Saturday, September 07, 2013

ஆனந்த விகடன் தங்க மீன்கள் விமர்சனத்தில் குறைத்துமதிப்பீடா? இயக்குநர் ராம் பர பரப்பு குமுறல்

 சி பி செந்தில் குமார் ஆகிய என் கருத்து 


ஆனந்த விகடன் தங்க மீன்கள் படத்துக்கு 44 மார்க் கொடுத்தது தரமான படங்களை எடுப்பவர்களுக்கு மிகவும் பின்னடைவு. ஏன்னா   விகடன்  விமர்சனம் சராசரியா  5 லட்சம்  வாசகர்களை போய்ச்சேருது. வாய்வழி  விமர்சனம் எனப்படும் மவுத் டாக் மூலம்  விகடன்  விமர்சனம்  50 லட்சம் பேரை போய்ச்சேரும்  என உத்தேசமாக கணிக்கிறேன் 


  பொதுவாக   கோடம்பாக்கத்தில்  விகடன் மார்க் எவ்வளவு  என்பதை உன்னிப்பாக பார்க்கிறார்கள் , என்பது அனைவரும்  அறிந்ததே .  ஆனானப்பட்டஷங்கர் , மணி ரத்னம்  கூட விகடன்  மார்க்  பற்றிய தங்கள் எதிர்பார்ப்பு பற்றி தனித்தனி பேட்டிகளில்  சிலாகித்தது உண்டு 


 அப்படிப்பட்ட ஆனந்த  விகடன் சமீப காலமாய் அதாவது  5 வருடங்களாக   சாதா படங்களுக்கெல்லாம்  மார்க்குகளைஅள்ளி இறைக்கிறார்கள் , நல்ல படங்களுக்கு   சுமாரான மார்க்கே போடறாங்க 


 முதலில் எல்லாம் விகடனில்  40 மார்க் வாங்கினாலே  அது நல்ல படம் தான். குடும்பத்தோட போய்ப்பார்க்கலாம்  என  மதிப்பிடலாம் . 

விகடனில்  50 மற்றும்  50 க்குமேல்  மார்க் வாங்கிய படங்க:ள் 




1  பதினாறு  வயதினிலே  -  61.5
2. .  நாயகன்  -  60


3. ஹேராம் - 60 


4. உதிரிப்பூக்கள்  - 60


5. பசங்க -58 


6. பரதேசி  - 56  


7. ஹரிதாஸ் - 45

8 கிழக்குச் சீமையிலெ" - 54


9. தவமாய் தவமிருந்து - 53

இப்படிஅதிக மார்க் வாங்கிய படங்கள்  வியாபார ரீதியாக  பெரும் வெற்றி பெறாமலும்  போய் இருக்கின்றன . விகடனில் மார்க் வந்தால் மட்டும் ஒரு படம் சூப்பர் ஹிட் ஆக்கி விட முடியாது . ஆனால் நான்  சொல்ல  வருவது லோ பட்ஜெட்டில்  எடுக்கப்படும்  தரமானபடங்களுக்கு    விமர்சனங்கள் பாசிட்டிவாக   அமைந்தால்  அது அதிகமான மக்களிடம்  போய்ச்சேரும் , அதுஆரோக்கியமான  சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்லது 


  இந்த தங்க  மீன்கள் படத்தில் குறைகள் இல்லாமல்  இல்லை . இருந்தாலும்   இதுக்கு  50மார்க்  போட்டிருக்கலாம் என்பதே   எனது கருத்து
ராமின் மரமேசையிலிருந்து : 10.
(ஆனந்த விகடன் மதிப்பெண்ணும் சர்ச்சையும்)

வணக்கம்,

வழக்கம் போல் இன்றும் அதிகாலை 3 மணிக்குதான் எழுத முடிகிறது.

ஆனந்த விகடன் குறித்த உங்கள் மின்னஞ்சல்களைப் படித்து முடித்தேன். நண்பகலில் கோவை, தஞ்சை யிலிருந்தும் நண்பர்கள் அழைத்து ஆனந்த விகடன் குறித்து முறையிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமா என்று கேட்டார்கள்? நீங்களும் மின்னஞ்சலில் இதைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

சென்னையில் ஆனந்த விகடன் வியாழன் அன்றுதான் வெளிவரும் என்பதால் நான் ஆனந்த விகடன் அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்து உங்கள் அழைப்புகளைக் குறித்துச் சொல்லி ஆனந்தவிகடன் படிக்கத் தரும்படி கேட்டேன்.

கடைசி இரண்டு பத்திகள் தவிர மற்றவை சிறப்பாகவே இருந்தன. இரண்டாம் பத்தியில் அவர்கள் குழம்பியதையும் அவர்கள் கவனிக்கத் தவறியததையும் தர்க்கப்பூர்வமாய் சுட்டிக் காட்டினேன்.

இத்தனை நன்றாக எழுதிவிட்டு ஏன் 44 மார்க், டிவிடி பார்த்து எடுத்தப் படங்களுக்கு 50 மார்க் போடும் நீங்கள் எப்படி ஒரு original அய் புறக்கணிக்கிறீர்கள். 

கற்றது தமிழுக்கும் இதையேதான் செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டு தங்கமீன்கள் குறித்த விளக்கங்களையும் தந்தேன். மதிப்பெண்கள் கொடுத்த அறுவர் குழு அலுவலகம் விட்டு சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. ஒரு கோரிக்கை வைத்து திரும்பி இருக்கிறேன். ஆசிரியர் திரு.ரா.கண்ணண் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குள்ளாக தங்கள் முதலாளியிடம் பேசிவிட்டு கோரிக்கையை ஏற்க முடியுமா முடியாதா என்று சொல்லிவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

எனவே நீங்களும் 11 மணி வரை பொறுத்திருங்கள்.
கோரிக்கை ஏற்கபடாவிடின் நானே என் மறுப்பை வெளியிடுகிறேன்.

அதுவரை எந்தக் கருத்தும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிரியங்களுடன்

ராம்.
 
 
ஆனந்த விகடன் ஆசிரியர் வரும் வார ஆனந்த விகடனில் ஆனந்தவிகடன் விமர்சனம் குறித்தும் அதன் மதிப்பெண்கள் குறித்தும் என் விமர்சனத்தைப் பதிவுசெய்வதாய் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை
இன்னும் ஒரு வாரம் காத்திருப்பதில் தவறில்லை
என்று சொல்லுகிறது.

பிரியங்களுடன்

ராம்.
  •  விகடன்  விமர்சனம்


    தன் மகளை 'தங்க மீனாக’ வளர்க்க ஆசைப்படும் தந்தையின் கதை!   


    நிலையான வேலையும் நிரந்தர வருமானமும் இல்லாத ராம், தன் மகள் சாதனாவை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். அச்சு எழுத்துகளுக்கு அஞ்சும் சாதனாவுக்கோ, மலை, குளம், பறவைகள், மீன்கள் என செயல்வழிக் கற்றலில்தான் ஆர்வம். பள்ளியில் அவள் மட்டம் தட்டப்பட, 'மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வக்கில்லையே’ என்று வீட்டில் ராம் குத்திக்காட்டப்பட... இருவரும் தங்கள் அடையாளத்தைத் தக்கவைக்கிறார்களா என்பதே படம்!


    கல்விக் கட்டணங்கள், ஓர் ஏழைக் குடும்பத்தை அலைக்கழிக்கும் கதையை கையில் எடுத்ததற்கும், அப்பா-மகள் பாசத்தை முதல் புள்ளியாக வைத்து சமூகத்தின் பல இழைகளைப் பின்னிய துணிச்சலுக்கும்... இயக்குநர் ராமுக்கு வாழ்த்து.

    அல்லாடும் தந்தையாக 'நடிகர்’ ராம் அறிமுகம். 'எதுக்கு நாயை அடிச்சீங்க?’ என்று மனைவி கேட்க, 'அப்போ வேற யாரைத்தான்டி நான் அடிக்கிறது’ என்று தன் இயலாமையில் வெடிக்கும்போதும், 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு காக்கா வந்து உங்ககிட்ட சொல்லுச்சா மிஸ்’ என்று பள்ளிக்கூடத்தில் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் குமுறும்போதும்... மனதில் பதிகிறார். சமயங்களில் பெரிய மனுஷித்தன்மையோடு பேசினாலும், தெற்றுப் பல் சிரிப்பிலும், மழலை உச்சரிப்பிலும் குட்டி தேவதையாக மனம் ஈர்க்கிறாள் சாதனா.


