Showing posts with label KAJAL AGARWAL. Show all posts
Showing posts with label KAJAL AGARWAL. Show all posts

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Thuppaki-Movie-Latest-Images/Thuppakki-stylish-wallpaper-design-600x375.jpga


தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும்  கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் . 


ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.


தொடர்ந்து 5 தோல்விப்படங்கள் கொடுத்து காவலன் மிதமான வெற்றி , நண்பன் , வேலாயுதம் சராசரி வெற்றி என்று தெம்பில் இருக்கும் விஜய்க்கு கண்டிப்பாக இது ஏறு முகம் தான். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு உற்சாகமான , வேகமான ,அழகிய விஜயை இதில் பார்க்க முடிகிறது. கடைசியாக சச்சினில் அப்படி பார்த்தது. நடிக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. ஏன்னா இது ஆக்‌ஷன் படம் , சும்மா வந்து நின்னா போதும், இயக்குநரும் , வசனகர்த்தாவும் மிச்ச வேலையை பார்த்துக்குவாங்க.. ( இருவரும் ஒருவரே) 



ஹீரோயின்  காஜில் அகர் வால்.தமிழ் சினிமாவின் தலைவிதிப்படி அரை லூஸ் போல் சிரிச்சுக்கிட்டு , அரை குறையா உடுத்திக்கிட்டு வர்றார். பாடல் காட்சிகளில் பளிச். டைட் பனியன் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் லூஸ் ஆகிடறாங்க.. கொடுத்த 40 லட்சத்துக்கு இது போதும்னு நினைச்சிருப்பார் போல 


http://www.dailomo.com/tamil/content_images/1/images1/Vijay-Thuppaki/Thuppaki-Kajal-Agarwal-Stills-2.jpg



ஜெயராம், சத்யன் சும்மா டைம் பாஸ்க்கு , காமெடிக்கு. நல்லா யூஸ் பண்ணி இருக்கார் இயக்குநர்.வில்லன் பெருசா ஒண்ணும் பண்ணலை. ஏன்னா வில்லனை ரொம்ப புத்திசாலியா காட்டிட்டா ஹீரோ பேர் வாங்க முடியாதே? ( ஆனா வில்லனை பயங்கர டேலண்ட்டா காட்டி ஹீரோ அவனை வெல்லும்போதுதான் ஹீரோ கிராஃப் டகார்னு எகிறும்.. )


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  மும்பையின் 12 வெவ்வேறு இடங்களில் பாம் வைக்க பிளான் போடும்  தீவிரவாதிகள் 12 பேரை மிலிட்ரி ஆட்கள் 12 பேரை வைத்து ஒரே டைமில் போட்டுத்தள்ளும் பர பரப்பான சீன் 


2. வில்லன் கடத்தும் 5 பெண்களில் தன் தங்கயை தூண்டில் புழுவாய் ஹீரோ யூஸ் பண்ணி வீட்டு நாயை மோப்பம் பண்ண வைத்து இருப்பிடம் அறியும் புத்திசாலித்தனம்


3. க்ளைமாக்ஸில் வில்லனை அழிக்க  ஹீரோ தற்கொலைப்படை  ஐடியா போடுவது அதற்கான திட்டங்கள் , சிஸ்டமேடிக்காக செய்வது 


4. ஓப்பனிங்க் ஷாங்க்ல ஆடை அலங்காரங்கள் , பூக்களின் அணி வகுப்பு அழகு 

5. பெண் பார்த்து போன பின் ஹீரோயினின் முரண்பாடான குணாதிசயங்களை காமெடியாக காட்டிய விதம் 



6. ஹீரோ மேப்பில் 12 இடங்களை வரைந்து அதை இந்திய மேப்பில் வைத்து மேட்ச் பண்ணும் இடம் 


7. ஹோட்டலில் விஜய் - ஜெயராம் - காஜில் காமெடி காட்சி. ஜெயராம் பார்க்காத தருணத்தில்  விஜய்க்கு  காஜில்  கிஸ் தருவதும் அதை லேடி பார்த்து திகைப்பதும் 







http://moviegalleri.net/wp-content/gallery/thuppaki-movie-latest-stills/thuppaki_movie_latest_still_vijay_kajal_agarwal_8d1e5ba.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மிலிட்ரிமேன் அப்டின்னா மழு மழு டெயிலி ஷேவிங்க்  உடன் இருக்கனும். இளைய தளபதிக்காக பிரெஞ்ச் தாடிக்கு  அனுமதி கொடுத்துடுவாங்களா?



2. ஹீரோ பெண் பார்க்க வரும்போது ஹீரோயின்  லோ ஹிப் சேலை , ஜெயா டி வி யில் குஷ்பூ போட்டு வரும் ஜாக்கெட்டை விட மோசமான புற முதுகை 98 % காட்டும்  ஜாக்கெட்டை அணிந்து வருகிறாரே? பெண் பார்க்கும் படலத்திலாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு முடிஞ்சவரை மூடி இருக்கக்கூடாதா? 


