Friday, September 03, 2010

சினிமா சிரிமா -உயர் தர சைவ சிரிப்பகம்

Hot Aishwarya Rai in black photoshoot
சினிமா சம்பந்தப்பட்ட ஜோக்ஸ்.இவை ஆனந்த விகடனிலும்,குமுதத்திலும் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தவை.அரசியல்வாதிகளையும் ,சினிமாகாரர்களையும் கிண்டல் செய்யும்போது நம் மக்கள் மிக மகிழ்ச்சி கொள்வதில் ஒரு உளவியல் ரீதியான காரணம் உள்ளது.நம்மால் அடைய முடியாத ஒரு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே அது.
    1.  நிருபர் - மேடம்,நீங்க ஓவர் ஆக்டிங்க் பண்றதா எல்லாரும் சொல்றாங்களே?

      நடிகை - எனக்கு நடிப்பே வராதுனு சிலர் சொன்னாங்க,அதுக்கு இது எவ்வளவோ தேவலை.

    2. டைரக்டர் சார்,உங்க எல்லாப்படத்துலயும் க்ளைமாக்ஸ்ல ஹீரோ,ஹீரோயின்,வில்லன் எல்லாரும் செத்துடறாங்களே,ஏன்?
     
    சம்பளம்னு கேட்டு எவனும் என் வீட்டு வாசலை மிதிக்கக்கூடாதுனுதான்.
    3.படம் ஓடிட்டு இருக்கறப்ப கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஆள் அடிக்கடி வந்து ஹீரோயினை டச் பண்ணிட்டு போறாரே,எதுக்கு?

    அது வேற யாருமில்லை,படத்தோட டைரக்டர்தான்,டைரக்‌ஷன் டச் இல்லைனு யாரும் விமர்சனம் எழுதிடக்கூடாதே,அதுக்குதான்.

    4. படம் பூரா வில்லன் பபிள்கம் மென்னுக்கிட்டே இருக்காரு,ஒரு வசனம் கூட பேசலையே?

    அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.

    5. டைரக்டர் சென்சார் ஆஃபீசர்கிட்ட ஏன் தகராறு பண்றாரு?அவர் படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களா?

    ம்ஹூம், யு சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டாங்களாம், ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்தாலாவது கூட்டம் வரும்,தயவு செஞ்சு ஏ சர்ட்டிஃபிகேட் தாங்கனு கெஞ்சறார்.

    6.இந்தப்படத்துல ஏகப்பட்ட டர்னிங்க் பாய்ண்ட்ஸ் இருக்குனு சொன்னீங்க,அப்படி ஒண்ணும் இல்லையே?

    என்ன இப்படி சொல்லீட்டீங்க,படம் பூரா ஊட்டில நடக்குது,ஹீரோ 4 தடவை ஊட்டி டூ மேட்டுப்பாளையம் போறாரு,எத்தனை டர்னிங்க் பாய்ண்ட்ஸ் வந்தது,நீங்க கவனிக்கலை?

    7.இந்தப்படம் செம சஸ்பென்ஸ் படம்னு எப்படி சொல்றீங்க?

    படத்தோட கதை என்னனு 4 தடவை பார்த்தாக்கூட எவனுக்கும் தெரியாது.

    8.சாரி,நான் ஒண்ணும் அப்படிப்பட்ட ஆள் கிடையாதுனு ஹீரோயின் டைரக்டர்கிட்ட கோபமா சொல்லிட்டு போறாங்களே,அப்படி என்ன நடந்தது?

    படம் பூரா சேலை கட்டிட்டு  கவுரவமான குடும்பப்பொண்ணா நடிக்கனும்னு டைரக்டர் சொல்லிட்டாராம்.

    9.சினிமால இருந்து அரசியலுக்கு வந்துட்டதால பாதிப்பேரு தமிழ் நாட்டுல சந்தோஷமா இருக்காங்களாம்.

    அரசியலை விட்டும் வந்துட்டீங்கன்னா மீதிப்பேரும் சந்தோஷமா ஆகிடுவாங்க.

    10.அம்மா,தாயே,சாப்பிட்டு 3 நாள் ஆகுதுனு ஹீரோ அடிக்கடி பேசறாரே, ஏன்?

    பஞ்ச் டயலாக் வெக்கச்சொன்னதுக்கு டைரக்டர் பஞ்ச டயலாக் வெச்சுட்டராம்.

    25 comments:

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    kalakkal...appadiye namma pakkamum vaanka...

    ஜெயந்த் கிருஷ்ணா said...

    நல்லாயிருக்கு

    Chitra said...

