Sunday, December 19, 2010

நில் கவனி செல்லாதே - குரூரம் - சினிமா விமர்சனம்

http://www.kodambakkamtoday.com/wp-content/gallery/nil-gavani-selladhey-stills/nil-gavani-selladhey-still-kodambakkamtoday-11.jpg
டைட்டிலேயே  படத்தின் கதையை சொல்லி விடுகிற திறமைசாலி இயக்குநர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் படத்தின் டைட்டிலிலேயே படத்தின் ரிசல்ட்டையே சொல்லி விடுகிற டேலண்ட் டைரக்டரை இப்போதுதான் பார்க்கிறேன்.நில் கவனி செல்லாதே,அதாவது ரோட்ல போறப்ப படத்தோட போஸ்டரை பார்த்தா நில்,அதை கவனி,ஆனா படத்துக்கு போயிடாதே.....

வெர்டிகோ,ஏ வியூ டூ கில்,நோ வே டூ கோ இந்த 3 ஆங்கில படங்களையும் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது.ஆங்கில டி வி டி படங்களிலேயே கோரமான படங்களாகப்பார்த்து செலக்ட் பண்ணி இருக்கார் போல.

2 லவ் ஜோடி,ஒரு காமெடி ஃபிரண்ட் 5 பேரும் சேர்ந்து ஒரு ஜாலி டூர் போறாங்க.வழக்கம் போல காட்டுல ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல மாட்டிக்கிறாங்க.அவங்களுக்கு அங்கே ஏற்படற பயங்கர அனுபவங்களை 10 லிட்டர் ரத்தம் தெறிக்க, காது வலிக்கும் அளவு சவுண்ட் எஃபக்ட் குடுத்து மிரட்டி இருக்காங்க..

ஒரு உபரித்தகவல்,வெண்ணிலாக்கபடிக்குழு படம் எடுத்த தயாரிப்பாளர்தான் இந்தப்படத்துக்கு இயக்கம்.
http://www.sivajitv.com/gallery/it003050/Photos/Nil-GavaniShelladhey-Press-Meet%20(11).jpg
படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கழுகுப்பார்வையில் வரும் அந்த ஹெலிகாப்டர் வியூ ஷாட் பிரமாதம்.ஆங்கிலப்படத்துக்கு சவால் விடும் ஒளிப்பதிவு. (ஒரு வேளை அப்படியே உருவி இருப்பாங்களோ?)


லவ் ஜோடிகள்ல ஒரு ஜோடி விளையாடற ட்விஸ்டர் கேம் செம கிளு கிளு. விஜய் டி வி நண்டு சிண்டு புகழ் ஜெகன் மயில்சாமி என்ற தனது பெயரை மைலோ என சுருக்கி ஃபிகர்களிடம்  பந்தா பண்ணுவது கலகல.ரெகுலராக தன்னை ஃபாலோ பண்ணும் வேன் மீது திடீர் என மோதி நிற்கும் சீன் செம திகில்.அந்தகாட்சியில் இசை மிரட்டி இருக்கிறது.ஆனால் ஹேப்பி பர்த்டே கொண்டாட காதலர்கள் போடும் வேன் கடத்தல் நாடகம் தேவை இல்லாதது.

படத்தின் முதல் பாடல் ஒளிப்பதிவு அருமை.அடுத்த பாட்டு ஆடை உந்தன் பார்வை செம கிளு கிளுப்பு.அந்தப்பாட்டில் 178 கட் ஷாட் (4 நிமிடப்பாடல்) வெல்டன் ஃபோட்டோகிராஃபி.  படத்தின் பாதி நேரம் வேனில் பயணம் சலிப்பு.

அனைவரது நடிப்பும் குறை சொல்லக்கூடிய அளவில் இல்லை.பிரமாதம் என பாராட்டக்கூடிய அளவிலும் இல்லை.ஹீரோயின்கள் 2 பேரும் ஏதோ தேறுவாங்கன்னு பார்த்தா பாதிப்படம் இருட்டுலயே போகுதே..

