Thursday, August 09, 2012

உயிர்வதை! - வில்லவன் கோதை -சிறுகதை

சிறுகதை

உயிர்வதை!

வில்லவன் கோதை

ஜோதி, இன்னிக்கு நைட்டே நாகப்பட்டினம் கிளம்பறோம். பத்து மணிக்கு கம்பன் எக்ஸ்பிரஸ். நாளைக்கு நாகப்பட்டினத்துல ஹால்ட். மறுநாள் ஞாயிறு மார்னிங் திருக்கண்ணபுரம். வேண்டுதல முடிச்சிட்டு அன்னிக்கு நைட்டே சென்னை ரிட்டர்ன். தேவையானதை எடுத்து வெச்சுக்க. ஒங்க அம்மாகிட்டயும் பேசிடு. வாசுவுக்கு சொல்லிட்டேன்" அலுவலகத்திலிருந்து படபடவென்று பேசினான் சுரேஷ்.
வர்றப்ப சாமி பாவாடையை மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க..."
இடுக்கோடு இடுக்காக சுரேஷுக்கு நினைவூட்டினாள் ஜோதி.
சரி... அனுவுக்கு..."
பட்டுப் பாவாடைச் சட்டை... அம்மா எடுத்துட்டு வந்துடுவாங்க."
ம்...சரி!"
- துண்டித்தான் சுரேஷ். இரண்டு வருடம் நின்றிருந்தது குலதெய்வ வழிபாடு. நெடு நாளாக நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஒரு சுமை இப்போது மெல்ல தளர்வதை உணர்ந்தாள் ஜோதி.
சுரேஷைக் கைப்பிடித்து, சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சமீப காலங்களில் எத்தனையெத்தனை கஷ்டங்கள். அத்தனைக்கும் இதுவேகூட ஒரு காரணமென்று உறுதியாக நம்பினாள் ஜோதி.
இந்த வருடம் கூடுதலாக தங்கள் குழந்தை அனுவுக்கு மொட்டை போட்டு, காது குத்தவும் போகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன்பே செய்யவேண்டியது. அனுஷா இப்போது ஆறு வயது முடிந்து யூகேஜி வந்துவிட்டாள்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மாவோட பகிர்ந்துகொள்ள தொலைபேசி எண்களை அழுத்தினாள் ஜோதி.
அடுத்தகணம் தொலைபேசி மணி நன்னிலத்தில் ஒலித்தது.
அம்மாதான் எடுத்தாள்.
அம்மா... அவருக்கு லீவு கெடச்சிட்டாம். வர்ற ஞாயித்துக்கிழமை அனுவுக்கு காது குத்தல். நீங்கெல்லாம் அண்ணாவோட நேரா கோயிலுக்கே வந்துடுங்க. தோடும் ஜிமிக்கியும் துக்னோண்டு எடுத்துக்கிட்டு வந்து நிக்காதே! செத்த பெரிசாவே எடுக்க வாசுகிட்டே சொல்லு. அனுவுக்கு பட்டுப் பாவாடைச் சட்டை அரக்கு கலர்தான் நல்லா இருக்கும். திருபுவனம் சொஸைட்டியிலேயே எடுத்துடு. ஜிமிக்கி மாயவரம் ஏஆர்சிலேயே வாங்கச்சொல்லு" - தகவலைப் பகிர்ந்த திருப்தியில் தொலைபேசியை வைத்தாள் ஜோதி.
மூவருக்கும் இரண்டுநாள் பயணத்துக்குத் தேவையான துணிகளைத் தேடித்தேடி சேகரித்தாள்.
மூலைக்கு மூலை இறைந்து கிடந்த அனுவின் விளையாட்டுச் சாமான்களைப் பொறுக்கி எடுக்கும்போதுதான், சின்னஞ்சிறு குட்டி நாய் ஜானி ஞாபகம் வந்தது.
அது இந்த நடுத்தரக் குடும்பத்தோடு கலந்து ஏறத்தாழ ஆறுமாதமிருக்கலாம். அனு இப்போதெல்லாம் பள்ளியில் கழிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் ஜானியோடுதான்.
இந்த இரண்டு நாள் பயணத்துக்கு ஜானிக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீட்டின் சுற்றுச்சுவரின் கதவுகளுக்கிடையே இரண்டு கால்களை உயர்த்தி, கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து வாலை விசிறியவாறே அனுவின் வருகையைப் பார்த்திருந்தது ஜானி.
சுரேஷ், அனுவோடு பைக்கிலிருந்து இறங்கினான்.
ஒன்னவர் பிஃபோராவே கௌம்பிட்டேன். சாமி பாவாடை வாங்கிக்கிட்டு அப்படியே இவளையும் பிக்கப் பண்ணிட்டு வந்துட்டேன்."- உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
முதுகை இறுக்கிய புத்தகச் சுமையைத் தளர்த்தி வராண்டாவில் வீசிவிட்டு ஜானியை அள்ளிக் கொண்டாள் அனு.
நாமெல்லாம் ஊருக்குப் போறோம்.. செல்லம்!"
ஜானியின் முகத்தோடு முகம் வைத்தாள் அனு.
ஜானி இல்லை.. நாம மட்டுந்தான்டா தங்கம்."
ஏம்மா..." குழந்தையின் முகம் மாற்றம் பெற்றது.
அனு ! ஊர்ல ஒன்னோட விளையாட புதுசா ஒரு ஃப்ரெண்ட் வெயிட் பண்றான்." அனுவை சமாதானப்படுத்திக்கொண்டே வியர்வை வாசம் நிறைந்த ஆடைகளைக் களைந்தான் சுரேஷ்.
ஜோதி! கிருஷ்ணா ஒரு குட்டி ஆட்ட வாங்கிட்டானாம். கிடா வெட்டித்தான் காது குத்தணுமாம். அவன் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வர்றாங்களாம்."
இது என்ன புதுப்பழக்கம்..." -முகம் சுளித்தாள் ஜோதி.

மனுஷா ரசனைக்குத் தகுந்தாற்போல பழக்கங்களும் மாறிக்கிட்டுத்தான் வருது..." -நிகழப்போகும் ஓர் உயிர் வதையை அங்கீகரித்தான் சுரேஷ்.
கடாவெட்டா ... என்னப்பா அது..."- அனு, அப்பாவை வியப்போடு பார்த்தாள்.
ஆட்டுக்குட்டியை சாமிக்கே குடுத்துடுறது..."
சுருக்கமாகப் பதிலளித்த சுரேஷ் குளியலறைக்குள் நுழைந்தான்.
காப்பிக்குப் பாலைக் காய்ச்சி வைத்து விட்டு அனுவைக் குளிப்பாட்ட ஜோதி தேடியபோது, அனு சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஜானியும் அவள் பிஞ்சு கைகளில் சுகமாகச் சிறைப்பட்டுக் கிடந்தது.
விர்ரென்று ஆட்டோ வட்டமடித்து கிருஷ்ணா வீட்டு வாசலில் நின்றது. முன்னால் பைக்கில் வந்த கிருஷ்ணாதான் குழந்தை அனுவை வாங்கிக்கொண்டான்.
சுரேஷும் ஜோதியும் உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.அடுத்த அரைமணியில் கிருஷ்ணாவின் மனைவி கங்கா ஃபில்டர் காபியுடன் உபசரித்தாள். அனு வீட்டின் பின்புறம் தனக்காக காத்திருக்கும் புதிய நண்பனைக் காண ஆவலோடு ஓடினாள்.
வாயிலின் ஓரத்தில் வளர்ந்திருந்த கிளுவ மரத்தின் அடியில் அந்த வெள்ளாட்டுக்குட்டி கயிற்றால் கட்டப்பட்டு கொஞ்சம் கிளுவ இலைகள் உணவுக்காக போடப்பட்டிருந்தது. தன் நுனிப்பற்களால் இலைகளைக் கடிப்பதை நிறுத்தி, தலையைத் தூக்கி தன்னைக் கூர்ந்து நோக்கும் சிறுமியை நோட்டமிட்டது அந்தக் குட்டி ஆடு. அனுவுக்கு அந்தப் புதிய நண்பனை மிகவும் பிடித்து விட்டது. அனுவும் நட்பாகப் பேசி அந்தக் குட்டி ஆட்டின் நெஞ்சுக்குள் நுழைந்துவிட்டாள்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் குலதெய்வ வழிபாட்டு இடங்கள் ஊருக்கு வெளியே எல்லையோரங்களில் அமைந்திருக்கவில்லை. பிரமிப்பூட்டும் உயரங்களில் வண்ணம் பூசப்பட்ட சுடுமண் சிற்பங்கள் கொடூரமான ஆயுதங்களுடன் நின்றதில்லை.
அந்நாட்களில் மூதாதையர்களின் நினைவாக நடப்படும் நினைவுக் கற்களை பெரும்பாலும் தங்கள் தங்கள் வீடுகளுக்குப் பின்புறமே நடப்பட்டு, காலம் காலமாக குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றனர். அவர்களுக்கு மிகவும் பிரியமான மீனையும் மாமிசத்தையும் படைத்துக் கொண்டாடினர். மதுவையும் சுருட்டையும் கூட வழிபாட்டின் போது படையலிட்டு மகிழ்ந்தனர். அதன் வளர்ச்சிதான் இந்த உயிர்வதை.
சரியாக காலை பதினொரு மணியளவில் பத்து, பதினைந்து பேரை சுமந்து கொண்டு அந்த மகேந்திரா வேன் திருக்கண்ணபுரத்தை அடைந்தது.
சிறப்புமிக்க வைணவ தலங்களில் ஒன்றான சௌரிராஜ பெருமாள் திருக்கோயிலும் எதிரே விரிந்து கிடந்த திருக்குளமும் ரம்மியம். கோயிலைச் சுற்றிப் படர்ந்து கிடந்த வீடுகளைக் கடந்து கிழக்கு மூலையில் ஒதுங்கிக் காணப்பட்ட அங்காள பரமேஸ்வரி ஆலயத்தை அடைந்தபோது முன்னதாகவே மேலும் ஒரு மகேந்திரா வேன் இளைப்பாறுவதை சுரேஷ் பார்த்தான். அந்த வேனில் சம்பந்திக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் நன்னிலத்திலிருந்து வந்திருந்தார்கள். மாமியும் மைத்துனனும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். ஜோதியும் வாசுவும் நெகிழ்வோடு பார்க்க அனு ஓடிப்போய் பாட்டியோடு ஒட்டிக்கொண்டாள்.
இரண்டு வேன்களிலிருந்தும் வந்தவர்கள் ஏறத்தாழ முப்பது பேர்களுக்குள் இருக்கக்கூடும். வேன்களிலிருந்த வேண்டுதலுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் இறக்கப்பட்டன. அனுவுக்கு பிரியமான குட்டி ஆடும் இறக்கப்பட்டது.
திருப்புகலூரிலிருக்கும் சுரேஷின் சித்தப்பா செல்வம் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னால் குறுகிய கொட்டகையில் வாசம் செய்த அங்காளம்மை இப்போது சற்று விரிவான வளாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சுற்றுச்சுவரையொட்டி வீரன் பெரியாச்சி முனி என்ற காவல் தெய்வங்களும் தனித்தனியே நின்றிருந்தன. கருவறைக் கோபுரம் வண்ணப்பூச்சு செய்து புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சுரேஷின் சித்தப்பா செல்வம் பூசாரியைத் தேடி வழிபாட்டுக்குச் சொல்லியிருந்தார். கிடா வெட்டுவதற்கும் தனியாக ஒரு ஆளை பேசியிருந்தார்.
கோயில் பூசாரி பாலகுரு குடம்குடமாக தண்ணீர் விட்டு தெய்வங்களை நீராட்ட தொடங்கியிருந்தான். வாசம் மிக்க சாம்பிராணி புகை சூழ தீபாராதனையை அத்தனை பேரும் பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
மொட்டையடிக்க பேசப்பட்ட முருகேசன் சைக்கிளில் வந்து இறங்க ஆட்டுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுவைத் தூக்கி வந்தான் மாமன் வாசு. தனித்தனியே வட்டமிட்டுக் கதை பேசிய இரண்டு குடும்பத்தினரும் பரபரப்பாயினர்.
வாசுவின் மடியில் அனு அமர்ந்திருக்க கத்தியில் ப்ளேடை மாற்றிய முருகேசன் லாகவமாக முடியை வழித்தெடுத்தான்.

