Saturday, March 02, 2013

சில்க் ஸ்மிதா VS பத்மா சுப்ரமணியம் ( விரக ராட்டினம் , பரத நாட்டியம்)

அதிகாலை 6 மணி இருக்கும். டாக்டர் பத்மா சுப்ரமணியம் அடையாறில் உள்ள தன்னுடைய இல்லத்தின் நடனக்கூடத்தில் நான்கைந்து மாணவிகளுக்கு, 'மன்னி’ சியாமளா பாலகிருஷ்ணன் பாட - அண்ணா பாலகிருஷ் ணன் கண்களில் ஆனந்த பாஷ்யம் பொங்க நிற்க, கர்ம சிரத்தையோடு தில்லானா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார்.


 திடீர் என்று ஒரு ஹாரன் சத்தம்... வாசலில் ஒரு கார் குலுக்கி மினுக்கித் தளுக்கியபடி நின்றது... அதில் இருந்து சிலுக்கு இறங்கினார். ஆவேசமாகத் தில்லானா ஆடிக்கொண்டு இருந்த மாணவிகளில் ஒருத்தி, ''டீ... அங்க பாரு, சிலுக்குடி!'' என்று அலற, மற்ற மாணவிகளும் ''ஹைய்யா...'' என்று பெருங்கூச்சலுடன் சிலுக்கை நோக்கி ஓட... பத்மா எல்லோரையும் கம்ஸவதம் செய்யும் கிருஷ்ணனின் கோப அபிநயத்தில் முறைத்ததுதான் ஆரம்பம்.


பத்மா சுப்ரமணியம்: (நாட்டிய சாஸ்திர முறைப்படி நிதானமாகத் தலையை இருபுறமும் லலிதமாக அசைத்து, இரு கரம் கூப்பி நமஸ்கரித்து) ''வாங்கோ... வாங்கோ... ரியலி உங்களோட இந்தத் திடீர்ப் பிரவேசம் ஷாக்கிங் சர்ப்ரைஸ் டு மீ! உக்காந்துக்கோங்கோ...

சிலுக்கு: ''மன்னிச்சுக்கணும்... உங்க டான்ஸ் கிளாஸின்போது பாதில நுழைஞ்சு டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.''

பத்மா: ''நோ... நோ... தில்லானா முடியற நேரத்துலதான் நீங்க வந்தேள். உங்களைப் புடைவையில பார்க்கிறது ஆச்சர்யமா இருக்கு. சின்னப் பையன் மாதிரி அரை நிஜார் போட்டுண்டுதான் உங்களை சினிமாவில் பார்த்திருக்கேன். புடைவையை யார் கட்டிவிட்டது?''

சிலுக்கு: ''நானே கட்டிண்டதுதான். வேணா, இங்கேயே மறுபடியும் கட்டிக் காண்பிக்கட்டா?''

பத்மா: ''ஐயையோ! வேணாம். நான் நம்பறேன். இப்போதான் அனுராதா உங்க இடத்தைப் புடிச்சாச்சே... புடைவை கட்டிக்க நிறையத்தான் நேரம் இருக்கும்.'


சிலுக்கு: ''இதெல்லாம் ரொம்ப டெம்பரரி... அனுராதா என்ன ஆடறா? யாரோ சவுக்கால அடிக்கறா மாதிரி மூஞ்சில ஒரே எக்ஸ்பிரஷன்... அதான் டிஸ்கோ சாந்தி கிடுகிடுனு மேலே வந்துட்டு இருக்கு.'

'
பத்மா: ''டிஸ்கோவா?''

சிலுக்கு: (தமாஷாக) ''டிஸ்கோ தெரியாதா..? பள்ளிக்கூடத்துல டிரில் மாஸ்டர் கை, காலைத் தூக்கச் சொல்வார்ல... அதோட கொஞ்சம் நம்ம ஊர் டப்பாங்குத்தை மிக்ஸ் பண்ணிடுங்க. அப்புறம் முதுகுல ஒரு நண்டை விட்டுடுங்க... பேக்ரவுண்ட்ல டிரம்ஸ், கிடார்னு போட்டுத் தூள் கிளப்புங்க... இதுதான் டிஸ்கோ!''

பத்மா: ''இப்போ நீங்க சினிமாவுல ஆடறீங்களே... அது எந்த வகை டான்ஸ்ல சேர்த்தி?''

சிலுக்கு: ''நாங்க ஆடற டான்ஸ்ல பரதம் இருக்கு... கதக் இருக்கு... அப்புறம் கதகளி, மணிப்புரி, குச்சிப்புடி, ஒடிசி எல்லாம் ஒளிஞ்சுண்டு இருக்கும். கலைக் கண்ணோட பார்த்தா, எங்க டான்ஸ்ல 'பாவம்’ புரியும் உங்களுக்கு.''


பத்மா: ''ஐயோ, பாவம்! இந்த டான்ஸ்ல குங்ஃபூ, கராத்தே இதெல்லாம்தான் இல்லியாக்கும்?! நல்ல காலம்! சரி, அதை விடுங்க. நீங்க வந்த விஷயம் என்ன... தெரிஞ்சுக்கலாமா?''

சிலுக்கு: ''மஞ்சு பார்கவி என்னை மாதிரிதான் இருந்தாங்க. 'சங்கராபரணம்’ வந்த பிறகு, அவங்க அந்தஸ்தே உசந்துடுத்து. இப்ப 'கிங்கராசரணம்’னு ஒரு கோடி ரூபாய்ல படம் எடுக்கறாங்க. அதுல சான்ஸ் வரும் போலிருக்கு. அதைத் தவிர, அனுராதா கொட்டத்தை அடக்கிறதுக்காக, தமிழ்ல கல்கியோட 'சிவகாமியின் சபதம்’ கதையைப் படமா எடுக்கலாம்னு இருக்கேன். அதுல நான் சிவகாமியா நடிக்கலாம்னு இருக்கேன்.''

பத்மா: ''சிவகாமி பரதநாட்டியம் ஆடற ரோல்... உங்களால முடியுமா?''

சிலுக்கு: ''அதுக்குத்தான் உங்ககிட்ட வந்தி ருக்கேன்... நீங்கதான் எனக்கு சாஸ்திரிகள் நடனம் சொல்லித்தரணும்.''

பத்மா: ''சாஸ்திரிகள் நடனமா..?''

சிலுக்கு: ''அதாங்க... கர்னாடக சங்கீதம் மாதிரி.''

பத்மா: ''கஷ்டம், சாஸ்திரிய நடனம் - சாஸ்திரிகள் நடனமில்லை.''

சிலுக்கு: ''ஏதோ ஒண்ணு... நீங்கதான் எனக்கு எப்படியாவது பரதநாட்டியம் சொல்லித் தரணும். நான் அந்தப் படத்துல சின்னாளம் பட்டுப் புடவை கட்டிண்டு சிவகாமியா ஆடணும். சிலுக்கு ஸ்மிதாங்கற இமேஜ் போய், சின்னாளம்பட்டு சிவகாமி ஸ்மிதான்னு பேர் வாங்கணும்.''

பத்மா: ''நீங்க நெனைக்கற மாதிரி பரதநாட்டியம் சுலபமான விஷயம் இல்லை. சின்ன வயசுலயே கத்துக்க ஆரம்பிச்சாதான் வரும்.''

சிலுக்கு: ''சின்ன வயசுன்னா..?''

பத்மா: ''அட்லீஸ்ட் பதினஞ்சு, பதினாறு வயசுக்குள்ளேயாவது ஆரம்பிச்சுடணும்.''

சிலுக்கு: ''எனக்குப் பதினேழு வயசுதானே ஆறது.

''
பத்மா: ''பதினேழா..?''

(அப்போது அபஸ்வரம் ராம்ஜி நுழைந்து...)
ராம்ஜி: ''எத்தனாவது பதினேழு..?''

சிலுக்கு: ''ஹாய் ராம்ஜி!''
பத்மா: ''என் தம்பி ராம்ஜியை உங்களுக்குத் தெரியுமா?''

சிலுக்கு: ''அவரோட 'உருவங்கள் மாறலாம்’ படத்துல டான்ஸ் ஆடியிருக்கேன்.''

பத்மா: ''ஷில்க் ஷ்மிதா... நீ...''

சிலுக்கு: ''ஒரு நிமிஷம்... எம் பேர் சில்க் ஸ்மிதா... ஏன் அப்பலேர்ந்து ஷில்க் ஷ்மிதானு எம் பேரைக் கொழைக்கறீங்க. 'ச’ 'சி’ இதெல்லாம் வராதா? இல்லை, இப்ப இப்படிப் பேசறதுதான் ஃபேஷனா? தயவுசெஞ்சு அப்படிக் கூப்பிடா தீங்க. முடியலேன்னா... காட்டன் கவிதா, பாலியஸ்டர் பபிதானு கூப்பிடுங்க. எனக்கு ஆட்சேபணை இல்லை. வாய்ல 'மாவை’ வெச்சுண்டு பேசறா மாதிரி இருக்கு.

