Saturday, December 28, 2013

கண்ணத் தொறக்கணும் (நித்யானந்தா)சாமி கையப் புடிக்கனும் சாமி -ரஞ்சிதா

அதிகாலை சுபவேளை @ சென்னிமலை ( வாக்கிங் எவிடென்ஸ்)
Embedded image permalink
1. விஜய் - கேரளா ஸ்டேட் ல என் ஸ்டேட்டஸ் என்ன?னு நான் காட்டறேன் .



அஜித் - இண்ட்டர்நேசனல் லெவல் ல டோட்டல் கலெக்சனை மக்கள் காட்டுவாங்க



===================


2 ஜில்லாவில் மோகன் லால் காஸ்ட்யூம் வீரம் அஜித் கெட்டப்பைப்பார்த்து போட்டதா? ஆல்ரெடி அரேஞ்ச்டு?



===================



3  பொங்கல் ரேசில் எது ஜெயிக்கும் ? யாரோட பட டீசர் முதல்ல வந்துச்சோ, யாரோட பட ஆடியோ முதல்ல வரப்போகுதோ அது # என்ன நான் சொல்றது?



===================


4  ஜில்லா காம்ப்போ ஸ்டில்லில் விஜய் ம் மோகன் லாலும் # பேக் கிரவுண்ட்ல அரண்மனை தெரியுது.ஏதாவது குறியீடா? அரண்மனைக்காவலன்?



================

2 வாத்தும் வெளில வந்தாச் ;-)
Embedded image permalink


5  ஜில்லா புது ஸ்டில்லில் இளையதளபதி அமர்ந்திருக்கும் ஸ்டைல் ,கெத்து யாருக்கும் வராது.ஜமீன்தார் போல் சி எம் போல் இருக்கார் # ஜில்லா



==================


6 ஜில்லா ஆடியோ ரிலீஸ் = 21 12 2013 = கூட்டுத்தொகை =3 = விஜய் = ஜில்லா = வெற்றி =3


====================


 7 ஜில்லா ஆல் ஓவர் தமிழ் நாடு ரசிகர் ஷோ அதிகாலை 5 மணிக்கு என்பதால் நாலரைக்குள்ள வண்டியைப்பிடித்து வந்து சேரவும்


===================



8  ஜில்லா விஜய் பஞ்ச் - மடை திறந்த வெள்ளத்துக்கு தடை போட முடியாது.ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு.தோட்டத்துக்கு பயப்பட முடியாது


==================



9 விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் , தொல்லை இல்லாத வண்ணம் கல்லா கட்டும்


====================



10  ஒரு ஹீரோ பேரு சிவா .இன்னொரு ஹீரோ பேரு சக்தி .சிவா மனசுல சக்தி ! அடடே! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் குறியீடு;-))



===================


11 ஜில்லா வில் ஹீரோ பேரு சிவா ,அப்பா பேரு சக்தி .போயஸ் ல ஜெ ஒரு சிவபக்தை ,சசிகலா சக்தி மாதிரி # ஏதாவது குறீயீடா?



===================



12  புரட்சித்தலைவியை எதிர்த்து நிற்கும் தைரியமும் ,துணிவும் ,பின் புலமும் ,ஆள் பலமும்் நம்ம இளைய தளபதி கிட்டே தான் இருக்கு



===================



13 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?



விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்



======================


14 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்



 ======================

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான்யா....

28-டிச-201305:09:56 IST Report Abuse
K.Sugavanam37 வது பிறந்த நாளுக்கு பரிசை தேத்திட்டான்னு மக்கள் சொல்றாங்க.....

28-டிச-201302:10:22 IST Report Abuse
Rss என்ன கொடும சார் இது
28-டிச-201301:35:34 IST Report Abuse
Vasu Murari இனிமேல் இருவருக்கும் நித்தியம் ஆனந்தம்தான் போங்களேன். ஒரு போலீசும் வராது. புண்ணாகும் வராது.புத்தி கெட்ட நித்தியின் சீடர்களே முழுப்பாதுகாப்பு அளித்து விடுவார்கள்.

Tamilar Neethi - Chennai,இந்தியா
28-டிச-201301:15:34 IST Report Abuse
Tamilar Neethi 37 வயது நித்தியானந்தா .. 30 வயது ரஞ்சிதா ... இந்த வயதில் ஆசைகள் இருக்காது .. அதுவும் எல்ல்லாம் ஊர் அறிய அனுபவித்த பின்னர் .. விரத தாபம்.. அதான் குளித்து . கோவிலுள் லிங்க தரிசனம் நடத்திட செல்கிறார் .. பார்த்து இப்போது பெண்..குளியலறை என்று ரகசிய காமிராக்கள் சந்ததியில் புழங்குகிறது .. பெண் ஒருவரை இப்படி உளவு பார்த்தவர் வேறு ஆப்பு வாங்கபோகிறார் ..

ரியாஸ் அஹமது - மலப்புரம், கேரளா,இந்தியா
28-டிச-201300:53:24 IST Report Abuse
ரியாஸ் அஹமது இப்பத்தான் ரஞ்சிதாவை முறைப்படி ஆசிரமத்தில் ""வச்சிருக்கிறார்""... இது மாதிரி எத்தன வயசு பொண்ணுகளுக்கு தீட்சை கொடுத்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்....

28-டிச-201300:11:08 IST Report Abuse
MRS - Thirumangalam நாம ஏதாவது இந்த யுக புருஷன பத்தி எழுதலாம்னு பார்த்தா நம்ம சொந்தங்கள சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. அதனால நானு நம்ம நித்தி சாமிய பத்தியும் அவரது சீண்டலர் - சீடர் இல்லை - சீண்டலர்..ரஞ்சிதாவை பற்றியும் ஒன்னும் சொல்லல. வாழ்க இந்தியா. வாழ்க என் இந்து மதம்.வாழ்க நித்தியின் சீடர்கள் என்று சொல்லிகொல்லும் அற்பமான ஜந்துகள்.
Rate this:
Viji Ram - kovai,உகான்டா
27-டிச-201323:48:29 IST Report Abuse
Viji Ram ஹலோ pcd Pillai, உங்க கமெண்ட் படித்து சிரித்து என் வயறு புண்ணாகி விட்டது. நித்தி, ரஞ்சிதா தம்பதியர் இல்லற வாழ்வில் பதினாறும் பெட்ரூம்-இல் பெற்று வாழ நல்வாழ்த்துக்கள். இன்பம் சிறக்கட்டும்.
27-டிச-201323:41:19 IST Report Abuse
parabaran டேய் தம்பி இனிமே புல் என்ஜாய்மென்ட் தான்...

Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:19:52 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ....எப்படி யா உன்னால மட்டும் முடியுது? கொய்யால
Rate this:
Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:15:26 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ...நீ ஒரு கில்லாடி யா ...எப்படியா உன்னால மட்டும் முடியுது ??? கொய்யால

நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்

27-டிச-201322:57:28 IST Report Abuse
Sivan Mainthan எவனாவது தன்னை சுத்த சந்நியாசி என்று கூறி இருக்கிறானா? மக்கள் அடங்க மாட்டேன் என்று சாமியார்கள் காலை கழுவி குடிப்பது, மற்றபிற சேவைகள் செய்வது என்று போட்டிபோட்டுக்கொண்டு செய்யும் பொது ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். சாமியார் காலில் விழும் பெண்கள் தன கணவன் காலில் என்றைக்காவது விழுந்திருப்பார்களா? தன் கணவனிடம் சரண் ஆக ஈகோ பார்க்கும் பெண்கள் மட்டுமே எவனாவது ஆறுதலாக பேசினால் உடனே சரண்டர் ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் சாமியாருக்கு யார் நெருக்கம் என்று காட்டிகொள்வதில் வெறி பிடித்து திரிகிறார்கள். இதெல்லாம் தான் இந்த போலிச்சாமியார்களுக்கு வசதியாக போய்விடுகிறது. குற்றம் சாமியார் மேல் இல்லை. உண்மையான பக்தியைவிட போலிகளைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள்.

v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
27-டிச-201322:55:46 IST Report Abuse
v.sundaravadivelu ரெண்டு பேருமா கண்ணாலம் கட்டிக்கிட்டு காலத்த ஓட்டினா எவன்யா கேட்கப் போறான்?.. அவனவனுக்கு 1008 பிரச்னை.. இதுல நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து அடிக்கிற கூத்தை எல்லாம் எவன் இனி கவனிக்கப் போறான்??. அதான் ஏற்கனவே எல்லாமே முடிஞ்சுது.. இனி என்னய்யா துறவறம்??.. அம்மணி நித்தி கிட்ட என்னைக்கோ செட்டில் ஆயாச்சு.. என்னவோ இப்ப தான் என்ட்ரி கொடுக்கற மாதிரி ஒரு ஜோல்டிங் வேற.. போயி எல்லாத்தையும் அவுத்து

Friday, December 27, 2013

விழா -சினிமா விமர்சனம்



இழவு வீட்டில் ஒப்பாரிப்பாட்டுப்பாடும் பெண் , தப்பாட்டம்  எனப்படும்  ஒரு கிராமியக்கலைக்கான தப்புமேளம் கொட்டும்   கலைஞன் இருவருக்கும் இடையே   நிகழும்  சந்திப்பில்  முதல் பார்வையிலேயே   இருவருக்கும்  காதல்  .அடுத்தடுத்த  காதல் சந்திப்புக்கு   அந்த ஊரில் ஏதாவது  இழவு  விழுந்தாத்  தான்   உண்டு. இப்படி சுவராஸ்யமாகப் போகும்  காதல் கலாட்டாக்களுக்கு  நடுவே  நாயகனுக்கு  தக்க  சமயத்தில்  உதவும்   நபர்க்கு நாயகன்  நன்றிக்கடன் பட்டாகவேண்டிய  சூழல் . அவருடன்   நாயகிக்கு நிச்சயமாகி விடுகிறது  .என்னநடக்குது என்பதே   மிச்ச  மீதிக்கதை.



நாளைய  இயக்குநர்    நிகழ்ச்சியில்  கலைஞர்  டிவியில்     ஃபைனல்  வரை வந்த   உதிரி  எனும்   குறும்படம் தான்    இந்த    விழா  எனும்    சினிமா. காதலில் சொதப்புவது    எப்படி  குறும்படம்   சினிமா வாக   வந்து   ஹிட் ஆன  பின்   2வதாக  சினிமா   ஆகும்  தமிழ்க் குறும்படம்  இது.அடுத்த    படம்  பண்ணையாரும் பத்மினியும்  .மூன்றிலும்  வேறுவேறு   இயக்குநர். நல்ல முயற்சிகள் வெற்றி பெற  வாழ்த்துகள் .


 ஹீரோ  புது முகம் ( மாஸ்டர்  மகேந்திரன் ) .இயல்பாக நடிக்கிறார்.கிராமியம் கலந்த  முகம்  என்பதால் பாத்திரத்துடன்  கலந்து  இயல்பாக தோன்றுகிறார்.  ஹீரோயின் புதுமுகம் மாளவிகா  மேனன்.இவன் வேற  மாதிரி யில்  நாயகிக்கு தங்கையாக  வந்தவர்.  ஒப்பனையே இல்லாத  அல்லது ஒப்பனை இட்டதே தெரியாத  எளிமையான அழகு. கண்ணியமான உடை  , காட்சிகள்  படத்துக்கு பக்க பலம்.


ஓப்பனிங்கில்   ஜேம்ஸ் வசந்தன் ன் துள்ளாட்ட இசையில் இழவு வீட்டில் நடக்கும் ஒப்பாரிப்பாட்டு .கரகாட்ட கோஷ்டிப்பாட்டுடன் கும்மாளமான ஓப்பனிங் சாங் களை கட்டுகிறது.அதைத்  தொடர்ந்து கிராமத்திலிருக்கும் எல்லா  பாட்டிகளுக்கும் இடையே சண்டை  வர ஹீரோ&கோ காரணமாகும்காட்சி  ஆண்பாவம் ஆர் பாண்டியராஜன்  &   எம் சசி குமார் டைப் காமெடி,குட்


எல்லாப்  பாத்திரங்களும்   திரைக்கு புதுசு என்பதால் நேட்டிவிட்டி,இயல்பு கலந்த எதார்த்த   நடிப்பு .சபாஷ் போட வைக்கிறது.  


அடுத்த சந்திப்பு நடக்க   ஊரில் யாராவது சாக வேண்டும் என அலைவது செம காமெடி.அந்தசிச்சுவேஷனில் வரும்”முக்காக்கிழவா,முக்காக்கிழவி   என் காதல் வாழ நீ
கொஞ்சம் செத்துப்போ பாட்டுஅதகளம் ... 60 ம்கல்யாணம் நடக்கும்   வீட்டில்  புகுந்துஇழவுவீடாகநினைக்கும்காமெடியும்புதுசு/.


இப்படிப்படம்முழுக்க

  இழவுவீட்டுசம்பிராதயங்களுக்குஇடையேவேமுழுக்கதையும்நகருவதால்கொஞ்சம்சலிப்பு
ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை..

க்ளைமாக்ஸ் கடைசி20  நிமிடங்கள்இழுவை


நச் டயலாக்ஸ்


1.ரிங்க் டோன்=உசிரே போகுது உசிரே   போகுது


அதான் போயிடுச்சே?


2மாப்ளையை  எப்டியாவது கரெக்ட்  பண்ண   ஒரு   ஐடியா  கொடு


ஃபேஸ்புக்   அக்கவுண்ட்   ஆரம்பிச்சு ,லைக்போட்டு கமெண்ட்போட்ருங்க


சரிசரி.இந்தவிஷயத்துக்கு,எம்புட்டு,செலவானாலும் பரவாயில்லை.கேஸ் முடிச்சுடுங்க


 3எடுபட்டபயலுக.எவனுக்காவதுகொத்துஅடிக்ககொலைவெறியோடஅலையறாங்க

4 கொடுக்கல்வாங்கலேதாவது.உங்க2பேருக்குஇடையேநடந்ததா?


காதலிகிட்டேகடன்வாங்குவதுதப்புடா


அய்யோ  ராமா,முத்தம்  பத்தி   பேசறோம்


5மாப்ளை.எனக்கு  மட்டும்  டம்ளர்ல  சரக்கு ஷேர்கம்மியா  இருக்கு?