செருமிச்செருமி அழுத அனுவை நீராட்டி, பட்டுப் பாவாடைச் சட்டையை அணிவித்தாள் ஜோதி. வழவழப்பான சிவந்த தலை முழுதும் குளிர்ச்சிக்கு மணம் கமழும் சந்தனம் பூசப்பட்டது. இன்னும் அனுவின் அழுகை நின்றபாடில்லை. அழுகையை நிறுத்த அவளுக்குப் பிரியமான குட்டி ஆட்டிடம் கொண்டு போனான் வாசு. அடுத்த கணம் அனுவின் அழுகை தடம் மாறி இயல்பு நிலைக்கு வந்தது. ஆட்டின் கழுத்தை இழுத்து இறுக்கி முத்த மிட்டாள். மொட்டையடிக்கப்பட்ட அனுவை அறியாது ஆடு மிரண்டது.
அனுதாண்டா தங்கம்...!"
ஆட்டுக்கு தன்னைப் புரிய வைக்க மெல்ல மெல்ல முயற்சித்தாள் அனு.
சூரியன் மேல் திசையில் சரியத் தொடங்கினான். மணி ஒன்றைத் தாண்டிற்று. காதுகுத்தும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட பொற்கொல்லன் சண்முகம் கைப்பையுடன் காத்திருந்தான்.
ஆடு அறுப்பதற்குச் சொல்லப்பட்ட உள்ளூர்க்காரன் வந்து சேரவில்லை.அவனை எதிர்பார்த்துப் பயனில்லை என்பதை உணர்ந்த சித்தப்பா செல்வம் பக்கத்திலிருக்கும் திருமருகலிலிருந்து யாரோ ஒருவனை டி.வி.எஸ்.50யில் அழைத்து வந்தார்.
வந்து இறங்கியதுமே கத்திகளை எடுத்து கருங்கல் தரையில் தீட்டத் தொடங்கி விட்டான். அனு அவனை அச்சத்தோடு பார்த்தாள்.
என்ன செய்யப் போறீங்க..." -நடக்கப் போவது அனுவுக்கு மெல்ல புரிந்தது. அனு உயர்ந்த குரலெழுப்பி அழத் தொடங்கி விட்டாள்.
வெட்டாதீங்க... ப்ளீஸ்..."
மாமா வெட்டப் போறாங்க மாமா... சொல்லுங்க மாமா..."
அனுவின் அழுகுரலைக்கேட்டு ஜோதியும் சுரேஷும் ஓடிவந்தார்கள்.
அப்பா! ஆட்டுக்குட்டிய வெட்டச் சொல்லாதீங்கப்பா... பாவம்பா... அம்மா சொல்லுங்கம்மா... பாட்டி!... பாட்டி...நீங்க சொல்லுங்க."
குட்டியின் கழுத்தை இறுகப் பற்றியவாறு ஒவ்வொருவரையும் உதவிக்கு அழைத்தாள் அந்தச் சிறுமி.
அவள் காட்டிய பிடிவாதம் சுரேஷை நிலை குலையச் செய்தது.
சரி. வேண்டாம்மா..."
ஒரு முடிவுக்கு வந்தான் சுரேஷ்.
கொழந்தைக்கு என்னங்க தெரியும்."
கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுப்பிற்று.
வாசு... குட்டியக் கோயில் நிர்வாகத்துக்கிட்ட விட்டுடு....காது குத்தற வேலையைப் பாருங்க.. சாப்பாட்ட சித்தப்பா பாத்துக்குவார்."
குழுமியவர்களிடையே ஏற்பட்ட சிறு சலசலப்பைத் தவிர்த்து அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினான் சுரேஷ்.
சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்பட்டதை மீறி, குழந்தையின் குரலுக்கு முதன் முதலாகக் கட்டுப்பட்டான் சுரேஷ்.



நன்றி - கல்கி , புலவர் தருமி

கோகுலாஷ்டமி


http://3.bp.blogspot.com/-w2fdDAHSNWY/Tm-bzn8vzTI/AAAAAAAABw0/JRUT4wiE36k/s1600/Lord-Krishna-Wallpapers-2.jpgவன், நான் தவமா தவமிருந்து பெற்ற பிள்ளை’ என்கிற வசனத்தை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லாதவர்கள், நம் தேசத்தில் மிகக் குறைவுதான். குழந்தை என்பது இங்கே மிகப் பெரிய உன்னதமான வரமாகப் பார்க்கப்படுகிறது. வரம் என்பது தவத்தால் அடையக்கூடியது.



தேடல் இருப்பவர்களே தவம் இருக்க முடியும். அது கடவுள் தேடலாக இருந்துவிட்டால், அந்தத் தவத்தின் பலனைச் சொல்லவே வேண்டாம். அப்படியரு தவத்தின் பலனாக, வரமாகக் கிடைப்பது காணக் கிடைக்காத ரத்தினமாக, பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!



தசரத மகாராஜா, தனக்கும் தன் தேசத்துக்கும் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டார். புத்திர பாக்கியம் இல்லையே என்கிற சோகத்தைத் தவிர, வேறு எந்தச் சோகமும் அவருக்கு இல்லை. புத்திர பாக்கியம் என்கிற ஒரு சந்தோஷம் இருந்துவிட்டால், வேறு எந்தச் சந்தோஷமும் இந்த உலகில் முக்கியமில்லை.



அப்பேர்ப்பட்ட தசரத மகாராஜா, இறைவனை வேண்டித் தவமிருந்தார். கோயில் கோயிலாக அலைந்து தரிசித்து, மனமுருகப் பிரார்த்தித்தார். குருமார்களின் ஆசியுடனும் அறிவுரையுடனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த தவத்தின் பலனாக, யாகத்தின் பலமாக, கேட்ட வரம் அவருக்குக் கிடைத்தது. சந்தான பாக்கியம் கேட்டவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.


இங்கே ராமாயணத்தில் இப்படி என்றால், அங்கே மகாபாரதத்தில் என்ன நிகழ்ந்தது?


'அழகிய மகனைப் பெறுகிற பாக்கியத்தைக் கொடு’ என்று யசோதை வேண்டினாள். நந்தகோபனின் சிந்தனையில் பிள்ளை வரம் தவிர, வேறு எதுவும் இல்லை. இதேபோல், அனவரதமும் வசுதேவன், குழந்தைச் செல்வம் வேண்டும் வேண்டும் என்றே பிரார்த்தித்து வந்தார். மனமுருகி, ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன்... குழந்தை கேட்டு தேவகியும் கண்ணீர்விட்டுப் பிரார்த்தனை செய்தாள்.


நந்தகோபன்- யசோதை, வசுதேவன்- தேவகி ஆகிய நான்கு பேரும் வேறெந்தச் சிந்தனையுமின்றி, 'எனக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்யும் விதமாக குழந்தை வேண்டும்’ என்பதையே வரமாகக் கேட்டனர். அந்த நான்கு பேரின் தவத்தை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார்.



http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lor37s.jpg


அதாவது, ஒரேயருவர் மட்டுமே வேண்டிக்கொள்ள, ஸ்ரீராமபிரான் உட்பட நான்கு பேர் பிறந்தார்கள். இங்கே நான்கு பேர் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்க, ஒரேயரு கிருஷ்ண பகவான் அவதரித்தார். என்ன விளையாட்டு இது?


