Monday, June 11, 2012

வாலு - ஆளை விடு - வாழ விடு - சிம்பு பேட்டி - கிடாவெட்டு

http://www.cinepicks.com/tamil/gallery/vaalu/santhanam-and-simbu-in-vaalu-poster-861.jpgல்யாண சீஸன் நெருங்குவதால், அதற்கு முன்னரே டாப் கியரில் ஆடிவிடும் மூடில் இருக்கிறார் சிம்பு. அடுத்த படத்துக்கு 'வாலு’ என்று பெயர்.



''ஆஹா... திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?'


சி.பி - அண்ணன்  எப்போ சேட்டையை விட்டாரு? இப்போ ஆரம்பிக்க? ஆல்வேஸ் அண்ணன் சேட்டை மன்னன் தான், ஆனா எடுக்கப்போற படத்தோட டைட்டில் மட்டும் வேட்டை மன்னன்


''இது எல்லாருக்கும் பிடிக்கிற வாலு! இன்னும் பக்கா சென்னைப் பையனா ஒரு படம்கூடப் பண்ணது இல்லை. அப்படி ரொம்பத் துறுதுறுப்பா, செம கலகலப்பா ஒரு ஸ்க்ரிப்ட் கொண்டுவந்தார் விஜய்சந்தர். லவ் ஸ்டோரி. இதில் என் வால்தனம் மட்டும் இல்லை. எல்லோரோட வால்தனமும் இருக்கிற - மிஸ் பண்ணவே முடியாத கதை. ஹன்சிகா, சந்தானம்னு ஹிட் பேக்கேஜ் சேர்த்து, உடனே இறங்கிட்டோம்.


 தீபாவளிக்கு வர்றான் வாலு. படத்தில் காமெடி அள்ளும். சந்தானத்தை நான்தான் சினிமாவில் முதல்ல கொண்டுவந்தேன். இப்ப, எல்லா ஹீரோக்களுக்கும் அவர் செம தோஸ்த் ஆகிட்டார். 'மன்மதன்’ முதல் நாள் ஷூட்டிங்ல அவரோட சில ஆக்ஷன்களைப் பார்த்தேன். 'ஜஸ்ட் லைக் தட் பெரிய ஆள் ஆயிடுவ நண்பா. சீக்கிரமே என் படத்துக்கு உன்கிட்ட கால்ஷீட் கேட்டு நிக்கிற மாதிரி இருக்கும்’னு சொன்னேன். 'என்ன சார்... பயமுறுத்துறீங்க?’னு தயங்கித் தயங்கிச் சிரிச்சார். நான் சொன்ன மாதிரியே ஆச்சு.


 ஆனா, மனுஷன் ஜெம் ஆஃப் தி ஜெம். என் படம்னா நான் சந்தானத்துக்கிட்ட டேட்ஸ் கேட்கிறது இல்லை. அவருக்கு ஏத்த கேரக்டர்னா 'நீதாம்பா’னு சொல்லிடுவேன். 


ஷூட்டிங் அன்னிக்கு ஸ்பாட்ல நிப்பார். அதுதான் சந்தானம்.''


 சி.பி - ஓஹோ நீங்களும் எம் ஜி ஆர் மாதிரிதானா? நீங்க இருக்கறப்ப சக டெக்னீஷியன்கள், நடிகர்கள் உட்கார விட மாட்டீங்களா?

''ஆர்யா... நயன்தாரானு கிசுகிசுக்கிறாங்களே?''




''அட, அவங்க ஒரு காலத்தில் எனக்கு ஃப்ரெண்ட். அதுக்காக இன்னமும் கேட்டுக்கிட்டே இருக்கணுமா? அவங்க நாளைக்கு இன்னொருத்தர்கிட்ட இருப்பாங்க. அப்புறம், கல்யாணம் பண்ணிப்பாங்க. அதுக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? நல்ல காமெடிங்க!''



சி.பி - கீதை வாசகம் சிம்பு அண்ணன் ரசிச்சு மனசுக்குள்ள படிக்க நான் டெடிகேட் பண்றேன் - எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது , எதை நீ தள்ளிட்டு வந்தாய், போறப்ப அள்ளிட்டுப்போக?


http://chennaionline.com/images/gallery/2012/June/20120606035951/Vaalu_Movie_First_Look_Wallpapers_02.jpg



''இப்போதைய ஹீரோக்களில் யாரைப் பிடிச்சிருக்கு?'



''ஜெய்! அவரோட முகம் முதல் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிருது. நல்ல நல்ல படங்களா பண்ணும்போது இன்னும் சூப்பரா வருவார். சாந்தனுவுக்கு டான்ஸ், காமெடி நல்லா வருது. ஆனா, இன்னும் நல்ல நேரம் அமையலை. ஆர்யா 'பாஸ்’ மாதிரி அசால்ட்டா பண்ணா ரொம்ப நல்லா இருக்கு. கார்த்தியோட பட செலெக்ஷன் அட்டகாசம். ஜெயம் ரவியை ரொம்ப இயல்பா எல்லாரும் ஏத்துக்கிறாங்க. ஜீவாவுக்கு ஃபிட் ஆகாத கேரக்டர் எதுவும் இருக்கானு தெரியலை. பெர்ஃபார்ம் பண்றதில் தனுஷ் கவனம் செலுத்துறார்.''
''உங்களுக்கு செல்வராகவன், பாலா மாதிரி டைரக்டர்களுடன் சீரியஸா படம் பண்ணணும்னு ஆசை இல்லையா?''




''ஒரு விஷயம்... தனுஷ்தான் அப்படிப் பண்ணுவார். அவருக்கு நடிப்பில் சீரியஸா ஏதாச்சும் பண்ணிட்டே இருக்கணும்னு ஆசை. நமக்கு அந்த ஆசை இல்லை. நான் பெர்ஃபார்ம் பண்றவன் இல்லை... என்டர்டெய்ன் பண்றவன்


. பயங்கரமா நடிச்சு பேர் வாங்கணும்னு நான் ஆசைப்படக்கூட மாட்டேன். ஆஸ்கர், தேசிய விருது வாங்கணும்னு எனக்குக் கனவுகூடக் கிடையாது. ரஜினி 'தளபதி’யில் பண்ண மாதிரி எப்பவாவது ஒரு ரோல் நடிக்கலாம். அப்படித்தான் வெற்றிமாறன் கதையில் இன்ட்ரஸ்ட் எடுத்து நடிக்கப்போறேன். மத்தபடி, நமக்கு தியேட்டர்ல விசில் பறக்கணும். கைத்தட்டல் கொட்டணும். டிஸ்ட்ரிபியூட்டர் சந்தோஷப்படணும். அவ்வளவுதான்.''



''அது யு டியூப்போ... இல்லை ஃபேஸ்புக்கோ... உங்க அப்பாவைச் சகட்டுமேனிக்குக் கிண்டல் கேலி பண்றாங்களே... அதைப் பத்தி அப்பாட்ட பேசுவீங்களா?''



