Monday, October 07, 2013

attarintiki daredi - அத்தரிண்டிக்கி தாரிதி (தெலுங்கு) -சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

ஆந்திராவில் ‘பவர் ஸ்டார்’ படம் என்றாலே தாறுமாறான ஓபனிங் கிடைக்கும்.  பவர் ஸ்டார் என்றால் அய்யோ நம்ம ஊர் பவர் ஸ்டார் இல்லைங்கோ!!  எப்போதும் ஆந்திராவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.  இவர் நடித்த ‘குஷி’ படம் அங்கு வெளியான போது வசூலில் சரியான புயல் உருவானது. டிரண்டி உடைகளிலும், தனக்கென்ற ஒரு தனிப்பட்ட தோரணையிலும் பார்வையாளரை வலையில் அடைப்பவர் பவன் கல்யாண்.  சரி துதி பாடுவதை நிறுத்திவிட்டு விமர்சனத்திற்குள் நுழைவோம்.

இப்படத்தை பொருத்தவரை டைட்டிலிலே கதை அடங்கியுள்ளது.  பல கோடிகளுக்கு அதிபதியான செல்வந்தர் பூமம் இரானி. இவருடைய மகள் நதியா.  நதியா ஸ்டேடஸில் பின் தங்கியுள்ள மாப்பிள்ளையை மணம் முடிக்க, காதல் திருமணத்தை எதிர்க்கும் அப்பா பூமம், மகளை வீட்டைவிட்டு துரத்துகிறார்.  பல வருடம் கழித்து தன் பேரனாகிய (மகனின் மகன்) பவன்கல்யாணிடம் தன் மகள் நதியாவை அழைத்து வரவேண்டும், ஒரு முறை அவளை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.  தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற பவன் கல்யாண் ஹைதராபாத் வருகிறார்.நதியா வீட்டில் டிரைவராக சேருகிறார். அவர் மனதை மாற்றி தன் தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுகிறாரா என்பது தான் மீதிக் கதை.


‘ஜல்சா’ படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரிவிக்ரம், பவன் கல்யாண், இசையமைப்பாளர் டி.எஸ்.பி (தேவி ஸ்ரீ பிரசாத்) கூட்டணியில் வெளிவந்துள்ள படம் இது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் திருட்டு டிவிடி இணையதளத்தில் வெளியானதால் ஏகப்பட்ட சர்ச்சைகள். பவன் கல்யாண் பண நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக கூறியது தீப்போல் டோலிவுட்டில் பரவியது.  படம் வெளியான போது ஆந்திராவில் மட்டுமல்ல தமிழ் நாட்டில் கூட தாறுமாறு ஓப்பனிங் கிடைத்தது.

டோலிவுட் படங்களில் பேமிலி டிராமாவென்றால் ஒரு டெம்ப்ளேட் அமைந்திருக்கும். இப்படமும் அந்த விதி மீறாதபடி அமைந்துள்ளது.  


1) அனைத்து கதாபாத்திரங்களுக்கிடையே கதாநாயகன் மட்டும் வித்தியாசமாக அமைந்திருப்பார்.  டான்ஸ், பாடல், ரொமான்ஸ் இப்படி பல பிரிவுகலும் சூரக்கோட்டை சிங்கக் குட்டியாக விளங்குவார்.  ஹைடெக் யூத் போல் காட்டப்படும் இவர்கள் ஷுரிட்டி, க்ளாரிடி இப்படி ஆங்கிலத்தில் சம்மந்தமற்ற ரைமிங் வசனங்களை பேசுவார்.

2) கண்டிப்பாக குடும்பம் ஏதோ ஒரு வகையில் பிரிந்திருக்கும். இல்லை குடும்பத்தினருடன் ஒற்றுமை இல்லாமல் போகும். கதாநாயகன் தான் அக்குடும்பத்தை இணைக்கும் பாலமாக திகழ்வார்.  கடைசியில் மூன்று நான்கு பக்கங்களுக்கு சென்டிமென்ட் வசனங்கள் பேசி க்ளைமாக்ஸில் குடும்பம் இணைவது தான் சுப முடிவாக திகழும்.

3) திரைக்கதைக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பிரம்மானந்தம் புகுத்தப்படுவார் இவர் வரும் காட்சியை வைத்து அரை மணி நேரத்திற்கு படத்தை ஒப்பேற்றுவர்.

4) ஹீரோ போகும் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். கண்டிப்பாக ஹீரோவின் வீர தீர சாகசம், பஞ்ச் டைலாக்குகளுக்கு அப்பெண் மயங்கி விழ வேண்டும்.

5) எல்லாவற்றிற்கும் மேல் முக்கியமாக முதற் காட்சியில் ஒரு நிகழ்வு நடக்க வேண்டும். அதேபோன்ற நிகழ்வு க்ளைமாக்ஸில் நடக்கும் போது தான் தவறு செய்த மனிதர்கள் திருந்த முடியும்.


உதாரணம் ‘மிஸ்டர் பெர்பக்ட்’ இப்படத்தில் குடும்ப நெறிகள் மீது நம்பிக்கையற்றவர் பிரபாஸ். சிறு வயது பிரபாஸிடம் அப்பா நாஸர் இவரின் கையில் நீரை விட்டு அதை பிடித்துக் கொள்ளச் சொல்வார். ஒற்றைக் கையால் இவரால் அதை பிடிக்க முடியாது.  இரண்டு கைகளை குவித்துக் கொண்டு தங்க வைப்பார்.  அப்போது நாஸர் இப்படித்தான் குடும்பம், சேர்ந்திருந்தால் தான் வாழ முடியும் என்று அறிவுரை கூறுவார். அப்பா சொன்ன இந்நெறியை க்ளைமாக்ஸில் நினைவூட்டி குடும்பத்தின் உன்னதத்தை நாயகன் உணர்த்துவார்!! இப்படி க்ளைமாக்ஸில் கண்டிப்பாக மாரல் ஆஃப் தி ஸ்டோரி அமையப்படவேண்டும்.

