125. கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் வாரத்திலேயே 89 கோடி வசூல் சாதனை செய்த படம்.வைஜெயந்தி ஐபி எஸ்,பூ ஒன்று புயலானது,லோகா சேப்டர் 1,பிளாஸ்ட் ,மா இண்ட்டே பங்காரம் ஆகிய படஙகளின் வரிசையில் நாயகி ஆக்சன் அவதாரம் எடுத்து பிரம்மாண்ட வசூல் தொடும் 6 வது இந்தியப்படம் இது.
3/7/2026 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த ஹிந்திப்படம் இப்போது தமிழ் டப்பிங் கில் 10/7/2026 முதல் காணக்கிடைக்கிறது.
ஆதித்யா சோப்ரா ரயாரிப்பில் வெளியாகும் ஏழாவது ஸ்பை ஆக்சன் திரில்லர் இது.
Ek tha tiger (2012),
Tiger zindha hai (2017)
,War(2019),
Pathan(2023)
,Tiger 3(2023) ,
War 2 ( 2025)
ஆகிய ஆறு படங்கள் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த நிலையில் முதன் முதலாக இந்த வரிசையில் ஒரு பெண் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
33 வயதான ஆலியாபட் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் ஜிம் போய் தன் உடலை Fit ஆக வைத்திருந்து ஆக்சனில் கலக்கி இருப்பது பாலிவுட்டில் பேசு பொருளாகி இருக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை ஆரம்பிக்கும் கால கட்டம் 1999.கார்கில் போர் முடிந்த பின் இந்தியத்தரப்பில் ஏராளமான நட்டம் ,சேதம் ஆனதைக்கண்டு ராணுவ கர்னல் ,மேஜர் இருவரும் இணைந்து ஒரு ஆலோசனைக்கூட்டம் போடுகிறார்கள்.
இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த ,உச்ச பட்ச பலம் வழங்க ஆல்பா என்னும் சீரம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.அந்த சீரம் ஊசி மூலம் உடலில் செலுத்தும்போது அசாத்திய வலிமை உள்ளவர்களாக மாறுவார்கள்.போரில் காயம் அடைந்தாலும் விரைவில் ஆறு விடும்.வீரியமான மருந்து அது.
3 வருடங்களுக்குப்பிறகு அதாவது 2002 ல் ராணுவ லெப்டினெண்ட் கர்னல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.டாக்டர் செக் செய்து விட்டு பாதுகாப்பான டெலிவரி டவுட் தான் என்கிறார்.இதனால் அவர் ராணுவ வீரர்களுக்கு அளிக்க வைத்திருக்கும் ஆல்பா சீரத்தை தன் மனைவிக்கு செலுத்தி விடுகிறார்.இதனாக் பலம்,புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்கிறார்.ஆனாலும். பிரசவம் முடிந்த பின் மனைவி இறந்து விடுகிறார்.
ராணுவ மேஜர் கர்னலிடம் வந்து சட்டத்துக்குப்புறம்பாக இந்த ஆல்பா சீரத்தை பயன்படுத்தி குழந்தை பெற்றதால் இது இந்திய ராணுவத்துக்கு சொந்தம் என்று கூறி குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி சென்று தன் கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்.
24 வருடங்கள் கழித்து அதாவது 2026ல் நாயகி ஆல்பா பிரமாதமான மிலிட்ரி ட்ரெய்னிங் முடித்த அசகாய சாகசம் செய்யும் வீராங்கனை ஆகி விட்டார். இவர் சிறையில் அடைபட்டிருப்பது போல் எப்போதும் தனிமையில் தான் இருப்பார்.மேஜர் கட்டுப்பாட்டில் வளர்வதால் இவரால் வெளியே எங்கும் செல்ல முடியாது.இவருக்கு மேஜர் கொடுத்த பணிகளை ( ஆக்சன் அவதாரம்) முடித்து விட்டு மீண்டும் இங்கேயே வந்து விடுவதுதான் அவரது ரொட்டீன் பழக்கம்
ஒரு கட்டத்தில் நாயகிக்குத்தன் அப்பா யார் என்று தெரிகிறது.இதற்குப்பின் நாயகி என்ன செய்தாள்?என்பது பரபரப்பான மீதி திரைக்கதை.
நாயகியாக அலியாபட் அசத்தி இருக்கிறார்.த டாம்ப் ரைடர் ஏஞ்சலீனா ஜூலி கேரக்டர் டிசைன் போல் இவரது கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஆஜ் சன் சீக்வன்சில் கலக்கி இருக்கிறார்.இதற்கு முன் ஆக்சன் நாயகிகளாக அசத்திய விஜயசாந்தி ,சமந்தா ,கல்யாணி பிரிதரர்ஷன் ,ப்ரீத்தி முகுந்தன் அனைவரையும் ஓரம் கட்டும் விதமாக உடற்கட்டு ,பிட்னஸ்,பைட் என சகல வித்தைகளிலும் பின்னி எடுக்கிறார். செண்ட்டிமெண்ட் சீனில். குணச்சித்திர நடிப்பும் அருமை.
