Sunday, May 22, 2011

கோயில்களில் மண்டல பூஜை எதற்காக? ஆன்மீக கேள்வி-பதில்கள் -சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

http://2.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TOvIBxexHTI/AAAAAAAAALg/wW6VEqjYfzQ/s1600/IMG_4643.JPG 

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


1. கோயில்களில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துகிறார்களே... இதற்கான தாத்பரியம் என்ன?


- கார்த்திக்குமார், இடையபாளையம்

பொங்கல் விழா முடிந்த பிறகு கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் விழா நீளும். திருமணத்திலும் பூணூல் கல்யாணத்திலும் முகூர்த்தம் முடிந்த பிறகு நான்கு நாட்கள் விழா இருக்கும். திருமணம் முடிந்த பிறகும் வரவேற்பு நிகழ்வு என்ற பெயரில் விழா தொடரும். 

தேன்நிலவு என்பதும் அதில் இணையும். ஆலயங்களில் உற்ஸவ நாள் முடிந்த பிறகும் விடையாற்றி உற்ஸவம் என்ற பெயரில் அது தொடரும். காசி - ராமேஸ்வரம் தீர்த்தாடனம் முடிந்தபிறகு, வீட்டில் காலபைரவ ப்ரீதி, கங்கை பூஜை, ஸமாராதனை என்று விழா தொடரும்.
மருந்து சாத்தி இறையுருவத்தை நிலைநிறுத்தி கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் 48 நாட்கள் பூஜை தொடரும். இறைவன் சாந்நித்யம் நிலைத்திருக்க, கும்பாபிஷேகத்தின் அங்கமாகவே அது செயல்படுகிறது. தவிர, நித்திய பூஜைகளில் பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்களின் தாக்கத்தால் மருந்து கலையாமல் நிலைத்திருக்க, குறிப்பிட்ட அபிஷேகப் பொருள்களோடு மருந்தை ஸ்திரப்படுத்தவும் பயன்படுகிறது. 
 
48 நாட்களில் அதன் ஸ்திரத்தன்மைக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.பிணியில் இருந்து விடுபடுவதற்கு கடும் பத்தியத்துடன் சிகிச்சை நடைபெறும். அதன்பிறகு 'மறு பத்தியம்’ என்ற பெயரில் மருந்தில்லாமல் பத்தியம் தொடரும். இது, சிகிச்சை முடிந்த பிறகு 40 நாட்கள் தொடரும். வேலையில் அமர்ந்தவன், பணியில் இணைந்த அன்றே நிரந்தரமாவதில்லை. ஒரு வருஷம் வேலையில் இருந்த பிறகே நிரந்தரமாகிறான். அதுபோலத்தான் இதுவும்.
 
கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 12-வது வருஷத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். அதுவரைக்கும், சாத்திய மருந்து உருக்குலையாமல் இருக்க, வரையறையுடன் நிகழ்த்தப்படும் மண்டலாபிஷேகம் பாதுகாப்பாகவும் இருக்கும்.

------------------------------------------------

2. ஆலயங்களில், எந்தத் திசையை நோக்கி தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும்?

- வி.ரவிச்சந்திரன், சென்னை-18

கிழக்கு, வடக்கு திசைகளை நோக்கி தீபம் இருப்பது சிறப்பு. இடநெருக்கடி காரணமாகவோ அல்லது கிழக்கு-வடக்கு திசைகளை நோக்கி தீபமேற்ற இயலாத சூழலிலோ மேற்கு திசை நோக்கியும் தீபம் இருக்கலாம். ஆனால், தெற்கு தவிர்க்கப்பட வேண்டும்.
 
இரண்டுமுகமாக ஏற்றி வைக்கும் தீபம், கிழக்கு- மேற்காக இருக்கலாம். ஐந்து முகமானால், திசைகளைப் பற்றிக் கவலைப் படாமல் தீபம் ஏற்றலாம். அலங்கார தீபமும், பஞ்சமுக தீபமும் எல்லாத் திசைகளை நோக்கியும் இருக்கும்.

இது ஆலயங்களுக்கு மட்டுமான விதி இல்லை; வீடுகளிலும் தெற்கு திசையைத் தவிர்க்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த சந்நிதிகளைக் கொண்ட கருவறை தீபங்களுக்கு, திசையைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. வடக்கும் தெற்குமாக தொங்கு விளக்கு வரிசைகள் இருக்கும். ஐந்து முகம் வரும் இடங்களில் எல்லாம் திசைகளைப் பார்க்க வேண்டாம்.

ஈசனுக்கு எந்த திக்கிலும் விளக்கு இருக்கலாம். இந்த நியமங்கள் அத்தனையும் நமக்காக ஏற்பட்டவை. ஒளிமயமானவனுக்கு திசை ஏது? திசை என்பது நமது கற்பனை.

தீப ஒளி நான்கு திசைகளையும் நோக்கியே இருக்கிறது; நான்கு திசையிலும் ஒளிப்பிழம்பு இருக்கும். ஒளியின் பரவல் எல்லாத் திசைகளிலும் இருக்கும். திரியையும் தீபத்தையும் வைத்தே திசையை நிர்ணயம் செய்கிறோம்; ஒளியை வைத்து நிர்ணயம் செய்ய இயலாது.

-------------------------------------------

3. வீட்டில் வழிபடும்போது சாம்பிராணி புகை போடுவது போல், குங்கிலிய தூபம் இட்டும் வழிபடலாமா?
 
- ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை-42

தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன் படுத்தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.
 
'அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருந்தார்கள். இவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர் வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் 'பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள்.

அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய வடிவில் தென்பட்டது. அது நெருப்போடு இணைந்ததும் உருகி புகையை வெளியிட்டது; அக்னி பகவான், தன்னுடைய சகோதரரின் சேர்க்கையில் மகிழ்வதாக எடுத்துக்கொள்ளப் பட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆகையால் தூபத்துக்கு குங்குலியம் பயன்படுத்துவது சரிதான். கடவுள் வழிபாட்டில், 16 உபசாரங்களில் 'தூப’ உபசாரமும் ஒன்று. அதற்கு, 'தைவிகஸம்பந்தம்’ இருப்பதும் சிறப்புதான்.

 -------------------------------------------
4. முதல் நாள் மாலை ஸ்வாமிக்குச் செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தை எப்போது களையலாம்? மறுநாள் அலங்காரத்தைக் கலைத்து, நித்திய அபிஷேகம் செய்யலாமா? அல்லது அதற்கும் அடுத்த நாள் காலையில்தான் களைய வேண்டுமா?

- ஆர்.சேதுராமன், திருவூர்

முதல்நாள் சாத்தப்படும் சந்தனக்காப்பை, மறுநாள் காலையில் கலைத்து நித்யாபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று கலைக்காமல் இருந்துவிட்டு, அதற்கும் மறுநாள் கலைப்பது என்பது சரியல்ல. ஸ்வாமிக்கு ஒருநாள் நித்யாபிஷேகம் தடைப்பட்டுவிடும். 
 
தினமும் காலையில் அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும் என்பதால்... அலங்காரத்தில் இருக்கும் அழகை கலைக்க விருப்பம் இல்லாமல் ஒருநாள் தள்ளிப்போடுவது, நித்ய பூஜையை தடை செய்வதாகும். இரவு தாண்டிவிட்டால் அலங்காரம் பழசாகிவிடும். எனவே, மறுநாள் காலையில் களைவதில் தவறில்லை.
 
பூஜை விதிக்கு உடன்படாத நமது விருப்பத்தை செயல்படுத்தக் கூடாது. அலங்காரத்துடன் இரவில் உறங்கச் செல்லும் நாம், மறுநாள் நீராடி புது அலங்காரத்தை ஏற்போம். ஸ்வாமிக்கும் நித்ய பூஜைக்கு குந்தகம் இல்லாமல் செயல்படுவது சிறப்பு.

---------------------

5. 'தீதுறு நக்ஷத்திரங்கள்’ எனும் ஒரு பாடலை, பஞ்சாங்கத்தில் பார்க்க முடிகிறது. அதுபற்றி விளக்குங்களேன்?

- ஜி.ராமதாஸ், ஆடுதுறை

தென்படும் பொருள்களில் நல்லது, கெட்டது இரண்டும் இணைந்து இருப்பது நியதி. அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு, ஏற்கவோ துறக்கவோ வேண்டும். சிலர் 8, 13 ஆகிய எண்ணிக்கையை கெட்டதாகப் பார்ப்பது உண்டு. உயர்வை அளிக்கும் விஷயத்தில், ஒத்துழைக்காதவற்றை ஒதுக்கிவிடுவது உண்டு.
 
