Friday, January 18, 2013

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் டிசைனின் லேட்டஸ்ட் வெர்ஷன் என்ன தெரியுமா?


Photo: இது
இப்படித்தான்..

ப்ரியத்தின் பொருட்டு
தள்ளிவைத்து பார்க்கப்படுகின்ற
இந்நிமிடங்கள்
சொல்லமுடியா மலட்டு தாயின்
பாசம் போன்றது...

பகிர்தலில் பழக்கப்பட்ட
என் பாஷைகள்
மொழியறியாது
ஸ்வரம்புரியாது
இசைத்துக்கொண்டே கிடக்கிறது
ஈனஸ்வரத்தில்

இந்த மெளனத்திற்கு
எத்தனையோ காரணமிருக்கலாம்
எடுத்துவைக்கும் காரணம் புரியாதுமிருக்கலாம்..

சின்னசின்ன செய்திகளில்
கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளில்
ஆசுவாசப்படுத்தும் பகிர்தல்களில்
கோர்த்துப்பார்க்கும் பிரியங்களில்
நிரப்ப முடியா
வெறுமை பெற்று அழைகிறது 
உன்னிடம் பகிரா செய்திகள்...

காதுக்குள் எப்போதும் வந்துமிழும்
வீரிய வார்த்தைகள் 
நமை விழுங்காதிருக்க
எனக்குளே ஒளித்துகொள்கிறேன்
உன் நட்பை
உனதிந்த வருத்தங்களோடு

- ரேவா
1. அக்கா கார்த்திகாவை விட கடல் துளசிக்கு புருவம் சின்னது # ஜனங்க சொன்னது 



-----------------------


2. இன்று.. டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் .கழட்டி விட்ட காதலிகளை தங்கச்சி என அழைக்கும் நாள் 




-----------------------


3 தமிழ அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும்படி மத்திய அரசுக்கு திமுக கட்டளையிடுகிறது: ஜெ # தமிழகத்தை விட்டு வெளிநடப்பா? 



-------------------------


4. பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். - சல்மான் குர்ஷித். #அடிக்கடி இந்த கொசுக்கடி 



------------------------


5. ஆபீஸ் டைமில் எப்பொதும் என் அருகே மடிகணிணி.வீட்டுக்கு வந்ததும் மடியில் சனி நீ!




---------------------------



Photo: Photography


6. மாப்ளே.இந்த இளவட்டக்கல்லை தூக்குனா பொண்ணு உமக்கு



. மாமா பொண்ணை வேணா தூக்கறேன் 



----------------------------


7 நீங்க பெங்களூர்ல பிறந்திருந்தா 4 மொழி ல டேலன்ட் ஆகி இருக்கலாம். 




இப்பவும் 1ம் கெட்டுப்போகலை.பெங்களூர் பிகரை கரெக்ட் பண்ணிட்டாலும்.



-----------------------------------

8. பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதியது # பாம்பு தோஷம் இருக்குன்னு பால் ஊத்த ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க 




---------------------------------



9. கண்ணா லட்டு தின்ன ஆசையா ? 



கண்ணே! ஆசை இருக்கு.ஆனா சுகர் இருக்கு. ..



-----------------------------


10. bangalore பொண்ணுங்களுக்கு dressing sense அதிகம்தான்.ஆனா டிரஸ் தான் கம்மி 



---------------------------------


Photo: Photography




11. மகளிர் அணித்தலைவி ஏன் லோகட் ஜாக்கெட்ல வந்திருக்காங்க ?



 கிளர்ச்சியில் ஈடுபடனும் ஆர்ப்பாட்டம் பண்ணனும்னு தலைவர் அறை கூவல் விடுத்தாராம் 



------------------------------


12. திருவள்ளுவரை பற்றிய பற்றிய அக்கறை கருணாநிதியை விட எனக்கு அதிகம் - ஜெ!# தமிழக மக்கள் நலன்லதான் 2 பேருக்கும் அக்கறை இல்லை போல 



-----------------------


13. விஷால் @ விஜய் டி வி - த்ரிஷாவை கரெக்ட் பண்றது ரொம்ப சிரமம் # ராணா - கண்ணா.என் லைன்ல கிராஸ் பண்ணாதே 




-------------------------


14. நொந்தப்புறம் தெரியும்.போய்ட்டு வந்தப்புறம் சொல்க அப்படின்னு புலவர் சொல்றாரே? புரியலையே? 


 ஆல்ரெடி அந்தப்புறம் அந்தப்புரம் உள்ளதென்பதால். : நான் நம் அந்தப்புரம் வரவில்லை அப்டின்னாராம் நம் மன்னர் 



----------------------------


15. டியர்.எனக்கு சில்லி புரோட்டா பிடிக்கும்னு எப்டி தெரியும் ?




 சில்லி கொஸ்டின்.பார்த்தாலே தெரியாதா ? 



-------------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...



16. துளசி @ ட்விட்டர் - ஹாய்.எல்லாரும் எப்படி இருக்கீங்க ?




 இதுவரைக்கும் எங்க தூக்கம் கெடலை மேடம்.கடல் 1 2 13 தானே? 




-------------------------


17. ஒளிப்பதிவு அவுட்டோர்னா கலக்குவது நீரவ்ஷா .இன்டோர்னா கலக்குவது த்ரிஷா # பாத்ரூம் பாடகர் பார் வதி நேசன் 



----------------------


18. ஸார்.படத்துல வசனத்தை விட பீப் சத்தம்தான் அதிகம் கேட்குது ? 




 வசனகர்த்தா லீவ்.யாராவது கேட்டா சென்சார் கட்னு கவுரமா சொல்லிக்கனும்னு் உத்தரவு 




----------------------------


19. அவர் சரியான சரக்கு பார்ட்டி னு எபடி சொல்ரே? 



