Friday, August 24, 2012

18 வயசு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_7JTCGBocASzWKRcn03EEgPOm8uiJzKlRkPh8auuOk_RWMg6hzjcCLEV05rp79NR2wMko48ZySY5pP0I5xHdGJ8AvQ8-VaJdgm6Q_fpZZE5m7BvNJzGiTtJ5djiE0Fzo7cLVb89I8Yyc/s1600/18_Vayasu_Movie_wallpapers_posters_01.jpg 
பிறவிக்கலைஞன் கமல் -ன் குணா படக்கதையை கொஞ்சம் ஆல்டர் பண்ணி  பாசிடிவ் அப்ரோச் டைரக்டர் விக்ரமன் கிட்டே கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதை ஆண்ட்ரியா, சோனியா அகர்வால் ஜோடி சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவனை டைரக்ட் பண்ண சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் 18 வயசு.

 ஹீரோ சின்ன வயசுல இருந்தே அப்பா செல்லம், அவங்கம்மா கேரக்டர் சரி இலை, எப்போ பாரு அப்பா கூட சண்டை.. வேற ஒரு ஆள் கூட தொடர்பு. மேட்டர் தெரிஞ்சு  அப்பா தூக்கு மாட்டி தற்கொலை செஞ்சுக்கறார். அம்மா எப்பவும் போல கள்ளக்காதலனுடன் ஜாலியா இருக்கார்.. 


 ஹீரோ இதனால மன நலம் பாதிக்கப்படறார்.. இவருக்கு வந்திருக்கும் வியாதிப்படி அருகில் ஏதாவது ஒரு மிருகத்தை பார்த்தா அந்த மிருகத்தின் குணநலன்கள் இவருக்கு வந்துடும்.. உதாரணமா நாயை பார்த்தா இவரும் வள் வள்னு குலைப்பார்..


 ஹீரோவை நார்மல் ஆக்க அவர் ஃபிரண்ட்  தன் லவ்வரோட தோழியை லவ் பண்ண சொல்றார்.. சொல்லி வருவதில்லை காதல் என்ற தியரிப்படி அது ஒர்க் அவுட் ஆகலை.. ஆனா ஹீரோயின் எதேச்சையா ஹீரோவை சந்திக்க காதல் ஸ்டார்ட் ஆகுது.. 

குணா கமல் போல் நம்ம ஹீரோ காட்டுக்கு போலாம், அங்கே தான் ஜாலின்னு கூப்பிடறார்.. அந்த பொண்ணும் ஓக்கே சொல்லுது..  இப்போ என்ன சிக்கல்னா ஹீரோவொட அம்மாவோட கள்ளக்காதலன் இத்தனை நாளா  வெளில இருந்தே அப்பப்ப ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டவன் இனி பர்மனெண்ட்டா வீட்லயே தங்கி சாப்பிடலாம்னு வர்றான். 


 ஹீரோ செம காண்ட் ஆகி அம்மாவையே கொலை பண்ணிடறார்.. அப்புறம் 2  ரீல் கழிச்சு அந்த கள்ளக்காதலனை.டமால் இது தெரிஞ்ச ஹீரோயின் பேக் அடிக்கறா,..போலீஸ் ஹீரோவை தேடுது. ஹீரோ  போலீஸ் ஸ்டேஷன் பூந்து ஹீரோயினை கடத்திட்டு போறாரு, போலீஸ் துரத்துது.. என்ன ஆகுதுங்கறதுங்கறதுதான் கதை..


http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/raadhu/kollywood/movies/2011/18%20vayasu/18%20vayasu-e256d6f0f74fbed02e976db378541bdc.jpg


படத்தோட முதல் ஹீரோ ஹீரோவுக்கு வந்திருக்கும் புது மன நோய் தான்.. தமிழுக்கு புதுசு.. மாடு, நாய், பாம்பு போல் எல்லாம் உள்வாங்கி உரு மாறி  ஜிம் கேரியின் சீரியஸ் கேரக்டரை ஹீரோ ஜானி செய்கையில் ரசிக்க முடிகிறது..


ஜானி உடல்  மொழியில் பிரமாதப்படுத்துகிறார்.. ஆனால் முக பாவனைகளில் ஜஸ்ட் பாஸ் தான்.. எல்லா படங்களுக்கும் இது கை கொடுக்கும் என்று சொல்லி விட முடியாது, கவனம்..


 ஹீரோயின்  புதுமுகம் காயத்ரி.. ஐஸ்வர்யா ராயின் இடை, கன்னம், நந்திதாதாஸின் புன்னகை, கண்கள் மிக்ஸ் செய்த அழகிய கலவையாய் அவரைப்பார்க்க  குளிர்ச்சியாய்த்தான் இருக்கு. டூயட் காட்சிகளீல் லேசா  சூடு கிளப்பறார்.. 70 மார்க் ஃபிகர், தேறிடும். ஆனா காம்ப்ளான் ரெகுலரா குடிக்கனும்.. 


ஹீரோவுக்கு ஃபிரண்ட்டா வர்றவர் அச்சு  அசல் நம்ம ராஜன் லீக்ஸ் மாதிரி இருக்கார் 6 சீனே வந்தாலும் நல்ல நடிப்பு. எதிர் காலம் இருக்கு.. அவரோட  லவ்வரா வர்றவரும், தோழியா வரும் அட்டு ஃபிகரும் நல்ல நடிப்பு.. 


ஹீரோவின் அம்மா கேரக்டர் யுவராணி , சரி கட்டை.. மனோவியல் மருத்துவரா வரும்  ரோஹினி கச்சிதமான நடிப்பு.

 இன்ஸ்பெக்டராக  வருபவர் அசத்தலான நடிப்பு.. தோரனை , மீசை எல்லாம் கன கச்சிதம்..  ஹீரோவின் மனநலம் குன்றிய நண்பராக வருபவர் நடிப்பு புதுசு.. சபாஷ்.. 


ஒளிப்பதிவு, கேமரா , இசை என தொழில் நுட்பங்களில் எல்லாம் எபவ் ஆவரேஜ்,.,.

 http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/raadhu/kollywood/movies/2011/18%20vayasu/18%20vayasu-aff17ab8c5bea4fbbb32cb7cb8807e7f.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எந்த உலகில் நீ இருந்தாய்? 2. எனக்கென நீயே பிறந்தாய், 3 போடி போடி பெண்ணே 4 திருநங்கை பாட்டு என 4 பாடல்களுமே நல்லாருக்கு.. படமாக்கப்பட்ட விதமும்  மெத்த சரி



2. போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர், மன நிலை பாதிக்கப்பட்ட தோழன் கேரக்டர் இருவருக்குமான  நடிகர் தேர்வு சூப்பர். கலக்கிட்டாங்க



3. ஹீரோ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலங்கு அல்லது பறவையின் குணநலன் கள் பெறுவது  நல்ல கற்பனை. அதை காட்சிப்படுத்தியதும் ஓக்கே 




 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன் மகன் மேல் மனைவிக்கு பாசம் இல்லை என்பதை உணர்ந்தவர் மகனை அநாதையாக விட்டு தற்கொலை செய்ய முயல்வாரா?


