Saturday, September 11, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் - சினிமா விமர்சனம் - காமெடி கலாட்டா


சந்தானம் ஹீரோவா? ஆர்யா ஹீரோவா? என்று கேள்வி கேட்கும் அளவு சந்தானத்தின் டாமினேஷன் தூக்கல் ரகம் என்றால் படம் முழுக்க அவர் தூவிச்செல்லும் ஜோக் மழை கலக்கல் ரகம்.வேலை இல்லாத வெட்டாஃபீஸர் ஆர்யா,ஒரு காலேஜ் லெக்சரரை காதலிக்கிறார்.(நயன்தாரா ஆர்யாவின் கொழுந்தியா என்று திரைக்கதையை கொண்டு செல்வதில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது.) லாஜிக்,கீஜிக் என்றெல்லாம் கவலைப்படாமல் இயக்குநர் நகைச்சுவையில் பின்னிப்பெடெலெடுக்கிறார்.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஆர்யா அரியர் எக்சாமுக்கு பிட் எடுத்துப்போகும்போது அவரது குடும்பம் வாழ்த்தி வழியனுப்பும் காட்சி செம காமெடி.பிட் எடுத்துட்டுப்போறது பெரிய விஷயமில்லை,பிட் அடிச்சாவது பாஸ் ஆகனும் என அண்ணன் சொல்லும்போது அரங்கம் அதிர்கிறது.மச்சி,நீ என்னை டிராப் பண்ண வேணாம் ,ராசி இல்லை என செண்ட்டிமெண்ட் பேசும் ஆர்யாவிடம் சந்தானம் “சரஸ்வதி தேவியே வந்து உன்னை டிராப் பண்ணினாலும் நீ பாஸ் ஆகமாட்டே” என நக்கல் அடிப்பது தூள்.
பேப்பர் பிட்டை நீ எடுத்துட்டு வந்ததற்குப்பதிலா ஏதாவது ஜாக்கெட் பிட் எடுத்துட்டு வந்து வித்தாலாவது ஏதாவது லாபம் கிடைக்கும் என வாருவது செம சிரிப்பு.எந்தெந்த பிட் எங்கெங்கே இருக்கு என அடையாளம் காட்டும் மெயின் பிட்டை தொலைத்து ஆர்யா அவதிப்படுவதும், பஸ்சில் வரும் நயன்தாரா அதை குடுப்பதும் ரகளை என்றால் எக்சாம்  ஹாலில் நயனே எக்ஸாம் சூப்பர்வைசராக நிற்பது குபீர் சிரிப்பு.

ஆர்யா கூட எக்ஸாம் எழுத வரும் அரியர்மேட் ஆறுமுகம் சந்தானத்தை காட்டி,”இவன் யாரு,உன் அல்லக்கையா?” என நக்கலாகக்கேட்க சந்தானம் கொஞ்சமும் அசராமல் ,”என்னை கலாய்க்கறாராம்”  என பந்தை சிக்ஸர் அடிக்கும்போது தியேட்டரில் விசில் அடங்க 3 நிமிஷம் ஆகுது.மனைவி டம்ளரில் தரும் பாலை குடிக்கும் அந்த ஓல்டு மேனைப்பார்த்து ,”ஏன்,உன் பொண்டாட்டி நைட் உனக்கு பால் தர்லையா? “ எனக்கேட்கும்போது இலை மறை காய் மறையான காமெடி வெளிப்படுகிறது.(சென்சார் இந்த இடத்துல தூங்கிடுச்சா?).

PRACTICE MAKE A MAN PERFECT (பயிற்சிதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் என சந்தானம் கருத்து சொன்னாக்கூட ஜனங்க ரசிச்சு சிரிக்கறாங்கன்னா சந்தானத்துக்கு சுக்ர திசை சுருக்க வந்துடுச்சுன்னுதான் சொல்லனும்.அதே ஓல்டு மேனை ,”யார் இவன்,ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மூத்த பையனா இருக்கானே” என கவுண்ட்டர் டயலாக் அடிக்கும்போது இதெல்லாம் எழுதி வைத்து படிக்கும் வசனமல்ல,ஒரு ஃப்ளோவில் வருவது என்பது தெரிகிறது.
எந்த அந்நிய சக்தியும் நம்மைப்பிரிக்கவே முடியாதுன்னு சந்தானம் ஆர்யாவைக்கட்டிக்கொள்வதும்,அடிக்கடி என் நண்பண்டா என அழுத்திசொல்வதும் தியேட்டரில் ஏகோபித்த வரவேற்பு பெற்ற சீன்கள்.தளபதி படத்தில் இதே வசனம் பேசிய ரஜினியை நக்கல் அடிக்கிறாரா,மணிரத்னத்தை ரேக்குகிறாரா என்றெல்லாம் சிந்திக்க படத்தில் அவகாசமே இல்லை.காமெடி சரவெடி படபடவென வெடித்துக்கொண்டே போகிறது.

