Friday, February 03, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 5 படங்கள் முன்னோட்டம்

 பிப்ரவரி மாசம் வந்தாலே கொண்டாட்டம் தான், காதலர் தினம் வருவதால் ஒரே லவ் சப்ஜெக்ட் படங்களா வரும்.. அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த முப்பொழுதும் உன் கற்பனைகள் அடுத்த வாரம், அரவான் இப்போதைக்கு காணோம்..மெரீனா, சினம் ,மகாராணி உட்பட5 படங்களின் முன்னோட்டபார்வை

http://moviegalleri.net/wp-content/gallery/marina-movie-wallpapers/marina_movie_wallpapers_001.jpg


1. மெரீனா' : பாண்டிராஜ்


சிவகார்த்திகேயன், ஓவியா மற்றும் 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா உள்ளிட்ட 13 சிறுவர்கள்  நடித்து வரும் படம் 'மெரினா'. இப்படத்தினை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் ஒரு தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.

'பசங்க' படத்தின் சாயல் 'மெரினா' படத்திலும் தெரிவதால் அவர் கூறியதில் இருந்து சில துளிகள் :

உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று மெரினா. அந்த கடற்கரையில் நிறைய கதைகள் புதைந்து கிடக்கின்றன. அங்கு சுண்டல் விற்கும் ஒவ்வொரு  பையனிடமும் ஒரு கதை இருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னு தான் நினைச்சேன்.

 சி.பி - அவர் சம்பளம் அதிகமா கேட்பாரு, இவருன்னா குடுக்கறதை வாங்கிக்குவாரு.. ஹி ஹி

அப்புறம் 'பசங்க' படம் மாதிரியே ஆயிடுமோன்னு சந்தேகமா இருந்தது. அப்போ  தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. என்னுடைய உதவி இயக்குனர்களும் இதையே சொன்னார்கள். இந்த படத்தில் இவர் எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. இருவருக்குள் இருக்கும் காதல் தான் படம்.  'மெரினா'  பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும்.


சி.பி - ஒரே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சொல்லுங்க ஹி ஹி 


'பசங்க' படத்தில் நடித்த பக்கோடா பாண்டி இந்த படத்தில் மெயின் ரோல் பண்ணிருக்கான்.  இந்த சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு திறமையானு படம் பார்க்கும் எல்லாரையும் நினைக்க வைப்பான்.  'பசங்க' படத்தில் அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா கிடைக்கல.

மெரினா கடற்கரையை சுற்றி  ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான் காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரினாவை மட்டும்தான்.



சி.பி - அடடா, மெரீனாங்கறது பீச்சை (beach)குறிக்கும் இடப்பெயரா? நான் அது ஏதோ ஒரு கரீனா , டொரீனா மாதிரி ஒரு ஜிகிடி பேர்னு நினைச்சேன் அவ்வ்வ் 


இந்த கதைக்காக நான் வொர்க் பண்ண ஆரம்பிச்ச ஆறு மாசத்தில் எத்தனையோ சம்பவங்களை சந்திச்சேன். அந்த சம்பவங்களை எல்லாம் நான் காட்சிப்படுத்தல. ஏன்னா  பாண்டிராஜ் படம்னா குடும்பத்தோடு வந்தோம். ரசிச்சோம்னு இருக்கணும் என்பதற்காகதான்.





சி.பி - அண்ணன் சொல்றதை பார்த்தா  திரைக்கதை ரெடி பண்ணாமயே ஷூட்டிங்க் போய்ட்டார் போல கஷ்டம் தான் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBCltRX5A3xOCnLsmUm9iq3z2d6tjlI_K4Jw05dTqCwCpntz4vcwJx8-ONJojR2D6H43i29Ox0_8hZVJ7DLsfYUtAAaizr0VH4Fm9nj-ALVArv5sWYF6BAWc8xRIfTb1Cq2jB-IV_tQyc/s1600/marina_movie_stills_30.jpg


சின்ன பசங்களை வைத்தே படம் பண்றீங்களே என்று கேட்கிறார்கள். மெரினா கதை மட்டுமல்ல, இன்னும் கூட நாலைஞ்சு கதை வச்சுருக்கேன். அவங்க உலகம் தனியானது. என்னவோ தெரியல, அப்பவும் சரி, இப்பவும் சரி, குழந்தைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னிடமிருந்து இதுபோன்ற கதைகள் வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றார்.


சி.பி - அதுல இன்னொரு ரகசியமும் இருக்கு, சின்ன பசங்கன்னா பெருசா சம்பளம் தர தேவை இல்லை , கால்ஷீட் பிரச்சனை இருக்காது , ஹீரோயின் கூட கடலை போட்டு தயாரிப்பாளரை கடுப்பேத்த மாட்டாங்க 


இந்த கதை இயக்குனர் சுசீந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். சசி சாருக்கு இந்த கதையின் ஒன்லைன் தெரியும். என்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்களை நான் நஷ்டப்பட விட்டது இல்லை. சொன்ன பட்ஜெட்க்குள் படத்தினை முடித்து கொடுத்து இருக்கிறேன்.



சி.பி - மொத்தபடத்தோட கதையே ஒன் லைன் தான் போல.. இதுல அண்ணன் கதையோட ஒன் லைன் பற்றி சொல்றாரு.. 


கண்டிப்பாக ஒவ்வொரு இயக்குனரும் தயாரிப்பாளராக வர வேண்டும். அப்போது தான் ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது தெரியும் " என்று கூறினார்.

SALAAM BOMBAY என்ற படத்தினை பார்த்து தான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ். ஆகையால் படத்தின் இறுதியில் கூட அல்லாமல் படத்தின் முதலில் இதற்கான நன்றி அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறாராம். சில பொன்மொழிகளையும் இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறாராம். அதற்கும் சேர்த்து தனது படத்தில் நன்றியை தெரிவிக்க இருக்கிறாராம் பாண்டிராஜ்.

இந்தப்படம் ஈரோடு ஆனூர், தேவி அபிராமி ஆகிய 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi-xRQkzXK7FTHXbV-Ww4atThMfsCoy-ke5bYyCKMDLuoCR6Gx5bt7itsMcdw98vecR_q1xFOx8lNLO-bNmS25n1MOXPVHf9wDWEQbtSSPUzfZp0WVWiYNkqIYpyAyiXYGLXYH0Ba5pFQ/s1600/sinam-movie-stills-images-poster-photos-gallery-15.jpg

2. சினம் - சத்யராஜ் நடிச்ச படம்.. ரொம்ப நாளா கிடப்புல இருந்த படம் போல..ஒரு வேளை தெலுங்கு டப்பிங்கா? தெரில.. கூகுள்ல தேடுனா எந்த விபரமும் கிடைக்கல.. சத்யராஜ், நவ்தீப், பூமிகா சாவ்லா,கிம் ஷர்மா நடிச்சிருக்காங்க.. ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா கிளாமர் கம் க்ரைம் சப்ஜெக்ட்னு தோணுது, பார்த்துட வேண்டியதுதான்.. டைரக்டர் பி ஏ அருண் பிரசாத்..


http://www.tamilchannel.com/userfiles/image/gallery/Sinam/sinam-movie-stills-005.jpgஅ’
கூகுள்ல தேடுனதுல யாகம் என்ற தெலுங்கு பட ஸ்டில்லும், இதும் ஒண்ணு போல தோணுது.. அநேகமா இது அந்த படத்தோட டப்பா இருக்கலாம்.. அல்லது அந்தப்படத்துல சத்யராஜ் வர்ற மாதிரி சில பேட்ச் ஒர்க் பண்ணி ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.. நேரடி தமிழ்ப்படமா இருக்க சான்ஸே இல்ல.. கீழே இருப்பதுதான் அந்த தெலுங்கு பட ஸ்டில்.. ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyH6ZBITKx94FQGm3bBky2Dt3xb_jluA6tbv4U_QBD1I2_Xc8cOSGtuVVwNszpkXH62ydnDH6FLQsvzqvhIxDbVlLkiVjX2p3cir0uLq9ZXtjzYZ0H7pLP0PSeLxQACxqsPUmbC38G7gMS/s400/yagam-releasing-today.JPG

3. செங்காத்து பூமியிலே - பாரதிராஜாவின் பல படங்களுக்கு கதை எழுதிய ரத்னகுமார் இயக்கிய படம்.. மண்ணுக்குள் வைரம், கிழக்கு சீமையிலே போல் இதுவும் ஒரு செண்டிமெண்ட் படம் மாதிரி தோணுது.. பவன், சிங்கம்புலி, பிரியங்கா நடிச்ச படம்,, இசை இளையராஜா என்பது கூடுதல் பிளஸ்..


http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Sengathu%20Bhoomiyile-reel-10.jpg
செங்காத்து பூமியிலே படத்தின் டைரக்டர் ரத்னகுமார் தனக்கு கீழே வேலை செய்யும் உதவி இயக்குனர்களை கொத்தடிமையை விடவும் கொடுமையாக நடத்துவதாக செய்தி பரவியிருக்கிறது. படப்பிடிப்பில் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்களாம் அவர்கள். எல்லா டைரக்டர்களும் கெடுபிடியாகதான் இருப்பார்கள். பண விஷயத்தில் இரக்கம் காட்ட மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது .. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்
http://www.thedipaar.com/pictures/resize_20110702043347.jpg
4. மகாராணி - THE  BEAUTY QUEEN  என்ற  சப் டைட்டிலுடன் வரும் தெலுங்கு டப்பிங்க் படம்தான் இது.. பிரியாமணி, விமலா ராமன் (வள்ளி) நடிச்சிருக்காங்க.. ஸ்டில்ஸ் எல்லாம் செம ஹாட்டா இருக்கு.. யூ டியூப்ல 2 பாட்டு கேட்டேன் கேவலமா இருந்துச்சு.. ஆனா சீன் உண்டு போல.. ஜொள் ரசிகர்கள் பார்க்கலாம்.. ஹி ஹி

http://malayalam.oneindia.in/img/2011/07/02-maharani.jpg

5. IP MAN -2 -  குங்க் ஃபூ ரசிகர்களுக்கான படம்.. ட்ரெய்லர் பார்த்தாலே தலை வலிக்குது.. ஒரே ஃபைட் மழை தான் போல..  புரூஸ்லியின் குருவின் கதைன்னு சொல்றாங்க.. ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ் ஆகுது

http://www.toysnjoys.com/dvds/ipman2.jpg

Thursday, February 02, 2012

கேப்டன் ஆவேச பேச்சு யூடியூப் வீடியோ.,சன் நியூஸ் பேட்டி -. காமெடி கலாட்டா



1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்

-------------------------------------

3. சட்ட சபைல கை நீட்டி பேசுனது தப்பு இல்லையா?

