Friday, December 06, 2013

நவீன சரஸ்வதி சபதம் - விமர்சனம்

Tamil shooting spotநவீன சரஸ்வதி சபதம் 
 
குடி குடியைக் கெடுக்கும் எனும் மெசேஜை கடவுள்களை சாட்சியாக வைத்துக்கொண்டு காமெடியாக சொல்ல வந்திருக்கும் திரைப்படம்.


பரம்பரரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ராமராஜன் எனும் ஜெய். கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரரான கணேஷ் எனும் விடிவி கணேஷ், பொம்பளை தாதா எமி சொர்ணாக்காவின் வெத்துவேட்டு கணவர், கோபி எனும் சத்யன், ஊரையே வளைத்துப்போடும் எம்.எல்.ஏ.,வின் வாரிசு, கிருஷ்ணா எனும் ராஜ்குமார், நடித்தால் நாயகராக மட்டுமே நடிப்பேன் எனும் பிடிவாதத்தில் வாய்ப்பு தேடி ஊரை சுற்றி வருபவர். இந்த நால்வரும் வயது வித்தியாசம் பாராத நெருங்கிய நண்பர்கள். காரணம், குடி. நின்றால் குடி, உட்கார்ந்தால் குடி... என மொடா குடிகாரர்களாக மாற இருக்கும் நால்வரையும் திருத்த நினைக்கிறார் சிவபெருமான். (கடவுள் தாங்க...!)
 
Tamil shooting spotநவீன சரஸ்வதி சபதம்

லேகிய டாக்டர் ராமராஜன் எனும் ஜெய்க்கு, அவர் விரும்பும் பாடகியுடன் இரண்டு வருட ஒன் சைடு லவ் சக்சஸ் ஆகி இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்படுகிறது. நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி கேட்கின்றனர். ஜெய்க்கு திருமணம் மாதிரி நால்வருக்கும் உள்ளூரில் வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் ஒரு சில நாட்களில் இருந்தாலும் அதையெல்லாம் வந்து பார்த்து கொள்ளலாம், தண்ணீரில் மிதந்தபடி தண்ணியில் மிதக்கலாம் எனும் பார்ட்டி மூடில், தாய்லாந்து - பாங்காக் பறக்கின்றனர். நால்வருக்கும் பாடம் புகட்ட நினைக்கும் சிவபெருமான், தன் திருவிளையாடலால் அங்கு இவர்களை கடலில் தள்ளி, ஆளில்லா தீவில் கரை ஒதுங்க வைக்கிறார்! அப்புறம்?... அப்புறமென்ன? ஒரு ஆறு மாத காலம் அங்கு உண்ண, உறங்க, உடுத்த தேவையானவை இன்றி அல்லல்படும் நால்வரும் ஊர் திரும்பினரா? உயிரை விட்டனரா? என்பது கிளைமாக்ஸ்!
 
http://img1.dinamalar.com/cini/ShootingImages/13233618671.jpg

பாரம்பரிய வைத்தியர்களாக டாக்டர் ராமராஜன் - ஜெய்யும், அவரது அப்பா டாக்டர் சித்ரா லட்சுமணனும் வரும் ஆரம்ப காட்சிகளில் தியேட்டரே சிரிப்பொலியில் அதிர்கிறது. அதுவும், 15 தலைமுறைக்கும் மேலான பாட்டன், பூட்டன் சித்த வைத்திய தாத்தாக்களின் போட்டாக்களை சுவற்றி மாட்டியிருப்பது போன்று போட்டாக்களை காட்டி, சித்ரா லட்சுமணனையும், ஜெய்யையும் அறிமுகம் செய்யும் இடமே செம காமெடி!


இதே போன்று வீட்டுல எலி வெளியில புலி விடிவி கணேஷிற்கு ஊர் தரும் மரியாதைக்கான காரணம், எம்.எல்.ஏ., மகன் சத்யனின் எம்.பி., கனவு, ராஜ்குமாரின் நடித்தால் நாயகர் ஆசை எல்லாம் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகின்றன!


நாயகர் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், கதாநாயகி நிவேதா தாமஸ், எமி- சொர்ணாக்கா உள்ளிட்ட பூலோக பாத்திரங்கள், நட்சத்திரங்கள் மாதிரியே சிவபெருமானாக வரும் சுப்பு பஞ்சு, பார்வதி தேவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட தேவலோக பாத்திரங்களும் நட்சத்திரங்களும் கூட போட்டி போட்டு சிரிப்பை வரவழைப்பது தான் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் பலம், பலவீனம் எனலாம். அதிலும் ஜெய், டி.வி.,யில் எனது நிகழ்ச்சியை பார்த்து விட்டு சொல் என்று வருங்கால மனைவியிடம் சொல்ல, அதை நம்பி நிவேதா தாமசின் மொத்த குடும்பமும் டி.வி., பெட்டியின் முன் அமர்ந்து டாக்டர். ஜெய் வழங்க இருக்கும் அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆர்வமுடன் காண காத்திருக்கும் காமெடி ஹைலைட் காமெடி!


ஜெ. ஆனந்தின் ஒளிப்பதிவில் பின்பாதியில் வரும் தாய்லாந்தின் அழகு ஆனந்தம். பிரேமின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரமிக்க வைத்து விடுகிறார் மனிதர்.

Tamil shooting spotநவீன சரஸ்வதி சபதம்

குடியை கெடுக்கும் குடியை ஒழிக்கிறேன் பேர்வழி என முன்பாதி முழுவதும் குடிக்காட்சிகளை காண்பித்திருக்கும் இயக்குநர் கே. சந்துரு, சிவபெருமானின் திருவிளையாடல்களால் நால்வரையும் திருத்த நினைப்பது ஓ.கே.! ஆனால் அதற்கு நவீன திருவிளையாடல் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்! நவீன சரஸ்வதி சபதம் என்பது சற்றே இடிக்கிறது.


இது மாதிரி ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் புதியவர் கே. சந்துருவின் எழுத்து இயக்கத்தில், நவீன சரஸ்வதி சபதம் - நல்ல சிரிப்பு சப்தம்!.
 
 நன்றி-தினமலர்

Thursday, December 05, 2013

ஆர்யாவின் 'மீகாமன்'

 


ஆர்யா - மகிழ் திருமேனி இணையும் படத்திற்கு 'மீகாமன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். டிசம்பர் 5ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.
’முன்தினம் பார்த்தேனே’, 'தடையற தாக்க' ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. தனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கவிருக்கிறார். ஹிதேஷ் ஜபக் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 


தலைப்பிடாமல் இருந்த இப்படம் குறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார் மகிழ் திருமேனி. அப்போது அவர் பேசியது, " முதலில் 'தடையற தாக்க' படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதற்கு நீங்க தான் காரணம். இப்போது எனது அடுத்த படத்தில் ஆர்யாவை இயக்கவிருக்கிறேன். 


'மீகாமன்' என்று தலைப்பிட்டு இருக்கிறேன். தமிழில் படம் எடுக்கிறேன், அதனால் தான் தூய தமிழில் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறேன். 'தடையற தாக்க' படத்தலைப்பை பார்க்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
'மீகாமன்' என்றால் மாலுமி (Captain of the Ship) என்று பொருள். தமிழில் பெயர் வைத்து அதனை புரியவைக்க ஆங்கிலத்தில் TAGLINE போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 


கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன். ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்.
முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 5ம் தேதி முதல் சென்னையில் துவங்குகிறது. சென்னை, குஜராத், கோவா ஆகிய இடங்களில் கதை நகரும்." என்று கூறினார். 


'தடையற தாக்க' படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

நன்றி- தி இந்து

நீ சூடான் தேசத்துக்காரியா? சூடான தேகத்துக்காரியா?


1. பொதுவா பணக்கார வீடுகளில் டிரைவர் , தோட்டக்காரன், வேலைக்காரன் தான் அந்த வீட்டில் நடக்கும் குற்றங்களுக்கு காரணகர்த்தா ஆகிறான் # ஆருஷி

=====================


2 கொலை செய்த வேலைக்காரன் டெட்பாடியை அப்புறப்படுத்தாமல் வீட்டிலேயே ஏன் வைத்திருந்தார்கள் என்ற கேள்விக்கு போலீஸ் , கோர்ட் இன்னும் பதில் தர்லை


===================


3 குறில் அழகர்களாக இருந்தவர்களை எல்லாம் நெடில் அழகர்களாக மாற்றிய ஃபிடில் அழகி அனுஷ்கா !