''
பத்மா: (கிருஷ்ணசாமியைக் காட்டி...) ''இவர் தான் என்னோட இன்னொரு அண்ணா.''

கிருஷ்ணசாமி: ''ஹலோ... நான்தான் கிருஷ்ண சாமி. டைரக்டர், புரொடியூஸர்.''

சிலுக்கு: ''இதுக்கு முன்னே நீங்க என்ன படம் எடுத்தீங்க?''

கிருஷ்: ''இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி.''

சிலுக்கு: ''அதுல ஏன் நீங்க என்னை ஆடக் கூப்பிடல..? அதுல கிளப் டான்ஸே இல்லியா?''

ராம்ஜி: ''அதுல காபி கிளப் டான்ஸ்கூடக் கிடையாது.''

பத்மா: ''இப்ப இன்னொரு டாக்குமென்டரி எடுக்க பர்மிஷன் வாங்கியிருக்கார்... பேர் என்ன அண்ணா?''

கிருஷ்: ''ராமேஸ்வரம் டு ராஜீவ் காந்தி... ராமேஸ்வரம் கோயில்ல பத்மா டான்ஸோட படம் ஆரம்பிச்சு, ஒவ்வொரு கோயிலா டான்ஸ் ஆடிண்டே போய்... கடைசில டெல்லி ராஜ் காட்ல மகாத்மா காந்தி சமாதியில ஆடறா... ராஜீவ் காந்தி அதைப் பார்க்கறார்!''

பத்மா: ''இந்த டாக்குமென்டரியோட பர்ப்பஸ் என்னன்னா, இந்தியாவுல உள்ள எல்லாக் கோயிலையும் காட்டறதுதான். வெறுமனே காட்டுறதுக்குப் பதிலா, என் டான் ஸோட காட்டினா கொஞ்சம் அலுப்புத்தட்டாம இருக்கும்.''

சிலுக்கு: ''உங்கப்பா டைரக்டரா இருந்தும் நீங்க சினிமாவுல நடிக்கல. ஆச்சர்யமா இருக்கே.''

பத்மா: (சோகத்துடன்) ''அப்பா அந்தக் காலத்துலேன்னா டைரக்டரா இருந்தாரு.''

சிலுக்கு: ''வேற சினிமாக்காரங்க யாருமே உங்களை நடிக்கக் கூப்பிடலியா?''

பத்மா: ''ஹூம்... கூப்பிடலேம்மா! அதுக்குத் தனி முகராசி வேணும்.''

சிலுக்கு: ''டைரக்டர் பொண்ணா இருந்து சினிமால நடிக்க சான்ஸ் இல்லாம இத்தனை நாள் பொழுது எப்படித் தள்ளினீங்க... ஆச்சர்யமா இருக்கு.''

பத்மா: (எரிச்சலுடன்) ''பொழுது தள்றதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதனாலதான் காலேஜ்ல படிச்சேன். டிகிரி வாங்கினேன்... டான்ஸ் டெமான்ஸ்டிரேஷன்லாம் பண்றேன். டாக்டர் பட்டம் வாங்கினேன்.''

சிலுக்கு: (கொஞ்சலாக) ''நீங்க டாக்டரா அக்கா? அட! தெரியவே தெரியாதே. இனிமே, என்னோட ஃபேமிலி டாக்டர் நீங்கதான். எனக்கு இடுப்புகிட்ட அடிக்கடி வலி எடுக்குது அக்கா.''

பத்மா: ''இல்லேம்மா... நான் மெடிக்கல் டாக்டர் இல்லை. சிதம்பரம் நடராஜர் கோயில்ல 108 கரணங்கள் இருக்கு... அதை ஆராய்ச்சி பண்ணிப் பட்டம் வாங்கினேன்.''

சிலுக்கு: ''108 கரணங்களா..? அப்ப டீன்னா என்ன... கிராமத்துல கர்ணம்னு ஒருத்தர் இருப்பாரு... அது தெரியும். அப்புறம் தோப்புக்கரணம் தெரியும்.''

பத்மா: (வெண்ணெய் திருடும் கிருஷ்ண னைக் கோபத்துடன் பார்க்கும் பாவத்தில்) ''நீங்க சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலுக்குக் கட்டாயம் போகணும். ஆடல் போஸ் 108 செதுக்கியிருக்காங்க. அதிலே வராத டான்ஸ் முத்திரையே கிடையாது. அதுதான் கரணங்கள். அதைப் பத்திப் பேசினாலே எனக்கு உற்சாகம் வந்துடும். என் கால், கைகளும் ஆடத் துடிக்கும். நாட்டிய சாஸ்திரமே நடராஜப் பெருமானின் காலடியில் தோன்றியது தானே?''

சிலுக்கு: ''உங்களை ஒண்ணு கேக்கணும்... நீங்க ஏன் ஸோலோவா ஆடறீங்க..? டி.வி-ல பார்த்தேன்... 'கிருஷ்ணாய துப்யம் நம’, 'யசோதை கிருஷ்ணர், கம்சன், பலராமன், ஆடு, மாடு எல்லாத்தையும் நீங்களே ஆடிக் காட்டறீங்களே... நல்லாருக்கு... ஆனா, மிமிக்ரி மாதிரி இருக்கு.''

பத்மா: ''நான் பப்ளிசிட்டிக்காக ஆடலை. ஆத்மார்த்தமா எனக்காக ஆடறேன். அதான் ஸோலோ... கும்பலைச் சேத்துண்டு ஆடறது எனக்குப் பிடிக்காது.''

சிலுக்கு: ''என்ன இப்படிச் சொல்றீங்க..? டி.வி-ல ஒரு ராமாயண நாட்டிய நாடகம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு. இந்த கோவாபரேடிவ் சொஸைட்டி மாணவிகள்லாம் சேர்ந்து ஆடினாங்க.''

பத்மா: ''கஷ்டம்... கஷ்டம்... அது தியஸாபிகல் சொஸைட்டி. அதை நடத்தறது ருக்மிணி அருண்டேல்!''

சிலுக்கு: ''சரி... நம்ம விஷயத்துக்கு வருவோம். இந்தாங்க, 101 ரூபா அட்வான்ஸ்.''

பத்மா: ''அவசரப்படாதீங்க... மொதல்ல பரதம்னா என்னன்னு தெரிஞ்சுக்குங்க. பரதம்... இதுல 'ர’வை எடுத்துட்டா பதம். 'பர’வை எடுத்தா தம். தம் பிடிச்சுப் பதம் போடணும். அப்புறம் பரதத்துல 'ப’வை எடுத்துட்டா ரதம். அழகான ரதம் ஆடி அசையறா மாதிரி இருக்கணும். கடைசியா, பரதத்துல 'த’வை எடுத்துட்டா... 'பரம்’ அதாவது பரம்பொருள். பரம்பொருளோட ஐக்கியமாறதுதான் பரதத்தோட இலக்கணம்.'' (என்று சொல்லிக்கொண்டே திரும்ப, அங்கு சிலுக்கு இல்லையென்று அறிந்து...)

பத்மா: ''அட, ராம்ஜி... எங்கே சிலுக்கு?''

சியாமளா: ''101 ரூபாய் அட்வான்ஸைக் குடுத்துட்டு அவ அப்பவே போயிட்டா'' (சிலுக்கை வாசல் வரை அனுப்பிவிட்டுத் திரும்பி வருகிறார் கிருஷ்ணஸ்வாமி).

பத்மா: ''என்ன விஷயம் அண்ணா?''

கிருஷ்ணஸ்வாமி: ''ஒண்ணுமில்லே... 'சிக்கிம்லேருந்து சிலுக்கு வரை’னு ஒரு டாக்குமென்டரி எடுக்கறதைப் பத்தி சிலுக்குகிட்டே பேசிட்டு வரேன்... ஓகே. வாங்கியாச்சு!''

பத்மா: ''எனக்கென்னவோ இப்ப 'அஜந்தாவிலிருந்து அனுராதா வரை’னு டாக்குமென்டரி எடுத்துக்கிட்டு இருக் கிறதா சொன்னியே... அதுவே நல்லா ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது.''


('வாங்க சௌக்கியமா?' என்ற தலைப்பில், எதிர் துருவப் பிரபலங்கள் இருவர் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்ற கற்பனைத் தொடரின் ஒரு அத்தியாயம் இது.)


நன்றி - விகடன்

அம்மா மெஸ் - ஸ்பாட் விசிட் - விகடன் ரிப்போர்ட்

சென்னையின் கடந்த வாரப் பரபரப்பு... மலிவு விலை உணவகம். முதல்வர் ஜெயலலிதா 'கேசரி’ வழங்கித் தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்தில் சாப்பிடுவதற்கு, 'சி.எம். செல் சிபாரிசு’ தேவைப்படும். அந்த அளவுக்கு அடிதடிக் களேபரம். இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் என்பதே கலாட்டாவுக்குக் காரணம்!  