3. முதன் முதலாக பாம் வைப்பவனை எதேச்சையாக விஜய் பிடிக்கும் காட்சி லாஜிக் சறுக்கல்.  யாரோ பிக் பாக்கெட்டை பிடிக்க பஸ்ஸை நிறுத்தி எல்லாரையும் செக் பண்றாங்க. பாம் வைத்த பேக்கை தீவிரவாதி  பஸ்லயே வெச்சுட்டு இறங்கி வர்றான். அவன் பாட்டுக்கு அமைதியா இருந்தா அவனை செக் பண்ணி அவனிடம் பர்ஸ் இல்லை என்றதும் விட்டுடப்போறாங்க. அவன் ஏன் கேனம் மாதிரி ஓடனும்? அதை கடைசி கட்டத்தில் மாட்டின பிறகு பண்ணினா போதுமே? இவனா ஏன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடனும்? ( பாம் வெடிச்சுடும் என சாக்கு சொல்ல முடியாது, அப்படி டைமிங்க் பக்கமா இருந்தா அவன் ஏன் பஸ்ல பயணம் பண்ணனும்? அப்பவே வெச்சுட்டு இறங்கி போய் இருக்கலாமே? ) 



4. பப்ளிக் ப்ளேஸ்ல பொது மக்கள் முன்னிலையில் 12 பேர் 12 இடங்கள்ல ஷூட் செய்யப்படறாங்க.. ஏன் சைலன்சர் யூஸ் பண்ணாம சுடறாங்க? பில்டப்பா? மக்கள் மத்தியில் யாருக்கும் தெரியாம மேட்டரை முடிச்சு இருக்கலாமே?  தேவையற்ற கலவரம், பீதியை தடுக்க அதுதானே நல்ல வழி? 



5. ஸ்லீப்பர் செல்ஸ் ஆசாமிகளைப்பற்றி ஏன் விஜய் சப் இன்ஸ்பெக்டர் சத்யனோட காரிடார்ல நடந்துக்கிட்டே பப்ளிக்கா பேசறார்? தனி ரூம்ல பேச வேண்டிய விஷயம் அல்லவா? 




6. தீவிரவாதிங்க  அந்த 5 லேடீசை கடத்துறது ஆள் ஃபோட்டோ அடையாளம் வெச்சுத்தான். ஸ்கூட்டி நெம்பர் பார்த்து அல்ல,. ஹீரோவின் தங்கை ஆள் மாறாட்டம் பண்ணி ஸ்கூட்டில போறப்ப முக ஜாடையை வெரிஃபை  பண்ணாம  சும்மா நெம்பர் பிளேட்டை மட்டும் செக் பண்ணி தீவிரவாதிங்க அவ்ளவ் அசால்ட்டா இருப்பாங்களா? 


http://www.sattigadu.com/wp-content/uploads/2012/05/Kajal-Agarwal-Stills-From-Thuppaki-Movie-2.jpg


7. ஒரு சீன்ல ஹீரோவின் தங்கை தீவிரவாதிகள் பிடில இருக்கா. அப்போ ஹீரோ எண்ட்ரி ஆகறார். முறைப்படி வில்லன் கூட்டம் ஹீரோவின் தங்கையை பிணையக்கைதியா வெச்சு எஸ் ஆகி இருக்கலாம்,. அதை விட்டுட்டு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு தனித்தனியா ஹீரோ கிட்டே ஏன் சண்டை போடனும். அசைஞ்சா உன் தங்கச்சி க்ளோஸ்னு மிரட்ட வே இல்லை? 


8. தீவிரவாதிகளிடம் மேலிடம் அவளை முடிச்சுடுன்னு சொன்ன உடனே டப்னு ஷூட் பண்ணாம ஆற அமர வீடியோ கேமரா எல்லாம் செட் பண்ணி எதுக்கு அவளை கொல்வதை வீடியோ எடுக்க ரெடி ஆகறாங்க? அது என்ன பி எஃப்ஃபா? அல்லது மிரட்ட பயன்படும் ஆயுதமா? 



9. ஹீரோ தீவிரவதிகள் கூட ஃபைட் பொடும்போது ஒரு ஆம்பளைக்கு கிஸ் கொடுத்து கொலை பண்றாரு. எந்த ஹாலிவுட்ல இருந்து உருவுன சீனோ.. கேவலமா இருக்கு.. 


10. மிலிட்ரி ஆள்ங்கன்னா கற்பூரம் மாதிரி இருக்க வேணாமா? ஹீரோ ஃபோன் பண்ணி தன் ஆளுக்கு எச்சரிக்கை விடுக்கறார். ஆபத்து, பாம் இருக்குன்னு . டக்னு எஸ் ஆகாம அந்த ஆள் பேக்கு மாதிரி ஸ்டன் ஆகி நிக்கறான். ஏன்? 


11. க்ளைமாக்ஸ்ல ரமணா, குருதிப்புனல் மாதிரி ஹீரோ சாகும் கதை அமைப்பு வெச்சுட்டு எப்பவும் போல் சராசரிப்படமாக மாத்தியது ஏன்?அங்கே ஏ ஆர் முருகதாஸ் காணாம போய் ஹீரோ விஜய் தான் நிக்கறார். ரமணாவுல இருந்த தைரியம் ஏன் இதுல இல்லை? 