'சரி, அப்படின்னா... ஒருத்தர் வேண்டிக்கிட்டதுக்காக, நாலு பேர் பிறந்தது உசத்தியா? நாலு பேர் பிரார்த்தனை பண்ணினதுக்காக ஒருத்தர் பிறந்தாரே, அது உசத்தியா?’ என்று கேள்வி எழலாம்.


இதில் உசத்தி என்ன, தாழ்த்தி என்ன? இரண்டு பேருமே உசத்திதான்! அதுவொரு விதம், இதுவொரு விதம்! ஒருவர் விரதமிருந்து நான்கு பேர் பிறந்தனர். அங்கே... மூத்தவருக்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீராம ரத்தினம் என்று பெயர் அமைந்தது. அதேபோல் நான்கு பேர் விரதம் மேற்கொண்டு, பிரார்த்தனை அனுஷ்டித்தனர். அந்தக் குழந்தைக்கு, ஸ்ரீகோபால ரத்தினம் எனும் பெயர் அமைந்தது. அவர்... ராமரத்தினம்; இவர்... கோபால ரத்தினம், இரண்டு பேருமே உலகை உய்விக்க வந்தவர்கள்தான்.


ஆக, தவமிருந்து, விரதம் மேற்கொண்டு பிறந்த ஸ்ரீகண்ணபிரானுக்கு 'மேதேஜ:’ என்று திருநாமம் அமைந்தது. மேதேஜ என்றால் விரதத்தில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம். நான்கு பேர் மட்டுமின்றி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையையும் பிறப்பையும் அவதரிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துப் பிரார்த்தித்தனர்.


அதுமட்டுமா? ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு காரணத்தினாலும் அவதரித்தாராம்!
அதாவது, நந்தகோபனும் யசோதையும், வசுதேவரும் தேவகியும், தேவர்பெருமக்களும் வேண்டிக் கொண்டதற்காக மட்டுமின்றி, இந்த உலக மக்களுக்காக, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, அவதரிக்க வேண்டும் என தாமே விரும்பி, விரதம் போல் உறுதிகொண்டு, பூமியில் அவதரித்தாராம் பகவான் ஸ்ரீகண்ணன்.


இப்படி, தாமே விரும்பி விரத உறுதி கொண்டு, அவதரித்ததால், சமேதஹ என்கிற திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு. கிருஷ்ணாவதாரம் என்பது மிக உன்னதமானது. ஆகவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களில் எல்லாம் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திக்கொள்ளுங்கள்.



ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்து பெரியாழ்வார் பாடும்போது, ரோகிணியில் அவதரித்தவன் என்று நேரிடையாகச் சொல்லவில்லை. அஸ்தத்தில் இருந்து 10-ஆம் நாள் அவதரிப்பவன் என்று குறிப்பிடுகிறார். அதற்கு நேரடியாகவே ரோகிணி நட்சத்திரம் என்று சொல்லியிருக்கலாமே!


ரோகிணி நட்சத்திரம் என்று பளிச்சென்று சொன்னால், அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை, கம்சன் நிமிட நேரத்தில் கண்டுபிடித்துவிடுவான். பிறகு, ஆவேசத்துடன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பான். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் மரண பயமும் கொண்டு திரிகிற கம்சனுக்கு அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் அவதரித்த குழந்தை என்றால், சட்டென்று எந்த நட்சத்திரம் என்று தெரியாதாம்! 


http://wallpaper.365greetings.com/d/2116-2/radhakrishna-1k.jpg


அப்படித் தெரிந்து கொள்வதற்கு சில விநாடிகள் பிடிக்குமாம். தவிர, அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் என்றால் முன்னே வரவேண்டுமா பின்னே செல்ல வேண்டுமா என்று குழம்பித் தவிப்பானாம் கம்சன். இந்தத் தவிப்பு அடங்கி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று தெரிவதற்கு முன்பாக, தன்னை எப்படித் தற்காத்துக் கொள்வது என வியூகம் அமைத்துவிடுவானாம், குறும்புக் கண்ணன்!


பெரியாழ்வாரின் ஸ்ரீகிருஷ்ண பக்தி எத்தகையது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்க நி¬னைக்க... கண்ண பரமாத்மா மீதும் பெரியாழ்வார் மீதும் அளப்பரிய பக்தி வந்து நம்முள் வியாபிக்கிறது!


பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு யசோதை போல், நந்தகோபனைப் போல, வசுதேவரைப் போல, தேவகியைப் போல, ஏன்... நம் பெரியாழ்வார் போல், எத்தனையோ தன்யன்கள் இருக்கிறார்கள். கிருஷ்ண பிறப்பைச் சொல்லிச் சொல்லிப் பூரித்து, அவன் திருவடியை அடைந்தார்கள்.


ஆனால், இந்த உலக மக்களுக்கெல்லாம் அந்த கண்ண பரமாத்மா தன்யனாக இருக்கிறான். நம்மை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். நம் ஒவ்வொருவரின் நலனிலும் அதீத அக்கறை கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு தன்யஹ என்கிற அழகிய திருநாமமும் அமைந்தது.


நாம் அவனுக்குத் தன்யனாவோம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை, அவனுடைய மகா பிறப்பை நினைத்துப் பூரிப்போம். அவன், நமக்குத் தன்யனாவான். நம் வீட்டுக்கு வந்து, இல்லத்தையே சுபிட்சமாக்குவான்



http://www1.sulekha.com/mstore/sagribow/albums/default/Latest%20Radha%20Krishna%20wallpaper.jpg


கோகுலாஷ்டமியும் ஆடி கிருத்திகையும் அடுத்தடுத்து இந்த மாதத்தில் வருகின்றன. கண்ணபிரானுக்கும் கந்தவேளுக்கும் உகந்த திரு நாட்கள் அவை. கண்ணன், கந்தன் இருவருமே தெய்விகக் குழந்தை கள். 'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது கொண்டாட்டத்துக்குக் கேட்கவேண்டுமா? இந்த இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.



ஆடும் மயிலில் முருகன் அசைந்து வருகிறான் என்றால், கண்ணன் மயில் பீலியைத் தலையில் அணிந்த வண்ணம்  ஆடி வருகிறான்.




பகவத்கீதையை அருளிய பரந்தாமனை 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்கின்றன புராணங் கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.



குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்க காலத் தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் 'குழலன், கோட்டன்’ என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.
வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் 'வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’ எனப் பாடி மகிழ்கிறாள்.


கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள்! அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்!


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_1024x768/lord-krishna-768.jpg


தர்மத்தை நிலைநாட்ட, தீயவர்களை அழிக்க கண்ண பெருமான் போர்க்களம் கண்டார். கந்தபெருமானும் சூராதி அவுணர்களை அழித்து தேவர் உலகை வாழச் செய்தார். கீதையில் கிருஷ்ண பகவானே 'சேனைத் தலைவர்களிலே நான் குகப் பெருமானாக விளங்குகிறேன்’ என்று கூறி மகிழ்கிறார்.


கண்ணன் காதல் மன்னன். கந்தனும் தினைப்புனம் சென்று, குறவர் குடிசை நுழைந்து வள்ளி நாயகியாரிடம் புரிந்த லீலைகளைக் கந்தபுராணம் விவரிக்கிறது.
 
 
வள்ளி- தெய்வானை தேவியர் இருமருங்கும் விளங்க முருகன் காட்சி தருவது போலவே பாமா, ருக்மிணி தேவியருடன் பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.
'மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேண்டும்’ என வேலனிடம் வேண்டுகோள் வைக்கும் அருணகிரிநாதர், 'எந்தை வருக! ரகுநாயக வருக! மைந்த வருக!’ என கண்ணுக்கினிய கறுப்பு நிறக் குழந்தை கண்ணனையும் காதலித்து அழைக்கிறார்.


'பாம்புத் தலைமேலே நடம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்!’ எனக் கண்ணனைப் போற்றும் பாரதியார், 'வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்’ என்று முருகனையும் பாடுகிறார். ஆதிசங்கரரோ... சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் இரண்டும் பாடி கந்தன், கண்ணன் இருவரையும் வணங்குகிறார்.


தெய்வக் குழந்தைகள் இருவரிடமும் தீராத பக்தியும், மாறாத அன்பும், ஆறாத காதலும் கொள்வோம்; அன்றாடம் வாழ்வினில் வெல்வோம்!




'உங்க அமெரிக்கப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் எது?’ என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.


'அமெரிக்காவுக்கு இப்போது நான் நாலாவது முறையாகச் சென்றாலும், இந்த முறை என் துணைவியாரும் என்னோடு வந்ததுதான் மறக்க முடியாத அனுபவம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அங்கே அதிகம் போன இடம் கோயில்கள்தான்!' என்று நான் சொன்னபோது, 'என்னது... அமெரிக்காவில் இந்துக் கோயில்களா?' என்று நண்பரும், உடன் இருந்த எல்லோரும் வியந்தார்கள்.


'ஆமாம்! அமெரிக்காவில் இருக்கின்ற 53 மாநிலங்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் இருப்பதாக ஒரு தமிழ் நண்பர் சொன்னார். நியூஜெர்ஸி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளனவாம். அங்கே தமிழ்ச் சங்கக் கூட்டங்களைக் கோயில்களில் வைப்பதன் மூலம் பக்தியும் தமிழும் கைகோப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? 
 
 அமெரிக்காவில் நான் பார்த்த அளவில் புல்வெளிகள், சோலைகள் ஆகியவற்றில் இருந்த அணில்கள் நம்மூர் முயல்கள்போல இருந்தன. அவற்றின் முதுகில் கோடுகள் இல்லை!' என்றேன். 