கேப்டன் - கை நீட்டி லஞ்சம் வாங்கறதுதான் தப்பு

-------------------------------------

4. உங்களுடன் கூட்டணி வைத்தற்காக நான் வெட்கப்படுகிறேன் -ஜெ # ஓக்கே மேடம், அதை ஏன் இவ்ளவ் கோபமா சொல்றீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க- கேப்டன்

---------------------------------

5. ஜெ - என்னை எதிர்க்க திராணி இருக்கா?

கேப்டன் - லூசாம்மா நீங்க? அது இருந்தா தனியா நின்னிருக்க மாட்டேனா?

----------------------------------

6. டியர்,உன்னுடன் காதல் கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன்...

ஏன்? ம்க்கும், ஒரு கிஸ் கூட தர்லை.. வேஸ்ட்

--------------------------------

7. காதலி - உங்க கிட்டே திராணி இருக்கா?

காதலன் - இல்ல, வாரா வாரம் வாங்கற ராணி தான் இருக்கு

-------------------------------

8. ஜெ-எனக்கு முன்னால இது வரை கை நீட்டி யாரும் பேசுனதே இல்ல. 

கேப்டன் -அதுக்கு பதிலாத்தான் நாக்கை  மடக்கி உள்ளே வெச்சுக்கிட்டேனே மேடம்?

-------------------------------------

9.ஜெ- கேப்டன் கிட்டே வேற ஏதாவது கல்யாண மண்டபம் இருக்கா? இடிக்கனும்.. 

ஓ பி எஸ் - பிரேமலதா தான் இருக்காங்க, நைஸா இடிச்சுட்டு வரவா?

----------------------------

10. ஜெ-என் கட்சிக்காரங்களை திருப்திப்படுத்தத்தான் நான் உங்களோட கூட்டணி வெச்சேன்  

கேப்டன் - கலைஞரை கடுப்பேத்தனும்கறதுக்காகத்தான் நான் அப்டி. கூட்டணி வெச்சேன்

--------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg

11. ஒரு CM முன்னால நாக்கை கடிச்சுக்கிட்டே பேசுனது முறையா?

கேப்டன் -வழக்கமா நான் ஊறுகாய்  கடிச்சுக்கிட்டுதான் பேசுவேன், ஆனா சட்டசபை என்பதால்.

----------------------------------

12. நிருபர் -சட்டசபைல கலக்கிட்டீங்க..

கேப்டன் - ச்சே, ச்சே வீட்லயே கலக்கி அடிச்சுட்டுதான் சட்டசபை போனேன்

---------------------------------

13. ஜெ- கேப்டன் பேசுன அருவெறுப்பான பேச்சுக்களை நான் பார்த்துட்டு தான் இருந்தேன் 

கேப்டன் - தீயனவற்றை பாராதே,கேளாதேன்னு பெரியவங்க சொன்னாங்களே?

----------------------------------

14. ஜெ- இனி கேப்டனுக்கு இறங்கு முகம் தான்


கேப்டன் - நல்ல வேளை குரங்கு முகம்னு சொல்லலை ஹி ஹி

----------------------------------

15. ஜெ- சங்கரன் கோயில்ல தனியா நிக்கறேன், உங்களால முடியுமா? 

கேப்டன் - அதெப்பிடி? நானும்வந்து அங்கே நின்னா ஜோடி ஆகிடுவோமே?தனியா நிக்கறது எப்டி?

----------------------------

http://3konam.files.wordpress.com/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands1.jpg?w=683&h=504

16. கேப்டன், எதுக்காக தல அஜித்தை பார்க்க வந்திருக்கீங்க?

நான் நடந்து கொண்ட விதம் சரி இல்லைன்னு ஜெ சொன்னாங்க , தல கிட்டே டிரெயினிங்க் எடுக்க

------------------------------

17. ஜெ -புள்ளி விவரம் சரியாய் தெரிஞ்சிட்டு தான் பேசணும்.

கேப்டன்: தமிழ் நாட்டில் மொத்தம் 2 கரும்புள்ளிகள் 1. கலைஞர் 2 ஜெ

---------------------------

18.ஜெ - கேப்டனைக்கூட மறுக்கா கவனிச்சுக்கலாம், என்னை சர்வாதிகாரின்னு சொன்ன ஸ்டாலினை முதல்ல உள்ளே தள்ளனும்

கமிஷனர் - மிட் நைட் 12 மணி OK?

---------------------------------

ரஜினி முதல்வன்ல நடிச்சிருந்தா..? ஷங்கர் ஷாக் பேட்டி - காமெடி கும்மி

http://www.extramirchi.com/gallery/albums/south/shooting/Endhiran_location/normal_Shankar,_Rajini_and_Aishwarya_Rai_at_endhiran_the_robot_on_location.jpg

1 'முதல்வன்’ படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''


சி.பி - மாஸ் ஹீரோவை வளைச்சுப்போட்டிட்ருந்தா  மாளாத காசு பார்த்திருக்கலாம், ஒரு அள்ளு அள்ளிடலாம்னு நினைச்சிருப்பாரு.. ஜஸ்ட் மிஸ்.. வேற என்ன பெரிசா நினைக்கப்போறாரு?

 '' 'முதல்வன்’ கதை ரஜினி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, 'இதை இப்போ செய்ய வேண்டாம். கொஞ்ச காலம் கழிச்சு செய்யலாம். அதுக்குள்ள நீங்க 'அழகிய குயிலே’ படத்தை எடுங்க’னு சொன்னார். எனக்குப் பெரிய ஏமாற்றம். நானும் 'அழகிய குயிலே’, வேற சில கதைகளை யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, எதுலயும் என் மனசு லயிக்கலை. பத்தாவது மாச கர்ப்பத்தைச் சுமக்கும் தாயைப் போல 'முதல்வன்’ கதையைச் சுமந்துட்டு இருந்தேன். அந்தக் குழந்தை யைப் பிரசவிக்காமல் இன்னொரு கருவைச் சுமக்க நினைக்கிறது சாத்தியம் இல்லாத காரியமா தோணுச்சு. அதான் உடனே அர்ஜுனை வெச்சு முதல்வனை முடிச்சேன்!''


சி.பி - சூப்பர் ஸ்டார் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டுபவரே.. கலைஞர்-ஜெ இருவரிடமும் இணக்கமா இருக்கனும்னு நினைக்கறாரு.. இந்தக்காலத்துல எல்லார்ட்டயும் நல்ல பேர் எடுக்கனும்கறதுக்காக தன்னோட சுய அடையாளத்தை தொலைச்சவங்க நிறைய பேரு, அதுல ரஜினியும் ஒருத்தர்..


'2. 'உங்கள் முதல் கதை 'அழகிய குயிலே’ இன்னும் தயாரிக்கப்படாமலேயே இருக்குனு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீங்க. அதை நீங்க நினைச்சா இப்போ தயாரிச்சு இயக்கலாமே... தயக்கம் என்ன?''



சி.பி -  அவரையும் அறியாம பிரம்மாண்டம்கற லேபிள் ஒட்டிக்கிச்சு, வெளீல வர முடியல..  அவருக்குள்ள இருக்கற அந்த அழகியல் ரசனை கலையை  பிரம்மனால் வெளீல கொண்டு வர முடியாமயே போச்சு..

 '' 'அழகிய குயிலே’வை 'ஜென்டில்மேன்’ முடிச்சு ரெண்டாவதா செய்யலாம்னு கே.டி.குஞ்சுமோன் சொல்லியிருந்தார். அப்புறம், 'காதலன்’ முடிச்சுட்டு செய்யலாம்னு தலைப்பைக்கூட ரெஜிஸ்டர் செஞ்சார். ஆனா, அப்போ சந்தர்ப்பம் அமையலை. என் முதல் இரண்டு படங்களின் பரம ரசிகரான தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும் லஞ்சத்துக்கு எதிரான 'இந்தியன்’ படத்தை நான் இயக்குவதையே விரும்பினார். சரி, 'ஜீன்ஸ்’ முடிச்சுட்டு சொந்தத் தயாரிப்பில் 'அழகிய குயிலே’வை இயக்கலாம்னு நினைச்சேன். 
எழுத்தாளர் சுஜாதாகிட்ட இதைப் பத்திப் பேசினப்ப, 'நீங்க குயிலை எல்லாம் கடந்துவந்துட்டீங்க... இந்த வயசுல பெரிய பெரிய விஷயங் களை எல்லாம் படம் பண்ணக்கூடிய சாத்தியம் இருக்கும்போது, 'அழகிய குயிலே’வை ஆற அமரச் செய்துக்கலாம்’னார். என்னோட நண்பர்கள், நலம்விரும்பிகள் எல்லாரும்கூட, 'பாறையைத் தூக்க முடியும்போது, ஏன் முட்டையைத் தூக்கணும்’னு சொன்னாங்க. இன்னும் நான் ஆறவும் இல்லை... அமரவும் இல்லைனு நினைக்கிறேன்!''


சி.பி -  பாறையையே தூக்குன நீங்க இப்போ முட்டையை தூக்குனா என்ன? அட்லீஸ்ட் உங்க அசிஸ்டெண்ட்ஸை வெச்சாவது தூக்கலாமே? நோ டைரக்‌ஷன், ஒன்லி புரொடக்‌ஷன்கற ஃபார்முலாவுல வசந்த பாலனை வெச்சு அந்த படத்தை எடுங்களேன்..


http://tamilmovienews.in/wp-content/uploads/2011/12/shankar-vijay-nanban.jpg
3. ''மிகவும் நல்ல படங்களை 'எஸ் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் வழங்கினீர்கள்... இடையில் ஏன் இடைவெளி? மீண்டும் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?''


சி.பி -  நல்ல படம் எடுத்தா நல்ல பேரு கிடைக்கும் , சோறு கிடைக்குமா?



''நல்ல படங்கள் எடுக்கணும்கிற என் எண்ணத்துக்குப் பல சோதனைகள். ஒருபக்கம் நான் இயக்கும் படங்கள் என் நேரத்தையும் சக்தியையும் முழுமையா எடுத்துக்கிச்சு. இன்னொரு பக்கம் வியாபாரமும் போட்டியும் நிறைஞ்ச இந்த சினிமா உலகத்துல இத்தனை வருஷ அனுபவம் இருந்தும் கடந்த மூணு வருஷமா நான் திக்கித் திண்டாடினேன் என்பதுதான் கசப்பான உண்மை. கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் நஷ்டம்!