    தன்னை எவிட்டாவாகப் பாவித்து, 'அவ தங்க மீனாகிடுவா’ என்று தோழியிடம் கதை சொல்லும் இடம்... க்ளாஸிக்! 'நானும் செல்லம்மா மாதிரிதானேங்கே’ என்று கணவனிடம் இறைஞ்சுவதும், 'விளையாட்டுக்குக்கூட அவளை 'திருடி’னு சொல்லாதீங்க மாமா’ என்று மாமனாரை அதட்டுவதும், மாமியார், மாமனார், கணவன் என்று அனைவரிடமும் வாங்கும் இடிகளுக்கு ஒருகட்டத்தில் பொறுமை இழந்து மகளிடம் வெடிக்கும்போதும்... ஒவ்வோர் உணர்விலும் உருக்கம் சேர்க்கிறார் ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோர். 'நான் நாளைக்கு சாகுறேனே... ஏன்னா, இன்னைக்கு எங்கம்மா பூரி பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க’ என்று குறுகுறுக்கும் சாதனாவின் குட்டித் தோழி சஞ்சனா தோன்றும் காட்சிகளில் எல்லாம் உள்ளம் கொள்ளை கொள்ளுகிறாள்.

    'அப்போ தாத்தாதான் காக்காவா?’,  'காசு இல்லாதவன்லாம் முட்டாப் பயனு நினைக்காதீங்கடா’, 'விளம்பரம் போடும்போது, 'இதைப் பணம் இல்லாதவங்க பார்க்காதீங்க’ன்னா போடுறாங்க?’, 'கிறிஸ்துமஸ் தாத்தா சொன்னா ஜீசஸ் கேப்பார்... ஹெட் மாஸ்டர் கேப்பாரா?’, 'விளம்பரத்துல நாய் வந்ததுல இருந்து சிம்கார்டு வித்துச்சோ இல்லையோ, நாய் நல்லா விக்குது’, 'அவன் ரொம்ப நல்லவன்... கொஞ்சம் கெட்டவனாத்தான் திரும்பி வரட்டுமே’, 'உங்ககிட்ட நான் விட்டுட்டுப்போன குழந்தையைக் கொன்னுட்டீங்க’ - சூழலுக்குப் பொருத்தமான சுளீர் வசனங்கள் கோபம், ஏக்கம், சோகம், கலகலப்பு சுமந்து படம் நெடுகப் பரவிக்கிடக்கின்றன.


    ஓட்டுத் தாழ்வார வீடு, மலை, குளம், ரயில், சைக்கிள், படகு இல்லம் என ஒவ்வொரு தளத்தையும் ஒவ்வொரு பாத்திரமாக மனதில் பதியவைக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்பிந்துசாரா. பரந்து விரியும் பச்சைப் பசேல் மலைப்பரப்போ, இருள் கவிழ்ந்த ஒற்றை அறையோ இருப்பிடம் கொண்டு சேர்க்கிறது ஒளிப்பதிவு. பாடல்களில் 'ஆனந்த யாழ்’ மீட்டிய யுவன், பின்னணி இசையில் உயிர் உருக்குகிறார். அர்த்தம் செறிந்த வசனங்களுக்கு இணையாக ஸ்கோர் செய்கிறது பிரவாகமான யுவனின் பின்னணி இசை.

    ராம் - சாதனா கதாபாத்திரங்கள்தான் பிரதானமென்றாலும், படத்தின் ஒவ்வொரு கேரக்டர் செதுக்கல்களிலும் தேர்ச்சி. குறிப்பாக, எவிட்டா மிஸ்! க்ளைமாக்ஸ் காட்சி தவிர வசனங்கள் இல்லை, பாடல்கள் இல்லை,  சோகம் ததும்பும் சூழல்தான்... ஆனாலும் 'எவிட்டா மிஸ்’ஸாகக் கலங்கடிக்கிறார்  பத்மப்ரியா.



    பத்மப்ரியாவின் கணவர் நள்ளிரவில் ராமை எதிர்கொள்ளும் சூழலும், சில நிமிடங்களில் மனம் தெளிந்து ராமின் தோள் பிடித்து அரவணைப்பதும்... நெகிழ்ச்சியான சிறுகதை! 'நல்லாசிரியர் விருது’ பெற்ற பூ ராமு, மருமகளின் மீது கோபமும் பாசமும் பொழியும் ரோகினி, 'டேய் என் அண்ணன் வாங்கிக் கொடுத்த சாக்லேட்... எனக்கும் குடுடா’ எனும் தங்கை ரம்யா, பார்வையிலேயே அதட்டல் போடும் ஸ்டெல்லா மிஸ் லிஸ்ஸி... நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும்... அழகு!

    இத்தனை 'நல்லன எல்லாம்’ பார்த்துப் பார்த்துச் சேகரித்திருக்கும் ராம், பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? பள்ளிக் கட்டணம் 2,000 ரூபாய் மட்டும்தான் ராமுக்கு சிக்கல். ஆனால், 2,000 ரூபாய் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருக்க, கேரளா சென்றவர், பிறகு 22 ஆயிரம் ரூபாய் 'நாய்’ என்று இலக்கு வைத்து காடு, மலை, மேடேறுவதெல்லாம்... வழி தவறிய பயணம்!


    எவிட்டா டீச்சரின் சந்தேகப் புத்திக் கணவனின் இயல்பை வார்த்தைகளே இல்லாமல் பதிவுசெய்த இடம், சாதனா - சஞ்சனா இருவரிடையிலான குழந்தை நட்பை அச்சு அசலாகப் பிரதியெடுத்த சித்திரிப்புகள்... அந்த அத்தியாயங்களின் நேர்த்தியைப் பின்பாதியிலும் புகுத்தியிருக்கலாம் ராம்!

    ஆனாலும், கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!


    - விகடன் விமர்சனக்  குழு



    நல்ல கதை கரு.அருமையான இசை ,கேமரா, எல்லாம் இருந்தும் குழப்பமான திரைகதை சொதப்புகிறது. எல்லா பாத்திரங்களின் எதார்த்த நடிப்பு மனதை நிறைக்கும் போது,கதாநாயகனின் வெற்று ஆர்ப்பாட்டம் பல சமயங்களில் எரிசலடைய வைக்கிறது. 'கொள்கைவாதி' எப்போதும் குழப்பவாதியாகவே இருக்க வேண்டும் என்பது என்ன விதியோ???

    என்னங்க இது அநியாயமாக இருக்கு... இந்த படத்துக்கு 60 மேலே மதிப்பெண்கள் கொடுப்பதை விட்டு விட்டு வெறும் 44 தான் கொடுக்குறீங்களே....

    ராம் நல்ல படைப்பாளி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஆனால் கணினி துறையை சாடுவது அவரின் எல்லா படங்களிலும் பொதுவாகிறது! திடீர் பணக்காரன்.. படோபமாக வாழுவது கணினித்துறையில் மட்டுமா நடக்கிறது.. சினிமாத்துறையில் நடக்காத கூத்துக்கலா? தன் படங்களில் அதை படமாக்கவோ விமர்சிக்க முயல்வாரா ராம்!

    நல்ல படம். ஆனால், வீட்டை விட்டு பணம் சம்பாதிக்கப் போகும் பகுதிகள் முட்டாள்தனமானது யதார்தமற்றது. இந்த இயக்குனருக்கு ஒரு இயலாமை உள்ளது, கையறு நிலை. அதனாலேயே, தாரே ஜமீர் பர் பாதிப்பில் உல்டா அடித்தாலும் அப்பன் வழக்கம் போல் கொஞ்சம் நட்டாக காட்டியது.

    பின்பாதி மையச் சரடில் குழம்பியது ஏன்? கற்றது தமிழிலும் இதே பிழை( சம்மந்தமே இல்லாமல் கணினி துறையை சாடியது). நல்ல படைப்பாளி நல்ல கதை சொல்லியாக இருக்கின்ற நீங்கள் இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்துங்கள். உலக தர தமிழ் சினிமாவை உங்களை போன்றவர்களிடம் இருந்துதான் எதிர் பார்க்கிறோம். பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த மற்றுமோர் அறிய படைப்பாளி !!! வாழ்த்துக்கள் ராம்.
    • Jegadeesh

    ...படத்தின் முன்னோட்டமே கண்களில் கண்ணீர் முட்ட வைத்தது... குட்டி பெண் நமது வீடுகளில் இருக்கும் சேட்டை செய்யும் குட்டி பெண்களை நினைவுட்டுகிறாள்...
    • R.BALAMURUGESAN
    கண்ணாடித் தொட்டிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல், குளத்தின் நீள அகலத்துக்கு வளையவரும் இந்தத் 'தங்க மீனி’ன் உற்சாகத்தை ரசிக்கலாம்!
    • satheesh
    வாழ்த்துகள் ராம். மென் மேலும் வளர்க. நல்ல படங்களை இதுவரை தந்து விட்ட நீங்கள், உங்களுக்கென ஒரு பாதையையும் இடத்தையும் பிடித்துவிட்டீர்கள். இனிமேல் போக வேண்டிய தூரத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும், உங்களுக்கு தெரியாதது இல்லை, கெட்ட சினிமா உலகம் இது.