'அப்ப அது அணிலே இல்லை' என்றார் ஒருவர். 'கோடுகள் இல்லாத அணிலா?' என்று இன்னொருவர் கவலைப்பட்டார்.  'அட, விடுய்யா! நம்ம ஊர்ல இதுக்கு ஒரு கதையே உண்டு. ராமர் இலங்கைக்குப் போக பாலம் கட்டுறப்போ அணில் உதவினதால, நன்றியோட அதன் முதுகுல தடவுனாராம்; அதனால கோடு விழுந்துச்சாம். ராமர்தான் அமெரிக்கா போயிருக்கமாட்டார்ல... அதனாலதான் அங்கே கோடு இல்லாத அணில்' என்று ஒருவர் விளக்கம் தந்தார். எல்லோரும் கைதட்டினார்கள்.


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_800x600/Lord-Krishna-wallpaper-855.jpg



'இவர் சொல்லுறதுகூட நல்லாதான் இருக்கு'' என்று பாராட்டிய நான், ''அணில் முதுகுல இருக்குற கோட்டுக்கு ராமர்தான் காரணம் என்பதை வெச்சு ஒரு புதுக்கவிதை வந்திருக்கு, தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியுமே..! 'இந்த அரசாங்க ஆட்கள் எதைத் தொட்டாலும் வரிதான்!’ என்று சட்டென எங்கள் நண்பர் கவிதைப் பித்தன் தாடியை வருடியபடி சொல்ல, எல்லோரும் அவருக்கு சபாஷ் சொன்னோம்.



பேச்சு வேறெங்கெங்கோ திசைதிரும்பிற்று. 'அமெரிக்காவில் இருக்கிற மாநிலங்கள் எத்தனை என்பதை ஈஸியா நினைவில் வெச்சுக்க ஒரு 'ஐடியா’ இருக்கு, தெரியுமா?' என்று புதிர் போட்டார் வரலாற்றுத்துறை பேராசிரியரான நண்பர்.



'மேப்பைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே?' என்று ஒருவர் அலுப்புடன் கேட்க, 'அது தேவையே இல்லை. அமெரிக்கக் கொடியில் நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைதான் அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக்கை' என்று அவர் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.


அந்த நேரத்தில் ஜில்ஜில் ஜிகர்தண்டா குளுமையான மணத்தோடு ஐஸ்கிரீம் கப்புகளில் வந்து சேர, அத்தனை பேரும் அமெரிக்காவை மறந்து ஜிகர்தண்டாவில் ஐக்கியமானார்கள்.


 நன்றி - சக்தி விகடன்

ஒரு மாமியார் தன் மாப்பிள்ளைக்குத்தரும் ஆகச்சிறந்த பரிசு எது?

1.டியர் உங்க கையால எனக்கு சமைச்சு போடுங்க.



 ச்சீ அதெல்லாம் கல்யாணத்துகுப்பிறகுதான் 



----------------------


2. கும்கி = யானைக்கெல்லாம் யானை பெரிய யானை ட்ரெயினிங் குடுக்கும் யானை # நமீதா ,கலா மாஸ்டர் மாதிரி 



-------------------------



3. டியர் நீ தான் எங்க வீட்டுல விளக்கேத்தனும்.



 ம்க்கும் ஒரு விளக்கை கூட ஏத்தத்தெரியாத விளக்கெண்ணையா நீ?




------------



4, ஒரு மாமியார் தன் மாப்பிள்ளைக்குத்தரும் ஆகச்சிறந்த பரிசு மச்சினி 





------------------------


5. வெள்ளிக்கிழமை அதிகாலையில வாசல் தெளிச்சு கோலம்போட வேண்டிய பெண்கள் இப்போ எல்லாம் முன்தின இரவிலே அதை செஞ்சிடரறாங்க # முன் ஜாக்கிரதையா




-----------------


He does have no other place to sit and watch.
Wondrous natures marvel...

6. கும்கி படத்துல என்ன சோகம்னா ஹீரோதான் கும்முனு இருக்கார்.ஹீரோயின் ம்ஹும் 





---------------------------


7. கேரள அரசு அதிரடி உத்தரவு.கேரளா பெண்களை தமிழர்்கள சைட் அடிக்கவோ கடலை போடவோ அனுமதி மறுப்பு் 




-------------------------


8.  கோயிலில் பிரசாதம் தருவதை பபே சிஸ்டமா மாத்திட்டா ரிப்பீட்டோ ஈட்டோ மேனியா வளரும்.செகண்ட் டைம் கேட்க கூச்சமா இருக்கு 




---------------------------


9. பஸ்கள் ரயில்கள் கோயில் திருத்தலங்கள் கடக்கும்போது சில பெண்கள் கன்னத்துல போட்டுக்கறாங்க.பிளையிங்க் கிஸ் எல்லாம் குடுக்கறாங்க(எனக்கல்ல) 




------------------


10. தமிழகத்தில் 4 செல்லாத ஓட்டுகள் வெட்கக்கேடானது: கருணாநிதி வருத்தம் # அழகிரி,கனிமொழி,ஸ்டாலின், மு க முத்து  இந்த 4 பேருமா? தலைவரே!



------------------------



Khasi Hills!!!
Serene, untouched and protected environment

11. மார்க்கெட் சரிவு! அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மீன்!! # இதுக்கு ஏங்க அதிர்ச்சி ஆகனும்? பியூட்டி பார்லர் போய் கரெக்ட் பண்ணிக்குங்க 



-------------------------------


12. சம்பள ஆள் வைத்து லஞ்சம் வசூல்: கோவை அதிகாரிகள் துணிகரம் # அவங்களுக்கு சம்பளமா சம்பளமா? லஞ்சத்துல கொஞ்சமா கமிஷனா?




------------------------------


13. ப்ளூ ரே டிஸ்க் ல எல்லா படமும் ப்ளூ கலர்ல தான் தெரியுமா? #  வண்ணக்கனவுகள்



------------------------------


14. கடவுளே! உனக்கு வேண்டியவங்க பூமில யார் யார் இருக்காங்க?




 ம்ஹூம், எல்லாரும் அவங்கவங்களுக்காக என்னிடம் வேண்டியவர்களே! # pray -வேண்டுதல்



--------------------------------


15. தேனில் ஊறிய ஈக்கள், எறும்புகள் மீண்டு வெளி வர முடிவதில்லை, அதனால்தான் உதடுகளுடன் இணைந்த உதடுகள் மீள முடிவதில்லை 



---------------------------------



Looking at you!!
Did you know that male elephant seals can weigh up to 8,800 pounds (3,628 kg)? That's pretty beefy!

But look at this face: he's not insecure about his weight. ...



16. அன்று - அன்ன ஹசாரே வழியில் விஜய் (பிறந்த நாள் போஸ்டர் வாசகம் ) ,இன்று விஜய் வழியில் அன்னாஹசாரே ( அரசியல பிரவேசம்) ்




-----------------------------


17. பொண்ணுங்கன்னா அப்படித்தான் அல்வா குடுபாங்க ஆம்பளை உனக்கு எங்கே போச்சு புத்தி? என சொல்லி வளர்க்கறாங்க அப்பாவி பசங்களை




----------------------


18. ஓஜோன்ல ஓட்டை விழுந்தாலே நாம கண்டுக்க மாட்டோம ஸ்கூல் பஸ் ஓட்டை எல்லாம் யார் கேர் பண்றாங்க



----------------------------



19. டியர் உன் குரல் ஏன் கம்மலா (வீக்கா) இருக்கு?




 ம்க்கும் .மேரேஜ்க்குப்பிறகு ஒரு "கம்மலா"வது எனக்கு வாங்கி குடுத்தீங்களா?



-------------------------



20. எதிரிகளிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள்.ஆனால் யார் எல்லாம் எதிரிகள் என்று குறித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்



--------------


Wednesday, August 08, 2012

வேதாந்தம் - சுஜாதா - சிறுகதை

பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி


- தொண்டரடிப்பொடி


ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்!’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.




‘‘என்னடா ரங்கு! ஜீவனத்துக்கு எங்கே போவேன்?’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது. பூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்?’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.





நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.



இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை!’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை!



‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’




‘‘இந்தி வாத்தியாருக்கா? ஏரோட்ரோம்லயா… என்ன விளையாடறியா?’’

ரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன? ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி!’’




வேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிறேன். ஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.



மாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லை!



வேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.



இப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.



‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா?’’ என்று கேட்டேன்.



அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’’



‘‘சும்மா… மனிதாபிமானம்தான்!’’



‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’



‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது!’’ என்றேன்.



‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்!’’




இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது. மைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.




ஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்டதை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.



தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.



அவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா? பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது!’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.



‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய?’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்!’ என்றார்.



எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.

இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’

‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்?’’




‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது!’’



‘‘பயப்படாதேயும்.’’



கிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.

ராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆச்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.

‘‘என்னடா ஆச்சு?’’



வேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்!’’



‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா? என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்?’’



வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு!’’



‘‘வேது, நீ யார் கட்சி?’’



‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.



‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’



‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது!’’



‘‘பாச்சாதாண்டா கெட்டிக்காரன்! சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’



அப்போது தீர்த்தம் கொணடு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.



‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’



‘‘எனக்கும் அதேதான் ஐடியா! எம்மா உனக்கு இந்தி தெரியுமா?’’

‘‘தெரியுமே மாமா!’’

‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு?’’

‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’



‘‘உன் போட்டோ இருக்கா?’’ என்றான் வேதாந்தம்.



‘‘இல்லையே… எதுக்கு?’’



தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.



‘‘எதுக்கு மாமா?’’



‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே?’’ என்றான்.



வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்



‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.





லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.

காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’



‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.





வேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.



‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா?’’



‘‘இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.



இல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது. வெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்!’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’



முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.



வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.



நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.



‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது!’’ என்று குரல்கள் கிளம்பின.



‘‘நாந்தாம்பா டீச்சர்..’’



‘‘அப்ப நோட்டீஸ் போட்டது?’’



வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’

‘‘வேது… என்னடா இது?’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும். ‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா?’’ வகுப்பு மௌனமாகியது.

‘‘கல்! வா! அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.

கல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.

சாரியிடம

் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.

கஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.



சாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம்? டாட்டரே பாடம் நடத்தட்டும்!’’ என்றார்கள்.



நரசிம்மாச்சாரி கோபமாக இருந்தார்.



அவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா? அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை!’’

‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும். சபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன? பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்!’’

‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்!’’

‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’

மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.



விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு!’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா!’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்!’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்!’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’




நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.

வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.



‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா? தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’



‘‘இவளா, பாட்டா! ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.



கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்!’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.



‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும் சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர். சேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்





இவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.

வேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளாஸே வேண்டாம்!’’ என்றான்.

‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.



‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..!’’



‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.



‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா? பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்!’’



கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’




‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்!’’



சாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்கத்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.



ஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.




‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு!’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்!’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன். மூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.




‘‘வேதாந்தம் நீயா?’’

‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது!’’



‘‘அரங்கத்தரசு வாழ்க!’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில்,

‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்?’’



‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’



‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’

மெள்ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

VEERA ( கா”ஜில்” அகர்வால் + டாப் C ) -தெலுங்கு சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh43hViwbZ1nr9kA5Znn5I87iuE-xdfBcPCO90-9eAK276igtzzulvvmrWJ9DLDRpbR3vYJWXQtbENztKWXuI4lw7E8bCh0L86FQSPDxapRbkMpx9TxU44mIg-VZqYxpSDxJJ-OUCcTgzDf/s1600/veera+telugu+movie+review.jpg
டோலிவுட்டில் ரவிதேஜா நம்ம ஊர் சரத்குமார் 89 டைம் நடிச்ச கேரக்டர்ல முதல் முறையா நடிச்சிருக்கார்.. 12பி புகழ் ஷாம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்கார்.. போன வருஷமே ஆந்திராவுல ரிலீஸ் ஆகி சில இடங்கள்ல சுமாரா ஓடி, பல இடங்கள்ல அடி வாங்குன மாமூல் மசாலா குப்பை தான்..

வில்லனோட பையனை ஷூட் பண்ணின போலீஸ் ஆஃபீசர் ஷாமோட பையனை பழிக்குப்பழி வாங்கும் விதமா கொலை பண்றாரு வில்லன், மிச்சம் மீதி இருக்கும்  மனைவி, மகளை காப்பாற்ற ஷாம் லீவ்ல போறாரு.. விட மாட்டேன், துரத்தி துரத்தி அடிப்பேன்னு சபதம் போடறாரு வில்லன்.

கேட்பாரே இல்லாம தனியா இருக்கும் பங்களாவுல குடி இருக்கும் ஷாமின் ஃபேமிலியை 10 நிமிஷத்துல பாம் வெச்சு முடிச்சிருக்கலாம், படமும் சீக்கிரம் முடிஞ்சிருக்கும்.. ஆனா வில்லன் அதுக்கு  ஜவ் இழுப்பு இழுக்கறார்.. ,

போலீஸ் ஆஃபீசர் ஷாமுக்கு ஒரு செக்யூரிட்டி ஆஃபீசர் நியமிக்கப்படறார்.. அந்த ஆஃபீசர்க்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கறார் வில்லன்.. அந்த ஆஃபீசரை அடிச்சுப்போட்டுட்டு போலீஸ் செக்யூரிட்டி ஆஃபீசர் மாதிரி அந்த பங்களாவுக்குள்ளே நுழையறார் நம்ம ஹீரோ ரவி தேஜா..

இந்த மாதிரி மசாலா படத்துல ஹீரோயின் அரை லூஸ் மாதிரி இருக்கனும், மாதிரி  என்ன மாதிரி , அப்படியே அச்சு அசலா வாழ்ந்து காட்றேன்னு டாப்ஸி லூஸா வருது சாரி ஹீரோயினா வருது.. முற்றலான முகம், கேடி மாதிரி பார்வை உள்ள 50 வயசு ஹீரோவை 21 வயசான ஃபிரெஸ் பீஸ் ( ஒரு நம்பிக்கை தான் ) டாப்ஸி பார்த்த உடனே காதல்.. சமப்ந்தமே இல்லாம 2 கனவு டூயட் வேற.. ரொம்ப கேவலமா இருக்கு.. ஆனாலும் ரசிக்கிறோம், ஏன்னா லோ கட் , லோ ஹிப்ல வர்றது டாப் ஸி ஆச்சே?


http://www.cinigallery.in/wp-content/uploads/2011/04/veera-movie-stills-21-718x1024.jpg


இடைவேளை ட்விஸ்ட் வேணுமே, வில்லன் ஹீரோவை  சதுரம் வரையறதுக்கு முன்னே 4 புள்ளி வரையற மாதிரி  நெஞ்சம், மார்பு, வயிறு, குடல் என 4 ஸ்பாட்டுக்கு குறி வெச்சு சுடறார்.. எமதர்மரே இப்படி சுடப்பட்டாலும் ஸ்பாட் டெத் தான்.. ஆனா தெலுங்கு ஹீரோ ஆச்சே.. சாகலை..

ஷாமின் மனைவி அண்ணே அப்டினு ஓடி வர்றார்.. இதான் ட்விஸ்ட்.. அண்ணன் தங்கை 2 பேரும்

 இடைவேளைக்குப்பிறகு பயங்கர டிராமா.. ஹீரோ ஷாமின் மனைவி ஸ்ரீதேவி, அவர் அண்ணன் ஹீரோ ரவி தேஜா ஒரு கிராமம்.. அவங்கப்பா ஒரு பெரிய மனுஷன், வில்லன், ஏழை மக்கள், நில புலன்கள் அபகரிப்பு, அடி தடி வெட்டு குத்து அப்படினு ஒரு பக்கம் கொலையா கொல்றாங்க..


 இன்னொரு பக்கம் கா”ஜில்” அகர்வால் 3 டூயட்.. துள்ளும் முயல் குட்டி மாதிரி இருக்கும் காஜில் துள்ளி துள்ளி குதிக்கிறார்.. சம்பந்தமே இல்லாம இப்படி குதிக்கறதுக்கு பேசாம ஸ்கிப்பிங்க் ஆட விட்டிருக்கலாம்.. நான் டைரக்டரா இருந்தா ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்ல ஸ்கிப்பிங்க் ஆட விட்டிருப்பேன்;.. தேவை இல்லாம குதிக்கறது, குனியறது எல்லாம் எதுக்கு?

ரவிதேஜா படம் பூரா சுறுசுறுப்பா வர்றது ஓக்கே.. ஆனா டான்ஸ் காட்சிகளீல் அவர் தொடர்ந்து விஜய் ஸ்டைலை ஃபாலோ பண்றது ஓவர்.. அழகிய தமிழ்மகன் ஸ்டெப்பை விடவே மாட்டார் போல.. விஜயே அதை விட்டுட்டார்..

ஹீரோயின் டாப்ஸிக்கு அதிக வேலை இல்லை.. 2 டூயட், 17 இடங்கள்ல தலையை காட்டிட்டுப்போறார் ( தலையை மட்டும் தானா? என யாரும் அங்கலாய்க்க வேண்டாம் )

அடுத்த ஹீரோயின் காஜில் அகர்வால்.. இவரை பார்க்கும்போது சாத்துக்குடி ஜூஸ் தான் நினைவு வருது,., மயக்கம் வர்ற மாதிரி இருக்கறவன், கிறு கிறுனு தலை சுத்தறவன் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் சாப்பிட்டா எப்படி  ரெஃப்ரெஸ் ஆவானோ அது மாதிரி இவரை பார்க்க எவ்ளவ் குப்பை படத்தையும் பார்க்கப்போலாம் போல..

ஷாம் மீசை வெச்ச குயந்தைப்பையன்.. போலீஸ் கம்பீரத்துக்கு மெனெக்கெட்டிருக்கார்.. ஓக்கே ரகம்..

ஸ்ரீதேவி விஜய குமார் ஓவர் மேக்கப், படு செயற்கையான சிரிப்பு , நாசர், கஜினி வில்லன், என வி ஐபிகள் வந்து போறாங்க..  


http://www.actresspics.in/wp-content/gallery/kajal-agarwal/kajal-agarwal-actress-hot-pics-wallpapers-18.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லனால் கொல்லப்பட்டதா நம்பப்படும் ஷாமின் மகன் உயிரோட தான் இருக்கான் அப்டிங்கறதை கமுக்கமா வைக்காம இப்படித்தான் லூஸ் மாதிரி வில்லன் கிட்டேயே கண் முன்னால காட்டுவாங்களா? அதுவும் அவன் பாடுக்கு பேஷண்ட்டா சிகிச்சை எடுத்துட்டு இருக்கான்.. அவனை ஸ்ட்ரெக்சர்ல கஷ்டப்பட்டு உக்கார வெச்சு வேன்ல ஏத்தி தண்டமா 2 டாக்டர், 3 நர்ஸ்ங்க  எல்லாம் எதுக்கு? வில்லன் கிட்டே காட்டி மறுபடி பறி கொடுக்கவா>


2. ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு செக்யூரிட்டியா வர்றவர் கிட்டே ஐ டி கார்டு கூட கேட்க மாட்டாரா கேனம் ஷாம்..?அட்லீஸ்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஏதும் ஃபைல் கூட வராதா? இவர் தான் உங்களுக்காக நாங்க அப்பாயிண்ட் பண்ணி இருக்கும் ஆள்னு..


3. சாதாரணமா  10 வயசுப்பொண்ணை ஈசியா வீட்டு காம்பவுண்ட்ல விளையாடும்போது ஈசியா கொலை பண்ணாம அந்த கேன வில்லன்  2000 பேர் படிக்கும் ஸ்கூல்ல போய் கொல்ல ட்ரை பண்ணுவானா?

