Showing posts with label Prakash Raj. Show all posts
Showing posts with label Prakash Raj. Show all posts

Thursday, January 17, 2013

கமலின் டி டி ஹெச் - நான் ஆதரவு - பிரகாஷ் ராஜ் பேட்டி

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Cine-Family-Gallery/Prakash-Raj-Family/Prakash-Raj-Family-0000.jpg 
நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா !

எஸ்.கலீல்ராஜா, ஆ.அலெக்ஸ் பாண்டியன்


படங்கள்: கே.ராஜசேகரன்

எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டால், ''அடுத்த நொடி நிச்சயமில்லை நண்பா. இந்த நொடி தீவிரமா, ஆழமா, சந்தோஷமா இருக்கேன்!'' - பெரிய கண்கள் இன்னும் அழகாய் விரிய, வரவேற்கிறார் பிரகாஷ்ராஜ். நீண்ட நாட்களாக இந்தி, தெலுங்கு என்று பிஸியாக இருப்பவரிடம் பேசியதில் இருந்து...


''என்ன... தமிழ்நாடு பக்கம் பார்க்க முடியறதே இல்லை?'' 


''இதோ திரும்ப வந்துட்டேன். என் மகள், என் நண்பர்களின் மகன், மகள்னு நிறையப் பேரைப் பார்த்து, அவங்க படிக்க சிரமப்படுறதைப் பார்த்து 'என்ன கல்வித் திட்டம் இது?’ங்கிற கவலையும் கோபமும் வந்துச்சு. அதைத்தான் 'தோனி’யா எடுத்தேன். அதை இயக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு விதமான வலியோட இருந்தேன்.


 சரி, கொஞ்சம் ரிலாக்ஸ்டா கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணலாம்னு தோணுச்சு. 'சால்ட் அண்ட் பெப்பர்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அழகான ஒரு காதல் கதை. காதலைவிடக் கொண்டாட வேண்டிய விஷயம் வேற என்ன இருக்கு? நடுத்தர வயதுக் காதல், காதலோட வேற ஒரு பரிமாணம் காட்டுற படம் அது. சமையல், உணவு, உணர்வு, ருசி, காதல், தனிமைனு எல்லாருக்குமான கதை அது. அதை 'உன் சமையலறையில்’னு தமிழில் படமாப் பண்றேன். இளையராஜா இசை. தமிழ், தெலுங்கு ரெண்டுலேயும் படம் ரிலீஸ் ஆகும்!''


''2012-ல் பெரிய படங்கள் நிறைய அடி வாங்கி, சின்னப் படங்கள் ஹிட் ஆகின. இதை எப்படிப் பார்க்கிறீங்க?'' 


''பொதுவா, சினிமாவில் ஹிட் ஆனவங்க ஒரே ஃபார்மெட்டில் டிராவல் பண்ணுவாங்க. மாற்றுச் சிந்தனையை அமுக்கிடுவாங்க. ஆனா, அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாவது புதிய சிந்தனைகள் அடிச்சுக்கிட்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றினு நான் பார்க்கலை. 


இது புதிய சிந்தனைகளோட வெற்றி. மக்களோட ரசனையைப் புரிஞ்சு, காலத்துக்கு ஏத்த மாதிரி சினிமா மாறணும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதை எதிர்க்கும் விஷயமும், தடுக்கும் விஷயமும் கண்டிப்பா நடக்கும். அதையும் தாண்டி இளைஞர்கள் வரணும். ஏன்னா, இன்னைக்கு டாப் டைரக்டர்கள், டாப் நடிகர்கள் அத்தனை பேரும் இந்த மாதிரி எதிர்ப்பைத் தாண்டி வந்தவங்கதான்!''


'' 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்ல ரிலீஸ் பண்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'' 


''கமல் எடுத்திருக்கிறது ரொம்ப முக்கியமான முடிவு. நான் வரவேற்கிறேன். காலம்காலமா... 'நான் இப்படி ஒரு படம் எடுத்திருக்கேன். தயவுசெஞ்சு தியேட்டருக்கு வந்து படம் பாருங்க’னு சினிமாக்காரங்க பிச்சை எடுக்கிற மாதிரிதான் கேட்டுட்டு இருக்கோம். சினிமாவில் இருக்கிறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நாம இரண்டு மணி நேரமும் ஒரு ஆடியன்ஸ்கிட்ட காசு பணத்தோட அவங்க நேரத்தையும் வாங்குறோம். என்னைக் கேட்டா, பணத்தைவிட நேரம் ரொம்ப முக்கியமானது. அதனால வாடிக்கையாளர் எங்கே இருக்காங்களோ, அங்கேயே தேடிப் போய் பீட்ஸா, கல்தோசைனு டோர் டெலிவரி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதைத்தான் கமலும் பண்ண நினைக்கிறார்.



சாட்டிங்ல என்னிடம் வந்தார் லண்டன் தமிழ் இளைஞர். 'தோனி பார்த்தேன் சார். ரொம்ப நல்லா இருந்தது!’னு சொன்னார். நான் 'தோனியை அங்கே ரிலீஸ் பண்ணலையே?’னு கேட்டேன். அதுக்கு 'திருட்டு விசிடி-யில் பார்த்தேன் சார். நான் பிரகாஷ்ராஜ் படத்தை உடனே பார்க்க ஆசைப்பட்டேன். இங்க உங்க படம் வந்து சேர மூணு மாசம் ஆகுது. அதுக்காக 200 கி.மீ. நான் டிராவல் பண்ணணும். ரிலீஸ் அன்னைக்கே நானும் பார்க்கிற மாதிரி இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணுங்க. நான் நேர்மையா பணம் கட்டிப் பார்க்கிறேன்’னு சொன்னார்.


 இவரை மாதிரி ஒரு குரூப் தியேட்டருக்கு வர்றதையே நிறுத்திட்டாங்க. சிலருக்கு நேரம் இல்லை. கமல் யோசிக்கிற டோர் டெலிவரி சிஸ்டம் இந்த குரூப் ஆடியன்ஸை திரும்ப சினிமா பக்கம் இழுத்து வரும். சரி, எதுவும் வேண்டாம். புது முயற்சிக்கு என்னதான் ரிசல்ட் கிடைக்குதுனு பார்க்கலாமே? ஒரு படம் இண்டஸ்ட்ரியோட வாழ்க்கையைத் தீர்மானிக்காதே!''