 சாந்தோம் கிளை உணவகத்தை வெகு தூரத்தில் இருந்தே அடையாளம் காட்டிவிட்டது 'மாண்புமிகு இதயதெய்வம்’ பேனர்கள்.  உணவக வாசலில் ரேஷன் கடையைவிட மிகப் பெரிய க்யூ. வாசலில் ஒரு போலீஸ்காரர், 'வாங்க... வாங்க...’ என்று தோளில் தட்டி உள்ளே அனுப்பு கிறார். ''திபுதிபுனு கூட்டம் உள்ளே வந்துருதுங்களா... அதான் கன்ட்ரோலுக்கு என்னைப் போட்டிருக்காங்க!'' என்றார்.  


வெள்ளைச் சுவரில் பச்சைக் கோடுகள், பச்சை நிற அறிவிப்புப் பலகை, பச்சை நிற பேனர் என்று உணவகத்தில் பசுமை பூத்துக் குலுங்கியது. உள்ளே கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஐந்து பெண் காவலர்கள். உணவக நிர்வாகம் மற்றும் பராமரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினர் வசம். இருக்கை வசதிகள் கிடையாது. அந்த உணவகத்தில் மட்டும் நான்கு ஜெயலலிதா படங்கள் டாலடித்தன. எந்தக் கோணத்தில் நின்று சாப்பிட்டாலும் முதல்வரின் தரிசனத்தில் இருந்து தப்ப முடியாது. (இப்படிலாம் ஐடியா கொடுக்கிறது யாருப்பா?)



மதியம் பன்னிரண்டே முக்கால் மணி அளவில் கூட்டம் புது வெள்ளமாக முண்டியடிக்கத் தொடங்கியது. 'மன்னன்’ படத்தில் ரஜினி 'சின்னத்தம்பி’ படத்துக்கு முதல் டிக்கெட்டை வாங்கியதைப் போல, சட்டை முழுக்க வியர்வை யில் தொப்பலாக நனையும் அளவுக்குப் போராடி இரண்டு பிளேட் சாம்பார் சாதத்தைக் கொய்துவந்தார் ஒருவர்.



 'இங்கு பார்சல் கட்டித் தரப்பட மாட்டாது’ என்ற அறிவிப்புக்குக் கட்டுப்படுபவர்களா நம்மவர்கள்? ஒரு காகிதத் தட்டில் சாம்பார் சாதத்தை வாங்கி, அதை இன்னொரு தட்டால் மூடி வெளியே எடுத்துச் சென்றனர். அதிகாரபூர்வ லன்ச் நேரமான மதியம் 1 மணிக்குப் பகீரென்று பாய்ந்து   வந்தது அந்த அறிவிப்பு... ''சாப்பாடு காலி!''



அது வரை வரிசையில் காத்திருந்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. அவர்களைக் கண்டுகொள்ளாமல் அண்டாக்களைக் கவிழ்த்துவைக்கத் தொடங்கினார்கள் உணவகப் பணியாளர்கள். ''இப்பிடித்தான் ஜூ காட்டுவாங்கோ... அப்பாலிக்கா ஒரு பிளேட் ரைஸ் இருபது ரூவானு பிளாக்ல விப்பாங்கோ!'' என்று கலவரத்துக்குத் திரி பற்றவைத்தார் ஒரு சிட்டிசன். ''அப்படிலாம் இல்லைங்க. நீங்களே வந்து நல்லாப் பார்த்துக்கங்க... எங்களுக்கே சாப்பிட சாப்பாடு இல்லை!'' என்று அதட்டினார் ஒரு நிர்வாகி.    



''ஏன் இவ்ளோ சீக்கிரம் தீர்ந்துருச்சுனு சொல்றீங்க... கொஞ்சமாத்தான் சமைச்சீங்களா?'' என்று கணக்கு கேட்டார் ஒரு 'அம்பி’.



''ஆயிரம் தயிர் சாதம், ஆயிரம் சாம்பார் சாதம், ஐயாயிரம் இட்லி செய்யச் சொல்லித்தான் ஆர்டர். அதைவிடவும் அதிகமாத்தான் தயாரிச்சோம். ஆனா, ஒரே ஆளே மூணு, நாலு பிளேட்னு வாங்கிட்டுப் போயிட்டதால, சீக்கிரம் காலியாகிடுச்சு. நாளைக்கு அப்படியே டபுளா சமைக்கணும்!'' என்றார் ஒரு பெண். ''உங்க பேர் சொல்லுங்க?'' என்று அம்பி கேட்டதும், சட்டெனச் சுதாரித்தவர், ''அதெல்லாம் ஹெட் ஆபீஸ்ல கேட்டுக்கங்க!'' என்றார் சிரித்தபடி.



''இப்படிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல... அதான் காலை டிபன் முடிச்சதுமே இங்கேயே செட்டில் ஆகிட்டேன்ல!'' என்று நிறைந்த வயிற்றைத் தடவியபடி வெற்றிக் குறி காட்டினார் வாட்ச்மேன் ஆரோக்கியசாமி.



''சாப்பாடு சூப்பர்... அஞ்சு ரூபாய்க்கு இந்த டேஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை. சும்மா ஒரு வாரத்துக்கு மட்டும் ஷோ காட்டிட்டு அப்புறம் கடைய மூடிராம, விலை ஏத்தாம இருக்கணும்!'' என்று சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், சாப்பாடு கிடைக்கப் பெற்றவர்கள்.


கேமராவைப் பார்த்தவுடன் குஷியான சுப்ரமணி, முதல்வர் பேனரைப் பார்த்து சல்யூட் வைப்பதுபோல் நின்றுகொண்டு, ''சாப்பாடு ஜோரா இருக்குனு அம்மாகிட்ட சொல்லு... அப்படியே பிரியாணியும் லெக் பீஸும் பத்து ரூபாய்க்குப் போட்டா, அடுத்த எலெக்ஷன்லயும் ஜெயிக்கலாம்னு சொல்லு!'' என்று சிரித்தார்.



இது அம்மாவின் கவனத்துக்கு!

 நன்றி - விகடன்

டாப்ஸி தங்கச்சி ஷாகுன் ஃபிகர் தேறுமா?

டாப்ஸின்னா 'தவம் இருப்பவள்’னு அர்த்தம். சவுத் இந்தியா ஹீரோயின்கள்ல நான்தான் பெஸ்ட்னு பேர் வாங்கணும்னு தவம் இருக்கேன்னு வெச்சுக்கலாம்!''- டாப்ஸி பளிச் புன்னகையுடன் சொல்வதை ஆமோதிப்பது போல அவரது நெற்றியில் விழுந்து புரள்கிறது சுருள் கூந்தல்.


 
 ''அப்போ சாஃப்ட்வேர் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தது நல்ல முடிவுன்னு சொல்லுங்க...''



''நிச்சயமா! நைன் டு ஃபைவ் வேலை எனக்கு ரொம்ப சீக்கிரமே போர் அடிச்சிருச்சு. அதான் சினிமா வாய்ப்பு கிடைச்சதும் ஓடி வந்துட்டேன்.ஆனா, எனக்கு மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமாவுக்கு வந்ததால், அதை மட்டும் மிஸ் பண்றேன். மத்தபடி... ஐ லவ் சினிமா!''  



''ஆனா, கிட்டத்தட்ட நடிக்கிற எல்லா படங்களிலும் பொம்மை மாதிரிதான் வந்துட்டுப்போறீங்க... இன்னும் பளீர் பெர்ஃபார்மன்ஸ் உங்ககிட்ட இருந்து வரலையே?''


''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! சும்மா ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு என் கிட்ட பேச வர்ற பசங்க எல்லாம், ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுற அளவுக்கு மொக்கை போடுவேன். ஆனா, 'ஆடுகளம்’ ஐரீனைப் பார்த்தா, உங்களுக்கு அப்படியா தெரிஞ்சது? ராத்திரி தூங்கிட்டு இருக்கிறப்ப எஸ்.எம்.எஸ். டோனுக்கே பதறி எழுந்திரிக்கிறவள் நான். ஆனா, இப்போ 'முனி’ பார்ட் 3’ படத்தில் நடிக்கிறேன். பேய்ப் படம் பார்க்கக்கூடப் பயப்படுற நான், இப்போ பேய்ப் படத்திலேயே நடிக்கிறேன். ஒரு ஹீரோயினுக்கு ஒவ்வொரு படத்திலும் கிளாமர், லவ்வர் கேர்ள், சென்டிமென்ட்னு ஸ்கோர் பண்ண ஏதோ ஒரு ஸ்கோப்தான் இருக்கும். அதுல மிஸ் பண்ணாம நல்ல பேர் வாங்கினாலே, பெரிய விஷயம். கொஞ்ச நாள் காதலிச்சுட்டு, அப்புறமா சீரியஸா நடிக்கலாம்!''



''கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்களே... ஏன்?''



''கல்யாணம் ரொம்பக் கஷ்டம். லைஃப் முழுக்க ஒருத்தரோடவே வாழணும்னா ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா இருக்கணும்.  மனசு முழுக்க மகிழ்ச்சி இருக்கணும். அப்படி என்னை ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா வெச்சிருப்பார்னு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி ஒருத்தரை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு ஆள் கிடைச்சா, கல்யாணம் பண்ணிக்குவேன். ஒருவேளை சிக்கலைன்னா, கடைசி வரை நோ கல்யாணம்!''
''உங்களைப் பத்தி நீங்களே ஒரு ரகசியம் சொல்லுங்க..?''



''என்னைப் பத்தி இல்லை... என் தங்கச்சி பத்தி சொல்லவா? என் தங்கச்சி ஷாகுன் காலேஜ் முடிச்சுட்டு வேலைல  இருக்கா. அவளுக்கும் நடிக்க ஆசை. இன்னும் கன்ஃபர்ம் ஆகலை. ஆனா, சீக்கிரமே நடிப்பா. வர்ற ஆஃபர்ல எது பெஸ்ட்டோ, அதைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உதவுவேன். அப்புறம் இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் வாங்குறது அவ சாமர்த்தியம்!''



''ஏற்கெனவே அனுஷ்கா, இலியானா, சமந்தா, காஜல்னு ஏகப்பட்ட போட்டி... இதுல வீட்ல இருந்து வேற ஆளைக் கூட்டிட்டு வர்றீங்களே?''


  
''ஒரே விஷயம்தான்... காஜல், இலியானா, தமன்னா, அசின்... இப்போ என் தங்கச்சி... யாரா இருந்தாலும் இந்த டாப்ஸி சமாளிப்பா!''


''சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?''  



''காஜல் ரொம்ப ஸ்வீட். ஜீவா, ஆர்யா ரொம்ப க்ளோஸ். தனுஷ்கூட இப்பவும் டச்ல இருக்கேன். அஜித், நயன்தாராவும் பழக்கம்தான். எனக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க!''


''பார்த்ததில் பிடிச்ச படம்?''


''பர்ஃபி. ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. எந்த மசாலாவும் இல்லாம இதயம் தொட்ட படம்.''


நன்றி - விகடன்

Friday, March 01, 2013

மலையாள சினிமா - ஒரு பார்வை

மலையாள சினிமாவின் பிதாமகன்!
ப்ரியா தம்பி
மலையாளிகளுக்குத் தங்கள் சினிமாகுறித்து எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அந்தப் பெருமிதத்துக்கான முதல் விதையை விதைத்தவர் ஜே.சி.டேனியல். சினிமா என்கிற அற்புதக் கலையை கேரளத்துக்கு அறிமுகம் செய்த டேனியல், தான் வாழும் காலம் முழுவதும் அங்கீகாரம் மறுக்கப்பட்டு, அன்றைய திருவிதாங்கூரின் சாதி வெறிக்குத் தன் சினிமா கனவைத் தின்னக் கொடுத்தவர். காலங்கள் கடந்து இன்றைக்கு மலையாள சினிமாவின் பிதாமகன் என ஜே.சி.டேனியலை கேரளம் கொண்டாடுகிறது. அவரின் வாழ்க்கைதான் இப்போது 'செல்லுலோயிட்’ என்கிற பெயரில் படமாக வெளியாகியிருக்கிறது.



 அன்றைய திருவிதாங்கூரில் குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியில் பிறந்தவர் பி.ஜே.டேனியல் நாடார். வசதியான குடும்பத்தில் பிறந்த டேனியலின் கனவு சினிமா எடுக்க வேண்டும் என்பது. 'செல்லுலோயிட்’ படத்தின் முதல் காட்சியே டேனியல் (பிருத்விராஜ்) மும்பை சென்று பால்கேவைச் சந்திப்பதில் ஆரம்பிக்கிறது. 1920-களில் மும்பையில் பல ஸ்டுடியோக்களில் உதவியாளராகப் பணிபுரிந்து சினிமா தொழில்நுட்பங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறார் டேனியல்.



மீண்டும் திருவனந்தபுரம் வரும் டேனியல் தன் சொத்துக்களை விற்று, பட்டம் பகுதியில் கேரளத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான, திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸை ஆரம்பிக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்களுக்காகப் பெரிதும் சிரமப்படுகிறார். லண்டனில் இருந்து ஒளிப்பதிவாளர் வந்துசேர, எல்லாம் சேர்ந்து படப்பிடிப்பில் எதிர்பார்த்ததைவிட அதிகம் செலவு பிடிக்கிறது. செலவுகளுக்காக, மேலும் மேலும் தன் சொத்துக்களை விற்கிறார் டேனியல். கணவரின் சினிமா கனவுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார் மனைவி ஜானட் (மம்தா மோகன்தாஸ்).



'விகதகுமாரன்’ (The lost Child)  என்கிற பெயரில் கதையை உருவாக்குகிறார் டேனியல். ஆண்களே பெண் வேடமிட்டு நடித்துவந்த அந்தக் காலகட்டத்தில், நடிப்பதற்குப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. தேவாலய நாடகங்களிலும், குறத்தியாகவும் நடித்துக்கொண்டிருந்த ரோஸம்மா (சாந்த்னி) என்கிற தாழ்த்தப்பட்ட புலையர் சாதிப் பெண்ணைத் தேர்வுசெய்கிறார். நாயர் சாதிப் பெண்ணான சரோஜினியின் வேடத்தை ரோஸம்மா ஏற்று நடிக்க வேண்டும். படப்பிடிப்பு தொடங்குகிறது. கதாநாயகன் ஜெயச்சந்திரனாக டேனியலே நடிக்கிறார்.



கறுத்த உடம்போடு பழைய வேட்டியும் ஜாக்கெட்டுமாக தூக்குவாளியில் கஞ்சியைச் சுமந்துகொண்டு படப்பிடிப்புக்கு வருவாள், மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி ரோஸம்மா. முகத்தில் அப்பிய ரோஸ் பவுடரும், புடைவையும், தங்க நகைகளுமாக நாயர் பெண் வேடத்தில் தன்னைப் பார்க்க ரோஸம்மாவால் கண்ணீரை அடக்க முடியாது. தீண்டாமைக் கொடுமையால் தொடர்ந்து அவமானத்துக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் கண்ணீர் அது. படப்பிடிப்பில் அனைவரும் மேஜையில் அமர்ந்து சாப்பிட, ஸ்டுடியோவின் பின்னால் தரையில் அமர்ந்து, தான் கொண்டுவந்த கஞ்சியை ரோஸம்மா சாப்பிடும் காட்சியில்... நீங்கள் ஆதிக்க சாதியில் பிறந்திருந்தால், ஒரு நிமிடம் அவமானப்பட்டே ஆக வேண்டும். சினிமா என்பது ஒரு மேம்பட்ட கலை. இங்கு தீட்டு, சாதியெல்லாம் கிடையாது என டேனியல் திரும்பத் திரும்பச் சொன்னாலும், ரோஸம்மாவால் வலிந்து தன் மீது திணிக்கப்பட்ட சாதிய இழிவு உணர்வில் இருந்து வெளிவர முடியவில்லை.


ரோஸம்மாவின் பெயரை ரோஸி என மாற்று கிறார் டேனியல். ரோஸம்மா சினிமாவில் நடிப்பதை அறிந்து ஆதிக்க சாதியினர் அவளது அப்பாவை மிரட்டுகின்றனர். ரோஸம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட, தன் வேடத்தைக் கலைத்துவிட்டு பழைய ரோஸம்மாவாகக் கையில் தூக்குவாளியோடும், கலங்கிய கண்ணீரோடும் மலையாளத்தின் முதல் சினிமா கதாநாயகி விடைபெறும் காட்சி 'செல்லுலோயிட்’ படத்தின் சிறப்பான காட்சிகளில் ஒன்று.



1930-ல் கேரளத்தின் முதல் சினிமாவைப் பெருமிதத்தோடு திருவனந்தபுரத்தில் ரிலீஸ் செய்கிறார் டேனியல். தன்னுடைய படத்தைப் பார்க்க ஆவலோடு ஓடிவரும் ரோஸம்மா, ஆதிக்க சாதி ஆட்களால் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறாள். 'தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணோடு அமர்ந்து நாங்கள் படம் பார்ப்பதா?’ என அவர் கள் கொந்தளிக்கிறார்கள். உள்ளே தான் கதாநாயகியாக நடித்த படம் ஓடிக்கொண்டு இருக்க, கண்ணீரோடு வெளியே காத்திருக்கிறாள் ரோஸம்மா.
படத்தில் நாயர் பெண்ணாக, ஒரு தாழ்த்தப்பட்ட பெண் நடித்திருப்பதைப் பார்த்து ஆதிக்க சாதி ஆட்கள் கோபப்படுகிறார்கள். தியேட்டர் அடித்து நொறுக்கப்படுகிறது.



 படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் இதுவே நேர்கிறது. அப்போதும் கோபம் தணியாத அவர்கள் ரோஸம்மா வின் வீட்டைத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இரவில் உயிருக்குப் பயந்து எங்கோ ஓடி மறைகிறாள் ரோஸம்மா.




சொத்துக்களை இழந்த டேனியல் மனைவி ஜானட்டோடும், இரண்டு குழந்தைகளோடும் மீண்டும் அகஸ்தீஸ் வரம் வருகிறார்.


சென்னை சென்று பல் மருத்துவம் படித்துவிட்டு மதுரையிலும் புதுக்கோட்டையிலும் பல் மருத்துவராகப் பணிபுரிகிறார். சினிமா கனவை மறந்துவிட்டு சராசரி வாழ்க்கைக்குப் பழக்கப்படுகிறார். பல்வலி சிகிச்சைக்காக வரும் பி.யூ.சின்னப்பாவோடு பழக்கம் ஏற்பட, அழுத்திவைக்கப்பட்ட டேனியலின் சினிமா கனவு விழித்தெழுகிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த சொத்துக்களோடு சின்னப்பாவை நம்பி சென்னை செல்கிறார். 



 பி.யூ.சின்னப்பாவும் அவரு டைய நண்பர்களும், டேனியலை மீண்டும் தெருவில் நிறுத்து கிறார்கள். மனைவி, ஐந்து குழந்தைகளை மறந்து எங் கெங்கோ திரியும் டேனியல், சில வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் குடும்பத்தோடு வந்து சேர்கிறார். தொடர் தோல்வி கள் அவரை மீண்டும் எழ முடியாமல் செய்கின்றன. குழந் தைகள் வேலைக்காக வெளியூர் செல்கிறார்கள். அப்பாவின் சினிமா கனவை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பிள்ளைகளுக்கும் அவருக்கும் பெரும் இடைவெளி ஏற்படுகிறது.



கேரளாவில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. அந்த வருடம் 'செம்மீன்’ வெளியாகி பெரும் வெற்றி பெறுகிறது. இதன் சுவடே இல்லாமல், முதுமையிலும் வறுமையிலும் மனைவியோடு அகஸ்தீஸ்வரத்தில் வசிக்கும் டேனியலைச் சந்திக்கிறார் மலையாளப் பத்திரிகையாள ரும் எழுத்தாளருமான சேலங் காட்டு கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீனிவாஸ்). டேனியலைப் பற்றி தொடர்ந்து பத்திரிகையில் எழுதும் கோபாலகிருஷ்ணன், அவருக்கு நலிந்த கலைஞர் களுக்கான கேரள அரசின் பென்ஷன் கிடைக்க முயற்சி செய்கிறார். கூடவே, 'விகத குமாரன்’தான் கேரளத்தின் முதல் சினிமா என்று அரசு அங்கீகரிக்க வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், கல்ச்சுரல் துறையில் பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ஐயர், டேனியலுக்கு அங்கீகாரம் கிடைக்கவிடாமல் தடுக்கிறார். மலையாற்றூர், கேரளாவின் பிரபல இடதுசாரி எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



 கேரள சினிமாவைப் பொறுத்தவரை 1938-ல் வெளியான 'பாலன்’ என்கிற பேசும் படம்தான் அப்போதைக்கு மலையாளத்தின் முதல் சினிமா. ''பிராமணன் எடுத்த 'பாலன்’ முதல் படமா இருக்கணும். அதனாலதான் டேனியலை உங்களால அங்கீகரிக்க முடியலை'' என்று மலையாற்றூரிடம் கோபப்படுகிறார் கோபாலகிருஷ்ணன். எந்த அங்கீகாரமும் இல்லாமல், 1975-ல் மரணிக்கிறார் ஜே.சி.டேனியல்.



  வாழ்க்கை முழுக்க அவமதிப்புகளைப் பரிசளித்துவிட்டு, மரணத்துக்குப் பிறகு அங்கீகரிப்பது நம் மண்ணின் சாபம் போலும். டேனியல் இறந்த பிறகு, விகதகுமாரனை மலையாளத்தின் முதல் சினிமாவாக அங்கீகரிக்கிறது கேரள அரசு. அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிடுகிறது. 90-களில் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் திரைப்படக் கலைஞர் களுக்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு டேனியலின் பெயரை வைத்துத் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய முயற்சித்தது. மலையாள சினிமாவின் பிதாமகனை வெகுமக்களுக்கு அடையாளம் காட்டிய வகையில் மலையாள சினிமாவில், தன் இடத்தை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் இயக்குநர் கமல்.



இளைஞனாக, நடுத்தர வயதில், முதிய வயது டேனியலாக, டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியலாக என எல்லாப் பாத்திரங்களிலும் சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார் பிருத்வி ராஜ். சாதித் தீண்டாமைதலை விரித்தாடிய காலம் ஒன்றில், பெண்கள் பள்ளிக்குக்கூட வராத நேரத்தில் டேனியலின் சினிமா கனவில் ஒவ்வொரு நொடியும் உடன் இருக்கும் மனைவி ஜானட் ஆச்சர்யப்படுத்துகிறார். 



அந்தப் பாத்திரத்துக்குப் பிரமாதமாகப் பொருந்துகிறார் மம்தா மோகன்தாஸ்.
படத்தில் டேனியல் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, எதிரில் காட்சிகள் அவருக்கு ஒரு சினிமாவாகத் தெரிகிறது. அதை மனைவிடம் பகிர்ந்தபடியே கண்கள் இமைப்பதை நிறுத்திக்கொள்கிறார் டேனியல். சினிமாவை நேசித்த ஒரு கலைஞனை வேறு எந்தக் காட்சியாலும் பெருமைப்படுத்திவிட முடியாது. கடைசிக் காட்சியில் டேனியலைக் கௌரவப்படுத்தும் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள பேருந்தில் வருகிறார் அவரது மகன் ஹாரிஸ் டேனியல். 


டேனியலின் சினிமா கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திரை அரங்கில், அன்று மோகன்லால் படம் வெளியாகிறது. ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள். அவரது கட்அவுட்டுக்கு முத்தம் கொடுக் கிறார் ஒரு ரசிகர். அதை மெல்லிய புன்னகையால் கடக் கும் ஹாரிஸ் பேசாமல் நிறையப் புரியவைக்கிறார். கேமரா வழியே முதன்முதலாக டேனியல் பார்க்க, காட்சிகள் அவருக்குத் தலைகீழாகத் தெரிகின்றன. நிஜத்துக்கும் நிழலுக்குமான தலைகீழ் வேறுபாட்டை அந்தக் காட்சியில் வார்த்தைகள் இன்றிப் புரியவைத்திருப்பார் இயக்குநர்.



படம் வெளியான அன்று இரவு, இருளில் ஓடித் தப்பித்த ரோஸம்மா அதன் பிறகு எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. இருளில் ஒரு லாரியின் முன்பு விழுந்ததாகவும், காப்பாற்றிய லாரி டிரைவரையே திருமணம் செய்துகொண்டு ராஜம்மா என்கிற பெயரில் நாகர்கோவிலில் கொஞ்ச நாட்கள் வசித்ததாக வும் தெளிவில்லாத தகவல்கள் படத்தில் வந்துபோகின்றன. 



தான் நடித்த படத்தைத் திரையில் பார்க்கவே அனுமதி மறுக்கப்பட்ட மலையாளத்தின் முதல் கதாநாயகி பற்றியே மனம் அதிகம் யோசிக்கிறது. இப்போது ரோஸம்மா உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை. அவரது அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த ரோஸம்மாவை அடையாளம் தெரியுமா? அன்று இரவு இருளில் உயிருக்குப் பயந்து ஓடி மறைந்த ரோஸம்மாவின் கண்களை வெகுகாலத்துக்கு மறக்க முடியும் எனத் தோன்றவில்லை.



சினிமா என்பது சமூகத்தின் மனசாட்சியைப் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில் மலையாள சினிமாவின் பிதாமகன் டேனியலின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், சாதியின் கொடூரத்தைச் சமரசம் இன்றிச் சித்திரித்த வகையிலும் மலையாள சினிமாவின் மகத்தான படைப்பாக 'செல்லுலோயிட்’ என்றென்றும் பேசப்படும்.



நன்றி - விகடன்

எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ? - எம் எஸ் வி பேட்டி

'ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான்!''


விகடன் மேடை எம்.எஸ்.வி. பதில்கள்
உங்களைப் பத்தி ஒரு ரகசியம் கேள்விப்பட்டேனே... நீங்க குழந்தையா இருக்கும்போது உங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்கலையாம். உங்க தாத்தாதான் இப்ப நீங்க உயிரோட இருக்கக் காரணமாம். இது உண்மையா?'' 


