Saturday, December 22, 2012

நித்யஸ்ரீ கணவர் தற்கொலை மர்மங்கள்

http://2.bp.blogspot.com/_9vPNlqoYUtY/TSE8NlhVbDI/AAAAAAAADco/j2AIV3vn7xU/s1600/Nithyasree+Mahadevan+Carnatic+musician+playback+singer.jpg 
சென்னை:பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ, 39. இவரும் கர்நாடக இசை உலகில் மிக பிரபலமாக விளங்குகிறார். திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

விருப்ப ஓய்வு:


இவரது கணவர் மகாதேவன், 45. மென்பொருள் பொறியாளரான இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார்.தந்தை விஸ்வநாதன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோட்டூர்புரத்தில் மகாதேவன் வசித்து வந்தார். மகாதேவன்-நித்யஸ்ரீக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



மகாதேவன், நேற்று காலை 8:00 மணிக்கு மகள்களை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு விட்டு வீடு திரும்பினார். பின் காலை 11:00 மணிக்கு, அவரது ஓட்டுனர் தண்டபாணி, 30, என்பவரை அழைத்து காரை எடுக்கும் படி கூறினார்.



அடையாற்றில் குதித்தார்:


இருவரும் அருகில் உள்ள டென்னிஸ் அரங்கம் ஒன்றிற்கு சென்றனர். அங்கிருந்து கோட்டூர்புரம் வழியாக வீடு திரும்பும்போது, மகாதேவன் காரை ஓட்டியுள்ளார்.நண்பகல் 12:30 மணிக்கு, பாலத்தின் நடுவில் திடீரென காரை நிறுத்தி, சாவியை எடுத்து கொண்டார். திடீரென பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தண்டபாணி, உடனடியாக நித்யஸ்ரீயை அலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்த சிலர், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். காரில் வந்த நபர் ஆற்றில் குதித்த தகவலால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உடல் மீட்பு:


தகவலறிந்து, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்க முயன்றனர். அதற்குள் மகாதேவனில் உடல் ஆற்றில் மிதந்தது. அதை கயிறு கட்டி மேலே இழுத்தனர்.அப்போது, ஆட்டோ மூலம் அங்கு விரைந்து வந்த நித்யஸ்ரீ, கணவர் குதித்த இடத்தை பார்த்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மகாதேவனின் உடலை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவன் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி - தினமலர் 






பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் வி.மகாதேவன் (45) வியாழக்கிழமை அடையாறு ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.



இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கோட்டூர்புரம் 4-வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் மகாதேவன். இவரது மனைவி பிரபல கர்நாடக இசைப் பாடகியும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான நித்யஸ்ரீ. இத் தம்பதிக்கு தேஜாஸ்ரீ, தனுஷாஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர். இதில் தேஜாஸ்ரீ (8) 3-ம் வகுப்பும், தனுஷாஸ்ரீ (7) 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். எம்.இ. படித்துள்ள மகாதேவன் மந்தைவெளியில் ஆர்.கே. சாலையில் உள்ள ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.



மகாதேவன் காரில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். காரை டிரைவர் சுரேஷ் ஓட்டினார். கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு டென்னிஸ் மைதானத்துக்குச் சென்று, அங்கு பயிற்சி பெறும் தனது மகள்களை பார்க்கச் சென்றாராம். ஆனால் இரு மகள்களும் அப்போது இல்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்த மகாதேவன், அங்கிருந்து காரை தானே ஓட்டினார்.



கோட்டூர்புரம் அடையாறு பாலத்தின் அருகே நண்பகல் 12.30 மணியளவில் கார் வந்ததும். திடீரென காரை விட்டு இறங்கி செல்போனில் பேசியபடியே நடந்து சென்றாராம். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதை பார்த்து டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று மகாதேவனை மீட்டனர்.



பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகாதேவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகாதேவன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்து வேறுபாடு: போலீஸôர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையே அவரின் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நித்யஸ்ரீ திரைப்படங்களில் பின்னணி பாடுவதில் மகாதேவனுக்கு விருப்பம் இல்லையாம். இது தொடர்பாக இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் சரிவர வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.




மேலும் நித்யஸ்ரீயின் கர்நாடக இசை கச்சேரிகளின் தேதிகளை மகாதேவன் கவனித்து வந்தாராம். மார்கழி மாத கச்சேரியில் தேதி கொடுத்தது தொடர்பாக நித்யஸ்ரீக்கும், மகாதேவனுக்கும் இடையே வியாழக்கிழமை காலை வாக்குவாதம் ஏற்பட்டதாம். எனவே குடும்பப் பிரச்னை காரணமாகவே மகாதேவன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸôர் கருதுகின்றனர்.


நன்றி - தினமணி


http://newindianexpress.com/incoming/article1346039.ece/ALTERNATES/w460/Nithyasree-Mahadevan.jpg



எனது கேள்விகள்



1. நித்யஸ்ரீயின் கணவர் ஆற்றில் குதித்ததை நேரில் பார்த்த டிரைவர் அவரைக்காப்பாற்ற ஏன் முயற்சிக்க வில்லை? அவருக்கும் நீச்சல் தெரியாதா? அக்கம் பக்கம்  கூச்சல் போட்டு உதவி கேட்டாரா?


2.  தற்கொலை செய்பவர்கள் தனிமையில் இருக்கும்போதுதானே செய்வார்கள்? டிரைவர் பார்க்க பார்க்க ஆற்றில் குதித்தால் காப்பாற்றி விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்காதா?



3. தற்கொலை செய்ய நினைத்தவர் எதுக்கு கார் சாவியை கையில் எடுத்துட்டு போகனும்?



4. மன உளைச்சலில் இருந்த நித்யஸ்ரீயின் கணவர் ஏன் காரை ஓட்ட வேண்டும்? கார் டிரைவர் தானே ஓட்டனும்? பொதுவாக டென்ஷனில் இருக்கும்போது யாரும் டிரைவிங்க் பண்ண மாட்டாங்க, அதுவும் டிரைவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ..



5. ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இறந்து போன தன் அம்மாவின் பிரிவின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறதே , 8 மாதங்கள் கேப் ஏன்? பொதுவா தற்கொலை எண்ணம் என்பது ஒரு நிமிட சோகத்தில் வருவது , அம்மா இறந்த துக்கத்தில் இருந்து மீள  ஒரு மாதம் அல்லது 3 மாதங்கள் போதும் அப்போதெல்லாம் நிகழாத சம்பவம் ஏன் 8 மாதங்கள் கழித்து இப்போது?



6. கார் டிரைவரைத்தவிர அவர் தற்கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருக்காங்களா? அது பற்றித்தகவலே இல்லையே? 


திரிபுராவில் மக்கள் முன்னிலையில் நடந்த ரேப் , போலீஸ் அதிர்ச்சி

Woman stripped naked, gang-raped in Tripura

Published: Saturday, Dec 22, 2012, 15:07 IST
Place: Tripura | Agency: IANS
A housewife was stripped naked, gangraped and battered in full public glare in Tripura, police said Saturday.


"A 37-year-old woman was gang-raped at Bishalgarh in western Tripura Wednesday night. After the rape, the women was stripped naked, brutally beaten up and then tied to a tree," a police official told reporters here.


Based on the victim's complaint, police immediately swung into action and arrested seven people. However, three more accused, including the main one, are on the run.


Police said the accused dragged the house wife from her home and took turns to rape her before many people, including women. But no one dared to come forward to save the mother of a five-year-old.


The role of the husband is also being probed, the police official said.


Tripura Woman's Commission chairperson Purnima Roy strongly condemned the atrocious incident and asked the police to take stern action against the culprits.


People organised a protest rally at Bishalgarh, 25 km from here, over the incident.


நன்றி - DNA 

ஸ்ரீவைகுண்டம்: பள்ளி மாணவி கொலையில் ரவுடி கைது! 
Posted Date : 14:42 (22/12/2012)Last updated : 14:53 (22/12/2012)
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்று கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர்  பேச்சியம்மாள். இவரது மகள் புனிதா (வயது 13), நாசரேத்தில் உள்ள ஒரு பெண்கள்  மேல்நிலைபள்ளியில் 7 ஆம்வகுப்பு படித்து வந்தாள். தினமும் வீட்டில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ள தாதன்குளத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரயிலில் பள்ளிக்கு  சென்று வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்ற புனிதா தாதன்குளம் ரயில்  நிலையம் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.அவளது ஆடைகள்  அகற்றப்பட்டு இருந்ததால்,அவள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று  போலீசார் கருதினர்.
புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தாதன்குளத்தை சேர்ந்த சுப்பையா (35) என்ற ரவுடியை போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர்.விசாரணையின்போது மாணவி புனிதாவை கொன்றதை  சுப்பையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக சுப்பையா அளித்துள்ள வாக்குமூலத்தில்,"எனது சொந்த ஊர் மணியாச்சி  அருகே உள்ள பாறைகுட்டம். என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் போலீசார்  என்னை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த சில நாட்களாக  நெல்லையில் சுற்றி திரிந்தேன். எனது மனைவியின் வீடு தாதன்குளத்தில் உள்ளதால்  அங்கு சென்று தலைமறைவாக இருக்க நினைத்தேன்.