12. படம் ரிலீஸ் ஆகும் முன் கொடுத்த பேட்டில க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அப்டினு பில்டப் கொடுத்தா. அந்த ட்விஸ்ட் என்ன? சார்? ஒரு வேளை எந்த ட்விஸ்ட்டும் இல்லாம இருந்ததுதான் ட்விஸ்ட்டோ? 


13. படம் நீளம் அதிகம். ரெண்டே முக்கால் மணி நேரம். பாடல் காட்சிகள் தேவை இல்லாத திணிப்பு. விஜய்க்காக சேர்த்து இருக்காங்க.. அதிலும் க்ளைமாக்ஸில் ஒரு மெலோடி எதுக்கு? கில்லி க்ளைமாக்ஸ் பாட்டு எவ்ளவ் ஸ்பீடு? 


14. ஹீரோ மாட்டிக்கிட்டதும் வில்லன் டக்னு போட்டுத்தள்ளாம இன்னும் எத்தனை படத்துல ஒண்டிக்கு ஒண்டி சண்டை வர்றியா?ன்னு ஹீரோ கேட்பதும், அதுக்கு வில்லன் ஓக்கே சொல்லி அநியாயமா சாவதும்   உஷ் அப்பா, முடியல




http://fingertipszone.com/cinema_images/tamil/Thuppaki/Thuppaki_43.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1.   -1000 பேரை அழிக்கும் தீவிரவாதிகளே உயிர்தியாகம் செய்யத்தயாரா இருக்கும்போது நாம ஏண்டா உயிர்தியாகம் செய்யக்கூடாது



2. துப்பாக்கி எதுவா வேணா இருக்கலாம் ,எந்த பிராண்டா வேணா இருக்கலாம், ஆனா அதுல தோட்டா நான்டா


3. நீ யாரு?ன்னு எனக்குத்தெரியாது.ஆனா உன் இருப்பிடம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா நீ தொலைஞ்சே.உன்னை கொன்னுடுவேன்.



விஜய் - ஐ ஆம் வெயிட்டிங் 




4. காஜில் - ஐ . ஐ ... 



விஜய் - ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல இருந்து நேரா வர்றியா? 



5. உனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது.எனக்கு சஸ்பென்ஸ் ஓப்பன் பண்ணா பிடிக்காது 



6. பொண்ணை பாடச்சொல்லுங்க. 



மாப்ளை போட்டிருக்கும மிலிட்ரி டிரஸ்க்கு ஜனகனமன தான் பாட முடியும் 


7. ஏதாவது பண்ணி பெரிய ரிஸ்க் ஆகிடுமோன்னு பயந்து எதுவுமே செய்யாம இருந்தா அதுதான் பெரிய ரிஸ்க்




8. அழகா இருக்கறவன் திறமைசாலியா இருக்க மாட்டான் ,திறமைசாலி அழகா இருக்க மாட்டான்.அழகும் ,திறமையும் ஒருத்தன் கிட்டெ இருக்கறது அபூர்வம்.் 


http://www.teluguone.com/tmdbuserfiles/kajal-boxing-stills.gif




9.  ட்ரெயின் கரெக்டா எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்க..


 அதை ட்ரெயின் வந்த பின் தான் சொல்ல முடியுமாம்


10.  டேய், வயசாகிட்டே போகுது. மேரேஜை தள்ளிப்போடாதே


 விளையாடாதே, ஒரு நாள்ல எவ்ளவ் வயசு ஏறிடும்?நாளைக்கு போலாம்.. 



11. எனக்கு பொண்ணை பிடிக்காம போனதுக்கு 3 காரணம் 

1. ஒன்னரை மீட்டர் கூந்தல் இருக்கு. மேரேஜ்க்குப்பின் இவ எப்படி ரெடி ஆவா? ரொம்ப லேட் பண்ணுவா 

2.  ரொம்ப கூச்ச சுபாவமா இருக்கா.. 


3. மாடர்ன் லுக்கே இல்லை.. பழம் பஞ்சாங்கமா இருக்கா.. 


12. நான் வெளில போறேன், வீட்லயே காலைல இருந்து சாயங்காலம் வரை இருந்தா கெட்டுடுவேனாம்.


13. ஏய், சும்மா பிகு பண்ணாதடி, நமக்கு இந்த வளைவு நெளிவுகள் இருக்கும் வரை தான் மார்க்கெட்..



14. எதுக்கு சண்டைக்கு வர்றே? நான் கண்ணாடிக்குத்தானே கிஸ் பண்ணேன்? 

 ஆனா கண்ணாடில இருந்தது நான்


15. நான் ஒரு வ்கைல அவளை பாராட்றேன், நம்ம கிட்டே பேசிக்கிட்டே சாவியை எடுத்துட்டுப்போய்ட்டா பாருங்க.. 

 ஒரு ஸ்மால் கரெக்‌ஷன், பேசிக்கிட்டே இல்லை.. திட்டிட்டே.. 