ஒருகட்டத்தில், இனி படங்களே தயாரிக் கக் கூடாதுங்கிற முடிவுக்கே நான் வந்துட் டேன். 'காதல்’, 'புலிகேசி’, 'வெயில்’மாதிரி யான நல்ல படங்களைத் தயாரிச்சு நான் சம்பாதிச்சதைவிட, இழந்ததே அதிகம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பிரச்னைகள்ல இருந்து விடுபட்டுக்கிட்டு இருக்கேன். 'என்ன ஆனாலும் சரி... நல்ல படங்கள் எடுக்கணும்’கிற ஆசை இன்னும் என்னைவிட்டு ஒரேயடியாப் போகலை. மறுபடியும் கதைகள் கேட்க ஆரம்பிச்சு இருக்கேன். நல்ல கதைக்காக நானும் ரசனையான

தயாரிப்பாளருக்காக எங்கேயோ நல்ல கதைகளும் காத்துட்டு இருக்கோம். சரியா கமிட் ஆகிடுச்சுன்னா, அதிரடியை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!''




சி.பி - வெயில் லாஸ் ஆச்சுன்னு சொல்லுங்க ஒத்துக்கலாம், ஆனா கொஞ்சம் கூட செலவே பண்ணாத காதல் படம் எப்படி லாஸ் ஆகும், செமயா ஓடுச்சே, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஏ , பி சி என 3 செண்ட்டர்லயும் ஓடுச்சே?இன்கம்டேக்ஸ் காரன் கிட்டே சொல்ற புலம்பல் கணக்கை நம்ம கிட்டேயும் சொன்னா எப்படி சார்? 




4. ''சங்கர் ஏன் ஷங்கர் ஆனார்?''


சி.பி -  எல்லாம் நியூமராலஜி தான், அது கோடம்பாக்கத்தை பிடித்த சாபக்கேடு.. டி ராஜேந்தர் விஜய டி ஆர் ஆனதும் சிம்பு எஸ் டி ஆர் ஆனதும்,  S V சேகர்  S Ve சேகர் ஆனதும் இந்த செண்ட்டிமெண்ட்லதான்..


 ''நான் 'சங்கர்’ ஆக இருக்கும்போது ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வருவாங்க. கிராமத்துல இருந்துலாம் வருவாங்க. எல்லாரும் என்னை 'ச்சங்கர்... ஸங்கர்’னு கூப்பிடுவாங்க. இன்னும் சிலரோ ஒரு படி மேல போய் 'ஸங்கரு... ஸங்கரு தம்பி’னு பாசமாக் கூப்பிடுவாங்க. 'சங்கர்’ல வர்ற 'ச’வை 'sa’-ன்னோ, 'cha’-ன்னோதான் உச்சரிக்க முடியுது. 'ஷங்கர்’ல இருக்குற 'ஷ’ உச்சரிப்பு வரணும்னும், 'என்னைக் கொஞ்சம் கவனிங்க (!)’ன்னும் அசோசியேட் டைரக்டரானதும் டைட்டில் கார்டுல 'ஷங்க்கர்’னு போட்டுக்கிட்டேன். 'ஓ... ரொம்ப ஓவரா அழுத்திட்டமோ’னு அடுத்த படத்துல 'க்’கை கட் பண்ணிட்டு 'ஷங்கர்’னு போட்டேன்.


'ச’வை 'ஷ’னு மாத்தினதுக்கே நீங்க இந்தக் கேள்வி கேட்கிறீங்க. இது சின்ன மாற்றம். நான் பரவாயில்லைனு சொல்ற மாதிரி, என் அசிஸ்டென்ட் ஒருத்தன் வந்துட்டு இருக்கான். பேரு 'அட்லீ’ (ஒரிஜினல் பேரு அருண்குமார்). நல்ல்ல்லாக் கவனிங்ங்ங்க!''


சி.பி -  தன்னை மற்றவங்க கிட்டே இருந்து தனித்து காட்டனும் சம் திங்க் டிஃப்ரண்ட் ஃப்ரம் அதர்ஸ்னு சொல்ல வைக்கனும்னு மனிதர்கள் படும் பாடு இருக்கே..




5. ''தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகளுக்கு, திரையுலகத்தினர் சார்பா கப் போராட்டம் நடக்கும்போது நீங்கள் அதில் முனைப்புடன் கலந்துகொள்வது இல்லையே... ஏன்?''



சி.பி -  ஒரு நல்ல படைப்பாளி போராளி ஆகனுமா?ன்னு அண்ணன் யோசிச்சிருப்பாரு..


 ''காவிரிப் பிரச்னைக்காகத் திரையுலகமே நெய்வேலியில் திரண்டபோதுகூட நானும் கலந்துக்கிட்டேனே? மேடைல பேசறப்ப, 'தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தா, இந்த தேசமே திரும்பிப் பார்க்கும். பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கு’னும் சொல்லி இருந்தேன்.


அந்தக் காட்சியை அப்படியே கொஞ்சம் விஷ§வலா யோசிச்சுப் பாருங்களேன்... ஒவ்வொரு வீடு முன்னாடியும் அந்தந்தக் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்காங்க. கேமரா ஒரு வீட்டு வாசல்ல இருந்து ஜூம் பேக் ஆகி, தெரு மொத்தத்தையும் காமிக்குது. அப்படியே கேமரா இன்னும் மேல போய் ஹெலிகாப்டர் ஷாட்ல அந்த ஏரியா முழுசையும் காட்டுது... இன்னும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல மேல போய், மொத்தத் தமிழ்நாட்டையும் காண்பிக்கும்போது எப்படி இருக்... டைரக்டர்ர்ர்ர்ர்...கட்!''


சி.பி - கேட்ட கேள்வி என்ன அண்ணன் சொல்ற பதில் என்ன? நல்லா நழுவறாங்கப்பா.. அண்ணன் மீன ராசின்னு நினைக்கறேன்..



6. ''உங்களுக்குப் பிடித்த தமிழ் இயக்குநர் யார்... ஏன்?''

 ''இயக்குநர் மகேந்திரன்!
உலக சினிமாக்கள் பரிச்சயமாகாத அந்தக் காலகட்டத்திலேயே யதார்த்தமாகவும் மெல்லிய உணர்வுகளால் மனதை வருடுவதாகவும் வந்த 'உதிரிப் பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'முள்ளும் மலரும்’ போன்ற படங்களின் தரத்தை நினைச்சுப் பாருங்க. சான்ஸே இல்லை!


எனக்கு அவருடைய படங்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். 'சினிமா இயக்குநர் ஆகணும்... இதுமாதிரி  படங்களை இயக்கணும்’னு மனசுக்குள் ஒரு விதை விழுவதற்குத் தூண்டுகோலா இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.


இப்போதைய இயக்குநர்கள்னு யோசிச்சா... பல நல்ல இயக்குநர்களில் எனக்கு வசந்தபாலனைப் பிடிக்கும். தனக்குனு ஒரு தனி ரூட் பிடிச்சுக்கிட்டு 'வெயில்’, 'அங்காடித் தெரு’, 'அரவான்’னு ஒண்ணுக்கொண்ணு வித்தியாசமான படங்களா, உலக சினிமா வரிசையில் இடம்பெறக் கூடிய அற்புதமான படங்களாக் கொடுத்துட்டு இருக்கார்!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgNEMJ2IWWb9f7akwSm3sHyUtiygf6Lxiwh5QpWZ9OgdfNaiD3yZnVCqsA8Xpip7H82dNGL6HphM82S71Yub3ZV6uDzixd0sqFARGbSzHOAnv1r_mzVMFJDbF5QLNg2NFgx5f2_7JoKrg/


7. ''உங்களுடைய பெரும்பாலான படங்கள், தனி மனித சாகசங்கள் மூலம் சமூக மாற்றம் சாத்தியம் என்பதுபோல காட்டுகின்றன. நடைமுறையில் இது எந்த அளவுக்குச் சாத்தியம்?''


 ''அண்ணா ஹஜாரே ஒரு 'இந்தியன் தாத்தா’னு விகடனும் மற்ற ஊடகங்களும் குறிப்பிட்டு இருந்தது, ஒரு ஃபிலிம் மேக்கரா எனக்கு அன்லிமிடெட் சந்தோஷம் கொடுத்துச்சு! எந்த ஒரு சமூக மாற்றமும் ஒரு தனி மனிதனின் சிந்தனையில் இருந்துதான் பிறக்குது. ஒவ்வொருவருடைய சிந்தனையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்கு எடுத்துக்கொண்ட காலமும் வெவ்வேறு அளவுகள்ல இருக்கும். ரெண்டரை மணி நேர சினிமாவில் அதைக் கொஞ்சம் பெரிசாக் காட்ட வேண்டியிருக்கு. அவ்வளவுதான்!''


சி.பி - ஹீரோ ஒர்ஷிப் தமிழனை மழுங்கடிக்கும் கலாச்சாரம்


அடுத்த வாரம்
 
''மாட்டிக்கிட்டீங்களா... உங்கள் ஹீரோக்களில் 'தி பெஸ்ட்யார்? ஹீரோயின்களில் 'தி பெஸ்ட்யார்? நழுவாதீர்கள்... நச்செனப் பதில் சொல்லுங்கள்?''


''மாஸ் ஹீரோ, புதிதாக வந்த கிளாமர் ஹீரோயின், மிகப் பெரிய பட்ஜெட், சமூக அக்கறை என்ற கோட்டிங் தடவிய மசாலா கதை, பரவலாக பாமரனுக்குத் தெரியாத சில விநோத விஷயங்கள், சில மாடர்ன் டிஜிட்டல் பாடல், ஒரு டண்டணக்க தெலுங்கு பீட் பாடல், பத்திரிகை, டி.வி. விமர்சனங்கள் வெளிவரும் முன்னரே 'கார்பெட் பாம்பிங்முறையில் ஏகப்பட்ட பிரின்ட் போட்டு, முதல் சில நாட்களிலேயே பணத்தை அள்ளும் உத்தி... இதுதானே 'ஷங்கர் ஃபார்முலா’? விடையாக... 'நண்பன் ரீ-மேக்என்று சொல்லக் கூடாது... சென்சிபிள் பதில் தேவை ஷங்கர்ஜி!


''மணிரத்னமே கைவிட்ட 'பொன்னியின் செல்வன்புராஜெக்ட்டை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும், ஆத்தென்டிக்காகவும் எடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே என்பது என் எண்ணம்... அப்படி ஒரு 'மேக்னம் ஓப்பஸ்எடுக்கத் துணிச்சல் இருக்கிறதா?''

தொடரும்

வெட்கப்பட்ட ஜெ, கோபப்பட்ட கேப்டன், பாவப்பட்ட மக்கள் - காமெடி கும்மி



 கேப்டன் மேல் ரொம்ப நாளாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு எதிர்க்கட்சி போல் அவர் நடக்கவில்லை, பம்முகிறார் என்பதே.. 6 மாசம் போகட்டும், அதுவரை பொறுமை என சால்ஜாப் சொல்லி வந்தார்.. நேற்றோடு அந்த விரதம் முடிந்தது போல..


சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே, நேற்று அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க., உறுப்பினரை, கையை நீட்டி ஆவேசமாக விஜயகாந்த் பேசிய விதத்தை கண்டதும், ""எதிர்க்கட்சித் தலைவர், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இவர்களுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


சி.பி - 80 வயசான கவர்னரையே தப்பா பேசுனவர்தானே இவரு.. இவ்ளவ் ரோஷம் இருக்கறவரு ஏன் கூட்டணி வைக்கனும்? தில் இருந்தா சட்டசபையை கலைச்சிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு அப்புறமா வீராப்பு பேச வேண்டியதுதானே?


சட்டசபையில் நடந்த விவாதம்:

சந்திரகுமார் - தே.மு.தி.க: மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போல் தெரிகிறது. மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயருக்குத் தான் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மின் கட்டணத்தை நீங்கள் உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன.


சி.பி - பஸ் கட்டண உயர்வு வந்தப்பவே  மின் கட்டண உயர்வும் முடிவாகிடுச்சே..

முதல்வர் ஜெயலலிதா: அடிப்படை விவரம் இல்லாமல் உறுப்பினர் பேசுகிறார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு கிடையாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான், மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் புதிய மின் கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான், எல்லாமே நடக்கின்றன. தான் தோன்றித்தனமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. இதையெல்லாம் தெரியாமல் பேசுவது, உறுப்பினரின் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சி.பி  - அதானே,  தான் தோன்றித்தனமாக நாட்ல ஒருத்தர் மட்டும் தான் பேசனும், எல்லாரும் பேச ஆரம்பிச்சா அம்மாவுக்கு கோபம் வராதா?

பதில் சவால்: பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, ஏற்கனவே பலமுறை விளக்கி விட்டோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உயர்த்த வேண்டியது தானே என்று சவால் விடும் வகையில் உறுப்பினர் பேசுகிறார். வேறு வழியில்லாமல் தான், இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வருத்தப்பட்டு, நானே மக்களிடம் "டிவி' மூலமாக விளக்கினேன்.


சி.பி -ஏன்   வேற வழி இல்லை? பெரிய பெரிய தொழில் அதிபர்ங்க கிட்டே வரி போடலாம்.. சினிமா, சிகரெட், டாஸ்மாக் சரக்கு டபுள் மடங்கு ஏத்தலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு நடுத்தர மக்கள்ட்ட பிச்சை எடுக்கறீங்களே, வெட்கமா இல்ல?

திராணியிருக்கிறதா? இருப்பினும், உறுப்பினர் சவால் விட்டு பேசுகிறார். அவருக்கு, நான் பதில் சவால் விடுக்கிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணியிருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய பின் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

சி.பி - சட்ட சபைல போய் மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது செய்வாங்க, பேசுவாங்கனு பார்த்தா இவங்க எல்லாம் அஞ்சாங்கிளாஸ் பசங்க மாதிரி  அடிச்சுக்கறாங்களே? 

விஜயகாந்த்: 2006ல் இருந்து, 2011 வரை பல இடைத்தேர்தல்கள் வந்தன. அந்த இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து, நான் சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன், ஜெயிப்பேன் என்று சவால் விடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அவர்கள் (தி.மு.க.,) எப்படி ஜெயித்தனர் என்பது, அவர்களுக்குத் தெரியும். இப்போது, நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்பதும் தெரியும். (இவ்வாறு விஜயகாந்த் பேசியதும், அமைச்சர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் போட்டனர். பதிலுக்கு, தே.மு.தி.க., உறுப்பினர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால், சபை ஒரே அமளியாக காணப்பட்டது. தே.மு.தி.க., உறுப்பினர்கள், சபையின் முன்பகுதிக்கு வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினர்.)


சி.பி - இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.. இதை எல்லாம் ஒரு மேட்டரா ஜெ சொல்லக்கூடாது.. 





முதல்வர்: தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர், தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.

சி.பி - ஜெயிக்கப்போறது நீங்களா? அவரா? என்பது தெரில, ஆனா தோக்கப்போறது அப்பாவி ஜனங்க தான்.. நீங்க ஏதாவது நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல  அவங்க பாவம் வரிசைல நின்னு ஓட்டு போடறாங்க..

விஜயகாந்த்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டதற்கு மட்டும் தான் பதில். சங்கரன்கோவிலை பற்றி பேசும் நீங்கள், பென்னாகரத்தில் ஏன் தோற்றீர்கள்; அதில், நாங்கள் தான் இரண்டாவது இடம். பென்னாகரத்தில் டெபாசிட் காலியானது ஏன்? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்கனவே குறை கூறிய நீங்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

சி.பி - சும்மாவே கேப்டன் ஆடுவாரு, இன்னைக்கு சரக்கு வேற அடிச்சுட்டு போய்ட்டார் போல.. அவ்வ்வ் 

சபையில் கொந்தளிப்பு: விஜயகாந்த்தின், இந்த தொடர் கேள்விகளால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும், மாறி, மாறி ஆவேசமாக பேச, சபை ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அப்போது, அ.தி. மு.க., உறுப்பினர் ஒருவர், விஜயகாந்த்தை பார்த்து சைகை செய்து ஏதோ பேச, விஜயகாந்த் கடும் ஆவேசத்துடன், பதிலுக்கு கையை நீட்டி கடுமையாக பேச, சபையில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சி.பி - கேப்டன் பிரபாகரன் படத்துல கோர்ட் சீன் தான் ஞாபகம் வருது.. நேத்து ஹாட் டாபிக் கேப்டன் தான், சமூக வலை தளங்களான ட்விட்டர்ல, ஃபேஸ் புக்ல கேப்டன் திடீர் ஹீரோ ஆகிட்டாரு.. 

கூண்டோடு வெளியேற்றம்: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் நுழைந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியேறும் போது, தே.மு. தி.க., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டபடி சென்றனர். அதன்பின், அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, ""சட்டசபை மரபுக்கு மாறாக, சினிமா பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்டார். தரக்குறைவான முறையில், அவரது செயல்கள் இருந்தன. அவர் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க?  

உரிமை மீறல் குழுவுக்கு...: அதன்பின், சபாநாயகர் கூறும்போது, ""எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி உறுப்பினர்களும், சபைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பிற வகைகளிலும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எனவே, சபை விதி 226ன் கீழ், இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்'' என்றார். மார்க்சிஸ்ட் சட்டசபை தலைவர் சவுந்தர்ராஜன் பேசும் போது, ""சபையில் இதுபோன்ற விவாதம் பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொன்றையும், உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது சரியாக இருக்காது'' என்றார். அதற்கு, ""அவர்கள் (தே.மு. தி.க.,) நடந்து கொண்ட விதத்தை அனுமதிக்க முடியாது. தெருச்சண்டை போல் சண்டை போட்டனர்'' என, சபாநாயகர் கூறினார்.

சி.பி - சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்ட்டி சாரி  ஆண்டி கதையா அவங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாங்க.. தூண்டி விட்டது ஜெ தான்..

இதன்பின் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்று, எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சுக்கள் இவற்றையெல்லாம், இங்கேயே அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அனைவரும் பார்த்தனர். தே.மு.தி.க.,வினருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து, குறைந்தபட்ச நடவடிக்கையாக, இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக, சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் தன் முடிவை அறிவித்தபின், வேறு எந்த உறுப்பினரும், அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. 


சி.பி - எம் ஜி ஆர் கூட இதே மாதிரி சொன்னார்..  ”தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர்?”னு, அதை ஜெ கொஞ்சம் நினைச்சுப்பார்க்கனும்?

இந்த நேரத்தில், ஒன்றை சொல்கிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக, நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அ.தி.மு.க.,விற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதே முடிவைத் தான் நாங்கள் பெற்றிருப்போம்.


சி.பி - அவ்வளவு நம்பிக்கை இருக்கா? உங்க கணக்கு தப்பு.. சோவின் ஆலோசனையின் பேரில் வேற வழி இல்லாம தான் நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க..  காரியம் ஆகற வரை காலை பிடி, காரியம் ஆன பிறகு கழுத்தைப்பிடிங்கற கதையா நீங்க இப்போ அவங்களை உதாசீனப்படுத்தறீங்க.. 


அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதன்படி தான், கடந்த தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தே.மு.தி.க.,வின் அதிஷ்டம், எங்களுடன் கூட்டணி சேர்ந்தனர். அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், இத்தனை உறுப்பினர்கள், அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றனர். இந்த கூட்டணியில், எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 


சி.பி - அவ்வளவு நல்லவரா இருந்தா இதே ஸ்டேட்மெண்ட்டை தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி இருக்கலாமே?  இது ஒரு விருப்பம் இல்லாத கூட்டணீன்னு?

என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. தே.மு. தி.க.,விற்கு கொடுத்த இடங்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். நிதர்சனமான இந்த உண்மையை, இந்நேரத்தில் அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்; அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்ததால் தான், அவர்களுக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும், தகுதியும் கிடைத்தது. அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேராவிட்டால், கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,விற்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி. மு.க., தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம்; வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்கு முகம் தான். அதை சரித்திரம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


சி.பி - சரித்திரம் சொல்லுதோ இல்லையோ உங்களூக்கு இனி தரித்திரம்தான்

"அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.


சி.பி - ஆஹா , கேப்டன் தத்துவமா பொழிய ஆரம்பிச்சுட்டாரெ? 


சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் காரசாரமான விவாதத்திற்கு பின் வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி: ஊர்கூடி தேர் இழுத்தது போல் நாங்கள் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது என, எங்கள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் சட்டசபையில் தெரிவித்தபோது, "எங்களால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்' என, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தெரிவித்தனர். "சங்கரன் கோவில் தொகுதியில் தனித்து போட்டியிடுவீர்களா?' என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, எதிர்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் விரல் நீட்டி மிரட்டுகிறார். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 


 சி.பி - அவங்க விரல் நீட்டி மிரட்னாங்கன்னா நீங்களூம் அப்படி செஞ்சா அவங்களுக்கும், உங்களூக்கும் என்ன வித்தியாசம்? நல்ல தலைவர் என்பவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், தன் தொண்டர்களை மட்டுப்படுத்தவும் தெரிஞ்சிருக்கனும்..

அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த பிறகு, சங்கரன் கோவில் தேர்தலை நடத்திக் காட்டட்டும். அப்ப சவாலை சந்திப்போம். யாருக்கு திராணி இருக்குன்னு அன்னைக்கு பார்ப்போம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியும். அதன் மூலம்தான் தி.மு.க., ஜெயித்தது என முன்பு சொன்னார்கள். இப்போது அதே இயந்திரத்தைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர். அப்போது தவறு செய்திருந்தால், இப்போது செய்ய முடியாதா? கடந்த ஐந்து வருடத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., ஜெயித்திருக்கிறதா? பென்னாகரத்தில் டெபாசிட் பறிபோனது. பர்கூரில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் தானே முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

சி.பி - அவரும் தோற்றவர்தான்.. நீங்களும் தோற்றவர் தான்.. இனிமே ஜெயிக்கப்போறது யார்?னு காலம் தான் தீர்மானிக்கும்.. 

 மக்கள் கருத்து 

1. வசந்தி - ராஜன் மக்களின் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்துள்ளார். ஆளும் வர்க்கம் இது போன்று இணைய தளங்களை பார்த்து அவ்வப்போது மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, விஜய காந்தின் முகபாவனைகளை சரியில்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி விலை வாசி பற்றி பேசும்போது ஏன் மிரட்டி அதை பேச விடாமல் தடுக்க வேண்டும்?

தகுதி பற்றி பேசும் அம்மா எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நிதி அமைச்சர் ஆக்கி உள்ளாரே, அது சரியா? ஜெய்லலிதா திருந்தவில்லை என்றால் கோர்ட் திருந்த வைக்கும் (சமச்சீர் கல்வி, சாலைப்பணியாளர் வேலை, தலைமைச்செயலக கட்டிடம்...), இல்லை மக்கள் 2014 ல் திருந்த வைப்பார்கள். கடவுள் அதற்கு முன் பெங்களூர் கோர்ட் வழியாக திருந்த வைக்கலாம்

2.  மகிழ்நன் -தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜயகாந்தை குறித்து...ஜெயா...மம்மி..

சரிங்க மம்மி,,,

நீங்க என்ன தகுதியில பதவிக்கு வந்தீங்க...மக்களுக்கு தொண்டு செய்தா? மத்தவங்களை பேசும்போது கவனமா பேசுங்க...சுயவிளக்கம் கொடுப்பது போலவே இருக்கு

3. யுவா - ரெண்டு பேரும் எப்படின்னு அவங்கவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் நல்லாவே தெரியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்த நிலையில் இவங்களை ஜெயிக்க வைத்ததன் பலன் தான் இது. ஆமாம்பா, ஒரு ச.ம.உ. நாட்டுநடப்பு பத்திக் கேள்வி கேட்டால் என்ன எகத்தாளமா பதில் சொல்றது? கேட்ட கேள்விக்குச் சரியான பதில் மட்டும் அளித்துவிட்டு விட வேண்டியது தானே? அப்புறம் என்ன அப்பென்டிக்ஸ் மாதிரி தகுதி பத்தி கருத்து? என்னவோ இவுகளுக்கு ரொம்பத் தகுதி இருக்கிற மாதிரி. நீங்க எப்படி அரசியலரங்கில் நுழைந்தீர்கள் என்று நல்லாவே தெரியும்.


3 முறை முதல்வர் ஆனதும் எந்தத் தகுதியின் அடிப்படை? முதல்ல உங்க கட்சி ச.ம.உ. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது என்ன தகுதி பார்க்கறீங்க? கேட்டா சசி மேல பழியைப் போட்டுட்டு உத்தமி வேஷம் கட்டுவீங்க? அப்படி சசி தான் எல்லாத்துக்கும் காரணம்னா, முந்தா நாள் தான் தெரிஞ்சதா? உங்க நாடகம் எல்லாம் நல்லாவே நடத்துங்க. முடிவு நெருங்குகிறது. ஆக மொத்தம் மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாவது (மாநில (அ) மக்கள் வளர்ச்சிக்கு) கொண்டு வந்திருக்கிறீர்களா இந்த 9 மாத காலத்தில்? கேட்டா கடந்த ஆட்சியின் ஊழலால் அரசு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறதுன்னு சத்தாய்ப்பீங்க? எப்படி ஒரு 5 வருஷம் ஆகுமா அதைச் சரிப்படுத்த? இதுல இந்த சசி, "கரன்"களின் பிரச்சினை வேறு. அதைச் சீர்படுத்துவதுதானே இப்போது தலையாய கடமை உங்களுக்கு? 96-ஆம் வருஷம் நீங்க போட்ட ரூட்ல தானே இப்போ "கரன்"களும் கன்டெய்னரில் பணத்தையும், பத்திரங்களையும் ஏற்றி அனுப்பிக்கிட்டு இருக்காங்க?


4. சந்த்ரு -விஜயகாந்தை விட மோசமாக பேசியுள்ளர் ஜெயா. அடுத்தவரை மதிக்கும் பண்பு இவரிடம் எப்போதும் இருந்ததில்லை.


5. அகிலன் -"தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்," என்று விஜயகாந்தை ஆவேசமாக சாடினார். இதையெல்லம் சொல்ல்வதர்கு தகுதி உள்ளத என யோசித்து பேசியிருக்கலாமே எதிர் கட்சி என்றாலெதி கேள்வி கேட்கதான செய்வாங்க அது எதிர் கட்சி வரிசையில் உக்காந்திருந்தாதானே தெரியும் கொட நாட்டில போய் கொட்டிகிட்டா எப்டிப்ப தெரியும் மக்களே இவர்களை சட்ட பேரவயில் சட்டம் பேசத்தானே அனுப்பினோம்
சண்ட போடவா அனுப்பினோம் யார் வந்தாலும் இதை மட்டும்தான் உருப்படியா செய்றாங்க சட்ட மன்ற உறுப்பினர்களே நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் வெற்றிக்கு காரணம் நீங்கள் இருவருமே அல்லடா ஆளுங்கட்சி காரர்களே நான்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வெற்றிக்கும் காரணம் தி மு க தானே தவிர உங்களின் மகதன சேவையை கண்டு யாரும் வாகாளிக்க வில்லை தி மு க வின் மேல் உள்ள வெறுப்பால் மற்று கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே உங்களுக்கு வாக்களித்தார்கள் தயவு செய்து நீங்கள் மார்தட்டி கொள்ளாதீர்கள் மக்கள் உங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள் தோழர் சந்திர மோகனுக்கு ஏன் நன்றி அவர் சரியாக தானே கேட்டிருக்கிறார் எப்பா மாமன்ற உறுப்பினர்களே கேள்ளவி கேட்ட பதில் சொல்ல கத்துகிட்டு சட்டபேரவைக்கு வாங்க தோழர்களே நீங்க வெட்க படாதீங்க உங்களுக்கேள்ளலாம் வாக்களித்தொமே என்று நாங்கள் வெட்க படுகிறோம்

Wednesday, February 01, 2012

அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவர்!!!!!!!!! ( joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5ZJ7u5NtuE1wPCGW6pUHEP3rNlvrJhP8DKviiGqiE5N3H2nk62WrrsTWP6BaH1YuwAZgE8Iye6NgEEJuUkZDBJNZ2QBC3jubfFL1QOMIwkN2oBFYL5mIvpZkkcQJGRr1IiFVW07jlln_I/s0/amy-jacksan-stills-008.jpg1. டியர்! இனிமே உன் மனசு புண்படற மாதிரி நான் பேசமாட்டேன்.

நிஜமா? தாங்ஸ்.

எங்கம்மாதான் இன்சார்ஜ் அதுக்கு இனிமே! அவங்க திட்டுவாங்க.

---------------------------------------

2. கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்.

அப்போ எதுவுமே எடுக்காதவன் சாகவே மாட்டானா?

------------------------------------------

3. சென்சார்ல ஒரு சீனைக் கூட வெட்டலையாமே?

ஆமா! அவங்களுக்குத் தனியா ஒரு அமவுண்ட் வெட்டிட்டமே!

-------------------------------------------

4. ப்ரீவ்யூ ஷோ பார்த்த புரொடியூசர் கண்கலங்கிட்டார்.

படம் ஊத்திக்கும்-னு கண்டுபிடிச்சுட்டாரா?

---------------------------------------

5.சிம்பு, ஆண்ட்ரியா, திவ்யா ஸ்பந்தனா நடிக்கும் ‘வட சென்னை’ துவக்கம்.

மசால் வடை ஆண்ட்ரியா, மெதுவடை திவ்யா, வடை எனக்கே என கூவுபவர் சிம்பு!

-----------------------------------------

6. பீச்சுல சுண்டல் விற்கறவங்களோட நிலைமை என்ன ஆகுது?-ங்கறதுதான் மெரீனா - பாண்டிராஜ்.

படத்தோட டைட்டில் கில்மாவா இருக்கு கதை knot கொல்மாவா இருக்கே?

-----------------------------------------

7. ரெய்டு வர்ற மேட்டர் தலைவருக்கு தெரிஞ்சிருச்சு போல!

எப்படி சொல்றே?

ரெய்டு பண்ண வந்த சி.பி.ஐ ஆஃபீச்ரே! வருக! வருக!-னு பேனர் வெச்சிருக்காரே?

--------------------------------------------

8. டாக்டர்! என் பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்.

போஸ்ட் பெயிடு சிம்மா? பிரீ பெய்டு சிம்மா?

------------------------------------------

9. தலைவர் செம ஜொள் பார்ட்டி.

எப்படி சொல்றே?

லேடி போலீஸ் பாதுகாப்பு வேணும்-னு கேட்கறாரே?

-----------------------------------------

10. கப்பல் மேல் தளத்துலதான் உங்களுக்கு வேலை.

அய்யய்யோ! இது நீர்மூழ்கி கப்பல் ஆச்சே?

--------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLL-Ms5c9JBWHbLe7HTG3YXZjbQzQdzrxL9aZm81-OoqJhP-x9JGns1zE6VwUbZeITaUwk348EEUXAAtD2_FeUFbMwSu3efZwmNf23WbSodxB5vCmJy3hVWH3I7B54vFJeBeCDFNof-6A/s640/Madhurima.jpg

11. லைட்னிங் ஸ்பீக்கர் LIGHTNING SPEAKER அப்டிங்கற பட்டப்பேரு தலைவருக்கு எப்படி வந்துச்சு?

சொடக்கு போடற நேரத்துல கடலையை போட்டு முடிச்சிடறவன் தான் மின்னல் வீரன் என்றழைக்கப்படுவான்.

-------------------------------------------

12. தலைவருக்கு 6 சின்ன வீடு இருக்கு.

ஓஹோ! அறுபடை வீடு கொண்ட கில்மா தலைவரா?

-----------------------------------------

13. புலால் உணவில் மட்டும்தான் மூளை வளர்ச்சிக்கு துணை புரியும் வைட்டமின் B12 இருக்கு....