''சூர்யா பண்ணின 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ டி.வி. ஷோவை திடீர்னு நீங்க நடத்துறீங்களே?'' 



''அது நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும். விகடன்ல 'சொல்லாததும் உண்மை’ எழுதினப்ப, எப்படி முகம் தெரியாத மனிதர்கள்கிட்டே அறிமுகம் ஆனேனோ, அதே மாதிரி விதவிதமான மக்கள்கிட்டே திரும்பக் கை குலுக்கப்போறேன். கட்டி அணைக்கப்போறேன். இன்னைக்கு டெலிவிஷன் ஸ்ட்ராங் மீடியா. அதில் நானும் இருப்பது சந்தோஷம்!''


''ரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாக் கேரக்டரும் பண்ற மல்டி பெர்சனாலிட்டி ஆர்ட்டிஸ்ட் அடுத்து வரவே இல்லையே?'' 



''நிச்சயம் வருவாங்க. ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மாதிரியான நடிகர்கள் அந்த இடத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் புதுசா உள்ளே வர்றாங்க. உயரங்களைத் தொடும்போது இழப்பதும் அதிகமா இருக்கும்.



 அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் ரெடியா இருக்கணும். பிரகாஷ்ராஜ் பெரிய நடிகன் ஆகிட்டான்னு சொல்றாங்க. அதுல எனக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. ஏன்னா, என்னைப் பார்த்து இளம் தலைமுறை ஆட்கள் பயப்படுறாங்க. சிலர் பார்த்த முகமா இருக்கேனு யோசிக்கிறாங்க. இதனால நான் இழந்த வாய்ப்புகள்தான் அதிகம். அதனால 'நல்ல கேரக்டர்னா நான் பண்ணித் தர்றேன்யா!’னு நான் கத்திச் சொல்ல வேண்டிஇருக்கு!''  



''டூயட் மூவீஸ்ல எடுத்த படங்கள் தரமா இருந்தாலும் வசூல்ல சரியாப் போகலைனு வருத்தம் உண்டா?'' 



''ஒரு தயாரிப்பாளரா நான் கணக்கு வழக்கு பார்க்கிறதே இல்லை. ஆனா, நடிகனா நான் பக்கா பிசினஸ்மேன். நடிகன் என்கிற வியாபாரிதான் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜின் இழப்புகளைச் சரிபண்ணிட்டே இருக்கிறான். நான் விரும்புற, நான் நினைக்கும் சில நல்ல படங்களை இந்த சொசைட்டிக்குத் தரணும்கிற ஆசையில்தான் படங்கள் தயாரிக்கிறேன். 




நான் தயாரிக்கிற படங்கள் ஒரு கோடியோ, ஒன்றரைக் கோடியோ நஷ்டமாவது உண்மைதான். நடிகனா நான் வாங்கும் சம்பளத்துல இந்த இழப்புகளை என்னால் சரிசெய்ய முடியுது. சில பேர் சீட்டாடுவாங்க. சில பேர் ஊர் சுத்துவாங்க. எல்லாருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். எனக்குக் கெட்ட பழக்கம் படம் தயாரிக்கிறது. படம் ஓடுதோ இல்லையோ, நாம சொல்ற கருத்து மக்களைப் போய்ச் சேருதான்னு தெரியலையேனு வருத்தமா இருக்கும். 'தோனி’ சரியாப் போகலை. ஆனா, இன்டர்நெட்ல 16 லட்சம் பேர் பார்த்திருக்காங்க. இப்படியாவது பார்க்கிறாங்களேனு சந்தோஷமா இருக்கு!''



''பிரபுதேவா-நயன்தாரா சேர்றதுக்கு நீங்களும் ஒரு காரணம். இப்போ பிரிஞ்சிட்டாங்க?'' 



''காதல் வருவதற்கும் அது உடையறதுக்கும் அற்பமான காரணங்கள் போதும். அவங்க வாழ்க்கையில அவங்க ரொம்ப விரும்பினாங்க. அப்போ ஒரு நண்பனா நானும் கூட நின்னேன். ஏதோ ஒரு பெர்சனல் காரணம்... ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. அது அவங்களோட நன்மைக்காகப் பிரிஞ்சுட்டாங்க. இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''



''பொண்ணுங்க நல்லா வளர்ந்திருப்பாங்க... எப்படி இருக்காங்க?'' 



''மூத்தவ பூஜா அழகா வளர்ந்திருக்கா... ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கா. போட்டோகிராஃபி, பெயின்டிங், மியூஸிக்னு கலைகள் மேல் ஆர்வம். போன சம்மர்ல பாரீஸ், இந்த வின்டர்ல ஜெர்மன்னு சந்தோஷமா ஊர் சுத்திட்டு இருக்கா. தனக்கு என்ன வேணும்கிறதில் ரொம்ப தெளிவா இருக்கா. அவ தொடர்ந்து 12 வருஷம் படிச்சிட்டா. அதனால, ஒரு வருஷம் கேப் எடுத்து நல்லா என்ஜாய் பண்றதுனு நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். சின்னவ மேனகா... எட்டு வயசு. ஜாலியா வளர்க்கிறேன். ஜாலியா வளர் றாங்க!''