''ஜெயிச்ச மனுஷங்களை எப்பவும் நிறையக் கிண்டல் அடிப்பாங்க. அப்படித்தான் அப்பாவையும் கமென்ட் பண்றாங்க. அவரோட ரெக்கார்டு இன்னும் முறியடிக்கப் படலை. அவ்வளவு ஏங்க, ரஜினி சாரையே அதுல பயங்கரமா கிண்டல் அடிக்கிறாங் களே. ரஜினி ஜோக்ஸ்னு தினமும் நிறையக் கொட்டுதே? கிண்டலுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டே இருந்தா, அப்புறம் நாம வேற எந்த வேலையையும் பார்க்க முடியாது. டேக் இட் ஈஸி!''


''சினிமாவில் தம்பியோட என்ட்ரி எப்போ?'



''இந்த வருஷக் கடைசி, இல்லைன்னா... அடுத்த வருஷம். நல்லா டான்ஸ் ஆடுறான். கொஞ்சம் வெயிட்டா இருக்கான். ஃபிட்னெஸ் சரிபண்ணிட்டா, டபுள் ஓ.கே. அவனுக்கு ஏத்த முதல் ஸ்க்ரிப்ட்டை அப்பாதான் ரெடி பண்றார். சின்ன வயசுலயே ஸ்டேட் அவார்டு வாங்கினவன். என்னைவிட நல்லா நடிப்பான்.'



''தங்கச்சி இலக்கியாவுக்குக் கல்யாணம் எப்போ?''



''அடுத்த வருஷம். மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அந்தப் பையனை எனக்குப் பிடிக்கணும். என் தங்கச்சிக்குப் பிடிக்கிற பையனை எனக்கும் பிடிக்கும். என் தங்கச்சிக்கு நான்னா ரொம்ப உசிரு. கல்யாணம் ஆயிட்டா அவளை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதுக்காக எத்தனை நாள்தான் வீட்லயே வெச்சுட்டு இருக்க முடியும்? 'பாசமலரே, சீக்கிரம் கௌம்பு’னு இப்பவே சொல்லிச் சொல்லிப் பழகிட்டு இருக்கேன். தங்கச்சிக்கு சினிமா ஆர்வம் இல்லை. படிப்புதான் இஷ்டம். எம்.பி.ஏ. முடிச்சிருக்கா. சினிமா கதை சொன்னா, நல்லா ஜட்ஜ் பண்ணுவா. 'லூஸுப் பெண்ணே பாட்டு ஹிட்டாகும்’னு முதல்ல சொன்னது அவதான். 'எவன்டி உன்னைப் பெத்தான்’ ப்ளே பண்ணப்போ, கொஞ்சம் பயமா இருந்தது. 'இல்லண்ணா, பொண்ணுங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா.'



''ரொம்ப சமர்த்தா இருக்கிற மாதிரி இருக்கு. சரி... இப்ப இண்டஸ்ட்ரியில் யாருக்கு உங்க ப்ளேபாய் பட்டத்தைக் கொடுக்கலாம்?''



''நிறைய விஷயங்கள் பட்டு உணர்ந்த பிறகு, இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு. இனிமே ரொம்ப பெர்ஃபெக்ட்டா இருக்கணும். நானே ப்ளேபாய் இமேஜை விட்ட பிறகு, அப்படி யாரு இருந்தா எனக்கென்ன?''


 http://reviews.in.88db.com/images/stories/nayanthara-simbu-vaalu-movie.jpga

thanx - vikatan

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 10

1. கடவுள் உங்க முன் தோன்றி, உன்னை டைரக்டர் ஆக்குறேன். ஆனால், நீ பிளாக், ட்விட்டர் எழுதுறதை விட்டுடனும்ன்னு சொன்னால் என்ன செய்வீங்க?

என்னோட லட்சியமே டைரக்டர் ஆவதுதான்.. ஆனா அதுக்கான முறையான முயற்சிகளையோ, பயிற்சிகளையோ நான் எடுக்கலை.குடும்ப சூழலின் காரணமா என்னால ஈரோட்டை விட்டு சென்னை போக முடியாத சூழல்.. அப்படி இருக்கும்போது  நீங்க சொன்ன மாதிரி ஒரு சம்பவம் நடந்தா பிளாக்கை விட்டுடத்தயார்..


இந்தகேள்வில ஏதாவது உள்குத்து இருக்கா? என்னை துரத்தும் பிளானா? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொன்னேன்..





2. இவ்வளவு பதிவுகள், ஜோக்ஸ் போடுறதால எப்படியும் அதை பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதனால், நீங்க உங்க சுற்றுப்புறத்தை கவனிக்க தவறும். அப்படி தவறியதால் இழந்தவைகள் எதாவது உண்டா?

சுற்றுப்புறத்தை, நாட்டு நடப்பை கவனிப்பதால் தான், அவற்றை உள் வாங்குவதால் தான் ஜோக்ஸ், கமென்ட்ஸ், ட்வீட்ஸ், பதிவுகள்  போட முடியுது.. திண்னைல உக்காந்து வெட்டி அரட்டை அடிக்கலை, டாஸ்மாக் போய் சரக்கு அடிச்சு ரோட்டோரம் கிடக்கலை.. இழந்தைவைகள் என ஏதும் இல்லை.. குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்கிட்டு தான் இருக்கேன்.. இல்லைன்னா குடும்பம் நம்மை ஒதுக்கிடுமே?



3. வெள்ளிக்கிழமை 11 மணிக்கு நீங்க தியேட்டர்ல இருப்பீங்கன்னு உலகம் அறிந்த ரகசியம். உங்க நெருங்கிய உறவுகள், முக்கியமான வேலை இருக்கு கண்டிப்பா வரனும்ன்னு கூப்பிட்டால் சினிமா அல்லது உறவு இதுல எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க.?


சினிமாங்கறது ஜஸ்ட் எண்ட்டர்டெயிண்ட்மெண்ட்.. உறவுகள் என்றென்றும் எண்ட்டயர்லி அட்டாச்மெண்ட்.. உறவுக்குத்தான் முக்கியத்துவம். ஆனாலும் என்னை நன்கு புரிந்த உறவுகள் என் சுபாவம் உணர்ந்து வெள்ளிக்கிழமைகளில் நெருக்கடி கொடுப்பதில்லை


4. என்னதான் நாம விரும்பி ஒரு செயலை செய்தாலும் சில சமயங்களில் அலுப்பு தட்டும். இல்லைன்னா அடுத்தவங்க விமர்சனத்தால மனசு பாதிச்சு அந்த செயலை ஒத்தி போடுவோம். அதுப்போல பிளாக்கரா ஏன் ஆனோம்ன்னு நீங்க மனசு தளர்ந்து இனி பதிவெழுதக் கூடாதுன்னு நினைச்ச தருணம் இருக்கா?

