Wednesday, July 19, 2017

சார்.விவசாயிகள் போராட்டம் பண்ணும்போது குரல் தராம இப்ப வாபஸ் வாங்குனபின் குரல் தர்றீங்க?

யுவர் ஆனர்.இந்த படைப்புக்கு காப்பிரைட்ஸ் வேணும்

இது உங்க சொந்தப்படைப்பா?
இல்லை.FBல காப்பி செஞ்சது.அதுக்கு காப்பிரைட்ஸ் வேணும்


============

2 லோன் அப்ளை செய்யறப்ப பேங்க் மேனேஜர் முன் அம்பியாய் இருந்தே.செலவு செய்யும்போது ரெமோவா மாறிட்டியே?

லோன் ட்யூ கட்டச்சொன்னா அந்நியன் ஆகிடுவேன்

============

3 கடுகளவு கூட பயனில்லாமல் இருக்கும் அதிமுக அரசு-ஸ்டாலின் # கடுகை குறைச்சு மதிப்பிட்டுட்டார்னு விவசாயிகள் அவதூறு வழக்கு போட்டுடப்போறாக

============


4 தலைவரே! உங்க மகனை எல்லாரும் பிளாஸ்டிக்கின் செல்வன்னு கூப்பிடறாங்களே ஏன்?

பொன்னியின் செல்வன் தான் வெச்ச பேரு.கூட்டணி சகவாசம் சரி இல்ல

=============

5 ஜட்ஜ் - காந்தி யை விமர்சனம் செஞ்ச குற்றத்துக்காக 6 மாசம் தண்டனை

கைதி - யுவர் ஆனர்.காந்தி படத்தை விமர்சனம் பண்ணுனது அவ்ளோ பெரிய தப்பா?


==============


6 டியர்.எம்புட்டு இருக்குது ஆசை பாட்டை கேட்டப்போ என் நினைப்பு வந்ததா?

க்யூட் புஷ்பா = புட்டு நினைவு தான் வந்தது.குழாப்புட்டா?உதிரிப்புட்டா?

==========
7  ஜட்ஜ்-பிளாஸ்டிக் அரிசி என்ன தைரியத்துல விக்கறே?

கைதி-ஆதார் அட்டை இருக்கு.18%GSTவரி கட்றேன்.இந்த தைரியத்துலதான்


============

8 2ஆம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு.க்கு ஏன் போகலை.

இப்போ தான் நான் எழுதறதில்லையே?டைப் தானே?


============


9 எனக்கெல்லாம் சோறு கண்ட இடமே சொர்க்கம்

அப்டியா ?அப்போ குழம்பு,ரசம்,தயிர் கண்ட இடம் என்னவா இருக்கும்?

===========

10 MLAக்கள் விலை போய்ட்டதா சொல்றாங்களே?

எங்கள் ஆட்சியில்தான் ஒரு MLA வின் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.இதையும் சாதனையில் சேர்க்கவும்

=========

11 தலைவரே! ஜெனிவா மாநாட்டில் நீங்க கலந்துக்கிட்டதா வந்த நியூஸ் பொய்யாமே?
ஜெனிலியா நாட்டிய நிகழ்ச்சில கலந்துக்கிட்டேன்.தப்பா நியூஸ் போட்டுட்டாக


============

12 தலைவரே! ஐ டி விங் 1 திடீர்னு உருவாக்கி இருக்கீங்களே?இது எதுக்கு?

ஐ டி ரெய்டு வராம தற்காத்துக்க இது அப்பப்ப ஐடியா தரும்


=============

13 எங்கள் ஆட்சியில்தான் தினசரி பிரேக்கிங்நியூஸ் வந்து கொண்டே இருக்கிறது.மக்களை எப்போதும் ஒரு பரபரப்பிலேயே வைத்திருப்பதும் எம் ஆட்சியின் சிறப்பு


==============

14 சிஷ்யா! எவரெஸ்ட் ஏறனும்னு நினைச்சா முதல்ல நீ ஊட்டி தொட்டபெட்டா ஏறனும்

குருவே! அதெப்டி?நேபாளம் போனாத்தானே இமயமலை பக்கம்?

==============

15 சிஷ்யா! வாழ்க்கைல எப்பவும் நீ பின் வாங்கவே கூடாது.

குருவே! பின் நெம்பர் வாங்கலைன்னா ATM கார்டு எப்டி யூஸ் பண்ண?


==============16 புது ஆப்பிள் போன் கீழே விழுந்து அடி பட்டுடுச்சு.எப்டியாவது செகண்ட்ஸ் ல வித்துடனும்

காஷ்மீர் ஆப்பிள் போன் னு சொல்லி வித்துடு.

===========


17 நெல்லை சாகுபடி செய்ய என்ன என்ன செய்யனும்?

முதல் கட்டமா நெல்லை(திருநெல்வேலி) போகனும்


==========

18 அவரோட ரைட்டிங்ஸ் பத்தி சொல்லுங்க

பெரும்பாலும் தப்பான விஷயத்தைத்தான் எழுதுவாரு
அப்போ ராங் கிங் னு சொல்லுங்க

=============

19 ஜட்ஜ் - ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரத்துல ஈடுபட்டீங்களா?

யுவர் ஆனர்.கோடிக்கணக்குல பணம் இருக்கு.நான் எதுக்கு பேரம் பேசனும்?


============


20 சார்.விவசாயிகள் போராட்டம் பண்ணும்போது குரல் தராம இப்ப வாபஸ் வாங்குனபின் குரல் தர்றீங்க?

அப்போ ஷூட்டிங் ல பிசி.முதல்ல தொழில்


==============

0 comments: