Thursday, October 10, 2013

இந்தியா முழுக்க மோடி அலை வீசுகிறதா? - பொது மக்கள் கருத்து , தமிழ் அருவி மணியன் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.


தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...



இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.


மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?

காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு 


தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...

இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?

நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி  
செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...

"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?

அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?

தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார். 


மக்கள் கருத்து 



1 தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே. ஆகவே பிஜேபி, தேமிதிக்க, மதிமுக இணைந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் சேர்வதை தடுத்து விடலாம். பிஜேபி- தேமுதிக- மதிமுக கூட்டணி சுமார் 20% வாக்க்குகளை பெரும். நாகர்கோயில் தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெரும். தேமுதிக மதிமுக பூஜ்யம்தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக திமுக படுதோல்வியை அடையும். காங்கிரஸ் புதுசெர்ரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும். திமுக காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சி கூட்டணி சுமார் 32% சத வாகுகளை பெரும். ஆகவே மும்முனை போட்டி என்று வந்தால் அண்ணா திமுக கூட்டணி தமிழ்நாட்டில் சுமார் 44% வோட்டுகளை பெற்று 38 எம்பி தொகுதிகளை கைப்பற்றும். 



2 வரும் தேர்தலில் மக்கள் திரும்பவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், எந்த ஆண்டவனாலும் இந்தியாவை காப்பாத்த முடியாது......மணியன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு அபாக்கிய சூழ்நிலை வரக் கூடாது என்று பாடுபடுகிறார்... 




3 பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மணியன் மீது எவ்வளவு கண்டனங்கள், பாய்ச்சல்கள். அப்பப்பா. இதுகாறும் பொது வாழ்வில் நேர்மையாளராக இருந்துள்ளார், ஊர் சொத்தை கொள்ளை அடிக்கவில்லை. ஆனால், அது எல்லாம் மறந்து விட்டது. பா.ஜ.க.வை தொட்டவுடன் அவர் பாவியாகி விட்டார். ஊரை அடித்து உலையில் போட்டு, பா.ஜ.க.வை திட்டியிருந்தால் மணியன் நல்லவர். அப்படிதானே. இப்போது புரிகிறது. தவறு அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம்தான் இருக்கு....



வேண்டாம் வேண்டாம்னு கத்தியும் வலிய வலிய போயி பேசி பாகிஸ்தான் நம்மை கிராமத்து பெண் போல் அழுகிறார்கள் என்று அசிங்க படுத்தியும்,, அப்படி சொல்லவே இல்லை என்று கயிறு திரித்தார்கள். அப்படி சொன்னதை, பாகிஸ்தான் மெடிஆகலும் பத்திரிகைகளும் ஆதாரத்துடன் போட்டுவிட அதெல்லாம் சும்மனாச்சுக்கு என்றார்கள். எல்லாம் மத சார்பின்மை படுத்தும் பாடு. இதில் கவுரவம் பாக்கணுமாம். மண்ணு மோகன் வெச்சிருக்கார். கேளுங்க. ஒரு ரூபாய்க்கு மூணு கிலோ கவுரவம். 


 5 எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். இலங்கை தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் அப்படி யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள். 


6  காந்தி , காமராஜ் ஆகியோரின் கொள்கைக்கு எதிரான ஆர் எஸ் எஸ் சின் செல்ல பிள்ளை மோடியை இவர் ஆதரிப்பது , படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.... மன்மோகன் சிங் ஆட்சியால் 1990 க்கு பிறகு இந்தியாவின் மதிப்பு ஆயிரம் மடங்கு வுயர்ந்துள்ளது என்பதை இவர் காந்தி கண்ணாடி போட்டு பார்த்தல் தான் தெரியும்.... இருட்டில் எரியும் மின்விளக்கு கண் கூசுகிறது என்று கூலிங் கிளாஸ் போடுபவருக்கு அது தெரியாது.... ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பொது அதுவும் அப்படித்தான் ..


.. நேற்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை , மூன்றில் ஒரு குழந்தை குஜராத்தில் எடை குறைவான பிள்ளை , குறைந்த அளவு உணவு கூட இல்லாத குழந்தை என்று வந்துள்ளது , அதை மோடி அமைச்சரும் ஒத்து கொண்டுள்ளார்....மற்றொன்று குஜராத் பாகிஸ்தான் எல்லையில் மாநில அரசின் கண்காணிப்பு திருப்தி கரமாக இல்லை என்று....கக்கூஸ் கட்டுவேன் என்று சொல்லும் மோடி அதை உபயோக்கிக்க முதலில் உணவு வேண்டும் என்று எண்ண தோன்றவில்லை ... அதை காங்கிரஸ் உணவு பாது காப்பு சட்டம் மூலம் அளிக்க விளைகிறது.... காந்தி யின் பெயரில் அரசியலில் கள்ள கணக்கு போட வேண்டாம்.... 


7 1990 க்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதென்னவோ உண்மை மாதிரி தெரிந்தாலும் அது ஒரு மாயைத் தோற்றம்தான். இந்தியாவில் இருந்த அனைத்து விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இப்படியே போனால் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சுயசார்பு நிலையிலிருந்த இந்தியாவை வெளி நாட்டிடம் கையேந்த வைத்ததைத் தவிர மன்மோகன் அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. சும்மா வெறுமனே குஜராத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பெரிதாக்காமல் மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை காட்டினால் நல்லது. ஊழல், ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற நிலையில் இருக்கிற மத்திய அரசு....



நன்றி = தினமலர்



ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள்: முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்

ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள்: முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்
ஜோத்பூர், அக்.10-( lady pc  ushaar madam


குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அவரது புகாரின் பேரில் சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார். 



முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சாமியார் ஆசாராம் பாபு, ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி மனோஜ் கே வியாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 



தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசாராமின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.




ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் என்பவர் 1995ம் ஆண்டு முதல் ஆசாராம் பாபுவின் சேவகராக (உதவியாளர்) அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஆசிரமத்தில் பணியாற்றி வந்தார்.



சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பணியில் இருந்து விலகி யாரிடமும் சொல்லாமல் ஆசிரமத்தை விட்டு தப்பியோடிய அஜய் குமார், ஜோத்பூர் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.





'ஆசாராம் பாபுவின் ஆசிரமங்களில் தொடர்ச்சியாகவும், மறைமுகமாகவும் பெண்களின் நடமாட்டம் இருக்கவே செய்தது. அங்கு வேலை செய்த ஒரு சமையல்காரரும், இன்னொருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.



இதைப்போன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதை கண்டு பதறிப்போன நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன். தற்போதைய செய்திகளை அறிந்த பின் அவரது ஆசிரமம் பற்றிய மாயையில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்க போலீசாருக்கு உதவிடும் வகையில் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளேன்' என்று கூறினார்.

thanx  - maalaimalar

இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்


காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்
லண்டன், அக்.10-

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார் விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த போதே இன்னொரு நபரை காதலிப்பதாக டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத் வற்புறுத்தினார்.

இந்நிலையில், பாரீஸ் நகரில் தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார்.

சரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை 'எக்ஸ்-ரே' எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாக ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி டயானாவை இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் தீர்த்து கட்டி விட்டது.

கர்ப்பமாக இருந்த அவரது வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டனர் எனவும் தனது புத்தகத்தில் அலன் பவர் குறிப்பிட்டுள்ளார்.

thanx - maalaimalar

இளவரசி டயானா பாக்., டாக்டரை காதலித்தாரா ? இம்ரானின் மாஜி மனைவி ஜெமீமா பேட்டி


பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா மீது, உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே, நல்ல மரியாதை உண்டு. அவரின் மனிதாபிமான குணம் தான், இதற்கு காரணம். ஆனால், டயானாவின் சொந்த வாழ்க்கை, திருப்பங்களும், சோகங்களும் நிறைந்தவை. அவர் இறந்து, 16 ஆண்டுகள் ஆன நிலையில், அவரைப் பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.




பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், இம்ரான்கான், பிரிட்டனை சேர்ந்த, ஜெமீமா என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்தார். பின், இருவரும் பிரிந்து விட்டனர். இந்த ஜெமீமா, பிரிட்டன் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "இளவரசி டயானா, பாகிஸ்தானை சேர்ந்த, ஹஸ்னத்கான் என்ற டாக்டரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக, என் உதவியை நாடினார். இரண்டு முறை பாகிஸ்தானுக்கு வந்தார். ஆனால், அவரின் அந்த காதல், கைகூடாமல், தோல்வியில் முடிந்து விட்டது...' என, தெரிவித்துள்ளார்.