ஆனானப்பட்ட காந்தியே எதிர்மறை விமர்சனங்களை சந்திச்சவர் தான்.. அதனால என்னைப்பற்றிய தாக்குதல்களை நான் பெரிதா எடுப்பதில்லை.. பதிவுலகில் ஜாக்கி சேகருக்கு அடுத்த படியா தாக்கப்பட்ட தனி மனிதன் நான் தான்.. அவரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் இதுவரை 34.. என்னை தாக்கி எழுதப்பட்டவைகள் 28.. என்னை அதிகம் புரிந்து கொள்ளாத, என்னுடன் பழகாத நண்பர்கள் தாக்கும்போது எனக்கு பாதிப்பு இருக்காது


ஆனா  என் கூடவே பழகி, என்னைப்பற்றி நன்கு புரிந்த நண்பர்கள் தாக்கும்போது வருத்தம் இருக்கும்.. ஆனாலும் நண்பர்களை எதிர் தாக்குதல் செய்வதில்லை.. இது என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம்


5. நம்ம செய்யுற தொழிலை வச்சுதான் நமக்கு மதிப்பு. டீச்சர், போலீஸ்ன்னா பயம், டாக்டர் இன்ஜினியர்ன்னா மரியாதை. அதுப்போல 18+ பட விமர்சனம் போடுறதால உங்களுக்குன்னு ஒரு மாதிரியான இமேஜ் இருக்கு(நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். சாரி சிபி சார்). நம்மளை ஏன் இப்படி எல்லோரும் வில்லனா பார்க்குறாங்கன்னு நீங்க நினைச்சு வருத்தப்பட்டதுண்டா? - ராஜி, வேலூர் ( மேலே உள்ள 5 கேள்விகளும்)

நல்ல கேள்வி. கில்மாப்படம் பார்க்காத ஆண்கள் யாருமே கிடையாது.. பெண்களும் சிலர் பார்க்கறாங்க.. ஆனாலும் அந்தப்பட விமர்சனங்கள் போட்டா எல்லாரும் கிண்டலாவும், கேலியாவும் தான் பார்க்கறாங்க. கில்மாப்பட விமர்சகர்னு நக்கல் பண்றாங்க.. நான் இதுவரை செய்த சினிமா விமர்சனங்கள்  147, அதுல கில்மாப்பட விமர்சனங்கள் 13 தான். ஆனா என்னமோ என் தொழிலே கில்மாப்பட விமர்சனம் தான் அப்டிங்கற மாதிரி பேசிக்கறாங்க.


 நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் உணவு உலகம் ஆஃபீசர்  வேண்டுகோளின் படி 2012 ஜனவரி 1 இல் இருந்து நான் கில்மாப்படம் விமர்சனம் பண்றது இல்லை, ஆனால் படம் பார்த்துடுவேன்.. சில பெண் வாசகிகளும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாங்க. உங்க தளத்தில் கமெண்ட் போட தயக்கமா, சங்கடமா இருக்கு. அதனால அந்த மாதிரி படங்களுக்கு விமர்சனம் பண்ண வேணாம் .. உங்க இமேஜை உடங்க  அப்டின்னாங்க..


-----------------------------




மயிலன்
அண்ணே பதிவுலகுல நாலாவது எடமா? அப்புடி ஒரு நெனப்பா? டூ மச்... சொல்லிபுட்டேன்... ஹி ஹி :) என்ன மாதிரி பெரிய ஆளுங்க இருக்கும்போதே இவ்வளவு தெனாவட்டா?.. ஹ்ம்ம்ம்...

சரி என்னோட கேள்விகள்...

1.தமிழ்மண ரேங்குக்கு மாசாமாசம் எவ்வளவு இலஞ்சம் தர்றீங்க...ஹி ஹி...:) ?

தம்பி, இப்போ  நான் தமிழ் மணத்துலயே இல்லை.. காப்பி பேஸ்ட் போஸ்ட் போடவேணாம்னு அவங்க எச்சரிக்கைகள் கொடுத்தும் என்னால சில சமயங்கள்ல போட வேண்டிய சூழல் வந்தது.. அதனால அவங்க என் தளத்தை நீக்கிட்டாங்க.. தமிழ் மண ரேங்க்ல முதல் இடம் வந்தப்போ நான் லஞ்சம் ஏதும் தர்லை.. லஞ்சம் கொடுத்தா முதல் இடம் வரலாம்னா பலர் அதைத்தர தயாராவே இருந்தாங்க. ஆனா தமிழ் மணம் ஹிட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கறாங்க, துட்ஸை அல்ல



2.வேற யாரோட பதிவையாவது படிக்கும்போது.. "ச்ச...இது நமக்கு தோணாம போயிருச்சே..?" அப்புடின்னு தோனிருக்கா?

யா யா.. ஏராளம்.. சேட்டைக்காரன், கும்மாச்சி, குசும்பன் என நகைச்சுவை கலந்து எழுதுபவர்கள் பல பதிவுகள் அப்படி நினைக்க வெச்சிருக்கு. ராவடி ராம்சாமி எழுதுன பூமியை நோக்கி என்ற வித்தியாசமான தொடர் வந்தப்போ அப்படி நினைச்சேன். அதே போல் ட்விட்டர்ல வேதாளம் எழுதுன ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படிச்சும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஐ ஆம் கார்க்கியின் லேட்டஸ்ட் யூ டியூப் மிக்சிங்க் காமெடி ரிலீட்டட் சென்னை மெகா ட்வீட்டப் நையாண்டி பார்த்தப்பவும் நினைச்சேன்



3.பதிவுலக அரசியல்ல உங்களோட நிலைப்பாடு என்ன? சும்மா எல்லாரும் நண்பர்கள்ன்னு கதை விடாதீங்க...

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் அப்டினு ஒரு பதிவு போட்டேன்.. சும்மா குமுறு குமுறுன்னு குமுறிட்டாங்க. நான் சொன்ன அதே கருத்தை அண்னன் உண்மைத்தமிழன்  அடுத்த நாள் ஆமோதிச்சு பதிவுல சொன்னப்போ எல்லாரும் கமுக்கமா இருந்தாங்க. இதில் இருந்து கிடைக்கும் நீதி பின்புலம் இல்லாம பலம் இல்லாம நாம எந்த காண்ட்ரவர்சியான கருத்தையும் சொல்லக்கூடாது.


4.நீங்க உங்களோட தளத்துல கவர்ச்சி புகைப்படங்கள் போடறத பார்த்து வீட்டுல அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?

எனக்கு பிளாக் இருக்கறதே  வீட்டுக்குத்தெரியாது..  எங்க வீட்டுல நெட் கனெக்‌ஷனே இல்லை. ஆல் ஒர்க் இன் ஆஃபீஸ் ஒன்லி.. ஹி ஹி இந்த கேல்வில பொத்தாம்பொதுவா அண்ணி  அடிக்கறது இல்லையா?ன்னு கேட்டிருக்கலாம். அண்ணி வெளக்கமாத்தால அடிக்கறது இல்லையா?இந்த அளவு வன்முறை தேவையா? :)



5.முக்கியமான அஞ்சாவது கேள்வி...


எனக்கு என் இன்னும் ஹன்சிகா போஸ்டர் அனுப்பல? ஹி ஹி...

நாட்டுல எல்லாருக்கும் 1000 பிரச்சனை.. உங்க பிரச்சனை இதுதானா? அனுப்பித்தொலைக்கிறேன் ; -)



 ராஜபேட்டை ராஜா


பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. எல்லாம் ஜஸ்ட் பொழுது போக்குத்தான்.


நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?