சர்ட் கூட FULL ஹேண்ட் சர்ட் தான் போடுறாரே?




-------------------------



20. சார்.உங்க படத்தை இருட்லயே எடுத்திருப்பீங்க போல ?



 இல்லையே? தமிழ்நாட்ல தான் எடுத்தேன் 




-------------------------------


..
Photo: இனிய மாலை வணக்கம் நண்பர்களே...




21. டியர்.உங்களுக்கு ரஜினி புடிக்குமா கமல் புடிக்குமா?? 




ஹி ஹி ஐஸ்வர்யா ,சவுந்தர்யா,ஸ்ருதி,அக்சரா பிடிக்கும் 



----------------------------


22. மணிரத்னம் ( மைன்ட் வாய்ஸ் ) - அலைகள் ஓய்வதில்லை யை பட்டி டிங்கரிங் பண்ணி கடல் ஆக்கியாச்சு.வெளில தெரிஞ்சா பிரச்சனை "விஸ்வரூபம் "ஆகிடும் 




-----------------------


23. 15 வயசு ஆன மைனர் துளசிக்கு கிஸ் சீன் எடுத்ததால் மணிரத்னம் மீது பாலியல் வன் கொடுமை சட்டம் பாயுமா ? கோலிவுட் பரபரப்பு # சும்மா.கடல் ப்ரமோ 




------------------------------


24. மம்மி . குட் டச் .னா பேட் டச்னா என்ன? ்




 ஹீரோ எங்கே தொட்டாலும் அது குட் டச்.வில்லன் கையைத்தொட்டாலே அது பேடு டச் 




--------------------------------


25. முக்கியமான ட்விஸ்ட் வரும்போது ஏன் எந்திரிச்சு வெளில போய்டறீங்க ? 




கதை என்ன ? னு கடைசி வரை தெரியக்கூடாது எனக்கு.ஆர்வம் போயிடும் 




-------------------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே....



26. மாப்ளை.உங்களுக்கு எந்த மாதிரியான பொண்ணு வேணும் ? 




அய்யய்யோ.மாதிரியான பொண்ணு வேணாம்.மாதுரி தீட்சித் மாதிரி வேணும் 




---------------------------


27. விமர்சனத்துல எதுக்காக கதையை சொல்றீங்க ?




 படத்துலதான் கதை இல்லை.படிக்கறதுலயாவது கதை இருக்கட்டும்னுதான் 




--------------------------


28. டியர்.நீ ஏன் இப்போ எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடற்தில்லை ? 




அது அவுட் ஆப் பேஷன்.இதோ பாருங்க ஜாக்கெட்லெஸ் ஸாரி 




------------------------


29. நீ போர்த்தி இருக்கும் சால்வையாக நான் மாறினால் நம் இருவருக்கும் இருக்கும் குளிர் பிராப்ளம் சால்வ் ஆகும் 




-----------------------


30. பேரன்ட்ஸ் உடன் வராத போதெல்லாம் மாடர்ன் பிகர்கள் ட்ரான்ஸ்"பேரன்ட்" உடை அணிந்து உலாவரும் ஒளிக்கதிர் ஆகிறார்கள்் 





--------------------------


Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...



31. சக்க பிகர் உன்னை ட்ரை பண்ணதால் தொழில் முனைவோர் லிஸ்ட்டில் இருந்து எழில் முனைவோருக்கு ட்ரான்ஸ்பர் ஆனேன் 



------------------------



32. கிராமக்காதலர்கள் பூங்கா , மலை & நகரக்காதலர்கள் பீச் ,நூலகம் # செலவும் இல்லை.சில்மிசத்துக்கும் குறைவில்லை 





-------------------------


33. முன்னணி நடிகைகள் அனைவரும் முன் அணி நடிகைகள் என உறுதியா சொல்லிட முடியாது # அணி = அழகு 




-------------------------



34. கூட்டுக்குடித்தனமா புது சம்சாரம் கூட இருப்பதில் 2 ஆதாயங்கள் 1,நம்மை விரட்டி அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. 2,கொலுசு செலவு இல்லை 




------------------------


35. டியர்.கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என் முன்னால காலை நீட்டி உக்காந்தா என்ன அர்த்தம் ?




 ம் சொடக்கு (நெட்டை ) எடுத்து விடனும்னு அர்த்தம்் 




-------------


Photo: வள்ர்க் இப்ப்னி தொடர வாழ்த்துக்ள்....



36. கடல் படத்தில் கடலை காட்டும் காட்சிகள் அதிகமாகவும் ,ஹீரோ ஹீரோயின் கடலை போடும் காட்சிகள் கம்மியாகவும் இருக்கும் # மணிரத்ன சுருக்் 



-----------------------------



37. நகரங்களில் வழக்கொழிந்து வரும் பூப்பறிக்கும் நோம்பி.கிராமங்களில் ஸைட் அடிக்கும் விழா இது 





---------------------------


38. வல்லினமான எருமைக்கு சின்ன ர.மெல்லினமான எறும்புக்கு பெரிய ற.இதுதான் வாழ்க்கை 




-----------------------------



39. ஆபீஸ் போகும் மிடில் கிளாஸ் பிகரின் ஹேன்ட்பேக்கில் - கண்ணாடி ,ஸ்டிக்கர் பொட்டு அட்டை , ஐ டெக்ஸ் மை டப்பா ,ஐ ப்ரோ பென்சில் ,பவுடர் ,போன். 


