Sunday, October 27, 2013

ப்ரியங்கா சோப்ரா தான் அடுத்த பாரதபிரதமரா? என்ன கொடுமை நமீதா இது ?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. இந்திரா, ராஜீவ் போன்று நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி உருக்கம் # இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு,நீங்க இன்னும் பிரதமரே ஆகலை



=====================


2  வழக்கு எண் மனீஷா பல படங்களில் நடித்து வளர்ந்து கொண்டிருக்கிறார் -செய்தி # பல படங்கள் ல நடிக்கிறார் என்பது ஓக்கே , ஆனா அடுத்த சேதி தப்பு



====================

3 நான் பிரதமரானால் ஊழலை அடியோடு ஒழிப்பேன் - பிரியங்கா சோப்ரா!! # ப்ரியங்கா காந்தியே கம்முன்னு கிடக்கு , சோப்ரா ஏன் துள்ளிக்கிட்டு இருக்கு?


================

4 ஓட்டுக்களை குறி வைத்து எப்போதும் நான் பேசியது கிடையாது - ராகுல் # இப்போ நீங்க பேசுனதே ஓட்டுக்கு குறி வெச்சுதான்



====================


5 எனக்கும் சிம்புவுக்கும் பர்சனலா எந்தப் பிரச்சனையும் இல்லை: தனுஷ் # இருக்குன்னா இல்லை.இல்லைன்னா இருக்கு



=====================


வலியும் ஒருநாள் வலிமையாக...
இனிய வணக்கங்கள் .
வலியும் ஒருநாள் வலிமையாக...
இனிய வணக்கங்கள் .


6 கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை! வருகிறது புதிய சட்டம் # உலகம் சீக்கிரம் அழிஞ்சிடும்.கன்பர்ம்



=======================


7 3 ம் வகுப்பிலேயே ஒருவரைக் காதலித்தேன் - அமலாபால் # நல்லா எண்ணிப்பார்த்துட்டீங்களா?  ஒரு ஆள் தானா?



======================


8 BJP உடன் கூட்டணி வைக்க மு க முயற்சிக்கிறார்.-அதிமுக அமைச்சர் # சூரியனைப்பார்த்து தாமரை மலர்வது இயற்கை தானேனு தலைவர் அடிச்சுவிடுவாரே?



=====================

9 அஜித் - கவுதம் மேனன் இணைகிறார்கள் - உறுதி செய்யப்பட்ட செய்தி # டைட்டில் " நீ தானே என்னை காக்க வந்த வசந்தம் ?



=====================


10 நான் PM ஆனால் நாட்டிலிருந்து, ஊழலை அடியோடு ஒழிப்பேன்-நடிகை பிரியங்கா சோப்ரா. # ப்ரியங்கா,சோ,ப்ரா னு பேர்லயே ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கே?



=======================


My click: The Floating Barge, Karaweik Hall, Floating in Kandawgyi (Royal) Lake, Yangon, Burma



11 தேர்தலின்போது பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; சிந்தித்து வாக்களியுங்கள் -வைகோ ு # தமிழனோட விசுவாசத்தைப்பத்தி தலைவருக்கு தெரில போல



=====================


12  சட்டசபையில் வம்பு இழுத்தால் கண்டுக்காதீங்க...:எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை # எல்லாம் வயசுப்பொண்ணுங்க.வம்பு இழுத்துட்டாலும்



======================


13 நான் கேஸ்களில் சிக்கிய சமயங்களில் ஜெயலலிதாவை என் "ரோல் மாடலாக" நினைத்துகொண்டேன் -் புவனேஸ்வரி # கேஸ்க்கு கேஸ் வித்தியாசம் இருக்கும்மா.



=========================


14  அரசு பேருந்துகளில் வரையபட்டுள்ள இரட்டை இலை சின்னம் தார் பூசி அழிக்கப்டும் - காங்கிரஸ் தொழிற்சங்கம் அறிவிப்பு # தார்று மாறான பதிலடி



======================


15 யார்தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: நெல்லை கலெக்டர் உறுதி # சார்.அந்த FAX ஸை ஆன் பண்ணுங்க.ஏதாவது ட்ரான்ஸ்பர் ஆர்டர் ?



===========================


Photo: Our church beauties in Polo forest on Sep 09,2013



16 ஜெ முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி. ஏற்பு # நல்ல வேளை.கால் ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கலை



==========================



17 திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண் ஊழியர்கள் 2 பேர். கைது # திருப்பதி சாமிக்கே மொட்டை அடிக்க பிளான் பண்ணி இருக்காங்க




========================


18 வெங்காயம் விலை குறைய 3 வாரங்கள் ஆகும்:- சரத்பவார் # அதுக்குப்பின் விலை குறைஞ்சிடுமா? வெங்காய வரத்தே குறைஞ்சிடுமா?



==========================


19 அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை # டென்ட் கொட்டாய் மாதிரி வாரா வாரம் மாத்திட்டே இருக்காரே?



=========================


20 எல்லையில் அமைதி வேண்டும்-சீனாவில் மன்மோகன் பேச்சு# மயான அமைதி நிலவும்.டோன்ட் ஒர்ரி



===========================



Saturday, October 26, 2013

வசந்தசேனை - சினிமா விமர்சனம் 32 +

Photo

 வழக்கமா  கில்மாப்படத்தை எல்லாரும் 18 + அப்டினுதானே டைப்புவாங்க , இவன் மட்டும் ஏன் அப்பப்ப 36 +  , 34 + , 42 + அப்டினு  டைப்பறான்னு பலருக்கு டவுட் , இதுல 4 பேரு ஐ எஸ் டி போட்டு டவுட் கேட்கறாங்க  , மக்களே அது  ஒரு குறியீடு . பெரிய பெரிய உலகப்பட டைரக்டருங்க அவங்களா மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சுக்கிட்டு படத்துல ஏதாவது ஒரு குறியீடு வெச்சுட்டு எவனுக்கும் புரியலன்னு சொல்றது இல்லையா? அது மாதிரி சினிமா விமர்சனத்துக்கும்  அது குறியீடு . அது பற்றித்தெளிவா  புரியனும்னா அந்தந்தப்பட ஹீரோயின் ஸ்டில் பார்த்தா புரிஞ்சிடும் , ஹி ஹி

தங்க மீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் மாதிரி படங்களுக்கு ஆனந்த விகடன் ல 60 மார்க் போட்டு விமர்சனம் எழுதுனாலும் தமிழன் வரமாட்டான் தியேட்டர் பக்கமே , ஆனா 4 நல்ல ஸ்டில் போட்டு ஒரு கில்மாப்படம் போட்டா ஆட்டோமெடிக்கா வந்து உக்காந்துக்குவான் . கடலூர்  கமலம் தியேட்டர்ல ஏகப்பட்ட கூட்டம். டிக்கெட்டே கிடைக்காம  எம் எல் ஏ ரெக்கமெண்ட்டேஷன்ல தான் படமே பார்த்தேன் .

ஓப்பனிங்க் ல ஒரு கொலை நடக்குது . போலீஸ் வந்து பாடியைப்பார்க்கறாங்க  , டெட் பாடியை.  கொலை செய்யப்பட்டது ஒரு லேடி . அவ புருஷன்  ஃபாரீன்ல  இருக்கான் . அவனுக்கு தகவல் சொல்லி வரச்சொல்லி விசாரனையை ஆரம்பிக்கறாங்க

அக்கம் பக்கம் அந்த லேடிக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?  அந்த லேடியோட கேரக்டர் எப்படி?னு வழக்கம் போல் விசாரனை நடக்குது . எல்லாருமே அந்த  லேடியை ஆஹா ஓஹோஅப்டினு புகழ்றாங்க . 


சந்தேகத்துக்கு இடமானவங்க லிஸ்ட் 


1. நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் ஸ்விம்மிங்க் ல கோல்டு மெடலிஸ்ட்  நீச்சல் குளத்துல 4 ஃபிகருங்களுக்கு நீச்சல் கத்துக்குடுத்துட்டு இருக்காரு . அடேங்கப்பா , இப்படி ஒரு கிளு கிளுப்பானவேலை எல்லாம் இருக்கா? இது தெரிஞ்சிருந்தா நாமும் அந்த வேலைக்குப்போய் இருக்கலாமேன்னு அவனவன் ஏங்கறான் ( அவனவன் = நான் தான் ) 

ஹீரோயின் நான் அவன் இல்லை ஜீவன் மாதிரி  கேரக்டர் .அவனோட ஜிம் பாடியைப்பார்த்துமயங்கி அவனை கரெக்ட் பண்ணிடறா . மேட்டர் முடிஞ்சுது . குறிச்சுக்குங்க , சீன் நெம்பர் 1

 அடிக்கடி மாங்கா , நெல்லிக்கா சாப்ட்டா பல் கூசும்  . அந்த மாதிரி ஒரே ஃபிகர் கூட 10 நாள் இருந்தா ஆம்பளைக்கு போர் அடிச்சுடும் . அவன் விலகிடறான். 

 இவன் கொலையாளியா? 


2. ஜாக்கிங்க் போகும்போது  ஒரு லவ் ஜோடியை அந்த உத்தம பத்தினி அதாங்க நாயகி பார்த்துடறா. அவனை அவனோட காதலி கிட்டே இருந்து பிரிச்சு  டேஸ்ட் பார்த்துடறா . காதலி வந்து சண்டை போட்டு கூட்டிட்டு போயிடறா .. சீன் நெம்பர் 2 .அந்த காதலன் கொலையாளியா?


