Saturday, December 08, 2012

பாட்டாளி சொந்தங்களே! - மருத்துவர் ச. ராமதாஸ் - சுய சரிதை - பாகம் 2

பாட்டாளி சொந்தங்களே!

பிரம்படி தெரியும்... பாலர் அடி தெரியுமா?

மருத்துவர் . ராமதாஸ்

என்னுடைய தாத்தாக்கள் எங்கள் ஊரில் பிரதானமாக இருக்கின்ற ஏரிக்கரை அரச மரத்தின் கீழே உள்ள ஒரு மிகப்பெரிய மேடையில் அமர்ந்துகொண்டு ஊர்ப் பஞ்சாயத்து சொல்லுவது வழக்கம். அவர்கள் இருவரும் காவி வேட்டியே கட்டியிருந்ததாகவும், அந்த ஊரில் உள்ளவர்களுக்கு எழுத்தறிவித்ததாகவும், தம் பெற்றோரிடமே தான் படித்ததாகவும் என்னுடைய அப்பா அவருடைய அப்பாவைப் பற்றி அந்த இரட்டைச் சகோதரர்களைப் பற்றி நிறைய சொல்லக் கேட்டு நான் வாய் பிளந்து நிற்பேன். ‘வாத்தியார் குடும்பம்என்ற பெயர் எங்கள் குடும்பத்துக்கு அடையாளமாக இருந்தது. அந்த வகையில் என்னுடைய அப்பாவையும் ஊர் மக்கள்வாத்தியார்என்றும் என்னைவாத்தியார் பையன்என்றும் கூப்பிடத் தொடங்கினார்கள்.
எனக்கு நான்கு வயதிருக்கும். அந்த இளமைப் பருவத்தில் என்னுடைய தந்தையார் என்னை அழைத்துக் கொண்டு போய் எங்கள் ஊரிலிருந்தமொளவுக் கவுண்டர்என்ற ஆசிரியரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்கச் சேர்த்தார்.
விஜயதசமி அன்று பிள்ளைகளைக் கொண்டு வந்து பள்ளியில் சேர்க்கும்போது ஒவ்வொரு பெற்றோரும் மறக்காமல் ஒரு மந்திரத்தை ஆசிரியரிடம் சொல்லிவிட்டுப் போவார்கள். ‘படிக்கலன்னா கண்ணு ரெண்டையும் விட்டு விட்டு தோலை உரிங்கஎன்பதுதான் அது. உண்மையாகவே சிலருக்கு இது நடந்து விடும். ஒரு நாளாவது முதுகில் மஞ்சள் பத்து போடாமல் வருபவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஆசிரியரின் வீட்டுக்கு அண்மையிலுள்ள ஏரிக்கரையின் மரத்தடிக்குக் கீழே அமர்ந்து தரையில் மணலைப் பரப்பி அதில்ஆனா’, ‘ஆவன்னாஎன்று எழுதிப் பழகுவோம். மொளவுக் கவுண்டர் வீட்டின் இரண்டு பக்க திண்ணைகள்தான் எங்கள் பள்ளிக்கூடம். முப்பது பேர் என்னோடு படித்தார்கள். அந்தக் காலத்தில் திண்ணைகளில் பள்ளிக்கூடம் இருந்ததால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தேன் என்று பலரும் சொல்வதுண்டு. , சொல்லி எழுதி பழகுவதற்கு முன்னால்அரி நமோத்து சிந்தம்என்று சொல்லியே தொடங்க வேண்டும்.
பள்ளிக்கு வந்ததும் இப்போது இறை வணக்கம் சொல்வதுபோல அந்தக் காலத்தில்நாங்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து, அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்துவிடுவோம்என்னும் பொருளமைந்த குரு வணக்கம் பாடலைப் பாடிய பிறகே வகுப்புத் தொடங்கும்.
காலையில் பள்ளிக்கூடம் போனதும் பாடுகின்ற பாட்டு
காலையில் எழுந்திருந்து
கால் கை சுத்தம் செய்து
கோலமாநீருபூசி
கொந்தமான்
கோழிகூவ
கூப்பிட வாறோமய்யா
குருவடி பாதம்
சரணம்! சரணம்!
பகலில் பாடுகின்ற பாட்டு!
பாலகர் எல்லாம் கூடி
பாடமும்
சொல்லிக்
கொண்டோம்
ஏனையா
இந்தக் கோபம்
எங்கள்
மேல் குற்றமில்லை
குருவடி பாதம்
சரணம்...சரணம்!
மாலையில் பின்வரும் இந்தப் பாட்டைப் பாடி விட்டுக் கலைவோம்
அந்திக்குப் போறோம்
நாங்கள்
அகத்தினில் (வீட்டில்)
விளையாடாமல்
சிந்தையாய்
திருவிளக்கு முன்னே
சுவடியும் அவிழ்த்துப்
பார்த்து
வந்ததும் வராததும்
(மூளையில் ஏறியதும் ஏறாததும்)
வகையுடன்
படித்துக்கட்டி
சிந்தையில்
தயவு செய்து
சீக்கிரம்
அனுப்புமய்யா
திருவடிபாதம்
சரணம் சரணம்.

பள்ளிக்கு உரிய நேரத்தில் வராமல் கால தாமதமாக வந்தால், முதலில் தாமதமாக வருபவர் கையில் ஒரு அடியும், இரண்டாவது வருபவர் கையில் இரண்டு அடியுமாக அடியின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். இதற்குப்பாலர் அடிஎன்று பெயர். பிரம்படி கடுமையானதாக இருக்கும். அந்த அடிக்குப் பயந்து அதிகாலையில் கோழி கூவியதும் என்னுடைய தாயார் என்னை எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவார்கள். நான் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்து விடுவேன்.
அப்போது சிலேட்டு கிடையாது; கரும் பலகை கிடையாது; நோட்டு புத்தகங்களும் கிடையாது. முதலில் மணலில் எழுதி எழுத்துகளை எழுத, படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கிராமத்துக்கு அப்போது அச்சடித்த புத்தகங்கள் வராத நிலையில் ஓலைச்சுவடியில் இருந்துதான் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நாங்கள் கற்றுக் கொண்டோம். சுவடிகளில் இருந்து அரிச்சுவடி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, வரிக்காய் பாடம், திருப்புகழ், சதகங்கள் முதலானவற்றை முழுமையாகக் கற்றேன். எத்தனை விதமான சதகங்கள் உண்டோ அவ்வளவையும் அங்கே சொல்லித் தந்தார் ஆசிரியர். ஒரு சதகச் செய்யுள் இன்றும் எனக்கு அத்துபடி.
ஆஈன மழைபொழிய இல்லம் வீழ
(பசு கன்று போட)
அகத்தடியாள் மெய்நோவ வருத்திச்சாவ
மாஈரம் போகுதென்று
விதைகொண்டாட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடனைக்
கேட்க
குருக்கள் வந்து தட்சணைக்கு குறுக்கே
நிற்க
பாவாணர் கவிபாடி பரிசு கேட்க
பாவிமகன் படுந்துயரம்
பார்க்கொணாதே
என்பது அச்சதகப்
பாடல்.
ஒரு மனிதனுக்குத் துன்பங்கள் அடுத்தடுத்து வரும் என்பதை அழகாகச் சொல்லுவது இந்தப் பாட்டு. இதுபோன்ற நல்ல கருத்துகளையும் நெறிகளையும் சொல்லுகின்ற எல்லாவிதமான சதகங்களையும் கற்றேன்.

