Sunday, July 22, 2012

த மிஸ் ப்ளேஸ் ஆஃப் த கிஸ் பேலஸ் ( THE MISPALCE OF THE KISS PALACE)

1.நமது முத்தம் காதலியின் வலது கன்னத்திலா? இடது கன்னத்திலா? என தீர்மானிப்பதற்குள் உதடு முந்திக்கொண்டு உதட்டில் இட்டால் அதுதான் சேம் சைடுகோல்



--------------------------------

2. மாப்ளே, 7 பொருத்தம்தான் இருக்கு,


 சாரி.. மாமா, லிப் கிஸ் அடிச்சுப்பார்த்தேன், நல்லாதான் பொருந்துச்சே?



-----------------------------

3. A WALK IN THE CLOUDS (1995) = பூவேலி (தமிழ்-கார்த்திக் ) = பிருந்தாவனம் ( தெலுங்கு -ஜூனியர் NTR) = காக்டெயில் ( ஹிந்தி-ஷைப் அலிகான்)




-----------------------

4. ஸ்போக்கன் இங்கிலீஷ் டியூஷன் நான் சின்ன வயசுல இருந்தே போகலை, காரணம் நமக்கு இங்கிலீசும் தெரியாதுங்கற மேட்டர் எல்லாருக்கும் தெரிஞ்சுட்டா?



----------------------------


5. கணக்குடீச்சர் - பில்லா 2 டெயிலி 12 கோடி கலெக்‌ஷன் ஆகுது, அப்போ 4 நாள்ல என்ன ஆகி இருக்கும்?



 மாணவன் - நிறைய பேர் வயிறு எரிஞ்சிருக்கும் 


---------------------------


6. டியர், தயவு செஞ்சு என் கண்ணை பார்க்காதிங்க, மெட்ராஸ் ஐ.



.  ஹா ஹா நாங்க எந்தக்காலத்துல கண்ணை பார்த்தோம்?


----------------------------


7.சரவணன் = முருகக்கடவுள், மீனாட்சி = பார்வதி , முருகனின் அம்மா # அதனால இது அத்துமீறலான ஜோடின்னு சரவணன்-மீனாட்சி தொடருக்கு தடை விதிக்கலையா?



----------------------


8. சீமானுக்கு அக்டோபர்ல கல்யாணமாம்,அந்த மான் சொந்த மான் யார்னு தெரியல, நொந்த மான்- விஜயலட்சுமி


------------------------------


9. சங்கீதா விசில் ஊதினா கூட சங்கு ஊதியாச்சுன்னு சொல்லிடுவாங்களோ? ;-0



---------------------


10.  அன்பே! நாரைப்பறவை போல அழகிய வாய் உன்னுது, அதனால  நார வாய்னா கோவிச்சுக்காத ;-0



-------------


11. என் காதலர் முதல் சந்திப்பிலேயே  2 மணி நேரம் பேசுனார். வாய் பேசற நாய் வேட்டைக்கு ஆகாது , கழட்டி விட்டுடுடி # கிராஸ்டாக்




----------------------------


12. வருஷா வருஷம் கேப் விடாம குழந்தை பெத்துக்கிட்டே இருந்தா அவர் தான் பெத்து சாமியா?‏@Pethusamy




-------------------


13. கண்ணெ! காந்தியே சொல்லீட்டாரு ,தீண்டாமை ஒரு பாவச்செயல்'  வா! தீண்டிடுவோம், லிமிட் தாண்டிடுவோம் # கோக்கு மாக்கு பேக்கு



-------------------


14. ”விக்”னேஷ்வரியை ஓரண்ட இழுக்க சுலபமான வழி,- உங்க கூந்தல் விக்கா? சவுரியா?




---------------------


15.அத்தான், என்னப்பற்றி ஒரே வார்த்தைல வர்ணிங்க பார்க்கலாம்....



அ”பாரம்”   # வெய்ட்டா, ரிவிட்டா ரீட்டாப்ரியன்



-----------------------



16. குற்றவாளியை விசாரிக்கும்போது அவங்க கண், காது ,மூக்கு உட்பட ஐம்புலன்களையும் கூர்ந்து கவனிப்போம்.. ஓஹோ ஐம்”புலன் விசாரனை”?




--------------------------


17. பாம்புக்கு கால் கிடையாது, ஏன் ஊர் உலகம் பாம்பின் கால் பாம்பறியும்னு சொல்லுது? ஏன்னா ஊர் வாயை மூட முடியாது



---------------------


18. பழசு ருசி ஆவது 1 ஒயின் 2 அரிசி 3 பாரம்பரிய உணவு , உடை, பழக்க வழக்கங்கள், சம்பிராதயங்கள்



----------------------


19. டாஸ்மாக் எல்லாத்துக்கும் பூட்டுப்போடப்போன நம்மாளுங்க எங்கே?  தலைவரே! எல்லாரும் உள்ளே போய் பூட்டிக்கிட்டாங்க  # கேப்டன் விழுதுகள்




-----------------------------


 20. தமிழ் நடிகையுடன் மோடிக்கு எதிராக ஆபாச சிடி ஒன்றை வெளியிட காங்கிரஸ் சதி!’: சிவசேனா கட்சி #  இதையாவது ஃபுல்லா ஓட விட்டா சரி



--------------------------------

கேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..

பெரம்பலூர்:கேரள மாநில சிறுமியை கற்பழித்து, கொலை செய்த வழக்கில், பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட மூன்று பேரை, பெரம்பலூர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், 46. இவர், தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என, தன் நண்பரான காரை அன்பரசனிடம் தெரிவித்தார். அன்பரசன், கேரள மாநிலத்தில் உள்ள புரோக்கர் பன்னீர்செல்வம் மூலம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், லாட்ரக் எஸ்டேட் லட்சுமி கோவில் அருகே உள்ள பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன், 49, என்பவரின் மூன்றாவது மகளான மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை, தான் சொந்த செலவில் படிக்க வைப்பதாக ஒப்புக்கொண்டார்.



கதறல்:கடந்த, ஜூன் 23ம் தேதி, ராஜ்குமாரின் நெருங்கிய கூட்டாளியான ஜெய்சங்கர், கார் டிரைவர் மகேந்திரன் ஆகிய இருவரும், இன்னோவா கார் மூலம் மேகலா மற்றும் அவரது தாய் சுசிலாவை கேரளாவிலிருந்து அழைத்து வந்து, ராஜ்குமார் வீட்டில் விட்டனர். சுசிலா, மேகலாவை, ராஜ்குமார் வீட்டில் விட்டு விட்டு கேரளா சென்றார்.கடந்த, 25ம் தேதி, மேகலா, தன் தாய் சுசிலாவை போனில் தொடர்பு கொண்டு, "என்னால் இங்கு இருக்க முடியவில்லை. உடனே வந்து அழைத்து செல்' என்று கூறியுள்ளார். அதற்கு, 29ம் தேதி வந்து அழைத்து செல்வதாக சமாதானம் கூறினார். அன்றைய தினமே மேகலாவின் பெற்றோர், கேரளாவிலிருந்து பெரம்பலூருக்கு வந்து கொண்டிருக்கும் போது, ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு, மேகலா உடல் நிலை சரியில்லாமல்,


தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். மருத்துவமனையில் மேகலாவை பார்த்தபோது, அவர் சுயநினைவில்லாமல் இருந்தார். 30ம் தேதி ராஜ்குமார், ஜெய்சங்கர், மேகலாவின் பெற்றோர் ஆகியோர், திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் மேகலாவை சேர்த்தனர். பண வசதியில்லாததால், ஜூலை 4ம் தேதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 6ம் தேதி, காலை 11.30 மணியளவில் மேகலா இறந்தார். இதுகுறித்து மேகலாவின் தந்தை சந்திரன் கொடுத்த புகார்படி, பெரம்பலூர் போலீசார், 7ம் தேதி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மேகலாவின் உடலை சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

 சந்தேகம்:மேகலாவின் உடலை, கேரளாவுக்கு கொண்டு சென்று இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்த போது, மேகலாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகசந்திரன், பீர்மேடு போலீசில் புகார் செய்தார். அங்கும் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், மேகலா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார், சந்தேக மரணம் என, பதிவு செய்த வழக்கை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவின் கீழ் வழக்கை மாறுதல் செய்து, ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன், பாபு, பன்னீர்செல்வம் ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


 அன்பரசன் மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், பெரம்பலூர் போலீசில் சரணடைந்தார்.