இதனால் கடந்த புதன்கிழமை மாலை நெல்லையில் நன்றாக மது குடித்து விட்டு  திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி தாதன்குளத்திற்கு சென்றேன்.அளவுக்கு அதிகமாக  மது குடித்திருந்ததால் தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் என்னால் நடக்க  முடிக்கமுடியவில்லை.இதனால் அங்கேயே படுத்து தூங்கி விட்டேன்இரவு முழுவதும்  ரயில் நிலையத்தில் தூங்கிய நான் மறு நாள் காலை எழுந்து எனது மனைவி வீட்டிற்கு  சென்றேன்.

தாதன்குளம் ரயில் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதி வழியாக செல்லும் போது அந்த  வழியாக மாணவி புனிதா நடந்து வந்தாள்.அவளை அங்குள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றேன்.  ஆனால் அவள் சத்தம் போட்டு அலறினாள்.இதனால் என்னால் அவளை பலாத்காரம்  செய்ய முடியவில்லை.

நடந்த விவரத்தை புனிதா வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயத்தில்,அவளை  துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு எனது மனைவி வீட்டிற்கு சென்று  விட்டேன்" என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 


மேலும் பலருக்கு தொடர்பு 


இதனிடையே இக்கொலையில் சுப்பையா மட்டுமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி மாணவி புனிதாவின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்,.

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்! 
Posted Date : 12:35 (22/12/2012)Last updated : 15:16 (22/12/2012)
புதுடெல்லி: மாணவி பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்து டெல்லியில் ஜனாதிபதி வீடு  முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியும் கலைத்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. 
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக்  கண்டித்தும்,பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு  தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் போராட்டம்  தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் போராட்டம் நடத்தியவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய  மேற்ப்பட்ட போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துன. 

இதனால் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார்  போராட்டக்காரர்களைக் கலைத்தனர். டெல்லி முழுவுதும் 5வது நாளாக பல்வேறு  அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள்  காயம்

போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகை செல்லும் பாதை  மூடப்பட்டது. தடியடி நடத்தினாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று  போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.தடியடில் பல மாணவ, மாணவியர்கள் காயமடைந்தனர்.  


போலீசார் தடியடி நடத்தியும் மாணவர்கள் கலையாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போலீசார் தடியடி நடத்தியது சிறிது கலைந்த மாணவர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இதனிடையே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,போராட்டக்காரர்களை சாந்தப்படுத்தும்  விதமாக, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  விதிக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி -விக்டன்




டெல்லி - குற்றம் நடந்தது என்ன? - மக்கள் கருத்து

ல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அறிந்து...  ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துள்ளது. 'குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்’ என்று நாடெங்கும் போராட்டம் நடக்கின்றன! 


தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லுரியில் பிசியோதெரபி படித்த 23 வயது மாணவி அவர். பொறியாளரான தனது நண்பருடன் கடந்த 16-ம் தேதி சினிமா பார்த்து விட்டு, இரவு 9.30 மணிக்கு முனிர்கா பேருந்து நிலையத்தில் நின்றார். ஒரு பேருந்து வந்து நிற்கவே, இருவரும் அதில் ஏறினர். உள்ளே இருந்தது மொத்தமே ஆறு பேர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரிடம், 'இந்த நேரத்தில் ஒரு பொண்ணுகூட என்னடா பண்ற?’ என்று மிரட்டி இருக்கிறார்கள். உடனே, அந்தப் பெண் குறுக்கிட்டு, 'நாங்கள் நண்பர்கள். படம் பார்த்துவிட்டு வருகிறோம்’ என்று சொல்லவும் 'நீ பேசாதடி’ என்று இரும்புக் கம்பியால் தாக்கி இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பரையும் தாக்கி பேருந்தில் இருந்து அவரை வெளியே தள்ளினர்.
அடுத்து அவர்கள் செய்த காரியங்கள் கொடூரத்தின் உச்சம். அந்த மாணவியை இரும்புக் கம்பியால் பல இடங்களிலும் தாக்கவே, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தார். வலியால் துடித்த பெண்ணை அந்தப் பேருந்துக்கு உள்ளேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மஹில்பூர் என்ற இடத்தில் உள்ள மேம் பாலத்தில் பேருந்தை நிறுத்தி, அலங்கோலமாக்கி விட்டு அந்த மாணவியை வெளியே வீசி இருக்கிறார்கள். இப்போது, அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்து​வ​மனையில் உயிருக்குப் போராடிக்​கொண்டிருக்கிறார். இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த இந்தச் சம் பவத்தைக் கண்​டித்து மொத்த நாடும் கனன்று கொண்டு இருக் கிறது.
இதுதொடர்பாக  வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம் சிங் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியது டெல்லி போலீஸ்,  அக்ஷய் குமார் மற்றும் ராஜு என்ற இரு​வரைத் தேடி​ வருவதாகக் கூறும் டெல்லி போலீஸார், வெளியிட்ட உண் மைகள் பகீர் ரகம்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 'யாதவ் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் பேருந்து, டெல் லியில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்களையும் மாணவர்​களை​யும் ஏற்றிச்செல்லும் கான்ட்ராக்ட் பேருந்து. ராம் சிங் என்பவர்தான் கடந்த 10 மாதங்களாக அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந் தார். 16-ம் தேதி மாலை தன் நண்பர்கள் நால்வர் மற்றும் தனது தம்பி முகேஷ§டன் சேர்ந்து மது அருந்தியவர், பேருந்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் போகலாம் என்று கிளம்பி இருக்கிறார். பேருந்துக்காக மாணவி தன் நண்பருடன் காத்திருப்பதைக் கண்டதும், பயணிகள் பேருந்தைப்போல் நிறுத்தி, அவர்களை ஏற்றிக் கொண்டனர். நண்பரை அடித்து வெளியே எறிந்து விட்டு, மாணவியைப் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை ஓட்டுனர் ராம் சிங் பலாத்காரம் செய்த போது, அவனுடைய தம்பி முகேஷ் பேருந்தை ஓட்டி இருக்கிறார். அந்த பஸ் கறுப்புக் கண்ணாடியுடன் இருந்ததால், உள்ளே நடந்த எதுவுமே வெளியில் யாருக்கும் தெரியவில்லை. மாணவியை வெளியே வீசிய பிறகு, பேருந்தை ஷெட்டுக்கு எடுத்துச்சென்று ரத்தக் கறைகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருக்கிறார்கள்.
மாணவி சேர்க்கப்பட்டுள்ள டெல்லி சப்தர்ஜிங் மருத்துவ மனையின் டாக்டர் பி.டி.அதானி, ''அந்த மாணவியின் உடலில் பல முக்கிய உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் செயற்கை சுவாசம்தான் அளித்து வருகிறோம். இதுவரை நான்கு அறுவைச் சிகிச்சைகள் செய்து இருக்கிறோம்.. இன்னும் சில அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல்நிலை இல்லை. அந்த ஆறு பேரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். அவரது அடிவயிறு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஐ.சி.யு-வில்தான் இருக்கிறார். இப்படி ஒரு மோசமான கேஸை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை'' எனக் கவலை தெரிவித்து இருக்கிறார்.


இந்த வழக்கை சூ-மோட்டாவாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ''மக்கள் உங்கள் மீது வைத் திருக்கும் நம்பிக்கையை இழந்து விட்டனர். சம்பந்தப்பட்ட பேருந்து டெல்லியில் அனுமதி இல்லாத கறுப்பு நிற ஸ்டிக்கர், ஜன்னல் துணிகளுடன் சென்று இருக்கிறது. இந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து போலீஸ் செக் பாயின்ட்களை பேருந்து கடந்துள்ளது. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?'' என்று, டெல்லி போலீஸாரைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது.


அனைத்துத் திசைகளில் இருந்தும் சரமாரியாகப் புகார்கள் குவியவே, ''கறுப்புக் கண்ணாடி, திரைகள் போட்டுள்ள பேருந் துகளை உடனே கண்காணித்து உரிமத்தை ரத்து செய்யுங்கள். இரவு ரோந்து போலீஸாரின் எண்ணிக்கையை பலப்படுத்துங்கள். புதிதாக ரோந்து வாகனங்களை வாங்குங்கள். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாரை நியமியுங்கள்'' என்று அடுக்கடுக்கான சட்டங்களை உள்துறை விதித்துள்ளது.
2012-ல் மட்டும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 635 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை தண்டனை பெற்றதோ ஒரே ஒருவர்தான்.

எங்கே போகிறது இந்தியா... அதுவும் தலைநகர்?

- ஆ.அலெக்ஸ்பாண்டியன்


நன்றி - ஜூ வி 




 மக்கள் கருத்து 




1. எல்லாம் சரி.இரவில்,அதுவும் நண்பருடன் அந்தப்பெண் ஏன் திரைப் படத்திற்கு செல்லவேன்டும்? குற்றவாளிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குற்றச்செயலில் ஈடுபட ஏன் வாய்ப்பு தர வேண்டும்? இதை யாருமே பேசமாட்டீர்களா?



