Friday, September 13, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (13 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. மூடர் கூடம் - இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் வழங்க ஒயிட்ஷாடோ புரொடக்ஷன் சார்பில் நவீன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘மூடர்கூடம்’.

இதில் நாயகனாக ராஜாஸ், நாயகிகளாக ஓவியா, சிந்துரெட்டி நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், அனுபமா, சென்ராயன், குபேரன், பைவ்ஸ்டார் கிருஷ்ணா, மகேஷ்வரன், ஆதிரா ஆகியோரும் நடிக்கின்றனர். இயக்குனர் நவீனும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

படம் பற்றி இயக்குனர் நவீன் கூறும்போது, இலக்கை அடைவதைவிட பயணம் சிறப்பாக அமைவது மேல் என்ற புத்தரின் கருத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. நான்கு மூட்டாள்கள் செய்யும் காரியங்களும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. முழு நீள காமெடி படமாக தயாராகிறது என்றார்.

பாண்டிராஜ் கூறும்போது இயக்குனராக மட்டுமின்றி நல்ல படங்களின் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் ரிலீசாகிறது.

ஒளிப்பதிவு: டோனி சான், இசை: நடராஜன் சங்கரன், எடிட்டிங்: அத்தியப்பன் சிவா, பாடல்: நவீன். 

 
2. மத்தாப்பூ -விநாயகா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். சுடலைக்கண் ராஜா தயாரிக்கும் படம் மத்தாப்பூ. இதில் நாயகனாக ஜெயன், நாயகியாக காயத்ரி நடிக்கின்றனர். இளவரசு, கீர்த்தி, ரேணுகா, ரோகிணி ஆகியோரும் நடிக்கின்றனர். 



இப்படத்தை தினந்தோறும் நாகராஜ் இயக்குகிறார். இவர் பதினோரு வருடங்களுக்கு முன் ரிலீசான தினந்தோறும் படத்தை டைரக்டு செய்தவர். மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். படம் பற்றி அவர் சொல்கிறார். 

நாயகன் தன்னை சுற்றி இருப்பவர்களும் தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் நாயகியும் அவன் குடும்பத்தினரும் இதற்கு நேர்மாறாக சோகத்தில் வாழ் கிறார்கள். அவள் துயரத்தின் காரணங்களை அறிந்து அவற்றை போக்க முயற்சிக்கிறான். அவன் முயற்சி வென்றதா? என்பது மீதி கதை. 

வாழ்க்கையில் எல்லோரும் மத்தாப்பூ போல் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று விஷயங்கள் படத்தில் இருக்கிறது.

ஒளிப்பதிவு: சி.ஆர்.மாறவர்மன், இசை: வேலாயுதம், பாடல்: நா. முத்துக்குமார், பிரான்சிஸ் கிருபா, த. அறிவழகன். 
 
3.  உன்னோடு ஒரு நாள்  -ஜார்சி புரொடக்ஷன் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் உன்னோடு ஒரு நாள். இதில் அர்ஜூன் விஜய ராகவன், ஜிப்ரான் செல்மான், நாயகியாக நீலம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை துரை கார்த்திகேயன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

கார்த்திக், மாதவ் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் பிரியா நுழைகிறாள். மாதவ்வை அவள் காதலிக்கிறாள். பிறகு கார்த்திக்கை விரும்புகிறாள். மனமுடையும் மாதவ் வெளிநாடு செல்கிறான். கார்த்திக்-பிரியா திருமணம் நடக்கிறது. ஒரு நாள் மாதவ் ஊர் திரும்புகிறான். மீண்டும் பிரியா மனதில் இடம் பிடிக்க முயல்கிறான். இவர்களுக்குள் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள், அதிர்ச்சியான நிகழ்வுகளே கதை. விறுவிறுப்பான படமாக இருக்கும். மேற்கத்திய கலாசாரத்தில் இளம் தலைமுறையினர் மூழ்கி திருமணத்துக்கு பிறகும் எவ்வாறு தடம் மாறுகிறார்கள். அதன் சீரழிவுகள் என்ன என்பதை படம் சொல்லும்.

சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 
 
4.super -
Jeevi rating: 3/5
Punchline
: Average
Genre:
Action
Type:
Straight
Banner:
Annapurna Studios
Cast
:
Nagarjuna Akkineni, Sonu Sood, Anuksha, Ayesha Takia, Shayaji Shinde, Piyush Misra, Shabbir, Aryaman, Brahmanandam, Ali, Venu Madhav, Sunil, Paruchuri Venkateswara Rao, Khayyum & Sumitra
Editing: Marthand K Venkatesh
Art: Chinna
Lyrics: Bhaskarabhatla Ravi Kumar, Kandikonda & Viswa
Stunts: Alen Amin, Vijay
Cinematography: Shyam K Naidu
Music: Sandeep Chowta
Executive producer: PS Kumar
Story - Dialogues - Screenplay - Direction: Puri Jagannadh
Producer: Nagarjuna Akkineni
Theatrical release date: 21st July 2005
Review
Story

Version 1: Akhil (Nagarjuna) owns a call-cab service. He falls in love with a doctor called Siri Valli (Ayesha Takia). There is a hi-tech robber called Sonu (Sonu Sood) who loots money in a big way. Akhil and Sonu are enemies. Sonu adapts Siri Valli as his sister after the death of Siri Valli's father. When Sonu realizes that Siri Valli is in love with his arch enemy Akhil, he asks her to put an end to the relationship. The rest of the story is all about why Akhil and Sonu became enemies and how they clear the misunderstandings to unite again.
Version 2: Akhil (Nagarjuna), Sonu (Sonu Sood) and Sasha (Anushka) meet in Mumbai in their needy days as unemployed graduates. After a few days, they were forced to steal the money for survival. Then they decide that it is ok to rob the money and make a living out of it. Sasha is the sister of Sonu. She loves Akhil. But Akhil do not have any feelings for her. He treats her just like a good friend. Sasha dies in an unfortunate incident and Sonu holds Akhil responsible for her death. They become enemies. The rest of the story is all about how they clear the misunderstandings and unite again.
Artists Performance
Nagarjuna: Nagarjuna is like Adonis with that long hair. He brought style as well as reckless attitude to that character with his unique portrayal. The way he shakes his hand with Ayesha Takia while seducing her is cool. Nagarjuna should also be commended for his magnanimity of giving fair amount of screen presence for Sonu Sood.
Sonu Sood: Sonu Sood surprises you with his controlled and lovable performance. He is very competitive and the perfect fit for the role. The guy who dubs the voice of Mukesh Rushi dubbed the voice of Sonu Sood. That dubbing artist did a good job. 