 ஜாலியா கலாய்ச்சுப்போட்ட சில பதிவுகள் பலர் மனதை காயப்படுத்தி இருக்கு. அவற்றை எல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கறேன். இனி வரும் காலங்களில் கவனமா இருந்துக்க வேண்டியதுதான்



கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

ட்விட்டர்ல ஒரு நல்ல ட்வீட் யாராவது போட்டா அதை மற்றவங்க  RETWEET பண்றாங்க . சுருக்கமா அதை RT னு சொல்வோம். அந்த மாதிரி எனக்குப்பிடிச்ச சில படைப்புகளை என் பிளாக்ல  RT பண்றேன்.. ஆனா பலர் நான் ஆனந்த விகடன்ல இருந்து மட்டும் தான் காப்பி பேஸ்ட் பண்றதா தப்பா நினைச்சு எதிர் பதிவு போடறாங்க. அவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது நான் சண்டே இந்தியன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ர்ட்டர், நக்கீரன்,கல்கி என எல்லா இதழ்களில் இருந்தும் பதிவுகள் போடறேன்.


 துக்ளக் இதழ் மட்டும் தான் இன்னும் என் கைக்கு சிக்கலை.. ஆன் லைன் சந்தாதாரர்கள் யாராவது உதவி செஞ்சா குருமூர்த்தியின் பொருளாதாரக்கட்டுரைகள், துக்ளக் சத்யாவின்  காமெடி கட்டுரைகள் போட ஆசை.



கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?


சந்தடி சாக்குல டேய் டா போட்டு பார்க்கறீங்களா? நான் அப்படி நினைச்சதே இல்லை. ஆனா பலர் “ ஏண்டா இவன் பதிவுலகிற்கு வந்தான் என எரிச்சலோட மெயில் சேட்டிங்க்ல நண்பர்களுடன் அளவளாவுவதை கவனிச்சிருக்கேன்


கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ? 

 என் பொண்ணு அபிராமி ஸ்ரீதான்





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை 10 முறை படித்த ஆ ராசா ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

மண்ணின் மைந்தன் தமிழ்மகன் and கடலூர் இனியவன் shared Sundar Vadivel's photo.
1. இன்று உலகக் கடல் தினம்,என்றென்றும் நமக்கு கடலை தினம்:)


-------------------------


2. பெற்றோருக்கு பணிவிடை செய்தல்,அவர்கள் சொல் படி நடத்தல்,அவர்கள் மனம் கோணாமல் இருத்தல் இவை பெண் குழந்தைகளுக்கே உரிய சிறப்புக்குணங்கள்


---------------------------------------


3. தனி நபர் ஒழுக்கம், கண்ணியம், நன்னடத்தை இவற்றை கட்டிக்காப்பதில் பெற்றோரின் வளர்ப்பு  பெரும்பங்கு வகிக்கிறது


---------------------------------

4. முதலீடு செய்பவர்களை போண்டி ஆக்குவது ஈமு,விளம்பரங்களை நம்பி ஏமாறாதே, ஃபிரீயா விடு மாமு




----------------------------


5. கமல் சார், உங்க ட்ரெய்லர் பார்த்தேன்,சரியா புரியலையே? 



கமல் - முழுப்படத்தை பார்த்த எனக்கே புரியலை, உனக்கு எப்படி புரியும்?


-----------------------------------

அவினாசி அம்பானி அண்ட் கோ விளம்பர ஃப்ளெக்ஸு! ஊருஃபுல்லா அடிச்சு ஒட்டி அளப்பறையக் கூட்டிருக்கானுக!


6. வாளுடன் ஒருவர் உங்களை தாக்க வந்தால் முதலில் கேடயம் கொண்டு தற்காத்துக்கொள்ளுங்கள் போதும்,பதில் தாக்குதலை உடனே செய்யத்தேவையில்லை


------------------------------


7. நான் பதின்ம வயதில் பல வஞ்சிகளை கோட்டை விட்ட வாலிபன் :((


-------------------------------

8. காதல் சொல்ல வந்தேன், மனம் தித்தித்தது,உதடு திக்கியது,இதயம் திக் திக்கியது



-----------------------------------


9. போட்டியின்றி எம்.பி.யாகிறார் டிம்பிள் # எம் பி பதவி எல்லாம் எனக்கு சிம்ப்பிள், என் இலக்கு வேற - டிம்பிள்



--------------------------------------


10.  ஒரு காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை கமலிடம் இருந்தும், எப்படி கழட்டி விட வேண்டும் என்பதை பிரபுதேவாவிடம் இருந்தும் கத்துக்கனும்


---------------------------------

11. பொருளாதாரம் குறித்து அச்‌சம் வேண்டாம்: சிதம்பரம் # நோ ஒர்ரி, தமிழன் கவலை எல்லாம் அவனவன் தாரம் பற்றியே!


------------------------------


12. விஸ்வரூபம் ட்ரெய்லரில் கமல் - நான் தான் ஹீரோ, நான் தான் வில்லன் # அதாவது ஹீரொயினுக்கு நீங்க ஹீரோ, புரொடியூசருக்கு வில்லன்?



-------------------------------


13. ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு: ரஞ்சிதா சகோதரி கோர்ட்டில் சாட்சியம் # நித்தி - கடைசி வரை என் மச்சினியை நீ அறிமுகம் செய்யவே இல்ல :(((



---------------------------------

14.நீ கேட்கும் வெற்றிக்கான லிங்க் (LINK)குகளை  உடனே தந்து விட்டால் அந்த சாமியை ”லிங்க்”க சாமி என்று அழை!


-------------------------------


15. கோயில்களில் திருமண முகூர்த்தத்தை வைத்துக்கொள்வது  மண்டப வாடகையை மிச்சப்படுத்தும் சிக்கனத்தில் ஒரு வழி


--------------------------


கேலி சித்திரம் வரைந்தவர் கண்ணோட்டத்தோடு பிரச்சினையை முதலில் பார்ப்போம்....

நமது கல்வி முறை இந்த உயர்ந்த நோக்கத்துடன் தான் செல்ல வேண்டும் என்ற நெறி சுத்தமாக இல்லை....
வாழ்வில் எல்லோருமே முக்கியமானவர்கள் ...இறைவன் அப்படி தான் படைத்திருக்கிறார்....

...See more



16.  சரியான சமயங்களில் சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளாமல் விட்டு விட்டால்  தவறான சமயங்களில் இயற்கை அதே பாடத்தை குரூரமாக கற்றுத்தரும்



-------------------------------


17. என்னை அழ வைத்துப்பார்ப்பது அவளின் தற்காலிக விருப்பம், அவளை சிரிக்க வைத்துப்பார்ப்பதே என் நிரந்தர பழக்கம்


------------------------------


18. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா #  அப்போ அதிலிருந்து சில கேள்விகள்  கேட்கலாமா?



----------------------------

19. சிறையில் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை பத்துக்கும் மேற்பட்ட முறைபடித்தேன்.- ராசா #  10 தடவை படிச்சுமா புரியலை? - கலைஞர்



----------------------



20. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு # அது ஏன் போலி நர்ஸ்ங்க மட்டும் நியூஸ்ல வர்றதே இல்லை?



-------------------


ORWAY... amazing beautiful view :)


21. தமிழகத்தில் உலா வரும் 2,000 போலி டாக்டர்கள்- இந்திய மருத்துவ சங்க ஆய்வு #  நம்ம விஜய் அந்த 10 ஆயிரத்தில் ஒருவரா?



---------------------


22. துப்பாக்கி படப்பிடிப்பில் விஜய் காயம்! # படத்துல நடிச்சதுக்கே இவ்ளவ் காயம்னா அந்தப்படத்தை பார்க்கறவங்க கதி?



--------------------


23. டேக் கேர் என்பது தோழமை,ஐ வில் டேக் கேர் என்பது தாய்மை



----------------------------

24. வெற்றி என்பது பெற்றுக்கொள்ள, தோல்வி என்பது கற்றுக்கொள்ள , முதலில் கற்போம், பின் பெறுவோம்


----------------------


25. திருமண மண்டபங்களில் கடைசி வரிசைக்காரர்கள் தங்கள் அட்சதை மணமக்களை போய்ச்சேராது என தெரிந்தே தான் சம்பிரதாயமாக வீசுகிறார்கள்




----------------------

Sunday, June 10, 2012

அப்பாவிக்கணவர்களுக்கான 30 வகை ரெடி மிக்ஸ்-சமையல் குறிப்புகள்

'டைம் மேனேஜ் மென்ட்’ என்பது, வேலைக்கு செல்பவர் களுக்கு மட்டுமல்ல... இல்லத்தரசிகளுக் கும் அவசியம். சமை யல் அறையில் செல விடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு... வீட்டை அழகு படுத்துவது, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ரிலாக்ஸ் பண்ணுவது போன்றவற்றுக்கு பயன்படுத்த  உதவும் வகையில் '30 வகை ரெடி மிக்ஸ்’ ரெசிபிகளை அளிக்கிறார் சீதா சம்பத்.


''ரெடி மிக்ஸ்களை சுத்தமான, ஈரமில்லாத, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைப்பது முக்கியம். வீட்டிலேயே செய்வதால்... ருசியில் அசத்தலாக இருப்பதுடன், நிறைய நாட்களுக்கு ஸ்டாக் வைத்து பயன்படுத்தலாம்'' என்று நம்பிக்கையூட்டும் சீதாவின் ரெசிபிகளை, கண்களுக்கு பரவசம் அளிக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.


 பாதாம் மில்க் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், குங்குமப்பூ - 15 இதழ்கள், பாதாம் எசென்ஸ் - 2 துளிகள்.

செய்முறை: பாதாம்பருப்பை சுடு நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, நிழலில் உலர வைத்து, வெறும் கடாயில் சூடுபட வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அத்துடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து பொடி செய்யவும். பிறகு, பாதாம் எசென்ஸ் விட்டு நன்கு கலந்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.








தேவைப்படும்போது ஒரு  கிளாஸ்  சூடான பாலில், ஒரு ஸ்பூன் பாதாம் பொடி கலந்து பருகலாம். பாலில் பாதாம் மிக்ஸை தேவையான அளவு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

குறிப்பு: பாதாம் பருப்பை தோல் உரிக்காமல், வெறும் கடாயில் சூடுபட வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

 பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை  டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்  மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்... பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.



பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

 பச்சடி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு -  ஒரு கப், கடுகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சித் துண்டுகள் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் நைஸாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து, ஆறியதும் உளுத்தம்மாவில் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பச்சடி ரெடி மிக்ஸ்.

குறிப்பு: பச்சடி தேவைப்படும்போது ஒரு கப் தயிரில் 2 டீஸ்பூன் அளவு ரெடி மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.

 பாயசம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: சேமியா - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால்  டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 2 டீஸ்பூன்.



செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.

பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.
 
 தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொட்டுகடலை - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  



செய்முறை: வெறும் கடாயில் தேங்காய் துருவலை போட்டு, தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலை, காய்ந்த பச்சை மிளகாயை மிக்ஸியில் பொடிக்கவும். வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை அதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூளை வறுத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஈரம் போக வறுத்து எடுத்து, தேங்காய் கலவை யில் சேர்த்துக் கலந்தால்... தேங்காய் சட்னி ரெடி மிக்ஸ் தயார்!
எவ்வளவு தேங்காய் சட்னி தேவையோ... அந்த அளவுக்கு கலவையை எடுத்து, தண்ணீர் விட்டு கலந்து உபயோகப்படுத்தவும்.
 தக்காளி ரசம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் - 16 (முழு பழம் 4 - தக்காளி பழ சீஸனில் பழத்தை வாங்கி எவர்சில்வர் கத்தியால் 'கட்’ செய்து, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கலாம்), தனியா - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் துண்டுகள் - 2, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தக்காளி, கடுகு, நெய் நீங்கலாக, எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து, கடுகை நெய்யில் வறுத்து கலந்தால்... தக்காளி ரச ரெடி மிக்ஸ் தயார்.
கடாயில் காய்ந்த தக்காளிப் பழ துண்டுகள் 4, 5 போட்டு, தேவையான அளவு ரச மிக்ஸ், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கவும். இந்த ரசத்தை பருப்புத் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.

 ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸ், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,  மிளகாய் வற்றல் - 10, பெருங்காயம் - சிறிய கட்டி, விரலி மஞ்சள் - ஒன்று, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை  - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.




செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... மஞ்சள், வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து நைஸாக பொடி செய்யவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வறுத்து கொரகொரப்பாக பொடித்து, தனியாக வைத்திருக்கவும். வெறும் கடாயில் புளியை போட்டு ஈரம் போக வறுத்து, உப்பு சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை தனியாக வறுத்து கைகளால் தூளாக்கவும். எல்லா பொடியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கலந்து எடுத்து வைக்கவும். இதுதான் ஸ்பெஷல் புளியோதரை ரெடி மிக்ஸ்.
புளியோதரை தேவைப்படும்போது, உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிளறி, தேவையான அளவு புளியோதரை பொடி மிக்ஸ் போட்டு கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து வடாம், சிப்ஸ் தொட்டு சாப்பிடவும்.
 
 மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் - 2 கப், சீரகம் - 4  டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 6 (காரம் வேண்டுவோர் சற்று கூடுதலாக சேர்க்கலாம்), பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய் துருவலை வெறும் கடாயில் உப்பு சேர்த்து வறுக்கவும். துவரம்பருப்பை தனியாக வறுக்கவும். தேங்காய் துருவல், துவரம்பருப்பு, காய்ந்த பச்சை மிளகாய், சீரகம் கலந்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை சேர்த்தால்... மோர்க்குழம்பு ரெடி மிக்ஸ் தயார்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது, ஒரு கப் புளிப்பு தயிரில் தேவையான அளவு மோர்க்குழம்பு மிக்ஸ் கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வரும்போது தீயை நிறுத்தி விடவும்.

 கொத்தமல்லி இலை பொடி 

தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கொத்தமல்லி இலையை ஆய்ந்து சுத்தம் செய்து துணியில் போட்டு  நிழலில் உலர்த்தி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கொத்தமல்லி இலையை சூடான வெறும் கடாயில் போட்டு எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். இதுதான் பச்சை கொத்தமல்லி இலை பொடி.

குறிப்பு: இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம். கொத்தமல்லி கிடைக்காதபோது இந்த ரெடி மிக்ஸை ரசம், சாம்பாருக்கு போடலாம்.

 பஜ்ஜி  போண்டா ரெடி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 500 கிராம், பச்சரிசி - 50 கிராம், மிளகாய் வற்றல் - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் அரைத்து வாங்கி, அதில் தேவையான அளவு உப்பு கலந்து டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் பஜ்ஜி - போண்டா ரெடி மிக்ஸ்.