இதைப்போன்ற பேமிலி டிராமாக்களில் கண்டிப்பாக முதற்காட்சியை தவற விடக் கூடாது. ஏனெனில் அது தான் க்ளைமாக்ஸின் தூண்டிலாக அமைந்திருக்கும்.  இப்படத்திலும் அப்படித்தான் முதற் காட்சியில் ஸ்டேடஸ் குறைவாக ஒரு மாப்பிள்ளையை மணமுடித்து வந்ததால் அப்பா பூமம் இரானியால் மகள் நதியா விரட்டப்படுகிறார். ளைமாக்ஸில் நதியாவின் மகள் சமந்தாவை, நாயகன் மணமுடிக்கப் பார்க்கும் போது நதியாவின் கணவர் வெறும் டிரைவர் உனக்கு எப்படி என் பெண்ணை கொடுப்பது எனக் கேட்கிறார்.  இப்போது தான் ஹீரோ தன் தாத்தா பூமம் இரானி நதியா மீது காட்டிய கோபம் மட்டும் தவறா?? 


ஜீன்ஸ் படத்தில் வருவது போல் அவங்க செய்தது தப்புன்னா, நீங்க செய்ததும் தப்புதான்!!. நீங்க செய்தது சரின்னா, தாத்தா செய்ததும சரிதான்!! என்று வசனம் பேசுகிறார். இதனால் குடும்பம் இணைகிறது. கடைசியில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் க்ளைமாக்ஸ்.

இப்படத்தை பேசுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை.  அனைத்துமே நாம் வழக்கமான சினிமாவில் பார்த்ததொன்று தான்.  பவன் கல்யாணின் ஹீரோயிசம் ரொம்ப ஓவராக அமைந்துள்ளது.  சும்மா சும்மா பக்கத்திலே இருப்பவர்களைப் போட்டு அடிச்சுக்கிட்டே இருக்காரு. இந்த ரயில்வே ஸ்டேஷன் 15 நிமிஷத்திற்கு என் கன்ட்ரோல்ல வேணும்னு சொல்வது போன்று எவ்ளவோ விஷயம்.

சமந்தா, ப்ரணிதா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், நதியா, பூமம் இரானியின் நடிப்பு ஏற்கனவே வேறொரு படத்தில் வேறு கதாபாத்திரமோ அல்லது இவர்களே நடித்துப் பார்த்த ஒன்றாகத்தான் திகழ்கிறது. தமிழில் கடந்த சில படங்களில் வெறும் இரைச்சலை மட்டும் இசையென படைக்கும் டி.எஸ்.பி. தெலுங்கில் மட்டும் நல்ல பாடல்களைத் தருகிறார்.  இப்படத்தில் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளது.

மொத்தத்தில்: ரொம்ப நாளுக்கு பிறகு தெலுங்கில் வழக்கமான ஒரு பேமிலி டிராமா, போர் அடிக்காமல் போகின்றது.
a
  • நடிகர் : பவன் கல்யாண்
  • நடிகை : சமந்தா
  • இயக்குனர் :த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

ஆரம்பம் , வேகம் , அதகளம் - அல்டிமேட் ஸ்டார் அஜித் பேட்டி @ த தமிழ் ஹிந்து

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். | 


அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து... 


" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?" 



"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்‌ஷன் ரோல்தான்." 



"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?" 



"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்‌ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை." 


 
"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?" 


"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!" 


"ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?" 



"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி." 



"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. 


 அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது." 
 

"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?" 



"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை." 


"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..." 


"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!" 

 

"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது.. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்களை நாங்க மதிக்கறோம்.. ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க.. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது." 



"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க.. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.. சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை.. ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க..?" 


"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை.என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை."


thanx - tamil the hindu


விஜய்-ன் அடுத்த ரீ மேக் -அத்தையின் வீடு எங்கே இருக்கு ?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. ராகுல்காந்தியை விரும்பவில்லை-மல்லிகா ஷெராவத்# பாவம்மா அவரு கை விட்றாதே



================


2  ராகுல்காந்தியை விரும்பவில்லை-மல்லிகா ஷெராவத்# அட போம்மா, நான் யாரையுமே விரும்பலை -ராகுல்




====================


3 ரஜினி அல்லது விஜய் நடித்திருக்க வேண்டிய படம் 'முதல்வன்'-  கே.வி.ஆனந்த்.# ரஜினி நடிச்சிருந்தா ஜெ சி எம்மா இப்போ வந்திருக்க முடியாது


====================




4 Attarintiki Daaredhi' (அத்தை யைத்தேடி  - அத்தையின்  வீடு எங்கே  இருக்கு ? ) தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் திட்டம் - செய்தி # தமிழ் டைட்டில் என் அத்தை என் உரிமை?


-======================


5  மீண்டும் பிரச்னை செய்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது உறுதி - கமல்   # மீண்டும் மீண்டும் இதையே  சொல்லிட்டு இருந்தா போர் அடிப்பது  உறுதி



====================



MaThi Sutha's photo.


6  ஆட்சியில் இல்லாத போதும்  மக்களுக்கு சேவை செய்ய முடியும். -ராகுல்  #  என்ன தான் கூட்டணில  இருந்தாலும் கலைஞர் சொன்னத காப்பி அடிக்கக்கூடாது


=====================


7  வேட்பாளரை நிராகரிக்கும் வசதி: 5 மாநில தேர்தலில் 'நோட்டா' பட்டன் அறிமுகம் #  இது அரசியல்வாதிகளுக்கு காயம் தரப்போகும்  தோட்டா பட்டன்



===================


8  பயணிகள் ரயில் கட்டணத்தை மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும் - ஜெ #  நாங்க  ஒரு தடவை ஏத்திட்டா நாங்களே நினைச்சாலும் இறக்க முடியாது -ம அ



=================


9 அக்காள் - தங்கை கற்பழிப்பு  ஆசாராம் - மகன் மீது மேலும் வழக்கு  #  அப்பாவும் , பின்னே நானும் -னு முறை வெச்சு ரேப் பண்ணி இருக்கானுக


===================


10 ஏற்காடு இடைத்தேர்தல் தி.மு.க., போட்டி -  கலைஞர்  # மஞ்சள் துண்டில்  முக்காடுதான் தலைவரே!