அவன்குடுத்த8ரூபாயைஅவன்கிட்டேயேகுடுத்துடு.தனியாபோய்வாங்கிசாப்பிட்டுக்கட்டும்

6. என்னடாமாப்ளை,ஹரிபடத்துலவர்ற.அடியாளுங்கமாதிரி,இருக்காங்க?

7நாயைக்கொஞ்சினாவாயைநக்குமாம்.அதுசரியாப்போச்சு.உன்னைஎல்லாம்வைக்கவேண்டியைடத்துலவைக்கனும்.
 

சி பி.கமெண்ட்-விழா - எளிமையான காதல் கதை @ இழவு வீடு.கவனம் ஈர்க்கத்"தவறி விட்டார்கள்" - ரேட்டிங் = 2.75 / 5 ,


விகடன் மார்க் =40

குமுதம் -சுமார்

 ஈரோடுவிஎஸ்பிலபடம்பார்த்தேன்



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27 12 2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1. ஜெ.சி.டேனியல்- மலையாளத்தில் ரிலீசான படம், ‘செல்லுலாயிட்’. தமிழகத்தில் பிறந்து, முதல் மலையாளப் படத்தை இயக்கி, மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஜெ.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இப்படத்தில், டேனியல் கேரக்டரில் பிருத்விராஜ் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த படமாகவும், பிருத்விராஜ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற இப்படம், தமிழில் ‘ஜெ.சி.டேனியல்’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
 
2.  விழா -இன்று வெளியாகும் விழா எனும் படம் உதிரி எனும்  குறும்படத்தின் நீட்சி . கூகுளில் விபரம் கிடைக்கவில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் பகிரவும் .ஈரோடு வி எஸ் பி  யில் ரிலீஸ்






3. புவனக்காடு  - மலர் மீடியா என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “புவனக்காடு”
  இதில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக திவ்யாநாகேஷ் நடிக்கிறார்.

மற்றும் கராத்தேராஜா, நிழல்கள்ரவி,அனுமோகன்,பாண்டு,தேசிங்குராஜா,மணி, தர்வேஷ், குட்டிமலர், சின்ராசு, காந்தராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    -     ரவிஸ்வாமி
இசை    -    சரத்பிரியதேவ்
நடனம்    -   சாய்கேசவ்
ஸ்டன்ட்      -    ஸ்பீட்மோகன்
எடிட்டிங்     -  பாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை  -  கவிசேகர் 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் -  வி.எம்.மோகன்
இனைதயாரிப்பு  -  ராபின்சன் 

படம் பற்றி இயக்குனர்   வி.எம்.மோகன் ….

பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்பார்கள்.இதைத் தான் கதைக் கருவாக வைத்திருக்கிறோம்.

படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

நான் இதுவரை சினிமாவில் எந்த துறையிலுமே  இருந்ததில்லை  சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை ஏன் ஷூட்டிங் கூட பார்த்ததில்லை ஆனால் ஒரு படத்தை இயக்கி தயாரித்து முடித்திருக்கிறேன்.

அதற்காக தமிழ்நாடு புக் ஆப் ரெகார்ட்ஸ் என்ற அமைப்பினர் என்னை கௌரவிக்கும் விதமாக விருது கொடுத்து கௌரவிக்க இருக்கிறார்கள் என்றார்.ஈரோடுசங்கீதா வில்  ரிலீஸ்
 
 
 
4. என் காதல் புதிது - கல்லூரி காதலையும், அந்த காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கருவாக வைத்து உருவாகி வரும் புதிய படம் என் காதல் புதிது. இந்த படத்தில் ராம்சத்யா கதாநாயகனாகவும், உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்க, ஜி.எம்.குமார், பாண்டியராஜன், லொள்ளு சபா ஜீவா, அல்வா வாசு, பாய்ஸ் ராஜன், பாலாஜி, ஸ்ரீலதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.

புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சத்யதேவ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை மாரீஷ்குமார் கவனிக்கிறார். வீரா மூவீஸ் சார்பில் டி.விஜயகுமார், எஸ்.சரவணன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி, கோத்தகிரி, கோவளம் மற்றும் கேரளாவில் இந்த படம் வளர்ந்து இருக்கிறது.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
 
5. சார் வந்தாரா - கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கில் ரிலீசாகி ஹிட்டான படம் சரோசாரு. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். முக்கோண காதல் கதை. காதல் பெரிதா, கல்யாணம் பெரிதா என்பது ஸ்கிரீன்ப்ளே. ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படம். காஜல் அகர்வாலுக்கும், ரிச்சாவுக்கும் நடிப்பிலும் கிளாமரிலும் செம போட்டி நடக்கிற படம். இப்போது இதனை தமிழில் சார் வந்தாரா என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள்.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
6 வாக்கிங்க் வித்  டினோசர்S - சர்வதேச அளவில் தலைசிறந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறவனமான பிபிசி குழுமத்தின் ஒரு அங்கமான பிபிசி எர்த் நிறுவனத்துடன் சர்வதேச தர 3டி பட தயாரிப்பில் கைகோர்க்கிறது ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதுகுறித்து, ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சர்வதேச தரத்தில் 3டி படங்களை இரு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்க இருப்பதாகவும், அதனை உலகம் முழுவதிற்கும் ஒளிபரப்பும் விநியோகஸ்த பணியை தங்கள் நிறுவனம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அளவில், "வாக்கிங் வித் டினோசர்ஸ் 3டி", "ஆப்ரிக்கா 3டி",  மற்றும் "லைப்" படங்களை தயாரித்து உள்ளதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பார்வைக்கு விருநதாக அமையவைக்க இருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை 

சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா

1. வாய் மை யே வெல்லும் = லிப்ஸ்டிக் கேர்ள் ஜெயிச்சிடும் # சபாஷ் துபாஷ்




==============



2 லட்சுமி மே நன் = லட்சுமி மே மாசம் கன்யாஸ்த்ரீயா ஆகிடப்போறாரு # சபாஷ் துபாஷ்



===================



3 மேத்ஸ் எக்சாம் ல் சமம் = போடும்போ தெல்லாம் சமந்தா உன் நினைவே!



==================


4 சமந்தா சமர்த்தா இனி இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்படும் ஷாட்களில் மட்டுமே நடிக்கனும்.அலர்ஜி யைத்தவிர்த்தா எனர்ஜி


===================


5  வாழ்க்கைல  நம்பிக்கை வைக்கலாம் தப்பில்லை.ஆனா பஸ் ல் முன்பின் அறிமுகம் இல்லா யாரோ ஒரு பெண் எதும் சொல்லாது என நம்பி கை வைக்கக்கூடாது



================



6 பேஸ் புக் மூலம் பலர் பிகருக்கு நூல் விடுவதால் தான் அதுக்கு முக நூல் னு பேரோ?