நன்றி - விகடன் 



http://chennaionline.com/images/articles/September2012/60700240-64e2-42ed-9bc3-d4d20a055fb3OtherImage.jpg

Wednesday, December 12, 2012

Mirapakai - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_6_iJZ4NAQAcb9fGM_43YMX-v5lp2tCa8UesCDQngIUT9ToFozKMXzY_Q43tfaNzgSdbgO0ra1ZlNYbNBB-w1PkLBDhiPA8_jnlyAUw_Bmx9oashgtpyVbsjbUFe3byOEyYDHjUIeb_5r/s1600/mirapakai.jpgஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், சாதா போலீஸ் இல்லை, இண்டெலிஜென்ஸ் செல்லுல ஸ்பெஷல் ஆஃபீசர், அதுவும் டெல்லில..இவருக்கு குடுக்கப்பட பிராஜக்ட் என்னன்னா ஒரு காலேஜ்ல போய் லெக்சரரா சேரனும். ஏன் ? எதுக்குன்னெல்லாம் கேட்கக்கூடாது.புரட்சித்தலைவி ஆட்சி மாதிரி, ஹீரோ ஓ பி எஸ் மாதிரி எந்த கேள்வியும் கேட்காம காலேஜ்ல சேர்றார் .

அங்கே 1789 சக்க ஃபிகர் இருக்கு. ஆனா 60 மார்க் கூட வாங்காத மொக்கை ஃபிகரை காதலிக்கறார். ஏன்னா அவர் தான் ஹீரோயின்.அந்த கேனமும் இவரை லவ்வுது. இந்த லவ் எபிசோடு இடைவேளை வரை ஜாலியா கலாட்டாவா போகுது.


 இடைவேளை எழுத்து போடனுமே? அப்போதான் கதைக்கு வர்றாங்க.. ஃபாரீன்ல ஒரு டான் அதாவது வில்லன் இருக்கான். அவனைப்பிடிப்பது தான் போலீஸோட பிளான். அவனோட பொண்ணு  இந்த காலேஜ்ல படிக்குது .மூக்கைச்சுத்தி காதத்தொடும் கதையா வில்லன் மக்ளை கரெக்ட் பண்ணி வில்லனைப்பிடிக்க கேவலமா மாமா வேலை  பாக்குது போலீஸ் .

 அதாவது ஹீரோ  வில்லனோட பொண்ணை லவ் பண்ற மாதிரி நடிச்சு ( சான்ஸ் கிடைச்சா மேட்டரை முடிச்சுக்கலாம், டிபார்ட்மெண்ட் கண்டுக்காதாம் அடேய் )  வில்லனை அரெஸ்ட் பண்ணனும்.


http://www.ayngaran.com/images/news/1350901551.jpg


இடைவேளை வரை ஹீரோ தனக்காக லவ் பண்றார் ஹீரோயின் நெம்பர் ஒன் கூட, இடைவேளைக்குப்பின் நாட்டுக்காக ( நாசமாப்போச்சு )  நாட்டுக்கட்டை ஒண்ணை அதாவது ஹீரோயின் நெமப்ர் 2 வை லவ் பண்றார். இந்த முக்கேனக்காதல் கதை சாரி முக்கோணக்காதல் கதை  க்ளைமாக்ஸ் வரை போகுது. 


 படம் முடிய 10 நிமிஷம் இருக்கும்போது ஹீரோ வில்லனை சந்திச்சு அரெஸ்ட் பண்ணிடறாரு . ஹய்யோ அய்யோ .. 


ஹீரோ ரவி தேஜா . ஆள் முகம் முத்தலா இருந்தாலும் , ஹேர் ஸ்டைல் கேவலமா இருந்தாலும் , டிரஸ்சிங்க் சென்ஸ் படு கண்றாவியா இருந்தாலும் சுறு சுறுப்பான நடிப்பு , டைமிங்க் பாடி லேங்குவேஜ். ஆனா அவர் முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டும்போது கலா மாஸ்டரை பார்க்கற மாதிரியே பயமா இருக்கு . 


ஹீரோயின்  ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன டப்பா பட ஹீரோயின் . தாவணி  , அல்லது சேலை அணிந்து வந்தாலும் ஆல்வேஸ் பாப்பா லோ ஹிப் லோகா தான். சபாஷ் .  2 டூயட்ல  ஃபுல் முதுகையும் காட்டறார். வந்த வேலை முடிஞ்சது 


 அடுத்த ஹீரோயின் தீக்‌ஷா சேத் . ராஜபேட்டைல சீன் காட்டுச்சே , அந்த பாப்பா .நல்லா மொழு மொழுன்னு  பிங்க் கலர் ஐஸ் க்ரீம் மாதிரி முகம். செர்ரிப்பழம் மாதிரி உதடு . ரம்பா மாதிரி தை ( thigh) ஸ்பெஷலிஸ்ட் போல. ஆல்வேஸ் ஷார்ட்ஸ் , டி சர்ட் தான் . செம கிளு கிளுப்பு . 



பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் வில்லன்கள் , டோட்டல் டைம் இவங்களுக்கு 15 நிமிஷம் தான். 


http://bollygally.files.wordpress.com/2011/08/mirapakai_heroine_richa_gangopadhyay_hot-other1.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. படத்துல  60 மார்க் ஃபிகரா ரிச்சா கங்கோபாத்யாய். , 70 மார்க் ஃப்ஃபிகரா தீக்‌ஷா சேத் 2 பேரை ஒப்பந்தம் பண்ணி முடிஞ்ச வரை அவங்களை திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சாலும்  ஒரு 80 மார்க் ஃபிகரான சுப்ரமணிய புரம்  ஸ்ருதியை புக் பண்ணினது. சும்மா கெஸ்ட் ரோல் தான் அப்டினு அவங்க கிட்டே பொய் சொல்லி ஹோம்லி கேர்ளான அந்த பாப்பாவை  லோ கட் டி சர்ட் கொடுத்து ஸ்லோ மோஷன்ல ரயிலைப்பிடிக்க ஓடி வர்ற மாதிரி ஒரு சீன் வெச்சு கேமரா மேன் கூட இயக்குநர் டாப் ஆங்கிள்ல போய் உக்காந்துக்கிட்டு சீன் பார்த்து அதை நமக்கும் காட்டியது .. ஆஹா! 


2. thujee theekkaaththooyee jaanaa sanam ( துஜே தேக்காத்தோயே ஜானா சனம்) சூப்பர் ஹிட் ஹிந்திப்பாட்டை பேக் கிரவுண்ட்ல போட்டு விட்டு ஸ்ருதி ஸ்லோ மோஷன்ல 4 நிமிஷம் ஓடி வர்றார்.  அடடே.. 