-------------------------------



40. பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை': மன்மோகன் சிங் # கணடுபிடிச்சுட்டார்யா கொலம்பஸ் 


---------------------------



Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...a
நன்றி - படங்கள் - ரேவா , விக்கி

Thursday, January 17, 2013

கடல் - காமெடியன் கேரளத்து அய்யப்ப பைஜு பேட்டி

http://7tab.in/wp-content/uploads/2012/12/Kadal-movie-poster-thulasi-heroine-mani-ratnam-film.jpg 
நாகேஷுக்கு நான் அடிமை !

க.ராஜீவ்காந்தி 
கரையில் இருந்து ஹீரோயின்களை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டுமா என்று தோன்றியதோ என்னவோ, ஒரு மலையாளக் காமெடியனைத் தனது 'கடல்’ படத்தில் அறிமுகம் செய்கிறார் மணிரத்னம். மல்லுவுட்டில் பிரபல காமெடியனான அய்யப்ப பைஜு, மணிரத்னம் படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார். மலையாளம் கலந்த கொச்சைத் தமிழில் அவருடன் சம்சாரித்ததில் இருந்து... 
''ப்ரசாந்த் பைஜு ஆன கதை சொல்லுங்க..?'' 


''15 வருஷமா ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டு இருந்தவன் நான். ஒரு தடவை சினிமா விழாவில் எங்க ஷோ. எனக்குக் குடிகாரன் கேரக்டர். போதைல தள்ளாடிட்டே வந்து உருண்டு புரண்டு புலம்பிட்டே நடிக்கணும். சினிமா ஆட்கள்லாம் வந்திருந்த அந்த நிகழ்ச்சியில என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டுதான் அனீஷ் பனிக்கர் தன்னோட 'ஓகே சக்கோ கொச்சின் மும்பை’ங்கிற படத்துல நடிக்கவெச்சார். அப்படியே 'ரெய்ன் ரெய்ன் கம் அகெய்ன்’, 'ஃப்ரீடம்’ படங்கள் நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு. குடிகாரனா நான் நடிச்ச ஷோவில் என் கேரக்டர் பேர் அய்யப்ப பைஜு. அதுவே இப்ப என் பேர் ஆகிடுச்சு!''


''நடுவுல ஒரு படத்துல ஹீரோவா நடிச்சீங்க போல?'' 


''அய்யோ! அது வேணாமே சாரு... (வெட்கப்படுகிறார்). எங்க தேசத்துல ஹீரோன்னு சொல்லிக்கிட்டு நடிக்கிறதில்லை சார். கதைல ஸ்கோப் அதிகம் உள்ள கேரக்டர் அப்படின்னு சொல்லுங்க. 'ஞான் சஞ்சாரி’ படத்துல அப்படி நடிச்சேன். கேரள ரசிகர்களோட நல்ல நேரம்... அந்தப் படம் சரியாப் போகலை. இனிமே, ஹீரோவே வேணாம்னு முடிவுபண்ணிட்டேன்!''


'' 'கடல்’ படத்துல நடிக்க எப்படி வாய்ப்பு கிடைச்சது?'' 


''நான் நடிச்ச படங்கள், ஸ்டேஜ் ஷோஸ் பார்த்துட்டு எழுத்தாளர் ஜெயமோகன் என்னைப் பத்தி மணி சார்கிட்ட சொல்லியிருக்காரு. 

ஆசை ஆசையா நடிக்க ஓடி வந்தா, 'கடல்’லயும் எனக்குக் குடிகாரன் கேரக்டர்தான். வேலைக்குப் போகாம வெட்டியா சுத்திட்டு, குடிச்சுட்டு மப்புல வம்பு பேசுற கேரக்டர். படத்துல அரவிந்த்சாமி கூடவே வருவேன். கதைல எது நடந்தாலும் கவலைப்படாத ஒரு ஜீவன்னா, அது நான்தான். இங்கே ஒரு விஷயம் புரியுதா... படத்துல என்னைக் காமெடியன்னு சொல்றதைவிட, ஒரு கேரக்டர்னு மட்டும்தான் சொல்ல முடியும்.''  




''கௌதம், அரவிந்த்சாமிலாம் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்களா?'' 



''அட... நீங்க வேற அரவிந்த்சாமியைப் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரலை. ஷாட் அப்போ மட்டும் ஏதோ சமாளிச்சு நடிச்சேன். கௌதம் செம ஸ்வீட் பையன். ரொம்ப ஈஸியா எல்லாரையும் ஃப்ரெண்ட் பிடிச்சுடுறார். இதுதான் அவருக்கு முதல் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ பெர்ஃபெக்டா நடிக்கிறார்!'' 


''தமிழ்ல யார் காமெடி உங்களுக்குப் பிடிக்கும்?'' 



''நாகேஷ் சார் காமெடிக்கு நான் அடிமை. ஒவ்வொரு முறை அவர் காமெடி பார்க்கும்போதும் புதுசா ஏதாவது கத்துட்டே இருப்பேன். இப்ப இருக்கிறவங்கள்ல வடிவேலு, சந்தானம் ரெண்டு பேர் காமெடியுமே பிடிக்கும்!''
 http://www.hasiniszone.com/wp-content/uploads/2013/01/kadal-movie-stills-01-650x433.jpg

''மலையாள காமெடி, தமிழ் காமெடி என்ன வித்தியாசம்?'' 


''மலையாளத்துல காமெடிக்குனு தனியா காட்சிகள் வைக்க மாட்டாங்க. பிரதான கதைலயே காமெடியும் சேர்ந்து வரும். ஆனா, தமிழ்ல அப்படி இல்லை. கதைக்குச் சம்பந்தமே இல்லாத காமெடி டிராக்கூட இருக்கும். ஒரு காமெடி நடிகர், அவரோட குரூப் அப்படின்னு தனிக் கதை தமிழ் சினிமால இருக்கு. எனக்கு ரெண்டுமே பிடிச்சுருக்கு. தமிழ் சினிமால நானும் ஒரு குரூப் கிரியேட் பண்ணணும்.''


