Showing posts with label நாட்டுப்புறம். Show all posts
Showing posts with label நாட்டுப்புறம். Show all posts

Tuesday, July 24, 2012

தேள் விஷம் - கி.ராஜநாராயணன் -ன் கிராமத்து கில்மா சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFUiLbVyzQ7Mg_xgxupBMMMQkFSY7nzdKQselkkST9GguXjnbWN7790vifOBCqyeqRr_86T0K5mkZvnZ_tXIuGP1CTxedL6KVLfQq75QeX0llswHn0XyILZ4SLozPPQF8mOQ1y5ewMr_Pm/s400/scorpion-birth_01.jpg 

18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).



ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா…..




அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு கூறுப் பருத்திக்கு ரெண்டு கூறுப் பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. ஒழக்குத் தானியத்துக்கு அரைப்படித் தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு – ரெண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு நா ராத்திரி, அவ சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு. ஆனாலும் அவம் காத்திருந்தான். வளக்கம் போல தானியம் கொண்டு வந்தா. சாமான் வாங்குனா.




புறப்பட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்தது.


என்னெங்கிற மாதிரி அவெள ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா.’ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிக்கிட்டே வர்ரீறு. வைத்தியருகிட்டே கையக் காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?’


அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம்.


இவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.


இப்பிடிக் கொஞ்சம் நேரம் போச்சி. அதுக்குப் பிறகு என்ன பேசன்னுட்டுத் தெரியல. இவம்தான் சொன்னாம்.’நாளைக்கு ஓம் வீட்டுக்கு வரட்டா?’


அவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம ஒரு ‘குறுஞ்சிரிப்பாணி’ சிரிச்சிட்டுப் போயிட்டா.


***
காட்லே சம்சாரி விடியுமின்னெ உழப் போனான். ஏரெக் கட்டி கொஞ்ச நேரந்தாம் உழுதிருப்பான். தண்ணிக் கலயத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.




இது என்னடா சங்கட்டம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்தெ எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.




வீட்டுக் கதவு சாத்தியிருக்கு.இந்நேரத்துக்கு வீட்டுக்கதவு சாத்தியிருக்கக் காரணமில்லையே.


என்ன விசயம்னு தொறவால் தொளை (சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி (காட்சி) தெரியுது.


கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாய வச்சி…………
……
படபடன்னு கதவெத் தட்டினான்.கதவு தொறந்தது. இவம் பெண்டாட்டி இவனெப் பாத்ததும் ‘ஓ’ண்ணு கதறிக் கிட்டே, நல்லவேளை இப்பவாது வந்தீளே. ஏம் பாட்டெப் பாத்தீளா. இந்தக் கொடுமை உண்டுமா. இவரு இல்லேன்னா நாஞ் செத்துத்தாம் போயிருப்பேம் என்று சொல்லி அழுதாள்.




புருசங்காரனுக்கு ஒண்ணும் வெளங்கலே.




கடைக்காரனெப் பாத்தா அவம் தலெயக் கவுந்துகிட்டு ஒண்ணுஞ்சொல்லாம நிக்காம்.


என்ன, என்ன சொல்லுதே என்ன நடந்தது. வெவரமாச் சொன்னாத்தானே தெரியும்னு கேட்டான் சம்சாரி.




என்னத்தெ வெவரமாச் சொல்ல, வெக்கக் கேடு. பருத்தி மார்ப் படப்புலெ போயி பருத்தி புடுங்கி அணைச்சி எடுத்துக்கிட்டுதாம் வந்தேன். ‘சுரீர்’னு மார்ல தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழபோட்டுப் பார்த்தா…சரியான கருந்தேளு. வலியான வலியில்லே. தாங்க முடியல. என்ன செய்யிறதுன்னுட்டுந் தெரியல. இவரு தேள் விசத்தை உறுஞ்சி எடுத்துருவாருன்னு சொன்னாங்க. இவரெப் போயி கூப்ட்டா, நா ஆம்பளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாரு. பெறவு, நாந்தாம் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்பிடியெல்லாம் நெனக்க கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூட்டிட்டு வந்தேம். அப்போதைக்கு இப்போ தேவலைன்னாலும் வலி பொறுக்க முடியலன்னு அழுதா.