16. நீ பெரிய ஆபத்தை தொட்டுட்டே

 ம் ம் ம் 
http://www.tamilkey.com/wp-content/uploads/2012/07/thuppaki-3-e1341544202295.jpg

17. ஏண்டி இப்படி ஒரு கேவலமான ஆம்பளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே?

 பி பிராக்டிகல். மாசம் 2 லட்சம் ரூபா சம்பளம் 


18. ஆர் யூ ஸ்மீக்கிங்க்? 

 வாட்?

 தமும்மா தம்

 ம்ஹூம்

 சாரி, ஐ லைக் ஸ்மோக்கிங்க் கேர்ள்ஸ் ஒன்லி.. 

 ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சரக்கு

 ம் ம் லைட்டா, சில டைம் வோட்கா கூட ட்ரை பண்ணி இருக்கேன் 


சாரி. எனக்கு தண்ணி அடிக்கும் பெண்களைக்கண்டாலே பிடிக்காது


19. நம்ம லவ்வை பிரேக் பண்ணிடலாம்

 வாட்? இன்னும் ஒன் அவர் கூட ஆகலை.. அதுக்குள்ளேயா?


20. உன் கப்போர்டுல ஒண்ணுல வில்லன், இன்னொண்ணுல ஜோடி.. 2 பேரையும் ஒளிச்சு வெச்சிருக்கே? கப் போர்டுல துணியே வைக்க மாட்டியா? 


21. எல்லா ஃபீல்டுலயும்  சின்சியரா ஒர்க் பண்ணீனா  பிரமோஷன் கிடைக்கும், ஆனா போலீஸ் , மிலிட்ரில மட்டும்  பெரிய காயம் பட்டா ரிட்டயர்மெண்ட் தான்


22. அந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு பயம் ம் ம்


23. உனக்கு எதும் புரியல இல்லை? சஸ்பென்சோடயே சாவு


24. அவளுக்கு உன்னை பிடிக்கலை ஹா ஹா 

 இதுல சிரிக்க என்ன இருக்கு? 

 ஒரு மேட்டருக்கே உன்னை பிடிக்கலைன்னா இனிமே யாருக்கு உன்னை பிடிக்கும்? 


25. காஜில் - டேட்டிங்க் முதன் முதலா வந்தா கேட்டதை குடுக்கனும், நீ பாட்டுக்கு கிஸ் கேட்டுட்டேன்னா நான் என்ன பண்றது? குடுத்துத்தானே ஆகனும்? 


26. எனக்கு எப்படி கிஸ் பண்ணனும்னு தெரியாதே?

 நீ கண்ணை மூடு, நான் பார்த்துக்கறேன்

 ம்ஹூம், நான் கண்ணை மூடினா போன தடவை மாதிரி நீ ஓடிடுவே


27. நாம கெஸ் பண்றது நடக்கலைன்னா நாம் இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், எதிரி வேற ஏதோ பிளான் பண்றான்னு அர்த்தம்


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 டைம்ஸ் ஆஃப் இண்டியா  ரேங்க் - 6 /10 

http://wallpapers.oneindia.in/d/364506-2/thuppaki-new-wallpaper-01.jpg



சி.பி கமெண்ட்  - போக்கிரிக்கு கீழே , நண்பனுக்கு, வேலாயுதத்துக்கு  மேலே - சாதா கதை, நல்ல திரைக்கதை - ஓக்கே.விஜய் ரசிகர்கள் , பெண்கள் என எல்லாத்தரப்பும் ஃபேமிலியுடன் பார்க்கும்படி தான் படம் இருக்கு . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன் 


டிஸ்கி - போடா போடி-http://www.adrasaka.com/2012/11/blog-post_13.html


http://twitchfilm.com/assets_c/2012/10/Thuppaki_22-thumb-300xauto-34227.jpg

diSki 2  -

போடா போடி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/11/blog-post_5706.html


 

பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!
பேக்ரவுண்டுல சொரண்டுறது, டவுசர புடிச்சி கழட்டுறது, இப்போ இப்படின்னு.... படத்துக்குப் படம் ஒரு செண்ட்டிமெண்ட்டு (?) சீன் வெச்சி மக்களை எப்படியெல்லாம் பரவசப்படுத்துறாருய்யா நம்ம டாகுடர்.....!




Thursday, October 11, 2012

துப்பாக்கி - கிடாவெட்டு

http://www.tamil.cinebuzzz.com/img_articles/918b.jpg

1. 'துப்பாக்கி' நவம்பர் 9 ரிலீஸ்! 9.11.2012 கூட்டுத்தொகை 7 வருது 7 1 / 2 கன்ஃபர்ம் 



------------------------------


2. டியர், ஓரண்ட இழுக்கறதுன்னா என்ன?


