Sunday, September 05, 2010

அசால்ட் ஆறுமுகம் வழங்கும் அசமஞ்சம் விருதுகள்

1. இந்த வாரத்தின் சிறந்த விருந்தோம்பல் விடிவெள்ளி விருது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு,தனது மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவித்தமைக்காக.(எதையும் தாங்கும் இதயமும்,உதையும் தாங்கும் உடலும் தமிழனுக்கு இருக்கும் வரை இதெல்லாம்  ஜூஜூபி மேட்டர்.)

2. இந்த வாரத்தின் சிறந்த டூ லேட் டொட்டோடொய்ங்க் விருது அழகிரிக்கு,ஆண்டிப்பட்டி முகாமில் 8700 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அபேஸ் செய்ததாக ஜெ குற்றச்சாட்டு கூறியதற்கு ஒரு மாதம் கழித்து 9000 பாட்டில்கள் வாங்கியதாக பில் சமர்ப்பித்ததற்கு. (தப்பு செஞ்சாலும் டைமிங்க்கா பண்ணக்கூடாதா?)

3. இந்த வாரத்தின் சிறந்த யாருமே வராத டீ கடையில் யாருக்காகவோ டீ ஆற்றும் டீலா நோ டீலா டெரரிஸ்ட் விருது டாக்டர் ராம்தாஸ்க்கு,மாற்று அணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக தி ஹிந்து இதழுக்கு பேட்டி அளித்தமைக்காக. (நீங்க ரெடி,நாங்க ரெடி இல்லையே)

4. இந்த வாரத்தின் சிறந்த பற்றாக்குறை பத்மனாபன் விருது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா லீடருக்கு ,மாதம் ரூ 2 லட்சம் சம்பளம் வாங்கியும் பற்றவில்லை என டெக்கான் க்ரானிக்கல் நாளிதழில் புலம்பியமைக்காக.(நயன்தாரா லீவ் போட்டாக்கூட தமனாவைப்பார்த்து கிடச்சதை வெச்சு திருப்திப்பட்டுக்கறதில்லையா நம்ம தமிழன் அது மாதிரி அட்ஜஸ் பண்ணிக்குங்களேன்?)

5. இந்த வாரத்தின் சிறந்த கட்டிங் மாஸ்டர் கனகராஜ் விருது தயாநிதி அழகிரிக்கு,மது விலக்கு பிரச்சாரம் நடக்கும் இந்த தருணத்தில் ’வ ’எனும் புதுப்படத்தில் கட்டிங்க்கிற்காக பெரிய அளவில் விளம்பரம் செய்ததற்காக.(சும்மா சொல்லக்கூடாது,செம ரசனையான அட்வர்ட்டைஸ்மெண்ட் அது)

6. இந்த வாரத்தின் சிறந்த மைனஸ் பாயிண்ட் மைனாரிட்டி மைனா விருது 
ஜெவுக்கு ,தமிழகத்தில் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறது என கருத்துக்கேட்டதுக்கு.(எல்லாமே வீக் தான்)

7. இந்த வாரத்தின் சிறந்த அழிச்சியாட்டியம் அவ்வை சண்முகி விருது ராணிக்கு,ஆண் போல் வேடமிட்டு 5 மாதம் பணி புரிந்து அங்கே இருந்து ரூ லட்சங்கள் அபேஸ் செய்ததற்கு.(அப்போ 10 மசம் ஒர்க் பண்ணி இருந்தா ரூ 10 லட்சம் அபேஸா?)

8. இந்த வாரத்தின் சிறந்த மர்மக்கதை மன்னன் மாடசாமி விருது ராணுவ அமைச்சர் ஏ கே அந்தோணிக்கு, கொலை செய்யப்பட்ட ராணுவ கேப்டனும்,ராணுவத்தின் மிகப்பெரிய விருதான சவுர்யசக்ரா விருது பெற்றவருமான சுமித் சோலியின் மரணத்தை தற்கொலை என்று அறிக்கை விட்டதற்கும்,பிரேத பரிசோதனை அறிக்கையை  அவரது குடும்பத்தில் ஒப்படைக்காமல் சால்ஜாப்பு சொன்னதற்கும். (எல்லா அரசியல்வாதிகளுக்கும் பிடிச்ச ஜாப் சால்ஜாப்?)

9. இந்த வாரத்தின் சிறந்த  போலி டாக்டர் பொன்னம்பலம் விருது மும்பை ஆனந்த் போசலேவுக்கு,தவறான ஊசி போட்டு ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரின் கையை செயலிழக்கச்செய்தமைக்காக. (அப்போ போலி டாக்டர் ஜோக்ஸ் எழுத்றதுல தப்பே இல்ல?)


10. இந்த வாரத்தின் சிறந்த கூட்டுக்குடும்பத்தின் குடிகேடன் விருது இயக்குநர் சாமிக்கு,உயிர்,சிந்துசமவெளி போன்ற உறவுகளின் உன்னதத்தை கொச்சைப்படுத்திப்படம் எடுத்ததற்காக.(யாராவது அவரை கேரளா கூட்டீட்டு போங்கப்பா,பிட்டுப்படம் எடுத்து காலம் தள்ளிக்கட்டும்.

14 comments:

ப.கந்தசாமி said...

மொதோ போணி. இன்னும் கொஞ்சம் விலாசமா பதிவப் போடுங்க. படிக்க கஷ்டமா இருக்கில்ல. வர்ரவங்க அப்பிடியே திரும்பிப் போயிடக்கூடாதல்லவா?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ நன்றி டாக்டர் சார்,கரெக்ட் பண்றேன்.

புரட்சித்தலைவன் said...

ha...ha...ha...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

எஸ்.கே said...

நல்லாயிருக்கு சார்!

கோவி.கண்ணன் said...

சூப்பர் விருதுகள் :)

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவா,ரசித்ததற்கு நன்றி

Anonymous said...

விருதுகள் பட்டைய கிளப்புது.விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

சி.பி.செந்தில்குமார் said...

ramesh,thanx for coming and taste all

சி.பி.செந்தில்குமார் said...

mr s.k, thanx for coming and told about my contribution as good.

சி.பி.செந்தில்குமார் said...

mr kovi kannan, thanx for coming,and comenting

மணிபாரதி said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

சி.பி.செந்தில்குமார் said...

OK மணிபாரதி சார்.வருகைக்கு நன்றி

sasibanuu said...

முதன் முதலாக 'ஜோக்ஸ்' எழுதுபவர்கள் பற்றிய படிகிறேன் !!

நல்ல தொகுப்பு ... அட்டகாசம் ...

தொடருங்கள் !!!!!