Showing posts with label Santosh Sivan. Show all posts
Showing posts with label Santosh Sivan. Show all posts

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Thuppaki-Movie-Latest-Images/Thuppakki-stylish-wallpaper-design-600x375.jpga


தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும்  கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் . 


ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.


தொடர்ந்து 5 தோல்விப்படங்கள் கொடுத்து காவலன் மிதமான வெற்றி , நண்பன் , வேலாயுதம் சராசரி வெற்றி என்று தெம்பில் இருக்கும் விஜய்க்கு கண்டிப்பாக இது ஏறு முகம் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு உற்சாகமான , வேகமான ,அழகிய விஜயை இதில் பார்க்க முடிகிறது. கடைசியாக சச்சினில் அப்படி பார்த்தது. நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா இது ஆக்‌ஷன் படம் , சும்மா வந்து நின்னா போதும், இயக்குநரும் , வசனகர்த்தாவும் மிச்ச வேலையை பார்த்துக்குவாங்க.. ( இருவரும் ஒருவரே) 



ஹீரோயின்  காஜில் அகர் வால்.தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி அரை லூஸ் போல் சிரிச்சுக்கிட்டு , அரை குறையா உடுத்திக்கிட்டு வர்றார். பாடல் காட்சிகளில் பளிச். டைட் பனியன் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் லூஸ் ஆகிடறாங்க.. கொடுத்த 40 லட்சத்துக்கு இது போதும்னு நினைச்சிருப்பார் போல 


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/Vijay-Thuppaki/Thuppaki-Kajal-Agarwal-Stills-2.jpg



ஜெயராம், சத்யன் சும்மா டைம் பாஸ்க்கு , காமெடிக்கு. நல்லா யூஸ் பண்ணி இருக்கார் இயக்குநர்.வில்லன் பெருசா ஒண்ணும் பண்ணலை. ஏன்னா வில்லனை ரொம்ப புத்திசாலியா காட்டிட்டா ஹீரோ பேர் வாங்க முடியாதே? ( ஆனா வில்லனை பயங்கர டேலண்ட்டா காட்டி ஹீரோ அவனை வெல்லும்போதுதான் ஹீரோ கிராஃப் டகார்னு எகிறும்.. )


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பாம் வைக்க பிளான் போடும்  தீவிரவாதிகள் 12 பேரை மிலிட்ரி ஆட்கள் 12 பேரை வைத்து ஒரே டைமில் போட்டுத்தள்ளும் பர பரப்பான சீன் 


2. வில்லன் கடத்தும் 5 பெண்களில் தன் தங்கயை தூண்டில் புழுவாய் ஹீரோ யூஸ் பண்ணி வீட்டு நாயை மோப்பம் பண்ண வைத்து இருப்பிடம் அறியும் புத்திசாலித்தனம்


3. க்ளைமாக்ஸில் வில்லனை அழிக்க  ஹீரோ தற்கொலைப்படை  ஐடியா போடுவது அதற்கான திட்டங்கள் , சிஸ்டமேடிக்காக செய்வது 


4. ஓப்பனிங்க் ஷாங்க்ல ஆடை அலங்காரங்கள் , பூக்களின் அணி வகுப்பு அழகு 

5. பெண் பார்த்து போன பின் ஹீரோயினின் முரண்பாடான குணாதிசயங்களை காமெடியாக காட்டிய விதம் 



6. ஹீரோ மேப்பில் 12 இடங்களை வரைந்து அதை இந்திய மேப்பில் வைத்து மேட்ச் பண்ணும் இடம் 


7. ஹோட்டலில் விஜய் - ஜெயராம் - காஜில் காமெடி காட்சி. ஜெயராம் பார்க்காத தருணத்தில்  விஜய்க்கு  காஜில்  கிஸ் தருவதும் அதை லேடி பார்த்து திகைப்பதும் 







http://moviegalleri.net/wp-content/gallery/thuppaki-movie-latest-stills/thuppaki_movie_latest_still_vijay_kajal_agarwal_8d1e5ba.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மிலிட்ரிமேன் அப்டின்னா மழு மழு டெயிலி ஷேவிங்க்  உடன் இருக்கனும். இளைய தளபதிக்காக பிரெஞ்ச் தாடிக்கு  அனுமதி கொடுத்துடுவாங்களா?



