Wednesday, July 19, 2017

சம்பவம் நடந்த அன்னைக்கு ராத்திரி எங்கே இருந்தே?

தலைவரே!பகுத்தறிவுப்பாசறை ல இருந்து வந்துட்டு கட்சிப்பிரமுகர் வீட்டு விசேசத்துல கடவுள் படம் இருக்கே?


அப்போக்கூட தமிழ்க்கடவுளை வைக்கலை==============

2 சார்.உங்க படத்துக்கு ஏன் செம னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


தியேட்டர்ல என்ன படம் ஓடுது?னு கேட்டா செம படம் ஓடுது னு ஜனங்க சொல்வாங்க இல்ல?============

3 ஸார்.உங்க படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டர் FALLING DOWN படத்தோட காப்பியாமே?


மாடர்ன் கொலம்பஸ்கள் DOWN DOWN==============

4 லைப்ல முதல் தடவையா குங்குமத்துல இவ்ளோ பெரிய பொட்டு வச்சிருக்கன்


ஓஹோ.அடுத்ததா குமுதத்துல .விகடன் ல கல்கி ல வைப்பீங்களா?


=============

5 நயகரா நீர் வீழ்ச்சிக்கு ஒரு காதணி விழாவிற்கு செல்லும் வழியில் விமானத்தில் பறந்தபோது எடுத்த pic இது


காது குத்து FB பாலோயர்சுக்கா?=============

6 பொண்ணு பார்க்க வந்த மாப்ளை ஏன் தலை தெறிக்க ஓடறாரு?


பொண்ணு தனுஷ் ரசிகையாம்.அவர் தாலி எடுத்துக்கொடுக்கனுமாம்==============


7 புரோட்டா எல்லாம் லாக்கர்ல வைக்க ஒரு பேங்க் இருக்காம்


டேய்.அது பேங்க் ஆப் பரோட்டா இல்ல.பேங்க் ஆப் பரோடா============


8 பாகிஸ்தான் மேல் காட்டும் ஆக்ரோசத்தை இலங்கை மீது காட்டுவதில்லை ஏன்?


ஏன்னா பாகிஸ்தான் தானே சானியாமிர்சாவை மருமகள் ஆக்கிக்குச்சு=


===========


9 மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்கு பிடிக்காது.."ங்கற கவிதை வரி தப்பு


எப்டி?
அனிரூத்,தனுஷ் க்கெல்லாம் ரசிகைகள் கொள்ளைப்பேரு இருக்காங்க இல்ல?


================

10 குருவே! கருணை யின் பிறப்பிடம் எது?


சிஷ்யா! கருணை(மலர்),பனி(மலர்)எல்லோர் பிறப்பிடமும் அவங்கவங்க சொந்த ஊர் ஹாஸ்பிடல்தான்==================


11 மிஸ்.கோதுமை தோசை மெரூன் கலர்லதானே இருக்கும்?மஞ்சள் கலர்ல இருக்கே?


மங்களகரமா இருக்கட்டும்னு மாவுல மஞ்சள் தூள் சேர்த்துட்டோம்============

12 அத்தனை இசை கருவிகளும் கையாள தெரிந்தால் மட்டுமே எனை இசைக்க வா


கையாளப்பிறந்தவன் அப்போ இளையராஜா,ரஹ்மானாத்தான் இருக்கும்.=============

13 ஜெ-சசி என்ன வித்யாசம்?


ஜெ ஒண்டர் விமன்,சசி ஜெ நிழலுக்குப்பின் ஒண்டற (ஒளிந்து கொள்ளும்) விமன்=============


14 டியர்.இங்கே என்ன சொல்லுது?ஜெஸ்ஸி ஜெஸ்ஸி னு சொல்லுதா?


இல்ல.எதிர்காலத்துல எல்லாமே ஜெர்சி ஜெர்சி னு சொல்லுது.நாட்டு மாடு இனமே அழியப்போகுது
===============15 மன்னா! நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்பதாக ,FB ல் தகவல் பரவுது.விற்பனையாளனை.விட்டுடுங்க.
விழிப்புணர்வு ஏற்படுத்துபவரை கைது செய்ங்க==============

16 டீச்சர்.குறும்பு க்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?


சின்னக்குறும்பு,சில்மிசக்குறும்பு,பெரிய குறும்பு எல்லாத்துக்கும் ஒரே று தான்.===============

17 அவங்க, அவங்க கஷ்டம்

அவங்களுக்கு தான தெரியும்..
இல்ல.இப்பவெல்லாம் FB ல ஷேர் பண்ணிடறதால ஊருக்கே தெரியும்.===============


18 சம்பவம் நடந்த அன்னைக்கு ராத்திரி எங்கே இருந்தே?
சம்பவம்சம்பவம்னு சொல்றாகளே அது நம்ம வாழ்க்கைல எப்போ நடக்கும்?னு மொட்டைமாடில நின்னு யோசிட்டு


===============

19 டாக்டர்.ஹாஸ்பிடல்ல எதுக்கு இத்தனை அரிசி மூட்டை அடுக்கி வெச்சிருக்கீங்க?


பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்ல?==============

20 பட்டையைக்கிளப்பிட்டார் னு ஊரே பாராட்டுது.எதுக்காக கைது பண்றீங்க?
அவரு கடைல இருந்த 100 கிலோ பட்டை கிராம்பை கிளப்பிட்டு ஆட்டையைப்போட்டுட்டார்


================

0 comments: