Thursday, November 15, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 16.11.2012 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.localfiles.com/production/usergraphics/79/main_Photo_117379.jpg 

1. துப்பாக்கி -  தீபாவளி ரிலீஸ் ரேசில் நெம்பர் ஒன் இடத்தை பிடிச்சுஇருக்கு. பிளாக்ல டிக்கெட் அள்ளுது. ட்விட்டர்ல பலர் ஏ ஆர் முருக தாஸ்க்கு துப்பாக்கி பார்ட் 2 எடுங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க.. நல்ல விஷயம்,. இந்த வருஷம் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் நல்ல லாபம் சம்பாதிச்சுத்தர்லைங்கற கெட்ட பேரை இது நீக்கிடுச்சு


 பொதுவா ஒரு ப்டம் ஹிட் ஆனா இந்தக்கதை என்னுதுன்னு ஒரு குரூப் கிளம்பும். ஆனா இந்த டைம் பிரச்சனை வேற மாதிரி . அந்த நியூஸ் 

விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'துப்பாக்கி' படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'துப்பாக்கி' தீபாவளியன்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலிலும் பல படங்களை இப்படம் மிச்சும் என்று திரையுலகினர் கூறுகிறார்கள். இந்த நிலையில் இப்படத்தைப் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் பயங்கர சதி திட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் விஜய் விடுமுறைக்காக மும்பை வரும்போது இதை அறிந்துகொண்டு, தீவிரவாதிகளின் சதி திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை.

இப்படம் முஸ்லீம்களை விமர்சிப்பதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படத்தில் இடம்பெறும் சில சர்ச்சைக்குடிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் முஸ்லிம் அமைப்புகள் நடிகர் விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவருடைய பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)


 படத்தின் விமர்சனம் -

துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

   http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

ஈரோடு  ராயல் , சண்டிகா, சீனிவாசா வில் ரிலீஸ் 

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters/images/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters06.jpg





2. போடா போடி  - சிம்பு - வரலட்சுமி சரத் ஜோடியா நடிச்ச இந்தப்படம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே  லவ் பண்ணலாமா? வேணாமா? பாட்டின் செம ஹிட்டால் பேசப்பட்டது.  தமிழ் நாடு பூரா இந்தப்படத்துக்கு கிடைச்சிருக்கும் நல்ல நல்ல தியேட்டர்ஸ் துப்பாக்கியை கிராஸ் பண்ணிடுமோன்னு எண்ண வெச்சுது. 


 ஈரோடு அபிராமி, அன்னபூரணி , ஆனூர் , சங்கீதா ஆகிய 4 தியேட்டரில் ரிலீஸ்

போடா போடி - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6o5SUz4KNwe8uY22yZY7xfSub2j72T31-4DEag5OmsQXhD9JWfABw0icV5EQmvmZ_0K4lY9_7BXMWytCEaXS9HZ0iDcoFX-H-pmUzoYTanuOzwdIK1Hap3Dbf4XXOXoupupNsNqanaE4/s1600/Ammavin+kaipesi.jpg




3. அம்மாவின் கைப்பேசி -திரைப்பட இயக்குநராகவும், சிறந்த ஒளிப்பதிவாளராகவும் புகழ் பெற்றவரான தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளராகவும் ஏற்கனவே அறியப்பட்டவர்தான். அவரது ஒன்பது ரூபாய் நோட்டுநாவல் மூலம் சிறந்த நாவலாசியராகவும் அறியப்பட்டவர்



அம்மாவின் கைபேசி’ என்ற இந்த நூல், ஒரு குறுநாவலும், நான்கு சிறுகதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது


அம்மாவின் கைபேசி என்ற குறுநாவல் ஒரு தாயின் இறுதிக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ஒன்பது பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஆறு பிள்ளைகளுக்குக் கல்யாணமும் பண்ணிவைத்து, பின் கணவனை இழந்து என்று எல்லாக் காரியங்களையும் பார்த்த பழைய வீட்டில்தான் இன்னும் குடியிருக்கிறாள்


 கடைசிப் பையனைச் செல்லமாக வளர்த்து, கெட்டு குட்டிச் சுவராகவிட்டாள் எனச் சண்டையிட்டு அலுத்துப்போய் எல்லாப் பிள்ளைகளும் தனிக்குடித்தனம் போய்விடுகின்றனர். கடைசி மகனும் "இனி நல்ல நிலைமைக்கு நான் வந்தபிறகு உன்னை வந்து கூட்டிப்போகிறேன்" என்று போனவன்தான். பல வருடங்களாகியும் செய்தி இல்லை. அதன்பின் ஒரு உறவுப்பெண் மூலம் அவனிடமிருந்து கைப்பேசி வருகிறது. அவ்வப்போது பேசுகிறான். ஆனால் இருக்கும் இடத்தைச் சொல்வதில்லை. இடையில் இந்த வீட்டைக் கேட்டு மற்றப் பிள்ளைகளின் தொல்லை. தன் கடைசி மகன் நல்ல நிலைக்கு வந்து தன்னைக் கூட்டிச் செல்லும் வரை நகரமாட்டேன் என்று இந்த வீட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாள்.  


முதுமையாலும் ஆதரவின்றியும் உடலும் மனமும் கெட்டதால் உயிர் ஊசலாடுகிறது. அந்த இளையமகனுக்கும் அங்கு பிரச்சினை. வேலை பார்த்த இடத்தில் பொறாமையால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருவரால் கொல்லப்படுகிறான். அவன் கொல்லப்படும்போது அம்மாவிடமிருந்து வந்த கைப்பேசி அழைப்பை ஒருவன் கேட்டுவிடுகிறான். செத்தவனின் அம்மா இவன் வரவை எதிர்பார்த்து அழும் கடைசி அழுகை. செத்தவனின் சட்டைப் பையில் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதம். கைப்பேசி அழைப்பைக் கேட்டவன் இந்தக் கடிதத்தையும் எடுத்துப் படிக்கிறான்



 தயாராக இரு உன்னைக் கூட்டிச் செல்ல, சொந்தக் காருடன் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்என்ற வரிகள். படித்தவனுக்கு மனம் கலங்கிவிடுகிறது. திரும்ப கைப்பேசி அழைப்பு. தாய் இறந்த தகவல். தன் மகன் வந்தால்தான் பிணத்தை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இறந்துபோனதால் இவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இவனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால் செத்தவனின் கிராமத்துக்குச் சென்று இறந்த அந்தத் தாயின் பக்கத்தில் அந்தக் கடிதத்தையும், கைப்பேசியையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறான்.



திரைப்படப் பாணியில் டக்டக்கென மாறும் காட்சி அமைப்புடன் கதை விறுவிறுப்பாகப் போகிறது


ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAuyfoKrJxu4ir1IVoWD3Se1hZY1cv3pGMTKtC3hQBwTll2MwBTFpCMimNTZrQ0ogqq3EMuAjhmtay4gJDT_Qr3dJNXpe6ZdwB3_kVNDDtaKVyhRZB5N6yHJ3Ap48rqYB6qnZPBADfnaos/s1600/Neerparavai+Movie+Release+Poster.jpg


4. நீர்ப்பறவை -ஈரோட்டில் ரிலீஸ் இல்லை



நல்ல சினிமாவுக்கு உண்மை மட்டுமே போதும்!"

க.நாகப்பன்

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் கிராமத்தைக் கையாண்ட இயக்குநர் சீனுராமசாமி, கடலைக் களம் ஆக்கி இருக்கிறார் 'நீர்ப்பறவை’யாக.


 ''இது இலங்கைத் தமிழர்களின் கதையா?''


''நடுக்கடல்ல ஒரு படகில் பலர் இறந்துகிடக்கிறாங்க. அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கான். தென் இலங்கையைச் சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். அவன்தான் விஷ்ணு. இதுல புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை 14 நிமிஷங்கள் சமரசம் இல்லாமல் பதிவு செஞ்சுருக்கேன். மத்தபடி முழுக்க கிறிஸ்துவ மீனவக் கிராமத்தின் அசலான பதிவு இந்தப் படம். 'நீர்ப்பறவை’ தண்ணீரில் இரை தேடும்.''


''வசனங்கள் ரொம்பக் காட்டமா இருக்கும்போலத் தெரியுதே?''


''ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கார். அதைத் திரைமொழிக்குத் தகுந்தபடி வலுவாக்கி இருக்கேன். சினிமாவுல எல்லாரும் ஜெயிக்கணும்னு நினைக்கிற ஒரே ஆத்மா சமுத்திரக்கனிதான். 'அண்ணே, நான் உங்க படத்துல நடிக்குறேன்’னு உரிமையாக் கேட்டார். 'நம்மகிட்ட ஒத்துமை இல்லை. 30 தொகுதி மீனவனுக்கு இருந்தாத்தான் நம்ம சத்தம் கேட்கும். இல்லைன்னா, அலை மாதிரி நம்ம சத்தம் நமக்குள்ளதான் இருக்கும்’னு  சமுத்திரக்கனி பேசுற ஒவ்வொரு வசனத்துலயும் உண்மை சுடும்.''




