Showing posts with label வளர்ச்சி. Show all posts
Showing posts with label வளர்ச்சி. Show all posts

Saturday, January 24, 2015

தனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா? - அலசல்

தவிர்க்க முடியாத அடையாளம் - தனுஷ் 25

 

13 ஆண்டுகளில் 25 படங்கள், 27வது வயதில் தேசிய விருது, கொல வெறி என்ற ஒரே பாடலில் மாபெரும் புகழ் என தமிழ் சினிமாவில் உற்றுக் கவனிக்க வைக்கும் ஓர் ஆளுமை தனுஷ் .

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று விவாதிக்கப்பட்டுவரும் தருணத்தில் நாயகனுக்கும், சினிமாவுக்குமான ஊடாட்டத்தைப் பற்றிப் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. 2014-ன் சினிமா குறித்த எதிர்வினைகள் அதற்குப் பொருத்தமான சான்றுகளை முன்வைக்கின்றன. 


 

தனுஷின் வருகை அண்மைக் காலத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டது என உறுதியாக சொல்லலாம். 2002ல் ‘துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் கதாநாயகனாக தனுஷ் அறிமுகம் ஆனார். படம் ஓரளவு பேசப்பட்டதே தவிர, மறந்தும்கூட தனுஷின் பெயரை உச்சரிக்கவில்லை. ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்' தனி கவனம் பெற்றது. கதாநாயகனுக்கான ஆகிவந்த குணாம்சம் எதுவும் இல்லாத தனுஷை ‘காதல் கொண்டேன்' தனித்துக் காட்டியது. அதற்குப் பிறகு 'திருடா திருடி' படத்தில் நடித்த தனுஷ் மன்மத ராசா பாடலால் உச்சத்துக்குச் சென்றார்.
ஒல்லியான தேகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற தோற்றம் ஆகியவற்றின் மூலம் நாயகனுக்கான இலக்கணத்தை உடைத்தெறிந்தார் தனுஷ். ஒல்லிப்பிச்சான் என்று தன்னை நய்யாண்டி செய்தவர்களே கொண்டாடும் அளவுக்கு வளர்ந்தார். இத்தனைக்கும் எல்லா திறமைகளோடும் தனுஷ் சினிமா துறைக்குள் நுழைய வில்லை. ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டார்.
தனுஷுக்கு ‘புதுப்பேட்டை' மிகச் சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது. சினிமாவுக்கு வந்த நான்காவது ஆண்டில் தனுஷ் ஒரு முழுமையான நடிகனாக தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டது இந்தப் படத்தில்தான்.
“தொண்டையில ஆப்ரேஷன், காசு கொடு” என்று பிச்சை எடுக்கும் தனுஷ் பின்னாளில் கொக்கி குமாராக அதில் பரிணாம வளர்ச்சி பெறுவதைப் பார்த்திருக்கலாம். ஒரு நடிகனாக, நிஜ வாழ்க்கையிலும் அத்தகைய பரிணாம வளர்ச்சியை தனுஷ் அடைந்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. 



இரண்டு வகைச் சவாரி
தனுஷின் படங்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முழுக்க முழுக்க வணிகப் படங்கள், நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் படங்கள். இந்த, இரண்டு வகைப் படங்களிலும் தனுஷ் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
வணிக அம்சங்கள் நிறைந்த படங்கள், பரிசோதனை முயற்சிகள் என இரண்டிலும் திறனைக் காட்டி வெற்றி வாகை சூடத் தனுஷால் முடிகிறது. ‘திருவிளையாடல் ஆரம்பம்', ‘பொல்லாதவன்', ‘யாரடி நீ மோகினி', ‘வேலையில்லா பட்டதாரி’ போன்ற படங்களில் தன்னை வணிகப் படங்களின் நாயகனாக, வசீகர நட்சத்திரமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், மசாலா படங்களை மட்டுமே நம்பி கல்லா கட்டுவதில் தனுஷ் குறியாக இல்லை. ‘அது ஒரு கனாக்காலம்', ‘ஆடுகளம்', ‘மயக்கம் என்ன', ‘3', ‘மரியான்' என நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். 