சரி…சரி…அழுவாதெ. இதெல்லாம் யாருக்கும் வரக்கூடியதாம். நம்ம என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்ல. அவராவது சமயத்துக்கு கூப்ட்ட ஒடனே வந்தாரெ.




‘நா அங்க, தண்ணிய காக்கா கொட்டிட்டதுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தென்னு’ கடைக்காரனுக்கு ‘சமயத்துக்கு வந்து ஒதவினதுக்கு ரொம்ப உபகாரம்’னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணிய றெப்பிக்கிட்டுப் போயிட்டான்.




***
கொஞ்ச நா கழிஞ்சது.




ஒரு நா திடீர்னு அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.அடுப்பங் கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே ‘தேளுதான்னுட்டுப் பாத்தீங்களா’ என்று பதச்சிப் போயி வந்தா.




தேளுதாம் பாத்துட்டேன். வசமாப் பிடிச்சி மாட்டிட்டது. நல்ல கருந்தேளுன்னாம்.அய்யோ வலி பொறுக்க முடியலயே. நீ ஓடிப் போயி அந்தக் கடைக்காரனெ கையோட கூட்டிட்டு வா. ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.




அவளும் ஓட்டமும் நடையுமாப்போயி கடைக்காரன பாத்து, இன்ன மாதிரி, சங்கதி ஒடனே பொறப்பட்டு வா. நீ இப்ப வரலன்னா அவரு சந்தேகப் பட்டுடுவாரு. எந்தின்னு சொன்னா.


அவனுக்கும் நாம வர்றமா இல்லயான்னு பாக்கதுக்குதான் இதெல்லாமான்னு ஒரு எண்ணம்.




வேற வழியில்லாம அவனும் வந்தாம்.


எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.


சம்சாரி வேட்டிய …………………
..
தாத்தாவோட சேர்ந்து நாங்களும் சிரிச்சோம்!


‘பெறவு?’ என்று கேட்டாம் கிட்டான்


பெறவு என்னடா பெறவு? பெறவு பெறவுதான்.


கடைக்காரப் பயல் தப்ப முடியல. வசமா மாட்டிக்கிட்டான்.

Sunday, July 22, 2012

கி.ராஜநாராயணன் -ன் பாலியல் நகைச்சுவை சிறுகதை -ராசா தேடின பொண்ணு! 18 +

(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).

இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க.


யப்பா, இப்பிடியா உள்ள ஒரு பெண்ண நீதாந் தேடிக் கண்டுபிடிக்கணும். எங்களாலே ஆகாதுன்னுட்டாங்க.


சரீன்னு சொல்லி இவன் புறப்பட்டாம். ஊரு ஒலகமெல்லாம் சுத்தினாம். ஆத்துல குளத்துல வாய்க்கால்லன்னுட்டு வரீசைய பாத்துகிட்டே வந்தாம். விதவிதமானதுகளத் தாம் பாத்தானே தவிர நாலு உள்ளதுகளுமில்ல. மூணு உள்ளதுகளுமில்ல. சொல்லப் போனா ஒண்ணரை, ஒண்ணே முக்காலு இப்பிடித்தான் இருந்துச்சாம்.


பயலுக்கு சே’ன்னு ஆயிட்டது!
பின்னே ஏம் இப்பிடிச் சொன்னாம்?

அதுக்கு ஒரு காரணம் இருந்தது.

ஒரு நா ராத்திரி அவம் தூக்கத்துல ஒரு சொப்பனங்கண்டாம். அந்த சொப்பனம் விடியப் போற நேரத்துல வந்தது.