Heroines: It is very difficult to find a heroine who can match the charisma of Nagarjuna. Ayesha Takia is one of very few heroines who complement Nagarjuna's charm onscreen. She has got very good skin complexion and nice physique. She is good in romantic and casual scenes, but appeared bit out of place in emotional scenes and climax episode. Debutant heroine Anushka is good. Her nose ring added bit of sex appeal to her.
Others: Piyush Misra is adequate as villain. Actor Surya dubbed his voice. The way Surya says 'mama' is hilarious. Sayaji Shinde is good as the honest cop. Ali has got special roles in all Puri Jagan's films. Likewise, Ali got tremendous comedy role in this film as the untalented portrait maker wearing Scottish skirt. Brahmanandam is hilarious in lie detector scene. Sunil has got a good single comedy episode. Khayyum (Ali's brother) has got a fairly big role in this film for which he has done justice. Sumitra and Paruchuri Venkateswara Rao are the only elderly people in this film.
Technical Departments:
Story: The basic story of the film is about how two friends break apart due to a misunderstanding and how they get back together. Robbery and bike chases have been chosen as backdrop of this film. But the basic point of heroes justifying their robbery by comparing it to the scams and scandals and continuing it does not sound appealing.
Screenplay - direction: Screenplay of the film is adequate. Puri Jagan tried to generalize situations without getting into details. He successfully engaged the viewers throughout the first half without offering them any story. The flashback episode which unveils the much needed story is not narrated well. He could able to adapt the 'Italian Job' technique perfectly to bring excitement back into the film towards climax. But he did not look into the continuity of locations in real time and flashback episodes. Puri Jagan who always made sure of emotions in his films could not bring the right emotions for this film. When heroes realize who the villains are, they would start helping villains by getting diamonds instead of finishing off them.
Music: Music by Sandeep Chowta is of party type. Milamila song is the highlight of the film. This is has two locations and two sets of costumes and is the most trendy Telugu song I have seen in the recent times. Gichigichi is a typical bedroom seduction song with lots of intimate moments between Nagarjuna and Ayesha Takia. Mastana (Nag & Ayesha) and Chandramukhi (Nag and Anushka) songs are shot in Mauritius. These two songs are not impressive. The editing cuts in Chandramukhi song are so fast that it taxes your eyes. Akkad Bakkad is also another trendily canned song on Nagarjuna and Anushka. Mudduletti song is good. Background score and rerecording are also impressive.
Other departments: Cinematography by Shyam K Naidu is excellent. He used all types of camera angles and cranes to give different perspective to the film. Dialogues by Puri Jagan are adequate. Editing by Marthand K Venkatesh is neat in the first half. But the increased frame rate and rapid editing cuts in the flashback episode make you feel uneasy. 'Italian Job' thrills by Alen Amin and Vijay are first rate. Artwork by Chinna is cool.
Analysis: First half of the film is smooth. Second half is bit boring. The climax ('Italian Job' in Goa) is impressive. The plus points of the film are Nagarjuna, trendy shot-making and music. The major drawbacks of the film are lack of convincing storyline and lack of emotions. We should appreciate Nagarjuna for spending so much money on a film which is completely different from run off the mill flicks. The thrills in the film should overwhelm the logic to make these kinds of films work. But the thrills are not exciting enough (except for the hero introduction scene and the Italian Job climax). This film also caters to very limited segment - youth crowd from urban areas. On a whole, Super makes an average flick.
 a




5. புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படம் சென்னையைத் தவிர மற்ற ஏரியாக்களில் ரிலீசானது. ரிலீசான இடங்களில் தமிழ் குடிமகன்கள் முத்தம்மாவை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். முதலில் சென்னையில் தியேட்டர் தர மறுத்தவர்கள் அதன் பிறகு தியேட்டர் கொடுக்க சென்னையிலும் கல்லாகட்ட ஆரம்பித்துவிட்டாள் முத்தம்மா. சி.ஆர்.முத்துப்பாண்டி இயக்குனர், பிரபாத் ஹீரோ, ஹேமா ஹீரோயின்.

கிராமத்து மைனர் ஒருவர் காமத்தை தூண்டும் மாத்திரைகளை யூஸ் பண்ணி உள்ளூர் பெண்களை வயற்காட்டிலும், வைக்கோற்போரிலும் வீழ்த்துவாராம். ஒரு நாள் அவருக்கு கல்யாணம் ஆகும். மாத்திரையால் உடல் பலவீனமாகி சொந்த மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போகிறாராம். இதனால் மனைவி திருப்தி கிடைக்கிற இடமாக தேடிப்போவாராம். தான் பல பெண்களை மயக்கிதைப்போன்று தன் மனைவி பல ஆண்களை மயக்குவதை பார்த்து சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வாராம். இதுதாங்க படத்தோட கதை. பாலியல் இன்பத்தை இயற்கையாக அனுபவிங்க. கண்ட மாத்திரியை யூஸ் பண்ணி வீணாப்போகாதீங்கன்னு படத்துல மெசேஜ் சொல்றாங்களாம்.


thanx - dinamalar, dinamani. all cine websites

தொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை

1. அன்புக்கு உரிய மனைவியைத்தவிர பிற பெண்களை தீண்டாமை நல்லது


--------------------


2. ட்விட்டர்ல நிறைய பேரு பிளஸ் 1 படிச்சவங்க போல.ஆர் டி பண்றப்ப +1 போட்டுக்கறாங்க




---------------------



3. அப்பன் ஆத்தா பிறந்த நாள் ,திருமண நாள் தெரிஞ்சு வெச்சுக்கலைன்னாலும் மங்காத்தா டே(ட்) தெரிஞ்சு வெச்சுக்கறாங்க



-----------------------


4. 3 மேரேஜ் பண்ணிக்கிட்டாலும் முதலாம் முதல் இரவு ,2ம் முதல் இரவு,3ம் முதல் இரவுனு வரிசை கட்டி அடிப்பாங்க போல




--------------------------


5. I PUSH U விற்கும் I PULL U விற்கும் பெரியதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை



----------------------


6. குறுக்கு வழில ,குயுக்தி மூளை கொண்டு ஜெயிக்கலாம்னு நமக்கு கத்துக்கொடுத்ததே விநாயகர் தான் # அம்மைஅப்பன்.= உலகம்



-------------------------


7. ரோட்டுல மயில் போனா முருகரோட வாகனம்னு கும்பிடும் தமிழச்சிகள் வீட்டுல எலி ,பெருக்கான்,மூஞ்சூறு போனா வினாயகர் வாகனம்னு ஏன் கும்பிடறதில்ல?



------------------------



8. என் சம்சாரம் ஒரு டீச்சர் என்பதால் ஆசிரியை தினத்தை முன்னிட்டு அவரிடம் ஆசி வாங்கி ஆஃபீஸ் போறேன்



----------------------



9.  மனைவியை சமாதானப்படுத்துவதில்தான் ஒவ்வொரு கணவனின் பொறுமையும் சோதிக்கப்படுகிறது


--------------------


10. இந்தியா 1. ஊட்டச்சத்து இல்லை என்போர் 2 ஊட்ட சாப்பாடு இல்லை என்போர் 3.ஊட்ட அம்மா கை இல்லை என்போர் நிறைந்த நாடு




------------------


11. பேய்ப்படத்தில் ஹன்சிகா,ஆண்ட்ரியா, லட்சுமிராய்! # அய்யய்யோ , அப்போ பேய்க்கு ஜோடியா சிம்பு டிராகுலா ரோல்ல வருவாரே?



------------------------


12. சோறு கண்ட இடமே சொர்க்கம் என நினையாமல் , கண்ட இடங்களில் “சாப்பிடாமல்”வீட்டுச்சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவன் தான் சாப்பாட்டு ராமன்



------------------------


13.  ஆறு வருடமாக யோசித்து யோசித்து தான் அதிமுகவின் இணைந்தேன் - அனிதா குப்புசாமி!! # எதிர்க்கட்சியா இருக்கும்போது சேர்ந்திருந்தா நம்பலாம்



----------------------------


14.  9 தாரா - பிடிச்ச ஹேன்ட்சம் ஹீரோ அஜித்.பிடிச்ச மன்மதன் சிம்பு.பிடிச்ச காதலன் பிரபுதேவா.பிடிச்ச ராஜா ஆர்யா


-----------------------


15. உங்களுக்கு பிடிச்ச ஹேன்ட்சம் ஹீரோ யாரு?