2. இது பிரச்சனை ஒன்று மட்டுமே இந்தியாவின் தலையாய பிரச்சனை அல்ல என்று மார்க்கண்டேய கட்ஜீ கூறி இருப்பது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சனை அவருக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால்..... நெறியாளர் இதை வெளியிடுவார் என நம்புகிறேன்.



3. உணர்ச்சி வசப்படாமல் நடந்ததை திரும்பி பார்க்கவேண்டும்.

1. அது ரெகுலர் பஸ் கிடையாது.

2. அந்த பஸ்ஸில் ரூட் நம்பர் இல்லை. செல்லும் இடமும் போடவில்லை.

3. அதை ஓட்டியவர்கள் சீருடை அணியவில்லை.

4. வண்டியில் வேறு பயணிகள் இல்லை.

5. வண்டியில் விதிகளுக்கு புறம்பாக கருப்பு கண்ணாடி ஓட்டப்பட்டுள்ளது.

6. முன்பின் அறிமுகம் இல்லாத சிலர் வாகனத்தில் ஏற அழைப்பு விடுத்தால் ஏறலாமா?

7. இரவு சினிமாவிற்கு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு வழி செய்யாமல் படம் பார்க்கலாமா?

8. ஞாயிற்று கிழமை பஸ் எண்ணிக்கை பாதி தான்.

9. ஆட்டோவிற்கு நூறு ரூபாய். டாக்ஸியிற்கு முன்னூறு ரூபாய் பையில் இல்லாமல் ஒரு பெண் இரவு சினிமாவிற்கு செல்லலாமா?

10. டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பது தெரிந்தும் இப்படி ரிஸ்க் எடுக்கலாமா?

11. அந்த பெண்ணிற்கு நடந்தது கொடுமையே. அந்த பெண் குணமடைய நாம் கடவுளை வேண்டுவோம்.

12. அந்த கயவர்களுக்கு தக்க தண்டனை வேண்டும்.

13. இங்கு நியூ யார்க் தலை சிறந்த ஊர். ஆனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆண்களே சில இடத்திற்கு செல்ல மாட்டார்கள். சென்றால் பர்ஸோட சேர்த்து கிட்னியும் போய்விடும்.

14. பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். இடம் பொருள் நேரம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இது அனைவருக்கும் பொருந்தும்.




4. தயவு செய்து அந்த கயவர்களை சட்டென்று தூக்கில் போட்டுவிடாதீர்கள். தூக்கு தண்டணை எதிர்ப்பாளர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். கொஞ்ச நாள் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த கயவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை விடுவிக்க போராட ஆரம்பிப்பார்கள். உடனே நமது மென் மனதுக்காரர்கள் அவர்களை மன்னித்து விட முனைவார்கள். இவர்களுக்கெல்லாம், கோவையில் அந்த கைதிகளை அழைத்து சென்று என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது போல் செய்து விட வேண்டும். அதிலும் அனைவரையும் கொன்றுவிடக் கூடாது.......அடுத்தவர்கள் அந்த கொலை பயத்தில் சில நாட்களாவது இருந்து பின் சாகடிக்கப்பட வேண்டும். இப்போதைக்கு அவர்களின் விரல்களை மட்டும் வெட்டி விடலாம்.



5. கறுப்புக் கண்ணாடி, திரைகள் பேருந்துகளில் போடுவது குற்றம் செய்வதற்கு அல்ல வெயிலில் பயணம் செய்பவர்களுக்கு அவதிப்படாமல் பயணம் செய்வதற்க்கு அதை விலக்குவதால் சாதரன மக்களுக்கு மட்டுமே பாதிப்பு எம்பி, மந்திரி, டிப்பளமாட், அதிகாரிகள் எல்லாருக்கும் கண்ணாடி, திரைகள் உள்ள வண்டிகளில் தான் எப்பொழுதும் பயணம் செய்கிறார்கள். பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட்டால் குற்றங்கள் குறையும்.


6. இது மாதிரி ஆட்களுக்கு நம்ம சைலேந்திர பாபு தான் சரி.

இன்னொரு சந்தேகம்... ஒப்பந்த பேருந்துக்கும் சாதாரண பயணிகள் பேருந்துக்கும் வேறுபாடு கூடத் தெரியாமலா இந்த இருவரும் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்?


7. இந்தியாவுக்கு மானம்லா இருக்கா?

தருமபுரியில் 3 பெண்களை உயிரோடு கொளுத்திய தேசம் இது

பத்திரிக்கை அலுவலகத்திலே ஊழியர்களை கொளுத்திய தேசம் இது.

இது சூடு சொரணை அற்ற ஜட தேசம்.

இங்கு காசுக்கு மனசாட்சியை விற்று விட்டு , என் தலவன் சின்ன குற்றவாளி, உன் தலைவன் பெரிய குற்றவாளின்னு ஜால்ரா தட்டுற பயல்கள்தான் அதிகம்.



8. 635 வழக்குகளில் ஒருவர் மட்டுமே சிறிய தண்டனை அடைந்துள்ளார் - இதுதான் இத்தனை கொடுமைகளுக்கும் அடித்தளம். குற்றத்துக்கு தண்டனை கிடைக்காது, கிடைத்தாலும் பல வருடங்களாகும், அதுவும் ஒரு சிறிய தண்டனையாகவே இருக்கும் என்று குற்றவாளிகள் நினைப்பதுவே அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. ஆனால் நம்மால் ஏன் நீதிமன்றங்கள் வருடத்தில் 150 நாட்கள், தினமும் 3 மணி நேரம் என்ற அளவில் செயல்படுகின்றன, கணக்கில்லா வாய்தாக்கள் வழங்க எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று கேட்க முடியாமல் நீதிமன்ற அவமதிப்பு என்ற சட்டம். இந்தியா நாசமாவதில் மிக மிக மிக அதிகப் பங்கு நீதித்துறையையே சாரும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பற்றியே ஊழல் புகார்கள் வரும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.



9. ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நாஙகள் விழித்து க்கொள்வோம் என்பது நமக்கு வழக்கம் தானே.வெளி நாட்டு டூரிஸ்ட் கள் கதி கேக்கவே வேண்டாம். இந்தியா வரவே பயப்படும் நிலைதான்.



10. டெல்லிய்ல் ஒரு பெண் கொடூரப்படுத்தப்பட்டார் என்றவுடன் எல்லா ஊடகங்களும் தங்களுக்குஒரு ஸ்கூப் கிடைத்திவிட்டது என அதை வைத்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். நாடாளுமன்ரத்தையே முடக்குகின்றனர். பல்லாயிரம் உயிர்கள்( விவசாயிகள், கூலிகள், மீனவர்கள், சாதி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள்) செத்தபோது கண்டுகொள்ளவில்லையே.

பெங்களூர் நைட் கிளப்களால் மாணவிகள் சீரழியும் அபாயம் - டெக்கான் ஹெராலடு

Ruckus at hookah bar

Bangalore, Dec 15, 2012, DHNS :

Tense situation prevailed at a restaurant on Uttarahalli-Kengeri main road Saturday evening when members of a self-styled outfit barged into it and created a ruckus.

Members of a group ‘Karmikara Hitarakshana Trust’ entered Coffee Melange claiming that the restaurant was offering hookah with ganja and charas. They also pushed around the manager of the restaurant and threw away boxes of hookah.

Rajarajeshwari Nagar Police rushed to the spot and brought the situation under control. They later told Deccan Herald that the restaurant did not serve ganja or charas.

However, the restaurant was serving hookah with tobacco, they said. The police have served notices on the restaurant management and eight men and women for smoking in public place.

The police added that it was for the BBMP to act against hookah bars and the police had no powers to crack down on them as they were not illegal under the present laws.

BBMP had earlier adopted a resolution to ban Hookah bars in the City. However, this was challenged by the restaurants in the High Court.




மக்கள் கருத்து 



1.How can these things be let to happen andwhy is the police so docile.... Why is it no stern immediate and noticiable action taken. There should be zero tolerance towards anyone disturbing any private activity illegally.
Who are these goons and why are police so tolerant of these anti-social elements. if the police are seen as not taking stern and deterrent action it may wll lead to be believed that the police part of this......or it is orchastrated by police...
Incidents as these are unheard of in the Far Eastern countries and even in the Middle Eastern countries... this only happens in India



2. Karmikara Hitarakshana Trust is one among hundreds of other trusts in karnataka which hav come up only to make money and cover all der illegal activities ...i bet atleast half of all these activist have criminal records .....all they do is demand money from people if they deny they do all this which help dem gain publicity .....our media should stop supporting these activists n never show any of der useless protests on tv. 




3. This is bullshit! Police asking activist to vacate and register a petty case? This is a serious crime against the freedom of rights, destroying personal properties and threats. The "activists" should have been arrested and charged.There are too many vigilantes and moral police running amok in our country.



4. Don't these morons have nothing better to do?.. i mean if they think something is wrong they should inform the police.. just a bunch of self proclaimed activists.. Why is hookah being banned when cigarettes are so common in all public places.. If BBMP is concerned about the health of people, all tobacco products must be banned!!.. Oh wait, aren't they supposed to keep the city clean and protect our 'health'.. Let them do their primary function first!! 


நன்றி - டெக்கான் ஹெரால்டு 

சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 4

1.விலைவாசியை கட்டுப்படுத்துவேன்னு தலைவர் சொன்னதை மக்கள் நம்பலியே ஏன்?

தலைவர் சம்சாரத்தையே அவரால கட்டுப்படுத்த முடியலை. அவர் எங்கே விலைவாசியை கட்டு படுத்த போறார்?!

..............................
..............................

2.தலைவரோட பிரச்சாரத்தால மக்கள் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்களாமே?!

ஆமா, கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது எங்கள் ஆட்சியில்தான். அப்படின்னாரே!

....................................................................

3.ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் ஏன் மறுபடியும் போட்டியிடுறதில்லை.

ஏற்கனவே லவ் பொண்ணை ஏன் லவ் பண்ணனும்? புது ஃபிகரை ட்ரை பண்ணாத்தானே கிக்?!

............................................................................

4. அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைமை தமிழகத்தில் தேர்தல் கமிழனால் நிலவுதுன்னு தலைவர் சொல்றாரே ஏன்?!

பின்னே என்ன? பணப்பட்டுவாடா பண்ண முடில, கள்ள ஓட்டு போட முடில இது என்ன எலக்‌ஷன்?

.................................................................

5.தலைவருக்கு ஏகப்பட்ட மெயில் அனுப்பியும் அவரு கண்டுக்கவே இல்லையே.., ஒரு ரிப்ளையும் வர்லையே!

எப்படி வரும்? அவர் ஜெயில்ல இருக்கார்..., பெயிலே கிடைக்கலை! இதுல மெயில் எப்படி கிடைக்கும்?

........................................................................................

6. 2 தலைவர்களுக்குள்ளும் சண்டை. ஆனா, 2 பேரும் ஒரே மேடைல பிரச்சாரம் செய்வாங்கன்னு பிரச்சாரம் வருதே எப்படி?

காலைல இந்த தலைவர் பேசுவார். மாலைல அந்த தலைவர் பேசுவார்.


...............................................................

7. தொங்கு சட்டசபை உறுதியாமே?!

ஆமா, அரசியல் வாதிகளுக்கு சங்குதான்.


.........................................................

8.தலைவர் எதுக்காக ஒரு ஆளை மைக்ல ”நம்ம கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்”ன்னு டெய்லி சொல்ல வைக்குறார்?!

அந்த ஆள் பேரு மகேசன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்குறதால மகேசன் தீர்ப்பே மக்கள் தீர்ப்புன்னு உட்டாலக்கடி ஃப்ரூஃப் பண்ண நினைக்குறர்.

....................................................

9.மக்கள் கேட்ட கேள்வில தலைவர் தடுமாறிட்டாராமே!!

ஆமா.., இதுவரை நீங்க எத்தனை முறை கட்சி மாறி இருப்பீங்கன்னு கேட்டாங்க.

...........................................................

கூட்டணி விசயத்துல குட்ட குட்ட குனிய மாட்டோம்ன்னு தலைவர் சொல்லிட்டாரே?!

ஆமா, எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது.

-------
11. தலைவரோட தேர்தல் அறிக்கையினை பார்த்து மக்கள் மயக்கம் போட்டுட்டாங்களாமே!

ஆமா.., நாங்க ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை ஸ்விஸ் பேங்க்ல போய் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண தேவையில்லை. இந்தியாவிலேயே “பிளக்மணி பேங்க்” ஒண்ணு ஓப்பன் பண்ணி தரப்படும்ன்னாரே!

..............................
.....................................

12. சி.பி.ஐ ரொம்ப மேனர்ஸ் தெரிஞ்சவங்க போல..,

எப்படி சொல்றீங்க?!

ரெய்டு பண்ண வரவான்னு பெர்மிஷன் கேட்ட பிறகே வர்றாங்களே!

..................................................

13.தலைவரே! 234 தொகுதியிலயும் தனித்து போட்டின்னு சொன்னீங்களே.., ஏன் பேக் அடிச்சுட்டீங்க?!

அது தற்கொலை முயற்சிக்கு சமமானதுன்னு சொன்னாங்க. தற்கொலை முயற்சி சட்டப்படி குற்றாமாச்சே?!

...............................................


14. ஓட்டு போட பணம் வாங்க வேண்டாம்ன்னு தேர்தல் கமிசன் சொல்லுதே.. நீங்க ஏன் கேட்க மாட்டேங்குறீங்க?

சாரி எனக்கு சொல்புத்தி கிடையாது..., சுய புத்திதான் இருக்கு.

........................................

15. தலைவர் நிறைய பேசுவாரே! இப்போ சிபிஐ கிட்ட பேசறதே இல்லையே ஏன்?
அது ராஜ தந்திரம்.., இது ராசா தந்திரம்.

...................................................

16. பெண்களின் முதல் கடமை வீட்டில் இருந்தபடியே தன் கணவன், குழந்தைகளை கவனிப்பதுதான்னு தலைவர் சொல்றாரே அப்போ ஆண்களின் கடமை என்ன?

ஆஃபீஸுக்கும் போய்ட்டு மனைவி, குழந்தைகளை கவனிக்கனும்.

............................................

17. இது கோடைக்காலம் சூரியனின் ஆட்சி. அதனால உதயசூரியன்ம்தான் ஜெயிக்கும்ன்னு தலைவர் சொல்றாறே?!

இது இலையுதிர் காலம் இல்லை. அதனால் இரட்டை இலைதான் ஜெயிக்கும்ன்னு இன்னொரு தலைவர் சொல்றாரே?!

........................................................

18.விட்டா நாட்டையே வித்துடுவீங்கன்னு சிலர் சொல்றாங்களே தலவரே?

பொன் முட்டையிடும் வாத்தை யாராவது சேல்ஸ் பண்ணுவாங்களா?!

.............................................

19. எனக்கு ஊழல் செஞ்சு பழக்கமே இல்லைன்னு சொல்லி தலைவர் ஓட்டு கேட்குறரே?!

ஜெயிச்சா பழகிக்கிடுவார்,...,


.....................................

20. தலைவரே! வேலை வாங்கி தர்றதா சொல்லி ஒரு இளம்பெணை கற்பழிச்சுட்டதா உங்க மேல ஒரு குற்ற சாட்டு இருக்கே.

ஆமா., ரேப் பண்றதுன்னா சின்ன பொண்ணைத்தான் ரேப் பண்ண முடியும்? பின்ன வயசான பொண்ணையா ரேப் பண்ண முடியும்?!



---------------

கோர்ட்ட்டில் சசிகலா அசத்தல் , திணறினார் ஜட்ஜ் !!

http://www.thehindu.com/multimedia/dynamic/01305/20TH_SASIKALA_1305095f.jpgபெங்களூருவில் புது சசிகலா!

16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு​கொண்டே போகும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணா​வின் அதிரடிப் பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது. 


பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் கேள்வி கேட்டு முடிப்ப​தற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர்
போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரங்கேறிய‌ காட்சிகள் இங்கே...







பெங்களூரு குளிர் பிடிச்சிருக்கு! 


18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை, தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும் அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக் குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம். 



அதன்பிறகு, தன்னுடைய வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு, சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது, ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக் கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப் பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.


நீதிபதியின் திடீர் கேள்வி! 



கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம் பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார். 


வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை, சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார்.



 உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார். 



'அப்போ உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...


ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.


மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள் முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்வி​கள் என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே பதில் அளித்தார். 







பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’ என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில் இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு வந்திருந்ததை லாகவமாகப்‌ பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா அன்று இல்லை.  




'சுதாகரன்... இளவரசியா? ஐ டோன்ட் நோ!’ 



சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி​யான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை மூடிக்​கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார். 


ஆனாலும் நீதிபதி விடாமல் சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார் சசிகலா.



 இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட் பார்ட்னர் மட்டும்தான். சசிகலாவுக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.



மேலிடத்து உத்தரவு? 



மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னார் சசிகலா.


 ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர் ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால், எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார். 


அடுத்து நீதிபதி, 'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும், 'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள் தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப் பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’ நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார்.



 முதல் நாள் முடிவில் சசி கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.



அசமந்த வியாழன்! 


இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்​பட்டன. தயாரித்து வந்திருந்த 'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார் சசிகலா. 


நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக் கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள் தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’, 'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார். 




 நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில் சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில், தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.



இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.



பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்​களுக்கு ஹாயாக ஷாப்பிங் போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவித​மான வாட்சுகள், வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.



இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல் இருக்குமா?



- இரா.வினோத் 


அட்டை மற்றும் படங்கள்: ந.வசந்தகுமார்


நன்றி - ஜூ வி  

 http://i.ytimg.com/vi/kUfD48xbFF8/0.jpg



பெங்களூரு: ""மாதம், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக, சுப்பிரமணிய சாமி, பொய்யான புகார் கொடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்தார். கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்கு அதிக பணம் செலவழித்ததாக, போலீசார் தவறான தகவலை கூறியுள்ளனர்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சசிகலா பதிலளித்தார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 19ம் தேதி, 110, நேற்று முன்தினம், 82, நேற்று, 151 கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:05 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வந்தவுடன், கேள்வி கேட்கும் பணி துவங்கியது.

