Friday, October 26, 2012

ஆரோகணம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtlkTxJ1iFmgoiSECtbk5ghCcxge-zbG74omb9KFzCWKwGOcM3n2kGI-KQqX0CoM-e8I2Gilrz8cdcqkzwx-puwvOiQTEM1aQcEU0j7k1qMzGbjq5TfPlQK0R97aRrIXPu9tBOeIgXM-U/s1600/Aarohanam.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க்லயே ஒரு ஆக்சிடெண்ட். விபத்துக்கு காரணமானவங்க மேல் தட்டு வர்க்கத்தை சார்ந்த ஃபீமேல் தட்டு சர்ப்பங்கள்.. ஐ மீன் 2 ஹை கிளாஸ் லேடீஸ். விபத்துக்குள்ளானது  ஒரு சாதாரண லேடி.. 


அந்த லேடி மேரேஜ் ஆகி 2 குழந்தைகள் இருக்கு.. தேர்தல் வர்ற நேரத்துல எல்லாம் எப்படி கலைஞருக்கு ஈழத்தமிழர் நினைவு வருதோ அப்படி  இக்கட்டான டைம்ல  எல்லாம் அந்த லேடிக்கு பயங்கர கோபம் வருது.. என்ன கோளாறுன்னா . ஒரு வித மன நோய் .அதாவது சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் தனுஷ்க்கு மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் வருமே அந்த மாதிரி பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி,.,

புருஷன் காரன் சரி இல்லை.. பொதுவாவே  ஆம்பளைங்க அக்கம் பக்கம் பாரடா சின்ன  வீடுடா, ஆகாசப்பார்வை என்ன?ஜொள்ளு ராசா அப்டிங்கற மனோபவம் உள்ளவங்க என்ற மனோ பாவம் உள்ள அவ புருஷன் அவளை அம்போன்னு விட்டுட்டு வேற ஒரு லேடி பின்னால போயிடறான், எலக்‌ஷன் முடிஞ்சதும் கேப்டனுக்கு ஜெ டாட்டா காட்டின  மாதிரி.. ,


அவ தனியா 2 பேரையும் வளர்த்தறா.ஒரு பொண்ணு, ஒரு பையன், பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு . இந்த மாதிரி ஒரு சூழல்ல தான் இந்த விபத்து நடக்குது, என்ன ஆகுது? என்பதே மிச்ச கதை.. 




அபலைப்பெண்ணா, மனநோய் பிடித்த பெண்ணா வர்ற விஜி நடிப்பு ஓக்கே. அவர் நெத்தில இருக்கற எட்டணா சைஸ் குங்குமத்துக்கு சமமா அவர் கண்கள்  அடேங்கப்பா.. சாமி வந்த மாதிரி ஆடும்போதும், திடீர் திடீர்னு  முறைக்கும்போதும் அப்ளாஸ் வாங்குகிறார்.அழகி சீரியல் ரொம்பவே யூஸ் ஆகி இருக்கு போல..



அவரது பொண்ணா வரும் ஃபிகர்  யார்னு சரியா தெரியல , பேரு ஜெயகுஹோனினு நினைக்கறேன். சிக்குன்னு இருக்கு பாப்பா.. மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பால், கவுரவமான தோற்றத்தால் மனம் கவர்கிறார்.



அழகிரி மாதிரி கெட்டப்ல வரும் ஜெயப்ரகாஷ் தேவை இல்லாத கேரக்டர், அதே போல் சம்பத். உமா பத்மநாபன் பியூட்டி பார்லர்க்கு 2 டைம் அட்டர் டைம்ல போய்ட்டு வந்த மாதிரி ஓவர் மேக்கப், ஆனாலும் ரசிக்க வைக்கிறார், அவர் கூட வரும்  லேடி கி கி கி


http://www.tamilnow.com/movies/gallery/aarohanam/tamil-movie-aarohanam-332.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏய், டிரைவர் வெச்சுக்கலையா? 


நோ, பிரைவேசி போயிடும் 



2. அண்ணே, பார்ட்டிக்கு லேட் ஆகுது


 அந்த பார்ட்டியை  விடுடா, இந்த பார்ட்டியை பாரு



3. இந்தக்காலத்துல பொண்டாட்டி நல்லா இருக்கும்போதே  தொடுப்பு வெச்சுக்கறானுங்க, இவ இப்படி இருக்கா.. நான் வேற ஒரு பொண்ணு கூட போனா என்ன தப்பு?


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-aarohanam-movie-audio-launch/images/tamil-movies-aarohanam-movie-audio-launch01.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தமிழ் சினிமான்னா மினிமம்  2 மணி நேரமாவது ஓடற மாதிரி நீளம் வேணும் , இல்லைன்னா தமிழனுக்கு குடுத்த காசு வேஸ்ட்டோன்னு எண்ணம் வந்துடும், இருந்தாலும்  30 நிமிஷத்துல சொல்ல வேண்டிய கதையை சுவராஸ்யமாய் ஒன்றரை மணி நேரம் இழுத்து சொன்னது.



2. கே பாலச்சந்தர் மூலம் பப்ளிசிட்டிக்காகவோ, நிஜமாகவோ ஒரு பாராட்டை வாங்கி அதை விளம்பரம் பண்ணியது 



3. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், வேலை வாங்கிய விதம் , வெரி லோ பட்ஜெட் ( ஜஸ்ட் 34,55,500 தானாம்)  எல்லாம் அபாரம், திரைக்கதை அமைத்த விதம்  அழகு.


http://www.cinemahour.com/gallery/events1/audioreleases/Aarohanam%20Movie%20Audio%20Launch/5684599Aarohanam_Movie_Audio_Launch-(7).jpg

திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1. படத்துல முதல் ரீல்லயே அந்த லேடி உமா கிட்டே இங்க்லிபீஸ்ல பேசிட்டே இருக்கு, அது எப்படி சாமான்ய ஜனங்களுக்கு புரியும்? அட்லீஸ்ட் திரையிலாவது தமிழ்  மொழிபெயர்ப்பை ஓட விட்டிருக்கலாம், ஒரு லைன், 2 லைன்னா பரவாயில்லை, கிட்டத்தட்ட  ஏ 4 ஷீட்ல ஒன்றரை பக்கம் பேசுது


2. ஜெயப்ரகாஷ்க்கு இங்க்லீஷ் தெரியாது ஓக்கே, ஆனா இங்க்லீஷ் தெரிஞ்ச ஒரு பி ஏ வைக்கூடவா கூட வெச்சுக்க மாட்டார்? ஒரு எம் எல் ஏ வேற அவரு.. அந்த காமெடி எடுபடலை




3. நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஹாஸ்பிடல் உள்ளே.. பையனும், பொண்ணும்  டாக்டர் எதிரே. சைக்கிள் கேப்ல டாக்டர் எதுக்கு  ஆறுதல் சொல்ற மாதிரி அந்த பொண்ணு தோள்ல தட்டிக்குடுக்கறாரு? பயப்பட ஒண்ணும் இல்லைன்னு வெறும் வசனமா சொன்னா போதாதா? அவர் ஃபேமிலி டாக்டரும் இல்லை, அடிக்கடி பார்த்து பழக்கம் ஆன டாக்டரும் இல்லை


4. ஓப்பனிங்க் சீன்ல 45 கிமீ வேகத்துல போகும் கார் ஹீரோயினை ( 50 வயசு ) இடிச்சு அவரை 7 அடி உயரத்துல தூக்கி போடுது. ஆனா அவர் மேல ஒரு கீறல் கூட விழலை.. நம்பற மாதிரியே இல்லை. ஆனா சால்ஜாப்பா ஒரு டயலாக் பின்னால சேர்த்து இருக்கீங்க. ( இதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள், 10 வது மாடில இருந்து  கீழே விழுந்தவன் எல்லாம் துளி காயம் இல்லாம பிழைச்சிருக்கான்னு ) ஆனாலும் உறுத்துது



5. படத்துல ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணீன மாதிரி விபத்து நடந்ததையே கடைசில காட்டி இருந்தா இன்னும் பெப் கூடும்


6.  ஹிட்சாக்கின் கருத்தான ஒரு சஸ்பென்ஸ்  எப்படி இருக்கனும்கற  விளக்கப்படி காட்சிகள் இல்லை. ஆடியன்ஸ்க்கு  ஹீரோயின்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுடுது, ஆனா படத்துல வர்ற கேரக்டர்ஸ்க்கு தெரியல , அவங்க பாட்டுக்கு 3 ரீல்க்கு தேடிட்டே இருக்காங்க. போர் அடிக்குதே. பொதுவாவே தமிழ் சினிமால பலர் பண்ற தப்பு இதுதான். புலன் விசாரணை படத்துல வர்ற மாதிரி கேரக்டர் காணாம போனா என்ன ரீசன்? எதனால காணோம் என்பது ஆடியன்சுக்கும் தெரியக்கூடாது


7. இந்தக்கதைக்கு சம்பந்தம் இல்லாம அந்த ஜொள்ளு ஜக்கு கேரக்டர் எதுக்கு?


8.  எப்படிப்பட்ட கெட்ட புருஷனும் பொண்டாட்டியை திட்டுவான், கண்டுக்காம இருப்பான், அன்பு செலுத்தாம இருப்பானே தவிர  “ நீ கைல காசு இல்லைன்னா என்ன பண்ணுவே? தொழிலா? அப்டினு எல்லாம் கேட்க மாட்டான். ஒரு பெண்ணா பெண்ணாதிக்கவாதியா அந்த வசனத்தை வெச்சாலும் ஆண்கள், பெண்கள் யாருமே அதை ஏத்துக்க மாட்டாங்க..