=======================


துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை.....


11. சிவாஜி பிறந்த நாளைக் கொண்டாடாத நடிகர் சங்கம்.. சிவாஜி பேரவை கண்டனம்   # சாரி , சிவாஜி த பாஸ் பிறந்த நாள் 12 /12  தானேன்னு அசால்ட்!



===================


12 மோடி பிரதமரானால் இந்திய கவுரவம் 100 மடங்கு உயரும்: தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி #  கவுரமா? கலவரமா?


======================




13 700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்!!! # அப்படியே  ஃபேஸ்புக் வில்லேஜ்ம் ஓப்பன் பண்ணுங்க






======================




14  ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் திங்கள்கிழமை  உண்ணாவிரதம் #  “திங்க”க்கிழமை திங்காத கிழமை ஆகப்போகுதா?


=========================


15  டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்   # பஸ்   ரேப் மேட்டரை மக்கள் மறந்துட்டாங்களோ ?


===================


கூடிய சீக்கிரமே இது எல்லார் கல்யாணத்துலேயும் நடக்கும்..!
புதுசா கட்டிகிட்ட ஜோடி நாங்க  புதிய திருமண முறை


16 ஒரே பாடலில் 400 உடை மாற்றிய ரணம் ஹீரோயின் பூனம் கவுர் # சாதா ரணம்னு ஒதுக்கிட முடியாது பூனம் கவுர் சிக்கிரம் அவுர்னு விரட்டி இருப்பாங்க


================


17 கெட்டப்பை மாற்றும்வித்யா பாலன் # டி ஆர் மாதிரி தாடி மீசையோட வருவாரோ? அய்யய்யோ



===================



18 டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல் # பஸ் ரேப் மேட்டரை மக்கள் மறந்துட்டாங்களோ ?



=====================



19 ஏற்காடு தேர்தலில் போட்டி குறித்து மேலிடத்தில் கேட்டு சொல்றோம் - ஞானதேசிகன்  # மேலிடம் என்பது சாக்காடு, நீங்களே சொல்ல என்ன நோக்காடு?



=======================



20 தமிழக கவர்னர் ரோசய்யாவை,  விஜயகாந்த் கவர்னர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.##  ஆட்சியைக்கலைக்கனுமா? உங்க கட்சியை கலைக்கனுமா?- கவர்னர்



=======================



Photo

Sunday, October 06, 2013

பிஜேபி க்கு 200 சீட் உறுதி - துக்ளக் சோ பர பரப்பு பேட்டி

மோடியை முன்னிறுத்தியுள்ளதால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 200 சீட்டு களுக்கு மேல் கிடைக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்’ என, பத்திரிகையாளர் சோ தெரிவித்தார்.

அதிரடி சந்திப்புகள் மூலம், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது.


அது ஏற்படுத்திய விவாதமும், பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்' நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி:


மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக, 2009ல் இருந்தே நான் இதை வற்புறுத்தி வருகிறேன். பல முறை எழுதியும், பேசியும் இருக்கிறேன். ‘எலக்சன் இஷ்யூ, எலக்சன் இஷ்யூ... என்று சொல்கின்றனர்.மோடி வந்தால், அவர் தான் இஷ்யூ’ என, எழுதினேன்.போலி மதச்சார்பின்மை பற்றி பேசி, ஓட்டு வாங்குவதற்காக, மதச்சார்பற்றவர் என்ற வேஷம் போடுபவர்கள் தான், மோடி வரக்கூடாது என, பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.ஏன் மோடி வரக் கூடாது என்று இவர்கள் சொல்கின்றனர் என்ற கேள்வி எழும். அது பா.ஜ.,வுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த கருத்தை நான், எங்கள் பத்திரிகையின், இரண்டு ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறேன்.

காங்கிரஸ் தரப்பில், அடுத்த தலைமையாக, ராகுலை முன்னிலைப்படுத்துகின்றனர். மோடி – ராகுல் ஒப்பிட்டால் யார் சிறந்தவர்?


ஒப்பிடுவதற்கு விஷயமே இல்லை. நிர்வாகத் திறன், உழைப்பு, ஊழலற்றத்தன்மை, துணிவு, பேச்சுத் திறன் என, பல முகங்களை கொண்ட மோடியுடன், இவற்றில் எதுவுமே இல்லாத ராகுலை எப்படி ஒப்பிடுவது. சம்பந்தமே இல்லாமல், இரண்டு பேரையும் ஒப்பிடுவது போல் ஆகி விடும்.

மோடி பங்கேற்ற திருச்சி மாநாட்டில், கட்டணம் கொடுத்து ஆன்–லைனில் முன்பதிவு செய்து கலந்து கொண்டிருக்கின்றனரே, அது பற்றி?

இந்தளவுக்கு பணம் கொடுத்து, பெரும்பாலான மக்கள் வருகின்றனர் என்பது பெரிய விஷயம். பணம் கொடுத்து, இப்படி பொதுக் கூட்டத்துக்கு வருவதன் மூலம், மக்களுக்கு ஒரு ஈடுபாடு உண்டாகும். பொதுக் கூட்டத்தை விடுங்கள்; நேற்று மும்பை விமான நிலையத்தில், மோடியை வரவேற்க வந்த கூட்டத்தை, ‘டிவி’யில் காட்டினர்; எவ்வளவு கூட்டம்!

திருச்சி கூட்டத்தில் மோடி பேச்சு எடுபடாமல் போய் விட்டதாக, ஒரு தரப்பில் குறை சொல்லப்படுகிறதே?



எனக்கு இந்தி தெரியாது. ஆனால், அவர் பேசிய விதமும், ஆவேசமும், அதற்கான மொழியாக்கமும் அவரது பேச்சில் விஷயம் இருப்பதை காட்டியது.
மத்திய அரசின் குறைகளை அவர் எடுத்துச் சொன்ன விதத்தில், அவரது அனுபவமும் திறமையும் பளிச்சிட்டது.