கரும்பில் கணுவையும், பலாவில் தோலையும், நெல்லில் உமியையும் களைவோம். இப்படிக் களைய வேண்டியதைக் களைந்து, ஏற்க வேண்டியதை ஏற்பது உண்டு. விண்வெளியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் தரத்தில் ஒன்றானாலும், பயனில் இருக்கும் மாறுபாட்டை கருத்தில்கொண்டு, உயர்வுக்கு ஒத்துழைக்காதவற்றை ஒதுக்குவது உண்டு.
 
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம் பூரட்டாதி, விசாகம், கேட்டை - இவற்றை விலக்கவேண்டும்; இவற்றில் முகூர்த்தமோ, பயணமோ கூடாது என்கிறது சாஸ்திரம் (யமருத்ரஹி...). சுவாதி, சித்திரை, மகம் - இந்த மூன்றும்கூட, குறிப்பிட்ட முகூர்த்தத்தில் விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இப்படி, விலக்கவேண்டியவை பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றுக்கு  தீதுறு நக்ஷத்திரங்கள் என்று பெயர்.

---------------------------------------------
6. என் பேரன் பிறந்தது 2006 ஜனவரியில். எனில், அவனுக்கு எப்போது பூணூல் கல்யாணம் பண்ணிவைக்கலாம்? இந்த வைபவத்தை 8-வது வயதின் துவக்கத்தில் செய்யவேண்டுமா அல்லது 8 வயது பூர்த்தியானதும் செய்யவேண்டுமா?

- ராதா, சேலம்

ஏழு வயது நிரம்பினால் 8-வது வயது ஆரம்பமாகும். அது முடிவதற்குள் செய்ய வேண்டும். வயதைக் கணக்கிடும்போது, கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 6 வயது நிரம்பி 2 மாதங்கள் ஆன நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்தால், 7 வயது பூரணமாகும். அதாவது 8-வது வயதில் ஆரம்பம். அதுமுதல் 8-வது வயது முடியும் வரையிலான காலகட்டத்தில் பூணூல் கல்யாணம் செய்யவேண்டும்.

2012 மார்ச் முடிந்தால் தங்கள் பேரனுக்கு 7 வயது நிரம்பிவிடும் (கர்ப்பகால 10 மாதங்களையும் சேர்த்து). 2013 மார்ச் மாதத்துக்குள், பூணூல் கல்யாணத்தை நடைமுறைப்படுத்தலாம். அதிலும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை, தடங்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால், 2014 மார்ச் வரை நடைமுறைப் படுத்தலாம்.

நன்றி - விகடன்

தஞ்சாவூர் - ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்-ல் டாப் ஆனது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA5tnqrE9ygbL4hZjbai5M2j1ERZ1QQ61q7XVRAFmhd5s0rAS9dLiOZLB5FncnfqbuYPlDtm3Y4rUe1wxNBJH-cBhaTfG6e8UfjUmgL2xzXLS6wL6EYaPwqIIRFqmzxU3fYf9mPdd3fhQ/s1600/3442137158_4d7aedc55f.jpg

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி!


ணிக்கவே முடியாத விஷயங் களில் ஐந்தை குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அதில் நிச்சயம் ரியல் எஸ்டேட் விலை நிலவரமும் ஒன்றாக இருக்கும்! அந்த அளவுக்கு இன்று இத்துறை கணிப்புக்கும் யதார்த்தத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்குமான வித்தியாசத்தை விடுங்கள், அடுத்தடுத்த இடத்திலேயே விலையில் அவ்வளவு வித்தியாசங்கள் இருப்பது இத்துறையில்தான்சாத்தியம்.


இந்நிலையில் வாசகர் களுக்கு மனை, வீடுகளில் முதலீடு செய்வதற்கு உதவியாக ஒவ்வொரு நகரத்துக்கும் நமது நாணயம் விகடன் டீம் சென்று அப்பகுதியை 'இஞ்ச் பை இஞ்ச்’ ஆக அலசி விசாரித்து, விலை விவரங்களில் ஆரம்பித்து, எந்தப் பகுதியில் முதலீடு செய்தால் பின்னாளில் நல்ல லாபம் தரும், எந்த பகுதிகளில் எந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதுபோன்ற பல தகவல்களை திரட்டித் தர முடிவு செய்துள்ளது

. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய பகுதி. இது முதலீடு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் முடிவுகளை நீங்கள்தான் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாம்விசாரித்ததன் அடிப்படையில்  தோராயமாகத்தான் நிலவரங்களைத் தந்திருக்கிறோம் என்பதையும் மனதில் கொண்டு நீங்களும் நன்றாக விசாரித்து அதன்பிறகே முடிவெடுக்கவும்.

முதற்கட்டமாக இந்த இதழில் ஆச்சரிய வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கும் தஞ்சாவூர் நகரம் இடம்பெறுகிறது!


பெயர் சொல்லும்படியாக பெரிய நிறுவனங்களில்லை, பொருளாதார மண்டலங்கள் இல்லை, ஐ.டி. கம்பெனிகள் இல்லை... ஆனாலும் தஞ்சையில் கடந்த பத்து வருடங்களில் ரியல் எஸ்டேட் பிஸினஸ்  மட்டும் அசுரத்தனமான வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது.

.. இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.


தஞ்சாவூர் நகரம் எப்படி இந்தளவுக்கு வளர்கிறது என்ற மர்மம் அந்த ஊர்க்காரர் களுக்கே பிடிபடவில்லை! ஒரு மேஜிக் மாதிரி இருக்கிறது என்று ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், கூர்ந்து பார்த்தால் இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது உயர்கல்வித்துறையின் பங்களிப்பு என்பது தெரியவருகிறது.

அரண்மனை, பெரியகோயில் போன்ற இடங்களில் சுற்றுலாவாசிகளாய் மட்டுமே பார்க்க நேர்ந்த வெளிநாட்டுக்காரர்களையும், மற்ற மாநிலத்துக்காரர்களையும் இப்போது மாணவர்கள் ரூபத்தில் சர்வசாதாரணமாக எங்கும் பார்க்கமுடிகிறது. 

தமிழ்ப் பல்கலைக் கழகமும், பெரியார் மணியம்மை, சாஸ்திரா, பொன்னையா ராமஜெயம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களும், மருதுபாண்டியர், மாணிக்கம், பாரத், விவேகானந்தர், கிங்ஸ், அஞ்சலையம்மாள், அக்ஸிலியம் போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாடத்திட் டங்களை வழங்குவதால் தஞ்சாவூர் நகரம் உயர்கல்விக்கான நகரமாக மாறிவருகிறது.

விரிவுபடுத்தப்படும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், அரியலூர் சாலைகளை இணைக்கும் வகையில் போடப்பட்டுள்ள புறவழி சாலைகளும்  கூடுதலாக இந்த வளர்ச்சிக்குக் கை கொடுக்கிறது. 

இந்த கிடுகிடு வளர்ச்சிகளால் கடந்த மூன்று வருடங்களுக்குள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவதாகச் சொல்கி றார்கள் ஏரியாவாசிகள்.

''1987-ல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கட்டுமென்று இங்கு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி குடிவந்தேன். அப்போது, ஒரு சதுர அடி மூன்று ரூபாய் ஐம்பது காசு. பத்திரப் பதிவு செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தமே 9,500 ரூபாய்தான் செலவானது. ஆனால், இன்று ஒரு சதுர அடி மட்டுமே ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிட்டது என்கிறார் இ.பி. காலனியில் குடியிருக்கும் சுகுமாரன்.


இதே நிலைதான் புது ஹவுசிங் யூனிட் ஏரியா, காவேரி நகர் பகுதியிலும். மாதாகோட்டை ரோடு இடதுபக்கம் சதுர அடி 500-லிருந்து 800 ரூபாய்வரையும், வலதுபக்கம்  700-லிருந்து 800 ரூபாய்வரையும் விலை போவதாகச் சொல்கிறார்கள். இதுவே இ.பி.காலனி உள்ளேயும், காவேரி நகர் விரிவு உள்ளேயும் 600 ரூபாய்க்கு விலை போகிறது.