3 கதையைப்பத்தி  கவலையே படமா 14 ரீல் படத்துல 12 ரீல் ஹீரோ அந்த 2 ஹீரோயின் பின்னாலயே நாய் மாதிரி அலைய வெச்சு ஜாலியா திரைக்கதை அமைச்சது . ஃப்ரேம் பை ஃப்ரேம் படம் இளமை , ஜாலி , கொண்டாடம் 



4. பிரகாஷ் ராஜ் , கோட்டா சீனிவாசராவ் 2 பேர் கிட்டேயும்  கெஸ்ட் ரோல் , 15 நிமிஷம் தான் என்ற உண்மை எல்லாம் சொல்லாம நீங்க தான் அண்ணே மெயின் வில்லன் என கப்சா விட்டு சீட் பண்ணி புக் பண்ணினது 



5. காமெடியனை ஹீரோ இன்னொருவரிடம் இவர் ஒரு ஹோமோ என அறிமுகம் செய்ய அது தெரியாமல் காமெடியன் செய்யும் ஒவ்வொரு சேஷ்டைகளும் அதே போல் தற்செயலாக அமைய  கண்ணியமான கலக்கல் காமெடி சீக்வன்ஸ் 


6. காமெடியனை  துரோகம் செய்வது போல் காட்டி பின் எல்லாம் டிராமா என  கொடுக்கும் ட்விஸ்ட் 


http://kasepu.com/wp-content/uploads/2011/01/Richa-Gangopadhyay-Hot-Photos.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஊருக்கே ராஜான்னாலும்  வீட்டுக்கு அவன் பிள்ளை தான்.உலகத்துக்கே நான் ராஜா ஆகிட்டேன், ஆனா வீட்டை கவனிக்க முடியல, ஐ மீன் மும்பையை கவனிக்கனும்.


2.  சீனியர் யாரு? நான் தானே? என்னை விட்டுட்டு ஏன் எல்லாரும் அவனையே புகழ்றீங்க? 


 சீனியாரிட்டி வேற , சின்சியாரிட்டி வேற 



3. டேய், செக்கிங்க் தானே உன் வேலை? எதுக்கு மசாஜ் பண்ணி விடறே? 



4. போயம்ஸ், போயட்ட்ரி 2 ல எது நடத்தட்டும்? 


 2ம் 1 தான் , சுத்தம் 



5. கலர் ஃபுல் டெம்பிள்னா என்ன? 



இது தெரியாதா? கலர்ங்க எல்லாம் சாமி கும்பிட கோயிலுக்கு வந்தா அந்த கோயில் தான் கலர் ஃபுல் டெம்ப்பிள் 



6. பொண்ணுங்க நம்ம கிட்டே விழுந்தா வெட்டியா இருக்கும் நம்ம லைஃப் ஸ்வீட்டா மாறிடும் 



7. புதுசுன்னா ஃபிரஸ் பீசா? 

 யா யா ரிப்பன் கூட இன்னும் கட் பண்ணலை  


8. இவ்ளவ் பிரமாதமா இங்க்லீஷ் பேசறீங்க , ஆனா ஏன் பியூனாவே இருக்கீங்க? 

 இங்க்லீஷ்ல மடும் தான் நான் ஃபர்ஸ்ட் , மத்த சப்க்ஜெக்ட்ல ஃபெயில்  ஹி ஹி 




9. வில்லன் ஆள் எப்படின்னா மெடிட்டேஷன் பண்ண்றவங்களைக்கூட இரிட்டேஷன் பண்ண வெச்சுடுவார். 



10.  ஹிந்தி ஹமாரா ராஷ்ட்ர பாஷா 


 யூ மீன் பாட்சா? 


 யோவ், அது ரஜினி படம் , நான் சொல்றது தேசிய மொழி 


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/deeksha40/deeksha-seth-hot-pics-at-ukup-success-meet-41-9.jpg



11.  புருஷன் செத்துட்டானேன்னு பொண்டாட்டி கண்ணீர் விட்டுட்டு இருந்தாளாம், கடலூர் போலாமா?ன்னு கள்ளக்காதலன் கேட்டானாம் 




12. ஹீரோயின் செல் ஃபோனை  ஜாக்கேட்டுக்குள் ஒளிச்சு வைப்பதை பார்த்த காமெடியன்  அவளையே பார்க்க அவங்கப்பா 

 என்னடா லுக்கு? 

 அவ ஜாக்க்கெட்க்குள்ளே பெருசா என்னமோ இருக்கு, பார்க்கனும்னு ட்ரை பண்றேன், முடியல 

 பளார் 



13. டீச்சர் - ஸ்டூடண்ட்னா ஃபிஷ் & வாட்டர் மாதிரி இணைஞ்சு இருக்கனும், ஃபிஷர் மேன்  & ஃபிஷ் மாதிரி இருக்கக்கூடாது 


14.  மரியாதையா சொல்றேன், நல்லா கேட்டுக்கோ... தயவு செஞ்சு என்னை லவ் பண்ணிடு , உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன் 


15.  ஏய், என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் குறைச்சுக்கனும்


 எதை? 


 ம், உன் அழகை ( நல்ல வேளை ) . இவ்ளவ் அழகா இருந்தா பசங்க எல்லாம் என்ன தான் பண்ணுவாங்க ?



16. என்னடா ஆச்சு உனக்கு, மறுபடியும் அவளையே வெறிச்சுப்பார்க்கறே? 


 அவ ஜாக்கேட்ல சாலிட்டா என்னமோ இருக்கு 

 மறுபடியும் பளார் 



17.  இந்த அரசியல்வாதிங்க எல்லாம் எப்படித்தான் 2 வெச்சு மெயிண்டெயின் பண்றாங்களோ? 


18.  க்ளாஸ் ரூம்ல செல் ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கனும்னு எத்தனை டைம் சொல்றது? 