 
''திருச்சியில் என் அப்பா ஜெயில் வார்டனா இருந்தார். எனக்கு நாலு வயசா இருந்தப்போ, திடீர்னு அப்பாவுக்கு சீக்கு வந்து இறந்துபோயிட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கிருச்சு. தொடர்ந்து சில நாட்கள்லயே அடுத்த இடியா என் தங்கச்சி வேசம்மாவும் இறந்துபோயிட்டா. அம்மா தனி ஆளா என்னை வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அப்போ அக்கம்பக்கத்துல இருந்தவங்க, 'அப்பனையும் தின்னுட்டான்... 



தங்கச்சியையும் முழுங்கிட்டான்’னு என்னைத் திட்டித் தீர்த்துருக்காங்க. 'புருஷன் செத்துப்போயிட்டாரு... புள்ளையையும் ஊரார் கரிச்சுக்கொட்டுறாங்களே’னு  மன சொடிஞ்சுபோன அம்மா, ஒரு நாள் அதிகாலை மூணுமணிக்கு திருச்சிலேர்ந்து புதுக்கோட்டை போற ரோட்ல இருந்த ஒரு குளத்துல என்னைத் தள்ளிவிட்டுட்டு தானும் செத்துப் போகப் பார்த்திருக்காங்க. அந்த நேரத்துல வீட்ல மகளைக் காணோம்னு தாத்தா கிருஷ்ணன் நாயர் தேடிக் கிட்டு வந்து, தற்கொலை பண்ணிக்க இருந்த அம்மாவையும் என்னையும் காப்பாத்திட்டார்.  ஆமா... நீங்க  கேள்விப்பட்ட மாதிரி நான் இன்னைக்கு உயிரோட இருக்கக் காரணம், என் தாத்தா கிருஷ்ணன் நாயர்தான்!''


வி.பிரகதி, தூத்துக்குடி. 


''தமிழில் இப்போது வரும் குத்துப் பாடல் களைக் கேட்கும்போது என்ன நினைப்பீர்கள்?'' 



''சினிமாவில் குத்துப் பாட்டுங்கிறது காலம் காலமா இருந்துட்டு வர்ற விஷயம் தான். இரண்டரை மணி நேர அலுப்புத் தெரியாம மக்களை சினிமா பார்க்க வைக்கிற உத்தி அது. அதுல முக்கியமாகவனிக்க வேண்டியது குத்துப் பாட்டின் வரிகளைத்தான்.  கண்ணியமா... யாரையும்புண்படுத்தாம எல்லாரும் ரசிக்கிற மாதிரி வரிகள் இருக்கணும். ஆனா, இப்ப வர்ற குத்துப் பாடல்களில் வருகிற வரிகள் எல்லாம் எப்படி இருக் குனு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. அந்தக் காலத்துல நாங்க போடாத குத்துப் பாட்டா? என்ன, அதை அப்ப டப்பாங்குத்துனு சொல்வாங்க. 'என்னடி ராக்கம்மா...’, 'எலந் தப் பழம்... எலந்தப் பழம்...’ பாட்டெல்லாம் இந்தத் தலைமுறைக்கும் தெரிஞ்ச டாப் டப்பாங்குத்து ஆச்சே. ஆனா, அந்தப் பாட்டெல்லாம் கேட்கிறவங்க காதைக் கூசவைக்காது.''
வி.கேசவன், மயிலாடுதுறை. 

''உங்கள் இசையமைப்பில் ஜெயலலிதாவைப் பாடவைத்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?'' 



''எம்.ஜி.ஆர்... என்கிட்டே அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பார். 'நம்ம அம்மு நல்லா பாடுது. அதுக்கு இனிமையான குரல். உன் மியூஸிக்ல அம்முவுக்கு ஒரு வாய்ப்பு கொடு’னு கேட்டுட்டே இருப்பார். அது என்னமோ தெரியலை... நடிகர் கள், நடிகைகள், கவிஞர்கள் இவங்களை எல்லாம் பாடவைக்கணும்னு எனக்குத் தோணவே தோணாது. என்னைச் சுத்திலும் பிரமாதமா பாடுற பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இருந்த தும் அதுக்குக் காரணம். எம்.ஜி.ஆர். பார்க்கும்போது எல்லாம் கேட்டுட்டே இருந்ததால, முக்தா சீனிவாசன் தயாரிச்ச 'சூரியகாந்தி’ படத்துல 'ஓ மேரா... தில்ரூபா...’ பாட்டைப் பாடுற வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவுக்குத் தந்தேன். டி.எம்.எஸ்ஸோடு சேர்ந்து பிரமாதமாப் பாடியிருப்பாங்க. அந்தப் பாட்டை ரிக்கார்டிங் குக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் அவங்களுக்குப் பாடிக் காட்டினேன். சட்டுனு புடிச்சிக்கிட்டாங்க. கற்பூரப் புத்தி!''



ஜி.காசிநாதன், கும்பகோணம். 


''நீங்க இசையமைத்த முதல் பாட்டுக்கு உங்க பேர் வரலையாமே?'' 


''ஆமாங்க. 'வீர அபிமன்யு’ங்கிற படம். அந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் மியூஸிக். நான் அப்ப அவர்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோடு ஜி.கே.வெங்கடேஷ், சி.ஆர்.கோபால கிருஷ் ணன் போன்றவங்கல்லாம் சேர்ந்து வேலை பார்த்தாங்க. 'புது வசந்தமாமே வாழ்விலே...’ என்கிற பாட்டுக்கு ஏகப்பட்ட டியூன் போட்டாரு எஸ்.எம்.சுப் பையா நாயுடு. ஆனா, எதுவுமே பொருத்தமா அமையலை. ஒரு நாள் மத்தியானம் யாரும் இல்லாதப்ப நான் அந்தப் பாட்டுக்கு ஒரு டியூன் போட் டேன். எனக்கு என்னவோ கேட்டதுமே அந்த டியூன் பிடிச்சுப்போச்சு. நான் இதை யார்கிட்டயும் சொல்லலை. ஆனா, நண்பர்கள் விஷயத்தை  சுப்பையா நாயுடுகிட்ட போய் சொல்லி இருக்காங்க. அவர் டியூன் கேட்டுட்டு சந்தோஷப் பட்டார். நான் போட்ட டியூனி லேயே அந்தப் பாட்டு பதிவா னாலும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பேர்லதான் படத்துல வந்துச்சு.


பல நாள் கழிச்சு ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகிட்ட என்னை அழைச்சுட்டுப் போயி, 'வீர அபிமன்யு படத்துல 'புது வசந்தமாமே வாழ்விலே...’ பாட்டுக்கு மெட்டுப் போட்டது நான் இல்லை. இதோ இந்த விஸ்வநாதன்தான். இவனுக்கு உங்க கம்பெனியில ஒரு சான்ஸ் கொடுங்க’னு சொல்லி, எனக்கு வாழ்க்கையில முதல் கதவைத் திறந்துவெச்சவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்ப தற்காகத்தான் அந்த உண்மையைச் சமயம் பார்த்துச் சொல்றதுக்காக, அவர் பொறுமையாக் காத்திருந்தார்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது!''



எஸ்.பிரிஸில்லா, சென்னை-5.


''உங்க இசையமைப்பில் வரும் பல பாடல்களில் தமிழ் மொழியை வெச்சு ஏதாவது புதுமை செய்து இருப்பீங்க. அதெல்லாம் எப்படி அமைஞ்சுது?'' 



''அதுக்கெல்லாம் அந்தப் படத்தோட இயக்குநர், தயாரிப்பாளர், கவியரசு கண்ணதாசன், என் இசைக் குழு... இவங்க எல்லாருமே காரணம். சூழல்தான் ஒரு பாட்டை மெருகேத்திப் பளபளக்கவைக்கும்னு நான் நம்புறேன். உதார ணத்துக்குச் சொல்றேன், 'பட்டினப்பிரவேசம்’ படத்துக்கு நான் ஒரு டியூன் போட்டேன். டியூனைக் கேட்ட பாலசந்தர், இந்தப் பாட்டுக்குப் புதுமையா ஏதாவது வரிகள் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். என் டியூனைக் கேட்ட கண்ணதாசன், 'இதுக்கு ல... ல...னு முடியிற மாதிரி வார்த்தைகளைப் போட்டா நல்லா இருக்கும்’னு சொன்னார். பாலசந்தரும் சரி சொல்ல, அப்படி உருவானதுதான் 'வான் நிலா... நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’ங்கிற பாட்டு!''


கா.விஜயராகவன், சுரக்குடி. 


''எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ?''



''மனசுக்கு ரொம்பச் சங்கடமா இருக்குங்க. மெலடி பாடல்கள் வரலைனு சொல்ல முடியாது. வர விட மாட்டேங்கிறாங்கன்னுதான் சொல்லணும். ஃபாஸ்ட் பீட்னு அவசர அவசரமா அள்ளித் தெளிக்கிறாங்க. அதைத்தான் இந்தக் காலத்து இளைஞர்களும் கொறிக்கிறாங்க. ஆனா, எப்பவும் காலம் கடந்து நிக்கப்போறது மெலடி பாடல்கள் மட்டும்தான்.''



