Friday, July 21, 2017

இன்ட்டர்வ்யூ க்கு கிழிஞ்ச சட்டை பேண்ட் போட்டு வந்திருக்கே?

பிளாஸ்டிக் அரிசி மேட்டர் ஒரு வதந்தினு எப்டி சொல்றே?

ஒரு கிலோ பிளாஸ்டிக் ரேட் 80 ரூ .பொன்னி அரிசி ரூ 55,எப்டி கட்டுபடி ஆகும்?


===========

2 ஜட்ஜ் - மேரேஜே ஆகல.எப்டி அவன் உன்னை முத்தலாக் செஞ்சான்?

லேடி - அய்யோ ராமா.அவன் எனக்கு முத்த லாக் (லிப் லாக்) பண்ணிட்டான்

=========


3 OPS அணி ,EPS அணி க்கு பிடிக்காத சினிமா எது?

சரவணன் இருக்க பயமேன்?

எப்டி?
MLA சரவணன் தானே குதிரை பேரம் பத்தி வெளில சொன்னாரு?

===========

4 ஜட்ஜ்-பிளாஸ்டிக் அரிசி விஷயத்துல எப்டி மாட்னே?

கைதி-எல்லாரும் வெள்ளை பிலாஸ்டிக் அரிசி கலப்படம் செஞ்சப்போ நான் மாடர்னா கலர் பிளாஸ்டிக்


============


5 கமலுக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான் தீர்க்கதரிசி.
எப்டி?
குதிரை பேரம் விஷயம் வெளி வரும்னு தெரிஞ்சு சரவணன் இருக்க பயமேன் டைட்டில் வெச்சாரே


============

6 பனை மரங்களை எல்லாம் வெட்டிட்டா கள் இறக்குவதை முற்றிலும் ஒழிச்சிடலாம்

அபாரம் தலைவரே!அதுக்குப்பதிலா குடிகாரன் தலையை வெட்டிட்டா என்ன?


===============

7 20 வயசுக்குள்ள MBA முடித்த 10 வருட மார்க்கெட்டிங் அனுபவம் உள்ள இளைஞர் தேவை.

அப்போ 10 வயசுல இருந்தே படிச்ட்டே வேலைக்குப்போறவனா இருக்கனும்


============


8 மதியம்1- 3 ஆபீஸ்ல நாங்க விளையாடிட்டு இருப்போம்.

டீச்சர் ஆகிடுங்க.காலை டூ மாலை எல்லா டைமும் விளையாடிட்டே இருக்கலாம்

=============

9 சார்.நீங்க விவசாயிக்காக குரல் கொடுத்த பேச்சு ஆல்ரெடி விஜய் TVல வேற.ஒருத்தர் பேசுனதாமே?

அதுவும் விஜய்.இதுவும் விஜய்.கூட்டிக்கழிச்சுப்பாருங்க


===========

10 வாழ்க்கை சூனியமா இருக்கேனு ஒரு மேரேஜ் பண்ணிக்கிட்டேன்

சபாஷ்.இப்போ?

சூனியக்காரி கிட்டே மாட்டிக்கிட்ட பீலிங்


=============

11 ஆண்களிடம் உள்ள கெட்ட குணமே, அவர்களை அண்ணா ன்னு கூப்பிடும் போதெல்லாம் அவர்களுக்கு காது கேக்கறதே இல்ல.

கண்ணா னு கூப்பிடுங்க.ஓடி வருவோம்


=============

12 சார்.இன்ட்டர் நெட் இல்லாமலும் படம் பார்க்கலாம்னு பொய் விளம்பரம் ஏன் பண்றீங்க?

டவுன்லோடு பண்ணும்போது மட்டும் நெட் இருந்தாபோதும்.

===========

13 தலைவரே!பெரியார் கொள்கைகளைப்பின் பற்றும் ஒரே கட்சி உங்களுதுதான்னீங்க.
ஆமா.
கட்சிக்கொடி ல ஏன் அவர் போட்டோ இல்ல?

ஏன்னா அவர் எங்க ஜாதி கிடையாது

==============

14 சார்.மக்கள் முன்னால உங்களுக்கு நடிக்க வராது னு பேசிக்கறாங்களே?

பொதுவாவே எனக்கு நடிக்க வராது


=========

15 தலைவரே! எதுக்கு அடியாளுங்களோட பேங்க் வந்திருக்கீங்க?

450 காலி இடங்கள் இருக்குனு AD வந்துச்சு.வளைச்சுப்போடலாம்னு வந்தேன்

அய்யோ.அது பணி இடம்

============


16 இந்த லவ் ஹார்ட் ஸ்மைலி கூட என் போன்ல கருப்பா தான் தெரியுது..

ஒரு வேளை பிளாக்பெர்ரி போனா இருக்குமோ?


============

17 தலைவரே!ஜனநாயகத்தைக்குழி தோண்டி புதைச்ட்டீங்களாமே?

நல்ல வேளை.நினைவுபடுத்துனே.குழி தோண்ட ஆன செலவு னு 10லட்சம் கணக்கில் எழுதனும்


============


18 5 ம் வகுப்புப்பாடத்திட்டத்துல உங்களைப்பத்தி வந்திருக்கு.

ஓட்டுப்போடும் வயசு வர
8 வருசம் ஆகும்.அதுக்குப்பின் தான் நான் அரசியலுக்கு வரனும்


==============

19 இன்ட்டர்வ்யூ க்கு கிழிஞ்ச சட்டை பேண்ட் போட்டு வந்திருக்கே?

மேலே போட்டிருக்கற டிரெசை விட உள்ளே போட்டிருக்கும் இன்னர்ஸ் தான் தரமா இருக்கனும்


============


20 DR.தலைல ஒரு நரைமுடியை பிடிங்கனாலே பல நரைமுடிகளா வருமாமே?

அதுக்காக எல்லா நரை முடியையும் பிடுங்கினா சொட்டை தான் வரும்

==============

1 comments:

Unknown said...


Thanks designed for sharing such a pleasant idea, paragraph is fastidious, thats why i have read it completely craigslist knoxville