3  ஒரு நைட் கிளப் . அந்த கிளப்போட மேனேஜர் . இந்த கில்மா லேடி கண் ல பட்டுடறான். அவனை முடிச்சுக்கட்டிட்டு  பாப்பா குளிக்குது . ஒவ்வொரு டைம் பாவம் பண்ணி முடிச்சதும் நாயகிங்க குளிச்சிடுவாங்க.  தொழில் ல ரொம்ப சுத்தம் . கிளப்போட ஓனர் மேனேஜர் கிட்டே “ எனக்கும் ஒரு வாய்ப்பு குடுன்னு கேட்க்றான்.

 மேனேஜர் அந்த பத்தினி கிட்டே ஆஃபர் சொல்ல அவளுக்கு அந்த பிளான் பிடிக்கலை . நோ   சொல்லிடறா. உடனே டேமேஜர் தன் கிட்டே உள்ள செல் ஃபோன் க்ளிப்பிங்க்ஸ் ல அவ சீன் மேட்டர் காட்டி மிரட்றான் . நாயகி மசியலை . 2 பேரையும் அடிச்சு பட்டாசைக்கிளப்பிடறா. 

 இந்த 2 பேரும் கொன்னாங்களா? 



4 நாயகிக்கு ஒரு கார் டிரைவர் . புருஷன் ஃபாரீன் போனதும்  தன் பழைய கிளாஸ் மேட்டை  வரவெச்சு அவன் கூட டிரைவர் எதிர்லயே   உரசிட்டு , கில்மா நியாயம் பேசிட்டு இருக்கா . டிரைவர் முறைப்பது அந்த கிளாஸ் மேட்டுக்கு பிடிக்கலை .


இந்த 2 பேரும் கொலையாளியா? 


 தீவிர விசாரனைல  கொலையாளி அகப்படறான் . கொலையாளி யாரு? இப்போ நாட்டுக்கு அது தான் முக்கியமா? மத்த விஷயம் பற்றிப்பேசுவோம் 


ஹீரோயின்  வழக்கமா வர்ற  டொக்கு ஃபிகரோ , 30 வயசு ஆண்ட்டியோ இல்லை , கிளாமரான  , அழகான 55 மார்க் ஃபிகர் . அது போக   இன்னொரு லேடி இருக்கு , அதுக்கு சீன் இல்லை , அதனால அந்த பொண்ணு கணக்குல வராது 


படம் போர் அடிக்காம போகுது . அது எப்படி போர் அடிக்கும் ? 10 நிமிஷத்துக்கு ஒரு சீன் . படம் மொத்தம்  90  நிமிஷம் ஓடுது . என்ன ஒரே குறைன்னா ஒரே பொண்ணுதுதான் திரும்ப திரும்ப காட்டறாங்க



திரைக்கதையில்  சில ஆலோசனைகள் , கோக்குமாக்கான கேள்விகள்


1 பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல நாயகன் ஒரு தெள்ளவேரியா காட்டிட்டா அவன் பல பொண்ணுங்களோட சுத்துவான் , இதுதான் சாக்குன்னு பல ஃபிகர்களை காட்டலாம், காட்ட வைக்கலாம் . நாயகியை   இப்படி காட்டிட்டா ஆண்களைத்தான் வெரைட்டியா காட்ட முடியும் , வர்ற ஆடியண்ஸ் எல்லாம் ஆண்கள் . அதை மைண்ட் ல வெச்சு திரைக்கதை  எழுதனும் 



2  கிளப்  ஓனர் மேனேஜர் கிட்டே  ஃபிகரை கை மாத்தி விடுன்னு சொல்லும்போது  நாயகி ஏன் மறுக்கறா? என்பதற்கு காரணம் சொல்லலை  அவ  ஒண்னும் யோக்கியம்  கிடையாது . பத்தோட 11 அத்தோட இதுவும் 1னு போக வேண்டியதுதானே? 


3  புருஷன்  ஃபாரீன் ல இருக்கான் . கார் டிரைவர் விசுவாசமானவன்  டூ புருஷன் , எந்த   பொண்ணாவது டிரைவர் முன்னால் அப்டி அடுத்தவன் கூட நெருக்கமா நடந்து மாட்டிக்குமா?  இந்தக்காலப்பொண்ணுங்க சாரி எந்தக்காலத்துலயும் பொண்ணுங்க  ரொம்ப உஷாரா  இருப்பாங்களே ? 


4 டிரைவர் பொய்க்குற்றச்சாட்டில் 2 வருஷம் ஜெயில்ல  இருக்கும்போது   புருஷன் காரன் என்ன ஏதுன்னு விசாரிக்கவே இல்லையே? ஏன் ? டிரைவரோட சம்சாரம் ஓனர் கிட்டே நடந்த மேட்டரை ஏன் சொல்லலை?


சி பி  கமெண்ட் - படம் பார்க்கலாம் . ரொம்ப எதிர்பார்ப்போட போக வேண்டாம். கூகுள்  ல தேடினேன்  படத்தோட இமேஜ் கிடைக்கவே இல்லை. இதனால என் இமேஜ் க்கு பங்கம் வந்துடுமோன்னு பயமா இருக்கு , அதனால நம்ம சங்கத்து ஆளுங்க யாராவது பட லிங்க் ஸ்டில்ஸ் கிடைச்சா உதவுங்க, அப்டேட்டிடலாம் , யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்


டிஸ்கி - டைரக்டர் பேரு  ராமன் . தயாரிப்பு நிறுவனம் பேரு சீன் கிரியேஷன்  , ஷாட்  மூவீஸ் . எப்படி பேர் பொருத்தம் ?

ஈரோட்டில் மூடு விழா காணும் திரையரங்குகள்

சம்பூர்ணா, சென்ட்ரல், மாணிக்கம், ரவி, மகாராஜா, ராஜாராம், லட்சுமி, பாரதி...இவையெல்லாம் ஈரோட்டில் லட்சக்கணக்கான ரசிகர்களை பல்லாண்டுகளாக மகிழ்வித்த திரையரங்குகள். இப்போது, அவை வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன.



அனைத்துத் தரப்பினரையுமே மகிழ்வித்துக் கொண்டிருந்த இந்தக் கலைக்கூடங்கள், தற்போது பராமரிப்புச் செலவுகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன.



படம் வெளியாகும்போதே ரசிகர்களுக்குக் கிடைத்து விடும் திருட்டு வி.சி.டி-க்கள், புதுப்படங்களைத் திரையிடும் உள்ளூர் சேனல்கள் உள்ளிட்ட காரணங்களால் திரையரங்குகளின் பக்கமே ரசிகர்கள் ஒதுங்குவதில்லை என்கிறார்கள்.



இதுகுறித்து ஈரோடு அபிராமி தியேட்டர் மேலாளர் பாலு கூறுகையில், ஈரோட்டில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இயங்கி வந்தன. மின் கட்டணம், டீசல், தொழிலாளர்களின் சம்பளம், பராமரிப்புச் செலவு என அனைத்துமே உயர்ந்து விட்டன. ஆனால், இதற்கேற்ப தியேட்டர் உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை. படம் வெளியான சில தினங்களிலேயே சி.டி.க்களும் வெளியாகிவிடுவதால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. சில உள்ளூர் சேனல்களில் புதிய படங்களைத் திரையிடுவதும் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகும். இவ்வாறு பல பிரச்னைகளுக்கு மத்தியில் திரையரங்கை நடத்துவதைக் காட்டிலும், அதை மூடிவிட்டு, வணிக வளாகமாகவோ, திருமண மண்டபமாகவோ மாற்ற உரிமையாளர்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.



தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போதும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி யாகும்போதுதான் திரையரங்கு கள் கோலகலமாகக் காட்சியளி க்கின்றன. மற்ற நாட்களில், காட்சியை ரத்து செய்து விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு, விரல் விட்டு எண்ணக் கூடிய ரசிகர்களே திரையரங்குகளில் காணப்படுகின்றனர்.



அதேநேரத்தில், திரையரங்கு களின் மீதும் ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்து கின்றனர். தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூல், அபரிமிதமான விலையில் தின்பண்டங்கள் விற்பனை, பாதுகாப்பில்லாத வாகன நிறுத்தங்களில் கட்டணக் கொள்ளை, தரமில்லாத இருக்கை கள், குளிர்சாதன வசதிக்கான கட்டணத்தை வசூலித்து விட்டு, அவற்றை இயக்காமல் ஏமாற்றுதல் என சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர். இந்தக் காரணங்களால்தான் திரையரங்கு களுக்குச் செல்லாமல், திருட்டு சி.டி. மூலம் படம் பார்க்கிறோம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து, ஈரோட்டைச் சேர்ந்த திரைப்பட ரசிகர் ரஜேந்திரன் கூறுகையில், திரையரங்குகள் நன்றாக இயங்கியபோது, படங்களை 100 நாள் ஓட்டி அதிக லாபம் சம்பாதித்த உரிமையாளர்கள், திரையரங்குகளின் பராமரிப்பில் கவனம் செலுத்தவில்லை. ரசிகர்களை தங்கள் திரையரங்கிற்கு மீண்டும் மீண்டும் வரவைக்கும் அளவுக்கு நவீனத் தொழில்நுட்ப வசதிகள், இருக்கைகள், சுகாதார மேம்பாடு என எந்த வசதியையும் செய்து தருவதில்லை. பல திரையரங்குகளில் குடிப்பதற்கு தண்ணீர் கூட வைப்பதில்லை. ஆனால் டிக்கெட் கட்டணத்தையும், தின்பண்டங்களின் விலையை யும் கடுமையாக ஏற்றி விடுகின்றனர். இந்த காரணங்களால்தான் ரசிகர்கள் திருட்டு .சி.டி.-க்களை நாடுகின்றனர் என்றார்.