 சிங்குலர்ல கேட்டா எப்படி ? # 9 தாரா ராக்ஸ் 



------------------------



16. DDன்னா தூர்தர்சன் னு நினைச்சா நீங்க பெருசு.டிமான்ட் டிராfட்னு நினைச்சா பிஸ்னெஸ்மேன்.திவ்யதர்ஷினின்னு நினைச்சா நீங்க யூத்




--------------------------


17.  பிள்ளையாரப்பா.ஏன் வெட்கப்படறீங்க? பூனம் பாண்டே ட்விட்டர்ல எனக்கு வாழ்த்து சொல்லி இருக்கு.# விநாயகர் சதுர்த்தி



-----------------------


18. தொப்பை உள்ள ஆண்களுக்கு ஒரு யோசனை - நான் பிள்ளையார் பக்தன் , அவர் வழிநடப்பவன் என சம்சாரத்திடம் சமாளிக்கவும்



--------------------------



19. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு நாக்குக்கு இடப்படும் மருதாணி


---------------------------



20. பரிசுப்பார்சல் கொண்டு வராத எளியோர் மேடை ஏறி மணமக்களை சந்தித்து வாழ்த்து சொல்ல கூச்சப்பட்டு மேடை ஏறுவதில்லை




--------------------------------

Thursday, September 12, 2013

WE ARE MILLERS -சினிமா விமர்சனம் (காமெடி கில்மா சினிமா) 30 +

தினமலர் விமர்சனம்

மெக்ஸிகோவிலிருந்து யுனைடெட் ஸ்டேட்ஸிற்கு டன் கணக்கில் போதைப் பொருட்களை கடத்தும் இலக்கில், தன் குழுவினருடன் டேவிட் கிளார்க் (ஜேசன் சுடைகீஸ்) அமெரிக்காவை விட்டு கிளம்புகிறார்.  மெக்ஸிகோவிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி சாதித்து வந்தால் இவருக்கு கிடைக்கப்போவது கோடி கோடியாக பணம், மாட்டிக்கொண்டால் இருபத்தைந்து வருடம் சிறை தண்டனை.  செய்தே தீரவேண்டும் எனும் கட்டாயத்தில் ஜேசன் அமெரிக்காவை விட்டு கிளம்புகிறார்.

இந்தக் கதையை கேட்கும் போது இது என்னவோ பாஃஸ்ட் அண்டு பியூரியஸ் சீரிஸ்களைப் போல் ஆக்ஷன் சரவெடி என்றோ, இல்லை ஓஷன்ஸ் சீரிஸ் போன்ற ஹீஸ்ட் திரில்லர் என்றோ உருவகம் செய்து கொண்டால் பிம்பிளிகி பிளாபி தான்.

இது சரியான காமெடி படம். ஹாங்க் ஓவர் படத்தில் கண்ணாடி அணிந்து அம்மாஞ்சி போல் காமெடியாக வரும் டேவிட் கிளார்க் இப்படத்தில் ரக்கட் லுக்குடன் போக்கிரி போல் வருகிறார்.  இவர் சேர்த்து வைத்த காசெல்லாம் களவாடப்படுகிறது, போதை மருந்து விற்கும் வியாபாரியாக விளங்கும் இவர் கடனடைக்க வழி ஏதுமின்றி ஸ்மக்ளிங் செய்து தரும் டீலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
 


மெக்ஸிகோவிற்கு தனியே சென்றால் கண்டிப்பாக ஜெயிலில் களி தின்ன வேண்டியது தான் எப்படியாவது ஒரு குடும்பஸ்தன் என்ற அந்தஸ்தில் சென்றால் தான் எஸ்கேப் ஆக முடியும் என்று  முடிவெடுக்கிறார். பாரில் ஸ்ட்ரிப்பராக வேலை பார்க்கும் ஜெனிஃபர் அனிஸ்டோனை தன்  மனைவியாகவும், ரோட்டில் உள்ள டெலிபோன் பெட்டிகளை உடைத்துத் திருடும் பெட்டி தீஃப் எம்மா ராபர்ட்ஸை தன் மகளாக நடிக்க இணைத்துக் கொள்கிறார்.  ஓசியில் வந்து ஒட்டிக் கொள்ளும் வில் பால்டரை தன் மகனாக நடிக்க வைக்கிறார்.

மெக்ஸிகோ செல்லும் இந்நால்வர் அங்கே எக்குத் தப்பாக மாட்டிக் கொள்கின்றனர்.  பணத்திற்காக கூடிய இந்நால்வருக்குள் ஓர் பந்தமேற்பட்டு குடும்பத்தினராய் மாறுகின்றனர்.  இதன்பின் இந்நால்வர் மெக்ஸிகோவிலிருந்து போதைப் பொருட்களைக் கடத்தி தப்பித்துக் கரை சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

நாடோடிகள் ஓர் குடும்பமாய் மாறுவது தான் கதை என்றாலும் யாரும் இதை ஒரு குடும்பப் படம் என நினைத்து ஏமாறவேண்டாம்.  இது சரியான அமெரிக்கன் அடல்ட்ஸ் காமெடித் திரைப்படம்.  வசனங்களில் டபுள் மீனிங் வைத்து நாசூக்காக கூறுவதெல்லாம் கிடையாது.  நேரடியாக ஒரே பொருள்.  சில இடங்களில் நகைச்சுவை நம்மை இருக்கையில் அமர விடாமல் குலுங்கடித்து விடுகிறது. 
 
 


இதே கதையை ஜேசன் ஸ்டேதம் விண்டீசல் முதலிய நடிகர்களை வைத்து இயக்கி இருந்தால் மிரட்டலான ஆக்ஷன் படமாய் மாறியிருக்கும். ஜெனிபர் ஆணின்ஸ்டன், டேவிட் கிளார்க் முதலிய நடிகர்களின் வெள்ளந்தித்தனம் கலந்த விடலைத்தனமான நடிப்பு இதை ரசிக்கத்தக்க காமெடியாக மாற்றியிருக்கிறது.  கேஸ்டிங் டைரக்டர் ஸ்பெஷல் பாராட்டு பெறுகிறார்.

மொத்தத்தில்: வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பஞ்ச தந்திரம் போன்ற படங்களின் வகையில் விழுகிறது வீ ஆர் தி மில்லர்ஸ்.  கண்டிப்பாக விரைவில் காப்பியடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஹேங்க் ஓவர் படத்தின் உல்ஃப் பேக்கினைப் போல் இந்த மில்லர்ஸ் குழுவும் காமெடி சீரிஸில் சீரியஸாகப் பார்க்கப்படும் எனத் தோன்றுகிறது.
 
 


thanx - dinamalar


  • நடிகர் : ஜேசன் சுடைகீஸ்
  • நடிகை : ..ஜெனிஃபர் அனிஸ்டோன்
  • இயக்குனர் :ராசன் மார்சல் டர்பர்

கேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்சிதா--எஸ்.எஸ்.குமரன்.

 

 

தமிழ் சினிமாவில் ஒற்றுமையும், புரிதலும் இல்லை! எஸ்.எஸ்.குமரன்

"மகாகவி பாரதியார் எழுதிய பாடல் வரிகள், இந்த கேரள நாட்டிளம் பெண்களுடனே. இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அதனால் படத்திற்கு இந்த வரிகளையே தலைப்பாக வைத்தேன்''என்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என முப்பரிமாண அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.எஸ். குமரன். 
 சென்னை திரைப்படக் கல்லூரியில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசிய பொழுது, ""அம்பாசமுத்திரத்திலிருந்து நாயகன் திருமணத்துக்குப் பெண் தேடி கேரளா செல்கிறான். என்பதுதான் ஒரு வரி கதை. இதில் இன்னொரு விஷேசம் அப்பாவே ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்து கொள்ளும்படி மகனைக் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
 படம் பார்க்க வருபவர்களுக்கு எந்ததொரு நெருடலும் இருக்காது. ஐம்பது வருடம் கழித்து கேரளாவைப் பற்றி யாராவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், கேரளாவின் பதிவுகளைச் சொல்கிற பொக்கிஷமாக இந்தப் படம் இருக்கும்.  அம்பிகா மேடம் காலகட்டத்தில் இருந்து இன்றைக்கு டாப்ல இருக்கும் அமலாபால் வரை நிறைய நாயகிகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான். அவங்க வந்த இடத்திலேயே ஒரு கதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.