எம்.மாலதி, நாகப்பட்டினம். 


''உங்களுக்கு 'மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?'' 


''1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்... திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் 'மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!''


எம்.கே.பாலு, திருத்தணி. 


''உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... நீங்கள் இதுவரை ஒரு பாடலுக்கான இசையைக் கூட காப்பி அடித்ததே இல்லையா?'' 


''ஒரு உதாரணம் சொல்றேன். 'சுகம் எங்கே’னு ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்சாங்க. டி.ஆர்.சுந்தரம் என்கிட்ட கேட்டார்... 'நாங்க இந்தி டியூன்லாம் கொடுத்து மியூஸிக் போடச் சொல்வோம் போடுவீங்களா?’ 'சார், இந்த வாய்ப்பே கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. சொந்தமா டியூன் போடறேன். பிடிச்சா சான்ஸ் கொடுங்க... இல்லைன்னா வேண்டாம்’னு சட்டுனு எந்திரிச்சுட்டேன். ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான் சார்!''


நன்றி - விகடன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 1.3.2013 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை

 
 1. வெள்ளச்சி - நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் வெள்ளச்சி.

சினிமாவில் அவர் யாராக இருந்தாலும் - இயக்குனர், நடிகர், பாடலாசி‌ரியர், காமெடி நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குனர்... - யாராக இருந்தாலும் தங்கள் வா‌ரிசை நடிகனாக்கவே முயற்சிக்கிறார்கள். பணமும், புகழும் முடிந்தால் பதிவியும் கிடைக்கும் ஏ‌ரியா அல்லவா. நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகனும் நடிகராகவே களம் இறங்கியிருக்கிறார்.

பட்டாளம் படத்தில் நடித்த இவர் சோலோ ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் வெள்ளச்சி. பெயரைக் கேட்கும் போதே இதுவொரு கிராமத்துப் படம் என்பது விளங்கியிருக்கும். இளையராஜா இசையமைக்க வேண்டியது. பட்ஜெட் பற்றாக்குறையா தெ‌ரியவில்லை இளையராஜாவின் மகள் பவதா‌ரிணி இசையமைக்கிறார்.

வேலு விஸ்வநாதன் இயக்கும் இந்தப் படம் இன்று  ிலீஸ் 


ஈரோட்டில் ரிலீஸ் இல்ல

 

2. லொள்ளுதாதா பராக் பராக் - நடிகரும், இயக்குனருமான மன்சூரலிகான் அவ்வப்போது ஏதாவது புரட்சிகரமான விடயங்களை செய்வார்.


பூனையை குறுக்கே விட்டது முதல் பல விடயங்களை செய்துள்ளார்.
தற்போது அவர் நடித்து தயாரிக்கும் “லொள்ளுதாதா பராக் பராக்” என்ற படத்தின் இசை வெளியீட்டை யதார்த்தமான கோணத்தில் அணுகி இருக்கிறார்.


இது குறித்து அவர் கூறுகையில், ஓடியோ சி.டியை 100 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கும் போது விற்பனை பத்து சதவிகிதம் கூட இருக்காது.



அதனால் தான் அடக்க விலைக்கே அதாவது 15 ரூபாய்க்கு ரோட்டில் போட்டு விற்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.


இசை வெளியீட்டு விழா நடைபெறும் ஜேர்மன் ஹாலில் மார்க்கெட் போன்று அமைத்து மீன் விற்பவர்கள் முதல் சிகரெட் விற்பவர்கள் வரை ஆடியோ விற்பது போன்று கடைகளை போட்டு விற்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு ஆடியோ விற்காமல் இருப்பதை விட எல்லோருடைய வீட்டிலுமே ஒலிக்கட்டுமே என்றார்.

ஈரோட்டில் ரிலீஸ் இல்ல

 

3 . நான்காம் பிறை - விக்ரம் நடித்த, "காசி படத்தை இயக்கிய வினயன், தற்போது, "நான்காம் பிறை என்ற, "3டி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம், உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர், பிராம் ஸ்டோகர் எழுதிய, "டிராகுலா என்ற நாவல் கதையை மையமாக வைத்து உருவாகிறது.


 


 இப்படத்தில் கிருஷ்ணா, சுதீர், பிரபு, நாசர், மோனல் கஜார், சாரதா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய காட்சிகளை, ருமேனியா நாட்டில் உள்ள, டிராகுலா மாளிகையில் படமாக்கும் வினயன், படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த, "ஹாரிபாட்டர், அவதார் படங்களில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞரையும், இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா வில் ரிலீஸ்

 


4.சந்தமாமா -  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் ஆகிய படங்களை தொடர்ந்து கருணாஸ் அடுத்து ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் படம் சந்தமாமா. இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக ஸ்வேதா பாசு நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம், மயில்சாமி, பருத்தி வீரன் சுஜாதா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

சந்தான கிருஷ்ணன் என்கிற சாதாரண ஒருவன் தனது எழுத்தாற்றலையும், கற்பனை சக்தியையும் எழுத்தாக்கி பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவலில் சந்தமாமா ஆகிறார். அதில் அவன் பெற்ற அனுபவங்கள் தான் படத்தின் கதை!

நகைச்சுவை என்பது படத்தின் முக்கிய கொள்கையாக கருதப்பட்டு, அதனுடன் குடும்ப சென்டிமென்ட்டை கலந்து கலகலப்பான படமாக உருவாகி வருகிறது சந்தமாமா. டைரக்டர் வினயன், வி.சி.வடிவுடையான் ஆகியோரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ஆனந்த குட்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கிளாசிக் சினிமாஸ் படநிறுவனம் சார்பாக முரளி தயாரிக்கிறார். பாண்டிச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது, இன்று ரிலீஸ்

ஈரோடு தேவி அபிராமி , சண்டிகாவில் ரிலீஸ்

5. ஆண்டவ பெருமாள் - வேலை தேடி அலையும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, ஆண்டவ பெருமாள் என்ற புதிய படம் தயாராகியிருக்கிறது. சிவன், அங்கீதா, லொள்ளு சபா ஜீவா, சசி, மணிமாறன், `பசங்க சிவகுமார், பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோபின் என்.சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, ரவிச்சந்திரன் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டைரக்டர் ப்ரியன். அதோடு எடிட்டிங்கையும் அவரே கவனிக்க உள்ளார். ஆர்.ஜனா வழங்க, பராசக்தி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம், இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கும், என்று டைரக்டர் ப்ரியன் கூறியிருக்கிறார்.

ஈரோட்டில் ராயல் ல் ரிலீஸ்




 6. The Attacks of 26/1 - Ram Gopal Varma's ambitious project The Attacks of 26/11, a movie based on the 26/11 Mumbai terror strike, has hit a rough patch with the UAE censor board. The film has been rejected after it was reviewed by the Dubai censors.


It is a well known fact that the 10 terrorists from the terror outfit Lashkar-e-Taiba from Pakistan had attacked Mumbai, and that is something that the Dubai censors have been shying away from showing," said a source from the film's team.

The Bahrain and the Oman governments, however, have cleared the film and viewers from Emirates may travel to Oman over the weekend to watch the movie, the source added.

The 2008 terror attack, which shook Mumbai, left 166 people dead. In the film, Nana Patekar plays a joint commissioner of police facing an enquiry over the attacks, while Sanjeev Jaiswal will be seen as terrorist Ajmal Kasab, whose death sentence was executed recently. The film, releasing in India tomorrow, also features Atul Kulkarni and Ganesh Yadav. 


"The Attacks of 26/11" was also specially screened for politicians, at the capital's Films Division Auditorium at Mahadev Road Wednesday. L.K Advani was present along with various other leaders, including Shahnawaz Hussain, Sanjay Nirupam, Rajeev Pratap Rudy, Naveen Jindal, Balbir Punj, Raj Babbar and Ram Vilas Paswan.

ஈரோட அண்ணாவில் ரிலீஸ் 


7.   jack of giant slayer -The ancient war between humans and a race of giants is reignited when Jack, a young farmhand fighting for a kingdom and the love of a princess, opens a gateway between the two worlds.  

I just saw this at a special screening and since I'm wring reviews more often, I thought it'd be perfect to share my thoughts on this one. 'Jack the Giant Slayer' is basically just a retelling of Jack and the Giant Beanstalk, with some twists. Think of it kind of like the recent Kristin Stewart film, 'Snow White and the Huntsman'. Except, maybe this one is geared more towards the gentlemen of the crowd, where the former was the opposite. This film is as epic as 'Lord of the Rings', and if you like that kind of thing, you should enjoy this one.