இதுமட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் திரையரங்குகள் அமைந்துள்ள இடத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், திரையரங்கை இடித்து விட்டு, வணிக வளாகமோ, திருமண மண்டபமோ கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என்பதும் திரையரங்குகள் மூடப்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன.



இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்புத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து இடங்களிலுமே மக்கள் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள். குளிர்சாதன வசதி, டி.டி.எஸ். தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் இல்லாத திரையரங்குகளில் படம் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. எனவே, வசதிகளை மேம்படுத்தும் திரையரங்குகள் மட்டுமே தொடர்ந்து இயங்குகின்றன.
 பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட ஈரோடு லட்சுமி திரையரங்கு.பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட ஈரோடு லட்சுமி திரையரங்கு.


சிறிய நகரங்களில் திரையரங்குகள் மூடப்படுவது தொடர்கிறது. அதேசமயம், பெருநகரங்களில் கட்டப்படும் வணிக வளாகங்களில், கட்டாயமாக திரையரங்குகள் இடம் பெறுகின்றன. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களை அதிக விலைக்கு வாங்கித் திரையிட்டால்தான், திரையரங்குகளை நடத்த முடியும் என்ற நிலை மாறிவிட்டது.



சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க ப்பட்ட, நல்ல படங்களை குறைந்த விலைக்கு வாங்கித் திரையிட்டாலும், அதிக லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, திரையரங்குகள் மூடப்படுவதற்கு ரசிகர்களைக் குறைசொல்வதை விடுத்து, வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றார்.


thanx - the hindu

சித்திரையில் நிலாச்சோறு - சினிமா விமர்சனம் (தினமலர் விமர்சனம் )

 
தினமலர் விமர்சனம்

மனநிலை சரியில்லாத தாய்க்கு பிறக்கும் அழகு குழந்தை. அந்த குட்டி தேவதையை அரவணைக்கும் பணக்கார இளைஞன். அவனுக்கு துணையாகவும்,அந்த தேவதைக்கு தாயாகவும் மாறத்துடிக்கும் இளம்பெண்... ‘இவர்கள் அனைவரையும் இசைஞானி நிச்சயம் கரைசேர்த்து விடுவார்’ என்ற நம்பிக்கையில் ‘சித்திரையில் நிலாச்சோறு’ படைத்திருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன். நம்பிக்கை ஓரளவு வீண்போகவில்லை!


‘கதைக்காகவும்‌, காட்சி அமைப்புகளுக்காகவும், இயக்குனர் துளிகூட சிரமப்படவில்லை’ என்பது, படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பட்டமாக தெரிகிறது. தெளிவில்லா ஒளிப்பதிவு, கஞ்சா கருப்பின் ‘மொக்கை’ காமெடி, சிரிப்பை வரவழைக்கும் அரசியல்வாதி வில்லன், வீணடிக்கப்பட்டிருக்கும் பூமிகா, ராதாரவி என, நிலாச்சோறு கசக்க எண்ணற்ற காரணங்கள். என்றாலும்... கசப்பிற்கு ஊடே, அவ்வப்போது நிலாச்சோறு ருசிக்கிறது. காரணம்... இளையராஜா மற்றும் ஓவியா (பேபி சாரா).

Sara
‘‘எனக்கு எல்லாமே அப்பாதான்னு இருக்கறப்போ, நான் ஏன் சாமியை கும்பிடணும்?’’ என ஆரம்பக்காட்சியில் தந்தையிடம் கேட்கும் நொடியில்... பூவில் இறங்கும் பனித்துளியாய் நம் மனதிற்குள் இறங்குகிறாள் ஓவியா! அதற்குப்பின்... குட்டி நாயோடு கவுரி (வசுந்தரா) கொஞ்சி குலாவுவதைப் பார்த்து, ‘‘அது ரெண்டுல எது நாய்?’’ என மழலை ததும்ப கேட்டு நம் மனம் மயக்குகிறாள்.
 கவுரியை கேலி செய்து தண்டனை பெறும் நேரத்தில்... கவுரியிடமிருந்து எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தால், தாய்ப்பாசம் உணர்ந்து உருகும் அந்த அழகில்... அழகு ஓவியமாய்... சொக்க வைக்கிறாள்! ‘‘எங்க அம்மா யாருன்னு ஊரே கேட்குது! ஆனா ஒரு நாளும் நான் உன்கிட்டே கேட்டதில்லையேப்பா!’’ என தந்தையிடம் மருகும்போது... தன் தந்தையோடு சேர்த்து, நம் கண்களையும் நனைக்கிறாள்!

‘‘கல்லாலே செஞ்சு வைச்ச சாமியல்ல நீ...’’ பாடல், படத்தில் இருமுறை ஒலிக்கிறது. ஆனாலும், மனம் திருப்தியடைய மறுக்கிறது. இசைஞானி... வழக்கம்போல் ஜெயித்திருக்கிறார்!

ரசிகன் குரல்: ஆர்.சுந்தர்ராஜன் படம்னு நம்பி வந்தேன். ச்சே... ஏமாத்திட்டாரே!
  • நடிகர் : அர்ஜூன் (புதுமுகம்)
  • நடிகை : வசுந்த்ரா
  • இயக்குனர் :ஆர்.சுந்தர்ராஜன்
thanx - dinamalar

காலங்காத்தாலயே வா என் கிறாள். இது சலிப்பு வாக்கியமா? கட்டளை வாக்கியமா?

கடலூர் சில்வர் பீச் விறகுசுமையாளி
1. ராகுல் - கடவுளே! நான் பிரதமர் ஆகிட்டா என்னை கொலை பண்ணிடுவாங்களா?


கடவுள் - இரண்டும் இந்த ஜென்மத்துல நடக்காது குழந்தே !பயப்படாதே!


======================


2  மேடம்.திமுக வின் மினி பஸ் திட்டம் வேஸ்ட் னு நீங்க தானே சொன்னீங்க?



ஜெ - அது போன மாசம்.இது இந்த மாசம்


================


3 ஏ ஆர் ஆர் - சார்.தீம் மியூசிக் எப்படி?



 அஜித் - நான் நடக்கற மாதிரி சீனுக்கு போடுங்கன்னா ஓடற மாதிரி இவ்ளவ் FAST டா போட்டு ட்டீங்ளே?



======================


4 கவுதம் - இங்க்லீஷ் படம் மாதிரியே எடுக்கறோம் .



அஜித் - வசனத்தை மட்டும் தமிழ் ல எழுதிடுங்க.



=========================


5  நீங்க ஆண்ட்டி ஹீரோவா நடிக்க சங்கடம் இல்லையா ?



 6யா- ஆண்ட்டிக்கே சங்கடம் இல்லை.எனக்கென்ன? ஜாலி தான் # ஆரம்பம்



=======================


6  அத்தான்.முதல் இரவுல வந்து எதுவும் பேசாம என்னை போட்டோ எடுக்கறீங்களே?



சினிமாப்பைத்தியம் சின்னா - FBல FIRST LOOK போஸ்டர் ஒட்டனும்



=======================


7  உங்களுக்கு ஈடு இணையே இல்லை = உங்களுக்கு ஜோடி சேர ஒரு ஃபிகர் கூட வராது , தேறாது



=====================


8 ஜட்ஜ் - உன் புருசனை எங்கேம்மா காணொம் ?



கைதி - ரொம்ப வயசான ஆள் மாதிரி தெரிஞ்சாரு, இந்த உலகத்தை விட்டு ரிமூவ் பண்ணிட்டேன்



=========================


9 நமீதா - என்னையும் மத்தியப்பிரதேசத்தில் கொசு கடிச்சுது # மேடம், இப்படியே காத்தாட விட்டிருந்தா கண்ட நாய் எல்லாம் கடிச்சு வைக்கும்



====================



10 கவர்ச்சி எப்போதுமே போரடிக்காது - தமன்னா # திரும்ப திரும்ப ஒண்ணையே பார்த்தா போர் அடிச்சிடும் மேடம்



====================


11 நமக்கு வேண்டியவங்க ஏதாவது விழாவுல பேசுனா உங்களுக்காகத்தான் ஆண்டவனிடம் வேண்டினேன்னு அடிச்சு விடனும், ஆண்டவன் வந்து காட்டியா கொடுப்பார்?


=====================


12 மதுரை ரசிகர் மன்றத்தினர் அஜித் - MGR இணைந்திருப்பது போல் பேனர் வைத்திருக்காங்களாம் .வான்டடா வம்பிழுக்கறாங்க


===================

13 கைதி -என்னை மன்னிக்க வேணாம்.தண்டியுங்கள்.