ஜெமீமா போட்டுள்ள, இந்த குண்டு, பாகிஸ் தானிலும், பிரிட்டனிலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஜோல்னா பையன்.

thanx - varamalar

நீயா ? நானா ? இயக்குநர் ஆண்டனி பேட்டி @ த தமிழ் ஹிந்து


 ஆண்டனி
அரட்டைகளும் சவடால்களும் மலிந்த தமிழ்த் தொலைக்காட்சி சூழலில் அறிவார்த்தமான விவாதக் களமாக உருப்பெற்றிருக்கும் 'நீயா நானா' நிகழ்ச்சியின் வயது எட்டு. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இதன் வீரியமோ சுவாரஸ்யமோ குறையவில்லை. 
வாரந்தோறும் காத்திரமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்களையும் எழுத்தாளர்களையும் துறை சார்ந்த நிபுணர்களையும் வரவழைத்துத் தமிழ் விவாதக் களத்தைச் செழுமைப் படுத்திவரும் 'நீயா நானா'வின் மூளை அதன் இயக்குநர் ஆண்டனி. 


கேள்வி: இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு உந்துதல் எது? 


நிறைய. நான் பிறந்து வளர்ந்தது நெல்லை, ஆரைக்குளத்தில். சின்ன வயதில் எங்களுடைய விளையாட்டில் விவாதத்துக்கு முக்கியமான இடம் இருக்கும். எப்போதும் ஓயாத பேச்சு, வாதம். கட்சி பிரிந்து வாதம் செய்வோம். சில சமயம் வாக்கெடுப்புகூட நடத்துவோம். ஊரில் பாட்டிமார்களைக்கூட விடாமல் இழுத்து வந்து ஓட்டுப் போட வைத்தோம். இவையெல்லாம் என் மனதில் பசுமையாக இருக்கின்றன. நான் படித்து ரசித்த, பிரமித்த ஏராளமான விஷயங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன. 



80-90-களில் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் டாரில் டி மோண்டே, திலீப் பத்காவ்கர், டாம் மோரிஸ், கிர்லா ஜெயின், சாய்நாத், ஸ்வாமி நாத அங்க்லேசரீய ஐயர் போன்றவர்கள் எழுதிவந்த கட்டுரைகளை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். 'இல்லஸ்டி ரேட்டட் வீக்லி' போன்ற இதழ்களையும் தீவிரமாக வாசித்திருக்கிறேன். ஆஷிஷ் நந்தி, ப்ரிதிஷ் நந்தி, குஷ்வந்த் சிங், ராஃப் அஹமத், காலித் முகம்மது ஆகியோரையும் படிப்பேன். அறிவுபூர்வமான விவாதம் என்றால் என்ன என்பதை எனக்கு உணர்த்திய ஆளுமைகள் இவர்கள். இந்தி, ஆங்கில சானல்கள் நடத்தும் பல விவாத நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, தமிழில் இப்படி ஒரு நிகழ்ச்சி இல்லையே என்ற எண்ணம் வரும். குறிப்பாக 'மிருணாள் கி பைட்டக்'. எல்லா அனுபவங்கள், ஏக்கங்கள், உந்துதல்களையும் சேர்த்துதான் இப்போது நீங்கள் நிகழ்ச்சியாகப் பார்க்கிறீர்கள். 



கே: நிகழ்ச்சியை நடத்திச் செல்வதில் உதவிகரமாக இருப்பவர்கள் யார்? 



ப: கோபிநாத்தையும் என்னையும் சேர்த்து எங்கள் குழுவில் மொத்தம் 40 பேர் இருக்கிறோம். திலீபன், அழகிரி, சாய்ராம் ஆகியோர் முக்கியமான பங்காற்றிவருகிறார்கள். எழுத்தாளர் இமையம், பி.ஏ. கிருஷ்ணன், அழகரசன், தாவரவியல் அறிஞர் அழகேச பாண்டியன், மரபியல் மருத்துவர் மோகன், இயக்குநர் ராம், பாலாஜி சக்திவேல்... இப்படி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களும் உதவுகிறார்கள். எந்த உரையாடலிலிருந்தும் விவாதத் துக்கான விஷயம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாசிப்பு மிக உதவியாக இருக்கிறது. தினசரிகள், வெகு ஜன இதழ்கள், சிற்றிதழ்கள், தீவிர இதழ்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. 



கே: வெகுஜன ஊடகங்களுக்கு அறிமுக மாகியிராத பலர் உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? 



ப: வாசிப்பின் மூலம்தான். முத்துகிருஷ்ணனை 'உயிர்மை' இதழ் மூலம்தான் எனக்குத் தெரியும். ஓவியாவைக் 'காலச்சுவடு' இதழ் மூலம் அறிந்துகொண்டேன். வெவ்வேறு அரசியல் பின்புலம் கொண்டவர்களும் பங்கேற்கிறார்கள். எந்த அரசியல் கறையும் படாமல் நிகழ்ச்சியை எப்படி நடத்த முடிகிறது? நாங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் கட்சி அரசியலைச் சாராதவை என்பது ஒரு காரணம். தவிர, தனிநபர் தாக்குதல்கள், கட்சிகள் மீதான தாக்குதல்கள், புகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறாத வகையில் விவாதத்தை ஒருங்கிணைக்கிறோம். கே: பொதுமக்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது? 



ப: ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்த பிறகும் மக்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் நேரில் சந்திக்கும்போது அவர்கள் கூறும் கருத்துகளும் இந்த நிகழ்ச்சி எவ்வளவு கவனமாகவும் ஆர்வமாகவும் பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. நாங்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள். விவாதங்களின் போதாமைகளையும் உணர்த்துகிறார்கள். விவாதத்தில் விமர்சிக்கப்படும் தரப்பினர் எங்கள் மீது கோபம் கொள்கிறார்கள். பிற துறையினர் விமர்சிக்கப்படும்போது இவர்களே பாராட்டவும் செய்கிறார்கள். 



கே: சிலரைச் சில சமயங்களில் அதிக நேரம் பேச அனுமதிப்பதாக விமர்சனம் எழுகிறது... 


ப: இது சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கான வெளி. ஒருவருக்கு அவர் சார்ந்த துறையில் அல்லது அவருடைய அக்கறை சார்ந்து, சொல்வதற்கு அதிக விஷயங்கள் இருந்தால் அவரைக் கூடியவரையிலும் தடுப்பதில்லை. விவாதத்தின் குவிமையத்திலிருந்து விலகிச் சென்றால் மட்டுமே நெறிப்படுத்துகிறோம். சில சமயம் விருந்தினரைக் காட்டிலும் விவாத அரங்கில் இருப்பவர்களில் யாரேனும் அதிகமாகப் பேசவும் வாய்ப்பிருக்கிறது. விருந்தினர் பேசுவதை மறுத்துப் பேசவும் வாய்ப்பளிக்கிறோம். யாருடைய வார்த்தையும் இறுதியானதல்ல. 



கே: விருந்தினர்கள் மனம் புண்படும் அளவுக்குச் சிலர் நடந்துகொண்டு விடுகிறார்கள். உதாரணமாக மருத்துவர் கு. சிவராமன் வந்தபோது கிளம்பிய சூடு... 



ப: எவ்வளவு நல்ல நோக்கம் கொண்ட அமைப்பாக இருந்தாலும், எவ்வளவு சிறிய அமைப்பாக இருந்தாலும் அவையும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் பார்வை. இயற்கை உணவுக் கண்காட்சி குறித்து தலித் கண்ணோட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியை சிவராமனே ஆக்கபூர்வ மாகத்தான் எடுத்துக்கொண்டார். நீயா நானா நிகழ்ச்சியே கத்தி முனையில் நடப்பது போலத்தான். 


அரவிந்தன் - தொடர்புக்கு: [email protected]

விஜய் ரசிகர்கள் தங்கள் டி பி ல GUN னோடு இருப்பதன் ரகசியம் என்ன ?

வாழ்க்கையை அனுபவிக்க...

வயதையும் பணத்தையும் ஒருங்கே பெற்றவர்கள்

பாக்கியவான்கள்.
Photo: வாழ்க்கையை அனுபவிக்க...

வயதையும் பணத்தையும் ஒருங்கே பெற்றவர்கள்

பாக்கியவான்கள்.
1. பொதுவா பொண்ணுங்க வாய் ல இருந்து சுடு சொல்தான் வருது.வாய் கொப்புளிப்பதே சுடுதண்ணில தான் போல


===================

2 நஸ்ரியா = வெச்சுட்டாரே அவர் கையையே .கொஞ்சம் கூட எடுக்கச்சொல்ல தோணல # தனுஷ் நய்யாண்டி


=================


3 சத்யாகிரஹம் என்பதை உச்சரிக்கவே பயப்படுபவன் சத்யாவின் புருசனாகவும் இருக்கலாம் # சத்யா கிரஹம்


=====================


4  பொண்ணுங்க மிஷ்கின் படம் மாதிரி. பொண்ணுங்க வாய் மிஷ்கின் பேட்டி மாதிரி


======================


5  நன்னடத்தையை ஏற்படுத்தாத ஏட்டுபடிப்பு ,சப் இன்ஸ்பெக்டர் படிப்பு எதுவும் நாட்டுக்கு உதவாது


=======================


கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லையென்றால்
இது வெறும் பனங்கிழங்குதான்....!
Photo: கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லையென்றால்
இது வெறும் பனங்கிழங்குதான்....!