ராஜ்குமார், அன்பரசன், மகேந்திரன் ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், பாபு, பன்னீர்செல்வம் ஆகியோரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபாலசந்திரன், எஸ்.ஐ., வெங்கடேஸ்வரன் உட்பட ஐந்து பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைத்து, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.



நிரபராதி:ராஜ்குமார், சிறைக்குச் செல்லும் முன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது போல், என்னை, சிறுமியை கற்பழித்து கொலை செய்ததாக, பொய்யான புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். விசாரணைக்கு அழைத்ததால் இரவு 9.00 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தேன். மேல் இடத்திலிருந்து வந்த தகவலால், இரவு முழுக்க ஸ்டேஷனிலேயே தங்க வைக்கப்பட்டு, மீண்டும் மேலிடத்திலிருந்து தகவல் வந்ததாக தெரிவித்து, என்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.


திருச்சி ஏ.டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது:சிறுமி, ராஜ்குமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயக்கமடைந்து, பின்னர் அவர் மற்றும் அவர் கூட்டாளிகளான ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே, சிறுமியின் இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும். மேலும், இச்சம்பவத்தில் யாரெல்லாம் காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., கூறினார்.

 நன்றி - தினமலர்

'மூளைக்காய்ச்சலால் இறந்தாள்''...கேரள சிறுமி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்!





கொல்லம்: கேரள சிறுமி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது மகள் மூளைக்காய்ச்சலால் தான் இறந்தாள் என்றும் அவளை யாரும் கொலை செய்யவில்லை என்றும் அந்த சிறுமியின் தந்தை தெரிவி்த்துள்ளார்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சத்யா(15). அவர் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.



அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனித்தனியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ராஜ்குமார் உட்பட 4 பேரும் ஆண்மை உள்ளவர்கள்தான் என மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4 பேரும் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பீர்மேடு சமூகநல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் சத்யாவி்ன் தந்தை சந்திரன், தாய் சுசீலா ஆகியோரிடம் கேரள குழந்தைகள் நல கமிட்டியினர் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரன் கூறுகையில், எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் எனது மகள் சத்யாவை பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி படிக்க வைக்கலாம் என்று கூறி பீர்மேட்டைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், விஜயகுமார் ஆகியோர் கூறினர்.


இதையடுத்து நானும், எனது மனைவியும் மகள் சத்யாவை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ராஜ்குமார் வீட்டில் விடுவதற்காக சென்றோம். அங்கு வைத்து எனது மகளை அவரது மகளுடன் சேர்த்து படிக்க வைப்பதாக ராஜ்குமார் கூறினார். மேலும் ரூ.5,000 பணம் தந்தார்.


நாங்கள் ஊருக்கு திரும்பிய மறுநாளே சத்யா எங்களுக்கு போன் செய்து எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, என்னை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள். அதற்கு மறுநாள் பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சத்யாவை அனுமதித்திருப்பதாக போன் வந்தது.


இதையடுத்து நாங்கள் அங்கு சென்றபோது டாக்டர்கள் சத்யாவுக்கு மூளை காய்ச்சல் என்று கூறினர். அவளது நிலைமை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு தான் சத்யா இறந்தாள். எனது மகளை யாரும் கொன்றிருப்பார்கள் என நான் நம்பவில்லை என்றார்.


இது குறித்து குழந்தைகள் நல கமிட்டியின் செரியன் கு. குரியன் கூறியதாவது, சந்திரனும், சுசீலாவும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள். ராஜ்குமார் தனக்கு ரூ. 5,000 கொடுத்ததாக சந்திரன் கூறுகிறார். ஆனால் சுசீலா ரூ.3,000 கொடுத்தாகக் கூறுகிறார். இருவரது வாக்குமூலமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


thanx - thats tamil

க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- என்ன?

Which category v are?????????????????????
1. கற்பழிப்பு நியூஸ் போட்டதுக்கு எடிட்டர் உங்க  கிட்டே கோவிச்சுக்கிட்டாராமே?

 ஆமா, கதறக்கதர கற்பழிப்புன்னு நியூஸ் போடனுமாம்


-------------------------


2. ஒரு நல்ல ரசிகனோ, விமர்சகனோ தியேட்டரில் படம் பார்த்தால்தான் மக்கள் ரசனையை உணர முடியும் 


---------------------


3. மக்களோடு மக்களாக தியேட்டரில் படம் பார்க்கும் சுகம் நெட்டில், டி விடியில் பார்க்கும்போது வருவதில்லை


---------------------

4. நூலக புத்தகங்களை முழுமையாக உபயோகித்து படிப்பவர் நூலகரே! # அவதானிப்பு 



------------------------------


5.  கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ள ஆள் வேணும்.


ஓக்கே சார், எந்த கம்ப்யூட்டரை பார்த்தாலும் இது கம்ப்யூட்டர்தான்னு சொல்ற அளவு எனக்கு நாலெட்ஜ் இருக்கு, ஓக்கேவா?



-------------------------------

6.படத்துல 10 ஹீரோயின்னு சொன்னீங்க, ஆனா ஒரு டூயட் கூட எனக்கில்லையா?


 சாரி ஹீரோ சார்.  10 பேரும் உங்களுக்கு அக்கா தங்கச்சியாத்தான் வர்றாங்க



------------------------


7. 3எழுத்தில் என் மூச்சு இருக்கும்-காதல். 4 எழுத்தில் என் பேச்சு நிற்கும்-முத்தம்




---------------------------


8. டாக்டர்,பல்ஸ் பார்க்கனும்.


அடடா, நான் கண் டாக்டர் எப்படிபல் செக் பண்ண?



-----------------------------


9. ஸ்டெப் கட்டிங் =ஹெர் கட்டிங் இன் ஸ்டெப்?




---------------------


10. ரெட்ட்டை ஜடைவயசு-18,ஒற்றைஜடைவயசு-36#முரண்




==================






11. என் உதடுகள் உன் உதடுகளிடம் உளவுபார்க்கவருது-முத்தம்



-----------------------------

12. நடப்பதெல்லாம் நன்மைக்கே -அஜித்,டாக்டர்ஸ்,சுகர்பெஷன்ட்ஸ்,வாக்கிங்கிளப்




-----------------------


13. என் பணி சமையல் செய்து பரிமாறுவதே!


--------------------


14. லிப்ஸ்டிக் போட்டதால அல்லது இயற்கையான சிவப்பு உதடுகளை எங்கெங்கு காணினும் ஒரு லிப் கிஸ் அடிச்சுட்டு போய்ய்ட்டே இருப்பானா செங் KISS GONE



------------------------


15.  சின்ன வயசுல இருந்தே கடலை மிட்டாய் , பொட்டுக்கடலை, நிலகடலை சாப்பிட்டு வந்தா அவன் கடலை மன்னன் ஆகிடுவானா?


---------------------------


யாரு எக்கேடு கெட்டா நமக்கென்னா?? இல்ல நம்ம வீடே நாசமா போனா நமக்கென்னா??

#சீரியல்தானே முக்கியம்.!
வெளிய ஒருத்தர் அப்ரானியா நிக்கிறாரு பாருங்க..ஹீ ஈஸ் பாவம்..! :-)

- Sankar Veerappan — with Kalki Subramaniam and 50 others.



16. கழகத்தில் குஷ்பூவுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமைகளை அழகிரி, ஸ்டாலின், கனிமொழி வகையறாக்கள் இன்னும் எதிர்க்காமல் இருப்பது ஏனோ?