    யுவன் உங்களை எப்போதும் கை விட்டதில்லை, இந்த படத்திலும் அப்படியே, ஆனந்த யாழ் சூப்பர். அவருடன் மீண்டும் வேலை செய்ய நேர்ந்தால், மறந்தும் யுவனை பாட வைத்துவிடாதீர்கள்.
    • E

    நண்பர்களே .... ரொம்ப நாளைக்கு பிறகு வெளிவந்திருக்கும் ஒரு மிக தரமான திரைப்படம். தயவு செய்து பாருங்கள்.
    எனக்கும் இரு பெண் குழந்தைகள் உண்டு. ஆனால் எல்லோருக்கும் முரண்பட்டால் தனியாக தெரிவோம் என்பதற்க்காக சொல்லவில்லை. என்னைபொருத்தவரை இது பெண்ணின் அங்கங்களை காட்டி ஏமாற்றுவது போல் இது அப்பா-மகள் பாசத்தை மிகைப்படுத்தி மக்களை ஏமாற்றும் படம்.

    எனக்கு திருவிளையாடலில் நக்கீரனார் சொல்வதாக வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு சரியான பாடலுக்கு என் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதனைப்பார்த்து மகிழ்ச்சியடைபவன் நான்தான். ஒரு பிழையான பாட்டிற்க்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்த்து வருத்தப்படுபவனும் நான் தான்." என்பது போல இந்த படத்தை இரானிய படத்தினிடமோ அல்லது ஜப்பானிய அகிரா குரோசோவா படத்தினிடமோ, நம்மூர் சத்யஜித் ரே படத்தினிடமோ ஒப்பீட்டு பார்க்க வேண்டாம்.

    என்னைக்கேட்டால் இந்த படத்தில் protoganist -ன் தங்கை கேட்ட கேள்வி , "செல்லம்மா 5 -ஓ அல்லது 50 லட்ச ரூபாயோ மதிப்புள்ள கார் கேட்டிருந்தால் தந்தை எந்தளவு stretch செய்ய வேண்டும்" என்பது மிகச்சரியான கேள்வி என்பேன்.

    இந்த படம் ஒரு பண்படாத மனிதனின் பிதற்றல் என்பது என் தாழ்மையான கருத்து.
    • a

    பாஸ், தலைவா படத்தை விட இது 1000 டைம்ஸ் பெட்டெர் தானே...அப்புறம் ஏன் பாஸ் எவ்வளுவு நல்லா பரீட்சை எழுதினாலும் மார்க் மட்டும் கம்மியா போடுற தமிழ் வாத்தியார் மாதிரியே மார்க் போடுறிங்க......
    இது அநியாயம் பாஸ்... இது கண்டிப்பா 48-50 மார்க்கு தகுதியான படம் தான்.. பொங்கு அடிக்காதிங்க

    44 toooo less.. 60 எதிர்பார்த்தேன்..
    • வேல்
    கஞ்சப் பிசாசுய்யா நீங்க . வெறும் 44 ? போங்கடா !
    ஆயிரம் நல்ல விஷயம் சொல்லிட்டு வெறும் 44 தானா?

    கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் இது போன்ற படங்களை...
    • அசோகன், சிங்கப்பூர்
    • 1

    நல்ல படமா இருக்கும் போலிருக்கு! பார்க்க வேண்டும். ஆனால், என் இவ்வளவு குறைந்த மார்க்?
    \

    அடேடே விகடன் 42 மார்க்குக்கு மேல போட்டா பாக்கலாம் போலருக்கே.
    • S
    44 மதிப்பெண் மிகவும் குறைவு

1408 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

பொதுவா திகில் படம்னா இரத்தம்,சதை,லொட்டு,லொசுக்கு இதெல்லாம் கண்டிப்பா இருக்கும். அதுலையும் ஹாலிவுட் படம்னா கேக்கவே வேணாம். (EVIL DEAD,TEXAS TRAINSHAW MASSACRE,SAW) இன்னும் நிறைய உதாரணங்கள். அப்பிடி இல்லைனா எதாவது ஆவி வந்து பழி வாங்கற மாதிரி இருக்கும். இந்த இரண்டும் இல்லாம வித்தியாசமா 2007 ல வந்து எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த படம் தான் இந்த 1408.

ஹீரோ ஒரு திகில் கதை எழுத்தாளர். அவர் எழுதற கதை ரொம்ப அனுபவப்பூர்வமா இருக்கும். அதாவது அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கற இடத்துக்கு போயி அங்க ஒரு இராத்திரி பூரா இருந்து... (தனியாதான்யா...)
அவர்க்கு ஏற்படுற அனுபவங்களை எழுத்தா எழுதறவர். ஒரு பெரிய தங்கும் விடுதில நடக்கற சம்பவங்களை கேள்விப்பட்டு அங்கே போய் சம்பவம் நடந்த 1408 அறைல தங்க அனுமதி கேக்கறார்.ஆனா மேனேஜர் அனுமதிக்கல. அந்த அறைல நடந்த கொலைகளைப் பத்தி விளக்கி சொல்றார்.நம்ம தலைவரு எதையுமே காதுல போட்டுக்கல. இவன் சொன்னா கேக்க மாட்டான்னு மேனேஜர் ஓக்கே சொல்றார். அங்க என்ன நடந்தது? ஹீரோ என்ன ஆனார் என்பதை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து தெரிந்துகொள்க.


படத்துல ஃபுல்லா ஹீரோ ராஜ்ஜியம்தான். ஆள் கலக்கிட்டார். பயந்து நடுங்குவதில் தொடங்கி பின்னர் தெனாவெட்டாக அறையை எரிக்கும் இறுதி காட்சி வரை அவரது நடிப்பு செம. ஹீரோயின் வந்த வரை ஒக்கே. அவருக்கு வயசானது அப்பட்டமா முகத்துல தெரியுது.மேனேஜர், குழந்தை,பக்கத்து அறை பெண்,ரூம் செர்வீஸ் பாய் என அனைவரும் மனதில் நிற்கிறார்கள்.திரைக்கதை படத்துக்கு பெரிய பலம்.110 நிமிடம் போர் அடிக்காம எடுத்துருக்காங்க.சபாஷ்...


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்:

1. படத்திற்கு ஏற்ற லொக்கேஷன், திரைக்கதை அமைப்பு .

2. அதிகம் செலவில்லாமல் ஒரே அறையில் படத்தை முடித்தது அதுவும் அலுப்பு வராமல்.

3. ஹீரோவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.முழுப்படத்தை அவர்தான் தாங்குகிறார்.ஒரே ரியாக்‌ஷன் காட்டாமல் காட்சிக்கு காட்சி மாறுபட்டு நடித்திருக்கிறார்.

4. எதிர்பார்ப்பை கிளப்ப சாமர்த்தியமாக ஹீரோவின் குடும்ப நிலையை இடையில் ஃப்ளாஷ்பேக்காக திணித்தது.

5. திரைக்கதையில் ஒரு சிறிய டிவிஸ்ட் வைத்தது. சொல்லிட்டா சப்புனு போய்ரும். படத்துல பேருக்கு இருக்கறது இந்த ஒரே ஒரு ட்விஸ்டுதான்.

6. திகில் காட்சிகள். சாவியை கதவு தானாக உள்ளே இழுக்கும் காட்சி தொடங்கி இறுதி வரை அனைத்தும் கச்சிதமாக அமைத்தது.

7. இசை, ஒளிப்பதிவு சரியாக அமைத்தது.


இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பேய் வருவதற்கான காரணத்தை கடைசி வரை சொல்லவே இல்லியே.

2. இந்த இடத்துல மட்டும்தான் சாகற அளவுக்கு அனுபவம் ஏற்படுதா? இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லியா?

3. இந்த திரைக்கதைக்கு 110நிமிடம் தேவை இல்லியே. இன்னும் கொஞ்சம் சுருக்கிஇருக்கலாம்.(அடேய்.. இன்னும் சுருக்குனா அது குறும்படம்)

4. மருந்துக்கு கூட உம்மா கொடுக்கற சீன் இல்லயே. இந்த இடத்துல தான் இது ஹாலிவுட் படமானு சந்தேகம் வருது.

5. கடைசில தேவை இல்லாம எதுக்கு காருக்குள்ள.......திகில் சீன்

மொத்ததில் தரமான ஒரு திகில் படம். பெண்கள், குழந்தைகள், பாட்டிகள்,தாத்தாக்கள் என அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.



டிஸ்கி -இந்த   சினிமாவிமர்சனத்தைஉங்களுக்கு  வழங்கியவ்ர்  என் அக்கா பையன்  கார்த்திக் , ஸ்டில்ஸ்செலக்சன் எடிட்டிங்க்  மேற்பார்வை  மட்டும்   நான்



ரேட்டிங்க்  -  3.5  /5 


Friday, September 06, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ வழக்கம்  போல   வெட்டாஃபீஸ்.ஹீரோயின்  பிளஸ்டூ படிக்கும் பொண்ணு .ஹீரோ  ஹீரோயினோட க்ளாஸ் டீச்சருக்கு  லவ் லெட்டர்  கொடுக்க  அனுமாரா  ஹீரோயினை யூஸ் பண்ணிக்கறாரு. டீச்சரும்   ஓக்கே தான் , ஆனா   திடீர்னு  ஒரு ட்விஸ்ட். ஹீரோயினை  ஹீரோ  திருவிழாவில் சேலை  ல பார்த்துடறாரு  ஹீரோ. டக்னு லவ் வந்துடுது  , நல்ல வேளை யாரையும்  ஸ்விம்மிங்க் டிரஸ்ல பார்க்கலை .