6  எப்பேர்ப்பட்ட புத்திசாலியா இருந்தாலும் வருணபகவான் கையால குட்டு வாங்கித்தான் ஆகனும்.இயற்கையின் நியதி



=======================


7  இந்தியாவுக்கு சுதந்தரம் கிடைக்க நேருவின் கள்ளக்காதலும் ஒரு முக்கியக்காரணம் என்பதை நேருவோ மவுன்ட்பேட்டன் பிரபுவோ ஒத்துக்கொள்ளவே இல்லை


========================


8 குடிகாரனுடன் கூடல் இல்லை என ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருந்தால் ,குடிப்பவனுக்கு ஆண்மை போய் விட்டால்் உலகில் குடியை முற்றாக அழிக்கலாம்


=======================


9 மனைவி எத்தனை இம்சை செய்தாலும் குடும்ப ,குழந்தை எதிர்காலம் கருதிஅஹிம்சை நெறியைப்பின் பற்றி அமைதியாக வாழும் எல்லாக்கணவர்களும் காந்திகளே!


==========================


10 ஒரு வலைப்பூப்பதிவு (??) டைட்டில் - கார்த்திகாவின் கட்டழகு கட்டவிழும் போட்டோக்கள் # எப்பிடித்தான் யோசிப்பாய்ங்களோ


==============


Dont forget it.



11 வைரமுத்துவின் புக் மலையாளத்தில் டப் செய்யப்பட்டால் டைட்டில் - கள்ளிக்COTடு இதிகாசங்கள்


====================


12  இன்று உலக கால்நடைதினமாம்# சினிமாவில் நடந்தே படத்தை ஓடவைக்கும் அஜித் ,அரசியலில் நடையா நடந்தும் பருப்பு வேகாத வைகோவுக்கும் வாழ்த்து (  4 10 13 )



=============================


13  இன்னைக்கு மஹாளய அமாவாசை .முன்னோர்களை மதிக்க வேண்டிய நாளாம்.பிகர் கிட்டே தாத்தா கனவில் உன்னை லவ்வச்சொன்னாருன்னு அள்ளி விட உகந்த நாள்.



=====================


14  எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை முயற்சின்னு காதலியைக்கூட்டிட்டு ட்ரெக்கிங் கிளம்பிடனும்



======================


15  லட்டு பிகர்கள் அ"லட்டு"வதில் ஆச்சரியம் இல்லை.அட்டு பிகர்கள் கூட பிட்டுப்போடுவதில் தான் ஆதங்கம் நமக்கு



=====================
Children swing from the gun barrel of an abandoned tank in Kandahar, Afghanistan.

யுத்த பூமி....
Photo: Children swing from the gun barrel of an abandoned tank in Kandahar, Afghanistan.

யுத்த பூமி....



16  பவன் கல்யாண் ன் தெலுங்குப்பட டைட்டில் - அத்தாரின்டிகி தாரிடி = அத்தை வீட்டுக்கு எப்படிப்போகனும் ? # விளங்கிடும்யா டோலிவுட்


=====================



17  ஆணாதிக்க நடிப்பை வெளிப்படுத்தும் ரஜினிக்கு பெண்ணாதிக்க ரசிகைகள் இருப்பது அதிசயமே! # மன்னன் ,படையப்பா


=================


18  விகடன் மார்க் 50 போட்டா படத்துக்கு வசூல் வருமா? ன்னு கேட்கறவங்க விருது, பாராட்டு, கைதட்டல் மகிமை அறியா"தவறே" (ரே)


====================



19  விஜய் ரசிகர்கள் தங்கள் டி பி ல GUN னோடு இருப்பதன் ரகசியம் என்ன ? சுட்ருவோம் ,சுடுவோம்னு அர்த்தமோ? ;-))



====================


20  கோவை ,மதுரை ,சென்னை பிரபல பெண் ட்வீட்டர்கள் முன் போல் முனைப்பாக சண்டை போடாமல் ஸ்மைலி ட்வீட்டாகப்போடுவது கவலை அளிக்கிறது


==============================


Irfan Baig originally shared:

10 Islamic rules of WAR :
Before engaging in battle, the Prophet Muhammad (SAW) instructed his soldiers:

1. “Do not kill any child, any woman, or any elder or sick person.” (Sunan Abu Dawud)

2. “Do not practice treachery or mutilation.(Al-Muwatta)

3. Do not uproot or burn palms or cut down fruitful trees.(Al-Muwatta)

4. Do not slaughter a sheep or a cow or a camel, except for food.” (Al-Muwatta)

5. “If one fights his brother, [he must] avoid striking the face, for God created him in the image of Adam.” (Sahih Bukhari, Sahih Muslim)

6. “Do not kill the monks in monasteries, and do not kill those sitting in places of worship. (Musnad Ahmad Ibn Hanbal)

7. “Do not destroy the villages and towns, do not spoil the cultivated fields and gardens, and do not slaughter the cattle.” (Sahih Bukhari; Sunan Abu Dawud)

8. “Do not wish for an encounter with the enemy; pray to God to grant you security; but when you [are forced to] encounter them, exercise patience.” (Sahih Muslim)

9. “No one may punish with fire except the Lord of Fire.” (Sunan Abu Dawud).

10. “Accustom yourselves to do good if people do good, and to not do wrong even if they commit evil.” (Al-Tirmidhi)
Photo: Irfan Baig originally shared:
 
10 Islamic rules of WAR : 
Before engaging in battle, the Prophet Muhammad (SAW) instructed his soldiers:

1. “Do not kill any child, any woman, or any elder or sick person.” (Sunan Abu Dawud)

2. “Do not practice treachery or mutilation.(Al-Muwatta)

3. Do not uproot or burn palms or cut down fruitful trees.(Al-Muwatta)

4. Do not slaughter a sheep or a cow or a camel, except for food.” (Al-Muwatta)

5. “If one fights his brother, [he must] avoid striking the face, for God created him in the image of Adam.” (Sahih Bukhari, Sahih Muslim)

6. “Do not kill the monks in monasteries, and do not kill those sitting in places of worship. (Musnad Ahmad Ibn Hanbal)

7. “Do not destroy the villages and towns, do not spoil the cultivated fields and gardens, and do not slaughter the cattle.” (Sahih Bukhari; Sunan Abu Dawud)

8. “Do not wish for an encounter with the enemy; pray to God to grant you security; but when you [are forced to] encounter them, exercise patience.” (Sahih Muslim)

9. “No one may punish with fire except the Lord of Fire.” (Sunan Abu Dawud).

10. “Accustom yourselves to do good if people do good, and to not do wrong even if they commit evil.” (Al-Tirmidhi)

Wednesday, October 09, 2013

பிந்துரேகா -அ. முத்துலிங்கம் -நகைச்சுவை சிறுகதை

கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. 



‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான பெண்மணி, சுவர் ஓரமாக எலி ஓடுவதுபோல நினைத்துப்பாராத வேகத்தில் குடுகுடுவென ஓடினார். என்னைத்தான் இவ்வளவு நேரமும் அழைத்தார். நீண்ட நேரம் சப்பியதால் என் பெயர் அப்படி உருக்குலைந்து வெளியே வந்திருந்தது. 


‘உங்கள் பெயர் என்ன மொழி?’ என்றார் டொக்ரர். தமிழ் என்றேன். ’அப்படியென்றால்?’ ‘இந்தியாவில் ஒரு மாநிலமே பேசும் மொழி. 70 மில்லியன் மக்கள்’என்றேன். ‘எனக்குத் தெரியவில்லையே’என்றார். ‘60 மில்லியன் மக்கள் மட்டுமே குஜராத் மொழி பேசுகிறார்கள்’என்ற உபரித் தகவலை அவர் கேட்காமலே சொன்னேன். இது தேவையில்லாதது. அவருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். கைக்குக் கிட்ட இருந்த ஊசியை எடுத்து புஜத்தில் குத்தி மருந்தைச் செலுத்தினார். அதற்குப் பிறகு என் வியாதியைக் கேட்டறிந்தார். 