=================


4  சக லேடி ஸ்டாஃபிடம் “ உன் உடை பிரமாதம் என்றேன்! அப்போ நான்? என கோபித்துக்கொண்டார்


==================


5 கோவை அரசன் தியேட்டரில் ஜில்லா போஸ்டரைப்பார்க்கும்போது தமிழ் நாட்டின் அரசன் போலவே விஜய் இருக்கிறார் # ஜெ கவனத்திற்கு



====================

6 சர்க்கரை நோய் வந்தாலும் பரவாயில்லை என தைரியமாய் ரசிக்க வைக்கும் அழகி தான் அஸ்கா அனுஷ்கா


=================


7 ஆபீஸ் ல ஒரு பொண்ணு தக தக் னு அடிக்கும் கலர் ல ஜாக்கெட் போட்டு வந்திருக்கு ! # ஜில்லா ஜாக்கெட்டா?


=================


8 ஆருசி கொலை வழக்கை ப்டம் எடுக்க சிறந்த் இயக்குநர் ஷாஜி கைலாஷ்



==================


9 சென்ட்டிமென்ட்ஸ் பார்க்கும் திரை உலகமே" ! தீபிகா படு கோனே நடித்த படங்கள் வசூலில் படுப்பதில்லை.கவனித்தீரா?



=================


10 பண்ணையாரும் பத்மினி யும் - தமிழில் இது குறும்படம்.மலையாளம் னா குறும்புப்படம்



==================


11 மாவீரன் என்றதும் நெப்போலியன் நினைவு வந்தால் நீ சரித்திரம் படித்தவன்.பிரபாகரன் நினைவு வந்தால் சரித்திரம் படைத்தவனை படித்தவன்



================


12 அன்பே! சில் அறையிலும் நீ சூடாக இருக்கிறாயே! சூடான் தேசத்துக்காரியா? சூடான தேகத்துக்காரியா?


===================


13  பெயரை உதட்டில் உச்சரிக்கும்போதே வீரமும் ,இனப்பற்றும் வருவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங்க் ,பிரபாகரன்


===================


14 ஈரமான ரோஜாவே எடுத்த வீரமான ராஜாவே!மொக்கை ,மசாலாப்படங்களுக்கு தூக்காதீர் கூஜாவே!



===================


15   பொண்ணைப்பெத்தவங்க மாப்ளைக்கு நன்னடத்தை இருக்கா?ன்னு பார்க்கறதில்லை சொத்து இருந்தா போதும்னு சொம்பு தூக்கறாங்க



================


16  ஜோசியர் - சிவாஜி சிலையை அகற்றினா ஆட்சிக்கு ஆபத்து மேடம் 



. ஜெ - நிஜமா?



 மு க - கரெக்ட்டு கரெக்ட்டு நீ மிரட்டு மிரட்டு 



===================


17  இப்போ எல்லாம் படம் பார்த்துட்டு வந்து இவன் ஒழுங்கா விமர்சனம் எழுதி இருக்கானா? னு செக் பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்க




===================


18  அ = அனுஷ்கா 


 ஆ = ஆர்யா



 இ = இரண்டாம் உலகம்



 ஈ = ஈர்க்கவில்லை



================


19  பேங்க் ல லோன் வாங்கப்போனப்போ நடையா நடக்க வெச்ச அதே மேனேஜர் டெபாசிட் பண்றேன் னு சொன்னா ஈ ங்கறாரு # இது தான் 2ம் உலகம் போல




====================



20  யார் கிட்டேயும் வாயைக்குடுத்து மாட்டிக்கக்கூடாதுன்னு முன் ஜாக்கிரதையா நீ இருந்தா உனக்கு லிப் கிஸ் அடிக்க சான்சே இல்லாம போய்டும்



=========================



Tuesday, December 03, 2013

1800 பிரின்டுகளுடன் 'வீரம்'

இதுவரை வந்த அஜித் படங்கள் இல்லாத அளவிற்கு, ’வீரம்’ படத்திற்கு 1800 பிரின்டுகள் போடப்படுகிறது.


அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்க, சிவா இயக்கியிருக்கும் படம் 'வீரம்'. விஜயா நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். 


இப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான பணிகளில் மூழ்கி இருக்கிறது படக்குழு. 


இப்படம் குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டி கூறியிருப்பது, "அஜித் முதல்முறையாக படம் முழுக்க வேஷ்டி அணிந்து, கிராமிய பின்னணியில் நடித்துள்ள படம் இது. படத்தின் கதைப்படி, அவருக்கு 4 தம்பிகள். அவர்களுடன் ஒரு விசுவாசமான வேலைக்காரரும் இன்னொரு தம்பி போல் இருக்கிறார்.
சம்பவங்கள், திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் நிகழ்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஊரில் நடக்கும் தப்பு–தவறுகளை தட்டிக் கேட்பவராக அஜித் வருகிறார். 


படத்துக்காக, ஒடிசா மாநிலம் ராயகரா அருகே 100 ஏக்கர் பரப்பளவில் ஒட்டன்சத்திரம் கிராமம் போன்ற அரங்கு பல கோடி செலவில் அமைக்கப்பட்டது. அஜீத் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.
படத்தில், மிக பயங்கரமான ஒரு ரயில் சண்டை காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, ஒடிசாவில் ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்தோம். ரயில் ஒரு பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கும்போது, அஜித் அதில் தொங்கியபடி நடித்தார். இந்த காட்சியில், ‘டூப்’ நடிகரை நடிக்க வைத்து விடலாம் என்று எவ்வளவோ கூறியும், அஜித் அதை ஏற்றுக்கொள்ளாமல் துணிச்சலாக அவரே நடித்தார். 



அந்த சண்டை காட்சி, 4 கேமராக்களை பயன்படுத்தி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கோவில் திருவிழா காட்சியும் ஒடிசாவில் படமாக்கப்பட்டது. அதில், அஜித்–தமன்னாவுடன் தினமும் 500 துணை நடிகர்–நடிகைகள், நடனக் கலைஞர்கள் கலந்துகொண்டு நடித்தார்கள். 


2 பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அஜித் காய்ச்சலுடன் ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி நடித்துக் கொடுத்தார். 


ஒரு குடும்பத்தின் மூத்த மகனாக, 4 தம்பிகளுக்கு அண்ணனாக அஜித் நடித்துள்ள காட்சிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும்.’’ என்று கூறியுள்ளார். 



நன்றி: தி இந்து

தீபிகா படு கோன் மத்திய பிரதேசத்தை ஓவரா எக்ஸ்போஸ் பண்ணதால

1. மனைவியை நேசித்தால் மாரடைப்பில் இருந்து 50% தப்பலாம் - ஆய்வில் தகவல்.# யாரோட மனைவியைனு தெளிவா சொல்லிட்டா சவுகர்யமா இருக்கும்?



==================


2 அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் # முன்னாடி கண்ணாடி?


===================


3 தமிழர்கள் பொதுவாக விவாதிக்கும் அறிவற்றவர்கள் - ஜெயமோகன் # நல்ல வேளை.சுத்தமா அறிவே இல்லைனு அண்ணன் சொல்லலை


===================


4 அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன் # அபூர்வ ராகங்கள் ரீ மேக்கா?



===================


5 "ராமதாஸ் தமிழகத்தின் நரேந்திர மோடி" - திருமாவளவன்! # மோடிக்கு மேரேஜ் ஆகலை.டாக்டருக்கு ஆகிடுச்சு - கோக்குமாக்கா யோசிப்போர் சங்கம்



=================


6 எத்தனை முறை மாற்றினாலும் கவலையில்லை: சொல்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ் திருச்சி # மாத்து மாத்து நீ மாட்டேன்னா சொல்லப்போறேன் மாத்துய்யா மாத்து



=================


7 அமேசான் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன - செய்தி. #,காடு வெட்டி குரு குரூப் அங்கே போகவே இல்லையே?


====


8 வயிற்றில் கடத்திய கொகைன் கேப்சூல் வெடித்ததில் தான்சானியா கடத்தல்காரன் பலி # பாவம்.சூர்யா வின் அயன் பார்க்கலை போல



================


9 இந்திய அரசை ஒருபோதும் தமிழர்கள் நம்ப மாட்டார்கள்- ராமதாஸ் # தமிழன் தாலி கட்டிய பொண்டாட்டியையே நம்ப மாட்டான்.



====================


10 நாளைய பாரதம் நம் கையில்.-பொடி வைத்துப் பேசிய ஜெ." # அய்யய்யோ.அப்போ கைல ஒளிவிளக்கோடதான் இருண்ட பாரதத்தை எதிர் கொள்ளனுமா?



===================


11 திருட்டு டிவிடியில் படம் பார்ப்பது 12 வயது குழந்தையை கற்பழிப்பது போன்றது - மிஷ்கின் # ஹாலிவுட் டிவிடி யைப்பார்த்து சுட்டு படம் எடுப்பது ?