மதுரை காதல், தஞ்சாவூர் காதல், சென்னை காதல் பார்த்தாச்சு கேரளா காதலும்தான் கொஞ்சம் பார்ப்போமே?  அவர்களுக்குள் இருக்கிற ஒற்றுமை, திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறோம். அறுபத்து ஒன்பது நாள் ஷூட்டிங். கண்டிப்பாக படம் வெளியானதும் தமிழர்களும், மலையாளிகளும் கொண்டாடும் படமாக இது இருக்கும்.  இதில் நாயகனின் தந்தையை மையமாக வைத்துதான் கதை நகர்கிறது. அதற்காக பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களை அணுகினோம். அவர் படத்தின் பெயரை கேட்டுவிட்டு, இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து தயங்கினார். 
அதன்பிறகு அப்படியெல்லாம் இல்லையென்று கதையை பற்றி விளக்கினேன். உடனே கதை பிடித்துபோக நடித்துக்கொடுத்தார். படத்திற்காக அவர் மலையாளம் கற்க வேண்டியிருந்தது. அதற்காக நடிகர் கமலஹாசனிடம் சென்று மலையாளம் கற்று வந்தார்.  அடுத்து இந்தக் கதைக்குப் பாடல்களை யாரை எழுத வைக்கலாம் என்று நினைத்த போது, கவிஞர் வைரமுத்து சார் நினைவுக்கு வந்தார். ஏனென்றால், இந்தப் படத்தின் தலைப்பிலேயே ஒரு கவிதை இருக்கிறது.  படத்தின் தலைப்பைக் கேட்டு பிடித்து போக ரொம்ப ஆர்வமாக, "மெட்டு கொடுங்கள்' என்று கேட்டார். 
எனக்கு அதில் உடன் பாடு இல்லை. "நீங்கள் பாடல் வரிகள் கொடுங்கள் அதற்கு நான் மெட்டு போட்டுக் கொள்கிறேன்' என்றேன். அதற்கு அவர் "அது ரொம்ப கஷ்டமாச்சே?' என்றார். அப்படித்தான் பாடல்கள் வாங்கினேன்.  அதனால்தான் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது, "இனி மெட்டுக்கு பாடல் வரிகள் கேட்காமல் பாடல் வரிகள் மட்டும் கேட்டால், பாதி சம்பளம் வாங்கிக் கொள்வேன்' என்றார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருகிற அக்டோபர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் "கேரளா. காம்' என்ற பெயரில் வெளியிடுகிறோம்.


அபி என்கிறவர் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகிகளாக காயத்திரி, அபிராமி, தீட்சிதா மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் நான் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் இதில் சரி செய்துள்ளேன்.  மூன்று நாயகிகளில் ஒரு நாயகி முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவள். பணக்காரவீட்டுப் பெண். அதற்காக ஒரு பெரிய பிரமாண்டமான வீடு தேவைப்பட்டது. அதற்காக பல வீடுகள் தேடினோம். கடைசியில் ஒரு வீடு கிடைத்தது.



 மிக பிரமாண்டமான டீக்வுட் மரத்திலான வீடு அது. இதுவரை மரத்திலான இவ்வளவு பிரமாண்டமான வீட்டை நான் பார்த்ததே இல்லை. அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு சின்னஞ்சிறு பொருட்கள் கூட அவ்வளவு நவநாகரீகமான, விலையுர்ந்த பொருட்களாக இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான வீடு. முதலில் அந்த வீட்டை ஷூட்டிங்கிற்குத் தரமாட்டேன் என்று சொன்னவர்கள். தமிழ்ப் படம் என்று சொன்னதும், நடிகர் விஜய்யோ, சூர்யாவோ வருவார்கள் என்று நினைத்து வீடு கொடுத்தார்கள்.



ஷூட்டிங் ஆரம்பித்ததும் வந்து பார்த்தார்கள். ஆர்வத்தோடு நாயகன் யாரென்று விசாரித்தார்கள். அந்த நேரம் பேராசிரியர் ஞானசம்பந்தம் சார் மேக்கப் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு இவரா நாயகன்? என்று டென்ஷாகி அந்த இடத்தை விட்டு போனவர், மறுபடியும் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வந்தார்கள். அவர்கள் கிளம்பியதும்தான் எங்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிந்தது. அதற்காகவே சம்பந்தம் சாருக்கு நிறைய நன்றி சொன்னோம். அதை மறக்கவே முடியாது.

 


   "ஒரு கதாநாயகி என்றாலே பலவித சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் மூன்று நாயகிகளை வைத்து எடுத்திருக்கிறீர்கள். ரொம்ப கஷ்டமாச்சே?'  ""இது மூன்று நாயகிகளுக்கான கதை. மூன்று நாயகிகளில் நாயகன் யாரை திருமணம் செய்து கொள்கிறான் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.''    "இசைப்பயணம் நன்றாக தானே போய்க் கொண்டிருந்தது, திடீர்ன்னு இயக்கம் ஏன்?' ""அப்படித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை எந்த வேலை செய்தாலும் அதில் எந்தக் குறுக்கீடும், தலையீடுகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இந்தப் பாடல் மாதிரி வேண்டும், அந்தப் பாடல் மாதிரி வேண்டும் என்று திணித்ததால் செய்ய முடியவில்லை. அதேபோல் ஒரு ஓப்பனீங் சாங், குத்து சாங் என்று வந்தால் அதைச் செய்ய என்னால் முடியாது.




 "பூ', "களவாணி' படங்கள் எல்லாம் என் இசைக்குத் தீனி போடுவது போன்று நிறைய விஷயங்கள் இருந்தது. இது போன்று நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. அதற்கேற்ற சூழலும் கதையம்சமும் கிடைக்கவில்லை. அதையும் தாண்டி "இவன் தயாரிப்பபாளர், இயக்குநர் ஆகிட்டான் இனி எப்படி மியூசிக் பண்ணுவான்னு' சொல்லி வாய்ப்புகள் வராமல் இருக்கிறது.''
  "தயாரிப்பாளராக களம் இறங்கியிருக்கீங்க உங்கள் பார்வையில் தமிழ் சினிமா எப்படியிருக்கிறது?'  ""இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைதான் இருக்கிறது. ஆர்வத்தில் படம் எடுப்பவர்கள், அனுபவமில்லாமல் படம் எடுப்பவர்கள், ஒரு படத்தைப் பார்த்து பாதிக்கப்பட்டு இந்தப் படத்தைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுத்து ஏமாந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
 
. தமிழ் சினிமாவில் ஒற்றுமையும், புரிதலும் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் உள்ள தூரம் அதிகம். ரசனை உள்ள வியாபாரியிடம் பணமில்லை, பணமுள்ள வியாபாரியிடம் ரசனை இல்லை. ஆர்ட்டிஸ்ட் வேல்யு உள்ள குப்பைப் படங்களை வாங்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள புதுமுகம் நடித்த படங்களை வாங்க யாரும் தயாராக இல்லை.'' பொறிந்து தள்ளிவிட்டு புறப்பட்டார் எஸ்.எஸ்.குமரன்.


thanx  - cinema express

தீபாவளி சினிமா ரேசில் ஜெயிக்கப்போவது யாரு?

1. கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜா அஜித் நடிக்கும் ஆரம்பம் உடன் தீபாவளி ரேசில் # ரேஸ்னா யார் ஜெயிப்பாங்கனு எல்லாருக்கும் தெரியும்



---------------------


2.  இரவு 8 மணிக்கு மேல் கவர்ச்சி காட்ட மாட்டேன் - நயன் தாரா அதிரடி அறிவிப்பு .பெட்ரோல் பங்க் ஓனர்கள் அதிர்ச்சி # சும்மா




----------------------


3. யாரையுமே நேசிக்காமல் ,எந்த ஆணிடமும் சிக்காமல் இதயத்தை காலியாக ் வைத்திருப்பது காதலு ுக்கு செய்யப்படும் மிகப்பெரிய ஏமாற்று



------------------------


4. அரிது அரிது அறிமுகம் இல்லா ஆண் ஒரு பெண்ணை தங்கை ஆக ஏற்பது.அதனினும் அரிது அவனை அப்பெண் முழுக்க நம்புதல்



------------------------------


5. தலைவா டீம் ஜெயா டி வி க்கு போகாம சன் டி வி க்கு போய் இருக்கே.இதனால ஜில்லா க்கு பிற்காலத்துல பிரச்சனை ஏதும் வருமோ?



-----------------------


6. முந்திரி திருடி திங்கறவங்களை சுருக்கமா முந்திருடி னு சொல்லலாமா?