2. குடும்பப்பெண் பட்டப்பகலில் தன் வீட்டின் வாசல் முன் கள்ளக்காதலனுடன் கை கோர்த்து கதை பேசிட்டு இருப்பாரா? அவர் என்ன மாமா பையனா? முறைப்பையனா? கள்ளக்காதல்னா ஒரு பதட்டம் வேணாம், ? ராஸ்கல்ஸ்.. தன் புருஷன், மகன் வீடு திரும்பும் நேரம்னு தெரிஞ்சும் அவர்  அசால்ட்டா இருப்பது நம்ப முடியலை.. 


3. கள்ளக்காதலன் வெச்சிருக்கறவங்க பொதுவா உஷரா இருப்பாங்க. தன் ஃபோன் 5 மணி நேரம் பேட்டரி டவுன் என்பதை அவள் ஏன்  தன் கள்ளக்காதலனுக்கு லேண்ட் லைன் ஃபோன்ல இருந்து தகவல் சொல்லலை? சொல்லி இருந்தா அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி மாட்ட வெச்சிருக்க மாட்டானே?


4. போலீஸ் திடீர்னு ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு போற ஏரியாவை எபப்டி கண்டு பிடிக்கறாங்க?


5. மனநல மருத்துவரான ரோகினி எப்படி கரெக்டா அந்த இடத்துக்கு க்ளைமாக்ஸ்ல வந்து தடுக்க முடியுது?


6. க்ளைமாக்ஸ்ல 4 சப் இன்ஸ்பெக்டர், ஒரு இன்ஸ்பெக்டர் எல்லார் கைலயும் கன் இருக்கு, அது போக 9 கான்ஸ்டபிள் வேற. ஏன் யாருமே ஹீரோவை சுடலை? ஹீரோவை நேர்ல பார்த்தா சுட்டுட்டுத்தான் மறுவேலைன்னு கர்ஜிக்கும் இன்ஸ்பெக்டர் ஏன் அவரை ஷூட் பண்ணலை? தண்டமா ஃபைட் போட்டுட்டு இருக்காங்க?


7.  விலங்குகளின் குணநலன் உள்ள மன நோயாளியா இருந்தாலும் உடல் பலம் சாதாரண மனிதனின் பலம் தான் இருக்கும்னு ஈரோடு டாக்டர்  சொல்றார். ஆனா ஹீரோ ஆக்ரோஷமா 20 பேரை க்ளைமாக்ஸ்ல அதகளம் பண்றாரே> அதுவும் போலீஸ்ல ட்ரெயினிங்க் எடுத்தவங்களை. அது எப்படி?


8. மன நலம் பாதிக்கப்பட்ட ஆள் கிட்டே லோடட் கன்னை இன்ஸ்பெக்டர் எந்த நம்பிக்கைல தர்றார்? அவன் அவரையே திருப்பி சுட்டுட்டா என்ன பண்ண?னு யோசிக்க மாட்டாரா? ( அவன் அப்படித்தான் சுடறான் )

http://masscinema.in/wp-content/gallery/18-vayasu-tamil-movie/18-vayasu-hot-movie-stills.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1. அம்மா எவ்ளவ் சண்டை போட்டாலும் அப்பாவோட பொறுமை, புன்னகை,அமைதி எல்லாம் பார்த்து எனக்கும் அப்பா குணம் வந்துடுச்சு.



2. பொண்ணுங்க பக்கத்துல இருந்தா சந்தோஷம் தான் வரும், அழுகை எப்படி வரும் ?



3. அவ வந்தாளா? முத்தம் குடுத்து உன்னையும் ஏதாவது பண்ணச்சொன்னாளா? 

 ம், 150 ரூபாவுக்கு டாப் அப் பண்ணி விடசொன்னா. 




4. நீ தானே வெயிட் பண்ணச்சொன்னே?



அதுக்காக நேத்து மத்தியானத்துல இருந்து இன்னைக்கு காலைல வரை தூங்காம, சாப்பிடமயா?



5. டேய், நீ எதுக்கு அவ வீட்டுக்கு போனே? 


 சார், இப்போ இதான் சார் ஃபேஷன். லிவிங்க் டுகெதர், மேரேஜ் ஆகாம ஒண்ணா இருப்பது



6. அழுகை ல பல வகை இருக்கு.லவ் பண்றவங்க மட்டும்தான் உள்ளுக்குள்ளே ஊமை அழுகை அழ முடியும#்



7. எந்த புருஷனும் தன் பொண்டாட்டி பேரை நெஞ்சுல சூடு போட்டுக்க மாட்டான்.காதலன் மட்டும்தான் காதலி பேரை சூடு போட்டுக்குவான் 


8. சார், நான் இன்னும் சாகலை?


இனிமேத்தான் சாகப்போறே..


http://photogallery.indiatimes.com/movies/regional-movies/18-vayasu/photo/15052342/A-still-from-the-Tamil-movie-18-Vayasu-.jpg




எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 



சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு. ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்


http://moviegalleri.net/wp-content/gallery/18-vayasu-actress-gayathri/18_vayasu_actress_gayathri_0199.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 24. 8..2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.jaffnacnn.com/upload-files/aug/18-Vayasu-Posters-1.jpg 

18 வயசு  - புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர் க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடை யாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வ ம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது.


18 வயசு படம் ஒரு சைக்‌கோ த்ரில்லர் நிறைந்த கதை. படம் பார்ப் பவர்களை அங்கும், இங்கும் நகரவிடாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை த்ரி ல்லிங்காக உருவாக்கி இருக்கிறாராம் டைரக் டர். அதோடு ஒரு மெல்லிய காதல் கதையும் உண்டாம். குழந்தை களை ஒழுங்கா வழி நடத்தணும், சமூ கத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த படத்தில் உண்டு. 


படத்தின் ஹீரோ ஜானி தோன்றும் கா ட்சிகளுக்கு எல்லாம் நிச்சயம் கைத் தட்டல் உண்டு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார். படத்தில் மிருகத்தின் அசைவுகளையும், மனிதர்களின் இயல்புகளையும் படத்தில் வைத் துள்ளனர். 


மிருகத்தின் உணர்வு கள் அந்த ஹீரோவுக்குள் வந்து அடித்து நொறுக்கும் காட்சிகளை அற்புதமாக செய்திருக்கிறார் ஜானி. தேனியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸ் 8 நாட்களாக எடுக்க ப்பட்ட து. அதில் உயிர் கொடுத்து சண்டை காட்சியில் மிரட்டி இருக் கிறார் ஜானி. மாட்டின் உணர்வு மனிதனுக்குள் வந்தால் எப்படி அடித்து நொறுக்குமோ அதைப்போ ல இரண்டு முழங்கால் மற்றும் தலைமூலம் சண்டை போட்டுள்ளா ர் ஜானி. 


