிய ஹீரோக்கள் படங்கள் அடிவாங்குவதும்,லோ பட்ஜெட்டில் ஆரோக்கியமான படங்கள் வரவேற்பு பெறுவதும் அவ்வப்போது நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அந்த மாதிரி மனதைக்கவரும் ஒரு கிராமத்துக்கதைதான் இது.படத்துக்கு பொருத்தமான டைட்டில் களவாணிப்பொண்ணு என்பதுதான் என்றாலும் ஏற்கனவே களவாணி வந்து விட்டதால் இயக்குநர் இந்த டைட்டிலை வைத்திருக்கலாம்.

படத்தோட ஓப்பனிங்கல கள்ளீக்காட்டு என ஆரம்பிக்கும் பாடல் போடும்போதும்,டைட்டிலில் பிளாக் &ஒயிட்டில் ஸ்டில்ஸ் போடும்போதும் இயக்குநர் தான் வித்தியசமானவர்,சரக்கு உள்ளவர் என ஓப்பனிங்க் கோல் அடித்து நிரூபிக்கிறார்.

கிராமத்து ஹீரோ என்றால் சீவாத தலை,தாடி என்ற ஃபார்முலாவிலிருந்து கொஞ்சம் மாறி ஹீரோ அழகாக தலை சீவி ஆனால் தாடியோடு வருகிறார்.குறை சொல்ல முடியாத நடிப்பு.வரவேற்க வேண்டிய புதுமுகம்.

புது முக ஹீரோயின் வசுந்த்ரா நல்ல முக வெட்டு,இளமையான முக தோற்றம்.நல்ல நடிப்புத்திறமை,முயன்றால் கோலிவுட்டில் கோலோச்ச வாய்ப்பு உண்டு.

Thenmerku+Paruvakatru+(2010)+Tdesi.com.jpg (496×358)
ஹீரோ ,ஹீரோயின் எல்லார் நடிப்பையும் தூக்கி சாப்பிடுவது ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யாவின் நடிப்பு.ஆவேசம் கோபம்,பாசம்,அன்பு எல்லா குணங்களையும் அவரது பாடி லேங்குவேஜ் அநாயசமாக வெளிப்படுத்துவது சிறப்பு.

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு சீனை முதலில் வைத்து விட்டு பின் சரண்யா ஆபத்தில் இருக்கும்போது அந்த மேட்டர் அவருக்கு உதவுவது மாதிரி காண்பித்த லிங்க் ஷாட் சூப்பர்.
கிராமங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டுக்கொள்வார்கள் எனப்தை எதார்த்தமாக காண்பிக்கும் ஆட்டுக்கிடா சண்டைக்காட்சியும் அருமை.

பக்கத்து கிராமத்தில் போய் ஆட்டு மந்தையில் ஆடுகளை ஆட்டையப்போடும் களவாணி குடும்பத்தை சேர்ந்தவர் ஹீரோயின். அம்மாவால் அத்தை பெண்ணை நிச்சயம் செய்யப்பட்டு அவரை மணக்கப்பிரியப்படாத கேரக்டர் ஹீரோவுக்கு.இருவருக்கும் காதல் மலர்வதும்,ஊர்ப்பகை உட்பட பல எதிர்ப்புகளை சந்திப்பதுதான் கதை .

சரண்யா தம்பியின் வீட்டுக்குபோய் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போதே வெற்றிலை பாக்கு மாற்றி நிச்சயத்தை முடிப்பது நல்ல கிராமத்து வழக்கத்தின் பதிவு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கியமான கேரக்டர் ஹீரோவுக்கு முறைபெண்ணாக வருபவரின் நடிப்பு.தன்னை மாமன் மணக்க சம்மதம் இல்லை என்றதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ரொம்ப பக்குவப்பட்ட பேச்சால் அதை ஏற்றுக்கொள்வதும்,அழுகையை அடக்கி கொள்வதும் டாப் கிளாஸ் நடிப்பு.

ஹீரோ ஹீரோயினிடம் சேர்வதை விட பேசாமல் இவர் கூடவே ஜோடி சேர்ந்தால் தேவலை என ஆடியன்ஸ் நினைக்கும் அளவு அற்புதமான பங்களிப்பு அவருடையது.
thenmerku-paruvakatru-1.jpg (898×596)
ஒளிப்பதிவு ஒண்டர்ஃபுல் என சொல்லவைத்த இடங்கள்


1. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தை நிலா மாதிரி ஃப்ரீஜ் பண்ணிகாட்டுவது

2.ஹீரொயின் அறிமுகம் முடிந்ததும் ஹீரோவின் வாழ்வில் தென்றல் வீசப்போகுது எனப்தை சிம்பாலிக்காகக்காட்ட மரங்கள் வசந்த காலத்தின் பூக்களை சொறிவது போல் காட்டும் சீன்.

