Sunday, February 24, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 22.2. 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. ஹரிதாஸ் - நினைத்தாலே இனிக்கும்", "யுவன் யுவதி" என இரண்டு படங்களை இயக்கி இருந்தாலும் இது தான் என் முதல்படம்... இந்தப்படத்தின் மூலம் என் மறைந்த இயக்குநர் அப்பா ஜி.என்.ரங்கராஜனின் பெயரை மட்டுமல்ல, என் குருநாதர் கமல்ஹாசனின் பெயரையும் காப்பாற்றுவேன் என்கிறார் இளம் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன்!




 அவர் சொல்லும் புதிய திரைப்படம் ஹரிதாஸ்! வில்லன் நடிகர் கிஷோர் - சினேகா ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹரிதாஸ் படத்தையே ஜி.என்.ஆர்.குமாரவேலன் தனது முதல்படமாக குறிப்பிடக்காரணம், இந்தப்படத்தில் தான் இவர், கதை, திரைக்கதை, எழுதி இருக்கிறார் என்பது தான்! 



இவரது இயக்கத்தில் வெளிவந்த முந்தைய இரண்டு படங்களில் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி உள்ளிட்ட இரண்டுமே வேறு கதாசிரியர்களின் கதையில் இவர் இயக்கிய படமாம்! அதனால் 3வது படமான ஹரிதாஸை தனது ‌கதை, திரைக்கதையில் உருவாகும் படமென்பதுடன், தனது முதல்படம் போல் இயக்கி வருகிறார் மனிதர்!

ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின் இசையில், ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பில், ஏ.ஆர்.வெங்கடேஷின் வசனத்தில் டாக்டர் வி.ராமதாஸின், டாக்டர் வி.ராம் புரொடக்ஷ்ன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகி வருகிறது ஹரிதாஸ். அத்துடன் தமிழில் முதல் பேசும்பட டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியிருப்பதும் ஹைலைட்!


ஈரோடு சண்டிகாவில் ரிலீஸ் . படம் பார்த்தாச்சு . செம படமான இதன் விமர்சனம் நாளை காலை  8.30 மணிக்கு 

 
2.  ஆதிபகவன் - அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ஆதிபகவன்.  பேராண்மை படத்தில் நல்ல பெயரை சம்பாதித்த ஜெயம் ரவி இன்னும் தன் திறமையை வெளிப்படுத்த அமீருடன் ஆதிபகவனில் களமிறங்கி இருக்கிறார். 

இந்த படத்தில் நடிக்க நீண்ட தாடி வளர்த்து வந்தார் ஜெயம் ரவி. இது ஒரு காதல் கதை என்றும் சொல்லப்படுகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார். 

அமீர் படத்தில் நடித்தால் வேறு எந்த படங்களுக்கும் தேதிகள் கொடுக்க முடியாது என்பது தெரிந்து தான் நடிக்க சம்மதித்தார் ஜெயம் ரவி. ஆனால் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களாலும் படம் சில தடங்கல்களை சந்தித்தது. 

இப்படத்தின் தயாரிப்பளர் திமுக எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நில மோசடி வழக்கு ஜெ.அன்பழகன் மீதும் பாய்ந்தது... அமீரிடம் பேசிய ஜெ.அன்பழகன் கொஞ்ச மாசம் பொருத்திருங்க என்று சொல்லிவிட்டாராம்.  இதனால் அப்செட்டில் இருந்தார் அமீர். 

இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு இப்போது மீண்டும் துவங்கி இருக்கிறது. திடீரென ஜெயம் ரவி தன் தாடியை எடுத்திருந்தார். பதரிப்போய் ஏதாவது பிரச்சனையா? படம் என்னாச்சு? என்று கேட்டிருக்கிறார்கள் கோலிவுட் நண்பர்கள். 

அட... பிரச்சனை எதும் இல்லைங்க... இது படத்தில் நான் நடிக்கிற இன்னொரு கெட்டப் என்பதை சொல்லி இருக்கிறார் ரவி. ஆம் படத்தில் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தாடி வைத்து ஒரு கேரக்டரும் மீசை மட்டும் வைத்து ஒரு கேரக்டரும் நடிக்கிறார் ரவி.  
ஈரோடு அபிராமி , ஆனூர் , அன்னூரி , சங்கா வில் ரிலீஸ் . இந்தப்பத்ின் விமர்சம் பிக்க 

ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2013/02/blog-post_258.html

 

 

 3. DIE HARD 5 - ஹாலிவுட் ஆக்ஷன் ஸ்டார் புரூஸ் வில்லிசுக்கு அசுரத்தனமாக புகழை பெற்றுக் கொடுத்த "டை ஹார்ட்" பட வரிசையில்  "டை ஹார்ட்-5". "ஏ குட் டே டூ டை ஹார்ட்" என்பது முழு தலைப்பு. ஜான் மூர் இயக்கி உள்ளார்.

 

 

சின்ன கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் புரூஸ் வில்லிசின் மகன் ரஷியாவின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கேள்விப்படுகிறார். மகன் ஏன் ரஷியா சென்றான். ஏன் அவனை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியோடு மகனை மீட்க ரகசியமாக புறப்படுகிறார். 

 

 

பல்வேறு ஆக்ஷன் அடிதடிகளுக்கு பிறகு மகனை மீட்கும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மகனும் தன்னைப்போலவே நாட்டை காக்கும் ஒரு உளவாளி என்பதை அறிகிறார்.

ரஷியாவில் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயாராவது பற்றி துப்பறிய வந்தபோதுதான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விபரம் தெரிய வருகிறது. அதன் பிறகு  அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து ரஷிய ராணுவத்தை ஒரு வழி பண்ணிவிட்டு அவர்கள் திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டு திரும்புவது கிளைமாக்ஸ். 

 

ஈரோடு  ஸ்ரீிரஷ்ணா , ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் , 

ஸ்ரீநிவாசாவுக்கு யாரும் போய்டங்க , சுண்ட் சிஸ்டம் சியா வேலை செய்யை , அடிக்கி மியூட் ஆகு . பம் பார்த்ாச்சு , விமர்சம் பன் கிழை கால8.30 மிக்

 

 

4. Zila Ghaziabad -Anand Kumar’s directorial project ‘Zila Ghaziabad’ opens with a sequence in which a train is being successfully robbed by a gang of robbers led by Mahendra Fauji (Arshad Warsi). And if you have seen the `Dabangg` series, it won’t take you long to realise that the ‘victory’ title song that follows the loot scene, is closely inspired by Salman Khan’s money-raking film. But not just the song, you have ‘Zila Ghaziabad’ painted in the shades of ‘Dabangg’ series in every possible way. 


So here you have ample gravity-defying action stunts, a hulky and bulky policeman to set things straight, a romance element thrown in, raunchy item numbers for cheap thrills, lots of blood bath and you can keep adding other possible paraphernalia. The only thing that makes this movie a tad dissimilar from ‘Dabangg’ is that it has some thrilling aspect which perhaps its savior.



‘Zila Ghaziabad’ narrates a real-life gang-war tale of the nineties which involved two powerful gangs led by Satbir Gujjar (Vivek Oberoi) and Mahendra Fauji (Arshad Warsi). Fauji is a right-hand henchman of Ghaziabad’s political figure played by Paresh Rawal who is often referred to as ‘Chairman’. On the other hand, there is Satbir, a school teacher by profession with idealistic views, whom the Chairman equally favours because - a) his education background is helpful in cracking deals that Fauji’s guns can’t b) he is Chairman’s would-be son-in-law. Now, when the Chairman refuses to cough up too much money for the marriage of Fauji’s sister, his greedy and crafty brother-in-law takes advantage of the opportunity to incite Fauji against Satbir. 

 

 

Why? Because the Chairman kicks the brother-in-law in the butt for usurping a part of his property, thereby, angering the latter. Fauji joins hands with Chairman’s arch rival Rashid (played by Ravi Kishan) to kill Satbir. Sanjay Dutt enters the scene as a cop with shades of grey, Pritam Singh, to play mind games against the warring gangs.


Now let us move on and talk about the actors in the roles they have played. Paresh Rawal has been given limited space to perform in the film as are other pros like Ashutosh Rana and small-screen star Eijaz Khan. But it was a kind of refreshing to see Ravi Kishan in a villainous role. Chandrachur Singh has done a cameo appearance in a film after a long time and even in the short time that he is there on the screen, he switches to and fro to the Haryanvi accent. Vivek Oberoi does romantic scenes in a cheesy manner. There is absolutely no chemistry between him and his on screen beloved played by Charmy Kaur. As an action hero, Vivek fares average marks. Arshad Warsi does his badmash act very well and for a few moments he can even make you hate his character.

I could not help noticing the men wearing flaunting Ray Ban aviators in the film. From a goon like Arshad Warsi to junior school teacher Vivek Oberoi who could be earning peanuts are all Ray Ban models in the film.

The music by Amjad - Nadeem and the pedestrian lyrics given by Shabbir Ahmed is something that could have been skipped by the makers to make the movie bearable. The cinematography is quite dizzying but thankfully the film has been edited decently.

So now the question is whether or not to watch the film? Well, watch it only and only if you don’t have anything more interesting to do this weekend.
Rating: 
12345

 ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்

 thanx - maalai malar, dinamani , dinamalar , z show bitz
 
 டிஸ்கி - வெள்ளிக்கிழை வேண்டியிவு டேமேஜின் கெடுபிடியால் 2 ட்கள் லேட் ;-)

சாப்பாட்டுக்கடை -அம்மா’ மெஸ் - சென்னை

அன்னமிட்ட கை... நம்மை ஆக்கிவிட்ட கை...’ என்று, எம்.ஜி.ஆர். பட பாட்டு ஒன்று இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஜோராக ஆரம்பித்துவிட்ட அரசின் மலிவு விலை உணவகத்தைப் பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் இப்படித்தான் பாடுகிறார்கள்!  
சென்னை மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்களை 19-ம் தேதி மதியம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. காலையில், ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும் மதியம் தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இட்லிக்கு சாம்பார் மட்டுமே, சட்னி கிடையாது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் கிடையாது. சாம்பார் சாதத்துக்கு அப்பளம் கிடையாது. 'அதையும் சேர்த்துக் கொடுத்தா என்னவாம்?’ என்று கேட்கிறார்கள் பசியோடு வருபவர்கள்!