==================


7  பிரபல ட்வீட்டர்கள் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி .ஓப்பனிங் பில்டப்போடதான் என்ட்ரி குடுப்பாங்க.# மே ஐ கம் இன்,நானு வந்தாச்சு,காலை வணக்கம்ி


=================

8   கேரள இயல்பு ,நேட்டிவிட்டி தமிழ் சினிமாவுக்கு வர ஒரு மாமாங்கம் ஆகும்.தமிழ் திரைக்கதை,எடிட்டிங் வேகம் போல் வர கேரளாவுக்கு ஒரு ஜென்மம் ஆகும்



==================


9  கேரளா வில் இருப்பவர்கள் ரொம்ப டீசன்ட் போல.ஒரு விசில் இல்ல்.கை தட்டல் இல்லை.படம் பார்க்கும் ஆர்வமே எனக்கு போயிடுச்சு ;-))


=================



10 மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்ல ஒரே நாள் ல 4 ஷோ பார்த்ததால அவன் மல்ட்டி டேலன்ட் பர்சன் னு சொல்லிக்க முடியாது



====================


11   இன்று ஒரு தகவல் = புளிஷேர்= மோர்க்கொழம்பு # தமிழன் மலையாளம் படிக்கனும்னாக்கூட சாப்பாட்ல இருந்துதான் ஆரம்பிப்பான்


================


12  சொப்பன சுந்த்ரி வெச்சிருந்த கார் டி பி யை எதுக்கு 20 ஆண் ட்வீட்டர்களும் ஒரே மாதிரியா வெச்சிருக்கீங்க ? ஒத்து.மையை காட்ட வாம்


================



13 செய்தி 1 - நடிகை பிந்து மாதவியை தமிழ் நாட்டில் பார்க்க முடிவதில்லை. செய்தி 2 - சிவகார்த்திகேயன் மான் கராத்தே ஷுட்டிங் @ பாண்டிச்சேரி


================



14  வாக்கிங் போகும் பார்ககில்் வாட்ச்மேன் பார்க்கைக்கூட்ட வந்த லேடீஸ்ட்ட கடலை போடறார் # அவரவர் வாழ்க்கையில் 1000 , 1000 மாற்றங்கள்





=================



15  ரேஸ்ல ஜெயிச்ச குதிரை சூட்டோட சூடா அடுத்த ரேஸ்லயும் ஓடிட்டா இலக்கை அடைவது எளிது


==================


16  நீயா நானா ? கோபிநாத் தேய்ஞ்சு திண்டுக்கல் ஐ லியோனி ஆன கதையா,..…




=================



17  காதலிக்கு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் பரிசா குடுங்க.உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் ,நீ? னு அவ கேட்டா "எண்ணெய் கொடுத்தேன்"னு சொல்லிடலாம்


===================



18  தமிழன் வசதி யான வாழ்க்கைக்காக வலியனா அவனே நகரத்துக்கு வந்தாலும் வாழ்ந்த கிராமம்தான் சொர்க்கம்னு சிலாகிச்சுக்குவான்


=================



19  சூர்யா மேல எவனாவது கை வெச்சுப்பாருங்கடா ன்னு ஒரு FB பக்கம் # வடிவேல் காமெடி தான் நினைவு வருது


==================


20  இப்போதைய பிரதமர் ஆனதும் பெண்ணாலே! நாளைய பிரதமர் பேர் ரிப்பேர் ஆனதும் பெண்ணாலே!




=======================

Thursday, December 26, 2013

DRISHYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் -கலக்கல் க்ரைம் த்ரில்லர்)

 நாலாம் கிளாஸ் வரை மட்டும் படிச்ச , செலவு பண்ண கணக்குப் பார்க்கும் நடுத்தரவர்க்க சினிமா ரசிகன் தான் படத்தோட ஹீரோ . அவரோட சம்சாரம் பத்தாங்கிளாஸ் வரை படிச்ச அதே மிடில் கிளாஸ்.அவங்களுக்கு  2 பொண்ணுங்க.பர்ச்சேஸ்க்கு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் கூப்பிட்டாக் கூட ஹீரோ பம்முறாரு. செலவு ஆகிடுமோன்னு.

இது மோகன் லால் நடிச்ச மலையாளப்படமா? வி சேகர்  இயக்கிய வரவு எட்டணா, செலவு பத்தணா வின் உல்டா ரீ மேக்கா? என யோசிச்சுட்டு இருக்கும்போது கதை அப்டியே வழக்கு எண் 18/9 க்கு மாறுது .

ஹீரோவோட முதபொண்ணு காலேஜ் டூர் போன இடத்துல  பாத்ரூம் ல குளிக்குது . அப்போ ஒரு வீணாப்போனவன் செல் ஃபோன் ல படம் எடுத்து வெச்சு  கில்மாக்கு ஓக்கே சொல்லலைன்னா இண்ட்டர் நெட்ல அந்த  ஃபோட்டோவை அப்லோடிடுவேன் அப்டினு  மிரட்டறான் .வீட்டுக்கே நைட் வந்துடறான்.பொண்ணு அவன் மண்டைல இரும்புக்கம்பியால  ஒரே போடு ஆள் க்ளோஸ் .

அந்தப்பையன் அல்ப சொல்பமானவன் இல்லை. போலீஸ் கமிஷன்ர் பையன் . டெட்பாடியை  வீட்லயே புதைச்சுட்டு .அவன் வந்த காரை ஒரு ஓடை;ல தள்ளி விட்டு கொலையை மறைக்கறாங்க . 


போலீஸ் விசாரணை ல இருந்து தப்பிக்க  ஹீரோ போடும் அபாரமான திட்டங்களும் ., போலீசின் விசாரணை நெருக்கடிகளும் தான் பிரமாதமான மிச்ச மீதி த் திரைக்கதை  



Jeethu Joseph  தான் படத்தோட திரைக்கதை , இயக்கம் எல்லாம் . இவர்தான்  படத்துக்கு  பக்க பலம். அட்டகாசமான  திரைக்கதை .கடந்த 10 வருடங்களில் வந்த முக்கியமான க்ரைம் த்ரில்லர்களைப் பட்டியல் இட்டால் இது  முதல் இடத்தைப்பெறும் , சபாஷ் இயக்குநர் .( டைட்டிலில்  அவர் பேர்போடும்போதும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டின் போதும்  அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது) 


முந்தையபடமான   கீதாஞ்சலி(மணிச்சித்திர தாழ் -பாகம் 2 )  ஆல்ரெடி வந்த சாரு லதாவின்  உல்டா  ரீ மேக்  என்பதால் பெரியவெற்றியைப்பெறாத லாலேட்டன் எனும் மோகன் லாலுக்கு  பூஸ்ட்  கொடுக்கும் படம் . அவரது அடக்கி வாசிக்கும் இயல்பான நடிப்பு அருமை . ஓப்பனிங்க்சாங்க், பஞ்ச் டயலாக் , ஹீரோ இண்ட்ரோ பில்டப் என எதுவும்  இல்லாமல் சர்வசாதாரண மாக வந்து  பட்டையைக்கிளப்புகிறார் . மீனா விடம் காதல் காட்சிகளில் லந்து  செய்வது  , போலீஸ் ஸ்டேஷனில்   அடிவாங்குவது  என பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் 


 ஹீரோயின் மீனா.சுறா மீன்மாதிரி ஆகிட்டார் . உடம்பைக்குறைத்தால் தேவலை . இவருக்குப்பெரிதாக வாய்ப்பில்லை . இவங்களின்  2 மகள்களும்  கொடுத்த  வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்

 லேடி போலீஸ் கமிஷனராக வரும் வில்லனின் அம்மா கேரக்டரில்  நடித்திருப்பவரின்  தெனாவெட்டான நடிப்பு  கலக்கல் . விஜய சாந்தியை நினைவுபடுத்துது