ஜட்ஜ் - அது எனக்குத்தெரியாதா? குற்றத்துக்கு தண்டனை 6 மாச்ம் ஊடால வாய் விட்டதுக்கு 8 மாசம்



======================


14 நகர்பெண் கிராமமாப்ளைக்கு வாக்கப்பட்டு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் காமெடி கலாட்டாக்களே ஆஅரா கதையாம் # விசு ,வி சேகர் வரிசையில் ராஜேஷ்



=====================


15 முத்தம் கேட்டால் காலங்காத்தாலயே வா என் கிறாள். இது சலிப்பு வாக்கியமா? கட்டளை வாக்கியமா?


==================



த தமிழ் இந்து நெட் டுக்குத்து டுடே

Friday, October 25, 2013

முத்து நகரம் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர் . அவருக்கு 4 நண்பர்கள். அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்  இன்ஸ்பெக்டர்  ஹீரோவோட நண்பர் ஒருவரை தவறுதலா  ஒரு கேஸ் மேல சந்தேகப்பட்டு லாக்கப் ல லைட்டா  2 தட்டு தட்டிடறாரு  , அப்பவே  உண்மையான  திருடன் கிடைச்சுட்டதால நண்பரை  ரிலீஸ் பண்ணிடறாரு , ஆனா நண்பர்கள்க்கு செம கடுப்பு , எப்படியாவது இந்த இன்ஸ்பெக்டரை பழி வாங்கனும்னு ஐடியா பண்றாங்க .


ஒரு நாள் நைட் டைம்ல  இன்ஸ்பெக்டர் வீட்டுல கன்னம் வெச்சு அவர் ரிவால்வரை திருடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல புதைச்சு வெச்சுடறாங்க .ரிவால்வர் களவு போனதால இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் பண்ணிடறாங்க . அவரு திருடனை கண்டு பிடிக்க அலையோ அலைனு அலையறாரு .

 இப்போ ஒரு ட்விஸ்ட் . இன்ஸ்பெக்டரோட ரிவாலவ்ரால ஊர்ல 3 கொலை நடக்குது , சுட்டது  யார்னு  தெரியல .நண்பர்களுக்குள்ளேயே சந்தேகம் .

 யார் அந்தக்கொலைகளை  செஞ்சது ?  ஏன் ? எதுக்கு ? எப்படி? என்று விளக்குவதே மிச்ச மீதிக்கதை  .


இப்போ நான்  சொன்ன கதையை இபடியே  நேரடியா சொல்லி இருந்தா படம் ஹிட் ஆகி இருக்கும் , நம்மாளுப்ங்க  யாரு ? இந்தக்கதையை தேவையே இல்லாம  குழப்பி 3 டிராக் ல கதை சொல்றாங்க . 

 ஹீரோ  ஒரு பொண்ணை லவ்வறாரு ,  அவரோட அப்பா  ஹீரோவைக்கொல்ல  தாதா உதவியை நாடறாரு .அந்த  தாதாவோட ஆள் தான்  ஊர் இன்ஸ்பெக்டர் . கதைக்கு சம்பந்தமே  இல்லாம அந்த தாதா பண்ற  கொலைகள் , ரவுடித்தனம்னு ஒரு டிராக்ல ஒண்ணுமே புரியாம கதை நகருது . 

 இன்னொரு டிராக்ல ஹீரோவோட நண்பரோட  அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாம ஆபரேஷன் பண்றாங்க , அதுக்கு பணம் வேணும் 


இந்த  3 தனித்தனிக்கதையை  இணைக்க படாத பாடு பட்டிருக்காங்க ,

 அய்யா , இயக்குநர்களே, ஒண்ணே ஒண்ணு சொல்றேன் . ஒரு நாட்டுக்கு ஒரு பி  எம் போதும் ,  ஒரு மாநிலத்துக்கு ஒரு சி எம் போதும் ,  ஒரு நயன் தாராவுக்கு  ஒரு ஜோடி போதும் . ஒரு சினிமாவுக்கு ஒரு கதை போதும் . சும்மா  மூணு , நாலு கதையை எடுத்து நீங்களும் , குழம்பி ஆடியன்சையும் ஏன் குழப்பனும் ? 


நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு - நடிச்சிருக்காங்க . எல்லார் நடிப்பும் சராசரிக்கும்  கீழே . எல்லாரும் அதாவது 5 பேரும் ஒரு சீன்ல கூட தலைக்கு எண்ணெய் வெச்சு சீவி நான் பார்க்கலை , எதுக்கு பரட்டைத்தலை , தாடி யோட அலையறாங்கனு தெரியலை , பாதி நேரம் டாஸ்மாக்கே கதின்னு கிடக்காங்க . முடியல 

நாயகியாக அஸ்ரிக். படத்துலயே ஒரே ஒரு ஆறுதல் நாயகிதான் . லட்சணமான முக அமைப்பு . மிக அழகாக வந்து போகிறார் .நல்ல வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள் 


கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி அப்டினு ஏகப்பட்ட கூட்டம் படத்துல 


 கஞ்சாகருப்பு -முத்துக்காளை கூட சேர்ந்து  காமெடி டிராக் அப்டிங்கற பேர்ல என்னென்னெமோ பண்றார். லோ கிளாஸ் சி செண்ட்டர் ஆடியன்ஸ் கூட சிரிக்கலை. செம கடுப்பு .  


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


படத்தோட  போஸ்டர் டிசைன் ல  ரியலி எ க்ரைம் ஸ்டோரி அப்டினு கேப்ஷன் போட்டு ஏமாத்துனது 


2  தீபாவளிக்கு 6 நாள் முன்னால ரிலீஸ் பண்ணினா  வேற வழி இல்லாம , வேற படம் இல்லாம எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்கனு நம்பி அனிரூத் கேப்ல படத்தை விட்டது 


3  ஓபனிங்க் சாங்க் , ஒரு கர காட்ட குத்தாட்டப்பாட்டு நல்ல டான்ஸ் மூவ்மெண்ட்டோட படமாக்கிய்து 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. சீறும் புயல் வாராண்டா அப்டினு வரும் க்ளைமாக்ஸ் பாட்டு அப்படியே சிங்கம் ஒன்று புறப்பட்டதே மெட்டு , நாடோடிகள்  ஜகஜம் ஜகஜம் ல இருந்தும் சுட்டிருக்கீங்க 



2. காமெடி டிராக் தான் என்றாலும் ஒரு பெரிய லாஜிக் பிழை - கஞ்சா கறுப்பு  காரைக்குடி பட்டு அப்டினு பொண்ணு கிட்டே ஒரு புட்வை காட்டுறார் , அது அருப்புக்கோட்டை காட்டன் சேலை . ஆரணி , காஞ்சிபுரம் பட்டுப்புடவை தான் இருக்கு, காரைக்குடி ல் ஏது பட்டுப்புடவை ? மற்ற ஊர் புடவை தான் அங்கே  இருக்கும் ,. விட்டா மணப்பாறை முறுக்கை  மன்னார்குடி ல்  வெச்சு   மலேஸ்வரம் ஜிலேபின்னு வித்துடுவாரு போல 


3  இன்ஸ்பெக்டர் ரிவாலவ்ர் காணாமப்போச்சுன்னா சட்டப்படி 4 நாள் சஸ்பென்சன் பண்ணலாம்  , துறை  ரீதியா நடவடிக்கை எடுக்கலாம்  ,  துப்பாக்கி  கிடைக்கும் வரை சஸ்பெண்ட் என  எந்த ஊர் சட்டம் சொல்லுது ?



4  காணாமப்போன இன்ஸ்பெக்டரோட துப்பாக்கி மேட்டர் யாருக்கும் தெரியாது , கொலை நடந்ததும் எப்படி பேப்பர் ல இன்ஸ்பெக்டர் துப்பாக்கி மூலம் நடந்ததுன்னு சேதி வருது ? 



5 காலேஜ் ல ஹீரோயின்   இருக்காங்க , லெக்சரர் பாடம் நடத்தறார் , அது  டென் த் கிளாஸ் ல நடத்தும் அல்ஜீப்ரா  கணக்கு . பி காம் க்கு அந்த சிலபஸ் இல்லையே? 


6  போலீஸ்    ஹீரோ தலைல சுட்டு கொன்னுடுது . அதை ஆக்சிடெண்ட்னு காட்ட  அந்த துப்பாக்கிக்குண்டை உடம்புல இருந்து  ரிமூவ் பண்ண  ஏது டைம் ? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அது தெரிஞ்சுடாதா? அதுக்கு டெட் பாடியை கண்காணாத இடத்துல டிஸ்போஸ் பண்ணி  இருக்கலாமே? போலிஸ்க்குத்தெரியாத   இடமா? இப்படியா போலீஸ் மாட்டிக்கும் ? 


7 கதைல 5 கொலை நடக்குது . ஒவ்வொரு கொலையும்  எதிராளியின் நெஞ்சில் நேருக்கு நேர் ரிவால்வரால் சுடப்பட்டு இறக்க்றாங்க  , ஒரு கொலையில்  கூட மார்பில்  இருந்து ரத்தமே வர்லை , அவ்ளவ்  லோ ப்ட்ஜெட் படமா? 


 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. சரக்குக்கு எப்போ எல்லாம் தட்டுப்பாடு வருதோ அப்பவெல்லாம் வேலைக்குப்போவான் 


2  உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கோம் மாப்ளை 

 உனக்கு வேற வேலையே இல்லையா? 

 என் வேலையே அதானே? 