9. ஒரு மோசமான கணவன் உலகத்துல  பலர் இருக்கலாம், ஆனா மோசமான அப்பா அதுவும் பெண் குழந்தை கொண்ட அப்பா இருக்க முடியாது,  ரொம்ப ரேர். அப்படியே இருந்தாலும்  இந்த மாதிரி மேரேஜ் டைம்ல இப்படி நடந்துக்க மாட்டான்.


10.  எப்பவும் ஆணை வில்லனா காட்டனும்னா மனைவி மேல பாசம் இல்லாத மாதிரி காட்டுனா ஏத்துக்குவாங்க, ஆனா மகள் , மகன் மேல பாசம் இல்லாத கேரக்டர்னா செற்கையா இருக்கும்.


11. ஹீரோயினுக்கு விபத்தில் காயம் ஆகி , அந்த காயத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வில் ஹாஸ்பிடல் செலவை ஏற்று  அப்படியே  நோயை குணப்படுத்தினார்கள் என்று கதையை கொண்டு போய் இருக்கலாம், அதே போல் ஹீரோயினுக்கு அந்த நோய் வந்ததே கணவனின் கொடுமை தாங்காமல் தான் என்பது மாதிரி காட்டி இருக்கலாம்







எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி. பி கமெண்ட் - இது நல்ல படம் எடுப்பதற்கான ஆரோக்யமான முயற்சி தானே தவிர பலரும் சொன்னது போல் இது  பிரமாதமான படம் அல்ல. பெண்கள் , ஆரோக்யமான சினிமாவை விரும்புவர்கள் பார்க்கலாம்.


 இந்தப்படத்தை பற்றி சிலாகித்து கே பாலச்சந்தர் ஆற்றிய மேடைப்பேச்சு


http://www.adrasaka.com/2012/10/blog-post_620.html

மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic4smqbzXhbxA3xZ5pMvEq6RlmHRlKZpPVx7Fi1L2gnAR18N0M0K4RJ10q6ybCd3N5Jq_J7sYBAWk1ChB9f3_vJzzI2yn_4iGlXB0R8098efXx4060TCYHD2lb-k3DbxFjtHgOTDtqeUC9/s1600/manushya+puthiran.jpgசின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார்.


 ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.



புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.



ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?



இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.



மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?



ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?



குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.



நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?



கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?



எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?



நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

வாசகர்கள் கருத்து


1.

Kraja Raja இது அவசர உலகம். முன்பெல்லாம் சாலையில் செல்லும் போதெல்லாம் யார் மீதும் தவறாக இடித்து விட்டால் "சாரி" கேட்போம்.
இப்போது அப்படி இல்லை நம் மீது தவறு இருந்தாலும் கண்ணு தெரியலையாஃபார்த்து போ என்கிறோம்.
வேணாம் வலிக்குது இத்தோடு விட்டுறுங்க
2.
Anbarasan Vijay இந்த வெளிப்படையான பகிரங்கமான கருத்தைதான் உங்களது முந்தைய தொலைகாட்சி நேர்காணலில் எதிர்பார்த்தேன், எந்த ஒரு கருத்தையும் எதற்காகவும் தயங்காமல் முன் வைக்கும் உங்களிடம் ஏதோ பின்வாங்குதல் இருப்பதாக நினைத்தேன், இந்த பதிவை படித்த பிறகு அந்த குறை தீர்ந்தது, சின்மயியினுடைய சாதிய ரீதியிலான கருத்துக்களால் பாதிக்கப் பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் நானும் ஒருவன், 
சின்மயி முற்போக்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது புகாரின் மீது காவல்துறை அதீத அக்கறையும், அவசரமும் காட்டியுள்ளது, இந்த அக்கறை ஏன் மீனாகந்தசாமி விவகாரத்தில் காட்டப் படவில்லை?,சாதீயம் எல்லா மட்டங்களிலும் தலை தூக்கி நிற்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், உங்களது நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் உங்களோடு நானும் கைகோர்க்கத் தயார்
3.
Arul Ezhil நன்றி சார். ராஜன்லீக்ஸ், சரவணகுமார் அகியோரை யாரென்றே எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அவர்கள் கைதாகி இரண்டாம் நாள் வரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் வந்த செய்திகள் எல்லாம் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகுதான் நான் எழுதினேன். உங்களைப் பொன்றோர் ஒரு தரப்பை ஆதரிக்காலம் எழுதுவது மன ஆறுதல் அளிக்கிறது.
4.
Mani Kandan ஒரு தனிப்பட்ட பகை, காழ்புணர்ச்சி, உயர் சாதி/மேட்டு குடி வளர்ப்பு முறை, சக நண்பர்கள் உசுப்பு - மொத்த உருவகம் சண்டை இட்ட இரு தரப்பினரும்.

இதில் சின்மை கை ஓங்கி இருபது அவரின் அதிகரவர்க்கத்துடன் இருக்கும் நெருக்கத்தை பட்டவர்தமாக வெளிபடுதிவிட்டார். இது சமூ
கத்துக்கு பெரிய சவால்.
இவருக்கு முன் உள்ள 19 வழக்குகள் பற்றி முச்சி விடாத ஜர்ஜ் - இவருக்கு மட்டும் வரிந்து கட்டுவதில் அப்பட்டமாக தெறிகிறது.

சின்மை அகம்பாவத்தில் பெரும் பங்கு - ஆஹா ஓகோ என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய காலன் போல் தோன்றி இருக்கும் வண்ணமிகு தொலைகாட்சி நிறுவனங்களை சேரும்.

பாடினால் / ஆடினால் எதோ உலகத்தில் பெரிய சாதனை புரிந்த போன்று ஒரு மாயை உருவாக்கும் தொழில்சாலையாக தொலைகாட்சி நிறுவனங்களை செயல்படுகின்றன. இவற்றின் இயங்கு தளம் சென்னை அதை சார்ந்த இடம் மட்டுமே, அதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றி புரிந்து கொள்ளும் தன்மை இவற்றில் உள்ள என்னோயோருக்கு தெரிவது இல்லை - சின்மை உட்பட.

அவர்கள் இதுதான் உலகம் என்று நம்புகிறார்கள், ஆனால் சமுகம் இதைவிட பெரியது, அதை அவ்வளவு எளிதாக நேர்கொள்ள முடியாது.இதை புரியாமல் இதற்கு முதல் பலி - சின்மை.

அதிகம் பாதிப்பு அடைவது சின்மை - அவரின் / அவரை போல் உள்ள சென்னை வாழ் மேட்டு குடி மக்களின் மறு முகம் கிழிந்து விட்டது.

இதனால் சின்மை - இனிமேல் தமிழகத்தின் செல்ல பிள்ளை இல்லை.

பெண்ணிடம் கிழ்த்தரமாக நடந்துகொண்டவன் தமிழன் இல்லை.

இதை தவிர, இந்த விசயத்தில் இரு தரப்பினர் பற்றி விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை. இருவரும் வேவ்வேறு குட்டையில் ஊறின ஒரே மாதிரி மட்டைகள்.

ஒருவேளை நீங்கள் அய்யா ராகவா ஐயங்கார் வழிமுறை இருந்தால், அவர் பெயருக்கு களங்கத்தை செய்யதிர்கள், தயவுசெய்து.

அய்யா ராகவா ஐயங்கார் அவர்களின் தமிழ் தொண்டு, பற்று கருதி - சின்மை மன்னிப்போம், மறப்போம் - அவர் பாடலை புறக்கணித்து.

நன்றி.
5. Mansoor Ali Khan சின்மாயி செய்தது தவறு என்று கூறுபவர்கள் - ராஜன் செய்ததும் தவறு என்று ஒத்துக்கொள்ளதான் செய்கிறார்கள், மேலும் இது திசை திருப்பபட்ட வழக்கு என்பது தான் அவர்களின் வாதம், ஆனால் சிம்னயின் ஆதரவாளர்கள் - அந்த பெண் கூறியது தவறு என்று ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை - இது ஆணவத்தின் வெளிபாடாக தான் பார்க்கமுடிகிறது
6. Prasanna Kumar ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? - உங்களின் இந்த கட்டுரை சின்மயி விவகாரம் என்பதையும் மீறி நீங்கள் சொன்ன எந்த வாக்கியம் பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நன்றி - மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்  



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


டிஸ்கி 9 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26.10.2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

https://lh6.googleusercontent.com/-7AdflGlYRdk/UIFam8iFgEI/AAAAAAAAjyk/befPUkQ94LQ/6%2520SHEETa.jpg 

1.ஆரோகணம் - லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.



கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி ஆகியோருடன், புதியவர்களான விரேஷ்,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.



'ஆரோகணம்' படத்தை ஏவிஏ புரொடக்ஷன் சார்பாக திரு. அனுப் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை பிரத்தியேகமாக பார்த்த தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி லட்சுமி ராமகிருஷ்ணனைத் தட்டிக் கொடுத்துள்ளனர். இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆரோகணம் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.


படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் ஒரு படத்தை நேரம் பார்த்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது

பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவே வெளியிட்டுவிடாமல் தகுந்த நேரத்துக்கு காத்திருந்த ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேசன் தற்போது அக்டோபர் 26ல் உலகமெங்கும் வெளியிடத் தயாராக களமிறங்கி உள்ளது.
‘ரௌத்திரம்' பட புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ஆடுகளம் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்க, முகமூடியில் கலக்கிய கே இசையமைத்துள்ளார்

இந்தப்படத்தைப்பற்றி கே பாலச்சந்தர் புகழ்ந்து தள்ளிய கட்டுரை

http://www.adrasaka.com/2012/10/blog-post_620.html

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்  

 ஆரோகணம் - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_7293.html




 2. http://www.thedipaar.com/pictures/resize_20120118065303.jpga


 2. மயிலு  -திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஜீவன் இயக்க, ஷம்மு கதாநாயகியாக நடித்துள்ளார்.


மயிலு திரைப்படம் வெளிவர தாமதமானதால் பா.விஜய் நடித்த ஞாபங்கள் படத்தினை இயக்கி வெளியிட்டார் ஜீவன். ஆனால் ஞாபகங்கள் திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

16 வயதினிலே வந்த சமயத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர். இன்று வரை பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. 16 வயதினிலே வந்த சூட்டோடு இரண்டாம் பாகம் மாதிரி மயிலு என்ற பெயரில் இளையராஜா இசையில் வந்திருந்தால் படம் சுமாராக இருந்திருந்தாலும் பாடல்களுக்காகவே சக்கை போடு போட்டிருக்கும். என்ன செய்ய கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. காலமும், தமிழ் படங்களும் நிறைய மாறி விட்டது. இளையராஜா மட்டும் இன்னும் மாறவில்லை என மயிலு பாடல்கள் சொல்கிறது. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப் போன்றோருக்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப பிடித்து போய் விட்டாலும் எல்லோருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

படத்தில் 6 பாடல்கள்:


1) யாத்தே                                        -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி
2) துக்கமென்ன                              -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா
இரண்டு பாடல்களும் பழைய ராஜாவே தான். நன்றாக இருக்கிறது.
3) ஆத்தி சொக்க                             -            ரீட்டா
4) கல்யாணமாம் கல்யாணம்   -            ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு
வழக்கமான இளையராஜா பாடல்கள்.
5) என்ன குத்தம்                               -             இளையராஜா, தர்ஷினி
காலம்காலமாக கேட்ட இளையராஜாவின் சோகப்பாடல்.
6) நம்மளோட பாட்டு தாண்டா  -             கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ்
பாடல் - இயக்குனர் ஜீவன். (எல்லா பாடல்களும் அவர் தான் எழுதியுள்ளார்) எங்க பாட்டு தான் நல்ல பாட்டு, மற்றவர்கள் பாட்டு எல்லாம் குப்பை என்ற ரீதியில் எழுதியுள்ளார். ஜீவன் போன்றோர் அடிக்கும் ஜால்ரா இளையராஜாவின் இசையை தான் பாதிக்கிறது என்பதை அவர் போன்றோர் ஏனோ உணருவதேயில்லை. இன்னும் பழைய வேகம், ஏனோ தானோ வரிகள் என்று இல்லாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிறைய இசைப்புதையல் கிடைக்கும். செய்வாரா ராஜா?





இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், அதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் இயக்குனர் ஜீவனே எழுதியுள்ளார்.


இதனையடுத்து இப்படம் வெற்றியடையும் என இயக்குனர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.\\\

ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்


http://www.kollytalk.com/wp-content/uploads/2010/10/Veyilodu-Vilayadu-.jpg

3. வெய்யிலோடு விளையாடு - அங்காடித்தெரு ஹீரோ மகேஷ் , குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் ஹீரோயின்  தர்ஷனாவும் ஜோடியாக நடிக்கும் லவ் ஸ்டோரி. இயக்கம் ராம் குமார் , தயாரிப்பு -கல்பனா பழனிவேலு

http://incinema-images.s3.amazonaws.com/indiancinema/wp-content/uploads/2012/04/vavavl_hme.jpg


4. வவ்வால்  பசங்க -   படத்தில் நடிக்கும் கதாநாயகனுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் ஸ்பெஷல் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.


கம்பீரம், அரசு என்று அதிரடி படங்களைக் கொடுத்த இயக்குனர் சுரேஷ் இயக்கும் புதிய படம் 'வவ்வால் பசங்க'. இந்த படத்தில் புதுமுக  நாயகன் ராகுல்  கதாநாயகனாக  அறிமுகமாகிறார். "தமிழ் சினிமா எப்போதும் வாழவேண்டும், என்று ஆசைப்படும் கோடானுகோடி தமிழ் சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன். வவ்வால் பசங்க படத்தை என் நண்பர் சுரேஷ்  இயக்குகிறார்.இந்த படம் மிக நன்றாக வரவேண்டும்.
 வவ்வால் பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் ராகுலை எனக்கு பாபுவாக இருக்கும் போதே தெரியும். நடன இயக்குனர்கள் லலிதா மணி தம்பதியரின் புதல்வர் ராகுல். எனவே ராகுல் நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது." என்று வவ்வால் பசங்க படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் 

      லலிதாமணி தம்பதியரின் மகன் ராகுல் வவ்வால் பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக, மலையாளத்தில் அப்போதைய முன்னணி கதாநாயகியாக இருந்த  ஊர்மிளா  உன்னியின்  மகள் உத்ரா உன்னி  இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் சுரேஷ்,

     "ஒரு தந்தை, மகன் இவர்களுக்கிடையே இருக்கும் பாச  அலைவரிசை  எப்படியெல்லாம்,  எந்தமாதிரி  சூழலில் எல்லாம் தடம்  மாறுகிறது, தடுமாறுகிறது  என்பதுதான் கதை. என்னுடைய அரசு, கம்பீரம் படங்கள் மிகவும் அதிரடியான படங்கள், ஆனால், இந்த வவ்வால் பசங்க படம் இந்த இரண்டிலிருந்தும் மிகவும் மாறுபட்ட ஒரு குடும்ப கதை. முதல் பாதி அப்பா, மகன் உறவு  என்றும் இரண்டாம் பாதியில் காதல் குறுக்கிடுவதால் போராட்டம்,  பிரிவு,  அடிதடி  என்று அதிரடிப் படமாகவும் இருக்கும்.

     கதாநாயகி உத்ராவின் கதாபாத்திரம்  நடுத்தர  குடுமபத்து  அய்யங்கார்  பொண்ணு.  ரொம்ப  எளிமையாக  நடிக்க வைத்திருக்கிறேன். கபிலனின் பாடல்களுக்கு ஜெரோஸ் புஷ்பராஜ் இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் மிக நன்றாக வந்திருக்கிறது. படம் கும்பகோணம், சென்னை என்று இரண்டு ஊர்களில்  படமாக்கப் பட்டு வருகிறது. வவ்வால் பசங்க படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துக் கூறியதை மிகப் பெருமையாக நினைக்கிறேன்" என்கிறார் சுரேஷ்.


ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்


5. யாருக்கு தெரியும் -
Yarukku Theriyum Audio Launched Aid0136

யாருக்குத் தெரியும் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் வசந்த் வெளியிட, மௌன குரு படத்தின் இயக்குநர் சாந்தகுமார் பெற்றுக் கொண்டார்.



பாடல்களை வெளியிட்ட பின் இயக்குநர் வசந்த் பேசுகையில், "தயாரிப்பாளர் ஸ்ரீதரன் எனது 10 ஆண்டுகால நண்பர். யாருக்கு தெரியும் கதை எனக்குமட்டும் முன்பே தெரியும். இதைப்போல ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்கிற அளவிற்குச் சிறப்பான படமாக யாருக்கு தெரியும் இருக்கும். இன்றைய தேதியில் ஒரே படத்தை ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் எடுப்பது வியாபார ரீதியில் மிகவும் புத்திசாலித்தனமான செயல்," என்றார்.



படத்தின் இயக்குனர் கணேசன் காமராஜ் பேசுகையில், "யாருக்கு தெரியும்' புதுமையான திரில்லர் படம். தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரிய கதாநாயகர்களை வைத்து வியாபார ரீதியாகத் திட்டமிட்டு பெரிய படம் எடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து யாருக்கு தெரியும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள். தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தினை 3 க்கும் மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேஷ் கே தேவ்," என்றார்.

 http://www.cineulagam.com/photos/full/movies/yarukku_thirum_001.jpg

படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் பேசும்போது, "இந்தக்கதையை இயக்குனர் கணேசன் காமராஜ் என்னிடம் சொல்கையில் 18 இடங்களில் கேள்விகள் கேட்கவேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்...ஆனால் அந்தக் கதையின் கடைசி 15 நிமிடங்களில் இயக்குனர் சித்தரித்திருக்கும் காட்சிகள் அதற்கான விடைகளாக இருந்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்கும் இதே அனுபவம் ஏற்படும்," என்றார்.



இயக்குனர் சாந்தகுமார், நடிகர் திலகத்தின் பேரன் சிவாஜி தேவ், ஆகியோரும் யாருக்கு தெரியும் அணியினரை வாழ்த்தினார். இந்தப் படத்தின் பாடல்களை வாலியும் யுகபாரதியும் எழுதியுள்ளனர்.



இந்தப் படத்தில் நிஷாந்த்,திலீப், அச்சுதா, ஹரிஷ் ராஜா, சுஜா, சஞ்சனா, கலாபவன் மணி மற்றும் ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர்.


அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடட் சார்பில் எஸ் ஸ்ரீதரன் தயாரித்துள்ளார். இயக்குநர் கணேசன் காமராஜுக்கு இது முதல் படம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho0qbzR1LCtiqSbnVQjPCP5hLCJGO_2rahSACq39QsANdIy7tfneM4W4ouhHSCmEWE1mNH5QSyBgr18A9urVWhQEs2FK_YrCm_tiEdyYc0mA30QMJI5UT-H875yLltDoYRM_a2Jnubq38/s1600/ariyaan-6.jpg
 6. அறியான் - புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை பி.கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். தயா‌ரிப்பு பிளெஸ்ஸிங் என்டர்டெயினர்.

பக்ரு, மயில்சாமி ஆகியோர் காமெடி ஏ‌ரியாவை கலகலப்பாக்குகிறார்கள். ஏ.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வர்மன் இசைக்கு பாடல்கள் எழுதியிருப்பவர் யுகபாரதி.இது முதல்ல பயம் அறியான் - என ஆரம்பிச்சு அப்புரம் பயத்தை ஒழிச்சுட்டாங்க
 http://cdn3.supergoodmovies.com/FilesFive/chakravarthi-thirumagan-audio-launch-hot-stills-5010e97d.jpg
7.  சக்ரவர்த்தி திருமகன் -எம் ஜி ஆர்  பேரை ரிப்பேர் ஆக்க வாலிபன் சுற்றும் உலகம் படத்தை எடுத்து  மரண அடி வாங்கி இப்போ அடுத்து அதே டைப்பில் ஒரு போலி எம் ஜி ஆர் படம், நல்ல வேளை அவர் உயிரோட இல்லை 
http://www.moviezadda.com/wp-content/uploads/2012/08/Chakravyuh-1.jpg
 8. CHAKRAVYUH - நேத்தே இந்தப்படம் ரிலீஸ் ஆகிடுச்சு. மாவோயிஸ்ட்டை பிடிக்க ஒரு போலீஸ் ஆஃபீசர் தன் நண்பனை மாவோயிஸ்ட் மாதிரி நடிக்க அனுப்பறார். அவர் அவங்க கொள்கையால கவரப்பட்டு நிஜ மாவோயிஸ்ட்டா ஆகிடறார். என்ன ஆகுது என்பதே கதை. குருதிப்புனல் சாயல் இருப்பதா  சொல்றாங்க.. ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருக்கும் போல.. 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/20/Cloud_Atlas_Poster.jpg/215px-Cloud_Atlas_Poster.jpg

9.cloud atlas  - க்ளௌட் அட்லஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தைப் பற்றி அதில் நாயகியாக நடித்திருக்கும் ஹாலி பெர்ரி (Halle Berry).

“இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரே ஆன்மாவின் வெவ்வேறு பிறவிகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த ஆன்மாக்களின் வெவ்வேறு பிறவிகள் பற்றிய ஆறு கதைகளை படம் சொல்கிறது. இது போன்ற மறுபிறவி விஷயங்கள் இந்திய புராணக் கதைகளின் தன்மையை ஒத்திருக்கின்றன. இந்திய புராணக்கதை ஒன்றில் விஷ்ணு என்கிற கடவுளின் ஏழாவது அவதாரமாக ராமர் என்கிற கதாபாத்திரம் இருக்கும். இதே போல வேறு பிறவிகளும் விஷ்ணு என்கிற கடவுளுக்கு இருக்கும். இது போன்ற விஷயங்களை ஹாலிவுட்டில் சில படங்கள் கையாண்டிருக்கின்றன.”



இப்படத்தின் ஒரு காட்சியில் ஹாலி பெர்ரி இந்திய ஸ்டைலில் சேலை அணிந்து கூட நடித்திருக்கிறார்.


இப்படத்தின் இயக்குனர்கள் வாக்கோவ்ஸ்கி ப்ரதர்ஸ் (Wachowsky Brothers) என்றழைக்கப்படும் ஆண்டி(Andy) மற்றும் லானா(Lana) வாக்கோவ்ஸ்கி  என்கிற அண்ணன் தங்கை ஆவார்கள். இவர்கள் ‘மேட்ரிக்ஸ்’ எனப்படும் படத்தின் மூலம் புகழடைந்தவர்கள். இந்த மேட்ரிக்ஸில் கூட இந்திய தத்துவம் சம்பந்தமான உரையாடல்கள், மாயை பற்றிய விளக்கங்கள் வந்திருக்கின்றன.


இந்தியாவிலிருக்கும் மக்களோ மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேடி ஓட அங்கிருப்பவர்கள் சிலருக்கு பழைய இந்திய புராணங்கள் பெரிதாகக் கண்ணில் படுகிறது.


நிஜமாகவே நம் புராணக் கதைகள் படிப்பதற்கு ஹாரி பாட்டரை விட மிக த்ரில்லிங்காகவும், கற்பனை வளம் நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக மகாபாரதத்தில் வரும் எண்ணிலடங்கா கிளைக் கதைகளைச் சொல்லலாம். 

http://www.bollywoodhungama24.in/wp-content/uploads/2012/10/Emraan-Hashmi-and-Neha-Dhupia-in-Rush-Movie-Hindi-Dialogues.jpg


10.  RUSH -நேகா தூபியா நடிச்ச கிட்டத்தட்ட கில்மாப்படம் சாரி க்ரைம் த்ரில்லர் படம் . (  காமாலைக்காரன் கண்ணுக்கு கலைஞர் என்ன கலர் துண்டு போட்டாலும் மஞ்சளாத்தான் தெரியும்)

Star Cast: Emraan Hashmi (Sam Grover), Sagarika Ghatge (Ahana Sharma), Neha Dhupia (Lisa Kapoor) and Aditya Pancholi (Roger Khanna)


Director: Shamin Desai

Music Director: Pritam Chakraborty


Release Date: 26 Oct 2012


The dream project of late Shamin Desai 'Rush' is all set to release this Friday on October 26, 2012.

The story of the film revolves around media, politics and crime and is basically a thriller.


Rush stars Emraan Hashmi (Sam Grover), Sagarika Ghatge (Ahana Sharma), Neha Dhupia (Lisa Kapoor) in the lead role, where Emraan Hashmi has played the role of a struggling news reporter as Sam Grover.


Neha Dhupia will be seen in a look with short hair and is considered to be one of her best roles until now.


'Chak De' girl Sagarika Ghatge will be seen romancing Emraan Hashmi as her wife after a long absence from the silver screen.
The music of the film has already become a hit and on the top of the chartbusters.


Emraan, who is mostly known for playing romantic roles in his movies, has now come up with some intense acting to show the other side his talent and entertain the audiences with some intense piece of acting.


Although, the concept for Rush was brought in 2010 by Shamin Desai, which was first titled as Raftaar 24x7 but after the sudden death of Desai in early 2011, the shooting og the film was stopped. which was then resumed in October 2011 by Shamin's wife Priyanka Desai as a memorial for her late husband.

ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்




 
நன்றி - சினிமா ஆன் லைன், சினிமா 123, தினமணி, மாலை மலர், சினிமா எக்ஸ் பிரஸ் ,,மற்றும் ஆன் லைனில் உள்ள அனைத்து சினிமா தளங்கள்

சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து


கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான்.  ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது.  நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம்.  ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா?  இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்?  ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்.  ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள்.   அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.



என் மீது பகைமை கொண்டவர்கள் அதிகம் என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவன் நான்.  எனக்கு வரும் வசைக் கடிதங்களைப் படிப்பதிலிருந்துதான் என் நாளே துவங்குகிறது.  முதல் வார்த்தையைப் படித்ததுமே delete செய்து விடுவேன் என்றாலும் இவ்வளவு நீளமான கடிதத்தை கஷ்டப்பட்டு டைப் செய்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம் மட்டுமே எஞ்சும் எனக்கு.  இவர்கள் என் மீது ஏன் இத்தனை கோபம் கொண்டு அசிங்கமாகத் திட்டுகிறார்கள் என்றும் புரியாது.  என் அம்மாவிலிருந்து ஆரம்பித்து என் மனைவி, என் பிறப்புறுப்பு வரை திட்டுவார்கள்.  பரிதாப உணர்ச்சியே மிகும்.



ஆனால் ஒரு கட்டத்தில் இது வசைக் கடிதங்கள் என்பதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேறொரு கிரிமினல் தன்மையை அடைந்தது.  எனது நண்பர்களின் அலுவலகங்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  அவர்களுக்கு வேலை போய் நடுத்தெருவில் நிற்க வேண்டும் என்பது அந்த நலம் விரும்பிகளின் விருப்பம்.  எனது வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சில பெண்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  (உங்கள் மனைவியை இந்த வாசகர் வட்டத்திலிருந்து விலகச் சொல்லுங்கள், அவர்களெல்லாம் கெட்டப் பசங்கள்… இன்னும் நீங்கள் யாரும் கற்பனையே செய்ய முடியாத பயங்கரங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்கள்).  இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அந்தப் பெண்களின் குடும்ப வாழ்க்கை இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் காரணம்?  இதற்கெல்லாம் நான் சும்மாவே இருந்தேன்.  ஏனென்றால், என்னுடைய புகார்ப் பெட்டி, கடவுள் மட்டுமே.


சுமார் ஒரு பத்து ப்ளாகர்கள் இருப்பார்கள்.  நான் என்ன எழுதினாலும் அதை அப்படியே நகல் எடுத்து வரிக்கு வரி என்னைத் திட்டி, அவமானப்படுத்தி, கொச்சைப்படுத்தி தன் ப்ளாகில் எழுதி விடுவார்கள்.  இதற்காக அவர்கள் மணிக் கணக்கில் செலவிட்டதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம்.  இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள்.  இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.