''படத்தில் அரசியல் அதிகமா?''


''கடல் அரசியல்தான் 'நீர்ப்பறவை’. கடல்தான் இந்த உலகத்துல மூத்த உசுரு. எல்லாவித இறக்குமதி, அந்நியப் படையெடுப்பு, மதம் வந்து இறங்கிய இடம்னு சகலமும் நடக்குற இடம். இப்போ அங்கே மீனவன் வாழ்றதுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு தக்கையை எல்லையா வெச்சு இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாதுனு சொல்றாங்க. தக்கை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கேயும் இங்கேயும் தள்ளிப்போகுது. கடலுக்கு நடுவே காம்பவுண்டு சுவரா இருக்கு?


நாட்டுப் படகில் மீன் பிடிக்கப்போகும் சட்டை இல்லாத மீனவனை ஒரு அந்நிய நாடு சுடுறதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறை. முப்படைகளும் கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகளை இன்னொரு நாடு சுட்டுக் கொல்றதை எப்படிப் பொறுத்துக்க முடியும்?  இதை எல்லாம் என் படம் கேட்கும்.''



''படம் முழுக்கப் பிரச்னைகள் மட்டும்தானா?''



''இரானில் இருக்கும் இயக்குநர்கள் இரான் பிரச்னைகளைத்தான் படமா எடுக்குறாங்க.  நான் தமிழ்நாட்டு மீனவர்களின் கதையை எடுக்குறேன். எதிரிகள்கூட இந்தப் படத்தைப் பார்த்தா இரக்கப்படுவாங்க. மற்றபடி விஷ்ணுவுக்கும் சுனைனாவுக்கும் இடையிலான சுவாரஸ் யமான, நெகிழ்வான காதல் கதை இருக்கு.''


''கதைக்கு நந்திதாதாஸ் எப்படித் தேவைப்பட்டாங்க?''


''நம்ம மீனவர்களின் அபயக் குரல் நாடு முழுக்க ஒலிக்கணும்னு ஆசைப்பட்டேன். உடனே, நந்திதாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. நான் இதுவரை நேரில் பார்த்திராத நண்பர் ரவி.கே.சந்திரன்,அவங்க கிட்ட 'தைரியமா சீனுராமசாமி படத்துல நடிக்கலாம்’னு சொல்லி இருக்கார். கதையைக் கேட்ட நந்திதா, 'படத்துல நிறைய உண்மைகள் இருக்கு. ஆனால், சினிமாவுக்கு உண்மை போதுமா?’னு கேட்டாங்க. நான் நல்ல சினிமா வுக்கு உண்மை மட்டுமே போதும்னு சொன்னேன். நம்பிக்கையா நடிச்சுக் கொடுத் தாங்க.''

 ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
 http://wallpapers.oneindia.in/d/364585-2/06.jpg

 5. Jab Tak Hai Jaan (2012)-காதல் மன்னன் 14 ரீலை 7 ரீலாய் சுருக்கி முதல் பாதி ,உன்னைக்கொடு என்னைத்தருவேன் 14 ரீலை சுருக்கி 7 ரீல் = ஷாரூக் ஜப் தக் ஹே  ஜான்.Shah Rukh Khan, Katrina Kaif and Anushka Sharma |


 ஈரோட்டில் ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ் 


 http://www.telugunow.com/wp-content/uploads/2012/09/Son-of-Sardar-Wallpapers.jpg?5c1bd2

6. Son of Sardaar - Jassi (Ajay Devgn) falls in love-at-first-sight, in a train with Sukhmeet (Sonakshi), call her Sukh please (she's quite a 'peace' of work); and ends up as a guest in her mad-house full of comical sardaars - The Sandhus. There's the head-of-the-house Billu paaji (Sanjay Dutt), bros Tony (Mukul Dev) and Tito (Vindoo Dara Singh), who've sworn to never have ice-cream and cold-drinks (rum-on-the-rocks is all he's ever had, poor liver, sigh!) until they avenge their father's death; and a kid sardaar who talks about 'pegs' (Patiala types).


Adding solid femme power to this macho sardaar story is Pammi (Juhi Chawla, delightful) Billu's mooh-boli-biwi, Bebe (Tanuja) suffering from part-time memory lapses; and lastly Rajpreet the loved buffalo (who mooed this cheez?) The problem? The Sandhus have been vengefully thirsting for Jassi's head, but can't lay a sword on him because he's their (unwanted) house-guest (mehmaan equals bhagwan, remember?), he even feigns 'paira-te-laces' (paralyses) to stay 'home' to save his life.




 ஈரோட்டில் ஸ்ரீகிருஷ்ணா வில் ரிலிஸ்


7. Anna Karenina (2012 film) -டால்ஸ்டாய் எழுதுன உலகப்புகழ் பெற்ற  நாவல். 900 பக்கம் வரும். அதை பலர் பல முறை படம் ஆக்கி இருக்காங்க.. இப்போ லேட்டஸ்ட்டா .

கதை என்ன? மேரேஜ் ஆன லேடி  தன் கணவனை விட்டுட்டு வேற ஒருத்தனை லவ் பண்றா. அவளோட உணர்வுகள் திரைக்கதையா விரியும்.. ஈரோட்டில் ரிலிஸ் இல்லை 


http://cdn01.cdn.justjared.com/wp-content/uploads/headlines/2012/09/keira-knightley-anna-karenina-character-poster.jpg

இந்த ஃபிகர் முன்பதிவு செய்யப்பட்டது என அறிவிக்க என்ன வழி?

1.இன்று சர்வதேச இருதய தினம் , இதை சாக்காக வைத்து தன் இதயத்தை இடம் மாற்றிய பெண்களை வன்மையாக கண்டிக்கலாம் ;-0



-----------------


2.  நான் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன் - நித்தி # பார்த்தீங்களா .வகுப்புல கூட பிள்ளை "மார்",அங்கேதான் நிக்கறார் நித்தி :-) 



-------------------------


3. ஊரில் ,தெருவில் எந்தப்பெண் வயசுக்கு வந்தாலும் அப்போது தானும் புதுசா வயசுக்கு வந்ததாய் உணர்பவன் தமிழன் 



-------------------


4.  அதிர்ஷ்டலட்சுமி - டொக் டொக் .



 அதி புத்திசாலி - வீட்ல சம்சாரம் இருக்கா, அப்புறமா வாம்மா ;-0 # சும்மா




-----------------------


5. இந்த ஃபிகர் முன்பதிவு செய்யப்பட்டது என அறிவிக்க  ஒரே வழி பாப்பா எங்கே போனாலும் கூடவே போவதே !



-----------------


Yen kangal yeppoathum unnai thaan thaedikondu irukkirathu..

Aanal atharku theriyavillai nee yen
ithayathilthaan irukkiraai yenru..!


6. எப்போ பாரு செல்ஃபோன்ல பேசிட்டோ மெசேஜ் பண்ணிட்டோ இருக்காளா? அப்போ அவ  முன்பதிவு செய்யப்பட்ட பிகர்தான்



-------------------------


7. (சாலையில் உள்ள )ஸ்பீடு பிரேக்கரை விரும்புவர்கள் காதலர்களும் கள்ளக்காதலர்களுமே! # கிளுகிளு அவதானிப்ஸ்






---------


8. நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் சினிமாவுக்காக படப்பிடிப்பு # பிரசவவேதாமேனன்



------------------


9. ஒபாமாவுக்காக என் ஆடைகளை கழற்றி வீச தயார்” – பாப் இசை பாடகி மடோனா # அவர் லேடீஸ் டிரஸ் போடமாட்டாரே?



--------------


10. சந்தோசத்துலயே கிளு கிளு சந்தோசம் கூட்டமான பேருந்தில ஸ்டேண்டிங்கில் அழகிய ஆண்ட்டியின் பின்் அகஸ்மாத்தாக நிற்க இடம் கிடைப்பதே! -



-----------------------



11. தமிழகத்தில் தொடர் மின் வெட்டை கண்டித்து ஜெ ராஜினாமா # கலைஞர் கண்ட கனவு



------------------------


12. டைரக்டர் சார், நீங்க எடுத்த எல்லாப்படத்தையும் முதல் நாளே பார்த்துடுவேன் # யோவ், இதுதான்  என்  முதல் படம்



-------------------------


13. கே -ஜோசியரே! லவ்மேரேஜ் பண்ணினா எதிர்காலம் நல்லா இருக்குமா?



# ப - லவ்மேரேஜ் பண்ணினா எதிர்காலம் நல்லா இருக்குமா?


--------------------


14. படத்துல ஏகப்பட்ட சப் டைட்டில் இருக்காமே? படமே சப் தான்



-------------------


15. கல்யாணம் ஆன எல்லாரும் எப்பவும் எதையோ தொலைச்ச மாதிரியே இருப்பாங்க கவனிச்சீங்களா ? # கற்பை தொலைச்சிருப்பாங்க ;-0




----------------------------------





16.  ஜெயித்தால் அதிர்ஷ்ட லட்சுமி துணை என்றும் தோற்றால் கிரஹ லட்சுமி துணை என்றும் நினை # எப்பவும் ஒரு பிகர் உன் பக்கத்துல




---------------------


17. பேசா மடந்தையாய் நீ!உன்னுடன் பேசத்துடிக்கும் குழந்தையாய் நான்.# ஊடாடிய பொழுதுகள்



---------------------


18. ஊடல் கொண்டாள்.டல்



---------------------


19. தமிழக சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் திடீர் ராஜினாமா.# ஜெவின் ஆணைப்படி?



---------------------



20. லேட்பிக்கப் - பீச்சில் ,பார்க்கில் காதலனுக்காக காத்திருந்து கடுப்பாகும் பெண்ணிடம் பேச்சுக்குடுத்து அவளை பிக்கப் செய்வது ;-)



-------------------------




21. கணவனும், மனைவியும் சேர்ந்து சமைத்துப் பாருங்கள்,ஒரு பய விருந்தாளியா வர மாட்டான்



-----------------------


22. குழந்தைகளின் உலகம் ரொம்ப சின்னது.அதற்குள் நுழைந்து அவர்களுடன் ஐக்கியம் ஆகும் சாமார்த்தியம் உன்னுது



--------------------


23. உனக்கு பலூன் வாங்கித்தரவா?பொம்மை வேணுமா?


டாடி.கடைல காசு குடுத்து வாங்கறது போர்.நீங்களாஏதாவது கிரியேட்டிவ்வா செஞ்சு குடுங்க


------------------


24. மூன்றாம் உலகபோர் வராம இருக்க என்ன வழி?



 வைரமுத்து கிட்டே சொல்லி பப்ளிஷ் பண்ண வேணாம்னு சொல்லனும்



-----------------------


25. ஒவ்வொருமுறையும் புது பிகர் எதிர் வீட்டில் குடி் வரும்போதும் ஏற்கனவே வந்த பிகர்்களை பார்க்காமல் ,மடிக்காமல் இருப்பது உறுத்துகிறது



-------------------------


இந்த படத்தில உள்ள UPSச யூபிஎஸ்ஸுன்னு வாசிச்சா நீங்களும் தமிழ்நாட்டின் குடிமகனே!



26. தற்பெருமை அடிக்கக்கூடாது் என்று நியதி இருந்தால் பெரும்பாலான் பெண்கள்் மௌன விரதமே இருந்திருப்பார்கள் !!!



--------------------------


27. தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி  VS சிம்புவின் போடா போடி # டான்ஸ் மாஸ்டர் வித் உடான்ஸ் மாஸ்டர்?



-------------------



Photo: Good Night....!

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Vairamuththu_Family.jpg 
விகடன் மேடை - கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள் !

அன்பு கவிதா, புதுக்கோட்டை. 
 ''இந்த உலகத்தில் முக்கியமான நபர் யார்?'' 


 ''உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னை முக்கியம் என்றுதான் நினைத்துக்கொள்கிறான். ஆனால், இந்த உலகம் யாரையும் முக்கியம் என்று நினைக்கவில்லை. எவனொருவன் இறக்கும்போது இந்த பூமி நின்றுபோகிறதோ அல்லது சில கணங்கள் நின்று சுற்றுகிறதோ, அவன்தான் முக்கியமானவன்.''


ராஜகுமாரன், வேளாங்கண்ணி. 


 ''உங்கள் மகன்களின் திறமைபற்றித் தந்தை நிலையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' 



 ''பிள்ளைகளுக்குப் பெற்றோர் பி.ஆர்.ஓ. ஆகக் கூடாது. முகம் கொடுப்பது நம் பொறுப்பு; முகவரி அவர்கள் பொறுப்பு. திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை. பிள்ளைகளின் பெருமை யைப் பெற்றவரா பேசுவது? அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவார்கள். கல்வி - கடமை - உண்மை - உழைப்பு - நேர்மை - பண்பு என்பவற்றை ஊட்டி வளர்த்திருக்கிறோம். இனி, அவரவர் வானம்; அவரவர் சிறகு.''



செந்தாமரை காளிமுத்து,  கோயம்புத்தூர்-6. 



''வயதுக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?'' 


''இல்லை என்பதுதான் எஸ்.பி.பி. என் மீது வைக்கும் குற்றச் சாட்டு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ படத்துக்காகப் பாட வந்தார் எஸ்.பி.பி. வழக்கம்போல் நான் வரிகளைச் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வந்தார்.


'கண்டார் மயங்கும்
வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி-உன்
பின்னே பிறந்து
முன்னே வளர்ந்தது
என்னே செழுமையடி’


என்ற வரிகளைச் சொன்னபோது, எழுதுவதை நிறுத்திவிட்டு இதழ்க்கடையில் குறும்பு கொப்புளிக்க 'வயதுக்கு மீறிச் சிந்திக்கிறீர்கள்’ என்றார்.



'எழுத்தாவது இளமையாய் இருக்கட்டுமே’ என்றேன்.


படைப்பாளன் முதிர முதிரப் படைப்பு இளமையாவதுதான் கலையின் ரசவாதம்.''



கே.பாலு, செய்யாறு. 


''ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் எப்போதாவது உங்களிடம் பாராட்டிச் சொன்னது உண்டா?'' 


''ஒரு சம்பவம் சொல்கிறேன்.

கலைஞர் முதலமைச்சர் - ஜெயலலிதா
அம்மையார் எதிர்க் கட்சித் தலைவர். அப்போது குங்குமம் பத்திரிகையில் கேள்வி - பதில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு ஒரு வினா வந்தது.

'ஜெயலலிதா நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் என்ன?’
'எங்கிருந்தோ வந்தாள்’ - அந்தப் படம் மட்டும் 'கிலோனா’ என்ற இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பாக இல்லாமல் இருந்தால், அப்போதே அவருக்குத் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று விடை எழுதினேன்.



பதிலைப் படித்ததும் ஆசிரியர் குழு மேஜையில் புயல் அடித்தது. 'தவிர்த்துவிடலாமா’ என்றார்கள் என்னிடம். 'கூடாது; அப்படியே பிரசுரிக்க வேண்டும்’ என்றேன் நான்.



கலக்கமுற்றவர்கள் கடைசியில் கலைஞரின் பார்வைக்கு என் பதிலைக் கொண்டுசென்றுஇருக்கிறார்கள். கலைஞர் படித்துப் புன்னகைத்தாராம். 'பிழையில்லையே; பிரசுரிக்கலாமே’ என்றாராம். எழுத்து மாறாமல் அது அச்சானது.



அப்படியானால், என் கருத்துதானே கலைஞரின் கருத்தும். கலை வேறு - அரசியல் வேறு என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன?''



எம்.நாகராஜன், முடிகொண்டான். 


' ' இதுவரை நான்’ சுயசரிதையில் விட்டுப்போன சம்பவம் ஏதாவது?'' 



''பதினொரு வயதிருக்கும் எனக்கு. அழுது அழுது கண் சிவந்த என் அத்தைமார்களுள் ஒருவர் என்னை அழைத்தார்.


'வைரமுத்து நான் சொல்றதச் செய்வியா?’


'செய்யிறேன் அத்தை’.


'பக்கத்து ஊரு தாமரைக்குளத்துல இன்ன தெருவுல, இத்தனாம் நம்பர் வீட்டுக் கதவு மேல விடிய்ய சாணியடிச்சுட்டு வீடு வந்து சேரு.’


அத்தையின் சித்தத்தைச் சிரமேற்கொண்ட நான், எங்கள் வீட்டுப் பண்ணையாள் கருத்தக்கண்ணனைத் துணைக்கு அழைத்துக்கொண்டேன். அவன் பிரம்புக் கூடையில் சுமந்து வந்த சாணியை அந்த வீட்டுக் கதவில் 'சப்புச் சப்பு’ என்று எறிந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். அது இன்னொரு மதத்தைச் சேர்ந்த இளம் விதவையின் வீடு என்று மறு நாள் தெரிந்துகொண்டோம்.


அதுவரை காணாமல் போயிருந்த மாமன் சில நாளில் வீடு வந்து சேர்ந்தார். அதன் பிறகு, அத்தை என்னை எங்கும் சாணியடிக்கச் சொல்லவில்லை.


ஆனால், இலக்கமில்லாத கதவுகளும் கதவு இல்லாத வீடுகளும் மாமனுக்கு அத்துபடி


என்பதை அய்யோ பாவம், அத்தை அறியவில்லை.''


ம.சுயம்புலிங்கம், சென்னை-33. 


''வழக்கமான கேள்விகளால் சலித்துப் போயிருப்பீர்கள். மாறுதலுக்கு ஒரு கேள்வி: சிறுநீர் - சிறுகுறிப்பு வரைக?'' 