இன்னொரு நாயகியாக சஸ்பென்ஸ் கேரக்டரில் ஷர்வாரி நடித்திருக்கிறார்.இவரது அர்ப்பணிப்பும். அருமை.
நாயகியின் அப்பாவாக ,லெப்டினெண்ட் கர்னலாக அனில் கபூர் நல்ல குணச்சித்திர நடிப்பு .
வில்லனாக ,மேஜர் ஆக பாபி தியோல் அசத்தல் வில்லத்தனம் செய்கிறார்மாளவந்தான் மொட்டை கமல் போல இவரது உடற்கட்டு வியக்க வைக்கிறது.
நாயகியின் அம்மாவாக தியா மிஸ்ரா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
கேமியோ ரோலில் ஹிருத்திக் ரோஷன் மேஜர் ஆக நடித்திருக்கிறார்.இவர் வரும் சீனில் தியேட்டரில் கை தட்டல் ஒலி காதைப்பிளக்கிறது.
இசை ரோஹான்ஸ் + அபீர் பண்டிட்.மொத்தம் 13 பாடல்கள்.பின்னணி இசை அமைத்திருப்பது சஞ்சித் +அங்கித் பல்ஹாரா .ஆக்சன் சீக்வன்சில் பிஜி எம் தெறிக்கிறது.
ருபாய்ஸ் தான். ஒளிப்பதிவு.பிரம்மாண்டமான காட்சிகளைக்கண் முன் நிறுத்துகிறது.
ஆரிப் ஷேக்கின் எடிட்டிங்கில் படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள்.
உதய் சோப்ரா கதை எழுத ,சவுமில் சுக்லா+ஸ்ரீதர் ராகவன் இணைந்து திரைக்கதை எழுத இஷிதா மோர்ட் ரா வசனம் எழுத படத்தை இயக்கி இருப்பவர் ஷிவ் ரவைல்.
சபாஷ் டைரக்டர்
1. இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியாக இருப்பவர் உண்மையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் என்ற ட்விஸ்ட்டும் ,அவரது துரந்தர் அவதாரம் தான் இந்திய ராணுவ அதிகாரி என்பதும் அதிர்ச்சி ட்விஸ்ட்.
2 நாயகி தனியாகப்பிறக்கவில்லை.ட்வின்ஸ் சகோதரியுடன் பிறந்தார் என்பதும் ஒரு குழந்தை வில்லனிடமும் இன்னொரு குழந்தை நாயகனிடமும் வளர்கிறது என்பதை மர்ம முடிச்சாக அவிழ்ப்பது அருமை
3 பொதுவாக ட்வின்ஸ் என்றால் ஒரே முகச்சாயல் கொண்டவராகக்காட்டி டூயல் ரோல் நடித்து விடுவார்கள்.இதில் மாறுபட்டு வேறு முகச்சாயல் என சொல்லி வேறு ஒருவரைக்காட்டுவது புதுமை.
4 நாயகிகள் இருவரின் அதகளமான ஆக்சன் காட்சிகள் அருமை
5 இரு சகோதரிகளும் மோதிக்கொள்ளும் ஆக்சன் சீக்வன்ஸ் செம.
6 நாயகி ஒரு நீர் நிலையைக்கடக்கும்போது ஸ்விம் சூட்டில் கடக்க வைத்து கேமராவை தண்ணீருக்கு அடியில் கொண்டு போய் கிளாமர் காட்டியது இயக்குநரின் சாமார்த்தியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. ஆல்பா சீரத்தால் கர்ப்பிணிபெண்ணுக்கு ஆபத்து உண்டா?என்ற விபரம் தெரியாமலேயே ரிஸ்க் எடுப்பது எப்படி ?
2. ஆல்பா சீரம் செலுத்தப்பட்டதால் இரு சகோதரிகளும் அசாத்திய உடல் வலிமை கொண்டிருப்பது ஓக்கே.ஆனால் குழந்தை முதல் ராணுவபயிற்சி பெற்று வளரும் நாயகிக்கு இணையாக இன்னொரு சகோதரியும். அதே வலிமையுடன் இருப்பது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட். வார்னிங். 16+
கல்கி பைனல் கமெண்ட். - ஆக்சன் படப்பிரியர்களுக்கு. அதிரடி விருந்து.பெண்களும் பார்க்கலாம். ரேட்டிங் 3 / 5
| Alpha | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Shiv Rawail |
| Screenplay by |
|
| Dialogues by | Ishita Moitra |
| Story by | Uday Chopra |
| Produced by | Aditya Chopra |
| Starring | |
| Cinematography | Rubais |
| Edited by | Aarif Sheikh |
| Music by |
|
Production company | |
| Distributed by | Yash Raj Films |
Release date |
|
Running time | 140 minutes[1] |
| Country | India |
| Language | Hindi |
| Budget | est. ₹100−125 crore[a] |
| Box office | ₹89.09 crore[4] |