 விளார் ரோடு, புதுவன்சாவடி பகுதிகளில் புதிதுபுதிதாக லே அவுட்களைப்  பார்க்க முடிகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி சாலையில் பஞ்சுமில் பகுதிக்கு அடுத்து ஆர்வம் காட்டாதவர்கள் இப்போது மளமளவென வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 பாரத் காலேஜ் பின்புறம், ரகுமான் நகர் போன்ற நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் இப்போது ஹாட் ஸ்பாட். இதுவே மேல வஸ்தா சாவடி, ஆர்.டி.ஓ. ஆபீஸ், பிள்ளையார்பட்டி ஆகிய இடங்களில் ஆவரேஜ் ஆகப் போய்க்கொண்டிருக்கிறது. பைபாஸ் சாலை வந்ததிலிருந்து வல்லம் பகுதியும் இப்போது விலை எகிறுவதாகச் சொல்கிறார்கள்.

அப்படியே விளார் ரோடு வழியாக பைபாஸை ரவுண்டு கட்டினோம். புதுவன்சாவடியில் 120-130, விளார் ரோடு 120, பட்டுக் கோட்டை பைபாஸில் 300, கீழ வஸ்தாசாவடி பகுதிகளில் 200-250-300 எனவும், கும்பகோணம், திருவையாறு பைபாஸ், பள்ளியக்ர ஹாரம் பகுதிகளில் பூஞ்சோலை நகர், ராஜீ நகர், ராகவேந்திரா நகர், விவேகானந்தா நகர் என பல லே அவுட்கள் 250-350 என கை மாறுகின்றன.



திருச்சி சாலையோடு திருவை யாறு சாலையை இணைக்கும் வட்டச் சாலைக்காக ஐடியல் ஓட்டல் தாண்டி அருகே ஜம்பு காவிரி வடகரை பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளதால் ராஜேந்திரன் ஆற்காடு, வடகால், வெண்ணலோடை, சர்க்கரை சாமந்தம் கிராமங்களில் ரியல் எஸ்டேட்காரர்கள்  இடங் களை மொத்தமாக வாங்கி வருவதாகச் சொல்கிறார்கள்

. இன்னும் சில ஆண்டுகளில் இந்த பகுதிகளின் பிளாட் மதிப்பு உயர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த பகுதிகளில் நிலத்தை வைத்திருப்பவர்கள் விற்பதற்கு அவசரம் காட்டவேண்டாம். இதை ஒட்டிய அம்மன்பேட்டை பகுதியில் ஒரு சதுர அடி 200 வரை எகிறுகிறது.


பொதுவாக தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்துவரும் நிலையி லுள்ளதால், பெரிய அளவில் மோசடிகள் நடப்பதில்லை என்கிறார்கள். ஆனாலும், தஞ்சையின் நான்கு பக்கங்களிலும் பெரிய பெரிய லே அவுட்களைப் போட்டு வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலங்களை உரிமையாளர்களிட மிருந்து வாங்குவதில் ஏற்படும் குளறுபடிகளோடே விற்பனை செய்கிறார்களாம். இதனால் கூடுதல் கவனம் தேவை. 

நகராட்சி பகுதிக்குள் இடம் வாங்கி வீடுகட்டுவதைவிட, கொஞ்சம் அரை பர்லாங் தள்ளி ஊராட்சி பகுதிக்குள் வாங்கும் போது வீடுகட்ட அனுமதி வாங்கும் நடைமுறைகள் சுலபமாக இருப்பதாகவும், அதேபோல மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றுக்கான அலைச்சல்கள் குறைவதாகவும் சொல்கிறார்கள்.

அடுக்குமாடிக் குடி யிருப்புகள் வளரவில்லை என்றாலும், சமீபகாலமாக அங்கொன்றும் இங்கொன்று மாக சில பில்டர்கள் கட்டி வருகிறார்கள். ''தனி வீடு கட்டுவதற்குரிய இடங்கள் தாராளமாகக் கிடைப்பதால், மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை விரும்புவ தில்லை'' என்கிறார் கட்டடகான்ட்ராக்டர் த.அண்ணாதுரை.  ''கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், குழந்தைகளின் படிப்புக்காக நகரத்துக் குள்ளேயே ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டிவிட்டேன்'' என்கிறார் பள்ளியக்ரஹாரம் ஏ.கருணாகரன்.

http://www.indiamike.com/photopost/data/501/Th_Periya_Kovil.JPG
இதுபோன்ற காரணங்கள் பல இருந்தாலும், தஞ்சையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாமென்பதும், பேருந்து, ரயில் வசதி அடிக்கடி இருப்பதால் திருச்சியில் இடம் வாங்க முடியாதவர்களும் தஞ்சையில் மனை வாங்கிப் போடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. சமீபகாலமாக மேன்சன் மாதிரிகட்டி வாடகைக்கு விடுவதும் சக்கைபோடு போடுகிறது.


-மகேந்த்.

படங்கள்: கே.குணசீலன்.
டிப்ஸ்
புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உடனே வீடு கட்டி குடிபோக வேண்டுமென்றால் பஞ்சுமில் பகுதி, திருவேங்கடம் நகர்,  நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி.காலனி, எழில் நகர், ராஜப்பா நகர், மாதாகோட்டை ஊராட்சி, நீலகிரி ஊராட்சிகளில் மனைகள் கிடைக்கிறது. டி.பி.எஸ்.நகர், கண்ணன் நகர் இடங்களிலும் மனைகள் உள்ளன. இவையல்லாமல் கரந்தை, ரெட்டிபாளையம் பகுதிகளிலும் தோதான இடங்கள் உள்ளன. இடத்தை வாங்கிப்போட்டு பணத்தை இரட்டிப்பாக்க நினைப்பவர்கள் திருச்சி சாலை, வல்லம் பகுதி, மாரியம்மன் கோவில், அம்மன்பேட்டை பகுதிகளில் வாங்கிப்போடலாம். மெயின் சாலையிலிருந்து உள்ளே போகப்போக விலை குறையக்கூடும். உங்கள் தோதுபடி தூரத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

புரோக்கர்கள், பவர் வாங்கியவர்கள், கை மாற்றிவிடுபவர்கள் என சகட்டு மேனிக்கு ஆட்கள் தஞ்சைக்குள் வலம் வருகிறார்கள். உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டுமே அணுகுங்கள். ஹவுசிங் யூனிட் ஏரியா, அருளானந்தம் நகர், யாகப்பா நகர் போன்ற இடங்களில் இடமோ, வீடோ கைமாறுவது வெளி உலகுக்கு வருவதில்லை, அரசியல் புள்ளிகளின் ஆசீர்வாதத்தில் உள்ள பகுதியானதால் இங்கு இடம் பார்ப்பது சாமான்யமில்லை.

நீல வண்ணக்கண்ணா வாடா.... ( ஆன்மீகம்)

http://nphoto-media-1.cdn.mobshare.in/11408.jpg 
 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!



ஞ்ச பூதங்களால் ஆனது நம் உடல். அதேபோல், பரப்பிரம்மத்துக்கு பஞ்சப் பிராகாரங்கள் உள்ளன. அவற்றை, பரரூபம், வியூக மூர்த்தம், விபவாதாரம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என ஐந்து நிலைகளாக உள்ளன என்று பார்த்தோம், இல்லையா?!

மேலும், பரரூபம் என்பது ஸ்ரீவைகுண்டநாதனின் திருக்கோலம்; அதாவது ஸ்ரீமந் நாராயணன். வைகுண்டத்தில் பரந்தாமன் எழுந்தருளியுள்ள நிலை. வியூக மூர்த்தம் என்பது, திருப்பாற்கடலில் திருமாலின் திருக்கோலம்; அதாவது அவதாரங்களுக்கு முந்தைய திருமேனி. விபவாதாரம் என்பது, திரு அவதாரத் திருக்கோலங்கள். அந்தர்யாமி என்பது, நமக்குள் குடிகொண்டிருக்கிற இறைத் தன்மையின் அரூப நிலை. ஆலயங்களில் இன்றைக்குத் தரிசிக்கக் கிடைக்கிற திருமேனிதான், அர்ச்சாவதாரக் கோலம் என்றும் பார்த்தோம்!

கீதையில், முதலாவது திருநாமம் துவங்கி, 122-வது திருநாமம் வரை, பரரூபமாக இருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனைப் பற்றியும், அவனது பெருமைகளையும் விவரிக்கின்றன. அடுத்ததாக, 123-வது திருநாமத்தில் இருந்து 146-வது திருநாமங்கள் வரை, திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ள பரந்தாமனின் வியூகாவதாரத்தை எடுத்துரைக்கின்றன.