அந்த  டீச்சர  அம்போன்னு  விட்டுட்டு  ஹீரோ   ஹீரோயினை லவ் பண்றாரு . ஹீரோயின்க்கு  ஹீரோ மேல  காதல்  இருந்தாலும்  அதை வெளீல சொல்லாம  ஹீரோவை  இழுத்தடிக்கறாரு.


 ஹீரோயின் அப்பா   ஒரு  காமெடி பீசு .ஊர் என்ன சொல்லும்?னு4 பேருக்கு பயந்து   காதலை  எதிர்க்கறாரு . இவங்க காதல்  என்ன ஆச்சு? என்பது தான் மிச்சமீதிக்கதை


 படத்தோட  பி்ளஸ் பாயிண்ட் என்னான்னா  சிவா மனசுலசக்தி , பாஸ்  என்கிற பாஸ்கரன்  , ஒரு கல் ஒரு கண்ணாடி  என  ஹாட்ரிக்  ஹிட் அடிச்ச எம்ராஜேஷின்   உதவி   இயக்குநர்   இயக்கிய படம் . வசனம்   குரு ராஜேஷ் . ஆனா பாருங்க   காமெடி   வசனங்கள்  பெரிய அளவில்  கை கொடுக்கலை . 


 ஹீரோ  சிவ கார்த்திகேயன் . எதிர் நீச்சல்  ஹிட்டுக்குப்பின்    அதை  விட  ஒரு மாற்றுக்குறைவான   சாதா  காதல் கதைல நடிச்சிருக்கார்.  குறை சொல்ல  முடியாத    நடிப்பு .  இவர்  கவனமாக  கேரக்டர்களை  தேர்ந்தெடுத்து  நடித்தால்  துள்ளாத மனமும் துள்ளும் விஜய்  ரேஞ்சுக்கு  முன்னேற  முடியும் . பாடல் காட்சிகளில்  விஜய், காமெடிகாட்சிகளில் ரஜினி என  இவர்  இமிடேட் செய்யாமல்   சொந்த சரக்கையே  ட்ரை பண்ணலாம். இவர் ஒன்றும்   மதுரை முத்து மாதிரி  சொந்த சரக்கில்லாத ஆள்  இல்லையே?அதே  போல்   ரிப்பீட் டான்ஸ் ஸ்டெப்  அதிகம் வந்து போவதையும்  கவனத்தில் வெச்சுக்கனும் . 



சத்யராஜ் தான்    ஹீரோவுக்கு  மாமனார் .  துப்பாக்கியை  வெச்சு இவர் பண்ணும்   கூத்து   சி  செண்டர் ஆடியன்சை  சிரிக்க வைக்கும் . படம்  முழுக்க  விறைப்பாவே    வரும் இவர்    க்ளைமாக்சில்   காமெடியன் ஆகி  இருப்பது  நம்ப   முடியவில்லை  என்றாலும்  மக்கள் ரசிக்கிறார்கள் . 



புரோட்டா   சூரி தான்  காமெடியன். இவர்  கிட்டே என்ன குறைன்னா   இவர் பாடி லேங்குவேஜ்   பூரா   வடிவேலுவை  இமிடேட் பண்ணுவது. மனசுக்குள்  சந்தானம்  மாதிரி   பஞ்ச் , கவுண்ட்டர் டயலாக்  கொடுக்கனும் என நினைப்பது , ஆனா வெறும்  நினைப்பு மட்டும் தான்  , அவருக்குன்னு  சொந்த  உழைப்பு ஏதும் இல்லை  இயக்குநர் சொன்னபடிசெய்கிறார் , அவ்வளவுதான்



 ஹீரோயின் புதுமுகம்  ஸ்ரீ வித்யா , பால் மணம் மாறா  பாலகி. பார்க்கவே பாவமா இருக்கு. ஹோம்லியான  முகம். பாஸ் மார்க் வாங்கிடும் . 


 பிந்து மாதவி  டீச்சராக   2 சீனில்  வந்தாலும்கொள்ளை  கொள்ளும் அழகு.  பின்னால  லோ ப கழுத்து  ஜாக்கெட் போட்ட டீச்சரை நான் இப்போதான் பார்க்கறேன். ஆசிரியர்  தின  சிறப்பு  டிரஸ் போல   . 


சத்யராஜ் -ன்   அடிபொடிகளாக    வரும்  காதல் தண்டபாணி உட்பட்ட 4 பேரும்   ஆங்காங்கே   சிரிக்கவைக்கிறார்கள். 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1.    படம்   பூஜை  போட்ட நாள்  முதல் வெளிவரும் ஸ்டில்கள்  , போஸ்டர்   டிசைன் எல்லாமே  நல்ல ஒரு காமெடிப்படம் மாதிரி தோற்றத்தை  ஏற்படுத்தியது



2. இயக்குநர் எம் ராஜேஷ்  தான்  வ்சனம்  என்பதை  போஸ்டர்களில்  முன்னிலைப்படுத்தியது   



3.  பெண்கள்  தியேட்டரில் பார்க்கும்படி  அனைவருக்கும் கண்ணியமான ஆடை  அலங்காரங்களில்  செய் நேர்த்தி



4.   வசனங்களில்  பிரமாதமான காமெடி இல்லாவிட்டாலும் ஆங்காங்கே   கிச்சு கிச்சு மூட்டி விட்டது போல்  சிச்சுவேஷன்  காமெடி ட்ரை பண்ணியது 



5. பட்டி தொட்டி எல்லாம் சூப்பர்   ஹிட் ஆன   ஊதாக்கலரு  ரிப்பன் பாடல் காட்சி அதகளம் , தியேட்டரில்   செம ஆட்டம், இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் பாட்டும்  ஹிட்தான் 






 




இயக்குநரிடம்  சில  கேள்விகள்: , திரைக்கதையில் , நடன அமைப்பில்  சில ஆலோசனைகள்



1. ஓப்பனிங்க்  சீனில்  ஆல மரத்தடியில்  படுத்திருக்கும் பரோட்டா சூரி    போலீஸ் ஆஃபீசரிடம்  படுத்த வாக்கில்   2 காலால் வணக்கம்   சொல்வதெல்லாம் ஓவர்.கவுண்டமணி கூட இப்படி நடிச்சதில்லை. பொருத்தமும் இல்லை .  என்ன தான் காமெடி என்றாலும் எந்த   போலீஸ் ஆஃபீசராவது   இதை சகித்துக்கொள்வாரா?  பார்க்கும் நமக்கே சகிக்கலை, கோபம்வருது 



2. கோர்ட்டில்     ஜட்ஜ்  அய்யாவை ப்பார்த்து   போலீஸ் ஆஃபீசர்  சல்யூட்   வைக்காமல் எதுக்கு கூழைக்கும்பிடு போடறார்? அவர்  என்ன ஜமீன் தாரா?



3. திண்டுக்கல்   ரீட்டா   கரகாட்டக்காரியின்  ஆட்டம்  மேடையில்  நடக்கும் போது   ஹீரோயினின்  தோழி இடது கையில் இடது  கை விரலால் வாயில் விரல் வைத்து விசில் அடிக்குது . அதே போல்  நான்   கடவுள்  மொட்டை வில்லன்   இடது கையால் சாக்லெட்   எடுப்பதும்  ஏன்? 


4.  சத்யராஜ்க்கு    விழா  ,ஆட்டம் , பாட்டம் எல்லாம் பிடிக்கலைன்னா   எதுக்கு அந்த விழாவுக்கு வர்றார்? வீட்டிலேயே   படுத்து இருக்கலாமே?