நீதிபதி: கொடநாடு டீ எஸ்டேட்டுக்கு, மின் சாதன பொருட்களை, 5.83 லட்ச ரூபாய்க்கு வாங்கினீர்களா?

சசிகலா: கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்காக, 2.48 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. போலீசார் மிகைபடுத்தி உள்ளனர்.

நீதிபதி: பையனூரில், 31.34 லட்ச ரூபாய் வீடு வாங்கினீர்களா?

சசிகலா: கட்டடமாகத்தான் வாங்கப்பட்டது. மின் சாதனம் பொருத்தவில்லை. பின்னர், சினிமா துறையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டது.

நீதிபதி: ஈக்காட்டுதாங்கல்லில், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்சுக்கு, 47 லட்சம் ரூபாய்க்கு மின் சாதனம் வாங்கினீர்களா?


சசிகலா: ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், வாடகைக்கு தான் இருந்தனர். ஆனால், நிறுவனத்தின் சொத்து என்று போலீசார் இணைத்துள்ளனர். மின் சாதனம் வாங்கப்பட்டது. சோதனை குறித்து எனக்கோ, கட்டட உரிமையாருக்கோ நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
\

நீதிபதி: போயஸ் கார்டனில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, மின் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: 1991-92ல், 2.62 லட்ச ரூபாய்க்கு, "ஹாலிடே ஸ்பாட்' வாங்கப்பட்டதா?

சசிகலா: இச்சொத்தை, சசி எண்டர்பிரைசஸ் வாங்கியது. 1990 ஏப்ரல், 23 ல், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது; மீதி தொகையும் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பங்கு தாரராக மட்டுமே இருந்தேன். மானேஜிங் டைரக்டரல்ல.

பின்னர், மதியம், 3:00 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன், விசாரணை தொடர்ந்தது.

நீதிபதி: வருமான வரி சரியாக செலுத்தினீர்களா? மார்பிள் மார்வல்ஸ் நிறுவனத்துக்கு வரி செலுத்தாதது ஏன்?

சசிகலா: ஆம். மார்பிள் நிறுவனத்தில் வருமானமில்லை.

நீதிபதி: ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறி, ஏராளமான சொத்துகள் சேர்த்துள்ளார் என்று, பார்லிமென்டில் புகார் செய்த சுப்பிரமணிய சாமி, இங்கு வழக்கு தொடர்ந்துள்ளாரே.

சசிகலா: பொய்யான புகாருடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி: 1995-96ல், உங்கள் நிறுவனங்கள், 36 போயஸ் கார்டன் என்ற முகவரியில் அலுவலகமாக செயல்பட்டதா?

சசிகலா: 36, போயஸ் கார்டனில், ஒரு பகுதி வீடாகவும், மற்றொரு பகுதி, அலுவலகமாகவும் செயல்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில், நீங்களும், சுதாகரனும் தங்கியிருந்தீர்களா?

சசிகலா: ஆமாம்.

நீதிபதி: நாதள்ளா தங்க நகை கடையில், 3 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து, 47 காரட் வைர நகைகள் வாங்கினீர்களா?

சசிகலா: 17 காரட் நகை தான் வாங்கினேன்.

நீதிபதி: 1996ல், ஜெயலலிதா, சசிகலா, உங்கள் உறவினர்களின் பெயரில், வங்கி டாக்குமெண்டுகளை, போலீஸ் அதிகாரி லத்திகா கைப்பற்றி விசாரணை நடத்தினாரா?

சசிகலா: சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. வாக்குமூலம் மட்டும் வாங்கினர். அதன் பின், விசாரணை நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது. இன்றுடன் கேள்விகள் முடிவடையும் என்று நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.



http://www.thehindu.com/multimedia/dynamic/00896/18TH_SASIKALA_896317e.jpg



பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 110

கேள்விகளுக்கு பதிலளித்தார்; இன்றும் விசாரணை தொடருகிறது."தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், டிச., 19ம் தேதி முதல், சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கும்' என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.இதுவரை, சசிகலாவிடம், 632 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 633 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி உத்தரவுபடி, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா, முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன் வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார் உட்பட, பலர் ஆஜராகினர்.

முற்பகல், 11:20 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக, தன் முன், நாற்காலியில் அமரும்படி சசிகலாவிடம் கூறினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், அதற்கு சசிகலா அளித்த பதிலும் வருமாறு:நீதிபதி: கல்வி தகுதி என்ன?சசிகலா: பத்தாம் வகுப்பு.நீதிபதி: ஆங்கிலம் தெரியுமா?சசிகலா: சரியாக தெரியாது.இதேபோன்று பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.சுதாகரனின் வங்கி பரிமாற்றம் பற்றிய கேள்விகளுக்கு, "தெரியாது' என்றே பதிலளித்தார். 



இது போன்று, இளவரசி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கும், "தெரியாது' என்று பதிலளித்தார்.மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "ஆமாம், தெரியாது' என்று பதிலளித்தார்.கேள்வி கேட்பது முடிவடையாததால், "வழக்கு விசாரணை இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும்' என்று, நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.முதன் முறையாக கேள்வி கேட்கும் பணிசிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பேற்ற பின், சொத்து குவிப்பு வழக்கில், முதன் முறையாக கேள்விகள் கேட்கும் பணியை துவக்கியுள்ளார்.

சசிகலா, நேற்று காலை, 11:20 மணியிலிருந்து மதியம், 1:45 மணி வரை, 82 கேள்விகளுக்கும், மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 28 கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் பதிலளிக்க வேண்டிய, 633 கேள்விகளில் நேற்று, 110 கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும், 523 கேள்விகள் மீதமுள்ளன.நேற்றைய விசாரணை முடிந்ததும், சசிகலா பெங்களூரிலேயே தங்கினார்.


பெங்களூரு: ""எனக்கு சொந்தமான, "வினோத் வீடியோ விஷன்' மூலம், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளின் மூலம், பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது,'' என்று சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிடம், கடந்த, 19ம் தேதியிலிருந்து கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 


 நேற்று முன்தினம், 110 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:00 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தவுடன் கேள்விகள் கேட்க துவங்கினார்.



 http://www.ndtv.com/news/images/story_page/Sasikala_in_court_295.jpg


நீதிபதி கேட்ட கேள்வியும், சசிகலா அளித்த பதிலும்:



நீதிபதி: பேக்ஸ் யூனிவர்சலுக்கு, லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதே.



சசிகலா: என் சார்பு நிறுவனம். வியாபார நிமித்தமாக செய்யப்பட்டுள்ளது.நீதிபதி: வங்கியில் கணக்கு தொடர, 36, போயஸ் கார்டன், சென்னை முகவரியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதில் வசிக்கிறீர்களா?



சசிகலா: வங்கியில் கணக்கு துவங்கும் போது, அந்த முகவரியில் இருந்தேன்.




நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் ஜெயலலிதா, சுதாகரன் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதே.



சசிகலா: சசி எண்டர்பிரைசஸில், அவர்கள் இருவரும் பங்குதாரர்கள்.நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர்., நிறுவனங்களிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. 





உங்களுக்கும், அந்த நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு.



சசிகலா: நிறுவனங்களில் பங்குதாரர்.



நீதிபதி: உங்களது வங்கி கணக்கிற்கு, ராம் விஜயன் என்பவர், பல லட்சம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளாரே.



சசிகலா: கடந்த, 1996ல் வினோத் வீடியோ விஷனை, நான் துவக்கினேன். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை, நிறுவன பொறுப்பாளரான ராம் விஜயன், என் வங்கி கணக்கில் செலுத்துவார். இது மட்டுமின்றி, எனக்கு சொந்தமான, இரும்பு மாடி படிகள், கேட் கிரில்கள், இரும்பு சேர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் உள்ளது. இதில் கிடைக்கும் பணத்தையும் செலுத்துவார்.



நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ், ஜெயா எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யூனிவர்சல் ஆகிய நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதில், யார், யார் பங்குதாரர்கள்?




சசிகலா: இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பு நிறுவனங்கள். ஜெயலலிதா, நான் (சசிகலா), சுதாகரன், இளவரசி, திவாகர், தினகரன் ஆகியோர் பங்குதாரர்கள்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸிலிருந்து, சுதாகரன், இளவரசி, ஜெயலலிதா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு, பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.




சசிகலா: அனைவரும் நிறுவன பங்குதாரர்கள்.



பல கேள்விகளுக்கு, "இருக்கலாம்' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, "ஞாபகமில்லை' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, எழுத்து பூர்வமாக எழுதி கொடுப்பதாகவும் பதிலளித்தார்.விசாரணை இன்று தொடர்வதால், சசிகலா பெங்களூருவில் தங்கி உள்ளார். இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.