இதையடுத்து, 147-வது திருநாமத்தில் இருந்து இறுதி வரைக்கும், விபவாதாரத்தைப் பற்றி மிக அருமையாக, ஆத்மார்த்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.
 http://www.kirtimukha.com/surfings/SriKrishna/krishnalilas/andalkrishna.JPG
'சரி.. அப்படியெனில், அந்தர்யாமியையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லவில்லையா? விவரிக்கவில்லையா?’ என நீங்கள் கேட்பது புரிகிறது.
அதாவது, அந்தர்யாமி என்கிற உள்ளுக்குள் இருக்கிற அரூப நிலையை, பரரூபத்துடனும்... அர்ச்சாவதாரத்தை விபவரூபத்துடனும் சேர்த்து, திருநாமங்களாக அழகுறத் தரப்பட்டுள்ளது.

எத்தனை அவதாரங்கள்... எவ்வளவு திருநாமங்கள்! ஆனால் என்ன... 697-ல் துவங்கி 770 வரைக்கும்; அதையடுத்து 989 முதல் 992 வரைக்கும் எந்த அவதாரத்தின் மகிமையையும் மகோன்னதத்தையும் விவரித்துள்ளார்கள், தெரியுமா? கிட்டத் தட்ட 78 திருநாமங்களில், பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே சிலாகித்துள்ளது கீதை. பின்னே... பாட்டுடைத் தலைவன் ஸ்ரீகிருஷ்ணன்தானே?!

அதில் முக்கியமானதும் முதலாவதுமான திருநாமம், வசுரேதாஹ! வசுரேதன் என்பது ஸ்ரீகண்ணனைக் குறிக்கும் திருநாமம். வசு என்றால் ஜோதி என்று பொருள். வசுரேதன் என்றால், திவ்வியமான ஜோதி வடிவினன் என்று அர்த்தம்.
பராசர பட்டர், தன்னுடைய சீடன் மைத்ரேயரிடம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை விவரிக்கிறார். 

அப்போது, 'கம்சனின் தொல்லை தாங்க முடியவில்லை. அவனால் தேசத்தில் அனைவருக்கும் நிம்மதியே போய்விட்டது. நீங்கள்தான் அருளவேண்டும்’ என்று ஸ்ரீமந் நாராயணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்! அப்போது, திருமால்... ''என் தலையில் இருந்து, வெளுத்த முடி ஒன்றையும் கறுத்த முடி ஒன்றையும் கிள்ளிப் போடுகிறேன். வெளுத்த முடி,

ஸ்ரீபலராமனாகத் தோன்றுவான். கறுத்த முடி, நானாகவே அவதரிப்பேன்'' என்று சொல்லி அருளியதுடன், அப்படியே பிறப்பெடுத்தாராம் ஸ்ரீமந் நாராயணன். ஆக, பகவானின் தலைமுடியானது கூட தேஜஸ் பொருந்தியதாக, ஒளி படைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தன்னுடைய சீடனுக்கு அற்புதமாக விளக்கியுள்ளார் பராசர பட்டர்.

ஆக மொத்தத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஒளிமயமானவன்; தேஜஸ் நிரம்பியவன் என்பதையே அட்சரம் பிசகாமல் வலியுறுத்துகின்றனர் சான்றோர்!

நம்மாழ்வார் மட்டும் சும்மா இருந்துவிட்டாரா, என்ன? ஒளி, ஒளி, ஒளி... ஒளிமயமானவன் ஸ்ரீகிருஷ்ண பகவான் என்பதை தன்னுடைய பத்துப் பாடல்களில் மிகப்பிரமாதமாக எடுத்துரைத் திருக்கிறார். 'ஆதி எம் சோதி உருவை அங்கு வைத்தாற் போன்று’ என்று பாடுகிறார்.

அதாவது, ஆதியும் ஜோதியுமான உருவம் கொண்டிருக்கிற  பரந்தாமன், பரமபதத்தில் இருக்கிற நிலையைப் போலவே இங்கேயும் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்தான் என்று உருகுகிறார் நம்மாழ்வார். அதுமட்டுமா? எத்தனை இடர்கள் வந்தாலும், ஸ்ரீகண்ணனின் நாம சங்கீர்த்தனங்களைச் சொல்லி வந்தோமானால், வாழ்வில் உய்யலாம் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

அதுவும், பகவானின் திருநாமங்களை எப்படிச் சொல்ல வேண்டுமாம்?

ஆடிக்கொண்டே திருநாமங் களைச் சொல்ல வேண்டுமாம்! அந்த ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? தலை காலைத் தட்டவேண்டும்; கால்கள் தலையைத் தட்ட வேண்டும். 'என்னடா இவன்... தலை கால் புரியாம ஆடுறானே...’ என்போமே! அந்த அர்த்தத்தில், தன்னையே மறந்து இறைவன் ஒருவனையே நினைந்து, ஆடவேண்டும் என்கிறார் நம்மாழ்வார்.

'இந்தக் காலத்தில், இப்படி ஆடினால், சுற்றியிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா? கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’ எனும் கேள்வி எழலாம். இப்போது நம்மிடையே தோன்றியுள்ள வினாவுக்கு, அப்போதே விடை அளித்துவிட்டார் நம்மாழ்வார்.

எப்படி?

பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லியபடி தன்னையே மறந்து ஆடும்போது, எவரேனும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள் என்றால், அதற்காகக் கவலைப் படாதீர்கள்; வெட்கப்படாதீர்கள்; சட்டென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு, நாமசங்கீர்த்தனம் சொல்வதையும் நிறுத்திவிட்டு, உடைந்துவிடாதீர்கள். அவர்கள் கைத்தட்டுகிறார்கள், அல்லவா? அந்தக் கைத்தட்டலுக்குத் தக்கபடி, உங்களின் ஆட்டத்தை மாற்றி ஆடுங்கள்; திவ்விய நாமங்களைச் சொல்லிக் கொண்டே ஆடுங்கள்.

உங்களின் ஆட்டமும்பாட்டமும் பார்த்து, மலைத்துப் போய், வியந்தும் நெகிழ்ந்துமாக, அவர் களும் உங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு வந்துவிடுவார்கள்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்குவார்கள் என குழம்பிய மனத்துக்குத் தெளிவூட்டுகிறார் நம்மாழ்வார்.

ஒரு விஷயத்தைத் துவங்குவதுதான் நம்முடைய வேலை; அதைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது இறைவனின் கடமை. திருப்பதிக்குப் போய், க்யூவில் நிற்பதுதான் நம்முடைய வேலை. அந்தக் கூட்டம் நெட்டித் தள்ள, நெட்டித் தள்ள... திருவேங்கடமுடையானுக்கு அருகில் போய்த்தானே ஆகவேண்டும்?! 
 http://mala108.files.wordpress.com/2007/09/img_4254.JPG
அதேபோல், பகவானின் நாமசங்கீர்த்தனம் செய்து பாடிக் கொண்டிருப்பது தான் நம்முடைய பணி; தன்னுடைய திருவடியில் நம்மைச் சேர்த்துக் கொள்வது இறைவனின் கடமை! நம்முடைய பணியைச் செம்மையாகச் செய்து கொண்டிருந்தால், இறைவன் தனது கடமையை, கருணையும் வாஞ்சையும் பொங்க, சீக்கிரமே நிறைவேற்றுவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!


கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் தெரிவிக்கிறான்...''நான் பிறக்காதவனாகவே; நான் சரீரத்துடன் பிறக்காதவனாகவே; அப்படிப் பிறந்தாலும், சர்வேஸ்வரத்தை விடாதவனாகவே...'' என அருள்கிறார்.

அதாவது, மனிதர்களைப் போல் உடம்புடனோ அவர்களுக்கு உண்டான கர்ம நியதிகளுடனோ பிறக்கவில்லை. அப்படி மனித உருவெடுத்து வந்தபோதிலும், என் குணங்களை, எந்தத் தருணத்திலும் விட்டுவிலகவில்லை என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆக, தன்னுடைய குணங்களை எந்தத் தருணத்திலும் விட்டு விலகாத ஸ்ரீகிருஷ்ணர், அவருடைய குழந்தைகளான நம்மை மட்டும் விட்டுவிட்டு, விலகிவிடுவாரா என்ன?

பகவானை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைப்போம்; அவர் நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைப்பார்!

நன்றி விகடன்

Saturday, May 21, 2011

அல்சர் சரி ஆக என்ன பண்ணனும்? அல்சர் வராம தடுக்க என்ன பண்ணனும்?

http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_57375735045.jpg 
 
''அல்சர் குணமாக ஆறு வேளை சாப்பாடு!''