தனுஷின் சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும், அந்தப் படங்களிலும் தனுஷ் தன் நடிப்பில் எந்த விதத்திலும் குறை வைக்கவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் பிரமிக்கவைக்கும் அளவுக்குத் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘மரியான்' படத்தில் பார்வதியுடன் போனில் பேசும் காட்சி, ‘மயக்கம் என்ன', ‘3’ படங்களில் உளவியல் சிக்கல் கொண்ட பாத்திரங்களின் தன்மைகளை உள்வாங்கி வெளிப்படுத்திய விதம், ‘ஆடுகளம்’ படத்தில் காதல், நட்பு, குருபக்தி ஆகியவற்றை நிகழ்த்திக்காட்டிய விதம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
வணிக ரீதியாக நிறைய சறுக்கல்களைச் சந்தித்த பிறகு ‘வேலையில்லா பட்டதாரி' படம் தனுஷ் தன்னை மீண்டும் வெற்றிகரமான வசூல் நாயகனாகத் தக்க வைத்துக்கொள்ள உதவியது. 2014-ல் படம் வெளியான அந்தத் தருணத்தில் இனி வணிக சினிமாதான் என் பாதை என்று தனுஷ் சொல்லவில்லை. இப்போது இந்தியில் அவரது ஷமிதாப் படம் வெளிவரும் நேரத்தில் தமிழில் “பரிசோதனை முயற்சிகள் அதிகம் செய்து பார்க்க முடியவில்லை” என்று வருத்தப்பட்டிருக்கிறார். 



தனுஷ் அறிமுகமான அதே காலகட்டத்தில் மேலும் சில இளைஞர்கள் திரையுலகில் அறிமுகமானார்கள். அவர்களில் பலரும் ஒரு டஜன் படங்களைத் தாண்டிப் பயணித்துவிட்டாலும் அவர்களுக்கான இடம் எது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இயக்குநர்களின் நடிகனாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ள தனுஷ் நடிப்புத் திறனில் மட்டுமில்லாமல் திட்டமிட்ட உழைப்பினாலும் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடித்ததற்காகவே பல படங்கள் பேசப்பட்டுள்ளன. தனுஷை ஒரு நடிகனாக வார்த்தெடுத்ததில் செல்வராகவனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்போது பாடல், நடிப்பைத் தாண்டி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதோடு, இந்தியிலும் அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் கலைஞனாகத் தனுஷ் வளர்ந்து நிற்கிறார். அடுத்து அவர் நடிப்பில் வரவிருக்கும் அநேகன், ஷமிதாப் ஆகிய படங்கள் தனுஷின் இரண்டு வகைப் படங்களில் எந்தப் பட்டியலில் இடம் பிடிக்கப்போகின்றன என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.
ஆனால் எந்த வகைப் படமாக இருந்தாலும் அதில் தனுஷின் அடையாளம் அழுத்தமாக இருக்கும் என்று சொல்லிவிடலாம். தனுஷின் திரை ஆளுமை ஏற்படுத்திய நம்பிக்கை இது. 