 நன்றி - தினமல்ர்

Friday, December 21, 2012

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.starmusiq.com/movieimages/Sattam-Oru-Iruttarai_B.jpg

ஹீரோயின் ஒரு கொலையை நேர்ல பார்த்துடறா,வில்லன்க 3 பேரும் அவளைப்போட்டுத்தள்ளிடறாங்க. ஆனா அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியல . ஆல்ரெடி அவங்க ஜெயிலுக்குள்ளே இருந்த மாதிரி பொய் ரெக்கார்டு வெச்சிருக்காங்க .அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஹீரோ எப்படி பழிக்குப்பழி வாங்கறார் என்ற புளிச்சுப்போன மாவில் பழைய மொந்தையில் புதிய கள்ளு  ஃபார்முலா படி  விஜய்காந்த் எஸ் ஏ சி கூட்டணியின் பழைய படத்தை இப்போ ரீமேக் பண்ணி இழுக்கறாங்க சாரி ரீமேக் பண்ணி இருக்காங்க..

ஹீரோவா தமன். இவர் லவ் சப்ஜெக்ட் எல்லாம் 10 பண்ணிட்டு அப்புறமா இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் பண்ரது நல்லது. ஏன்னா  அதுக்கு எல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும். சிறு புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு . மற்றபடி காதல் காட்சிகளில் ஓக்கே .


 ஹீரோயின் நெம்பர் ஒன்னா சுருட்டை கூந்தல் அழகி பியா. இவர் மேக்கப் இல்லாமயே ரொம்ப அழகான சிரிப்பழகிதான் , ஆனா இதுல மேக்கப் , ஹேர் ஸ்டைல் சொதப்பல் . படம் பூரா அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒரே ஒரு ஷார்ட்ஸ் , டி சர்ட் மட்டும் தான் ..


  ஹீரோயின் நெம்பர் டூ வா பிந்து மாதவி . இவருக்கு பிளஸ் என்னன்னா இவருக்கு மேல் உதடை விட கீழ் உதடு  ஒரே ஒரு செ மீ அகலம் அதிகம். லிப்ஸ்டிக் போடாமயே இலஞ்சிவப்பு , ஆனா மெரூன் கலர் லிப்ஸ்டிக் போட்டு படுத்தறாங்க


 அடுத்து திமிறும் காட்டாறு , உருமும் குதிரை  ரீமா சென் . போலீஸ் ஆஃபீசரா வர்றார். கெத்து ஓக்கே ,  விஜயசாந்தி கம்பீரத்துல பாதி கூட வர்லை

http://tamilmaxs.com/wp-content/gallery/actress-piaa-latest-hot-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch/piaa-hot-spicy-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch-1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. உயிரே உயிரே உன்னை ஒரு வரம் கேட்கிறேன் அழகான மெலோடி நல்ல பிக்சரைசேஷன் , ஒளிப்பதிவு , லொக்கேஷன்ஸ்  எல்லாம் அழகு



2. படத்துல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஃபிகருங்க ( அதுல 1 ஆண்ட்டி ) ளை வளைச்சு போட்டது . பிந்து + பியா 2 பேரையும் படம் பூரா நல்லா வேளை வாங்குனது  ( நடிப்பில் அல்ல )


3. படத்துக்கு தேவை இருக்கோ இல்லையோ ஒரு லிப் கிஸ் டூ பிந்து மாதவி

இளைய தளபதி அருகில் இருப்பது படத்தின் இயக்குநர்

http://haihoi.com/Channels/cine_gallery/sattam-oru-iruttarai-movie-onlocaton14_S_162.jpg



 இயக்குநரிடம் பல சரமாறி கேள்விகள்



1. ஹீரோயினை வில்லன்க 3 பேரும் கார்ல அடிச்சுட்டு போறாங்க, அப்போ ஹீரோ ஐஸ் க்ரீம்கடைல ஐஸ் வாங்கிட்டு இருக்கார். கடைக்காரர் சொல்லித்தான் ஹீரோவே கொலையைப்பார்க்கறார். அவர் போய் ஹீரோயினைப்பார்த்து அழுது 3 நிமிஷத்துக்குள்ள கார் பறந்திருக்கனும், ஆனா 4 நிமிஷம் கழிச்சு ஒரு வில்லன் “ டேய், அவ என்ன ஆனா?னு பாரு?” அப்டினு சொல்ல  3 பேரும் எதுக்கு அங்கே பார்த்து தங்களை ஹீரோவுக்கு அடையாளம் காட்டறாங்க?வந்தமா? கார்ல இடிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கறதுதானே? கேனங்க மாதிரி தங்கள் முகத்தை ஏன் காட்டனும்?



2. வில்லன் பாட்டுக்கு  துரை  தயாநிதி மாதிரி தலைமறைவா ஃபாரீன்லயே இருந்தா ஹீரோவுக்கு அவன் எங்கே இருக்கான்னே தெரியாது . பேக்கு மாதிரி வில்லன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு வர்றார்  “ எமனுக்கு இன்விடேஷன் தர்ற முத ஆள் நீதான்” அப்டினு சவடால் பேசி லூஸ் மாதிரி இங்கே வந்து உயிரை விடறார்.. ஹய்யோ அய்யோ



3. போலீஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கும் ஈரோடு  மகேஷ் , பிந்து மாதவி 2 பேரும் ஆக்சுவலி பம்மிட்டு இருக்கனும், ஆனா பிந்து சொல்லுது “ நீ ஆம்பளையா இருந்தா எங்க காலேஜ் பக்கம் வந்து பாரு” இப்படி சொல்லிட்டு ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேசனை  விட்டு வெளீல போயிட முடியுமா? இப்போ ரேப் சீசன் வேற .மகேஷ் காமெடிங்கற பேர்ல போலீஸை கலாய்ப்பது படு கேவலம் , இப்படி எல்லாம் நிஜத்துல நடந்தா லாடம் கட்டிடுவாங்க




4. ஒரு சீன்ல ஈரோடு மகேஷ் போலீஸ் கமிஷனர்ட்ட

“ சார் , உங்களுக்கு ஒயிஃப் இருக்கா?

இருக்கு ஏன்?

 ஒயிஃபை கூட்டிக்கொடுப்பதும் ,  நண்பனைக்காடிக்குடுப்பதும் ஒண்ணுதான்

 அப்டினு பஞ்ச் டயலாக் பேசி ஹாயா வெளீல வந்துடறார். போலீஸ் கமிஷனர் தேமேன்னு பார்த்துட்டு இருக்கார் . சென்சார்ல எப்படி விட்டாங்க? கைதட்டல் வரும்னு நினைச்சாங்க போல.. ஒரு பய கண்டுக்கலை



5. லாக்கப் ரூம்;ல  ராதாரவி & கோ சீட்டு விளையாடிட்டு இருக்காங்க, அப்போ கமிஷனர்   & போலீஸ் பட்டாளமே வருது , யாரும் எந்திரிச்சு நிக்கலை. போலீஸும் என்னப்பா விளையாடிட்டு இருக்கீங்க?ன்னு கேட்கலை



6. கொலையாளையை பியா ஃபோட்டோ எடுக்குது.  ஆனா டி வி ல  அவர்  எடுத்த வீடியோ காட்சின்னு ஒளிபரப்பறாங்க. அடுத்த சீன்ல யே வில்லன் “ அவ ஃபோட்டோதானே எடுத்தா? ஒரு ம... ரும் புடுங்க முடியாதுங்கறார், அதுக்கு அடுத்த சீன்ல ஹீரோ  வீடியோ அப்டிங்கறார், எடிட்டிங்க்ல கூட கவனிக்கலையா?



7. பியா தன் பாய் ஃபிரண்ட்னு முதல் முதலா ஹீரோவை தன் அக்கா கிட்டே அறிமுகம் பண்றா , முதன் முதலா  ஹீரோவைப்பார்க்கும் பியாவின்  அக்கா ஸ்வீட் பாய்னு ஹீரோ முகத்தை தடவிக்குடுக்குது , எதிர்ல்யே  அக்கா புருஷன் மிக்சர் சாப்பிட்டுட்டு நிக்கறாரு  ஹய்யோ அய்யோ



8. ஹீரோ ஹீரோயினை  ஃபாரீன்ல மீட் பண்றார். நீ யார்? எதுக்கு  நாலஞ்சு டைம் என் லைன்ல யே கிராஸ் பண்றே? அப்டினு ஹீரோயின் கேட்டதும்  ஹீரோ விதி நம்ம தலை விதி நாம லவ் பண்ணனும்னு இருக்குன்னு உளர்றாரு, அதுக்கு அந்த பதி விரதை சொல்லுது “ ஓக்கே இதே ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்ல காலைல இருந்து மாலை வரை ரவுண்ட் அடிப்போம் , எதேச்சையா நாம மீட் பண்ணிக்கிட்டா லவ் க்கு ஓக்கேன்னு கெக்கே பிக்கேக்கேன்னு இளிச்சுக்கிட்டு சொல்லுது. அதே போல் மீட் பண்றாங்க , அந்த கேனம் தன் மோதிரத்தை கழட்டி ஹீரோவுக்கு போட்டு விட்டு  கி கி ந்னு இளிக்குது,.இதான் லவ்வா? ஹய்யோ


9 ஹீரோயின் ஒல்லி , அவங்க மோதிர விரல்ல போட்டிருக்கும் மோதிரம் பாடியா இருக்கும் ஹீரோ சுண்டு விரல்ல கூட பொருந்தாது , ஆனா க்ளோசப்ல காட்டறாங்க  , கனகச்சிதமா நாஞ்சில் , அதிமுக மாதிரி பின்னிப்பிணைஞ்சிருக்கு , எப்படி?