=================


12  பாஜக பணக்காரர்களின் கட்சி-ராகுல்# காங்கிரஸ் பரம்பரை பண்ணைக்காரர் க்கட்சி சார்.டோன்ட் அன்டர் எஸ்டிமேட்


=================



13 அடி அடின்னு அடிக்கிறாங்க.. மனைவிகள் மீது சரமாரியாக புகார் கூறும் சென்னை ஆண்கள்# உன் திருவடியே சரணம்னு கால் ல விழுந்துடுங்க


================


14 திருட்டு வி.சி.டி. மூலம் எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்’’-டைரக்டர் மிஷ்கின் # ஹாலிவுட்டை உல்டா பண்ணி எங்க தாலியை நீங்க அறுக்காதீங்க


=================


15 திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை -வைகோ - அவங்க வெத்தலை பாக்கு வெச்சு அழைச்ச மாதிரியே அள்ளி விடறாரே?கூப்பிடலை போகலைனு சொல்லுங்க்ணா


====================



16 செவ்வாயில் கிரானைட் கண்டுபிடிப்பு! # நம்மாளுங்க ஊழல் பண்ண கிளம்பலையா இன்னும்?


===================



17  பெங்களூரு ATM் கொள்ளை சம்பவம் கொள்ளையனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் -#,அவர் அரிவாள் வெச்சிருப்பதால் ஹரி ரசிகரா இருக்கும்


===================



18 மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாராகடன்.ரூ.25 கோடி! புதிய கடன் வழங்க.் வங்கிகள் தயக்கம # இந்த பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடா்



=====================



19 தவறான வழியில் சமூக வலைதளங்கள் ; உள்துறை அமைச்சர் ஷிண்டே வேதனை"# ஆளுங்கட்சிக்கு ஜிங் ஜக் அடிச்சா அது நேர் வழி போல



==================



20 ராம்லீலா படத்தை உத்திரபிரதேசத்தில் வெளியிட அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை # தீபிகா படு கோன் ன் மத்திய பிரதேசத்தை ஓவரா எக்ஸ்போஸ் பண்ணதாலதான்




===================

Monday, December 02, 2013

ஜன்னல் ஓரம் - விமர்சனம்

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஆர்டினரி’ என்ற படம்தான் கரு. பழனியப் பனால் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கும் படம். அடிப்படையான கதையை மாற்றாமல், திரைக்கதையில் தேவையில்லாத திருத்தங்கள் செய்யாமல் மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு அரசுப் பேருந்து. அதன் ஒட்டுநர் மற்றும் நடத்துநர். அதில் அடிக்கடி பயணிக்கும் பயணிகள் - இவர்கள்தான் கதை மாந்தர்கள். 

பழனியில் இருந்து காலை புறப்பட்டு, மாலையில் பண்ணைக்காடு என்ற மலையூரில் தங்கி, மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு வரும் பேருந்து அது. இதனால் பண்ணைக்காட்டில் நடத்துநரும், ஓட்டுநரும், அணைக்கட்டு அழகுடன் இருக்கும் அந்த ஊரில் தங்கி, காலையில் கிளம்புவார்கள். இதனால் பண்ணைக்காடு ஊர் மக்களுடன் ஒட்டுநர் பார்த்திபனுக்கும், நடத்துநர் விமலுக்கும் பரிச்சயம் ஏற்படுகிறது. 

அந்த ஊரில் அண்ணன் சார் என்று அழைத்து அனைவரும் மதிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேஷ். சூரத் நகரில் வேலைசெய்யும் அவரது ஒரே மகன் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவான். இந்த முறை அவன் வரும்போது, தனது வீட்டிலேயே வளரும் பெற்றோரை இழந்த நண்பரின் மகள் நிர்மலாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். அவனும் ஊருக்குத் திரும்புகிறான் – பிணமாக. 



அண்ணன் சாரின் மகனை, பேருந்தை மோதிக் கொன்று விட்டதாக விமலையும், பார்த்திபனையும் போலீஸ் பிடித்துக் செல்கிறது. ஆனால் அண்ணன் சாரின் மகனைக் கொன்றது விமல் அல்ல என்று, அவரே ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து பார்த்திபன் உதவியுடன் நிரூப்பிப்பதுதான் கதை. அப்படியானால் கொலையாளி? அதுதான் ஜன்னல் ஓரத்தின் மர்ம முடிச்சு!
போக்குவரத்துக் கழகத்தில் வேலைக்குச் சேருவதில் ஆரம்பித்து, பண்ணைக்காடு பெண் மனிஷா யாதவைக் காதலிப்பதுவரை, தனக்கே உரிய முத்திரையுடன் சுப்பையா கதாபாத்திரத்தில் விமல் வசீகரிக்கிறார். தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க, பார்த்தீபனுடன் சேர்ந்து போராடும் காட்சிகள், விமல் நடிப்பில் ஒரு படி தேறியிருப்பதைக் காட்டுகின்றன.
நம்ம பார்த்தீபனா இது என்று மூக்கில் விரல் வைக்கிறமாதிரி வெளுத்துக் கட்டியிருக்கிறார். குசும்பும் திமிரும் கலந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். 

பளிச்சென்று ரசிகர்களை அள்ளிக்கொள்கிறார் விதார்த். பண்ணைக்காடு ஊரின் பெண்ணாக கல்யாணியும், காதலனுக்காக கல்யாணக் கனவுகளுடன் காத்திருக்கும் நிர்மலாவாகப் பூர்ணாவும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள். 

இயற்கையின் ஆட்சி நிறைந்த கதைக்களத்துக்கு ரசிகர்களை அழைத்துப் போன மாதிரி உணரவைத்து விடுகிறது அர்பிந்து சாரவின் ஒளிப்பதிவு. மலையாளம், தமிழ், இரண்டுக்குமே இசை வித்யாசாகர். தமிழுக்குக் கொஞ்சம் வணிகத் தன்மை கொண்ட உணர்ச்சியை இசையில் ஊட்டியிருக்கிறார்.
தெளிந்த நீரோடைபோன்ற எளிய காதல் கதையாக ஆரம்பித்து கிரைம் த்ரில்லராக முடியும் இந்தக் கதையில் குத்துப்பாடல் அவசியமில்லாத திணிப்பு. பழனியப்பன், மையக் கதையை விட்டு விலகாமல் இயக்கியிருக்கிறார். திரைக் கதையின் எளிமையான கட்டமைப்பும், மலைப்பயணத்தில் எதிர்படும் சின்னச் சின்னத் திருப்பங்கள் போன்ற கதைத் திருப்பங்களும் பயணத்தைச் சுவையாக்குகின்றன. 



படத்தில் காட்டப்படும் கிராமம் உண்மையான கிராமத்தின் அடையாளங்களை அவ்வளவாகக் கொண்டிருக்கவில்லை. பல விதங்களிலும் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கும் கிராமத்தில் எல்லா விஷயங்களையும் சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொள்வது நம்பும்படி இல்லை. நிர்மலாவைத் தன் வீட்டில் வைத்து அண்ணன் சார் ஏன் வளர்க்கிறார் என்பதற்கும் திரைக்கதையில் பதில் இல்லை. பல திருப்பங்கள் வருகின்றன. ஆனால் எதுவும் பார்வையாளருக்குள் பரபரப்பு ஏற்படுத்தவில்லை. 

நன்றி: தி இந்து

நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் ஆண்கள் vs பெண்கள்

1. கிச்சன் போய் பொண்டாட்டியை சீண்டலாம் னு போனா பாப்பா " அப்பா ,அம்மாவைத்தொந்தரவு பண்ணாதே.சமையல் லேட் ஆகிடும்"குது.சொல்லிக்குடுத்திருப்பாளோ?


===================


2  சினிமா ரசிகனுக்கு முத நாள் முத ஷோ பார்க்க முடியாம போனா அது மேரேஜ் அன்னைக்கு நைட் நடக்காம தள்ளி வைக்கப்பட்ட முதல் இரவுக்கு சமம்



=================



3 உடன் பிறப்பே! கழக ஆட்சியில் இப்படி ஏடிஎம் கொள்ளை நடந்ததுண்டா? திருடர்கள் வெளில இருந்து வர நாங்கள் விட்டதுண்டா?



==================


4 கமலின் முன்னாள் ( சினிமா) ஜோடியான ரதியின் மகனை கமல் மகள் அக்ஸரா காதலித்தால் இப்போ கமலுக்கு ரதி சம்பந்தி முறையா?பழைய சம்பந்த முறையா?



====================


5 வீரம் விளம்பரத்தில் சந்தானத்தின் சுவடே இல்லை 1, அஜித் துக்கு ஏறுமுகம் 2 சந்தானத்துக்கு இறங்கு முகம்



========================


6 அக்காவுக்கு எட்டலை.தங்கச்சிக்கு எட்டிடுச்சு # அக்சரா காதல்


======================

7 ஸ்ருதி யுடன் 3 ல் நெருக்கமாக நடித்த தனுஷ் இப்போது அக்சராவுடன் ஜோடியாக நடிப்பதால் முறைப்படி மச்சினி ஆகுமா?