    படம் பூரா வில்லன் பபிள்கம் மென்னுக்கிட்டே இருக்காரு,ஒரு வசனம் கூட பேசலையே?

    அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.


    .....ha,ha,ha,ha,ha.... sema

    Anonymous said...

    தூள் கிளப்புறீங்க..தமிழ்மணம் பிரச்சனை சரியாயிடுச்சா...ஓட்டுரிமை கிடைச்சிடுச்சா

    ஆர்வா said...

    காமெடி உங்களுக்கு கை வந்த கலைன்னு அடிக்கடி நிரூபிக்கிறீங்க. நமக்குத்தான் அந்த ஏரியா சரியா செட் ஆக மாட்டேங்குது

    தனி காட்டு ராஜா said...

    :)

    சி.பி.செந்தில்குமார் said...

    ரமேஷ்,தப்பா நினைக்காதீங்க.நீங்க பதிவு போடும்போது ஒரு லின்க் அனுப்புங்க ,கண்டிப்பா வர்றேன்.இப்போ உங்க ஃபோட்டோவை ஃபாலோ பண்ணி வர்றேன்

    சி.பி.செந்தில்குமார் said...

    நல்லா இருக்கு என சொன்ன வெரும்பய அவர்களுக்கு ஒரு ஓ போடுங்க

    சி.பி.செந்தில்குமார் said...

    நல்லெண்ண சித்ரா,வருகைக்கும்,ரசித்தமைக்கும் நன்றி

    Ahamed irshad said...

    ஜோக்ஸ் நல்லா இருக்கு..

    சி.பி.செந்தில்குமார் said...

    கவிதைக்காதலா,அதுதான் கவிதை,கட்டுரைல கலக்கறீங்களே,போதாதா?இந்த மாத கோகுலம் கதிர்ல மணிகண்டன் பேர்ல வந்த கட்டுரை உங்களுதா?

    சி.பி.செந்தில்குமார் said...

    சதிஷ்,வாப்பா.அந்தப்பிரச்சனை இன்னும் சரி ஆகலை,அதுதான் ஹெல்ப்புக்கு நீ இருக்கியே

    சி.பி.செந்தில்குமார் said...

    தனிக்காட்டு ராஜா,வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி

    சி.பி.செந்தில்குமார் said...

    அஹமத் இர்சாத்,வருகைக்கும், கருத்துக்கும் ,பாராட்டுக்கும் நன்றி

    ஆர்வா said...

    ஆமா தலைவரே.. கோகுலம் கதிர்ல வர்ற மணிகண்டவேல், ப்ளேபாய் ரெண்டு பேர்லையும் ஏதோ கிறுக்குறேன்

    ஆர்வா said...

    இந்த மாத ஷூட்டிங் வேலை அதிகம் இருந்ததால கோகுலம் கதிர்ல சரியா எழுத முடியலை

    a said...

    //
    அட நீங்க வேற,அவர் பேசுன எல்லா வசனத்தையும் சென்சார்ல கட் பண்ணிட்டாங்க.
    //
    ரொம்ப நேரம் சிரித்த ஜோக்....

    KUTTI said...

    ஜோக்ஸ் நல்லா இருக்கு.

    but, நீங்களா எதுவும் எழுத மாட்டீங்களா?

    சி.பி.செந்தில்குமார் said...

    yokesh,thanks for comenting and coming

    சி.பி.செந்தில்குமார் said...

    mano,i think you are not read my introduction part,all joks are written by me and published in magazines.

    சி.பி.செந்தில்குமார் said...

    adappaavi kavithaikkaadhalaa,playboy,mani,ka.ka 3 name?

    Unknown said...

    நல்லா காமெடி பன்னியிருக்கீங்க

    இடைவெளிகள் said...

    அதிகமா ஜோக் எழுதி அதை முன்னணி பத்திரிகைகளில் வெளியிட்டு வரும் நீங்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற ஏன் முயற்சிக்கக்கூடாது?

    ஜோக்குகள் அனைத்தும் அருமை.

    சி.பி.செந்தில்குமார் said...

    ஐரேனிபுரம் பால்ராசய்யா வருகைக்கு நன்றி.அண்ணே,இதுவரை 8700 ஜோக்ஸ் வந்துள்ளது.கின்னஸ் சாதனைக்கு இன்னும் 3 ஆண்டுகள் உழைத்து 2300 ஜோக்ஸ் பிரசுரமாக்க வேண்டும்.நன்றி உங்கள் வழி காட்டலுக்கு.

    சி.பி.செந்தில்குமார் said...

    சிறுவாணிக் கரையினிலே... varukaikkum ,vaazththukkum நன்றி