வசனகர்த்தாவுக்கு வக்காலத்து வாங்கும் இடங்கள்

1. லைஃப் செம போர்.டெயிலி செஞ்ச வேலையையே திரும்ப திரும்ப செய்யனும். உனக்கென்ன எப்போ பாரு ஃபோன் வந்துட்டே இருக்கு...

ட்ரிங்க் ட்ரிங்க்.

2. ஏ ஆர் ரஹ்மானுக்கும் ,எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்,அவர் ஆஸ்கார் வாங்கிட்டார்,நான் இன்னும் வாங்கலை.

3. நீங்க சாக்ஸஃபோன் வாசிப்பீங்களா?

ஓ, சாக்ஸஃபோன் ,செல்ஃபோன்,லேண்ட்லைன் ஃபோன் எல்லாம் அத்துபடி..

4.  நீ நிஜமாவா சொல்றே?

ஆமா ,நான் நல்லா கவனிச்சிட்டேன்,அந்த வேன் என்னைத்தான் ஃபாலோ பண்ணுது.

ஓக்கே அப்போ இந்த கேசை கேப்டன் கிட்டே ஒப்படைச்சிட வேண்டியதுதான்.

அவர் வேலை வெட்டி இல்லாமலா இருக்காரு? காஷ்மீர் தீவிரவாதி,பாகிஸ்தான் தீவிரவாதி இவங்களை பிடிக்கனும்... இப்படி அவருக்கு ஏகப்பட்ட பொறுப்பு இருக்கே..?

5. அந்தப்பொண்ணு கிட்டே கோயிலுக்கு போற ரூட்டு எதுன்னு கேளு...

கொஞ்சம் பொறு ,அந்தப்பொண்ணுக்கே ரூட் போடறேன் பாரு..

படத்தின் பின்பாதியில் வரும் ஃபிளாஸ்பேக் காட்சிகள் சிறுகதை மாதிரி எடுக்கப்பட்டிருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாததால் எடுபட வில்லை.
http://narumugai.com/wp-content/uploads/2010/08/dhanshika.jpg
லாஜிக் இல்லா மேஜிக்

1.வறுமையின் காரணமாக சாலை வழி செல்பவர்களை கொள்ளை அடி[ப்பது ஓக்கே ,ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் யாராவது அப்படி கொடூரமாக கொலை செய்வார்களா?

2. பல பேரைப்போட்டுத்தள்ளி ஏகப்பட்ட பணத்தை கொள்ளை அடித்தும் அவர்கள் ஏன் காட்டு மிராண்டி போலவே இருக்காங்க? ( பர்சேஸ் பண்ண போறதே இல்லையா?)

3. ஒரு ஏரியாவில் தொடர்ந்து கொலைகள் (148 ) நடக்கும்போது மீடியா,போலீஸ் எதுவுமே ஒரு வருஷமாக வராதது ஏன்?

4. என்னதான் போலீஸ் மாமூலுக்கு ஆசைப்படுபவராக இருந்தாலும் இப்படி 1000 ரூபா பணத்துக்காக கொலை செய்வதில் கூட உடந்தையாக இருப்பாரா?

5. டூர் போறவங்க எந்த இடைஞ்சலும் இருக்ககூடாதுங்கறதுக்காக செல்ஃபோனை ஆஃப் பண்ணிடறது ஓக்கே. ஆபத்துன்னு தெரிஞ்சதும் அதை ஏன் யாரும் ஆன் பண்ணவே இல்லை?

படத்தில் வரும் வன்முறைக்காட்சிகளைப்பார்த்து  நம் நாட்டில் சென்சார் என்ற அமைப்பு செயல்படுகிறதா என சந்தேகம் வருகிறது.ரொம்ப அழகா இதே கதையை பாலீஷா சொல்லி இருக்க முடியும்..

ஏ ,பி சி என எல்லா செண்டர்களிலும் 40 காட்சிகள் ஓடும்.

பெண்கள்,குழந்தைகள்,மாணவர்கள்,மாணவிகள்,இதய பஹீனம் உள்ளவ்ர்கள்,மென்மையான மனம் படைத்தவர்கள் இந்தப்படத்தின் டிரைலரைக்கூட பார்க்காமல் இருப்பதே நல்லது.

