Monday, December 24, 2012

சச்சின் - வாழும் வரலாறு

http://www.telugupeople.com/uploads/sportsGallery/200909/sachin_tendulkar_Family.jpgபுதுடில்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பாக விளங்கிய சச்சின், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 23 ஆண்டுகளாக அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த இவர், யாரும் நெருங்க முடியாக சாதனைகளை படைத்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் தற்போது விடைபெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார்.


இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த 1989ல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள், அதிக சதம், சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகள் படைத்தார். இவர், நேற்று திடீரென ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், தனது ஓய்வு முடிவை இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதத்தின் மூலம் தெரிவித்தார். இதனால் இவர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.


இதுகுறித்து சச்சின் கூறியது: கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர் மூலம், உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இதனால் முழுமனதுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்கிறேன்.


வரும் 2015ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு சிறந்த இந்திய அணியை இப்போதிருந்தே உருவாக்க வேண்டும். வரும் காலங்களிலும் இந்திய அணியின் வெற்றி நடை தொடர வாழ்த்துகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனது முன்னேற்றத்துக்கு பக்கபலமாக இருந்த சகவீரர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு சச்சின் கூறினார்.


 http://www.topsportsfaq.com/wp-content/uploads/2012/09/Sachin-and-Anjali.jpg


சச்சின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்களின் கருத்து:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,""பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சச்சின் பங்கேற்பார் என எதிர்பார்த்தேன். தற்போதைய முடிவும் சரியானது தான். இனி தேர்வாளர்களுக்கு எந்த நெருக்கடியும் இருக்காது. இது அவரது சொந்த முடிவு. அவரை யாரும் வெளியில் அனுப்பமுடியாது,என்றார்.

ஸ்ரீகாந்த்: ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் உச்சத்தில் இருக்கும் போது தான் ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. கடந்த 2011ல் அவர் ஓய்வு பெறுவார் என எண்ணினேன். சதத்தில் சதம் கண்ட சாதனையை யாராலும் மிஞ்சமுடியாது.

ஹர்பஜன்: சச்சின் ஒரு சிறந்த வீரர், மனிதர், இந்தியன். அவரால் நாட்டுக்கு பெருமை.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில்,""சச்சின் ஓய்வு பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். ஆனால் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்து தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார்,என்றார்.

பாபு நட்கர்னி: சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பலரும் வலியுறுத்தினர். ஆனால் தற்போது ஓய்வு அறிவித்தபின் ஏன் ஓய்வு பெற்றார் என கேள்வி எழுப்புகின்றனர். இந்திய மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. அவருடைய உடலை பற்றி அவருக்கு தான் தெரியும். ஓய்வு பெற இது தான் சிறந்த தருணம் என நினைத்திருப்பார்.

சரத் பவார்: சிறந்த "பேட்ஸ்மேன் மற்றும் எனது சிறந்த நண்பர் சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தது வருத்தமான விஷயம். இருப்பினும் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த அவருக்கு நன்றி.

"கிரிக்கெட் கடவுள்
பாகிஸ்தானின் இளம் வீரர் உமர் அமின் கூறுகையில்,"" என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ஒரு மதமாக இருந்தால், அதற்கு சச்சின் தான் கடவுள். இவரது ஓய்வு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது,என்றார்.



http://l.yimg.com/ea/img/-/121223/photo_1356246468606_1_0-18ddbtj.jpg?x=400&sig=._RCK.8ba1GtAKC5QFhK.g--


72 மணி நேர பின்னணி...

ஓய்வு முடிவை 72 மணி நேரத்திற்கு முன் சச்சின் எடுத்துள்ளார்.

இது குறித்து அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,""நாக்பூர் டெஸ்ட் முடிந்த பின் மும்பைக்கு திரும்பிய சச்சின், மூன்று நாட்களுக்கு மொபைல் போனை "சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அவரை யாரும் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. முதலில் சச்சின் தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்தார். அதற்கு பின் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனிடம் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பது பற்றி யோசிப்பார்,என்றார்.


பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறுகையில், ""சச்சின் ஓய்வு திடீரென எடுக்கப்பட்டது கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வீரர்கள் தேர்வுக்கு முன்பே எங்களிடம் பேசினார். அடுத்த உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராக வேண்டுமென விரும்பினார். அப்படி பார்க்கும் போது மிகச்சரியான நேரத்தில் முடிவை எடுத்துள்ளார், என்றார்.

"நம்பர் 10க்கு ஓய்வு
ஒருநாள் போட்டிகளில் சச்சின் பயன்படுத்திய "நம்பர்-10 பொறிக்கப்பட்ட ஜெர்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என, அவர் விளையாடி வரும் ஐ.பி.எல்., மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இவருக்கு பின் "நம்பர்-10 ஜெர்சியை வேறு எந்த வீரருக்கும் தரக்கூடாது என தெரிவித்துள்ளனர். கால்பந்து ஜாம்பவான்களான பிரேசிலின் பீலே, ரிவால்டோ, காகா, அர்ஜென்டினாவின் மாரடேனா, மெஸ்சி போன்ற வீரர்கள் "நம்பர்-10 ஜெர்சியை பயன்படுத்தினர்.

"ரன் மெஷின்
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 463 போட்டியில் 49 சதம், 96 அரைசதம் உட்பட 18, 426 ரன்கள் எடுத்துள்ளார்.

* ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை சச்சின் பெற்றுள்ளார். இவர், தனது 266வது போட்டியில் இச்சாதனை படைத்தார்.

பத்தாயிரம் ரன்களை கடந்தவர்கள்:

வீரர் போட்டி ரன்
சச்சின் (இந்தியா) 463 18, 426
பாண்டிங் (ஆஸி.,) 365 13, 704
ஜெயசூர்யா (இலங்கை) 445 13, 430
இன்சமாம் (பாக்.,) 378 11, 739
காலிஸ் (தெ.ஆ.,) 321 11, 498
கங்குலி (இந்தியா) 311 11, 363
சங்ககரா (இலங்கை) 337 10, 915
டிராவிட் (இந்தியா) 344 10, 889
ஜெயவர்தனா (இலங்கை) 386 10, 844
லாரா (வெ. இ.,) 299 10, 405

சதங்களின் நாயகன்



http://farm8.staticflickr.com/7014/6598786501_d5900cfb9c_z.jpg

அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 463 போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (30 சதம்), இலங்கையின் ஜெயசூர்யா (28), இந்தியாவின் கங்குலி (22), தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் (21), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (20), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (20) ஆகியோர் உள்ளனர்.

* அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இவர், 96 அரைசதம் அடித்துள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (85), பாகிஸ்தானின் இன்சமாம் (83), இந்தியாவின் டிராவிட் (83), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (82) ஆகியோர் உள்ளனர்.


முதல் வீரர்

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் சச்சின். இவர், 2010ல் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 147 பந்தில் 200 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகித்தார்.

* இச்சாதøøயை இந்திய துவக்க வீரர் சேவக், கடந்த ஆண்டு முறியடித்தார். இவர், இந்தூரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 149 பந்தில் 219 ரன்கள் எடுத்து ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். தவிர, இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

இலங்கையுடன் அதிகம்

ஒருநாள் போட்டியில் 18, 426 ரன்கள் எடுத்துள்ள சச்சின், இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 3113 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3077 ரன்கள் எடுத்துள்ளார்.

* இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 9 சதம் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 8 சதம் அடித்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் அடித்த ரன் மற்றும் சதம்:

எதிரணி போட்டி ரன் 100/50

இலங்கை 84 3113 8/17
ஆஸி., 71 3077 9/15
பாக்., 69 2526 5/16
தெ.ஆ., 57 2001 5/8
நியூசி., 42 1750 5/8
வெ.இ., 39 1573 4/11
இங்கி., 37 1455 2/10
ஜிம்பாப்வே 34 1377 5/5
கென்யா 10 647 4/1
வங்கதேசம் 12 496 1/2
நமிபியா 1 152 1/0
யு.ஏ.இ., 2 81 0/1
நெதர்லாந்து 2 79 0/1
பெர்முடா 1 57 0/1
அயர்லாந்து 2 42 0/0

* இவர், பெர்முடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை.

 https://twimg0-a.akamaihd.net/profile_images/2504398687/344204969.jpg

463 போட்டி

அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவர், 463 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரை அடுத்து, இலங்கையின் ஜெயசூர்யா (445 போட்டி), மகிளா ஜெயவர்தனா (386), பாகிஸ்தானின் இன்சமாம் (378), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (375), இலங்கையின் முரளிதரன் (350) ஆகியோர் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.


ஆட்ட நாயகன்

ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையிலும் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 62 போட்டியில் இவ்விருதை வென்றுள்ளார். இவரை அடுத்து இலங்கையின் ஜெயசூர்யா (48 விருது), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (32), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (32), வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் (31), இந்தியாவின் கங்குலி (31), வெஸ்ட் இண்டீசின் லாரா (30), இலங்கையின் அரவிந்த டிசில்வா (30) ஆகியோர் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.


* அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சாதனையும் சச்சினிடம் உள்ளது. இவர், அதிகபட்சமாக 15 முறை தொடர்நாயகன் விருதை கைப்பற்றி உள்ளார்.


http://nimg.sulekha.com/sports/original700/sachin-tendulkar-anjali-tendulkar-2011-4-3-11-10-9.jpg

சாதனை துளிகள்...

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதம் எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 1998ல் 34 போட்டியில் 9 சதம் உட்பட 1894 ரன்கள் எடுத்துள்ளார். இவர், ஏழு முறை, ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

* அதிக முறை 90 முதல் 99 ரன்கள் வரை எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இவர், 18 போட்டியில் 90 முதல் 99 ரன்களுக்குள் அவுட்டானார்.

* ஒருநாள் போட்டியில் 15 ஆயிரம் ரன்கள் (18, 426 ரன்கள்), 100 விக்கெட் (154 விக்.,) மற்றும் 100 கேட்ச் (140) என "ஆல்-ரவுண்டராக அசத்திய ஒரே வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார்.

* அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 2016 பவுண்டரி அடித்துள்ளார். அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் (195) 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் அப்ரிதி (298), இலங்கையின் ஜெயசூர்யா (270) உள்ளனர்.


23 ஆண்டு கால சகாப்தம்

ஒருநாள் போட்டிகளின் சச்சின் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை. இவர் களமிறங்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு சாதனை அரங்கேறுவது வாடிக்கை. கடந்த 23 ஆண்டு காலமாக விளையாடி வரும் இவருக்கு "மாஸ்டர் பேட்ஸ்மேன், "லிட்டில் மாஸ்டர், "மாஸ்டர் பிளாஸ்டர் என பல்வேறு பட்டங்கள் உண்டு. இவருக்கு நிகரான வீரரை இனி கண்டறிவது மிகவும் கடினமே. இவரது ஒய்வு இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.


கடந்த 1973ம் ஆண்டு ஏப். 24ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் (பாம்பே) பிறந்தார் சச்சின். இவரது இயற்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவருக்கு "டென்டல்யா என்ற செல்லப் பெயரும் உண்டு. இவர், இந்தியா, ஆசிய லெவன், மும்பை ரஞ்சி, மும்பை இந்தியன்ஸ், யார்க்ஷயர் (இங்கிலாந்து கவுன்டி) அணிகளுக்காக விளையாடி உள்ளார்.


கடந்த 18-12-1989ல் பாகிஸ்தானுக்கு எதிராக குஜ்ரன்வாலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான சச்சின், கடைசியாக 18-03-2012ல் தாகாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் நீண்ட நாட்கள் (22 ஆண்டு, 91 நாட்கள்) ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவரை அடுத்து, இலங்கையின் ஜெயசூர்யா (21 ஆண்டுகள் 184 நாட்கள்) உள்ளார்.