================


8 அக்கா ,தங்கை இருவரையும் கரெக்ட் பண்ண நீங்க கன்னி ராசியாதான் இருக்கனும்னு அவசியல் இல்லை.தனுஷ் ராசியா இருந்தாக்கூட போதும்


=================


9 அக்சரா கூட தனுஷ் ஜோடியா நடிக்கும் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அக்சரா வின் காதலர் வந்தா கடுப்பாகிடுவாரு.தனுஷ் நமுட்டு சிரிப்பு சிரிப்பாரு



=================


10 எம் ஜி ஆர் ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக் தான் அஜித் ன் வீரம் னு இன்னும் யாரும் கிளம்பலையா?



===============


11 ATM திருடன் க்ளூ 1 ஷட்டரை சாத்தியதால் ரன் ப்டம் பார்த்த ஆள் 2 GUN வைத்திருந்ததால் விஜய் ரசிகர்.3 அரிவாளை ஓங்கியதால் இயக்குநர் ஹரி ரசிகர்


===================


 12 லிப்ஸ்டிக் போட்ட உதடு கிஸ் குடுக்க ஏற்றதில்லை என்பது தான் செவ் வாய் தோஷம் னு நான் சின்னப்பையனா இருக்கும்போது நினைச்சேன்



====================



13 தனுஷ் அமிதாப் உடன் நடிக்க இருப்பதால் அபிஷேக் பச்சன் கலக்கம் # ஐஸ்வர்யா ராய்



==================



14 ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் முதலிடத்தை நோக்கி இந்தியா! # ட்விட்டர்னா தமிழன் தான்


=================



15 அமலா பால் வீட்ல நாய் வளர்த்தாலும் பூனையை வளர்க்க மாட்டாங்க.ஏன்னா CATடோமேணியா கெட் லாஸ்ட் போ நீ யா வியாதி இருக்காம்



==================


16  நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் ஆண்கள் பணிவுடன் ,பயத்துடன் ,எதிர்பார்ப்புடன்.பெண்கள் தெனாவெட்டுடன் ,அசால்ட்டா # நீதி - ஆண் பொறுப்பு



=====================



17 செல்வரகவன் ன் இரண்டாம் உலகம் நம்மை எல்லாம் ஒரு புது உலகத்துக்கு அழைத்துச்செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் தேவதை அனுஷ்கா ஜொள்ளர் பேரவை



===================



18 டாப் ஆங்கிள் ஷாட் இல்லை எனில் ஒளிப்பதிவாளரின் டாப் எகிறிடும் என்று எச்சரிக்கிறோம் #2ம் உலகம்



====================



19 ஹீரோயின் ஒரு சைக்கோ.இமேஜினேசினோ லவ்வோ போபியாமேனியா வியாதி.எல்லாம் கனவு .ட்விஸ்ட் #2 ம் உலகம் ( கற்பனை )



====================


20 ஸார்.நாளைக்கு லீவ் வேணும்.ரேஷன் ல அஸ்கா வாங்கனும். # அனுஷ்கா



===========================

Sunday, December 01, 2013

ஐ.பி.பி.எஸ்.,சின் அதிகாரி தேர்வு அறிவிப்பு

ஐ.பி.பி.எஸ்.,சின் அதிகாரி தேர்வு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளின் கிளரிகல் மற்றும் அதிகாரி பணி இடங்கள் ஐ.பி.பி.எஸ்., அமைப்பினால் பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் முறைகளில் நிரப்பப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
பொதுத்துறை வங்கிகளிலுள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வந்துள்ளது.


பிரிவுகள்

ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்தத் தேர்வு வாயிலாக ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர்., அதிகாரி, மார்கெடிங் ஆபிசர், சார்டர்டு அக்கவுண்டண்டு போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது

20 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி வயதில் மாற்றம் உண்டு.


தகுதி

இன்ஜினியரிங் பட்டப் படிப்பு, அக்ரிகல்சர் பிரிவில் பட்டப் படிப்பு, இந்தியில் பட்டம், எம்.பி.எ., சி.ஏ., என்று விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதி தேவைப்படும். இணையதளத்தில் விபரங்கள் அறியவும்.


தேர்வு மையங்கள் 

ஐ.பி.பி.எஸ்., நடத்தும் இந்த பொது எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட இதர மையங்களிலும் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்

ஐ.பி.பி.எஸ்.,சின் இந்த எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள ரூ.600/ ஐ தேர்வுக்
கட்டணமாக செலுத்த்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் முறையில் 14.12.2013க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி: http://www.ibps.in/career_pdf/Draft_ad_Specialist_Officers_III.pdf

நன்றி : தி இந்து 

ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?

1. ஜட்ஜ் - லிப்டில் போகும்போது சில்மிசம் செஞ்சீங்களா?



தெகல்கா தேஜ்பால் = 30 வது மாடி.பக்கத்துல 28 வயசு லேடி ஹி ஹி



==================



2 சார்.இதே ஆபீஸ் ல 10 வருசம் குப்பை கொட்டிட்டேன்.பிரமோசன் வேணும்.



ம்க்கும் அதையே ஒழுங்கா கொட்டறதில்லை வழி ல பாதி சிதறிடுது



=====================


3  ஸார்.உங்க படம் ஓடற ஒவ்வொரு தியேட்டர் ல யும் ஒரு காலேஜ் லெக்சரர் நிக்கறாரே எதுக்கு?



 படம் சுத்தமா புரியலைனு சொல்றதால கதையை விளக்க ஆள்



===================


4 ஏ க்ளாஸ் ஆடியன்சுக்கு என் படம் பெட்டர் எக்ஸ்பீரியன்சா இருக்கும்.



ஓஹோ.புரொடியூசருக்கு BITTER EXPERIENCE?



===================


5  சார்.டிக்கெட் எவ்ளவ்?



150 ரூபா




. இந்தாங்க 75 ரூபா.இடைவேளை வரை தான் படம் நல்லாருக்காம்.அதை மட்டும் பார்த்துட்டுப்போய்டறேன்


==================


6  சார் .உங்க படம் அவுட் ஸ்டேண்டிங்.


தாங்க்ஸ்.



இடை வேளை முடிஞ்சதும் ஆடியன்ஸ் எல்லாம் வெளில நின்னாங்க.கேட்டைத்திறக்கச்சொல்லி



===================


7  பிலிம் இன்ஸ்டிடியூட் டீச்சர் - ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?



மிஸ்! உங்க கேள்விலயே பதில் இருக்கே?



=======================


8 மிஸ்! எனக்கு மட்டும் ஸ்மைலி சின்னதா போட்டு இருக்கீங்க ஏன்?



 காலைல இருந்து 300 பாலோயர்ஸ்க்கு ;-)) போட்டு வாய் வலிக்குது


===================



9  கமல் - ஆரோ 3 டி எபக்ட்ல விஸ்வரூபம் 2 வருது. #



 யாரோ திருடி டி வி டி யா விக்காம இருக்க இது நல்ல ஐடியா



==================



10   என் படம் படிச்சவங்களுக்கு மட்டும் தான் புரியும்.



ஓஹோ.அப்போ படத்தை ஸ்கூல் ,காலேஜ் ல மட்டும் ரிலீஸ் பண்ணுங்க.ஏன் தியேட்டர்ல?



==================


11 நான் ஒரு ட்ரெண்டு செட்டர். அப்டின்னா என்னங்ணா? ரெண்டு பேரை செட் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம்ங்களா?




==================



12   டியர்.நீ தான் என் இரண்டாம் உலகம்.



 சாரி மிஸ்டர்.ஏகப்பட்ட பேரு இப்டி சொல்லிட்டாங்க.நீ ஆயிரத்தில் ஒருவன்


========================


13  சார்.உங்க படம் பார்க்க வந்தேன்.5 பேர் தான் இருக்காங்க. 



நல்லா பாருங்க.36 கேரக்டர்ஸ். 



நான் சொன்னது ஆடியன்ஸ் 5 பேர் தான்



==========================


14 ஆபீஸ் ல தேவை இல்லாம பொண்ணுங்க கூட பேசிட்டிருக்்கக்கூடாது. 



ஓக்கே சார்." தேவை" இருந்தா பேசிக்கலாமா ?


=========================


15 டியர்.இன்னைக்கு நீ டிரசே போடாத.வீட்டை விட்டுப்போகாதே? 


ஏன்?


ஏன் என்றால் உன் பிறந்த நாள்


==========================


16 ஜட்ஜ் - உங்க மேல தப்பில்லை.உங்களுக்கு பேர் வெச்சவங்க மேல தான் தப்பா? 