எங்கள் இரண்டாவது சந்திப்பு இன்னும் மோசமாக இருந்தது. நான் அவருக்கு முன் கடுதாசி கவுணை அணிந்து கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். மண்டையில் நீர் நிரப்பியதுபோல பாரத்தில் அதுபாட்டுக்குக் கவிழ்ந்து கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்துத் தூக்க வேண்டிய ஒரு தொக்கையான கோப்பை அவர் படித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து மருந்து மணம் வீசியது. எனக்கு நெஞ்சு திடுக்கென்றது. நான் வந்து ஆறு மாதம் ஆகவில்லை, இந்தக் கோப்பை நிறைத்து இத்தனை வியாதிகள் சேர்ந்துவிட்டனவே. பெருமைப்படுவதா இல்லையா என யோசித்தேன். 


‘காலையில் எத்தனை வீடுகளுக்கு பேப்பர் போடுகிறீர்கள்?’ நான் பதில் பேசவில்லை. ‘இன்னும் சுப்பர் மார்க்கெட்டுகளில் பாரமான பெட்டிகளைத் தூக்கி அடுக்குகிறீர்களா?’ நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மருந்தை எழுதி என்னிடம் தந்து முழங்காலில் பூசச் சொன்னார். ‘தலை நோவுக்கு முழங்காலில் பூசினால் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது வேறு யாருடையவோ கோப்பை அவர் அத்தனை நேரமும் பார்வையிட்டிருக்கிறாரென்று. 



ஒவ்வொரு தடவையும் அவருக்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்தது. ஒருமுறை பூட்ஸ் அரையடி ஆழம் புதையும் பனியில் நடந்து அவரிடம் போனேன். மூச்சை விட்டால் திருப்பி இழுக்க முடியவில்லை. சோதித்துவிட்டு ‘பால் குடிப்பதை நிறுத்துங்கள்’என்றார். நிறுத்தினேன். ‘தேநீரும் வேண்டாம்’என்றார். அதையும் விட்டேன். பின்னர் ‘கோப்பியைக் காட்டக் கூடாது’என்றார். அதையும் செய்தேன். எஞ்சியது தண்ணீர் ஒன்றுதான். அதற்கும் தடை வந்துவிடுமோ என அதிகம் நடுங்கியதால், வியாதி பெரிசாகத் தெரியவில்லை.


 இன்னொரு தடவை காதுகுத்துக்கு மருந்து கேட்டுப் போனேன். ‘தேங்காய் எண்ணெய் ஒரு சொட்டு காதுக்குள் விடுங்கள்’என்றார். 60 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் அம்மா சொன்னதும் அதுதான். இந்த 60 வருடமும் மருத்துவம் அதே இடத்தில்தான் நிற்கிறது. கழுத்து வலி என்று போனால் பயற்றை வறுத்து டவலிலே உருளைபோலச் சுருட்டி அதற்குமேல் படுக்கச் சொல்கிறார். எந்த மருத்துவப் புத்தகத்தில் தேங்காய் எண்ணெய் என்றும் உருட்டி வைத்த பயறு என்றும் எழுதிவைத்திருக்கிறது. 


எந்தச் சின்ன வியாதி என்று அவரைப் பார்க்கப் போனாலும் அந்தப் பகுதி உறுப்புக்குத் தேவைப்படும் அத்தனை பரிசோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிப்பார். எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. என்று பெறுபேறுகள் வரும். அவற்றை கணினியில் உருட்டி உருட்டி மேலும் கீழும் தேடி ஆராய்வார். 4-ம் வகுப்பு மாணவனிடம் 



8-ம் வகுப்புக் கணக்கைச் செய்யச் சொன்னதுபோல நெற்றியைச் சுருக்கி யோசிப்பார். சட்டென்று ஒரு வியாதியின் நுனியைக் கண்டுபிடித்து முன்னெப்போதுமே கேள்விப்பட்டிராத பெயரைச் சொல்லிக் கிலியூட்டுவார். இந்தச் சோதனைகள் இரண்டு மாதகாலமாக நடந்துகொண்டிருக்கும்போதே வியாதி தானாக நின்றுவிடும். இறுதியில் உங்களிடம் கேட்பார், ‘எதற்காக இத்தனை பரிசோதனைகள் செய்தோம்?’ அப்படிக் கேட்கும்போது உங்களுக்கு மருத்துவரிடம் ஏன் வந்தோம் என்பது மறந்துபோயிருக்கும். 



தடுப்பூசி போடப்போகும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் பெயரை நினைவூட்ட வேண்டும். அவர் மேசையில் இருப்பது உங்கள் கோப்புதான் என்பதைத் தலைகீழாகப் படித்து உறுதிசெய்வது நல்லது. தடுப்பூசிக் காலங்களில் வரவேற்பறையை நிறைத்து நோயாளிகள் குழுமியிருப்பார்கள். அறையை உலோக இருமல்கள் ஆக்கிரமித்திருக்கும். மருத்துவர் நின்ற நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுத்தள்ளுவார். என்னுடைய முறை வந்தது. நீண்ட சேர்ட் கைமடிப்பைச் சுருட்டிச் சுருட்டி புஜத்துக்கு மேல் ஏற்றியிருந்தேன்.


 டொக்ரர் பஞ்சிலே ஸ்பிரிட்டைத் தோய்த்து தோளிலே பூசிவிட்டு ஊசியைச் செலுத்தினார். அந்த வேளை அவருக்கு குஜராத்திலிருந்து தொலைபேசி வந்தது. புதுவிதமான மொழியில் சத்தமாகப் பேசிவிட்டுத் திரும்பினார். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஓர் ஊசி நிறைய மருந்தை எடுத்து என் தோள்மூட்டில் குத்த வந்தார். நான் வெலவெலத்துப்போய் எழுந்து நின்று, ஏற்கனவே அவர் குத்திவிட்டாரென்று சொன்னேன். அவர் நம்பவில்லை. அவரை ஏய்த்துவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறேன் என்று நினைத்தார். என்னைப் பார்த்தார். பின்னர் ஊசியைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்க்கத் திரும்பியபோது நான் மறைந்துவிட்டேன். 


ஒரு வருட காலமாக என் உடம்பைத் தேமல் போல ஒன்று பிடித்திருந்தது. பலவிதக் களிம்புகளைத் தந்தார். ஒருவிதமான பவுடரைப் பூசச் சொன்னார். ஒன்றுக்குமே பயன் கிடைக்கவில்லை. தேமல் பாட்டுக்கு இனப்பெருக்கம் செய்தது. ஒருநாள் அவரைப் பார்க்கப் போனபோது சோளத்தைப் பட்டுப்போல அரைத்துப் பூசச் சொன்னார். ‘நாளுக்கு எத்தனை தரம்?’ சொன்னார். ‘எத்தனை நாள் தொடர வேண்டும்?’ ‘வியாதி மாறும்வரை’. ‘சாப்பாட்டுக்கு முன்னரா பின்னரா?’ ‘எப்பவும் பூசலாம்’என்றார். என்ன ஆச்சரியம்! ஒரு வார காலத்திலேயே வியாதி குணமாகிவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த மருந்தை அவர் ஒரு வருடம் முன்னரே தரவில்லை. 



இது மருந்துக் கடையில் கிடைக்காது. சுப்பர் மார்க்கெட்டில்தான் வாங்கலாம். விற்பனைப் பெண்ணிடம் இதை எதற்குப் பாவிப்பார்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஆடைகளை இஸ்திரி பண்ணும்போது சோளமா கரைத்த தண்ணீரைத் தெளித்தால் உடுப்புகள் விறைப்பாக நிற்கும். அல்லது சூப் செய்யும்போது அதைக் கெட்டியாக்கவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்’என்றார். சலவைக்காரர்களும் சமையல்காரர்களும் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு பொருள் எப்படி மருந்தானது?



 எந்த மருத்துவப் புத்தகத்தில் இப்படி எழுதிவைத்திருக்கிறது. இவர் எழுதும் மருந்துகளை வாங்குவதற்கு அடிக்கை பலசரக்குக் கடைக்குப் போக வேண்டிவருகிறது. இப்பொழுது வீட்டிலே கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, புதினாக் கீரை, மைதா மாவு, இஞ்சிக் கிழங்கு, காளான், கருப்பட்டி என்று சகலவிதமான பொருள்களையும் சேமித்து வைத்திருக்கிறோம். அடுத்த வியாதிக்கு என்ன எழுதுவாரோ? எதற்கும் தயாராக இருப்பது நல்லது. 



அ. முத்துலிங்கம், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected] 

thanx - the hindu tamil

ராமராஜன் லல்லு பிரசாத் யாதவை ஜெயில் தண்டனையில் இருந்து காப்பாற்றியது எப்படி?

 

மாட்டு தீவன ஊழலில் சிக்கிய லாலு நம்ம ஊர் பசுநேசன் ராமராஜனை சந்தித்தால் என்ன பேசுவார்? - ஒரு ஜாலி கற்பனை. 



ராமராஜன்: லாலு ஜி, மாட்டுக்கு தீவனம் வாங்கி நீங்க பல கோடி சம்பாதிச்சிங்க, மாட்டு மடியில இருந்து பால் கறக்கறமாதிரி நடிச்சு சில கோடிகளைச் சம்பாதிச்சவன் நான். 