மண்டலத்துக்கு ஒன்று எனத் திறக்கப்பட்டுள்ள இந்த உணவகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஐந்து லட்ச ரூபாய் செலவில் சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 200 வார்டுகளிலும் கடை திறக்கத் திட்டமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சமையல் பயிற்சி வழங்கப்படுகிறது. உணவுக்கூடத்தில் வேலை செய்பவர்களுக்கான சீருடை, பச்சைக் கலர் சேலை. கடை திறக்கப்பட்ட முதல் நாள் ஒரு மணி நேரத்திலேயே உணவு வகைகள் காலியானது. சாந்தோமில் முதல்வர் திறந்து வைத்த உணவகத்தில் மறுநாள் காலை 6.30 மணியில் இருந்தே நீண்ட வரிசை நின்றது.


''சாம்பார் சாதம் ருசியா இருந்துச்சு. நான் செக்யூரிட்டியா வேலை பார்க்கேன். ஒரு சாதமே வயிறு ஃபுல் ஆகிருச்சு. என்னோட வசதிக்கு எப்பவும் ரோட்டுக் கடைதான். இனிமேல் அம்மா கடைதான்'' என்றபடியே சாம்பார் சாதத்தில் அம்மா முகம் பார்க்கிறார் சர்தார் முகமது.



சீனிவாசபுரத்தைச் சேர்ந்த அஜிதா, ''பேப்பர் பிளேட்டை கையில் பிடிக்க முடியலை. சாப்பாடு சூடாக இருக்கிறதுனால, பயங்கரமாச் சுடுது. உட்கார்ந்து சாப்பிடலாம்னு பார்த்தா, அதுக்கு இட​வசதி இல்லை'' என்று 'உச்’ கொட்டுகிறார்.


தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார், ''சாம்பார் சாதத்தில் மஞ்சள் வாசம் அதிகமா இருக்கு. ரெண்டு சாதமும் 350 கிராம் அளவுனு சொன்னாங்க. ஆனா, தயிர் சாதம் அளவு குறைவாத் தெரியுது. தொட்டுக்க ஏதாவது கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?'' என்று கெஞ்சிக் கேட்கிறார்.



குறைகள் என்று சிலர் பட்டியல் போட்டாலும், ஜெட் வேகத்தில் எல்லாம் காலியாகி விடுகிறது. தரம் குறையாமல் இதே அக்கறையோடு தொடர்ந்தால், 'அம்மா’ மெஸ் ஏழைகளின் அமுதசுரபி​யாகிவிடும்!


- எஸ்.முத்துகிருஷ்ணன் 

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்


நன்றி - விகடன்

இந்திய அளவில் ஃபிகர் தர வரிசை


டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி
டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி  
1. பொண்ணுங்களுக்குப்பிடிச்ச ஆந்திரா ஹீரோ - மகேஷ் (CASH)பாபு


-----------------


2. மிஷ்கின் +இளையராஜா வழங்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # பலிகடா ஆகப்போவது யார்னு தெரிஞ்சுடுச்சு



-------------------


3. சமையல் அறையில் சம்சாரம் கெடுபுடி.கணவன் எடுபுடி


--------------------


4. மர்டர் ஹிந்திப்படம் பாகம் 1 ல 1 சீன்.மர்டர் 2 பாகம் 2 ல 2 சீன்.லாஜிக் படி மர்டர் 3 பாகம் 3 ல 3 சீன் இருக்கனும்.



--------------------------


5. 5369 ட்விட்டர் பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருத்தர் வீட்ல ஓ சி ல சாப்டாக்கூட 15 வருசம் தாட்டிடலாம் .எதுக்கு வேலைக்கு போகனும்?;-)



---------------------

தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்.. 

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும்  கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...  

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...
தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்..

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும் கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...


6. இந்திய அளவில் பிகர் தர வரிசை 1 கேரளா, ஹைதரா பாத்  2 குஜராத் 3 தமிழ்நாடு 4 காஷ்மிர் 5 மும்பை





----------------------------


7. தமிழ் நாட்டின் பிகர் தர வரிசை 1 கோவை 2 திருச்சி 3 ஈரோடு 4 சென்னை 5 சேலம்



-------------------------


8. மேனேஜர் ஒரு வாரம் லீவ்.அவர் செஞ்ச வேலை எல்லாம் நீங்கதான் செய்யனும்.



ஐ ஜாலி.ரொம்ப தாங்க்ஸ் சார். 



---------------------------------


9. உளுந்த வடை யை உன் கையால் சுட்டாய்.அது உளுத்துப்போன வடை ஆனது.



---------------------------


10. காதலிக்குப்பூ வாங்கித்தருவது ஒரு போதை நிலை.அதை கூந்தலில் (சவுரி) சூடி விடுவது உச்சக்கட்ட போதை



---------------------

 டால்மியா சிமென்ட் ஆபிஸ் 
 
டால்மியா சிமென்ட் ஆபிஸ்


11. அரசு மலிவு விலையில் தரும் இட்லி குஷ்பூ இட்லி அளவு எதிர்பார்க்கக்கூடாது.இலியானா இட்லி அளவுக்கு தான் இருக்கும்


---------------------------



12. மேடம் .இட்லி பணியாரத்தை விட சின்னதா இருக்கே?




ஜெ - ஒரு ரூபாய் இட்லின்னா ஒரு ரூபா காசு சைஸ் இட்லினு அர்த்தம்



---------------------


13. சிக் ஷாம்பு போட்டு குளிச்சா பிகர் சிக்குனு ஆகிடுமா? சவுரி சிக்கல் தான் தீருமா?



--------------------


14. திருமணமான ஆண்களே தைரியமாக பெண்ணைப்பார்த்து கண் அடிக்கிறார்கள்.பிரம்மச்சாரிகள் கண் அடிப்பதில்லை ,மாறாக...




------------------------


15. உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா ஐ லவ் யூ சொல்லுவே? மிஸ்.மேரேஜ் பண்ணத்தான் அதெல்லாம் வேணும்


--------------------


Sivakeerthi Siva shared Amazing Pictures's photo.
Playing with numbers
Click "SHARE" if you think it's awesome. ♥


16. நாயுடு ஹால் விளம்பரத்துல நடிக்க பொருத்தமான நடிகை - ப்ரியங்கா சோ ப்ரா



---------------------


17. நாக்க முக்க இயக்குனரின் அடுத்த படைப்பு "சகுந்தலாவின் காதலன்"! # அய்யய்யோ.சி ஐ டி சகுந்தலா கதையா?


----------------------


18. நான் ராசியில்லாத நடிகையா ...? - ஷார்மி # எவன் சொன்ன்து? எல்லாம் ஜாஸ்தியாத்தானே இருக்கு?



-----------------------


19. மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ. 




லொக் லொக் நானும் லொக் லொக் உங்களை ஹச் ஹச் லவ் அம்மா ஸப்பா லொக் லவ் பண்றேன் லொக் லொக் 




-------------------------


20. மாத்தி யோசிப்பது = சம்சாரம் நம்மை மாத்து மாத்துன்னு மாத்தும்போது இந்தக்கல்யாணம் நமக்குத்தேவை தானா என யோசிப்பது



-----------------------


"அன்பியல்"


21. நடிகை sunny leone னை மேரேஜ் பண்ணிக்கிட்டாக்கூட சன்னி லி OWNனு சொல்லிட முடியாது..


------------------------


22. பத்தரை மாத்து தங்கமா சம்சாரம் அமைஞ்சும் புத்தரை ஒழுக்கமா குடித்தனம் பண்ண வைக்க முடியல.இதுதான் வாழ்க்கை


-----------------------


23. மிஷ்கினின் அடுத்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # இந்தக்கதையை எட்டாங்கிளாஸ் லயே சொல்லிக்குடுத்துட்டாங்ளே?



-----------------------


24. எப்பவும் சோப்போடு சுத்தும் நடிகை ப்ரியங்கா சோப் ரா


-----------------------


25. ஒபாமா கிட்டே டெய்லி ட்விட்டர்ல பேசறீங்ளாமே? 




ட்விட்டர் ஹேன்டிலை நல்லா பாருங்க.அது ஓ பாமா.ஒபாமா அல்ல ;-))



-------------------------------------------



சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA BornToWin

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~
சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA @[256131114499294:274:BornToWin]

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~

Saturday, February 23, 2013

இசை ஞானி இளையராஜா மீதான 18 குற்றச்சாட்டுகள்



இளையராஜா மீதான குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் தாக்குதல்கள் என்று இதுவரை நான் கேள்விப்பட்ட சிலவற்றை கடந்த அரைமணி நேரத்தில் நினைவு கூற முடிந்ததை கீழே தொகுத்துள்ளேன். இவை இப்போதைக்கு எழுதும் போக்கில் நினைவுக்கு வந்தவை மட்டுமே.


1. ஆணவம் மிகுந்தவர்; இவரது ஆணவத்தினாலேயே பல இயக்குனர்கள் இவரை அழைப்பதில்லை. ஒரு இயக்குனரிடம் வாயை கொடுத்து கன்னத்தில் அறை வாங்கினார்; அவரது ஈகோ அடிவாங்கிய அந்த நிகழ்விலிருந்து அவரது சரிவு தொடங்கியது.


2. வைரமுத்து மீது காரணமின்றி தீராத வன்மம் கொண்டிருப்பவர். மாறாக வைரமுத்து இன்னமும் ராஜா மீது அன்பு கொண்டு கவிதை எழுதுபவர்.



 3. தன் நிகழ்ச்சியின் மேடையில் தன் படம் மட்டுமே இருக வேண்டும் என்று சொன்னார்; தன் நிகழ்ச்சிக்கு முன் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தவர்; அதனால் அல்பமானவர். பணத்தை ஆடம்பரமாக செலவழித்தார்; படாடோபமாக பிறர் பணத்தில் வாழ்ந்தார்;


4. வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை; அது மக்களின் பணம். ஜவுளிக்கடைகள் பலவற்றில் கடன் வைத்து திருப்பித் தரவில்லை. இன்னும் எத்தனையோ பேருக்கு பணம் திருப்பி தரவில்லை. தொலைத்த காசை கண்டு பிடித்து கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. ரசிகர் எழுதிய கடிதத்திற்கு பதில் போடவில்லை.

5. திருவாசகம் சிம்ஃபனியில் ஜெகத் காஸ்பரிடம் நன்றியில்லாமல் நடந்து அவமரியாதை செய்தவர்; திருவாசகம் விற்பனையில் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்தவர். திருவாசகத்திற்காக அரசு உதவியை பெற்று மறைமுகமாக அரசு பணத்தை திருடினார். ஆன்மீகம் பேசுபவர்; போலி ஆன்மிகம் பேசுபவர்; பிரமண அடிவருடி; அசைவம் உண்ணாதவர்;


6. அசைவ உண்ணும் பழக்கத்தை மதிகாதவர். புகழ்மோகம் கொண்டவர்; அதற்காக பல ஸ்டண்டுகளை நடத்துபவர். பாவலர் வரதராஜன், பாப் மார்லெயை குப்பை என்றார்; கதாரை குப்பை என்றார்; அடுத்து பாப் டைலனை கூட குப்பை என்றார். மலையாள கவிஞர் ஒன்வி குருப்பை பற்றி மோசமாக பேசினார்.