பள்ளிக்குக் காலத் தாமதமாக வருபவர்களுக்கும் சரியாகப் படிக்காதவர்களும் வாத்தியாரிடமிருந்து கிடைப்பது பிரம்பு அடி. பிரம்பு என்பது வளையக் கூடியது. அடி முதுகில் விழுந்தால் தோலைப் பிய்த்துக்கொண்டு வரும். சரியாகப் படிக்காதவர்களுக்குத் தண்டனை பகல் 12 மணி வெயிலில் முட்டிப் போட்டு 1 மணி நேரம் படிக்க வேண்டும். அப்போது அந்த வளைந்த முதுகில் வாத்தியார் ஒரு கல்லையும் தூக்கி வைப்பார். ஒரு சமயம் எங்க வாத்தியார் மொளவு கவுண்டருடைய மனைவி முட்டிப் போட்டு படித்துக்கொண்டு முதுகிலே கல்லைத் தூக்கி வைத்திருக்கிற ஒரு பையனைப் பார்த்து, அவரது கணவரைத் திட்டிக்கொண்டே கல்லைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டு, ‘நீ படித்தது போதும், போய் மாடு மேயடாஎன்று சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் ஒருநாள் வெயிலில் முட்டிப் போட்டதாக எனக்கு ஞாபகம் வருகிறது. ஆனால் கல்லைத் தூக்கி முதுகில் வைத்ததில்லை; பிரம்படி வாங்கியதில்லை.
நான் வெயிலில் முட்டி போட்டுப் படித்ததை என் தகப்பனாரிடம் யாரோ சொல்லி விட, அன்று மதியம் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது என்று என் தாய்க்குக் கட்டளையிட, அவருக்குத் தெரியாமல் எனக்குச் சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.
பிரம்பால் அடி வாங்குகிற பிள்ளைகள் சிலர் சேர்ந்து மூக்குச் சளியை பிரம்பின் கணுக்களில் தடவி கூரையில் இரவில் சொருகி விடுவார்கள். அப்போது மூக்குச் சளிக்குப் பஞ்சமில்லை. மறுநாள் அடித்தால் பிரம்பு ஒடிந்துவிடும். இதைத் தெரிந்துகொண்ட வாத்தியார் பிரம்பைப் பத்திரமாக வீட்டினுள் கொண்டு சென்று விடுவார்.
திருப்புகழ் படித்துவிட்டால் அப்போது பல்கலைக் கழகப் பட்டம் பெற்றது மாதிரியான படிப்பு அது. திருப்புகழை அப்படியே தலைகீழே கடகடவென்று வாசிக்க வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இதுதான் எம்.., பிஎச்.டி., பட்டம் எல்லாவற்றுக்கும் சமமான ஒரு படிப்பு. இவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தேன். இதற்குமேல் என் கிராமத்தில் படிப்பு இல்லை.
நான் திருப்புகழ் படிக்கும்போதுதான் திண்டிவனம் சென்று வந்த என் தந்தையார் அங்கிருந்து அச்சடிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் புத்தகத்தை வாங்கி வந்தார். அப்போதுதான் முதன்முதலாக நாங்கள் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தோம்.
இவ்வாறு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் ஊர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பாலசுந்தரம் எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அவர் சிதம்பரம் வட்டத்திலுள்ள கீழ மூங்கிலடி என்ற கிராமத்திலிருந்த காந்திஜி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்து, அதோடு அங்கேயே கலப்புத் திருமணத்தையும் செய்து கொண்டு தம்முடைய சொந்த ஊரான கீழ்சிவிறிக்கு வந்து, தம்முடைய ஆதி திராவிடர் காலனியிலேயேகாந்திஜி ஆதாரப் பள்ளிஎன்ற ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்தினார்.
அந்தப் பள்ளிக்கூடத்துக்கு காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் போன்ற பெரிய தலைவர்கள் பலரும் வந்து அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்கள்.
(அனுபவம் தொடரும்)
படங்கள்: ஸ்ரீஹரி



THANX- KALKI

விஸ்வரூபம் - கமல் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1G1lpHhhMZi_ZqgG8AolU8YEiziJ-XnF-BrJeqrImL-eRq8JuYeUky7FKc9PjI8qT367I3-LPariQ-4_iZdDpSG5kX028NUQUTBkp4f_znLKX1RPFGoysriu1Zz3jDsZ2YG54QLKzrIQ/s1600/Viswaroopam_latest_wallpapers+%25282%2529.jpgலகத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக, 'விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக சின்னத் திரையில் வெளியிடுவதன் மூலம், சினிமாத் துறையில் அதிரடிப் புரட்சி செய்யப்போகிறார் கமல்ஹாசன்.



'விஸ்வரூபம்’ படம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்​களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முதல் நாளே அதாவது, 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சின்னத் திரையில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுகிறார் கமல்ஹாசன். இதற்காக, டாடா ஸ்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்த 'விஸ்வ​ரூபம்’ படத்தை மொத்தமாக டாடாவிடம் விற்கவில்லை.


 திரையிடப்போகும் ஒரு ஷோவுக்கு ஒரு கனெக்ஷனுக்கு 1,000 ரூபாய் வீதம் கணக்கு வைத்து பணத்தை வசூலிப்பார்களாம். வசூலாகும் தொகையில் சதவிகித அடிப்படையில் கமலும் டாடாவும் பிரித்துக்கொள்வார்கள். கமலின் இந்த வித்தியாசமான வெளியீட்டு முயற்சிக்கு, தமிழ் திரைப்படத் துறையில் ஆதரவும் எதிர்ப்பும் என கலவையாக ரியாக்ஷன்கள். 



கடந்த 5-ம் தேதி மாலை ஃபிலிம் சேம்பரில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, பெப்சி அமைப்பின் தலைவர் அமீர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்தான் 'விஸ்வரூபம்’ குறித்து, தயாரிப்பாளராக தான் எடுத்து இருக்கும் புதிய முயற்சியைத் தெரிவித்தார்.