10. ஹீரோ 2 வதா ஒரு கொலை பண்ணிட்டு ஹேரே போச்சுன்னு போய்ட்டே இருக்கறதுதானே? எதுக்கு லூஸ் மாதிரி போலீஸ்க்கு ஃபோன் பண்ணி லொக்கேஷன் சொல்லி மாட்டிக்கறார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956_033.jpg


11. ஹீரோவோட நண்பர்கள் 3 பேரும் ஹீரோவுக்கு முன்னாலயே ஹீரோயின் அங்கத்தை ஸ்டெப் ஸ்டெப்பா வர்ணிக்கறாங்க. என்ன கண்றாவிக்காதல் இது? கேனம் மாதிரி எல்லாரும் சிரிக்கறாங்க ஹீரோயின்க்கு கூச்சம்கிடையாதா? ஹீரோ தமிழனா? ஃபாரீனரா?



12. வில்லனை அரெஸ்ட் பண்ணும் போலீஸ்  ஏன் அவர் கிட்டே இருக்கும் செல் ஃபோனை கைப்பற்றலை? ஃபோனை ஆஃப் பண்ணச்சொல்லவும் இல்லை.. போலீஸ் ஒரு கைதியை  ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது அவன் கிட்டே செல் ஃபோன் எல்லாம் விட்டு வைக்க மாட்டாங்க , போலீஸ் எதிரேயே அவன் செல் ஃபோன் எடுத்து பேசறான்



13. ஓப்பனிங்க் ஷாட்ல கொலை நடந்த இடத்தை பார்வையிட வரும் ரீமா சென் அங்கே இருக்கும் எஸ் ஐ கிட்டே அங்கே ஒரு கார் இருக்கே? அது யாரோடது? அப்டினு கேட்டபின் அந்த எஸ் ஐ பக்கத்துல நிக்கும் ஆசாமியிடம் அந்த கார் யாரோடதுன்னு கேட்கறார், அவருக்கு சொந்தமா கிட்னி நஹி?


14. ஹீரோ ஜிம்முக்குப்போறேன்னு சொல்லிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டுப்போறார் ஹய்யோ அய்யோ



15. வில்லன் சுரேஷ்க்கு பவர் கண்ணாடியை பிடுங்கிட்டதும் அவர்க்கு கண் மங்கலாத்தெரியுது, சுத்தமா பார்வையெல்லாம் போகலை. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னா மேட்டர் ஓவர் , அவர் ஏன் கேனம் மாதிரி ரோட்டை கிராஸ் பண்ணி வாகனங்கள் மேல மோதிக்கறார்?


16. அசிஸ்டெண்ட் கமிஷனர் கொலை நடந்த இடத்துக்கு வந்ததும் மீடியா கிட்டே “ அது விபத்து இல்லை கொலைன்னு பேட்டி தர்றார். அவர் இன்னும் இன்வெஸ்டிகேஷனே ஆரம்பிக்கலை அதுக்குள்ளே யாராவது லூஸ் டாக் விடுவாங்களா?


17. வாட் டூ யூ திங்க் அபவுட் மீ?

 நத்திங்க்

 இதே கான்வர்சேஷன் படத்துல ஹீரோ & ஹீரோயின் 13 டைம் பேசிக்கறாங்க, செம போர்



18. ஈரோடுமகேஷ் 1980ல வந்த SMS  ஜோகஸை சாரி மொக்கைகளை எல்லாம் சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு அம்மா தாங்க முடியல  . விகரமனின் சென்னைக்காதல்ல இப்படித்தான் கோவை குணா சொதப்பினார்.  ஈரோடு மகேஷ் மதுரை முத்து கிட்டே இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அவர் அப்பப்ப பத்திரிகக்கைகள்ல வர்ற அடுத்தவங்க ஜோக்ஸ் எல்லாம் மனப்பாடம் பண்ணி தன்னுது மாதிரியே சன் டி வி ல சண்டே காலை 10.30க்கு சுடச்சுட அப்டேட் பண்ணிடுவார், ஆனா மகேஷ் இன்னும் பழைய மொக்கைகளையே ஒப்பேத்துனா எப்படி?

http://g.ahan.in/tamil/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20Stills/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20(49).jpg



19. ஈரோடு மகேஷ் படத்துல  மொத்தம் 7 இடத்துல ஜோக் அடிக்கறார்.  ஒரு நமீதா சோற்றுக்கு ஒரு இலியானா பதம்கற மாதிரி ஒரு சாம்ப்பிள்

 ஹேய், ஹேப்பி தீபாவளி மாப்ளை

 டேய், இது பர்த் டே பார்ட்டிடா.. ஹேப்பி பர்த் டேன்னு சொல்லனும்


 ஹே ஹே ஹே ஹ்ய்ய்  அப்படியா ஹேப்பி பர்த் டே ஹே ஹே

 அப்டினு என்னமோ செம ஜோக் சொன்ன மாதிரி இவரே சிரிச்சுக்கறாரு


20 . ஹீரோவோட ஃபிளாஸ் பேக் கதை போலீஸ் ஆஃபீசர்  ரீமாவுக்கு ஆல்ரெடி தெரியும், ஆனா வில்லன்க 2 பேர் கொலை செய்யப்பட்டப்ப அவருக்கு தன் தம்பி மேல டவுட்டே வர்லை, ஆனா அவருக்கு கீழே ஒர்க் பண்ணும்  சாதா போலீஸ்க்கு டவுட் வருது ம் எபப்டி?




21. கொலையை நேரில் பார்த்த 2 ஹையர் ஆஃபீசர் இருக்கும்போது , ஹீரோ ஜெயில்ல இருந்ததா ஜெயிலர் சொல்லும் சாட்சி எப்படி செல்லுபடியாகும்? இது எப்படி இருக்குன்னா சி எம் ஜெ  ஒரு  கவர்னர் 2 பேரும் ஒரு அரசாணை வெளியிடும்போது டம்மி பீஸ்  ஓ பி எஸ் “ இது செல்லாது”ன்னு சொல்ற மாதிரி இருக்கு



22. ஹீரோவோட முதல் லவ்வர் கொலை செய்யப்ப்டறா. அடுத்த லவ்க்கு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கூடவா எடுத்துக்கக்கூடாது ? கிடைச்சா போதும்னு 2 வதுக்கு ஆள் ரெடி பண்றாரே? எப்படி? ஒரு சீன்ல கூட அவர் சோகமாவே இல்லையே? 

http://mimg.sulekha.com/tamil/sattam-oru-iruttarai/events/sattam-oru-iruttarai-movie-teaser-launch/sattam-oru-iruttarai-movie-teaser-launch-photos073.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. பசங்களோட சேர்ந்து நீயும் பீர் குடிக்கறியே , இது உனக்கே நல்லாருக்கா?

 எஸ் , நல்லாருக்கே?


 ஷட்டப்



2.  புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணு பின்னால பொன ஆணும் பிழைக்க சான்ஸே இல்லை  ( 1989 எஸ் எம் எஸ் ஜோக்)





3.  ஏய்! என் செல் ஃபோன்ல சார்ஜ் இல்லை, சார்ஜ் ஏத்தித்தர்றியாடா?

 நான் சார்ஜ் ஏத்தினா ஏடாகூடம் ஆகிடும் ( டபுள் மீனிங்க் )




4. பசங்க மனசு ரஜினி மாதிரி , சொல்றதைத்தான் செய்யும் , செய்ய்றதைத்தான் சொல்லும், ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி  அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ( 2001 எஸ் எம் எஸ் ஜோக் )



 5.  என்னடா ஜிம் பாடின்னே , டெட் பாடி வந்திருக்கு ?  ( மவுலி யின் நாடக வசனம் )



6. உங்க தியேட்டர்ல மெயின் கேட் தவிர வேற ஏதாவது வழி இருக்கா?