விடியப் போற நேரத்துல வார சொப்பனம் பலிக்கும்ங்கிற நம்பிக்கெ.
அந்த சொப்பனத்துல ஒரு பொண்ணு குளிச்சிக்கிட்டிருக்கா; உடம்பெத் தேச்சிக் குளிக்கிறப்போ தேக்கிற வளைய சத்தங்கூடக் கேட்டுது. கவனிச்சிப் பாத்தப்போ அந்தப் பொண்ணுக்கு முதுகுல ரெண்ணு தனங்கள் இருந்தது.
ரொம்ப ஆச்சர்யம் இவனுக்கு.


இவனே நெனச்சது உண்டு; இப்பிடி இருந்தா சில சமயத்துல வசதியா இருக்குமேன்னுட்டு.

முழிப்புத் தட்டியதும் தான் நினைச்சாம். நிச்சயம் எங்கோ அப்பிடி ஒரு பொண்ணு இருக்கா. கட்டாயம் தேடிக் கண்டுபிடிச்சிக் கட்டிக்கிடணும். அதுலயிருந்து அவன் அவளைத் தேட ஆரம்பிச்சாம்.


நாலு தனங்கள் உள்ள பொண்ணுகளெத் தேடித் தேடி எங்கயும் காங்காம அலுத்து, ஒருநா ஒரு குளத்தங்கரை மரத்து எணல்லெ அசந்து படுத்தவன் நல்லாத் தூங்கிட்டாம்.


அவம் முந்தி ஒருநா சொப்பனத்துல கண்டானே, அப்பக் கேட்டுதெ, அதேபோல வளைய சத்தம் கேட்டுது.
கொஞ்சங்கொஞ்சமா பயலுக்கு முளிப்பு வந்தது.
அரண்மனையில, பஞ்சுமெத்தயில படுத்துக்கிட்டிருக்கிறதா நெனச்சிக்கிட்டிருந்தவனுக்கு, மரத்துக் கடியில உதுந்து குமிஞ்சிக் கிடக்கிற சருகு இலைக மேல வேட்டிய விரிச்சிப் படுத்துக் கிடக்குது தெரிஞ்சது. பெறவுதாம் குளத்துக்கரைங்கிறது ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, வளையச்சத்தம் இன்னும் கேட்டுக்கிட்டுத் தானிருந்தது.


பைய்ய எந்திரிச்சி பாத்தாம். கண்ணெ கசக்கிவிட்டுப் பாத்தாம். சொப்பனங்காணலை, நெசந்தாம்! அந்த தாமரைக் குளத்து படிக்கட்டுல ஒரு பொண்ணு அம்மணமா குளிச்சிக்கிட்டிருந்தா. யாருமே பாக்கலெங்கிற தைரியத்துல சாவாசமா உக்காந்து குளிச்சிட்டிருந்தா. இவனுக்கு அவளோட முதுகுப்பக்கந்தாம் தெரியிது. முதுகுல ரெண்டு தனங்கள் இருந்தது தெரிஞ்சது.


ஆகா! நாம நெனச்சது கெடச்சுட்டு. கடவுளே கொண்டாந்து காணிச்சிட்டார். சரி, இவ குளிச்சி முடிக்கட்டும். இவளுக்குத் தெரியாமயே இவ பெறத்தால போவம். எந்த வீட்டுக்குள்ளாற நுழையிதாளோ அதெ கவனிச்சி வச்சிருந்து மொறப்படி போயி பொண்ணு கேட்டு கலியாணத்த முடிச்சிருவம்னு தீர்மானிச்சி, அதே பிரகாரம் அவ குளிச்சிட்டுப் போயி நுழையிற அவ வீட்டையுங் கண்டுபிடிச்சிட்டாம்.


பெறகென்ன; போயி பொண்ணு கேட்டாம்.
ராசாவுக்கு பொண்ணுகேட்டா முடியாதுன்னு சொல்ல இயலுமா?
கலியாணம் முடிஞ்சது.


மொதநா ராத்திரி, பய ஆசையோட அவளெ கட்டிப்புடுச்சி முதுகெப் புடிச்சாம்.
என்னத்தெ எளவு ஒண்ணத்தையுங்காணம்?ன்னு அவக்கிட்டயவே கேட்டாம்.
அவளுக்கு சிரிப்பு வந்திட்டு. அட கோட்டிக்காரப்பய ராசா மவனேன்னு நெனச்சிக்கிட்டு.