5.    இம்சைஅரசன் 23ஃஆம்   புலிகேசியில் வடிவேலு ஆல்ரெடி செஞ்ச   மாடிப்படி சறுக்குவிளையாட்டுகாமெடியை   பரோட்டா   சூரி செய்வது  எரிச்சல் 



6. மருதாணி  வாங்கும்  ஹீரோயின்  தோழி யிடம்    அந்தமருதாணியை முகத்துல  வை , அப்பவாவது  நீ கலர் ஆவியா?ன்னுபார்க்கலாம் என்ற வசனம் தேவை இல்லாதது  . ஏன்னா   அதை வசனம் பேசும்  சிவகார்த்திகேயன், அதை எழுதிய ராஜேஷ்   இருவருமே  மாநிற,ம் தான் என்பதை மறந்து விடக்கூடாது  . மேலும்  ஒரு படத்தில்   கறுப்புநிறத்தை  கிண்டல் செய்வதெல்லாம்  அந்தக்காலம்  , மாடர்ன்  யுகத்துக்குவாங்கப்பா



7.   ஹீரோ  ஹீரோயின்  இருவருக்கும் பரஸ்பரம்   காதல்  வரும் காட்சி படு அபத்தம்  .  ஹீரோ  ஹீரோயினை ஸ்கூல்  யூனிஃபார்மில் பார்க்கும்போது வராத  காதல் அவரை  சேலையில் பார்த்ததும்  வருவது கூட தேவலை .  ஆனால் ஹீரோயினுக்கு  நடக்க  இருந்த திருமணத்தை   ஹீரோ தடுத்து நிறுத்திட்டாரென்பதைகேட்ட மாத்திரத்தில்   காதல் வருவது   காதலை  கேலிக்கூத்து ஆக்குகிறது  . காமெடிப்படம்  என்றா;லும்   காதல்  மலரும்  தருணம்  மிக முக்கியமானது , அதை  காமெடிஆக்கக்கூடாது


8.  கலக்கலான ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு படமாக்கலில் கொண்டாட்டம் குறைவு.இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம். அந்த   பாட்டு   விஷுவலில்  மட்டும்  நடன இயக்குநரிடம்   இன்னும் வேலைவாங்கி  இருக்கலாம் . இந்த  மாதிரி   செம  ஹிட் ஆன பாட்டுக்கு டான்ஸ்  மூவ்மென்ட்  ரொம்ப  முக்கியம்  , இந்த சிச்சுவேஷனில்   மொக்கை காமெடி  எல்லாம்  ட்ரை பண்ணக்கூடாது


9. பயங்கர  வில்லனா வர்றவரு  அவங்க வீட்டு பசு மாட்டை கிணத்துல விழுந்தவுடன்  ஹீரோ காப்பாத்திட்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உருகுவதும் , காதல்க்கு ஓக்கே சொல்வதும்  படு  சொதப்பல்  


10 . ஹீரோயின்  பேரு  லதா பாண்டி.அதுக்காக எல்லா காட்சிகளிலும்  அவரை   அம்மா   ஃபுல் நேம்சொல்லி கூப்பிடுவது ஏன்?  லதாஅப்டித்தானே  பொதுவா கூப்பிடுவாங்க.இந்தக்காலத்துல  ராஜின்னு பேரு  வெச்சாலே நீளமா இருக்குன்னு  சுருக்கி ரா அப்டின்னு கூப்பிடற மாடர்ன் காலம் .





மனம் கவர்ந்த வசனங்கள்


1. போற இடத்துல எல்லாம் புரோட்டாவை எதிர்பார்க்கக்கூடாது



2. விடிகாலைல எந்திரிச்சு பரீட்சைக்கு படிக்கறவனும் ,பொண்ணுங்க நம்மைக்கண்டுக்கலையேன்னு கவலைப்படறவனும் நம்ம சங்கத்துக்கு சரிப்படமாட்டாங்க



3  சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும்.திருவிழான்னா நம்ம சங்கம் இருக்கனும்



4. காமெடியனுக்குத்தெரியுமா காதலோட அருமை.



போடா டேய். அதனால என்ன? வில்லனுக்கு தெரியுமே? 



5. சும்மா வெறும் லவ் லெட்டர் குடுத்தா எப்டி? க்ரீட்டிங் கார்டு வாங்கி சாக்லெட் வெச்சுக்குடு வாங்கிக்கறேன்.




 அய்யோ.ரொம்ப காஸ்ட்லி லவ் மாதிரி தெரியுதே? 




6.  நாட்டு நடப்புல  குடிகாரங்க  தான்  பல உண்மைக:ளை   வெளிலசொல்றாங்க 



7.வாழ்க்கைல   டீட்டிகெஷன்  ரொம்ப  முக்கியம் 

 டேய், அதுடெடிக்கேஷன் டா 


  கோபத்துல எனக்கு அப்படித்தாண்டா வரும்



8.  இவன்  கவிப்பேரரசு  ஏ ஆர்  ரஹ்மானையே மிஞ்சிட்டாண்டா


 அடப்பாவி , ஒரு டீ வாங்கிக்குடுத்தான்கறதுக்காக இப்படி எல்லாம் அள்ளி விடறதா? 




9./ நீ  பேசும்போதே   ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க்  மிஸ்டேக்  வருது . இதுல    கவிதை வேறயா? விளங்கிடும்



 10 .  நீ என்  வீட்டுப்பக்கமே  வரமாட்டியே , எங்கே   எதுக்கு   வந்தே?



 நீ எப்படி இருக்கே?ன்னு பார்த்துட்டு ப்போகவந்தேன்  மாப்ளை  



11. இப்படி   1000 ரூபா   சட்டை ,  750 ரூபா   ஷூ , 500 ரூபா பேண்ட் கலர் ஃபுல்லா இறங்குனா     அவ என்ன நினைப்பா  ?

 அடுத்த  ராமராஜன்   நீதான்  -னு  நினைப்பா  


 12   என்  நண்பனை  யார்   கலாய்ச்சாலும்    என்னால  சும்மா இருக்க முடியாது 

 டேய் 


13 .  துப்பாக்கின்னா  தோட்டா   இருக்கனும்  , பிளக்ஸ் பேனர்னா  அதுல நம்ம   ஃபோட்டோ  இருக்கனும் 



14.  நீ எப்போடா   சட்ட ஆலோசகர் ஆனே? 


 போன  வாரம் தான்    அப்ளிகேஷன் போட்டுவெச்சேன்  



15. இதை எல்லாம் நான் சொன்னா  சிரிச்சிடுவாங்க ஜனங்க


 நான் சொன்னா மாட்டும் ?



16.  உனக்கு   என்ன நரம்புத்  தளர்ச்சியா? அடுத்தவன் சோத்தை   பரிமாற உனக்கு ஏன் கை இப்படி நடுங்குது ?



17.   அடிப்பாவி  .  கண்ணை மூடிக்கறேன் 


 யோவ் , மூட வேண்டியது நாங்கதான்


 அந்த பழக்கம்  தான் உங்களூக்கு அறவே கிடையாதே ? 




18.   கெழ போல்ட்டு  - திண்டுக்கல்   ரீட்டா எங்கே?அந்த கட்டை  வந்தாத்தான்  இந்தக்கட்டை  வேகும் 


 ஒரு லிட்டர் பெட்ரோல்  வாங்கி  ஊத்துனா   எல்லா கட்டையும்   வெந்துடும்



19. காதல் மனசுக்குள்ளே   இருந்தாலும்  அதை வெளீல  காட்டிக்கக்கூடாதுடி. அவனுங்களை அலைய  விடனும் 


  இது  தேறாதுன்னுஅடுத்த பார்ட்டிக்கு  ரூட்டுபோடகிளம்பிட்டா ?

 அந்த வல்லமை  இவர்க்கு இல்லை ( அந்த  வேய்க்கானம்  இவருக்கு இல்லை  ) 


20.  டேய் , என்னடா பண்றே? இதெல்லாம்  நம்ம சங்க செட்யூலிலேயே  இல்லையேடா ?


 இனிமே சங்கமே  இல்லை 



21. மாப்ளை, ஓசில ஓடற    படம்  தானே? யார் பார்த்தா   என்ன ?  ( தூக்கக்கலக்கத்தில் ஹீரோயின்  ஆடை  விலகும்போது  சூரியின் வசனம்) 


22..  ஏய், மேரேஜ்க்கு முன்னால  ஒரு  ரிகர்சல் பார்க்கலாமா?



23.  டேய் , என்  கட்டை அவுத்து விடுங்கடா  

 சுத்தம் , உன்னை  கட்டவே இல்லையே? 



24.  என்ன வேணும் ?


 எல்லாமேவேணும்   , ஹி ஹி 



 25.  சிவப்புகலர் ல   சீவுனா    ஃபர்ஸ்ட் நைட்  ஒழுங்கா நடக்காதுடா 


 அடப்பாவி , சிவப்புக்கலர்  சீப்புக்கும்  , முதல் இரவுக்கும்  என்னடா சம்பந்தம்  ?


26. கொஞ்சம் பவுடர்  வேணும் 


 ஏன் நீங்க   கொண்டாரலையா? 


 அவசரத்துல   ப்ளீச்சிங்க் பவுடர்   கொண்டாந்துட்டோம்


27.  டியர்  , 2 நாள் ல  உன் முடிவை சொல்லிடு


 அப்டி முடியலைனா? 


   3 நாள் ல சொல்லு 


 28.  காதல்  ஒர்க் அவுட் ஆகனும்னா பிசிக்கல் டச்  ரொம்ப  முக்கியம்டா மாப்ளை



29. விலக்கி   விடும் ஆட்கள்  இருக்கும்  தைரியத்துல தான் இவனுங்க  இப்படி அடிச்சுக்கறாங்க  , கண்டுக்கவே கண்டுக்காதீங்க // தானா  சரி ஆகிடுவாங்க 



30 . சிவணாண்டி  மாடு  கிணத்துல  விழுந்துடுச்சு


 சிவணாண்டி  விழலை ? 