இதனால் தலை நரம்பில் ஜானிக்கு லேசான பாதிப்பு ஏற்ப ட்டதாம். இருந்தும் அந்த வலியையும் பொறுத்து கொண்டு சூட்டி ங்கில் நடித்தாராம். சூட்டிங் முடிந்த பின்னரே மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார்.ஈரொடு அபிராமி, ஆனூரில் ரிலீஸ்-இதன் விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/08/18_24.html



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZrFsborYsZMrf8j-SHju48YbxaV7HMAHQHd-1UEtr1aZNT_8Z8z0Z7829bJShgZXqaO4uZSCGkLWkaTOolXl02pYvBD91cDFKtzCxn-mip3MvVLdvTyFk2tL-3ehXW3EI05LKxLDRIlg/s1600/05Bhumika.jpg

 2.துள்ளி எழுந்தது காதல் - தமிழில் "பத்ரி", "ரோஜாகூட்டம்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை பூமிகா, தெலுங்கில் தயாரித்து சூப்பர் ஹிட்டான படம் "தகிட தகிட". தமிழில் இப்படம் "துள்ளி எழுந்தது காதல்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஹரி நானு இப்படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகனாக ராஜாவும், நாயகியாக ஹரிபிரியாவும் நடிக்க, இவர்களுடன் 40 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். கூடவே முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூமிகாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

உயிருக்கு உயிராய் காதலிக்கும் ஒரு ஜோடி, இன்னொரு காதல் ‌ஜோடிக்கு நேர்ந்த தோல்வியை கண்டு தங்களது பாதையை மாற்றி பயணத்தை திசை மாற்றிக்கொள்கிறது. கடைசியில் அவர்களின் முடிவு என்ன என்பதே கதை. காதல் தோல்வியாலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.

சென்னை, கடற்கரை, ஓ.எம்.ஆர்.சாலை, கோல்கொண்டா கோட்டையில் மட்டுமல்ல இமயமலை வரை போய் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர். சபேஷ் முரளியின் மகன் போபோ சசி இசையமைக்கிறார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை ஃபிலிம் ஸ்கூல் நிறுவனம் சார்பில் அஜிதா வேல்முருகன், ராஜகிருஷ்ணகுமார் தயாரிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqvada6H2rH-Lghlwk9gIGmsnxWrfZjWZNFtBK4VI3ibCTxNllXZQOziiX5uDDe4960M-v2kejjg7Wdkn0afkz660T5XyiVFXj3myxkeGL0kPNef7S62AoF-Nf1G8o0juYqQ56inbd-1No/s1600/peruman_movie_wallpapers_04.jpg


3. பெருமான் -ரூபாய் 21 கோடி இருந்தால் நானும் ரஜினியாவேன் எனும் வசனத்தோடு தொடங்குகிறது பெருமான் திரைப்படம்.
இந்த படத்தின் சப் டைட்டில் தி ரஜினிகாந்த்.


     சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமான் படத்தின் இயக்குனர் ஜெ. ராஜேஷ் கண்ணாவிடம் தனக்கே உரித்தான பாணியில் கேட்டிருக்கிறார். கண்ணா, அதென்ன சப் டைட்டிலில் தி ரஜினிகாந்த் னுட்டு சொல்லியிருக்கீங்களே..என்று.


பெருமான் படத்தின் இயக்குனர் ராஜேஷ்,  ஒரு மூன்று நிமிடங்கள் கொடுங்கள் நான் கதை சொல்லிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஒப்புக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரொம்ப உன்னிப்பாக கதை கேட்டாராம். கேட்டபின் அவருக்கே உண்டான பாணியில் சூப்பர்ப், பென்டாஸ்டிக், எக்செலேன்ட் என்று பாராட்டிய ரஜினிகாந்த், என்னிடம் சொன்னது போலவே படத்தை நீங்கள் எடுத்தால்  படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கூறிப் பாராட்டியதோடு, இயக்குனருக்கு அழகிய சிலை ஒன்றையும் பரிசாக அளித்தாராம்.


பெருமான் என்றால் என்ன அர்த்தம் என்று ரஜினிகாந்த் கேட்க பெருமான் என்றால் எல்லோருக்கும் மேலானவர் என்று அர்த்தம் என்றும் சொன்னாராம் இயக்குனர் ராஜேஷ். இப்படியாக உருவான பெருமான் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் படம் தயாராகிறதாம்.

  
சதா சுற்றித் திரியும் ஐந்து நண்பர்கள் சேர்ந்த இந்த கதை நண்பர்களுக்குள் 10 நாட்களில் நடக்கும் விறுவிறுப்பான கதையே பெருமான் திரைப்படம். இந்த 10 நாட்களில் கதாநாயகி, கதாநாயகன் நண்பர்கள் மூவர் வாழ்வில் 10 நாட்களில் நடக்கும் சுவாரஷ்யம் திரைக்கதையில் நன்றாக வந்திருக்கிறது என்கிறார் இயக்குனர். மேலும் கதாநாயகன், கதாநாயகி இயக்குனர், இசையமைப்பாளர் என்று இந்த படம் முழுக்க முழுக்க புதியவர்களின் கூட்டணி என்று சொல்லலாம்.




    செண்டிமெண்ட், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பங்கள், மனதை மயக்கும் பாடல்கள் என்று எல்லாமே உண்டு. இயக்குன ராஜேஷ் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். இந்த பாடல்களுக்கு 21 வயதேயான விக்ரம் சாரதி இசை அமைத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பான பாடலில் அடக்கமாம். இதற்கென சில அறிய முயற்சிகளைக் கையாணடதாக சொல்லும் இசை அமைப்பாளர் விக்ரம் சாரதி, மேலும் ஒரு பாடலுக்கு பாரம்பரிய இசைக்கருவிகளை வைத்து இசையமைக்க வேண்டும் என்று வயலின், தபேலா, கடம் இவைகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் விக்ரம் சாரதி.




   

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Feb/4a191131-2fdb-4277-8724-cda1387824c1_S_secvpf.gif

4. அணில் -  திரி டாட்ஸ் ஓசன் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக அட்வகேட் ஸ்ரீனிவாசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘அணில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக  அணில் பரத், கதாநாயகியாக அஷ்ரித்பானு ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் வினித் சங்கர், திபேஷ், திக்குபா விஜய், பிரதீபா, தனலட்சுமி, பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.



இப்டத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.எஸ். 

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு மலைக்கிராமத்தில் பிளஸ் டூ முடித்து விட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் அணில் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளவன்.  அவனது நண்பர்கள் சிலருக்கும் வெவ்வேறான ஆசைகள்! அதேஊரில் போலீஸ் மகள் அஷ்ரித் பானு அணில் பரத்தின் நல்ல குணத்தைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறாள். 

இதற்கிடையே தனது நண்பர்களிடையே ஊடுருவிய தீவிரவாத கும்பல் ஒன்று அவர்களை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சிக்கிறது. இப்படி பயணிக்கும் கதையோட்டத்தில் அணி பரத் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டான் என்றும், அதிலிருந்து அவன் எப்படி மீண்டான் என்பதையும் சுவைபட கூறியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர். 