லாலு: அச்சா... அச்சா... ஆனா உங்களை வாழ்வச்ச மாடு என்ன ஜெயிலில தள்ளிடுச்சே ராமராஜன்ஜி. 


ராமராஜன் : ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணுங்குறது எங்க ஊரு பழமொழி லாலுஜி. எங்க ஊரு அரசியல் வாதிங்கள பாருங்க, எதையும் செய்ய மாட்டாங்க, ஆனா, திட்டப்பணி செஞ்சு முடிச்சதா பணத்த சுருட்டிட்டு ஜம்முன்னு சுதந்திரமா வெளியில நடமாட்டிட்டு இருக்காங்க. 



லாலு: ஒகே ஜி, நம்ம ரெண்டு பேரும் பசுமாடு விஷயத்துல ஒண்ணு. இப்ப எப்படி தப்பிச்சு வெளியில வரதுன்னு ஐடியா கொடுங்க ராமராஜன்ஜி. 


ராமராஜன்: தீவனம் போட்டவனுக்கு சானி அள்ள தெரியாதுங்கிற மாதிரி இருக்கு உங்க பேச்சு. முதல்ல உங்க காஸ்டியூம மாத்தனும், அரைக்கால் டவுசர், பச்ச முண்டா பணியன், சிகப்பு துண்டு தோல்ல போட்டுக்கிட்டு, ஊருக்குள்ள நடமாடியிருந்தா, பசு நேசன்னு, பீகார்வாசிங்க கொண்டாடியிருப்பாங்க. உங்க மேல சந்தேகப்பட்டு இருக்க மாட்டாங்க ஜி.


லாலு: உங்க படத்த பாக்காம போயிட்டேன் ராமராஜன் ஜி, இப்ப தப்பிக்க வழி என்னான்னு சொல்லுங்க ஜி. 


ராமராஜன்: வெரி சிம்பிள், மாட்டுக்கு என்னா வாங்கி ஊழல் செஞ்சீங்க... 


லாலு: தீவனம் வாங்கி. 


ராமராஜன்: இப்ப அந்த தீவனம் எங்க இருக்கு? 


லாலு: மாடுங்க சாப்பிட்டுடுச்சு. 


ராமராஜன்: எந்த வழக்கா இருந்தாலும், பார்த்த சாட்சி வேணும்: இல்லன்னா, உபயோகப்படுத்தப்பட்ட பொருள சாட்சியா நீதிமன்றத்தில ஒப்படைக்கணும். அப்பதான் வழக்கு நிக்கும். 


லாலு: ராமராஜன்ஜி, நீங்க பாடி பாடி மாட்ட அடக்கிறதலதான் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நினைச்சேன். ஆனா, வழக்காடுறதலையும் சூப்பரப்பு. 


ராமராஜன்: (பேசிட்டு இருக்கும் போது, குறுக்கால பேசாத, சின்னபுள்ள தனமா, என்றபடி சிகப்பு துண்டால் லாலுவை அடித்து உட்கார வைத்தபடி) இப்ப தீவனத்த மாடு சாப்பிட்டுடுச்சு, அத சாப்பிட்ட மாடுங்க பாதி செத்து போச்சு. தீவணம் வாங்கினது உண்மை. அதுல ஊழல் நடந்து இருக்கிறதா நிருபிக்க, அத சாப்பிட்ட மாடுங்க சாட்சி சொல்லுனும், இல்லன்னா, ஊழல் நடந்ததா சொல்லுற தீவணத்த கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைங்கன்னு, நீதிமன்றத்தல ஒரு போடு போடுங்க லாலுஜி, அப்புறம் உங்கள கம்பி எண்ண வெச்சவங்கள, நாம கம்பி எண்ண வைக்கலாம்.” 



(பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி.. என பாடியபடி ராமராஜன் இடத்தை காலி செய்ய, அவர் நடந்து போகும் அழகை பார்த்து, லாலுஜி, அந்த திசை நோக்கி பெரிய கும்பிடு போட்டபடி, வழக்கை எதிர்கொள்ள தயாராகிறார்.) 


thanx  - the  hindu tamil

ரஜினி என் படத்துல வில்லனா நடிப்பாரா? சத்யராஜ் ஷங்கரிடம் கேள்வி -@ த ஹிந்து தமிழ்

நடிகர் சத்யராஜ் 

கண் முன்னே மகளின் காதல் முடிந்துபோனதில் இதயம் நொறுங்கி ‘ முதல் ஹார்ட் அட்டாக்’கை எதிர்கொள்ளும் உயர் தட்டு அப்பா. ஊருக்காக மகளின் காதலை எதிர்த்துவிட்டு, இரவோடு இரவாக பை நிறையப் பணம் கொடுத்துக் காதலனோடு மகளை அனுப்பிவைக்கும் முறுக்கு மீசை அப்பா. மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்விதான் மாணவர்களின் எதிர்காலம் என்று நம்பி, கடைசியில் தனது மாணவனின் தனித்திறமைக்கு மண்டியிடும் பேராசிரியர்...



வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகிப் பிறகு நாயகனாகப் பரிணமித்த சத்யராஜின் தற்போதைய மென்மையான திரை முகங்கள்தான் இவை. ‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் சத்தியாராஜின் குணசித்திரம் பார்த்து, நம்ம அப்பாவும் இப்படி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று ஏங்காத இளம் ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.



பசுமை போர்த்திய கோவையில், தாவரவியல் பட்டதாரியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எம்.ஜிஆரின் தீவிர ரசிகராகச் சுற்றிக்கொண்டிருந்தார் ரங்கராஜ். கோவையை அடுத்த கோபிச்செட்டிப்ப்பாளைத்தில் நடந்த ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பு அவரைச் சுண்டி இழுத்துவிட்டது. பிறகு சென்னை வந்து, கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இணைந்தார். போதிய நாடக அனுபவங்கள் கிடைக்கும் முன்பே, சினிமா அரவணைத்துக்கொள்ள, ரங்கராஜ் சத்தியராஜ் ஆனார்.



1978இல் ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் அறிமுகமான இவரை, ரசிகர்கள் சபிக்கும் அளவுக்குத் தமிழ் சினிமா வில்லன் கதாபாத்திரங்களில் வலிக்க வலிக்க முத்திரை குத்தியது. இவரது கல்லூரி நண்பரான இயக்குனர் மணிவண்ணன் ‘24 மணிநேரம்’ படத்தின் மூலம் இவரை திகிலான வில்லன் ஆக்கினார். அந்தப் படத்தில் “ என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே?” என்று சத்தியராஜ் பேசிய வசனமும் அதைப் பேசிய விதமும், அவரது அடையாளமாகவே மாறிவிட்டன.



நக்கலும் பகடியும் மிக்க வில்லன்னாக வலம் வந்த சத்யராஜை அதே மணிவண்ணன் ‘முதல் வசந்தம்’ படத்தில் ‘குங்குமப் பொட்டு’ கவுண்டராக ஆக்கி, குணசித்திர வில்னனாக மாற்றினார். சத்தியராஜுக்கு இப்படியும் ஒரு முகம் உண்டா என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள் அந்தப் படத்தை.



“நடிகர் சத்தியராஜை எனக்கு அறிமுகப்படுத்தியதே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இல்லையென்றால் சத்தியராஜ் இல்லை. அவர் என்னை நடிகனாக மட்டும் ஆக்கவில்லை. வாசகனாகவும் மாற்றினார். சே குவேராவையும், ஹோசிமினையும் படிக்க வைத்தார். என்னை வரலாற்று மாணவன் ஆக்கினார்” என்று நெகிழும் சத்தியராஜுக்கு மணிவண்ணனின் இழப்பு பெரிய அடி. 



மணிவண்ணனும் சத்தியராஜும் கூட்டணி அமைத்த சுமார் 25 படங்கள், அவர்களுக்கேன்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கின. இவர்களது கூட்டணியில் உருவான ‘அமைதிப் படை’ சமகால அரசியலை நையாண்டி செய்யும் வேலையைச் செய்தது. வால்டர் வெற்றிவேல், மக்கள் என்பக்கம், நடிகன் உள்ளிட்ட படங்கள் அவரை வசூல் நாயகனாகவும் மாற்றின.



ஒரு கட்டத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பு பாணியிலிருந்து விடுபட்டார். ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘பெரியார்’ ஆகியவை சத்தியராஜின் நக்கல் பிம்பத்தைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கிப்போட்டன. “ என்னை கதாபாத்திரமாக மட்டுமே பார்த்து ஏ.எல். விஜய், பொன்.ராம், அட்லீ மாதிரியான இளம் இயக்குனர்கள் நடிக்க கூப்பிடறாங்க. ராஜாராணிக்குப் பிறகு மகளோட வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மாலுக்கு ஷாப்பிங் போனேன். 