டாக்டர்... அப்போ சைவமா இருக்கும் மனுஷனை விட அசைவமா இருக்கற சிங்கம் புத்திசாலியா இருக்குமா?

-----------------------------------------

14. தலைவர் பையன் சினிமால நடிக்கறாராம்.

கிங் காங் பார்ட்-2 எடுக்கறதா ஐடியாவோ!

---------------------------------------

15. ATM மிஷின்ல கொள்ளை அடிச்சவன் ரூல்ஸ் 4 ரெகுலேஷனை ஃபாலோ பண்ணி இருக்கான்.

எப்படி?

ரூ. 25,000 மட்டும் எடுத்திருக்கான்.

------------------------------------

16. டியர்! உலகின் 9-வது அதிசயம் நீ தான்...

நிஜமாவா? தாங்ஸ்... அப்போ 8-வது?

ஹி... ஹி... உன் தங்கச்சி...

--------------------------------------------

17. டைரக்டர் சார்! ஹீரோ & கோ படத்துல சாப்பிடறப்ப மடில பிளெட்டை வெச்சுக்கறாங்க. வில்லன் & கோ தரைல பிளேட் வெச்சு சாப்பிடறாங்க. ஏன்?

மேல் தட்டு மக்கள், கீழ் தட்டு மக்கள்-னு வெரைட்டி காட்றாங்க.

-----------------------------------------

18. மாப்ளை ரொம்ப மரியாதை தெரிஞ்சவர்-னு எப்படி சொல்றே?

பெண் பார்க்க வந்தப்பவே பொண்ணோட கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனாரே?

----------------------------------------

19. உங்களுக்கு நாவடக்கம் ஜாஸ்தியாமே?

ஆமா! மேரேஜ்க்கு விறகு என் மனைவியோட சமையலால் என் நாக்கே செத்துப் போச்சு. அடக்கம் பண்ணிட்டேன்.

----------------------------------------------

20. என் மனைவி கூட சண்டை வர்றப்ப சரணாகதி ஃபார்முலாதான் ஃபாலோ பண்றேன்...

அடடா...  ஏன்?

இல்லைன்னா என் கதி அதோ கதிதான்.

----------------------------------------

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/12/Amy-JAckson-s.jpg

தேனி மாவட்டம் - விளைநிலங்கள்,விவசாயம் வாழ - சினிமாவிமர்சனம்

http://runtamil.com/wp-content/uploads/2012/01/00-00-2373.jpg 

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள் எல்லாம் தன் இமேஜை பில்டப் பண்ற கதைல மட்டும் தான் பெரும்பாலும் நடிக்கறாங்க.. சின்ன பட்ஜெட் படங்கள்ல பல சமயம் அரிதான மெசேஜ்கள் அசால்ட்டா சொல்லிட்டு சத்தம் இல்லாம நகர்ந்துடறாங்க.. சரியான மார்க்கெட்டிங்கோ, நல்ல ஓப்பனிங்க்கோ இல்லாம அமுங்கிடுது.. அந்த மாதிரி நல்லதொரு கதைக்கரு உள்ள படம் தான் தேனி மாவட்டம்..
வில்லி ஐஸ்வர்யா சசிகலா மாதிரி.. கிடைச்ச நிலத்தை மடக்கிப்போடு, எதிர்க்கறவங்களை அடக்குப்போடு டைப்.. அவர் இருக்கற கிராமத்துல ஹீரோவோட அப்பா நல்ல செல்வாக்கா நில புலன்களோட இருக்கார்.. ஃபாரீன் ஆட்கள் அந்த கிராமத்துல தொழிற்சாலை கட்ட விளைநிலங்களை விலை பேச வர்றாங்க.. ஹீரோவோட அப்பா தர்லை.. தொழிற்சாலை கழிவுகளால் விளைநிலங்கள், எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும்னு சொல்லி தானும் நிலங்களை தராம வேற யாரும் தராத மாதிரி பிரச்சாரம் பண்றாரு.. 

வில்லி ஹீரோவோட அப்பாவை போட்டுத்தள்ளிடறா.. ஹீரோ தன் அப்பாவை கொலை செஞ்சவளை பழி வாங்க கிளம்பாம தன் கிராமத்து  மக்களின் நன்மைக்காக பாடு படறார்.. வில்லி தன் நிலத்தை ஃபேக்டரி கட்ட தர முயலும்போது அதை கோர்ட் உத்தரவு மூலம் தடுக்கறார்.. கிடைச்ச கொஞ்ச நஞ்ச கேப்ல ஹீரோயினை லவ்வறார்.. 

தயாரிப்பாளர் ஜி கே தான் ஹீரோ.. இவர் செஞ்ச புத்திசாலித்தனமான 2 விஷயம்.. கதைக்கரு விளைநிலங்களை விற்கக்கூடாது. அப்டினு எடுத்துக்கிட்டது.. ஹீரோயின் கசக்கு மொசக்குன்னு அதாவது கும்முனு 2 பேரை புக் பண்ணது.. 

ஹீரோவுக்கு ஒரு தம்பி.. அவருக்கு ஒரு ஜோடி.. ஹீரோ -ஹீரோயின் ஜோடி போரடிச்சா இந்த ஜோடியை குளிர பார்த்துக்கலாம்.. ஆஹா என்னே ஒரு ஐடியா.. 

ஹீரோ ஜி கே கறுப்பு ராமராஜனா , லோ பட்ஜெட் எம் ஜி ஆரா உலா வர்றார்.. க்ளோசப் காட்சிகள்ல பயப்படுத்தறார்.. பெரும்பாலும் லாங்க் ஷாட் தான், அதனால தப்பிச்சோம்.. :)ஆள் காட்டி விரல்ல தங்க மோதிரம் போட்ட முதல்  தமிழ் சினிமா ஹீரோ என்ற அந்தஸ்தை பெறுகிறார்:) சின்னக்கவுண்டர் விஜயகாந்த், புதுப்பாட்டு ராமராஜன் இருவரையும் மிக்ஸ் பண்ணுன நடிப்பு..

ஹீரோவின் அப்பாவாக வரும்  மகாதேவன் அமைதியான நடிப்பு..  பாராட்ட வைக்கும் தோற்றம்.. 

ஹீரோயின் நெம்பர் 1 -வர்ஷா 

http://www.cinehour.com/gallery/events1/audioreleases/Theni%20Mavattam%20Audio%20Launch/21524487Theni_Mavattam_Movie_Audio_Launch-(31).jpg

ஹீரோயின் நெம்பர் 1 உடல் சைஸ்   42 -42-42 என ஒரே அளவாக தென்பட்டாலும் ரசிக்க வைக்கிறார்.. கொழுக்கட்டை மாதிரி இருப்பதால் சி செண்ட்டர் ரசிகர்கள் விசில் அடிச்சு ரசிப்பார்கள்.. ( நான் அடிக்கலை.. எனக்கு விசில் அடிக்க தெரியாது)

ஹீரோயின் நெம்பர் 2 பாரதி ராஜா படத்துல அறிமுகம் ஆகும் கிராமத்து ஹீரோயின் ரஞ்சனி ( கவனிக்க ரஞ்சிதா அல்ல) மாதிரி பாந்தமாக வர்றார்.. அவருக்கு காட்சிகள் கம்மிதான் .. இருந்தாலும் மனசுல நிக்கறார்.. உக்காந்திருக்கார். 

வில்லி ஐஸ்வர்யா தெனாவடான நடிப்பு.. அவரது ஆண்மைத்தனமான  கர கர குரலே பாதி வேலையை செஞ்சுடுது.. ஆனா அவர் பொருத்தமே இல்லாம விக் வெச்சிருக்கறது கண்ணில் உறுத்தல்.. அந்தக்கால சரோஜா தேவி ,மஞ்சுளா போட்டிருக்கும் டோப்பா மாதிரி நல்லாவே இல்ல.. 

http://chennai365.com/wp-content/uploads/Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch/Theni-Mavattam-Audio-Launch-Stills-026.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படத்தோட விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஆனா கண்டிப்பா பாராட்ட வேண்டிய விஷயம்.. படத்துல வர்ற எல்லா பெண் கேரக்டர்களுக்கும் பிரமாதமான நெக்லஸ் டிசைன், அதுக்கு மேட்சா தோடு ஜிமிக்கி எல்லாம் போட வெச்சு கலக்கியது.. குறிப்பா வில்லி ஐஸ்வர்யா, சபீதா ஆனந்த், ஹீரோயின் நெம்பர் 1 இந்த 3 பேரும் அணிந்து வரும் நெக்லஸ், மற்றும் பட்டுப்புடவை டிசைன் செம செம.. 
2. ஹீரோயின் நெம்பர் ஒன் ( பேரு வர்ஷா) திமிசு, சொகுசு,தினுசு, ரவுசு என நாட்டுக்கட்டையா இருந்தாலும் கண்ணியமா படத்துல காட்டிய இயக்குநரின் பொறுப்பு.. 


3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ்ல ஸ்கூல் குழந்தைங்க எல்லாம்  தேடியக்கொடி டிசைன் பண்ணும், ஆடும் சீன் செம கலக்கல்.. 

4. ஆக்க பூர்வமான திட்டமாக ஹீரோ சொல்லும் ஏ டி எஃப்  ( ATF ) எனி டைம் ஃபுட் செயலாக்க நடைமுறை விளக்கம் செம.. 

5.  பாடல் காட்சிகள் யதார்த்தம்.. யக்கா யக்கா டப்பாங்குத்து,கண்ணாலே கடிதம் போட்டு, சாமிக்கு உறக்கம் இல்ல, பொய் தானே,பூவுக்கும் காற்றுக்கும் திருமணம் செம ஸ்பீடு பாட்டு, கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி பாடல் ரீ மிக்ஸ் என எல்லா பாட்டுமே தியேட்டர்ல கேட்கற அளவு இருக்கு.. 

ஹீரோயின் நெம்பர் 2 -ரேணு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUpDvJDb-9WQ8y5t-Mt2uTPolXj43_T4AjaffhmXERkX3rVUPB0ad8qEAIkyGVgXjSlt43iHT-dKydzipozWa7oJKZAt4PxxdLAg9fyIAhpMgo1-z5iehZw7KlfFNRIbDNfkMoxZRC6fA/s1600/theni_mavattam.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1.  கோடீஸ்வரியா வர்ற வில்லி ஐஸ்வர்யா ஒரு சீன்ல கோயில் அர்ச்சகர் சீட்டு தர்ற ஆள் கிட்டே அர்ச்சனை சீட்டு எவ்ளவ்?என கேட்டு அவர் ரூ 25 என சொன்ன பிறகு வாங்கறார்.. இந்தக்காலத்துல யார் ரேட் எல்லாம் கேட்கறாங்க?