''நன்றி.
இந்த உலகம் கடல் நீரால் சூழப்பட்டு இருப்பதுபோல், உயிர்கள் சிறுநீரால் சூழப்பட்டு இருக்கின்றன. சிறுநீர் இழிவானதன்று. மாரடைப்பைத் தடுக்கும் மருந்து சிறுநீரில் தயாரிக்கப்படுகிறது. சிறுநீரில் தங்கமெடுக்க முனைந்த ஆராய்ச்சி வெள்ளை பாஸ்பரஸ் கண்டுபிடிப்பதில் முடிந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் தோலின் மினுமினுப் புக்கு உடம்பெங்கும் சிறுநீர் பூசிக்கொண்டார் கள் இங்கிலாந்துப் பெண்கள்.



சிறுநீரில் ஊறிய புல்லைத்தான் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள் எஸ்கிமோக்கள். கோமேயம்தான் சிறந்த கிருமி நாசினி என்று கண்டுபிடித்தவர்கள் இந்துக்களும் ஆப்பிரிக்கர் களும்.


ஒரு டஜன் எலிகள் கூடி ஒரு நாள் முழுக்கச் சிறுநீர் கழித்தாலும் ஒரு டீஸ்பூன்கூட நிரம்பாதாம். ஆனால், ஒரு யானை ஒரு நாளில் 49 லிட்டர் சிறுநீர் கழிக்கிறதாம்.



கொசுவுக்கும் சிறுநீர் உண்டு. ஆனால், அதன் கழிப்பறைதான் உலகத்திலேயே உயர்ந்தது. மனித உடல்தான் கொசுவின் சிறுநீர்க் கழிப்பறை. உடம்பில் ஊசிபோடும் கொசு, தன் சிறுநீரை உடம்புக்குள் கழித்துவிட்டு அந்தக் காலி இடத்தை நம் ரத்தத்தால் நிரப்பிக்கொள்கிறது.


சிங்கத்தின் சிறுநீர் வாசம் அத்துணை சீக்கிரம் தீராது. காடுகளில் குறிப்பிட்ட எல்லைகளில் சிறுநீர் கழித்துச் செல்லுமாம் சிங்கம். இது என் காடு, இதற்கு மேல் எதிரிகள் வரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யுமாம் சிங்கத்தின் சிறுநீர் வாசம்.


ஆட்டுக் கிடாய் தன் உடம்பெங்கும் சிறுநீரைப் பூசிக்கொள்ளுமாம். அது வெள்ளாட்டைப் பாலுணர் வுக்கு அழைத்து வெறியூட்டுமாம். ஆடுகளுக்கு 'சென்ட்’ ஆகிவிடுகிறது சிறுநீர்.


மொஹியோ பாலைவனத்து ஆமைகளின் உடம் பில் மூன்றில் ஒரு பங்கு சிறுநீர்தானாம். உடம்பில் நீர்ச் சத்து குறைந்துபோனால், சிறுநீரைத்தான் சுழற்சிக்கு அனுப்புமாம்.


மனிதனின் பிரச்னைகள் ஆரம்பமாவது இரண்டில். சிறுநீர் அதிகம் பிரிவது; மற்றும் சிறிதும் பிரியாதது. அவரவர் சிறுநீர் பருகுதல் அவரவர் நோய்தீர்க்கும் என்பதும் ஒரு மருத்துவ நம்பிக்கை.


எனவே, சிறுநீர் என்பது சிறுமைக்குரிய நீரல்ல. 'சிறுநீர் இன்றியும் அமையாது இவ்வுலகு’.''

http://www.bharatstudent.com/ng7uvideo/bs/gallery/normal/events/kw/2010/sep/vairamuththu-son-wedding-stills/vairamuththu-son-wedding-stills_031.jpg


பழனி பாஸ்கர், மன்னார்குடி. 


''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா?'' 



''நீண்ட ஆண்டுகளாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு என் மௌனமே பதிலாக இருந்தது. இன்று அந்தப் போலி மௌனத்தின் பூட்டை உடைக்கிறேன்.
பாரதிராஜா - இளையராஜா இருவரும் தமிழ் சினிமாவில் தடம் சமைத்தவர்கள்; தத்தம் துறையில் தலைமை பூண்டவர்கள். அவர்கள் பெற்ற வெற்றியில்தான் நான் ஒட்டிக்கொண்டேனே தவிர, என்னால் அவர்கள் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், என் வருகைக்கு முன்னும் பிரிவுக்குப் பின்னும் வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.



பிரிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய முடியுமா என்கிறீர்கள். ஆனால், ஒரு தலைமுறை கடந்துவிட்டது. சமூகம் இடம்பெயர்ந்துவிட்டது. சரக்கு உன்னதமாக இருந்தாலும் சந்தையின் தேவை மாறிவிட்டது.



இப்போது இணைந்தால் பழைய பாணி எடுபடுமா? அறுபதாம் கல்யாணத்துக்குப் பிறகும் தம்பதிகள் ஒரே அறையில் தங்கலாம். அதற்குப் பெயர் முதலிரவா?



வாத்தியங்களில் இருந்த இசை தொழில்நுட்பத்துக்குத் தாவிவிட்டது. மீண்டும் பழைய பாணியில் பாடல்கள் அமைத்தால் நவீனமாக இல்லை என்பார்கள். நவீனமாக இசையமைத்தால் பழைய பாடல் போல் இல்லை என்பார்கள். ஆகவே, எங்களின் பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருப்பதுதான் ரசிகனுக்கு விஷப்பரீட்சை இல்லாத விருந்தாக இருக்கும். எனவே, நாங்கள் இணைவது என்றாவது சாத்தியமாக இருக்கலாம்; இயங்குவது சாத்தியமாக இருக்குமா?''



- இன்னும் பேசுவோம்...

நன்றி 0 விகடன்  


டிஸ்கி -

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

 




என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

 

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html

 

 


http://onlysuperstar.com/wp-content/uploads/2011/06/Vaali_Rajini_Vairamuththu.jpg

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Thuppaki-Movie-Latest-Images/Thuppakki-stylish-wallpaper-design-600x375.jpga


தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும்  கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் . 


ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.


தொடர்ந்து 5 தோல்விப்படங்கள் கொடுத்து காவலன் மிதமான வெற்றி , நண்பன் , வேலாயுதம் சராசரி வெற்றி என்று தெம்பில் இருக்கும் விஜய்க்கு கண்டிப்பாக இது ஏறு முகம் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு உற்சாகமான , வேகமான ,அழகிய விஜயை இதில் பார்க்க முடிகிறது. கடைசியாக சச்சினில் அப்படி பார்த்தது. நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா இது ஆக்‌ஷன் படம் , சும்மா வந்து நின்னா போதும், இயக்குநரும் , வசனகர்த்தாவும் மிச்ச வேலையை பார்த்துக்குவாங்க.. ( இருவரும் ஒருவரே) 



ஹீரோயின்  காஜில் அகர் வால்.தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி அரை லூஸ் போல் சிரிச்சுக்கிட்டு , அரை குறையா உடுத்திக்கிட்டு வர்றார். பாடல் காட்சிகளில் பளிச். டைட் பனியன் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் லூஸ் ஆகிடறாங்க.. கொடுத்த 40 லட்சத்துக்கு இது போதும்னு நினைச்சிருப்பார் போல 


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/Vijay-Thuppaki/Thuppaki-Kajal-Agarwal-Stills-2.jpg



ஜெயராம், சத்யன் சும்மா டைம் பாஸ்க்கு , காமெடிக்கு. நல்லா யூஸ் பண்ணி இருக்கார் இயக்குநர்.வில்லன் பெருசா ஒண்ணும் பண்ணலை. ஏன்னா வில்லனை ரொம்ப புத்திசாலியா காட்டிட்டா ஹீரோ பேர் வாங்க முடியாதே? ( ஆனா வில்லனை பயங்கர டேலண்ட்டா காட்டி ஹீரோ அவனை வெல்லும்போதுதான் ஹீரோ கிராஃப் டகார்னு எகிறும்.. )


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பாம் வைக்க பிளான் போடும்  தீவிரவாதிகள் 12 பேரை மிலிட்ரி ஆட்கள் 12 பேரை வைத்து ஒரே டைமில் போட்டுத்தள்ளும் பர பரப்பான சீன் 


2. வில்லன் கடத்தும் 5 பெண்களில் தன் தங்கயை தூண்டில் புழுவாய் ஹீரோ யூஸ் பண்ணி வீட்டு நாயை மோப்பம் பண்ண வைத்து இருப்பிடம் அறியும் புத்திசாலித்தனம்


3. க்ளைமாக்ஸில் வில்லனை அழிக்க  ஹீரோ தற்கொலைப்படை  ஐடியா போடுவது அதற்கான திட்டங்கள் , சிஸ்டமேடிக்காக செய்வது 


4. ஓப்பனிங்க் ஷாங்க்ல ஆடை அலங்காரங்கள் , பூக்களின் அணி வகுப்பு அழகு 

5. பெண் பார்த்து போன பின் ஹீரோயினின் முரண்பாடான குணாதிசயங்களை காமெடியாக காட்டிய விதம் 



6. ஹீரோ மேப்பில் 12 இடங்களை வரைந்து அதை இந்திய மேப்பில் வைத்து மேட்ச் பண்ணும் இடம் 


7. ஹோட்டலில் விஜய் - ஜெயராம் - காஜில் காமெடி காட்சி. ஜெயராம் பார்க்காத தருணத்தில்  விஜய்க்கு  காஜில்  கிஸ் தருவதும் அதை லேடி பார்த்து திகைப்பதும் 







http://moviegalleri.net/wp-content/gallery/thuppaki-movie-latest-stills/thuppaki_movie_latest_still_vijay_kajal_agarwal_8d1e5ba.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மிலிட்ரிமேன் அப்டின்னா மழு மழு டெயிலி ஷேவிங்க்  உடன் இருக்கனும். இளைய தளபதிக்காக பிரெஞ்ச் தாடிக்கு  அனுமதி கொடுத்துடுவாங்களா?