எக்சாம் ஹாலில் அந்த ஓல்டு மேன் ஆர்யாவிடம் “பாஸ் பண்ணி தொலைச்சிடாதீங்க,தனி மரம் ஆகிடுவேன்,என்பதும் வினாத்தாளை கொத்தாகக்கொடுத்து லெக்சரர் நயன் “பாஸ் பண்ணுங்க” என்றதும் ,”டிரை பண்றேன் மேடம் எனும்போது வெடித்துக்கிளம்புகிறது சிரிப்பு அலை.

ஆனால் நயன்தாராவைப்பற்றி குறிப்பிட்டுசொல்லியே ஆகவேண்டும்,ஹேர்ஸ்டைலை ஃபாரீன் மாடலில் பண்ணிக்கிறேன் பேர்வழி என அவர் செய்திருக்கும் ஸ்டைல் சகிக்கலை.ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி என டயட் இருந்தும்,மாத்திரை சாப்பிட்டும் உடல் வனப்பை கெடுத்துக்கொண்டார்.பல காட்சிகளில் சிரத்தையே இல்லாமல் கடனுக்கு நடித்திருக்கிறார்.(ஒரு வேளை சம்பள பாக்கியோ).பேசாமல் இந்த கேரக்டருக்கு தமனாவையோ,அசினையோ நடிக்க வைத்திருக்கலாம்.இடைவேளை வரை செம ஸ்பீடாகபோகும் திரைக்கதை அதற்குப்பிறகு நொண்டி அடிக்கிறது.கதையை எப்படி கொண்டு போவது என இயக்குநர் ரொம்பவே தடுமாறி இருக்கிறார்.டுட்டோரியல் காலேஜ் நடத்தும் காட்சிகள் ரொம்ப இழுவை.எங்கே படத்தை மொக்கை ஆக்கிடுவாங்களோ என திகிலா நாம் பார்க்கறப்ப ஷகிலா முந்தானை முடிச்சு தீபா மாதிரி டீச்சராக எண்ட்டர் ஆகி காமெடி செய்கிறார்.

படத்தில் ரசனையான காமெடி காட்சிகளில் மனதில் நின்றவை.

1.உங்க ஜாதகமே எனக்கு தெரியும்,ஏன்னா அது என் கிட்டதானே இருக்கு?

2.மாப்ளை,கைல காசில்லை.    அப்போ,பீரோல வெச்சிருக்கியா?

3.மேடம் ,24 மணி நேரமும் செல்ஃபோன்ல ஃப்ரீயா பேசனும்,அதுக்கு என்ன ஸ்கீம் இருக்கு?

24 மணி நேரமுமா?அதுக்கு நேர்லயே போய் பேசிக்கலாமே?


4.பெண்களோட அகராதில ஆண்களைப்பற்றிய அளவீடுகளும், மதிப்பீடுகளும் மாறிட்டே இருக்கும்,ஆனா ஆண்கள் பார்வைல பொண்ணுங்க ரெண்டே வகைதான் 1.சூப்பர் ஃபிகர், 2 மொக்கை ஃபிகர்.

5.மிஸ்,உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்கு நிஜமாவே தெரியலை,நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்,வர்லை.

6.அலை பாயுதே மாதவன் மாடுலேஷன்ல பேசச்சொன்னா உன்னை யார் அரண்மனைக்கிளி ராஜ்கிரண் மாதிரி பேசச்சொன்னது?


7.நான் டுபாக்கூரா?         பின்னே,டோக்கோமோ கம்பெனி ஓனரா?

8.மார்க்கட்டிங்க் வேலைக்கு போறியா?

அது நாய் பொழைப்புடா மச்சான்


பிழைப்பே இல்லாம தண்டமா இருக்கறதுக்கு நாய்ப்பிழைப்பு எவ்வளவோ மேல்.

9.உங்களுக்கு எவ்வளவு லோன் வேணும்?
உங்க பேங்க்கால எவ்வளவு லோன் தர முடியுமோ அதை தாங்க.

10. லேடீஸ் தர்ற மிஸ்டு கால் ஆம்பளைக்கு ஊதப்படற அபாயச்ச்சங்கு மாதிரி,புத்திசாலிங்க எஸ்கேப் ஆகிக்கறாங்க.