 சார், அடிப்பது உங்க ஃபோன்  கி கி 


http://gallery.southdreamz.com/cache/actress/deeksha-seth/masala-portfolio/telugu-actress-deeksha-seth-hot-photos-46_720_southdreamz.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்




1. ஹீரோயின்  2 வருஷமா லவ் பண்றா, அப்போ எல்லாம் பெற்றோர் கிட்டே சொல்லலை, அவங்களுக்கும் தெரியலை. ஒரு கட்டத்துல மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஒரு நாள் நைட் 8 மணிக்கு ஹீரோயின் சொல்றா,  9 மணிக்கு ஹீரோவைப்பார்த்து பேசறாங்க,அடுத்த நாள் காலைல 7 மணிக்கு மேரேஜ். என்ன கொடுமை சார் இது? 



2.  மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி 10 மணி நேரத்துல பத்திரிக்கை எல்லாம் அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுத்துட்டாங்களா? மண்டபத்துல அத்தனை பேர் வந்திருக்காங்க? 






3.  வில்லனுக்கு தன்  மகளோட லவ்வர் போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சுடுது. அப்பவே அவரைப்போட்டுத்தள்ளினா மேட்டர் ஓவர். அதை விட்டுட்டு உன்னை நேர்ல பார்க்கனும்னு தான் வர வைச்சேன் அப்டினு லூஸ் மாதிரி ஒரு டயலாக் . மும்பை டூ பாங்காங்க் ஹெலிகாப்டர் செலவு தண்டம் தானே?



4. வில்லன் தன் மகளிடம் ஓப்பனிங்க்லயே “ ஏம்மா அந்த தெள்ளவேரி  டிராமா போடறான், நோ லவ், அவன் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு சொன்னா மேட்டர் ஓவர் . அதை விட்டுட்டு  லவ் பண்றதை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா? 


5. வில்லன் க்ளைமாக்ஸ்ல ஹீரோவை நேர்ல சந்திச்சதும் ஷூட் பண்ணா மேட்டர் ஓவர், அதை விட்டுட்டு  ஹீரோ கிட்டே ராமாயணம்  பேசிட்டு இருக்காரு 10 நிமிஷம் , யார் உள்ளாள் வேலை பார்த்தாங்க, போலீஸ்ல யார் இன்ஃபார்ம் குடுத்தாங்க.. இதை எல்லாம் ஒப்பிச்சுட்டு இருக்காரு உங்களைக்கேட்டாங்களா முருகேஷா? 


6, வில்லனோட பையன் அதாவது ஹீரோயினோட அண்ணன் ஹீரோவைப்பார்த்து   கதை பேசிட்டு இருக்காரு. பாங்காங்க் ல இருந்து வந்தவர்  அப்பவே போட்டுத்தள்ளி இருந்தா மேட்டர் ஓவர்



7. ஹீரோயின் நெம்பர் 1 முன்னால , கண் முன்னால ஹீரோ ஹீரோயின் நெம்பர் 2 வை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார். அநதக்கேனம்  “ போய்யா நீயும் ஆச்சு , உன் லவும் ஆச்சுன்னு கிளம்பாம “ என்னங்க , இங்கே என்ன நடக்குது ?” அப்டினு டவுட் கேட்கறா. ஹீரோவும் “ நான் யோக்கியன் தான், அவ தான் என்னை கட்டிப்பிடிச்சா, கிஸ் அடிச்சா “ அப்டினு பிளேட்டை திருப்பிப்போடறார். இந்த பாப்பாவும் கெக்கே  பிக்கேன்னு சிரிக்குது. அய்யொ  ராமா , என்னை ஏன் இந்த கழிசடைப்படத்தை எல்லாம் பார்க்க வைக்கறே?  ( கவுண்டமணி வாய்சில் படிக்க )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizW7-BLn4MZUKYBiaeylMovLJS7H40bhpj1joTX6zFDkofCswfTYkLvWmr9zdmTcdHVHi6S0epB5V6saA-msiHYpWAkEt5mu-9tLAfVV_NSNpIl93GEAaLZV-0Jn8tOFMUXK6tTziTsjr4/s1600/mirapa_2.jpg



8.   ஓப்பனிங்க் ஷாட்ல இண்ட்டலிஜென்ஸ் ஆஃபீஸ் ல மீட்டிங்க். எல்லா போலீஸ் ஆஃபீசர்சும் யூனிஃபார்ம்ல பக்காவா ஆஜர். ஆனா எல்லாத்துக்கும் ஹெட் ஆஃப் த டிப்பார்ட்மெண்ட் மடும் சிவில் டிரஸ்ல . அதைக்கூட சகிச்சுக்கலாம், ரன்னிங்க் ஷூ போட்டிருக்காரு. தலைவன் ஒழுங்கா இருந்தாத்தானே தொண்டன் ஒழுங்கா இருப்பான்? ஹையர் ஆஃபீசர் கண்ணியமா யூனிஃபார்ம்ல வர வேணாமா? ( ஒரு வேளை அவர் படத்தோட புரொடியூசரோ? )



9. வில்லன் பாங்காங்க்ல இருக்கார், தன் மகள் அவர் கூடவே இருந்தா பாதுகாப்பு இல்லைங்கறார் அது ஓக்கே , கொஞ்சம் தள்ளி சிங்கப்பூர்ல  குடி வெச்சிருக்கலாம், ஏன் பேக்கு மாதிரி  இந்தியாவுல மும்பைல  குடி வைக்கனும்?


10. ஒரு போலீஸ் ஆஃபீசரா இருந்தும் ஹீரோ ஏன் டி ஆர் மாதிரி , பரட்டைத்தலையோட அலையறாரு? போலீஸ் கட்டிங்க் பண்ண முடியலைன்னா அட்லீஸ்ட் ஒழுக்கமா தலை கூட சீவ மாட்டாரா?


11. டி வி , நியூஸ் பேப்பர்ல எல்லாம் ஹீரோ ஃபோட்டோ வந்திருக்கு, ஆனா ஹீரோ கன்னத்துல ஒரு மரு கூட வைக்காம காலேஜ் லெக்சரரா மாறு வேஷத்துல ( !!!!) போறார். ஹிந்தி மாஸ்டராம் ஹய்யோ அய்யோ , எந்த காலேஜ்ல ஹிந்தி பிராத்மிக் எல்லாம் சொல்லித்தர்றாங்க? ஸ்கூல்ல தான் அந்த சிலபஸ் வரும்



12. ஒரு சீன்ல ஹீரோயின்  சுடிதார் டிரஸ்  எடுக்கறார். விடிஞ்சா மேரேஜ். அதுக்குள்ளே எப்படி தைக்க? அப்டிங்கறார். சுடிதார் ரெடிமேடு . துப்ப்பட்டாவை ஓரம் அடிக்கறது  ஒரு மேட்டரா?