2. ஹீரோ பெண் பார்க்க வரும்போது ஹீரோயின்  லோ ஹிப் சேலை , ஜெயா டி வி யில் குஷ்பூ போட்டு வரும் ஜாக்கெட்டை விட மோசமான புற முதுகை 98 % காட்டும்  ஜாக்கெட்டை அணிந்து வருகிறாரே? பெண் பார்க்கும் படலத்திலாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு முடிஞ்சவரை மூடி இருக்கக்கூடாதா? 


3. முதன் முதலாக பாம் வைப்பவனை எதேச்சையாக விஜய் பிடிக்கும் காட்சி லாஜிக் சறுக்கல்.  யாரோ பிக் பாக்கெட்டை பிடிக்க பஸ்ஸை நிறுத்தி எல்லாரையும் செக் பண்றாங்க. பாம் வைத்த பேக்கை தீவிரவாதி  பஸ்லயே வெச்சுட்டு இறங்கி வர்றான். அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தா அவனை செக் பண்ணி அவனிடம் பர்ஸ் இல்லை என்றதும் விட்டுடப்போறாங்க. அவன் ஏன் கேனம் மாதிரி ஓடனும்? அதை கடைசி கட்டத்தில் மாட்டின பிறகு பண்ணினா போதுமே? இவனா ஏன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடனும்? ( பாம் வெடிச்சுடும் என சாக்கு சொல்ல முடியாது, அப்படி டைமிங்க் பக்கமா இருந்தா அவன் ஏன் பஸ்ல பயணம் பண்ணனும்? அப்பவே வெச்சுட்டு இறங்கி போய் இருக்கலாமே? ) 



4. பப்ளிக் ப்ளேஸ்ல பொது மக்கள் முன்னிலையில் 12 பேர் 12 இடங்கள்ல ஷூட் செய்யப்படறாங்க.. ஏன் சைலன்சர் யூஸ் பண்ணாம சுடறாங்க? பில்டப்பா? மக்கள் மத்தியில் யாருக்கும் தெரியாம மேட்டரை முடிச்சு இருக்கலாமே?  தேவையற்ற கலவரம், பீதியை தடுக்க அதுதானே நல்ல வழி? 



5. ஸ்லீப்பர் செல்ஸ் ஆசாமிகளைப்பற்றி ஏன் விஜய் சப் இன்ஸ்பெக்டர் சத்யனோட காரிடார்ல நடந்துக்கிட்டே பப்ளிக்கா பேசறார்? தனி ரூம்ல பேச வேண்டிய விஷயம் அல்லவா? 




6. தீவிரவாதிங்க  அந்த 5 லேடீசை கடத்துறது ஆள் ஃபோட்டோ அடையாளம் வெச்சுத்தான். ஸ்கூட்டி நெம்பர் பார்த்து அல்ல,. ஹீரோவின் தங்கை ஆள் மாறாட்டம் பண்ணி ஸ்கூட்டில போறப்ப முக ஜாடையை வெரிஃபை  பண்ணாம  சும்மா நெம்பர் பிளேட்டை மட்டும் செக் பண்ணி தீவிரவாதிங்க அவ்ளவ் அசால்ட்டா இருப்பாங்களா? 


http://www.sattigadu.com/wp-content/uploads/2012/05/Kajal-Agarwal-Stills-From-Thuppaki-Movie-2.jpg


7. ஒரு சீன்ல ஹீரோவின் தங்கை தீவிரவாதிகள் பிடில இருக்கா. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகறார். முறைப்படி வில்லன் கூட்டம் ஹீரோவின் தங்கையை பிணையக்கைதியா வெச்சு எஸ் ஆகி இருக்கலாம்,. அதை விட்டுட்டு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு தனித்தனியா ஹீரோ கிட்டே ஏன் சண்டை போடனும். அசைஞ்சா உன் தங்கச்சி க்ளோஸ்னு மிரட்ட வே இல்லை? 


8. தீவிரவாதிகளிடம் மேலிடம் அவளை முடிச்சுடுன்னு சொன்ன உடனே டப்னு ஷூட் பண்ணாம ஆற அமர வீடியோ கேமரா எல்லாம் செட் பண்ணி எதுக்கு அவளை கொல்வதை வீடியோ எடுக்க ரெடி ஆகறாங்க? அது என்ன பி எஃப்ஃபா? அல்லது மிரட்ட பயன்படும் ஆயுதமா? 



9. ஹீரோ தீவிரவதிகள் கூட ஃபைட் பொடும்போது ஒரு ஆம்பளைக்கு கிஸ் கொடுத்து கொலை பண்றாரு. எந்த ஹாலிவுட்ல இருந்து உருவுன சீனோ.. கேவலமா இருக்கு.. 


