Showing posts with label மாடலிங்க். Show all posts
Showing posts with label மாடலிங்க். Show all posts

Friday, September 24, 2010

காமசூத்ரா காண்டம் விளம்பரத்தின் அத்துமீறலும்,பொங்கி எழுந்த மாதர்சங்கங்களும்

பெண்களைப்போகப்பொருளாக பயன்படுத்துவதும்,நினைப்பதும் இந்த சமூகத்தின் மாற்ற முடியாத சாபக்கேடு.ஆண்கள் உபயோகப்படுத்தும் பொருள்களைக்கூட மார்ர்க்கெட்டிங்க் டெக்னிக் என்ற பெயரில் பெண்களின் படங்களை கிளாமராகப்போட்டுத்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்’போகட்டும் அதையாவது நாகரீகத்தின் எல்லையோடு நிறுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

சமீபத்தில் வந்த ஷேவிங்க் பிளேடு விளம்பரம் நீட்டா ஷேவ் பண்ணிட்டுப்போனா பெண்கள் எல்லாம் உங்க பின்னாடியே வருவாங்க என்றது.ஒரு பர்ஃபியூம் விளம்பரம் அவர்கள் தயாரிப்பை உபயோகித்தால் புதிதாக மணமான பெண் கூட கணவனை விட்டு விட்டு  உங்கள் பின்னால் வந்து விடுவாள் என்றது.

பட்டியல் போட்டால் பக்கங்கள் பத்தாது.23.9.2010 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் காமசூத்ரா காண்டம் விளம்பரம் ஒன்று வந்தது,பெண்களை மிகக்கேவலமாக சித்தரித்த விளம்பரங்களில் அதற்கு முதலிடம் கொடுக்கலாம்.


ஒரு பெண் கோன் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போலும் (மிகக்குறைந்த மேலாடை)
அதில் ஐஸ்க்ரீம் வழிந்தோடுவது போலும்  அது அந்தப்பெண்னின் கைகளில் ஊர்ந்து செல்வது போலும் இருக்கிறது.

முதல் பாய்ண்ட்,இவ்வளவு அநாகரீகமாக எந்தப்பெண்ணும் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை.2வது பாய்ண்ட் அந்த விளம்பரத்தின் கீழ் உள்ள வாசகம்.
சாக்லேட்,வெண்ணிலா,ஸ்ட்ராபெர்ரி போன்ற பலவித டேஸ்ட்களில் கிடைக்கும் என்ற வாசகம் மற்றும் எழுத சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள்.

ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி கேவலமான விளம்பரத்தை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.சிறுவர்கள்,டீன் ஏஜ் மாணவிகள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டால் என்ன செய்வது?படத்துக்கு ஏ சான்றிதழ் அளிப்பது மாதிரி விளம்பரங்களுக்கும் சென்சார் வேண்டும்.

முதலில் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு வந்தது மும்பையில்.கடும் கிளர்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.நேற்று  இரவு சென்னையிலிருந்து ஒரு பத்திரிக்கை துணை ஆசிரியர் ஃபோன் போட்டு விபரம் சொன்னார்.