Friday, September 24, 2010

காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்

பெண்களைப்போகப்பொருளாக பயன்படுத்துவதும்,நினைப்பதும் இந்த சமூகத்தின் மாற்ற முடியாத சாபக்கேடு.ஆண்கள் உபயோகப்படுத்தும் பொருள்களைக்கூட மார்ர்க்கெட்டிங்க் டெக்னிக் என்ற பெயரில் பெண்களின் படங்களை கிளாமராகப்போட்டுத்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்’போகட்டும் அதையாவது நாகரீகத்தின் எல்லையோடு நிறுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

சமீபத்தில் வந்த ஷேவிங்க் பிளேடு விளம்பரம் நீட்டா ஷேவ் பண்ணிட்டுப்போனா பெண்கள் எல்லாம் உங்க பின்னாடியே வருவாங்க என்றது.ஒரு பர்ஃபியூம் விளம்பரம் அவர்கள் தயாரிப்பை உபயோகித்தால் புதிதாக மணமான பெண் கூட கணவனை விட்டு விட்டு  உங்கள் பின்னால் வந்து விடுவாள் என்றது.

பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது.23.9.2010 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் காமசூத்ரா காண்டம் விளம்பரம் ஒன்று வந்தது,பெண்களை மிகக்கேவலமாக சித்தரித்த விளம்பரங்களில் அதற்கு முதலிடம் கொடுக்கலாம்.

ஒரு பெண் கோன் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போலும் (மிகக்குறைந்த மேலாடை)
அதில் ஐஸ்க்ரீம் வழிந்தோடுவது போலும்  அது அந்தப்பெண்னின் கைகளில் ஊர்ந்து செல்வது போலும் இருக்கிறது.

முதல் பாய்ண்ட்,இவ்வளவு அநாகரீகமாக எந்தப்பெண்ணும் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.2வது பாய்ண்ட் அந்த விளம்பரத்தின் கீழ் உள்ள வாசகம்.
சாக்லேட்,வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி போன்ற பலவித டேஸ்ட்களில் கிடைக்கும் என்ற வாசகம் மற்றும் எழுத சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.சிறுவர்கள்,டீன் ஏஜ் மாணவிகள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டால் என்ன செய்வது?படத்துக்கு ஏ சான்றிதழ் அளிப்பது மாதிரி விளம்பரங்களுக்கும் சென்சார் வேண்டும்.

முதலில் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு வந்தது மும்பையில்.கடும் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.நேற்று  இரவு சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் ஃபோன் போட்டு விபரம் சொன்னார்.

23 comments:

thiyaa said...

காலம் கேட்டுக் கிடக்குது

ம.தி.சுதா said...

///...ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது ....///
அவங்களுக்கென்ன வியாபாரம் போனால் சரி..

ம.தி.சுதா said...

சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

athaana. cheey. naala velai naan paakalai. naan oru kuzhanthai

எஸ்.கே said...

தொலைக்காட்சிகளில் இதுபோல் சில விளம்பரங்கள் வருகின்றன. குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்க்கும்போது இப்படிப்பட்ட விளம்பரங்கள் தர்மசங்டத்தை அளிக்கின்றன. தாங்கள் சொல்வது போல் விளம்பரங்களுக்கும் சென்சார் போர்ட் வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் said...

தியாவின் பேனா said...

காலம் கேட்டுக் கிடக்குது
ஆமா தியா,நல்லவர்க்ள் எங்கேனு தேடிக்கிடக்குது

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

///...ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது ....///
அவங்களுக்கென்ன வியாபாரம் போனால் சரி..

பணத்துக்காக பிணம் தின்னும் ....

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-

பார்த்துடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

athaana. cheey. naala velai naan paakalai. naan oru kuzhanthai

September 24, 2010 11:23 AM

நம்பிட்டேன் ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

athaana. cheey. naala velai naan paakalai. naan oru kuzhanthai

September 24, 2010 11:23 AM
Delete
Blogger எஸ்.கே said...

தொலைக்காட்சிகளில் இதுபோல் சில விளம்பரங்கள் வருகின்றன. குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்க்கும்போது இப்படிப்பட்ட விளம்பரங்கள் தர்மசங்டத்தை அளிக்கின்றன. தாங்கள் சொல்வது போல் விளம்பரங்களுக்கும் சென்சார் போர்ட் வேண்டும்.

என் கருத்தை ஆதரித்ததற்கு நன்றி

Anonymous said...

நீங்க கொடுத்தது தான் சூப்பரான விளம்பரம்...இது ஒரு வேலைன்னு மெனக்கெட்டு காலையில் 8.26 க்கு டைப் பண்ணி போட்ருக்கீங்களே...அப்புறம் உங்க ?வீட்டுல எப்படி சோறு கிடைக்கும்?