''கமல் பாணியை எல்லோரும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தனிப்பட்ட முறையில் கமல் பொருளாதார ரீதியாக தன்னைக் காத்துக்கொள்வார். கமல் பக்கத்தில் இருந்து பார்த்தால், அவரது நியாயம் புரிகிறது. டி.வி-யில் திரையிடுவதால் திருட்டு வி.சி.டி. வெளிவர வாய்ப்பு இருக்குமே என்று கமலிடமே கேட்டேன். திருட்டு வி.சி.டி. எடுக்க முடியாத தொழில்நுட்பத்தில் 'விஸ்வரூபம்’ படத்தைத் தயாரித்து இருப்பதாக என்னிடம் சொன்னார்'' என்று ஆதங்கப்பட்டார் ஒரு திரையுலக வி.ஐ.பி. 



தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயாரிடம் இதுபற்றி பேசினோம். ''தமிழ் சினிமா​வில் நடிப்பு, படைப்பில் மட்டும் இல்லை; வியாபாரத்திலும் புதுமையைப் புகுத்துகிறார் கமல். 'விஸ்வரூபம்’ படத்தை 90 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார். செலவு செய்த பணத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும். 



அதனால், 'விஸ்வரூபம்’ படத்தை யாரிடமும் விற்கவே இல்லை. அவரே நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார். பணம் கொடுத்து வாங்கினால்தானே விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டம் அடைவார்கள். இதுவரை எத்தனையோ ரிஸ்க்கான படங்களைத் தயாரித்து நடித்து இருக்கிறார் கமல். அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நயா பைசா பாக்கி வைக்காமல் செட்டில் செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன்தான். இப்போது நிறைய நடிகர்கள் தயாரிப்​பாளரிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையே திருப்பித் தராமல் டிமிக்கி கொடுப்பதை கண் கூடாகப் பார்க்கிறேன்.



எப்போதுமே ஒரு நடிகன் நல்ல வியாபாரியாக இருக்க முடியாது. ஆனால், கமல் நல்ல நடிகன், பெஸ்ட் பிசினஸ்மேன். இது யாராலும் தடுக்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி. இன்று கமல் செய்யாவிட்டால், நாளை வேறொருவர் செய்வார். அப்போது என்ன செய்வார்கள்? கமல் முன்னோடியாக இருக்கிறார். கமலின் இந்த துணிச்சலான முயற்சி எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் மத்தியில் புது மாற்றத்தை உருவாக்கும்.


கூட்டத்துக்கு வந்த கமலை, சின்ன பட்ஜெட் படம் எடுத்தவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுடைய படத்தையும் அதுமாதிரி விற்றுக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஒரு டாக்டர் நோய்க்கான மருந்தை சீட்டில் எழுதித்தான் தர முடியும். அவரே மருந்து வாங்கித்தர முடியாது!'' என்று கமல் கருத்தை ஆதரித்தார்.



கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டோம். ''கமல் தன்னோட சொந்தப் பணம் 90 கோடி ரூபாயை முதலாகப் போட்டு 'விஸ்வருபம்’ படத்தை எடுத்து இருக்கிறார். அந்தப் படத்தை எந்த முறையில் விற்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான் உண்டு. 


தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் மினிமம் கியாரன்டி கேட்டு எங்களிடம் படம் கொடுக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. கமல் 'விஸ்வரூபம்’ படத்துக்கு மினிமம் கேரன்டி கேட்கவே இல்லை. ஒரே ஒருநாள் பிரிமியர் ஷோ போடுவதால், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தியேட்டர்களில் 'விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட சந்தோஷமாகக் காத்துக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.   



அடுத்து கமல் பாணியில் 'அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை வெளியிட இப்போதே பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாம்!


நன்றி - ஜூ வி 

 http://middaytimes.com/wp-content/uploads/2012/06/kamal-hassan-viswaroopam-photos00-640x960.jpg


சென்னை: ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம். இந்த பலம் இருக்கும்வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார் கமல்ஹாஸன்.



கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடந்தது.



இதற்காக கமல்ஹாசனும், படக்குழுவினரும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதலில் மதுரைக்கு சென்றார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் காலை 10-30 மணிக்கு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்ரிநாத் பெற்றுக்கொண்டார்.



மதுரை விழா முடிந்ததும் கமல்ஹாசனும், படக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார்கள். மாலை 3 மணிக்கு கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், பாடல் வெளியீட்டு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய ரசிகைகள் இரண்டு பேர் பெற்றுக் கொண்டார்கள்.


கோவை விழாவை முடித்துக்கொண்டு கமல்ஹாசனும், படக்குழுவினரும் அதே ஹெலிகாப்டரில் சென்னைக்கு வந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 8 மணிக்கு விழா தொடங்கியது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய மூவரும் மேடையில் தோன்றினார்கள். மைதானம் முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.




கமல் பேசுகையில், "இது பொங்கலா, தீபாவளியா என்று தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் என் மூத்த சகோதரர்-அண்ணன் இளையராஜாவுக்கு நன்றி. என்மீதான் அன்பு மட்டுமே அவரை இங்கே வரவைத்திருக்கிறது. இந்தப் பெருமையைத் தந்த அவருக்கு நன்றி. நீங்கள் (ரசிகர்கள்) சந்தோஷப்படுகிற மாதிரி ‘விஸ்வரூபம்' படத்தை எடுத்து இருக்கிறேன்.




ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சந்தோஷம். எவ்வளவு கரகோஷம் எழுந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பேராசை ஏற்படும். அதற்கான அருகதை இருக்கிறதா? என்று கூட யோசிப்பதில்லை.
மதுரையிலும், கோவையிலும் நடந்த விழாக்களில், அங்குள்ள சகோதரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லோரும் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது, இவர்களுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆர்வமும், பயமும் வருகிறது.



என்னை குழந்தையாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். வளர்ந்தபின் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் என் மீது அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள். அந்த அன்புதான் என் ஆணிவேர்-அச்சாணி என நினைக்கிறேன். நான் கழன்றுவிடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன்,'' என்றார்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL7a_UzKoKBUj43j4EKqdeIK0Z-pnX3NoCkydSi-PV9G7NjkgNvz93EdG9uaUz3GPfPiGTiD1RdANPoI2z8iwsNtBJbxYBsNoty0bfuj3hVsWGo8ypD7O6fqsZdOTNmm7EplHedjyYE9c/s1600/viswaroopam+movie+stills+%25284%2529.jpg



சென்னை: புதுமைப் பித்தர்களாக நினைத்துக் கொண்டு படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் சினிமாக்காரர்கள், நிஜமாகவே ஒரு புதுமையான விஷயத்தை செயலுக்குக் கொண்டு வந்தால் மட்டும் ஏற்க மனம் வருவதில்லை.



சினிமாக்காரர்களிடம் போய் உங்களது தலையாய பிரச்சினை என்ன என்று கேட்டால் ஒரே குரலில் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூக்குரலிடாத குறையாக சொல்வது திருட்டு விசிடி மற்றும் டிவிடி பிரச்சினையைத்தான். சரி இதை ஒழிக்க என்ன நடவடிக்கை என்று அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டால், அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.