2. ஹீரோ பெண் பார்க்க வரும்போது ஹீரோயின்  லோ ஹிப் சேலை , ஜெயா டி வி யில் குஷ்பூ போட்டு வரும் ஜாக்கெட்டை விட மோசமான புற முதுகை 98 % காட்டும்  ஜாக்கெட்டை அணிந்து வருகிறாரே? பெண் பார்க்கும் படலத்திலாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு முடிஞ்சவரை மூடி இருக்கக்கூடாதா? 


3. முதன் முதலாக பாம் வைப்பவனை எதேச்சையாக விஜய் பிடிக்கும் காட்சி லாஜிக் சறுக்கல்.  யாரோ பிக் பாக்கெட்டை பிடிக்க பஸ்ஸை நிறுத்தி எல்லாரையும் செக் பண்றாங்க. பாம் வைத்த பேக்கை தீவிரவாதி  பஸ்லயே வெச்சுட்டு இறங்கி வர்றான். அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தா அவனை செக் பண்ணி அவனிடம் பர்ஸ் இல்லை என்றதும் விட்டுடப்போறாங்க. அவன் ஏன் கேனம் மாதிரி ஓடனும்? அதை கடைசி கட்டத்தில் மாட்டின பிறகு பண்ணினா போதுமே? இவனா ஏன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடனும்? ( பாம் வெடிச்சுடும் என சாக்கு சொல்ல முடியாது, அப்படி டைமிங்க் பக்கமா இருந்தா அவன் ஏன் பஸ்ல பயணம் பண்ணனும்? அப்பவே வெச்சுட்டு இறங்கி போய் இருக்கலாமே? ) 



4. பப்ளிக் ப்ளேஸ்ல பொது மக்கள் முன்னிலையில் 12 பேர் 12 இடங்கள்ல ஷூட் செய்யப்படறாங்க.. ஏன் சைலன்சர் யூஸ் பண்ணாம சுடறாங்க? பில்டப்பா? மக்கள் மத்தியில் யாருக்கும் தெரியாம மேட்டரை முடிச்சு இருக்கலாமே?  தேவையற்ற கலவரம், பீதியை தடுக்க அதுதானே நல்ல வழி? 



5. ஸ்லீப்பர் செல்ஸ் ஆசாமிகளைப்பற்றி ஏன் விஜய் சப் இன்ஸ்பெக்டர் சத்யனோட காரிடார்ல நடந்துக்கிட்டே பப்ளிக்கா பேசறார்? தனி ரூம்ல பேச வேண்டிய விஷயம் அல்லவா? 




6. தீவிரவாதிங்க  அந்த 5 லேடீசை கடத்துறது ஆள் ஃபோட்டோ அடையாளம் வெச்சுத்தான். ஸ்கூட்டி நெம்பர் பார்த்து அல்ல,. ஹீரோவின் தங்கை ஆள் மாறாட்டம் பண்ணி ஸ்கூட்டில போறப்ப முக ஜாடையை வெரிஃபை  பண்ணாம  சும்மா நெம்பர் பிளேட்டை மட்டும் செக் பண்ணி தீவிரவாதிங்க அவ்ளவ் அசால்ட்டா இருப்பாங்களா? 


http://www.sattigadu.com/wp-content/uploads/2012/05/Kajal-Agarwal-Stills-From-Thuppaki-Movie-2.jpg


7. ஒரு சீன்ல ஹீரோவின் தங்கை தீவிரவாதிகள் பிடில இருக்கா. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகறார். முறைப்படி வில்லன் கூட்டம் ஹீரோவின் தங்கையை பிணையக்கைதியா வெச்சு எஸ் ஆகி இருக்கலாம்,. அதை விட்டுட்டு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு தனித்தனியா ஹீரோ கிட்டே ஏன் சண்டை போடனும். அசைஞ்சா உன் தங்கச்சி க்ளோஸ்னு மிரட்ட வே இல்லை? 


8. தீவிரவாதிகளிடம் மேலிடம் அவளை முடிச்சுடுன்னு சொன்ன உடனே டப்னு ஷூட் பண்ணாம ஆற அமர வீடியோ கேமரா எல்லாம் செட் பண்ணி எதுக்கு அவளை கொல்வதை வீடியோ எடுக்க ரெடி ஆகறாங்க? அது என்ன பி எஃப்ஃபா? அல்லது மிரட்ட பயன்படும் ஆயுதமா? 



9. ஹீரோ தீவிரவதிகள் கூட ஃபைட் பொடும்போது ஒரு ஆம்பளைக்கு கிஸ் கொடுத்து கொலை பண்றாரு. எந்த ஹாலிவுட்ல இருந்து உருவுன சீனோ.. கேவலமா இருக்கு.. 


10. மிலிட்ரி ஆள்ங்கன்னா கற்பூரம் மாதிரி இருக்க வேணாமா? ஹீரோ ஃபோன் பண்ணி தன் ஆளுக்கு எச்சரிக்கை விடுக்கறார். ஆபத்து, பாம் இருக்குன்னு . டக்னு எஸ் ஆகாம அந்த ஆள் பேக்கு மாதிரி ஸ்டன் ஆகி நிக்கறான். ஏன்? 


11. க்ளைமாக்ஸ்ல ரமணா, குருதிப்புனல் மாதிரி ஹீரோ சாகும் கதை அமைப்பு வெச்சுட்டு எப்பவும் போல் சராசரிப்படமாக மாத்தியது ஏன்?அங்கே ஏ ஆர் முருகதாஸ் காணாம போய் ஹீரோ விஜய் தான் நிக்கறார். ரமணாவுல இருந்த தைரியம் ஏன் இதுல இல்லை? 



12. படம் ரிலீஸ் ஆகும் முன் கொடுத்த பேட்டில க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அப்டினு பில்டப் கொடுத்தா. அந்த ட்விஸ்ட் என்ன? சார்? ஒரு வேளை எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட்டோ? 


13. படம் நீளம் அதிகம். ரெண்டே முக்கால் மணி நேரம். பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு. விஜய்க்காக சேர்த்து இருக்காங்க.. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெலோடி எதுக்கு? கில்லி க்ளைமாக்ஸ் பாட்டு எவ்ளவ் ஸ்பீடு? 


14. ஹீரோ மாட்டிக்கிட்டதும் வில்லன் டக்னு போட்டுத்தள்ளாம இன்னும் எத்தனை படத்துல ஒண்டிக்கு ஒண்டி சண்டை வர்றியா?ன்னு ஹீரோ கேட்பதும், அதுக்கு வில்லன் ஓக்கே சொல்லி அநியாயமா சாவதும்   உஷ் அப்பா, முடியல




http://fingertipszone.com/cinema_images/tamil/Thuppaki/Thuppaki_43.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1.   -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா


3. நீ யாரு?ன்னு எனக்குத்தெரியாது.ஆனா உன் இருப்பிடம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா நீ தொலைஞ்சே.உன்னை கொன்னுடுவேன்.



விஜய் - ஐ ஆம் வெயிட்டிங் 




4. காஜில் - ஐ . ஐ ... 



விஜய் - ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல இருந்து நேரா வர்றியா? 



5. உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது.எனக்கு சஸ்பென்ஸ் ஓப்பன் பண்ணா பிடிக்காது 



6. பொண்ணை பாடச்சொல்லுங்க. 



மாப்ளை போட்டிருக்கும மிலிட்ரி டிரஸ்க்கு ஜனகனமன தான் பாட முடியும் 


7. ஏதாவது பண்ணி பெரிய ரிஸ்க் ஆகிடுமோன்னு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா அதுதான் பெரிய ரிஸ்க்




8. அழகா இருக்கறவன் திறமைசாலியா இருக்க மாட்டான் ,திறமைசாலி அழகா இருக்க மாட்டான்.அழகும் ,திறமையும் ஒருத்தன் கிட்டெ இருக்கறது அபூர்வம்.் 


http://www.teluguone.com/tmdbuserfiles/kajal-boxing-stills.gif




9.  ட்ரெயின் கரெக்டா எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க..