4. ஹீரோ குழந்தையை காப்பாத்த தரும் ஐடியா மகா கேவலம்.. யோசிக்க எல்லாம் டைம் இல்லை, நான் சொல்ற மாதிரி செய்னு சொல்லி 2000 சச்சின் மாஸ்க் ரெடி பண்ணீ அதை எல்லா ஸ்கூல் ஸ்டூடண்ட்சுக்கும் குடுங்கறார்.. 5 நிமிஷத்துல எங்கே இருந்து அத்தனை மாஸ்க் கிடைக்கும்? அதை எப்படி ஒரே ஆள் 2000 பேர்க்கும் குடுத்து போடச்சொல்ல முடியும்?படு கேவலமான சீன் இது.. 




Beautiful Kajal Agarwal Saree Photos 1




5. இடைவேளை முடியறப்ப ஹீரோவை ஒரு வில்லன் கொல்லப்போறான், விட்டிருந்தா கொன்னிருப்பான்.. இந்த கேன மெயின் வில்லன் நான் தான் என் கையால கொல்வேன்னு ஹீரோவை கொலை பண்ணப்போனவனை மெனகெட்டு கொன்னுட்டு இருக்கான், அப்புறம் ஹீரோ எஸ் ஆகாம என்ன பண்ணுவார்? ஆந்திரா வில்லன்களுக்கு எல்லாம் அறிவே இருக்காதா?இயக்குநர் அப்படி ஆக்கிடறாரா? அட்லீஸ்ட் வில்லன்க ளாவது சார், இந்த சீன் மகா மட்டமா இருக்கு அப்டினு சொல்ல மாட்டாங்களா?

6. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோயின் கிராமத்துல 10 பொண்ணுங்களோட கபடி மேட்ச் ஆடறார்,, தாவணி போட்டுட்டு.. சும்மா விளையாட்டுன்னு ஓக்கே.. ஆனா மேட்ச், டோர்னமெண்ட் என வந்துட்டா கபடி வீராங்கனைகள் ஷார்ட்ஸ் தான் போடனும் ( ரூல்ஸ்க்கு ரூல்ஸ் கிளாமருக்கு கிளாமர் ) காட்சிக்கு அவசியம் என்பதால் தான் அண்டர் டிராரயருடன் நடிச்ச்சேன்னு அவங்க பேட்டி குடுத்திருப்பாங்க, ஜஸ்ட் மிஸ்..

7. விழாக்காலத்துல, கோயில்ல விசேஷம் நடக்கும்போது அவ்லவ் பப்ளிக்கா ஏன் கொலை பண்ணனும்? கமுக்கமா வீட்ல போய் கொன்னிருக்கலாமே?

8. எல்லாத்தை விட படு கேவலம் ஹீரோ தன் பேருக்கு சொல்ற அர்த்தம்.. வீரா - என் பேருல வீ = விடா முயற்சி, ரா = ராட்சசன் அப்டிங்கறார், குறில் வி நெடில் வீ க்கு அர்த்தம் தெரியாத ஆள் போல.. ( டப்பிங்க் வசனகர்த்தா தவறு?)



http://gallery.southdreamz.com/cache/actress/kajal-agarwal/hot-saree-stills/hot-actress-kajal-agarwal-unseen-saree-photos-6_720_southdreamz.jpg


 இந்த குப்பை படத்துல பொறுக்கி எடுத்த மாணிக்க  வசனங்கள்

1. மக்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா போலீஸ் காப்பாத்தும், அந்த போலீஸ்க்கே ஆபத்துன்னா யார் சார் காப்பாத்துவாங்க?

2. இந்த உலகத்துக்கே சுப்பீரியர் போலீஸ் கடவுள் தான்

3. ஹீரோயின் ஹீரோவிடம் -லிஃப்ட் கேட்டேன் தர்லை.. நீ ஏத்தலைன்னா என்னை யாரும் ஏத்த மாட்டாங்கன்னு நினைச்சீயா?
காமெடியன் - மேடம் மட்டும் ஓக்கே சொன்னா இவரை ஏத்திட்டு போக  யூத்துங்க பலர் தயாரா இருக்காங்க..  ( நோ டபுள் மினிங்க், ஸ்ட்ரைட்டா ஒரே மீனிங்க் )

4. நான் ஹார்ஸ் ரைடிங்க் போகனும், ஆசையா இருக்கு

 ஒரு குதிரையே  குதிரை சவாரி போக ஆசைப்படுதே அடடே//


5. ஹீரோவின் கேவலமான ஆனால் எதுகை மோனை உள்ள பஞ்ச் டயலாக் - கடல்ல அலை அடிச்சா சுனாமி இந்த வீரா அடிச்சா பொணம் நீ


சி.பி கமென்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. கிளாமர் காட்சிகளை பாட்டு சீன்லயே பார்த்துக்க்லாம், யூ டியூப் இருக்க பயம் ஏன்?இந்த கேவலமான மொக்கையை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்.போன வருஷம் ரிலீஸான இந்த டப்பாவை வீரய்யான்னு தமிழ்ல டப் பண்ணி விட்டிருக்காங்க





http://www.flixya.com/files-photo/s/h/a/shadow27-1927478.jpg
Directed by Ramesh Varma
Produced by Ganesh Indukuri
Written by Parachuri Brothers
Starring
Music by Thaman
Cinematography Chota K. Naidu
Editing by Marthand K. Venkatesh
Studio Sanvi Productions
Release date(s)
  • May 20, 2011
Country India
Language Telugu

Cast


பெண் ஜென்மம்! - 2ம் பரிசு ரூ 7500 பெற்ற கல்கி போட்டிக்கதை -

பெண் ஜென்மம்!



எஸ்.முத்துச்செல்வன்




வாளியில் தண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்தபோது சுயநினைவு தட்ட, பைப்பைத் திருகி நிறுத்தினாள். நிரம்பத் தடவியிருந்த எண்ணெய்ப் பிசுக்கு அழுக்கோடு சிதறியோட சீயக்காய் அரப்பை, தண்ணீர் சேந்திக் கரைத்துத் தலையில் அழுத்தி, தேய்க்க ஆரம்பித்தாள். குளியலறைக் கதவை ஊடுருவி, கம்பெனிக்குள் நுழையும் பணியாளர்களை அழைத்து வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தம் அவள் காதைத் துளைத்தது. அவசரமாகத் தண்ணீரைக் குவளையில் எடுத்து, தலைக்கு ஊற்றினாள். மீண்டும் மீண்டும் தலையைத் தேய்த்து நீரை மொண்டு ஊற்றிக் கொண்ட வளுக்கு நினைவில் அம்மாவின் முகம் தட்டுப்பட்டது.



தண்ணீயைப் பாத்துப் பாத்துச் சேந்துடி."


கோபத்தில் முகம் சிவக்க, திரும்பி அம்மாவை முறைத்தாள்.


என்னடி முறைக்கிறே அடிபைப்ல தண்ணீரை அடிச்சு எடுத்து வர்றவளுக்குத் தானே தெரியும்"


யாரோ குளியலறைக் கதவைத் தட்டி, ஏய்... எவடி இவ்வளவு நேரம் குளிக்கிறது..."


சுதாரித்தவள் அவசரமாக குளித்துவிட்டு நினைவுகளையும் துவட்டிய துண்டையும் உதறி விட்டு வெளியேறினாள். வெளியே நின்றிருந்தவள் முணு முணுத்ததைக் கண்டுகொள்ளாது படியிறங்கினாள்.


சௌம்யா, தங்கியிருக்கும் கம்பெனியின் விடுதியிலிருந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியின் நுழைவாயில் தெரியும். ஜன்னல் வழியே பார்த்தவள் பரபரத்தாள். கம்பெனிக்குள் அனைத்து பஸ்களும் நுழைந்துவிட்டிருக்க பணியாட்கள் ஷிப்டுக்கு வேகவேகமாகச் செல்வது தெரிந்தது. வேகமாக கம்பெனிக்கு நடக்க ஆரம்பித்தாள்.



வேலைக்குச் சேர்ந்து இன்று இருபத்தைந்து நாட்கள். முதல் நாளிலிருந்தே வீட்டு நினைவு அலைக்கழிக்கிறது. கண்களில் நீர் தளும்ப மனத்தை அடக்க பழகிக் கொண்டாள்.



அப்பாதான் இப்படியொரு கம்பெனி பற்றி விசாரித்து இருநூறு கிலோமீட்டர் தள்ளி வந்து சேர்த்துவிட்டார். வீட்டில் இவள் இரண்டாவது. இவளுக்குப் பிறகு நான்கு பேர். அம்மா தான் புலம்புவாள்.



எப்படித்தான் கரை சேர்க்கப் போறேனோ?"



பையன் பிறப்பான் என்று அம்மாவும் அப்பாவும் நினைக்க ஆறு பேரும் பெண்ணாகப் பிறந்தது பற்றி யாரிடம் குறைசொல்வது? இவள் ருதுவான போது ‘அய்யோ இவளுமா?’ என்றுதான் அம்மா எரிச்சலோடு கத்தினாள். அக்கா கார்த்திகா ருதுவாகி ஆறேழு மாதம் ஆகியிருந்தது. அடிவயிற்றின் வலியை விட அம்மாவின் எரிச்சல் மனத்தைச் சுக்குநூறாக்கியது.


வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் எல்லாமே பிரமிப்பு. நேற்றைக்கு கரட்டாம்பட்டியில் ஓடியாடித் திரிந்த வாழ்க்கை திடீரென்று தடம் புரண்டது போல் இருந்தது.



கார்த்திகா ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்கிறாள். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் படிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்த்தாள்.



படிச்சா... படிச்ச மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும். ஏதாவது ஜவுளிக்கடை, ஜெராக்ஸ் கடைன்னு வேலைக்குச் சேர்த்து விடுங்க. மிச்ச சொச்சத்தைச் சேர்த்து வைச்சு கரைசேர்க்கவாவது ஆவும்." அம்மாவின் தின புலம்பல் அப்பாவைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இவளும் படிப்பை நிறுத்திவிட்டதால் சும்மா பொழுதை வீட்டில் கழிக்கவில்லை. அவரைத் தோட்டத்தில் அவரை பறிக்க, கடலைக்காய் பிடுங்க என்று கூலி வேலைக்குச் செல்வாள். கம்பந்தட்டை அறுக்கவும் சென்றிருக்கிறாள்.