‘மாட்டுக்கு வாலு பின்னாலே
மனுசனுக்கு பாலு முன்னாலே’ங்கிறது கூட ஒனக்குத் தெரியாதா?


மார்ல இருக்கவேண்டியது எங்கனாச்சும் முதுகில இருக்குமான்னு கேட்டா
ஏங்கண்ணாலயே பாத்தென ஒம் முதுகில இருந்த்தேன்னு கேட்டாம்
முன்னால இருந்த அதெத்தாம் நீ பின்னால பாத்தென்னா


இவனுக்கு வெளங்கல.

பெறவு அவதாம் வெளக்கமாச் சொன்னா

ஒடம்ப நல்லாத் தேய்ச்சிக் குளிக்கணும்னுட்டுதாம் அவ அந்த காட்டுக் குளத்துக்குப் போவாளாம். வயித்துக்குச் கீழெயெல்லாம் தேச்சிக் குளிக்க இதுக ரெண்டும் எடைஞ்சலா இருக்கும்னுட்டு அதுகள ரெண்டு தோள்களுக்கும் மேலே எடுத்துப் போட்டுக்கிடுவாளாம். அதுக முதுகில கிடக்கும்போது பாத்துட்டு பய சரியாப் பாக்காம முதுகுலதாம் இருக்கும்னுட்டு நெனச்சிக்கிட்டா நாம என்ன செய்யிறதுன்னு கேட்டாளாம்.

Saturday, July 21, 2012

கி.ராஜநாராயணன் -ன் பாலியல் நகைச்சுவை சிறுகதை -இருதலைமணியன் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkRCI-ZASWwxtcz-riyZyJrexjg2OGRWDaY3CzQlJi_c8Nqt2pS69Es9LoObZC3t6-Y4-obfOCEalKHyau5Bl-aYz4E8C_XxDUyJq6Cqsy5AOcgZ7l4fAxyhN-98l0BfCWOUUzsLQOSUM/s1600/8.JPG(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது.

அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ

இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ என்னவோ ரெண்டு ஆள் பலமும் வீரியமும் இருந்த்து.
ஒருத்தரு சொன்னாரு ‘இருக்கும். ரெண்டு ‘இது’ இருந்தா ரெண்டாள் பலம் இருக்கத்தானே செய்யும்! அவரு சொன்னது ஏடாசியா நெசமான்னு தெரியலன்னாலும் எல்லாரும் சிரிச்சாங்க.


இப்பிடி இருந்ததுனால அவனுக்கு ‘இருதலைமணியன்’னு பட்டப் பேரு ஏற்பட்டுப்போச்சு!


எல்லோரும் அவனெ ரொம்ப கேலி பண்ணுனதுனால அவம் ஊரெ வுட்டே காணாம போய்ட்டாம். ரொம்ப தூர ஊர்ல போயி, யாரும் முகந்தெரியாத இடத்துல போயி வேல செஞ்சி பிழைக்கிறதுன்னு ஆயிட்டது.
அங்கே யாருக்கும் இது தெரியாம இருக்கும்படியா பாத்துக்கிட்டாம்.
பய வளந்து இளவட்டு ஆனாம். பாக்கவும் லெட்சணமா இருந்தாம்.


இப்பிடி இருக்கையில, அவனும் மனுசம்தானே, அவனுக்கு பொம்பளை ஆசை வந்தது.
வராதா பின்ன என்று கூட்டத்துல ஒருத்தர் சொன்னார்.
வேல செஞ்சி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சம் மிச்சம் வச்சி, ஒரு நா ‘தேவிடியாக்குடி’ போனாம்.


அங்கே ஒருத்தி பாத்துக்கிட்டா அத.
அவளுக்கு இது அதிசயமா இருந்தது. வித்தியாசமா இருந்தது. அதனால அவ அவன வெளியவிடாம ராத்திரிபூரா தங்கிட்டயே வச்சிக்கிட்டா.