-----------------------


7. பஸ் ல லவ் சாங் ஓடும்போது ஹீரோ மாதிரி நாம ஒரு லுக் விட்டா பிகரு ஏன் வில்லி மாதிரி முறைக்குது?



---------------------


8. விழாவில் ,கூட்டத்தில் நம்ம சம்சாரம் நம்மை ஒரு முறை முறைத்தால் அதுக்கு அர்த்தம் - வீட்டுக்கு வாய்யா வெச்சுக்கறேன்



-----------------------


9. நம் முன்னோர்கள் ,அரசர்கள் வாழ்ந்த இடங்கள் ,சின்னங்கள் பார்த்து வருவதில் தான் நமக்கு எவ்வளவு சந்தோஷம்





---------------------


10. வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஊமத்துரை இருவரும் வெள்ளையர் கண்ணில் மண்ணைத்தூவி மறைந்து இருந்த கோ ட்டை திருமயம் கோட்டை



------------------------




11. ஸ்ரீரங்கநாதர் சயனம் கொள்ளும் நிலை சிலை இருப்பது தமிழ்நாட்டிலேயே 2 இடங்கள் தான் .1 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 2 புதுக்கோட்டை திருமயம்



------------------------




12. பரிசுத்த ஆவி = 1, பரிமளாவை சுத்தி சுத்தி வந்த ஆவி 2 குதிரையை குளிப்பாட்டும் ஆவி 3 புத்தம்புது ஆனந்த விகடன் #,அதுஇதுஎது?




----------------------



13. காதல் ங்கறது ரf நோட்டு மாதிரி.நாம கண்டபடி என்ன வேணா கிறுக்கலாம்.ஆனா கண்டவன்லாம் வந்து கிறுக்கிட்டுப்போய்டக்கூடாது



-------------------------




14. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ங்கற ஊர்ல ஊருணிங்கற பிரமாதமான தாமரைக்குளம் இருக்கு # குறும்பட இயக்குநர் கவனிக்க


---------------------


15. பெண்களின் அதிக பட்ச பவ்யம் வெளிப்படும் இடம் கோவில் பிரகாரம்.என்னமா பம்முறாங்க ;-)



-------------------------


16. 6 அடி நீளமுள்ள கூந்தல் அழகியை கல்யாணம் பண்ணினவன் தேங்காய் எண்ணெய் ,அரப்பு சிகைக்காய் வாங்கிக்கொடுத்தே ஏழை ஆகிடுவான்



---------------------



17. இந்தக்காலத்துப்பொண்ணுங்க காதலன் கூட சின்ன சண்டைன்னாலும் டக்னு சாபம் குடுத்துடறாங்க.பசங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி




-----------------------



18. பழனிரோப் கார் பழுது# சொப்பனசுந்தரி வெச்சிருந்த கார் மாதிரி மாசத்துக்கு 27 நாள் ரிப்பேர் தான்


---------------------------



19. யாருக்கு வேணாலும் நம்ம போன் நெம்பர் தரலாம்.ஆனா தாலி கட்ன சொந்த சம்சாரத்துக்கு மட்டும் தரவே கூடாது.சும்மா நச்சு நச்சுனு.ஒரே கஷ்டமப்பா




-----------------------------



20./ வெளில கிளம்பும்போது எங்கே போறோம்னு சொல்லிட்டு போனாலும் இந்த பொண்டாட்டிங்க குறுக்கே போன் பண்ணி எங்கே இருக்கீங்க?னு விசாரிப்பாங்க



----------------------------------

Wednesday, September 11, 2013

தாம்பரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் 8–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம்

தாம்பரம், செப். 11–


தாம்பரத்தை அடுத்த சேலையூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜாராம் கூலி தொழிலாளி. பா.ஜனதா தொண்டர். இவரது மகள் ஷோபா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.



இதே தெருவில் குடியிருப்பவர் கிளமென்ட்ராஜ் (30). இவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.


நேற்று மாலை மாணவி ஷோபா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ‘‘நீ கேட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. வீட்டுக்கு வா’’ என்று கிளமென்ட்ராஜ் அழைத்துள்ளார்.



கிளமென்ட்ராஜ் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் என்பதால், புத்தகம் வாங்க அவரது வீட்டுக்கு ஷோபா சென்றார். அப்போது கதவை சாத்திய கிளமென்ட் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.


உடனே மாணவி ஷோபா அலறினார். சத்தம் கேட்டு மாணவியின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள்.


கதவை திறந்த கிளமென்ட்ராஜ், எதுவும் தெரியாதது போல, என்ன விஷயம்? இங்கு யாரும் இல்லை என்றார். ஆனால் உள்ளே மாணவியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தார் மாணவியிடம் விசாரித்தார்கள்.


அப்போது சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் தன்னிடம் தவறாக நடந்தார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அங்கு வந்தவர்களிடம் மாணவி தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சப்–இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தனர்.


தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை அங்கு வந்தார். சேலையூர் போலீசில் சப்–இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். ஆனால் அதை போலீசார் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து பா.ஜனதா பிரமுகர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பொற்றாமரை சந்திரன் உள்பட ஏராளமானோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் சென்று சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கொடுத்தனர்.


உதவி கமிஷனர் தன்ராஜ் புகாரை பெற்றுக் கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இன்று சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் சேலையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,



thanx - malaimalar



சேலையூரில் பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சி: சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை

SHUDDH DESI ROMANCE- சினிமா விமர்சனம் 34 +

 
தினமலர் விமர்சனம்

‘கை போ சே’ படத்தில் தனது மெச்சூர்டு நடிப்பால் அசத்திய நாயகன்  சுஷாஷிந்த் சிங் ராஜ்புத், இஷக்ஸாதே திரைப்படத்தில் தன் நடிப்பிற்கென பல விருதுகளைக் குவித்த பரிணீதி சோப்ரா இருவரின் கூட்டணியில்  வெளிவந்துள்ள படம்.

பாலிவுட் பிரபலமான ரொமான்ஸ் படங்கள் என்றாலே ராஜேஷ் கன்னா – ஆராதனா, ரிஷி கபூர் – பாபி, அமிதாப்பச்சன் – அபிமான், அனில் கபூர் 1942 ஏ லவ்ஸ்டோரி, ஷாரூக் கான் – தில்வாலே துல்ஹானியா லேஜாயேங்கே இதைப் போன்ற படங்கள் உடனே நினைவில் தோன்றும். மாடர்ன் கெட்டப்பில் வரும் கதாநாயகனின் அழகிலும், தோரணையிலும் மயங்கி விழும் கதாநாயகியை காலகாலமாகத்  திரை உலகம் சித்தரித்து வந்தது. கதையைக் காட்டிலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்பட்டது.
 இப்போது இதைப் போன்ற ரொமான்ஸை மெலோ டிராமாவாக, கட்டுக்கதையாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். யஷ் சோப்ரா இயக்கி, ஷாரூக்கான் - கத்ரீனா கைஃப் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ‘ஜப்தக் ஹை ஜான்’ படம் ரசிகர்களிடம் பெற்ற குறைவான வரவேற்பு இதற்கொரு சரியான உதாரணம்.


இன்றைய நாட்களில் சில இள வட்டங்கள் வாழ விரும்புவது லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப் அதாவது திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது. இந்த லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப் பற்றிய கதைதான் ஷுத்த தேசி ரொமான்ஸ்.  இப்படத்தைப் பொருத்த ஒரு நல்ல விஷயம் இது போன்ற வாழ்க்கை சரி என்றோ, தவறு என்றோ விவாதம் செய்யப்படவில்லை..