வருமானத்தில் காட்டும் அக்கறையை வயிற்றுக்கு காட்டுவது இல்லை. விளைவு, அல்சர் என்கிற வயிற்றுப் புண்!  

அல்சரை தவிர்க்க இங்கே ஐடியாக்கள் வழங்குகிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல் மற்றும் கல்லீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் எம்.ஹரிஹரன்...

''நாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவை தள்ள வேண்டியது அவசியம்.

இது எப்படி என்றால் வண்டிக்கு பெட்ரோல் போடுவது போல்தான். ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டாச்சு.. வண்டியோட மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெட்ரோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும். அதுபோல்தான் மனிதனின் வயிறும்.

சிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள். அல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விஷயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணி வாக்கில் அவசியம் சாப்பிட வேண்டும்.
 http://www.tamilulakam.com/news/upload/others/Tu_12457.jpg
அப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை, உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் எபெக்டிவ் ஆக செயல்பட முடியாது. ஒர்க் பெர்பாமன்ஸ் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடாது!'' என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி விளக்கினார்.



'' சிலர் உணவை தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கெனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது  கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்!
 
  நீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலை பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் புண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPR-BAEQko8pxJ6Z7t9lzB55iz-Ybg3AsG2EdkuLj_d7wdEW85w8Lqv4lukpGMsAyKMmOvxclmhLPNP7s8VhvNkmhyRbDe2NR0j_MKJyO342-pkRY_wKIoQei-6Q-rixQTS73KPxvEt80/s1600/doctor-funny.jpg
சில சமயம் மயக்கம்கூட வரும்.
அல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம்.

எண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரை தவிர்ப்பதோடு, இதர லைஃப் ஸ்டைல் நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்!'' - நம்பிக்கையாகச் சொல்கிறார் டாக்டர் ஹரிஹரன்.


இதுவும் காரணம்
1986-ம் ஆண்டுக்கு முன்பு வரை அல்சர் வருவதற்கு ஒரே காரணம் நேரம் தவறி சாப்பிடுவதுதான்! பிறகு அல்சர் வருவதற்கு ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்கிற தொற்றுக் கிருமியும் காரணம் என கண்டறியப்பட்டது. அதிகம்பேருக்கு இந்த கிருமி மூலம்தான் அல்சர் பரவி வருகிறது. சிலர், 'நான் நேரத்துக்கு சரியாக சாப்பிட்டும் எனக்கு அல்சர் வந்துவிட்டது’ என்று வருந்துவதற்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

காரணங்கள் பல..!

தலைவலி, காய்ச்சலுக்கு கண்டபடி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது...
ஆன்ட்டி பயாடிக் மாத்திரையை பிகாம்ப்ளக்ஸ் மாத்திரை உடன் சேர்த்து சாப்பிடாதது...
உணவைத் தவிர்த்து காபி, தேநீர் என அதிகம் பருகுவது...
பர்கர், ஃபிரைட் ரைஸ் என செரிக்கக் கடினமான உணவுகளை உண்பது...
தொடர்ந்து பீடி, சிகரெட் புகைத்தல்...
பாட்டில் பானங்களை அதிகமாகப் பருகுவது...
ஊறுகாய் உள்ளிட்ட காரமான உணவுகள் சாப்பிடுவது.
 நன்றி - விகடன்

ரஜினி விஷயத்தில் வெளி வரும் வதந்திகளை நம்பாதீர்... ...நடப்பது என்ன?

http://10hot.files.wordpress.com/2009/02/kamal-gowthami-rajini-latha-rajnikanth-tamil-actors-sarees1.jpg

'ரஜினி நன்றாக இருக்கிறார்... உற்சாக​மாக இருக்கிறார்...’ என்று கூறி வந்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ​மனை நிர்வாகம், கடந்த 18-ம் தேதி நள்ளிரவு, 'ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்’ என்கிற பகீர் தகவலை வெளியிட, தமிழகம் மீண்டும் தத்தளிக்கிறது. 

'பிரபல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முக்கியப் பிரமுகர்களின் உடல்நிலை ப்ளஸ் சிகிச்சை விவரங்களை, அவ்வப்போது அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’என்பது எழுதப்படாத விதி. சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்​பட்டபோது, ரஜினி நிலைமையை அரசுக்குச் சொன்னது அந்த மருத்துவமனை. அதனால்​தான், சி.ஐ.டி. காலனி வீட்டில் இருந்த கருணாநிதி விரைந்து வந்து பார்த்தார்.
 
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அதிபர் வெங்கடாசலம், ரஜினியின் நெருங்கிய நண்பர். அவர், 'சிகிச்சை ரகசியம் பாதுகாக்​கப்படும்’ என்று உறுதிமொழி கொடுக்கவே, ராமச்​சந்திராவில் அட்மிட் ஆனார் ரஜினி. ஏற்கெனவே அவரைப்பற்றிப் பரவிய வதந்திகள் கொஞ்சம் தணிந்த நிலையில், இப்போது மீண்டும் பதற்றம்!
 http://onlysuperstar.com/wp-content/uploads/2009/03/rajini-with-daughterpj.jpg
வதந்திகளை நம்பாதீர்கள்

கடந்த 19-ம் தேதி மதியம் மருத்துவமனை வளாகத்தில் மருமகன் தனுஷ§டன் பத்திரிகையாளர்களை சந்தித்தார், லதா ரஜினிகாந்த், ''முதலில் என் கணவருக்கு வைரஸ் கிருமியால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இசபெல்​லாவில் சேர்த்தோம். வீட்டுக்கு வந்தவுடன் உடம்பில் சமநிலையற்ற தன்மை ஏற்பட்டது. அதனால், இப்போது ராமச்சந்திராவில் சேர்த்து உள்ளோம். டாக்டர்கள் சிறப்பாகச் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொற்றுநோய் காரணமாக தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பார்வை​யாளர்கள் தொல்லை அதிகம் இருப்பதால், ஐ.சி.யு. பிரிவில் இருக்கிறார். அவரைப்பற்றி வெளிவரும் வதந்தி​களை யாரும் நம்பாதீர்கள். அவர் நலமாகவே இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்துத் தவறான தகவல்​களை எழுதாதீர்கள். ரஜினி நலம் பெற வேண்டி, நாடெங்கிலும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதை நான் அறிவேன். நாங்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறோம்!'' என்று விளக்கம் கொடுத்தார்.

அருகில் இருந்த தனுஷ், ''ரஜினி சாரின் உடல்நிலை பற்றி யாரும் கவலைப்படாதீர்கள். நலமாகவே இருக்​கிறார். ரசிகர்கள், அவரவர் சொந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள்...'' என்றார்.


ஜெ. வெயிட்... விஜி விசிட்!
 http://www.voicetamil.com/wp-content/uploads/2009/10/rajini-vijay-srikanth-jayalalitha.jpg
தேர்தலில் வெற்றி பெற்றதும் ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருக்கும் ராமச்சந்திராவில் இருந்தபடியே வாழ்த்து தெரிவித்தாராம், ரஜினி. பதவியேற்பு முடிந்து அரசுப் பணிகளில் அசுர வேகத்​தில் இறங்கிவிட்ட ஜெயலலிதா, 'ரஜினிக்கு உடல்நிலை தேறியதும் தகவல் சொல்லுங்கள்... நானே வந்து பார்க்கிறேன்’ என்று குடும்பத்தாரிடம் தெரி​வித்துள்ளார்.

இந்த நிலையில், ராமச்​சந்திராவுக்கு திடீர் விசிட் அடித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரஜினியை சந்தித்தார் விஜயகாந்த். ''ரஜினி சாருக்கு ஒண்ணுமே இல்லை.... நல்லாத்தான் இருக்கார்.  நான்கூட கொஞ்ச​நாள் முன்னாடி ஆஸ்பத்தியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக்கிட்டேன். அந்தத் தகவலை யாருக்கும் சொல்​லவே இல்லை. சொல்லி இருந்தா, ரஜினி சாருக்குக் கிளப்பின வதந்திபோல, எனக்கும் பரப்பி இருப்பாங்க...'' என்று ஜோவியலாகப் பேசினார்.