ஆனால் உண்மையில் திருட்டு விசிடி-டிவிடியை ஒழிப்பது என்பது சினிமாக்கார்ரகளின் கையில்தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை அல்லது முன்வருவதில்லை.



திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல்ஹாசன் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். இதை இதுவரை திரையுலகைச் சேர்ந்த யாருமே ஆமோதித்ததும் இல்லை, கருத்துச் சொன்னதும் இல்லை. அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அரசையே அண்டி வருவதை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளனர்.




தியேட்டருக்கு படம் வரும் அதேசமயத்தில் டிவி சேனல்களுக்கும் ரைட்ஸ் கொடுத்து ஒரே நேரத்தில் வெளியிடுவது, டிவிடி, இன்டர்நெட் உரிமைகளையும் ஹோல்சேலாக கொடுத்து விடுவது என்பது நிச்சயம் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடும் என்பதோடு அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைவதால், திருட்டு விசிடி, டிவிடிகளுக்கு வேலையில்லாமல் போகும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.



புதிய விஷயம் எப்போதுமே ஆரம்ப கட்ட சிக்கல்களையும், சிரமத்தையும் கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் அதைக் கொண்டாடத் தொடங்கி விடலாம். கமல்ஹாசன் கிட்டத்தட்ட தனது மிகப் பெரிய படத்தையே அடகு வைத்து, பெரும் ரிஸ்க் எடுத்து களத்தில் இறக்கத் தயாராக இருக்கும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகிறது.




நிச்சயம் கமல்ஹாசனைத் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வராது என்பது ஒருபுறம் இருக்க அவர் செய்யப் போகும் முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் கூட உட்கார்ந்து கவனிக்க தைரியம் இல்லை என்பதை ஆச்சரியம்தான்.




இதே கமல்ஹாசன்தான் டிவியால் சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அது உண்மையாகவும் உள்ளது. டிவி வந்ததால் சினிமாக்காரர்களுக்குத்தான் நிறைய லாபம் கிடைத்துள்ளது. அபரிமிதமான விளம்பரங்களையும், 'பில்டப்'களையும் செய்ய இன்று டிவியை விட்டால் வேறு மீடியாவே இல்லை. மேலும் ஓடாத குப்பைப் படங்களையும் கூட உச்சாணிக்குக் கொண்டு போய் விளம்பரம் செய்து ஓட வைக்க இன்று டிவிதான் சினிமாக்காரர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.


கமல்ஹாசன் செய்யப் போகும் முயற்சியை சற்று விட்டுத்தான் பார்ப்போமே... துணிச்சலா சப்போர்ட் பண்ணுங்க சினி்மாக்காரர்களே... அது சரி 'இன்டர்நெட்' என்பதையே 'இன்டர்காம்' என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும்போது கமல்ஹாசனை ஏற்க எப்படி இவர்களுக்கு மனம் வரும்...!


சென்னையில் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாஸனிடம் கேள்வி என்ற பெயரில் அபத்தமாகக் கேட்டு, அசடு வழிந்தார் நடிகர் ஜெயராம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தார் கமல்.


அவரோ, கமலைப் புகழ்கிறேன் என்ற பெயரில், விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்துக் கொண்டிருந்தார்.


கமல் பேசி முடித்ததும். அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். அது கமலையே நெளிய வைப்பதாக இருந்தது.


‘‘நீங்கள் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறீர்கள். அங்கு யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? ஜூலியா ராபர்ட்ஸுக்கா, ஏஞ்சலினா ஜோலிக்கா அல்லது வேறு யாருக்கு?'' என்று கேட்டார்.



அதற்கு கமல்ஹாசன், ‘‘அதற்காகவா ஹாலிவுட் போகிறேன்? இங்கிருந்து அங்கபோறது எச்சில் பண்றதுக்காகவா...? முடிந்தால், நல்ல நடிப்பை காட்டலாம் என நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYOnK1mFxnsnkiFs7gpR-CRM_bnO5I6-u5PtB_TAjgzSGrXbX7eLAydW1TrQhzVVwdAbChM1YPM8gtjPR5wrJvXYKmNOikenq9eS-MvWQoDL52kY090gMzQtWCmabeexcoPR52G1Lo4Gkl/s1600/334034-viswaroopam.jpg


 நன்றி -தட்ஸ் தமிழ்


கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.


ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.


இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.


முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம்.
 
 
சென்னை: டி.டி.எச். மூலம் ‘விஸ்வரூபம்' படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பும் புதிய முயற்சியை கமல்ஹாசன் கைவிட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்ளும் எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டெலிவிஷனில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்.


இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.



அதில், "கமல்ஹாசன் தன் ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் திரையிடுவது பற்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. இதுபற்றி மதுரையில் இருந்த கமல்ஹாசனுடன், ‘டெலி கான்பரன்சிங்' மூலம் பல சந்தேகங்கள் கேட்டார்கள்.



அப்போது அவர் கொடுத்த விளக்கங்கள் வருமாறு:



'விஸ்வரூபம் படம் டி.டி.எச். முறையில், ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும். அப்படி திரையிடும்போது, திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒருநாள் முன்பு இரவு 9 மணிக்கு மேல் திரையிடப்படும். ஒரு டி.டி.எச். கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ.1,000 வசூல் செய்யப்படும். இது, படத்துக்கு டிரைலர் போல் இருக்கும். இதை பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள்' என்று கூறினார்.



வேண்டுகோள்



என்றாலும், ஒரு டி.டி.எச். கருவிக்கு ஒரு குடும்பம்தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது. ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளில் படத்தை காண்பித்து விட்டால், நாடு முழுவதும் பல கோடி பேர் படம் பார்த்து விடுவார்கள்.



எனவே கமல்ஹானை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து, இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அப்படி அவர் கைவிடாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்து முடிவு எடுப்போம்.


திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும். எங்களை காப்பாற்ற வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.




ஒத்துழைப்பு கிடையாது


இதற்கிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.


கூட்டத்தில், ‘‘திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக டி.டி.எச்.சில் கொடுக்கப்பட்ட எந்த படமாக இருந்தாலும், நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த தகவலை சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள்.


 

புனித வில்லி புவனேஷ்வரி - வழக்குகள்

சதியில் சிக்கினாரா புவனேஸ்வரி?

ஆளும் கட்சிப் புள்ளி மீது அதிரடிப் புகார்
 
 
திரையில் அடிக்கடி தலைகாட்டா​விட்டாலும், நடிகை புவ​னேஸ்வரியை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைதானபோது, நடிகைகள் சிலரின் பெயரைப் பட்டியல் போட்டதாக விவகாரம் கிளம்பி, கோடம்பாக்கமே கொந்தளித்தது. வழக்கில் இருந்து வெளியே வந்தவர், ஒரு கட்டத்தில் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கினார். இந்தநிலையில் மீண்டும் வம்பு, வழக்கு என்று சிக்கிக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்கின்றன.



 என்ன ஆச்சு?


