Sunday, August 16, 2026

DOSE(2026)-மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்கலாஜிக்கல் மெடிக்கல் க்ரைம் திரில்லர்)@ஆஹா தமிழ் ,அமேசான் பிரைம்

 ஸ்பாய்லர் அலெர்ட்




நாயகன் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் டாக்டர்.அவரது மனைவி ஒரு நுரையீரல் பேஷண்ட்.அவர் பணி புரியும் ஹாஸ்பிடலிலேயே மனைவியை அட்மிட் செய்து பார்த்துக்கொள்கிறார்.

நாயகனுக்கு ஒரு முன்னாள் காதலி உண்டு.அவளும் அதே ஹாஸ்பிடலில் நாயகனுக்குக்கீழ் பணியாற்றும் டாக்டர்தான்.நாயகனின் காதலி கர்ப்பமாக இருந்தபோது குடும்ப  சூழ்நிலைகள் காரணமாக  வேறு பெண்ணைத்திருமணம் செய்து கொள்கிறார்.

இவை எல்லாம் பிளாஷ்பேக்.தற்போது நாயகன் பணி புரியும் ஹாஸ்பிடலில் அடுத்தடுத்து மர்மமான  முறையில் மூன்று பேஷண்ட்ஸ் இறக்கிறார்கள்.

நாயகனின் பெயரைக்கெடுக்க நாயகனின் முன்னாள் காதலிதான் இதை எல்லாம் செய்கிறாளோ என நாயகன் சந்தேகப்படுகிறான்.

ஹாஸ்பிடலின் எம் டி யின் மகளை வில்லன் லவ் பண்ணுவதாக ஏமாற்றுகிறான்.வில்லன் ஒரு பெண் பித்தன்.எம் டி யையே மிரட்டுகிறான்.

இந்தக்கேசை விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார்.கொலைகளை செய்தது யார்?
1 நாயகனின் முன்னாள் காதலியா?
2 எம் டி யா?
3 வில்லனா?


என்பதை போலீஸ் ஆபீசர் கண்டுபிடிப்பது தான் மீதித்திரைக்கதை.

நாயகனாக சிஜூ வில்சன் அமைதியாக நடித்திருக்கிறார்.டாக்டருக்குண்டான பொறுமை அருமை.

ஹாஸ்பிடல் எம் டி யாக ஜெகதீஷ் நடித்திருக்கிறார்.இவர் தான் வில்லனோ?என்று பல இடங்களில் சந்தேகிக்க வைக்கும் நடிப்பு.

போலீஸ் ஆபீசராக அஸ்வின் குமார் கச்சிதம்.ஹேர் ஸ்டைல்,உடல் மொழி எல்லாம் பக்கா.

நாயகனின் காதலியாக ,மனைவியாக வருபவர்களின் நடிப்பும் அருமை.

மற்ற அனைவர் நடிப்பும் கனகச்சிதம்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அபிலாஷ் ஆர் நாயர்.



சபாஷ் டைரக்டர்

1 நாயகனின் இந்நாள் மனைவி,முன்னாள் காதலி இருவருமே குடும்பப்பாங்கான அழகு என்பதால் அவர் யாருடன் இருந்தாலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

2 போலீஸ் ஆபீசருக்கும் ,கொலையாளிக்கும் க்ளைமாக்சில் நடக்கும் போராட்டம் அருமை.

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது




ரசித்த வசனங்கள்

1 நமக்குப் பிடிச்சவங்களோட மட்டுமே நாம் வாழ்ந்திட முடியுமா?

2 திடீரென்று வரும் மரணம் சில சமயம் வரம்.

3 போலீஸ் ஆபீசரோட  வேலை குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்துவதோடு முடிஞ்சிடுது.மீதியை கோர்ட் பார்த்துக்கும்.

4 மனுசங்க கிட்டே ஒரு நேச்சர்  இருக்கு.கூட இருக்கறவங்களை  சந்தேகப்பட மாட்டாங்க.

5 என் வீட்டை எப்படிக்கண்டுபிடிச்சீங்க?

தேடினால் எல்லாமே கிடைக்கும்னு நீங்கதானே சொன்னீங்க?

6 நாம் விரும்புகிறவர்கள் நம்மை விட்டுப்போனபின்  அவங்க நம் கூடவே இருப்பதைப்போல் நாம் உணர்வது சகஜம் தான்.

7 மனசுக்கு சந்தோஷமா இருந்தா தெய்வத்துக்குப்பிடிக்காதுனு படிச்சிருக்கேன்.







லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  மெயின் கதைக்குப்போகும் முன் தேவை இல்லாத இரு பாட்டுக்கள் எதற்கு?

2 எதிரில் தென்படும் எல்லாப்பெண்களிடமும் வழியும் அந்த காமெடியன் டாக்டர் அதிகம் அறிமுகம் இல்லாத பெண்ணிடம் மொட்டை மாடிக்கு வா என மெசேஜ் அனுப்பியதும் எதற்கு?என்ன?ஏது?என எதுவும் கேட்காமல் கூப்பிட்ட இடத்துக்குப்போவது ஏன்?

3 அடுத்தடுத்து மர்மமான  முறையில் நோயாளிகள்  சாகிறார்கள் என்பதை விஷூவலாக சொல்ல ரொம்ப போர் அடிக்கும்படி காட்சிகளை அடுக்குவது ஏன்?

4 பேஷண்ட் ஆக இருக்கும் அந்தப்பாடகர். தன்னை கவனிக்க வந்த மனைவியிடம் எரிந்து விழுவது  ஏன்?

5 காரில் போகும்போது  நாயகன் சீட் பெல்ட் போடாதது ஏன்?

6 பேஷண்ட்டின் உடம்பில் விஷம் மாதிரி எதையோ செலுத்தி இருக்கிறார்களா?என்பதை பிளட் டெஸ்ட் எடுத்துப்பார்த்தாத்தெரிஞ்சிடுமே?என டாக்டரின் மனைவி. கேட்க  உடனே டாக்டர் அதை செயல்படுத்த விரைகிறார்.ஏன்?அவருக்கு அந்த ஐடியா தோன்றாதா?

7 ஹாஸ்பிடல் எம் டி யின் மகளை காதலிப்பதாக நடிக்கும் வில்லனை எம் டி தன் ஹாஸ்பிடலில் தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பது எப்படி ?

8 வில்லன் ஹாஸ்பிடல் எம் டி யையே  மிரட்டுவது ஓவர்.வில்லனுக்கு எந்த பேக் கிரவுண்டும் இல்லை.


9 நாயகன் தன் முன்னாள் காதலி தான் கொலையாளியோ என சந்தேகப்படுகிறான்.ஆனால் தன் மனைவியை அதே ஹாஸ்பிடலில் அட்மிட்  செய்வது எப்படி ? ( க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் இதற்கு பதில் இருக்கிறது)

10  வில்லனை மாடியிலிருந்து கீழே தள்ளிக்கொலை செய்ய முயல்பவன் அதன் பின் வில்லனின் செல்போனில் இருந்தே தற்கொலை மெசேஜ் அனுப்புகிறான்.இப்போ வில்லன் கீழ் புளோரில்.வில்லனைத்தள்ளி விட்டவன் மொட்டை மாடியில் வில்லனின் செல் போனுடன்.எப்படி வில்லன் சர்ட் பாக்கெட்டில் மீண்டும் அந்த செல்போனை வைக்க முடியும்?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+

CPS கமெண்ட் - சைக்காலஜிக்கல் க்ரைம் திரில்லர் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம்
மெதுவாக நகரும் திரைக்கதை.ரேட்டிங் 3/5