Saturday, September 11, 2010

துரோகி -சினிமா விமர்சனம்

அக்னி நட்சத்திரம் படத்தில் வருவது போல் இரண்டு நண்பர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதும்,இருவருக்கும் ஒரு பிரச்சனை வரும்போது இணைந்து எதிரியை வீழ்த்துவதும்தான் கதை.
படத்தோட ஓப்பனிங்கில் கெஸ்ட் ரோல் செய்தாலும் அதை பெஸ்ட் ரோல் ஆக மாற்றிய பூஜாவுக்கு ஒரு பூங்கொத்து.அழுகிற காட்சியில் கூட அழகாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் பூஜாவும் ஒருவர்.ஆனால் கஜினி படத்தில் அசின் மடார் என மட்டையால் அடிக்கப்பட்டு வில்லனால் சாகடிக்கப்பட்ட காட்சி கொடூரம் இதிலும் .இயக்குநர் இன்னும் கொஞ்சம் மென்மையாக அந்த காட்சியை கையாண்டிருக்கலாம்.

சத்ரியன் படத்தில் விஜயகாந்த்தின் ரவுத்திரம் எப்படி வந்தது என்பதை விரிவான ஃப்ளாஷ்பேக்கில் காட்டியது போல் இதிலும் ஒரு நீண்ட ஃப்ளாஷ்பேக் உண்டு,ஆனால் அதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

அநியாயத்தைக்கண்டு பொங்கி எழும் சமூக சேவகி பூஜா (டீச்சர்) வில்லன் க்ரூப்பால் கொல்லப்படும்போது 2 நண்பர்கள் கம் மாணவர்கள் அதைப்பார்த்து கொலையாளியை திட்டம் போட்டு தாக்குகிறார்கள்.போலீஸ் விசாரணையில் அடிக்கு பயந்து ஒருவன் அடுத்தவனை காட்டிக்குடுத்து துரோகி ஆகிறான்.அப்போ வளரும் வன்மம் கடைசி வரை தொடர்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் அந்தப்பையனை விசாரிக்கும்போது ஒரு ஃபோன் வருகிறது.உடனே ஃபோனை எடுத்துப்பேசிய எஸ்.ஐ அந்தப்பையனின் அம்மாவிடம் “நீ உன் புருஷன் கூடப் படுத்தியா? இப்போ ஃபோன் பண்ணுனானே அவன் கூடப் படுத்தியா?எனக்கேட்பது குரூரம் என்றாலும் போலீஸ் ஸ்டேஷன்களில் அப்படித்தானே நடக்கிறது?

இவர்தான் ஸ்ரீகாந்துக்கு ஜோடி,இவரது நெருக்கமும்,காதலில் காட்டும் இறுக்கமும் ரொம்ப ஓவர்,இருந்தாலும் ரசிக்க முடிகிறது.பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவை ஹீரோயின்(கள்) விழுந்து விழுந்து காதலிப்பது போலும் ஹீரோ ஏதோ போனால் போகிறது என்று ஒப்புக்கு சப்பாணியாக லவ் பண்ணுவது போலும் காட்டப்படுவது மேல்சாவனிசம் தவிர வேறொன்றும் இல்லை.

ஸ்ரீகாந்த் க்ளோஸ் கட்டிங்,மும்பை ஸ்டைல் மீசை என ஆள் கலக்கலாக வருகிறார்.இவரது கேரக்டரைசேஷனில் இயக்குநர் ஒரு தவறு செய்து விட்டார்.இவரை இன்ஸ்பெக்டராகப்போட்டு விஷ்ணுவை(வெண்ணிலா கபாடிகுழு,பலே பாண்டியா ஹீரோ) ரவுடியாகக்காண்பித்திருக்க வேண்டும்.இயக்குநருக்கு என்ன நெருக்கடியோ?