 இப்படி ஓரமா வா, நடு ரோட்ல நின்னா எவனாவது ஓரண்ட இழுத்துடப்போறான் ;-0 



---------------


3. விஜய் - என் படத்தை பத்தி நான் எதும் பேசமாட்டேன், என் படம்தான் பேசும் 



# சார் ஒரே டுமீல் டுமீல் சத்தம் தான் வருது, காது வலி ,தலைவலி ;-0 



----------------


4. விஜய் - வீரமா முனிவர் பிறந்த நாள் இங்கே எத்தனை பேருக்கு தெரிஞ்”சுருக்கு”.? அந்த விழிப்புணர்வுக்காகவே 9.11.2012 இல் துப்பாக்கி ரிலீஸ் 




----------------------------



5. துப்பாக்கி நவம்பர் 9 இல் , கும்கி நவம்பர் 13 இல் ரிலீஸ் # மினிமம் 4 நாட்கள் ஓடிடும் விஜய் நம்பிக்கை ;-0 



---------------------

6.  நாயகன் ரீமேக்கில் விஜய் - நான் நல்லவரா? கெட்டவரா? # நீங்க நல்லவர் தான், ஆனா உங்களை சி எம் ஆக்கனும்னு நினைக்கறாரே உங்கப்பா ,பேராசை



--------------------


7. துப்பாக்கி ஹிட் ஆனால் விஜய் ரசிகர்கள் பட்டாசா இருக்குன்னு பட்டாசு வெடிப்பாங்க.அடாசா இருந்தா புஷ்வாணம் வைப்பாங்க # தீபா வலி


----------------------



8. இந்தப்படத்துல வில்லன் யார்னு சொல்லவே இல்லையே?



  உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன், படத்தோட  ஹீரோதான் படத்துக்கு,புரொடியூசருக்கு வில்லன்



-----------------------


9. இயக்குநர் @ நவம்பர் 10 - ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்




---------------------


10. சார், உங்க பட ட்ரெய்லர் செம, மிரட்டிடுச்சு! விஜய் -படம் வந்ததும் பாருங்க, அவனவன் தெறிச்சு ஓடப்போறான், பட்டாசா இருக்கும்




-----------------------

 


11.  காமராமேதை கர்ணன் இயக்கிய இரட்டைக்குழல் துப்பாக்கி கார்த்திக்கை ஒரு தூக்கு தூக்கி விட்டுச்சாம்;-)




-------------------------


12. தாண்டவம் கதை என்னுதுன்னு கோர்ட் வரை கேஸ் போச்சு.படம் ஸெம ஹிட்.துப்பாக்கி டைட்டில் பிரச்சனைல கோர்ட் போச்சு.என்ன ஆகப்போகுதோ:-).



-----------------------


13. டாக்டர்.என் குழந்தைக்கு 8 வயசு ஆகுது.துப்பாக்கி கொள்ளு பட்டாசு வெடிக்கனும்கறான். துப்பாக்கி படத்துக்கு கூட்டிட்டு போனாதான் ஆபத்து




----------------------


14. ஆர் பார்த்திபன் ன் வித்தகன் வித் த கன் ஊத்திக்கிச்சு.# பிளாஸ்பேக்


------------------



15. விஜய் சார்.கூகுள் பற்றி எதுவுமே தெரியாம எப்படி கூகுளை புகழ்ந்து பாடுனீங்க?



விஜய் - ராகுல் யார்னே தெரியாம காங்கிரஸ்ல சீட் கேட்டேனே?



-----------------------------

 



16.  சார்.சாக்ஸ் போட்டா ஷூ போடனும்.நீங்க செப்பல் போட்டிருக்கீங்க?



விடுங்க ஷூ போட்டா நான் ஓடலாம்.படம் ஓடுமா? :-)




------------------

17. சார்.உங்க பட போஸ்டர் செம கலக்கல் படம் எப்டி?



 சாரி சார்.பாசிடிவ் பார்வை என்னுது.எது நல்லாருக்கோ அதான் சொல்ல முடியும் ்



----------------------


18. எட்டு பாட்டு ஆறு பைட்டு மொத்தம் 14 ரீல் :-)




-------------------------


19. விஜய் படத்துல பாட்டு ஹிட் ஆகறது பெரிய விஷ்யமே இல்லை.குருவி கூட பாட்டு ஹிட் தான்(



-------------------


20. துப்பாக்கி ஹிட் ஆனா பாகம் 2 எடுப்பேன்.ஆகலைன்னா கேப்டனை வெச்சு ரமணா2 எடுப்பேன் - ஏ ஆர் முருக்தாஸ்




---------------------


 


21. முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்! - விஜய் புகழாரம் # அய்யய்யோ, அப்போ துப்பாக்கி இருட்டுக்குள்ளேயே எடுத்திருப்பாரோ?




-------------------------


22. கடைசில கள்ளத்துப்பாக்கி ஹிட் ஆகி துப்பாக்கி பிளாப் ஆகிடனும், செம யா இருக்கும்



--------------------------


23.  நானும் இப்போ மும்பைவாலா நாளைமுதல் தௌசன்வாலா மேலே போறேன் சிக்ஸர் பாலா # thuppakki opening song # பிரமாதமான கருத்து



---------------------------


24. தீபா வளி தலை வலி 1 துப்பாக்கி 2 போடா போடி # முதல் இரண்டாம் இடங்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை



-----------------------------


25. விஜய் - ஐ ஆம் வெய்ட்டிங் .# காலமெல்லாம் காத்திருப்பேன்னு தமிழ்ல.சொல்லுங்க ஸார்.;-)




-----------------------

 



26. கதைப்படி ஹீரோ மும்பைவாலா என்பதால் ஹிந்தி தெரிந்தவாலா மட்டும்தான் படம் பார்க்க அனுமதியாம் # 30 நாளில் ஹிந்தி கற்க ;-)




---------------------


27. எனக்குப்பிடிச்ச கேர்ள் பிரண்ட் காஜல் அகர்வால் - விஜய் # அப்போ சங்கவிக்கு சங்கா?