 நோ மேடம், நீங்க சொன்னா இனிமே வேணா ஏற்பாடு பண்ணிடறேன் ( படத்தில் உள்ள ஒரிஜினல் ஒரே ஒரு ஜோக் இதுதான் )



7 . என்னடா , லவ் ஸ்டோரியை விளம்பரம் மாதிரி சுருக்கீட்டே?



http://southfilms.in/wp-content/gallery/sattam-oru-iruttarai-movie-stills/sattam-oru-iruttarai-movie-stills-9.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங் - 2.5 /5



சி.பி கமெண்ட் -  இந்த மாதிரி குப்பைப்படங்களை பார்க்காம இருப்பது உங்க டைம்க்கு, பர்சுக்கும் நல்லது. இந்த மக்கிய குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/12/Bindu-Madhavi-Hot-Photos-At-Sattam-Oru-Iruttarai-Movie-Audio-Launch-12.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 21.12.2012 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

http://cutmirchi.com/upimages/1354632755_A9RzsaOCAAEdRna.jpg_large.jpg 

 

1. சட்டம் ஒரு இருட்டறை-எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, "சட்டம் ஒரு  இருட்டறை படத்தை, தற்போது, இளம் இயக்குனர் சினேகா பிரிட்டோ, "ரீ-மேக் செய்கிறார். படத்துக்கு, "தோழன் என, பெயர் வைக்க முடிவு செய்து, அதை சேம்பரிலும் பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால்,"சட்டம் ஒரு இருட்டறை தலைப்பே, கதைக்கு பொருத்தமாக இருக்கும் என, மீண்டும் பழைய தலைப்பையே வைத்து, படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 

ரீமாசென், பியா பாஜ்பாய், பிந்து மாதவி, தமன் ஆகியோர் நடித்துள்ள ‘சட்டம் ஒரு இருட்டறை’ படமும் 21-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை இளம் இயக்குனரான சினேகா பிரிட்டோ இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி ஆவார்.

30 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சட்டம் ஒரு இருட்டறை’ மீண்டும் புது வடிவில் தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் வெளியிடப்பட்டு ஹிட்டாகி உள்ளன. 

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. சீமான், சத்யராஜ், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சட்டப்படி குற்றம்’ என்ற படமும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக் தான் என பேசப்பட்டாலும் அதை பற்றிய உறுதியான தகவல் வெளிவரவில்லை. 

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் முதலில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தை மறுபடியும் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திகா, ரீமாசென், பியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. 

ஆனால் திடீரென்று படத்தின் இயக்குனர் ஹீரோவை மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறாராம். கையெழுத்து போடுவதற்கு முன் நூறு முறை யோசித்துவிட்டு கையெழுத்து போடும் நடிகை கார்த்திகா, ஹீரோ ரோலில் நடிப்பவரை பொருத்து தான் நான் நடிப்பதும் நடிக்காததும் என முன்னரே கூறியிருந்தார். 

இப்போது திடீரென ஹீரோ மாற்றப்பட்டுவிட்டதால், கார்த்திகாவும் படத்தில் இருந்து விலகப்போகிறாராம். மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் என அனைத்து தேர்வுகளும் செய்து படக்குழுவிடமிருந்து அறிவிப்பு வரவேண்டும். 

சட்டம் வெளிச்சத்திற்கு வருகிறதோ இல்லையோ! இந்த படம் வெளிச்சத்திற்கு வர அதிக நாட்கள் ஆகலாம்.
ஈரோடு தேவி அபிராமியில் ,அன்னபூரணியில்  ரிலீஸ் 


சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_9775.html

 

 http://www.tamil.cinebuzzz.com/img_articles/1103b.jpg
2.கள்ளத்துப்பாக்கி  -கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கே.சி.ரவிதேவன். இவர் இயக்கி உள்ள படம் கள்ளத்துப்பாக்கி. தமிழ் செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.கே.பாலச்சந்திரன் இசை அமைத்துள்ளார். வேலை வெட்டி இல்லாமல் திரியும்.  5 சிறுவர்களிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தின் பெயரை பயன்படுத்த கூடாது. அதில் எங்கள் படத்தின் தலைப்பான துப்பாக்கி உள்ளது. என்று இயக்குனர் பிரச்னையை கிளப்பினார். இது தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக சமாதானத்தில் முடிந்தது. இருந்தாலும் கோபம் தீராத இயக்குனர். துப்பாக்கி வெளியாகும் தீபாவளி அன்றே தன் படத்தையும் வெளியிடுவது என்று விளம்பரங்கள் செய்து வந்தார். இந்த நிலையில் படத்துக்கு அடுத்த பிரச்னை வந்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர். படம் வன்முறை நிறைந்ததாக இருக்கிறது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதனால் கள்ளத்துப்பாக்கி தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவிதேன் கூறியதாவது, கூலிக்காக கொலை செய்வதுதான் படத்தின் கதை களம். ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர், செருப்பு தைப்பவர்களில் சிலர் கூலிக்காக கொலை செய்வர்கள் கொலை செய்யப்படுபவர் யார், யாருக்காக கொலை செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு கடமை போல செய்து விட்டு வருவார்கள். இதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறோம். 
இதுபோன்ற படங்கள் இந்தியில் நிறைய வந்திருக்கிறது. ஆனால் இதை அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதற்கு பின்னால் யாருடைய சதியும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பத்திருக்கிறோம். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றம் வரை சென்றாவது படத்தை வெளியிட்டே தீருவோம் என்றார்.

கள்ளத்துப்பாக்கி என்றாலும் சிக்கல் அப்படி பெயர் வைத்தாலுமா சிக்கல்....?!
கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயா‌ரித்து வருகிறார். இவர்கள் கள்ளத்துப்பாக்கி டைட்டிலை 2009 சேம்ப‌ரில் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வருடம் துப்பாக்கி என்ற பெய‌ரில் விஜய் படம் தொடங்கப்பட்டது. அப்போதே கள்ளத்துப்பாக்கி குழு சேம்ப‌ரில் இது குறித்து புகார் செய்ததாக‌த் தெ‌ரிகிறது.


துப்பாக்கியின் போஸ்டர்கள் வெளிவந்த போது கள்ளத்துப்பாக்கி குழுவினர் கடுப்பாயினர். காரணம் அவர்களின் எழுத்துப் போலவே துப்பாக்கியின் எழுத்தையும் வடிவமைத்திருந்தனர். புகார் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போனது. அங்கு தலைவராக இதற்கு தீர்ப்பு கூறும் இடத்தில் இருந்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். தீர்ப்பு கூறப்படாமல் புகார் நேரடியாக குப்பை கூடைக்குப் போனது.


மனம் தளராத கள்ளத்துப்பாக்கி குழு நீதிமன்றத்தை அணுகியது. அவர்களின் மனுவை விசா‌ரித்த நீதிபதி துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஆக துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி வென்றுள்ளது.


கள்ளத்துப்பாக்கி டீமுக்கு ஒரு கேள்வி. எழுத்து ஒரே மாதி‌ரி இருக்கிறது என்று ராயல்டி உ‌ரிமைக்கு நீதிமன்றம் போன நீங்கள் உங்கள் போஸ்டர் டிசைனில் சிட்டி ஆஃப் காட் படத்தின் போஸ்டர் டிசைனை அப்பட்டமாக காப்பி அடித்திருப்பது நியாயமா?

ஈரோடு  ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 

 

 

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/93/DABANGG_2_Poster.jpg/220px-DABANGG_2_Poster.jpg

 

3. Dabangg 2 - சல்மான் கான் - சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான தபாங் சூப்பர் டூப்பர் ஹிட். படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானதுமே சல்மான், தபாங் பார்ட் 2 எடுக்கப்படும் என கூறியிருந்தார்.


ஆனால் அதன் பிறகு அறுவை சிகிச்சை, ஓய்வு, ஏக் தா டைகர் படப்பிடிப்பு என அடுத்தடுத்து பிசியாக இருந்தததால் தபாங்2 கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்ரீனாவுடன் அவர் நடித்த ஏக் தா டைகர் திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆன பின்இப்போது தபாங் 2 ரெடி ஆனது

 

இந்த மாதம் 21 ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகும் சல்மான்கானின் ‘தபாங் 2′ படத்தின் டிரைலரே இந்தியாவை உலுக்கி விட, அடுத்து சல்மானுக்காக கரீனா கபூர் ஆடிக்கொடுத்த ‘ஃபெவிகால் சே’ ஐட்டம் நம்பர் பாடல் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

உடை விட்டுக் கொடுக்க, இடை முட்டுக் கொடுக்க கரீனாவின் அட்டகாச நடனத்தை வீடியோவில் பலர் கண்டு களித்தனர். iiஈரோடு அண்ணாவில் ரிலீஸ்

Dabang 2 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2012/12/dabang-2.html

 

 


http://wallpapers.oneindia.in/d/367110-2/sarcoharu-wallpaper-01.jpg

4. Sarocharu - Mass Maharaja Ravi Teja Sarocharu has hit the big-screens on today on December 21. Kajal Agarwal and Richa Gangopadhyay have paired up with Ravi Teja in the movie directed by Parasuram.


Priyanka Dutt has produced the movie under Three Angels Studio banner with musical scores by Devi Sri Prasad. Ravi Teja haven’t had a hit from long time with several flops Devudu Chesina Manushulu, Nippu and ‘Daruvu failing to score a hit. However, Sarocharu is releasing with minimal publicity.


Along with Sarocharu, Vikram Prabhu’s Telugu dubbed Tamil movie Gajaraju has also hit the big-screens. The film is doing quite well at Kollywood Box-Office which was released a week ago and let’s wait to see how the movie fares.

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, கோவை ப்ரூக் ஃபீல்டு ரிலீஸ் 

 

 

 

நன்றி - தினமல்ர், தினமணி,. மாலைமலர் மற்றும் அனைத்து சினிமா தளங்கள்