31. ஹீரோயின்  - அய்யோ , அப்பா 

 ஹீரோ -நான் அப்பாஆக இன்னும்   டைம்  இருக்கு


32   மைனர் , மேஜர் இதெல்லாம்  கல்யாணத்துக்குத்தான் போல, கழட்டி   விடுறதுக்குவயசே  தேவை இல்லை போல  . அப்பா பேச்சத்தான் கேட்பேன்னா எதுக்குடா இந்த பொண்ணுங்க   நம்ம மனசுல ஆசையைய்த்தூண்டனும் , அவங்கபேச்சையே கேட்டுட்டு வீட்டுலயேஇருக்கறதுதானே?



33.  தாய் இல்லாம வளர்ந்த  பையன்  தான் தனக்கு வர்ற  மனைவியை  தாயா பார்த்துப்பான்  


34.  சின்னப்பொண்ணு -  அக்கா  உங்களைக்கூப்பிடறாங்க , சீக்கிரம்  வாங்க  

 ஹீரோ - யாரு?உங்கக்காவா? நல்லா இருப்பாங்களா? பார்க்க ? 


 அய்யோ  , எங்கக்கா  இல்லை லதா அக்கா








ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  40



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =   2.75   / 5


சி பி கமெண்ட் வருத்தப்படாத வா ச - சாதா காதல் கதை ,காமெடி பற்றாக்குறை .பி,சி சென்ட்டர்களில் சுமாரா போகும் -  போர் அடிக்காம போகுது , டி வி ல போட்டா பார்க்கலாம் .  தியேட்டர்ல பார்க்கனும்னா 50  ரூபா  கொடுத்து பார்க்கும் அளவு ஒர்த் . மல்ட்டி காம்ப்ளெக்ஸ் ல  150  ரூபா  200  ரூபா  அளவுக்கு  ஒர்த்  இல்லை

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (6 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. வருத்தப்படாத வாலிபர் சங்கம்- திருநெல்வேலி:ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நடிப்பில் எனது திறமையை வெளிப்படுத்துவேன் என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதாநாயகன் சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 6ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரையிலர் காட்சிகள், 2 பாடல்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளையும், பாடல்களையும் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக சென்று வெளியிட்டு வருகிறார்.

நெல்லை டவுன் ரத்னா தியேட்டரில் பாடல் மற்றும் டிரைலர் காட்சிகள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதற்காக தியேட்டருக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் மற்றும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் வெடிவெடித்தும், மேள தாளம் முழங்க மாலை அணிவித்தும் வரவேற்றனர். அப்போது நிருபர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:

"திருநெல்வேலி' இனிப்பான ஊர். நெல்லை "அல்வா' வை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும், கருத்துக்களையும் நேரடியாக ரசிகர்களிடமும், மக்களிடம் சென்று தெரிவிக்கவேண்டும் என்பதற்காக தான் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன். படத்தின் பாடல்களை யூ டியூப்பில் 30 லட்சம் பேர் பார்த்து, கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாலு பேர் நம்மை என்ன நினைப்பார்கள் என்பதற்காக தான் நம்மில் பலர் வாழ்க்கை நடத்துகிறோம். அதைத் தான் படத்தில் கதையாக 2 கேரக்டரில் வைத்துள்ளோம். படத்தில் 90 சதவீதம் காமெடிகள் உள்ளன. படத்தின் டிரையிலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் உள்ளது. ரசிகர்கள் எனக்கு பேராதரவு வழங்கி வருகின்றனர். நெல்லை ரசிகர்களின் வரவேற்பு என்னை பிரமிக்க வைத்துள்ளது.

எனது ரசிகர்களின் ஆதரவை சுய நலத்திற்காக பயன்படுத்த மாட்டேன். ரசிகர்களை ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல படங்களையும், எனது திறமையையும் நடிப்பில் வெளிப்படுத்துவேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளோம். கல்யாண வயது வருவதற்குள்ளாகவே சில பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து வடுகின்றனர். அவர்களுக்கு சில உணர்வு பூர்வமான விஷயங்கள் உள்ளன. திருமணத்திற்கு அவசரப்படாமல் அவர்களின் தேவைகளை, உணர்வுகளை பூர்த்தி செய்து திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்பது தான் அந்த கருத்து.

போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களுக்கு எது தேவையோ அதைச் செய்தால் அவர்களுக்கு அது பிடிக்கும். நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், நடிகராகி விட்டாரே என்ற வருத்தமும் ரசிகர்களில் சிலருக்கு உள்ளது. படத்தில் நான் போஸ் பாண்டி என்ற கேரக்டரிலும், நடிகர் சத்தியராஜ் சிவபாண்டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளோம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வரியில் ஒரு பாடலையும் எனது சொந்தக் குரலில் பாடியுள்ளேன். இந்த படம் வெற்றிப்படமாக நிச்சயம் அமையும். ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவேண்டும்.

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.

பேட்டியின் போது ரத்னா தியேட்டர் உரிமையாளர் ரவிசங்கர், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ், விநியோகஸ்தர் வக்கீல் ரத்னராஜ் உடனிருந்தனர்.


கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் வசூல் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்தும் என்கிறது கோலிவுட். படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் சுமார் 10 கோடியாம்.

அப்படத்தினைத் தொடர்ந்து, எப்போது வெளியீடு என்று தெரியாமல் இருந்த 'எதிர் நீச்சல்' படத்தினை ஏப்ரல் வெளியீடு என்று அறிவித்து இருக்கிறார்கள்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடித்து இருக்கும் 'எதிர் நீச்சல்' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்.

அதுமட்டுமன்றி சத்தமன்றி சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இயக்குனர் ராஜேஷிடம் பணிபுரிந்த ராம்.ஜே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நாயகியாக BUS STOP என்ற தெலுங்குப் படத்தில் நடித்த ஸ்ரீவித்யா நடித்து வருகிறார்.

ராஜேஷ் இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இப்படமும் முழுநீள நகைச்சுவை படம் தான். படத்தின் தலைப்பு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படத்தினையும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தினைத் தயாரித்த மதனே தயாரித்து வருகிறார்.

ஈரோடு   ராயல் , அன்னபூரணி , சீனிவாசா  வில்  ரிலீஸ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்-சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_4124.html


2.ஆர்யா சூர்யா -ராம.நாராயணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் 126-வது படத்துக்கு 'ஆர்யா சூர்யா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஷ்ணபிரியன், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், கோவை சரளா, நட்சத்திரா, ருத்ஷா, நளினி, ஆர்த்திகணேஷ், முகைத்கான் ஆகியோர் நடிக்கின்றனர்.

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு இருவர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வழியில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது. அந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்து முன்னோர்கள் என்பதே கதை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி படமாக தயாராகிறது என்றார் ராம.நாராயணன்.

இதில் பேராசிரியர் சொந்தோ எழுதிய ‘முமைத் முமைத் முமைத்’ என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடி நடித்துள்ளார். ஐந்து நாட்கள் ஐந்து அரங்குகளில் இருபத்தைந்து நடன அழகிகள் மற்றும் முமைத்கானுடன் அவர் நடனம் ஆடி நடித்துள்ளார். இப்பாடல் காட்சி டி.ஆர். கார்டனில் பெரிய அரங்கு அமைத்து படமாக்கப்பட்டு உள்ளது.

ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ், இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்: பிறைசூடன், விவேகா, கானாபாலா, நடனம்: பிரேம்ஜி, காதல் கஞ்தாஸ், திருமால் முருகன், ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன், எடிட்டிங்: ராஜ்கீர்த்தி, வசனம்: புகழ்மணி. 



மத கஜ ராஜா’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால் அந்த படம் வெளியாக இருந்த தியேட்டர்களில், ‘ஆர்யா, சூர்யா’ படம் நாளை ரிலீஸ் ஆகிறது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள படம், ‘மதகஜராஜா’. சுந்தர்.சி இயக்கி இருந்தார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டியது. பிரச்னை காரணமாக படம் சிக்கலில் மாட்டியது.

 இதையடுத்து இந்தப் படத்தை நடிகர் விஷால், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் ரிலீஸ் செய்ய முன்வந்தார். படம் இன்று வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக நேற்றும் நேற்றுமுன்தினமும் வினியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமூக முடிவு எட்டாததால் படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து ‘மத கஜ ராஜா’ ரிலீஸ் ஆவதாக இருந்த தியேட்டர்களில், ‘ஆர்யா, சூர்யா’ படம், நாளை (7,ம் தேதி) ரிலீஸ் ஆகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ராம.நாராயணன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த காமெடி படத்தில் டாக்டர் சீனிவாசன், டி.ராஜேந்தர், விஷ்ணுப்ரியன், ருத்ஷா, நட்சத்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.