3 காதலுக்காக தாஜ்மகால் கட்டுன ஷாஜகான் இப்போ உயிரோட இருந்தா  இவன் பண்ற காதலைப்பார்த்து  இவனை  உயிரோட சமாதி கட்டிட்டுத்தான் மத்த வேலை பார்ப்பார் 
 
 
4  உன்னைச்சுத்தி ஒளி வட்டம் தெரியுது 
 
 வெய்யில் ஜாஸ்தியா  இருக்கில்ல? 
 
 
5 நெம்பர் 2 பிஸ்னெசை செஞ்சா  நீ நெம்பர் 1-னா வரலாம் 
 
 
 
6  த்ரிஷா புடவை , நமீதா புடவை என்ன வித்தியாசம் ? 
 
 நமீதா புடவை  பெருசை சிறுசா காட்டும் , த்ரிஷா புடவை சின்னதை பெருசா காட்டும் 
 
 
7 போட்டி போட்டுட்டு தொழில் பண்ணலாம் , ஆனா போட்டுக்குடுத்து  தொழில் பண்ணக்கூடாது 
 
 
 
8 நான்  இந்த சேர் ல உக்காரலாமா? 
 
 
 
 அந்த சேர் கிட்டேயே கெளு 
 
 
9 போலீஸ்காரன் வீடா  இருந்தாலும்  பூட்டித்தான் வைக்கனும் 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  36


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் = 2  / 5



சி பி கமெண்ட்  -   டி வி ல போட்டாக்கூட பார்க்க முடியாத, தியேட்டருக்குப்போனா செத்தாண்டா சேகரு 
 
 நெய்வேலி டவுன்ஷிப் ல ஸ்ரீ ரங்கா தியேட்டர் ல படம் பார்த்தேன். 50 ரூபா  தான் டிக்கெட் . சுமாரா இருந்துது தியேட்டர் 

சுட்டகதை - ரேடியோ ஜாக்கி, பிரபல டிவி தொகுப்பாளர் பாலாஜி

பாலாஜி சுடும் சுட்ட கதை !

ரேடியோ ஜாக்கி, பிரபல டிவி தொகுப்பாளர் என பிஸியாக இருந்தாலும், படங்களிலும் நடித்து வருகிறார் பாலாஜி. ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராசப் பட்டினம்’, ’நண்பன்’ போன்ற படங்களில் திறமை காட்டியவர், தற்போது 'சுட்ட கதை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவரிடம் பேசியதில் இருந்து.. 



'சுட்டகதை' படத்தில் என்ன ஸ்பெஷல்?


 
'சுட்ட கதை' படமே ஸ்பெஷல் தான். காமிக்ஸ் பின்னணியில் வரும் முதல் படம், இதுவரை சொல்லாத தளத்தில் படத்தின் கதையை கூறியிருக்கிறோம். 



சினிமாவில் இதுவரை சொல்லாத தளமா?


 
கண்டிப்பாக அனைத்து படங்களுமே கற்பனை கதைகள் தான். ஒரு சில படங்கள் தான் உண்மைக் கதைகளை மையப்படுத்தி வருகின்றன. அதில் கூட ஒரு சில கற்பனைக் காட்சிகள் இருக்கும். 



ஆனால் 'சுட்டகதை' படத்தில் 'கோரமலை' என்ற ஒரு கற்பனை நகரத்தையே உருவாக்கி இருக்கிறோம். உலகத்தில் எங்கும் அப்படியொரு இடம் கிடையாது. தமிழ் பேசும் மலை ஜாதி மக்கள் வசிக்கும் இடமாக அதை கதை களமாக்கி இருக்கிறோம். 



படத்தின் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். படத்தின் டிரெய்லர்கள், டீஸர்களை நீங்கள் பார்த்தாலே இது புரியும். படத்தைக் கூட வித்தியாசமாக பல்வேறு தளங்களில் விளம்பரப்படுத்தி இருக்கிறோம். 



'சுட்ட கதை'யில் என்ன கேரக்டர்ல நடிக்கிறீங்க? 


 
புத்தி குறைபாடுள்ள ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். என்ன குறைபாடு என்பதை நீங்க படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க. 



நீங்க நாயகனாக நடிக்கும் முதல் படம் 'சுட்டகதை'. தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோ?


 
நாயகன் எல்லாம் பெரிய வார்த்தை. படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். முக்கிய வேடத்தில் நான் நடிக்கும் முதல் படம்னு சொல்லிக்கலாம். 



'சுட்டகதை' படத்துக்கு பிறகு ஹீரோவா மட்டும் தான் நடிப்பீங்களா?


 
நல்ல கேள்வி. இதுக்கு நான் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் சொல்றேன். 'பொய் சொல்லப் போறோம்', 'மதராசப்பட்டினம்', 'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'தாண்டவம்', 'சேட்டை' என பல படங்கள்ல நடிச்சுருக்கேன். 


சின்ன வேஷம், பெரிய வேஷம் அப்படினு எல்லாம் ஒண்ணும் கிடையாது. படத்துல என் கதாபாத்திரம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து படங்களை ஒத்துக்குறேன். நிறைய விஷயங்கள் புதுசு புதுசா பண்ணாத்தான் ஒரு நடிகனா நிலைச்சு நிக்க முடியும். மக்கள் இப்போ தான் என்னை ஒரு நடிகனா ஏத்துக்கிட்டாங்க. 



'சுட்டகதை'க்கு அப்புறம் என்ன ப்ளான்?


 
'சுட்டகதை' படத்துக்கு பிறகு பத்ரி சார் இயக்கத்துல 'ஆடமா ஜெயிச்சோமடா' அப்படினு ஒரு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். ஒரு படத்துல வில்லனா நடிக்க இருக்கேன். எல்லா படங்களையும் கண்டிப்பாக பாலாஜி பேசப்படுவான் அப்படிங்கிற நம்பிக்கையிருக்கு. 



'சுட்டகதை'ல உங்களோட நிறைய பேர் நடிச்சுருக்காங்க போல?

 
ஆமா.. வெங்கி, லட்சுமி ப்ரியா, ரின்சன், டோங்லி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஜெய பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, சிவாஜி சந்தானம், ஜெயமணி அப்படினு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.. 



ஒரே படத்துல பல பிரபலங்கள் நடிக்கறது ஆரோக்கியமான விஷயம். அப்படிப்பட்ட படங்கள் ஜெயிச்சிருக்கு.. ஹாலிவுட்ல இது சர்வ சாதாரணமா நடக்கும்.. பாலிவுட்லயும் இப்ப பெரிய ஸ்டார்கள் ஒண்ணா சேர்ந்து நடிக்கறாங்க.. மலையாளப் படங்கள்லயும் இது சாத்தியமாகியிருக்கு.. இங்கேயும் நடக்கும்னு நம்பறேன். அதுக்கு தயாராவும் இருக்கேன். 


பட ரிலீஸ்க்கு ஏன் இவ்வளவு தாமதம்?

 
ஒரு படம் எடுத்து முடிச்சவுடனே ரிலீஸ் பண்ணிட முடியாது. அதுக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் இருக்கு. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தொடர்ச்சியா ரிலீஸாயிட்டே இருந்தது. ஆகஸ்ட்ல சென்சார் ஆன படத்தை இப்போ அக்டோபர்ல ரிலீஸ் பண்றோம். 




thanx - the hindu


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 25 10 2013 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.சுட்ட கதை'  - லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'சுட்ட கதை'. இதில் நாயகர்களாக பாலாஜி, வெங்கி அறிமுகமாகின்றனர். லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கிறார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுபு இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். 1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக் நாவல்கள் பிரபலம். அந்த நாவல்களில் இடம் பெற்ற சம்பங்கள்தான் இப்படத்தின் கதை.

இது சுடாமல் சுட்ட கதை. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படமாக தயாராகிறது.

இசை: மேட்லிபுளூஸ், ஒளிப்பதிவு: நிஷார், நடனம்: சதீஷ், எடிட்டிங்: சூர்யா, ஸ்டண்ட்: டி.ரமேஷ், பாடல்: மதன் கார்க்கி, சிபு, நிர்வாக தயாரிப்பு : பவித்ராகுமார்.

புதுமுக இயக்குனர் சுபு இயக்கும் படம் சுட்டகதை. பலாஜி, வெங்கி லட்சுமிப்ரியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி என்ற காமெடி டீமும் நடிக்கிறது.



 "1980களில் காமிக்ஸ் கதைகளுக்கு பெரிய மவுசு உண்டு. இரும்புக் கை மாயாவி, மிஸ்டர்.ராய், டாக்டர்.டோனி என ஏகப்பட்ட கதைகள் மக்களால் விரும்பி படம் பார்த்து படிக்கப்பட்டன. அந்த கதைகளின் பாதிப்பில்தான் இந்தப் படம் உருவாகிறது. 



இந்திய சட்ட திட்டங்கள் இல்லாத ஒரு கற்பனை ஊரில் இந்தக் கதை நடக்கிறது. அந்த ஊரில் அடிக்கடி கொலை நடக்கும், அந்த கொலைகள் ரத்தம் சிந்த பயங்கரமாக இருக்காது. கொலையே காமெடியாகத்தான் இருக்கும். இந்த காமெடி கொலையை இரண்டு டம்மி பீஸ் கான்ஸ்ட்பிள்கள் கண்டுபிடிப்பதுதான் கதை. 100 சதவிகிதம் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுத்து படத்தை எடுக்குறோம். இந்த லாஜிக் லாஜிக்குன்னு ஒண்ணு சொல்வாங்களே அது இந்தப் படத்துல சுத்தமா கிடையாது. உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி அவ்ளோதான் என்கிறார் இயக்குனர் சுபு.