ஜெய்பூரில் டூரிஸ்ட் கைடாக நாயகன் ஷுஷாந்த் குமார். காதலில் விழுந்து தான் மணம் முடிக்கணும்னு நினைக்கிற நம்ம ஹீரோவுக்கு காதலே அமையாம போகுது. தன் கல்யாணத்துக்காக புறப்படும் ஹீரோ பஸ்ஸில் அருகே அமரும் பரிணீதி சோப்ராவுடன் பேசத் தொடங்குகிறார். தொடரும் உரையாடல், இரவில் இருவருக்கும் இருக்கம் வரவழைத்து, லிப்லாக் வரை போகிறது.  
 தனக்கும் வாணிகபூருக்கும் நடக்கவிருந்த திருமணத்தில் மாலை மாற்றும் வேளையில் திருமண வீட்டை விட்டு ஹீரோ டாய்லெட் வழியாகத் தப்பித்து ஓடுகிறார். பஸ்ஸில்  முத்தம் கொடுத்த பரிணீதியை ஜெய்பூரில் பிறகு சுஷாந்த் சந்திக்க இருவரும் காதல் கொண்டு கலவியும் கொள்கின்றனர், ஒரே வீட்டில் வாழும் இவ்விருவர்கள், தங்கள் உறவை அங்கீகரிக்க மணம் முடிக்க எண்ணுகின்றனர். இப்போது தான் திரைக்கதையில் ட்விஸ்ட்!! 


திருமணம் செய்து பொருப்பேற்க அஞ்சும் பரிணீதி மண்டபத்தை விட்டு ஓடுகிறார். தன்னை விட்டு ஒரு பெண் ஓடியதை எண்ணி நாயகன் துவண்டு போகிறார். ஜெய்பூர்க்கு வரும் வாணிகபூர் சுஷாந்த்தைக் காண, இருவர்களும் நண்பர்களாகி காதலராகின்றனர். சுஷாந்த்தும் வாணிகபூரும் இணையும் இவ்வேளையில் பரிணீதி என்ட்ரீ கொடுக்கிறார். இதன் பின் பாமா ருக்மணி கதை தான். 

‘பேண்டு பஜா பாரத்’ இயக்கிய மணிஷ் ஷர்மாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் ரசிக்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. முதலாவதாக நேர்பட உரைக்கின்ற திரைக்கதை. தனியே வாழும், சுய சிந்தனையில் செயல்படும பெண்ணாக பரிணீதி சோப்ரா. இவர் சிகரெட் பிடிப்பது போன்ற பல காட்சிகள் உண்டு.  இதைப் போன்ற போல்டு உமனாக நாயகி சித்தரிக்கப்படும் போது அப்பெண்கள் மிகுந்த கோபப்படக் கூடியவர்களாகவும் எடுத்தெரியும் குணமுள்ளவர்களாகத் தான் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் இப்படத்தில் மாடர்னிஸம் சரியான அளவில் அமையப்பட்டிருந்தது.
.
ஓவர் எமோஷனலான வசனங்கள் கிடையாது பிண்ணணி இசை கூட கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அழகாக சித்தரித்துள்ளது. இரண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய, தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் இன்றைய மங்கைகளின் கதாபாத்திரம் படத்திற்கு சரியான பக்கபலம்.  கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் டாப் டக்கர், வெள்ளந்தித்தனமாக இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பல பெண்களின் இதயத்தை தூக்கி சாப்பிடுகிறது. ‘இஷக்ஸாதே’யில் மிரட்டிய பரிணீதி சோப்ரா இப்படத்தில் மாடர்னாக, அமைதியாக அசத்தியிருக்கிறார். 
 


ரிஷிகபூர் வரும் இடங்கள் நகைச்சுவை கலந்த சிந்தனை. எதிர்காலத்தில் திருமணம் என்ற சடங்கே நடக்குமா?? என்ற கேள்வியை சொல்லாமல் இப்படம் எழுப்புகிறது.
மனு ஆனந்தின் ஒளிப்பதிவு ஜெய்பூர் நகரத்தை மிக அழகாக படமாக்கியுள்ளது. ரிஷிகபூரின் கதாபாத்திரம் ஜெய்பூரில் உள்ள உணவுப்பண்டங்களை டேஸ்ட் செய்ய டெம்ப்ட் செய்கிறது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெண்களே தன் காதலன் பற்றி நினைப்பவற்றை இப்படத்தில் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.  ஒயின் ஷாப்பில் தன் காதலியை வசமாரியாக கெட்ட வார்த்தையில் கழுவி ஊத்தும் கதாநாயகனைப் பார்த்து புளித்த கண்களுக்கு இப்படம் புதுமையாக இருக்கும். சில்ஹவுட்டில் வரும் இதழ் முத்தக் காட்சிகள் ரசனையுடன் படமாக்கப்பட்டிருக்கு. இயக்குனர் பிரென்சு ரோமென்ஸ் படங்களின் ரசிகராக இருப்பார் போல. லிவ்விங் டுகேதர் ரிலேஷன்ஷிப்பில் சுதந்திரமாக வாழும் மனிதர்கள் கல்யாணம் வருகையில் பொறுப்பேற்க பயப்படும் விஷயத்தை இப்படம் தெளிவாக சித்தரித்துள்ளது.

மொத்தத்தில்: ஷுத்த தேஸி ரொமான்ஸ் வளைந்து கொடுக்காத அப்பழுக்கற்ற காதல் கதை.  ஆஹா ஓஹோவெல்லாம் இல்லை.  கண்டிப்பாக நன்று திருப்திகரமானதொன்று.
 நன்றி  -தினமலர்

திருத்தவே முடியாத திலோத்தமைகள்......

1. நான் சின்னப்பையனா இருக்கும்போது ஷ்கீலா (LAW)ன்னா ஏதோ சட்டக்கல்லூரி பேருனு நினைச்சுட்டிருந்தேன்


---------------------



2.இன்று ஆசிரியர் தினம் என்பதால் டீச்சரை லவ் பண்றவங்க தங்கள் காதலைச்சொல்ல உகந்த தினம் , ரோஜாஎதுக்குன்னு கேட்டா சமாளிக்கலாம்




----------------------


 3. நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கி விட்டதால் இனிமேல் நோக்கியா ஃபோன்வெச்சிருக்கறவங்க அவசியம் ஒரு சிஸ்டமும் வாங்கியாகனுமோ?




---------------------------



4. பொங்கலுக்கு ரிலீஸ்னு அறிவிச்ச படம் ஒண்ணு தள்ளிப்போயிடுச்சாம்,யார்துன்னு கேட்காதீங்க, நான் சொல்ல மாட்டேன்,கிகிகி



--------------------------

5. ட்ரீம் கேர்ள் னு பேர் எடுக்க அடிக்கடி ட்விட்டர்ல "நிஜமாகவே ஒரு கனவு கண்டேன்!" னு சொன்னா போதும்



------------------------------



6. அசராம் பாபு பெயிலை மறுத்து ஜெயிலில் இப்போ இருப்பதால் ஆங்காங்கே இருக்கும் லேடி ஜெயிலர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்



-----------------------------


7. 18 வயசு டீன் ஏஜ் டீச்சர்சுக்கு டீச்சர் தின வாழ்த்து


-----------------------



8 அண்ணா துரை ,அண்ணா மலை யை கட்டுன பொண்டாட்டிங்க புருசனை எப்படி கொஞ்சுவாங்க? கற்பனையே கர்ண கொடூரமா இருக்கு



----------------------------


9 நெய்வேலி மந்தாரக்குப்பம் ல் பொண்ணு கட்டுனா தாரம் ரொம்ப மந்தமா இருக்குமோ?




-------------------------



10. பேங்க் அக்கவுண்ட்டில் மினிமம் 5000 ரூபாயாவது இருந்தால் மட்டுமே ட்விட்டரில் FB யில் கடலை போட முடியும் - ப சி அறிவிப்பு


------------------------


11. வீட்ல பீரோல பல வகையான ஆடை வெச்சிருக்காங்கனு யாரையும் பன்னாடைனு கூப்ட்ர முடியாது


---------------------------



12.திருத்தவே முடியாத திலோத்தமைகள் இருக்கும் வரை அதைக்கண்டு வருத்தப்படாம வாலிபர்களால் இருக்கவே முடியாது



----------------------



13. அன்பே! நவ கிரகங்கள் ஒன்பதாமே? ஒருத்தி நீ இங்கே இருக்கே? மீதி 8 பேரு எங்கே?