பெண் பிள்ளைகள் ஒடிவந்து கையப் பிடிச்சுக்கிட்டு உருகுறாங்க. இந்த மாதிரியான ஒரு நெகிழ்ச்சி புதுசா இருக்கு” என்று சிலிர்க்கும் சத்யராஜ், “நிஜத்திலும் நான் நல்ல அப்பாதான்” என்று தன்க்கே உரிய முத்திரையுடன் முடிக்கிறார். தன் திரைப் பயணத்தை இதற்கு முன்பு மடைமாற்றிய மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.



ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்கிறீர்களா என்று இயக்குநர் ஷங்கர் கேட்டபோது அவர் என் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேட்டதாகச் சொல்வார்கள். அந்த அளவுக்குத் தன் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாத சுதந்திரக் கலைஞர் சத்யராஜ். ஆனால் அதே ஷங்கரின் நண்பன் படத்தில் இலியானாவுக்கு அப்பாவாக நடித்து வித்தியாசமான வேடங்களில் தனக்கிருக்கும் ஈடுபாட்டையும் காட்டினார். அதையடுத்து, முன்னணி நடிகைகளின் பாசமுள்ள அப்பாவாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார். தீபிகா படுகோனே, ஸ்ரீவித்யா, நயன்தாரா என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது.




சத்யராஜ் தற்போது நடித்துவரும் படங்கள் ஹிட் ஆவதில், அப்பா கதாபாத்திரம் என்றால் சத்யராஜ் என்ற சென்டிமெண்ட் உருவாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற சென்டிமென்ட்களில் நம்பிக்கையில்லாத பெரியாரின் தொண்டரான சத்யராஜ் இதைப் பற்றி என்ன நினைப்பார்? ‘ராஜா ராணி’யில் ஒரு இடத்தில் அப்பா சத்யராஜ் சொல்வதுபோல சென்டிமென்ட் எல்லாம் அவருக்கு “செட் ஆகாது”. வில்லன், நாயகன் என்று மாறிவரும் திரை முகங்களில் இதுவும் ஒன்று என்று அவர் கலைப் பயணம் தொடர்கிறது.


நன்றி - த ஹிந்து தமிழ்

மமோ -மெமோ - நமோ

ஒரு கொய்யாப்பழம் உங்க வயிற்றுப்பசியை சிறிதளவு கூட ஆற்றிட முடியாது. ஆனால்

பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....

ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
Photo: ஒரு கொய்யாப்பழம் உங்க வயிற்றுப்பசியை சிறிதளவு கூட ஆற்றிட முடியாது. ஆனால்

பல பறவைகளுக்கு அது இரையாகக்கூடும்....

ஆகவே வீட்டு மரங்களில் ஒன்றிரண்டு பழங்களையாவது உங்களை நம்பியிருக்கு இந்த ஜீவன்களுக்காக விட்டு வைப்பீர்.
1. உலகத்துலயே ரொம்ப கஷ்டமான வேலைகள் 1 கோபமா இருக்கும் பொண்டாட்டியை சமாதானப்படுத்துவது 2 குறை சொல்லும்் மேனேஜர்ட்ட நல்ல பேர் எடுப்பது



=====================


2  ஜுர வேகத்தில் என்னை அலை பேசியில் அழைத்தாய்.அசுர வேகத்தில் உன்னருகே வந்து சேர்ந்தேன்


=======================


3  இந்த பொண்டாட்டிங்க பீரோ ல 2 தலைமுறைக்குத்தேவையான சேலை இருந்தாலும் புருசனை நச்சிட்டேதான் இருப்பாங்க




============================


4 தீபாவளி செலவைக்குறைக்க (அவங்கவங்க சொந்த) சம்சாரத்துடன் வலியனா சண்டை போடவும்


======================


5  ஆய கலைகள் 64 என்பவை யாவை ? கீரை வகைகள் 64 வகையையும் சமைக்கும் முன் எப்படி ஆய்ந்து குண்டாவில் போடுவது என்பதே ஆய கலைகள் 64



=====================




6 ஆம்வே உயர் அதிகாரி கைது # ஜெயில் களி ஆன் த வே


=====================


7  அழகான மனைவி ,அன்பான துணைவி (1+1=2) அமைந்தாலே பேரின்பமே # புதுப்புது அ(ன)ர்த்தங்கள்


=======================



8 சுந்தர் சி மைண்ட் வாய்ஸ் - என் சம்சாரத்துக்கு நானே இன்னும் ஹேப்பி பர்த்டே சொல்லலை , ஆளாளுக்கு சொல்லிட்டு இருக்காங்க



======================


9  மாப்ளை ஊட்டி , பொண்ணு கொடைக்கானல் # மேடு ஃபார் ஈச் அதர்



=====================


10 புருசன் வாசல் திண்ணையில் ஊடல் கொண்டு வெளிநடப்பு செய்திருந்தாலும் தாலியை பத்திரமாகக்கழட்டி பீரோவில் வைத்து விடுகிறார்கள் நவநாகரீக நவமணிகள்



=======================

குழந்தை மாற்றிப்போட்ட காலணி
மாறவேயில்லை நாம்...

11 தனித்தே போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுமே திமுகவுக்கே..: மு.க. ஸ்டாலின் # அப்துல் கலாம் வழியில் கனவு காண எல்லாருக்கும் உரிமை இருக்கு


=====================


12 மோடியிடம் நாம் கற்க வேண்டியது நம் எதிரியை யாராவது அவமானப்படுத்தினால் எல்லோருக்கும் பரப்பி இப்படி சொல்லக்கூடாது என கண்டிக்க வேண்டும்


===================


13  கோவை அர்ச்சனாவில் ஆரம்பம் முதல் நாள் முத ஷோ பார்க்க அழைக்க - 9894848309


===================


14 லூசிங்கற பொண்ணை செல்லமா லூஸ்னு கூப்பிட்டா நம்மை லூஸ்னு எதிர்த்துப்பேச முடியாது அந்த லூசால


=====================


15 மெல்லினம் ஆன பெண்ணினம் ,செல்லினம் இரண்டும் நம்மை திசை திருப்ப தவறான யோசனை கொடுக்கும்


====================


16  நஸ்ரியா என்பர் நயன் தாரா என்பர் ஸ்ரீ திவ்யாவை க்ளோசப்பில் காணாதார்


====================


17  காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் லீவ் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளும் முன் யோசனை உள்ளவன்தான் தமிழன்



=====================


18  எல்லா(ர்) சம்சாரங்களும் அவரவர் புருசன் மேல் அன்பு ,பாசம் ,அக்கறை ,மரியாதை காட்டும் நாள் - சம்பள நாள் # என்னங்கங்க



====================


19 விஜய் வில்லனா நடிச்ச ப்ரியமுடன் படம் நல்லாருந்தும் எதிர்பார்த்த அளவு ஓடலை.அஜித் வில்லனா நடிச்ச மங்காத்தா எதிர்பாராத அளவு ஓடிடுச்சு



====================


20  ஜெ - இவங்களுக்கு சீட் குடுத்ததே பெருசு.இதுல பின் வரிசை ,கடைசி வரிசைன்னு புலம்பல் வேற.அடுத்த விழாவில் எல்லாரையும் நிக்க வெச்சுடனும்


=====================



21  குஷ்பூ இட்லி எங்கே?னு ஒருத்தர் குஷ்பூவுக்கே டேக் போட்டு கேட்கறாரு.இன்னைக்கு குஷ்பூ பர்த்டே க்கு சுந்தர் சி கடுப்பாகிடுவார்னு தோணுது



=====================


22  ம மோ வுக்கு மெமோ கொடுக்க வந்தவர் தான் நமோ # மமோ = மண்மோகன் ,நமோ = நரேந்திர மோடி



=====================

 

Tuesday, October 08, 2013

நஸ்ரியா VS சற்குணம் - ‘இனிக்க இனிக்க’’




பாடல் காட்சியில் நடித்தது நான் இல்லை என்று சொல்லத் தயாரா?நஸ்ரியா வுக்கு சற்குணம் சவால்!