2 நான்காம் தமிழன்  - இந்தப்பட்ம் ஏதோ டப்பாப்படம் போல , கூகுளில் விபரங்கள் தேடினால் கிடைக்கலை 



3.
 
3 இங்கு காதல் கற்றுத்தரப்படும்-  ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் சார்பில் சாந்தி ஸ்ரீதர் தயாரிக்கும் படத்துக்கு ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஸ்ரீநாத் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக தருஷனா நடிக்கிறார். லிவிங்ஸ்டன், ஆர்த்தி, பாண்டு, இமான் அண்ணாச்சி, ஷியாம்சுந்தர, மீனாகுமாரி, பேபி ஸ்நேகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஸ்ரீதரன் இயக்குகிறார். காதலிக்கிறவர்கள் தங்கள் காதலை எவ்வாறு கையாளவேண்டும். காதலிக்க போகிறவர்கள் எவ்வாறு அதனை எதிர்கொள்ள வேண்டும். காதலில் தோற்றவர்கள் அந்த சூழலை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காதலர்களுக்கு கருத்து சொல்லும் படமாக தயாராகிறது என்றார் இயக்குனர்.

சென்னை, ஊட்டி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஒளிப்பதிவு: கோபி சபாபதி, இசை: காகித்யா, எடிட்டிங்: கண்ணதாசன், இணை தயாரிப்பு: வி.மணிவண்ணன், தயாரிப்பு மேற்பார்வை: செங்குன்றம் இ.கணேசன்.



முத்து நகரம்'.- எல்.ஏ.சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.முருகன் தயாரிக்கும் படம் `முத்து நகரம்'. இதில் நாயகர்களாக விஷ்வா, கே.திருப்பதி, ரவி, தீப்பெட்டி கணேசன், அரசு நடிக்கின்றனர். நாயகியாக அஸ்ரிக் நடிக்கிறார். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நந்தா சரவணன், காதல் சுகுமார், பாய்ஸ் ராஜன், பூவிதா, செவ்வாழைராஜி, கவிதாபாலாஜி, மது, ஸ்ரீகவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.திருப்பதி இயக்குகிறார். இவர் பல இயக்குனர்களிடம் இணை மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிறக்கும் போது யாரும் குற்றவாளி இல்லை. வளர்ந்த பிறகும் குற்றவாளிகளாக விரும்புவது இல்லை. சூழ்நிலைகளே குற்றவாளியாக்கிறது.

இந்த கருத்தை படத்தில் பதிவு செய்துள்ளோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், குலசேகரப் பட்டிணம், கயத்தாறு போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இசை: ஜெய்பிரகாஷ், ஒளிப்பதிவு: சூர்யா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, ஸ்டண்ட்: பயர்கார்த்திக், பாடல்: ஜெயமுரசு, கவின்பா, நடனம்: பால குமார் ரேவதி, தயாரிப்பு மேற்பார்வை: ஜெ.வின்னி.

முத்து நகரம் - சினிமா விமர்சனம்


 http://www.adrasaka.com/2013/10/blog-post_2952.html

.
 
5 .ரவுடி கோட்டை -  ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் அதாவது 2010ம் ஆண்டு நிதினுடன் நடித்த தெலுங்குப் படம் "சீதாராமுல கல்யாணம் லங்கோலோ". வெல்பர் கிரியேஷன் சார்பில் மல்லையா விஜய பிரசாத் என்பவர் தயாரித்திருந்தார். இதன் தமிழ் டப்பிங் உரிமையை பெண் தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி என்பவர் வாங்கியிருந்தார். படத்தை தமிழில் டப் செய்து ரவுடி கோட்டை என்ற பெயரில் ரிலீஸ் பண்ணவும் தயாராக இருந்தார்.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி மீது நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:  "தெலுங்கில் சீதாராமுல கல்யாணம் லங்கோலோ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது இது தெலுங்கில் மட்டுமே வெளியிடப்படும் தமிழ் டப்பிங் வெளிவராது என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி தமிழ் டப்பிங் உரிமையை விற்றுள்ளனர். இதற்கு என்னிடம் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுந்தரலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கு தயாரிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்றுத்தான் தமிழில் டப் செய்திருக்கிறேன். ஹன்சிகாவின் புகார் குறித்து தெலுங்கு தயாரிப்பாளரிடம் கேட்டபோது மற்ற மொழிகளில் டப் செய்ய மாட்டோம் என்று ஹன்சிகாவுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. வாய்மொழியாகவும் அவர் கேட்கவில்லை. நாங்களும் சொல்லவில்லை. என்று கூறிவிட்டார் எனவே ஹன்சிகா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மீதுதான் எடுக்க வேண்டுமே தவிர எங்கள் மீதல்ல. அதையும் மீறி அவர் எங்களுக்கு இடையூறு செய்தால் அவரை சட்டப்படி சந்திப்போம் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் அவரே ஈடுகட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹன்சிகா எதிர்ப்பது ஏன்...?

படத்தின் டப்பிங் பொறுப்பேற்றிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறும்போது "ரவுடிக்கோட்டை படத்தில் ஹன்சிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் தமிழ் நாட்டில் தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயந்து படத்தை தடை செய்ய முயற்சிக்கிறார்" என்றார்.


6 என்னாச்சு  - இந்தப்படம் ஒரு திகில் படம் போல , இது பற்றிய விபரங்களும் கூகுள் இல் கிடைக்கலை 


பணமுதலை - ஏதோ க்ரொக்கடைல்  ஹாலிவுட் படம் , தமிழ் ல டப் ஆகி வருது  போல 

8. THE DIRTY RELATION  - இது ஒரு அப்பட்டமான கில்மாப்படம் . வ்ழக்கம் போல  ஒரு தம்பதி , மனஸ்தாபம் , மனைவிக்கு ஒரு இல்லீகல் காண்டாக்ட் , புருஷனுக்கு தெரிஞ்சிடுது . கள்ளக்காதலனைக்கொலை பண்ண பிளானிங்க் . அந்த உத்தம பத்தினி புருஷனையே போட்டுத்தள்ள பிளானிங்க். யார் ஜெயிக்கறாங்க ? என்பதை வெண் திரையில் காண்க  . ஹிந்திப்படம்



9 BOY ( TELUGU) - இந்தப்படத்தைப்பற்றியும் விபரங்கள் கிடைக்கலை , தேடுனா  2010 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான பாய் , 2003 ல் வந்த ஷங்கரின் பாய்ஸ் தான் கிடைக்குது

10  வசந்தசேனை -  இது ஒரு கில்மாப்படம் . கடலூர் நகரின் பாரம்பரியம் மிக்க தியேட்டரான கமலம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுது . நாடு விளங்கிடும்

குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார்

1.சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்.. இயக்குநர் மறுப்பு!# எஸ் ஜே சூர்யா வை மனசுல வெச்சு ன்னு அடிச்சு விடுங்க



======================


2 கூடங்குளம் அணு உலையில் மின்உற்பத்தியா? பொய் என்கிறார் உதயகுமார் # ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தாதான் நம்புவார் போல



====================


3 அஜித் கவுதம் மேணன் இணைந்தால் டைட்டில் = WIN ணைத்தாண்டி நடப்பாயா?



======================


4 ஹன்சிகாவை மறுத்து லட்சுமி மேனனுக்கு பிடிவாதம் பிடிக்கும் விஷால் | # சிம்பு கூட எதுக்கு வம்பு? னுதான்



=======================


5 இன்னும் நிறைய அணு உலைகளை அமைப்போம்-நாராயணசாமி # 2014 ல உங்க கூட்டத்துக்கே உலை தாண்டி ;-)



========================


6 நடிக்க வந்துட்டு தொப்புள காட்ட மாட்டேன், தொடையை காட்ட மாட்டேங்கிறதா: ?-நடிகை நயன் தாரா விளாசல்"# உங்க தாராளகுணம் யாருக்கு வரும்?



=======================


7 சென்னையில் இன்றுமுதல் மினி பஸ்' முதல்வர் ஜெயலலிதா .# மினி மினி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே மேடம்



================


8 கேரளாவில் ச.ம.க. உதயம். அடுத்த தேர்தலில் அங்கு போட்டி- சரத்குமார் # உள்ளூர்லயே பொண்ணு கிடைக்காதவன் வெளியூர் பிகருக்கு ரூட் விட்டானாம்



========================


9 வடிவேலுவின் புதிய படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'# டைட்டில் ல இத்தனை ஜெ (J) இருப்பது தற்செயலா?திட்டமிட்ட சமாதானக்கொடியா?




=======================


10 ஏற்காடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக பி.சரோஜா-ஜெயலலிதா அறிவிப்பு" # சென்னை 28 பட பாட்டு லைனை எவனாவது பாடுனா லாக்கப் தான்




==========================


11 இரட்டை இலை சின்னத்தோடு வருகிறது சென்னை புறநகருக்கு இன்று முதல் 50 மினி பஸ்# இதுக்கு அம்மா என்ன விளக்கம் தரப்போறாங்களோ?வி ஆர் வெயிட்டிங்



==========================


12 ஜட்ஜ் - மினி பஸ் ல எதுக்கு இரட்டை இலை ?