13. ஒரு சீன்ல ஹீரோவை போலீஸ் கல்கத்தா வரச்சொல்லுது. ஹீரோ மும்பைல இருந்து ஃப்ளைட் பிடிச்சு அங்கே போறார். அவர் கிட்டே ஹிரோயின் 2  ஃபோட்டோவை குடுத்து இந்தப்பொண்ணைத்தான் நீ லவ் பண்ணனும்கறார். உடனே ஓக்கே சொல்லி ஹீரோ கிள்ம்பறார். ஏய்யா  இதை ஜஸ்ட் மெயில்லயே முடிச்சிருக்கலாமே? எதுக்கு டிராவலிங்க்?



14. ஸாரி ஐ ஆம் ஸாரின்னு செம டப்பாங்குத்து பாட்டு அது  வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாட்டோட அப்பட்டமான தழுவல்



15. ஹீரோ ஒரு சீன்ல ஹெல்மேட் போட்டு வில்லன் அடியாளுங்களை உதைக்கறார். அப்புறம் அதை கழட்டி முகத்தை காட்டறார், இந்த ஈர வெங்காயத்தை முதல்லயே பண்ணி இருக்கலாமே? டூப் முகம் தெரியக்கூடாதுன்னா?

http://appmaza.com/Assets/Images/Kollywood/Kollywood-CelebPics/Deeksha-Seth-Mirapakaya-Stills-Mirapakaya-Deeksha-Seth-Photos.jpg






சி.பி கமெண்ட் - படம் செம ஜாலியா டைம் பாசிங்கா போகுது. லாஜிக் பார்க்காம பார்த்தா ஓக்கே. கிளாமருக்கு கிளாமர். டைம் பாஸ்க்கு டைம் பாஸ். ஈரோடு  அன்னபூரணியில் படம் பார்த்தேன்



விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43 ( விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே



http://movie-stills.in/wp-content/uploads/2012/08/Deeksha-Seth-Hot-Stills-In-Nippu-Telugu-Movie-Stills-No-watermark-8.jpg






Tuesday, December 11, 2012

The Business man - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP6Et_zn021tUF89IeXB5H78fMuZhX8vesDBKnjFK78bqPYN_dchmwhGrP4VYWy655AAoe7ifMElkWqfTF9xPLOe5l24Z_TWHXNZRnsWvx52PK-K7jcp6uhoVa-sq07r4F470MfNSu8g8/s1600/businessman_5th_week_wallpapers_001.jpgமும்பைல  எல்லா தாதாக்களையும் ஒழிச்சாச்சுன்னு நிம்மதியா பெருமூச்சு விடறார்.கழக ஆட்சிகளில் ஊழலையும் , பெரு நகர வாழ்க்கைல தாதாக்களையும் அழைக்கவோ, ஒழிக்கவோ முடியாதுன்னு நிரூபிக்க ஹீரோ  மும்பைல காலடி எடுத்து வைக்கறார்.


சகுனி கார்த்தி மாதிரி நம்பவே முடியாத சாக்சங்களை எல்லாம் பண்றார். ஸ்லம் ஏரியாவான தாராவியில் அனைத்து மக்களின் பேங்க் லோன் க்ளியர் பண்ணித்தற்றேன்னு வாக்குத்தர்றார். அவங்க லோன் வாங்குன பேங்க்ல நைட்டோட நைட்டா போய் லோன் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் அபேஸ் பண்ணிட்டு வந்து  மக்கள் கிட்டே எம் ஜி ஆர் ஆகறார்.


 கூடுதல் சப்போர்ட்டுக்கு போலீஸ் கமிஷனர் மகளான ஹீரோயினை லவ் பண்றார்.கார்ப்பரேட் கம்பெனி மாதிரி ஆக்டோபஸ் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நாடு முழுக்க தன் ஆக்ரமிப்பை நிகழ்த்தறார்.இந்தியாவின் நெம்பர் ஒன் தாதா ஆகறார். அவர் பிளான் என்ன? எதுக்காக அங்கே விஷால் மாதிரி ஊரு விட்டு ஊரு வந்தார் என்பதை வெண் திரையில் காண்க 


 சும்மா சொல்லக்கூடாது . மூளையைக்கழட்டி வெச்சுட்டு பார்த்தா பர பர என ஆக்‌ஷன் பட்டாசான படம் , ஒரு சீன் கூட போர் அடிக்கலை.. ஆனா லாஜிக் எல்லாம் பார்த்தா ரசிக்க முடியாது . லாஜிக் வேணுமா? எண்ட்டர்டெயின்மெண்ட் வேணுமா?


 ஹீரோ மகேஷ் , ஆந்திராவின் இளைய தளபதி . கொஞ்சம் ஏமாந்தா அப்பாஸ் மாதிரி மைதா மாவு ஆகி இருப்பார் , ஹேர் இழையில் எஸ் ஆகி ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டார்.. இவர் நடிப்பு படத்துக்கு பெரும் பலம்.  அசால்டான நடிப்பு , பாடி லேங்குவேஜ் , வசனம் பேசும் வேகம், நடன அசைவுகள் , ஸ்டண்ட் காட்சிகளில் உழைப்பு என அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து இலக்கணங்களிலும் டிஸ்டிங்க்‌ஷன்.. 



ஹீரோயின் கா ஜில் அகர் வால்.இவர் நடிப்பு எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது  .3 இடங்கள்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். 6 இடங்கள்ல புற முதுகு காட்டும் புரவலர் ஆகறார். 4 இடங்கள்ல  லோ கட் லோக நாயகியா, 13 இடங்கள் ல லோ ஹிப்னாடிசம் பண்றார்,. இதை விட  ஒரு கிளாம்ர் ந்டிகை என்ன திறமையை காடட முடியும்கறீங்க? சென்சார் எல்லாம் இருக்கில்ல? 