7. தன் பாட்டு காப்பியடிக்கப்பட்டதற்கு கோபப்பட்டார். ஆனால் அவரே சில காப்பிகள் அடித்தார். உதாரணமாக 'பா' திரைப்படத்தில் 'கும்சும்..' பாட்டு "இஸ்தான் புல்..' என்ற பாட்டிலிருந்து காப்பியடிக்கப் பட்டது. ஆபா, போனிஎம் இசையை திருடினார். அவர் ஒரு தலித் பார்ப்பனர்; பூணூல் அணியாவிட்டாலும் நரம்பையே பூணுலாக கொண்டவர்.

8. முல்லை பெரியார் நிகழ்வின் போது ஜாய் ஆலுக்காஸ் ஆதரவுடன் இசை நிகழ்ச்சி நடத்தினார். மாவீரர் மாதத்தில் வேண்டுமென்றே சிங்கள அரசிடம் கைக்கூலி பெற்று கனடா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்தார்; பெரியாரை சிலைக்கு மாலையிட மறுத்தார். ரமணரை பற்றி பாடினார்; புருஷசுக்தத்திற்கு இசை வடிவம் தந்தார். இவ்வாறு இந்துத்வ ஆதரவாளராக திகழ்ந்தார்.


9. யுவனுக்கு ஏதோ ஒரு விலை உயர்ந்த கார் வாங்கி தந்தார். ('யுவனுக்கு இந்த கார் வாங்கி தர்ரான்.. திருவாசகம் இசையமைக்க பணம் இல்லைன்றான்..") தன் பழைய வாழ்க்கையை நினைத்து பார்க்காதவர். தான் ஜாதி பற்றிய உணர்வு இல்லாதவர். தலித்களுக்காக குரல் கொடுக்காதவர். ஒரு கழுகின் உயரத்திற்கு பறந்து கழுகாகவே மாறி விட்டவர். சனாதனத்தை அசைக்காமல் இசைத்தவர். தன் ஜாதியை குறிப்பிட்டதற்காக கே ஏ குணசேகரன் மீது வழக்கு தொடுத்தவர்.


10. 'ஆசை நூறுவகை..' பாட்டை தான் அனுமதித்ததை விட அதிகமாக பயன்படுத்தியதற்காக ராம் கோபால் வர்மா மீது வழக்கு போட்டவர். விஞ்ஞானம் என்றால் என்னவென்று அறிவில்லாதவர்.

11. அதை முடம் மூடம் என்பவர். எஸ்பிபி மீது பொறாமை கொண்டவர். அவரை ஒழித்துக் கட்ட முயற்சித்தவர். பிள்ளை பாசத்தால் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் யுவனை பாடவைத்தவர்.

12. பாரதிராஜாவை பற்றி மோசமாக பேசியவர். ரஹ்மானை மதிக்காதவர். ரஹ்மானின் சாதனைகளை அங்கீகரிக்காதவர். ரஹ்மானுக்கு பத்மபூஷன் கிடைத்த போது பாராட்டாமல்' 'I can only feel for myslelf' என்றவர். தன் சிம்பனியை வெளியிடவில்லை; சிம்ஃபனி எழுதினாரா என்பதே சந்தேகம்; எழுதியதற்கான ஆதாரம் இல்லை. சிம்ஃபனி எழுதியதாக பொய் சொல்லி ஃப்ராடு வேலை செய்தவர்.


13. அவரது திருவாசகம் உண்மையில் ஆரட்டோரியா இல்லை. ஹிந்தி இசையமைப்பாளர்கள் பற்றி தவறான செய்தியை மேடையில் சொன்னவர். மலேசியா வாசுதேவனை அவரது கடைசி காலத்தில் போய் பார்க்காதவர்; மலேசிய வாசுதேவனுக்கு உதவாதவர். தம்பி கங்கை அமரனுடன் கோபம் கொண்டு பேசாதவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்திருப்பவர். கங்கை அமரனுக்கு தர வேண்டிய காம்பையர் வேலையை பார்திபனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தன் நிகழ்ச்சிகளில் கொடுத்தவர்.


14. தன்னிடம் வேலை பார்க்கும் இசை கலைஞர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தராதவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் பற்றி அவர்களின் முதுகுக்கு பின்னால் கேவலமாக பேசுபவர். கேஸட்டுகளில் சிடிக்களில் வாத்தியங்களை இசைத்தவர்களின் பெயர்களை (ரஹ்மான் செய்வதுபோல்) குறிப்பிடாதவர். பாட்டுக்கு மெட்டு என்று இல்லாமல் தன் இசைக்கு பாட்டு போடும் வழக்கத்தை கொண்டு வந்தவர். திருவாசகத்திலேயே முதலில் மெட்டை தேர்ந்தெடுத்து விட்டு, பின்பு அதற்கு ஏற்ப பாடல்களை கண்டுபிடித்தவர்.


15. பல பாடல்களை பவதாரிணியை பாடவைத்து கெடுத்தவர். மேலும் பல பாடல்களை சுருதி இல்லாமல் தான் பாடி கெடுத்தார். மாண்டு ராகம் ஒரு கர்நாடக ராகம் என்று தவறான தகவலை தந்தவர்; அவருக்கு கர்நாடக இசை ஒழுங்காக தெரியாது. இன்றய திரை இசை தரம்குறைந்தது என்றார்; ஆனால் யுவன் சங்கர் ராஜா இசை பற்றி குறை சொல்லவில்லை.


16. திரையிசையில் ஆன்மா இல்லை என்றார். அவரது பல பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்ததே ரஹ்மான்தான். 'How to name it' 25வது ஆண்டு விழாவிற்கு நரசிம்மனை அழைக்கவில்லை; அதன் ஒரிஜினல் கேஸட்டில் நரசிம்மன் பெயரை போடவில்லை. அற்பமான மனிதர்; மனிததன்மை இல்லாதவர். மூகாம்பிகை கோவிலுக்கு காசு கொடுத்தார்; ஆனால் திருவாசகத்திற்கு காசு இல்லை என்றார்.


17. எம் எஸ் விஸ்வநாதன் இசை குறிப்புகள் எழுதி இசையமைப்பதில்லை என்று குறை சொன்னார். நவபார்ப்பனர்; தன்னை பார்பனர்களை விடவும் உயந்தவராக கருதிக்கொள்பவர். கவிதையைவிட இசையே சிறந்தது என்று நினப்பவர். அதை நிறுவ படாதபாடுபடுபவர்.


18. "தாமரை மலரில் மனதினை வைத்து.." என்ற கண்ணதாசனின் வரிகளில் அர்த்தமில்லை என்று சொன்னார். கவிதை என்பதே குப்பை என்று நிறுவ படாதபாடு பட்டார். அதனால் மனப்பிறழ்வு கொண்டவர்…. இன்னமும் ஏகபலது உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவுக்கு வந்தது.



இதற்கெல்லாம் விரிவான பதில் சொல்வதும், விமர்சன பூர்வமாக அணுகுவதும் சாத்தியம். ஆனால் அதுவல்ல விவேகமான அணுகுமுறை. நாம் கேட்க வேண்டியது, உலகின் எந்த மூலையிலாவது, எந்த சமுகத்திலாவது ஈடு இணையற்ற தங்களின் மேதையை பற்றி இப்படி பேசி கேட்க முடியுமா? அப்படி இளையராஜாவை விட தமிழகம் தந்த மேதை என்று வேறு யாராவது இருக்கிறார்களா?

இந்திய அளவில் யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு மேதையை, அதுவும் எந்த வாய்ப்பும் வசதியும் அற்ற, இளையராஜா என்று ஒருவர் பிறந்திருக்காவிட்டால் ஏனையோர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு கிராமத்தில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தமிழகம் முழுக்க அலைந்து, கடின உழைப்பில் முன்னேறி, பட்டினி கிடந்து, வாய்ப்புக்காக காத்திருந்து, வாய்ப்பு வந்த பின் பிரபஞ்ச கூத்தாடிய (இதை எழுதும் போது கண்ணீர் வருகிறது) 



ஒருவனை வெறும் வம்புகளாலும், வசைகளாலும் எதிர்கொள்ளும் சமூகம் உருப்பட ஏதேனும் துளி சாத்தியம் உள்ளதா? உள்வாங்க முடியாத விஷயத்தை, அளவிட முடியாததை, ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியாததை பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் சின்னதனமாக விமர்சனங்களால் அணுகும் ஒரு சமூகம், தன்னை பற்றி மற்றவர்களின் முன்முடிவுகள் குறித்து கழிவிரக்கம் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? 

 நன்றி -

rozavasanth (@rozavasanth)

ஐந்து பேரால் சிதைக்கப்பட்ட கோவை பள்ளி மாணவியின் வாக்குமூலம்

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?
ஐந்து பேரால் சிதைக்கப்பட்ட அப்பாவிச் சிறுமி
கோவை பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்​தை அறிந்து, தமிழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. 


கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமிதான் பாதிக்கப்பட்டவர். கடந்த 16-ம் தேதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்​துக்கு வந்தார் அந்தச் சிறுமி. 'எனது மாமா கோபாலகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் எனக்கு மயக்க ஊசி போட்டு, கடந்த ஒரு வருடமாக மாறி மாறி பலாத்காரம் செய்தனர்’ என்று பதற்றத்துடன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதியப்​பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


என்ன சொல்கிறார் மாணவி?


தன்னைச் சீரழித்தவர்கள் யார், எப்​போது இந்தச் சம்பவம் நடந்தது என தேதி வாரியாக போலீ​ஸாரிடம் தெரி​வித்து இருக்கிறார் மாணவி. அவர் கை காட்டி​யவர்களில் சிலர் அரசியல் மற்றும் பண பலம் மிக்கவர்கள்.


''எனது தாயும் தந்தையும் கடந்த 11 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். நான் தந்தையின் பராமரிப்பிலும் எனது சகோதரி, தாயின் பராமரிப்பிலும் இருந்​தோம். எனது தந்தை உடல் நலக்​குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக என் அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகிறேன்.  



கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்​பட்டேன். மாமா கோபாலகிருஷ்ணன், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவி​யாளராகப் பணியாற்றி ஓய்வு​பெற்றவர். எனக்கு மயக்க ஊசி போட்டு மாமா கோபால​கிருஷ்ணனும் பாலசுந்தரமும் என்னை பலாத்காரம் செய் தனர். 'வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம்’ என மிரட்டினர்.



அடுத்து சில நாட்களில் பாலசுந்தரம் உதவியுடன் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருப்ப​சாமி, எனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்.