மேல்நாட்டு சிகிச்சை

''என்னோட பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்று என் மனைவிக்குக்கூட தெரியாது. வைரமுத்து சாருக்குத்தான் எல்லாம் தெரியும்!'' என்று கவிஞர் வைரமுத்துபற்றி ரஜினி மனம் நெகிழ்ந்தது உண்டு. வைரமுத்துவிடம் பேசினோம். ''தீவிர சிகிச்சைப் பிரிவில் அருமை நண்பர் ரஜினிக்கு ஆழ்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சிகிச்சை செய்வது உசிதம் என்று மருத்துவர் குழு முடிவு செய்து, அதற்கான பணியில் துரிதமாகச் செயல்பட்டால், வரவேற்பேன். நோயில் இருந்து மீண்டு... மீண்டும் ரஜினி, ரசிகர்கள் மனதை ஆண்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரம் இரு முறை தவறாமல் சந்திப்போம். வெள்ளந்தி உள்ளத்துக்கு சொந்தக்காரர். எறும்புக்கும் தீங்கு நினைக்காத இதயம் ரஜினி.

சிங்கப்பூரில் நடந்த 'எந்திரன்’ ஒலிநாடா வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, விமானத்தில் நானும் ரஜினி​யும்  சென்றோம். விமானத்தில் எல்லோரும் அசந்து தூங்கினார்கள். பைலட், விமானப் பணிப்பெண்களுடன், நான், ரஜினி மட்டுமே விழித்து விடிய விடியப் பேசிக்கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில், 'அப்போ சரி... தூங்கலாமா..?’ என்று கேட்டார், ரஜினி. ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னேன். ராட்சஸ மின்விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. 'சிங்கப்பூர் ஏர்போர்ட்’ என்றதும் குபீரெனச் சிரித்தார், ரஜினி. இப்படிப்பட்ட சுறுசுறுப்புக்கொண்டவரை எந்த நோயா​லும் முடக்க முடியாது!'' என்று அசை போட்​டார் வைரமுத்து.
 http://onlysuperstar.com/wp-content/uploads/2009/06/rajini-sridevi-wedding-fbj.jpg
தனி விமானம் ரெடி

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்ந்​ததில் இருந்தே, டெல்லியில் இருந்து பல முறை போனில் விசாரித்த வண்ணம் இருக்கிறாராம், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அவரிடம், ''ரஜினிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனால், விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு, அவரது உடல்நிலை தெம்பாக இல்லை. ஓரளவு சீரானதும் வெளிநாடு போகலாம்!'' என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். 'டாக்டர் குழுவோடு தனி விமானம் ஏற்பாடு செய்து தரத் தயார்’ என்று உறுதி அளித்துள்ளாராம் ப.சிதம்பரம்!

கருணாநிதி கோபம்

கடந்த 17-ம் தேதி, காலை ரஜினியைப் பார்க்க ராமச் சந்திராவுக்குக் கிளம்பினாராம் கருணாநிதி. அப்போது, 'விசிட்டர்களுக்கு அனுமதி இல்லை என டாக்டர்கள் கண்டிப்பு காட்டுகிறார்கள்’ என்ற தகவலைச் சொல்லி, கருணாநிதியைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். ''நரேந்திரமோடி, சந்திரபாபு நாயுடு எல்லாம் ரஜினியைப் பார்க்கலாம், நான் பார்க்கக் கூடாதா?'' என்று முகம் சிவந்தாராம் கருணா​நிதி!

Friday, May 20, 2011

FAST AND FURIOUS- 5 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKl3I5HPe8ZJANPLo7zfBL07xMfHypGu088i7y8cfjoe73wBFJ4pHCHC9MBkhTPK_bIGkLryBDGh4roGbM_-sS1EST2DEcAuIpZoMZC-sCceb7EMNPVn8YkHK6HmFfOPukKh_EBEeZFbE/s1600/fast-five-poster.jpg

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( நம்ம மம்மி அல்ல),ரன் டவுன்,ஸ்கார்பியோ கிங்க் ஹீரோ ராக் வேம் ஜான்சன் +ட்ரிபிள் எக்ஸ் ( ”அந்த” ட்ரிபிள் எக்ஸ் அல்ல) ,பாசிஃபயர்,பாபிலோன் ஏ டி ஹீரோ வின் டீசல் இருவரும் இணைந்து நடித்த (வெடித்த..!!)ஆக்‌ஷன் படம் இது.. 

இயக்குநர் மணி ரத்னம் எடுத்த ( சுட்ட !!!) திருடா திருடா படக்கதைதான். அரசாங்கம் பிரிண்ட் பண்ணுன நோட்டுக்கட்டை (கோடிக்கணக்கில் பணம்) ஒரு குரூப் 2 செம கட்டைகளோடு(செமயா இருக்கும் கட்டை = செம கட்டை) இணைந்து அபேஸ் பண்ண திட்டம் இடுவதும்,அதில் போலீஸ் கண்ணில் மண்ணை எப்படி தூவி சாதிக்கறாங்க என்பதும் தான் கதை..

இந்த மாதிரி கதைகள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதற்கு 2 காரணம்.. இதுல பர பரனு திரைக்கதை பொறி பரக்கும்.. இன்னொண்ணு எல்லா மனிதனுக்கும் உள்ளூர இன்சிடெண்ட் பணக்காரன்  ஆகிடனும்னு ஒரு ஏக்கம் இருக்கும். தன்னால செய்ய முடியாத ஒண்ணை ஹீரோ செய்யறப்ப அவன் தானே செஞ்ச மாதிரி திருப்தி அடையறான்.

பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னா கமல் தான் தமிழ்ல ஞாபகத்துக்கு வருவார். அவர் என்ன பண்ணுவார்னா தன் கூட இணைந்து நடிக்கும் ஹீரோவை டம்மி பண்ணிடுவார். ஆனா ஹிந்தில ஹாலிவுட்ல அப்படி இல்ல.. ஜாலியா நடிக்கறாங்க.. படத்துல 2 ஹீரோவும் ஜாலியா பேசிக்கறது நல்லாருக்கு.. 

http://www.drivingenthusiast.net/sec-blog/images/2009/04/05/fast__furious_4_photo-1.jpg
பஞ்ச் வசனங்கள்

1.   ஓக்கே.. நீ பார்க்க புத்திசாலியா இருக்கே....
ஏன்னா நான் சாதிக்கனும்னு வெறியோட இருக்கேன்.. 

2. யாரோ பெரிய ஆள்னாங்க.. கத்துக்குட்டியை கூட்டிட்டு வந்திருக்காங்க..?

உன்னையே கூப்பிட்டிருக்காங்க.. என்னை கூப்பிட மாட்டாங்களா? (வாரிக்கோ.. வாரிக்கோ மாறி மாறி வாரிக்கோ)

3.  ஆஹா.. என்னா ஃபிகர்.. பார்க்கும்போதே தூக்கறாளே..? (தாக்கறாளா? தூக்கறாளா?# டவுட்டு)

4. பொண்ணுங்க கிட்டே மொக்கை போடலைன்னா மொட்டையனுக்கு தூக்கமே வராது போல.. (ஃபிகர்ட்ட பேசுன பின்னால தூக்கம் வரும்?#டவுட்டு)

5.  ஐ ஆம் எ போலீஸ்.. 

அப்படியா?ஐ டி காட்டுங்க... ம் ஆனா ஃபோட்டோல வேற மாதிரி இருக்கீங்களே?

அது சின்ன வயசுல எடுத்தது.. அதுவும் இல்லாம நான் வெய்யில்ல கருத்துட்டேன்.. 


http://www1.pictures.gi.zimbio.com/Fast+Furious+Europe+Premiere+6CUszLZJvc5l.jpg
6. உன்னை அரெஸ்ட் பண்ணப்போறோம்.. 

சாரி.. நான் அரெஸ்ட் ஆகற மூடுல இல்ல.. (ஆ ராசா மாதிரியே பில்டப் குடுக்கறாரே?)

7. உன் கிட்டே எனக்கு பிடிச்ச அம்சமே என் கூட போட்டி போடனும்னு நினைக்கறியே அதான்.. 

8. இந்த நெக்லஸ்க்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கனும்?

அவ மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை.. நான் அவ மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு அந்த நெக்லஸ்க்கு தெரியும்.இப்போ உங்களுக்கும் தெரியும்.. (சீப் ரேட்ல பாசி மாலை வாங்கி குடுத்துப்பாருங்க.. கண்டுக்கவே மாட்டா)

9. ஜூ-ல மிருகங்களுக்கு எல்லாம் சமைச்சுப்போடனும்னு ஆள் கேட்டாங்க.. உன்னால முடியுமா?