விஷ்ணு அவரளவில் நன்றாக நடித்திருந்தாலும் இன்னும் பயிற்சி தேவை.போலீஸ் கேரக்டருக்காக சூர்யா,டாக்டர் ராஜசேகர் செய்த ஹோம் ஒர்க்கை எல்லாம் ஃபாலோ பண்ணனும்.(காக்க காக்க,இதுதாண்டா போலீஸ்)

இயக்குநருக்கும், விஷ்ணுவுக்கும் ஒரு கேள்வி.எந்த ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாடியோடும், ஃபங்க் தலையோடும் வர்றார்? (அட்லீஸ்ட் ஐயப்ப சாமிக்குமாலை போட்டிருக்கார் என்றாவது சமாளித்து இருக்கலாம்.)
(பூனம் பஜ்வா)
விஷ்ணுவுக்கு ஜோடி.முன் பின் தெரியாத ஒரு நபருக்கு பப்ளிக் ப்ளேஸில் ஒரு 20 வயசுப்பெண் முத்தம் கொடுப்பதும், இப்போ என்ன முத்தம் குடுத்தா கற்பா போச்சு என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.பெண்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
படத்தோட மெய்ன் கான்செப்ட் ஹீரோக்களின் முன் விரோதமும்,நட்பும்தான்.ஆனால் 2 ஹீரோயின்களின் காதல் காட்சிகளில் ஹீரோக்கள் காணாமல் போகிறார்கள்.இந்த இயக்குநர் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை எடுத்தால் பிரமாத வெற்றி அடைவார் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சிற்சில காட்சிகளில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது,
ஹீரோவின் அப்பா ஒரு அர்ச்சகர்,அவருக்கு பையனை அவனது ரவுடித்தனத்தை பிடிக்காததால் சின்ன வயசுல இருந்தே அவனைக்கண்டு கொள்வதில்லை.2 பேருக்கு கோயிலில் நடக்கும் உரையாடல்.

”என் பையன் செத்து 18 வருஷம் ஆச்சு.”

எங்கப்பா பொறந்து 50 வருஷம் ஆச்சு,அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணனும்”

போலீஸ் இண்ட்டர்வியூவுக்கு செல்லும் விஷ்ணுவை ஸ்ரீகாந்த் விஷ்ணுவின் தங்கையுடன் ஜல்சாவில் இருப்பது போல் செட் பண்ணப்பட்ட செல்ஃபோன் சவுண்ட் மூலம் அவரை டார்ச்சர் செய்வது ரசனையான சீன் என்றாலும் மோசமான முன்னுதரணம்.(இனி இதைப்பார்த்து எத்தனை பேர் இதே மாதிரி சீன் வைக்கப்போறாங்களோ?)
இவர் ஆடும் குத்தாட்டம் சி செண்ட்டர் ரசிகர்களுக்கு செம டானிக்.டீசண்ட்டாக அந்த குத்துப்பாட்டை எடுத்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

வசனகர்த்தாவின் தயவில் சில பளிச்கள்.

1.மாப்ளை போலீஸ்க்கு ட்ரை பண்றாரு,அவர் ஃபிரண்டு நீ?

பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ட்ரை பண்றேன்.

2.நீங்க லவ் மேரேஜா?அரேஞ்ஜ்டு மேரேஜா?

2ம் தான்.

புரியலையே?

லவ் தனி, மேரேஜ் தனி,ஒருத்தியை லவ் பண்ணுனேன்,வேற ஒருத்தியை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.

3.பொண்ணைப்பார்த்தா பையன் வெட்கப்படறான்,பையனைப்பார்த்தா பொண்ணோட அம்மா வெட்கப்படுது,என்னய்யா நடக்குது இங்கே?

4.துரத்தி துரத்தி உன்னை லவ் பண்றேன்னு பயமா இருக்கா?இந்தப்பிரச்சனைக்கு ஒரே சொல்யூஷன் தான், பேசாம என்னை லவ் பண்ணிடு,ஆல் பிராப்ளம் சால்வ்டு

ஓடும் ரயிலில் பயணம் செய்யும் ஹீரோயின் ஓடி வரும் ஹீரோவுக்கு கை கொடுத்து ஏற்றி விடும் காட்சி ரொம்ப அசிரத்தையா எடுக்கப்பட்ட காட்சி,ஒரு ரிஃப்ளக்‌ஷன் கூடவா ஹீரோயின் கிட்ட் இருக்காது?