---------------------------



14. புருசன் பொண்டாட்டி பிரச்சனையை பைசல் பண்ண 4 பெரிய மனுசங்களைக்கூப்ட்டு ஹால் ல உக்கார வைக்கறது வேஸ்ட். தம்பதிகள் பெட்ரூம்ல தனிமைலயே சமாதானம் ஆகிக்குவாங்க





----------------------


15.நாம ஜிம்முக்குப்போறோமா? எக்ஸஸைஸ் பண்றோமா? அது முக்கியம் இல்ல.முகத்தில் ,உடலில் தண்ணி தெளிச்சு FB ல ஸ்டேட்டஸ் போடனும்


---------------------


16. அவசர அறிவிப்பு.சென்னிமலை உண்டியல் திருட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பி கு - நம்ம டார்கெட் எல்லாம் திருப்பதி உண்டியல் தான்



-----------------------


17.கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது.ஆனந்த விகடன் வாசனையும் ,பவர் ஸ்டார் சீனிவாசனையும் தெரியாது.எதிர் பால் கழுதை வாசனை தான் தெரியும்


---------------------


18. இன்று உலக சாக்லேட் தினம் -எனவே இன்று காதலிக்கு அல்வா கொடுக்க இருக்கும் காதலர்கள் சாக்லேட் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


----------------------------


19. கிராமங்களின் கம்மாக்கரைகள் எல்லாம் உம்மாக்கறைகள்



--------------------------



20. மாநகரம் - சென்னை ,மா நகரம் -,சேலம் ,மாமா நகரம் -மும்பை



-------------------------------

Tuesday, September 10, 2013

RIDDICK- சினிமா விமர்சனம்

A


ஹீரோ  ஒரு  வேற்றுக்கிரகவாசி .தன்னோட   கிரகத்துல இருந்து  வேற  ஒரு கிரகத்துக்கு  வந்து  சிக்கிக்கறான், நாஞ்சில் சம்பத் , அனிதா குப்புசாமி  எல்லாம் அதிமுக ல வந்து மாட்டிக்கிட்ட மாதிரி .  அந்த  கிரகத்துல   ஓவர்  ஹீட் சஹாரா பாலைவனம்  மாதிரி  .. 


அந்த   கிரகத்துல  வேற  உயிர் இனங்கள்  இருப்பதா   ஒரு  ஒளிகாட்டி  தகவல் அனுப்புது , அது  போக   2 விண்கலங்களை  அது இயக்குது .


 அந்த  2 விண்கலங்களில்   ஒரு   விண்கலத்துல   கூலிப்படை ஆட்கள் இருக்காங்க , அவங்க  ஹீரோவை  பிடிக்க வந்தவங்க 

 இன்னொரு விண்கலத்துல  இருப்பது  ஹீரோ  கூட ஆல்ரெடி  ஒர்க் பண்ணின ஆள்-ன் தலைமைல   ஒரு குழு 


இந்த  2  குரூப்பும்  ஹீரோவை வளைச்சுப்பிடிக்க  அந்த  கிரகத்துல   தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கறாங்க 



அப்போ திடீர்னு மழை  வருது , பனி பெய்யுது , புயல் அடிக்குது . பதுங்கி இருந்த   சில உயிர் இனங்கள் வெளில வருது . ஹீரோ , 2 குரூப் எல்லாரையும்   தாக்க ஆரம்பிக்குது . அதுக்குப்பின் யார் யார்  தப்பிச்சாங்க ? யார் மாடினாங்க என்பதே கதை . 

 இதே  கதையை நம்மாளுங்க  எடுத்திருந்தா   படு  மொக்கைன்னு சொல்லி இருப்பாங்க  , ஆனா  ஹாலிவுட் படம் ஆச்சே ? ஆஹா  ஓஹோன்னு  சொல்வாங்களோ? ஆனா என்னைப்பொறுத்தவரை படம்  செம  மொக்கை


 ஹீரோஒ வின்  டீசல் . ஆள் ஆளவந்தான்  கமல் மாதிரி ஜிம் பாடியோட  , மொட்டைத்தலையோட   வர்றார் . படம்  போட்டு  முதல்  23  நிமிடங்கள் அவருக்கு வசனமே இல்லை . நாய் மாதிரி  தோற்றம்  உடைய   ஒரு  மிருகம் , இவர் 2 பேர் மட்டும் தான் . கொஞ்சம்  போர் அடிக்க ஆரம்பிக்குது . 


 விண்கலங்கள் இவரைத்தேடி  வர ஆரம்பிச்சதும்  படத்தில் பர பரப்பு  பத்திக்குது 


 அந்த  குரூப்பில்   ஒரு  லேடியை  புகுத்தியது  இயக்குநரின் சாமார்த்தியம் . ஹீரோ  ஹீரோயின்   இருவருக்குமான   உரையாடல்கள்   காமெடி  கில்மா . 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  வில்லன்  அடிக்கடி  ஹீரோ கிட்டே “ உன்  தலையை  ஒரு  பெட்டில   எடுத்துட்டுப்போகாம  இங்கிருந்து கிளம்ப மாட்டேன் “ அப்டினு பஞ்ச் அடிப்பான் . ஆனா  ஹீரோ சேர் ல கைகள் கட்டப்பட்ட நிலைல   தனக்கு முன் இருக்கும்  வில்லனின்  தலையை  என்னமோ பாதாம் அல்வா வை கட் பண்ற மாதிரி   தலையை எடுக்கும் காட்சி   கொஞ்சம்  கோரம் என்றாலும் அபாரம் . அப்ளாசை அள்ளிய காட்சி 


2.  ஒளிப்பதிவு   , கிராஃபிக்ஸ்  காட்சிகள்  படத்தை  ரசிக்க  வைக்குது , பின்னணி  இசை எனப்படும்  பி ஜி எம்  சுமார்  தான் என்றாலும்  அது பெரிய  குறையா  தெரியலை .



3. படம்  2 மணி நேரம்  ஓடினாலும்   ஓப்பனிங்க் ல 20 நிமிடம் காட்சிகள் தவிர  மீதி எல்லாமே பர பரப்பான  திரைக்கதை நகர்த்தல்களே




A



இயக்குநரிடம்  சில  கேள்விகள்



1. வேற்றுக்கிரக வாசிக்கும்   ரத்தம் சிவப்புக்கலர்ல தான்  இருக்கனுமா?மனிதனுக்கும்  , ஏலியனுக்கும் எந்த வித்தியாசமும்  இருக்காதா? 


2. வேற்றுக்கிரகம் என்ன தமிழ் நாடா? அங்கேயும்  மின்சாரப்பற்றாக்குறை , அதை சேமித்தல் , திருடுதல்னு எல்லாம் காட்சிகள்  வருதே?


3.   ஹீரோவைக்கொலை பண்ணுவதே  அந்த   2  குழுவின்  நோக்கம் . ஆள் மாட்டியதும் டக்னு   கொலை செய்யாம   கட்டிப்போட்டு  ராமாயணம் பேசிட்டு இருப்பாங்களா? யாராவது ?