2. வில்லி ஐஸ்வர்யாவை அரெஸ்ட் பண்ண பொலீஸ் வருது.. பெண் போலீஸ் யாருமே  கூட இல்லை.. ஒரு ஊரின் வி ஐ பி லேடியை இப்படி அரெஸ்ட் பண்ண முடியுமா? ( கோர்ட் ஆர்டர் படி ஒரு பெண்ணை கைது செய்ய கூட 2 பெண் போலீஸ் இருக்கனும்)

3. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவோட தம்பி அவர் சொந்த ஊர்ல பஞ்சம்.. அவரை வேற ஊருக்கு அழைக்கறாங்க.. பிடிச்சா போகனும்.. பிடிக்கலைன்னா வர்லை.. இங்கேயே இருந்துக்கறேன்னு சொல்லனும்.. யாராவது இதுக்காக தற்கொலை செஞ்சுக்குவாங்களா? அதுவும் 5 வயசு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு கணவன், மனைவி 2 பேரும் சாகறாங்க கிணத்துல விழுந்து. ஏத்துக்கவே முடியலை.. 

4. விவசாயிகள் விழிப்புணர்வுக்கூட்டத்துல ஹீரோ பேசறப்ப “ உங்களை மாதிரி இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை”ங்கறார்.. ஆனா கூட்டத்துல எல்லாம் 60 வயசான பெருசுங்க தான் இருக்கு.. 

5. ஒரு சீன்ல ஹீரோ கார்ல போறாரு.. வில்லன் ஜீப்ல சத்தம் இல்லாம பின்னாலயே போய் இருந்தா ஈசியா பிடிச்சிருக்கலாம். ஆனா வில்லன் லூஸ் மாதிரி டாஆஆஆஆஅய்னு கத்தி ஊரைக்கூட்டி சேஸ் பண்றாரு.. ஹீரோ எஸ் அவ்வ்வ்வ்

6. ஒரு சீன்ல ஹீரோவோட தம்பியை குற்றுயிரும் கொலை உயிருமா வெட்டிட்டு போறார்.. காயம் பட்ட ஆள் கம்முனு இருக்காம என்னமோ அர்னால்டு கணக்கா  “ என்னை  முழுசா கொன்னுட்டு போயிடு, இல்லைன்னா உன்னை அழிச்சிடுவேன்னு வார்னிங்க் தர்றார்..திரும்ப வந்த வில்லன் சதக்.. அவ்வ்வ் 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/theni-mavattam-movie-audio-launch-event-007.jpg

மனம் கவர்ந்த வசனங்கள் (GOWMAARIMUTHTHU)

1.  இயற்கையை அழிக்க நம்ம யாருக்குமே உரிமை இல்ல.. மரம் பட்டுப்போனா வனம் கெட்டுப்போகும்.. 

2.  அவனைப்பாரு.. சைலண்ட்டா பிள்ளை பிடிக்கறவனாட்டமே போறதை.. டேய்.. இது உன் வீடுடா.. ஏன் பம்பறே?

3.  மாப்பி.. நேரா கிணத்துக்குப்போறோம்.. குளிக்கறோம்.. குடிக்கறோம்..

நோ முதல்ல . குடிக்கறோம்.. அப்புறமா குளிக்கறோம். ஹி ஹி 

4.  நீ ஏன் எப்போ பாரு பாட்டிலும் கையுமா இருக்கே?

அடிக்கடி தொண்டை நனைஞ்சிடுது.. நனைக்க வேணாமா?

5. ஏம்மா, எங்கம்மா லைசன்ஸ்? கவர்மெண்ட்டே அதை ரிட்டர்ன் வங்கிடுச்சா?

லைசன்ஸா?அப்டின்னா என்ன?

6. யோவ்.. யோவ்.. வண்டி நின்னுடுச்சு.. என்ன ரிப்பேர்னு கொஞ்சம் பாருய்யா.. 

அந்த நிப்பிளை தூக்கி விட்டா ஸ்டார்ட் ஆகிடும்.. 

யோவ்!!!!!!

ஓ சாரி.. நான் இக்னீஷியனை சொன்னேன்..

7.  ஏம்மா.. சாம்பாரை பார்த்து ஊத்து.. 

நீ இப்போ டாஸ்மாக்ல ஊத்திட்டு வந்ததுக்கு இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

8. நீங்க பாட்டுக்கு 500 ஏக்கர்ல ஃபேக்டரி கட்டுவீங்க, அது வெளீப்படுத்தும் கழிவுகள் 2000 ஏக்கரை பாதிக்கும்.. 

9. அந்தக்காலத்துல மிலிட்ரிக்கு ஆள் எடுக்கத்தான் அரசாங்கம் கூவி கூவி ஆட்களை அழைச்சுது.. அந்த நிலைமை இப்போ விவசாயத்துக்கும் வந்துடும் போல.. 

10.. நாம எல்லாம் சேர்ந்து விவசாயம் பண்ணலாமா?

அண்ணே, உங்களோட சேர்ந்து இப்போதான் சரக்கு அடிக்க கத்து இருக்கோம்.. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பழகிக்கறோம்.. 

11.. எந்தத்தொழிலும் த்தெரியாமகூட ஒருத்தன் பொழப்பை ஓட்டலாம், ஆனா எந்த ஒரு குடி மகனும் விவசாயம் தெரியாம இருந்திடக்கூடாது..

டி வில போட்டா அவசியம் பாருங்க ஹி ஹி ஹி 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - ராமராஜன் ரசிகர்கள், விவசாயிகள், கிராமத்தில் சொந்த நிலம் வைத்திருப்போர் பார்க்கலாம்.. விழிப்புணர்வுப்படம்

ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்.

இந்தப்படம் 7 நாட்கள் தான் ஓடும். இதை எப்படி கண்டு பிடிச்சேன்னா தியேட்டர்லயே 3.2.2012 முதல் மெரீனா வருகிறதுன்னு ஸ்லைடு போட்டாங்க ஹி ஹி

நிம்மிக்குட்டி-25 , 25, 25 - காதலர் தின சிறப்பு சிறுகதை

http://www.freeorkutscraps.com/orkut/love-scraps/love-scraps-for-orkut.jpg

மணி ஐந்தடித்தது...,

ஒவ்வொருத்தராக வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.  நிர்மலா இன்னும்
கம்ப்யூட்டருக்குள் தலையை விட்டுக்கிட்டு இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்ட
லதா, நிர்மலாவின் கேபினுக்குள் சென்றாள்.


நிர்மலா, மணி ஐந்தடிச்சிடுச்சுப்பா.எல்லாரும் போறாங்கப்பா

ம்ம்ம், பார்த்தேன் பார்த்தேன்..,

ஏய், கிளம்புப்பா, இன்னிக்கு லவ்வர்ஸ்டே... எனக்காக என் ஹப்பி
காத்திக்கிட்டு இருப்பார்.


சரி, நீ கிளம்புறதுன்னா கிளம்பு யார் வேண்டாம்ன்னு சொன்னாங்க.

ஏய் என்னடி ஒரு மாதிரி பேசுற. இன்னிக்கு லவ்வர்ஸ்டே மட்டுமில்லைடி.
உன்னோட பிறந்தநாளும் கூட. உனக்கு நினைவில்லையா?


ம்ம்ம் இருக்கு இருக்கு. ஸோ வாட்?

என்னது ஸோ வாட்? என்னடி ஒரு மாதிரியா பேசுற. நீ முதல்ல  எழுந்திரு. நாம
கெளம்புலாம். போற வழில பேசிக்கிட்டே  போகலாம்ன்னு நிர்மலாவை ஆபீஸை விட்டு கூட்டி வருவதற்குள் லதாவுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

ஏன்? என்னாச்சு? இன்னிக்கு லவ்வர்ஸ்டே. கூடவே உன் பொறந்த நாளும்கூட
 உனக்கு. திருமணமாகி மூணு மாசம்தான் ஆகியிருக்கு. தனித்தனியா இந்த மூணும் வந்திருந்தாலும் இதுதான் சாக்குன்னு கொண்டாடுவாங்க நியூலி மேரிடு கப்பிள்ஸ். உனக்கு மூணும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கு செலிபரேட் பண்ணாம ஆபீசுக்கு வந்திருக்கே. காலைல இருந்தே நீ சரியில்லை. முகமே வாட்டமா இருந்துச்சு. காலையிலேயே கேட்கனும்ன்னு நினைச்சேன். வொர்க் லோட் அதிகமா இருந்ததால் பேச முடியலை. ம் ம் சொல்லு என்ன உன் பிரச்சனை?

என்னன்னு சொல்றது.நீ சொல்றதுப் போல இன்னிக்கு மூணு ஸ்பெஷலும்  ஒண்ணா சேர்ந்து வந்திருக்கே. நல்லா செலிபரேட் பண்ணனும்ன்னு நானும் ஒரு வாரமாவே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால், அவர் என்ன ஏதுன்னு கண்டுக்கலை. சரி, சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு  நைட் 12 அடிக்கும்போது எதாவது கிஃப்ட் தந்து விஷ் பண்ணுவாருன்னு தூங்குறமாதிரி நடிச்சுக்கிட்டு ஆசையோடு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ம்ஹூம் நான் நினைச்சமாதிரி ஏதும் நடக்கலை. கும்பகர்ணனோட வாரிசுபோல தூங்கறார்.


ஐயோ, அப்புறம்...,

காலையில விஷ் பண்ணுவாருன்னு என்னை நானே தேத்திக்கிட்டு தூங்கிட்டேன்.நான் எந்திரிக்குறதுக்கு முன்னாடியே எந்திரிச்சு, டைனிங்க் டேபிள்ல லெட்டர் எழுதி வச்சுட்டு ஆபீஸ் போய்ட்டார். இந்த டைம் வரைக்கும் போன் பண்ணி விஷ்ஷும் பண்ணலை சாரியும் கேட்கலை. ஒரே வெறுப்பா இருக்குப்பா.


ம்ம்ம். சந்துரு ஏன் இப்படி நடந்துக்குறார். நான் ஒண்ணு கேட்பேன். உண்மையை சொல்வியா நிர்மலா?


ம்ம் கேளு லதா.


உனக்கும், சந்துருக்கும் ஏதும் சண்டையா?

http://iosifthoughts.files.wordpress.com/2011/01/love.jpg


அப்படிலாம் ஏதுமில்லைப்பா. அப்படி இருந்தால் உன்கிட்ட சொல்லியிருப்பேனே.


சந்துரு வீட்டுல இருந்தால் எதாவது பேசிக்கிட்டு சீண்டிக்கிட்டும், கொஞ்சிக்கிட்டும் இருப்பார். நேத்து நைட்ல இருந்துதான் சைலண்டா இருக்கார். என்ன காரணம்ன்னும் தெரியலை. ரெண்டு நாளா சீரியஸா ஏதோ திங்க் பண்ணிக்கிட்டே இருக்கார். இந்த ரெண்டு நாளில் நான் சந்துருவை ரொம்ப மிஸ் பண்றேன்ப்பா.