 அதை ட்ரெயின் வந்த பின் தான் சொல்ல முடியுமாம்


10.  டேய், வயசாகிட்டே போகுது. மேரேஜை தள்ளிப்போடாதே


 விளையாடாதே, ஒரு நாள்ல எவ்ளவ் வயசு ஏறிடும்?நாளைக்கு போலாம்.. 



11. எனக்கு பொண்ணை பிடிக்காம போனதுக்கு 3 காரணம் 

1. ஒன்னரை மீட்டர் கூந்தல் இருக்கு. மேரேஜ்க்குப்பின் இவ எப்படி ரெடி ஆவா? ரொம்ப லேட் பண்ணுவா 

2.  ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கா.. 


3. மாடர்ன் லுக்கே இல்லை.. பழம் பஞ்சாங்கமா இருக்கா.. 


12. நான் வெளில போறேன், வீட்லயே காலைல இருந்து சாயங்காலம் வரை இருந்தா கெட்டுடுவேனாம்.


13. ஏய், சும்மா பிகு பண்ணாதடி, நமக்கு இந்த வளைவு நெளிவுகள் இருக்கும் வரை தான் மார்க்கெட்..



14. எதுக்கு சண்டைக்கு வர்றே? நான் கண்ணாடிக்குத்தானே கிஸ் பண்ணேன்? 

 ஆனா கண்ணாடில இருந்தது நான்


15. நான் ஒரு வ்கைல அவளை பாராட்றேன், நம்ம கிட்டே பேசிக்கிட்டே சாவியை எடுத்துட்டுப்போய்ட்டா பாருங்க.. 

 ஒரு ஸ்மால் கரெக்‌ஷன், பேசிக்கிட்டே இல்லை.. திட்டிட்டே.. 



16. நீ பெரிய ஆபத்தை தொட்டுட்டே

 ம் ம் ம் 
http://www.tamilkey.com/wp-content/uploads/2012/07/thuppaki-3-e1341544202295.jpg

17. ஏண்டி இப்படி ஒரு கேவலமான ஆம்பளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே?

 பி பிராக்டிகல். மாசம் 2 லட்சம் ரூபா சம்பளம் 


18. ஆர் யூ ஸ்மீக்கிங்க்? 

 வாட்?

 தமும்மா தம்

 ம்ஹூம்

 சாரி, ஐ லைக் ஸ்மோக்கிங்க் கேர்ள்ஸ் ஒன்லி.. 

 ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சரக்கு

 ம் ம் லைட்டா, சில டைம் வோட்கா கூட ட்ரை பண்ணி இருக்கேன் 


சாரி. எனக்கு தண்ணி அடிக்கும் பெண்களைக்கண்டாலே பிடிக்காது


19. நம்ம லவ்வை பிரேக் பண்ணிடலாம்

 வாட்? இன்னும் ஒன் அவர் கூட ஆகலை.. அதுக்குள்ளேயா?


20. உன் கப்போர்டுல ஒண்ணுல வில்லன், இன்னொண்ணுல ஜோடி.. 2 பேரையும் ஒளிச்சு வெச்சிருக்கே? கப் போர்டுல துணியே வைக்க மாட்டியா? 


21. எல்லா ஃபீல்டுலயும்  சின்சியரா ஒர்க் பண்ணீனா  பிரமோஷன் கிடைக்கும், ஆனா போலீஸ் , மிலிட்ரில மட்டும்  பெரிய காயம் பட்டா ரிட்டயர்மெண்ட் தான்


22. அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு பயம் ம் ம்


23. உனக்கு எதும் புரியல இல்லை? சஸ்பென்சோடயே சாவு


24. அவளுக்கு உன்னை பிடிக்கலை ஹா ஹா 

 இதுல சிரிக்க என்ன இருக்கு? 

 ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலைன்னா இனிமே யாருக்கு உன்னை பிடிக்கும்? 


25. காஜில் - டேட்டிங்க் முதன் முதலா வந்தா கேட்டதை குடுக்கனும், நீ பாட்டுக்கு கிஸ் கேட்டுட்டேன்னா நான் என்ன பண்றது? குடுத்துத்தானே ஆகனும்? 


26. எனக்கு எப்படி கிஸ் பண்ணனும்னு தெரியாதே?

 நீ கண்ணை மூடு, நான் பார்த்துக்கறேன்

 ம்ஹூம், நான் கண்ணை மூடினா போன தடவை மாதிரி நீ ஓடிடுவே


27. நாம கெஸ் பண்றது நடக்கலைன்னா நாம் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், எதிரி வேற ஏதோ பிளான் பண்றான்னு அர்த்தம்


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  ரேங்க் - 6 /10 

http://wallpapers.oneindia.in/d/364506-2/thuppaki-new-wallpaper-01.jpg



சி.பி கமெண்ட்  - போக்கிரிக்கு கீழே , நண்பனுக்கு, வேலாயுதத்துக்கு  மேலே - சாதா கதை, நல்ல திரைக்கதை - ஓக்கே.விஜய் ரசிகர்கள் , பெண்கள் என எல்லாத்தரப்பும் ஃபேமிலியுடன் பார்க்கும்படி தான் படம் இருக்கு . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 


டிஸ்கி - போடா போடி-http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html


http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg

diSki 2  -

போடா போடி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html


 

பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!
பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!




போடா போடி

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters/images/tamil-cinema-poda-podi-movie-wallpapers-new-look-posters06.jpgபோடா போடி


சிம்பு, வரலெட்சுமி சரத்குமார், ஷோபனா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'போடா போடி'. தரண் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் விக்னேஷ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நாயகனுக்கும் நாயகிக்கும் நடுவில் எப்படி காதல் உருவாகி,  இருவரும் இணைந்தார்கள் என்பது பல காதல் படங்களின் கதையாக இருக்கும். ஆனால் 'போடா போடி' படத்தில் காதலிக்கும் போது நடைபெறும் பிரச்னைகளை மையமாக வைத்து முழுப்படத்தினையும் எடுத்து இருக்கிறார்கள். படத்தில் இசையும் நடனமும் ஒரு பகுதியாக இல்லாமல் கதையோடு ஒன்றி இருக்கும் என்கிறது படக்குழு.

'போடா போடி'  படத்திற்காக லண்டனுக்கு பல்வேறு காலகட்டங்களில் போய் படமாக்கி இருக்கிறார்கள். வரலெட்சுமி சரத்குமார் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை ஒருவழியாக தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ' லவ் பண்ணலாமா வேண்டாமா ' என்ற பாடல் முதலில் ' போடா போடி ' படத்தினை அறிமுகம் செய்தது.

அப்பாடல் YOUTUBE இணையத்தில் ஹிட்.. அதனைத் தொடர்ந்து படத்தினைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியே கசியாமல் படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள்.

' போடா போடி ' படத்தின் மிகப்பெரிய பலம் பாடல்கள் தான்.  லவ் பண்ணலாமா வேண்டாமா, போடா போடி காதலை காதலிக்கிறேன், I AM A KUTHU DANCER என அனைத்து பாடல்களுமே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இசை உரிமையை பெற்று இருக்கும் சோனி நிறுவனம் வெளியிட்ட முதற்கட்ட சி.டிக்கள் அனைத்துமே விற்று தீர்ந்து தற்போது இரண்டாம் கட்ட சி.டிக்கள் விற்பனையில் இருக்கிறது.

'போடா போடி' படம் குறித்து சிம்பு " 'போடா போடி’ ரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ மாதிரி கலர்ஃபுல்லான படம். அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!'' என்று தெரிவித்து இருக்கிறார்.

விரைவில் சென்சார் முடித்து படத்தினை தீபாவளிக்கு டான்ஸ் பட்டாசு கொளுத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.



நன்றி - விகடன்


http://moviegalleri.net/wp-content/gallery/poda-podi-movie-new-stills_1/poda_podi_new_stills_photos_simbu_varalaxmi_121e03e.jpg


சிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ‘போடா போடி’ படத்தின் கதை திடீரென்று லீக்காகியிருக்கிறது. இந்த சம்பவம் நடந்திருப்பது சிம்பு உள்ளிட்ட ‘போடாபோடி’ டீமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



சிம்புவுக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஸ்டோரி டான்ஸை மையப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
இளம்வயதில் தோன்றும் காதல் சரியானதுதானா? அப்படி வரும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் என்னென்ன? என்பது தான் படத்தின் ஸ்க்ரீன்ப்ளேவாம்.



கதைப்படி, சென்னையில் இருந்து வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா செல்கிறார் சிம்பு. போகிற இடத்தில் நடனத்தை மட்டும் கற்றுக் கொண்டால் பரவாயில்லையே, அங்கே படிக்கும் வரலட்சுமியுடன் காதலையும் கற்றுக் கொள்கிறார்.