தேஜ்பால் -் யுவர் ஆனர்.பேர்லயே பால் இருந்ததால தான் பால் இயல் புகார்



==========================



17 ஜட்ஜ் - லிப்ட் ல போகும்போது லேடிகிட்டே சில்மிஷம் செஞ்சீங்களா?



தேஜ்பால் - இல்ல.கீழே வரும் போது தான் ;-))



=====================



18 பேங்க் கேஷியரைக்கட்டிக்கிட்டது தப்பா போச்சுடி


.ஏண்டி?



 முதல் இரவு ல உள்ளே போனதும் டோக்கன் குடுத்து " கூப்பிடும்போது வந்தா போதும்"னுட்டாரு


=====================


19 டியர். ம்.வெயிட்.ஆக்கப்பொறுத்தீங்க.ஆற பொறுக்க மாட்டீங்களா?



நான் ஏன் பொறுக்கனும்?நான் என்ன பொறுக்கியா?


==================


20 மிஸஸ்  மீன்ஸ்மினி - டியர்.எத்தனை மணிக்கு நீங்க FREE?



மினிமீன்ஸ் - ஏன்? 


மீன்ஸ்மினி - ஒரு ட்வீட் போடறேன்.வந்து RT பண்ணுங்க, ஃபேஸ் புக் ல ஒரு ஸ்டேட்டஸ் போடறேன் , வந்து லைக் போட்டு கமெண்ட்டும் போடுங்க

==================



தனுஷ் ராசியும் , அக்சராவும்

1. 'இவன் வேற மாதிரி' படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. # படம் ஒரு மாதிரியா இருக்குன்னு யாரும் சொல்லிட முடியாது


==================


2  திமுகவில் இணைந்தார் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் # வக்ரம் ப்ரோ.உங்களை எங்க ஹேட்டர்ஸ் லிஸ்ட் ல வைக்றோம் ப்ரோ


=================


3 தோழியின் மகனுடன் கள்ளக்காதல்.கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து தீர்த்தார் மனைவி! # எதுக்கு காசு செலவு? ரசத்தை வெச்சுக்குடுத்தா விஷமா வேலை செஞ்சுட்டுப்போகுது


================


4 மோகன்லால் கரம்சந்த் காந்தி.. பாவம் மோடியே குழம்பிட்டாரு!மாற்றி உச்சரித்தார் # ஜில்லா க்கு ஓசி விளம்பரம்


================


5  அமலாபாலுக்கு ஒரு கோடி ரூபாயை மொய் எழுதிய தனுஷ்! இது மொத்த சம்பளமில்லை, முன் பணமாம்!# அம்மா ஆட்சில விலைவாசி உயர்வு ஜாஸ்தி தான்.



===================


6 டிசம்பர் மாதத்திற்குள் தமிழக மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும்-ஜி.கே.வாசன் # இவரு மனசில் பெரிய நாராயணசாமின்னு நினப்பு


================


7  தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்!- நெடுமாறன் குறித்து கருணாநிதி விசாரணை வந்தா மட்டும் நெஞ்சு வலி



====================


8 மிக்ஸ்டு ரிவ்யூ ஒரு படத்தை பத்தி வந்தா என்ன அர்த்தம் ?



 மக்கள் CONFUSED னு அர்த்தம்



=====================


9  கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்: பாலா # புதுக்கதையா இருந்தாக்கூட நம்மாளுங்க ராமராஜன் பட ரீமேக்கா?ம்பாங்க்ளே?



==================


10  அறிவாற்றல் துறையின் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது: ஜெ # அறிவாலயம்னா அம்மாவுக்குபிடிக்காதே?



====================



11  பாமக- தேமுதிக சமரசம்! பாஜக தலைமையில் உருவாகிறது புதிய அணி # நல்ல ஜோடிப்பொருத்தம் கஜேந்திரா ;-))



==================


12 படுக்கையறைக் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுகிறார்'- வைர வியாபாரி மீது ராதா புகார # நல்ல வைரம் பாய்ஞ்ச கட்டைனு சொல்றாங்களே இதானா?்


==================


13 சென்னையில் கொசுத் தொல்லைக்கு ஸ்டாலினே காரணம்- மேயர். # மேயற மாட்டை மேயர் மாடே கெடுத்த மாதிரி



==================



14  பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் : ராம் கோபால் வர்மா # அரே ராம் கோ பால் இயல் ப்ரிய வர்மா



===================


15  ராஜீவ் கொலை வழக்கை. ராகுல் கொலை வழக்கு என்று மாற்றி கூறிய EVK # கேப்டன் ,மோடி வரிசையில் ஈவிகே எஸ் னு வரலாறு குறிச்சு வெச்சுக்கும்



===================



16 ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? # கண்டுபிடிச்ட்டேன்.ஐஸ் நெம்பர் 1 அவுட்



=====================


17  டெஹல்கா தேஜ்பால் விவகாரம்: கோவா ஹோட்டல் லிப்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை! # அப்போ இருந்தது ,இப்போ இல்லை?



====================



18 ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா... நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! - நடிகை ராதா #2 பேரும் பொறுமையா எண்ணிப்பாருங்க




===============

19  மாடுகளை மேய்க்கும் புதிய 'ரோபோ' கண்டுபிடிப்பு # ஷங்கர் படிச்சா ஷாக் ஆகிடுவாப்ல



==================



20 தனுஷ் ஏவுகணை இலக்கை தாக்கியது - சோதனை வெற்றி # பொதுவா தனுஷ் னாலே டார்கெட்டை ஈசியா அச்சீவ் பண்ணிடும்.முயற்சியே தேவை இல்லை.தானாதேடி வரும்


=======================

Saturday, November 30, 2013

விடியும் முன் - ‘தி இந்து’ விமர்சனம்


ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.
பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார். 

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 


பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம். 

 பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.


கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன. 


பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.








































குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி. 


இந்து டாக்கீஸ் மதிப்பீடு:
விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.

பொண்ணு எப்பவும் அச”மஞ்சம் ”னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?

1. சார்.தெலுங்கு ல பிளாப் குடுத்த டைரக்டர் படத்துல நடிக்கறீங்க்ளே? ஏன் ?




தோல்வியை சந்திச்சவன் கிட்டே தான் ஜெயிக்கனும்கற வெறி இருக்கும்



====================


2  மிஸ் ! நீங்க போட்டிருக்கும் லெக்கின்ஸ் முழங்கால் வரை சிவப்புக்கலர்லயும் ,அப்புறம் சந்தனக்கலர்லயும் இருக்கே?



டேய்.அது மிடிடா


===========================

3  ஜட்ஜ் - கொலையை நேரில் பார்த்த சாட்சி நீ தானா?



 லேடி - சாரி யுவர் ஆனர்.உங்க உச்சரிப்பு தப்பு.என் பேரு சாட்சி இல்லை.சாக்ஷி


=====================


4  அழகான கன்யாஸ்த்ரீ ரோலுக்குப்பொருத்தமான நடிகை யார் ?


 லட்சுமி மேNUN. NUN DHIDHADAS




====================


5  டியர்.இன்னைக்கு ஆண்கள் தினமாம்.இன்னைக்காவது நீ சமைக்கக்கூடாதா?



சாரி.வேணும்னா பெண்கள் தினத்தன்னைக்கு பார்ப்போம்


===================


6  தண்ணி அடிக்கறதை உடனே நிறுத்தனும்



 அது முடியாது டாக்டர்.டாஸ்மாக் ல தராசு இல்லையே? எப்டி நிறுத்த?



======================


7  மிஸ்! உங்கம்மா வயசு என்ன ?



 எதுக்கு கேட்கறீங்க?



கன்னிப்பொண்ணு கிட்டே வயசு கேட்கக்கூடாதாம் .அம்மா வயசைச்சொன்னா கால்குலேட் பண்ணிடுவேன்


=========================


8   ஜட்ஜ் - பேங்க் ஆபீசரை பேங்க் ஏடிஎம் ல யே தாக்கி கொள்ளை அடிச்சது ஏன்?



 கைதி - இடம் பொருள் ஏவல் பார்த்து ,மேட்சுக்கு மேட்ச்



======================


9  ஜட்ஜ்- 10 அடி தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் கொள்ளை முயற்சியில் ATM போனது எப்டி?




 பாதுகாப்புக்கு போலீஸ் இருக்குங்கற தைரியத்துல தான்



===================


10  இன்ட்டர்வியூவில் எம் டி - எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?



 லேடி = பெயில் ஆகும் வரை படிச்சிருக்கேன்.


=====================



11  ஹீரோ ,ஹீரோயின் 2 பேரும் டாக்டர்ஸ்.




 அய்யய்யோ.அப்போ படம் பார்க்க வரும் ஆடியன்சை முடிச்சுடுவாங்களோ?