3.  லாங்க் ஷாட்டில் ஆட்டு மந்தைகளை பொட்டல் வெளி பின் புலத்தில் அம்சமாக காட்டுவது

4. ஹீரோயின் முகத்தில் உள்ள பருவைக்கூட கவிதைக்கு கருவாக்கும்படி க்ளொசப் ஷாட்டில் அழகாக்காட்டும் பல இடங்கள்

5.ஹீரோயின் ஒரு கோழிக்குஞ்சை கொஞ்சும்போது அந்த கோழிக்குஞ்சின் முக சந்தோஷத்தை துல்லியமாகபடம் ஆக்கிய விதம்.

வசனகர்த்தா தென்றலாய் மனம் வருடிய இடங்கள்


1.  பெரிய மனுஷன் வெளில போறப்ப கூப்பிடலாமா?

அப்படி எங்கேடா போறே?

பேப்பர் படிக்கத்தான்.

2. உனக்கு பார்த்திருக்கற புள்ள கலராத்தானே இருக்கு? என்ன முறைக்கறே? கறுப்பும் ஒரு கலர்தானே?

3. அம்மா ,என்னை மாடு மேய்க்கற புள்ளய கட்டிக்கற ஆளுன்னு நினைச்சியா?

ஆமா, இவரு பெரிய தேனி மாவட்ட கலெக்டரு...நீ ஆடு மேய்க்கற.. அவ மாடு மேய்க்கறா...

4. வறுமையும் ,செழிப்பும் பக்கத்து பக்கத்துல இருக்கறதாலதான் இந்த பிரச்சனை.இது இயற்கையோட குத்தமா? மனுஷனோட குத்தமா?

5 ஆட்டைத்தேடற சாக்குல உன் ஆளைத்தேடறியா?மாப்ளே கேக்குறேனேன்னு தப்பா நினைக்கதே...உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கா?

6.  கண்டக்டரு,இந்த வண்டி தேனி போகுமா?

போகும் ஆனா சுத்திப்போகும்.

ஆமா,பெரிய சுற்றுலா பேருந்து,இந்த கண்டக்டருங்க எல்லாம் வாயைக்குறைங்கடா முதல்ல.

7. என்னது,பொண்ணு கண்ணை உத்துபாத்தியா,அடேய் எந்தப்பொண்ணு கண்ணையும் உத்து பாக்காதடா,ஜோலி முடிஞ்சிடும்..

8. எப்படியாவது உன் ஆளு தங்கச்சியை கரெக்ட் பண்ணிடனும்டா...

9. யார்ரா நீ?பொம்பளைப்புள்ளைங்க படிக்கற ஸ்கூல் பகத்துல நிக்கறது,பராக்கு பாக்கறது?

நல்லா பாருங்க,அந்த ஸ்கூல் தான் எனக்கு எதிரே நிக்குது..

10. என்னது .நான் விசாரணைக்கு வரனுமா?நாங்க டியூட்டில இருக்கோம்,டியூட்டில இருக்கறப்ப போலீஸ் ஸ்டேஷன் வர மாட்டோம்.

11. இப்படி ஜெயில்ல போட்டுட்டா எங்க தொழிலை 6 மாசம் யார் ஆர்ப்பாங்க?

அதைபார்க்கக்கூடாதுங்கறதுக்குத்தான் 6 மாசம் ஜெயில் தண்டனை.

12. நீங்க எல்லாம் யாரு அம்மணிகளா?

என் எஸ் எஸ்,கேம்ப் ,மரம் நடறோம்..

அது சரி,நீங்க பாட்டுக்கு நட்டுட்டு போயிடுவீங்க..யார் தண்ணீ ஊத்தறது?ஒரு பாக்கெட் 10 ரூபா

13. டேய் என் சுருக்குப்பைல 1000 ரூபாய் வெச்சிருந்தேன்,காணோம்.

அடடா 16 குவாட்டர் வாங்கி இருக்கலாம் போச்சே...