அதான் உங்களுக்கே சமைச்சுப்போடறனே.. அப்புறம் என்ன?

10. ஏண்டா.. இங்கே இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு.. உனக்கு ஃபிகர் கேட்குதா? ( ஃபாரீன்லயும் அப்படித்தான் போல.. )

11. பணம் வந்தாலே போதும்.. உறவுகளை தக்க வெச்சுக்கலாம்.. ( அப்படிப்பட்ட சுயநல உறவுகள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?)
http://updatesforu.com/wp-content/uploads/2011/05/fast-and-furious-5-fast-five-wallpapers-8.jpg
இயக்குநர் பாராட்டப்படும் இடங்கள்

1. இரண்டு மெயின் ஹீரோக்களும் சந்திக்கும் இடங்களும் ,அவர்களுக்கிடையேயான சுவராஸ்யமான வசனங்களும்..(அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு மாதிரி)

2. பேங்க் பண ட்ரக் லாவகமாக கை மாற்றும் சீன் செம சேசிங்க் சீன்பா.. 

3.  கர்ப்பிணிப்பெண்ணிடம் கணவன் காட்டும் அன்பும், அக்கறையும் ஒரு ஹாலிவுட் கவிதை.. 

4. க்ளைமாக்ஸில்  அனைவரும் எப்படி ஜாலியாக பணத்தை செலவு பண்றாங்க என்பதை செம சுவராஸ்யமாக காட்டியது.. 

http://images2.fanpop.com/image/photos/14300000/On-set-Fast-Furious-5-the-fast-and-the-furious-movies-14316282-290-399.jpg

--
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நகரம் எங்கும் கண்காணிப்புக்கேமரா இருக்கும்போது மெயின் ரோட்டில் பண டிரங்க் கை மாறுவது போலீஸ்க்கு தெரியாம இருக்குமா?

2. பணம் உள்ள டிரங்க் & கார் சேசிங்க் செம விறு விறுப்புதான் என்றாலும் அவ்வளவு அமளி துமளி ஆன பின்பும் அந்த சங்கிலி உடையாம இருக்குமா?

3. பணத்தை ஷேர் பண்ணீக்கொண்ட பின் 2 பேர் சொந்த தொழில் தொடங்குவது போல் காட்றீங்களே..? அந்த அளவு நேர்மையும் , தொழில் ஆர்வமும் உள்ளவர்கள் கொள்ளையில் ஈடுபடுவார்களா?நோகாம நோம்பி கும்பிட்டு பழக்கமானவங்க மறுபடி உடல் நோக கஷ்டப்படுவாங்களா?

4. படம் பூரா கொள்ளை எப்படி நடக்குது.. எப்படி பிளேன் பண்றாங்க என்பதைத்தான் காட்றீங்க.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்குது.. அவங்க என்ன முயற்சி எடுக்கறாங்க அப்டின்னு தனி டிராக் ஓடுனாத்தானே செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்?

ஆனா ஆக்‌ஷன் படத்துல லாஜிக் பார்க்கக்கூடாதுங்கறதனால ( அப்போ பிட் படத்துல லாஜிக் பார்க்கலாமா?) சும்மா ஜாலியா போய் எஞ்சாய் பண்ண நல்ல ஆக்‌ஷன் படம்.. ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்..

டியர்.. மல்லிகைப்பூ விலை ஜாஸ்தி ஆகிடுச்சு அதுக்காக இப்படி பண்ணலாமா?


1. சார்.. உங்க பொண்ணு தொட்டதுக்கெல்லாம் கோவிக்கறா..விளையாடாதீங்க மிஸ்டர்.பொண்ணு பார்க்க வந்தா பேசிப்பார்த்தா பரவால்ல.தொட்டுப்பார்த்தா?

-----------------
2. ரஜினி ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை குறைத்துக்கொண்டாலோ, முற்றிலும் விட்டொழித்தாலோ நல்லதொரு மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும்

--------------------
3.பைக் ட்ராவலில் ஃபிகர்கள் உன்னை ரசிக்கும். ஆனால் பஸ் ட்ராவலில் ஃபிகர்களை நீ நிதானமாக ரசிக்கலாம்#பஸ்ஸாலஜி 

----------------

4. ஸ்பீடு பிரேக்கர்களும்,குண்டும் குழியும் உள்ள சாலைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் ஃபிகர் லிஃப்ட் கேட்கையில் அவை பயன் படும்#கில்மாலஜி

----------------

5. 16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான்#ஜெண்ட்ஸ்ஸாலஜி

-----------------
6. ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான்#ஜெண்ட்ஸ்ஸாலஜி

---------------------

7. குழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான்#பஸ்ஸாலஜி

---------------------

8. வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா?#டவுட்டு

--------------------

9. ஸாரி மோஹனா.. மல்லிகைப்பூ விலை ஜாஸ்தி ஆகிடுச்சு.. அதான்.. அதுக்காக 4 முழம் பூ வாங்கற ஆளு இப்படி ஒரே ஒரு பூ மட்டும் வெச்சு விடறது ஓவர் .

----------------------------

10. மேடம் ,ஷீட்டிங்க் போறதுக்கு முன்பே இது தமிழ்படமா?னு ஏன் கேட்கறீங்க? தமிழ்னா மிதமான கவர்ச்சி,தெலுங்குன்னா அபரிதமான கவர்ச்சி#சினிமாலஜி

---------------------------  
 

Thursday, May 19, 2011

சாக்லேட் கேர்ள் யார்? சாக்லேட் பாய் மாதவன் கலகல பேட்டி - காமெடி கும்மி

http://www.pkp.in/images2/Madhavan%20with%20wife%20(1).jpg
மாதவன் என்றால்... என்றென்றும் புன்னகைதான்.

சி. பி -  ஆமா.. படம் ஓடலைன்னாக்கூட... 


இப்போது... இன்னும் பிரகாசமாக! 'த்ரீ இடியட்ஸ்’, 'தனு வெட்ஸ் மனு’ வெற்றிகள் என இந்தியில் ஏறுமுகத்தில் மாதவன் கிராஃப். ஆர்யாவுடன் 'வேட்டை’யாட, பாண்டிச்சேரி வந்திருந்தவருடன் ஒரு மீட்டிங்...  

 சி. பி - பாண்டிச்சேரில  மீட்டிங்கா? ஆஹா விளங்கிடுச்சு.. அப்போ டைட்டில் மீட்டிங்க் வித் கட்டிங்க்னு போடலாமே?


1. '' 'அலைபாயுதே’ சமயப் பரபரப்பு, கிரேஸ் எதுவும் இல்லாம ரொம்பவே நிதானம் ஆகிட்டீங்களே?''

 சி.பி. - ஓப்பனிங்க்ல இருக்கற பரபரப்பு எப்பவும் இருக்குமா?


''மணிரத்னம் சார் அறிமுகம், இளமையா ஒரு பையன், துள்ளலா ஒரு காதல் கதைன்னு அப்போ எழுந்த பரபரப்பு... செம சென்சேஷன். அது ஒரு விசிட்டிங் கார்டு. அப்புறம் திறமை மட்டும்தானே நிக்கும். எப்பவும் நியூஸ்ல இருந்துட்டே இருக்கணும்னு தேவை இல்ல. இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு, 'மாதவன்னா மரியாதையான ஆர்ட்டிஸ்ட்’னு ஒரு பேர் இருந்தாப் போதும். நான் சினிமாவுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. முதல் ஏழு வருஷம் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங் கன்னு இஷ்டத்துக்குப் படம் பண்ணிட்டேன். இப்போ நான் சென்ஸிபிள்!''

சி பி - மார்க்கட் போன ராமராஜன்ல இருந்து மார்க்கட்டு போன சினேகா வரை எல்லாரும் கரெக்டா ஒரே மாதிரி தான் பேசறாங்க.. 



2. ''ஆனா, இப்போ ஹீரோக்கள் பரபரன்னு அவங்க ரெக்கார்டை அவங்களே முறியடிக்க, ஓடிட்டு இருக்காங்க. அந்த ட்ரெண்டை மனசுல ஏத்திக்கவே மாட்டீங்களா?''


''எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. 

சி.பி - என்னது? ஸ்பேஸ் இருக்கா?அப்போ அடுத்த படம் ஏலியன்ஸ் சப்ஜெக்ட்டா?