நய்யாண்டி  திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், 'இனிக்க இனிக்க...’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை அழைத்த போது, "நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து  எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


thanx - dinamani 



சென்னை,
‘‘நய்யாண்டி படத்தின் பாடல் காட்சியில் நஸ்ரியாவுக்கு பதில், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தவில்லை’’ என்று டைரக்டர் சற்குணம் கூறியிருக்கிறார்.
படுகவர்ச்சி
தனுஷ்–நஸ்ரியா ஜோடி நடித்து, ஏ.சற்குணம் டைரக்ஷனில், கதிரேசன் தயாரித்துள்ள படம், ‘நய்யாண்டி.’ இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், ‘நய்யாண்டி’ படத்தின் ஒரு பாடல் காட்சியில்  நஸ்ரியா கவர்ச்சியாக நடிக்க மறுத்ததாகவும், அந்த காட்சியில் அவருக்கு பதில் ஒரு ‘டூப்’ நடிகையை படுகவர்ச்சியாக நடிக்க வைத்து இருப்பதாகவும் டைரக்டர் சற்குணம் மீது நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார் செய்தார்.
நஸ்ரியாவின் புகாருக்கு பதில் அளித்து, அந்த படத்தின் டைரக்டர் ஏ.சற்குணம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
தேசிய விருது
‘‘நய்யாண்டி படத்தின் கதாநாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் வரும் ‘‘இனிக்க இனிக்க’’ பாடல் காட்சியில், நஸ்ரியாவுக்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரைலரில் ஒரு ‘குளோஸ் அப்’ ஷாட்டில், ‘டூப்’பை பயன்படுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நான் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா ஆகிய நல்ல தரமான படங்களை இயக்கி, தேசிய விருது பெற்றுள்ளேன். ‘‘இனிக்க இனிக்க’’ பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாவை தவிர வேறு யாரும் இல்லை.
என்ன பிரச்சினை?
படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில், அந்த காட்சியின் முக்கியத்துவம் பார்வையாளர்களை சென்றடைய ஒரு ‘குளோஸ் அப்’ ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம், நான் ஒரு குளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப்போ என்று சொன்னேன்.
இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது. வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன நஸ்ரியாவுக்கு இப்போது என்ன பிரச்சினை? என்று தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய விளம்பரத்துக்காக கூட செய்திருக்கலாம்.
நீக்க தயார்
ஒருவேளை நஸ்ரியாவுக்கு டிரைலரில் வரும் அந்த ஒரு குளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால், அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா, மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து, நானில்லை...டூப்.. என்று சொல்ல தயாரா?
நய்யாண்டி, குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் கூடிய படம். இந்த படத்துக்கு, ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் டைரக்டர் ஏ.சற்குணம் கூறியிருக்கிறார்.

my tweets 

1. நய்யாண்டி ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் உண்மை கண்டறியும் டாக்டர் குழு , சி பி ஐ அதிகாரிகள் கேம்ப்
2 நஸ்ரியா சம்பளம் 26 ளட்சத்தில் இருந்து 4 கோடி ஆனது .ஒபாமா இந்தியா பயணம்.பொருளாதார நெருக்கடிக்கு ஐடியா கேட்க முடிவு.பிரதமர் பெருமிதம்

3 நான் ஏவாள் மாதிரி.எனக்கு தொப்புளே கிடையாது - நஸ்ரியா அதிரடி அறிவிப்பு.சற்குணம் மயக்கம் #சும்மா
4 நஸ்ரியா பிரச்சனையை தெளிவு படுத்த நய்யாண்டி 3 டி யில் வெளியிடப்படும்.சற்குணம் அறிவிப்பு .நஸ்ரியா திகைப்பு .ரசிகர்கள் கிளுகிளுப்பு # சும்மா
5 சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் - நய்யாண்டியில் காட்டப்படுவது நஸ்ரியா ஹிப்பா?டூப் ஹிப்பா?

6 இனிக்க இனிக்க பாடலில் நடித்திருப்பது நஸ்ரியாவைத் தவிர வேறு யாரும் இல்லை- நய்யாண்டி ் சற்குணம் # விட்டா சூடம் அணைச்சு சத்தியம் செய்வாரு போல
7 நஸ்ரியா ஒருவேளை தன்னுடைய marketing publicity காக செய்திருக்கலாம். - சற்குணம் # நய்யாண்டி படத்துக்கான பப்ளிசிட்டி மாதிரி தெரியுது
8 நய்யாண்டில அந்த தொப்புள் சீனை தூக்கியே ஆகணும் - நஸ்ரியா அடம் # டூப் ஹிப் சீனைத்தூக்க அவங்க ரெடி.ரசிகர்கள் ஏமாந்துடுவாங்க
9 மேடம்.நய்யாண்டி ல வர்ற ஹிப் சீன் உங்களுது இல்லை .டூப்னு நியூஸ் வருதே?  

நைஸ்ரியா - நம்பாதீங்க.டூப்.


diSki-காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ! நய்யாண்டி நஸ்ரியா சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்! கோடம்பாக்கம் அதிர்ச்சி


Monday, October 07, 2013

உலகப்பட இயக்குநர் மிஷ்கின் அவர்களுக்கு ஒரு பெஞ்ச் ரசிகனின் கேள்விகள்

இணைய தளத்தில் சினிமா விமர்சனங்கள்  பெரிதும்  பட வசூலை பாதிக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டு ரொம்ப நாட்களாகவே உண்டு. ஏன்னா முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனா  வார இதழ்களில் விமர்சனம் வர 7  டூ 14 நாட்கள் ஆகும் .மக்களுக்கு உண்மையான  ரிசல்ட் தெரியவே 2 வாரம் ஆகி விடும் , ஆனா இப்போ அப்படி இல்லை , படம்  ரிலீஸ் ஆவது காலைல 11 மணிக்குன்னா  நம்மாளு  12 மணிக்கே ஃபேஸ் புக் ல ஸ்டேட்டஸ் போட்டுடறான், இது  தேறும் , இது தேறாதுன்னு .இது பட தயாரிப்பாளர்கள் , டைரக்டர்களுக்குப்பிடிப்பதில்லை. ஏன்னா வசூல் பாதிக்குது.


இப்போ லேட்டஸ்ட்டா  ரிலீஸ் ஆன ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் அனைவராலும்  பாராட்டப்படும் ஒரு நல்ல படம் தான், ஆனால் மக்களிடம் அது சரியான அளவில் போய்ச்சேரவில்லை.  இது மிஷ்கினுக்கு மிகுந்த  வருத்தத்தை , கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமே  இல்லை. ஒரு படைப்பாளியின்  வலியை , துயரத்தை , ஆதங்கத்தை \உணர முடிகிறது . ஆனால்  சென்னையில்  நிகழ்ந்த  மிஷ்கின் - ட்வீட்டர்கள் - பிளாக்கர்கள் சந்திப்பில் அவர் பேசியதெல்லாம்   ரொம்ப  ஓவர் . அவர் பேசிய பேச்சுக்களும்  , அதற்கு என் கேள்விகளும் 


>>>>>ஒரு படம் எடுத்துப் பாருங்கய்யா அதன் வலி என்னன்னு உங்களுக்குத் தெரியும்>>>>>


சார் , எங்க வேலை படம் எடுப்பதல்ல , படம் பார்ப்பது , நல்லா  இருந்தா  மக்களிடம் அதைக்கொண்டு போய் சேர்ப்பது , நல்லா இல்லைன்னா போய்டாதீங்க, இது டப்பா என சொல்வது . இதோடு எங்க வேலை  முடியுது . போவதும் , போகாததும்  ரசிகனின் முடிவு , அதில் நானோ , நீங்களோ தலையிட  முடியாது 


>>>விமர்சனம் செய்யுங்கள் ஆனால் விமரிசனங்களால் படத்தைக் கொல்லாதீர்கள்



விமர்சனம் என்றாலே படத்தின்  நிறை  , குறை சொல்வதுதான் . குறை இல்லாமல் ஆனானப்பட்ட மணிரத்னம் , ஷங்கர் , பாலுமகேந்திரா , மகேந்திரன் , கே பாலச்சந்தர் கூட எடுத்து விட  முடியாது .  எப்படி படத்தோட  பிளஸ் சொல்லும்போது சந்தோஷப்படறீங்களோ அதே போல் குறைகளை ஒத்துக்குங்க , ஏத்துக்குங்க . அடுத்த படத்தில் அதை தவிர்க்கப்பாருங்க .ஒரு சினிமா  விமர்சகனால் படத்தைக்கொல்லவும் முடியாது , சூப்பர் ஹிட் ஆக்கவும்  முடியாது 


>>>>எங்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு என்று நம்புங்கள் . “நீங்களே இவ்வளவு லாஜிக் பாக்கும்போது…எடுத்த எனக்கு தோன்றியிருக்காதா? எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு



சார், உங்களுக்கு புத்தி  இருக்குன்னு நாங்க நம்பறோம் , அதே போல்  எங்களுக்கு குறைகளை எடுத்துச்சொல்லும்  உரிமை இருக்குன்னு  நீங்களும் நம்பனும், ஒத்துக்கனும் 



>>>>> பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது



முந்துபவர்கள்க்கே முன்னுரிமைனு ஆ ராசாவே  ஸ்பெக்டரம் பங்கு தாரை வார்த்ததுக்கு விளக்கம் கொடுத்திருக்கார் , அப்படி  இருக்கும்போது  ஒரு விமர்சகன்  விரைந்து விமர்ச்சனம் தரப்பார்ப்பானா?  படம்  ரிலீஸ் ஆகி ஆடி ஓடி ஆய்ஞ்சு முடியட்டும் , டி வி ல எல்லாம் போட்டு முடிச்சபின் எழுதலாம் அப்டினு வெயிட் பண்ணுவானா? அப்படியே  அவன் 30 நாட்கள்  கழிச்சு  விமர்சனம் போட்டா அதை யார் படிப்பா? 



>>>>>>>>இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா? என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா? குண்டடிப்பட்டு கிடக்கும் அவன் நிலையை அந்த மருத்துவ மாணவன் கணித்து ஆம்புலன்ஸ் வரும் வரை தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தே அவன் செயல் படுகிறான்.



நீங்க  மட்டும் தான் இரவு பகல் உழைத்து படம் எடுக்கறீங்களா? மக்கள் ராப்பகலா கஷ்டப்படறதில்லையா? அவங்க காசு மட்டும் வேஸ்ட் ஆகலாமா?   மக்கள் பணம் ஒரு நல்ல படத்துக்கு செலவாகனும்னு எங்களுக்கு அக்கறை இல்லையா?  கோடி  ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் உங்களுக்கு  அந்தப்பணத்தை  திருப்ப எடுக்க  கட்டாயம் , அதே போல்  ஒவ்வொரு ரசிகனும் 100  ரூபாய் செலவு செய்யத்தகுதி  உள்ள படம்  தானா ? என்பதை சொல்ல எங்களூக்கு உரிமை உண்டு 



>>>>>>>>ஸ்ப்லினாக்டமி பற்றி 3 மாதாம் ஆய்வு செய்தும் 30 மருத்துவர்களைக் கலந்தாலோசித்தும், அந்தப் பகுதியை ஓர் மருத்துவரை வைத்தே இயக்கினேன்


எத்தனை டாக்டர்களை வெச்சு எடுத்தீங்க ? எத்தனை நர்சை வெச்சு எடுத்தீங்க என்பது மக்களுக்கு அநாவசியம் . என்ன எடுத்தீங்க ? அதை எப்படி மக்களுக்கு கொடுக்கறீங்க என்பதே  முக்கியம் 



>>>>> பாட்டில்லாமல் புரடியூசரிடம் கதை சொல்லிப்பாருங்கள்..செருப்பால் அடிப்பார்கள். பாட்டு இல்லாம் ஒரு படம் எடுத்ததாலே இன்னும் நிறைய இயக்குனர்/தயாரிப்பாளர்களுக்கு இந்த செயல் ஒரு முன்னுதரணமாக இருக்கும், அதை நீங்கள் பாராட்ட வேண்டும் 


என்னமோ நீங்க தான் பாட்டில்லாம படம் எடுத்த முதல் ஆள் மாதிரி பேசாதீங்க , ஆல்ரெடி  கமல் -ன் பேசும் படம் ,  கடமை கண்ணியம் கட்டுப்பாடு  உட்பட  பல படங்கள் பாட்டில்லாமல்  வந்து செம  ஹிட் ஆகவில்லையா? 




>>>>>படம் துவக்கத்துல முதுகுல சிலுவையை சுமந்தவன்… முடிவுல நெஞ்சுல சுமக்கிறான்…இத எத்தன பேரு கவனிச்சீங்க 



கே பாலச்சந்தர் கூடத்தான் பல கே பி டச் வெச்சாரு , எத்தனை பேருக்கு அது புரிஞ்சுது ?  உங்க குறியீடுகள் ,  மேதாவித்தனங்கள் இதெல்லாம் சாதா ஜனத்துக்குத்தேவை இல்லாதது . அவன் கவலை எல்லாம் அவனுக்குப்படம் புரிஞ்சுதா ? இல்லையா? என்பதே 


>>>>படத்தில் உள்ள சிறு தவறுகளை பூதக் கண்ணாடி மூலம் பெரிது படுத்துகிறீர்கள்.  ஒரு ஓட்டைப் படத்தில் ( மாமூல் மசாலா ) இருக்கும் லாஜிக் குறைபாடுகளைக் கண்டுக்காமல் அந்த படத்தை அமோக வெற்றிப் படமாக ஓட செய்கிறீர்கள்


  ஸ்கூல் ல நல்லாப்படிக்காத  பையன்  ஒரு தப்புப்பண்ணினா அது யார் கண்ணுக்கும்  தெரியாது . நல்லாப்படிக்கிறபையன்  சின்னத்தப்பு  செஞ்சாலும்  அது எல்லாருக்கும்  தனியாத்தான்  தெரியும் . ஹரி  , ராம நாராயணன் மாதிரி மசாலா டைரக்டர்ஸ் தப்பு செஞ்சா மக்கள் அதை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க , ஆனா  ஒரு மணி ரத்னம் படம் , ஒரு ஷங்கர் படம்னா கண் ல விளக்கெண்ணெய் விட்டுட்டுப்படம் பார்ப்பாங்க 



>>>ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள்



 குழந்தையாப்படம் பார்க்கனும்னா  வீட்லயே கார்ட்டூன் நெட் ஒர்க்கோ , டோராபுச்சியோ பார்த்துட்டுப்போறோம் , எதுக்கு தியேட்டர்  வரனும் ? 




>>>>>>>>>”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன



என்ன தான்  நீங்க சப்பைக்கட்டு கட்டுனாலும்  வயிற்றில்  துப்பாக்கிக்குண்டு பாய்ந்த ஒருவன் மேஜர் ஆபரேஷன் செய்யப்பட்டு அதுவும்  அரைகுறையான  மெடிக்கல் ஸ்டூடண்ட்டின் அவசர ஆபரேஷனில்  24 மணீ நேரம்  கூட ஆகாமல் எழுந்து போறான் அதுவும் தப்பி ஓடறான் என்பதெல்லாம்  ஓவர் .எத்தனை டாக்டர்ஸ் சொன்னாலும்  நம்ப மாட்டோம் 


இவை எல்லாம் போக  சினிமா  விமர்சகர்கள் மேல் வைக்கப்படும் பொதுவான  குற்றச்சாட்டுகள் “ நீ  ஒரு படம் எடு பார்ப்போம் , இத்தனை குறை சொல்றே இல்ல ? என்பதே .  இதுக்கு பதில்  ரொம்ப சிம்ப்பிள் .  படம் பார்த்து விமர்சிக்க மட்டுமே எங்களுக்குத்தெரியும் , படம் எடுக்கத்தெரியாது ., அதுக்கு அவசியமும் இல்லை , இப்போ நெட்டில் எங்களை உங்களுக்குத்தெரியுது , நீங்க கேள்வி கேட்கறீங்க , ஆனா ஒரு பெஞ்ச் ரசிகன் யார்னே உங்களுக்குத்தெரியாது , டக்னு படம் டப்பா அப்டினு சொல்லிட்டுப்போய்ட்டே இருப்பான் , அவனை என்ன செய்ய முடியும் ? உங்களால ?


thanx - amas madam blog ( miskin speech taken from there)


சில ட்வீட்ஸ்



1. திருமணமான புது மணத்தம்பதிகள் தங்கள் முதல் இரவை 30 நாட்கள் கழித்தே கொண்டாட வேண்டும் - பிரபல இயக்குநர் உருக்கமான வேண்டுகோள்




2 டாக்டர்.ஆபரேஷன் முடிஞ்சுது.பேஷன்ட் பிழைப்பாரா? மாட்டாரா?



 எதையும் 30 நாள் கழிச்சுத்தான் சொல்ல முடியும்மா



3 மக்கள் பட விமர்சனம் எதையும் படிக்காமல் தியேட்டருக்குப்போய் ஏமாற வேண்டும் .யார் காசு வேஸட் ஆனா எனக்கென்ன? ஹி ஹி்



4 பொது மக்களைத்தவிர விமர்சகர்கள் ,மீடியாக்கள் யாரும் சினிமாவே பார்க்கக்கூடாது.பார்த்தாலும் வாயைத்திறக்கக்கூடாது .அவசரச்சட்டம் அமல் # சும்மா



5 புரட்சித்தலைவியின் மருத்துவ சேவை 108 பற்றி மிஷ்கின் அவதூறாகப்பேசியது நல்ல வேளை கட்சிக்காரங்க கவனிக்கல


6  நல்ல வேளை.விகடன் ல 51 மார்க் குடுத்ததால தப்பிச்சாங்க ;-))



7 இனிமேல் என் படத்தைப்பார்க்க வரும் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டுதான் படம் பார்க்கனும்னு சொல்லிடுவாரோ?




8 ஓநாய் = இயக்குநர் . ஆட்டுக்குட்டி = தயாரிப்பாளர் . வெட்டி = ஆடியன்ஸ்