''அப்ப தமிழ் சினிமாதான் உங்க அடுத்த இலக்கா?'' 



''தமிழ் சினிமால பெரிய ரவுண்டு வரணும்னு எனக்கும் ஆசைதான். கடவுளோட ஆசீர்வாதமும் அனுமதி யும் இருந்தா உங்க வார்த்தைகள் பலிக்கும்!'' 


நன்றி - விகடன்



http://www.hasiniszone.com/wp-content/uploads/2013/01/kadal-movie-stills-08-650x728.jpg

கமலின் டி டி ஹெச் - நான் ஆதரவு - பிரகாஷ் ராஜ் பேட்டி

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Cine-Family-Gallery/Prakash-Raj-Family/Prakash-Raj-Family-0000.jpg 
நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா !

எஸ்.கலீல்ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன்


படங்கள்: கே.ராஜசேகரன்

எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டால், ''அடுத்த நொடி நிச்சயமில்லை நண்பா. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கேன்!'' - பெரிய கண்கள் இன்னும் அழகாய் விரிய, வரவேற்கிறார் பிரகாஷ்ராஜ். நீண்ட நாட்களாக இந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருப்பவரிடம் பேசியதில் இருந்து...


''என்ன... தமிழ்நாடு பக்கம் பார்க்க முடியறதே இல்லை?'' 


''இதோ திரும்ப வந்துட்டேன். என் மகள், என் நண்பர்களின் மகன், மகள்னு நிறையப் பேரைப் பார்த்து, அவங்க படிக்க சிரமப்படுறதைப் பார்த்து 'என்ன கல்வித் திட்டம் இது?’ங்கிற கவலையும் கோபமும் வந்துச்சு. அதைத்தான் 'தோனி’யா எடுத்தேன். அதை இயக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு விதமான வலியோட இருந்தேன்.


 சரி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. 'சால்ட் அண்ட் பெப்பர்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அழகான ஒரு காதல் கதை. காதலைவிடக் கொண்டாட வேண்டிய விஷயம் வேற என்ன இருக்கு? நடுத்தர வயதுக் காதல், காதலோட வேற ஒரு பரிமாணம் காட்டுற படம் அது. சமையல், உணவு, உணர்வு, ருசி, காதல், தனிமைனு எல்லாருக்குமான கதை அது. அதை 'உன் சமையலறையில்’னு தமிழில் படமாப் பண்றேன். இளையராஜா இசை. தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் படம் ரிலீஸ் ஆகும்!''


''2012-ல் பெரிய படங்கள் நிறைய அடி வாங்கி, சின்னப் படங்கள் ஹிட் ஆகின. இதை எப்படிப் பார்க்கிறீங்க?'' 


''பொதுவா, சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க. மாற்றுச் சிந்தனையை அமுக்கிடுவாங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடிச்சுக்கிட்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றினு நான் பார்க்கலை. 


இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களோட ரசனையைப் புரிஞ்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி சினிமா மாறணும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பா நடக்கும். அதையும் தாண்டி இளைஞர்கள் வரணும். ஏன்னா, இன்னைக்கு டாப் டைரக்டர்கள், டாப் நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவங்கதான்!''


'' 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்ல ரிலீஸ் பண்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'' 


''கமல் எடுத்திருக்கிறது ரொம்ப முக்கியமான முடிவு. நான் வரவேற்கிறேன். காலம்காலமா... 'நான் இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன். தயவுசெஞ்சு தியேட்டருக்கு வந்து படம் பாருங்க’னு சினிமாக்காரங்க பிச்சை எடுக்கிற மாதிரிதான் கேட்டுட்டு இருக்கோம். சினிமாவில் இருக்கிறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம். என்னைக் கேட்டா, பணத்தைவிட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால வாடிக்கையாளர் எங்கே இருக்காங்களோ, அங்கேயே தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதைத்தான் கமலும் பண்ண நினைக்கிறார்.



சாட்டிங்ல என்னிடம் வந்தார் லண்டன் தமிழ் இளைஞர். 'தோனி பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது!’னு சொன்னார். நான் 'தோனியை அங்கே ரிலீஸ் பண்ணலையே?’னு கேட்டேன். அதுக்கு 'திருட்டு விசிடி-யில் பார்த்தேன் சார். நான் பிரகாஷ்ராஜ் படத்தை உடனே பார்க்க ஆசைப்பட்டேன். இங்க உங்க படம் வந்து சேர மூணு மாசம் ஆகுது. அதுக்காக 200 கி.மீ. நான் டிராவல் பண்ணணும். ரிலீஸ் அன்னைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணுங்க. நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்’னு சொன்னார்.


 இவரை மாதிரி ஒரு குரூப் தியேட்டருக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. சிலருக்கு நேரம் இல்லை. கமல் யோசிக்கிற டோர் டெலிவரி சிஸ்டம் இந்த குரூப் ஆடியன்ஸை திரும்ப சினிமா பக்கம் இழுத்து வரும். சரி, எதுவும் வேண்டாம். புது முயற்சிக்கு என்னதான் ரிசல்ட் கிடைக்குதுனு பார்க்கலாமே? ஒரு படம் இண்டஸ்ட்ரியோட வாழ்க்கையைத் தீர்மானிக்காதே!''



''சூர்யா பண்ணின 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ டி.வி. ஷோவை திடீர்னு நீங்க நடத்துறீங்களே?'' 