-------------------------


28. காஜல் அகர்வால் தன் பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார் -விஜய் # உங்களுக்கு ஸ்வீட் பிடிக்காதுன்னு குமுதம் பேட்டில சொன்னீங்க்ளேண்ணா?்



-------------------------


29.மாற்றான் ஊத்திக்கிச்சுன்னா 2 யூஸ் 1,விமர்சனத்துல தோற்றான்னு ரைமிங்கா 2 காஜல் ராசி இல்லைனு துப்பாக்கிக்கு பீதி கிளம்பிடும்



-------------------------


30. குருவி , சுறா , அழகிய தமிழ்மகன்,வில்லு வரிசையில் துப்பாக்கி பாடல்களும்  ஹிட்டாம் ;-0






---

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg






டிஸ்கி - விஜய் ரசிகர்களுக்கு  இதெல்லாம் சும்மா கலாய்ப்பு தான் டேக் இட் ஈசி. விஜய் படங்களை நடு நிலைமையுடன் தான் விமர்சித்து இருக்கேன்


1. காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2011/01/blog-post_2419.html


2.நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/01/blog-post_5575.html


3. வேலாயுதம் - விஜய் -ன் கமர்ஷியல் ஹிட்- சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2011/10/blog-post_26.html

Wednesday, June 13, 2012

DHADAA- காஜல் அகர்வால் -ன் தெலுங்கு சினிமா விமர்சனம்

http://123tamilforum.com/imgcache2/2011/11/DhadaSongsDownload1-1.jpg

உதயம் தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ் ஆனப்போ நாகார்ஜூன்க்கு சிரிக்கவே தெரியாதா? எப்பவும் முகத்தை உர்னு வெச்சுட்டு இருக்காரே.. அப்படின்னு ஒரு டாக்..(TALK)  அவர் நடிச்ச மணிரத்னம் படமான இதயத்தை திருடாதே ( தெலுங்கில் கீதாஞ்சலி) படத்திலும் அதே விமர்சனம் தான்.. இப்போ அவர் பையன் நாக சைதன்யா ஹீரோ ஆகிட்டார்.. அப்பாவுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கார்.. தெலுங்குல இவர் சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரோன்னு பயமா இருக்கு ..

வில்லன் ஒரு லேடீஸ் புரோக்கர்.. அதாவது இங்கே உள்நாட்ல இருக்கற பெண்களை கடத்தி வெளிநாட்டுக்கு பெண்களை விற்கற ஆள்.. ஒரு பெண்ணுக்கு ஒரு கோடி.. கையில் ஒரு லேடி, கிவ் மீ எ  கோடி , மீ எ கேடி.. இதுதான் வில்லனோட தாரக மந்திரம்.. இவரோட கேவலமான பிஸ்னெஸ்ல ஒரு சறுக்கல்.. தெரிஞ்சோ தெரியாமயோ ஹீரோ வில்லனோட பிஸ்னெஸ்ல ஒரு டைம் கிராஸ் ஆகி அவருக்கு ஒரு லாஸை ஏற்படுத்திடறாரு..

வில்லன் ஹீரோவைப்போட்டுத்தள்ள ஐவர் குழுவை அமைக்கறாரு.. ஹீரோ வெட்டாஃபீஸ்.. ஹீரோயின் பயங்கர செல்வச்சீமாட்டி.. ஹீரோயின்க்கு அவங்கப்பா ஒரு ஃபாரீன் மாப்பிள்ளையை நிச்சயம் பண்றாரு.. அந்த மாப்பிள்லை ஆள் படா ஷோக்காத்தான் இருக்காரு.. ஆனா பாருங்க, ஹீரோயினுக்கு  அவனை பிடிக்கலை..

அவருக்கு தெரு பொறுக்கும் ஹீரோ தான் பிடிச்சிருக்கு.. ( இந்த மாதிரி கேவலமான கதைகளை படிச்சுட்டு, படம் பார்த்துட்டு யாரும் இதுவரை பார்த்துட்டு இருக்கற நல்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊர் சுத்த ஆசைப்பட்டதில்லை, நல்ல வேளை )2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவர் வில்லனோட கேங்க்ல தான் இருக்கார் அப்டிங்கறது இடைவேளை ட்விஸ்ட்ல தான் டைரக்டர்க்கு தெரியுது.. ஆனா பாருங்க படம் போட்ட 20 வது நிமிஷமே நமக்கு புரிஞ்சுடுது..



வில்லன் ஹீரோவை கொலை செஞ்சானா? ஹீரோ ஹீரொயினை மேரேஜ் செஞ்சாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை..