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 



1 இறந்த  வில்லனின்  செல்  ஃபோன்  சிம்மை  கழட்டி   வேறு ஒரு   ஃபோனில்  வைத்து   சைலண்ட் மோடில் போட்டு   அதை  வடக்கே செல்லும்  ஒரு  வேனில் அனுப்பி  வில்லன்  வேற  ஏரியாவில் இருக்கான் என   ட்விஸ்ட்   செய்யும் ஐடியா கலக்கல் 
2 டைட்டிலில்  வரும் சப்டைட்டிலான  VISUALS  CAN BE  DECEIVING  என்பதை நியாயப்படுத்த   இயக்குநர் மேற்கொண்ட  முயற்சிகள்  குட்


3 கொலை நடந்த அன்று ஹீரோ  ஃபேமிலியோடு   டூர் போய்ட்டாங்க என   போலீசை  நம்ப வைக்க   ஹீரோ   எடுக்கும் முயற்சி , போலியான ஆதாரங்கள்  எல்லாமே  அபாரம் 


4 லேடி  போலீஸ் கமிஷனர்  வரும்  ஒவ்வொரு காட்சியும்  விசில் அடிக்க வைக்கும்  நடிப்பு .


5  எல்லாவற்றுக்கும்  சிகரம்  வெச்சது  போல்  வீட்டில் புதைத்த டெட் பாடி  எப்படிகாணாமல்   போச்சு  என்பதற்கு க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட்  அபாரம் 


திரைக்கதையில்   சில ஆலோசனைகள், சில  சுட்டிக்காட்டல்கள்



1   பொதுவா இந்த மாதிரி   மிரட்டறவங்க பொண்ணு   வீட்டுக்கு போகமாட்டாங்க. தன்னோட இடத்துக்குதான் வரச்சொல்வாங்க. அதுதான் பாதுகாப்பு. பின் எப்படி வில்லன்  பொண்ணோடவீட்டுக்கு தைரியமா  போறான்?அதுவும்  அது ஒரு  கிராமம்,மிட் நைட் டைம்



2  முதல்ல பொண்ணை  கில்மாக்கு கூப்பிடும் வில்லன் அவ  ஓக்கே   சொல்லலைன்னதும் அவங்கம்மாவை(மீனாவை )  கூப்பிடறான் . பொண்ணு   முன்னாலயே அம்மாவை   கூப்பிட்டா யாராவது சம்மதிப்பாங்களா? 


3  அந்தப்பொண்ணை  பின்னாலவெச்சுக்கிட்டு   வில்லன்  மீனா  கிட்டே   வரம்பு மீற நெருங்கும்போது    பொண்ணு பின்னால   இருந்து தாக்கும்னு  யூகிக்க முடியாதா?அவளை கட்டிப்போட்டுட்டுதானே    இவன் அட்டெம்ப்ட்   ரேப்ல இறங்கி  இருக்கனும் ? 

4  வீடியோ   எடுத்த   கில்மா  சீனை ஒரு காப்பி எடுத்து  வெச்சுக்கிட்டு தானே பொதுவா  வில்லன் க மிரட்டுவாங்க . சிஸ்டத்துல   ஸ்டோர் பண்ணாம   ஒரே ஒரு ஒரிஜினல் வெச்சுஅதையும்   அம்போன்னு  தொலைக்க  அவன் என்ன லூசா? என்  கிட்டே இன்னொருகாப்பி  இருக்கு . என்னைத்தாக்கி  இதை நீங்க  எடுத்துக்கிட்டாலும்  நான்   குறிப்பிட்ட   டைம்க்கு என்  இடத்துக்குப்போகலைன்னாலும்  அந்த  இன்னொரு காப்பியை என்நண்பன்   ரிலீஸ் பண்ணிடுவான் அப்டினு  மிரட்டி  இருக்கலாமே?


5.கற்புக்கு பங்கம் வராம  இருக்க   ஒரு பெண்  தன்னை ரேப் பண்ண வந்தவனை தாக்கலாம்னுசட்டத்துல சொல்லுது . எதிர்பாராதவிதமான  விபத்து கேட்டகிரில தான் இது வரும்.அதிகபட்சம்   2 வருசம் தான் தண்டனைகிடைக்கும் . ஏன் அவ்ளவ் ரிஸ்க் எடுக்கறாங்க ?


6   கிராமத்தில்  ஓடைக்குள்   மூழ்கிய வேனை   நீச்சலடிக்கும் இளைஞர்கள் கண்டு   பிடிக்கவாய்ப்பு இல்லை .அதுவும்   உடனே கண்டு பிடிப்பது    நம்பும்படி  இல்லை (  ஏன்னா   கிணறு என்றால்   மேலே இருந்து குதிக்கும்போது 10 அடி ஆழம் வரை செல்லும் வாய்ப்பு  உண்டு. ஓடை என்பதால்   உள் நீச்சல் அடிச்சாலும்  அதிக  பட்சம் 5 அடி வரை தான்  போவாங்க. 20 அடி ஆழம் வரை தரை  வரை  போக  தேவையே இல்லையே? 


7  எல்லா சம்பவங்களும்  26  நாட்களுக்குள் நடப்பதா  ஒரு இடத்தில்    வசனம் வருது.  கொலை நடப்பதற்கு   இரு நாள்  முன்பு   போலீஸ் ஸ்டேஷன்   இங்கே  புதுசா கட்டப்போறாங்க  என ஒருடயலாக் வருது .   26  நாட்களில்   எந்த   ஊரில்  ஒரு  போலீஸ் ஸ்டேஷன்   கட்டி  இருக்காங்க?மினிமம்  6 மாசமாகுமே? (க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்க்கு இந்த   ஸ்டேஷன்   ஒரு முக்கிய துருப்புச்சீட்டு)

police officer Aasha

நச்  வசனங்கள்


1.  என்னங்க? ஷாப்பிங்க் என்னாச்சு ?  இந்த  டைம் டிரஸ்  வாங்கித் தரலைன்னா பாருங்க , டிரஸ்   இல்லாம  எதுவும் நடக்காது 



ஏன்நடக்காது ? அதுதான் சவுகர்யமும்  கூட , ஹி ஹி 




2  அப்பா , ஒரு ஆடி கார் வாங்கனும் 


 என்ன ரேட்  இருக்கும் ?


 10 லட்சம் 


 அதை என்ன தங்கத்துலயா  செஞ்சிருக்கப்போறாங்க ?




3  ஏங்க, குழந்தைங்க   இருக்கும்போது  டபுள்  மீனிங்க் ல பேசாதீங்க


 புரியாது  விடு  அவங்க வயசுல  நான் இருந்தப்ப  எனக்கு எதுவும்  புரியலை , அவங்களுக்கு மட்டும் எப்டி புரியும் ?


 ம்க்கும், இப்போமட்டும்  உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுடுதா? 


4 பொண்ணுங்க   கிட்டே  உள்ள   ஒரு கெட்ட பழக்கம் எங்கே  போனாலும் விதம்விதமா பாத்திரங்கள் வாங்குவாங்க . குக்கர்லயே 2 லிட்டர் குக்கர் , 3 லிட்டர் குக்கர் , 5 லிட்டர் குக்கர் ,னு வாங்கி அடுக்கிக்குவாங்க 



5 அப்பாக்கு   நீசொன்னது   புரியல

 அம்மாக்கு?