படத்தின் வில்லனாக வரும் தியாகராஜன் மலையூர் மம்பட்டியான்,நீங்கள் கேட்டவை படத்துக்கு பிறகு இதில் ஜொலிக்கிறார்.மிரட்டலான் நடிப்பு, ஆகிருதியான தோற்றம்.(இந்தப்படத்தில் பிரசாந்த் ஏன் நடிக்கலை?).ஒளிப்பதிவு ரொம்ப மோசம்.பாடல்கள் ,இசை சுமார் ரகம்.

படம் பாஸ் ஆகி விடும்.

பி,சி செண்ட்டர்களில் 30 நாட்கள் ஓடும்.ஏ செண்ட்டர்களில் ஓட இன்னும் விளம்பரம் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்தவிகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேட்டிங் -ஓகே

23 comments:

Unknown said...

விமர்சனம் ஓகே..
மார்க் போடறதுல துரோகி...
41 போட்டா ஜஸ்ட் பாஸ்க்கு மேல தானே...
எ செண்டர்ல விளம்பரம் பண்ண...ஜாஸ்தி செலவாகும்...
அப்புறம் அந்த காச எடுக்க திரும்பவும் விளம்பரம் பண்ணவேண்டும்..
இப்படி செத்து செத்து விளையாட ஜி வி ஆவியா வரணும்..

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,ஆனந்த விகடன்ல 40 மார்க் போட்டா அந்தப்படம் ஓகே நு அர்த்தம். பெரும்பாலும் 35 டொ 39 தான் மார்க் வரும்.மணிரத்னம்,சஹ்ங்கர், கமல் படங்களுக்கு மட்டும் 45 டொ 50 மார்க் வரும்.அதனுடைய அதிகபட்ச ஸ்கோர் உதிரிப்பூக்கள்(65) நாயகன் (60)

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்க விமர்சனம் துரோகம் பண்ணாதே... தைரியமா படம் பாக்க்கலாமா...

சி.பி.செந்தில்குமார் said...

ம்,வெரும்பய அவர்களே,பார்க்கலாம்.ஆனா மிரட்டறீங்களே,இப்ப எனக்கே டவுட் ஆகிடுச்சு.

karthikkumar said...

இந்த படம் எப்போ ரிலீஸ் ஆச்சுனு சொல்ல முடியுமா திருப்புர்ல இதபத்தி ஒரு அறிகுறியும் காணோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paakkalaam

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்திக்,திருப்பூர்ல நேற்றே ரிலீஷ் ஆகி இருக்கே,2 தியேட்டர்ல,போஸ்டர் பார்க்கலையா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,படம் பார்த்தாச்சா?

karthikkumar said...

pakala senthil sir seekiram boss movie vimarsanam podungalen

அ.முத்து பிரகாஷ் said...

செந்தில் சார் ... ஹே ராம்,இருவர் ... இந்த இரண்டு படத்துக்கும் விகடன்ல எத்தனை மார்க் போட்டங்கன்னு சொலுங்களேன் ... நான் பாத்ததுலே சிறந்த இரு படங்களா இந்த இரண்டை தான் நினைக்கிறேன் (உதிரி பூக்கள் பாக்கல ..)

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்தி,பாஸ் படம் பார்த்துடேன்,டைப் பண்ணிட்டு இருக்கேன்,4 மணிக்குள்ள போட்டுடுவேன்னு நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

நியோ சார்,இருவர் படத்துக்கு 44 மார்க்,ஹே ராம்க்கு 46.ஆனா 2 படங்களுமே படத்தின் தரத்துக்கு ஏற்ப ஓடலை.தமிழ் ரசிகர்களின் தீர்ப்பு சில சமயம் விசித்திரமானதாக இருக்கும்

அ.முத்து பிரகாஷ் said...

சார் .. உதிரி பூக்களும் நாயகனும் ஹே ராம்,இருவர் படத்தை விட பெரிதும் சிறந்தவைன்னு நீங்க நினைக்கிறீங்களா ... தமிழின் சிறந்த பத்து படங்கள்ன்னு ஒரு பதிவு நீங்க போடுங்களேன் .. உங்களோட விமர்சன பார்வை எனக்கு பிடிச்சிருக்குதனால கேட்கிறேன் ... நான் பொதுவா படங்களே பார்க்கிறதில்ல .. உங்க லிஸ்ட் எனக்கு செலக்ட்பண்றதுக்கு பயன்படும் சார் ..அதான்...