----------------------------


17. கடவுள் துகள் கண்டு பிடிச்ச மறுநாளே ஷேர் மார்க்கெட் டவுன்ல போகுதே? அய்யோ ராமா!



--------------------------------



18. குஷ்பூ வருங்கால சி எம் ஆனாக்கூட அதை தாங்கிக்கலாம், ஆனா சுந்தர் சி டெபுடி சி எம்மா நினைச்சு பார்க்க என் நெஞ்சே வெடிச்சுடும்போல



--------------------------


19. அதிமுகவின் ஆட்சியில் தான் கடவுள் நிரூபிக்கப்பட்டார்,அதே நாளில் தான் கலைஞர் & கோ சிறையில்  அடைக்கப்பட்டார் - ஜெ பெருமிதம் @ கற்பனை



--------------------


20. கூகுள்ல தேடினாலும் கடவுளின் துகள் கிடைக்கவில்லை



---------------------


Prakash Gaya shared Aishwarya Rai Bachchan's photo.


21. மவுனம் சம்மதம் தான்,ஆனால் வெட்டப்படும்போது மரங்கள் காட்டும் மவுனம் விதி விலக்கு

-----------------------

22. ஏய் மிஸ்டர்.. டெயிலி அந்த பொண்ணை ஃபாலோ பண்றியாம், புகார் வருது.

இன்ஸ்பெக்டர்,ப்ளீஸ் செக் மை ட்விட்டர் அக்கவுண்ட்.. நோ ஃபாலோயிங்க் ஹி ஹி

---------------------

23.  நிழல் சோறு ஊட்டும் மரங்கள் அடியே நின்று  குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டும் தாய்கள்

-------------------

24. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு#வீட்ல நடிகைகள் யாராவது மாட்னாங்களா?

---------------------

25. விஷால் படத்தலைப்புக்கு வேட்டு ,பிரபாகரன்  படம் இனி வெடி #வேட்டு டைட்டிலுக்கு மட்டுமா?சன் டிவி விமர்சனத்துல வெடி - கடி னு சொல்லப்போறாங்க

---------------------




26.. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?


என் மூளையை யூஸ் பண்ணி..


அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?

--------------------


27. நாந்தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை  வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ன!

-----------------------



28. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்



------



29. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு

--------------

30..ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள்,  ஒரு ஆணின்  பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்

-----------------




31. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?

இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?

--------------------


32. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?

------------------


· · · 22 minutes ago ·





Saturday, July 21, 2012

கி.ராஜநாராயணன் -ன் பாலியல் நகைச்சுவை சிறுகதை -இருதலைமணியன் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkRCI-ZASWwxtcz-riyZyJrexjg2OGRWDaY3CzQlJi_c8Nqt2pS69Es9LoObZC3t6-Y4-obfOCEalKHyau5Bl-aYz4E8C_XxDUyJq6Cqsy5AOcgZ7l4fAxyhN-98l0BfCWOUUzsLQOSUM/s1600/8.JPG(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது.

அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ

இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ என்னவோ ரெண்டு ஆள் பலமும் வீரியமும் இருந்த்து.
ஒருத்தரு சொன்னாரு ‘இருக்கும். ரெண்டு ‘இது’ இருந்தா ரெண்டாள் பலம் இருக்கத்தானே செய்யும்! அவரு சொன்னது ஏடாசியா நெசமான்னு தெரியலன்னாலும் எல்லாரும் சிரிச்சாங்க.


இப்பிடி இருந்ததுனால அவனுக்கு ‘இருதலைமணியன்’னு பட்டப் பேரு ஏற்பட்டுப்போச்சு!


எல்லோரும் அவனெ ரொம்ப கேலி பண்ணுனதுனால அவம் ஊரெ வுட்டே காணாம போய்ட்டாம். ரொம்ப தூர ஊர்ல போயி, யாரும் முகந்தெரியாத இடத்துல போயி வேல செஞ்சி பிழைக்கிறதுன்னு ஆயிட்டது.
அங்கே யாருக்கும் இது தெரியாம இருக்கும்படியா பாத்துக்கிட்டாம்.
பய வளந்து இளவட்டு ஆனாம். பாக்கவும் லெட்சணமா இருந்தாம்.


இப்பிடி இருக்கையில, அவனும் மனுசம்தானே, அவனுக்கு பொம்பளை ஆசை வந்தது.
வராதா பின்ன என்று கூட்டத்துல ஒருத்தர் சொன்னார்.
வேல செஞ்சி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சம் மிச்சம் வச்சி, ஒரு நா ‘தேவிடியாக்குடி’ போனாம்.


அங்கே ஒருத்தி பாத்துக்கிட்டா அத.
அவளுக்கு இது அதிசயமா இருந்தது. வித்தியாசமா இருந்தது. அதனால அவ அவன வெளியவிடாம ராத்திரிபூரா தங்கிட்டயே வச்சிக்கிட்டா.


காலையில ஆத்துக்கு அவ குளிக்கப்போன எடத்துல தனக்கு வேண்டப்பட்ட சிநேகிதக்காரிக்கிட்ட இதெ சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டா.
சிநேகிதக்காரிக்கும் இப்படியாப்பட்ட காரியங்கள்ள ரொம்ப பிரியம். அதனால அவ, நா இப்பவே ஓங்கூட வர்றேம். நானும் அதெப் பாக்கேண்டாமான்னு புறப்பட்டுட்டா.


அவ அத பாத்து அனுபவிச்சுட்டு அவளோட சேத்திக்காரி நாலு பேரு கிட்ட சொன்னா.
ஆக இப்பிடி இந்த ரகசியம் தீயாப் பரவி இந்த விசயத்துல ரொம்ப பிரியமான பொம்பளைகளுக்கெல்லாம் தெரிஞ்சி, பயலுக்கு ஒரே கிறுக்கு ஆயிட்டுது.

இருக்காதா பின்னே என்றார் ஒருத்தர்.
இப்பல்லாம் அவன் வேலைக்கே போறதில்ல

அவனோட ‘சங்கதி’ விஷயம் அந்த நாட்டோட அரண்மன அந்தப்புரத்துக்குள்ளேயும் போயிட்டு. மகாராணிக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு சேடிப் பொண்ணு பாத்து வந்து சொல்லிட்டா.

இப்ப மகாராணிக்கும் அதெப் பாக்கணும்னு ஆயிட்டது.
அந்த சேடிப்பொண்ணு மூலமாவே மகாராணி அவனுக்கு ரகசியமா தாக்கல் சொல்லி அனுப்பிச்சா.


அவம் பதறிப் போயிட்டாம். இதேதுடா சங்கட்டம். வம்புல போயி மாட்டுவம் போலுக்கேன்னு நெனச்சி அவகிட்ட ஏத்தா நீ என்னமோ ஆசெப்பட்ட வந்தே போனேன்னு இருக்காம இதெப் போயி அரண்மனையில மகாராணியிட்ட பத்த வெச்சிட்டயெ. அப்படியாப்பட்ட இடத்துக்கெல்லாம் நாம போவலாமா?


அதுக பேன் எடுத்தாலும் எடுக்கும், காத அத்தாலும் அத்துருமே. என்னால முடியாது ஆத்தா. நா வர மாட்டேன்னாம்.


நீ ஒண்ணும் பயப்படவேண்டாம். மகாராணிக்கு இதுல எல்லாம் பிரியம் சாஸ்த்தி. ஒன்னெ ‘பொன்னுங்கண்ணுமா’ வச்சிக்கிடுவா. சும்மா வா; அங்கே வந்துட்டே ராசாக்கணக்கா இருக்கலாம்னா.

ஏத்தா என்னே ஆளவிடுன்னு சொல்லிப்பாத்தாம்.