14. மவனே,ஜெயிலுக்கு போறதைபற்றி கவலைப்படாதே,4 மாசம் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாதான் 4 சனங்க பயப்படும்.

ஆமா உன் பேரன் பழனி மலை தீர்த்தம் எடுக்க போறான் அவனை திருநீறு விட்டு ஆசீர்வாதம் பண்ணு....போறது ஜெயிலுக்கு ...

15. கண்ணாடி வளையல் வேணுமா? ரப்பர் வளையல் வேணுமா?

கண்ணாடி வளையல்

ஏன்? அப்போதான் அடிக்கடி உடையும் ,அடிக்கடி வாங்கித்தரலாம்னா?

ம்ஹூம்,அவ வர்ற சத்தம் காட்டிக்குடுக்குமே....


16. டேய்,இங்கே வா,அந்த அக்கா வளையல் போட்டிருக்கான்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லு இந்த 50 பைசாவை வெச்சுக்கோ...

இதை வெச்சு ஒரு ஃபோன் கூட பண்ண முடியாது,இதை நீயே வெச்சுக்க, நான் ஃபிரீயாவே இந்த சேவையை பண்றேன்.நீ இந்தகாசுல பீடி வாங்கி குடி..

17. நான் களவானி குடும்பத்து பொண்ணுதான் ஆனா அதுக்காக என்னை திருட்டுத்தனமா அடையலாம்னு நினைச்சுடாதீங்க...


18. ஜோசியரே,தம்பி ஆடு மெய்க்கறாப்ல,எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயப்படறாப்ல...சீட்டு ப்பாருங்க

19. உனக்கு ஆஞ்சநேயர் சீட்டு வந்திருக்கு ,ஜென்மத்துக்கும் நீ பிரம்மச்சாரிதான்..

20. பழி உணர்ச்சி ஆயுசுக்கும் நிம்மதியை குலைச்சிடும்.

21. நான் சாக மாட்டேன் அப்படி செத்தா உனக்கு மகளா வந்து பிறப்பேன்...

அம்மா நான் உனக்கு எதுவுமே செய்யலையே..
Thenmerku-Paruvakatru-Audio-Launch-Function-18.jpg (550×828).
 மாடர்ன்கேர்ள் ஹீரோயினை அச்சு அசல் கிராமத்துக்குயிலாய் மாற்றிய மேக்கப்மேன்,இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.
இந்தப்படத்தின் இயக்குநர் பரத் நடித்த கூடல் நகர் படத்தை
இயக்கியவர்.படத்தின் க்ளைமாக்சில் காதலர்கள் ஒன்று சேர்வார்களா? என்ற பதை பதைப்பைத்தான் எல்லா லவ் சப்ஜெக்டுகளும் ஏற்படுத்தும்.. இயக்குநர் அதிலும் வித்தியாசப்பட்டு கிளைமாக்ஸில் அம்மா செண்ட்டிமென்ட் வைத்த விதமும் பாராட்டப்பட வேண்டியதே..

பாடல் வரிகள் அற்புதம்.

ஆத்தா அடிக்கையிலே... நீ ஓடி வந்து தடுக்கையிலே என் மேல் ஒரு கூடை பூ கொட்டுது....இது நல்லதுக்கா?கெட்டதுக்கா?  என்ற பாடல் வரிகள் ஒலிக்கும்போது ஹீரோயின் காட்டும் முக பாவனைகள் சிலிர்க்கவைக்கின்றன,.

களவு போன ஆட்டை தேடும் சாக்கில் ஹீரோ ஹீரோயினைத்தேடி ஊருக்குள் போகும் சீன் செம.

கள்ளச்சிறுக்கி என்னைத்தெரியலையா? பாடலில் பின்னணி இசையாக கொலுசுசத்ததை ஜதியாக்கிய இசை அமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு.
ஹீரோயின் கோபமாக இருக்கும்போது அவரது விடைக்கும் நாசியைக்கூட ரசிக்க வைக்கும் அளவு படமாக்கிய இயக்குநருக்கு ஒரு பூங்கொத்து.

இந்தப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்திருக்கலாம். பொங்கல் வரை அநாயசமாக எல்லா செண்ட்டர்களிலும் ஓடும்.இந்தப்படம் லோ பட்ஜெட் படம் என்பதால் ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லா ஓடுனாலே வெற்றிப்படம்தான்.

எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் -45
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

டிஸ்கி 1-


நித்யானந்தா VS ரஞ்சிதா ரிப்பீட்டு 18 +








டிஸ்கி 2-  


ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய 

அறிவிப்பு



டிஸ்கி 3 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா 

விமர்சனம்



டிஸ்கி 4

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்சனம்

 

26 comments:

வைகை said...

vadai

வைகை said...

நல்ல விமர்சனம்!

KANA VARO said...

அண்ணாச்சி எப்புடி இம்புட்டு படமும் பார்க்கிறீங்க...

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்!

shanmugavel said...

சினிமா விமர்சனத்தில் தனித்துவமாக இயங்குகிறீர்கள்.

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
அப்ப படம் பார்க்கலாம்னு சொல்லுங்க

தினேஷ்குமார் said...

KANA VARO said...
அண்ணாச்சி எப்புடி இம்புட்டு படமும் பார்க்கிறீங்க...

அது ஒன்னுமில்லங்க ஈரோடு டிஷ்டிபூட்டர் நம்ம பாஸ் தான்னு நினைக்கிறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில், தமிழர்கள் மனதிலும் இந்த வாரமும் உங்களுக்குத்தான் முதலிடம். வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

shanmugavel said...
சினிமா விமர்சனத்தில் தனித்துவமாக இயங்குகிறீர்கள்.

நம்ம பாஸ்க்கு கைவந்த கலை விமர்சிப்பதில் வல்லவர்

தினேஷ்குமார் said...

பதிவின் பெயர் : சிபி பக்கங்கள்சி.பி.செந்தில்குமார் இடம் : 1

பாஸ் வாழ்த்துக்கள் மூன்று வாரங்களாக தொடர்ந்து தமிழ் மனத்தில் முதல் இடத்தை விடாமல் பிடித்திருப்பதற்கு

மாணவன் said...

தொடர்ந்து விமர்சனமா கலக்குறீங்களே...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

karthikkumar said...

படம் பார்த்துர வேண்டியதுதான் தல... விமர்சனம் சூப்பர்...

Vinu said...

நம்ம ஏரியாவுக்கும் வந்து பாரு கண்ணா!!!!!!!!!!!!

http://vijayfans-vinu.blogspot.com/

Vinu said...

கொஞ்சம் நம்ம ஏரியாவுக்கும் வந்து பாரு கண்ணா!!!!!!!!!!!!

http://vijayfans-vinu.blogspot.com/

Vinu said...

கொஞ்சம் நம்ம ஏரியாவுக்கும் வந்து பாரு கண்ணா!!!!!!!!!!!!

http://vijayfans-vinu.blogspot.com/

Indian said...

Heroine debuted as Adhisaya (2nd heroine) in vattaaram movie. After that she one of 5 girls in peraanmai directed by Jananaathan.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விமர்சனம்!

Muruganandan M.K. said...

மிகவும் நல்ல விமர்சனம்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புது முக ஹீரோயின் வசுந்த்ரா///

யோவ் அந்த பொண்ணு ஜெயம் கொண்டான், பேராண்மை, காலை பனில நடிச்சிடுச்சு...

Philosophy Prabhakaran said...

// புது முக ஹீரோயின் வசுந்த்ரா நல்ல முக வெட்டு,இளமையான முக தோற்றம்.நல்ல நடிப்புத்திறமை,முயன்றால் கோலிவுட்டில் கோலோச்ச வாய்ப்பு உண்டு. //

நல்ல நடிப்புத்திறமை என்பதை மட்டும் ஒப்புக்கொள்ளலாம்...

Philosophy Prabhakaran said...

// உனக்கு பார்த்திருக்கற புள்ள கலராத்தானே இருக்கு? என்ன முறைக்கறே? கறுப்பும் ஒரு கலர்தானே? //

கரெக்டுதானே...

Philosophy Prabhakaran said...

வரவர டிஸ்கி அலப்பரைகள் ஓவரா போயிட்டு இருக்கே... அதுவும் கொட்டை எழுத்துல போடுறீங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

புது முக ஹீரோயின் வசுந்த்ரா

//

இது பழைய பீசு தல... பெயரு "அதிசயா"
தஞ்சாவூர் பொண்ணுன்னு சொன்னதா கேள்வி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விமர்சனம்...

Unknown said...

நல்ல விமர்சனம் தல, ஆமா ஹீரோயினு பேராண்மை படத்துல வந்தது மாதிரி இருக்கு?