நன்றி - த இந்து

  • கக்கத்தில் மடக்கி மஞ்சள் பத்திர்க்கை பார்த்த தமிழர்கள் இருந்த காலத்தில் வந்தவர்கள் விஜய், தனுஷ். ஆரம்ப படங்கள் எல்லாம் "A " செர்டிபிகேட் உடன்தான் வந்தன. அதை இதை காட்டி கலாசாரத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு பிறகு நல்லவராகி விடுவது தமிழகத்தின் சாப கேடு. பள்ளி கூட பய்யன் ஸ்கூல் யூனிபோர்மோடு காதலிப்பான், முத்தமிடுவான் என்று அயோகியதனத்தை செல்வராகவனும் ,கஸ்தூரி ராஜாவும் மக்களுக்கு தன மகன் மூலம் காட்டி உரிவகிவிடபட்டவர்தான் தனுஷ். இப்போ பெர்ய ஆள். சூப் ஸ்டாரின் மருமகன். எனக்கும் தஞ்சுழை புடிக்கும். ஆனால் இந்த "A" தனம் இல்லாமல் முன்னேறுகிறார்களா என்றால் இல்லை என்பது என் வாதம்.
    Points
    38845
    about 10 hours ago ·   (21) ·   (11) ·  reply (0) · 
  • pravinkumar  
    தமிழர்கள் உணரவேண்டும்
    about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • Selva Che Searching. . . 
    தனுஷ் = தன்னம்பிக்கை .. he deserved it
    about 11 hours ago ·   (11) ·   (1) ·  reply (0) · 
  • veluchamy  
    இவரு நடிக வர்றப்ப t சாப்ட கூட தெரியாது.ஆனா இப்ப கோடில வலுறாரு.because தமிழன் ரொம்ப ன்னல்லவன்.
    Points
    100
    about 11 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
  • arivu  
    தனுஷ் அன்ன ரசிகன்னு சொல்ல பெருமையா irukula
    about 12 hours ago ·   (3) ·   (4) ·  reply (0) · 
  • parthi  
    சக நடிகர் யாரு .........(actual ah எனக்கு நடிக்க தெரியாது .எங்க அப்பா என்ன அப்படி வளக்கல.)
    Points
    1350
    about 12 hours ago ·   (7) ·   (1) ·  reply (0) · 
  • ராஜேஷ் மகாலிங்கம்  
    உண்மையான வரிகள்... "தமிழ் சினிமாவின், கதாநாயகனுக்கான வரையரைகளை முறியடித்து விட்டார் தனுஷ்"... இது போல் "தமிழ் சினிமாவின், கதானாயகிகளுக்கான வரையரைகளை முறியடிக்க ஒரு கதாநாயகி வந்தால் நன்றாக இருக்கும்"
    Points
    700
    about 12 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    தனுஷ் பத்து மெல்கிப்சன், அஞ்சு டெந்ஸெல் வாஷிங்டன்க்கு சமம். ஆஸ்கர் விருதுகள் எல்லாம் இவருக்கு துச்சம்.
    Points
    1760
    about 13 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
  • Baskaran. M  
    உண்மை.
    about 13 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
  • vikram  
    ஒரு நல்ல மனிதர் விடா முயற்சி கொண்டவர் wish him all success for his future films
    about 13 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
  • Manikandan  
    Fact ... !
    about 13 hours ago ·   (12) ·   (1) ·  reply (0) · 
  • sasi  
    உண்மையான ரிப்போர்ட் .. ! even now I am liking more when compared to 5 years back.... long way to go .. All the best..
    about 14 hours ago ·   (14) ·   (0) ·  reply (0) · 
  • vimal  
    சூப்பர் வரலாறு. திகைக்க வைக்கும் நடிப்பு .
    about 14 hours ago ·   (12) ·   (1) ·  reply (0) · 
  • LION G.Saravanan  
    உண்மை உழைப்பு=உயர்வு, என்ற தாரக மந்திரம் தெரிந்தவர் அடக்கம் அமைதி =அடையாளம் என்பதை நன்கறிந்தவர் அதனால் தான் இன்று உச்சத்தை தொட்டிருக்கிறார்! தனுஷ் என்ற மூன்றெழுத்து உலகளவில் உச்சரிக்கும் சொல்லாகும்! வாழ்த்துக்கள்!
    about 15 hours ago ·   (15) ·   (1) ·  reply (0) · 
  • Surendar Gee System Engineer at DSM Soft (P) Ltd 
    நிஜமாக சொல்கிறேன்..சேலத்தில் "காத கொண்டேன் " 25ஆவது நாள் விழாவிற்காக திரைஅரங்கில் தோன்றிய போது நான் பார்த்த... கேட்ட ரசிகர்களின் கரகோஷம் அன்றே என் நினைவுக்கு எட்டியது ஒரு நாள் தனுஷ் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ ஆவர் என்று...நான் யூகித்த படி அவர் செல்கிறார்.. எனது பள்ளி பருவத்தில் காதல் கிண்டேன் பார்த்தேன்..அந்த 25ஆவது நாள் விழாவிற்கு நானும் திரையின் கீழ் நின்று ஆரவாரம் செய்தேன் தனுஷ்'ஐ ..நான் காதல் கொண்டேன் 4ஆவது முறையாக பார்த்து கொண்டிருந்தேன்...அப்போதே அவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்




Wednesday, October 09, 2013

பிந்துரேகா -அ. முத்துலிங்கம் -நகைச்சுவை சிறுகதை

கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. 



‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான பெண்மணி, சுவர் ஓரமாக எலி ஓடுவதுபோல நினைத்துப்பாராத வேகத்தில் குடுகுடுவென ஓடினார். என்னைத்தான் இவ்வளவு நேரமும் அழைத்தார். நீண்ட நேரம் சப்பியதால் என் பெயர் அப்படி உருக்குலைந்து வெளியே வந்திருந்தது. 


‘உங்கள் பெயர் என்ன மொழி?’ என்றார் டொக்ரர். தமிழ் என்றேன். ’அப்படியென்றால்?’ ‘இந்தியாவில் ஒரு மாநிலமே பேசும் மொழி. 70 மில்லியன் மக்கள்’என்றேன். ‘எனக்குத் தெரியவில்லையே’என்றார். ‘60 மில்லியன் மக்கள் மட்டுமே குஜராத் மொழி பேசுகிறார்கள்’என்ற உபரித் தகவலை அவர் கேட்காமலே சொன்னேன். இது தேவையில்லாதது. அவருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். கைக்குக் கிட்ட இருந்த ஊசியை எடுத்து புஜத்தில் குத்தி மருந்தைச் செலுத்தினார். அதற்குப் பிறகு என் வியாதியைக் கேட்டறிந்தார். 