 கடந்த ஆண்டு, அக்டோபரில் மாமா கோபாலகிருஷ்ணன் என்னை சினிமா​வுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சுந்தராபுரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ராகம் கருப்பசாமி என்பவரிடம் அழைத்துச் சென்றார். அவரும் என்னைப் பலாத்காரம் செய்தார். அடுத்​தடுத்து நான்கு பேரும் என்னைப் பலமுறை பலாத்காரம் செய்தனர். இந்த நிலையில், எனது வீட்டின் அருகில் உள்ள பெயின்டர் ஒருவர் என்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து​கொள் வதாகவும் கூறி என்னைப் பலாத்​காரம் செய்தார்'' - இவ்வாறு செல்கிறது மாணவியின் வாக்குமூலம்.  



உதவிக்கு வந்த மாமா மகன்!


மாணவியால் குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணன், பாலசுந்தரம், ரியல் எஸ்டேட் அதிபர் கருப்பசாமி, 'ராகம்’ கருப்பசாமி ஆகியோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெயின்டருக்கு 17 வயது. இவர்கள் ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது கோவை போலீஸ்.



''மாணவி தனது மாமாவிடம் கெஞ்சிக் கேட்டும்கூட, சிறிதும் இரக்கம் இல்லாமல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். தன்னைப் பாலியல் ரீதியில் மாமா துன்புறுத்துவது தொடர்பாக அந்த மாணவி மாமா மகனிடம் கூறி அழ, அவர்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்தார்'' என்கின்றனர் போலீஸார்.



''நான் கும்பிடுற சாமி சும்மா விடாது!''


கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, காப்பகம் ஒன்றில் போலீஸ் பாது​காப்புடன் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியைச் சந்திக்க அவரது தாய்கூட அனுமதிக்​கப்படவில்லை. இதுகுறித்து, போலீ​ஸாரிடம் கேட்டபோது, ''மாஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு முன், சிறுமியின் மனநிலையில் யாராவது குழப்பம் செய்து விடுவார்கள் என்பதால், யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை''  என்றனர்.


நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாணவியின் தந்தை தண்டபாணியிடம் பேசினோம். ''சின்ன வயசுல இருந்தே அங்கேதான் இருக்கா. நல்லா பாத்துக்குவாங்கனுதானே அனுப்பி​வச்சேன். ஆனா, என் மகளை இப்படி ஆக்கிட்டாங்களே? பாழாப்போன பயலுக எம் மகளை நாசமாக் கிட்டாங்க. நான் கும்புடுற சாமி அவங்களைச் சும்மா விடாது'' எனக் கதறி அழுதார்.



சிறுமியின் தாய் லட்சுமியிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் வேலை​களில் சிலர் ஈடுபட்டு இருக்காங்க. அதை அனுமதிக்கக் கூடாது. இதன் பின்னணியில் வேறு சிலரும் இருக்கலாம். அதனால், முழுமையா விசாரிச்சு, தவறு செஞ்ச அனைவரையும் தண்டிக்கணும். வழக்கு விசாரணைக்குப் பின்னர் மகளை என்னிடம் ஒப்படைக்கணும்'' என்றார்.


''நாங்களே தண்டனை தருவோம்!''


இந்தச் சம்பவத்தால் கொதித்தெழுந்த கோவை மக்கள், தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்​களை நடத்தி வருகின்றனர். பலாத்கார வழக்கில் சிக்கி கைதான ரியல் எஸ்டேட் கருப்பசாமி, சவுண்ட் சர்வீஸ் ராகம் கருப்பசாமி ஆகியோரது வீடுகள் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, குற்றம் சாட்டப் பட்டவர்களின் வீட்டுக்குப் போலீஸ் பாது​காப்பு போடப்பட்டது.


போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலரிடம் பேசினோம். ''இவனுங்களுக்கு எல்லாம் மக்கள் முன்னி​லையில் தண்டனை தரணும். தன் மகள் வயசுல, பேத்தி வயசுல இருக்கற பொண்ணை இப்படிச் செய்ய எப்படித்தான் மனசு வந்துச்சோ? இவங்களுக்குத் தர்ற தண்டனை, இனி யாருக்கும் இதுமாதிரி தப்பு செய்யத் தோணக் கூடாது. பண பலத்தால் இவங்க வழக்கில் இருந்து வெளியே வந்தா, நாங்களே தண்டனை தருவோம்'' என்றனர் ஆவேசமாக.



பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, கைதான​வர்களின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினர். சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்க முயன்றும் முடியவில்லை.


பேரம் நடத்தும் அரசியல் 'தலை’கள்!


இந்த வழக்கில் கைதானவர்களில் மூவர் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். மாணவியின் மாமா கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. ஆதரவாளர். ரியல் எஸ்டேட் கருப்பசாமி அ.தி.மு.க. பிரமுகர். ராகம் சவுண்ட் சர்வீஸ் கருப்பசாமி, தி.மு.க-வைச் சேர்ந்தவர். பணம் மற்றும் அரசியல் பலம்மிக்க இவர்கள், வழக்கில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு பணத்தையும் செல​வழிக்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்துகொண்ட சில அரசியல் தலைகள் களத்தில் குதித்துள்ளன.


''டாக்டர்கள், போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்யப் பேரம் நடக்கிறது. இதற்காக வாக்குமூலங்களை மாற்றும் வேலைகளும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் செல்வாக்கில் தப்பிக்கவிடக் கூடாது. அவ்வாறு நடந்தால் எங்களின் போராட்டம் வேறு வடிவில் இருக்கும்'' என்று கொதிக்​கிறார்கள் மக்கள்.



விரைவில் கிடைக்குமா நீதி?



இந்த வழக்கில் கைதான ஐந்து பேருக்கு ஆதரவாக, கோர்ட்டில் ஆஜராகப்போவது இல்லை என கோவை பெண் வக்கீல்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கைதான ஐவரில் ஒருவர் சிறார் பருவத்தில் உள்ளவர் என்பதால், அவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், மற்ற நால்வருடன் அவரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அதேபோல், வழக்கில் அரசியல் மற்றும் பணபலம் உள்ளவர்கள் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், வழக்கு விரைந்து முடியுமா என்பதும் கேள்விக்குறி. இதை எல்லாம் முறியடித்து இந்த வழக்கை வேகமாக விசாரித்து விரைவில் நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!



- ச.ஜெ.ரவி 


படங்கள்: தி.விஜய்

நன்றி - ஜூ வி 

எய்தவன் - சுஜாதா - சிறுகதை ( 1996)

பெசன்ட் நகரில் ஒரு வீடு - டிசம்பர் 4, 1995... 


 
 சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்... பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் 'ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான்.




குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, சதுர முகம், மாநிறம், காலர் இல்லாத சட்டை, அதனுள் தெரிந்த சங்கிலி. மீசை ஏன்... அடர்த்தியான காதோர முடியைக்கூடக் கவனித்தார். ஒருவிதத்தில் இவனை உள் மனதில் எதிர்பார்த்திருந்தாரோ...


''யாருப்பா?''
''சாரைப் பார்க்கணும்.''
''என்ன விஷயமா?''
''கேஸ் விஷயமா.''
''அதுக்கெல்லாம் தம்புசெட்டித் தெருவில் ஆபீஸ் இருக்குது... அங்க வாப்பா...'' என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் ஒளித்துவைத்து இருந்த இரண்டு ஆயுதங்களை முதுகுப் பக்கத் தில் இருந்து எடுப்பதைப் பார்த்தார். வாசலில் ஆட்டோ ரிக்ஷா இன்ஜின் அணைக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது. ஆபத்து என்று அவருக்குள் அட்ரினலின் பாய்வதற்குள், அவன் நேராக மார்பைக் குறிவைத்துக் குத்தினான். சற்றே திரும்பிவிட, விலா எலும்புக்குள் தாக்குதலின் வேகத்தினாலும் பலத்தினாலும் மென்மையான தசைகளுக்குள் புகுந்து கத்தி யின் நீளத்துக்கு அதிகமாகவே கிழித்தது. தடுமாறி ''மரகதம், மரகதம், மணி...'' என்று அலறுவதற்குள் மற்றொரு குத்து. இந்த முறை கழுத்தில் மற்றொரு ஆயுதத்தால் மண்டை மேல் பக்கவாட்டில் பாய்ந்து, நெற்றிக்கு அருகில் பட்டு, வலது கண்ணைச் சேதப்படுத்தி, தாடைக்குள் பாய்ந்து வராந்தாவில் அலங்காரத்துக்கு வைத்திருந்த 'டெரகோட்டா’ குதிரை மேல் ரத்தம் தெறித்தது. ரத்த சேதத்தில் நினைவிழப்பதற்கு முன் அவன் முகத்தின் தழும்பையும் வியர்வை நாற்றத் தையும் மூச்சில் சாராய நெடி யையும் உணர்ந்தார்.



அக்கம்பக்கத்தினர் குரல் கேட்டு ஓடி வருவதற்குள் அவன் ஆட்டோ ரிக்ஷா ஏறி வேகமாகச் சென்றுவிட்டான். தெரு முனையில் மற்றொரு ஆட்டோ காத்திருந்தது. இந்த ஆட்டோ அவனை உதிர்த்துவிட்டுக் கூட்டத்தில் கரைந்து விட்டது. 40 தூரத்தில் ஒரு டி.வி. சீரியலுக்குப் படம்பிடிக்க டிபன் பாக்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தன.


 அவர்கள் யாரும் கவனிக்கவில்லை.
சுந்தரலிங்கம் மயங்கிவிழுந்தார். அவர் மகன் முகச்சவரம் பண்ணிக்கொண்டு இருந்தவன் ஓடிவந்தான். கொஞ்ச நேரம் செய்வது அறியாமல் தடுமாறிய பின், மாருதியில் அவரைத் திணித்து (பின் சீட்எல்லாம் ரத்தம்) அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். 'போலீஸ் கேஸ்’ என்று அவர்கள் எடுக்க மறுத்து, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொடுத்தார்கள். அடையாறில் இருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு மயக்க நிலையில் எடுத்துச் செல்கையில், மிகுந்த ரத்த சேதத்தில் அழுத்தம் குறைந்து, மூச்சு நூல்போல வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது. இதயம் நின்றுபோகும் அவசரத்தில் இருந்தது. எமர்ஜென்ஸியில் அவருக்கு ரத்தம் மணிவாசகம்தான் கொடுத்தான். வெளிப்புறக் காயங்களை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்... தையல் போட்டார்கள். மார்பில் பாய்ந்திருந்த கத்திக்குத்து அகலக் குறைவாக, ஆனால், எட்டு இன்ச்சுக்கு மேல் ஆழமாக இருந்த அதன் பாதையில் டிஷ்யூக்களை எல்லாம் சேதப் படுத்தியிருந்தது.