இப்படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 50 நாட்கள் தங்கி இருந்து படப்பிடிப்பை முடித்துள்ளனர். மேலும் எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் சிறப்பு பயிற்சி அளித்து படப்பிடிப்பை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இசை : எஸ்.ஆர். சங்கர், ஒளிப்பதிவு: கே. சிருஷ்டி, எடிட்டிங்:  கணேசன், நடனம்: விஜய்பாண்டி, பாடல்கள்: மோகன்ராஜன், தமிழமுதன், கவிக்குமரன் 
 http://www.mymoviemall.com/Filmimg/Thmp555Nirdoshi-Kannada-Movie-VCD-DVD-Original-2012.jpg
5. ரசகுல்லா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் என்ற போர்வையில் எடுக்கப்பட்ட கில்மா படம் மாதிரி தோணுது.. ட்ரெய்லரை பார்த்தாலே தேறும்னு தோணலை.

NIRDOSHI (Rasagulla) - releasing on March 26,2010 ல ரிலீஸ் ஆன கன்னட பட டப்பிங்க்

 அ
6.Shirin Farhad Ki Toh Nikal Padi - Every man's dream: an adult life in the midst of bras and panties. One look at a woman, and he knows her size. Reality check: Farhad Pastakiya, a 45-year-old golden-hearted Parsi bachelor working as a bra and panty salesman, has never found love. The only women in his life are his dominating mother Nargis and doting grandmother Siloo. 
 http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Farah-Khan-Boman-Irani-In-Shirin-Farhad-Ki-Toh-Nikal-Padi.jpg
The world has given up on him, but Farhad has never given up hope. One day a 34B walks into his shop, and it's love at first sight. Shirin Fugawala, a 40-year-old, bubbly, straightforward, Parsi trust secretary, is Farhad's soul mate, but destiny intervenes in the form of a demolished water tank. All hell breaks loose as Farhad's mother Nargis realizes that her son's dream girl is her sworn enemy.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலிஸ்
7.அவன் அப்படித்தான்- இதுவும் ஒரு கில்மா படமே..
8. வாலிபன் சுற்றும் உலகம்

எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

A new movie discouraging MGRs filmதமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர். 
அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம். சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம். அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது.  அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா? தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா.  எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர். அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான். தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை.  http://www.sattigadu.com/wp-content/uploads/2012/06/Aachariyangal-Movie-First-Look-Posters-Wallpapers-2.jpg
9.. ஆச்சரியங்கள் - இந்தப்படத்துக்கு  என்ன விசேஷம்னா பேப்பர்ல  விளம்பரம் குடுத்து புது முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 மாசத்தில் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் படம்.   10. The Expendables 2   The Expendables 2, கோலிவூட்டில் தயாராகிவரும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாகும். Lions Gate Entertainment தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இத் திரைப்படத்தை Simon West இயக்குகிறார். வரும் ஆகஸ்ட்24 திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்தில் Sylvester Stallone, Jason Statham, Jet Li,Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, மற்றும் Arnold Schwarzenegger ஆகியோர் நடித்துள்ளனர். நவீன ஆயுதங்களின் வெடிப்பு சத்தங்களோடு படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தில் ஜெட் லீ நடிப்பதால் மரபு ரீதியான உடல் சண்டைக்கும் குறைவிருக்காது. இத் திரைப்படம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.ஈரோடு வி எஸ் பி, சண்டிகாவில் ரிலீஸ்

follow back பரந்தாமன் டைரிக்குறிப்பு கள்

1,டியர்.இது வேணாம்.தப்பு..


எல்லாரும் இப்படி ஒதுங்கிட்டா யார்தான் பொறுப்பா செய்யறது?வா.நாம முன்னோடியா இருப்போம் 



------------------------


2. பெண்கள் மழையை ரசிக்கிறார்கள்.ஆண்கள் மழையில் நனையும் பெண்களை ரசிக்கிறார்கள் # அவதானிப்பு 


-------------------

3. மழைக்காலங்களில் பெண்கள் தவிர்க்்க வேண்டிய ஆடை நிறங்கள் - வெள்ளை ,மஞ்சள்,சந்தனம் மற்றும் லைட் கலர்ஸ் 


-------------

4. விக்கிரமாதித்தன் கதைல வர்ற வேதாளம் முருங்கை மரத்தில்தான் ஏறி இருக்குமோ? #கில்மா டவுட்மா 


--------------

5. இடி பயங்கரமா இடிக்குது.பஸ் ஸ்டாப்ல 13 பொண்ணுங்க.ஒருத்தர் கூட அர்ஜூனான்னு வந்து என்னை கட்டலையே?சினிமால மட்டும் கட்டறாங்க? 


-------------------



வயது தடையில்லை: !

மாநில அளவிலான யோகாசன போட்டி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது; இதில், "ஹாலாசனம்' செய்து அசத்திய, 92 வயது மூதாட்டி ஞானம்மாள்.

6. காதலியுடன் அஜித் நடிச்ச உல்லாசம் படம் பார்த்துட்டு எல்லார்ட்டயும்"நேத்து என் ஆள் கூட உல்லாசத்துல இருந்தேன்"என பீற்றிக்கொள்க! 



---------------------

7. தோழிக்கு அரட்டை பெட்டியில் எப்பொழுது தொடர்பு கொண்டாலும், தோழியின் கணவர்தான் பதில் அளிக்கிறார். என்ன செய்வதோ. 


சிம்ப்பிள்.தோழியின் கணவர் அரட்டைப்பெட்டியில் தொடர்பு கொள்க.தோழி அதில் இருக்கக்கூடும்  


------------------

8. சவுமி- என் கணவரை யாரும் திட்டக்கூடாது.நான் மட்டும்தான் அதுக்கு லைசன்ஸ் எடுத்திருக்கேன் 


--------------------------

9. டியர்.பீச்சுக்கு வந்து 2 மணி நேரம் ஆகுது.பேசாமயே இருக்கீங்க? 


காரியத்துல கண்ணா இருக்கனும்.காதலி அருகில் இருந்தா இறுக்கனும். 



----------------------


10. மழை வந்து என்னை ஈரமாக்கியது.

நீ இன்னும் வராமல் என்னை காய வைக்கிறாய்!



-----------------------------


‎!!!



11. நாம் இருவரும் மழைக்காக ஒதுங்கினோம்.பின் மழைக்கு நன்றி சொன்னோம் 



-----------------------------

12. தோசை ஊற்றவா? என்றாய்.வெங்காயம் என்றேன் பொய்க்கோபமாய்.வெங்காய தோசை ஊற்றினாய் # ஊடல் பொழுதுகள்் 



----------------------

13. உதிரிப்பூக்கள் வாங்கி வந்தேன்.சரம் ஆக்க மறுத்தாய்.இரண்டிரண்டாய் எடுத்துவைத்தால் கோர்க்கிறேன் என்றாய் # எடுக்கவா?கோர்க்கவா?் 


-----------------


14. தன்னிலை மறந்தேன்.முன்னிலை யில் நீ! படர்க்கை யாரும் இல்லை.நம்மைத்தவிர. படர் கை 


---------------


15. சமையல் அறையில் காய் கறி அரிந்து தருகையில் உன் நிம்மதிச்சிரிப்பு சரசத்தை விட சிறப்பு 



------------------------


இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்...