பஜ்ஜி தேவைப்படும்போது, தேவை யான அளவு ரெடி மிக்ஸுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். பஜ்ஜி செய்யும் விதத்தில் நறுக்கிய வாழைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், பெரிய பச்சை மிளகாய், காலிஃப்ளவர் எது தேவையோ அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு, வெந்து பொன்னிறம் ஆனதும் திருப்பிவிட்டு, பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.
போண்டா என்றால்... நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை  கரைத்து வைத்த மாவில் கலந்து உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 லெமன் ரைஸ்  லெமன் சேவை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: லெமன் சால்ட் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 6, பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை. இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும்     கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல்,  கடலைப்பருப்பை சிவக்க வறுக்கவும். பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில், பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை - இஞ்சியை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும்.   லெமன் சால்ட், உப்பையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி பொடியாக்கி எடுக்கவும். இதில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்தால்... லெமன் ரைஸ் - லெமன் சேவை ரெடி மிக்ஸ் தயார்.

லெமன் சாதம் / லெமன் சேவை தயாரிக்க வேண்டும் என்றால், சாதம் / சேவையில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு ரெடி மிக்ஸ் போட்டு லேசாக கலந்து மூடி வைத்து, 5 நிமிடம் கழித்து பரிமாறலாம். சிப்ஸ், வடாம் இதற்கு சரியான சைட் டிஷ்.

 பருப்பு உசிலி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4.

செய்முறை: துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.



தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து  சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு: கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

 தேங்காய் சாதம்  தேங்காய் சேவை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: தேங்காய் துருவல் -  ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -  தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல்  - 2, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். வறுபட்டதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே கடாயில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக ஈரம் போக வறுத்து எடுக்கவும். தேங்காய் துருவலை உப்பு கலந்து வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும். இதுதான் தேங்காய் சாத ரெடி மிக்ஸ்.

தேங்காய் சாதம், தேங்காய் சேவை செய்ய... தேவையான அளவு ரெடி மிக்ஸை சாதம் (அ) சேவையுடன் சேர்த்து லேசாக கலக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.

 அடை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து - ஒரு கப், மிளகாய் வற்றல் - 3.

செய்முறை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக  அரைத்து வாங்கவும். இதுதான் அடை ரெடி மிக்ஸ்.



அடை செய்யும்போது தேவை யான அளவு அடை  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டி யாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து வழக்கம் போல அடை தயார் செய்யவும்.

குறிப்பு: மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலந்தும் செய்யலாம்.

 மிளகு வடை ரெடி மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு -  ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மெஷினில் ரவை போல உடைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதுதான் மிளகு வடை ரெடி மிக்ஸ்.



வடை தேவைப்படும்போது,  இந்த ரெடி மிக்ஸை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து பிசிறி, 15, 20 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்சம் கலவையை எடுத்து  உருட்டினாற் போல செய்து எண்ணெய் தொட்டுக் கொண்டு,  பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஈர வெள்ளை துணியில் வடையாக தட்டவும் (நடுவில் ஓட்டை போடலாம்). சூடான எண்ணெயில் வடைகளை போட்டு வேகவிட்டு, பொன்னிறம் ஆனதும் திருப்பி விட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 பாகற்காய் சாதம் ரெடி மிக்ஸ் 

தேவையானவை: பாகற்காய் வற்றல் - 50 கிராம், மிளகாய் வற்றல் - 6, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பாகற்காய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். பாகற்காய் வற்றலில் ஏற்கெனவே உப்பு சேர்க்கப்பட் டிருக்கும் என்பதால்,  குறைவான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்யவும்



இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு  டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம். இந்த பாகற்காய் பொடி சுகர், பித்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
பாகற்காய் வற்றல் செய்முறை: பாகற்காயை வட்டமாக கட் செய்து, விதை நீக்கி... தயிர், உப்பு கலந்து ஊற வைத்து, காய வைத்து எடுத்து டப்பாவில் வைக்கலாம். இது நாள்பட இருக்கும். கடையிலும் பாகற்காய் வற்றல் கிடைக்கும்.

 கறிவேப்பிலை குழம்பு பொடி  கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் 

தேவையானவை: கறிவேப்பிலை (சுத்தம் செய்தது) - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  ஆகியவற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும். கறிவேப்பிலையை  தனியே வறுத்து பொடிக்கவும்.
புளியை  உப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன், ஏற்கெனவே தயாராக உள்ள பொடிகளை சேர்த்துக் கலந்தால்... கறிவேப்பிலை குழம்பு பொடி - கறிவேப்பிலை பொடி ரெடி மிக்ஸ் தயார்.
தேவையான அளவு கறிவேப்பிலை குழம்பு ரெடி மிக்ஸில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால்... கறிவேப்பிலை குழம்பு தயார். கறிவேப்பிலை ரெடி மிக்ஸ் பொடியை சாதத்தில் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம்.

 மசால் வடை ரெடி மிக்ஸ்

தேவையானவை: கடலைப் பருப்பு - ஒரு கப், ஜவ்வரிசி - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்புடன் ஜவ்வரிசியை சேர்த்து சன்ன ரவையாக உடைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்து கடலைப்பருப்பு கலவையில் கலக்கவும். காய்ந்த கறிவேப்பிலையை கையினால் நொறுக்கி சேர்க்கவும். இதில் சோம்பை சேர்த்துக் கலந்தால்...  மசால் வடை ரெடி மிக்ஸ் தயார்.



மசால் வடை தேவைப்படும்போது... தேவையான அளவு  ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய துண்டுகளை தேவையான அளவு கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்தக் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 ரவா லட்டு ரெடி மிக்ஸ்

தேவையானவை: ரவை - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை  டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் (நெய்யில் வறுத்தது) - 10, நெய் - சிறிதளவு.



செய்முறை: வெறும் கடாயில் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். மிக்ஸியில் ரவையைப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடியாக்கவும். ரவைப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு கலந்தால்... ரவா லட்டு ரெடி மிக்ஸ் தயார்.
ரவா லட்டு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து... சூடாக்கிய நெய் சேர்த்துக் கலந்து... கலவை சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.

 எள் சாதம் ரெடி மிக்ஸ்

தேவையானவை: எள் (கறுப்பு (அ) வெள்ளை) - ஒரு கப், மிளகாய் வற்றல் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, சூடானதும் மிள காய் வற்றல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துப் பொடித்தால்... எள் சாத மிக்ஸ் தயார்.
தேவைப்படும்போது உதிரியாக வடித்த சாதத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான அளவு எள் பொடி சேர்த்துக் கலக்கவும்.

 மிளகு குழம்பு ரெடி மிக்ஸ்

தேவையானவை: மிளகு, துவரம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், தனியா - ஒரு கப், மிளகாய் வற்றல் - 2, பெருங்காயம் - ஒரு சிறு கட்டி, புளி - பெரிய எலுமிச்சம் பழ அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பெருங்காயம், தனியா, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். மிளகை வாசனை வரும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையையும் வறுக்கவும். அதே கடாயில் புளியை வறுக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக பொடி செய்யவும். இதில் உப்பு சேர்த்து  ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மிளகு குழம்பு மிக்ஸ் தயார்.