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டிரைவ்-இன் தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி தன் நண்பர்களுடன் கடந்த 25-ம் தேதி இரவு படம் பார்க்கச் சென்றார். தியேட்டரில் கார் பார்க்கிங் செய்வதில் புவனேஸ்வரியுடன் வந்த வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனுக்கும் சேலையூர் குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஷயம் காவல் நிலையத்துக்குப் போனது. தப்பி ஓடிய புவனேஸ்வரி உட்பட ஏழு பேரை நீலாங்கரை போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.



புவனேஸ்வரி கோஷ்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் தாமோதர கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அன்றைய தினமே கார் மோசடி வழக்கு ஒன்றில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த புவனேஸ்வரிடம், நேரில் சென்று கைது விவரத்தை போலீஸார் கூறினர்.




இன்னொரு பக்கம், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புவனேஸ்வரி மீது ஏற்கெனவே பதிவாகி இருந்த வழக்குகளை போலீஸார் தூசி தட்ட ஆரம்பித்தனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குருநாதன் கொடுத்து இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி வழக்கில், கடந்த 5-ம் தேதி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட விவரத்தையும் புழல் சிறைக்குச் சென்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு புவ னேஸ்வரியை போலீஸார் ஆஜர் படுத்தினர். மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டதற்கு, இரண்டு நாட்கள் மட்டும் அனுமதித்தார்.



கோர்ட் வளாகத்தில் இருந்த புவனேஸ்​வரியிடம் பேசினோம். ''கேட்பதற்கு ஆள் இல்லை என்று அடுக்கடுக்காக வழக்குகளைப் போடுகின்றனர். நடிகை என்றால் கிள்ளுக்கீரையா? எங்களுக்கு ஆதரவு இல்லையா? தியேட்டர் வளா கத்தில் அடிதடி ரகளையில் நான் ஈடுபடவே இல்லை. ஒரு சாதாரணப் பிரச்னையை ஏதோ பெரிய வன்முறை சம்பவம்போலச் சித்திரிக்கின்றனர். தீவிரவாதியைப் பிடிப்பதுபோல ஸ்பெ ஷல் டீம் போட்டு என்னைக் கைது​செய் துள்ளனர். சினிமாவில் கடன், கைமாற்று வாங்காமல் தொழில்செய்ய முடியாது. இவை எல்லாம் சிவில் பிரச்னைகள். ஆனால், கொலை மிரட்டல் விடுத்தேன் என்று பொய் வழக்குப் போடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது. விரைவில் உண் மைகள் வெளிவரும்'' என்றார்.



சினிமா தியேட்டர் அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றவரும், புவனேஸ்வரியின் வக்கீலுமான தாமோதர கிருஷ்ணனிடம் பேசினோம். ''தியேட்டரில் எங்கள் கார் மீது இன்னொருவர் கார் மோதியது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் பிரச்னை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீஸார், லத்தியால் என் நெஞ்சில் குத்தி, அடித்தனர். காயத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். போலீஸார் அடித்தது பற்றி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். புழல் சிறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளேன்.



'பணப் பிரச்னைகளில் கொலை மிரட்டல்கள் விடுக்கும் எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 2011-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புவனேஸ்வரி புகார் அளித்தார். ஆனால், இப்போது ஏதோ உள்நோக்கத்தில் பழைய புகார்​களைத் தூசி தட்டி எடுக்​கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முக்கியப் புள்ளியின் குடும்பத்​தைச் சேர்ந்தவருக்கும்  புவனேஸ்​வரி குடும்பத்துக்கும் கடந்த 18 வருடங்களாகவே பிரச்னை உள்ளது. அதில் இருந்து புவனேஸ்வரி ஒதுங்க வேண்டும் என்றுதான் இந்தகைய டார்ச்சர்களை போலீஸ் மூலம் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவைப்பட்டால் அந்த பிரச்னையை வெளிப் படையாகத் தெரிவிக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.



இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, ''பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, பின்னர் அவர்களை அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில்தான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் இன்றோ, நேற்றோ பதிவான வழக்குகள் அல்ல. எல்லாம் பழைய வழக்குகள்தான்'' என்றனர்.



கடந்த 10 நாட்களில் மூன்று வழக்குகளில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி மட்டும் அவர் மீது 10 புகார்கள் சென்னை மாநகர போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி விவகாரத்தில் போலீஸ் காட்டும் வேகத்தைப் பார்த்தால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் போலவே தெரிகிறது.



- எஸ்.முத்துகிருஷ்ணன் 


படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி - ஜூ வி 


மிஸ்.உங்களுக்கு வைரமுத்து ,தபு சங்கர் கவிதை படிக்கும் பழக்கம் உண்டா?


1.அண்ணா என பிகர் கூப்பிட்டா கண்ணா என்று கேட்குது



-----------------


2. பாராளுமன்றம் நீதிமன்றத்திக்கு கட்டுப்படவேண்டியதில்ல! அமைச்சர் நிமல் அறிவிப்பு!! # அடங்கா மாரிகளா?




------------------------



3. மிஸ்.உங்களுக்கு வைரமுத்து ,தபு சங்கர் கவிதை படிக்கும் பழக்கம் உண்டா?


நோ.


ஐ ஜாலி.இந்தாங்க லவ் லெட்டர்



----------------------


4. யாதும் பிகரே ! யாவரும் அழகிய மகளிர்!



-------------------


5. சுவிஸ் வங்கிகளில் ரூ.5 கோடிக்கு மேல் பணம் பதுக்கியோர் மீது வழக்கு: வருமான வரித்துறை # நாலே முக்கால் கோடின்னா நோ ஆக் ஷன்?போய்யாங்



------------------


6. டியர்.நீ வெட்கப்படனும்.அதை ஒரு வாட்டியாவது நான் பார்க்கனும்.



ம்க்கும்.ஆனாலும் உங்களுக்குப்பேராசை




--------------------


7. நயன்தாரா பிரம்மச்சாரினியாக இருக்க முடிவு # எத்தனை மணி நேரத்துக்கு?




-------------------


8. சென்னை ,பெங்களூர் மாடர்ன் கேர்ள்ஸ் சிலர் பற்றி ஒரு குறும்படம் எடுக்கறேன்.டைட்டில் - முகத்துல கொஞ்சம் கூட வெட்கத்தைக்காணோம்




-------------------------


9. சார், உங்க க்ரைம் ச்பஜெக்ட் படத்துல எதுக்கு கவர்ச்சி நடிகையை புக் பண்ணீங்க?