ராயப்பேட்டை ஆஸ்பத்திரி      மாலை 5 மணி... 



அதே தினம் டெலிவிஷன் கேமராக்களும் நிருபர்களும் ஆஸ்பத்திரியைச் சூழ்ந்துகொள்ள... போலீஸ் டி.ஐ.ஜி. வந்தபோது, கேள்விக்கணை களால் துளைக்கப்பட்டபோது...
''மணிமோகன் ஆளுங்கதான் செய்திருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்களே.?''
''நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்...''
''கொலைகாரனைப் பிடிச்சுருவீங்களா?''
''முதல்ல இது கொலை இல்லை. கொலை முயற்சி... சுந்தரலிங்கம் உயிருடன் இருக்கார். ட்ரொமா வார்டில் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கார்...''
''இது ஏற்பாடு செய்த கொலைனு...''
''நாங்க எந்த முடிவுக்கும் வரலை...''
''கொலை முயற்சி செய்தவனைப் பிடிச்சுருவீங்களா?''
''அதுக்குத்தானே போலீஸ் இருக்கு.''
''பிடிக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?''
''எனக்குக் கோபம் வரலை'' என்று சிரித்தார் டி.ஐ.ஜி.
''ஆட்டோ நம்பர் தெரியுமா?''
''முதல்ல ஆட்டோவான்னே ஊர்ஜிதமாகலை. அவருக்கு நினைவு வந்தப்புறம்தான் மேல் விவரம் தெரியும். அவர் குத்தப்பட்ட சமயத்தில் பக்கத்துல யாரும் இல்லை. 40 அடி தள்ளி ஷூட்டிங் செய்துக்கிட்டு இருங்காங்க... அவங்க யாரும் கவனிக்கலை. போலீஸ் என்ன செய்யும், சொல்லுங்க...''
''சுந்தரலிங்கம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, கொடுக்க வேணாம்னு மேலிடத்து உத்தரவு வந்தது உண்மையா?''
''பொய்... அவர் எங்ககிட்ட புரொட்டெக்ஷன் எதும் கேக்கவே இல்லை.''



சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுந்தரலிங்கத்துக்கும் அவர் மனைவி மரகதத்துக்கும் நிகழ்ந்த உரையாடல்... 




மரகதம்: ''எதுக்காகங்க உங்களுக்கு வம்பு? அவன் ஆளைவெச்சு அடிப்பானாம். இப்பவே நீங்க பாட்டுக்கு கோர்ட்டுக்குப் போயிர்றீங்க. தெனம் ரெண்டு போன்கால் வருது... 'தாலி அறுக்கணுமா... உம் புருஷனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு... கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’னு.''
சுந்தரலிங்கம்: ''இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது மரகதம்...''
மரக: ''பின்ன எதுக்குத்தான் பயப்படணும்?''
சுந்: ''கடவுளுக்கும் மனசாட்சிக்கும்தான் பயப்படணும்.''
மரக: ''எனக்கு மணிமோகன்கிட்டயும் பயம்.''


சுந்: ''இவனெல்லாம் மந்திரியா இருக்க லாயக்கு இல்லை. சாராய சாம்ராஜ்யம், ஹவாலா மார்க் கெட்னு கோடி கோடியா சம்பா திச்சு வெச்சிருக்கான். இவன் தொழிற்சாலையில வொர்க்கர்ஸ் கேஸ்ல அப்பியர் ஆனேன். எத்தனை ஊழல் தெரியுமா..? ரிஜிஸ்தர்ல ஒரு சம்பளம்... கொடுக் கறது ஒரு சம்பளம். 'லேபர் லா’வுக்குப் பயந்து பர்மனென்ட் ஆக்காம ஆறு மாசத்துக்கு ஒரு முறை டிஸ்மிஸ் செஞ்சு மறுபடி வேலைக்கு எடுத்துக்கற ட்ரிக்... 200 பேரை அப்படி வெச்சிருக் கான். சைல்டு லேபர்... வயசை அதிகமாகச் சொல்லி சைல்டு லேபர் பதினஞ்சு ரூபா சம்பளம் உயர்த்த அழறான். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை வெளிநாடு போறான். கட்சிக்காக ஓப்பனாவே இன்டர்வியூ ஒன்றுக்கு ஒரு லட்சம் வெச்சாத்தான் பேட்டியே உண்டு. தினம் 20 பேர்கிட்ட வாங்கறான் இப்படி.''



மரக: ''அவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. இந்த உலகத்தையே திருத்துவீங்களா?''
சுந்: ''இல்லை, மணிமோகன் ஒரு டெஸ்ட் கேஸ்... நான் எடுக்கறதெல்லாம் டெஸ்ட் கேஸ்தான். பப்ளிக் இன்ட்ரஸ்ட் கான்ஸ்டிட்யூஷனல் லா... கன்ஸ்யூமர் மேட்டர் இப்படித்தான் எடுப்பேன். மணிமோகன் மாதிரி ஆளுகளையெல்லாம் கேள்வி கேக்காம சுட்டுருவாங்க சைனாபோல நாட்ல.''
மரக: ''அங்கேயும் கரப்ஷன் இருக்குன்னு கல்கண்டுல படிச்சேன்.''
சுந்: ''கரப்ஷன் எல்லா இடத்துலயும்தான் இருக்கு. ஏன்... அமெரிக்காவுல இல்லையா? ஆனா, அதை எதிர்த்துப் போராடறவங்களும் எல்லா இடத்துலயும் என்னை மாதிரி நிறையப் பேர் இருப்பாங்க. இங்க நான் ஒருத்தன்தான்.''
ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தன் டீனுடன் பேசிய பேச்சு..

.
டீன்: ''என்ன ராம்... எப்படி இருக்கார். புரட்சி வக்கீலு?''

ராம்குமார்: ''சுந்தரலிங்கம் ஸ்கல்ல அடிபட்டு கன்கஷன் உள்ளே கொஞ்சம் ரத்தம் கசிந்து, கட்டி தட்டிப் போயிருக்குது... ஸ்கேன்ல தெரியுது பாருங்க... காயங்கள்லாம் நல்லாவே ஆறிக்கிட்டு வருது... ஸுச்சர் போட்டது... நல்லவேளை டயாபட்டிக் இல்லை.''
டீன்: ''தெரியுது. மூளைல கட்டி கரையறத்துக்கு மருந்து கொடுத்துருங்க. ரொம்ப பேஜார் கேஸுங்க... பத்திரிகைக்காரனுவ, போலீஸ்காரனுவ, ஜீ.டி.வி-லருந்து ஒரு பொம்பளை உயிரை எடுக்கறா... 'பேட்டி கொடு, விவரம் எப்ப வரும்’னு.''
ராம்: ''சுயநினைவு வந்து, யார் தாக்கினார்கள் என்கிற விவரம் வெளிப்பட ஒரு வாரமாவது ஆகும் சார்.''
டீன்: ''பொழைச்சுருவார் இல்ல?''
ராம்: ''பிழைச்சுருவார். ஆனா, ஒரு கண்ணு போயிருச்சு. க்ளாஸ் ஐதான் பொருத்தணும். முகத் துக்குக் குறுக்கே தழும்பு. ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். கத்திக்குத்து இதயத்தை அரை இன்ச்ல தவறவிட்டிருக்குது.''
22.1.96 பெசன்ட் அவென்யூ சுந்தரலிங்கத்தின் வீட்டில்... 



டிஸ்சார்ஜ் ஆகி காரில் இருந்து இறங்கியவரைக் கண்ணீருடன் வரவேற்றாள் மரகதம்.
''உயிர் பிழைச்சு வந்தீங்களே... அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்துருவம்...''
''இல்லை, மரகதம் இப்ப டயர்டா இருக்குது... டி.ஐ.ஜி. வேற வரேன்னுசொல்லியிருக்காரு.''
''உங்க கண்ணு... உங்க கண்ணு..?''
''ஒரு கண்ணு போனது போனதுதான். எதையோ கோலிக்குண்டை வெச்சுப் பொருத்தியிருக்காங்க. ஊசிநூல் கோக்க சிரமமா இருக்கும்னாங்க. படிக்கறதுல அதிகம் ஸ்ட்ரெயின் வேண்டாம்னாங்க. அதும் இடது கண்ணு. அழுவாத கண்ணு. நீ சொன்னாப்பல உயிரோட திரும்பினதே பெரிசு. காயம் ஆறிடுச்சு. தழும்பு போயிடும்... இந்தத் தழும்பு! ஆனா, இன்னொரு தழும்பு போகாது.''
''ஐயோ! இந்த வக்கீல் வேலையே வேணாங்க. இருக்கறதை வெச்சுக்கிட்டு ஏதாவது கம்பெனியில லீகல் அட்வைஸர் வேலை பாத்துக்கங்க. பையனும் படிப்பை முடிச்சுருவான். ஊருக்காக பிராது கொடுத்து அலைஞ்சு உசிரைவிட்டது போதுங்க. என்னங்க... இத்தனை ஃபீல் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்... சிரிக்கிறீங்களே?''
''ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே. கடவுள் காப்பாத்துவார்.''
''உங்களைத் திருத்தவே முடியாதுங்க.''