மிளகு குழம்பு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் விட்டு கரைத்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
 அங்காயப் பொடி
தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், வேப்பம்பூ - 8 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், சுண்டைக்காய் (காய்ந்தது) - 15, பெருங்காயம் - சிறிதளவு, மிளகாய் வற்றல் - ஒன்று, சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வேப்பம்பூ, கறிவேப்பிலை, சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து, சுக்குப் பொடியை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பெருங்காயம், மிளகாய் வற்றல், தனியா, மிளகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த சுண்டைக்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். முதலில் செய்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்தால்... அங்காயப் பொடி தயார்.

சாதத்தில் தேவையான அளவு அங்காயப் பொடி சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடவும். பிரசவித்த பெண்களுக்கு 12-ம் நாள் முதல் இந்த பொடி கலந்த சாதம் சிறிதளவு சாப்பிட்ட பிறகுதான்  மற்ற உணவுகளை சாப்பிட அனுமதிப்பார்கள். உடல் வலிமை யாகவும், வயிற்று ரணம் ஆறவும் அவர்களுக்கு இதை கொடுப்பார்கள்.

கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ்

தேவையானவை: கண்டதிப்பிலி - 10 குச்சி, மிளகு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி, புளி - எலுமிச்சம் பழ அளவு, நெய், சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புளி, உப்பு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும். கண்டதிப்பிலி, மிளகு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். இந்தப் பொடியை புளி - உப்பு பொடியுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து எடுத்து வைத்த பொடியில் கலந்தால்... கண்டதிப்பிலி ரசம் ரெடி மிக்ஸ் தயார்.

ரசம் தேவைப்படும்போது, ரெடி மிக்ஸை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, அடுப்பில் வைத்து சூடு செய்யவும். நுரைத்து வந்ததும் இறக்கவும்.
வாயு தொல்லை, உடல் வலியிலிருந்து நிவாரணம் அளித்து,  ஜீரண சக்தியை அதிகரிக்கும் இந்த ரசம்.
 
 தேன் குழல் ரெடி மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 6 கப், வெள்ளை உளுந்து - ஒரு கப், எள் (அ) சீரகம் - 10 கிராம், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெள்ளை உளுந்தை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து பச்சரிசியுடன் கலந்து மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். அந்த மாவில் எள் அல்லது சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்தால்... தேன் குழல் ரெடி மிக்ஸ் தயார்.

தேன்குழல் தேவையானபோது ரெடி மிக்ஸ் மாவில் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, மாவை அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். வெந்ததும் திருப்பிவிடவும். சிறிது நேரத்துக்குப் பிறகு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

 வேப்பம்பூ பொடி

தேவையானவை: வேப்பம்பூ - ஒரு ஆழாக்கு, தனியா - கால் ஆழாக்கு, மிளகு - அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4 (விரும்பினால் அதிகம் சேர்க்கலாம்), பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும். தனியா, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியற்றையும் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் நைஸாக அரைத்தால்... வேப்பம்பூ பொடி தயார்.
சாதத்தில் நெய் விட்டு, தேவையான அளவு வேப்பம்பூ பொடி ரெடி மிக்ஸ் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

 புதினா சட்னி ரெடி மிக்ஸ்

தேவையானவை: புதினா இலை - 2 கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (காய வைத்தது) - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன் (வறுத்தது), பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை, கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.



செய்முறை: புதினா இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, காய வைத்து எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புதினா, வறுத்த தேங்காய் துருவல், உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, புதினா கலவையில் போட்டு நன்கு கலந்தால்... புதினா சட்னி ரெடி மிக்ஸ் தயார். சட்னி தேவைப்படும்போது இந்தக் கலவையில் சிறிது எடுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: எலுமிச்சைச் சாறு சிறிது விட்டும் கலக்கலாம்.

 ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
.
செய்முறை: அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து டப்பாவில் எடுத்து வைக்கவும். இதுதான் ரிப்பன் பக்கோடா ரெடி மிக்ஸ்.



ரிப்பன் பக்கோடா தேவைப்படும்போது தேவையான அளவு இந்த ரெடி மிக்ஸ் எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். சூடான எண்ணெய் தயாராக இருக்கட்டும். பிசைந்த மாவை நாடா அச்சில் போட்டு நேரடியாக எண்ணெய் மேல் சுற்றி பிழியவும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

 பயத்தலாடு ரெடி மிக்ஸ்

தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றே கால் கப்,  முந்திரித் துண்டுகள் (வறுத்தது) - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.



செய்முறை: வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை... சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்... பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.

தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

 இட்லி  தோசை மிளகாய்ப் பொடி

தேவையானவை: மிளகாய் வற்றல் - 10 (விருப்பப்பட்டால் அதிகம் சேர்க்கலாம்), கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, எள் - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றல்,  பெருங்காயத்தை வறுத்து எடுக்கவும். அதே கடாயில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். எள்ளை தனியாக (பொரியும் வரை) வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து, டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

 ரவா இட்லி ரெடி மிக்ஸ்

தேவையானவை: ரவை - ஒரு கப், லெமன் சால்ட் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, மிளகாய் வற்றல் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வெறும் கடாயில் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு... சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், முந்திரிப் பருப்பு துண்டுகள், கறிவேப்பிலையை சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து எடுக்கவும். இதனுடன் வறுத்த ரவை, உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதில் லெமன் சால்ட் கலந்து மூடி வைக்கவும். இதுதான் ரவா இட்லி மிக்ஸ்.


ரவா இட்லி தேவைப்படும்போது... தேவையான அளவு புளிப்பு தயிர், ரவா இட்லி மிக்ஸ் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு வழக்கம் போல இட்லி தயாரிக்கவும்.


நன்றி - அவள் விகடன்

அஜித் -ஷாலினி காதல் மலர்ந்த சம்பவம் - அஜித் பொக்கிஷ பேட்டி @ விகடன்

'ஸ்டார்ட் காமிரா... ஆக்ஷன்...’


 'ஏய்...’ என்ற அலறலோடு அஜீத் கத்தியைக் காற்றில் வீச, எதிரே இருந்த ஷாலினியின் வலது கையில் ரத்தக் கோடு. 'கட்... கட்...’ பதறிப்போனது மொத்த யூனிட்டும்.


திட்டமிட்ட காட்சி அதுதான். ஆனால், நிஜமாகவே ஷாலினி யின் கையைக் கத்தி பதம்பார்த்துவிட்டது எதிர்பாராத திருப்பம். ரத்தம் பார்த்த அஜீத் படபடப்பாகிவிட்டார் தாம்தூம் என்று ஆர்ப்பாட்டம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், படப்பிடிப்புத் தளத்துக்கு ஒரு ஆஸ்பத்திரியையே கொண்டுவந்துவிட்டார்.


வலியால் கத்தித் தீர்க்க வேண்டிய ஷாலினி, 'நோ பிராப்ளம்’ என்பதுபோல அமைதியாக இருந்தார்.

''ஷாலினியின் அந்த நிதானம், என்னை ஆழமாகப் பாதித்துவிட்டது. 'ஒரு பெண்ணால் இத்தனை அமைதியாகப் பிரச்னையை எதிர்கொள்ள முடியுமா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது!''- இப்போது சொல்கிறார் அஜீத்.