11.ஊர்ல 15 ஃபிரண்ட்ஸ் வெச்சிருக்கறவன் எல்லாம் ஜாலியா சந்தோஷமா இருக்கான்,ஒரே ஒரு ஃபிரண்ட் வெச்சிருக்கறவன் நான் ஏண்டா இப்படி அவஸ்தைபடனும்?
சந்தானம் தண்ணி அடித்து விட்டு ஆர்யாவின் வருங்கால மாமனார் சித்ரா லட்சுமணனை அவரது பாராட்டு விழாவில் கலாய்க்கும் சீன் தமிழ் சினிமாவின் காமெடி பக்கத்தில் முக்கியமான அங்கம் வகிக்க வேண்டியது.இனி 2 மாதத்துக்கு இந்த காமெடி க்ளிப்பிங்க்ஸை டி விக்களில் பார்க்கலாம்.இந்த காட்சியில் சந்தானத்தின் பர்ஃபார்மென்ஸ் சிம்ப்ளி சூப்பர்.பண்ணிக்குட்டிங்க எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதுங்க என முத்தாய்ப்பாய் பேசுவதும் தூள்.

வண்டிக்குத்தேவை பம்பர்,வாழ்க்கைக்குத்தேவை டெம்பர்,இனி இதுதான் உன் நெம்பர் என ஆர்யா நயனுக்கு செல்ஃபோன் கிஃப்ட் குடுப்பது செம மொக்கை சீன்.
நயன்தாரா அடிக்கடி ஆர்யா எது சொன்னாலும் பார்டன் (இன்னொரு முறை சொல்லுங்க) என கேட்பதும் அப்போது சந்தானம் காட்டும் முக பாவனைகள் அருமை.


ஆர்யாவை முதலில் ஒரு விஷயத்துக்காக பாராட்ட வேண்டும் தன்னை விட சந்தானத்துக்கே ஸ்கோப் அதிகம் என தெரிந்தும் ,நடிக்க ஒத்துக்கொண்டதும் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங் (அடக்கி வாசித்தல்) செய்ததும் பாராட்டத்தக்கவை.
அண்ணனுக்கு நடக்கும் திருமண் பார்ட்டியில் நயனைப்பார்க்கும் ஆர்யா அவரை ரசிச்சு பார்க்க அவரது அண்ணன்”என் வாழ்க்கைல விளையாடிடாதடா”என்பது மாதிரியான அர்த்தத்திலவர் காலை தொட்டுக்கும்பிடுவதும் நல்ல டைரக்‌ஷன்.
இத்தனை +கள் படத்தில் இருந்தாலும் படத்தில் மைனஸ்கள் உண்டு.

1.என்னதான் அரியர் வெச்ச பையனாக இருந்தலும் இங்கிலீஷில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் யாராவது இருப்பார்களா?

2.கமல் மாதிரி பேசாத,புரியற மாதிரி பேசு என்று லிவ்விங் லெஜெண்ட்களை கிண்டல் செய்தது.

3.கும்பகோணம் வெத்தலை பாட்டு படத்துக்கு தேவை இல்லாதது,நயனின் அப்பாவாக வரும் சித்ரா லட்சுமணனை காமெடி பீஸ் ஆக்கி இருக்கத்தேவை இல்லை.மேலும் அந்தப்பாட்டில் நயனின் கெட்டப்,நடன் அசைவுகள் கில்லி படத்தில் அப்படிப்போடு பாட்டுக்கு திரிஷா செய்ததை அட்டக்காப்பி அடித்தது.

4.சந்தானத்தின் சில வசனங்கள் தனிப்பட்ட பிராண்ட்களை கிண்டல் செய்வதாக அமைவது.உதாரணம் - வில்லனை ஓனிடாத்தலையன் என்பது (தியேட்டரில் செம கை தட்டல்)வரவேற்புக்கிடைக்கிறது என்பதற்காக வரம்பு மீறுதல் முறையோ?

5.இடைவேளைக்குப்பிறகு காட்சிகளில் ஜவ்வுத்தன்மை.எடிட்டிங்கில் இன்னும் கவனம் தேவை.

பெண் பார்க்கப்போகும்போது பெண் நமக்குப்பிடித்து விட்டால் சின்ன சின்னக்குறைகள் நம் கண்ணுக்குத்தெரியாதது போல் இந்தப்படத்தின் குறைகளை நாம் கண்டு கொள்ளவேண்டியதில்லை.ஏனெனில் படத்தில் சண்டைக்காட்சிகளோ,ஆபாசமோ ,வன்முறையோ இல்லை.

கெஸ்ட் அப்பியரன்ஸில் வரும் ஜீவா பண்ணும் அலப்பறை அற்புதம்.அந்தப்பாத்திரத்தை கையாண்ட விதத்தில் இயக்குநர் நார்மல் க்ளிஷேக்களில் நம்பிக்கை அற்றவர் என முத்திரை பதிக்கிறார்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள்,பி, சி செண்ட்டர்களில் 50 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 45


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


22 comments:

Mohan said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து வெளிவந்துள்ள முழுமையான காமெடிப் படமாக இது எனக்குத் தோன்றுகிறது.