23.1.96 பிற்பகல் - டி.ஐ.ஜி. வந்து நலம் விசாரித்தபோது...
டி.ஐ.ஜி.: ''மிஸ்டர் சுந்தரலிங்கம்... சும்மா ஒரு கர்ட்டசி விசிட்தான். உங்க கேஸு ரொம்ப ஹாட் ஆயிருச்சு. நீங்க எப்ப ஐடென்டிபிகேஷனுக்கு வர முடியும்னு சொல்லுங்க. ஒரு மாதத்துக்கு செக்யூரிட்டி போட்டிருக்கோம். பார்த்திங்கல்ல...''
சுந்தரலிங்கம்: ''கண்டுபிடிச்சுட்டீங்களா ஆளை?''
டி.ஐ.ஜி.: ''நாலு பேரைப் புடிச்சுவெச்சிருக்கோம். இந்த மாதிரி காசு வாங்கிட்டுக் கொலை செய்யற நாலஞ்சு கும்பல் இருக்குதுங்க. எல்லாருக்கும் கான்டாக்ட் உண்டு. ஹிட்மென் போலீஸ்லயும் இவங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்க குத்துப்பட்டஉடனேயே அவங்கள்ல சேகர்னு ஒருத்தன் கன்னியாகுமரில தக்கலைன்னு ஒரு ஊர்க்காரன்... தலைமறைவாய்ட்டான். ஆறு இன்ச், எட்டு இன்ச் கத்திஎல்லாம் அவன்தான் பயன்படுத்திட்டு ஆட்டோ மாத்திப் போயிருவான். இப்பத்தான் ஒரு மாசம் விட்டு மெட்ராஸ் திரும்பியிருக்கான். அவனாத்தான் இருக்கும்னு தோணுது. உங்களைக் குத்தினவன், முகம் ஞாபகம் இருக்குமா உங்களுக்கு?''
சுந்: ''கண்டிப்பா... அந்த முகத்தை மறக்கவே மாட்டேன்.''
டி.ஐ.ஜி.: ''தட் மேக்ஸ் அவர் ஜாப் ஈஸி. மேலும், உங்க கேஸ் ரொம்ப பொலிட்டஸைஸ் ஆயிருச்சு. யாரையாவது கைது பண்ணியே ஆகணும்... பத்திரிகைக்காரங்க துளைக்கிறாங்க. அதும் தனியார் டி.வி-லருந்து மாயானு ஒரு பொண்ணு... என்னென்னவோ வரம்பில்லாமக் கேக்குது. என் மக வயசு தான் இருக்கும்.''
சுந்: ''நீங்க சேகரோ எவனோ... அவனைப் பிடிச்சு என்னங்க பிரயோஜனம்? அவன் ஒரு அம்புங்க. எய்தவன் யாருனு.''
டி.ஐ.ஜி.: ''முதல்ல அடையாளம்... அப்புறம் அவனைச் செலுத்தியது யாருனு கண்டுபிடிக்கறம்.''
சுந்: ''அவனைச் செலுத்தியது மந்திரினு தெரிஞ்சா, மந்திரிய அரெஸ்ட் பண்ணுவீங்களா?''
 டி.ஐ.ஜி.: (சற்றுத் தயக்கத்துக்குப் பின்) ''நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியுது. ஆனா, மினிஸ்டர்ங்க எல்லாருமே தடயங்களை மறைச்சுருவாங்க. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்லயே திணர்றாங்களே. எதையும் கோர்ட்ல நிரூபிக்கறது கஷ்டம். என்னைக் கேட்டா, நீங்க இந்தக் கோணத்தை விட்டுர்றதுதான் நல்லது.''
சுந்: ''மழுப்பறீங்க... நான் கேக்கறது, 'ஒரு மந்திரிதான் குத்த வெச்சார்’னு அவன் சொன்னா, அந்த மந்திரியைக் கைது பண்ண மனோபலம் உங்களுக்கு இருக்கா? சந்திரலேகா கேஸ்ல என்ன ஆச்சு... ஏன் விட்டீங்க..?''
டி.ஐ.ஜி.: ''நீங்களும் மாயா மாதிரியே கேள்வி கேக்கறீங்க. ஒருமுறை நான் அஃபீஷியலா இல்லாம தனியா வரேன். அப்ப பேசலாம்... அடுத்த சனிக்கிழமை வெச்சுக்கலாமா?''
சுந்: ''என்ன?''
டி.ஐ.ஜி.: ''அடையாள பரேடு. அஞ்சு பேர்ல யாருன்னு நீங்க அடையாளம் காட்டணும்.''
சுந்: ''எய்தவன் இருக்க அம்பைக் கொண்டுவர்றீங்க.''
டி.ஐ.ஜி.: ''அம்பையும் அடைக்கணும் இல்ல.''
சுந்: ''ஒண்ணு பண்ணுங்க முதல்ல... அந்த சேகர்ங்கறவனை இங்க கூட்டிட்டு வாங்க.''
டி.ஐ.ஜி.: (சற்று யோசித்து விட்டு) ''இல்லைங்க. அது முறைப்படி தவறுங்க. முதல்ல ஐ.டி. பரேடு ஆவட்டும். அப்புறம் அவன்தான்னு நிச்சயமா தெரிஞ்சா தனியா அழைச்சுட்டு வரேன். அவனை எல்லாம் அடிச்சுக் கிடிச்சு வழிக்குக் கொண்டுவர முடியாதுங்க. சரியான உதை தாங்கு வாங்க.''
சுந்: ''அடிக்கிறதுக்கு இல்லைங்க...''
எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அந்த பரேடு நடை பெற்றது. கொண்டுவந்த ஐந்து பேரில் சேகர் என்பவனைப் பார்த்த மாத்தி ரத்திலேயே கண்ணாடிக்குப் பின்னால் இருந்து ''இவன்தான்'' என்றார்.
''எப்படிச் சொல்றீங்க?''
''முகத்துல தழும்பை மறக்கவே மாட்டேன். அவ்வளவு கிட்டத்தில் பார்த்தேனே. கை வேத்திருக்கு பாருங்க. முகம்கூட... இவன்கூடக் கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்.''
''ஏற்பாடு பண்றேங்க. ப்ரஸ் கான்ஃபரன்ஸ் போட்டுச் சொல்லிரவா... நிஜ குற்றவாளியைக் கைது பண்ணிஆச்சுன்னு.''
''நான் பேசிடறேங்க முதல்ல...'' என்றார் சுந்தரலிங்கம்.



கமிஷனர் அலுவலகத்தின் பின்பகுதி. கார் பார்க் அருகில் தனியான இருண்ட ஒற்றை பல்பு அறையில்...
சேகர் என்பவன் அழைத்து வரப் பட்டான். வெளியே காவற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க, இருவருக்கும் நிகழ்ந்த, முழு உரை யாடலின் வடிவாக்கம் -
சுந்தரலிங்கம்: ''உன் உண்மைப் பேரு என்ன?''
சேகர்: ''என்னவா இருந்தா உனக்கென்ன... எனக்கு நிறையப் பேர் உண்டு.''
சுந்: ''டிசம்பர் 5-ம் தேதி காலைல பெசன்ட் நகர்ல என் வீட்டுக்கு வந்து கத்தியால வயித்துல குத்திட்டு, மண்டை மேல கீறிட்டுப் போனியே... இதப் பாரு, என் கண்ணு போச்சு. (சட்டையைக் கழற்றி) தழும்பைப் பாரு. நான் சாவலைடா, என்னைச் சாவடிக்க முடியாது.''
சே: ''இதெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்ற?''
சுந்: ''எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருக்கே?''
சே: ''எத்தனையாயிருந்தா உனக்குஎன்ன?''
சுந்: ''நான் ஒரு வக்கீல். உன்னைப் பதினஞ்சு வருஷம் ஜெயிலுக்கு அனுப்ப முடியும். உன்னைப் பார்த்தது நான் ஒருத்தன்தான். நீதான்னு அடையாளம் காட்டிட்டா நீ காலி. உள்ள போனா வெளிய வரவே முடியாது. சொல்லு, உன்னை அனுப்பிச்சது மணிமோகன் ஆளுங்கதானே?''
சே: ''எனக்கு எதும் தெரியாது. என்னை அடிச்சு உதைச்சாலும் எந்த வெவரமும் கெடைக்காது. நல்லா உதை தின்னுவேன்?''
சுந்: ''என்ன செஞ்சா வெவரம் கெடைக்கும்?''
சே: ''பாரு... எனக்கு மந்திரியும் தெரியாது, முந்திரியும் தெரியாது. காதர் பாச்சானு ஒரு பார்ட்டி வருவான். 'இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்குது. இந்த விலாசத்தில் பார்ட்டி இருக்குது’னு காட்டி வுடுவான். 'மூணு நா பார்த்து வெச்சுட்டுத் தீர்த்துரு’னு. கைல காசு மெய்ல குத்து. அவ்ளவ்தான். ஆளை வுடு.''
சுந்: ''என்னைத் தீர்க்கச் சொன்னாங்களா, காயம்படுத்தச் சொன்னாங்களா?''
சே: ''கட்சில உன்னைத் தீர்க்கத்தான் சொன்னாங்க. காயம்படுத்தணும்னா கதியே வேற. ரூட்டே வேற. பால் காட்டிக்கிட்டே நாலு தட்டு தட்டிரலாம். உன்னைய மார்லதான் வெச்சுக் குத்தினேன். கொஞ்சம் அதிகப்படியாவே சரக்கு ஏத்திருந்தனா... கை நடுங்கிருச்சு. தப்பிச்சுக்கிட்ட, சாவலை. மண்டைக்குத்தான் குறிவெச்சேன். நீதான் முட்டாத்தனமா திரும்பி கண்ல வாங்கிக்னே... அது உன் தப்பு. முதக்க சும்மா ஒரு கீறல் கீறிட்டுப் பயங்காட்டிட்டுத்தான் வரச் சொன்னாங்க. அன்னைக்குக் காலைலதான் சொன்னாங்க... 'பார்ட்டி ரொம்ப பேஜார் பண்ணுது. தீர்த்துரு’னு.''
சுந்: ''உனக்கு எத்தனை பணம் கொடுத்தாங்க?''
சே: ''ஏளாயிரத்துச் சில்லறை. இன்னும் ஒரு ரெண்டு ரூபா வரணும்.''
சுந்: ''இப்ப 'மேன் ஸ்லாட்டர்’னு சட்டத்தில் உனக்குச் சிறை தண்டனை நிச்சயம் வாங்காம நான் உன்னை விடமாட்டேன்.''
சே: ''எனக்கு வக்கீல் வெப்பாங்க. பெயில் அப்ளிகேஷன் போடுவாங்கனு காதர் பாய் சொன்னாரு. இதுக்கு மிந்தி செய்திருக்காங்க. பெங்களூர்ல ஒரு மார்வாடியைக் குத்தினப்ப.''
சுந்: ''இப்ப மாட்டாங்க. கேஸ் சூடாயிருச்சு. யாரும் உனக்கு பெயில் அப்ளிகேஷன் கொடுக்க மாட்டாங்க. பாத்துக்கிட்டே இரு.''
சே: ''அப்படிங்கறே நீ?''
சுந்: ''பெயில் கேட்டாக்கூடக் கடுமையா அதை எதிர்ப்பேன். இந்த கேஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. நீதிபதிங்களே பயப்படுவாங்க. நீ தப்பிக்கிற துக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.''
சே: ''என்ன வளி? மந்திரி யாருன்னே எனக்குத்
தெரியாதுபா. சொல்றனில்லை. நான் ரொம்ப அடிமட்டத் தில் இருக்கற 'பார்ட்டி’பா. பெரிய மனுசங்களுக்காகத் தொளில் செய்றம தவிர, பெரிய மனுசன் யாருன்னே தெரியாது. மிஞ்சிப் போனா, கட்சித் தொண்டனுங்க அல்லது அந்த அந்தப் பேட்டைக்குக் கட்சி ரவுடிங்க, கலெக்ஷன் மாஸ்டர்ங்க உண்டு. குடுமிங்களை வீட்டைக் காலி பண்ணவெக்க... கடையைக் கொளுத்தணும்... பொறம்போக்குல கடை போடறப்ப துணை வேணும்... கொருக்குப்பேட்டை, அபிராமபுரம்னெல்லாம் கூப்பிடுவாங்க... போவேன். எவனுக்குக் காரியம் செய்ய றோம்னுலாம் தெரியாது. ஏதோ வவுத்துப் பொயப்புக்கு அஞ்சு பத்துக்குப் பளுதில்லாம செய்யறன். அகஸ்தியர் கோயில்ல கலசம் திருடலாம், வரயான்னாங்க... போவலை. இந்த வருசம் மாலை போடலாம்னிருக்கேன்.''
சுந்: ''பதினஞ்சு வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்காம விட மாட்டேன் உன்னை. கமிஷனரை வேணா கேட்டுப் பாரு. யோசிச்சுப் பாரு... இளமையா இருக்கே. உன் வாழ்க்கைல முக்கியமான பதினஞ்சு வருஷத்தை சிறைச்சாலையிலயே கழிக்கச் சம்மதமா?''
சே: (கலவரத்துடன்) ''என்ன செய்யணுங்கறீங்க?''
சுந்: ''சேகர், நீ செஞ்ச பாரு காரியம்? அரைகுறை. வெட்டுருத்தில இதைப் போல அமெச்சூர்த்தனமான முயற்சி இருக்க முடியாது. காலை வேளையில செய்திருக்கக் கூடாது. மேலும், மோடஸ் ஆப்பரண்டின்னு சொல்வாங்க. உன் முறை ஆறு இன்ச் கத்தியைப் பயன்படுத்தறது. ஆட்டோவுல ஓடிட்டு தெரு முனையில மற்றொரு ஆட்டோவுக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ மார்றது இதெல்லாத்தை யும் போலீஸ் கவனிக்கிறாங்க. சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.''
சே: ''என்ன சொல்ற வாத்யாரே, புரியும்படி சொல்லு?''
சுந்: ''ஒவ்வொரு தடவையும் முறைய மாத்தணும். அடுத்த கொலை செய்யறப்ப ராத்திரில போகணும். கத்தியால குத்தக் கூடாது... துப்பாக்கி பழகியிருக்கியா... ரைஃபிள் ஏகே-47?''
சே: ''இல்ல, வாத்யாரே. நான் சில்ற ஆசாமி.. எனக்கென்னவோ நீ டமாஸு பண்றனு பச்சி சொல்லுது.''
சுந்: ''தமாஷ் இல்லை சேகர்... நான் கத்துக்கொடுக்கறேன். போலீஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுக்கறப்ப உன்னைக் காட்டிக் கொடுக்கப்போறது இல்லை. 'இவன்தானான்னு சந்தேகமா இருக்குது. ஐம் நாட் ஷ்யூர்’னு சொல்லி உன்னை விடுதலை செய்துடப்போறேன். ஒருத்தன் கெடுதல் செஞ்சாலும் அவன் வெக்கப்படும்படி நன்மை செய்து ரணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு... சேகர், நீ படிச்சிருக் கியா?''
சே: ''ஆறு கிளாஸ், பாளையங்கோட்டைல இருக்கறப்ப... என்னைக் காப்பாத்தறியா? என்ன சொல்ற?''
சுந்: ''ஆமாம், உன்னைக் காப்பாத்தறேன்.''
சே: ''அதுக்கு நான் இன்னா செய்யணும்... திருந்திடணுமா... கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?''
சுந்: ''அதெல்லாம் எதும் வேண்டாம். அடுத்தமுறை காரியத்தைச் சுத்தமா செய்யணும். யாரும் நீதான்னு கண்டுபிடிக்க முடியாதபடி. வேட்டைக்குப் போன தடயங்களை மறைக்கணும். நான்தான் உன்னை ஏவினேன்னு தெரியக் கூடாது. சரியான சந்தர்ப்பம் பார்த்து கிரீன்வேஸ் ரோட்டில அந்த வீட்டைக் கண்காணிக்கணும். எப்ப கோட்டைக்குப் போறான், எப்ப வாக் போறான், எப்ப சின்ன வீட்டுக்கு... எல்லாத்தையும் கவனிச்சு, ராத்திரியில ரைஃபிள் வெச்சுச் சுடணும். ஸ்தலத்தை விட்டு விசில் அடிச்சுட்டே நடந்து போகணும். எல்லாம் சொல்லித் தரேன்.''
சே: ''யாரைச் சுடணும்!''
சுந்: ''மணிமோகனை... அதுக்கு என்ன விலை தெரியுமா... உன் விடுதலை... பதினஞ்சு வருஷம் சுதந்திரம்.''
சே: (யோசித்து!) ''சரிங்க...''