இந்தா பாரு இது மகாராணியோட ஆக்கின. நீ வல்லேன்னா இப்ப ஒந்தலைக்கு கத்திதாம் காத்துக்கிட்டிருக்கு. தப்பிக்க முடியாது பாத்துக்க.
அங்க வந்து இருக்க ஒனக்கு என்ன கொள்ள. நல்..லா தின்னுட்டு பொலிகாள போல இருக்க வலிக்கா உனக்கு? மரியாதையா எந்திரிச்சி எம் பொறத்தால வான்னா.


நல்லா ரோசிச்சுப் பாத்தாம். இங்க இப்பிடி அரையுங் கொறையுமா தின்னுக்கிட்டு இந்த முண்டெக கூட லோலுப்பட்டுக்கிட்டு இருக்கத விட அங்கென போயி ராசாக்கணக்க இருக்கலாம்னு தோணிச்சி. சரீன்னுட்டாம்.

பொண்ணு வேசம் போட்டு ராத்திரியோட ராத்திரியா சேடிப்பொண்ணு கூடவே ராணியோட அந்தப்புரம் போயிச் சேந்தாம்.


அப்ப ராசா நகரத்துல இல்ல. வேட்டையாடப் போயிருந்தாரு. வேட்டையாடப் போனா அங்க கொஞ்ச நா தங்கி இருந்துட்டுதாம் வருவாரு. அதனால இங்க இவம்பாடு வேட்டையா இருந்திச்சி.

சாதாரண விசயமா இருந்தா பரவா இல்லாம இருக்கும். இது அதிசயமான விசயமாச்சே. எப்பிடியோ பொட்டைச்சிக மத்தீயில கிசுகிசுப்பாயி இது இன்னொரு ராணிக்குத் தெரிஞ்சு போச்சி. அவளும் ராசாவுக்குப் பிரியமான ஒரு மகாராணிதாம்.


அவ மாத்திரம் என்ன.. நான் பாக்கேண்டாமான்னு கேட்டனுப்பிச்சா
இது நாம்பாத்துக் கொண்டாந்தது. நா வச்சிருக்கேம். ஒனக்கென்ன? வேணும்னா நீ பாத்து ஒண்ணெ கொண்டாந்து வச்சிக்கயேம்னா
அது என்ன அம்புட்டு லேசாக் கிடச்சிருமா. அதெ எப்பிடிக் கண்டு புடிக்கது!

அதென்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு வேணும். அது எப்பிடித்தாம் இருக்குதுன்னு நாம் பாக்கணும்னு சொல்லி அனுப்பிச்சா அந்த இன்னொரு ராணி.


இப்பிடியே இவுகளுக்குள்ள ஒரு ‘எசலிப்பு’ ஏற்பட்டு, ராசா வேட்டையிலிருந்து திரும்புறதுக்கு முன்னாடி அவரு காது வரைக்கும் போயிட்டுது சண்டை. ராசாவுக்கு கோவமான கோவமில்ல’. அண்ட கடாரம் முட்டிப் போச்சி

‘தாயோளிது’ ஏம் அரமனைக்குள்ளாற வந்து அப்பிடி ஒரு பய வந்து இருக்க அவனுக்கு என்ன ரெண்டு ‘இதா’ இருக்குன்னு கேட்டாரு.

ஆமா ராசா…அப்பிடித்தாம் கேள்வி; அவனுக்கு ரெண்டுதாம் இருக்கும்னாங்க.

சே..இது மோசக் கேடுல்லா வந்து சேந்திருக்கு. அவனப் புடுச்சி அப்பிடியே அதும்மேல யானைய விட்டு மிதிக்க வச்சிக் கொன்னுப்புடுங்கன்னு ஆக்கின அனுப்பிச்சிட்டாரு.

இது எப்பிடியோ மகாராணிக்கு வேண்டியவன் ஒருத்தன் அங்கிருந்து ரகசியமாச் சொல்லி அனுப்பிச்சி ‘இருதலைமணியனை’ தப்பி ஓடி போகச் சொல்லிட்டா ராணி.

பயல் எங்கே போனானோ தெரியல. தல மறைவாயிட்டாம். ஏதோ வேலை செஞ்சி பொழக்க முடிஞ்சதே தவிர, முந்திய மாதிரி பொம்பளைகிட்ட போயி ‘நல்லாப் பொல்லா’ இருக்க முடியல; இருந்தாத்தாம் தெரிஞ்சி போகுமே.


ராசா முரசு அறஞ்சி தேசம் பூராவும் அறிவிச்சிட்டாரு. இன்ன இன்ன மாதிரி அடயாளம் உள்ள இளந்தாரிப்பயல புடுச்சி யாரு தர்றாங்களோ அவர்களுக்கு பதினாயிரம் களஞ்சிப் பொன் தர்றதாக!

வேலை செய்ய மாச்சப் பட்டவெனெல்லாம் மந்தை,சந்தை,வெளிக்கிருக்குத இடம் இப்பிடி எவனுக்கு ரெண்டு இது இருக்குன்னு தேடிக்கிட்டு அலையுதாங்க.

சும்மாவா பதினாயிரங்களஞ்சி பொன்னுல்லா!

இந்தப்பய யாரு கண்ணுலயும் காங்காம அலைஞ்சி திரிஞ்சதுல உடம்பு பூரா முடி காடா வளந்து போச்சு. ஒரு நா நாசுவம் கிட்ட போயி ‘ஏடே எனக்கு உடம்பு சவரம் பண்ணனும். நா ஆத்துல இந்த மரத்துக்குக் கீழ இருக்கேம். வந்து செஞ்சயனா ஒனக்கு ஒரு களஞ்சிப் பொன்னு தருவேம்னு சொல்ல நாசுவனும் சரி போங்க வர்றேம்னாம்.


இவம் போயி மரத்து எணல்ல மறைவான இடம் பாத்து மணல்ல ‘ஒண்ணைப்’ பொதச்சு வச்சி உக்காந்துக்கிட்டு இருந்தாம் கண்டுபிடிச்சிரக்கூடாதேன்னு. நாசுவன் கிண்ணத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து எதுர்க்க மணல்ல உக்காந்துக்கிட்டு தண்ணிய விட்டு நல்ல இவன தேச்சிவிட்டாம்.

பயலுக்கு ‘பாத்து’ ரொம்ப நாளாச்சி. அதுலயும் வேத்து மனுசன் கைப்பட்டதும் தேச்சதும் சேந்து, மணலுக்குள்ள தெரியாம இருக்க பொதச்சு வச்சிருந்த்து ‘படார்’னு வேகமா எந்திரிச்சதுல நாசுவம் கண்ணுல மணலு விழ, அவம் சத்தம் போட்டு ‘யப்பா…நீதானா அது’ன்னு கேட்டுட்டாம்.


பிடிச்சானே ஓட்டம்.

யய்யா எனக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் குத்தமில்ல. பதினாயிரங் களஞ்சி பொன்னு வேண்டாம். அந்த ஒத்த களஞ்சி பொன்னாவது குடுத்துட்டு போரும்னு இவம் பொறத்தாலயே ஓட, அங்க ஆத்துல குளிச்சிட்டு வேட்டியக் காயப் போட்டுட்டு இருந்தவங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க…

‘அய்யோ போகுதே பதினாயிரங் களஞ்சிப் பொன்னு போகுதேன்னு’ இவம் கூப்பாடு போட, அங்கே ஒரே அவக்காடு ஆயிட்டு.
‘பெறகென்ன…போனவம் போனவந்தாம்’
ராசா அவனத் தேடிட்டிருக்காம். ராணியும் தேடிட்டிருக்கா.

பாத்தாச் சொல்லுங்க. பதினாயிரம் களஞ்சியம் பொன்னு கெடக்கும்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifQ0HkQvTVE8mZctWcAgg0fPnszTONGR155y1_EzTd286zOvAxq0a66E55hfMSsdZXhM9H4WOlWpcmu0AJDiofnGusa4jwfkXJBljxdfunk7dBeGIYI0LN9del5ej5t4qpoY00mFkRtss/s400/Ki.Ra.bmp

ஜி. நாகராஜன் - ன் ஒரு நிமிடக்கதைகள் 4

http://farm4.staticflickr.com/3315/3643929380_30493ffca7_z.jpg?zz=1 

குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

‘ஆமாங்க ‘ என்றான் கைதி.

‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட்.

‘அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, ‘யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ‘ என்றார்.


மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.


2.
மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

‘சாமியார் சமாதியாகிவிட்டார். ‘ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ‘ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.


ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் ‘சாமியார் சமாதியாகிவிட்டார் ‘ என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, ‘டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ‘ என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ‘ என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.



3.
அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ‘ என்று எழுத்தாளன் கேட்டான்.

‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ‘ என்றாள் விபச்சாரி.


‘இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ‘ என்றான் எழுத்தாளன்.

‘கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு… இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ‘ என்றாள் விபச்சாரி.


‘கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? ‘

‘யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு ‘

‘மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? ‘

‘அப்படியா ? ‘

‘பின்பு ? ‘

‘சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? ‘

‘ஊம், இருக்கு ‘

‘நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க ‘


கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.


4.
அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. ‘வா, வா ‘ என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.


‘யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ‘ என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.


தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

ஓர் உத்தம தினம்- சுஜாதா - லவ் & சஸ்பென்ஸ் - சிறுகதை

ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க… அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட… உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ”நீங்களா?” என்றாள்.


சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.


என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!


”எழுந்திருங்க” என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ”ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்… உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.


”ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.”


”ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?”

”கிடையாது.”

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ”ஹலோ?” என்று அதட்டினான். சற்று நேரத்தில், ”உனக்குத்தான்” என்று கொடுத்தான்.


”என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே” மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.


”தேங்க்ஸ் மஞ்சு.”

”உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே.”


”மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?”


”எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.”

”அவருக்கென்ன… வழக்கம்போல் ஆபீஸ் போவார்.”

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ”இல்லை… இல்லை… நாமிருவரும் வெளியே போறோம்” என்று ஜாடை காட்டினான்.

”மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.”

”ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!”

டெலிபோனை வைத்தபோது அது ‘டிரிரிக்’ என்றது பறவைபோல.

”மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?”

”சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.”

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ”ம், என்ன கனா? சொல்லு!” என்றான்.

”கையெடுங்க. சொல்றேன்.”

”எடுத்தாச்சு.”

”அந்தக் கை.”

”அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?”

”ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி… ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.”

”சரி, இப்ப?” இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ”ம், சொல்லு” என்று இழுத்தான்.

”ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.”

”மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.”

”ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.”

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.


பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று ‘விம்’ போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, ‘ச்சீயோ, ச்சீயோ’ என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் ‘தில்லு’ என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ”எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?” என்று கேட்டாள்.

”இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?”

”நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?”

”வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.”

”கோயிலுக்குப் போயாகணும்.”

”ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?”

”முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.”

”சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.”

”பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?”

”போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.”

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

”கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?”

”இந்தாம்மா புஷ்பம்” என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ”எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்….” என்று கூறினாள்.

”த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி…?”

”நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.”

மாருதியில் ஏறிக்கொள்ள, ”தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?” என்று கேட்டான்.

”தெரியும், சொல்ல வேண்டாம்.”

”யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?”

”சே, புத்தி போறதே!”

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ”இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது” என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ”ஹலோ, கர்னல்!”

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் ‘கர்னல்’ என்றுதான் கூப்பிடுவார்கள்.


கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ”ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே” 


”தேங்க்யூ கர்னல்.”


”இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?”

”தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்” என்றான் சத்தீஷ்.

”தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?”

”கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு” என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க… அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ”வர்றோம் கர்னல்” என்றான்.

”சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!”

”தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.”

”அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா” என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ”இன்னும் குளிக்கிறியா?” என்றாள்.

”ஆமாம்மா.”

”எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.”

அப்பா வந்து, ”தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?” என்றார்.

”இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.”

”எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.”

”அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.” முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ”முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?” என்றான்.

”எங்கேயாவது!”

”சரி லெட்ஸ் கோ டு ‘எங்கேயாவது’….”

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான ‘ஹன்’களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்… நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல…. என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க… மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ”மேடம்! ஹேப்பி பர்த்டே” என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் ‘வா’ என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

”பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.”

‘லேஸ் மேக்கர்’ போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

”ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?”

”படிங்க.”

”ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.”

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய ‘ப்ரா’ ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்…

”நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.”

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் ‘கேஸி’ என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, ‘விசிஆரை’ இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, ‘ப்ளே’ பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பதமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு…

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

”அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!”

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!



சி.பி -  ( accident to her husband)

கலைஞர் - இரட்டை இலை, இரட்டை நாக்கு

Photo shared on July 17, 2012

#Billa2 Paarka Povamaa... Santhanam And STR !! 

 

 

 

 

1.பெண் போலீஸைப்பார்த்தால் ஏன் எப்போதும் சிரிப்புவருகிறது?


 ஏன்னா அவங்க திருடனை ஓடிப்பிடிக்கையில் திருடன் போலீஸ் விளையாட்டு ஜாலியா இருக்கும்



--------------------


2. நான் வெச்ச ரசம் அவ கால்ல கொட்டிடுச்சு, அதுதான் பாதரசமா? # மேரேஜ் ஆன சமையல்காரனின் கேள்வி



------------------------


3. ராதா , சீதா, சதா,ஆல் ஃபிகரு(ம்) தெய்வம்



-------------------------


4. மச்சினிச்சி க்கு இங்கிலீஷ் ல என்ன? Wife-in-law வா?



நோ நோ அதுல கிக்கே இல்லை, அதனால ஸ்டெப் *(னி) ஒயிஃப்


--------------------------


5. குறு தெய்வம்னா என்ன? சிவ லிங்கம், ஏன்னா அதுதான் சின்னதா இருக்கு



---------------------


6. தயிர் சாதத்துக்கு வறுக்கப்பட்ட மோர் மிளகாய் கடிச்சுக்கிட்டா நீ அக்மார்க் கிராமத்துக்காரன், இலந்த வடை கடிச்சா கரிசல்காட்டுக்காரன் ;-0



--------------------------


7. ஊரோடிய கதைகள்  மாதிரி ஊரை விட்டு ஓடிய கதைகள் எழுதனும் ;-0


------------------


8. வீட்டோட மாப்ளையா இருந்துட்டா மாமனாருக்கும், ஆஃபீஸ்லயே குடி இருந்துட்டா டேமேஜர்களுக்கும் செம கொண்டாட்டம்தான், ராஸ்கல்ஸ்





-------------------------

 9. 30 வயசு ஆண்ட்டிகளை பார்த்தாக்க்கூட 18 வயசு பொண்ணுக்குத்தர்ற அதே மரியாதை (!!!) , கவனிப்பு தந்தா அதுவே வயசு கோளாறு.




-------------------------

10. விஜய் -டாடி, என் படமும் 2000 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுங்க,இது மானப்பிரச்சனை


  SAC - வாடகை கொடுத்து கட்டுபடி ஆகாதே?



------------------------
டெசோ மாநாட்டில் தனி ஈழத்துக்கான தீர்மானம் நிறைவேற்றபடாது - கலைஞர் —

11. ஜெயலலிதா என்னை அமைச்சர் போலவே நடத்துகிறார்-சரத் #  டெயிலி காலைல அவர் கால்ல விழனும்கறாரா?