 ஜெ - அது சைடு மிரர்.மாடர்ன் மாடல் .யுவர் ஆனர்



======================


13 இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது: கவர்னர் ரோசைய்யா.# ஆனா 50 வருசமா கிழ போல்ட்டுங்க கைல தான் இருக்கு




========================


14 விஜய் உடன் இப்போ ஜோடி சேர்ந்திருப்பதால் காஜில்லா அகர்வால்



==================



15 குளிர்பான விற்பனையை கண்காணிக்கனும்-. சுப்ரீம் கோர்ட்.# பாட்டில்ல விஜய் போட்டோ ஒட்டி "ஜில்"லா இருக்கு நல்லா இருக்கு னு ஏமாத்திட்டாங்களா?



======================


16 ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் குறைவுதான் -நாஞ்சில்சம்பத்# அண்ணே! புல் டீட்டெயில் தெரியாம புல்டோசர் வீல் ல கால் வைக்காதீங்க



=========================


17 குட்கா முகேஷ் கேரக்டரில் வருபவர் மும்பையில் உயிருடன் உள்ளார் - செய்தி #நம்மாளுங்க உடனே குட்கா வால எந்த பாதிப்பும் இல்லைம்பாங்களே ?



==============================


18  அரசு பள்ளிகளை மூடுவது காலை வெட்டுவதற்கு சமம்: ராமதாஸ் குற்றச்சாட்டு # அய்யா நல்ல கருத்து சொன்னாக்கூட நரபலி போட்டுட்டுதான் சொல்வாரு போல



=========================


19  அ.தி.மு.க.விற்கு இந்திய கம்யூ. ஆதரவு #அம்மா ! தாயே! ஆதரவு தர்றோம் .ஏத்துக்குங்கம்மா.!யாரும் சீந்தாத சீமந்தபுத்திரன்மா


==========================



20 சீனா என்றுமே நட்பு நாடுதான் -மன்மோகன் சிங் # சீனா டூர் அடிக்கும்போது சீனப்புகழ் பாடு




==========================


21  ஏற்காடு இடைத்தேர்தல் பாதுகாப்பு: மருதாயி உட்பட 7 ரெளடிகள் அதிரடி கைது # எல்லா ரவுடிகளையும் கைது பண்ணிட்டா களப்பணிக்கு என்ன செய்வாங்க?



========================


22  இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது # நாங்க இந்தியாவுக்குள்ளே 10 கிமீவருவோம்.நீங்க சீனா வுக்குள்ளே ஒரு அடி கூட வைக்கப்படாது




=========================


23 நாடாளுமன்ற தேர்தலில் 'அம்மா' எண்ணப்படி ச.ம.க. செயல்படும்: சரத்குமார் # போற்றிப்பாடுங்க சித்தப்பு.அம்மா காலடி மத்தாப்பு




========================


Thursday, October 24, 2013

Shahid (2012) -சினிமா விமர்சனம் (ஹிந்திப்படம் -தினமலர் விமர்சனம்)

தினமலர் விமர்சனம்

‘கேங்ஸ் ஆஃப் வஸீபூர்’, ‘கை போ சே’ போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் முத்திரை பதித்த ராஜ்குமாரின் கிரீடத்திற்கு மற்றொரு மாணிக்கம் பதித்துள்ள திரைப்படம் தான் இந்த ‘‘ஷாஹித்’’.

தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களைக் காணப் பொறுக்காத ஒரு ஏழை இஸ்லாமிய இளைஞன் தான் இந்த ஷாஹித். ஒரு நாள் தன் வீட்டருகில் நடக்கும் கலவரத்தைக் கண்டு அலரும் ஷாஹித் வீட்டைவிட்டு ஓடி ஒரு தீவிரவாத இயக்கத்தில் சேர்கிறான். அங்கு நடக்கும் கோர நிகழ்வுகளைக் கண்டு திரும்பத் தன் வீட்டிற்கு வர அவனை ஒரு தீவிரவாதியென முத்திரை குத்துகிறது இந்த சமுதாயம். அதனால் ஏழு வருட கடுங்காவல் திகார் ஜெயிலில்.


ஜெயிலில் கிடைத்த நல்ல நண்பரின் (கே.கே.மேனன்) உதவியுடன் சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்ட வல்லுனராகிறான்.  சிறை வாசம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கிறது. வசதியில்லாதவர்களின் சட்டத் தேவைகளை ஆதாயமின்றி எடுத்து நடத்துகிறார். 


நாட்டில் ஏற்படும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தன்னைப் போன்ற அப்பாவிகள் தீவிரவாதிகள் என சித்தரிக்கப்படுவதை எதிர்த்து அவர்களுக்காக போராடும் நாயகன். இதனால் எதிர்ப்புகள், கொலை மிரட்டல்கள் என பல்வேறு ஆபத்துகளை எதிர் கொள்கிறார்.  தான் விரும்பி மணந்த மனைவியுடனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த நேரமில்லாது சட்டத்தை சவாலாக எடுத்து வாழ முயற்சித்து தன் வாழ்க்கையை தொலைக்கிறார் இந்த ஷாஹித்.

இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம் யாதெனில் கதாபாத்திரங்களுக்கு அமைக்கப் பெற்ற வடிவங்கள்.  கே.கே.மேனன் போன்ற டீஸன்டு ஆக்டர் நடிக்கும் போது அவருக்கென திரைக்கதையை வளைக்கவில்லை. எங்கே ஒரு மகனைக் காப்பாற்ற மற்ற மூன்று மகன்களை இழந்து விடுவோமோ என்று அஞ்சும் தாய், எவ்வளவு காலம் தான் குடும்ப சுமையை நான் சுமப்பது என்னால் முடியலை என ஆதங்கப்படும் அண்ணன், கொலை மிரட்டல்கள் கண்டு எங்கே தன் மகனை இழந்துவிடுவோமோ என்று பிரியும் மனைவி. இப்படி படத்தில் வரும் எந்த கதாபாத்திரமும் வானத்தைப் போல குடும்பம் போல் தியாகத்தின் சின்னமாய் விளங்கவில்லை. மாறாக மனிதர்களாக தோன்றுகின்றனர்.

சரி பாஸ் என்ன எல்லாமே நிறைவுகளாகச் சொல்றீங்க குறைகள் ஏதும் இல்லையா என்றால் ஏன் இல்லை.. நிறைய இருக்கு. ஒன்றுக்கு இரண்டு பொருள் தரும் அபத்த வசனங்கள் இல்லை.  கதாநாயகனின் முன்னேற்றம் வெறும் ஒரு பாட்டில் ஓஹோஹோ என்ற பின்னணி இசையால் நடைபெறவில்லை. மெல்ல மெல்ல தான் நிகழ்கிறது. தான் வழக்காடும் திறமையால் பல அப்பாவிகளை காக்கும் நாயகன் இதனால் ஊர் ஒன்றும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. நாயகன் சாதனை செய்துவிட்டான் என அறிவித்து அரசாங்கம் ஒன்றும் போஸ்ட் ஸ்டாம்ப் வெளியிடவில்லை.


கணவனின் சாதனையைப் பார்த்து மனைவி ஒன்றும் புன்னகை பூக்கவில்லை, மாறாக பின் விளைவுகளின் தாண்டவத்தை எண்ணி அவனைத் தடுக்க முயற்சிக்கிறாள்.  முக்கியமாக கதாநாயகனோ கதைமாந்தர்களோ நம்பள்கி நிம்பள்கி வசனம் பேசுவதில்லை. இங்கே அப்பாவிகளும் நீதியின் நேசிகளின் கூட்டம் மட்டுமே.

இங்கே கூறப்பட்ட யாவையும் உங்களுக்கு பிழையாகத் தோன்றினால், இது தான் படத்தின் பிழையும். போலித்தனமாக ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று இயக்குனர் துளியும் எண்ணவில்லை.


எழுத்தாளர் சமீர் கௌதம் சிங் தனது பேனா மையால் மதத்தோடு தொடர்பு செய்து மனிதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மனிதத்தால் எதிர்கொண்டுள்ளார். தீவிரவாதிகளை மதத்தோடு இணைத்து அதனால் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் நிந்தனைகளை ஷாஹித் அற்புதமாக பதிய வைத்துள்ளது.

மொத்தத்தில், ‘‘ஷாகித்’’ திரைப்படம் முதல் ரகம்!
thanx - dinamalr 




  • நடிகர் : ராஜ் குமார், கே.கே.மேனன்
  • நடிகை : ..Mariam
  • இயக்குனர் :ஹன்சால் மேதா

ஆரம்பம் - அல்டிமேட் தகவல்கள்

Ajiths Arrambam - 10 special highlights
 

ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து!!

ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் பத்து முத்தான தகவல்கள்.


1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு  ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.

3. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

4. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

5. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

6. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

7. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.

8. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

9. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள். ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

10. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!
 Writers Suba Praises Ajith and Arrambam

ஆரம்பம் படத்தில் அஜீத்தை பார்த்து வியந்தோம் - கதாசிரியர்கள் சுபா நெகிழ்ச்சி!!

 
 
 
கதாசிரியர்கள் சுபா, தமிழ் திரை உலகில் தங்களுக்கென இடத்தை நிர்ணயத்து விட்டார்கள். அஜீத் குமார், ஆர்யா,ராணா, நயன்தாரா, மற்றும் டாப்சி நடிக்கும் ஆரம்பம் திரை படத்தின் மூலம் தங்களது திரை பயணத்தின் உச்ச கட்டத்தை தொட்டு உள்ளதாக கூறும் இவர்களின்ஆரம்பம் பற்றிய சில அனுபவங்கள் இதோ !!!