நேர் வாழ்க்கையிலோ அல்லது அச்சு ஊடகத்திலோ இவர்கள் இப்படி ஸைக்கோ வேலைகள் செய்ய முடியாது.  உடனடியாகத் தூக்கி உள்ளே தள்ளி விடுவார்கள்.  இணைய வெளி கொடுக்கும் எல்லையில்லாத சுதந்திரமே இவர்களை இப்படி ஸைக்கோக்களாக்கி விடுகிறது.  தகுதியில்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும்.  அதனால்தான் நான் எப்போதும் சுதந்திரம் பற்றிப் பேசும்போதெல்லாம் பொறுப்பு (responsibility) பற்றியும் பேசி வருகிறேன்.  பொறுப்பற்ற சுதந்திரம் இப்படித்தான் பொறுக்கித்தனமாக வெளிப்படும்.



ஊடக வெளி தரும் எல்லையற்ற சுதந்திரத்தினால் ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருப்பவன் கூடத் தன்னை சே குவேராக நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறான்.  இலங்கைத் தமிழர் ஆதரவு, கருணாநிதி-ஜெயலலிதா எதிர்ப்பு, தலித் ஆதரவு, பிராமண எதிர்ப்பு (பிராமண என்று எழுதக் கூடாது; பார்ப்பன என்று எழுத வேண்டும்), தமிழ்ப் பாசம் போன்ற templates-ஐ நெற்றியில் ஒட்டிக் கொண்டால் முடிந்தது கதை – நீங்கள் ஒரு சே குவேரா.  எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; யாரையும் திட்டலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கேட்க நாதி இல்லை.  இல்லாவிட்டால் ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் “உன்னை நடுத்தெருவில் வைத்து ரேப் பண்ண வேண்டும்” என்று சொல்லத் துணிவானா?



இந்தப் பொறுக்கித்தனத்துக்கு எப்போது தீர்வு வரும் என்று காத்துக் கொண்டே இருந்தேன்.  இன்று சின்மயி அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.  நான் சின்மயி ஆதரவாளன் அல்ல.  நேற்று வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது.  நான் தமிழ் சினிமாப் பாடல் கேட்பவன் அல்ல.  ஆனால் அவருடைய கருத்துக்களுக்காக அவரை உளவியல் சித்ரவதை செய்த பொறுக்கிகள் தண்டிக்கப் பட வேண்டும்.  சின்மயி சொன்னது என்ன?  சின்மயி என்ன அருந்ததி ராயா?  அருந்ததி ராயைப் போலவே எல்லாப் பெண்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி இல்லாவிட்டால் பொறுக்கித்தனம் செய்வதும் ஃபாஸிஸம் அல்லவா?



மேலும், இப்படி இணையத்தில் சே குவேரா வேஷம் போடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏன் எலிக்குஞ்சாக இருக்கிறார்கள்?  போலீஸ் என்றதுமே தன் ஒரு வயதுக் குழந்தையைக் காட்டி, “என் குழந்தைக்காக என்னை மன்னித்து விடுங்கள்” என்று காலில் விழுகிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்?


என்னை இந்தப் பொறுக்கிகள் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார்கள் தெரியுமா? நான் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதினால் அந்தப் பத்திரிகைக்கு நூறு பெயர்களில் என்னைப் பற்றி அவதூறாகக் கடிதம் எழுதுகிறார்கள்.  என் மொழிபெயர்ப்பாளர்களை அச்சுறுத்துகிறார்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு வாரம் முன்னால் குழந்தை பிறந்திருக்கிறது.  அந்தக் குழந்தையைத் திட்டி ட்வீட் போட்டிருக்கிறான் ஒரு பொறுக்கி.  அவனும் ஃபேஸ்புக்கில் ஒரு ஹீரோ தான்.  அவனையும் 5000 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.  என்னை இவர்கள் செய்யும் டார்ச்சருக்கு வேறு வேறு ஆளாக இருந்தால் தற்கொலைதான் செய்து கொள்வான். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும்.   நானோ வெளியில் கூட சொல்லிக் கொள்வதில்லை.  ஏனென்றால், இவர்களின் செயல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஒரே நம்பிக்கைதான் காரணம்.



இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மீது பொறுக்கித்தனமான அவதூறுகளை எழுதிய ஒரு இணைய ”சே குவேரா”  இன்று போலீஸிடம் மாட்டிக் கொண்டவர்களை பொறுக்கிகள் என்று எழுதியிருக்கிறார்.  சக பதிவரை ஒருமுறை கொலை செய்ய முயன்றவர் இவர்.  இவர் போலீஸிடம் மாட்டவில்லை.  அதனால் இவர் சே குவேரா.  மாட்டிக் கொண்டவர்கள் மாட்டிக் கொண்டு விட்டதால் பொறுக்கிகள்.  இல்லை?


சமூகப் பொதுவெளியில் நாம் நாகரீகம் தவறினால் அடுத்த கணமே பொளேர் பொளேர் என்று தர்ம அடி கிடைக்கும்.  போலீஸ் வரும் வரையெல்லாம் பொதுமக்கள் காத்திருக்க மாட்டார்கள்.  இணைய வெளியில் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.


பொதுவாக, இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தேசம் அல்ல.  தினந்தோறும் வரும் கற்பழிப்புச் சம்பவங்களைப் பார்த்தாலே அது தெரியும்.  நம் தமிழ் சினிமாவும் ஆண் வர்க்கப் பொறுக்கித்தனத்தையே பிரதானப் படுத்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றிரண்டு பேர் தான் பங்கேற்க முன்வருகிறார்கள்.  அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றால் இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கம் என்பது எவ்வளவு கொடூரமாக செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதையும் மீறி இத்தளங்களில் செயல்படும் ஒருசில பெண்கள் இந்த இணைய தாதாக்களிடம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  தாதாக்களுக்கு மாமூல் கொடுப்போம் இல்லையா, அது போல இந்த இணைய தாதாக்களுக்கு லைக் போடுவது, retweet போடுவது, follow செய்வது இதெல்லாம்தான் மாமூல்.  இந்த மாமூலைக் கொடுத்தால்தான் அந்தப் பெண்களைப் பற்றி இணைய தாதாக்கள் அசிங்கமாக எழுத மாட்டார்கள்.  இந்த மாமூலை சின்மயி கொடுக்கத் தவறி விட்டார்.  அதனால்தான் அவர் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த சித்ரவதை.



சுதந்திரம் என்பது பொறுக்கித்தனம் இல்லை;  பொறுப்புணர்வு என்பதை இணைய தாதாக்கள் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்.  தன் குழந்தையைக் காட்டி மன்னிப்புக் கேட்டால், இந்தியாவில் இருக்கும் அத்தனை சிறைக் கைதிகளுக்கும் கூட மன்னிப்பு வழங்கி விடலாம்.  ஏனென்றால், அவர்கள் எல்லோருக்குமே குழந்தைகள் இருப்பார்கள்.  இந்தியாவில் மிகச் சுலபமாக உற்பத்தியாவது குழந்தைகள்தானே?

நன்றி - சாரு ஆன் லைன்



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html





டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


Thursday, October 25, 2012

துப்பாக்கி - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி @ விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg"ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை!"

எம்.குணா
'துப்பாக்கி’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வந்து அமரும் ஏ.ஆர்.முருகதாஸ் முகத்தில் திருப்தி ததும்பும் புன்னகை. ''படம் பிரமாதமா வந்திருக்கு. இதுவரை விஜயைப் பிடிக்காதவங்களுக்குக்கூட 'துப்பாக்கி’ விஜயைப் பிடிக்கும்.



இங்கே படம் எடுக்கிறதுகூடக் கஷ்டம் இல்லைங்க... படத்துக்கு ஏத்த தலைப்பு பிடிக்கத்தான் போராட் டமா இருக்கு. ஐந்நூறு ரூபாயைக் கட்டிட்டு கோர்ட்ல கேஸ் போட்டுர்றாங்க. இப்பதான் பெரிய நிம்மதியா இருக்கு!'' - 'துப்பாக்கி’ தலைப் பைத் தக்கவைத்துக்கொண்ட உற்சாகத்தோடு பேசினார் முருகதாஸ்.




 ''தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலத்தில் 'குரு சிஷ்யன்’ படத்தை எஸ்.பி.முத்துராமன் 24 நாட்களிலேயே முடித்தார். படமும் ஹிட். ஆனால், இப்போது ஒரு ஹீரோவை வைத்து இயக்கும் படத்தை ஒவ்வோர் இயக்குநரும் வருஷக் கணக்கில் இயக்குவது சரியா?''  



''உங்கள் குற்றச்சாட்டு உண்மைதான். நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஷூட்டிங், கால்ஷீட், பயணம்னு எதைப் பத்தியும் தெளிவான திட்டமிடல் இல்லை. அதுவும் போக, இப்போ தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுக்க மார்க்கெட்.


 சின்னமனூர் செல்வராசுக்கும் படம் பிடிக்கணும்; சின்சினாட்டி விக்கியையும் படம் அசத்தணும். அதுக்கான மெனக்கெடல், தரம் இதுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு வருஷ உழைப்பு தேவைப்படும்தான். அதைத் தப்பு சொல்ல முடியாது.''