ஹீரோ நாக சைதன்யா ஆள் தலையே சீவாம , தாடியோட முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாம நடிச்சிருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.. ஆனா தெலுங்குல ஹிட் அடிச்சுடுவார்னு தோணுது..

ஹீரோயின் காஜல் அகர்வால்.. சமீபத்துல இவ்ளவ் கேவலமா ஒரு ஹீரோயினை வேஸ்ட் செஞ்ச டைரக்டரை பார்க்கலை.. ஹீரோயின் ஹேர் ஸ்டைல் மகா மட்டம்..  பாப் கட்டிங்க்காம்.. சகிக்கலை.. மாவீரன் படத்துல அவர் என்னா கலக்கு கலக்குனாரு? அதுவும் ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட் கற்பனை வறட்சி.. இருட்டுக்கடை அல்வா அரைக்கிலோவை கைல கொடுத்தும் அதை டேஸ்ட் பண்ணாம வேடிக்கை பார்த்தவன் கதையா இயக்குநர் வேஸ்ட் பண்ணது வன்மையா கண்டிக்கத்தக்கது..

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் தான் ஹீரோவுக்கு அண்ணன்.. ஆள் செம பர்சனாலிட்டி.. அவர் அருகே நிற்கும்போது ஹீரோ படு கேவலமாக இருக்கார்.. தமிழனுக்கு பெருமை..



அவருக்கு ஜோடி சமீக்‌ஷா.. வந்தவரை ஓக்கே.. ஆனா அவருக்கு திறமை காட்ட சந்தர்ப்பம் இல்லை.. சோ சேடு..


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNWjJLiWCCEpksoZlRKp9RuDmKyJ5LjMwI2ygdcSDBb5RnyMf4WUdQeO79bbxKYyIjIF5wfEGAxA-NQe_DWoorboAYnsT13X11RnNcovefRwOPJ0bf-3Fze7NGgJqfmfIZuPJpIUkHQ21Y/s1600/49c88c86480f4a1c83e9aa6ce8ca6838.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பூவிழி வாசலிலே படத்துல வர்ற ரகுவரன் செஞ்ச ஒரு கால் ஊனம் உற்ற கேரக்டரை நைஸா சுட்டு இந்தப்பட வில்லன் கேரக்டர் ஆக்குனது..

2. படத்தை ஆந்திராவில் சாதாரண இடத்துல எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை படம் கிராண்டா வரனும்னு தயாரிப்பாளரை பிரெயின் வாஸ் பண்ணி உலகம் பூரா சுற்றி பல லொக்கேஷன்ஸை ஓ சில பார்த்துக்கிட்டது

3. ஹீரோ, ஸ்ரீகாந்த், வில்லன் , சமீக்‌ஷா இவங்க 4 பேருக்குமான ஆடை வடிவமைப்பு அருமை... செம டீசண்ட்..

4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போனாலும் பிரம்மானந்தம் காமெடியை சாமார்த்தியமா புகுத்தியது


5. பாடல் காட்சிகளில் காட்டிய பிரம்மாண்டம்.. தொடவா? தொடவா? உன் நெஞ்சை பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகுக்கவிதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGIQuODSJDOWRJD5FGsqZFtbQ7vqRu1CqqpmwiWCSuqWyLmQsJkGSNFYHDg4GxxAPrw4hN4hBxAWhUhV44FXII9LUdMKZcUNA9ljjEU5uUtp2qjJStNUEI2Yhh6yeOuSEo83A5AqNlj04/s1600/Kajal+Agarwal+in+Saree1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. வில்லன் ஒரு அரைக்கேனமா? அடிக்கடி யார் கிட்டேயாவது தன் கால் எப்படி ஊனம் ஆச்சு?ன்னு ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு விதமா சொல்றது மகா எரிச்சல்..


2. மேரேஜ் ஆகாத ஒரு பொண்ணு நிச்சயம் செய்யப்போற மாப்பிள்ளையுடனான முதல் சந்திப்பில் அப்படித்தான் லோ கட், லோ ஹிப் டிரஸ்ல வருமா? ஃபேமிலி கேர்ள் மாதிரியே ஃபீல் வர்லை.. பக்கா அயிட்டம் மாதிரி இருக்கு..

3. ஹீரோயினுக்கு பேரண்ட்ஸ் பார்த்த மாப்ளைக்கு எந்த குறையும்  இல்லை,ஆளும் பர்சனாலிட்டிதான், அவர் வில்லனும் அல்ல (க்ளைமாக்ஸ்ல வில்லனா வலியனா காட்டறது தவிர)அப்புறம் ஏன் அவரை ஹீரோயினுக்கு பிடிக்கலை?