தமிழக விவகாரங்கள் பற்றி பேசாதது, ஒரு குறை தானே?

வேறு எங்கும் அவர் மாநில அரசியல் பேசியதாக தெரியவில்லையே. டில்லியில் மட்டும், ஷீலா தீட்ஷித் அரசை பற்றி ஓரிரு வார்த்தை பேசிஇருக்கிறார்; அதுவும் பெரிதாக இல்லை.தேசிய பிரச்னைகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார் என, கருதுகிறேன்.

யோசனை சொல்வதில்லை:

சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் சந்தித்தீர்கள். மோடியின் தூதராக போய் பார்த்ததாக, வெளியில் பேசப்படுகிறதே?

மோடியின் தூதராக போனதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் யார் தூதரும் அல்ல; யாருக்கும் தூது போகவும் இல்லை. மோடி ஒன்றும் ஜெயலலிதாவிடம் தூது போகும்படி சொல்லவும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவும், மோடி பற்றி பேச வேண்டும் என்று, என்னை அழைக்கவும் இல்லை.நானும், முதல்வரும் அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது சந்திப்பது உண்டு; அதுபோன்ற சந்திப்பு தான் அது.

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வது பற்றி ஆலோசனை சொன்னதாக தகவல்...


நீங்கள் நினைப்பது போல், நான் அவர்களுக்கு யோசனை சொல்வது கிடையாது. அவர்களுக்கு அது தேவையும் கிடையாது. அதற்கு, என்னை விட திறமை, அறிவு, அனுபவம் பெற்ற அதிகாரிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

மோடி என்றதும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக பேசப்
படுகிறதே?

யார் எதிர்பார்த்தது; பத்திரிகைகள் தான் எதிர்பார்த்தன. கூட்டணி ஏற்படுவதற்கான சூழ்நிலையே வரவில்லையே. எந்த கட்சியும் கூட்டணி பற்றி இன்னும் தீர்மானம் செய்யவில்லையே. இங்கு மட்டுமல்ல; எந்த மாநிலத்திலும் கூட்டணி முடிவாகவில்லை.ஆனால், இதுபோன்ற யூகங்களை கிளப்பி விடுகின்றனர்.

அப்படியானால், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு, 'சான்ஸ்' இருக்கிறதா?



எந்த கட்சியும் கூட்டணி பற்றி முடிவு செய்யாதபோது, இன்னும் அதற்கான சான்ஸ் இருப்பதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே?



அது, அந்த அணி எப்படி அமைகிறது என்பதை பொறுத்தது. மூன்றாவது அணி எப்போதுமே, முதல் அணியாக வந்ததில்லை.


அப்படி அமைந்தால் எப்படி இருக்கும்?

மோடி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; பா.ஜ.,வுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.நிச்சயம் தேசிய அளவில் மோடிக்கு வரவேற்பு இருக்கிறது. அது தமிழ்நாட்டில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சில மாநிலங்களில் மோடிக்கு ஆதரவுஅதிகம் இருக்கலாம்; சிலவற்றில் குறைவாக இருக்கலாம். கூட்டணி சேர்வதற்கு முன், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.



தி.மு.க.,எந்தப்பக்கம்?


தி.மு.க.,வும் பா.ஜ., பக்கம் போக வாய்ப்பிருக்கிறதா?

இதுவரை எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை என்று கருணாநிதியும் சொல்லிஇருக்கிறாரே?கருணாநிதி, பா.ஜ., பக்கம் போக மாட்டார் என்றே நம்புகிறேன். பா.ஜ.,வும் அதை விரும்பாது என்று, நினைக்கிறேன். காங்கிரசுடன் போகும் நிலைமையே அவருக்கு ஏற்படும். அதுமட்டுமல்ல; வேறு சில கட்சிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்பும் கருணாநிதிக்கு இருக்கிறது.



இந்த தேர்தலில் தேசிய அளவில், காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும்
?



தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவுக்கு தான் தேசிய அளவிலும் கிடைக்கும். இங்கே, நான்காவது இடம் தான் கிடைக்கும். தேசிய அளவிலும், நான்காம் இடத்துக்கு தள்ளப்படலாம். மூன்றாவது இடத்துக்கு அந்த கட்சி முன்னேறினால், அதுவே அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும்

.

அப்படியென்றால், இரண்டாவது இடம் யாருக்கு?


மாநில கட்சிகளுக்கு கிடைக்கலாம்.


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?


டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும். டில்லியில் ஆம் ஆத்மி கட்சியினால், ஓரளவுக்கு ஓட்டுகள் பிரியலாம். பத்திரிகைகள் சொல்வதுபோல், பெரிய சக்தியாக, அந்த கட்சி வராது.

இந்த முடிவுகள், லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமா?


நிச்சயமாக எதிரொலிக்கும்


.தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்க, மோடி பிரசாரம் கை கொடுக்குமா?


அதை இப்போது சொல்ல முடியாது. எப்படியும் 200 சீட்டுகளுக்கு மேல் கிடைக்கும்.

ஜெயலலிதா ஆசை:

ஒவ்வொரு தேர்தலிலும், உங்களது, 'ரோல்' கண்டிப்பாக இருக்கும். இந்த முறை என்ன, 'ரோல்'?


ஒவ்வொரு முறையும் என்று சொல்ல முடியாது; சில முறை எனது பங்களிப்பு இருந்திருந்தாலும், இந்த முறை தேறுமா என்பது தெரியவில்லை. கட்சிகளே முனைப்பு காட்டாதபோது, நான் என்ன செய்துவிட முடியும்.



ஜெயலலிதாவுக்கும் பிரதமர் ஆசை இருப்பதாக தெரிகிறதே, அதற்கு வாய்ப்பு வருமா?