''அது நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். விகடன்ல 'சொல்லாததும் உண்மை’ எழுதினப்ப, எப்படி முகம் தெரியாத மனிதர்கள்கிட்டே அறிமுகம் ஆனேனோ, அதே மாதிரி விதவிதமான மக்கள்கிட்டே திரும்பக் கை குலுக்கப்போறேன். கட்டி அணைக்கப்போறேன். இன்னைக்கு டெலிவிஷன் ஸ்ட்ராங் மீடியா. அதில் நானும் இருப்பது சந்தோஷம்!''


''ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரும் பண்ற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லையே?'' 



''நிச்சயம் வருவாங்க. ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதுசா உள்ளே வர்றாங்க. உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும்.



 அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் ரெடியா இருக்கணும். பிரகாஷ்ராஜ் பெரிய நடிகன் ஆகிட்டான்னு சொல்றாங்க. அதுல எனக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. ஏன்னா, என்னைப் பார்த்து இளம் தலைமுறை ஆட்கள் பயப்படுறாங்க. சிலர் பார்த்த முகமா இருக்கேனு யோசிக்கிறாங்க. இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால 'நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா!’னு நான் கத்திச் சொல்ல வேண்டிஇருக்கு!''  



''டூயட் மூவீஸ்ல எடுத்த படங்கள் தரமா இருந்தாலும் வசூல்ல சரியாப் போகலைனு வருத்தம் உண்டா?'' 



''ஒரு தயாரிப்பாளரா நான் கணக்கு வழக்கு பார்க்கிறதே இல்லை. ஆனா, நடிகனா நான் பக்கா பிசினஸ்மேன். நடிகன் என்கிற வியாபாரிதான் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் இழப்புகளைச் சரிபண்ணிட்டே இருக்கிறான். நான் விரும்புற, நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சொசைட்டிக்குத் தரணும்கிற ஆசையில்தான் படங்கள் தயாரிக்கிறேன். 




நான் தயாரிக்கிற படங்கள் ஒரு கோடியோ, ஒன்றரைக் கோடியோ நஷ்டமாவது உண்மைதான். நடிகனா நான் வாங்கும் சம்பளத்துல இந்த இழப்புகளை என்னால் சரிசெய்ய முடியுது. சில பேர் சீட்டாடுவாங்க. சில பேர் ஊர் சுத்துவாங்க. எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். எனக்குக் கெட்ட பழக்கம் படம் தயாரிக்கிறது. படம் ஓடுதோ இல்லையோ, நாம சொல்ற கருத்து மக்களைப் போய்ச் சேருதான்னு தெரியலையேனு வருத்தமா இருக்கும். 'தோனி’ சரியாப் போகலை. ஆனா, இன்டர்நெட்ல 16 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இப்படியாவது பார்க்கிறாங்களேனு சந்தோஷமா இருக்கு!''



''பிரபுதேவா-நயன்தாரா சேர்றதுக்கு நீங்களும் ஒரு காரணம். இப்போ பிரிஞ்சிட்டாங்க?'' 



''காதல் வருவதற்கும் அது உடையறதுக்கும் அற்பமான காரணங்கள் போதும். அவங்க வாழ்க்கையில அவங்க ரொம்ப விரும்பினாங்க. அப்போ ஒரு நண்பனா நானும் கூட நின்னேன். ஏதோ ஒரு பெர்சனல் காரணம்... ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அது அவங்களோட நன்மைக்காகப் பிரிஞ்சுட்டாங்க. இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''



''பொண்ணுங்க நல்லா வளர்ந்திருப்பாங்க... எப்படி இருக்காங்க?'' 



''மூத்தவ பூஜா அழகா வளர்ந்திருக்கா... ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கா. போட்டோகிராஃபி, பெயின்டிங், மியூஸிக்னு கலைகள் மேல் ஆர்வம். போன சம்மர்ல பாரீஸ், இந்த வின்டர்ல ஜெர்மன்னு சந்தோஷமா ஊர் சுத்திட்டு இருக்கா. தனக்கு என்ன வேணும்கிறதில் ரொம்ப தெளிவா இருக்கா. அவ தொடர்ந்து 12 வருஷம் படிச்சிட்டா. அதனால, ஒரு வருஷம் கேப் எடுத்து நல்லா என்ஜாய் பண்றதுனு நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். சின்னவ மேனகா... எட்டு வயசு. ஜாலியா வளர்க்கிறேன். ஜாலியா வளர் றாங்க!''


நன்றி - விகடன் 



http://chennaionline.com/images/articles/September2012/60700240-64e2-42ed-9bc3-d4d20a055fb3OtherImage.jpg

எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - மு.க.ஸ்டாலின் பதில்கள் 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpgவைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?'' 

 
''வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாத அயராத உழைப்பு!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளதே?'' 


''எனது தொடர் சுற்றுப்பயணங்களும் இடையறாது கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுமே அந்த வதந்திகளுக்கான பதில். 'உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''



ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''


கே.ஹரி நாராயணன், மதுரை.


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?'' 


 ''விஜய் - காதலுக்கு மரியாதை

அஜித் - வரலாறு

விக்ரம் - அந்நியன்

சூர்யா - ஏழாம் அறிவு

சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா?

தனுஷ் - யாரடி நீ மோகினி?

ஆர்யா - மதராஸபட்டினம்

'ஜெயம்’ ரவி - சந்தோஷ் சுப்ரமணியம்

ஜீவா - ராம்.''

தா.சூர்யா, வேதாரண்யம்.


 ''உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை எப்படி இருக்கிறது?'' 