சௌம்யா யாருடி? நீயா... போ. கட்டிங் மாஸ்டர் குவாலிடி ஆபிஸர் எல்லாம் கூப்பிடறாங்க உன்னை."



கட்டிங் செய்து கொண்டிருந்த துணியை வைத்துவிட்டு டேபிளைச் சுத்தப்படுத்தி விட்டுச் சென்றாள்.



வந்து எத்தனை நாளாவுது? இப்படியா துணியை வெட்டறது?"



கட்டிங் மாஸ்டர் சத்தமிட்டபோது அவள் மனம் நடுநடுங்கியது. சரியாகத்தானே வெட்டினோம். காஸ்ட்லியான துணிவேறு.



துணியோட ரேட்டு என்ன தெரியுமா? வேலை செய்யத்தான் வந்தியா? பொழுது போக்க வந்தியா? இன்னையோட போகட்டும். அடுத்த முறை தப்பு பண்ணினே சம்பளத்துல பிடிச்சுக்குவோம். போ... லைன் சூபர்வைசர் யாரு? அந்தத் தறுதலையக் கூப்பிடு" என்றபடி அவர் நகர்ந்தார்.



டேபிளுக்கு வந்தாள். டயா பதினாலு என் பதில் நான்கை ஒன்பது போல் எழுதியிருப்பது போன்று தெரிய எல்லாமே தவறாகப் போய்விட்டது. விளக்கம் சொல்லாது அழுகையை மென்று முழுங்கி சரியான டயாவினை செட் செய்து துணியை கட் செய்தாள்.



இந்த மாதத்தோடு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். போனதும் தங்கைகளோடு கூத்தடிக்க வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் அலுப்பு தீர விளையாடியது நெஞ்சுக்குள் அலையடிக்கிறது. தோற்று விட்டால், தோற்றவர்களை ‘தோத்தான் தும்பான் சோறு சட்டி திம்பான்’ என்று கேலி பண்ணினால் அழுவார்கள்.



இங்கே எல்லாவற்றையும் டி.வி. பெட்டி முழுங்கிக் கொண்டு அதுவே கதியெனக் கிடக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இலவச டி.வி.கூட இல்லை.



ஏய் வெறும் சாப்பாட்டைக் கிளறிக்கிட்டு இருக்கே, போய் ரசம் வாங்குடி" - பக்கத்தில் அக்கா சத்தமிட நினைவைத் தட்டி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு உணவு பரிமாறும் இடத்துக்குச் சென்றாள்.



சாப்பிட்டு மாடிப்படி ஏற ஏற புளிக்குழம்பு சாப்பாடும் கேரட் பொரியல் வாசமும் ஏப்பத்தோடு வரும்போல் இருந்தது. துணிகளைத் துவைத்துக் காயப்போட வந்தபோது கீழிருந்து வார்டன் மைக்கில் ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் சில பெண்களை மட்டும் பெயர் குறிப்பிட்டுக் கீழே வரும்படி அழைத்தார்.



கீதா, கீர்த்தனா, ஸ்ரீதேவி, கனகா, லட்சுமி, அமுதா, ஆயிஷா, கௌசல்யா, சித்திரைச் செல்வி, சசிகலா, பவித்ரா, பவுலின் மேரி, மகாலட்சுமி, இலக்கியா, பிருந்தா, நதியா, குஷ்பு, பிரியதர்ஷினி, சௌம்யா..."



அரக்கப் பரக்கக் கிளம்பினாள்.



ஐந்து ஃப்ளோரில் தங்கியிருக்கும் நானூறு பேர் சொச்சத்தில் முப்பது நாப்பது பேராவது டைனிங் ஹாலில் இரைச்சலோடு குழுமியிருந்தனர்.

உஷ் சத்தம் போடாதீங்கடி."



பதினைந்து நிமிடங்கள் கழித்து பணியாளர் துறையின் மேலதிகாரி, வாய்பொத்தி அழுதபடி ஒரு அம்மாள், சோகமாக வெளிறிப்போன முகத்தோடு ஒல்லியாக ஒரு அண்ணன், சிவப்பாக தாட்டியாக சட்டையை இன் செய்து அலட்சிய முகபாவத்தோடு மற்றொரு அண்ணன் என நான்கு பேர் வந்தனர்

.

நம்ம ஹாஸ்டலில் ரூம் நெம்பர் அது18 ல் தங்கியிருந்த மாலாவோட அம்மா, அண்ணன், அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை உங்க முன்னாடி நிக்கிறாங்க. மூன்று தினத்துக்கு முன்னாடி அவுட் பாஸ் வாங்கி ஊருக்குப் போறேன்னு கிளம்பிப் போன மாலாவைக் காணவில்லை."



நிறைய பேர் ‘அய்யோ’ என்று பயம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மாலாவின் ஊருக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து ஊர்ப் பெண்களையும் அழைத்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. மாலா குறித்தும் அவள் முக அடையாளம் குறித்தும் எதுவும் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் யார் யாரை நினைவில் வைப்பது? நிச்சயம் பண்ணின பிறகு காணாமல் போய்விட்டாள். மாலாவைக் கட்டிக்க இருந்த மாப்பிள்ளை வெறுப்பான பார்வையை எங்கள் மீது வீசினார்.



அன்றைக்கு முழுதும் காணாமல் போனவளைப் பற்றித்தான் பேச்சு. எனக்கு என்னவோ வீட்டு நினைப்பு மறந்து விட்டது போலிருந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் இந்த மாதம் எப்போது முடியும்... சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்குக் கிளம்பிட வேண்டும் என்று மனம் தவியாய்த் தவிக்க ஆரம்பித்தது.



கீதாக்கா... இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போகணுங்க்கா."



வார்டன் கிட்டே கேளு."



வார்டன் மேடம் பொரிய ஆரம்பித்தாள். வீட்டுக்கெல்லாம் போக முடியாது. சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போகச்சொல்லு. வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு எவனையாவது கூட்டிட்டு சுத்தறது. அந்த மாலா சனியன் பண்ணின கூத்துல ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட்டா போட்டிருக்காங்க."



உள்ளுக்குள் மனம் அதிர்ந்தது. அழுகை வந்தது.



அங்கிருந்து நைட்டியில் இருந்த ஒரு அக்கா, அவளை வார்டனிடமிருந்து நைச்சியமாக அழைத்து மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளைக் குறித்து எல்லாம் விசாரித்தாள். பின் சம்பந்தமே இல்லாமல், எவனையாவது லவ் பண்றியாடி" என்றாள்.



சௌம்யா வெடுக்கென்று அவளை விட்டு விறுவிறுவென்று படியிறங்கி ரூமுக்கு வந்து சுருண்டு படுத்தாள். முணுக்கென்று கண்களில் நீர் கட்டியது. எப்போது கண் அசந்தாள் என்று தெரியவில்லை. லேசாக நினைவு தட்டியபோது பேச்சுக்குரல் காதுகளில் இரைந்தது.



இவ யாரடி... இப்படிப் படுத்துக்கிடக்கிறா."





புதுசுடி... விடு... அவ போக்கல விட்டுட்டோம்."

அந்தச் சமயத்துல வயித்தைப் பயங்கரமாய் வலிக்குதடி."



யேய்... வாழைப்பழம் சாப்பிட்டால் வலி குறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருமாம்டி."



சரிங்க பாட்டி."



புதுசா ஒரு லைன் சூபர்வைசர் வந்திருக்கான் பார்த்தியா."



என்னடி உன் ரசனை. அவன் ஒரு ஆளு..."



ஆமாப்பா நேத்து சிரிச்சேன். உம்முன்னு முறைச்சான்."



ஏய் நிஜமா அவ ஓடிப் போயிட்ட மாதிரி பேசுற."



அவ பேச்சை விடுங்கடி. சித்ரா கல்யாணத்துக்கு எவ எவ வரப்போறது."



நிறையபேர் அறையில் கூடிவிட்டது போல் தெரிந்தது. எழுந்திரிக்கலாமா. எழுந்து தான் ஆகவேண்டும்.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. யாரோ அவளை எழுப்பினார்கள். அவள் தூக்கத்தில் விழிப்பது போல் விழித்து எழுந்தாள்.

வாடி சாப்பிட."

ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கும் போது ஒரே கலகலப்பான பேச்சாக இருந்தது.



ஏய், நீயும் கல்யாணத்துக்கு வரத்தானே?"



இல்லக்கா... வந்து... நான்..."



அவ பாருடி... சம்பளம் கொடுக்கிற தேதியில் இருந்து இரண்டு நாள் தள்ளி கல்யாணத்தை வச்சிருக்கிறா?"



நிறைய மொய்ப் பணம் வசூல் பண்ண பிளான் பண்ணியிருப்பாடீ..."



சௌம்யாவுக்குப் பின்னால் அடித்தது போன்று யோசனை. இவர்கள் கல்யாணத்துக்குக் கிளம்பும்போது அப்படியே கிளம்பிட வேண்டியதுதான்.



சம்பளப் பணத்தை பேக்கின் இடையில் வைத்து, சுடிதார்களை மடித்து வைத்து மறைத்தாள். முதல் நாள் இரவு கல்யாணப் பெண் வீட்டில் தங்குவதால் ஆளுக்கு ஒரு பேக் வைத்திருந்தனர். சௌம்யா வரும்போது பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை. ஒரே ஒரு மாற்று சுடிதார், கிழிந்ததைத் தைத்து வைத்திருந்த ஒரு நைட்டி அவ்வளவுதான்.



தினேஷ் சார்தான் கிடுக்குப்பிடி போட்டார். இவள் புதுசு என்பதால் கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார். உண்மையைச் சொல்லி விடலாம் என்று ஒருகணம் யோசித்தாள். யோசனையை அழித்தாள். ‘கீர்த்தனக்காதான் இவளுக்குப் பொறுப்பு’ என்று சொல்ல அரைகுறையாக தலையசைத்தார்.