வக்ர மனம் படைத்தவர்கள்,சாடிஸ்ட் மனம் கொண்டவர்கள்,திகில் பிரியர்கள் மட்டும் பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

டிஸ்கி 1 - இந்தப்படம் பார்த்த நான் வக்ர மனம் படைத்தவனா?என்று யாரும் கேக்காதீங்க. நான் இதை ஒரு சமூக சேவையா பண்றேன்.( ஆஹா ,என்னே ஒரு சமாளிப்பு)

டிஸ்கி 2 -   படம் பார்க்கத்தவறியவர்களுக்கும்,விமர்சனம் படிக்கத்தவறியவர்களுக்கும்

எம் சசிகுமாரின் ஈசன் - சினிமா விமர்சனம்

 

படத்துக்கு எல்லாம் ரிப்பீட் ஆடியன்ஸ் வர்ற மாதிரி பட விமர்சனத்துக்கும் ரிப்பீட் ஆடியன்சை வரவழைக்கும் புது முயற்சி.( ஆமா,எழுதறதே மொக்கை விமர்சனம்,இதுல இந்த ஆசை வேறயா?)

 

டிஸ்கி 3 - ஆட்ட நாயகன் படம் விமர்சனம் டைப் பண்ணீட்டு இருக்கேன் ,இதனோட ஹிட் ரேட்ஸ் குறைஞ்சதும் அது ரிலீஸ் செய்யப்படும் (இவரு பெரிய புரொடியூசரு....)


டிஸ்கி 4 - தேவை இல்லாம எதுக்கு மேலே 3 டிஸ்கி? வழக்கமா போடற விமர்சன நீளம் இதுல குறைஞ்சிருக்கு,அதை கரெக்ட் பண்ணத்தான். ( ரொம்பத்தான்)

29 comments:

KANA VARO said...

அதாவது ரோட்ல போறப்ப படத்தோட போஸ்டரை பார்த்தா நில்,அதை கவனி,ஆனா படத்துக்கு போயிடாதே....//

இரத்தினச்சுருக்கம் இது தானோ!

ம.தி.சுதா said...

வந்துட்டேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநம் நாட்டில் சென்சார் என்ற அமைப்பு செயல்படுகிறதா என சந்தேகம் வருகிறது.ரொம்ப அழகா இதே கதையை பாலீஷா சொல்லி இருக்க முடியும்..ஃஃஃஃ

அது எங்கயப்பா இருக்கிறது.. பெரும்பாலான படம் வீட்டுக்காரருடன் செர்ந்து பார்க்க முடியவில்லையே...

ரவி said...

nice.................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

aattanaayakan vimarsanam please. ithukku no comment. hehe

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...

Philosophy Prabhakaran said...

// நில் கவனி செல்லாதே,அதாவது ரோட்ல போறப்ப படத்தோட போஸ்டரை பார்த்தா நில்,அதை கவனி,ஆனா படத்துக்கு போயிடாதே..... //

ஹா... ஹா... ஆரம்பத்துலையே அதிரடியா... அடிச்சி விளையாடுங்க....

// வெர்டிகோ,ஏ வியூ டூ கில்,நோ வே டூ கோ இந்த 3 ஆங்கில படங்களையும் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது //

இதுவுமா... அதுசரி நீங்க எப்படி தெரிஞ்சிகிட்டீங்க... நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பீர்களா...

என்னடா நம்ம பேவரிட் தன்சிகா ஸ்டில் போடலியோன்னு பீல் பண்ணேன்... பார்த்தா கடைசில வச்சிருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

// இந்தப்படம் பார்த்த நான் வக்ர மனம் படைத்தவனா?என்று யாரும் கேக்காதீங்க. நான் இதை ஒரு சமூக சேவையா பண்றேன் //

வாழட்டும் உங்கள் சமூக சேவை...

Philosophy Prabhakaran said...

//
இதனோட ஹிட் ரேட்ஸ் குறைஞ்சதும் அது ரிலீஸ் செய்யப்படும் //
அதையெல்லாம் எப்படி கண்டுபுடிக்கிறீங்க...

