18/5/2026 முதல் மெக்சிகன் திரை அரங்கு களில் வெளியான இந்தப்படம் இப்போது 17/7/2026 முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங் இல்லை.ஆங்கில சப் டைட்டில் உண்டு.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு பிரபல வக்கீல்.அவளது கணவன் பெரிய கோடீஸ்வரன்,பிஸ்னெஸ்மேன்.இவர் களுக்கு டீன் ஏஜில் ஒரு மகள் உண்டு.இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஸ்விம்மிங்க் பூல் அகாடமி உண்டு.நீச்சல் வீரர்கள் , வீராங்கனைகளுக்கு நீச்சல் போட்டியில் பங்கு பெற பயிற்சி அளிக்கும் கோச்சிங் செண்ட்டர் போல் அந்த கிளப்பை நடத்துகிறார்கள்
அந்த ஸ்விம்மிங் கிளப்பில் ஸ்விம்மிங்க் கோச் ஆக வில்லன் பணி புரிகிறான். வில்லன் பிரமாதமான நீச்சல் வீரன்.ஆனால் போதை மருந்து உபயோகித்த குற்றத்துக்காக நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள வாழ்நாள் தடை பெற்றவன்.ஆனால் மற்றவர்களிடம் அந்த உண்மையை மறைதது நான் போட்டியில் கலந்து கொண்டால் நான் மட்டுமே வெற்றி பெற முடியும் ,ஆனால் கோச் ஆக இருந்தால் பல நீச்சல் வீரர்களை ,வீராங்கனைகளை உருவாக்க முடியும் என ரீல் விடுபவன்.
நாயகிக்கு. வில்லன் மீது ஒரு கண்.,மகளை பிக்கப் பண்ண நீச்சல் குள கிளப்க்கு விசிட் அடிப்பது போல் அடிக்கடி வில்லனை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறாள்.ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கம் ஆகிறார்கள்.
திடீர் என நாயகியின் உள்ளுணர்வு அவளை எச்சரிக்க வில்லனுடனான உறவைத்துண்டிக்கிறாள்.வில்லனி டம் தெளிவாக சொல்கிறாள்.ஏதோ ஒரு மயக்கத்தில் நாம் தப்பு செய்தோம்.இனி அது தொடரக்கூடாது.இனி என்னைப்பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி விடுகிறாள்.
வில்லனுக்கு பெருத்த ஏமாற்றம்.அவனால் இதைத்தாஙகிக்கொள்ள முடியவில்லை.
நாயகியின் மகளுக்கு வில்லன் மேல் ஒரு கிரஸ் இருந்தது.அதை வில்லனிடம் அவள் வெளிப்படுத்தும்போது வில்லன் நாசூக்காக அதை மறுத்து இருந்தான்.காரணம் வில்லன் நாயகியுடன் உறவில் இருப்பதால் நாயகியின் மகள் தனக்கும் மகள் முறை தான் என்று நினைத்து விலகி இருந்தான்.
ஆனால் நாயகி பிரேக்கப் முடிவு எடுத்ததும் வில்லன் புதிய திட்டத்தை செயல்படுத்துகிறான்.நாயகியின் வீட்டுக்கே வந்து நாயகியின் மகளை டேட்டிங்க் போக வெளியே அழைக்கிறான்.நாயகியின் மகளும் கிளம்புகிறாள்.
நாயகியின் மகளைப்பணயமாக வைத்து நாயகியை மிரட்டி நாயகியின் உறவைத்தொடர நினைப்பது தான் வில்லனின் திட்டம்.
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக லட்விகா பலேட்டா பிரமாதமாக நடித்திருக்கிறார்.வில்லன் மீது காதல் கொள்வதும் ,தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை என்றதும் வில்லனைக்கொல்லத்துணிவதும் துடிப்பான நடிப்பு.முக வசீகரமும் ,அழகும்,நடிப்பும். சரி விகித கலவை கொண்ட நல்ல நடிகை.
வில்லனாக ஆஸ்கார் பாஸ்கல் இளமைத்துடிப்புடன் கூடிய நடிப்பு.நீச்சல் பயிற்சியாளர் என்று சொன்னால் நம்பத்தோன்றும் ஜிம்னாஸ்டிக் உடல் கட்டு இவரது பிளஸ்.
நாயகியின் டீன் ஏஜ் மகளாக பில்லர் பாஸ்கல் இளமைக்கொண்டாட்டம்.அம்மா ,அப்பா வை எதிர்த்துப்பேசும் சராசரி டீன் ஏஜ் பெண்ணாக துடிப்பான நடிப்பு
நாயகியின் கணவனாக ஜோஸ் மரியோ டம்மி ரோல்.நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.
மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் அவரவருக்குத்தந்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு இந்தப்படத்துக்கு பக்கபலம்.நீச்சல் குளத்தில் நீருக்கு அடியில் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் தத் ரூபம்.ஒளிப்பதிவாளர் நாயகி ,நாயகியின் மகள் இருவரையும் க்ளோசப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்.
குலியா கார்டமோன் +வநசா மிக்லோஸ் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத டெரசா சிம் ஒன் இயக்கி இருக்கிறார்.படத்தின் ரன்னிங் டைம் 105 நிமிடங்கள்.
சபாஷ் டைரக்டர்
1 திருஷ்யம் பாணியில். வில்லனைக்குடும்ப நலனுக்காகக்கொன்றது யார் இருக்கும் ?என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் செய்வது குட்.
2 வில்லனை நாயகி துரத்தி செல்லும் முக்கியமான இடத்தில் கட் செய்து ஒரு மாதத்துக்குப்பின் என்ற டைட்டில் போட்டு காட்சிகளை விவரிக்கும் உத்தி அருமை.
3 படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்கு வந்து விடுவது ,வில்லன் தரப்பு நியாயங்கள் அனைத்தும் கச்சிதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வில்லனை ஒரு ஆயுதத்தால் பின் மண்டையில் அடித்துத்தாக்கிக்கொலை செய்யும் கொலையாளி எளிதாகத்தப்பிப்பது எப்படி ?போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வராதா?
2 வில்லனுக்கு எந்தப்பின் புலமும் இல்லை.நாயகியின் கணவன் தான் சம்பளம் தரும் முதலாளி.பயமே இல்லாமல் மிரட்டுவது எப்படி ?
3 வில்லனை விட நாயகி மீது தான். அதிக தப்பு இருக்கிறது.வில்லன் பாட்டுக்கு சிவனே என்றிருந்தவனை உசுப்பி விட்டு உபயோலப்படுத்திக்கொண்டது நாயகி தான்.அதனால் இந்தக்கதையில் நாயகி மீது பரிதாபம் வரவில்லை.வில்லன் தான் பாவம் என்று தோன்றுகிறது.இப்படி ஒரு எண்ணம் தோன்ற கேரக்டர் டிசைன்களை சரியாக வடிவமைக்காதது இயக்குநரின் தவறு.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+
CPS கமெண்ட் - சின்னப்படம் என்பதால் குயிக் வாட்ச் ஆகவே இதைப்பார்த்து விடலாம்.ஆண்களுக்குப்பிடிக்கும் க்ரைம் திரில்லர் இது.ரேட்டிங் 2.5 / 5