பா.ஜ.,- காங்கிரஸ் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்ற முடியாத நிலை வந்தால், மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கும் முயற்சி நடக்கும். அப்போது வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு வரலாம். என்னை பொறுத்தவரையில், அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும், மோடி ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பொறுத்து சூழ்நிலை அமையும்.



ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை நியாயமானதா?


அவருக்கு அந்த ஆசை இருப்பதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். அது, தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். மோடி பிரதமராக வராவிட்டால், அந்த இடத்துக்கு தகுதியானவர் ஜெயலலிதா தான் என்று, எங்கள் பத்திரிகை ஆண்டு விழாவில் நான் பேசியிருக்கிறேன்

.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைந்து, ஆட்சியை பிடிக்க முடியுமா?


காங்கிரஸ் -- பா.ஜ., அல்லாத கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்து விட முடியாது.



மம்தா – மாயாவதி, சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி, ஜெயலலிதா – கருணாநிதி ஆகியோரால் எப்படி ஓரணியில் இடம் பெற முடியும்.


காங்கிரஸ் அரசு மீது குவியும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து?


இதுவரை இவ்வளவு பெரிய ஊழல்கள் நடந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ளனர். ஊழலை மறைக்க முயல்வது மட்டுமல்ல; ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.அதற்காக, சி.பி.ஐ.,- மத்திய தணிக்கை துறையான சி.ஏ.ஜி., போன்ற அமைப்புகளை எல்லாம் பல
வீனப்படுத்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களை, பதவி பறிப்பில் இருந்து காப்
பாற்ற, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறதே?

சட்ட ரீதியாக அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தண்டனை பெற்றவர், அப்பீல் செய்து, அதில் வெற்றி பெற்று விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குள், அவரது பதவியை பறித்து, இடைத்தேர்தல் நடத்தி, வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார் என்றால், பதவி பறிப்புக்கு ஆளானவருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.எனவே அவசர சட்டமே அனாவசியமானது அல்ல; ஆனால், அது அவசர அவசரமாக கொண்டு வந்தது தான் அனாவசியம்.


`அந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும்' என, ராகுல் காட்டமாக கூறிஇருக்கிறாரே?


அவர் வேண்டாம் என்று சொன்னதை மீறி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் என, நினைக்கிறேன். அந்த கோபத்தில் அவர் பேசிஇருக்கிறார். ஆனால், கட்சியின் துணை தலைவராக இருப்பவர் ஆவேசமாக பேசியிருக்கக் கூடாது.


இலங்கை தமிழர் பிரச்னை, இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?


இலங்கை தமிழர் பிரச்னையை முன்வைத்து, மக்கள் எப்போதும் ஓட்டு போட்டது இல்லை. அப்படி செய்திருந்தால், வைகோ தான் முதல்வர் பதவியில் இருந்திருக்க வேண்டும்.


எதிர்க்கட்சி தலைவர், விஜயகாந்த் பற்றி...?



எதிர்க்கட்சி தலைவர் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் இருந்து கொண்டு, அவர் தனது கட்சியை வளர்ப்பதாக தெரியவில்லை.இவ்வாறு, சோ கூறினார்.
– நமது சிறப்பு நிருபர் –


thanx - dinamalar 

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ! நய்யாண்டி நஸ்ரியா சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்! கோடம்பாக்கம் அதிர்ச்சி

Embedded image permalink



நய்யாண்டி அப்டினு ஒரு படம்  தனுஷ் -நஸ்ரியா ஜோடி நடிச்சது . வர்ற வெள்ளி  ரிலீஸ் ஆகுது . சொட்ட வாழக்குடி அப்டினு டைட்டில் ல பூஜை போட்ட படம் , பின்  டைட்டில் மாத்திட்டாங்க 

 இப்போ பிரச்சனை என்னான்னா  ஹீரோயின் நஸ்ரியாவோட  லோ ஹிப் ஃபோட்டோ  நெட்ல  ரிலீஸ் ஆகிடுச்சாம், படத்தோட இயக்குநர் நஸ்ரியா விடம் அனுமதி பெறாமல் வேற யாரோ  ஒரு டூப்போட  இடுப்பை காட்டிட்டராம் , ஆனானப்பட்ட த்ரிஷாவே கமுக்கமா இருக்கும் போது  நேத்து வந்த நைஸ் ரியா இப்படி கூச்சல் போடுவது படத்தின்  பிரமோஷனுக்கா? நிஜமா என்பது போகப்போகத்தெரியும் 

BREAKING: has filed a complaint against Producer/Dir for using a body double for this scene..


 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்,இவர் தனுஷ்  ஜோடியாக நடித்த நையாண்டி படம் மிக விரைவில் திரைக்குவர இருக்கிறது.


இந்நிலையில் நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக நஸ்ரியாவை தொடர்பு கொண்டு பேசிய போது ,தான் படம் பிடிக்க மறுத்த இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றை தனது அனுமதி இன்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி அதை தனது முகத்துடன் இணைத்து படத்தின் போஸ்டர்களில் வெளியிட்டு தன்னை தவறாக சித்தரித்துவிட்டனர் என கண்ணீருடன் கூறினார்

மேலும் நடிகர் தனுஷுடன் தனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் ,அவர் தனக்கு  மிகவும் ஆதரவாக இருக்கிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 


இது சம்பந்தமா  நான் போட்ட ட்வீட்ஸ் 


1. நய்யாண்டி பிரமோஷனுக்கு என்ன பண்ணப்போறீங்க ? 




 நஸ்ரியா வை வெச்சு ஒரு டிராமா ரெடி பண்ணி இருக்கோம் # பப்ளிக்குட்டி



2 நெட்டில் வந்த இடுப்பு போட்டோ என்னுது இல்லை.நஸ்ரியா கால வரையற்ற உண்ணா விரதம்.சமாதானப்படுத்த தனுஷ் விரைந்தார் # சும்மா




3 என்னைக்கேட்காமல் என் லோ ஹிப் போட்டோ வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி வேண்டும் .



 அய்யோ லோ ஹிப் ஹை ரேட் 



4  நய்யாண்டி நஸ்ரியா - எப்படி நம்ம டிராமா? 