16. ஆரிய உதடுகள் உன்னுது.காரிய கைகள் என்னுது.இதழ்கள ஒன்றை ஒன்று உண்ணுது் 


-------------------

17. முத்தம் செய்.பின் யுத்தம் செய்.வெற்றிக்குப்பின் விலகி தனி ஆகாம்ல் அணைத்துகொள் 



---------------

18. நீ என் தன லட்சுமியா? ஒருமை பன்மைக்குழப்பங்கள் 



---------------------


19. சேர்ந்திருக்கும்போதும் நான் வலி தந்தேன்.ஆனால் பிரிவு வலியை நீ தரவே இல்லை 



---------------------------


20. பில்லியனில் அமர்ந்திருப்பவரை பொறுத்துதான் பின் தொடரும் வண்டியின் வேகமும் அமைகிறது. #follow  back பரந்தாமன் டைரிக்குறிப்பு 



------------------------


Thursday, August 23, 2012

சனி தோஷம் நீங்க.... ( ஆன்மீகம்)

சனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!
ன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளமும் உருக, சித்தத்தில் சிவம் வைத்து நித்தமும் வழிபட்ட சித்த புருஷர்களது கனவில் ஒளி வடிவாகத் தோன்றி, தென்னாடுடையான் அருள்பாலித்த திருத்தலம் - என்.வைரவன்பட்டி.
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் சிவனார். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இப்படியரு நாமகரணம் இந்தச் சிவனாருக்கு. இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி.
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம், நகரத்தார்கள் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.


தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).



பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம்!


ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்றுகின்றார்கள்.


ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.


குழந்தை வரம் அருளும் தெய்வ விருட்சம்!


தொடர்ந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்;  இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர். இந்த மரத்தடியில் தியானம் செய்வதை விருட்ச விசேஷம் என்பர்.


இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்கிறார்கள்.


தோஷம் நீக்கும் துலாபாரம்!


ஸ்ரீபைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


மேலும், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்; பாலாரிஷ்ட தோஷம் முதலானவை நீங்கும் என்றும் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.


இரவில் தங்கி... உச்சிப்பொழுதில் தரிசனம்!


இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீவடிவுடையம்மன். மற்ற கோயில்களில் உள்ள அம்மன்களைவிட ஸ்ரீவடிவுடையம்மனின் காது பெரிது எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு ஸ்ரீவடிவுடையம்மனைப் பிரார்த்தித்து, அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் உச்சிப் பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபட, நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.


நித்யாக்னி பூஜை!


வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும்; திருமண தோஷங்கள் தவிடுபொடியாகும். அதேபோன்று, அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலுமாம். வள்ளி- தெய்வானை தேவியருடன் ஸ்ரீசண்முகநாதராகவும், ஸ்ரீசுப்ரமணியராகவும் இரண்டு சந்நிதிகளில் முருகப்பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசண்டீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.



பெரும்பாலும் சிவாலயங்களில் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகப்பெருமான் சந்நிதி யும் அமைந்திருக்கும். ஆனால், இங்கே இடப் புறத்தில் முப்பலிக் கருப்பர் அருள்கிறார். இவரை வணங்கி வழிபட, மன தைரியம் உண்டாகும்; உடல் பலம் பெருகும் என்கின்றனர். நாமும் வைரவன்பட்டி தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவரை வழிபட்டுப் பலன் பெறுவோம்.



நன்றி - சக்தி விகடன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் -சி.பி.ஐ அதிகாரி பேட்டி

ரஜினி, கமல் இணையும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ வி எம் படம்

ஒண்ணா ஒரு படம்!"


ஆசைப்பட்ட ரஜினி... ஆல்ரைட் சொன்ன கமல்

எம்.குணா



'சகலகலா வல்லவன்’, 'ஜெமினி’ என்று அவ்வப்போது கோலிவுட் டிரெண்டைப் புரட்டிப் போடும் ஏவி.எம்மின் இப்போதைய அஸ்திரம்... 3D! ரஜினியின் 'சிவாஜி’க்கு '3D’ டச் வேலை நடக்கிறது பிரசாத் ஸ்டுடியோவில். பிரசாத் லேப்புடன் இணைந்து செயல்படும் ஏவி.எம். இந்த '3D புராஜெக்ட்டுக்கு என ஒதுக்கிஇருக்கும் பட்ஜெட்... 16 கோடி. ஏவி.எம். சரவணனிடம் பேசினால் பல ஆச்சர்யத் தகவல்களைக் கொட்டுகிறார்.



சி.பி - 3 டி படம் பெரிசா ஏதும் சாதிக்கப்போவதில்லை.. இது ஒரு வியாபார தந்திரமே, சிவாஜி ரிலீஸ் பண்றப்பவே ஏன் அப்டி 3டில ரிலீஸ் பண்ணலை? இதுக்கெல்லாம் ஏமாந்து ரசிகர்கள் தங்கள் பணத்தை வேஸ்ட் பண்ணுவாங்கன்னு தோணலை, ஒரு வேளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

''இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. கடந்த ஒரு வருஷமா 400 பேர் கொண்ட டீம் மூணு ஷிப்ஃட்டா வேலை பார்த்துட்டு இருக்காங்க. இது சம்பந்தமா பேசணுமேனு 'உங்களைப் பார்க்கணும். எப்போ வரட்டும்’னு ரஜினி சார்கிட்ட கேட்டேன். எப்பவும்போல, 'நானே வர்றேன்’னு கிளம்பி வந்துட்டார். அப்போ அவருக்கு '3D’-யில் படத்தின் டிரெய்லரையும் 'பூம்பாவாய்’ பாட்டையும் ப்ளே பண்ணிக் காட்டினோம். சின்ன குழந்தை மாதிரி கைதட்டி ரசிச்சுப் பார்த்தார். 


சி.பி - ம்க்கும், அவரு கலைஞரின் இளைஞன் படத்தையே நல்லாருக்குன்னு சொன்னவர் ஆச்சே?

http://www.bolegaindia.com/images/gossips/rajnikanth_kamal_hasan_post_1343022276.jpg



'தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்’னு ஐடியா கொடுத்தார். 'நான் சிவாஜி, கமல் மாதிரி நடிகன் கிடையாது. என்கிட்ட ஸ்பீடு இருக்கிறவரைக்கும் நடிப்பேன். இப்போ இந்த டெக்னாலஜி மூலமா நான் நடிச்ச நிறையப் படங்களைத் திரும்பப் பார்க்கலாம்’னு பேசிட்டே இருந்தார்.'' 