 ''தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே நினைத்து உழைத்திடும் தளராத தி.மு.க. தொண்டன். கழகத்துக்கும் அதன் மூலமாக தமிழ்ச் சமுதா யத்துக்கும் இறுதி வரை சிறந்த பணியாற்ற நினைக்கும் சேவகன். அரசியல் நடவடிக்கைகளில் கடிகாரம்போல் கச்சிதமாகச் சுழல்வதும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி நடப்பதும் அவருடைய பண்புகள்!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


 ''உங்கள் மாணவப் பருவ நினைவொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..?'' 



''அப்போது நான் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த கிறிஸ்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள், பள்ளி முடிந்து சினிமாவுக்குச் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்குசைக்கிளில் வந்தேன். என் நண்பன் ஒருவன் சைக்கிளை ஓட்டி வந்தான். 


அப்போது எல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது. இன்றைக்கு ஸ்பென்சருக்கு முன் இருக்கும் சிக்னலில் நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  டபுள்ஸ் வந்ததற்காக ஒரு போலீஸ்காரர் எங்க ளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், வீட்டு விவரம், எந்தப் பள்ளி என்பதை விசாரித்தார்கள். சொன்னேன். குறித்துக்கொண்டார்கள்.

'உங்க அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டார் கள். 'கருணாநிதி’ என்று சொன்னேன். 'என்ன வேலை பார்க்கிறார்?’ என்று கேட்டார்கள். 'செக்ரட்டரியேட்ல’ என்றேன். 'எந்த டிபார்ட்மென்ட்?’ என்று கேட்டார்கள். 'பொதுப்பணித் துறை மந்திரியாக இருக்கிறார்’ என்றேன். அதற்குப் பிறகுதான் நான் மந்திரியின் மகன் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டார் கள்!''



ப.பிரேம்குமார், தேனி.


''நீங்கள் மனம் விரும்பிக் கேட்கும் பத்து பாடல்களை இங்கு பட்டியலிடுங்களேன்..?'' 


'' 'காகித ஓடம் கடல் அலை மீது...’ - தலைவர் கலைஞர் எழுதியது.


'செந்தமிழ் நாடெனும்போதினிலே...’ என் செல்போனுக்கு அழைத்தால், இந்தப் பாடலைத் தான் நீங்கள் கேட்பீர்கள்.


'நீ இல்லாத உலகத்திலே...’ - கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியது.


'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ - கலைஞர் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாடியது.


'எங்கள் திராவிடப் பொன்னாடே’ - புரட்சிக் கவிஞரின் எண்ணவோட்டம் எப்போது கேட்டா லும் சிலிர்க்கும்.


'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - இன்றைய காலகட்டத்துக்கு இது தானே பொருத்தமானது.


'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ - சி.எஸ்.ஜெயராமன் குரல் இப்போதும் வசியப்படுத்தும்.


'தப்பித்து வந்தானம்மா... காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்’ - கவிஞர் மாயவநாதன் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடியது.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது’- கவிப்பேரரசு வைரமுத்துவின் காவியத் தொடக்கம்.



'எம்மா எம்மா காதல் பொன்னம்மா’- 'ஏழாம் அறிவு’ படத்துக்காக கபிலன் எழுதிய சுந்தர கீதம்.


- இவை நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் சில. நீங்கள் பத்துப் பாடல்கள் என்று கேட்டதால் இதனை மட்டும் சொன்னேன். இன்னும் என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். செவிச்சுவை மூலமாக இப்புவியை வாழவைப்பது இசைதானே!''



'நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?'' 



 ''திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த 'வடநாட்டில் பெரியார்’ என்ற புத்தகம். பம்பாய், லாகூர், அமிர்தசரஸ், கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார் கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது அந்தப் புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் தொகுத்த இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது!''


ஆதிபகவன், கும்பகோணம்.


 ''தி.மு.க-வை வளர்த்த எழுத்து, பேச்சு எல்லாம் காணாமல் போய்விட்டனவே? இளைய தலைமுறைக்கு அதில் ஆர்வம் இல்லையே? எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களை வளர்க்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லையே?'' 


'' 'எங்களுடைய கால்கள் நடையை நிறுத்தா...
நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்.
எங்கள் கைகள் எழுத்தை நிறுத்தா...
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்.


எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா...

நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்!’ 


- என்று தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞர் அணியின் தொடக்க விழாவில் குறிப்பிட்டார்கள். தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர் முதல் அனைவருமே எழுத்தாற்றல், பேச்சாற்றல் பெற்ற வர்களே. இன்றைக்கு இளைஞர் அணியின் புதிய அமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கு தடை இல்லாமல் எழுச்சியாகப் பேசுவார் கள்.


வருங்காலத் தலைமுறையினருக்கும் திராவிட இயக்கத்தின் லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும் என்பதற்காகவே, பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்துவருகிறோம். சமீபத்தில் தஞ்சா வூரில் அத்தகைய போட்டிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை நடந்த இந்தப் போட்டிகளில் மாணவ - மாணவியர் பேசியதைக் கேட்டபோது, எதிர்காலத் தலைமுறை மீது எனக்குப் பெரிய நம்பிக்கையே வந்துவிட்டது.


'தமிழகம் அம்மா ஆசையால் ஆட்சி கண்டு, இருளில் மூழ்கி இன்று அமாவாசையாய் இருண்டுகிடக்கிறது’ என்று ஒரு மாணவர் பேசினார்.
'ஏ.எம்., பி.எம். பார்க்காமல் உழைத்த சி.எம். நம் தலைவர் கலைஞர்’ என்று ஒரு மாணவி முழங்கினார்.


அண்ணா, கலைஞரின் வாரிசுகளாக இந்த மாணவச் செல்வங்கள் திகழ்கிறார்கள். இவர்கள் எதிர்கால மேடைகளில் ஒளிவீசுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே, தி.மு.க. சும்மா இருக்க வில்லை; விதைத்துக்கொண்டு இருக்கிறது. விளைச்சலின் விளைவுகள் வியக்கவைக்கும்!''