உலக கோப்பையில்...



http://kaw.stb.s-msn.com/i/E2/B9EA5971FE1D3AB31947D75E4FC4B.jpg

கடந்த 1992ல் முதன்முதலில் உலக கோப்பை தொடரில் விளையாடிய சச்சின், கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 10வது உலக கோப்பை தொடரிலும் விளையாடினார். இதன்மூலம் அதிக முறை(6) உலக கோப்பை தொடரில் விளையாடிய வீரர்கள் வரிசையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் மியான்தத் (1975-96) சாதனையை சமன் செய்தார். கடந்த ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், 20 ஆண்டுகளுக்கு பின் இவரது உலக கோப்பை கனவு நிறைவேறியது.


* அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சச்சின் (45 போட்டி) 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (46 போட்டி) உள்ளார்.

* அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின் (2278 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

* அதிக சதம் (6) மற்றும் அதிக அரைசதம் (15) அடித்த வீரர்கள் வரிசையிலும் சச்சின் முன்னிலை வகிக்கிறார்.

* கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் 11 போட்டியில் 673 ரன்கள் எடுத்த சச்சின், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.


"மாஸ்டர் பவுலர்

இந்திய வீரர் சச்சின், பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பவுலராகவும் அசத்தினார். இவர் 463 ஒருநாள் போட்டியில் 154 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
* இதுவரை 24 "மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
* இரண்டு முறை ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
* பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 29 விக்கெட் சாய்த்துள்ளார். இலங்கை (21 விக்.,), ஆஸ்திரேலியா (20), வெஸ்ட் இண்டீஸ் (20) அணிகளுக்கு எதிராகவும் அதிக விக்கெட் வீழ்த்தினார்.

கேப்டனாக...

சச்சின், 73 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 23 வெற்றி, 43 தோல்வியை பெற்றுள்ளார். ஒரு போட்டி "டை ஆனது. ஆறு போட்டிகளுக்கு முடிவு இல்லை.



http://photogallery.indiatimes.com/sports/f1/sebastian-vettel-wins-indian-grand-prix/Sachin-Tendulkar-with-family/photo/10544080/Sachin-Tendulkar-with-family.jpg

சில சுவாரஸ்யங்கள்...

முதலில் சச்சின், வேகப்பந்துவீச்சாளராக உருவாக விரும்பினார். ஆனால் 1987ல் சென்னையில் நடந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அகாடமியில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லி, இவரை நிராகரித்தார். பின், பேட்டிங்கில் கவனம் செலுத்திய இவர், தற்போது "மாஸ்டர் பேட்ஸ்மேன்.
* கடந்த 1987ல் இந்திய துணைக் கண்டத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், பந்து எடுத்துக் கொடுக்கும் சிறுவனாக ஊழியம் செய்தார்.


* பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 326 ரன்கள் எடுத்த சச்சின், சகவீரர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் சேர்த்து, தனது சாதனை பயணத்தை பள்ளி பருவத்திலேயே துவக்கினார்.

* தனது 19வது வயதில் (1992) யார்க்ஷயர் அணிக்காக விளையாடியதன் மூலம், இளம் வயதில் இங்கிலாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

* ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி, இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில், தனது அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார் சச்சின்.
* இவருக்கு விருப்பமான விளையாட்டு வீரர், கிரிக்கெட் வீரர் அல்ல. பிரபல அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் மெக்என்ரோய்.

* இவர், போட்டிகளில் அதிக எடை (1.5 கிலோகிராம் அல்லது 3.2/3.3 பவுண்ட்ஸ்) கொண்ட பேட்டை பயன்படுத்துவார்.

* சமீபத்தில் இவர், ராஜ்ய சபா எம்.பி., யாக நியமிக்கப்பட்டார்.