''அடுத்தவருக்குச் சிறு துன்பம் என்றால் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமா? தான் யார், தன்னுடைய நிலை என்ன... என்பதை எல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் பதற்றமும் மனதில் அக்கறையுமாக ஒருவரால் அல்லாட முடியுமா என்று வியப்பாக இருந்தது!'' என்று சொல்லும் ஷாலினியின் இதழ் ஓரத்தில் வெட்க இழை!


எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது இயல்பு தானே... ஷாலினிக்கும் அஜீத்துக்கும் காதல் அரும்பியது அந்தத் தருணத்தில்தான்!
''அஜீத்தும் ஷாலினியும் சந்தித்துக்கொண்டதே அந்தத் தினத்தில்தான். அஜீத்தான் ஹீரோ, ஷாலினிதான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்த நான், கஷ்டப்பட்டு ஷாலினியைச் சம்மதிக்கவைத்து அழைத்து வந்தேன். அஜீத் தனியாக வும் ஷாலினி தனியாகவும் நடித்து முடித்த நிலை யில், அடுத்த ஷெட்யூலில் காம்பினேஷன். முதல் சந்திப்பிலேயே ரத்தம். ஷாலினியின் அப்பா, 'இது நல்ல சகுனம்தான்’ என்றார். எல்லாம் நல்லவித மாகவே முடிந்திருக்கிறது!'' என்றார் 'அமர்க்களம்’ படத்தின் டைரக்டர் சரண்.


''ஷாலுவை (ஷாலினியைத்தான் இப்படிச் செல்லமாகக் குறிப்பிடுகிறார்) பார்த்தால் ஆச்சர் யம்தான் மிஞ்சுகிறது. '20 வயதில் ஒரு பெண்ணுக் குள் இத்தனை தீர்க்கமான சிந்தனையா...’ என்று பல நேரங்களில் பிரமித்துப்போயிருக்கிறேன்...'' என்கிறார் அஜீத்.


''இதற்கு முன் நான் சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் இந்தப் பெண்ணின் பார்வைக்குள்ளும் செயலுக்குள்ளும் ஒளிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது. சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்... 'என் தேடல் இதை நோக்கித்தானோ...’ நேராக ஷாலினியிடம் போய், 'நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்’ என்று சொன்னேன். என்ன பதில் வருமோ என்ற பதற்றம் எனக்கு!'' பேசுவதை நிறுத்தித் தலையைக் கோதிவிட்டபடி, பின்னால் சாய்ந்துகொண்டார் அஜீத்.


''அஜீத் என்னிடம் வந்து இப்படிக் கேட்டபோது எனக்குள் பெரிய அதிர்ச்சி எல்லாம் எழவில்லை. சொல்லப்போனால், என் மனமே மெள்ள அஜீத் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், நான் அப்பா பொண்ணு. அதனால், 'எனக்கு ஓ.கே... அப்பாவிடம் பேசி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அப்பாவிடம் அஜீத் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்!'' என்றார் ஷாலினி.


''எல்லோருக்கும் சந்தோஷம். சரி... ஆனால், ஒரு டைரக்டர் என்ற முறையில் எனக்குப் பெரிய வருத்தம். 'ஷாலினிங்கிற நடிகையை இழந்துட்டோமே’ன்னு. மற்றபடி, நான் அடம்பிடிச்சு சினிமாவில் இவர்களை ஜோடி சேர்த்தது வாழ்க்கையிலும் ஜோடி சேருவதற்குத்தான் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் சரண்!


ஆக, இனிமேல் ஷாலினி சினிமாவில் நடிக்கப்போவது இல்லை!


''என் ஆசை அதுதான்... நான் ஒரு காட்டாறு மாதிரி யான மனிதன். எதையோ தேடி அருவியாக விழுந்து, பாறைகளில் மோதி, தேவை இல்லாமல் பல விஷயங்களைச் சுமந்துகொண்டு இருக்கிறேன். இப்போதான் எனக்கான கடலைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கமம் ஆகிறேன். இந்தக் கடல் என்னைக் கட்டுப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்!'' என்றார் அஜீத்.


''நடிப்பது என்பது பணத் தேவைக்காகவோ, அதீதப் புகழுக்காகவோ இல்லை. என் சந்தோஷத்துக்காக... இப்போது அடுத்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. அங்கே மாறிவிட்டேன்''- மெலிதான புன்னகையோடு சொல்கிறார் ஷாலினி.


''ஷாலுவைவிட எனக்குத்தான் பொறுப்பு அதிகம். ஷாலுவைத் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக மதிக்கின்றன. அவர்கள் எல்லோரும் எனக்கும் ஷாலுவுக்கும் நல்வாழ்த்துக்களை அனுப்பி இருக்கிறார்கள். இப்போது நான் தமிழ்நாட்டின் மருமகன்'' என்றார் அஜீத்.


''இப்போது எதிர்காலம் பற்றித்தான் அதிகம் பேசிக் கொள்கிறோம். அஜீத்தின் திட்டங்களைச் சொன்னால் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை வரும்'' என்று பெரிய பீடிகை போட்டார் ஷாலினி.


''ஒரு நேரத்தில் ஒரு படம்... 15 நாள் சினிமாவுக்கு... 15 நாள் குடும்பத்துக்கு. இந்தத் தொடையில் ஒன்று, அந்தத் தொடையில் ஒன்று... வலது தோளில் ஒன்று, இடது தோளில் ஒன்று... தலையில் ஒன்று... கழுத்தைக் கட்டிக் கொண்டு முன்பக்கம் ஒன்று, பின்பக்கம் ஒன்று... இப்படி நிறையக் குழந்தைகள். என் ஓய்வு நேரங்கள் எல்லாம் என் ஸ்வீட் ஹார்ட்டுக்கும் ஜூனியர் அஜீத், ஷாலினிகளுக்கும்தான்.


 நல்ல தகப்பனாக... நல்ல ஆசிரியனாக... உண்மையான சேவகனாக, நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு என்று வாழ்க்கையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவைக்கப் போகிறேன்!'' - நெகிழ்ச்சி ததும்புகிறது அஜீத் குரலில்.


ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முடிக்கும் வேகத்தில் இருக்கிறார் ஷாலினி. எல்லாம் முடிந்து இரண்டு குடும்பங் களும் கலந்து பேசி திருமணத்துக்காக ஒரு நல்ல நாளை முடிவு செய்யப்போகிறார்கள். அதுவரையில் இருவர் கை களிலும் இருக்கும் செல்போன்கள் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்கும்... அவர்களின் சந்தோஷ எதிரொலியாக!

நன்றி - விகடன்

முன்னணி வசனகர்த்தாக்களின் - 'நான் ரசித்த வசனம்'

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்: 



 'வியட்நாம் வீடு’ சுந்தரம்: 


பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.



கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.


''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!



ஏ.எஸ்.பிரகாசம்: 


'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...''



'வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.


ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''



விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''


'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.


பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...


ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...



மணிவண்ணன்: 


'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:


அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?


விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...


அதே படத்தில் இன்னொரு சீன்ல...


பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...



அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...



மௌலி: 


பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.



வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.


கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?


பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...



'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!



நன்றி - விகடன்