''ஆனா, 'சிவாஜி’ படம் வெளியானபோதே அதனால நஷ்டம்னு செய்திகள் வந்துச்சே?''


சி.பி - நஷ்டம் தியேட்டர்காரங்களுக்குத்தான், ஏ வி எம் நல்ல விலைக்கு வித்துட்டாங்க



''ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கங்க. 'சிவாஜி’ படத்தை நாங்க முழுக்கவே வெள்ளைப் பணத்தில் தான் தயாரிச்சோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் மூணு கட்டமா கடன் வாங்கிப் படத்தைத் தயாரிச்சோம். வரவு - செலவுக் கணக்குகள் எல்லாமே சுத்தமா இருக்கும். பாதி கறுப்பு, பாதி வெள்ளை தர்றதா சொல்லி 'சிவாஜி’ படத்துக்குப் பேரம் பேசினவங்ககூட உண்டு. 'வேண்டாம்’னு மறுத்துட்டோம். 'சிவாஜி’ படத்தை அப்போ வாங்கி வெளியிட்ட எல்லோருமே நஷ்டமாகாமல் சம்பாதிச்சாங்க அதுதான் உண்மை. அப்படி யாராவது நஷ்டம் அடைஞ்சோம்னு சொன்னாங் கன்னா, அவங்க தப்புக் கணக்கு காட்டுறாங்கன்னு அர்த்தம்!''



''ரஜினி, கமல் இருவருமே ஏவி.எம். நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகள். நீங்க ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்கவெச்சு ஒரு படம் எடுக்கக் கூடாது?''


http://www.bestofvizag.com/images/movies/rajini-bala-kamal.jpg

''இதையேதான் அவங்களும் சொன்னாங்க. ஒரு நாள் ரஜினி சார் என்னைச் சந்திக்க வந்தார். என் அறையில் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ திடீர்னு கமல் சாரும் என்னைப் பார்க்க வந்துட்டார். அது ரொம்ப யதேச்சையா அமைஞ்ச சந்திப்பு. 'என் கேரியர்ல தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜினு எத்தனையோ பேர்கிட்ட பழகி இருக்கேன். ஆனா, அவங்ககிட்டலாம்  இல்லாத ஒரு பண்பு உங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்கு. உங்ககிட்ட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கொஞ்சம்கூட இல்லை. இது ரொம்ப ஆச்சர்யம்’னு சொன்னேன். 



சி.பி - பொறாமை இல்லைன்னு சொல்ல முடியாது, இல்லாம இருந்தா நல்லதுன்னு வேணா சொல்லலாம், நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன் , தளபதி - குணா  ரிலீஸ் காலகட்டத்துல எப்படி எல்லாம் பரஸ்பரம் புகைஞ்சாங்க என்பது நாடறிந்த ரகசியம்



அதுக்கு கமல், 'ஒரு வேளை நானும் ரஜினியும் பாலசந்தர் ஸ்கூல்ல இருந்து வந்ததால இருக்கலாம்’னு சொன்னார். அப்போ ரஜினி, 'நான் சினிமாவுக்கு வந்தப்போ கமல் பெரிய ஹீரோ. 'நினைத்தாலே இனிக்கும்’ ஷூட்டிங்ல அவர்தான் ஸ்டார். சிங்கப்பூர்ல வாரக் கணக்கா ஷூட்டிங் நடந்தப்போ பல சமயம் பஸ்ல போயிட்டு இருப்போம். அப்போலாம் கமல் பக்கத்துல உக்காந்து இருக்குற நான், அவர் தோள்ல சாய்ஞ்சு அப்படியே தூங்கிடுவேன்.


அவரும் என்னைத் தட்டிக் கொடுத்து என் தூக்கம் கலையாமப் பார்த்துக்கிட்டார். நான் அவரை நண்பனா நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்னை நண்பனா ஏத்துக்கிட்டார்’னு பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். அப்படியே பல விஷயங்கள் பேசிட்டு இருந்தப்ப திடீர்னு ரஜினி சார், 'கமல்... ஒண்ணா ஒரு படம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருக்கு’னு சொல்லிட்டு கமலையே பார்த்தார். கமல் கொஞ்சம்கூட யோசிக்கலை. 'தாராளமா நடிக்கலாமே... அப்படி நாம சேர்ந்து நடிக்கிற படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்’னு சொல்லிட்டார்.



ஒருத்தர் உலக நாயகன்... இன்னொருத்தர் சூப்பர் ஸ்டார். ரெண்டு பேருக்குமே என்னைவிட நிறைய சினிமா தெரியும். ரெண்டு பேருக்கும் சம்பளமும் ரொம்பப் பெருசு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 'உங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சு வேலை வாங்குற திறமை பாலசந்தர் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு’னு சொன்னேன். ரெண்டு பேருமே சிரிச்சாங்க. அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. இனி, நாங்க தான் மெனக்கெடணும். பார்ப் போம்'' என்று வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வழியனுப்புகிறார் சரவணன்.


சி.பி - எதிர்பார்ப்பு எகிறிக்கும். அதுக்கு தகுந்தபடி ஸ்க்ரிப்ட் பக்காவா இருக்கனும்.. இல்லைன்னா ஓவர் எக்ஸ்பெக்டேஷனே படத்துக்கு வில்லனா அமைஞ்சுடும்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற வாழ்த்துகள் 
http://newzstreet.com/uploads/news-files/rajini_and_kamal_work_together_haihoi_189.jpg


நன்றி - விகடன்

நமீதா பஞ்சாயத்து தலைவரானா....

1.நமீதா , சரத்குமார் மாதிரி கட்டைப்பஞ்சாயத்து தலைவரா நடிச்சா அதுதான் “ செம கட்டை” பஞ்சாயத்து 


----------------------


2.பூனை மாதிரி இருக்கும் MLAக்கள் ஜாக்கிரதை - சட்ட சபையில் நாய்கள் மாதிரி நிறைய பேர் இருப்பதாக அந்த நாய்களே அறிக்கையில் சொல்லி இருக்கு 


----------------------------

3. ஹலோ, மேனேஜர்? சார், நீங்க ஆன் லைன்க்கு எப்போ வருவீங்க? 



ஸாரி, மீ ஆல்வேஸ் பெண் லைன் தான்



------------------------------


4. ராகுல் காந்தியை துணைப் பிரதமராக்க வேண்டும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் # நீங்களா சொல்றீங்களா? எழுதிக்கொடுத்ததை படிக்கறீங்களா?



---------------------------------


5. நிருபர் - மேடம், உங்களுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா?




  சன்னி லியோன் - ச்சே, ச்சே, நான் டான்ஸ் ஆடுனா எல்லாம் தெரியும், அவ்ளவ் தான்



--------------------


Photo: விமானத்தில் பறந்தால் கூட காணக்கிடைக்காத சந்தோசம்டா இது!


6.அத்தான், ஆதாமும், ஏவாளும் போல் நாம் இருப்போம்,

ஐ ஜாலி.