அடுத்த வாரம்...
நன்றி - விகடன் 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzaSiRxdl1V75CcipvAidnYobv5_snjFQrVGrcE6pX69TspkiuG9mEBfaEz2HvuuJK_aAtR76qi-BVikkUfU_E8HdFKryIQbDjIlOEcJKiPJqNJdCJrpom1ogcxh-LCZNwP0oU3mShpqz/s1600/Stalin-jayalalitha-.jpg



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி 

( பாகம் 1) http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

 பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html



டிஸ்கி 3 - திராவிடக் கட்சிகள்  தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின்  பேட்டி
 பாகம் 3  http://www.adrasaka.com/2013/01/2016.html
 




சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 6

Photo
1. டாக்டர்! இந்த டானிக் எப்போ எல்லாம் சாப்பிடனும்?

 உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. டைம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடனும், அதாவது கரண்ட் கட் ஆகும்போதெல்லாம் சாப்பிடனும்



------------------


2.  அத்தான்! ஆஃபீஸ்ல என்னைப்பற்றி நினைப்பீங்களா? 

 உன்னை நினைச்சுடக்கூடாதுன்னு நினைப்பேன் 



--------------------------


3. உங்க கணவரை டைவர்ஸ் பண்ண மூல காரணம் என்ன? 


 அவருக்கு தீர்க்க முடியாத மூலம்.அதான் 


-------------------------------------


4. நம்ம  காதல் அத்தியாயம் முடிவுக்கு வந்துடுச்சு 


 அய்யய்யோ, இது என்ன புதுக்கதை?


-------------------


5. உங்க வீட்ல டெயிலி முடக்கத்தான் கீரை பொரியலா? ஏன்?


 அப்டியாவது என் மனைவி வாய்ல இருந்து அத்தான்கற வார்த்தை வரட்டும்னுதான்



---------------------------




3 pathu ruba....pona varadhu pozhuthu pona kidaikathu.....

VANGO VANGO VANGO :P:P
Photo: 3 pathu ruba....pona varadhu pozhuthu pona kidaikathu.....

VANGO VANGO VANGO :P:P


6. டிக்கெட் எடுக்காமல் டி டி ஆரிடம் மாட்டிய தலைவர் - 3 தடவை தொடர்ச்சியா தேர்தல்ல தோத்தா டிக்கெட் கிடையாதுன்னு ராகுல் சொன்னாரே?



---------------------------


7. எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் துடிப்பா வேலை செய்வாங்க 

எங்க ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் சதைப்பிடிப்பா வேலை செய்வாங்க



----------------


8. நடிகைட்ட வேலைக்கு சேர்ந்த நீ அவங்களையே கிண்டல் பண்ணி ஓட்டிட்டு இருக்கியே? 


 அவங்களைப்பற்றி உனக்குத்தெரியாது, 10 வருஷமா கார் ஓட்டுனா அவங்க காரை கார் டிரைவருக்கே பரிசா குடுத்தவரு. அவங்களை ஓட்டுனா அவங்களையே பரிசாத்தர வாய்ப்பு இருக்கே? 


---------------------


9. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு  நடந்திருக்குன்னு எப்படி தலைவரே சொல்றீங்க? 



அவங்க 10 சுரங்கம் டேக் ஓவர் பண்ணிக்கிட்டு எனக்கு 4 தான் குடுத்தாங்க



------------------


10. மூணாவது அணி அமைக்க தலைவர் ஏன் முயற்சிக்கலை?


மூணுன்னா நாமம் தான்னு யாரோ பயமுறுத்திட்டாங்களாம்



---------------------




Photo: Gud morng fre 
tel me


11. குடும்பப்படம்னீங்க, ஆக்‌ஷன் மூவி போல?


அதாவது படத்தோட டைரக்டர் அப்பா , பையன் ஹீரோ, ஹீரோயின் மருமக இப்படி



---------------------


12. புதுசா வந்த சட்டப்படி என் சம்பளத்துல 20 % என் சம்சாரத்துகிட்டே குடுத்துடுவேன், 



மீதி 80 % ?



மாமியார் பிடுங்கிக்குவாங்க :-0



---------------------


13. நந்தி விருது ஏன் உங்களுக்கு கிடைக்கலை?


நந்தி மாதிரி இன்னொருத்தர் குறுக்கே வந்து வாய்ப்பை தட்டி பறிச்சுட்டார் 




----------------------


14. சாம்பார் , சட்னி இருந்தும் எதுக்கு இட்லிக்கு பொடி கேட்கறீங்க? 


பொடி வெச்சு பேசரதுல மட்டும் இல்லை பொடி வெச்சு சாப்பிடறதுலயும் மன்னன்ன்னு பேர் எடுக்க 



------------------------


15. சென்னைல ஏன் மின் வெட்டு கம்மியா இருக்கு? 


 ஓஹோ,. இப்போஒ உங்க பிரச்சனை உங்க ஊர்ல ஏன் மின் வெட்டு அதிகமா இருக்கு அப்டிங்கறது இல்லை, சென்னைல ஏன் கம்மினு தான்?




-----------------



Photo


16. காவேரி நதியின் சிறப்பு  என்ன?


 தன்னிஷ்டப்படி ஓடுனா அது சாதா நதி , சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஓடுனா அது காவேரி நதி 



------------------------


17. டெங்கு காய்ச்சலால் பீதி வேணாம்னு தலைவர் சொல்றாரே? 