புரட்சித்தலைவன் said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrr..........

அமைதி அப்பா said...

நல்ல விமர்சனம், படம் பார்க்க முயற்சி செய்கிறேன். தியேட்டரில்தான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் டாப்பு நான் போறேன் இன்னொரு தபா...

Anonymous said...

விமர்சனம் அருமை .... ஆனால் உங்கள் கணிப்பு பிழை.. இந்த படம் எல்லா சென்டரிலும் 100 நாள் ஓடும் ..குறிப்பாக A சென்டர்களில் 100 மேற்ப்பட்ட நாள்கள் ஓடும்.....

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Mohan said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து வெளிவந்துள்ள முழுமையான காமெடிப் படமாக இது எனக்குத் தோன்றுகிறது.

நன்றி மோகன்,உள்ளத்தை அள்ளித்தாவுக்குப்பிறகு இதுதான் காமெடி ஹிட்டு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சே.குமார் said...

Nice!
நன்றி குமர்

சி.பி.செந்தில்குமார் said...

Nice!

September 11, 2010 6:08 PM
Delete
Blogger புரட்சித்தலைவன் said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrr..........
ஓகே புரட்சித்தலைவா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அமைதி அப்பா said...

நல்ல விமர்சனம், படம் பார்க்க முயற்சி செய்கிறேன். தியேட்டரில்தான்!

ஓ நன்றி அமைதி அப்பா.பாருங்க,ஆடியன்ஸ் உடன் பார்த்தாதான் திருப்தி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் டாப்பு நான் போறேன் இன்னொரு தபா...

ரிப்பீட்டு?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இலங்கை தமிழன் said...

விமர்சனம் அருமை .... ஆனால் உங்கள் கணிப்பு பிழை.. இந்த படம் எல்லா சென்டரிலும் 100 நாள் ஓடும் ..குறிப்பாக A சென்டர்களில் 100 மேற்ப்பட்ட நாள்கள் ஓடும்.....

அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன்,ஆனால் சிலருக்கு இடைவேளைக்குப்பிறகு படம் பிடிக்கவில்லை,மேலும் எந்திரன் வேறு வருகிறது,தேபாவளி வரும்போது தியேட்டர் கிடைக்காது,

R. Gopi said...

விமர்சனம் சூப்பர். முதல் மூன்று போட்டோவைக் கொஞ்சம் சரி பண்ணுங்களேன். கலங்கலாக இருக்கிறது. நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

gopi,thanks for coming,becoming as a follower,and also thanks for the idea

a said...

நல்ல விமர்சனம் ....

சி.பி.செந்தில்குமார் said...

THANKQ YOKESH

சி.பி.செந்தில்குமார் said...

பொத்தாம் பொதுவான விமர்சனமாக இல்லாமல் தனிப்பட்ட ரசிகனின் ரசனையோடு வெளிப்படும் இம்மாதிரியான விமர்சனங்கள்தான் ஒரு படத்தின் தரம் பற்றிய முடிவுக்கு வரத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள் பணி தொடர...
த்வினா, எர்ணாகுளம்.

karthikkumar said...

//அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன்,ஆனால் சிலருக்கு இடைவேளைக்குப்பிறகு படம் பிடிக்கவில்லை,மேலும் எந்திரன் வேறு வருகிறது,தீபாவளி வரும்போது தியேட்டர் கிடைக்காது,//
செந்திலுங்க உங்க தொலை நோக்கு பார்வை அருமை. எந்திரன் வந்தால் மற்ற படங்களுக்கு தியேட்டர் பிரச்சினைதான். அப்புறம் ஒரு சின்ன request ஸ்டில் வந்து இன்னும் கொஞ்சம் கிளியரா போட்டீங்க்ன உங்க பதிவு இன்னும் அழகாய் தெரியும் விமர்சனம் சூப்பர்

Anonymous said...

படம் அட்டகாசமா இருக்கு.செம பொழுது போக்கு படம்,விமர்சனம் சிறப்பாக வந்திருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

thanhx karthi for your valuable idea,i will try to correct that fault

சி.பி.செந்தில்குமார் said...

sathish,your kulatheivam 9thaaraa is not good in this film. wat to do?

Unknown said...

ithula enna mayiru kathai irukkunu ippo supernu poturukka? ithelam oru padama? aduthavana fulla kindal panni varathuku peru padama?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

kindly read the review for the same movie boss (a) baskaran

totally different opinion from your view

http://rockzsrajesh.blogspot.com/2010/10/blog-post_17.html

thank you,
rockz...

http://rockzsrajesh.blogspot.com/