 படம் திகிலா இல்லைன்னாலும் ஷ்கீலா இருக்காங்கன்னு கி கி




---------------



10. நீ யார் கூட சண்ட போட்டாலும் அவங்க உன்ன சமாதானப் படுத்துவாங்க. சம்சாரம் கூட சண்ட போட்டா அவங்க குடும்பத்தையே சமாதானப்படுத்தனும்# தலைவிதி




-------------------



11. DR, என் பையன் தூக்கத்துல கூட 100 கோடி , 100 கோடின்னு புலம்பறான்.



அடுத்த படம் அட்டர் ஃபிளாப் ஆகிட்டா சரி ஆகிடும், பயப்பட ஒண்ணும் இல்லை


---------------------


12./ sac - 100 கோடி ரூபாய் செக் லீஃபை கீழே போட்டு ஏன் தாண்டறே?



விஜய் - விஜய் 100 கோடியை கிராஸ் பண்ணிட்டார்னு நியூஸ் வரத்தான் கி கி



-------------------


13. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது: கர்நாடகம்# இந்த ஈர வெங்காயத்தை ஃபோன்லயே சொல்லி இருந்தா ஃபிளைட் செலவாவது ஜெவுக்கு மிச்சம்



--------------------


14. அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன் - ப்ரியாமணி # நான் ஒண்ணுமே செய்யலையே? - அமீர்கான்



-----------------


15. கங்கனாரனாவத் கூட ஸ்டைலா டான்ஸ் ஆடுனா அதுதான் கங்னம் ஸ்டைல் டான்ஸ்? #சும்மா


-------------------


16. விஜயகாந்தை தரக்குறைவாக நடத்த கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் # மாட்டோம்.அவர்தான் இப்போ கூட்டணில இல்லையே? - ஜெ



--------------------



17. துக்க வீட்டில் பரிமாறும்போது இனிப்பு வைக்கக்கூடாது.போய்ட்டு வர்றேன் என சொல்லக்கூடாது # ஐதீகம்




-----------------


18. சுப நிகழ்ச்சிகளில் சாப்பிட்ட பின் வாழை இலையை மேல் இருந்து கீழாகவும்,துக்க ு வீட்டில் கீழிருந்து மேலாகவும் மடிப்பது கிராமத்து வழக்கம்




--------------------------



19. பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம்: ரூ.1 கோடி மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிப்பு... # ஐ பி குடுக்கும் வரை வேடிக்கை பார்க்குமா ஈ பி?



---------------


20. திரிஷாவுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது- விஷால்# எவனாவது மிரட்"ராணா"? - த்ரிஷா



------------------


21. மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # ஏன்? பா ம க கூட கூட்டணியா?



------------------


22.  மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு விலகி விடவும் -வைகோ # அவங்க எங்கேயும் போக வேணாம், இங்கே வாங்க - கேப்டன்




---------------



23. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 66 கேமரா மூலம் கண்காணிப்பு #கேமராவையே நம்மாளுங்க லவட்டிட்டுப்போய்டுவாங்க பாருங்க




-----------------


24. பிரதமருக்கு முதல்வர் ஜெ கடிதம்:# மவுன குருவுக்கு.தமிழ்நாட்டின் முதல்வ்ராகிய நான் என் ஆணைப்படி எழுதிக்கொள்வது...


----------------


25. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததாக உணர்கிறேன் -நாஞ்சில்.சம்பத்# கோயில் கருவறைல இருந்து சுடுகாட்டுக்கு வந்துட்டீங்க



----------------------


26. கோயம்பேடு பஸ் நிலையத்தில் 66 கேமரா மூலம் கண்காணிப்பு: 250 போலீசார் பாதுகாப்பு...# 66 கேமராவும் பத்திரமா பாத்துக்க 66 போலீஸ் போதாதா?



------------------


27. துக்க வீட்டு வாசலில் போடும் பந்தல் சாமியானா பந்தல் ,ஒத்தை டாப் என அழைக்கப்படுகிறது



----------


28. விஸ்வரூபம் கமலே வெளியிடுகிறார்: # தலைவா.ரிஸ்க்.நைசா ஜெயா டி விக்கோ விஜய் டி விக்கோ கோர்த்து விட்ருங்க



-------------------


29. 20 வருஷமா சச்சின் அடிச்சத விட, 20 வருஷமா விஜய் அடிச்சதுவிட எங்க தானைத்தலைவர் அடிச்சதுதான் அதிகம் ்



-------------------


30. குன்னூர் அய்யப்பன் கோவிலில் ஐம்பொன் சிலை - உண்டியல் கொள்ளை # பூசாரி வீட்ல போய் பாருங்க .ஷிப்ட் பண்ணி இருப்பாரு



-------------------------





Friday, December 07, 2012

அன்புள்ள முதல்வருக்கு கூடங்குளம் மக்கள் சார்பில் ஒரு கடிதம்



தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்


பிப்ரவரி 25, 2012 13:32
அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள். அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1. 1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2. எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

 3. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.

 4. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.

 5. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம்.





இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எ


ங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள,

சுப. உதயகுமார்

ஒருங்கிணைப்பாளர்,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,
இடிந்தகரை



நன்றி - த சண்டே இந்தியன்

ராஜீவ்காந்தி கொலைவழக்கு - X உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கிருஷ்ணய்யர் பேட்டி

.ஆர்.கிருஷ்ணய்யர்... இந்தியாவின் மிக மூத்த, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. நீதி, அரசியல், எழுத்து, சமூகம் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த ஆளுமை. கடந்த மாதம் 98-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கிருஷ்ணய்யரை எர்ணாகுளத்தில் உள்ள அவரது 'சத்கமய’ இல்லத்தில் சந்தித்தேன்.




 ''வயதாகிவிட்டதாக உணர்கிறேன். கேட்கும் திறனை வெகுவாக இழந்துவிட்டேன். முன்புபோல எழுத முடியவில்லை. நினைவுகளை மீட்டு எடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது. நான் எதிர்பார்த்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை. அந்த வகையில் நான் துரதிர்ஷ்டசாலி!'' என்றபடி, எதிரே பிரமாண்டமாக ஃப்ரேம் செய்யப்பட்டு இருக்கும் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். தினமும் தன் மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்துக்கும் குறையாமல் கிருஷ்ணய்யர் பேசு வதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.




''நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சி இப்போது பகிரங்க கொலை மிரட்டல்களுக்கும் அரசியல் கொலைகளுக்கும் களம் அமைக்கிறதே... கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்?''




''என் தோழர்கள் கெட்டுப்போய்விட்டார்கள். நம்பூதிரிபாட் போன்ற தோழ‌ர்கள் வாழ்ந்த மண்ணிலா இப்படி ரத்தக் கறை படிய வேண்டும்? எளிமை, தியாகம், நேர்மை, நாணயம் எல்லாம் எங்கே போயின? கொலை... அடிதடி... ரத்தம்... மிரட்டல்!


இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பலரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மார்க்ஸ் இருந்தால் நொந்துகொள்வார். ஆனாலும், சிலர் அத்திப்பூ மாதிரி ஆங்காங்கே பூத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!''



''சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும் இந்தியா குடியரசாகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருக்கின்றனவே?''



''மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்கவைக்கின்றன நீதிமன்ற நடவடிக்கை கள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!''




''மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் இன்னமும் பல சந்தேகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப்  தூக்கிலிட்டப்பட்டு இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து?''




''காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு விரிவான பதிலை நானே விரைவில் எழுதவிருக்கிறேன். நிச்சயம் என் பதிலுக்கு ஆதரவுக் குரலும் விமர்சன அலையும் பெருகும்!''




''ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி... இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் பல நீதிபதிகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கருணை மனுக்களுக்கு எந்தப் பதிலும் இல்லையே மத்திய அரசிடம் இருந்து?''




''எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார் கள். அவர்கள் தரப்பில் இருந்து வந்து என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். நானும் பல சமயங்களில் அவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ராஜீவ் காந்தியின் மனைவியே, 'இவர்களைத் தண்டிப்பதால் என் கணவர் திரும்பவும் வர மாட்டார்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். 



இதை அடிப்படையாக வைத்து உங்கள் வாதங்களை அடுக்குங்கள் என்றேன். அவர்கள் மூவரும் நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார்கள். இனியும் அவர்களைத் தண்டிப்பது சரியல்ல. தூக்குத் தண்டனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தூக்குத் தண்டனையை ஒழிக்காமல் செத்துப்போனால், நான் தோற்றுப்போனவனாக உணர்வேன். அஹிம்சையைப் போதித்த காந்தியின் தேசத்தில் இப்படி ஓர் அவல நிலை நீடிப்பது வருத்தமாக இருக்கிறது. இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும் அவமானம்!''




''ஓர் அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று நினைக் கிறீர்கள்?''



''ஜவஹர்லால் நேரு. அவருக்குப் பிறகு வேறு யாரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. இதனைச் சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!''




readers views

1. அன்பு4 Days ago
"காந்தி சொன்னதுபோல உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்."------------> கசாப்புக்கு மட்டும் 160 அப்பாவிகளை கொல்லும் உரிமை எப்படி வந்தது? அவன் மனித ஜன்மம் இல்லை என்பதால் தூக்கிலிட்டது சரியானது. வாலி வதைப்படலத்தில் ஒரு மிருகத்தை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம் என்று நீதி தர்மத்தை ராமர் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
2. இவரது பெயரிலேயே இரட்டை நிலை மனப்பான்மை பளீரென முகத்தில் அறைகிறது. பெயரிலேயே கிருஷ்ண ஐயர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி சமத்துவத்தை மார்க்ஸிய தத்துவங்களை இவரால் கட்சிக்குள்ளேயும், பொது மக்களுக்கும் பரப்ப இயலும். சென்ற தலைமுறையை சார்ந்த மனிதர்களை பார்க்கும்போதே வெளிப்படுவது இவர்கள் என்னவோ கலாச்சார ஒழுக்கசீலர்கள போலவும் வளர்ந்து வரும் இளைய தலைமுறை என்னவோ தறிகெட்டு அலையும் தறுதலைகள் போலவும் இவர்கள் காட்டிக்கொள்ளும் பாவ்லா.

பிடித்த தலைவர் என்று நேருவை சொன்னதாலேயே இவர் மேல் எந்த ஒரு உயர்ந்த அபிமானமும் ஏற்படவில்லை. -Kalpana 
3. BALA.S7 Days ago
என்ன செய்தால் நீதித்துறையை மக்கள் தயக்கமின்றி அணுகுவார்கள், அதன் மூலம் லஞ்சம் கொடுக்க மறுக்கும் சூழ்நிலை உருவாகும் என இது போன்றவர்கள் எழுதலாம். பழங்கதை பேசி பயனில்லை. காந்தி கால இந்தியாவில் தூக்கை ஒழிக்கலாம், சோனியாகாந்தி காலத்தில் அது இயலாது என்பதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டும்.
 thanx - vikatan

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 7.12.2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.top10cinema.com/dataimages/17896/30-11-2012-17896-1-1.jpg 


1. ஹிட் லிஸ்ட் - மீண்டும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் படம், 2011ல ஹாலிவுட்ல இதே டைட்டில்ல ஒரு படம் வந்திருக்கு  நீர்பறவை படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் படம் ஹிட் லிஸ்ட்.  அருணாச்சலம் பிக்சர்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர் பாலா இயக்கியிருக்கும் படம் ஹிட் லிஸ்ட்.  இயக்குனர் பாலா சிறுத்தை இயக்குனர் சிவாவின் தம்பியாவார்.  இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் சந்தியா நடித்துள்ளார்.  திருமணத்திற்கு பிறகு நரேன் இந்த படத்தில் நடித்துள்ளார்.  தற்சமயம் படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் 7 12 2012  இந்த படம் வெளியாகவுள்ளது.


Hit List' is a Malayalam film directed by Bala, brother of Telugu filmmaker Shiva of Shankam and Daruvu fame.  It is a murder mystery which tells the story of a serial killer, who targets police officers and kills them one after one.

 
The film's logo was unveiled by director Priyadarshan of Bollywood and actor Mohan Lal of Mollywood.




The makers inform that dubbing activities are on.  We will release the audio very soon.  'Hit List' will release simultaneously in Malayalam and Telugu.


Also starring Aishwarya Devan, this murder mystery has music by Alphonsa Joseph.  Cinematography is by Madhu Neelakanthan.  Story and screenplay are by Bala himself.






ஈரோடு வி எஸ் பி , ஸ்ரீ லட்சுமியில் ரிலீஸ்  

HIT LIST -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/12/hit-list.html

http://www.movieballet.com/wp-content/uploads/2012/01/businessman-movie-review.jpg




2.THE BUSINESS MAN  - மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த படம் பிசினஸ்மேன். இப்போது அதே பெயரில் தமிழில் வெளிவருகிறது. பூரி.ஜெகன்நாத் இயக்கி உள்ளார். வெளிநாட்டில் சம்பாதித்து ஆந்திராவில் செட்டிலாகும் குடும்பத்தின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து குடும்பத்தையே அழிக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜ். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் செல்ல மகன் மகேஷ்பாபு இதைக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வருகிறார். 


அப்புறம் என்ன தெலுங்கு படங்கள் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? ஒரே அடிதடி, கும்மாங்குத்து ரெண்டு ரீலுக்கு ஒரு சாங் என படம் களைகட்டும். கிளைமாக்சில் வில்லன் தோற்க ஹீரோ ஜெயிக்க சுபம். தமிழ் பதிப்புக்கான பாடல்களை நா.முத்துகுமாரும் வசனத்தை கண்ணனும் எழுதி உள்ளனர்.
தமிழ்ல பிசினஸ் ஆகுமான்னு ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்...