3.THOOFAN-கடந்த, 1973ல், இந்தியில், அமிதாப் பச்சனும், ஜெயா பச்சனும் இணைந்து நடித்த, "ஜாஞ்சீர் என்ற இந்தி படத்துக்கு, புதிய முலாம் பூசி, தற்போது, இதே பெயரில் இந்தியிலும், "தூபான் என்ற பெயரில், தெலுங்கிலும் படம் எடுத்துள்ளனர். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நிழல் உலக தாதாவின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து, நிழல் உலக தாதாவை பழிவாங்குவதற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான், படத்தின் பரபரக்க வைக்கும் கதை. போலீஸ் அதிகாரியாக, ராம்சரண் தேஜாவும், அவரது மனைவியாக, பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளனர். வில்லனாக, பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தெலுங்கு படங்களுக்கே உள்ள, அனைத்து விதமான மசாலா அயிட்டங்களும் படத்தில் இருப்பதால், ரொம்பவும் நம்பிக்கையுடன் இருக்கிறார், படத்தின் இயக்குனர், அபூர்வ லகியா

 Theater in erode : SRI KRISHNA

2000 மற்றும் 2004ல் வந்த ரிட்டிக் சீரிசில் இது மூன்றாம் பகுதி. இந்த பிரபஞ்சம் முழுதும் உள்ள பல கிரகங்களால் தேடப்படும் ஒரு கெரகம்புடிச்ச பயபுள்ளதான் இந்த ரிட்டிக். Bounty hunterகளால் பிடித்துவரப்பட்டு பல ஏலியன்கள் இருக்கும் கிரகத்தில் விடப்படும் ரிட்டிக் அங்கிருந்து எப்படி தப்பித்து எதிரிகளுக்கு ரிவிட் அடிக்கிறான் என்பதுதான் கதை. கிராஃபிக்ஸ் கலக்கலாக உள்ளதாம் .வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு பாலிவுட்டில் டப்பிங் பேச அழைப்பு வந்துள்ளது. தமிழில் ஆடு­களம் படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இதில் டாப்ஸிக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசினார். தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் டாப்ஸி .

இப்போது தமிழில் 'முனி3', 'ஆரம்பம்' என இரு படங்களிலும், தெலுங்கில் 'ஷேடோ', 'சாகசம்' என இரு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் சித்தார்த்துடன் 'சாஷ்மி பத்தோர்' எனும் இந்திப் படத்தில் நடித்தார். படமும் ஹிட்டானது. இப்போது பாலிவுட்டிலும் ராசியான நடிகை ஆகிவிட்டார் டாப்ஸி.

இந்த சமயத்தில் பாலிவுட்டில்  இருந்து டாப்ஸிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இது நடிப்பதற்காக இல்லை. டப்பிங் பேசு­வ­தற்காக.  'ரிட்டிக்' என்ற ஹாலிவுட் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி­களில் டப்பிங் செய்­யப்­பட்டு வெளி­யாக உள்­ளது. இதில் ஹீரோயின் கேரக்­ட­ருக்கு இந்­தியில் டப்பிங் பேசும்­படி டாப்­ஸிக்கு அழைப்பு வந்­துள்­ளது.

டாப்ஸியும் இதை சந்­தோ­ஷ­மாக ஏற்றுக் கொண்­டு உள்ளார். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்­பு­க­ளுக்கும் டாப்ஸியையே டப்பிங் பேச வைக்­க­லாமா என ஹாலிவுட் படக் குழு யோசித்து வருகிறதாம்.  Riddick
is an upcoming 2013 American
science fiction action film, the third installment in the The Chronicles of Riddick film series. Produced by and starring Vin Diesel as the title character, Riddick is written and directed by David Twohy, who previously wrote and directed the first two installments, Pitch Black (2000) and The Chronicles of Riddick (2004)

Betrayed by the Necromongers and left for dead on a desolate planet, Riddick fights for survival against alien predators and becomes more powerful and dangerous than ever before. Soon, bounty hunters from throughout the galaxy descend on Riddick. Only to find themselves pawns in his greater scheme for revenge. With his enemies right where he wants them, Riddick unleashes a vicious attack of vengeance before returning to his home planet of Furya to save it from destruction.

Theater in erode  : VSP
நன்றி:
  
   தினமணி, தினகரன், மாலைமலர் மற்றும் இதர சினிமா இணையதளங்கள் 


. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தந்தா என்ன அர்த்தம் ?

மனதில் மமதை
துருவாய் வளர்ந்ததை
வலிமை என்றெண்ணித்
துள்ளிய வேளையில்
காலம் ஒரு விரலால்
சுண்டிச் சீண்டிட
பொசுக்கென தானே 
பொடிந்து போவோமே 
மமதை அழிவின் துவக்கம் 
அதில் சிக்காமல் 
நடை போட்டால் 
வெற்றி நமதே..!!

-அபி
1. நாளிதழ்களின் பார்வையில் ஒரு கல்யாணம் பண்ணவன் கல்யாண மாப்பிள்ளை.பல கல்யாணம் பண்ணினவன் கல்யாண மன்னன்



--------------------



2. மழை பொய்த்தாலும் ,கடலை விவசாயம் மட்டும் செம சாகுபடி



--------------------


3. காதலிகள் கிடைக்கப்பெற்ற‌ பசங்களுக்குத்தான் தெரியும், ஜீன்ஸ் பேன்ட்டை விட ,சுடியை விட புடவை தான் சவுகர்யம்் என்று!



--------------------


4. நான் சின்னப்பையனா இருக்கும்போது ஷ்கீலா (LAW)ன்னா ஏதோ சட்டக்கல்லூரி பேருனு நினைச்சுட்டிருந்தேன்



---------------------


5. உலக மகா பொண்டாட்டி தாசன் முதல் இரவுல முந்திக்கிட்டு தானே பால் காய்ச்சி ரூம்க்கு கொண்டு போறவன்தான்



--------------------------------



எனைத் திரு(கி)டியே
தன்னை கூர்மையாக்கிக்கொள்கிறது
உன் பென்சில் முனைப்பார்வை
Photo: எனைத் திரு(கி)டியே
தன்னை கூர்மையாக்கிக்கொள்கிறது
உன் பென்சில் முனைப்பார்வை




6. டேமேஜர் டீன் ஏஜ் பையன் கணக்கா ரிசப்ஷனிஸ்ட்க்கு கடலை பர்பி வாங்கித்தர்றார்.கடலை போட வா-ங்கறாரோ?


------------------------


7. பொண்டாட்டி சேலையை பகல்ல மொட்டை மாடில துவைக்கும்போது லுங்கி யால் சேலையை போர்த்தி கல்லில் அடிக்கனும் # நமக்கு கவுரவம்தான் முக்கியம்



-----------------------------



8/ ஒரே ஒரு முத்தத்துக்கு மட்டுமே அனுமதி என்றாள்.ஒத்தைப்படை காதலுக்கு எதிரி என்று கதை கட்டி விட்டேன். நம்பி விட்டாள் ;-))


-------------------------



9 முன்னே பின்னே பார்த்திராத பொண்ணு கிட்டே போன்ல ஒருத்தன் " உன் வாய்ஸ் அனுஷ்கா மாதிரி இருக்கு"னு அடிச்சு விடறான் #,டேய்


---------------------


10. அஞ்சலி போஸ்டர்களை கண்கள் எளிதில் கடப்பதில்லை.



------------------------




11. கோமாளியாய் இருக்கிறேன்;என்னால் என் குடும்பமே சந்தோசமாய் இருக்கிறது


-----------------------



12. எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கியே.கொஞ்சம் என்னைக்கொஞ்சினா என்ன? என்றேன்.ஏன்? நீங்க கொஞ்ச மாட்டீங்களா? என அடுத்த சண்டை




-------------------------


13. இவனுங்க பாட்டுக்கு ரேப் பண்ணிட்டுப்போய்டுவானுங்களாம்.மைனர் என்பதால் 3 வருசம் சீர்திருத்தப்பள்ளில இருந்தா போதுமாம் .




------------------------


14. இளவயது குற்றங்களைக்குறைக்க 18 வயது வரை பெற்றோருக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் மீறினால் சிறை என சட்டம் வேண்டும்


--------------------


15. பெருகி வரும் மக்கள் தொகையைக்கட்டுப்படுத்த எல்லா ஆண்களும் இரவு 8 டூ காலை 8 வாசல் திண்ணையில் தான் படுக்க வேண்டும்.அரசு அதிரடி அறிவிப்பு



-----------------------



Photo: மழைமொட்டில்
மலர்கிறாய்
நீ..