சமைக்க முடியலை, ஒன்லி ஃப்ரூட்ஸ் சாப்பிட்டே ஒப்பேத்திடலாமா? ;-0




----------------------


7. கடவுளே சாகா வரம் வேணும்



. பக்தா!ஆ"லிவ்"ஆயில் யூஸ் பண்ணு


-------------------------


8. டியர் உனக்கு ஒவர்



வாய். நல்லா பாருங்க .ஒரே வாய் தான்.6 வாய் எல்லாம் கிடையாது


----------------------


9. பிரிந்து வாழும் தம்பதியர்க்கு பிடிக்காத டிராபிக் ரூல் போர்டு - டேக் "டைவர்ஸ்"ஷன்



-----------------------


10. போதை நிறைந்த நாள் - திங்"கள்"


---------------------


Photo: நம்முடைய வாயில்
வார்த்தைகள் இருக்கும் போது
அவை அவை நமக்குச் சொந்தம்.
ஒருமுறை பேசப்பட்ட போது
அது மற்றொருவருக்குச் சொந்தம்.

- பெஞ்சமின் பிராங்க்ளின்



11.  அன்பே! உன் திங்"கள்" முகத்தில் என்னை கவர்வது உன் செவ் “வாய்” # லிப்ஸ்டிக் லதாப்ரியனின் டைரியில் இருந்து




---------------------


12. உங்க வயசை எல்லார்ட்டயும் கூட்டி சொல்றீங்களாமே?



 ச்சே ச்சே நான் வீடே சரியா கூட்ட மாட்டேன்



-------------------------


13. அதிகம் பேரால் அதிக முறை ரசிக்கப்படுவது ஆபீஸ் ரிசப்சனிஸ்ட்களே


-----------------------


14. நமீதாவிடம் யாராவது ஓவரா குறும்பு செஞ்சா அவர் எப்படி திட்டுவார்?



 இட் ஈஸ் டூ மச் (சான்)



---------------------------


15. ராகுல் - தங்கையே தனக்கு உபத்திரவம் # பிரியங்கா தீவிர அரசியலில் குதிப்பு



------------------------


Tis Angeles. For my. Cute. Friend. Angel
Tis Angeles. For my. Cute. Friend. Angel
7 minutes ago ·



16. நமீதா மேடம் ,உங்க முகம் ரொம்ப உப்பி இருக்கு,அது ஏன்?




 டயட் பற்றி கவலைப்படாம அ"சால்ட்"டா இருக்கறதால



---------------------


17. நடிகை ரோஜா Q வில் நின்றால் ROWஜா!




-----------------------


18. ரிவிட் அடிப்பது = டேமேஜர் நம்ம கிட்டே அடிச்ச ஜோக்கை ( விட்டை)அவர் இல்லாதப்ப அவர் மிசஸ் கிட்டே அடிப்பது




----------------------

19. மிஸ் ,உங்க போன் குடுங்க .ஒரு கால் பண்ணிக்கிறேன்.



 யாருக்கு?



 எனக்குத்தான்.உங்க நெம்பரை எப்படி கண்டுபிடிக்க?




----------------------------


20. நர்ஸ் நளினா - டாக்டர் இல்லை




அபேஷன்ட் -தெரிஞ்சுதான் வந்தேன்



---------------------------


Wednesday, August 22, 2012

மதுரை மக்கள் உஷார்! பூகம்ப அபாய அறிவிப்பு!

பூகம்ப அபாயத்தில் மதுரை!

கிரானைட் கொள்ளையால் வரப்போகும் வினை!
''கிரானைட் கற்களை அளவுக்கு அதிகமாக சுரண்டி எடுத்ததால், மிகவிரைவில் மதுரை சுற்று​வட்டாரம் பூகம்பத்தில் சிக்கி அழிய இருக்கிறது'' என்று பகீர் கிளப்புகிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்! 


சமீபத்தில், அந்தமான் நிகோபர் தீவுகளில் எரிமலை ஒன்று வெடித்து ஏகப்பட்ட நாசத்தைச் சந்தித்தது. அதற்குக் காரணம்... அந்தமான் தீவுகளில் முறைகேடாகச் சுரண்டப்பட்ட குவாரிகளால் பூமியின் உட்பகுதி பாதிக்கப்பட்டதுதான் என்று புவியியல் அறிஞர்கள் சுட்டிக்காட்ட... விழித்துக்கொண்டது சுப்ரீம் கோர்ட்.



 'தனி மனித சுயலாப நோக்கத்துக்காக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதன் விளை​வாக, நிலச்சரிவு, பூகம்பம், எரிமலைக் குழம்பு என்று ஏகப்பட்ட இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள்’ என்று சுட்டிக்காட்டி கிரானைட் மாஃபியா அதிபர்கள் மற்றும் குற்றவாளிகள் 13 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து ​விட்டது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைகளை உடைப்பதையும், கனரக ஆயுதங்​கள்கொண்டு மண், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பதையும் தடை செய்துள்ளது.



அந்தமான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி பேசும் புவியியல் ஆய்வாளரான அரியலூர் சந்திரசேகரன், ''உலகத்தில் மற்ற நாடுகள் எல்லாம் மலைகளைக் காப்பாற்றின. ஆனால், இந்தியா மட்டும்தான் அதிக அளவில் இரும்பு, தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து இயற்கையை சுரண்டிவிட்டது. மணலும் கிரானைட்டும் ஒரே இனம். அவற்றை அதிக அளவில் எடுப்பதால் நடக்கும் புவியியல் மாற்றத்தால் நிலச்சரிவு, நீரியல் மாற்றம், நிலநடுக்கம் போன்றவை ஏற்படும்.



மணலும் கிரானைட்டும் எடுக்கும் உரிமை தாசில்தார்கள் கைகளில் போய்ச்சேர்ந்ததால், 1980-க்குப் பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இயற்கை வளங்கள் பாதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஏற்படும் வண்ணம் இவற்றுக்கு வரைமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கவியல் வல்லுனர்களை நியமித்து, தமிழகம் முழுவதும் கண்காணிக்க வேண்டும். புவியியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் இருந்தால் என்ன செய்வது?


 அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க முடியாத சிறிய துறையாக இருக்கிறது. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். சுரங்கச் சட்ட விதிகள், சிறு கனிம விதிகள் சட்டம் இனிமேலாவது கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அரசின் கவனம் தவறியதால் இன்று தமிழகத்தில் கனிமவளம் பாதிக்கப்பட்டு, மழைவரும் பருவங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய பேரழிவுகளைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது'' என்று எச்சரித்தார்.  


மதுரையைச் சுற்றி பூகம்பம் ஏற்பட எந்த அளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவரான டாக்டர் அருணாசலத்திடம் கேட்டோம்.



''பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம் நடக்கும் முறைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கையைச் சுரண்டுவதன் மூலம் அவற்றை வேகமாகத் தூண்டி இருக்கிறோம். மதுரைப் பகுதிகளில் இயங்கும் முறையற்ற குவாரிகளின் பேராசையால் மதுரையில் நீரியியல் பாதைகள் மூடிவிட்டன. இதனால் நிலத்தடி நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. மேலூர் பகுதிகளில் அணைக்கட்டு இருந்திருந்தால், அது எப்போதோ உடைந்து இருக்கும்.



மதுரை நிலப்பகுதி கடின வகைப் பாறைகளால் ஆனது என்பதால், இப்போது பாறைகளின் வடிவ அமைப்பு மாறி இருக்கிறது. பல மில்லியன் பழை மையான இயற்கை வளங்களை வெட்டி எடுத்ததன் விளைவு... ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு என்ற இடைவெளியில் முன்பு நடந்து வந்த இயற்கைப் பேரிட மாற்றம், இன்னமும் 100 ஆண்டுகளில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மதுரைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கிரானைட் தோண்டியதன் விளைவு...  பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 


இதுபோன்ற அச்சம் கர்நாடக மாநிலத்துக்கும் ஏற்பட்டுள்ளது. குதிரை முக் நேஷனல் பார்க்கில் இப்படி இயற்கை வளங்களை சுரண்டியதன் விளைவால் அங்கு எப்போதும் பூகம்பம் வர வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.


உலக நாடுகள் இயற்கை வளங்களைக் குறைவாக எடுத்து, ஸ்டாக் முடிந்ததும்தான் மறுபடியும் எடுக்கிறார்கள். ஆனால், இந்தியா மட்டும்தான் ஓர் இயற்கை வளம் இருப்பதை கண்டறிந்தால் அது காலியாகும் வரை எடுத்து, அதன் சீற்றத்தை அனுபவிக்கத் தயாராகிறார்கள்'' என்று எச்சரித்தார்.
தூங்கா நகர மக்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாதா?

நன்றி - ஜூ வி

இந்து ராம் பேட்டி @ புதிய தலைமுறை - அக்னி பரீட்சை

 
 
 
நன்றி -  ‏@austinvijay,யாழ்
ஹிந்து ராம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் குணசேகரன் கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். எந்தக் கேள்விக்கும் ராமிடம் நேர்மையான பதில் இல்லை  

செட்டிநாடு ரெசிபிகள்

30 வகை செட்டிநாடு ரெசிபி


தொகுப்பு: பத்மினி

படங்கள்: எம்.உசேன்


'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.



''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்'' என்று உறுதி கூறும் கிருஷ்ணகுமாரியின் ரெசிபிகளை, கலாரசனையுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. 




 மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20,  புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வாணலியில்  சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து,  அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.


குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.


 வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.


குறிப்பு:  மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!


 கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.

 கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.


செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.


 இனிப்பு சீயம்


தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன். 

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து  வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.


பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!


ஜவ்வரிசி ஊத்தப்பம்


தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.



குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல்  சேர்த்துக் கொள்ளலாம்.

 குழி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.



கருப்பட்டி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.

குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.

 கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை  ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.



 ஐந்தரிசி பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி,  மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.



 பால் பணியாரம்



தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

 பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!

 பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை -  உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா  கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.



குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.



 கத்திரிக்காய் மசாலா



தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் -  ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.



 வெண்டைக்காய் மண்டி



தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.



 மாங்காய் வற்றல் ரசம்



தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.



குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.



 கத்திரிக்காய் திரக்கல்


தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.


செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.



தண்ணிக் குழம்பு



தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.

பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.



செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.

 வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: துவரம்பருப்பு,  காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.



 செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்


செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.



 ஜவ்வரிசி பாயசம்


தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி,  ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.


குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.

 சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய்  - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.



குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.

 கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய  பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).



குறிப்பு:  வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ என்பது செட்டிநாட்டு பழமொழி.



 சிவப்பரிசி புட்டு

தேவையானவை: சிவப்பரிசி மாவு - ஒரு கப், சர்க்கரை - ருசிக்கேற்ப, தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வறுத்த சிவப்பரிசி மாவை தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை,  ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கினால்... சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.


 கவுனி அரிசி



தேவையானவை: கவுனி அரிசி - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), நெய் - 3 டேபிள்ஸ்பூன்.


செய்முறை: கவுனி அரிசியை சுத்தம் செய்து 5 டம்ளர் நீரில் சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி, அடுப்பில் வைக்கவும். 2 விசில் வந்ததும், 'சிம்’மில் 10 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும். இனிப்பு தூக்கலாக வேண்டுமானால், கூடுத லாக கொஞ்சம் சர்க்கரை சேர்க்கவும்.

குறிப்பு: செட்டிநாட்டு விசேஷங்களில் இது கண்டிப்பாக இடம் பிடிக்கும். சிவப்பு அரிசிக்கும், கவுனி அரிசிக்கும் வித்தியாசம் உண்டு. எனவே கடைகளில் கவனமாக கேட்டு வாங்க வேண்டும்.

 சூப்பி

தேவையானவை: துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, பால் - அரை டம்ளர், பூண்டு - 2 பல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும், பூண்டை தட்டிப் போடவும். பின்னர் பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கி பரிமாறவும். விருப்பப் பட்டால், பீன்ஸ், காலிஃப்ளவர், கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

 கார சட்னி

தேவையானவை: சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தோல் உரித்த சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.


குறிப்பு: வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை. செட்டிநாட்டு டிபன் வகைகளின் சுவையைக் கூட்டுவதில் இந்த கார சட்னிக்கு முக்கிய இட முண்டு.

 பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு, பொடித்த வெல்லம் - தலா 2 கப், தேங்காய் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயை துருவி முதல் பால், இரண்டாம் பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். அதில் உருட்டி வைத்துள்ள உருண்டை களைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும், முதல் பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

பீட்ரூட் வடை

தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பருப்பு வகைகளை முக்கால் மணி நேரம் ஊறவிட்டு, அவற்றுடன், மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய பீட்ரூட், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுத்தால்... சுவையான, செட்டிந£ட்டு ஸ்பெஷல் பீட்ரூட் வடை தயார்.


 வெஜிடபிள் பொங்கல்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், தக்காளி, கேரட் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, பச்சைப் பட்டாணி - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று,  முந்திரி - 10, நெய் - தேவையான அளவு, எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
.

செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து, மூன்றரை டம்ளர் நீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். காய்கறிகள் அனைத்தை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய், எண்ணெயை சூடாக்கி, மிளகு, சீரகம், பட்டை, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்த காய்கறி கல வையை, குழைய வேகவைத்த அரிசி - பருப்புடன் சேர்த்துக் கிளறி, நெய் ஊற்றிக் கலந்தால்... வெஜிடபிள் பொங்கல் தயார். இதை சூடாகப் பரிமாறவும். தேங்காய் சட்னி  இதற்கு சிறந்த காம்பினேஷன்.


நன்றி - அவள் விகடன்