I won't give away anything about the plot but you should already know the idea of what it is. There is not just one giant in this film, there are many, and there are plenty of action sequences to keep you engrossed. Nicholas Hoult plays the lead, and he holds the role well. He can also be seen in 'Warm Bodies'. Bryan Singer directs, and we all know he's responsible for 'X-Men'. Lets just say, the apple doesn't fall far from the beanstalk! I will for sure see this epic fantasy adventure again.

If you've ever played the classic PlayStation One game 'Legend of Dragoon', you'll notice a little resemblance in the war between humans and giants (gigantos in that game). Like I said in my last review- sit back and enjoy the ride, because thats what it's meant to be: not a deep thinking film.

If you think Bryan Singer is incapable of making anything decent after 'Superman Returns', think again- because you don't know jack!


ஈரோட்டில் ஆனூரில் ரிலீஸ்
 

8. ுடச்சுட -ைக்கோ ஸ்பிஸ்ட் செல்வாகன் பத்ுலீரோ சைக்கோவா இருப்பங்க, இுலீரோயின் சைக்கோ.ோபினா வாசேவ்னு ஒரு சோபிக்க  ஒரு 50 மார்க் ஃபிகர் ான் ஹீரோயின் .ஸ்கூலில் பிக்கும்பே சைக்கோவான இவர் ன் ோழியை ரேப் செய்ை பி வங்குவான் கை. சீன் பம்னு நினைக்கேன்,  ீன் இருக்கா? இல்லையா?ன்னெரி 

ஈரோட்டில் ஸ்ரீிவாசாவில் ரிலீஸ்

 
 அ

9.21 and Over (2013) - When Straight-A college student Jeff Chang's two best friends take him out for his 21st birthday on the night before an important medical school interview, what was supposed to be a quick beer becomes a night of humiliation, over indulgence and utter debauchery. 

I caught a special screening of this. If you liked The Hangover, you should like this, if you would like to see a younger version of it. The film is funny, and thats what it's meant to be. It's not trying to be a deep thinking movie, it wants you to sit back and enjoy the ride.

Yes, I prefer American Reunion. But thats just me, and it's probably 75% due to nostalgia. I also prefer Ted, and The Hangover, as well as 21 Jump Street. I know that sounds bad, but I always like older movies better and that is JUST me. 21 and Over is a good movie in it's own way, and I really liked the fact that it shows a little racial diversity and went with an Asian lead. The humour in this film is hit and miss. Some jokes you will laugh hard at, and others you will awkwardly wait to see if anyone else in the theatre laughs at before you follow along. 






My only regret is that I didn't spend my 21st birthday like the main character in this film does- I drank two glasses of red wine and spent it with my family in the suburbs. Family is what counts right? Also, don't get this movie confused with the film 21- another great film- this isn't about card counting or playing blackjack. Although thats something a newly 21 year old might do!





நன்றி - தினமல்ர், தினமணி , மாலை மலர், மற்றும் அனைத்து சினிமா இணைய தளங்கள்

முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும்

Photo
1. பாமா நீ பேமானி ;-) # சும்மா


------------------



2. லவ் பண்றப்ப அங்கே தொடாதே இங்கே படாதே கிஸ் பண்ணாதேன்னு இல்லாத சட்டதிட்டம் பேசுனா அது LAWவன்யா



---------------------


3. ஆபிஸ்க்கு லீவ் போடனும்னா முன் கூட்டியே சொல்லக்கூடாது.வேலை வெச்சுடுவாங்க.திடீர்னு போன் பண்ணி பெரிய காரியம் ஆகிடுச்சுன்னு சொல்



-----------------------


4. பேங்க ஒர்க் பன்ற பிகர் = குடும்பப்பாங்(க்)கான பொண்ணு




---------------------


5. பிக்ஸர் பொட்டி வர்லைன்னா தியேட்டர்காரன் கடைசி வரை சொல்லமாட்டான்.முதல்லியே சொல்லிட்டா ஆடியன்ஸ் வேற தியேட்டர் போய்ட்டா?


--------------------


நாளை பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் என் அண்ணன் மகன் திரு. சந்தோஷ்-க்கு போனில் வாழ்த்துச் சொன்ன என் தலைவன் உயர்திரு. பாக்யராஜ் சார் அவர்களுக்கும், அண்ணி பூர்ணிமா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! -பூங்கதிர்


6. மு க மைன்ட் வாய்ஸ் - இந்த மெஸ் ஐடியா மாஸ் ஐடியாவா இருக்கே.நமக்குத்தோணாம போச்சே?



--------------------------



7. காதல்ல தோற்கும்போது ஏற்படும் வலியை விட திரும்பவும் அதே பெண்ணை பார்க்கும்போது ஏற்படும் வலி அதிகம் # ஆ/பெ



----------------------


8. ஜெ'பற்றி ஆபாசமாக பேசிய பேச்சாளரை பாதியிலேயே நிறுத்த சொன்ன கனிமொழி! #பெண்ணுக்கு பெண்ணே பாதுகாப்பு.நல்ல முன் மாதிரி




-----------------------


9. வரும் முன் காப்போம்னு அரசாங்கம் எழுதி வைக்குது.ஆனா அவங்களே அதை பின் பற்றுவதில்லை


----------------------



10. பி எம் - நல்ல வேளை.பாம் வெடிச்சுது.ஹெலிகாப்டர் ஊழல் .ராஜபக்சே வருகை எல்லாத்தையும் மக்கள் மறந்துடுவாங்க ( மைன்ட் வாய்ஸ்)




------------------------



Photo: ஆள் பார்க்காவிட்டால் நானும் அப்பதான்.


11. அத்தான்.ஆபீஸ்ல என்னை நினைப்பீங்ளா? 



என்ன இதுக்கோசரம்? அதான் ஆபீஸ்ல 13 பிகருங்க இருக்காங்க்ளே? 



------------------------------


12. ஒரே வீட்ல 2 பேர் கூட ஒருவர் வாழ்வதுதான் லிவ்விங் 2 கெதர் ?



-----------------------


13. தமிழ் மிஸ் - வல்லினம் ,மெல்லினம் அடுத்து என்ன? 




குசும்பு குசேலன் - டீச்சர் இடை இனம் 



----------------------------


14. சிங்கள அரசுக்கு இந்திய அரசு இனியும் துணை போக வேண்டுமா? - கருணாநிதி# 2 ஜி 2 ஜி - சோனியா. சாரி ஜி சாரி ஜி - மு க



---------------------------------


15. ஈரோட்ல திருச்சி கபே ஹோட்டல் இருக்கு.திருச்சில ஈரோடு கபே ஹோட்டல் இருக்கா?



---------------------------



பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!
Photo: பார்த்தேன் படித்தேன் சிரித்தேன் பகிர்ந்தேன்!


16. காதலில் நடிகர் திலகங்கள் குறைவு.நடிகையர் திலகங்கள் அதிகம்



---------------------


17. தனக்குத்தேவைப்படும்போது மட்டும் அன்பும் ,அக்கறையும் காட்டுபவள் பெண்



-------------------------


18. காலை வணக்கம் வைக்கும்போது மேனேஜரின் அமர்த்தலான பார்வையில் தொடங்கி விடுகிறது ஆபீஸ் கடுப்படிப்புகள்



------------------------


19. செந்தாமரைச்செல்வி லவ் பண்ணுனா செந்தா மறை கழண்ட செல்வி ஆகிடுவாரா?



---------------------


20. இறுகிய முகம் உடைய மேனேஜருக்கு லேடி ஸ்டாபை கண்டா மட்டும் மலர்ந்த முகமும் இளகிய மனமும் இருப்பதே தெரியுது.



----------------------



Photo: சும்மா கைகால்கள் இருந்தும் வெட்டியா பிச்சை எடுக்காமல் வேலை செய்யும் செல்லம்


21.சிலுவை சுமப்பது கூட சுலபம்.உன்னை சுமப்பது நெம்ப கஷ்டம்.98 கிலோ நீ



------------------------


22. உங்களுக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தை கண்டேன்.கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்கேன்னு சம்சாரம் பேசுனா பட்டுப்புடவைக்கு பிட்டு னு அர்த்தம்



----------------------------

23. இன்று உலக தாய்மொழி தினம் தேன்மொழி தினம் ,கனிமொழி தினம் எல்லாம் எப்போ? 




----------------------------


24. ஊரெல்லாம் போலீஸ் நடமாட்டமா இருக்கு.பந்த்க்கு பாதுகாப்பாம்.பெண்கள் ஜாக்கிரதையாக வீட்டிலேயே இருக்கவும்




---------------------------


25. முதல் இரவில் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தாலும் நம்ம ஆளுங்க COT டை விட்டு அவ்ளவ் சீக்கிரம் இறங்க மாட்டாங்க


------------------------------------




Photo: கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்.தூக்கம் கண்ணைச் சொட்டுதே..




டுடே டி வி ஷோ டைம் டேபிள்
டுடே டி வி ஷோ டைம் டேபிள்