-------------------------


12. எலியை வேட்டை ஆடும் வேட்டைக்காரரின் ஷார்ட்ஃபார்ம் தான் எலிவேட்டர்? # ஜீரோ ஜி கே வாலா ;-0



-------------------------


13. காலேஜ், ஆஃபீஸ் வரும் பெண்கள் கட்டி இருக்கும் ரிஸ்ட் வாட்சும், கொண்டு வரும் டிஃபன் பாக்சும் ரொம்ப சின்னதா இருக்கே அது ஏன்? # சின்ன சின்ன சந்தேகங்கள்



-------------------


14. இன் டோர் கேம்ஸ் = கதவுக்குள்ளே போய் விளையாடுவது , அவுட்டோர் கேம்ஸ் - கதவுக்கு வெளீல விளையாடுவது ? # சபாஷ் துபாஷ்



------------------------


15.படத்துல எல்லா கேரக்டர்சும் கூலிங்க் கிளாஸ் போட்டிருந்தா அது பில்லா பாகம் 1, ஹீரோ மட்டும் போட்டிருந்தா அது பில்லா 2



-----------




16.  விஜய் ரசிகரின் SMS - அஜித் வில்லன்களை சுடறதுக்குப்பதிலா டைரக்டரை முதல்லியே சுட்டிருந்தா பல உயிர்ப்பலிகள் தவிர்க்கப்பட்டிருக்கும் ;-0



----------------


17. ஆடி அடங்கும் வாழ்க்கையடா # ஆடி அமாவாசை சிந்தனைகள்



----------------------


18. மடிகாரர் என்று சொல்லப்படும் பெட்ஷீட்,துண்டு மடிக்கும் ஆட்களுக்கு ஃபிகர் ஈசியா மடியுமா? # டவுட்டாலஜி



-----------------------


19. புதிய படத்துக்கு தினமும் 7 மணி நேரம் எக்சசைஸ் செய்யும் அஜித் # உடற்பயிற்சியா? நடைப்பயிற்சியா?



-----------------------


20. கேர்ள் ஃபிரண்ட் வைத்திருப்பவர்கள் ஆடி அமாவாசையை சாக்காக வைத்து ஏதோ ஒரு பாட்டுக்கு ஜோடியா ஆடியே ஆகனும்,இல்ல சாமி குத்தம் என ரீல் விடவும்




-----------------------------




21. நயன் தாரா டைரக்டர் ஆகப்போறாராம், எப்படியாவது அவர் கிட்டே அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகிடனும் # நாளைய மயக்குநர்




-------------


22. தாராள  மனப்பான்மை, சிக்கன குணம் இரண்டையும் ஒருங்கே பெற்றவர்கள் கவர்ச்சி கதாநாயகிகளே!




----------------------


23. இலங்கை பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன் # பிடிக்காதது இரட்டை இலை, பிடிச்சது இரட்டை நாக்கு



------------------------


24. மழையை பார்த்ததும் மணிரத்னம், ஸ்ரேயா நினைவு வந்தா நீ ஒரு சினிமா ரசிகன்,காதலியின் நினைவு வந்தா கில்மா ரசிகன்



--------------------------


25.கடவுள் வாழ் ( துகள்)



------------------------



Friday, July 20, 2012

THE DARK KNIGHT RISES - ஹாலிவுட் சினிமா விமர்சனம்



http://cinemalebnen.org/Content/cinema-media/pictures/the-dark-knight-rises-poster.jpg 

பேட் மேன் பிகின்ஸ் (2005) ,  த டார்க் நைட் ( 2008)  ஆகிய 2 படங்களின் தொடர்ச்சியா இந்தப்படம் வருது.. த இன்செப்ஷன் பட டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன் தான் இதன் டைரக்டர்.. அதனால ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.. உலகமே கடுமையாக கூச்சல்போட்டுக்கொண்டிருக்கும்போது, அந்தக் கூச்சலின் நடுவே அமர்ந்து ஒரு நாவல் எழுதற ஆள் தான்  நோலன்,  செல்ஃபோனோ அல்லது மின்னஞ்சலோ இல்லாதவர், அது எல்லாம் தேவை இல்லாத தொந்தரவுன்னு சொல்றவர், இவர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அதிகமா யூஸ் பண்ணாதவர்.. நம்ம ஊர்ல எப்படி மணிரத்னம், ஷங்கரோ அந்த மாதிரி ஹாலிவுட்ல இவர் ஃபேமஸ்.. 


படத்தோட கதை என்ன?

இதுக்கு முந்தைய பாகத்தில் வந்த வில்லன் அந்த நகரத்துல ஒரு பாம் போட ட்ரை பண்றான்.. அதை நகர மக்களும் பேட்மேனும் சேர்ந்து முறியடிச்சு அவனை முடிச்சுக்கட்டிடறாங்க.அவனோட வாரிசு ஒண்ணு பெருசு ஆகி அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்குன்னு காட்ட அதே மாதிரி பிளான் பண்ணி நியூக்ளியர் பாம் செட் பண்ணி வெடிக்க  ட்ரை பண்ணுது.. அதை எப்படி ஹீரோ முறியடிக்கறார் என்ற சாதாரண கதைதான்.. நாம எல்லாம் எத்தனை அர்ஜூன் படம், கேப்டன் படம் ,ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்தாச்சு.. ஆனா கிறிஸ்டோபர் நோலன் பிரமாதமான திரைக்கதையால ரெண்டே  முக்கால் மணி நேரம் நம்மை உக்கார வெச்சுடறாரு.. வில்லன் யாருங்கறதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு.. அதை சொன்னா சுவராஸ்யம் போயிடும்..

இந்த மாதிரி படத்துல என்ன ஒரு பாசிட்டிவான அம்சம்னா ஹீரோவுக்கு முகபாவனை சரியாவே வர்லைன்னு குறை சொல்ல முடியாது,, ஏன்னா  படத்துல பாதி நேரம் ஹீரோ  மாஸ்க்கோட தானே வர்றார்? ஆனா ஆள் ஜைஜாண்டிக்கான உருவம்..  மகாநதி கமல் மாதிரி இவர் அடி வாங்கற சீன் தான் அதிகம்.. படத்துல வர்ற 70 மார்க் ஃபிகர் கிட்டே 2 லிப் கிஸ் பண்றார்.. ரொமான்ஸ்க்கு ட்ரை பண்றார்.. ஆனா டைரக்டர் விடலை..ரொம்ப வயசான பேட் மேன்
http://collider.com/wp-content/uploads/the-dark-knight-rises-anne-hathaway-prison.jpg


வில்லன் படம் பூரா அவர் பங்குக்கு ஒரு முகமூடி மாதிரி கேட்டா ஆக்சிஜன் சிலிண்டராம்.. மூச்சு விடவே கஷ்டப்படற ஆள் போல..முகம் எல்லாம் சிதைஞ்சதால அப்படி ஒரு மாஸ்க்னு க்ளைமாக்ஸ்ல சொல்றாங்க, ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாமே?லோ பட்ஜெட் படமா என்ன?ஆனா ஆள் ஆளவந்தான் கமல் மாதிரி ஆஜானுபாகவமான தோற்றம் ( ஏன்னா இங்க்லீஷ்ல ஜைஜாண்டிக்னு ஆல்ரெடி ஹீரோவை சொல்லியாச்சு


லேடி ராபின் ஹூட்டா வர்ற ஃபிகருதான் ஹீரோயின்  70 மார்க் போடலாம்.. ரொம்ப டைட்டா டிரஸ் போட்டுட்டு வந்து பாவம் அவங்களும் கஷ்டப்பட்டு நம்மையும் இன்ப அவஸ்தைல மூழ்க வைக்குது.. அது போட்டுட்டு வர்ற லிப்ஸ்டிக் கண்ணை பறிக்குது.. ஹை ஹீல்ஸ் செப்பல் உயரம் மட்டும் 6  இஞ்ச்..  32 பல்லுல ஒரு பல் கூட கடைசி வரைக்கும் தெரியலை  அவ்ளவ் அமுக்கி போல.. 