 அப்பாக்கே புரியலை , அம்மாவுக்குமட்டும்? 




6 ஃபோட்டோவில்   இருக்கும் மஞ்சள் மாருதி வேனை நீ பாத்தியா?



 பார்த்தேன் , ஆனா அந்த வேனான்னு சொல்ல முடியாது 



7  எல்லாக்குடும்பங்களிலும்  மத்தவங்களுக்குத்தெரியாத  சில  விசயங்கள் இருந்தே  தீரும் 



8 நமக்குப்பிரியப்பட்டதெல்லாம் நமக்கு  வேணும்னு   ஆசைப்படறதுதப்பு 

 



சி பி கமெண்ட் .  க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்   அவசியம் பார்க்க வேண்டிய படம் . டோண்ட்மிஸ் இட் . லேடீசும் பார்க்கலாம் . கண்ணியமான் மேக்கிங்க். 


ரேட்டிங்க்  = 3.25  /5 


தியேட்டர்  மேட்டர் - கேரளா - திருவனந்த புரம்  ரயில்  நிலையம் எதிரேஉள்ள ஸ்ரீ  குமார் தியேட்டர்-ல்படம் பார்த்தேன் . சுமாரான தியேட்டர் .  சென்ட்டரான
இடத்தில்  ஏன் இப்டி சாதா  தியேட்டர்  இருக்கோ ? ஃபேமிலிஆடியன்ஸ்தான்   அதிகம்  . பால் கனி 83  ரூபா


நம்ம காதலுக்கு சங்கு @ சங்கு பீச் , திருவன(அ)ந்த(ப்)புரம்

1   கைதி - யுவர் ஆனர்.லேடியோட சம்மதத்தோட தான் தடவுனேன்.



ஜட்ஜ் - நம்ப முடியல.பார்ட்டி ஓக்கேன்னா வீட்டுக்கே போய் இருக்கலாமே? ஏன் லிப்ட்ல?


==================


2  டியர்! காதலிக்கும்போது என் மேல பைத்தியமா இருந்தீங்க! இப்போ அப்டி இல்லை.ஏன்?


ஏன்னா இப்போ நான் தெளிஞ்சுட்டேன்.


==================


3  டியர்.உங்க காதைக்குடுங்க.ஒரு ரகசியம் சொல்றேன்.



உனக்காக உதட்டையே குடுக்கறேன்.என் உதட்டுக்கு லிப் ரீடிங் அத்துபடி



=====================


4 அத்தான்நீங்க எல்லார்கூடவும் அன்பா இருப்பிங்களாமே?நிஜமா?




அதுக்காக பயப்படாதே.உன்னைத்தவிர வேற யாரும் என் கிட்டேஅன்பாஇருக்க மாட்டாங்க



=================


5  டியர்.உங்க காதலை ஏத்துக்கனும்னா என் தலைமையில் தான் நீங்க குடும்பம் நடத்தனும்.?



நீ காந்தம் மாதிரி இருக்க.ஆனா விஜயகாந்தம் மாதிரி நினப்பு



====================

6 சார்.சமீபமா உங்க படைப்புகள் எதுவும் சரி இல்லை.




ஓஹோ.அப்போ புக்கை சமீபமா வைக்காம தள்ளி வெச்சுப்படிச்சுப்பாருங்க



====================


7 என்ன சார்.உங்க படத்துக்கு தடை கேட்டு கோர்ட்ல உங்க சம்சாரமே கேஸ் போட்டிருக்கு?




எல்லாம் ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக் தான்.ஓசி ல விளம்பரம்



==================


8  டியர்.ஒரு இடியாப்பச்சிக்கல்.நீங்க தான் அதை தீர்க்கனும்.




ம் .2 கப் தேங்காய்ப்பால் குடுத்தா 10 நிமிசத்துல தீர்த்துடறேன்



====================


9  மிஸ்! உங்க பாட்டை கேட்டுட்டுத்தான் போவேன்.



சாரி.ஐ ஆம் எ பாத்ரூம் சிங்கர் ஒன்லி.



ஓ! அப்போ பாத்துட்டு தான் போவேன்.பாடுங்க



====================


 10   மேத்ஸ் மிஸ் மேகலா - ஓம்ஸ் லா வை நிரூபி!



லொள் மாணவன் = இங்கே யாரும் யாருக்கும் எதையும் நிரூபிக்க அவசியம் இல்லை.அப்டி நிரூபிச்சாலும் NO USE



====================



11   டியர்.என் கிட்டே விளையாட்டு வேணாம்.நான் நெருப்பு மாதிரி



 ஓ.நல்ல வேளை.கனல் மாதிரின்னு சொல்லலை



=================


12 நாய் கடிச்சதால இன்னும் 4 மாசம் நீங்க ஊறுகாய் சாப்பிடக்கூடாது.




ok டாக்டர்.ஓமனக்குட்டியை அப்பப்ப ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவேன்.அது ok?



====================


13  ஜட்ஜ் - கோடீஸ்வரியை ரேப் செய்த வழக்கில் 7 வருடம் ் தண்டனை.




 கைதி = யுவர் ஆனர்.ரேப் செய்யப்படது ஹை க்ளாஸ் பிகர்.ஏ க்ளாஸ் ஜெயிலில் போடுங்க



====================


14  ஜட்ஜ் = ஆசை காட்டி அந்தப்பொண்ணை மோசம் செஞ்சியா?




கைதி = நோ யுவர் ஆனர்.அவ ஒரு அஜித் ரசிகை.அதான் ஆசை ( film) க்கு கூட்டிட்டுப்போனேன்.



========================



15  கில்மா லேடி - டாக்டர்.நேத்து நைட் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்



.ப்ளச் ப்ளச் டாக்டர் - முதல்ல இருந்து சொல்லுங்க



==================


16   புரட்சி லேடி புண்ணியவதி- பெண்களை காட்சிப்பொருளா பார்க்காதீங்க .




வறட்சி நாடி வரதன் - கண்காட்சி மாதிரி டிரஸ் போட்டா பாக்காமயா இருப்போம்



=====================



17  ஜட்ஜ் - எதுக்காக உங்க புருசனை காலால எட்டி உதைச்சீங்க?





உத்தம பத்தினி ஊர்மிளா - தாலி கட்ன புருசனை கை நீட்டி அடிக்கறது தப்புங்க



======================



18  டியர்.ஏதோ ஒரு வயசுக்கோளாறு ல தான் ஐ லவ் யூ சொன்னேன்.நீ?




ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல # கோளாறு கோனாரு


=================



19   ஜட்ஜ் - சக லேடி ஸ்டாf கிட்டேயே சில்மிஷம் பண்ணினது தப்பில்லையா?



பக்கத்து ஆபீஸ்.லேடி கிட்டே சில்மிசம் செஞ்சா அது எல்லை தாண்டியகில்மாவாதம்



====================


20   டியர்.வழக்கமா நாம கோவளம் பீச்ல தானே சந்திப்போம்? இன்னைக்கு மட்டும் ஏன் சங்கு பீச் போலாம்கறீங்க?



இன்னையோட நம்ம காதலுக்கு சங்கு ஊதிடலாம்னு


========================

Wednesday, December 25, 2013

ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் ?