10. மிலிட்ரி ஆள்ங்கன்னா கற்பூரம் மாதிரி இருக்க வேணாமா? ஹீரோ ஃபோன் பண்ணி தன் ஆளுக்கு எச்சரிக்கை விடுக்கறார். ஆபத்து, பாம் இருக்குன்னு . டக்னு எஸ் ஆகாம அந்த ஆள் பேக்கு மாதிரி ஸ்டன் ஆகி நிக்கறான். ஏன்? 


11. க்ளைமாக்ஸ்ல ரமணா, குருதிப்புனல் மாதிரி ஹீரோ சாகும் கதை அமைப்பு வெச்சுட்டு எப்பவும் போல் சராசரிப்படமாக மாத்தியது ஏன்?அங்கே ஏ ஆர் முருகதாஸ் காணாம போய் ஹீரோ விஜய் தான் நிக்கறார். ரமணாவுல இருந்த தைரியம் ஏன் இதுல இல்லை? 



12. படம் ரிலீஸ் ஆகும் முன் கொடுத்த பேட்டில க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அப்டினு பில்டப் கொடுத்தா. அந்த ட்விஸ்ட் என்ன? சார்? ஒரு வேளை எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட்டோ? 


13. படம் நீளம் அதிகம். ரெண்டே முக்கால் மணி நேரம். பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு. விஜய்க்காக சேர்த்து இருக்காங்க.. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெலோடி எதுக்கு? கில்லி க்ளைமாக்ஸ் பாட்டு எவ்ளவ் ஸ்பீடு? 


14. ஹீரோ மாட்டிக்கிட்டதும் வில்லன் டக்னு போட்டுத்தள்ளாம இன்னும் எத்தனை படத்துல ஒண்டிக்கு ஒண்டி சண்டை வர்றியா?ன்னு ஹீரோ கேட்பதும், அதுக்கு வில்லன் ஓக்கே சொல்லி அநியாயமா சாவதும்   உஷ் அப்பா, முடியல




http://fingertipszone.com/cinema_images/tamil/Thuppaki/Thuppaki_43.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1.   -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா


3. நீ யாரு?ன்னு எனக்குத்தெரியாது.ஆனா உன் இருப்பிடம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா நீ தொலைஞ்சே.உன்னை கொன்னுடுவேன்.



விஜய் - ஐ ஆம் வெயிட்டிங் 




4. காஜில் - ஐ . ஐ ... 



விஜய் - ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல இருந்து நேரா வர்றியா? 



5. உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது.எனக்கு சஸ்பென்ஸ் ஓப்பன் பண்ணா பிடிக்காது 



6. பொண்ணை பாடச்சொல்லுங்க. 



மாப்ளை போட்டிருக்கும மிலிட்ரி டிரஸ்க்கு ஜனகனமன தான் பாட முடியும் 


7. ஏதாவது பண்ணி பெரிய ரிஸ்க் ஆகிடுமோன்னு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா அதுதான் பெரிய ரிஸ்க்




8. அழகா இருக்கறவன் திறமைசாலியா இருக்க மாட்டான் ,திறமைசாலி அழகா இருக்க மாட்டான்.அழகும் ,திறமையும் ஒருத்தன் கிட்டெ இருக்கறது அபூர்வம்.் 


http://www.teluguone.com/tmdbuserfiles/kajal-boxing-stills.gif




9.  ட்ரெயின் கரெக்டா எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க..


 அதை ட்ரெயின் வந்த பின் தான் சொல்ல முடியுமாம்


10.  டேய், வயசாகிட்டே போகுது. மேரேஜை தள்ளிப்போடாதே


 விளையாடாதே, ஒரு நாள்ல எவ்ளவ் வயசு ஏறிடும்?நாளைக்கு போலாம்.. 



11. எனக்கு பொண்ணை பிடிக்காம போனதுக்கு 3 காரணம் 

1. ஒன்னரை மீட்டர் கூந்தல் இருக்கு. மேரேஜ்க்குப்பின் இவ எப்படி ரெடி ஆவா? ரொம்ப லேட் பண்ணுவா 

2.  ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கா.. 


3. மாடர்ன் லுக்கே இல்லை.. பழம் பஞ்சாங்கமா இருக்கா.. 


12. நான் வெளில போறேன், வீட்லயே காலைல இருந்து சாயங்காலம் வரை இருந்தா கெட்டுடுவேனாம்.


13. ஏய், சும்மா பிகு பண்ணாதடி, நமக்கு இந்த வளைவு நெளிவுகள் இருக்கும் வரை தான் மார்க்கெட்..



14. எதுக்கு சண்டைக்கு வர்றே? நான் கண்ணாடிக்குத்தானே கிஸ் பண்ணேன்? 

 ஆனா கண்ணாடில இருந்தது நான்


15. நான் ஒரு வ்கைல அவளை பாராட்றேன், நம்ம கிட்டே பேசிக்கிட்டே சாவியை எடுத்துட்டுப்போய்ட்டா பாருங்க.. 

 ஒரு ஸ்மால் கரெக்‌ஷன், பேசிக்கிட்டே இல்லை.. திட்டிட்டே.. 



16. நீ பெரிய ஆபத்தை தொட்டுட்டே

 ம் ம் ம் 
http://www.tamilkey.com/wp-content/uploads/2012/07/thuppaki-3-e1341544202295.jpg

17. ஏண்டி இப்படி ஒரு கேவலமான ஆம்பளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே?

 பி பிராக்டிகல். மாசம் 2 லட்சம் ரூபா சம்பளம் 


18. ஆர் யூ ஸ்மீக்கிங்க்? 

 வாட்?

 தமும்மா தம்

 ம்ஹூம்

 சாரி, ஐ லைக் ஸ்மோக்கிங்க் கேர்ள்ஸ் ஒன்லி.. 

 ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சரக்கு

 ம் ம் லைட்டா, சில டைம் வோட்கா கூட ட்ரை பண்ணி இருக்கேன் 


சாரி. எனக்கு தண்ணி அடிக்கும் பெண்களைக்கண்டாலே பிடிக்காது


19. நம்ம லவ்வை பிரேக் பண்ணிடலாம்

 வாட்? இன்னும் ஒன் அவர் கூட ஆகலை.. அதுக்குள்ளேயா?


20. உன் கப்போர்டுல ஒண்ணுல வில்லன், இன்னொண்ணுல ஜோடி.. 2 பேரையும் ஒளிச்சு வெச்சிருக்கே? கப் போர்டுல துணியே வைக்க மாட்டியா? 


21. எல்லா ஃபீல்டுலயும்  சின்சியரா ஒர்க் பண்ணீனா  பிரமோஷன் கிடைக்கும், ஆனா போலீஸ் , மிலிட்ரில மட்டும்  பெரிய காயம் பட்டா ரிட்டயர்மெண்ட் தான்


22. அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு பயம் ம் ம்


23. உனக்கு எதும் புரியல இல்லை? சஸ்பென்சோடயே சாவு


24. அவளுக்கு உன்னை பிடிக்கலை ஹா ஹா 

 இதுல சிரிக்க என்ன இருக்கு? 

 ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலைன்னா இனிமே யாருக்கு உன்னை பிடிக்கும்? 


25. காஜில் - டேட்டிங்க் முதன் முதலா வந்தா கேட்டதை குடுக்கனும், நீ பாட்டுக்கு கிஸ் கேட்டுட்டேன்னா நான் என்ன பண்றது? குடுத்துத்தானே ஆகனும்? 


26. எனக்கு எப்படி கிஸ் பண்ணனும்னு தெரியாதே?

 நீ கண்ணை மூடு, நான் பார்த்துக்கறேன்

 ம்ஹூம், நான் கண்ணை மூடினா போன தடவை மாதிரி நீ ஓடிடுவே


27. நாம கெஸ் பண்றது நடக்கலைன்னா நாம் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், எதிரி வேற ஏதோ பிளான் பண்றான்னு அர்த்தம்


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  ரேங்க் - 6 /10 

http://wallpapers.oneindia.in/d/364506-2/thuppaki-new-wallpaper-01.jpg



சி.பி கமெண்ட்  - போக்கிரிக்கு கீழே , நண்பனுக்கு, வேலாயுதத்துக்கு  மேலே - சாதா கதை, நல்ல திரைக்கதை - ஓக்கே.விஜய் ரசிகர்கள் , பெண்கள் என எல்லாத்தரப்பும் ஃபேமிலியுடன் பார்க்கும்படி தான் படம் இருக்கு . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 


டிஸ்கி - போடா போடி-http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html


http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg

diSki 2  -

போடா போடி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html


 

பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!
பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!