=====================



12  ஸார்.தமிழ் சினிமா ரசிகர்களைப்பத்தி தெரிஞ்சும் ஏன் FANTACY படம் எடுத்தீங்க?



 பென்டாஸ்டிக் னு சொல்லுவாங்கனு தான்




=====================


13  இந்தப்படத்துக்கு எப்படி 60 கோடி செலவாச்சு ?



 பாதி செலவு நான் பர்சனலா பண்ணுனதுதான்



=====================


14  சார்.எதிராளி 8 சிப்பாயையும் தலா 2 ஸ்டெப் முன்னால வெச்சும் நீங்க ஏன் கம்முன்னே இருந்தீங்க?



8*2=16 வயதினிலே ஸ்வீட் ட்ரீம்ஸ்க்கு போய்ட்டேன்



=================



15 என் படம் ஓடலைன்னா இழப்பு எனக்கில்லை.ரசனையை மேம்படுத்திக்காத ரசிகர்களுக்குத்தான் .



 யோவ்.புரொடியூசர் எனக்கும்தான் செம இழப்பு


====================



16  ஸார்.உங்க பட ஹீரோவுக்கு ஏன் கண்ணாடி மாட்டி விட்டுடறீங்க?



ஹீரோயினை நான் மட்டும் தான் ரசிக்கனும்.ஹீரோக்கு தெரியக்கூடாது



===================


17 சார்.உங்க படத்துல எப்பவும் ஒரு சைக்கோ கேரக்டர் இருக்கும்.இதுல இல்லை ?



 படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ் படம் புரியாம ஸைக்கோ ஆகிடுவாங்க



==================



18  பொண்ணு எப்பவும் அசமஞ்சம் னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?



கேள்விலயே பதில் இருக்கு



=====================



19  சார்.தமிழ் சினிமா வை அடுத்த லெவலுக்கு கொண்டுபோய்ட்டீங்க.குட்.புரொடியூசர் எங்கே?



சொந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போய்ட்டார்



=======================


20  மேரேஜ் பண்ணிக்கறதா சொல்லி   என்னை ஏமாத்திட்டார்.




தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்திருக்கலாம்.ஏன் ரூமுக்கு உள்ளே போனீங்க?



=========================

Friday, November 29, 2013

நரி முகத்தில விழிச்சா நல்லது

1. எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடாதே! தனியா இரு ! நீ தனித்து அடையாளம் காணப்படுவாய்!



================


2 ராம நாராயணன் = லட்சுமி நாராயணன் (2013 தீபாவளி) = மகா லட்சுமி நாராயணன் ( 2014 பொங்கல் )



===================


3 நரி முகத்தில விழிச்சா நல்லது ,அதிர்ஷ்டம் என்பது உண்மைன்னா நரியோட ஜோடி நரி சுபிட்சமா இருந்திருக்கனுமே?




==================



4 உழவர் சந்தைல எது சீப்பாக்கிடைக்குதோ அதை முதல்ல வாங்கிக்குவேன்.சீக்கிரமா சேல்ஸ் ஆகிட்டதால அது டிமாண்ட் உள்ள பொருள் னு சொல்லிட முடியாது



=====================


5  அன்பே! அனுஷ்கா! உன்னை முதுகில் உப்பு மூட்டை தூக்கினால் அது பஞ்சு மூட்டை போன்ற அஸ்கா மூட்டையாகத்தான் இருக்கும்!





===================



6  நீ உதட்டைகடித்துக்கொள்ளும் அழகு கொள்ளை அழகு என்பதை உன்னிடம் சொன்னதே இல்லை.சொன்னால் அடிக்கடி கடித்து காயப்படுத்திக்கொள்வாயே?



================



7 உன் உடல் எங்கும் என்னைத்தாக்கும் ஆயுதங்கள் இருந்தாலும் உன் விழிகளே என்னை வீழ்த்தும் பிரம்மாஸ்திரம்




====================


8 4 பேர் 4 விதமாகப்பேசுவார்கள் என்பதற்காக நம்.4 இதழ்களை இணைய விடாமல் செய்வது இயற்கைக்கும் ,காதலுக்கும் எதிரானது




===================



9 ஆணாதிக்கத்தைப்பெண்ணும் ,பெண் ஆதிக்கத்தை ஆணும் ரசிக்கும் நேரம் ராத்திரி நேரமே!




===================


10 மூக்கு கள் இடித்துக்கொள்ளுமே என்று யோசித்து நம் உதடுகள் கடித்துக்கொள்ளாமல் விட்டதில்லை




===================


11 காதலியின் லிப்சை சிப்சா நினைச்சா லிப் கிஸ் காதலுக்கு நொறுக்குத்தீனி




===================


12 சுண்டி இழுக்கும் அழகு உன்னுது.மண்டி இட்டுத்தெரிவிக்கும் காதல் என்னுது!




===============


13 ஏம்மா! ஒரு டர்க்கி டவல் வாங்கித்தர மாட்டானா அந்தக்காதல் பொறுக்கி ?



===============


14 லிப் கிஸ் அடிக்கும்போது வானத்தில் பறப்பது போல் இருப்பதால் அதை FLYING KISS என்றும் சொல்லலாம்




====================


15 இங்க்லீஷ் மிஸ் சை ( டீச்சர்) லவ் பண்ணினா ஈசியா இங்க்லீஷ் கிஸ் கிடைக்கும்னு தப்புக்கணக்கு போட்ரக்கூடாது


=================


16 பெண்களின் செல்லச்சீண்டல் = போய்யா யோவ் ( பகலில்),போடா டேய் ( இரவில்) ,வாடா டேய் ( நள்ளிரவில்) #,கொல்லிமலை சித்தர் குகை ஓவியக்குறிப்பு



===================


17 பெண்கள் சேலை தலைப்பை சரி செய்யும்போது தான் அது வரை க்வனிக்காதவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள் #நான் பார்க்கலை.பார்த்தவங்க சொன்னாங்க



===================


18 சிம்பு - ஹன்சிகா காதல் முறிவால் உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன் # பனை மரத்துல நெறி கட்னா தென்னை மரத்துல தேள் கடிச்சிருக்கானு பார்ப்பாங்ளோ




=====================


19 பொண்ணுங்க பொதுவா ஒரு குட்மார்னிங் சொன்னாக்கூடா வாலன்ட்ரியா பஸ்ல ஏறி வணக்கம் வைப்பவனே தமிழன்




=================


20 ஆபீஸ் ல ஒருத்தன் பக்கத்து பில்டிங் பிகர் கிட்டே டிக் டாக் டிக் டாக் னு சிக்னல் குடுக்கறான்.அது சிரிக்குது # என்ன அர்த்தமா இருக்கும்?



=====================

மதயானைக்கூட்டம் - விழாவில் பாலுமகேந்திரா உரை

’நல்ல படங்களை எடுக்க கோடிகள் தேவையில்லை’ - பாலுமகேந்திரா

‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், தயாரிப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நாயகன் கதிர், நாயகி ஓவியா, இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் ஏகாதேசி உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டனர். 

 மதயானைக்கூட்டம் இசை வெளியீட்டு விழா

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதாவது: 



“என்னுடைய குடும்பத்திலிருந்து இன்னுமொரு இளைஞன் இன்று இயக்குநராக பிரவேசிக்கிறான். என் படைப்பு வாழ்க்கையில் 1999, 2000 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமான காலம். நிறைவான, திருப்தியான காலகட்டம் என்றும் சொல்லலாம். ‘கதைநேரம்’ என்ற பெயரில் குறும்படங்களை இயக்கிய போது என் பக்கத்திலேயே இருந்து வெற்றிமாறன்,
விக்ரம் சுகுமாரன், சுரேஷ், கௌரி ஆகியோர் ஒத்துழைத்தார்கள். இவர்களது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் திருப்தியாக அதைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால், அடுத்த நாள் படப்பிடிப்பை, அன்று இரவு 1 மணிக்கு முடிவெடுப்பேன். அப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அப்போது என் அருகிலேயே இருந்த குழந்தைகளில் விக்ரம் சுகுமாரனும் ஒருவன். 



எங்கள் கிராமத்தில் ‘கல்யாணம் முடித்து, பிள்ளைகள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தால், தாய் தகப்பன் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்வார்கள்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஆனால் இவர்களோடு நானும் இன்று குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறேன். படைப்பு ரீதியான குழந்தை. அதற்கான வீரியம் இருப்பதால் நானும் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதை நிறுத்திவிட்டால் என் மூச்சு நின்றுவிடும் என்று எனக்குத் தெரியும். இவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனது தோட்டத்தில் விழுந்த விதைகள் நல்ல விதைகள். அதனால் கொஞ்சம் நீர் ஊற்றியதாலேயே நன்றாக விளைந்திருக்கிறது. இவர்களை நான் உருவாக்கவில்லை. அவர்களாகவே உருவானார்கள். 