நன்றி - விகடன் 

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி திடுக் பேட்டி

வீரப்பனின் ஆன்மா மன்னிக்காது!
முத்துலட்சுமி சொல்லும் ரகசியம்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் என் கண​வருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் அவர்கள். அவர்களைத் தூக்குத் தண்டனையில் இருந்து எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லை என்றால், என் கணவரின் ஆத்மா என்னை மன்னிக்காது'' உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்கிறார் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. 



''உங்கள் கணவருடன் நீங்கள் காட்டுக்குள் இருந்தபோது மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரையும் பார்த்தது இல்லையா?''



''எங்களுக்கு 1990-ம் வருஷம் ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதில் இருந்து 93-ம் வருஷம் செப்டம்பர் மாதம் வரைக்கும் நான் அவரோடு காட்டில்தான் இருந்தேன். அவரோட கூட்டாளிகள் யார், அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்பதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்.



 இப்போது தூக்குத் தண்டனைக் கைதிகளாக இருக்கும் அந்த நான்கு பேரையும் நான் காட்டுக்குள் பார்த்ததே இல்லை. என் வீட்டுக்காரரும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் காட்டுக்குள் இருந்து வெளியில் வந்த பிறகு, 'வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம் பிடிக்கப்பட்டனர்’ என்று ரேடியோவில் சொன்னதைக் கேட்டு எனக்கு குழப்பமாக இருந்தது. யார் இவர்கள் என்று யோசித்தேன். நினைவுக்கு வரவில்லை.''



''பாலாற்றுப் பாலத்தை வெடிவைத்து தகர்த்தபோது நீங்கள் வீரப்பனுடன் இருந்து இருக்கிறீர்கள்... அந்தத் தகவல் உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?''



''அந்தச் சம்பவம் 1993-ம் வருஷம் ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த நேரத்தில் நான் என்னுடையை குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். அதைப்பற்றி என்னுடைய வீட்டுக்காரர் எதுவும் சொல்ல​வில்லை. எந்த ஒரு திட்டம் போடு​வதாக இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றுவதாக இருந்தாலும் சரி.. அது என் வீட்டுக்காரருக்கும் சேத்துக்குழி கோவிந்த​னுக்கும் மட்டுமே தெரியும். எல்லாம் முடிந்த பிறகுதான் எனக்குத் தெரியும்.''



''ஆனால், 'வனயுத்தம்’ படத்தில் பாலாற்றுப் பாலம் தகர்க்கும் காட்சியில் வீரப்பன், 'சைமா வெடி மருந்தை அதிகமா​ போடு’ என்று சொல்வதைப்போல காட்சிகள் வருகிறதே?



''அந்தப் படம் முழுக்க முழுக்க ஒருதலைபட்சமான கற்பனையான படம். படம் எடுப்பதற்கு முன், படத்தின் இயக்குநர் ரமேஷ், பெல்காம் சிறையில் இருக்கும் நான்கு பேரையும் சந்திக்கப் போயிருக்கிறார். சைமன் மட்டும் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். அந்தக் கோபத்தில் சைமன் பெயரை என் கணவர் சொல்வதைப்போலக் காட்டி இருக்கிறார். 



அதிரடிப் படைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படத்தில் எப்படி நியாயத்தையும் உண்மையையும் எதிர்பார்க்க முடியும்? அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டப் பெண்களைப் பற்றிய பதிவு எதுவுமே அந்தப் படத்தில் இல்லை. அதிரடிப்படை செய்த அட்டூழியங்களை நான் படமாக எடுத்தால், அவர்களால் தாங்க முடியுமா?



வீரப்பனுக்கு ரேஷன் வாங்கிக் கொடுத்​தவர் என்று பாலாறு விபத்துக்கு முன்பே பிலவேந்திரனை அதிரடிப் படையினர் பிடித்துத் தொல்லை கொடுத்திருக்கின்றனர். மீசை மாதையன் மீதும் இதேபோல ஒரு வழக்குப் போட்டிருக்கின்றனர். பாலாறு விபத்து நடந்த பிறகு மீசை மாதையன், அப்போதைய எஸ்.பி. கோபால​​கிருஷ்ணனை நேரில் சந்தித்து, 'எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்னை இதுல மாட்டி விட்டுடாதீங்க’ என்று அழுதிருக்கிறார். 



'உன் மேல எனக்கு சந்தேகமே இல்லை’ என்று சொன்ன கோபால கிருஷ்ணன், பிறகு மாதையனை வழக்கில் சேர்த்திருக்கிறார். இவர்கள் நால்​வரும் அப்பாவி மலைவாழ் மக்கள். பரம்பரைப் பரம்பரையாக மலையில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். அப்படிப்​பட்டவர்​களைப் பிடித்து பொய் வழக்குப் போட்டு, இன்று தூக்குக் கயிறு வரை கொண்டு​போய் நிறுத்தி இருக்கிறது போலீஸ்.''




''எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் பாலாற்றுச் சம்பவத்தில் இந்த நான்கு பேரும் இருந்ததாக சாட்சி சொல்லி இருக்​கிறாரே?''



''பாலாறு வெடி விபத்தில் கோபாலகிருஷ்​ணனுக்குக் காலில் பலத்த அடிபட்டது. அந்த இடத்திலேயே மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் இருந்த ஒருவர் எப்படி நான்கு பேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? அவருக்கு இந்த நால்வரையும் முன்கூட்டியே தெரியும் என்பதால், அப்பாவிகளை வழக்கில் சிக்கவைத்து​ விட்டார்.




 கோர்ட்டில், கோபால கிருஷ்ணனைத் தவிர வேறு யாரும், இந்த நான்கு பேரையும் பார்த்ததாகச் சொல்லவே இல்லை. அவர் ஒருவரின் சாட்சியை வைத்துதான் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஏழைகள் என்பதால் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்​கொள்ள வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அந்தப் பாவம் சும்மா விடாது!''



