Sunday, September 12, 2010

அரசாட்சி Vs மனசாட்சிபத்திரிக்கைகளைப்படித்தால் முதலிலெல்லாம் நாட்டு நடப்பு தெரியும்.ஆனால் இப்போது காமெடிதான் தெரிகிறது.நிருபர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக ஏதோ  ஒரு பதிலை சொல்லி சமாளிக்கும் நம் அரசியல்வாதிகள் அந்த பதிலை சொல்லும்போது அவர்கள் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்று ஒரு கற்பனை. (அரசியல்வாதிகளுக்கு ஏது மனசாட்சி என கேட்கக்கூடாது,அதான் கற்பனை என்று சொல்லி விட்டேனே?)1.கேள்வி :: ஜெயலலிதாவைக் கேட்டால் மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்கிறார். விஜயகாந்தைக் கேட்டாலும் மக்கள் விரும்பும் கூட்டணி என்கிறார். மக்கள் விரும்பும் கூட்டணி என்றால் என்ன?

முதல்வர் கருணாநிதி: பத்திரிகை நிருபர்கள் விரும்புகின்ற கூட்டணி.


மனசாட்சி.-  மக்கள் விரும்பறது ஒரு ஓட்டுக்கு ரூ 1000.அதைத்தந்துட மாட்டோமா என்ன?

2.கட்சி செயல்பாடுகளில் இருந்த குறையை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி தங்கபாலுவை நீக்க வேண்டும் என பரிந்துரைத்தேன். அதற்காக அவர் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. என் மீது நடவடிக்கை எடுக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. என் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அ‌திகாரம் இருக்கிறது. சட்டசபை தேர்தலின் போது குறைந்தது 109 சீட்டுகளாவது காங்கிரசுக்கு தர வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் பிரமுகர் நிறுத்தப்பட வேண்டும

-இ.வி.கே.எஸ்.இளங்கோவன்!


 
மனசாட்சி - எப்படியோ அடிக்கடி நம்ம பேரு பத்திரிக்கைல வந்துட்டு இருந்தா போதும், அதுக்கு மேல காங்கிரஸ்ல இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
3)""தொழிற்சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, ஒரு சமச்சீரான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல விளைச்சல் தரக்கூடிய விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்,''  - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

 -மனசாட்சி - எப்படியோ கட்சிக்கு கெட்ட பெயர் வந்துடாம இருந்தா சரி.இப்பவெல்லாம் நல்ல பெயர் எடுக்கறதை விட கெட்ட பெயர் எடுக்காம இருக்க ரொம்பப்பாடுபடவேண்டியதா இருக்கே?


4. ""அள்ளிக்கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்'' -  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

 -மனசாட்சி -நமக்கு ஒரு எம்.பி சீட் குடுக்க ரொம்பத்தான் யோசிக்கறாங்க,அதை மட்டும் குடுத்திருந்தா இப்படி குழப்பமான சூழ்நிலை நம்ம கட்சிக்கு வந்திருக்குமா?


5.""தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,''  - ஐ.ஜி., சிவனாண்டி

 மனசாட்சி - அதுல பாதி போலிஸாலதான் நடக்குது.


6. தேர்தலில் 30, 40 "சீட்'களுக்காகவா கட்சி ஆரம்பித்தேன். மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான கூட்டணி அமைப்பேன்'  - தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் .

  மனசாட்சி- இப்படிச்சொன்னாலாவது  அம்மா 25 சீட்டாவது குடுப்பாங்கன்னு பார்த்தா அடிமாட்டு விலைக்கு பேரம் பேசறாங்களே?


7. "தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது'  -  அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா

 மனசாட்சி- எல்லா ரவுடிங்களையும் அவங்களே குத்தகைக்கு எடுத்துட்டா எலெக்‌ஷன் டைம்ல கட்சிப்பணிக்கு நாம என்ன பண்றது?13 comments:

புரட்சித்தலைவன் said...

me first

புரட்சித்தலைவன் said...

ha.......ha.......gud joke.

Chitra said...

"தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது' - அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா

மனசாட்சி- எல்லா ரவுடிங்களையும் அவங்களே குத்தகைக்கு எடுத்துட்டா எலெக்‌ஷன் டைம்ல கட்சிப்பணிக்கு நாம என்ன பண்றது?......அரசியல் நிலைமை, செம காமெடி!

மனசாட்சி: அரசியல் நிலைமையை நினைத்தால் வேதனை.

velji said...

மனசாட்சி சரியாத்தான் பேசுது!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க புரட்சி,ரொம்ப நாளைக்கு அப்புறம் முத வடை உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

சித்ரா,அரசியலுக்கு வர்ற ஐடியா இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

வேல்ஜி,உன்க முத வருகைக்கும்,கமெண்ட்டுக்கும் நன்றி

karthikkumar said...

கலக்குங்க செந்தில் சார்

Anonymous said...

கான்செப்ட் ரொம்ப நல்லாருக்கு.அரசியல் விமர்சனங்கள் நல்லா வருது உங்களுக்கு.தொடருங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

thanks karthi,kalakkiduvom

சி.பி.செந்தில்குமார் said...

sathish,thanx for coming.as per your statement the politics critics is suit to me,i c then which is not suit to me?

hi hi hi ,summa thamaas,dont be angry

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

Um..Um... Manasatchchiku Neram sariyilapola... Kalakkunga CP ..abcdef...Z care full (not only "B")

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.ஏ.சரவணக்குமார் vaangka,நாட் ஒன்லி பி எனில் என்ன அர்த்தம்?