வணக்கம் சென்னை ப்ரியா ஆனந்த் - கொஞ்சம் பொறு கண்ணு.த்ரிஷா ரேஞ்சுக்கு ஒரு டிவிடி கைவசம் இருக்கு 


5  உடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நஸ்ரியாவின் லோஹிப் போட்டோ வெளியாவதைத்தடுக்க முடியாத காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்



6 இது என் இடுப்பு இல்லை.



 ம்ஹூம் நம்ப மாட்டோம்.போஃட்டோ ஆதாரம் இருக்கா? # நஸ்ரியா 



7  தனுஷ் - அடேங்கப்பா.இவ்ளவ் ரசிகர்களா?



 ம்க்கும்.உங்களைப்பார்க்க வந்த கூட்டம் இல்லை.நஸ்ரியா போட்டோ கன்பர்மேசனுக்கு வந்த கூட்டம்



8 . நாளை தினத்தந்தி  தலைப்புச்செய்தி - மத்தியப்பிரதேசத்தால் மத்திய அரசுக்கு ஆபத்து ?


9  யுவர் ஆனர், அது என்  இடுப்பு இல்லை



 ஜட்ஜ் - சரி , விடம்மா, அதான் உன்னுது இல்லையே, அப்புறம் ஏன் அடிச்சுக்கறே?ஏமாறப்போறது ஆடியன்ஸ் தானே?

10  தனுஷ் உடன் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை, அவர் எனக்கு ஆதரவாத்தான் இருக்கார்- நஸ்ரியா # பிரச்சனை உனக்கில்லைம்மா, எனக்குத்தான் - ஐஸ்



 


 டிஸ்கி - ஃபேஸ் புக்கில் வ்நத அந்த புகார் பற்றிய செய்தி அழிக்கப்பட்டு விட்டது 
post deleted, but this one..
Embedded image permalink




இவர்கிட்ட தான் கம்ப்ளெயின்ட் போயிருக்காம்..அவ்வ்வ்!!

அடிக்கடி நைட் கிளப் ல என்ன வேலை? - த்ரிஷா பர பரப்பு பேட்டி @ த தமிழ் ஹிந்து

நடிகை த்ரிஷா - படம்: ஜி.வெங்கட்ராம் 

அட 'லேசா லேசா' த்ரிஷாவா இது.? இன்னும் அப்படியே ஸ்லிம் ப்யூட்டியாகவே ஜொலிக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை தனது சிரிப்பால் கிறங்கடித்தவரோடு நடந்த ஒரு ஜில்லான சந்திப்பு. 



என்ன பதில் சொன்னா எங்க பிரச்சினை வந்திருமோ என்று யோசிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவொரு கேள்விக்கும் யோசிக்காமல் வந்து விழுகின்றன வார்த்தைகள். ஜாலியாக தொடங்கிய பேட்டி கொஞ்சம் கோபமாக முடிந்தது. 


இப்போ தான் ‘லேசா லேசா’ வந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள 10 வருஷமாயிடுச்சு.. ஹீரோயினா 10 வருஷம்.. என்ன நினைக்கிறீங்க?

 
10 வருஷம்.. ம்ம்ம்ம்... என்னாலயும் தான் நம்ப முடியல. திரும்பி பாத்தா 'லேசா லேசா' படத்துல இப்பத்தான் நடிச்ச மாதிரியிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு. 10 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவ்வளத்தையும் தாண்டி வந்திருக்கேன்.


அதுக்காக நான் எதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கல. இப்பவும் முதல் படம் மாதிரித்தான் படங்களை ஒத்துக்கிறேன். 



அதிமாக கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீங்களே.. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்போது பார்க்கலாம்?

 
கமர்ஷியல் படங்கள்ல அதிகமாக நடிச்சேன்னு நீங்க சொல்றது உண்மைத்தான். 'அபியும் நானும்' படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தானே. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படமும் கமர்ஷியல் படம் தான். ஆனால் கதை ஜெஸ்ஸியான என்னை சுத்தியே தான் நடக்கும். 


இப்போ 10 வருஷமாயிடுச்சு இல்லயா, இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன். 'ரம்'னு ஒரு படம்.. படம் வெளிவந்துச்சுன்னா அதுக்கப்பறம் இந்த மாதிரி கேள்விக்கு இடமே இருக்காது நினைக்கேன். 




’த்ரிஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்’, ‘ த்ரிஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு’ இப்படி அப்பப்ப கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்கு.. இப்படி நியூஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கறீங்க..?


 
(சிரித்துக் கொண்டே) பார்ப்பேன்.. படிப்பேன்.. திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா.. அப்படினு கூலாயிடுவேன். இப்பவா எழுதுறாங்க.. 10 வருஷமா எழுதிக்கிட்டே தான் இருக்காங்க. ஆனா அதுக்காக சோகமாக இருந்தா என்னோட படங்கள்ல அது தெரிய ஆரம்பிச்சுடும். அதனால ஜஸ்ட் படிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என்ன.. எங்கம்மா தான் ரொம்ப பயப்படுவாங்க. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சி. 


கல்யாணத்துக்கப்பறம் நடிக்கறது பத்தி உங்கள் எண்ணம்..?

 
இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ளயா.? கல்யாணத்துக்கப்பறம் நடிக்கிறதப் பத்தி யோசிக்கல. நல்ல ரோல் கிடைச்சா நடிக்கிற எண்ணத்துல தான் இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்ப சொல்ல முடியாது இல்லயா.. பாக்கலாம். 


புதுசுபுதுசா ஹீரோயின்ஸ் நிறைய பேர் தடதடன்னு வந்துகிட்டே இருக்காங்க.. இப்போ உங்களுக்கு competition பலமா?

 
கண்டிப்பா போட்டி தான். ஆனா ஆரோக்கியமான போட்டி. நிறையப் பேர் வர்றப்போ தான் நம்ம இடத்த தக்க வைச்சுக்கணும்னு பயம் இருக்கும். அதனால புதுசா ஏதவாது முயற்சி பண்ணலாம்னு யோசிப்போம். வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு தோணும். எனக்கு போட்டி எப்போதுமே பிடிக்கும். 





தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகளிலும் நடிச்சுட்டீங்க.. சினிமால உங்க பெஸ்ட் பிரெண்ட் யார்? ஏன்?


 
எனக்கு பிரெண்ட்ஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. ஒருத்தரப் பத்தி மட்டும் சொன்னா.. இன்னொருத்தர் மனசு கஷ்டப்படும். எனக்கு எல்லாருமே பெஸ்ட் பிரெண்ட்ஸ் தான். TRISHA ALWAYS LOVES HER FRIENDS. 



PETA - மீது இவ்வளவு அக்கரை.. ட்விட்டரில் கூட மிருகங்கள் நலத்துக்கு தான் முக்கியத்துவம்.. உங்கள் பிரபலத்தை நல்ல காரியத்துக்காக பயன்படுத்தறீங்க... எப்படி வந்தது இந்த எண்ணம்?


 
நான் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கிறப்பவே எனக்கு நாய்க்குட்டிகள் மேல கொள்ளைப் ப்ரியம். ரோட்ல நாய் ஏதாவது அடிப்பட்டு கிடந்துச்சுன்னா உடனே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவேன். அப்போ எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல. அதனால அப்படியே பழகிடுச்சு. சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரு Orphanage இருக்கும். அங்க போய் டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு பிடிக்கும். 



நம்மளால ஏதாவது நல்லது நடக்குதுன்னா அதுக்காக நம்மோட பிரபலத்தை பயன்படுத்துறது தப்பில்லயே. பிரபலமா இருக்கறது ஒரு பலம்.. அந்த பலத்தை பிரயோஜனமா பயன்படுத்தறேன். 



கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்தாச்சு.. இன்னும் தனுஷ் பாக்கி இருக்கு.. எப்போ ’தனுஷ்-த்ரிஷா’ நடிக்கும்னு போஸ்டர் பாக்கலாம்?


 
யார் சொன்னா எனக்கு தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு வரலனு. 'ஆடுகளம்' நான் நடிச்சிருக்க வேண்டிய படம் தான். அவங்க கால்ஷீட் கேட்டப்ப நான் 'கட்டா மிட்டா' இந்தி படத்துக்காக மொத்தமா தேதிகள் ஒதுக்கி கொடுத்ததுனால நடிக்க முடியல. என்னோட முக்கியமான நண்பர்கள் ஒருத்தர் தனுஷ். நல்ல கதை வந்தா, த்ரிஷா உடனே ரெடி. 





தமிழ் சினிமாவின் டிரெண்டை கவனிக்கறீங்களா..? காமெடிப் படங்கள் கலெக்‌ஷனை அள்ளுது.. சமீபத்தில் நீங்க ரசிச்ச படம் எது?

 
உண்மைய சொல்லவா.. எனக்கு படம் பாக்கவே டைமில்லை. கடைசியாக கமல் சார் தீவிர ரசிகைங்கறதுனால 'விஸ்வரூபம்' பாத்தேன். அதனால இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. 


இப்போ என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க? என்னென்ன படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கீங்க?


 
'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை' படங்கள் முடிச்சுட்டேன். ரெண்டுமே பிரமாதமா வந்திருக்கு. அப்புறம் தெலுங்குல எம்.எஸ்.ராஜு சார் டைரக்‌ஷன்ல 'RUM (Rambha Urvasi Menaka)' அப்படிங்கற படத்துல நடிக்கிறேன். அந்தப்படம் வந்தா த்ரிஷா ரேஞ்சே வேற. 


தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்ல சக்கை போடு போடறாங்க.. எப்போ 100 கோடி கலெக்‌ஷன் படத்துல த்ரிஷாவை பாக்கறது?

 
பாலிவுட்ல நடிக்கணும்னா மும்பைக்கு வீட்டை மாத்தணும், அங்க PRO வைச்சு வேலைகள் புதுசா தொடங்கணும். எனக்கு இப்போ இருக்கற இடமே போதுமானதா நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, பிறந்து, வளர்ந்து, படிச்சு, நடிக்க ஆரம்பிச்சது எல்லாமே சென்னைல தான். நான் எப்படி மும்பைக்கு போவேன் சொல்லுங்க. யாராலயும் இந்த படம் 100 கோடி கலெக்ட் பண்ணும்னு மொதல்லயே கண்டுபிடிக்க முடியாது. நான் நடிக்கற படம் 100 கோடி கலெக்ட் பண்ணனும்னு எல்லாரையும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு


.
ராணா - த்ரிஷா காதல் செய்திகள் திரும்பவும் வலம் வர ஆரம்பிச்சுடுச்சே?


 
இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சொல்லியே போர் அடிச்சுடுச்சு போங்க. சின்ன வயசுலேந்தே நாங்க ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். இப்பவும் ப்ரெண்ட்ஸ் தான். 



சமீபத்தில நீங்க பார்ல இருக்குற மாதிரி படங்கள் போட்டு செய்திகள் நிறைய..


 
( கேள்வியை முடிக்கும் முன்பே ) அவங்களுக்கு தினமும் ஏதாவது புதுசா புதுசா செய்தி போடணும். ரூம்ல உட்காந்து யோசிச்சு ரூமர்களை கிரியேட் பண்ணி அதை பரப்புற வேலையை பாக்காம, ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க. நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் ரொம்ப பிஸியாதான் இருப்பாங்க. ஆனா சட்டப்படி கேஸ் ஃபைல் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுங்கிறதா மனசுல வச்சுக்கோங்க. இது தான் பொய்யான தகவல்களை பரப்புறவங்களுக்கு என்னோட வார்னிங் மெசேஜ். 


நன்றி - த ஹிந்து தமிழ் 


மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் காரசாரமான பேட்டி @ த ஹிந்து தமிழ்

திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கூறினார். 
 
 
 
ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 



பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. 



எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? 



அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார் ரசிகர்களுக்கு எப்படி என்னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போம் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன். 



சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் அஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன் மோடியை ஆதரிப்பீர்களா? நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. 



திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறினார். 
 
 
நன்றி - த ஹிந்து  தமிழ்

மிஸ்கின் ரசிகையா இருக்கும் நடிகையை ஹீரோயினா போட்டா ஆபத்தா , ஏன் ?

ஆ !என் ஸ்கார்ஃப்.,.பிளிஸ் கிழிஞ்சிட போகுது!!
1 மிஸ்! நீங்க ஏன் ஆஃபிஸ் ல ஆக்டிவா இல்லை?



டேய் , நாயே ஆக்டிவாவை வித்துட்டு ஸ்கூட்டி வாங்கி 7 மாசம் ஆச்சு



======================


2  சிஷ்யா! மனிதனின் ஆரம்பம் , முடிவு இரண்டும் ஒரே மாதிரி இருக்காது .



தெரியும் குருவே ! ஆரம்பம்னாலே த்ரில்லிங்க் தான்



========================


 3 அத்தான்.எனக்கு எப்பவாவது துரோகம் பண்ணி இருக்கீங்களா?



 ச்சே ச்சே நீ பக்கத்துல இருக்கும் வரை கிடையாது


=======================


4 டி வி ஷோ நடக்கும்போது திடீர்னு வந்து கண்டபடி வார்த்தை பேசறீங்களே ஏன் ?


 ஒரு வார்த்தை ஒரு லட்சம் னாங்க.10 வார்த்தைக்கு 10 லட்சம் குடுங்க


======================

5 சார்.உங்க பேங்க்ல வேகன்சி ஏதாவது இருக்கா?



ஸ்டோர் ரூம் தான் காலியா இருக்கு மிஸ்.தங்கிக்கறீங்களா?


=====================


Photo: GOD MNG ... NATPE ... !!!

I LOVE MY SELF ... !!!



6  மேடம், இந்தப்படத்துல நீங்க நல்லா கவர்ச்சி காட்டனும் .



சாரி சார், நான் மிஸ்கின் ரசிகை , என் காலை மட்டும் தான் காட்டுவேன்



=======================



7  எல்லாத்தையும் துறக்கனும்னு சொல்லிட்டு டெய்லி ஷேவிங் பண்ணி நீட்டா இருந்திருக்கீங்க.ஏன்?



புத்தர் - முடியையும் துறக்கனுமே?


=========================


8  டியர்.5 வருட பழக்கத்தில் உங்களுக்கு என் கிட்டே பிடிக்காத அம்சம் என்ன?



உன்னை வருட விட்டதே இல்லையே அதான்


========================


9  டியர்.பஸ்ல என் கூட வரும்போது என் உள்ளங்கையை அமுக்கிட்டே வர்றீங்களே ஏன்?




நம்ம காதல்ல அழுத்தம் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதே?



======================


10  மேடம்.நீங்க இதுவரை எத்தனை பேரை அவமானப்படுத்தி இருக்கீங்க?




 யார் யாருக்கெல்லாம் கூட்டம் சேருதோ அவங்களை எல்லாம்


====================



Photo: Gud evng frnds



11  ஜட்ஜ் - வெளியூர்த்திருடனான உன்னால எப்படி சென்னைல 45 வீடுகள் ல திருட முடிஞ்சுது?



வீடு போட்டோ ஆப் த டேனு ஒருத்தரு டெய்லி அப்டேட்டிங்


===================


12  போயும் போயும் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிஷ்யா?




 நாம எதுக்குத்தான் ஆசைப்படலை குருவே! லட்டு பிகர் ,அட்டு பிகர் பேதம் தவிர்ப்போம்


======================


13 வெறும் வயித்துல 4 இட்லி சாப்பிடனும்.



 டாக்டர்.முதல் இட்லியோட முதல் விள்ளல் உள்ளே போனதும் வெறும் வயிறு எப்டி வெறும் வயிறா இருக்கும்? ்\


=====================


14 அத்தான்.இன்னைக்கு சீக்கிரமா எந்திரிச்சுட்டேன்.என்ன பண்ண?



எப்டியும் சமையல் நான் தான் பண்ணனும்.நீ என்ன பண்ணா எனக்கென்ன?


=======================



15  ஜட்ஜ் - நீ ரேப் பண்ணலைன்னு அடிச்சு சொல்றியே.ஏதாவது ஆதாரம் இருக்கா?



 கைதி - யுவர் ஆனர்.ஆல்ரெடி கைவசம் ஆறு தாரம் இருக்கு.


=========================




Photo: ANBU ... !!!



16  சார்.உங்க புக் ஒரே வருசத்துல 11 பதிப்பாமே.எத்தனை புக் வித்துது?



 11 புக்.ஹி ஹி


=====================


17   கொலையை செஞ்சது நிச்சயம் ஒரு விஜய் ரசுகர்தான்னு எப்படி சொல்றீங்க?



இந்தக்கொலையை உங்களுக்கு வழங்குபவர் னு ஏதோ சைன் பண்ணி இருக்காரே?


=========================


18  மேரேஜ்க்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க?



 பிரபல ட்வீட்டர் - மாப்ள வீட்டை வாழ்த்தி ஒரு ட்வீட் லாங்கர் போடறோம்



=====================


19  ராகுல் - வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்?



மன்மோகன் - இதுக்குத்தாங்க நான் வாயத்தொறக்கறதே இல்ல



======================


20  அப்புறம் மேடம்.உங்க ஊர்ல மழை எல்லாம் எப்படி ?



 வழக்கம் போலத்தான்.மேலே இருந்து கீழே



=======================


21  இன்ஸ்பெக்டர்.ஜி மெயில் ல சைன் அவுட் பட்டன் காணோம் .



சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே கொடுக்க வேண்டிய புகார் இது இல்ல தம்பி.



=======================


Photo: Good morning friends ....
Pls listen here ...
Pls makes be happy forever after then listening .....