 அப்புறம் பிரகாஷ் ராஜ், நாசர், பிரம்மாஜி எல்லாம் தலையை காட்டறாங்க. பெருசா சொல்லிக்க ஒண்ணும் இல்லை.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOpEy8YHjAYxPjbxuOeA-mNCIBAWv-XpliI3u32YGKkuR4N0O9T5qSOqDL0WXOpHOrTfhboVsAbf5fwid4f6EdzwcGaoam3bp1rmNGvCuwgpkQqfVdkNRagBd9i-WEbR5OHSGtjCy-BQ/s1600/sabhotcom+Kajal+Agarwal+Hot+Lip+Kiss+in+Businessman+movie+stills+%25281%2529.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. தூக்குடு படம் மாதிரி இதுவும் மெகா ஹிட் படம், அதே மாதிரி பர பர திரைக்கதை , ஆனா நம்பகத்தன்மை  குறைவு


2. ஹீரோ ஸ்டெப் ஸ்டெப்பா எப்படி பெரிய ஆள் ஆகிறான் என்பதை தெளிவா சொன்ன விதம் 


3. படத்தில் திரைக்கதையில்  ஒரு சீன் ஆக்‌ஷன் பட்டாசு , அடுத்த சீன் நாயகியுடன் காதல் காட்சி  இந்த ஃபார்முலா மிகச்சரியா முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு மெயிண்ட்டெயின் பண்ணது அட்டகாசம் 


4.  தமனின் பின்னணி இசை கொஞ்சம் அங்கே இங்கே சுட்டிருந்தாலும்  3 பாட்டு செம ஹிட் .


5. திரையில் காட்சிகள் , ஆர்ட்டிஸ்கள் எல்லாரும் பிரமாண்டம் , பிஅரமிக்க வைக்கும் எடிட்டிங்க் , ஆர்ட் டைரக்‌ஷன்

6. ஹீரோ மும்பை வந்ததும் கைல 10 பைசா இல்லாமல் நண்பனிடம் நீ தான் என் பி ஏ , உனக்கு மாசம் ரூ 25,000 சம்பளம். என சொல்லும் கெத்தான காட்சி அதை நம்பும்படி செய்த திரைக்கதை 


7. பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் கொள்ளை அடிக்கும் காட்சி 


8. செம சூடு கிளப்பும் லிப் டூ லிப் கிஸ் சீன் பை காஜல்


http://movies.fullorissa.com/wp-content/uploads/2011/12/businessman_movie_pics.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மும்பைல டெயிலி ஒரு லட்சம் பேரு வருவாங்க அதுல யாரோ ஒருத்தனுக்குத்தான் அதிர்ஷ்ட லட்சுமி அள்ளிக்குடுக்கும் 



2. உலகத்துலயே பெரிய ஸ்லம் ஏரியா மும்பைல இருக்கும் தாராவி தான் 


3. நம்ம ஊர்ல 10000 ரூபாய்க்கும்  டிஃபன் கிடைக்கும் ஜஸ்ட் 10 ரூபாய்க்கும் கிடைக்கும் 


4. பணம் சம்பாதிக்கறது ரொம்ப ஈசி , ஃபிகர் மடிப்பதுதான் கஷ்டம் 


5. நான் மும்பைல பொழப்புத்தேடி வர்லை, மும்பையை ஆள வந்திருக்கேன் 


6.  ஹாய்  மிஸ், ஏன் பெயிண்ட்டிங்கை கையால வரையறீங்க? பிரஷ் வாங்க காசு இல்லையா? 


 நோ நோ அது ஒரு வகை ஆர்ட்


7. பேசனும்னு  ஒரு மூடுல வந்ததால சரியா அடிக்க முடியல 


8. ஹீரோயின் - இப்படி எல்லாம் சொல்லிக்க உனக்கு வெட்கமா இல்லை? 


ஹீரோ - நோ , எனக்கு வெட்கப்பட்டு பழக்கம் இல்லை 


9. அவனவனுக்கு அவனவன் லைஃப்ல ஒரு சினிமா இருக்கும், அதுல அவன் தான் ஹீரோ 


10 கடவுளைக்கையெடுத்து கும்பிடறீங்களே அதுவும் ஒரு பிஸ்னெஸ் டீல் தான், எந்த வரமும் தராது , எந்த நல்லதும் நடக்காதுன்னா எவனாவது சாமி கும்பிடுவானா? 



http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/03/Kajal-Agarwal-In-Mahesh-Businessman-Movie-Exclusive-Images-4.jpg


11. இவனைப்பார்த்தா பாய் மாதிரி தெரியலை ,  மில்க் பாய் மாதிரி இருக்கான்


12.  அதானே, 2 கோடி ரூபா மதிப்புள்ள காரை கிஃப்டா கொடுத்தா எவ வேணாலும் ஐ லவ் யூ சொல்வா


 ஹலோ , நான் மனசுல நினைச்சதை  சொன்னேன், அப்போ நீங்க கிஃப்ட் குடுத்துட்டீங்க, அவ்ளவ் தான் 


13. யுத்தத்துக்கு பயப்படறவன் தான்   தர்மம் பற்றி பேசுவான்


14. இந்த உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு வரும், உன் கனவு எனக்கும், என் கனவு உனக்கும்  பிடிக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா பிடிச்சுது எப்டி? அதான் லவ் 


15. அப்பப்ப விநாயகர் பால் குடிச்சாத்தான் மதிப்பு , ஓடோடிப்போவாங்க. அதே ரெகுலராப்பால் குடிச்சா ஒரு பய மதிக்க மாட்டான் 



16. கவர்மெண்ட்க்கு சர்வீஸ் டாக்ஸ் , சேல்ஸ் டாக்ஸ் கட்டற மாதிரி  இனி மும்பைல எல்லாரும் சூர்யா டாக்ஸ் கட்டனும், யார் யார் கிட்டே என்ன வாங்கினாலும் 1 % டாக்ஸ் எனக்கு கட்டனும்


17.  சூர்யா பாய் நீயா? 