4. ஒரு  குழுவில்    8 பேரு  இருக்காங்க , அதுல  ஒரு லேடியும் ஒண்ணு . இன்னொரு குரூப் தலைவன் ஆட்கள் பற்றாக்குறை , அவன் அடக்கி வாசிக்க மாட்டானா?  அந்த லேடி கிட்டே வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்குவது பெண்ணாதிக்கமா இருக்கு .பலம்  குறைந்த  நிலையில்  இருக்கும்  ஒருவன் அப்படி பெண்களிடம்  வம்புபண்ணி மாட்டிக்க மாட்டான்


5.  ஹீரோ மேல  குண்டு பாய்ஞ்சா அவனுக்கு எதுவும் ஆகாது, அது தெரிஞ்சும்  எதுக்கு அந்த எதிரி குரூப் சுட்டுட்டே இருக்காங்க?


a
  மனம் கவர்ந்த வசனங்கள்

1. இரை இல்லாம வேட்டை ஆட முடியாது.இறை இல்லாம மன நிம்மதி கிடையாது


2. ஆபத்து வரும்்போது தைரியசாலிகள் மட்டுமே போராட முன் வர்றாங்க



3. ஒரு ஆம்புலன்சைக்கூப்பிட இன்னொரு ஆம்புலன்சுல போற மாதிரி இருக்கு நாம செய்யும் சில காரியங்கள்



4. பயந்து போகும் மிருகம் எப்பவும் தன் இருப்பிடமான குகைக்குத்தான் எப்படியும் வரும்



5. ஏதோ ஒரு கட்டத்துல நாம எல்லாருமே ஓய்வெடுக்க வேண்டியவங்கதான்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 39 ( ஹாலிவுட் படத்துக்கு மார்க் போடமாட்டாங்க , இருந்தாலும் ஒப்பீட்டுக்காக )



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.5 / 5


சி பி கமெண்ட் - RIDDICK- டீசல் விலை ஏறிட்டே இருக்கு.வின் டீசல் படம் ரேட்டிங் இறங்கிட்டே இருக்கு.சுமார் தான். HBOல போட்டா பாருங்க, தியேட்டர்ல பார்க்கும்  அளவு  ஒர்த் இல்லை

கோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி

 
 
சுல்தான் தி வோரியர் அனிமேஷன் ட்ரெயிலர் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது கோச்சடையான் ட்ரெயிலர். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாவதால் சிஜியில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரெயிலரை பார்த்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கும்போல இருக்கு. அதை பற்றி கொஞ்சம் டீப்பா நோண்டுவோம்

பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் என்றால் என்ன ?

அனிமேஷன் காட்சி ஒன்றில் பாத்திரம் ஒன்றை அசைவிப்பதற்கு 2 வழிகளை பின்பற்றுவார்கள். ஒன்று Key frame அனிமேஷன். அதாவது பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் Frame by Frame ஆக கணினி மூலமாகவே உள்ளிடுவார்கள். சாதாரணமாக திரைப்படங்களில் 24 frame per second என்ற வகையில் ஒரு செக்கன் காட்சிக்கு 24 key frame வழங்கப்படும். மிகவும் கடினமான பணி இது. இரண்டாவது முறை மோஷன் கப்சரிங். மோஷன் கப்சரிங் என்பது நுண்னிய சென்சார்களை ஒரு நடிகரின் உடலில் பொருத்தி நடிக்கவைத்து அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக கணினியில் பதிவுசெய்து, அதனை வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவத்திற்கு உள்ளிடுவதன் மூலம் அவ் உருவத்தினை அசையவைப்பது. ஹாலிவூட்டில் நெடுங்காலமாக இந்த முறைதான் உபயோகிக்கப்படுகிறது. நாம் அறிந்த ஸ்பைடர்மேன் 2, மேட்ரிக்ஸ், லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ், கிங்காங் படங்களில் இதே தொழில்நுட்பம்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ் இன் கோலும் பாத்திரம், கிங்காங் எல்லாமே மிகத்துல்லியமான கிராபிக்ஸுடன் உயிரோட்டமாக நடமாடியதற்கு மோஷன் கப்சரிங் தொழில்நுட்பமே உதவிபுரிந்தது.

இது இலகுவான முறையாக இருந்தபோதும் இதன்மூலம் மிக துல்லியமாக ஒரு நடிகரின் அசைவுகளை பிரதியெடுக்க முடியாது. மோசன் கப்சரிங் மூலம் பதிவுசெய்யப்பட்ட நடிகரின் அசைவுகளை மேலும் துல்லியமாக்க keyframe மூலம் மேலும் மெருகூட்டப்படும். இதனால் அறிமுகப்படுத்தப்பட்டதே பெர்ஃபோமன்ஸ் கப்சரிங். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. மோஷன் கப்சரிங்கின் மேம்பட்ட வடிவமே. நடிகரின் அசைவுகளை துல்லியமாக பதிவுசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்ட Lycra எனப்படும் ஆடையை நடிகருக்கு அணிவித்து நடிக்க வைப்பார்கள். இந்த பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் தொழில்நுட்பம்தான் கோச்சடையானில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெயிலரை பார்க்கும்போது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் அல்ல, மோஷன் கப்சரிங் தொழில்நுட்பம் கூட பயன்படுத்தாமல் வெறும் Keyframe அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதுபோன்றே தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்தளவுக்கு கார்டூன்தனம் தெரிகிறது.

விளம்பரத்திற்காக பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் பெயரை பயன்படுத்திவிட்டு படம் முழுவதும் keyframe அனிமேஷன் முறையில்தான் எடுத்தார்களா? அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா ? அவர்களுக்குத்தான் வெளிச்சம். கப்சரிங் முறை சொதப்பியது இருக்க, படத்தின் கிராபிக்ஸ் இன்னொரு சொதப்பல். ஐந்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாமல் அதேபோல்தான் இருக்கிறது. பாத்திரங்களின் வடிவமைப்பு, முக்கியமாக ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றம் பெருத்த ஏமாற்றம்

ஒரு நபரை கிராபிக்ஸில் உருவாக்கும்போது முகம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவரை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து கிராபிக்ஸ் முகத்துடன் பொருத்திவிடுவார்கள். உதாரணத்திற்கு ஸ்பைடர்மேனில் வரும் octopus என்னும் பாத்திரம் இப்படி வடிவமைக்கப்பட்டதே. ஆனால் அது கிராபிக்ஸ்தான் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோல கஜினி கம்பியூட்டர் கேமில் வரும் அமீர்கானின் முகம். சில கோணங்களில் மட்டும் படம்பிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக வந்திருக்கும். ஒரு கம்பியூட்டர் கேமில் காட்டியிய தத்ரூபத்தை, மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் காட்டாதது கவலைக்குரிய விடயம். environment வடிவமைப்பு மட்டும் மொத்தமாக பார்க்கும்போது ஓரளவு நன்றாக உள்ளது. இவற்றைவிட நிறைய சொதப்பல்கள். 46 ஆவது செக்கனில் வரும் குதிரைக்கூட்டம், 48 ஆவது செக்கனில் வரும் பெண்கள்கூட்டம் (பாடல் காட்சி) 56 ஆவது செக்கனில் வரும் பாடல் காட்சி, இந்த காட்சிகளில் மக்கள் கூட்டத்தை காண்பித்திருப்பார்கள். எல்லோரது அசைவுகளும் செக்கன் மாறாமல் அச்சில் வார்த்ததுபோல இருக்கும். இவற்றை எல்லாம் விட உச்சக்கட்டமான பொறுப்பற்ற செயல் தெரிவது ட்ரெயிலரின் 56 ஆவது செக்கனில். ரஜினி முன்னோக்கி நடந்துவந்துகொண்டிருப்பார். காமெரா கோணத்தில் ரஜினியின் அளவு மாறுபடாது. அதாவது காமெரா ரஜினியோடு சேர்ந்து பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன்படி பின்னால் இருக்கும் கோட்டையும் ரஜினிக்கு பின்னால் இருப்பவர்களும் பின்னோக்கி நகரவேண்டும். ஆனால் இங்கே அப்படியே நிற்கிறார்கள்

சரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சுல்தான் தி வோரியர் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியும். அதுபற்றிய மேலதிக தகவல்கள் இல்லாமலே கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்டது. சுல்தான் தி வோரியரில் ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றத்துக்கான அசைவுகளை ரஜினியின் டூப் நடிகர் ஜீவா வழங்குவதாகவும் ஒரு செய்தி அடிபட்டது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது கோச்சடையானில் உண்மையாகவே ரஜினியின் பங்கு இருக்கிறதா? அல்லது குரலை மட்டும் கொடுத்துவிட்டு வெறும் வியாபாரத்துக்கு ரஜினியின் பெயர் பயன்படுத்தப்படப்போகிறதா ?????
 
 
thanx -Mathuran Raveendran fb page