கல்யாண மண்டபத்தில் கீர்த்தனக்கா நல்ல மூடில் இருந்த சமயம், அக்கா எங்க ஊரு இங்க பக்கத்துலதான். வீட்டுக்குப் போயிட்டு தங்கச்சி பாப்பாவையெல்லாம் பார்த்துட்டு சம்பளப் பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்க்கா" என்று கெஞ்சிக் கேட்டாள்.



சரி, உடனே திரும்பிடுவியா? தலையைத் தலையை ஆட்டாதே. ஒருநாள் இருந்துட்டு உடனே வந்து சேரு. இந்தா ஃபோன் நெம்பரு. ரிஸ்க் எடுத்துருக்கேன்டி... என்னைக் கவுத்துறாதே."



மென்று விழுங்கினாள். உண்மையைச் சொல்லிவிடலாமா? வேண்டாம். விட மாட்டார்கள். தான் காணாமல் போய்விட்டால் தானே பிரச்னை. ஃபோன் எண் இருக்கிறதே. ஃபோன் செய்து வீட்ல போக வேண்டாம்னுட்டாங்க என்று சொல்லி விடலாம். வீட்டுக்குப் போகிறோம் என்கிற சந்தோஷமே அலை அலையாக உற்சாகத்தை எழுப்பியது.



சாயங்காலம் வெயில் தாழ்ந்திருந்தது.



எங்கிருந்து ஓடி வந்தாளோ தெரியவில்லை கடைக்குட்டி கனகா, ‘ஹய்யா... அக்கா...’ என்று தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டாள். குனிந்தவளின் முகமெங்கும் முத்தமிட்டாள்.



இவளுக்குத் தொண்டையை அடைத்தது. வாசல் பகுதியில் இருக்கும் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. பால் கேனில் ஊற்றும்போது சிதறிய பால் சிதறல்கள் மண்ணில் ஈரமாக மினுங்கின. அவர் வருவதற்கு இரவு ஏழெட்டு மணியாகும்.



விறகுக் கட்டைகளை அம்மா கீழே போட்டாள். தலை சும்மாட்டை உதறி முகத்தை ஒற்றி எடுத்தவள் இவளைக் கண்டாள்.



என்னடி இப்ப வந்துருக்கே."





வந்ததே பிடிக்கலையோ என்று சௌம்யாவுக்குப் பட்டது. எதுவும் பேசாமல் கிடந்தாள். ஆனால் அம்மா விடவில்லை.

\

இல்லைம்மா ரெண்டு நாள் லீவு விட்டுட்டாங்க."



அப்பாவிடம் மட்டும்தான் சொல்ல வேண்டும். இவள் தொணதொணப்பு ஜாஸ்தியாகிவிடும். பால் கேன்கள் உரசும் சப்தங்களோடு சைக்கிளை நிறுத்தும் ஓசை கேட்டது

.

தனியாவா வந்தே லீவா" என்றார். பொதுவாக தலையசைத்தாள்.



அம்மா இல்லாத நேரம் பார்த்து சம்பளத்தைத் தந்தவள், எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கலைப்பா. இங்கனேயே ஜவுளிக் கடை, ஜெராக்ஸ் கடைனு வேலைக்குச் சேர்த்து விடுப்பா. பாப்பாவையெல்லாம் விட்டுட்டு இருக்க முடியலை."




அங்கேயெல்லாம் இந்தச் சம்பளம் எல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா. உங்களை நான் எப்படி கரை சேர்க்கறதுன்னு முழிக்கிறேம்மா. பால் வருமானம் முன்னே மாதிரியில்லே."




அவர் பேசப் பேச இவளுக்கு அடி மனசிலே பயம் எழுந்தது.



காலை பரப்பியபடி அசந்து கார்த்திகா தூங்கிக் கொண்டிருந்தாள். கால் பாதங்கள் வெடித்து சிமெண்ட்பால் தீற்றல்களோடு கிடந்தது. மற்ற நால்வரும் ஒருத்தரையொருத்தர் அணைத்தபடி கால்கள் மேல் கால்கள் போட்டுத் தூக்கத்திலிருந்தனர்.



அடுத்த நாள் -



எக்கா இன்னைக்குதான் சூப்பர் சாப்பாடு" என்றாள் ஒரு தங்கை.



வக்கணையா திங்கணும்னா எல்லாரும் உக்காந்திருந்தா ஆகாது" - அம்மா வெறுப்பாகப் பேசினாள்.



ஏதேனும் பேசினால் வம்பாகும். வெளியே காலை வெயில் சுள்ளென்று வீதியில் உறைந்திருந்தது. ஊரே ‘வெறிச்’ என்று தான் இருக்கிறது.



தீபாவளி சமயத்துலதான் ஜவுளிக் கடைகளுக்குப் போய் வேலை கேட்க முடியும்" என்று பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா சொல்லி விட்டாள். அவள் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கூட்டுற வேலையையாவது வாங்கிக் கொடுக்கா என்றவளை முறைத்துக் கொண்டு அம்மாவிடம், ‘போட்டு விட்டு’ போய் விட்டாள்.



இந்த நாறக் கழுதை வேலையத் தலை முழுகிட்டுத்தான் இங்கே வந்திருக்கா போலிருக்கே."



அப்பா எதுவும் பேசவில்லை. அன்றைக்கு காய்கறி எதுவுமில்லாமல் வழக்கம் போல் ரசம், வாதநாராயண் இலை துவையல் என்று சமைத்துப் போட்டாள் அம்மா.



என்ன செய்வது, பாப்பாக்கள் நிறம் மங்கின. ஒட்டுக் கிழிசல்களோடுதான் வாழ்கின்றனர். சிமெண்ட்பால் ஊறின கால்களோடு அக்கா. தாம் சம்பாதிப்பது திருமண நல்வாழ்வுக்கு எனில் அது சப்பைக்கட்டுதான். சம்பாதிப்பது ‘எவன்ட்டேயோ பிடித்துக் கொடுக்க’ என்பது பேச்சுக்குத்தான். வயதுக்கு வந்து விட்டாளே அடுத்து கல்யாணம், பிள்ளை குட்டி... குடிக்கிற புருஷனோ... குடிக்காத புருஷனோ, பிடிச்ச புருஷனோ... பிடிக்காத புருஷனோ...



காலை பால் சப்ளைக்குச் சென்றுவிட்டு அப்பா வரும்போது மணி பனிரெண்டரை இருக்கும். வீட்டில் யாருமில்லை. பாப்பாக்கள் பள்ளியில். அக்கா கட்டட வேலையில். அம்மா காட்டு வேலைக்கு.



யப்பா இன்னிக்கு ரெண்டு நாப்பது வண்டில கிளம்பறேம்பா" என்றாள்.



பேக்கைத் துடைத்து ரெடி செய்தாள். ஒரு நைந்த போர்வையை மட்டும் எடுத்து வைத்திருந்தாள்.



வீட்ல அம்மாட்ட பாப்பாகிட்டேயெல்லாம் சொல்லிட்டியாம்மா?"



நீங்க சொல்லிடுங்கப்பா."



சைக்கிளிலிருந்து பால் கேன்களைக் கழட்டினார். வீட்டு படலைச் சாத்தினார். சைக்கிளை மிதித்தார். முன் ஹாண்ட் பாரில் பேக்கும் பின் கேரியரில் அவளும். பல நாட்கள் படிந்திருந்த பால் வீச்சம் மூக்கைத் துளைத்து இறங்கிக் கொண்டிருந்தது.



ஒற்றையடிப் பாதையைக் கடந்து வண்டிப் பாதையைக் கடந்து சிறு சாலையில் மினி பஸ்ஸுக்குக் காத்திருந்தனர்.



மினி பஸ்ஸின் பின் சீட்டில் உட்கார்ந்தாள். பஸ்ஸின் பின் கண்ணாடி வழியே சைக்கிளை மிதித்து மேடேறிச் செல்லும் தந்தை இறங்கி சைக்கிளை இறுகப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸைத் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்தாள்.



சௌம்யா சட்டென்று திரும்பிக் குனிந்து கொண்டாள். கண்களில் நீர் கட்டியது. பஸ் குலுங்களோடு திருப்பத்தில் திரும்பி வேக மெடுத்தது.


டிஸ்கி -

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்- http://www.adrasaka.com/2012/

07/10000.html


நன்றி - கல்கி, புலவர் தருமி

ஈரோடு தனியார் வங்கி அதிகாரி லவ் சீட்டிங்க் - 10 ஆண்டு ஜெயில்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருச்சி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் வங்கி அதிகாரிக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.1.15லட்சம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. 


திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்தவர் அருண் பிரசாத் (30). தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியின் அதிகாரி. இவருடன் அதே வங்கியில் உறையூரை சேர்ந்த பாத்திமா (29)  பணியாற்றினார். இருவரும் 2006 முதல் காதலித்தனர். இதில் பாத்திமா கர்ப்பமடைந்தார். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, 2007 ஜூலை 2ம் தேதி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் பாத்திமாவுக்கு,  கருகலைப்பு செய்தார். 



இந்நிலையில் சில மாதங்களில் அருண்பிரசாத் ஈரோட்டுக்கும், பாத்திமா தேனிக்கும்  மாற்றப்பட்டனர். இந்நிலையில் அருண்பிரசாத், அங்கு வேலை பார்க்கும் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பாத்திமா அருண்பிரசாத்திடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் அருண்பிரசாத் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை மகிளா நீதிமன்ற நீதிபதி ரகுமான் நேற்று கூறினார். தீர்ப்பில், பாத்திமாவை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைதண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதற்கு 1 வருடம் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறினார்



. மேலும் அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாத்திமா பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், ரூ.15 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அருண் பிரசாத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 நன்றி - தினகரன்