ஈரோடு ஆனூர் , ஸ்டார் இல் ரிலீஸ்  


The Business man - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2012/12/the-business-man.html
 

 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/13/Khiladi_786_poster.jpg/220px-Khiladi_786_poster.jpg

3. khiladi 786 - தமிழ், இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அதிர்ஷ்டமும் காரணம் என்று அசின் கூறினார். அக்ஷய்குமாருடன் அசின் நடித்துள்ள இந்திப் படம், ‘கில்லாடி 786’. காமெடி படமான இது நாளை ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி அசின் கூறியதாவது: இது காமெடி படம் என்றாலும் நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதை. ஆமிர்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளேன்.

 ஒவ்வொருவருடன் நடிக்கும்போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும். அக்ஷய் குமாருடன் நடித்தபோது ஜாலியாக இருந்தது. செட்டுக்கு வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே வந்துவிட்டால் தொழில் பக்திகொண்டவராக இருக்கிறார் அக்ஷய். அதனால் அவருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன். டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கிறீர் களே... எப்படி? என்கிறார்கள். இதில் அதிர்ஷடம் விளையாடுவது உண்மைதான்.

முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கான படங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் எனக்கிருந்ததையும் காரணமாக நினைக்கிறேன். இதுவரை என் திரைப்பயணம் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தென்னிந்திய படங்களில் இனி நடிக்க மாட்டீர்களா என்கிறார்கள். ஏற்கனவே நடித்த கேரக்டர்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். அது இல்லாமல், சிறந்த கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். 


ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா வில் ரிலீஸ்  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw4exJguCzRyQP8uwImY2hAOyj3XyCUx30QKS5d40S45wGA-v8NbveeyWDiqnfADB47ppFIBHj6O8wQUqczwpLOo5Sjojj4Te8coOK5YPJFLuGYYsmYVSsppwJeG7fAdPPBVjXFx4OOCs/



4. முரட்டு சிங்கம்   - ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘மெரப்பக்காய்’ என்ற தெலுங்கு படம், ‘முரட்டு சிங்கம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ரவிதேஜா, ரிச்சா கங்கோத்ரி, தீக்ஷா சேத், சுவாதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து இருக்கிறார். அமிர்தா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜவம்சி தயாரித்துள்ள இந்த படத்துக்கு, ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கிறார். ஹரிசங்கர் டைரக்டு செய்திருக்கிறார். பொறுப்பான ஒரு காவல் துறை அதிகாரி முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றப்படுகிறார். ஒரு கல்லூரி மாணவியை அவர் விரும்புவதுபோல் நடித்து, குற்றவாளியை கண்டுபிடித்து, சட்டத்தின் முன்பு நிறுத்துகிறார். இதுவே முரட்டு சிங்கத்தின் கதை.



இதுவும் தெலுங்கு மொழிமாற்று திரைப்படம். இதற்கும் பிஸ்னஸ்மேனுக்கும் மூன்று ஒற்றுமைகள். பிஸ்னஸ்மேன் 2012 ஜனவ‌ரி 13 ஆம் தேதி வெளியானது என்றால் முரட்டு சிங்கத்தின் ஒ‌ரி‌ஜினலான ஆசையியமயல ச‌ரியாக ஒரு வருடம் முன்பு - 2011 ஜனவ‌ரி 13 ஆம் நாள் வெளியானது. பிஸ்னஸ்மேனின் வில்லன் பிரகாஷ்ரா‌ஜ் தான் இதிலும் வில்லன். இசை அதே தமன்.ரவி தேஜா போலீஸ் அதிகா‌ரி, க்ரைம் பிராஞ்ச். வில்லன் பிரகாஷ்ரா‌ஜ். அவரை பிடிப்பதற்காக ஹைதராபாத்திலுள்ள கல்லூ‌ரி ஒன்றில் இந்தி சொல்லித் தரும் புரபஸராக சேர்கிறார். அங்கு அதே வகுப்பில் படிக்கும் ‌ரிச்சாவுடன் அவருக்கு கண்டதும் காதல் வருகிறது. அதே வகுப்பில் படிக்கும் இன்னொருவர் தீக் ஷசேத். இந்தியா சினிமா இலக்கணப்படி அவர் வில்லன் பிரகாஷ்ரா‌ஜின் மகள். தீக் ஷாவை வைத்தே அவரது டாடியை ரவி தேஜகண்டு பிடிப்பதை சின்ன குழந்தையும் யூகித்துவிடும்.
http://www.cinejosh.com/gallereys/movies/normal/pachi_mirapakai_movie_stills_2706110806/pachi_mirapakai_movie_stills_2706110806_033.jpg

ரிச்சா, தீக் ஷா இருவ‌ரின் கவர்ச்சி, அளவுகடந்த ஆக் ஷன் என்று இந்த முரட்டு சிங்கமும் ஆந்திர ரசிகர்களின் மனதை கவர்ந்தது. கலெக் ஷன் அறுபது கோடிக்கும் மேல்.ஹ‌ரிஷ் சங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுடன் சோட்டா வில்லனாக கோட்டா சீனிவாசராவும் நடித்துள்ளார். ஒளிப்பதிவு சி.ராம்பிரசாத், எடிட்டிங் கௌதம் ராஜு. இந்தப் படம் இந்தியில் ஏற்கனவே கிலாடி என்ற பெய‌ரில் டப் செய்யப்பட்டிருப்பது முக்கியமானது.



ஈரோடு அண்ணாவில், அன்ன பூரணியில்  ரிலீஸ்


Mirapakai - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2012/12/mirapakai_12.html
 


 http://www.hmmagazine.com/wp-content/uploads/2012/05/get-the-gringo-poster01.jpg


5. Get The Gringo(How I Spent My Summer Vacation) -  A career criminal nabbed by Mexican authorities is placed in a tough prison where he learns to survive with the help of a young boy.Apprehended by the Mexican authorities, Driver is sent to a hardcore prison where he enters the strange and dangerous world of 'El Pueblito'. Not an easy place for an outsider, unless it's with the help of someone who knows the ropes - a 10-year-old kid. 


Get The Gringo(How I Spent My Summer Vacation) directed by Adrian Grunberg is one of the finest movies to come out in the mid-2012 and one of the best Mel Gibson movies.

The movie is scheduled to release on 1st May 2012 in the U.S.A,but luckily in the Middle East it released a few weeks back and I was glad to watch it.

Although the movie may be a bit similar to Mel Gibson's Payback,but still Get The Gringo is fresh and entertaining.

Story:- A career criminal (Mel Gibson) nabbed by Mexican authorities is placed in a tough prison where he learns to survive with the help of a 9-year-old boy (Kevin Hernandez).

Mel Gibson delivers one of the best performances ever.

Get The Gringo is a stylish move with loads of action scenes,dark,gritty,humorous,violent and above all entertaining.

The director Adiran Grunberg does an excellent job.

All in all,Get The Gringo(How I spent my Summer Vacation) is a not only a must-watch for Mel Gibson fans but also for those who are not because it is one of the best movies to come out in the mid-2012.I am giving a nine on ten for Get The Gringo.Strongly Recommended!


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

http://www.beyondhollywood.com/uploads/2011/11/SV-03637.jpg