''இந்தி சினிமாவில் உங்களுக்கு மார்க்கெட் இருக்கு. ஒரு தமிழ் ஹீரோவை வெச்சு இந்தியில் படம் பண்ணணும்னா யார் உங்க சாய்ஸ்?''



''விஜய், அஜித், சூர்யா... மூணு பேருமே என் சாய்ஸ்தான். இந்தியில் எனக்கு மட்டும் இல்லை... இவங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருக்கு. 'துப்பாக்கி’ ஷூட்டிங் நடந்தப்போ, மும்பையில் எங்கே வெச்சு விஜயைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடிச்சு, சேர்ந்து சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க இந்திவாலாக்கள்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjXJhCc7jf3go_t6dhz_4LaKuLii5a63a36ERZq-G4oV9doCZxF_3r5ihE89wxMsX6qI9e0nFsisehXBPh-uqcLIcQuQ8YulhN-YFq9HXzQKSGulrZ8kNlhbGqVL3eTWT9r57QJYM9dmo/s1600/0.jpg


அவருக்கே அது ஆச்சர்யமா இருந்துச்சு. விஜய்க்குள்ள ஒரு பிரமாதமான நடிகன் இருக்கான். இன்னும் சரியான தீனி கிடைக்காமத் தவிச்சுட்டு இருக்கான். அஜித் ஸ்க்ரீன்லதான் சாஃப்ட்டா இருக்கார். நேர்ல பழகும்போது அவர்கிட்ட இயல்பாவே இருக்கும் ஆக்ரோஷம், எமோஷன் எல்லாம் பிரமிப்பா இருக்கும். அஜித்தின் அந்த ராவான எனர்ஜிக்கு ஏத்த கதையில் இன்னும் அவர் நடிக்கலை. ஆக்ஷனோ, காதலோ... டபுள் செஞ்சுரி அடிச்சுட்டுப் போயிருவார் சூர்யா. இவங்க மூணு பேருக்கும் ஏத்த கதைகளை அமைச்சுட்டு நானே அவங்க ஒவ்வொருத்தரையும் இந்தியில் இயக்குவேன்.''




''அது என்ன... சினிமா விழாக்களில் நடிகைகளைப் பற்றிப் பேச்சு வந்தால் நீங்க சட்டுனு கோபப்படுறீங்க?''



''அந்த அளவுக்கு சிலர் என் மனசைக் காயப்படுத்தி இருக்காங்க. என் படத்தில் நடிச்ச ஒரு நடிகை பண்ண அலட்டல், பந்தா எல்லாம்... வேண்டாங்க... நினைச்சாலே சங்கடமா இருக்கு. ஹீரோ வர்ற காட்சி மட்டும் இல்லை, படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமா இருக்கணும்னு இழைச்சு இழைச்சு வேலை பார்ப்பேன் நான்.


 படத்துல ஒரு சீன்கூடத் தேவை இல்லாம இருக்கக் கூடாதுனு மொத்தத் திரைக்கதையையும் இறுக்கிப் பக்காவா வெச்சிருப்பேன். ஆனா, அந்த நடிகை 'எனக்குப் படத்துல தனியா பாட்டு வேணும்’னு  அடம்பிடிச்சாங்க. அவர் நல்லாத் தமிழ் பேசுவார். குரலும் நல்லா இருக்கும். அதனால, அவரோட சொந்தக் குரல்லயே டப்பிங் பேசச் சொன்னேன்.


http://www.vikatan.com/av/2012/06/mgqwyz/images/p14b.jpg



ஆனா, அதுக்கு பத்து நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் ஆகும்னு தவிர்த்தார். இத்த னைக்கும் என் படங்களில் ஹீரோக்களுக்குச் சரிசமமான ஸ்கோப் ஹீரோயின்களுக்கும் இருக்கும். அதான் சொல்றேன்... இங்கே ஹீரோக்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு சில நடிகைகளுக்குச் சுத்தமா இல்லை. இதோ இப்போ 'துப்பாக்கி’யில் நடிச்ச காஜலுக்கு கற்பூரப் புத்தி. நான் நினைச்சதுக்கும் மேல பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திட்டாங்க.''




''அது என்ன... 'மாற்றான்’ தொடர்பான உங்க ட்விட்டர் கமென்ட்ல 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு’னு சொல்லி இருந்தீங்க. கே.வி.ஆனந்த், சூர்யா... யார் மேல கோபம்?''



''நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே, ஒளிப்பதிவில் கே.வி.ஆனந்த் சார் ஜாம்பவான். ஒரு சீனியரா அவர் மேல் எனக்கு எப்பவும் மதிப்பு, மரியாதை உண்டு. சூர்யா என் மேல அன்பும் அக்கறையும்கொண்ட நண்பர். அவங்க ரெண்டு பேரையும் காயப்படுத்துறது என் நோக்கம் இல்லை. போன ரெண்டு மாசமாவே யாரோ ஒருத்தர், வேணும்னே என்னைப் பத்தி தப்புத் தப்பா ட்விட்டர்ல கமென்ட் பண்ணிட்டு இருந்தார். அவருக்கு நான் சொன்ன பதில்தான், 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு.’ மத்தபடி அதுல வேற எதுவும் இல்லை!''

 நன்றி - விகடன்



http://www.glamourfm.com/wp-content/uploads/2011/03/Kajal-Agarwal-Hot-Photoshoot-in-Red-Dress-6.jpg

ஆரோகணம்

ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்

 'ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்
சென்னை,அக்.20(டி.என்.எஸ்) லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி அக்டோபர் 26 இல் உலகமுழுவதும் வெளிவரத்தயாராக இருக்கும் 'ஆரோகணம்' படம் பார்த்தவர்களை எல்லாம் பரவசப்டுத்தியுள்ளது.ஆரோகணம் பார்த்து மிகவும் மகிழ்ந்த- நெகிழ்ந்தவர்களில் ஒருவர் நூறுபடங்களை இயக்கியவரும், தாதா சாகேப் விருது வாங்கியவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். படம் பார்த்து விட்டு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது மனம்திறந்த வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"கே. பாலசந்தர்,

சென்னை.அன்புள்ள லட்சுமி

மறைந்த டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு, தமிழ் சினிமா பல பெண் திரைப்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாத் தொழில் துறையில் அவர்கள் யாருமே ஊக்குவிக்கப்படவில்லை என்பதும், அதனால் அவர்களில் எவருமே இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதும் உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் தகுதி பெற்ற, சினிமாவுக்குப் போதுமான அளவு தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கின்ற அபர்ணா, சுஹாஸினி, ரேவதி போன்ற பல பிரபலங்களும், வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பல சாதனைகள் புரியக்கூடிய ‘பீப்ளி லைவ்’ படப் புகழ் இயக்குநர் அனுஷா ரிஸ்வி போன்ற இயக்குநர்களும் இருந்தாலும், இந்திய சினிமாவில் நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவு ஊக்குவிப்பு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பெண் இயக்குநர்களிடமிருந்து நமக்கு சில அருமையான பங்களிப்புகளும் கிடைத்துள்ளன. சிறப்புமிக்க அந்த வரிசையில் சமீபத்திய வரவு, ‘ஆரோகணம்’ என்ற உங்களின் முதல் படைப்புடன் நீங்கள்!

உங்களைப் பார்த்தபோது, உங்களது துணிச்சலை நிரூபிக்க ஏன் திரைப்பட இயக்கம் என்னும் இவ்வளவு கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்  என நான் முதலில் வியந்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பின்புதான், உங்களை உந்தித் தள்ளியது நல்ல சினிமா மீதான உங்களது காதலும் பெருவிருப்பமும் தான் என்று முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் முடிந்தது.

‘ஆரோகணம்’ திரைப்படத்தில், அந்த விவரித்தலில் ஓர் ஆர்வமும் உற்சாகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களது கதாபாத்திரங்கள் பெண்மைக்குரிய நுட்பமான அறிவோடு இருப்பது, நிஜமாகவும் நம்பக்கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் அவலநிலையில் இருந்தாலும் உறுதியானவர்கள்..

விவேகமற்றவர்களாக இருந்தாலும் பாராட்டுக்குரியவர்கள்! உங்கள் செலுலாய்ட் கதைப்பரப்பில் உலவும் கதாபாத்திரங்கள் எல்லாம் அதற்குத் தொடர்பில்லாதது போல் தெரிந்தாலும், எப்படியோ கதைக்கான முக்கியமான பகுதியாகிவிடுகின்றனர். நன்கு பரிச்சயமான மற்றும் அவ்வளவாக பரிச்சயமில்லாதமுகங்கள் அனைவருமே அவர்களின் தற்செயலான மற்றும் தீவிரமான பாத்திரப்படைப்புகளால் மனதில் ஆழப்பதிகின்றனர்.


 கருவை எடுத்துரைப்பதில் கொண்டிருக்கும் கட்டுப்பாடு அதேசமயம் கதையின் வேகம்.. இரண்டுமே உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியவை. வசனங்களும் அவற்றைப் பேசியிருக்கும் விதமும் மிகச் சரியாக நிறைவாக அமைந்துள்ளன.