1.  தமிழன் ரெஸ்ட் எடுக்க்ப்போகும்போது கூட சிஸ்டமேட்டிக்கா " அப்பாலிக்கா" ஸ் டேட்டஸ் போட்டுட்டுத்தான் போறான்



===============




2 சினிமா அப்டேட் டாக்டர்னா ஸ்கின்ஸ்பெசலிஸ்ட் க்ளினிக் வாசல்ல சமந்தா ஓவியம் வெச்சிருப்பாங்களோ?



================


3  என்னமோ போடா மாதவா வின் பெண் பால் வாக்கியம் =,என்னமோ போடி மாதவி




==================


4 ஹன்சிகாவுக்கும் ஆசை ,நயன் தாரா வுக்கும் ஆசை # சிம்பு


==================




5 இன்று எய்ட்ஸ் தினம்.அருகில் உள்ள ஜி ஹெச் போய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துட்டு வாங்க.ஜென்மத்துக்கும் தப்பு பண்ண மாட்டீங்க.



=================



6 என் எழுத்து படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே! அதில் இருந்து என் கேரக்டரை யூகிக்காதீர்கள்



=======================


7 எவ்ளவ் தான் நல்ல பையனா இருந்தாலும் மாப்ளை பேரு மார்க்கண்டேயன் னா பொண்ணு வீட்டுக்காரங்க யோசிப்பாங்க # யோசிச்சா புரியும்


===================



8 ரூபாவோட லவ்வர் " எனக்கு பணம் ,காசு ,ரூபா எதுவும் முக்கியம் இல்லை" னு டயலாக் அடிக்க முடியாது


===============

9  பார்க் ல கல்யாணம் ஆன கள்ளக்காதலி ஒரு மணி நேரமா வெய்ட்டிங் & போன் பண்ணிட்டே இருக்கு.அந்த கள்ளக்காதலன் இன்னொரு க காதலியோட போய்ட்டான் போல


================



10 1 கிமீ வாக்கிங் போக வீட்டில் இருந்து 10 கிமீ காரில் கிரவுன்டுக்கு வருபவனே ஹைக்ளாஸ் தமிழன்



=================




11  எக்ஸாம் எழுதப்போற அன்னைக்குக்கூட படிக்கறதை விட்டுட்டு சக பெண் ட்வீட்டர்கள் எந்த எக்ஸாம் சென்ட்டர்? என விசாரிச்சு வெச்சுப்பவன் தான் தமிழன்


==================



12  நாய் இடம் அகப்பட்டுக்க்டி வாங்கியதால் நீர் இன்று முதல் நாய்கன் என்று அழைக்கப்படுவீர்! #கனல்



==================



13  பஸ் ஸ்டாப்பிங்க்ல கூட்டமா பிகருங்க இருந்தா அவங்களை உன்னிப்பா கவனிக்கறது தான் க்ரூப் ஸ்டடியா?



===================


14  நம் மீது உண்மையான அன்பும் ,அக்கறையும் நம்மைப்பெற்றவர்களைத்தவிர ,உற்ற துணையைத்தவிர வேறு யாருக்கும் இருப்பது அரிது



===================



15  கைக்குழந்தை அழுதா புருசன் தான் பீடிங் பாட்டிலோட வெளியே ஓடறான்.சம்சாரங்க எல்லாம் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டா தான் இருக்கு



=================



16  பொண்டாட்டியோட வந்திருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இல்லாம யார் யார் பார்க்கறாங்கனு பதை பதைப்பா பார்த்துட்டு இருக்காங்க.செம காமெடி


====================



17  விடிய விடிய 2 ம் உலகம் கதை கேட்டுட்டு விடிஞ்சதும் மூணாவதா வர்ற அனுஷ்காவுக்கு முதல் ல வர்ற.ஆர்யா முப்பாட்டனார் முறையா? னு கேட்டானாம்



=================



18  மழைல நனையறேன் னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றவங்க மொபைல் ல தண்ணி உள்ளே போயிடாதா? பொதுவா கேட்கறேன்


===================



19  வில்லங்கமான பொண்ணு = 1 வில்லி 2 வில் போல் வளையும் அங்கத்தினள்


==================




20  ரயில் பைட் வெச்சா படம் ஹிட் ஆகும் என்பது கோடம்பாக்கம் சென்ட்டிமென்ட் 1 செந்தூரப்பூவே 2 எந்திரன் 3 கேப்டன் பிரபாகரன் 4,இணைந்த கைகள்



=======================

அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு

1. வாழ்க்கையில் அர்ப்பணிப்பு செய்தவர்கள் தான் உயர முடியும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து # அர்ப்"பணி" ப்பு?


================



2 பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என இரண்டாக பிரிந்து கிடக்கும் தலைநகரம்.. நிதீஷ் குமார் வேதனை # டோட்டல் இந்தியாவே அப்டித்தானுங்ணா இருக்கு



==================



3  டிசம்பர் 2: உலக அடிமைத்தனம் ஒழிப்பு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது..# நான் அடிமை இல்லை சன் டி வி ல போடுவாங்க்ளோ?


================


4  அடுத்த புது படத்தில் நான்கு வித கெட்டப்புகளில் தனுஷ்! #அண்ணன் ஒரு கெட்டப்லயே 3,ஜோடி கூட டூயட் போடுவாரு.கெட்டப்பே.4 ன்னா செட்டப்?



===================



5  காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் கண்டனம் # ஒரு தசாவதாரமே டூயல் ரோலை கிண்டல் செய்யுதே அடடே!


=================


6  மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜெ-சரத்குமார் # சித்தப்பா அது போன மாசம்.இப்போ மின் விநியோகத்தைத்தான் முடிவுக்கு கொண்டுவந்திருக்காரு



==================


7  சென்னையிலும் இன்றுமுதல் மின்வெட்டு.- செய்தி # இப்போது நாம் காண இருப்பது இரண்டாம் உலகம் இருண்ட உலகம்


================


8  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உறவு ஸ்திரம்! - செய்தி # ஓஹோ!எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கை?


==================



9  ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாயாம்..!தகவல் ஏற்காடு எலெக்ஷன்"# விலை இல்லா இரட்டை ஆயிரம் னு சொல்லனுமோ?


=================



10 ஏற்காடு மக்களுக்கு காமாட்சி விளக்கு கொடுத்த அதிமுகவினர்# கரன்ட் இருக்காதுனு பூடகமா சொல்றாங்க போல


=================



11  மலையாள படத்தில் மம்முட்டியுடன் விஜய் நடனம் # முறைப்படி அவர் மோகன் லால் படத்துல தானே ஆடனும் ?னு யாரும் இன்னும் கிளம்பலையா?\



==================



12 இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும்வரை ஒயமாட்டோம் - ப.சி # கட்சி ஆளுங்க எல்லாரும் தற்கொலை செஞ்சுக்கச்சொல்வாரோ?


==================



13   அதிமுகவினர் கொடுக்கும் காமாட்சி விளக்கு மின்வெட்டின்போது பயன்படும்: ஸ்டாலின் # காமாட்சியே ! காமாட்சியே" நடப்பதெல்லாம் கசமுசா ஆட்சியே!



===================



14  தென்னிந்தியாவுக்கு டூர் போயிட்டு வந்தது மாதிரி இருக்கு:கமல் சகாப்தம் பற்றி சரிகா# அடுத்து வட இந்தியா டூர் எப்போ?