அதுக்குள்தான் நான் இயங்க முடியும். பட்டினி கிடக்கிறவன் மாதிரியோ, படிக்காதவன் மாதிரியோ, விஜய், சூர்யா மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. எனக்குன்னு ஒரு தனி இடம் தேடிக்கணும். அதான் 'யாவரும் நலம்’ மாதிரி செலெக்ட்டிவ்வா நடிக் கிறேன். எந்த விஷயத்தையும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்றேன். கமல் சார் படம்னா மட்டும், உடனே நடிச்சிடுவேன். ரெண்டாவது ஹீரோ, மூணாவது ஹீரோன்னு பேச்சே கிடையாது. என்னைத் தன் தம்பி மாதிரி பார்த்துப்பார்.


சி பி - ஹா ஹா டம்மி ஆக்குனாக்கூட கவலையே படறதில்லை.. நீங்க.. 

த்ரிஷா கூட என்னைக் கேலி பண்ணுவாங்க. ஆனா, கமல் என் குரு. அவரோட பெரிய பக்தன் நான். மக்கள் ரசனைக்கு நம்மை செட் பண்ணிக்கிறதுதான் முக்கியம். இப்ப 'வேட்டை’யில் லிங்குசாமி கமர்ஷியல் பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார்

தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை அளவுக்கு, எனக்கு பெர்சனல் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நண்பர்களோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்க,  கோல்ஃப் விளையாட, ஊர் சுத்திப் பார்க்கன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் நான் செய்யணும் இல்லையா? சமீபத்தில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி யில் நான் உரை நிகழ்த்தியபோது, எங்க அம்மா முகத்தின் பூரிப்பு இதுவரை நான் பார்க்காதது. நிறைய நடிகர்கள் தவறவிடுகிற விஷயம் அது. ரொம்ப சிம்பிள் சார்... ஒவ்வொரு நாளையும் உற்சாகமா வாழணும் நான்!''
 http://s.chakpak.com/se_images/137560_-1_564_none/kavya-madhavan.jpg

3. ''கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துக்குப் பிறகும் மனைவியிடம், அதே காதலுடன் இருக்கீங்க. நிறைய மனிதர்கள் தவறுகிற இடம் இது. உங்களுக்கு எப்படிச் சாத்தியம்?''



''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன். 

 சி .பி - எந்த வீட்டுக்கு..?

 
வொய்ஃப் சரிதாகூடத்தான் வெளியே சுத்தப் போவேன். அப்பா, அம்மா முன்னாடியே சரிதாவுக்கு முத்தம் கொடுத்து, 'உன்னைத் திருத்தவே முடியாது’ன்னு திட்டு வாங்கிஇருக்கேன். 

 சி. பி - ஹி ஹி நோ கமெண்ட்ஸ்.. இருந்தாலும் ஒண்ணு சொல்லலாம்.. மாதவன் கிடைக்க மாதவம் செய்தமோன்னு பெற்றோர் நினைப்பாங்களோ?

எனக்கு வேற ஆசைகளே இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனால், கொஞ்சம் பயந்த சுபாவம். ராத்திரி படுத்தா, பெருமூச்சு இல்லாம, நிம்மதியாத் தூங்கணும். நாளைக்கு என் பையன் என்னை எந்தக் குறையும் சொல்லி கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யோசிப்பேன். 'ஐயோ, மாதவனோடு நடிக்கணுமா?’னு எந்த ஹீரோயினும் என்னை நினைச்சுப் பயப்பட மாட்டாங்க. உண்மை சார் இது!''

 சி பி - ஸ்டோரி டிஸ்கஷன் நடக்கறப்பவே கூப்பிட்டு பயத்தை போக்கிடுவீங்களோ?#டவுட்டு
 

4. ''பையன் எப்படி இருக்கார்?''

''வேதாந்த் சண்டைப் படம் பார்க்கிறார். பொம்மைத் துப்பாக்கியால என்னைத் தினம் சுடுறார். செம ஸ்பீடா கம்ப்யூட்டர் வொர்க் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபேஸ்புக்லயும் வந்துருவார்னு நினைக்கிறேன். ஆனால், நல்ல மனசுக்காரரா இருக்கார். ஏழை ஜனங்களைப் பார்த்தால், எந்த விகல்பமும் இல்லாம தொட்டுத் தொட்டு அன்பா பேசுறார். மனிதாபிமானத்தோடு இருக்கார். அதுதான் சந்தோஷம்!''

சி .பி - பரவால்லை.. அப்பா நடிகைகளை தொட்டு தொட்டு பேசறார்  படத்துல.. பையன் ஏழைகளைத்தானே தொடறார்? தப்பில்லை

டிஸ்கி - காவ்யா மாதவன்க்கும் மேடி மாதவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .நிறைய பேர் அப்படி நினைக்கறாங்க..

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக சைட் அடிக்கும் ஸ்பாட் எது? ஒரு அலசல்

http://2.bp.blogspot.com/_a-5_Ktv6jB8/TKQ1b6bRDCI/AAAAAAAABYA/NyvbpXWZkKU/s1600/Surya+Jyothika+Marriage+Photo_13047.jpg

1. கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பெண்களைக்காணும் ஆண் முதல் முறையாக மேக்கப் இல்லாத தன் முகத்தை வெட்கத்தோடு கவனிக்கிறான்#ஜெண்ட்ஸாலஜி

---------------------------

2. பஸ்சில் இருக்கும் 10 ஃபிகர்களையும் கண்டுக்காம ஜன்னலில் வேடிக்கை பார்த்தால் 20 கண்கள் அவனை ஆச்சரியமாக மொய்க்கும்#லேடீஸாலஜி

-------------------------

3. ஊட்டி ஃபிளவர் ஷோவுக்குப்போய் பூக்களை மட்டும் ரசித்து விட்டு வருபவன் மிகச்சிறந்த அம்மாஞ்சி விருது பெறுவான் பெண்ணிடம்#லேடீஸாலஜி

----------------------

4. பொறாமையின் காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கம்பெனி தருவார்கள் என்பதால் இரட்டை ஃபிகர் முறை எப்போதும் பயன் அளிப்பதாகவே இருக்கும்#சைட்டாலஜி

-------------------

5. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கேர்ள் ஃபிரண்டா வைத்திருப்பதில் முக்கியமான உபயோகம் யாரையும் திருமணம் செய்யத்தேவை இல்லை#கில்மாலஜி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgCHZrKTgrBnueNlOE-7WNPRKPxjKNcNSmEn8I0x7EBlEtXFP8jnBgCXF4e0xvMoABQCsI8itG9iTzNdFrrZXOMM8wNVsyhOBxT7SyNKhj-tceemQcNltZU6hoG8XTJW-Jz3aZwoz7rdI/s320/bhavana-01.jpg
-------------------

6. கல்யாண பந்தியில் 6 பந்திக்கு பரிமாறும் பொறுமை உள்ளவன் 300 ஃபிகர்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்புப்பெற்றவன் ஆகிறான்#சைட்டாலஜி

-------------
7.கல்யாண மண்டபம் மாதிரி சேஃப்டியான சைட் அடிக்கும் ஸ்பாட் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை#சைட்டாலஜி

---------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHAnSkuorEA_F9T-DToWXvhq0bOQZRmWX2FrztrJACRAblR9fPo_dRJbc7gWnclp92eUB52oMmjdPV_zj1Lq4v7AqDOul5Hnp4s9QHLHOrLpWYx9LsC2MlDaPoyDqc3zo6BkDZFD2Lf1s/s1600/gruop+phot+boys+and+girls.jpg

8. சாம்பாரில் வரும் வாசத்தை வைத்தே அதில் உப்பு,காரம் சரியா இருக்கா?என கண்டு பிடிக்கும் திறன் உள்ளவன் வீட்டில் அவனே சமையல்காரன்#கிச்சனாலஜி

-----------------

9. நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ஆவது போல் காதலியின் தோழி விரைவில் நமக்கே காதலி ஆவாள் என்பதால் வலையுடன் காத்திருக்கவும் #கில்மாலஜி

-------------------

10. டியர்.. லிப் டூ லிப் கிஸ் வேணாம்கறியே ஏன்? யார் கிட்டயும் வாயைக்குடுத்து மாட்டிக்காதேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு..

-------------------

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Y9C7CRHizd_w2ZSG9JMcTCksFPpikqIim3rxfIjyXWR3PfBb1mtGGGIvkys1N30llf1BoeRWbjB85e5O511UKIT87WuE7sqeeIJS9ycydFjlqcRUyKvCHLO01y6msQ0lCGMA65JDoJOV/s1600/thadam_thadamariya_aval2.jpg