Philosophy Prabhakaran said...

//
தேவை இல்லாம எதுக்கு மேலே 3 டிஸ்கி? வழக்கமா போடற விமர்சன நீளம் இதுல குறைஞ்சிருக்கு,அதை கரெக்ட் பண்ணத்தான். //
பான்ட் சைஸை பெரிதாக்கினால் இன்னும்கூட நான்கு பக்கங்களை தேற்றலாம்...

அன்பரசன் said...

//நில் கவனி செல்லாதே,அதாவது ரோட்ல போறப்ப படத்தோட போஸ்டரை பார்த்தா நில்,அதை கவனி,ஆனா படத்துக்கு போயிடாதே.....//

புது விளக்கமா இருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆட்ட நாயகன் விமர்சனம் எப்போ வரும்.. அத்த சொல்லுங்க முதல்ல..

Chitra said...

Another trap la irunthu ...escappu!

மாதேவி said...

செல்லாதே.... ஓக்கே.

ரஹீம் கஸ்ஸாலி said...

டைட்டிலேயே படத்தின் கதையை சொல்லி விடுகிற திறமைசாலி இயக்குநர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் படத்தின் டைட்டிலிலேயே படத்தின் ரிசல்ட்டையே சொல்லி விடுகிற டேலண்ட் டைரக்டரை இப்போதுதான் பார்க்கிறேன்.நில் கவனி செல்லாதே,அதாவது ரோட்ல போறப்ப படத்தோட போஸ்டரை பார்த்தா நில்,அதை கவனி,ஆனா படத்துக்கு போயிடாதே.....///
சரியான நக்கலுங்க....

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த முறையும் உங்கள் தளம் தமிழ் மணத்தில் 1-ஆவது இடம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

Srini said...

” ஏங்க.. அவங்க எதுனா ஒரு Theme'ஐ கைல எடுத்துக்கிட்டு Logig'ஐ கண்டுக்காம விட்டுட்டு, அதையே நம்மகிட்டயும் எதிர்பார்த்தாங்கன்னா..!?? இந்த மாதிரி படங்களை எல்லாம் என்ன OscarAward'க்கா அனுப்ப போறாங்க ? கூடவே எதாச்சும் 2 ஜோக்ஸாச்சும் போட்ருந்தீங்கன்னா சிரிச்சுட்டாவது இருந்துருப்போம்...ஹ்ஹூம்..!!

a said...

//
படத்தின் டைட்டிலிலேயே படத்தின் ரிசல்ட்டையே சொல்லி விடுகிற டேலண்ட் டைரக்டரை இப்போதுதான் பார்க்கிறேன்
//
ஹா ஹா ஹா............. என்னா நக்கலு......

karthikkumar said...

தொடர்ந்து மொக்க படமா சாமி... அடுத்த வாரம் பதிவர் சந்திப்பு இருக்குல்ல. மறந்து அன்னைக்கும் எதாவது தியேட்டருக்கு போயிராதீங்க. :)

Unknown said...

விமர்சனம் சூப்பர்..

Dr.Rudhran said...

thank you

மாணவன் said...

விமர்சன சேவை தொடரட்டும்.......

பகிர்வுக்கு நன்றி

வைகை said...

ரைட்டு.... சொல்லிட்டிங்க இனி பாப்பமா அத?!!

Mohan said...

உங்களிடமிருந்து ஆட்டநாயகன் பட விமர்சனத்திற்கு வெயிட்டிங்!

pichaikaaran said...

நம்பர் ஒன் ஆனதற்கு வாழ்த்துக்கள்

Arun Prasath said...

யப்பா போமாட்டேன்

Arun Prasath said...

சாரி பார் தி லேட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டைட்டில்லேயே ரிசல்ட்ட சொல்லிட்டாய்ங்களா, இந்த டைரக்டருக்கு கண்டிப்பா ஏதாவது செய்யனும்..........

Unknown said...

என்னமோ போ மாதவா உன்ன புரிஞ்சிக்கவே முடியல!