எங்கள் இரண்டாவது சந்திப்பு இன்னும் மோசமாக இருந்தது. நான் அவருக்கு முன் கடுதாசி கவுணை அணிந்து கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். மண்டையில் நீர் நிரப்பியதுபோல பாரத்தில் அதுபாட்டுக்குக் கவிழ்ந்து கிடந்தது. இரண்டு கையாலும் பிடித்துத் தூக்க வேண்டிய ஒரு தொக்கையான கோப்பை அவர் படித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து மருந்து மணம் வீசியது. எனக்கு நெஞ்சு திடுக்கென்றது. நான் வந்து ஆறு மாதம் ஆகவில்லை, இந்தக் கோப்பை நிறைத்து இத்தனை வியாதிகள் சேர்ந்துவிட்டனவே. பெருமைப்படுவதா இல்லையா என யோசித்தேன். 


‘காலையில் எத்தனை வீடுகளுக்கு பேப்பர் போடுகிறீர்கள்?’ நான் பதில் பேசவில்லை. ‘இன்னும் சுப்பர் மார்க்கெட்டுகளில் பாரமான பெட்டிகளைத் தூக்கி அடுக்குகிறீர்களா?’ நான் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று மருந்தை எழுதி என்னிடம் தந்து முழங்காலில் பூசச் சொன்னார். ‘தலை நோவுக்கு முழங்காலில் பூசினால் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன். பின்னர்தான் தெரிந்தது வேறு யாருடையவோ கோப்பை அவர் அத்தனை நேரமும் பார்வையிட்டிருக்கிறாரென்று. 



ஒவ்வொரு தடவையும் அவருக்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்தது. ஒருமுறை பூட்ஸ் அரையடி ஆழம் புதையும் பனியில் நடந்து அவரிடம் போனேன். மூச்சை விட்டால் திருப்பி இழுக்க முடியவில்லை. சோதித்துவிட்டு ‘பால் குடிப்பதை நிறுத்துங்கள்’என்றார். நிறுத்தினேன். ‘தேநீரும் வேண்டாம்’என்றார். அதையும் விட்டேன். பின்னர் ‘கோப்பியைக் காட்டக் கூடாது’என்றார். அதையும் செய்தேன். எஞ்சியது தண்ணீர் ஒன்றுதான். அதற்கும் தடை வந்துவிடுமோ என அதிகம் நடுங்கியதால், வியாதி பெரிசாகத் தெரியவில்லை.


 இன்னொரு தடவை காதுகுத்துக்கு மருந்து கேட்டுப் போனேன். ‘தேங்காய் எண்ணெய் ஒரு சொட்டு காதுக்குள் விடுங்கள்’என்றார். 60 வருடங்களுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் அம்மா சொன்னதும் அதுதான். இந்த 60 வருடமும் மருத்துவம் அதே இடத்தில்தான் நிற்கிறது. கழுத்து வலி என்று போனால் பயற்றை வறுத்து டவலிலே உருளைபோலச் சுருட்டி அதற்குமேல் படுக்கச் சொல்கிறார். எந்த மருத்துவப் புத்தகத்தில் தேங்காய் எண்ணெய் என்றும் உருட்டி வைத்த பயறு என்றும் எழுதிவைத்திருக்கிறது. 


எந்தச் சின்ன வியாதி என்று அவரைப் பார்க்கப் போனாலும் அந்தப் பகுதி உறுப்புக்குத் தேவைப்படும் அத்தனை பரிசோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து முடிப்பார். எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. என்று பெறுபேறுகள் வரும். அவற்றை கணினியில் உருட்டி உருட்டி மேலும் கீழும் தேடி ஆராய்வார். 4-ம் வகுப்பு மாணவனிடம் 



8-ம் வகுப்புக் கணக்கைச் செய்யச் சொன்னதுபோல நெற்றியைச் சுருக்கி யோசிப்பார். சட்டென்று ஒரு வியாதியின் நுனியைக் கண்டுபிடித்து முன்னெப்போதுமே கேள்விப்பட்டிராத பெயரைச் சொல்லிக் கிலியூட்டுவார். இந்தச் சோதனைகள் இரண்டு மாதகாலமாக நடந்துகொண்டிருக்கும்போதே வியாதி தானாக நின்றுவிடும். இறுதியில் உங்களிடம் கேட்பார், ‘எதற்காக இத்தனை பரிசோதனைகள் செய்தோம்?’ அப்படிக் கேட்கும்போது உங்களுக்கு மருத்துவரிடம் ஏன் வந்தோம் என்பது மறந்துபோயிருக்கும். 



தடுப்பூசி போடப்போகும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் பெயரை நினைவூட்ட வேண்டும். அவர் மேசையில் இருப்பது உங்கள் கோப்புதான் என்பதைத் தலைகீழாகப் படித்து உறுதிசெய்வது நல்லது. தடுப்பூசிக் காலங்களில் வரவேற்பறையை நிறைத்து நோயாளிகள் குழுமியிருப்பார்கள். அறையை உலோக இருமல்கள் ஆக்கிரமித்திருக்கும். மருத்துவர் நின்ற நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுத்தள்ளுவார். என்னுடைய முறை வந்தது. நீண்ட சேர்ட் கைமடிப்பைச் சுருட்டிச் சுருட்டி புஜத்துக்கு மேல் ஏற்றியிருந்தேன்.


 டொக்ரர் பஞ்சிலே ஸ்பிரிட்டைத் தோய்த்து தோளிலே பூசிவிட்டு ஊசியைச் செலுத்தினார். அந்த வேளை அவருக்கு குஜராத்திலிருந்து தொலைபேசி வந்தது. புதுவிதமான மொழியில் சத்தமாகப் பேசிவிட்டுத் திரும்பினார். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஓர் ஊசி நிறைய மருந்தை எடுத்து என் தோள்மூட்டில் குத்த வந்தார். நான் வெலவெலத்துப்போய் எழுந்து நின்று, ஏற்கனவே அவர் குத்திவிட்டாரென்று சொன்னேன். அவர் நம்பவில்லை. அவரை ஏய்த்துவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறேன் என்று நினைத்தார். என்னைப் பார்த்தார். பின்னர் ஊசியைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்க்கத் திரும்பியபோது நான் மறைந்துவிட்டேன். 


ஒரு வருட காலமாக என் உடம்பைத் தேமல் போல ஒன்று பிடித்திருந்தது. பலவிதக் களிம்புகளைத் தந்தார். ஒருவிதமான பவுடரைப் பூசச் சொன்னார். ஒன்றுக்குமே பயன் கிடைக்கவில்லை. தேமல் பாட்டுக்கு இனப்பெருக்கம் செய்தது. ஒருநாள் அவரைப் பார்க்கப் போனபோது சோளத்தைப் பட்டுப்போல அரைத்துப் பூசச் சொன்னார். ‘நாளுக்கு எத்தனை தரம்?’ சொன்னார். ‘எத்தனை நாள் தொடர வேண்டும்?’ ‘வியாதி மாறும்வரை’. ‘சாப்பாட்டுக்கு முன்னரா பின்னரா?’ ‘எப்பவும் பூசலாம்’என்றார். என்ன ஆச்சரியம்! ஒரு வார காலத்திலேயே வியாதி குணமாகிவிட்டது. அப்படியாயின் ஏன் அந்த மருந்தை அவர் ஒரு வருடம் முன்னரே தரவில்லை. 



இது மருந்துக் கடையில் கிடைக்காது. சுப்பர் மார்க்கெட்டில்தான் வாங்கலாம். விற்பனைப் பெண்ணிடம் இதை எதற்குப் பாவிப்பார்கள் எனக் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஆடைகளை இஸ்திரி பண்ணும்போது சோளமா கரைத்த தண்ணீரைத் தெளித்தால் உடுப்புகள் விறைப்பாக நிற்கும். அல்லது சூப் செய்யும்போது அதைக் கெட்டியாக்கவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்’என்றார். சலவைக்காரர்களும் சமையல்காரர்களும் மட்டுமே உபயோகப்படுத்தும் ஒரு பொருள் எப்படி மருந்தானது?



 எந்த மருத்துவப் புத்தகத்தில் இப்படி எழுதிவைத்திருக்கிறது. இவர் எழுதும் மருந்துகளை வாங்குவதற்கு அடிக்கை பலசரக்குக் கடைக்குப் போக வேண்டிவருகிறது. இப்பொழுது வீட்டிலே கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, புதினாக் கீரை, மைதா மாவு, இஞ்சிக் கிழங்கு, காளான், கருப்பட்டி என்று சகலவிதமான பொருள்களையும் சேமித்து வைத்திருக்கிறோம். அடுத்த வியாதிக்கு என்ன எழுதுவாரோ? எதற்கும் தயாராக இருப்பது நல்லது. 



அ. முத்துலிங்கம், எழுத்தாளர், தொடர்புக்கு: [email protected] 

thanx - the hindu tamil