சிலர் சினிமாவை வியாபார நோக்கில் பார்க்கிறார்கள். அவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. சினிமா வியாபார பண்டம் அல்ல. நல்ல படங்கள் பண்ணுவதற்கு சில லட்சங்களே போதும். கோடிகள் தேவையில்லை. அவர்கள் வெறும் வியாபாரிகள். அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம். முழுக்க முழுக்க வியாபார பண்டமாக நினைக்கும் கூட்டத்தோடு நாம் சேர வேண்டாம். நாம் நினைத்த சினிமாவை எடுப்பதுதான் சுதந்திரம். அப்படி ஒரு படத்தை சுகுமாரனும் செய்திருப்பார். 



ஜீ.வி.பிரகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஜாக்கிரதையா இரு. உன்னையும் வியாபாரியாக்கி விடப்போகிறார்கள். பாரதிராஜாவும் ‘பாண்டியநாடு’ படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாராட்டுகிறார்கள். உனக்கும்தான் சொல்கிறேன். நீ தொடர்ந்து இயக்குநராகவே இருக்க வேண்டும்’’ என்றார். 



தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பேசுகையில், “ சமீபத்தில் பல படங்கள் நல்ல படங்களாக வெளிவருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. சவாலாக எடுத்துக்கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இப்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் புதிய படங்களை எடுக்கிறார்கள் 



சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை , கிட்டத்தட்ட 66 கோடி போட்டு கார்பரேட் நிறுவனங்கள் எடுத்திருக்கிறார்கள். வெளியே திறமையோடு பல உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம். அதுபோன்ற படங்களை கார்ப்பரேட்டுகள் எடுக்க முன்வரக்கூடாது. அதனை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம். தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சங்கங்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்றார். 



இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ‘‘ஜீ.வி.பிரகாஷ் ஒரு அற்புதமான கலைஞன், அற்புதமான இளைஞன், ஒரு குழந்தை, பாசிடிவ் எண்ணம் கொண்டவன். வயதுக்கு மீறிய திறமை கொண்டவன். இந்தப்படத்தையும் சிறப்பாக எடுத்திருப்பான். புது முகங்களை அறிமுகப்படுத்துவேன் என்று வாக்கு கொடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் நிச்சயம் பிஸினஸ்மேன் இல்லை. அவனுடன் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே ஓவியா, பக்கத்து வீட்டு பெண்போல அழகாக நடித்திருக்கிறார்.



 பாலுவின் உதவியாளர்கள் ‘கிளாஸ்’ இயக்குநர்கள். அவரும் ‘கிளாஸ்’ இயக்குநர். என் சமகால இயக்குநர் பாலு. அவரது படங்களைப்பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன். 20 லைட்ஸ் வைத்து எடுக்க வேண்டிய சீனை 2 லைட்ஸ் வைத்து எடுப்பார். பாலு ஒரு செல்லுலாய்டு கவிஞன்’’ என்றார். 



Thursday, November 28, 2013

உங்க ஜாதகத்தை மட்டும் கொண்டுவந்தா எப்டி?

1. எங்க கட்சிக்காக நீங்க வாய்ஸ் தரனும்.பிரதி உபகாரமா என்ன எதிர்பார்க்கறீங்க ?



 பாரத ரத்னா விருது குடுத்தா போதும்



====================


2  டியர்.எதுக்கு ஜடையை இழுக்கறீங்க?,வம்பிழுக்கவா?



 சந்தடி சாக்குல சந்தைல வாங்குன் சவுரியை ஜடைன்னுட்டியே!கள்ளி!



======================


3  ஜட்ஜ் - கொள்ளையன் ஒரு சைக்கோன்னு எப்டிக்கண்டு பிடிச்சீங்க?



போலீஸ் - அவனே போன் பண்ணிச்சொன்னான் . நாம எப்போ  சொந்தமா   கண்டுபிடிச்சோம்?



==================


4  சார்.நீங்க படம் வாங்குனதுல செம லாசாமே?




 பேக்கு மாதிரி பேசாதீங்க.லாஸ் னா எந்த மடையனாவது அதே ப்ராடக்டை அதிக விலை கொடுத்து வாங்குவானா?



===================



5  டியர்.நீங்க என்னை செல்லம்னு கூப்பிடறதை விட செல்லக்குட்டினு கூப்ட்டா நான் சந்தோஷப்படுவேன்.



ம்.ஆனா உன் தங்கச்சி கோபப்படுவாளே?


=======================


6  என் படம் ஓடுமா? ஓடாதா? ஜாதகத்தைப்பார்த்து சொல்லுங்க.




உங்க ஜாதகத்தை மட்டும் கொண்டுவந்தா எப்டி? உங்க கூட நடிக்கிறாரே அவருதையும் கொண்டாங்க



=====================



7  எதுக்காக ஆபீஸ்க்கு திவ்யதர்சினியை கூட்டிட்டு வந்திருக்கே ?



,சார்.நீங்க தானே BRING DD னு SMS பண்ணீங்க?


====================


8  ஜட்ஜ் - மேரேஜ் ஆன ஆளை கரெக்ட் பண்ண உளவியல் ரீதியா ஏதாவது காரணம் இருக்கா?



 நடிகை.- களவியல் ரீதியா 50% .கலவியல் ரீதியா 50% யுவர் ஆனர்



=================


9  டாக்டர்!hair straightening பண்ணா தலைய சாச்சு தான் வச்சுக்கணுமா?



தூங்கும்போது மட்டும் சாய்ச்சா போதும் மேடம்.நீங்க என்ன சாய் சித்ராவா?



=================


10. தர்மத்தின் வழக்கை சூது கவ்வியது.மீண்டும் அதர்மம் வென்றது # கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை



===============


11. தீர்ப்பு ,விடுதலை ,அநியாயம் ,அநீதின்னு இங்கே இத்தனை பிரச்சனை ஓடிட்டிருக்கு.டேமேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே" இன்னைக்கு லெமன் சாதம் தானே"


------------------


12.  நடிகைகள் எப்பவும் மேரேஜ் ஆன ஆளுங்களையே கண் வைப்பதில் ஏதாவது உளவியல் ரீதியா காரணம் இருக்குமோ?


===============


13.  சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டது அன்று.அவர் வழக்கு (ம்) கொலை செய்யப்பட்டது இன்று



===============


14. ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.



================

 15 ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !



 ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?



============

தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் ராஜினாமா; போலீஸ் முன்பு தேஜ்பால் இன்று ஆஜராகிறார்

புதுடில்லி: பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தன்மீதான நம்பிக்கையில் சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதால் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட மற்றும் அரசு தரப்பில் நடந்த ஊழல்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமது புலனாய்வு நிருபர்கள் மூலம் அம்பலப்படுத்தவதில் தெஹல்காவுக்கு என தனி இடம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பத்திரிகை நிர்வாக ஆசிரியர் தருண்தேஜ்பால் மீது சக பெண் நிருபர் ஒருவர் செக்ஸ் புகார் தெரிவித்திருந்தார். இதனை கோவா போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தவறுக்கு வருந்துவதாகவும், தேஜ்பால் தமது ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார்.

தேஜ்பால் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீசார் நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று மதியம் 3 மணிக்குள் அந்த கெடு முடிகிறது.

இதனால் தேஜ்பால் இன்று ஆஜராவார். விசாரணைக்கு பின்னர் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவர்.

சக ஊழியர்களுக்கு இமெயில் : இதற்கிடையில் தேஜ்பால் மீதான புகாரை மூடி மறைக்க தெஹல்காவின் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சவுத்ரி மீது சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இதனை நிராகரித்த சவுத்ரி இன்று ராஜினாமா செய்துள்ளார். இவர் இன்று நிர்வாக சக ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெஹல்கா ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்பட்ள்ள துயரமான நேரம் இது. தமது சக பெண் ஊழியர் அளித்த புகார் அடிப்படையில் தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன். கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இருப்பினும் என் மீதான நேர்மையில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நான் தேஜ்பாலை காப்பாற்ற முயற்சிப்பதாக சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை எனது நேர்மையில் சந்தேகமும், பத்திரிகையின் மீது களங்கம் ஏற்பட நான் விரும்பவில்லை. இதனால் எனது மேனேஜிங் எடிட்டர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன். - ஷோமா . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேஜ்பால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்: தேஜ்பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டில்லியில் உள்ள அவரது வீடடின முன் கூடினர். இங்கு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து தேஜ்பால் வீட்டு முன்பு பரபரப்பு எற்பட்டது.

நன்றி : தினமலர்

Wednesday, November 27, 2013

முன்னணி கில்மா ஜோடி சிம்பு - நயன்தாரா மீண்டும் இணைந்ததன் பின்னணி என்ன?

இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சிம்புகோலிவுட்டின் இப்போதைய பரபரப்பான இயக்குநர் பாண்டிராஜ்தான். தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், இப்போது மேலும் பரபரப்பாக காரணம் சிம்பு - நயன்தாரா. நீண்ட காலமாக பிரிந்திருந்த சிம்புவும் நயன்தாராவும் தன் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. “இதை எப்படி சாதித்தார்” என்று எல்லோருக்கும் வியப்பு. அந்த வியப்பையே முதல் கேள்வியாக்கி அவரைச் சந்தித்தோம். 



சிம்பு, நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்கள்?


 
இதைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். சிம்பு படத்தை நான் இயக்குவதாக ஒப்புக்கொண்ட அடுத்த நாளிலிருந்தே நாயகியை தேடிக் கொண்டிருந்தோம். இந்தப் படம் சிட்டி, ஐ.டி துறை சார்ந்த களம். படக்குழுவினரோடு பேசிக்கொண்டிருந்தபோது இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சு எழுந்தது. அவரிடம் பேசியபோது முதலில் கொஞ்சம் யோசித்தார். பிறகு கதை, சூழல் பிடித்திருக்கவே சம்மதம் தெரிவித்தார். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதில் சிம்பு, சூரி சேர்ந்து கலக்கியிருக்கும் காமெடி காட்சிகளை எடுத்துள்ளோம். டிசம்பர் மாதத்தில் நயன் தாரா, சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 

சிம்பு, சூரி புதுக்கூட்டணி எப்படி இருக்கிறது? 

 
முழுக்க நகர வாழ்க்கையைப் பேசும் படம். நான் பார்த்த, ரசித்த விஷயங்களை நிறைய சேர்த்திருக்கேன். சிம்பு, சூரி, நான் உட்பட எல்லோருக்குக்குமே வேறொரு இமேஜை இந்தப் படம் கொடுக்கும். கேமராமேன் பாலசுப்ரமணியம் கலர்ஃபுல்லாக எடுத்திருக் கிறார். படப்பிடிப்பின்போது சூரி, ‘‘ இவ்வளவு காஸ்ட்லியான சர்ட், பேண்டா? பொதுவா எனக்கு ஒரு கைலியும், டி-சர்ட்டும் கொடுத்து ஏமாத்திடுவாங்களே. இப்போதான் புரமோஷன் கிடைச்சிருக்கு!’’ என்று சிரித் தார். அந்த அளவுக்கு அவரை மாற்றிக் காட்டியிருக்கிறோம். எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் படமாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. 


சாதாரண மனிதர்களை, இயல்பான இடங்களை அழகா படமாக்குறீங்களே? 


 
படம் பார்க்குறவங்க அவங்களோட வாழ்க்கையில், கதை ஒன்றி வருகிற மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப் பேன். இப்படியும் கூட நடக்குமா என்று கேள்வியையோ, சந்தேகத்தையோ எழுப்பக் கூடாது. பார்த்த, கேள்விப்பட்ட படித்த சம்பவங்கள் - இதுதான் என் கதை. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு வார்த்தை விடும்போது அதை நீங்கள் ரசித்தால், உடனே குறிப்பெடுத்துக்கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் அது கதையில் ஒட்டிக்கொள்ளும். 
 


ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராகவோ நடிகராகவோ பரிணமிக்கும்போது கிரியேட்டி விட்டி பாதிக்கப்படும் என்கிறார்களே? 

 
ஒரு விதத்தில் இது உண்மைதான். இயக்குநரே, தயாரிப்பாளராக இருப்பதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. போராட்டம், பணத்தின் மதிப்பு எல்லாவற்றி லும் கூடுதல் கவனம் செலுத்த முடி கிறது. அதேபோல, எடுத்த ஒரு சீன் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிக சிரமத்தைக் கொண்டு படம்பிடிக்கலாம். இதே, தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளவாவது ஒரு படத்தில் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 



மீண்டும் ‘பசங்க’ மாதிரியான படம் எடுப்பீர்களா? 


 
கண்டிப்பாக எடுப்பேன். கிராமத்து குழந்தைகளை மையமாக வைத்து கதை சொன்னது போல, முழுக்க நகரத்து குழந்தைகளை வைத்து படம் பண்ண ஆசை இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோ படம், அடுத்து ஒரு பசங்க படம் என்று மாறி மாறி பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை. பார்க்கலாம். 



மோசடி, பிரச்னை என்று உங்களை சுற்றி அவ்வப்போது ஏதாவது சுழல்கிறதே? 


 
சிலருக்கு உழைக்க கஷ்டமா இருக்கு. ஓடும் குதிரையில் பயணிக்க விருப்பப்படுகிறார்கள். இங்கே பிச்சைக் காரர்கள் குறைவு. காஸ்ட்லி பிச்சைக்காரர்கள் அதிகம். அவர்களால் உண்டாகும் இடை யூறுகள் இவை. அதை நான் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

 
குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? 


 
சில நாட்களுக்கு முன் சினிமா விழாவில் கலந்துகொண்டு வெளிநாடு சென்று திரும்பிய போது, என் மனைவி வசந்திக்கு ஒரு தங்க நகை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். ‘இதெல்லாம் எதற்கு, என்னோடும், குழந்தைகளோடும் 3 மணி நேரம் இருங்க. அதுதான் சர்ப்ரைஸ்!’ என்றார். அப்போது எனக்கு எதுவுமே பேசத் தோணல. ‘கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. எனக்கும் ஒரு என்ட் கார்டு வரும். சினிமாவில் நானும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவேன். அப்போது நீயே வேலைக்கு போ என்றாலும், என்னால் போக முடியாது. அப்போது உங்களுடன் செலவழிக்கிறேன்’ என்று சொல்லி ஆறுதல் படுத்தினேன். இப்போது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நான் குற்றவாளியாகவே இருக்கிறேன். 



இந்த பயணம் எப்படி இருக்கிறது? 


 
இப்போதும் அடிக்கடி ஊருக்கு போய் வருகிறேன். எனக்குப் பிடித்ததே அதுதான். கையெழுத்து போடத்தெரியாத அப்பா, கைரேகை வைக்கத்தெரியாத அம்மா, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்திலிருந்து வந்து அடைந்திருக்கும் இந்த இடத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தானே ஆகணும். என்னமோ தெரியலை, உதவி இயக்குநராக இருந்தபோது வாங்கிய 3000 சம்பளம் கொடுத்த திருப்தி, இப்போது லட்சங்களைப் பார்க்கும்போது இல்லை. அதேபோல, இப்போ வரைக்கும் ஒரு இயக்குநரா பொழுதுபோக்குக்கான படங்களைத்தான் இயக்கியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் மனதுக்குப் பிடித்த படமும் கொடுக்கவில்லை. அதை செய்யும் வரைக்கும் இந்தப் பயணம் தொடரும். 

 a



நன்றி - த தமிழ் ஹிந்து

சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை




புதுச்சேரி : சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி வியேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கு விபரம் :

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலைத்தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் முறையாக தீர்ப்பு கிடைக்காது என கருதப்பட்டதால் இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில், சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு சம்பந்தமாக சேர்க்கப்பட்ட 187 சாட்சிகளிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் "பல்டி' அடித்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன்(40) என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது வன்முறைக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை, நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். தொடர்ந்து, கிருஷ்ணராஜா, ராமசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். நான்காவதாக, நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வந்தார். கோர்ட் புறக்கணிப்பு, சாட்சிகள் ஆஜாராகாமல் இழுத்தடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்த இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நவம்பர் 27ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி முருகன் தெரிவித்திருந்தார்.

கோர்ட் தீர்ப்பு :

வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 23 பேரில் தில் பாண்டியன் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் ஆகிய இரண்டு பேர் தவிர மற்ற 21 பேரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்ரூவராக மாறிய ரவி சுப்ரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வழக்கில் போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததாலும், அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் வழங்கப்படாததால் சந்தேகத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அளித்து குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு திருப்திதரவில்லை :

கொலையான சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறுகையில், 'இந்த தீர்ப்பு திருப்திதரவில்லை. என் தந்தை தானாக கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பலாம். ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. குடும்பத்தினருடன் பேசி, அது குறித்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.





மேல்முறையீடு :

சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்திரப்பதாக அரசு தரப்பு வழக்கிறஞர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசுடன் ஆலோசனை செய்த பிறகு மேல்முறையீடு செய்யப்படும் எனவும், சங்கரராமன் குடும்பத்தாரின் பிறழ் சாட்சியமே குற்றவாளிகள் 23 பேரின் விடுதலைக்கு காரணம் எனவும் தேவதாஸ் கூறி உள்ளார்.

நன்றி : தினமலர்