நடனப்பள்ளியை நடத்தி வரும் ஷோபனா காதலிக்காதீங்க என்று சொல்லியும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருவரும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். காதல், பின்பு ஈகோ பிரச்சினையில் வந்து நிற்கிறது.



ஒருநாள் தனது சித்தப்பாவான விடிவி கணேஷிடம் வந்து நிற்கிறார் வரலட்சுமி. ப்ரிமேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டத்தன் மூலம் கர்ப்பமாகி விட்டதாக சொல்கிறார். அவசர அவசரமாக இருவருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார் கணேஷ். இளமையில் ஜாலியாக இருக்க வேண்டிய காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது.



திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஈகோ இருவரையும் பிரித்துவிடுகிறது. பிரிந்தவர்களை அவர்களின் காதலும் அவர்கள் நேசிக்கின்ற டான்ஸூம் அவர்களை எப்படி சேர்த்து வைக்கிறது என்பது தான் போடா போடியின் கலர்ஃபுல்லான ஸ்க்ரீன்ப்ளேவாம்.



கதையப் படித்தால் “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் இரண்டாம் பாகம் போல இருப்பதாக சந்தேகம் வருகிறதா..? கரெக்ட் அதேதான்.


நன்றி - ரைட் நியூஸ் 



http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg


பல வருடங்களாக தயா‌ரிப்பில் இருந்த போடா போடியை சிம்பு பெ‌ரிய மனது வைத்து முடித்து தந்திருக்கிறார். நடனத்தை மையமாகக் கொண்ட படம், பெரும் பகுதி வெளிநாட்டில் படப்பிடிப்பு, கிளைமாக்ஸ்கூட நடனம்தான்... எல்லாமே ‌ரிஸ்க்கான இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவா வேறு அறிமுகம்.
இந்த ஒரு அம்சம் படம் குறித்து நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. இன்னொன்று சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி. அவருக்கு இது முதல் படம். நடனம் தெ‌ரிந்த காரணத்துக்காக இவரை தேர்வு செய்ததாக சிம்பு கூறியிருக்கிறார். சல்சா நடனக் கலைஞராக அவர் வருகிறாராம்.
முக்கிய தீம் நடனம் என்றான பிறகு ஷோபனா இல்லாமலா? அவருக்கு முக்கியமான வேடம். இவர்களுடன் கணேஷ், சமரத் என்று வேறு பலரும் நடித்திருக்கிறார்கள். சிம்புவின் தோஸ்த்கள் சந்தானம், பிரேம்‌ஜி இருவரும் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.
தரண் இசையில் பாடல்கள் ஓரளவு ஹிட்டாகியுள்ளன. படமும் ஹிட்டாகும் என்று நம்புவோம். சென்சார் போடா போடிக்கு யு சான்றிதழ் தந்துள்ளது. 

நன்றி - வெப்துனியா 




இளவயதுக் காதல் சரியா…? தவறா…? சாலமன் பாப்பையா பட்டிமன்ற தலைப்புபோல இருக்கிறதே என்று பார்க்கிறீகளா? இதுதான் போடா போடி படத்தின் ஒருவரிக்கதை! சிம்பு விரலை நம்மி நடித்த படங்கள் எல்லாம் உரலில் ஒட்டிக்கொண்ட உமியைப் போல ஊத்திக் கொண்டத்தில் இனி ஒழுங்காக கதையையும், இயக்குனர்களையும் நம்ம ஆரம்பித்தார். அதன்பிறகு அவருக்கு வரிசையாக வெற்றிகள்! விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என தொடரும் வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைய வருகிறது போடா போடி!




வெறும் ஆக்ஷனையும், நடனதையும், பெண்களை டீஸ் செய்வதையும் வைத்தே பிழைப்பை ஓட்டி வருகிறார் என்ற விமர்சனமும், இதன்வழியாக அவர் மீது படிந்து கிடந்த ‘பிளே பாய்’ இமேஜையும் மொத்தமாக துடைத்துப் போட்டது விண்ணைத் தாண்டி வருவாயா படம்!



 அந்தப் படத்தில் சிம்பு ஏற்று நடித்த ‘கார்த்திக்’ என்ற உதவி இயக்குனர் கதாபாத்திரம், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் ஒரு ‘கனவுக் காதலன்’ என்ற புதிய, மெண்மையான இமேஜைக் சிம்புவுக்குக் கொடுத்தது! எங்குபோனாலும் த்ரிஷாவை “ ஜெஸி…! ஜெஸி..! “ என்று ரசிகர்கள் பெயர் சொல்லி அழைத்ததைப் போல, சிம்புவையும் “ கார்த்திக் !” என்று அழைத்தார்கள்!




 ஆடிப்போனார் சிம்பு! ஒரு நேர்மையான கதாபாத்திரத்தை ரசிகர்கள் எத்தனை நேசிக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டதன் விளைவாகவே போடா போடியை தேர்ந்தெடுத்தார் சிம்பு! இதை அவரே சொல்லியிருக்கிறார் தனது மைக்ரோ பிளாக்கில்! “ கார்த்திக் கதாபாத்திரத்திரத்தின் வழியாக எனக்குக் கிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள போடா போடி எனக்கு பெஸ்ட் சாஸ்சாக அமைந்து விட்டது! இதை விடிவியின் பாகம் இரண்டு என்று கூட சொல்லிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.




இளவயதுக்காதல் சரிதானா? அது கரைசேர எத்தனை புயல்களை கடந்து வர வேண்டியிருக்கிறது என்பதை மேற்கத்திய ,மற்றும் இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதத்தையும் கதைக்களமாகக்கி சொல்லியிருகிறார்களாம்! நனடம் கதைக்களம் என்பதால் பழைய டி. ராஜேந்தர் படங்களில் வருவதுபோல என்று இல்லாவிட்டாலும் ஒரு நடணப்போட்டியை மையமாக வைத்து கிளைமாக்ஸை உருவாக்கி இருக்கிறார்கள்.



 இதானால் திரையரங்கம் மட்டுமல்ல இளம் ரசிக மனங்களும் அதிரப்போவது உறுதி என்கிறார்கள்! டான்ஸ்தானாம். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா என்று ஆடி தீர்த்திருக்கிறார்கள்!



சென்னையில் இருந்து மேற்கத்திய நடனம் கற்றுக்கொள்ள அமெரிக்க செல்கிறார் சிம்பு! போன இடத்தில் அங்கேயே படித்து வளரும் வரலட்சுமியுடன் காதல்! அந்த நடனப்பள்ளியை நடத்திவரும் ஷோபனாவின் எச்சரிக்கையை மீறி காதலிக்க தொடங்குகிறார்கள்! இருவரும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் ஆடவும் செய்கிறார்கள்! இந்தமாதிரி உரசிக் கொள்கிற நேரங்கள் தீப்பொறியாக பற்றிக் கொள்ள… சிம்பும்-வரலட்சுமியும் ஒருவர் உடல்மீது மற்றொருவர் இனக்கவர்ச்சி கொள்கிறார்கள்.



 பிறகு அதுவே காதலாக கன்வர்ட் ஆகிறது! காதல் வந்தால் என்ன ஆகும்? பொசசிவ்நெஸ் பிடித்து ஆட்டும்! ஆண்மனசு…பெண் மனசு .. முட்டலும் மோதலும் ஒட்டலும் உரசலும் என்று ஈகோ வெடிக்கிறது இருவருக்குள்ளும்! ஒருவழியாக சிம்புவின் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடிவி கணேஷிடம் ஒரு பெரிய புகாரோடு வந்து நிற்கிறது சிம்பு – வரலட்சுமியின் காதல்!



ஆமாம்! ப்ரிமேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டத்தன் மூலம் கர்ப்பமாகி நிற்கிறார் வரலட்சுமி! அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வைக்கிறார் கனேஷ்! அதன்பிறகு என்ன? இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் சிம்புவும் வரலட்சுமியும் பெற்றோர் ஆகிறார்கள்! குழந்தைபிறந்த பிறகு இளவயதுக்காதல் இல்லறத்தை நடத்திச் செல்ல சரிபட்டு வராது என்பதை தனிக்குடித்தனம் உணர்த்துகிறது! இந்த இடத்தில் நிகழும் ஒரு சின்ன ஈகோ யுத்தத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இப்படிப் பிரிந்தவர்களை அதே காதலும், அவர்கள் நேசிக்கும் நடணமும் எப்படிச் சேர்த்து வைக்கிறது என்பதுதான் போடா போடியின் கலர்ஃபுல் திரைக்கதை!