இப் படத்தில், வைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் ஆகட்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்‘லொகேஷன்’கள் ஆகட்டும்.. எடுக்கப்பட்டிருக்கும் ‘ஷாட்’கள் ஆகட்டும்.. எல்லாவற்றிலுமே தொழில்நுட்ப நுண்ணறிவு பெருமளவில் தெரிகிறது. ‘க்ளோஸ்&அப்’ காட்சிகளில், அவை வைக்கப்பட்டிருக்கும் நிலை (பொஸிஷன்) மற்றும் காலஅளவு (டியூரேஷன்) ஆகியவை மிகச் சரியாக இருப்பதால் உண்மையில் மனதில் ஆழப்பதிவதாய் இருக்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் உங்களது தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவுக்கும் உங்களின் கூரிய சினிமாக் கற்பனைக்குமே!

படத்தின் இசையும் எந்தவித உறுத்தலும் இன்றி, நம் மனதைக் கவர்கிறது. இரண்டு பாடல்களும் அவற்றைப் படமாக்கியிருக்கும் பின்புலமும் மிக அழகான கலவையாக வெற்றிபெறுகின்றன. இதனாலேயே, மிகத் தீவிரமான அதேசமயம் சுவாரஸ்யமான இந்தத் திரைப்படத்தின் ‘மியூஸிகல் வேல்யூ’ கூடியிருக்கிறது.

ஒரு திரைப்படம் என்பது, அதைப் படைப்பவருடைய ஆத்மாவின் பிரதிபலிப்பு. அது, அந்தப் படைப்பாளியின் மனதின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.. அவருடைய உள்நோக்கங்களைப் பகிரங்கப்படுத்துகிறது.. அவருடைய நாட்டத்தை வரையறுக்கிறது.. அவருடைய பெருவிருப்பத்தை

விவரிக்கிறது.. இந்த அளவுகோல்களால், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த எதிர்காலமுள்ள திரைப்படப் படைப்பாளிகளில் ஒருவராக நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள்.

துரிதமாக விரைந்துகொண்டிருக்கும் என் படைப்பாற்றலின் இந்த அந்திப்பொழுதில், இடையில் சிறிது நிறுத்தி என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என் காலத்தை நிறுத்தி, அப்படியே உறைய வைத்துவிட்டீர்கள்.. தொடர்ந்த அந்த 2 மணி நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம், முழுமை, உறுதியான நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள், தமிழ் சினிமாவை இன்னும் சிறிதுஉயரத்தில் நிற்கச் செய்திருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் கர்வத்தோடு நடைபோட வைத்திருக்கிறீர்கள்..

இவை இரண்டையும் பெண்மைக்குரிய நேர்த்தியோடு செய்திருக்கிறீர்கள்! மேலும், இந்தப் படத்தை நம்பமுடியாத அளவில் மிகக் குறைந்த செலவில் எடுத்திருப்பதுதான் இதில் மிகவும் திகைப்பூட்டும் விஷயம்!

அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! மற்ற படைப்பாளிகள் உங்கள் மதிநுட்பத்திலிருந்து தங்களுக்கான குறிப்பை எடுத்துக் கொள்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ‘ஆரோகணம்’ படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நீங்கள் இயக்கத் தீர்மானிக்கவிருக்கும் 99 படங்களுக்கும் சேர்த்து வெற்றியே கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.


உங்கள் 100&வது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், அந்த விழா நிகழும் வேளையில்.. நிச்சயம் அது நடக்கும்.. அப்போது, நான் இந்த மாலை நேரத்தையும் இந்த இடத்தையும், ஒரு படைப்பாளியாகவோ ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவனாகவோ இல்லாமல், நல்ல சினிமாவின் காதலனாக நான் பகிர்ந்துகொண்டதை நீங்கள்

நினைவுகூர்வீர்கள் என்று நம்புகிறேன்..!

‘ஆரோகணத்’தின் அத்தனை எழுச்சியூட்டும் குறிப்புகளுக்கும் நன்றி லக்ஷ்மி.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்!

விஜியைப் பற்றி ஒரு வார்த்தை… சரிதாவை வைத்து நான் வரலாறு படைத்திருக்கிறேன்.. உண்மையிலேயே உயர்ந்த காவியங்கள் படைத்துள்ளேன். அந்தத் திறமை உண்மையிலேயே மரபு வழி வந்தது என்று விஜி நிரூபித்திருக்கிறார். மேலும், அவரும் என்னுடைய கண்டுபிடிப்பு என்பதை இந்தவேளையில் சொல்லிக்கொள்வதில் நான் அளவுகடந்த பெருமிதம் கொள்கிறேன். அவருடைய ஆற்றலை மீண்டும் கண்டெடுத்திருப்பதற்கு உங்களுக்கு மிகுந்த பாரட்டுக்கள்.

குறைபாடற்ற விதத்தில் நடிகர்களுக்குப் பாத்திரங்களைப் பகிர்ந்தளித்திருக்கும் உங்கள் பாங்குக்கு,

வெல்டன் லக்ஷ்மி!

ஜெய்ஹிந்த்!

கே.பாலசந்தர். (டி.என்.எஸ்)
Oct 20, 2012 







https://lh6.googleusercontent.com/-7AdflGlYRdk/UIFam8iFgEI/AAAAAAAAjyk/befPUkQ94LQ/6%2520SHEETa.jpg 

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.



கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி ஆகியோருடன், புதியவர்களான விரேஷ்,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.



'ஆரோகணம்' படத்தை ஏவிஏ புரொடக்ஷன் சார்பாக திரு. அனுப் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்துள்ளது.


நன்றி - சென்னை ஆன் லைன், மாலை மலர் , சினிமா 123

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - கே.பாக்யராஜ்

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.


 ''தாங்கள் தி.மு.க-வில் சேர்ந்து தேர்தல் காலங்களில் முழு ஈடுபாட்டோடு பிரசாரம் செய்தீர்கள். ஆனால், கட்சியில் தங்களுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. அதனால்தான், கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவை இல்லை என்று ஒதுங்கிவிட்டீர்களா?''  



''தப்பு செஞ்சாங்களோ இல்லையோ... ஆனா, பதவியில் இருக்கிறதாலேயே நாட்டுல நிறையப் பேர் குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. நல்லவேளை... நான் அந்த வகையில் பேர் கெட்டுப் போக வைக்கிற பதவிக்கு ஆசைப்பட்டு எந்த விஷயத்தையும் செய்யலைனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். திருப்தியா இருக்கேன்!''



எம்.ராஜன், சென்னை-4.


 ''தமிழிலும் பிற மொழிகளிலும் நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் யார் யார்?'' 



''பி.ஆர்.பந்துலு சார், பீம்சிங் சார், ஸ்ரீதர் சார், கே.பாலசந்தர் சார், ஜி.பாலசுப்ரமணியம் சார், ஜாவர் சீதாராமன் சார்... இவங்கள்லாம் தமிழ்ல. இந்தியில் சலீம் ஜாவத், பாசு சட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜி, 'ஷோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பி. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. சிவாஜி சாரை வெச்சு 'முரடன் முத்து’ சக்சஸ் கொடுத்தாரு பி.ஆர்.பந்துலு சார். அவரே எம்.ஜி.ஆர். அவர்களை வெச்சு 'ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஹிட் கொடுத்தாரு. இப்படி ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்ல ஆரம்பிச்சா, தனிப் புத்தகமாத் தான் போடணும்!''




ஆ.கோவிந்தன், செங்கல்பட்டு.


 ''அதென்ன, உங்களுக்கு ஜோடியா நடித்திருக்கும் பெரும்பாலான ஹீரோயின் கள் மூக்குக் கண்ணாடி அணிகிறார் கள்... என்ன சென்டிமென்ட்?''



''சென்டிமென்ட்லாம் எதுவும் கிடையாது. நான் கண்ணாடி போடுறதால ஜோடியும் கண்ணாடி போட்டாலாவது ஏதாவது கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகுமேனு ஒரு நப்பாசைதான்!''



என்.நாராயணன், செங்கம்.



 ''உண்மையைச் சொல்லுங்க... உங்க டான்ஸைப் பார்த்தா உங்களுக்கே சிரிப்பு வருமா... வராதா?''



''சில விஷயங்களை எப்போ, எத்தனை தடவை பார்த்தாலும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும். உதாரணத்துக்கு...



1. அழகான குழந்தை முகம்
2. ஆகாய விமானம்
3. யானை
4. என் டான்ஸ்.
இப்போ உங்களுக்கும் சிரிப்பு வருதுல்ல!''




இரா.தோணி, தூத்துக்குடி.



''என்னதான் இருந்தாலும் சில்க் ஸ்மிதாவிடம் இருந்த கிளுகிளுப்பு, கிறக்கம் இப்போதைய ஹீரோயின்களிடம் இல்லைதானே. தலைவா... உண்மை சொல்லுங்க?''



''அது வேற ஒண்ணும் இல்ல... சில்க் ஸ்மிதா கண்ணுல ஒரு மாதிரி மயக்கமும் கிறக்கமும் உண்டாக்குற வசீகரம் ஒளிஞ்சிருக்கும். அந்தப் பொண்ணு கோபமா பார்த்தாக்கூட சுண்டி இழுக்குற மாதிரி இருக்கும். சில்க்கோட ரெண்டு கண்களை மட்டும் க்ளோஸப்ல பார்த்தாலே, ஜிலீர்னு இருக்கும். அது அவங்களுக்குக் கிடைச்ச வரம். என்ன... சினிமாலயும் ரொம்ப நாள் இல்லாம, சொந்த வாழ்க்கை யிலயும் நிம்மதியா இல்லாம இறந்துட்டாங்க. அவங்க ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்!''



கி.ராஜேஷ், தஞ்சாவூர்.