4. ஹீரோ என்னதான் பண்றார்? பூவாவுக்கு என்ன பண்றார்? வேலைக்கும் போறதே இல்லை.. எப்போ பாரு ஹீரோயின் பின்னாலயே சுத்திட்டு இருக்கார்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DPWiGleIOSM4tf2UlAqFpCKYzopJ-vhANIYWlyh-TasU7cb1-1BfboBFIHTljjlMlfHkjb_XF3WbDr34EkZetaQuEJDpnsk1zGNGI4eOLvFA9KzNrE0oIevKxqUY4HtH2dxpY8ynVuur/s1600/kajalagarwal-00118.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. கோபம் உன் வீக்னஸ்.. எனக்கு வீகன்ஸ் ஆகாது

2. வெளிநாடு போகும் வேலை வேணாம்ணே... ஜாப்பை ரிசைன் பண்ணிடுங்க..

அவங்க விடமாட்டாங்க

அப்போ ஏதாவது தப்பு பண்ணுங்க.. அவங்களே தூக்கிடுவாங்க

3. பிரம்மானந்தம் - சிட்டிங்க், சீட்டிங்க்,கிஸ்ஸிங்க்.... இதுக்கெல்லாம் நீ ஓக்கே சொன்னா நீ தான் என் செக்ரட்டரி..

உங்களுக்கு வயசான மாதிரி தெரியுதே?

பார்க்கத்தான் அப்படித்தெரியும்.. ஆனா எனக்கு 25 வயசு தான் ஆகுது

4. அட, இது அழகான பொண்ணுதான், உங்க ஒயிஃபா?

யோவ்,ஒயிஃப் இந்த மாதிரி டிரெஸ் பண்ணா குடும்பம்  உருப்படுமா?

5. எதுக்கு இங்கேயே வேடிக்கை பார்த்துட்டு இருக்கே?நீ ஒண்ணு பண்ணு, ஒரு சேர் எடுத்து எங்க எதிர்ல போட்டுக்க வேடிக்கை பாரு.. ரொம்ப ஈசியா இருக்கும்.. லைவ் ஷோ

6,இவ ஏன் இவ்ளவ் வேகமா கார்ல  போறா? சாகடிக்கவா? சாகவா?

7. ஆஹா.. பியூட்டிஃபுல்.. இதுக்கே பார்ட்டி வைக்கறேன்..

 ரொம்ப தாங்க்ஸ்டா..

 ஆனா பில் பே பண்றது நீதான்..

ம்க்கும்

8. டியர்.. உனக்கு 2 ஆப்ஷன்ஸ் தர்றேன்..


1. எனக்கு போர் அடிக்கற வரை நீ என் கூட இருக்கனும்


2. உனக்கு போர் அடிக்கற வரை நான் உன் கூட இருக்கனும்

9. ஸாரி.. நான் கிளம்பறேன், என்னைக்காணோம்னு தேடுவாங்க..

அப்படி தேடற ஆளுங்களோ, உன் மேல அக்கறை உள்ள ஆளுங்களோ இருந்தா நீ இங்கே வந்திருக்க மாட்டே..

10அவன் டெக்னிக்கல் ஃபைட்டர், நான் எமோஷனல் ஃபைட்டர்,அவன் ஃபைட் பண்றது என்னை தோற்கடிக்க, நான் ஃபைட் பண்றது அவனை ஜெயிக்க.. அவன் ஃபைட் போடறது பணத்துக்காக , நான் ஃபைட் பண்றது உனக்காக



11. அவ பேரு தெரியும், அட்ரஸ் இனிதான் தெரிஞ்சுக்கனும்..

 மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சா?

12. அவ கிட்டே லவ்வை எப்படி சொல்றதுன்னு தயக்கமா, பயமா இருக்கு.

 அவளோட பிரச்சனை என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ கேட்காமலேயே அதை நீ சால்வ் பண்ணு.. அப்புறம் உன் லவ்வை சொல்லத்தேவையே இருக்காது.. அவளே தெரிஞ்சுக்குவா..

13. ஒவ்வொரு நாளும் அவனோட உடல் பார்ட்ஸ் ஒவ்வொண்ணா வேலை செய்யாம போனா அவன் எப்போ சாவான்? அவன் சாவு அவ்ளவ் குரூரமா இருக்கனும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE_7KQrhDKQnzK1h35crj9I2YdyURy2IuGETKVfVrFcSP4vKam4qCsUAllGbjzo7z5bpUm7ad70a144IFIMb8OmrQ-LO-zuhPB1nGEtCLP_p2yHVw1Rp329R_pqmHJcDQa9YdbhiG4uzG9/s1600/kajalagarwal-00053.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 (தெலுங்குப்படத்துக்கு மார்க் போடமாட்டாங்க, சும்மா ஒரு ஒப்பீட்டுக்காக, தர நிர்ணயத்துக்காக )

எதிர்பார்க்கும்  குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்கத்தேவை இல்லை

ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்.. ஸ்டில்ஸ் எல்லாம் காஜலின் ஃபேஸ் புக்கில் இருந்து எடுக்கப்பட்டவை.. பட ஸ்டில்ஸ் எதுவும் சகிக்கலை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYcjcWfdCR_KJTWQOPXERsb3R3gIUPK8dVUsSUrLeltjp0gCgkgsstZZqLD5DmN_r3IBE3B2bZ1VoMbaF8kBWnzJkd4en8d_ZtVEcTUNqQPXs0F5v1taanrURezIdB0cpoMt-7L8GmKR8/s1600/2.jpg