Anonymous said...

வர்ணணையை பாரு..இது ஒண்ணும் சமூக கருத்து சொல்ற மாதிரி தெரியல..அப்பு..பிட்டு படம் பார்த்து பார்த்து கெட்டு போயிட்டீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீங்க கொடுத்தது தான் சூப்பரான விளம்பரம்...இது ஒரு வேலைன்னு மெனக்கெட்டு காலையில் 8.26 க்கு டைப் பண்ணி போட்ருக்கீங்களே...அப்புறம் உங்க ?வீட்டுல எப்படி சோறு கிடைக்கும்?

hi hi நான் மாமி மெச்ல சாப்பிடற விஷயம் உனக்கெப்பிடி தெரிஞ்சுது?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வர்ணணையை பாரு..இது ஒண்ணும் சமூக கருத்து சொல்ற மாதிரி தெரியல..அப்பு..பிட்டு படம் பார்த்து பார்த்து கெட்டு போயிட்டீங்க..
September 24, 2010 2:19 PM

pit படம் பார்ப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2 கோடியே 34,768 பேர்,ஹீம் யார்கிட்டே/

ஊரோடு ஒத்து வாழ்

ஹேமா said...

மனதுக்குக் கஸ்டமான விஷயம் செந்தில்குமார்.நம்ம நாடுகளில் பெண்களை இப்படி அசிங்கப்படுத்துவது அதிகம்.

Unknown said...

நம்ம பேப்பர் படிக்கிறவுங்க முட்டபயபுள்ளைக தானன்னு நெனச்சிடாங்கபோல அந்த பத்திரிக்கைகாரைங்க

சி.பி.செந்தில்குமார் said...

39 PM
ஹேமா said...

மனதுக்குக் கஸ்டமான விஷயம் செந்தில்குமார்.நம்ம நாடுகளில் பெண்களை இப்படி அசிங்கப்படுத்துவது அதிகம்.
September 24, 2010 3:40 PM

நம் நாடுதான் கலாச்சாரத்தைப்பேணிகாப்பதிலும் உலக அளவில் முதலிடம் பிடிக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்க்கை வாழ்வதற்கே said...

நம்ம பேப்பர் படிக்கிறவுங்க முட்டபயபுள்ளைக தானன்னு நெனச்சிடாங்கபோல அந்த பத்திரிக்கைகாரைங்க

அதே,ஹிட் ஆகிட்டா என்ன வேணாலும் செய்யலாம்னு நினைக்கறாங்க.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா...எனக்கொரு சந்தேர்கம்... கண்டம்ன்னா என்னன்னு எனக்கு தெரியும். காண்டம்ன்னா எண்ணத் தலைவா?...(ஹி...ஹி...) நிச்சயம் இதற்க்கு பதில் தேவை!
--

சி.பி.செந்தில்குமார் said...

உங்க தலைவர் சுந்தரகாண்டம் படத்துல சொல்லி இருப்பாரே/?

அப்புறம் ஸ்கூல் படிக்கறப்ப ராமாயணத்துல எத்தனை காண்டம்னு கேட்டாங்க.(இவ்வளவுதான் எனக்கு தெரியும்

என்னது நானு யாரா? said...

எழுதுவதில் சமூக பொறுப்புணர்ச்சி தெரிகிறது நண்பா உங்களிடம். நல்ல ஒரு தகவலையும், அதைப்பற்றிய கண்டங்களையும் பதிவு செய்ததற்காக நன்றி!

இப்போ நானும் கூட உங்களின் Follower ஆகி விட்டேன். இனி தொடர்ந்து வருவேன். நல்ல சிந்தனையுள்ள இளைஞர்கள் தான் உலகத்தின் கனவு. அவர்கள் தான் உலகைத்தை நல்ல நிலைக்குக் கொண்டுச் செல்ல முடியும். நன்றி நண்பா!

karthikkumar said...

தொலைக்காட்சிகளில் இதுபோல் சில விளம்பரங்கள் வருகின்றன. குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்க்கும்போது இப்படிப்பட்ட விளம்பரங்கள் தர்மசங்டத்தை அளிக்கின்றன. தாங்கள் சொல்வது போல் விளம்பரங்களுக்கும் சென்சார் போர்ட் வேண்டும்/// கண்டிப்பாக

tamil said...

en neenga eludhuradhu ellame yokkiyamo?

sex pictures poduradhu?

sex jokes solradhu?

Vulgar-a? ponnungalai patthi varnikkuradhu

idhu oru polappu?

sari vidunga

blog eludhuradhula paathi peru ippadi thaan irukkenga

enna panna

no use machaan

no sex no blog

ahh

payama irundha comment-ai delete panni vidavum