 படத்துல இன்னொரு ஃபிகரு வருது. அது இதை விட நல்ல ஹோம்லி ஃபிகரு.. ஆனா அது எப்பவும் சிடு மூஞ்சியாவே இருக்கு.. நோ யூஸ்..மிராண்டா 4 சீன் வந்தாலும் நச்சுன்னு இருக்கு, நான் டைரக்டரா இருந்தா படம் பூரா வர்ற மாதிரி சீன்ஸ் வெச்சிருப்பேன், ஏன்னே கோடிக்கணக்குல சம்பளம் கொடுத்துட்டு தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னா எப்டி?





http://www.filmofilia.com/wp-content/uploads/2012/06/THE-DARK-KNIGHT-RISES-poster.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. நம்ம 2 பேர்ல  ஒருத்தராவது உயிரோட இருக்கனும்..

அப்போ சாவு பயம் வந்துடுச்சுன்னு சொல்லு.. 




2. ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. நான் அதை டேஸ்ட் பண்ணவா?  ( எதை?)



3. அந்தப்பொண்ணு உங்களைப்பார்க்க ஆசைப்படுது..

அவ ரொம்ப அடமண்ட்டான கேரக்டர் ஆச்சே?

எல்லா அழகிகளும் அடமன்ட் தான்.. ( சி பி - ஆனா எல்லா அடமண்ட் கேர்ள்சும் அழகிகளா இருக்க மாட்டங்க )




4. கை ரேகையை வெச்சு ஆளை அடையாளம் கண்டு பிடிக்கலாம்னு நினைச்சேன், ஆனா வந்தவ புத்திசாலி.. வேற ஒருவரோட ஃபிங்கர் பிரிண்ட்ஸை வெச்சு திருடி இருக்கா..

5.  அப்போ அவ நல்ல டெக்னிக்கல் திருடிதான்..

 இப்போ அவளை கண்டுபிடிக்கனுமா? பாராட்டு விழா நடத்தனுமா?

6. உலகத்துல இருக்கற எல்லா லவர்ஸூம் ஒண்ணு சேர்றதில்லை.. அப்படி சேர்ந்தாலும் கடைசி வரை ஒத்துமையா வாழ்ந்துடறதும் இல்லை

7. அவன் கண்டிப்பா செத்து இருப்பான்.. 

 அப்போ டெட் பாடியை என் கண்ல காட்டு.. அப்போத்தான் நம்புவேன்..

இந்த தண்ணி 4 திசைல போகுது.. அதை எங்கேன்னு போய்த்தேட?

 சரி ஃபாலோ பண்ணு ( புடுச்சு தள்ளி விட்டுடறான்)


8.  அவரை இப்போ நேர்ல பார்க்கனும்


ஆனா அவர் யாரையும் சந்திக்க விரும்பலை


அரெஸ்ட் வாரண்ட் இருந்தாக்கூடவா?



9. பர்ஸ்ல ஜஸ்ட் 10 ரூபா தான் வெச்சிருக்கான்.. வேற யாரும் உனக்கு சிக்கலையா?


10  பார்ட்டிங்கறது பகட்டை வெளீல காட்டிக்கறதுக்கும், பணக்காரங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கவும் தான்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIfc9n1JaLmIZF974wPhpEE1QkbCnyqaTREq302oUo_THErTbjP04LOXo7HLwby0xJKzoNTrGsOG5Q9BHovDxpFJr7tq7M01GtY-1pb4Ybo4Aw1eRvX7xKxYkkjeDDGl0Cxlp_NRjeIsY/s1600/MarionCotillard_Inception2.jpg


11.. ஊரை ஏமாத்தும் சாகசக்காரி நீ.. உனக்கு ஏழை கிடைச்சாலும் சரி, பணக்காரன் கிடைச்சாலும் சரி, அவனை ஏமாத்தி பணம் பறிப்பே..

 ச்சே ச்சே இருக்கறவங்க கிட்டே இருந்து பறிச்சு  இல்லாதவங்க கிட்டே கொடுக்கப்போறேன்

 அப்போ நீ லேடி ராபின் ஹூட்டா?

12.  என் கார் கீ மிஸ் ஆகிடுச்சு..

 ஜஸ்ட் நவ் உங்க ஒயிஃப் காரை ஓட்டிட்டு போனாங்க

 சுத்தம், காரை சுட்டுட்டுப்போய்ட்டாளா?

13. உங்க கிட்டே இருக்கற நரை முடி குறைஞ்சாலும் அந்த நக்கல் இன்னும் குறையவே இல்லை..

14. ஆஆஆ

என்ன? வலிக்குதா?

பின்னே? பொழுது போகாம கத்தறேன்னு நினைக்கிறியா?

15. கண்ணா,.. இது ஸ்டாக் ஏஜென்சி.. இங்கே நீ நினைக்கற  மாதிரி பணம் ஏதும் கிடையாது..

 அப்படியா?அப்போ உனக்கு இங்கே என்ன வேலை? கிளம்பு!

16. அங்கே எல்லார் பணமும் மாட்டிக்கிச்சு.. மக்கள் எல்லாரும் தங்களோட பணத்தை அங்கே தான் இன்வெஸ்ட் பண்ணி வெச்சிருக்காங்க..

 உஷ் அப்பாடா.. நல்ல வேளை, நான் ஏதும் பணம் போடலை..

17.  எத்தனை ஆஃபீசர்ஸ் லீவ்ல போய் இருக்காங்களோ எல்லாரையும் இப்போ வரவழை.. சீரியஸ் ஆர்டர்..

18. நான் விரிச்ச வலைல பேட்மேன் மாட்டிக்குவான்னு நினைக்கறென், பாரு.

 மாட்டிக்க அவன் எலி இல்லை சார் , புலி; பாருங்க,  உங்க கண் முன்னால தப்பிச்சுட்டான்.. இதுக்கு நீங்க தூக்குல தொங்கலாம்

19. அடடா.. இப்போ இருக்கற சிச்சுவேஷனுக்கு கூட ஒரு ஃபிகர் இருந்தா எவ்ளவ் நல்லா இருக்கும்?

 ஏன்? என்னைப்பார்த்தா ஃபிகரா தெரியலையா?

20.ச்சே.. நீ யாரையும் கொல்ல மாட்டியா?

 என் வழி தனி  வழி

 வெத்து வேட்டுன்னு சொல்லு



http://cdn.screenrant.com/wp-content/uploads/Marion-Cotillard-Joseph-Gordon-Levitt-The-Dark-Knight-Rises.jpg

21.  முகம் தெரியாத ஆள் கூட கார்ல போகக்கூடாதுன்னு மம்மி சொல்லி இருக்காங்க..

நோ பிராப்ளம், இது கார் இல்லை

22. நான் இருக்கற வரை என் பேச்சை கேட்க மாட்டே.. நான் செத்துட்டா அதுக்குப்பின் என் பேச்சைக்கேட்காம போய்ட்டோமேன்னு வருத்தப்படுவே

23. நீ எதுக்காக பேட்மேனா மாறுனே?

 எனக்கு நெருக்கமான வங்களை ஆபத்துல இருந்து காப்பாத்த

உனக்குத்தான் சொந்த பந்தம் யாரும் இல்லைன்னியே?

இந்த உலகத்துல இருக்கற  எல்லா நல்லவர்களும் என் சொந்தம் தான்

24.  எனக்கு வர்ற கோபத்துக்கு... நற நற..

 கூல்.. பேசாம நீ செத்துடேன்

25.  என்ன அங்கே இருட்டா இருக்கு?

 டோட்டல் ஃபியூசும் போயிடுச்சுன்னு நினைக்கறேன் ( ஃபிகர் அருகில், இரவில், முன் கூட்டிய உறவில்)


26.  அவன் ஒண்ணும் நீ நினைக்கறது மாதிரி சாதாரண ஆள் இல்லை.. 

 நான் கூட அப்படித்தான்...


27. இருட்டை பார்த்து நான் பயப்பட்டதே இல்லை, ஏன்னா நான் பொறந்ததே இருட்டுல தான் ( டெண்ட் கொட்டாய்ல படம் ஓடிட்டு இருக்கும்போது பொறந்த  பயல் போல )
28. நீயும் நிறைய தப்பு பண்ணி இருக்கே..