16. ட்விட்டரில் நான் கற்றது.அவசரப்பட்டு நாம கா வ சொல்லக்கூடாது.ஏதாவது ஒரு பொண்ணு கா வ சொன்னா அதை ஆர் டி பண்ணிடனும் # 2 இன் 1


----------------------


17.ஒருத்தன் அவனோட சம்சாரம் கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டெ வாக் போறான்.விட்டா ரன்னிங்ல கூட கை கோர்த்துட்டேதான் போவான் போல




--------------------


18. காதல் மரத்துக்கு எல்லா ஊர்களிலும் கிளைகள் உண்டு


-------------------


19. ஒரு வீணாப்போனவன் பைக்லயே கிரவுண்டை 2 ரவுண்ட் அடிச்ட்டு போறான்.கேட்டா வாக் போக மூடு இல்லையாம்.டச் விட்டுப்போகக்கூடாதாம் # அடேய்



----------------------


20. பொங்கல் ,தீபாவளி மாதிரி பண்டிகை நேரத்தில் பெரிய பெரிய தலைங்க படம் மோதறது சகஜம்தான்னாலும் ஜெயிக்கப்போவது ஒரே ஒரு தல தான்


--------------------------------



Photo: ஒரே வார்த்தைதான் 
வேறு வேறு குரல்களில்
வாளெடுத்து வீசிப்போகிறது 

நேற்றையவனின் வார்த்தை
இரவினைத்தொட்டு 
இன்றும் தனை எழுதிக்கொண்டிருக்க
ஏதோ ஒரு பிழையில் 
தப்பித்து வெளியேறுகிறது
கொடுக்கப்பட காத்திருந்த முத்தங்களுக்கான
மன ஒத்திகை..

நிதானித்து திரும்புவதற்குள் 
இன்னுமொரு புன்னகை 
அதே போலொரு பேச்சென
முந்தயதின் தடமொன்றை விட்டுச்செல்கிற 
நியாபக 
நியாயங்களைத்தாண்டி
வேறு வேறாய் போர்த்திக்கிடக்கும் 
முகங்களுக்குள் 
வியர்த்திருப்பதெல்லாம் விரசமெனும் 
புழுக்கம் மட்டுமே..


-Reva

Thursday, September 05, 2013

எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி எம் டி செல் போன் ரிங் டோன் என்னவாஇருக்கும் ?

1. jasmine = சுறா என்னுது # சபாஷ் துபாஷ்





-----------------------------



2. ஜேம்ஸ்பாண்ட் ன் டாக்டர் நோ படத்துல வர்ற நர்ஸ் பேரு என்னவா இருக்கும்?நர்ஸ் யெஸ்...?




----------------------------


3. ஆபீஸ் ல எப்பவும் ஆக்டிவ்வா இரு ன்னு டேமேஜர் சொன்னார்ங்கறதுக்காக வேலை செய்யற மாதிரியே நடிச்சுட்டு இருக்கக்கூடாது



------------------------



4. ஓவர் செண்டிமெண்ட் மனசுக்கு ஆகாது.ஓவர் சென்ட் உடம்புக்கு ஆகாது



----------------------------


5..Walking போறவங்க செருப்பு போடாம நடக்குறதால,accupressure முறையில மூளை செல்கள் தூண்டப்படுமாமே? ஆமா.ஆனா முள் குத்தினா கால் பஞ்ச்சர் ஆகிடும்



-------------------------


6. அருமை சகா... உம்ம எழுத்து நடை... ஆஹா.னு எல்லாரும் நம்மை புகழனும்னா வாக்கிங் போய்க்கிட்டே எழுதனுமா? # டவுட்



-------------------------



7. அன்பே! என்னை அடிக்க உன் வசம் 2 உள்ளங்கைகள் இருக்க விளக்குமாறு எடுத்து வருவது ஏன்? என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்




-------------------------


8. விஜய் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாட்டு - ஜில்லா முழுக்க நல்லா தெரியும் வெளியே சொல்லாதே



---------------------------



9. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் = ரிகர்சல் பார்க்கப்பட்டு நடத்தப்படும் பக்கா டிராமா.டி ஆர் பி ரேட்டிங் எகிற வைக்க


-------------------------


10. நமக்கெல்லாம் கன்னி ராசியே இல்லைங்கறதை எப்டி கண்டு பிடிச்சேன்னா சரளா மாதிரி இருக்கற பிகருங்க கூட நம்மை சரளமா திட்டுறதனால தான்



----------------------------




11. சுந்தர் சி யின் மத கஜ ராஜா படம் செம காமெடி.சான்சே இல்லை னு ஒரு ட்வீட் போட்டு குஷ்பூ க்கு டேக் போட்டு விட்டா ஆர் டி பண்ணுவாங்க பாருங்க




---------------------------



12. மத கஜ ராஜா எங்க மதத்தை கிண்டல் பண்ற மாதிரி இருக்குன்னு இன்னும் எந்த மதத்தினரும் பிரச்சனை பண்ணலையா? # பத்த வை டா பரட்டை




-----------------------------



13. நடிகை சதா வின் காதலன் எப்படி கொஞ்சுவார்? டியர் சதா.எனக்கு சதா (எப்பவும்) உன் நினப்பு தான்



-----------------------------



14. சிதம்பரம் அருகே புவனகிரிக்கு பக்கத்துல கீழ மணக்குடி ன்னு ஒரு ஊரு # என்ன அர்த்தமா இருக்கும்?



---------------------



15. எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பளார் கொடுக்கும் லேடி எம் டி செல் போன் ரிங் டோன் - கன்னத்துல வை டொன்ட்டடொன்ட்டடொய்ங்



----------------------------


16. கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு 298 ஆண்டு சிறை தண்டனையா?: தைவான் மக்கள் கேள்வி # ஒரு தொடர்புக்கு ஒரு வருசம் னு ரேஷியோ இருக்கும்



--------------------------


17.always fine = எப்போதும் அபராதம் # சபாஷ் துபாஷ்




-----------------------


18, கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறாரா...? ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு # ஆம்.இவர் கர்ப்பமாவது இதுவே முதல் முறையாம்.போங்கய்யா



----------------------


19.ஜில்லா டைட்டில்ல கூட பில்லா வில் இருந்து உருவிட்டாங்கனு அஜித் ரசிகர்கள் யாரும் இன்னும் கிளம்பலையா?



-------------------------


20.சாமியார் சொன்னபடி மங்களம் உண்டாகிட்டா.இதுல சோகம் என்னான்னா மேட்டர் இன்னும் மங்களத்தோட புருஷனுக்கே தெரியாது :-((





-----------------------------

சிம்பு - ஹன்சிகா தெய்வீகக்காதல் மலர்ந்த விதம்- ஹன்சிகா சிலிர்ப்பு பேட்டி

 

 

சிம்புவுடன் காதல் பூ பூத்தது எப்படி ?ஹன்சிகாவின் சிலிர்ப்பு அனுபவம்

Hansika shares how she fall in love with Simbu
நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விஷயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம். அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா. 

ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்பு தான், நாளடைவில் காதலாக மாறியதாம். இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார். ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், "சிம்பு எனக்கு எப்பவுமே, "ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.


சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்களாக இருந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது. அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.



 

சிம்பு ஹன்சிகாவை காதலித்தாலும் எதிர்க்க மாட்டேன்! டி.ஆர்.,

If simbu loves hansika i will not  opposition says T.Rajendar
 சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ராம.நாராயணனின் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படத்தில், கவர்ச்சி நடிகை முமைத்கான் உடன் ‘‘தகடு த‌கடு மந்திரிக்க வாடி...’’ என்ற பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். டி.ஆரின் ஆட்டத்தை பார்த்து மும்மைத்கான் மட்டுமல்ல ஆர்யா சூர்யா பட யூனிட்டே வாயடைத்து போய் இருக்கிறது. அந்தளவுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் அதுவும் யூத்பூல்லாக.

எப்படி இந்தளவுக்கு உங்களால் ஆட முடிகிறது என்று டி.ஆரிடம் கேட்டால், எனக்கு சிவன் அருள் இருக்கிறது. அவரது அருளால் இந்த தாடி ஆடுகிறான் என்று கூறுகிறார். தனது மகனின் திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது எனது மகளுக்கு திருமணத்திற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகா

ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா

Simbu - Hansika Love confirmed
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ‘‘வாலு‘‘, ‘‘வேட்டை மன்னன்’’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தனது மகன் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஹன்சிகா, நான் சிம்புவை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான், என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார். இதேபோல் சிம்புவும் பலமுறை நான் ஹன்சிகாவை காதலிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் இருவரும் மாறி மாறி நாங்கள் காதலிக்கவில்லை... காதலிக்கவில்லை... என்று கூறி வந்தவர்கள், இப்போது நாங்கள் காதலிக்கிறோம் என்று கூறியுள்ளனர். சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ஆமாம் நான் ஹன்சிகா கூடத்தான் இருக்‌கிறேன். ரொம்ப நல்ல பொண்ணு ஹன்சிகா, நாங்கள் திருமணம் செய்வது பற்றி விரைவில் எங்‌களது பெற்றோர் முடிவு செய்ய உள்ளனர், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிம்பு டுவிட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஹன்சிகாவும் டுவிட் செய்துள்ளார். அதாவது, எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய கிசுகிசுக்கள்  வெளிவருகின்றன. இப்போது அதை தெளிவுப்படுத்துகிறேன். ஆமாம், நான் சிம்புவை காதலிக்கிறேன். இதற்கு மேல் எனது சொந்த விஷயங்களை நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக சிம்பு-ஹன்சிகா காதல் உறுதியாகியுள்ளது...!!


thanx - dinamalar