 ம் ம் அவருக்கு என்ன? அவனவனுக்கு பயத்துல பேதி போகுது




--------------------


18. தலைவர் நாத்திகவாதி என்பதால் எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை ஒத்துக்க மாட்டேன்கறார்



எழுத்தறிவை வித்தவன் தலைவன் அப்டினு சொல்லுங்க, ஒத்துக்குவார்




---------



19. நாங்கள் ஆட்சிக்கு வந்தா மின் தடையே இருக்காது


 2ம் நடக்கற மாதிரி தெரியலையே? 



-----------------



20. மினிமம் , மேக்சிமம் என்ன வித்தியாசம்?



சென்னையில் மின் வெட்டு MIN வெட்டு மற்ற இடங்களில் MAX வெட்டு 



-----------------




Photo: Gud eve frds


21. சி எம் ஆனா தமிழக மக்களை சந்தோஷமா வெச்சிருக்க என்னால முடியும்னு தலைவர் எந்த தைரியத்துல சொல்றார்? 



 சி எம் ஆக மாட்டோம்கற தைரியத்துல தான் 


-----------------------


22.  மன்னா! ஈமுக்கோழிகள் கேட்பாரற்று ஏகப்பட்டது கிடக்கிறது, ஓசியில் கிடைக்கிறதுஈமுக்கோழிப்படை உருவாக்கினால் என்ன? 




--------------------------


23. நாட்டு நடப்பு தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?


ஐ பி எஸ் படிச்சிருந்தாலும் ஆத்திரக்காரன்னா  புத்தி மட்டு. யு பி எஸ் இல்லைன்னா  வீட்ல எப்பவும் கரண்ட் கட் 



---------------


டி வி ஷோ டைம் டேபிள்





> இன்று ஒரு தகவல். Today A Message.

பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே(சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்...

மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்...

நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்...

இந்த பெரியவரை பாராட்டுவோம்...!
Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே(சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்...

மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்...

நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்...

இந்த பெரியவரை பாராட்டி SHARE பண்ணுவோம்...!

Wednesday, January 16, 2013

கடல் பற்றி பட வசனகர்த்தா ரைட்டர் ஜெயமோகன் கட்டுரை

Kadal+Latest+Poster+With+Thulasi+Cinema65+(1).jpg (634×980)
கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு



1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும்.

2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல தருணங்கள் உள்ளன. ஆன்மீகமானவை, கவித்துவமானவை– அதுதான் வேறுபாடு


3. கடல் காதல்கதை அல்ல. காதல் அதில் முக்கியமான இடம் வகிக்கிறது. காதல் என்பதை விட ஆணின் ஆன்மா பெண்ணைக் கண்டுகொள்ளும் தருணம் என்று சொல்லலாம், அவ்வளவுதான்


4. கீச்சான் என்பது பாடலில் வருகிறது. நான் எழுதியது அல்ல.மதன் கார்க்கியின் சொல்லாட்சி அது. ஆனால் கீச்சான் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது.கீச்சான் என்றால் புலி போலக் கோடுகள் கொண்ட சிறிய மீன். டைகர்ஃபிஷ் என்று சொல்வார்கள் கடலில் உள்ள சிறு மீன், ஆனால் அது புலிதான்.


இனிமேல் கடல் பற்றிய விவாதங்கள் ஏதும் இந்த தளத்தில் இருக்காது. நான் எழுதும் படங்கள் சம்பந்தமான விவாதங்களுக்காக இந்த தளத்தைக் கையாள விரும்பவில்லை. ஏனென்றால் அதற்கு மட்டுமே இங்கே வரும் வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.


மேலும் தமிழகமே பேசப்போகும் ஒரு பெரிய படத்தைப்பற்றி இங்கும் பேச ஆரம்பித்தால் வேறு எதற்குமே இங்கே இடமிருக்காது. இந்த இணையதளம் இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றையே பேசுபொருளாகக் கொண்டது.


நன்றி

ஜெ

gautham-karthik-manirathnam-kadal-movie-stills.jpg (960×512)


அன்புள்ள ஜெ,

கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது


மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்


சியாமளா பாலகிருஷ்ணன்



kadal-movie-stills1-550x280.jpg (550×280)

அன்புள்ள சியாமளா,

மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


அந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.


ஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.


நாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.


நான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே நான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.


Maniratnam’s-Kadal.jpg (300×300)

கடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.


சினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்


ஜெ


kadal_13558049261.jpg (480×428)

 நன்றி - ரைட்டர்  ஜெயமோகன் , லிங்க் கொடுத்த 


Tuesday, January 15, 2013

பவர் ஸ்டார் VS சந்தானம் லடாய்? - நடந்தது என்ன?

klta-movie-stills-032.jpg (700×468)பவர் ஸ்டாருக்கு கிடைக்கும் கிளாப்சால் சந்தானம் கடுப்பாவதாக தகவல் , இனி அவருடன் நடிக்க மாட்டாராம் # பொறாமை.எதிர்காலத்துல காமெடில அவர் கலக்கிட்டா இவருக்கு டேஞ்சர் தானே?பவர் ஸ்டார் தன் பொறுமை , சகிப்புத்தன்மையால் நீயா? நானா ? கோபினாத் , சந்தானம் இருவர் தொடுத்த பூமாரங்கை திருப்பி விட்டு பூமாலையாக்கிட்டார்.சந்தானம் விஜய் டி வி யில் பல வருடம் கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கார். காமெடி ஸ்கிரிப்ட் சொந்தமா எழுதுவார்.அதனால எந்த நாலெட்ஜும் இல்லாம பவர் ஸ்டார் திடீர்னு அமோக வரவேற்பு பெற தானும் ஒரு காரணம் ஆகிட்டமேன்னு நினைச்சிருக்கலாம்