நானும் வாழனும் இல்லை?

இவ்ளவ் கேவலமாவா?மோசமான ரெக்கார்ட்சை கைல வெச்சுக்கிட்டு எங்க கிட்டே இருந்து தப்பிச்சு போய்ட்டு இருக்கியே?

28
28. நீ இங்கே இருந்து தப்பிச்சு போகவே முடியாது

ஜஸ்ட் ஒரு குழந்தையே இங்கே இருந்து தப்பிப்போச்சுன்னு சொன்னியே?குழந்தையே தப்பிக்கும்போது  நான் தப்பிக்க மாட்டேனா?

அது சாதாரண குழந்தை இல்லை.. வலியிலேயே பிறந்து வலியிலேயே வளர்ந்த குழந்தை ( ராமராஜன், பவர் ஸ்டார் படம் பார்த்துட்டே இருந்திருக்குமோ? )

29.   எது உன் பலம்னு நினைக்கறியோ அதுதான் உன் பலவீனம்.. எதை நீ பலவீனம்னு நினைக்கறியோ அதையே உன் பலமா மாத்து

 புரியலையே?

அடுத்து என்ன நடக்கும்னு முடிவு தெரியாதவரை நீ பலசாலியா இருந்தே.. முடிவு தெரிஞ்சதும் உனக்கு சலிப்பு வந்துடுச்சு, ஆர்வம் போயிடுச்சு

30. மனோபலம் தான் ஒரு மனிதனின் முக்கியத்தேவை





http://www.filmophilia.com/wp-content/uploads/2012/07/the-dark-knight-rises-anne-hathaway-image.jpg


31.  உன் கிட்டே வாக்கு மூலம் கேட்கறதுக்காக இங்கே நாம கூடலை. தண்டனை கொடுக்க.. கூடி இருக்கோம்.  உனக்கு என்ன தண்டனை வேணும்னு நீயே தீர்மானிச்சுக்கோ.. மரணமா?நாடு கடத்தலா? ஒன்லி ஒன் சாய்ஸ்

32.  கை வைக்கறது தப்பில்லை, ஆள் யார்னு பார்த்து கை வைக்கனும்

 அதை நீ சொல்றியா? எல்லாம் நேரம் தான்

33.  இது ஒழுங்கா பறக்குமா?

யா, ஆட்டோ பைலட்டே தேவை இல்லை..

 ஆட்டோ பைலட்டா? அது எதுக்கு? அப்புறம் அது இருந்தா நீ எதுக்கு?


34.  நீயும் என் கூட வந்துடு..
 நோ, நான் நாட்டை காப்பாத்தனும்
 முதல்ல உன்னை நீ காப்பாத்திக்கோ
 என் நாடு, என் மக்கள்

35.  கஷ்டத்துல இருக்கறவங்களுக்கு உதவறவங்க, பசில இருக்கறவங்களுக்கு சாப்பாடு போடறவங்க யார் வேணாலும் ஹீரோ ஆகலாம்






http://moviesmedia.ign.com/movies/image/article/114/1144798/the-dark-knight-rises-20110119103041795.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  லேடி ராபின் ஹூட் ஹீரோயின் அந்த பங்களாவுக்குள்ளே நுழைஞ்சு வைர மாலையை லபக்கும் சீன் செம விறு விறுப்பு 


2. போலீஸ் உள்ளே நுழைந்ததும் கொள்ளை அடிச்சவளே எதுவுமே தெரியாத மாதிரி அலறி ஆர்ப்பாட்ட்டம் செய்வது கலக்கல் காட்சி


3. அதே போல் வில்லன்குரூப்  எஸ் ஆகும்போது பைக்கில் முன் பின் பணயக்கைதியாக ஆட்களை வைத்து செல்லும் சீன்.. இனி தமிழ்ப்படங்களில் அதை சுட்டு சீன் வரும் என எதிர்பார்க்கலாம்


4. படத்தின் முக்கிய முடிச்சை யார் வில்லன் என்பதை யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு, படத்தில்  எல்லாரும் அந்த மாஸ்க் ஆள் தான் மெயின் வில்லன் என நினைக்கையில் க்ளைமாக்சில் அந்த ட்விஸ்ட்


5. அட்டகாசமான இசை, அருமையான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமான  லொக்கேஷன்ஸ், காட்சி அமைப்புகள் எல்லாம்  அசத்தல்.. தொழில் நுட்பத்தில் கரை கண்ட டீம் தான்.. 



http://images.contactmusic.com/newsimages/the_dark_knight_rises_director_christopher_nolan_1211356.jpg


 இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் சில கேள்விகள்


1.  ஆல்ரெடி சூப்பர் ஹிட் படங்கள் 7 கொடுத்த நீங்க சாதாரண பாம் பிளாஸ்ட் கதையை ஏன் செலக்ட் செஞ்சீங்க? அதே போல் படத்துல ஸ்பீடு கம்மி.. ஏ செண்டர் ரசிகர்கள் மட்டும் தான் பார்க்க முடியும்.. 


2. பொய்யான ஃபிங்கர் பிரிண்ட்டை யூஸ் பண்றது ஓக்கே ஆனா வர்றவ ஒரு லேடி.. அவ ஏன் ஒரு ஆணின் கை ரேகையை யூஸ் பண்ணனும்? போலீஸ்ல செக் பண்ணா கண்டு பிடிப்பாங்கன்னு தெரியாதா? ஒரு பெண்ணின் கை ரேகையை யூஸ்பண்ணி இருந்தா ட்விஸ்ட் பண்ணி இருக்கலாமே?


3.  ஒரு சீன்ல வீடு வீடா போய் பாம் வெடிக்கப்போகுதுன்னு சொல்லுங்கனு சின்னப்பசங்க கிட்டே சொல்ற மாதிரி சீன் வருது..  அந்த 7 பேர் எத்தனை வீட்ல போய் சொல்லி  எத்தனை பேரை உஷார் பண்ணி விட முடியும்? இதுக்கு டேம் 999 படத்துல வர்ற ஐடியாவே பெட்டர் ஆச்சே?


4. வில்லன் எதுக்காக அந்த ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருக்கான்கறதை கடைசி வரை சொல்லவே இல்லை.. லாஸ்ட்ல ஒரே ஒரு சீன்ல 2 செகண்ட் அது பற்றி வருது,, அதை எத்தன பேர் கவனிச்சாங்கன்னு  தெரில.. கதைக்கு வில்லன் மாஸ்க் அவசியமா? ஏன்னா பாதி நேரம் ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லாரும் மாஸ்க்கோட சுத்திட்டு இருந்தா மக்கள் எப்படி அவங்க முகத்தை  ரசிப்பாங்க?


5. வில்லன் கைல ஹீரோ சிக்கிடறான்.. அப்பவே அவனை போட்டுத்தள்ளாம  இந்த நகரம் அழியறதை நீ பார்த்துட்டு போன்னு தேவை இல்லாம எதுக்கு அவனுக்கு டைம் குடுக்கனும்?மாமூல் மசாலா டைரக்டர்ஸ் அந்த தப்பை பண்ணலாம்.. யூ டூ?



சி.பி. கமென்ட் - பி சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிக்காது.. ரெண்டே முக்கால் மணி நேரப்படத்துல ஒன்றரை மணி நேரம் பேசிட்டே இருக்காங்க.. மற்றபடி ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்,  கிறிஸ்டோபர்  ஃபேன்ஸ், பேட் மேன் ரசிகர்கள் பார்க்கலாம்.. லேடீஸ், குழந்தைகள் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன். டைம்ஸ் ஆஃப் இண்டியா எதிர்பார்க்கப்படும் ரேட்டிங்க்  - 3/5 , டெக்கான் க்ரானிக்கல்  7 /10


இதன் முதல் பாகம் படிக்க - THE DARK KNIGHT  -நோலனின் ஆக்‌ஷன் கலக்கல் - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/07/the-dark-knight.html