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு வாரம் டைம் குடுங்க,சில புள்ளி விவரங்கள் கலெக்ட் பண்ண வேண்டி இருக்கு.என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.இருவர் மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் இனி வரவே முடியாது,சிறந்த ஆவணப்படம்.ஹே ராம் நல்ல மேக்கிங் என்றாலும் அதில் உள்ள காந்தீயத்ததுவத்தை இன்னும் தெளிவாகக்காட்டி இருக்கலாம் என்றாலும் அதில் உள்ள கமலின் அதீத உழைப்பை மறுக்க முடியாது.

அ.முத்து பிரகாஷ் said...

நன்றி செந்தில் சார் ... ஒரு வாரமென்ன ... பத்து பதினைஞ்சு நாள் கூட எடுத்துக்குங்க ... ஆனா மறந்துடாதீங்க சார் ... உங்களுக்கு பிடித்த பத்து படங்கள நான் கேட்கல ... தமிழின் சிறந்த பத்து படங்கள் ... தமிழின் சிறந்த பத்து படங்கள்.... மறந்துடாதீங்க சார் ... நன்றி தோழர் !

Mohan said...

நச்சுன்னு இருக்கு விமர்சனம். இப்போதைக்கு இந்தப் படம் பார்க்க முடியுமான்னு தெரியலை!

மாயாவி said...

விமர்சனம் நல்லாயிருக்கு!
ஆனால் சன் டிவி மாதிரி படத்தோட முழுக்கதையையும் சொல்றது/ எழுதுறதுதான் கொஞ்சம்.........!!!

சி.பி.செந்தில்குமார் said...

மோகன்,டோண்ட் ஒர்ரி,சன் டி வி ல சீக்கிரம் போடுவாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

மாயாவி,தங்கள் ஆலோசனைக்கு நன்றி,அந்தக்குறையை சரி செய்கிறேன்,அடுத்த திருப்பூர் விமர்சனத்தில்.படம் பார்க்காதவர்கள்,பார்க்க முடியாதவர்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கட்டும் என்று நினைத்தேன்

மதன்செந்தில் said...

ஆனந்த விகடனின் இது வரை அதிக மதிப்பெண் வாங்கிய படம்
16 வயதினிலே 67.5
ஹேராம் 60
உதிரிப்பூக்கள் எனக்குத்தெரியவில்லை
இதை அடுத்து காதல்கோட்டை 58

மதன்செந்தில் said...

செந்தில் இதுவரை ஷங்கரின் எந்த படமும் 45 ஐ தாண்டியதாக நினைவில்லை.. கமலின் படங்கள், தங்கரின் படங்கள் தாண்டி இருக்கிறது.. பாலாவின் படமும் தாண்டி இருக்கிறது.. நான் 17 வருடங்களாக ஆனந்த விகடன் படிக்கிறேன் நான் வாங்கி படித்ததில் ஹேராம்தான் அதிகம், அதை அடுத்து காதல் கோட்டை58, அழகி 52, சேது 50, ஒன்பது ரூபாய் நோட்டு , குருதிபுனல் 48, போன்ற படங்கள் தான் அதிக மதிப்பெண் பெற்றவைகளாக எனக்கு தெரிகிறது. அன்பே சிவமே 44மார்க் தான் வாங்கியது எனக்கு அப்போது செம காண்டை கொடுத்தது. விஜய் படம் எவ்வளவு நல்லா இருந்தாலும் 42ஐ தாண்டாது உதாரணம் போக்கிரி, விஜய் படத்தில் அதிகம் மார்க் வாங்கியது சச்சின். சாதாரண மசாலா படங்களின் மார்க் 44 தான் அதிக பட்சம். 40 மார்க் வாங்கும் படங்களே பார்க்க தகுந்ததாகதான் இருக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

மதன்,பின்னீட்டீங்க.உங்க ஞாபக சக்தி அபாரம்

IKrishs said...

Alagi ku 48 markunnu ninaikiren...


//Senthil...Yethiraparkappdum vikatan mark concept puthumaiyanathu! valthukkal..Thodarungal..