0
சச்சின், 18-12-1989ல் குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியில் 2 பந்துகளை சந்தித்த இவர், "டக்-அவுட் ஆனார். இவர், தனது 2வது போட்டியிலும் (எதிர்-நியூசிலாந்து, 1990) ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

விமர்சனம் காரணம்


பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை பத்திரிகையாளர் சந்திப்பதில் அறிவிப்பது தான் வழக்கம். சச்சின் மட்டும் கடிதம் மூலம் ஓய்வை அறிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீப காலமாக தொடர்ந்து "போல்டான இவர், கடும் விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என கூறப்பட்டது. தேர்வாளர்கள் கொடுத்த நெருக்கடியால் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதே கருத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் பிரதிபலித்தார். இவர் கூறுகையில்,""தொடர்ந்து எழுந்த விமர்சனம் காரணமாகவே சச்சின் ஓய்வை அறிவிருத்திருக்கலாம். ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை எட்டிய பின் விடைபெற்றிருக்கலாம்,என்றார்.


நன்றி - தினமலர்



 http://glittytrends.in/wp-content/uploads/2012/03/Sachin-Tendulkar-Anjali-Marriage-Photos.jpg


Below are detailed Sachin stats
• Matches played: 463 (most by any player)
• Most Runs: 18,426 runs at an average of 44.83
• Most centuries: 49
• Most Fifties: 96
• Highest number of 50+ scores in ODI’s – 145 (49 Centuries and 96 Fifties).
• First player to have scored over 100 innings of 50+ runs.
• Most Man of the Match awards: 62
• Most Man of the Series awards: 15
• Most ODI runs in a calendar year: 1,894 ODI runs in 1998.
• Most Centuries in a calendar year: 9 ODI centuries in 1998.
• Longest career span : 22 years 91 days.
• Between April 1990 and April 1998 Tendulkar played 185 consecutive matches – a World record.
• Tendulkar has played on 96 different grounds – most by any player.
• Only player ever to cross the 14,000-15,000-16,000-17,000 and 18,000 run marks.
• First player to reach 10,000-11,000-12,000-13,000-14,000-15,000-16,000-17,000 and 18,000 ODI runs.
• 15,310 of his runs came while opening the innings with the aid of 45 centuries and 75 fifties in 340 innings- most by an opener.
• Was the first batsman to score a double century in ODIs (200* against South Africa at Gwalior on Feb 24,2010).
• Tendulkar top-scored for India on 129 occasions – most such occasions for any player in ODIs.
• Was the first players to complete the all-round treble of 10000 runs, 100 wickets and 100 catches.
• Is the only player to have made three scores of 175 or more.
• Is the only player with five scores of 150 or more.
• Holds the record for scoring 1,000 ODI runs in a calendar year on most occasions. He did so seven times – 1994, 1996, 1997, 1998, 2000, 2003 and 2007
• Tendulkar has scored over 1,000 ODI runs against all major Cricketing nations.
• Has played ODIs with 866 players (teammates and opponents) – most for any player in ODI history.
• Most scores in 90s: 18 (including one not out innings).
• Was involved in 99 century partnerships – most by any player.
• Tendulkar was the first batsman to score over 3,000 runs against an opponent (3,077 runs against Australia).Since then he has also done this against Sri Lanka (3,113 runs).
• Tendulkar was the fastest to reach 10,000 runs taking 259 innings and has the highest batting average among batsmen with over 10,000 ODI runs.
• His nine centuries against Australia are the most by any player against a particular country. He occupies the second place too, with eight centuries against Sri Lanka.
• Sachin Tendulkar with Sourav Ganguly holds the world record for the maximum number of runs scored by the opening partnership. They put together 6,609 runs in 136 matches that include 21 century partnerships and 23 fifty run partnerships. The 21 century partnerships for the opening pair is also a world record.
• Sachin Tendulkar and Rahul Dravid hold the world record for the highest partnership in ODIs when they scored 331 runs for the second wicket against New Zealand in 1999-00 at the Hyderabad.
• Only the second player (after Javed Miandad) to appear in SIX World Cups – from 1992 to 2011.
• Most runs (2,278) in World Cup history including 6 centuries & 15 fifties with a best score of 152 against Namibia in 2003 world cup.
• 673 runs in 2003 Cricket World Cup, highest by any player in a single World Cup.
• Tendulkar is the only Indian to score a century on ODI captaincy debut (110 v Sri Lanka at Colombo RPS on 28-08-1996).
• Tendulkar was the first Indian player to score a century and capture four wickets in the same ODI (v Australia at Dhaka on 28-10-1998).
• 11.27% of all the runs and 24.50% of all the hundreds scored by all Indian batsmen have come from Tendulkar’s bat.
Performance vs countries