 ''அடிக்கடி 'சமாசாரம் சமாசாரம்’னு சொல்லிட்டே இருக்கீங்களே... என்னங்க அது சமாசாரம்?''



''அப்போ நான் ஸ்கூல் பையன். பள்ளி ஆண்டு விழா வுக்கு ரவீந்திரநாத் தாகூரின் 'தி ஹோம் கம்மிங்’ சிறுகதையை நாடகமாப் போடலாம்னு முடிவுபண்ணி, ரிகர்சல் போய்ட்டு இருக்கு. நான் நடிக்கிறதோட அப்பப்ப மத்தவங்க நடிக்கிறதையும் கவனிச்சு, தோணுற விஷயங்களைச் சொல்லிட்டு இருந்தேன். வாத்தியார் பாராட்டி தட்டிக் கொடுத்துட்டு இருந்தாரு. அப்போ ஒரு நாள், லேடி டீச்சர்ஸும் ரிகர்சல் பார்க்க வந்திருந்தாங்க. அப்ப ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீனுக்குப் போகலாம்னு வாத்தியார் சொல்ல... நான், 'இல்ல... இதே சீனை இன்னொரு தடவை நடிக்கவைங்க’னு சொன்னேன்.


அந்த சீனை மறுபடி நடிக்கவெச்சுப் பார்த்துட்டு, 'எல்லா ரும் சரியாத்தான் டயலாக் பேசுறாங்க’னு வாத்தியார் சொல்ல, நான் ஒரு பெரிய கிளாஸ் பையனைக் காட்டி, 'அவர் நடிக்கும்போது கவனிங்க’னு சொன்னேன். இன்னொரு தடவையும் ரிகர்சல் பார்த்துட்டு, 'அவர் டயலாக் எல்லாம் சரியாத்தானே பேசினார்’னு வாத்தியார் சொல்ல, 'இல்லை... அந்தப் பையன் சரியாப் பண்ணலை’னு ஒருமாதிரி மென்னு முழுங்கி சொல்றேன். 'என்ன சரிஇல்லே?’னு வாத்தியார் கேட்க, நான் தயங்கி நிக்க, 'டேய்... என்ன தப்புனு சொன்னாத்தானே தெரியும்’னு வாத்தியார் என் வாயைப் புடுங்க... லேடீஸ் டீச்சர்ஸைப் பார்த்துட்டே நான் முழுங்கி முழுங்கிப் பேசுறேன். 'சார்... அந்தப் பையன் இடது பக்கம் சட்டை பாக்கெட் மேல ஸ்கூல் பேட்ஜ் குத்தியிருக்கார். நடிக்கும்போது அவரை யும் அறியாம இடது கை அந்த பேட்ஜைத் திருகிட்டே இருக்கு’னு சொன்னேன்.



 புரியாமப் பார்த்த வாத்தியார், 'ஏண்டா... இது ஒரு தப்பா டா?’னு கோபப்பட்டார். 'இல்ல சார்... மூணு தடவை நடிக்கிறப்பவும் அவர் விடாம பேட்ஜை அப்படித் திருகிட்டே இருந்தார். இப்ப ரிகர்சல்ல யூனிஃபார்ம்ல இருக்கார். ஆனா, மேடையில நடிக்கும்போது, எல்லாருக்கும் அந்தந்த கேரக்டர் மேக்கப்தான் போட்டிருப்பாங்க. அப்போ இவர் பேட்ஜைத் திருகிற மாதிரி கை போனா ரொம்பத் தப்பா இருக்கும் சார். ஏன்னா, இவர் நாடகத்துல லேடீஸ் வேஷம் போடுறார். இதே பழக்கதோஷத்துல அப்போ கை வெச்சா தப்...’னு நான் முடிக்கிறதுக்குள்ள லேடீஸ் டீச்சர்ஸ், 'ஐயோ’னு சவுண்டு கொடுத்துட்டே வெட்கப்பட்டு எந்திரிச்சு வெளியே போயிட்டாங்க. வாத்தியாரும் சிரிச்சுட்டு, 'உனக்கு மட்டும் எப்படிறா அந்த சமாசாரத்துல கண்ணுபோச்சு’னு கேட்டாரு. 'பொம்பள வேஷம்கிறதால உத்துக் கவனிச்சேன்’னு சொன்னேன். ஆக, எட்டாவது படிக்கும்போதே அந்த சமாசாரத்துல கவனம் போனது, இன்னும் அந்த சமாசாரமாவே தொடருது!''



சா.தருமன், காஞ்சிபுரம்.



 ''நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?''



'' 'ஒரு கை ஓசை’ படத்துல வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியா நடிச்சது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அப்போ சில முன்னணி நடிகர்கள் இது மாதிரி கேரக்டர்ல நடிக்க முயற்சி பண்ணி, அது பெரிசா வெற்றியடையல. அதனால் நான் அப்படி நடிச்சப்போ, 'எதுக்கு இந்த வேண்டாத வேலை?’னுதான் பலரும் சொன்னாங்க. ஆனா, எனக்குக் கதை மேல நம்பிக்கை இருந்துச்சு. அது மட்டும் இல்லாம அந்தப் படத்துல ஹீரோ பேச முயற்சி செஞ்சு நிறைய விநோதமான சத்தங்களை வெளிப்படுத்துவான்.



அதை எல்லாம் மக்கள் ரசிப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஏன்னா, எங்க ஊர்ல தேவராஜ்னு ஒருத்தர் அப்படித்தான் தான் சொல்ல வேண்டிய சங்கதி யைச் சொல்லுவாரு. அது புரியுதோ இல்லையோ, கேட்க நல்லா இருக்கும். நான் எதிர்பார்த்த மாதிரியே 'ஒரு கை ஓசை’ வெற்றி அடைஞ்சது. அடுத்ததா, பாலக்காட்டு மாதவன் கேரக்டர் பிடிக்கும். ஏன்னா, நிஜமாவே அப்படி சூதுவாது இல்லாம ஒருத்தன் இருந்தா, எல்லாருக்கும் அவனைப் பிடிச்சுப்போகும்ல. அந்த கேரக்டர் தான் என்னை எல்லார்கிட்டயும் போய்ச் சேர்த்தது!''



சொல்வேந்தன், திருச்சி-4.



 ''சுயநலம் யாருக்கு அதிகம்... ஆணுக்கா... பெண்ணுக்கா?'' 



''இதுல என்ன சந்தேகம்... பெண்களுக்குத்தான்! 'தன்’ புருஷன், 'தன்’ புள்ளைங்க நல்லா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துச் செய்யிற பாசமான சுயநலத்துல, பெண்கள் கிட்டகூட ஆண்களால நெருங்க முடியாது!''



மா.சின்னய்யா, ராமேஸ்வரம்.



'' 'அந்த 7 நாட்கள்’ படத்தின் க்ளைமாக்ஸில், அம்பிகா உங்களோட சேர்ந்து வாழ ராஜேஷ் அனுமதிக்கிற மாதிரி சீன் வெச்சிருந்தா, அதே வெற்றி சாத்தியமா?''




''இல்லைங்க... அந்தப் படத்துல ஸ்பெஷலே அந்த க்ளைமாக்ஸ்தான். 'சங்கராபரணம்’ இயக்குநர் கே.விஸ்வநாத் சார் 'சப்தபதி’னு ஒரு படம் பண்ணியிருந்தாரு. அதுவும் கிட்டத்தட்ட 'அந்த 7 நாட்கள்’ கதைதான். ஒரு ப்ரிவியூ ஷோல என்னை அவர் பார்த்தப்ப, 'நானும் நீங்களும் ஒரே மாதிரி ஒரு படம் பண்ணோம். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் வித்தியாசம். அந்த க்ளைமாக்ஸ்னால மட்டும்தான் என் படம் ஃபெயிலியர் ஆச்சு. யுவர் க்ளைமாக்ஸ் இஸ் வெரி பவர்ஃபுல்’னு சொன்னாரு. நம்ம ஊர் எவ்வளவு மாடர்ன் ஆனாலும் நாகரிகம் வளர்ந்தாலும் சில சென்ட்டிமென்ட்கள் எப்பவும் எடுபடும்!''




ச.வேலு, சென்னை-17.



 ''இப்போதைய ஹீரோயின்களில் யாருடன் நடிக்க விரும்புவீர்கள்?''




''ஒருத்தர் ரெண்டு பேர் பேரை மட்டும் சொன்னா ஏதாவது கசமுசா ஆயிடும். அதனால எல்லார்கூடவும் நடிக்க ஆசைனு சொல்லி எஸ்கேப் ஆயிடுறேன்!''



நா.பழனி, வந்தவாசி.



''உங்கள் படங்களில் முதலில் ஹீரோவைக் கோமாளியாகக் காட்டி சிரிக்க வைத்துவிட்டு, பிறகு அவரைப் புத்திசாலியாகச் சித்திரிப்பது ஏன்?'



'
'' 'முந்தானை முடிச்சு’ வாத்தியார், 'இது நம்ம ஆளு’ கோபால் எல்லாம் பார்த்தா உங்களுக்குக் கோமாளியாவா தெரியுது! வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் ஏதாவது சில விஷயங்கள்ல ஏமாந்து போறவங்கதான். ஒரு சில விஷயங்கள்ல சபாஷ் வாங்குறவங்கதான்!''




- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்



 ''தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?''



 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?''



''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?''

 பாகம் 1 படிக்க கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2- தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

பாகம் 4 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள்

A