=================



15  4 வேடங்களில் தனுஷ்! ஒரு படத்தில் நடிக்கிறார் -செய்தி # 1 வேலை இல்லா பட்டதாரி 2,சைக்கோ லவ்வர் 3 காலேஜ் ஸ்டூடன்ட் 4 ஸ்கூல் ஸ்டூடன்ட?்


===================



16   அரசு மருத்துவமனைகளில் யோகா, இயற்கை சிகிச்சை மையம்! # யோகா டீச்சர் பேரு ஓமனாவா? ஒரு பய ஆப்ஸெண்ட் ஆக மாட்டான்



====================



17  பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ் |# நல்ல் வேளை.ட்விட்டர் பக்கம் வர்லை.டி எம் படிச்சு முடிக்கவே 10 வருசம் ஆகும்



===================



18  ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை சினிமாவாக எடுக்க ஹாலிவுட் இயக்குனர் விருப்பம் #,அந்த சம்ப்வமே ஹாலிவுட் படம் பார்த்த பாதிப்புதான்


===================



19  இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்க தயார்: இந்தியா# நம்ம வீட்டு சாப்பாட்டை சாப்பிடும் நாய் சில சமயம் பக்கத்து வீட்ல தான் நன்றியை காட்டும்


======================


20  ஜெயேந்திரரிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் - சுப்ரமணிய சுவாமி # அம்மாவோட அகராதில யே இல்லாத ஒரே வார்த்தை மன்னிப்பு




=====================

Tuesday, December 24, 2013

தலைமுறைகள் - தினமலர் விமர்சனம்

 

பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... 

விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல!

கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெற்ற தமிழ் வாத்தியர் பாலுமகேந்திராவின், வாரிசு எஸ்.சஷிக்குமார், சென்னையில் பெரிய டாக்டர். அப்பாவின் பேச்சை மீறி உடன் பணி செய்யும் பெண் டாக்டர் ரம்யா சங்கரை மணம் முடித்து ஊருக்கு வருகிறார். 

கோவாவை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணான ரம்யாவுக்கு தமிழும் தெரியாது, தன் ஜாதி பாரம்பரியமும் புரியாது... எனும் காரணத்தால் மகனையும், மருமகளையும், தான் செத்தாலும் வரக்கூடாது என அடிக்காத குறையாக விரட்டுகிறார் பாலுமகேந்திரா. மகள், அதேஊரில் வசிக்கும் பாலுவின் இன்னொரு தாரம், அவரது மகள்... எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத குறையுடன் வாழ்கிறார்.

ஒருகட்டத்தில் பக்கவாதம் வந்து இரண்டு மாதகாலம் கஷ்டப்பட்டு மீளும் பாலுமகேந்திராவை பார்க்க, விஷயம் கேள்விப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வருகிறார் மகன் எஸ்.சஷிக்குமார். இரண்டு நாட்களில் மருமகளும், தமிழே தெரியாத பேரனும் வந்து சேர, தன் வயோதிகத்தாலும், வாழ்க்கை தந்த பாடத்தாலும், பேரன் மீதான பாசத்தாலும் பாலுமகேந்திராவின் கோபம் படிப்படியாக குறைகிறது. 

அதன்பின் சென்னைக்கு மகன் திரும்ப, மருமகளும், பேரனும் அந்தஊர் மருத்துவ தேவையை மனதில் கொண்டு பாலுமகேந்திராவுடன் தங்கி விட, பிரசவத்திற்கு வந்திருக்கும் மூத்ததாரத்து மகள், இரண்டாம் தாரத்து மகளின் அன்பு, மருமகளின் நன்னடத்தை, பேரனுக்கு இவர் கற்றுத்தந்த தமிழ், பேரனிடம் இவர் கற்கும் ஆங்கிலம் என கூட்டுக் குடும்பத்தின் அத்தியாவசத்தையும் அழகாக உணர்த்தி மன நிறைவுடன் மரணத்தை தழுவுகிறார் பாலுமகேந்திரா! பேரனும் தாத்தா கற்றுத்தந்த தமிழுடன் தாத்தாவையும் மறக்காமல், தமிழையும் மறக்காமல் பெரும் எழுத்தாளனாக எம்.சசிக்குமாராக உருமாறி "தாத்தாவும் நானும் எனும் நாவல் எழுதி பெரும் விருது பெற இனிதே நிறைவடைகிறது தலைமுறைகள்!

பாலுமகேந்திரா, தாத்தா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். யதார்த்தத்தை மீறாமல் அந்த தாத்தாவாகவே அவர் வாழும் வாழ்க்கை... ஆஹா, நமக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என எல்லாதரப்பு ரசிகர்களையும் ஏங்க வைக்கும்! அதுவும் பேரனுக்கு விஜயதசமி நாளில், நெல்லில் கோயிலில் வைத்து, "அ எழுத கற்றுக் கொடுத்துவிட்டு அவர் படும் ஆனந்தமாகட்டும், தமிழ்வாத்தியார் பேரனுக்கு தமிழ் தெரியவில்லை என அவர் தலையில் அடித்து கொள்ளும் இடமாகட்டும், ஆரம்பகாட்சிகளில் ஜாதிபிரியத்துடன் அவர் நடந்து கொள்ளும் முறையாகட்டும், மகன் மீது காட்டும் கோபத்தில் ஆகட்டும், மகள்கள், மருமகள் மீது காட்டும் அன்பிலாகட்டும், பேரம் மீது காட்டும் பாசத்திலாகட்டும், அனைத்திலும் ரசிகனை சீட்டோடு சேர்த்து கட்டி போடும் வகையில் ஜமாய்த்திருக்கிறார் சபாஷ்!

மகன், எஸ்.சஷிக்குமார், பேரன், மாஸ்டர் கார்த்திக், ரம்யா சங்கர், "எங்கேயும் எப்போதும் வினோதினி, சக்தி, நண்பர் ரயில் ரவி, தில்லை பெருமாள், ஆர்யான், கெஸ்ட்ரோலில் வரும் இயக்குநர் எம்.சசிக்குமார் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அந்த பேரன் ஆதியாக வரும் கார்த்தி சூப்பர்ப்!

தாத்தாவிடம் "அ எழுத கற்றதும் தனது சிறுநீரை பீய்ச்சி அடித்து "அ போடும் அவரது குறும்பை பார்த்து பாலுமகேந்திரா முயற்சிப்பதும், அதைப்பார்த்துவிட்டு சிறுவன் "ஷேக்கிங் "அ என கிண்டல் அடிப்பது எல்லாம் பாலுமகேந்திரா டச்! அந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் புதுமை புகுத்த பாலுமகேந்திரா முயன்றிருந்தார் என்றால், பேரனிடம் ஆங்கிலம் கற்கும் அவர் பேரனுக்கு போட்டியாக "ஏ வை சிறுநீரில் முயற்சித்து தமிழை காப்பாற்றி இருக்கலாம்! மற்றபடி இசைஞானி இளையராஜாவின் இசையும், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும், இயக்கமும் பின்னிப் பிணைந்து உலகப்படங்களுக்கு நிகரான ஒரு படத்தை "தலைமுறைகளாக தந்துள்ளது என்றால் மிகையல்ல!


பாலுமகேந்திராவின், "தலைமுறைகள் - ஏழேழு தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும்!

thanks - dinamalar