சரி சரி அழாதேப்பா. கண்ணை தொடைச்சுக்கோ எல்லாரும் பார்க்குறாங்க பாரு. அவனுக்கு என்ன பிரச்சனையோ? தெரியலையே. இன்னிக்கு ஏதும் கேட்காதே. அப்புறம் பர்த்டேதான் உனக்கு முக்கியமா போச்சான்னு கத்துவான். நாளைக்கு கேட்டுக்கோ. ஓக்கே. மனசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காம தெளிவா இரு. எனக்கு பஸ் வந்துட்டுது. நான் வரேன். பை நிர்மலா.


குட்பை ப்பா.ன்னு சொல்லிவிட்டு மனம் அமைதிப்பட நடந்தே வீடு வந்து சேர்ந்தாள். தன்னிடமிருந்த சாவியால் பூட்டை திறந்து உள்ளே சென்று ஆயாசமாய் சோஃபாவில் விழுந்தவள் அப்படியே தூங்கி போனாள்.


ஹேப்பி பர்த்டே டூ யூ..., ஹேப்பி பர்த்டே டூ யூ நிர்மலா ந்னு சத்தம் கேட்டு எழுந்தவளை வாரி அணைத்தவனை கோபத்துடன் தள்ளி விட்டாள். இந்த பாழாப்போன விஷ்ஷை காலையிலேயே சொல்றதுக்கென்ன? நான் எப்படி ஏமாந்துப்போனேன் தெரியுமாடா? மறந்துட்டு இப்போ ஆசை இருக்குற மாதிரி நடிக்குறியா? என்று காலையில இருந்து தேக்கிவைத்த ஏமாற்றத்தை கோவமாய் கொட்ட தொடங்கினாள்


நிர்மலா குட்டி கோச்சுக்காதடா. என் செல்லத்தோட பர்த்டே வை மறப்பேனா? உன் பர்த்டே, அதுவும் இருபத்தைந்தாவது, அதலயும் லவ்வர்ஸ்டே அன்னிக்கு
வந்திருக்கு. அதானால இந்த ஸ்பெஷல் டேவை நம்ம வாழ்நாள் முழுக்க மறக்க கூடாதுன்னு  ஒரு வாரமா பிளான் பண்ணவனை இப்படிலாம் பேசலாமா டார்லிங்.

”அப்படி பிளான் பண்ணி என்னத்தை கிழிச்சே” என்றாள் சற்றும் கோவம் குறையாமல்...,

சர்தான் போடி நானும் எவ்வளவோ கெஞ்சுறேன். என்னமோ பெரிய இவளாட்டம் முறைச்சுக்கிட்டு இருக்கியே, நீயெல்லாம் பொறந்து என்னத்த சாதிச்சே. 

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் போய்டுச்சு. மானே, தேனே, தேவதைன்னு கொஞ்சிட்டு இப்போ பொறந்து என்ன சாதிச்சேன்னா கேட்குறே. இந்த ஆம்பிளைங்களே இப்படிதாண்டா.

ஆமாண்டி, என்னத்த பண்ணி தொலைக்குறது. கல்யாணம் ஆன புதுசுல எல்லா
ஆம்பிளங்களும் செய்ற அதே தப்பைதான் நானும் செஞ்சு தொலைச்சேன். அதான் இப்படி தலை மேல ஏறி உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடுறே. தலை வலிக்குது. போய் காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வாடி

ம்க்கும், இதுக்கு மட்டும் நான் வேணுமாக்கும். நீயே போய் போட்டு குடிடா.

ஏய், என்னடி வாய் நீண்டுக்கிட்டே போகுது. ஒரு அறை விட்டேன்னா நாலு
நாளைக்கு எந்திரிக்க மாட்டே. பொறந்த நாளாச்சேன்னு பார்க்குறேன்ன்னு
ஓங்கிய கையை மடக்கியவனை பயத்துடன் பார்த்துக்கொண்டே சமையலறைக்குள் போனவளை,

ஏய், சனியனே! நீ இப்போ கட்டி இருக்குறது நான் வாங்கி குடுத்தது. விலை
2,750 ரூபாய். கிச்சனுக்கு போய் அதை பாழாக்காதே. போய் நைட்டி மாத்திக்கிட்டு வந்து காஃபி போட்டு குடு.

என்ன ஆச்சு இவனுக்கு என்று எண்ணி வியந்தவாறே பெட்ரூமுக்குள் சென்றவளை தொடர்ந்து வந்தவன் சட்டென்று இழுத்து ஆக்ரோஷமாய் முகம் முழுக்க முத்தமிட்டவன்...,

உன் இருபத்தைந்தாவது பிறந்த நாளுக்காக இருபத்தைந்து பூக்களால் செய்த
”பொக்கே” இந்தா என்று முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை நீட்டினான். இருபத்தைந்து ரக ஸ்வீட், இருபத்தைந்து டிரெஸ்ன்னு எல்லாமே இருப்பத்தைந்தாக பரிசா தரனும்தான் ரெண்டு நாளா அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேண்டி என் அருமை பொண்டாட்டி. பொக்கே வரதுக்குதான் லேட்டாகிடுச்சு அதுக்குள்ள இந்த குதி குதிக்குறியேடி கேணை கிறுக்கச்சி.
போடா, என்று சினுங்கியவளின் உதடுகளில் அவன் இட்ட தாய் முத்தம்
இருபத்தைந்து குட்டி முத்தங்களை பிரசவித்து ஓய்ந்தது.

டேய் பொறுக்கி, என்னை காலைல இருந்து அலைக்கழிச்சதுக்காக உனக்கு தண்டனை தரப்போறேண்டா.

சொல்லுங்க மகாராணி, என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று நாடக பாணியில் குத்துக்காலிட்டு அமர்ந்தவனிடம்
“உன் மீசை குத்தி என் கன்னம் சிவக்கும்வரை நீ முத்தமிட்டு கொண்டே
இருக்கனும்” என்றாள் குறும்பாக.

அடிப்பாவி, இப்போதானேடி ஷேவ் பண்ணேன் என்று அப்பாவியாய் கூறிக்கொண்டே முத்தமிட தொடங்கினான்...,

Tuesday, January 31, 2012

ஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ... நீளும் பட்டியல்கள் ( ஜோக்ஸ்)


அடங்கொன்னியா..

1.தாடி வெச்சா லவ் ஃபெயிலியர்னு இனி எவனும் சொல்ல முடியாது # பிரபுதேவா, தனுஷ்

-----------------------------

2. என்னுடன் நடித்தவர்களிலேயே ரொம்ப கன்வீனியன்டாக இருந்தவர் தனுஷ்-ஸ்ருதி கமல் # என்னை அடித்தவர்களிலேயே ரொம்ப காண்ட் ஆகி அடிச்சவர் ரஜினி-தனுஷ்

--------------------------------

3. கஸ்”தூதூ”ரி ராஜா - எனக்குப்பிறந்த 2 பேருமே சிங்கக்குட்டிங்கடா, 2 பேரும் என் குலப்பெருமையை காப்பாத்தீட்டீங்க, உங்க கிட்டே இன்னும் EXPECT

-----------------------------

4. ஜட்ஜ் - கட்டுன மனைவிக்கு துரோகம் செஞ்சீங்களா?

தனுஷ் - நோ யுவர் ஆனர், நான் தான் மன்மதாராசான்னு வார்னிங்க் கொடுத்தேனே?

-----------------------------------------

5. தனுஷ் ஜோடியா நடிச்ச சோனியா அகர்வாலை செல்வராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே, அப்போ ஸ்ருதி அடுத்த அண்ணி ஆகிடுவாரா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAGX9OpoG5YUwmO9Zce5Q4caMqs0ZvprzFFQHehONfBcEyF9Glfz9bKrOHTeKWnHZIW3KV6rhDto8bS70ppdBscuHPuubvqh4_15K7NCXjmaziwcplLyJgHnHSc9Eb-drFPLKr1LDAhnI/s1600/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%882.jpg

6. டோரா, உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு, மதியம் 1 மணிக்குத்தான் நீ எந்திரிச்சிருக்கே.. நான் மதியம் 12 மணிக்கே எந்திரிச்சுட்டேன்

----------------------------------
7. எதுக்காக பனங்கிழங்கு டெயிலி சாப்பிடறீங்க?


பனை மரம் மாதிரி உயரமா வளரத்தான்

------------------------------

8. உங்களுக்குத்தான் ஆயில் சேராதுன்னு சொன்னேனே?

டாக்டர், என்ன கொடுமை இது? ஆயில் பெயிண்ட்டிங்கை கூட பார்க்க கூடாதா?

---------------------------------

9. பெண் பார்க்கும் படலம் கீதா - மாப்ள சார், உங்களுக்கு பிடிச்ச ரஜினி படம் எது? 

உஷார் மாக்கான் மாப்ள - நான் அடிமை இல்லை

--------------------------------

10. அக்கா.. உங்க கல்யாணம் எப்போ? 

பையன் கிடைச்ச உடனே? 

XQSமீ , பையன் சிக்குன உடனேன்னு சொல்லுங்க

----------------------------------

http://www.tamillook.com/images/Cinema/Acterss/suruthikaasan.jpg


11. நான் யார்ட்டயும் இரவல் புக்ஸ் வாங்கறதே இல்லை, இரவல் வாங்குனா திருப்பி தரனும், லைப்ரரில சுட்டுட்டு வந்துட்டா திருப்பி தர தேவை இல்லை :)

------------------------------



12. .தன் அன்பை உரியவர்களிடம் வெளிக்காட்டும் தருணத்தில் தான் ஒரு பெண் மிக அழகாக காட்சி அளிக்கிறாள் # எக்ஸ்போசிங்க் லவ்

-------------------------


13.  மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்தார் நடிகை வனிதா # அப்போ இரண்டாம் குலோத்துங்க சோழன் கதி?

----------------------------

14. அன்னா ஹசாரே சினிமால நடிக்கறாரா? அவருக்கு ஏன் ரஜினி வாய்ஸ் குடுத்ததா நியூஸ் வருது?

--------------------------------


15. . கணவன் ஏன் இரண்டாம் தாரத்தை தேடி செல்ல வேண்டும்?

ஹி ஹி ஆண்களுக்கு 2 தான் ராசியான நெம்பர் போல அவ்வ்

------------------------------

http://kaathalukkaka.com/love/wp-content/uploads/2010/09/2241_1_0_943_naanal-kalaingar-tv-serial-sonia-agarwal-stills-5.jpg