சிம்பு எனது சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார். அதேபோல ஒரு அறிமுக நட்சத்திரத்துக்கு இதுபோல ஒரு வாய்ப்பு அமைவது மிக அபூர்வம் என்று புகழ்கிறார் சரத்குமாரின் மகளான வரலட்சிமி! அம்மாவின் அழகையும், அப்பாவின் கம்பீரத்தை சேர்த்துச் செய்த கலவையாக இருக்கும் வரலட்சுமியிடம் அறிமுகப்படத்திலேயே அம்மாவாக நடிக்கும் துணிச்சல் எப்படி என்றால்…



“எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். ‘போடா போடி’ படம் ‘அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் இருந்த கேரக்டர். இந்தப் படத்தில் நடிக்கலைன்னாதான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!” என்று போடா போடியை காதலிக்கிறார்! இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தனக்கு கிடைப்பது உறுதி என்று நம்பவும் செய்கிறார்!



அடுத்து சிம்பு தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தை போடா போடிக்கா நேர்ந்துவிட்டத்தைப் போல தினம் ஒன்று இந்தப் படத்தைப் பற்றியே ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருப்பார்! அப்படிப்பட்டவர் போடா போடி பற்றி என்ன சொல்கிறார்?!



“போடா போடி ரொம்ப ஸ்டைலான படம்! சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. ‘ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்’ மாதிரி கலர்ஃபுல்லான படம். அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருந்துச்சு! ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலயும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்! கீப் இட் அப் சிம்புன்னு நீங்களே சொல்வீங்க!” என்கிறார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix6GstMOz79eZhgRZIdimx1Q2r6tEnPvTMOip_25WIBcP_-_lmdrTCyyNg6XxBd3-ddQlhcH4kEnNgbLJeiukS4ZE3CCO-hBUtAASmGrkRmMACNXoy0jbP8PXL_j9zmEUIEX-UwgRXiGo/s1600/Varalakshmi+hot+stills+(1).jpg

அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவா எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை தரண்குமார்! பாடல்கள் இளைஞர்ககளின் மனங்களை அள்ளியிருக்கின்றன. ஹாலிவுட் ஒளிபதிவாளரான டங்கன் டெல்ஃபோர்ட் இந்தப் படத்தில் அமெரிக்கா, கனடா, லண்டன் நகரங்களின் அழகை அள்ளியிருகிறார். அதேபோல பேட்மேன் உட்பட பல பிரமாண்ட ஹாலிவுட் படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த ‘யூட் பெர்க்’ இந்தப் படத்துக்கும் ஆர்ட் டிரைக்டராக பணியாற்றி இருக்கிறார். அமெரிக்க நடனக்கலைஞர்களும் பணிபுரிந்திருக்கும் இந்தப் படத்தை எடிட் செய்திருப்பவர் ஆண்டனி. தயாரிப்பு பிரபல தயாரிப்பாளர்கள் நேமிசந்த் ஜபக், வி.ஹித்தெஷ்குமார் . போடா போடி சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ரொமாண்டிக் தீபாவளியை பரிசளிக்கப் போகிறது…….!! சிம்பு Roczzzzzzzz….!!



நன்றி - யூத் கஃபே

http://haihoi.com/Channels/cine_gallery/poda-podi-movie-stills-84_S_390.jpga



டிஸ்கி 1- துப்பாக்கி
- http://www.adrasaka.com/2012/11/blog-post_460.html

2

போடா போடி - சினிமா விமர்சனம்

,http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html


3. 

துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html







Monday, November 12, 2012

துப்பாக்கி





விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள்.

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


 விஜய் பேட்டி @ விகடன்
கதைதாங்கணா ஹீரோ!"



எம்.குணா

''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிட் கொடுக் கிறது பெரிய விஷயம் இல்லை. இப்போ நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் முதல் படத்துக்கான உழைப்பைக் கொட்ட ணும். கடைசி நிமிஷம் வரை உயிரைக் கொடுக்க ணும்... த்ரில்லிங்கா இருக்குங்ணா... கொஞ்சம் பயமா வும் இருக்குங்ணா!'' - முதல் பட ரிலீஸுக்குக் காத்திருக் கும் ஹீரோ போல ஆர்வமும் பதற்றமுமாக இருக்கிறார் விஜய். தீபாவளிக்கு வெடிக்கிறது விஜயின் 'துப்பாக்கி’!



 ''பொதுவா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமர்ஷியல் படங்களை கமிட் பண்ணிக்க மாட்டார். 'துப்பாக்கி’யில் வேலை செய்ய எப்படி ஒப்புக்கொண் டார்?''



''படத்துக்கு அவர்தான் கேமராமேன்னு சொன்னப்போ, நான் நம்பலை. 'என் படத்துக்கு எப்படி சார் ஒப்புக்கிட்டீங்க’னு நேர்லயே கேட்டுட்டேன். 'பெரிய ஆர்வம் இல்லாமத்தான் 'துப்பாக்கி’ கதை கேட்டேன். ஆனா, க்ளை மாக்ஸ்ல முருகதாஸ் வெச்சிருக்கிற மெசேஜ் கேட்டு ஆடிப்போயிட்டேன்’னு சொன்னார். காலை 9 மணிக்கு மும்பை தாதர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவுல என்னையும் நடக்க, ஓடவிட்டாங்க. கேமரா எங்கே இருக்குன்னே தெரியாம நடிச்சது புது அனுபவம்!''



''சினிமாவில் இப்போ ஹீரோக்கள் ரொம்ப ஃப்ரெண்ட் லியா இருக்காங்க. ஆனா, நீங்க மட்டும் யாருடனும் க்ளோஸ் ஆக மாட்டேங்குறீங்களே?''


''இது அபாண்ட வதந்திங்ணா. எல்லாரோடவும் பெர்சனல் டச்லதான் இருக்கேன். வெளியே ஷேர் பண்ணிக்கிறதில்லை... அவ்வளவுதான். மூணு வருஷமா விடாம கமல் சாரோட பிறந்த நாளுக்கு மறக்காம என்னை அழைப்பார். போயிட்டு சந்தோஷமா ஆடிப் பாடிட்டு வருவேன். சீனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைக்காம, என் லெவலுக்குப் பழகுவார். இதோ தீபாவளிக்கு முன்னாடியே 7-ம் தேதி வர்ற அவரோட பிறந்த நாள் எனக்கு மினி தீபாவளி!''


''டான்ஸ்ல உங்களுக்கு அடுத்த தலைமுறை ஹீரோக்கள்ல யார் பெஸ்ட்?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல பின்றாங்களே. சிம்பு, தனுஷ், பரத், சாந்தனு வரைக்கும் எல்லார் டான்ஸும் எனக்குப் பிடிக்கும்!''


''ஸ்டார் ஹீரோக்கள் நடிக்கிற மெகா பட்ஜெட் படங்கள் ஃப்ளாப் ஆகுது... புது முகங்கள் நடிக்கிற 'அட்டகத்தி’, 'பீட்சா’ படங்கள் ஜெயிக்குது... ஏன்?''


''அப்பவும் இப்பவும் எப்பவும் தமிழ் சினிமாவில் கதைதான் ஹீரோ... நடிகர்கள் இல்லை. அதைப் புரிஞ்சுக்கிட்டா எல்லா படங்களும் ஜெயிக்கும்!''


''பையன் சஞ்சய் என்ன பண்றார்?''


''ஏழாவது படிக்கிறார். கிரிக்கெட்ல பயங்கர ஆர்வமா இருக்கார். எந்த மேட்ச் நடந்தாலும் சாப்பாடுகூட இல்லாம டி.வி. முன்னாடி உட்கார்ந்துடுறார். புரொஃபஷனல் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்துக்கிட்டு இருக்கார். பார்ப்போம்... சேப்பாக்கமா... கோடம்பாக்கமானு!''- அழகாகச் சிரிக்கிறார் அப்பா விஜய்!




ஏ ஆர் முருகதாஸ் பேட்டி


எப்படி இருக்கு விஜய் கூட்டணி?"

'' இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை.


 ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம்.


 ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ரசிகர்களுக்கு தீபாவளி SPECIAL  FULL MEALS ஆக துப்பாக்கி வெடிக்கும்!''




''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''

''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க.



வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''




''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''

''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா,  10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு.



ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க.





 ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''


 நன்றி - விகடன்


ட்ரெய்லர்



மேக்கிங்க் ஆஃப் துப்பாக்கி - துப்பாக்கி எப்படி எடுக்கப்பட்டது?



1. துப்பாக்கி பஞ்ச் -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா #துப்பாக்கி பஞ்ச்


3. நெட்டில் புரளி - டேக்கன் ஹாலிவுட்டின் தழுவல் தான் துப்பாக்கி என.# அது தவறான தகவல்


4. துப்பாக்கி விஜய் முதல் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி கொஞ்சம் ஸ்லோ என தகவல்

http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg



டிஸ்கி 1 போடா போடி -

 http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html

 டிஸ்கி 2 -துப்பாக்கி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/11/blog-post_1598.html

 

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/b0/First_look_Thuppakki.jpg/220px-First_look_Thuppakki.jpg