Performance in countries


Tendulkar at different positions


Tendulkar’s mode of dismissals: Out of 411 completed innings, Sachin was caught 258 times, bowled 68 times, LBW 39 times, run-out 34 times, stumped 11 times and hit-wicket once.
A break-up of Tendulkar’s scores

Tendulkar’s most productive years



Tendulkar’s nemesis: Tendulkar has been dismissed by Shaun Pollock, Brett Lee and Chaminda Vaas nine times, by Glenn McGrath and Heath Streak seven times and six times by Courtney Walsh, Azhar Mahmood and Abdul Razzaq.

நன்றி - ஃபர்ஸ்ட் போஸ்ட் ஸ்போர்ட்ஸ்



http://www.aumtrails.com/wp-content/uploads/2011/03/image_thumb23.png


தெரியுமா?

* சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே சச்சினின் விருப்பம். 1987ல் சென்னை, எம்ஆர்எப் பேஸ் அகடமியில் நடந்த தேர்வில் ஆஸ்திரேலிய நட்சத்திர பவுலர் டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பேட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கினார்.



* 1987 உலக கோப்பை போட்டியின்போது, மும்பை ஸ்டேடியத்தில் பந்து சேகரிக்கும் சிறுவனாக பணியாற்றினார்.


* 1988ல் பள்ளி அணிகளிடையே நடந்த போட்டியில் 326 ரன் விளாசியதுடன் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தார்.


* ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை ஆகிய 3 உள்ளூர் போட்டிகளிலும், அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசி அசத்திய ஒரே வீரர்.
* சச்சினின் அபிமான விளையாட்டு வீரர் ஜான் மெக்கன்ரோ (டென்னிஸ்).


* கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக டெஸ்டில் களமிறங்கியபோது, சுனில் கவாஸ்கர் பரிசளித்த கால்காப்புகளை (பேட்ஸ்) அணிந்து விளையாடினார்.


* கனமான மட்டையை உபயோகித்து விளையாடுவது வழக்கம்.


* 1998ல் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 9 சதம் உட்பட 1,894 ரன் விளாசி சாதனை.


நன்றி - தினகரன் ,Venkatakrishnan Sudarshan,

 

 http://www.thehindu.com/multimedia/dynamic/00571/_HY25CTY4-1_GR12KGV_571000g.jpg

2 comments:

http://www.facebook.com/123pearl/info said...

127* vs Kenya in 1996 WC is when I started watching cricket and ever since I've watched Cricket just to see Tendulkar batting, seen my brother copying his batting style, putting Power and then MRF stickers on his bat.. our whole family watched cricket not for the team India, but for Sachin only. It was always like as long as he's there, we're in the match. Except WC matches, we were never bothered how much is the score, whether we win or loose but when Sachin gets out in 90s, it always pinched us. At the age of 37, only he made a double century in an ODI and many times earlier was just there to make double tons. He's never gone out of form, he's always said his hunger for runs hasn't over yet then why's he leaving now ? :'( 49 100s and 96 50s clearly say that we would only consider a complete ODI journey by you make 50 100s and 100 50s ... Sachin! please play a few series more, we can't see you going from ODI :'( our hearts ache :'( please Sachin !!! please come back.


http://www.facebook.com/123pearl


http://www.facebook.com/123pearl


___________________________________________*

http://www.facebook.com/123pearl/info said...

..