- வீ.கே.ரமேஷ்,  


படம்: எம்.விஜயகுமார்

நன்றி - ஜூ வி 

Friday, February 22, 2013

ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

a


தமிழ் நாட்டை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராத என் கண்ணுக்கே டொக்கு ஃபிகரா தெரியற ஒரு 50 மார்க் ஃபிகர் ஹீரோயினை தாய்லாந்து , பாங்காங்க் , மும்பை என பல  இடம் பார்த்த பல ஃபிகர் பார்த்த  தாதா ஹீரோ பார்த்ததும் லவ்வுல தொபுக்கடீர்னு விழறாரு. அந்த டொக்கு ஃபிகரு  ஹோட்டல்ல சர்வரா இருக்கு .5 ரூபா டிப்ஸ் குடுத்தாலே  மடங்கிடும் அந்த  ஃபிகருக்கு ஹீரோ  5000 ரூபா டிப்ஸ் தர்றாரு. அது உடனே “ நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை “ அப்டிங்குது 


இதுல என்ன காமெடின்னா அந்த மாதிரி பொண்ணுங்களே ஓப்பனிங்க்ல கெத்து காட்ட அப்டி பில்டப் குடுப்பாங்களாம், போய்ட்டு வந்த சிலர் சொன்னாங்க .ரொம்ப பிகு பண்ணின பிறகு அந்த டொக்கு ஃபிகர் எங்கப்பா உன்னை பார்க்கனும்னு  சொல்லி கூட்டிட்டுப்போறார். ( நல்ல வேளை , அவங்கம்மா பார்க்கனும்னு சொல்லி இருந்தா இன்னொரு கில்மாக்கதை சிக்கி இருக்கும் ) 


இப்போ பயங்கரமான 2 ட்விஸ்ட். 20 நாளாவது ஓடற  படமா இருந்தா சஸ்பென்சை வெளியே சொல்லாம கமுக்கமா இருந்திருப்பேன், ஆனா எப்படியும் இது ஊத்திக்கப்போகும் படம் தான். எப்படியும் நீங்க யாரும் படம் பார்க்கப்போறதில்லை , அதனால சொல்லிடறேன். ட்விஸ்ட் 1. ஹீரோயின் நிஜமாவே ஹீரோவை லவ் பண்ணலை , எல்லாம் டிராமா ( இந்த டொக்கு ஃபிகருக்கே இவரைப்பிடிக்கலையே..... ) ட்விஸ்ட் 2 .  பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல வில்லனா வந்த பிரகாஷ்ராஜ் மாதிரி , விஸ்வரூபம் டான்ஸ் மாஸ்டர் கமல் மாதிரி  , வரலாறு அஜித் மாதிரி பெண்மைத்தனம் கொண்ட இன்னொரு ஹீரோவோட ஆள் தான் ஹீரோயின் . 

எதுக்காக இந்த டிராமா? இந்த குப்பைப்படத்துக்கு எதுக்கு இந்த பில்டப்.  இயக்குநர் அமீருக்கு யோகி  வாங்குன அடி பத்தலையா?  ஏன் இப்படி ? என்பதை டி வி ல அடுத்த வாரம் எப்படியும் போட்ருவாங்க , அப்போ பார்த்து தெரிஞ்சுக்குங்க

ஹீரோ ஜெயம் ரவிக்கு இது முக்கியமான படம் ( அப்டினு அமீர் ஏமாத்தி கால்ஷீட் வாங்கிட்டாரு )  ஓப்பனிங்க் ல சி பி ஐ டெபுடி கமிஷனர் என கெத்து காட்டும்  ரெய்டு காட்சியில் சுஜாதா திரைக்கதையில் வந்த செல்லமே விஷால் நினைவு வருது . பின் தாதாவாக வரும்போது நாயகன் கமல் நினைவு வருது ( கமல் ரசிகர்கள் மன்னிக்க - சும்மா ஒரு பேச்சுக்கு ) .திருநங்கை கெட்டப்ல வரும்போது ஆணழகன் பிரசாந்த் நினைவு வருது . ஆனாலும் அந்த கேரக்டரில் ஜெயம் ரவி கலக்கிட்டார். என்னா ஒரு பாடி லேங்குவேஜ் .

அந்த கேரக்டரில் அவர் வரும் காட்சிகளெல்லாம் அப்ளாஸ் அள்ளுது ( எல்லாம் ரசிகர்களாத்தான் இருக்கும் )

ஹீரோயின் கழுவாத விடியா முகரையா நீது சந்த்ரா . ஆயில் ஸ்கின் ஃபேஸ். க்ளோசப் ல பார்த்தாலும், லாங்க் ஷட்ல பார்த்தாலும் , சைடுல பார்த்தாலும் தேறாத முகம்,. இந்த லட்சணத்துல நெத்தில குங்குமம் வேற இல்லை. ரசிக்கறதுக்கு அங்கே ஏதும் லேது .அடிக்கடி லோ கட் சுடி வேற . ஆனா க்ளைமாக்ஸ் ல ஹீரோ கூட ஒரு ஃபைட் இருக்கு , பின்னிப்பெடல் எடுத்துட்டார். ஷங்கை எக்ஸ்பிரஸ் ஜாக்கிசான் படத்துல பார்த்த அதே ஸ்டெப் என்றாலும் பிரமாதமான முயற்சி 

படத்துல காமெடி மருத்துக்கு கூட இல்லை .

 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. சென்னை சாலி கிராமத்திலேயே எடுத்து முடிச்சிருக்க வேண்டிய கதையை இது ஒரு இண்ட்டர்நேசனல் சப்ஜெக்ட் என நம்பவெச்சி தயாரிப்பாளர் காசுல பாங்காங்க் , தாய்லாந்து , மும்பை என சுற்றிப்பார்த்த லாவகம்

2. படத்தோட கதை எப்படியும் தேறாதுன்னு முடிவு பண்ணி ஜெயம் ரவி ரசிகர்களைக்கவர்வதற்காக  அந்த திருநங்கை கேரக்டரை உருவாக்குனது , ரவியிடம் நல்ல நடிப்பை வாங்கியது

3.  ஆதி , பகவன் என டைட்டில்  வைக்காம ஆதி பகவன் என டைட்டில் வெச்சு பலரது எதிர்ப்பை சம்பாதிச்சு நெகடிவ் பப்ளிசிட்டியை ஓ சி ல பெற்றது

4. ஹீரோ தன் தங்கையின் காதலனிடம்  காம்ப்ரமைஸ்க்கு பேசிப்பின் பலன் அளிக்காமல் தங்கையின் எதிரிலேயே காதலனை போட்டுத்தள்ளும் காட்சி அபாரம்

5. பாடல்கள் 2 தேறுது . பி ஜி எம் ஓக்கே , யுவன் ராக்ஸ்



 



 இயக்குநரிடம் சில கேள்விகள்

1. துரோகம் பண்ணினது காதலியாகவே இருந்தாலும் அவளை உண்மையா காதலிச்ச காதலன் அவளுக்கு எந்தக்கெடுதலும் கனவிலும் நினைக்க மாட்டான், இதுதான் ஆண்கள் சைக்காலஜி . ( அவ(நா)ங்க நாசமாப்போவதும் அதனால தான் ) அதை உன்னை நினைத்து படத்துல சூர்யா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருப்பார் இயக்குநர் விகரமன்,. ஆனா இதுல ஹீரோ ஹீரோயின் தன்னை காதலிப்பதா ஏமாத்துனது தெரிஞ்சதும் அவரை வில்லன் ரேஞ்சுக்கு ஃபைட் போட்டு கொல்வதெல்லாம் கொடூரம் , கேரக்டர் மதிப்பே போச்சே.


2.ஓப்பனிங்க் ரெய்டு சீனில் மொட்டை மடியில் தண்ணி டேங்கில்  கோடிக்கணக்கில் தங்கக்கட்டிகள் ஒளிச்சு வைப்பதெல்லாம் ரீலோ ரீல் , முடியல

3. ரெய்டு முடிஞ்ச அடுத்த நிமிடமே ஏர்போர்ட் , அலெர்ட் கொடுத்திருந்தால் மந்திரியின் கோடிக்கணக்கான சொத்தை ஈசியா காப்பாற்ரி இருக்கலாமே?

4. எதுக்கும் இதவாத அந்த திருநங்கை கேரக்டரை ஹீரோயின் லவ் பண்ணுவது ஏன்? அவன் அவளுக்கு துரோகம் பண்ணியும்  அவ அவன் மேல உயிரையே வெச்சிருப்பதுக்கு லாஜிக்கே இல்லையே? பொண்ணுங்க எதை வேணாலும் மன்னிச்சுடுவாங்க ( சமையல் பண்ணலைன்னாக்கூட ஹோட்டல் கூட்டிட்டுப்போய் சமாளிச்சுக்கலாம்) ஆனா அவங்களுக்கு துரோகம் பண்றதை மன்னிக்கவே மாட்டாங்க  அதுவும் ஹீரோயின் கண் முன்னால  ஹீரோ நெம்பர் 2 துரோகம் பண்றார்.

5.க்ளைமாக்ஸ் மகா நீளம் , இழுவை , சுருக்னு முடிக்க வேணாமா? ஹீரோ ஹீரோயின் கூட ஃபைட் போட்டு  , அப்புறம் வில்லன் கூட ஃபைட் போட்டு உஷ் அப்பா .. 

 



 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  பார்க்கறதுக்கு பால் குடிக்கற பையன் மாதிரி இருக்கான் , இவனா  கொலை செஞ்சான் ?

2. மாஸ்டர் பிளான் என்னோடது

 அதை எக்ஸ்சிக்யூட்டிவ் பண்ணுன மாஸ்டர் மைண்ட் என்னோடது

3.  ஒரே நாள் ல மேலே  வரனும்னு ஆசைபப்டறியா? மேலே போகனும்னு ஆசைப்படறியா?

4. தொழில யார் கூட மோதறோம்கறது முக்கியம் இல்லை , யார் முன்னால போறாங்க என்பதுதான் முக்கியம்


5. பணத்தோட ருசி உனக்குத்தெரியல

6. அம்மா, நல்லா இருன்னு சொல்லாட்டி பரவாயில்லை , தொலைஞ்சு போ அப்டின்னு சொன்னாக்கூட நல்லாருக்கும்

7. டியர், யார் உன்னை விட்டுட்டுப்போனாலும் உன் கூடவே இருப்பேன் 



 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி. பி கமெண்ட் - ஜெயம் ரவியின்  திருநங்கை கேரக்டர் மட்டுமே  புதுசு, அதை ரசிக்க நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி ஆதி பேதி , அரே பகவான் அமீரிடமிருந்து எம்மை காப்பாற்று

ஈரோடு  அபிராமியில் படம் பார்த்தேன்

a


vedio review =http://www.youtube.com/watch?v=2MQQbyFO7Mo&feature=youtu.be