 சூர்யா பாய் நான் இல்லை, அது ஒரு பிராண்ட் 


18. பணம் நிரந்தரம் இல்லை , மனுஷங்க தான் நிரந்தரம்னு எந்த கேனயன் சொன்னான்? இந்த உலகத்துல  மனுஷங்க தான் செத்துப்போவாங்க.. கரன்சிக்கு சாவே இல்லை 


19.  சாகும்போது எவனும் பொய் சொல்ல மாட்டான் 




http://images.south365.in/2012/01/Kajal-Agarwal-in-Businessman-Movie-2.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. அம்மா , அப்பாவைக்கொன்னவங்களை ஹீரோ பழி வாங்கறார். கொன்னவன்  பெரும்புள்ளி. அதனால அவனும் பெரும்புள்ளி ஆகி கொல்றான். இதானே மெயின் கதை ? முடியல சார்.. இன்னும் 1950 லயே இருக்கீங்க..  பிரமாதமான திரைக்கதை 2 மணி நேரம் ஓட்டிட்டு க்ளைமாக்ஸ்ல இது மாமூல் ரிவஞ்ச் சப்ஜெக்ட்னு அடிச்சீங்க பாருங்க ஒரு அந்தர் பல்டி  மணிரத்னம் இதயக்கோயில் படம் பற்றி சொன்னது மாதிரி .. 


2. ஷாயாஜி ஷிண்டே தன் எதிரி ஜெயில் கைதியை ஹீரோ கொலை பண்ணியதை பப்ளிக்கா பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ், மீடியாக்கள் முன்னால்யே பாராட்டி கட்டிப்பிடிக்கறாரே? இவ்ளவ் பப்ளிக்கா டி வி ஷூட் நடக்கும்போது சொல்லி எஸ் ஆக முடியுமா? 



3. பொதுவா ஒரு பேங்க்ல லோன் டாக்குமெண்ட்ஸ்  ஒரிஜினலை ஹெட் ஆஃபீஸ்க்கு அனுப்பிடுவாங்க. எங்கே லோன் வாங்கபட்டதோ அதே பேங்க்ல  10 வருஷமா இருக்கு என்பது செம ரீல் 


4. அப்படியே ஒரு வாதத்துக்கு டாக்குமெண்ட்ஸ் லோக்கல் பேங்க்ல இருந்தாலும் ஹீரோ & கோ அந்த டாக்குமெண்ட்ஸை எடுத்துட்டு வந்துட்டா  லோன் கேன்சல் ஆகிடுமா? 


5. ஹீரோ & கோ பேங்க்ல இருக்கும் சிஸ்டம் எல்லாத்தையும் உடைச்சுடறாங்க. அப்படி பண்ணிட்டா எல்லா விவரங்களும்  அழிஞ்சுடுமா? இது எப்படி இருக்குன்னா  என் மெயில் ஐடில  என் மெயிலுக்கு வந்த மேட்டர்சை அழிக்க  என் வீட்டில் புகுந்து அந்த சிஸ்டத்தை உடைப்பது போல் . வேற சிஸ்டம் ஓப்பன் பண்ணி என் மெயில் ஓப்பன் பண்ணினா தீர்ந்தது .. ஹய்யோ அய்யோ 


6. ஹீரோ தன் அடியாள்ங்க கிட்டே பேங்க்ல எந்த பொருள் , நகை , பணத்தை கை வைக்கக்கூடாதுங்கறார். அவங்க எப்படி அதை ஒபே பண்றாங்க? நீண்ட நாள் பழக்கமும் இல்லை. ஹீரோவுக்கும் , அவங்களுக்கும் ஜஸ்ட் அப்போதான் அறிமுகம்.. ஹீரோ அவங்க கூட போகலை..  தேனை எடுத்தவன் புறங்கையை ருசிக்காமலா இருப்பான்னு தானைத்தலைவர் , தமிழ் இனத்தின் விடி வெள்ளி விடி சனி  டாக்டர் கலைஞரே சொல்லி இருக்காரே? ஹீரோ எந்த நம்பிக்கைல அவங்களை தனியா விடறார்? 


7. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆளிடம் ஒரு பெரிய அரசியல் தலைவர் கொலைக்கு பிளான் போடுவது ஓவர் 


8. தமன் இசைஞானி இளையராஜாவை ஆங்காங்கே அப்பட்டமா சுடறார், குறிப்பா ஹீரோயின் ஓப்பனிங்க் சீன் , இருவருக்குமான ஊடல் காட்சிகளில் பி ஜி எம்  ராசாத்தி மனசுல என் ராசா பாட்டின் சரணத்தின் இசை உல்டா . 


9. அதே போல்  1964இல் ரிலீஸ் ஆன A FISTFUL OF DOLLARS படத்தில் வரும்  இசையின் உல்டா தான் ஹீரோ - ஹீரோயின் காதல் அரும்பும் காட்சியின் பி ஜி எம் - தகவல் உதவி -தமிழ் சினிமா உலகம்


http://4.bp.blogspot.com/-Xhsv2NewOjY/TvcbDPq9JXI/AAAAAAAAEyE/xeKwpccIoLo/s1600/business_man_movie_new_hot_stills_mahesh_kajal+%25281%2529.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43 


 குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி .பி கமெண்ட் -  மாமூல் மசாலா ஹிட் படம் பார்க்கும் ரசிகர்கள் , டைம் பாஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க , ரஜினி , விஜய் ரசிகர்கள்க்கு படம் பிடிக்கும். கமல் ரசிகர்கள் பார்த்தா செம காண்டாகிடுவாங்க.. லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRlgDq4W21zY97RAAvS-mxPgMao2TycB6iaiLEhtMN-aGA_dfaXvMTHgnWy2xfxrLZsL3Pe0miQchwGwSODgYsVWyhbuDlyahjOfBrECbaNEfWgoIF32tG2SD3yUiJmbRNHOlhyphenhyphenna_mAD/s1600/businessman+telugu+movie.jpg