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் என கூறியபோது , அஜீத் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு கதை கருவை அவரிடம் பகிர்ந்துக் கொள்ள முதன்முதலாக அவரை சந்தித்த போது அவரது எளிமை எங்களை கவர்ந்தது. ஒரு நட்சதிரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பு ஊட்டியது, அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது, அது படத்தில் தன்னை புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான். கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார்.

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சி அமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது. அந்த தன்னம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகை ஆகாது.

படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ஆரம்பம் படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை.

எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய ரசிகர்கள் எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்படுகிறது.. ஏராளமான பொருட் செலவு, விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.
 Yuvan making Theme music for Arrambam

ரெடியாகிறது ஆரம்பம் தீம் மியூசிக்!

 

அஜீத்தின் ஆரம்பம் வருகிற 31ந் தேதி தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ரிலீசாகி ஹிட்டாகி உள்ளது. ஆனால் பாடல் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம் பெறவில்லை. அஜீத் இதற்கு முன் நடித்த பில்லா, மங்காத்தா படங்களின் தீம் மியூசிக் படத்தின் ஆல்பத்திலேயே இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனால் தற்போது தீம் மியூசிக்கை உருவாக்கும் பணியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனும் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறியிருப்பதாவது: "தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப ரீரிக்கார்டிங் பண்ணும்போது உருவாவது. அதனால் ஆல்பத்தில் தீம் மியூசிக் இடம்பெறவில்லை. இப்போது யுவன் ரீரிக்கார்டிங் பணியில் பிசியாக இருக்கிறார். தீம் மியூசிக்கை வெளியிடுவது பற்றி அவருடன் ஆலோசித்து வருகிறேன். விரைவில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு தீம் மியூசிக்கை வெளியிடுவோம்" என்றார்.
 

சென்னை சிட்டியில் 20 தியேட்டர்களில் ஆரம்பம்

 
 
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் தீபாவளியையொட்டி இந்த மாதம் 31ந் தேதி ரிலீசாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங்குகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளி போட்டியில் இருந்து இரண்டாம் உலகம் விலகிக் கொண்டதால் அந்த தியேட்டர்களை பிடிக்க கடும் போட்டி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்டூடியோ கிரீன் தன் தயாரிப்பான ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு தியேட்டர்களை ஏற்கெனவே புக் செய்து ரிசர்வேசனையும் ஆரம்பித்து விட்டது.

இப்போது ஆரம்பம் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. படத்துக்கு எதிராக ஒருவர் கோர்ட்டுக்கு போயிருப்பதால் தியேட்டர்காரர்களிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. இப்போது அது விலகி மீண்டும் தியேட்டர் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது.

சென்னையில் இதுவரை சத்யம், எஸ்கேப், ஜநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், பிவிஆர், உட்லண்ட்ஸ், எஸ்2 பெரம்பூர், உதயம், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் உள்பட 20 தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 தியேட்டர்கள் இந்த லிஸ்ட்டில் சேரலாம். தமிழ்நாடு முழுவதும் தனது டார்க்கெட்டில்  உள்ள தியேட்டர்களில் 80 சதவிகித்தை புக்கிங் செய்து முடித்து விட்டார்கள்.
 

பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகம் ‘ஆரம்பம்’ - விஷ்ணுவர்தன் பேட்டி!!

 

எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ... ஆரம்பம்  என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.  அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக ஆரம்பம் இருக்கும் என்பது நிச்சயம் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
a

 thanx - dinamalar


Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a




Tamil shooting spotஆரம்பம்a
 
 
 
 
Tamil shooting spotஆரம்பம் a


Tamil shooting spotஆரம்பம்a



Tamil shooting spotஆரம்பம் a







a



aTamil shooting spotஆரம்பம்a


 Tamil shooting spotஆரம்பம்

சென்னை - மினி பஸ் - ரூட் விபரம்

சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்

 

 

சென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின. சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய் என்று வசூலிக்கப்படும். 


சிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 


பஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு 

 
சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. 


சிறிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம் வருமாறு: 

 
குரோம்பேட்டை வழித்தடம்

 
எஸ் 1 - பல்லாவரம் ரயில் நிலையம் - திரிசூலம் சக்தி நகர். வழி: பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி, திரிசூலம் சக்தி நகர். 



எஸ் 2 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: இந்திரா கார்டன், நேரு நகர், குமரன் குன்றம், அஸ்தினாபுரம், திருமலைநகர், ஜெயேந்திரர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம். 


எஸ் 3 - குரோம்பேட்டை - மாடம்பாக்கம். வழி: சிட்லபாக்கம், மகாலட்சுமி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கோழிப்பண்ணை, மாடம்பாக்கம். 


எஸ் 4 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: குரோம்பேட்டை, எம்ஐடி, நேருநகர், குமரன் குன்றம், பல்லவன் பயிற்சிப் பள்ளி, ராதா நகர், நெமிலிச்சேரி, நன்மங்கலம், கோவிலம்பாக்கம். 


பெருங்களத்தூர் 

 
எஸ் 5- பெருங்களத்தூர் அருங்கால். வழி: ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காரணை காட்டூர், அருங்கால். 


எஸ் 11 - கிண்டி ஆசர்கானா - கீழ்க்கட்டளை. வழி: சிமென்ட் ரோடு, மீனம்பாக்கம், பி.வி.நகர், பர்மா காலனி, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் கூட்டுரோடு. 


எஸ் 12 - கிண்டி ஆசர்கானா - என்.ஜி.ஓ.காலனி. வழி: மவுண்ட் தபால் நிலையம், எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம், ஜெயலட்சுமி திரையரங்கம், நியூ காலனி மெயின் ரோடு, கக்கன் பாலம். 


கிண்டி 

 
எஸ் 13 - கிண்டி - வேளச்சேரி. வழி: மடுவங்கரை, என்.ஜி.ஓ.காலனி, பிருந்தாவன்நகர், மகாலட்சுமி நகர், உள்வட்டச் சாலை, வேளச்சேரி ரயில் நிலையம். 



எஸ் 14 - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் - மேட்டுக்குப்பம். வழி: தரமணி, சி.டி.எஸ்., அம்பேத்கர் நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், எல்லையம்மன் நகர்.
எஸ் 21 - ராமாபுரம் - போரூர். வழி: ராமாபுரம் அரசமரம், பூத்தபேடு, சின்ன போரூர், காரம்பாக்கம். 


எஸ் 22 - போரூர் - பட்டூர். வழி: ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், பரணிபுத்தூர் சந்திப்பு. 


எஸ் 23 - அய்யப்பன்தாங்கல் - குமணன்சாவடி. வழி: எஸ்எஸ்டி ஆயில் மில், நூம்பல் சாலை சந்திப்பு, புளியமேடு, குமணன்சாவடி. 


எஸ் 24 - அய்யப்பன்தாங்கல் - திருவேற்காடு. வழி: எஸ்.ஆர்.எம்.சி., சத்யலோக் குருகுலம், செட்டியார் அகரம், சிவபூதமேடு, வேலப்பன்சாவடி. 


மதுரவாயல் 

 
எஸ் 25 - மதுரவாயல் - வளசரவாக்கம். வழி: ஆலப்பாக்கம் மதுரவாயல் சந்திப்பு, மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.மோட்டார்ஸ், ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு. 


வடபழனி 

 
எஸ் 31 - வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம். வழி: ஆவிச்சிப் பள்ளி, விருகம்பாக்கம், கேசவர்த்தினி, தேவி குப்பம், கங்காநகர், பள்ளிக்கூடத் தெரு, மதுரவாயல் ஏரிக்கரை. 


எஸ் 32 - வடபழனி - திரு.வி.க.பூங்கா. வழி: ராம் தியேட்டர், பெஸ்ட் மருத்துவமனை, வன்னியர் தெரு, பெரியார் பாதை, அண்ணா நெடுஞ்சாலை, அருண் ஓட்டல், அமைந்தகரை. 


அசோக் பில்லர்

 
எஸ் 33 - அசோக் பில்லர் மேத்தா நகர். வழி: புதூர் உயர்நிலைப்பள்ளி, சாமியார் மடம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், பொன்மணி திருமண மண்டபம், கீழ்நகர், திருவள்ளுவர்புரம். 


எஸ் 41 - அம்பத்தூர் ஓ.டி. - முருகப்பா பாலிடெக்னிக். வழி: வள்ளுவர் சாலை சந்திப்பு, குளக்கரை சாலை சந்திப்பு, திருமுல்லைவாயில் சந்திப்பு, ஸ்டேட்போர்டு மருத்துவமனை. 


மாதவரம் 

 
எஸ் 61 - மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு. வழி: கல்பனா லேம்ப், பிருந்தா கார்டன், பிரகாஷ் நகர், குமரன் நகர் சந்திப்பு, கொளத்தூர். 


எஸ் 62 - மூலக்கடை - மணலி. வழி: அம்பேத்கர் சிலை, ஆர்.வி.நகர், பார்வதி நகர், மூலச்சத்திரம், பல்ஜிபாளையம், சின்னசேக்காடு, மணலி மார்க்கெட். மொத்தம் 50 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர மக்களின் 4 ஆண்டுகள் கனவு நனவாகியுள்ளது. 

நன்றி - த தமிழ் ஹிந்து