காலையில ஆத்துக்கு அவ குளிக்கப்போன எடத்துல தனக்கு வேண்டப்பட்ட சிநேகிதக்காரிக்கிட்ட இதெ சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டா.
சிநேகிதக்காரிக்கும் இப்படியாப்பட்ட காரியங்கள்ள ரொம்ப பிரியம். அதனால அவ, நா இப்பவே ஓங்கூட வர்றேம். நானும் அதெப் பாக்கேண்டாமான்னு புறப்பட்டுட்டா.


அவ அத பாத்து அனுபவிச்சுட்டு அவளோட சேத்திக்காரி நாலு பேரு கிட்ட சொன்னா.
ஆக இப்பிடி இந்த ரகசியம் தீயாப் பரவி இந்த விசயத்துல ரொம்ப பிரியமான பொம்பளைகளுக்கெல்லாம் தெரிஞ்சி, பயலுக்கு ஒரே கிறுக்கு ஆயிட்டுது.

இருக்காதா பின்னே என்றார் ஒருத்தர்.
இப்பல்லாம் அவன் வேலைக்கே போறதில்ல

அவனோட ‘சங்கதி’ விஷயம் அந்த நாட்டோட அரண்மன அந்தப்புரத்துக்குள்ளேயும் போயிட்டு. மகாராணிக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு சேடிப் பொண்ணு பாத்து வந்து சொல்லிட்டா.

இப்ப மகாராணிக்கும் அதெப் பாக்கணும்னு ஆயிட்டது.
அந்த சேடிப்பொண்ணு மூலமாவே மகாராணி அவனுக்கு ரகசியமா தாக்கல் சொல்லி அனுப்பிச்சா.


அவம் பதறிப் போயிட்டாம். இதேதுடா சங்கட்டம். வம்புல போயி மாட்டுவம் போலுக்கேன்னு நெனச்சி அவகிட்ட ஏத்தா நீ என்னமோ ஆசெப்பட்ட வந்தே போனேன்னு இருக்காம இதெப் போயி அரண்மனையில மகாராணியிட்ட பத்த வெச்சிட்டயெ. அப்படியாப்பட்ட இடத்துக்கெல்லாம் நாம போவலாமா?


அதுக பேன் எடுத்தாலும் எடுக்கும், காத அத்தாலும் அத்துருமே. என்னால முடியாது ஆத்தா. நா வர மாட்டேன்னாம்.


நீ ஒண்ணும் பயப்படவேண்டாம். மகாராணிக்கு இதுல எல்லாம் பிரியம் சாஸ்த்தி. ஒன்னெ ‘பொன்னுங்கண்ணுமா’ வச்சிக்கிடுவா. சும்மா வா; அங்கே வந்துட்டே ராசாக்கணக்கா இருக்கலாம்னா.

ஏத்தா என்னே ஆளவிடுன்னு சொல்லிப்பாத்தாம்.

இந்தா பாரு இது மகாராணியோட ஆக்கின. நீ வல்லேன்னா இப்ப ஒந்தலைக்கு கத்திதாம் காத்துக்கிட்டிருக்கு. தப்பிக்க முடியாது பாத்துக்க.
அங்க வந்து இருக்க ஒனக்கு என்ன கொள்ள. நல்..லா தின்னுட்டு பொலிகாள போல இருக்க வலிக்கா உனக்கு? மரியாதையா எந்திரிச்சி எம் பொறத்தால வான்னா.


நல்லா ரோசிச்சுப் பாத்தாம். இங்க இப்பிடி அரையுங் கொறையுமா தின்னுக்கிட்டு இந்த முண்டெக கூட லோலுப்பட்டுக்கிட்டு இருக்கத விட அங்கென போயி ராசாக்கணக்க இருக்கலாம்னு தோணிச்சி. சரீன்னுட்டாம்.

பொண்ணு வேசம் போட்டு ராத்திரியோட ராத்திரியா சேடிப்பொண்ணு கூடவே ராணியோட அந்தப்புரம் போயிச் சேந்தாம்.


அப்ப ராசா நகரத்துல இல்ல. வேட்டையாடப் போயிருந்தாரு. வேட்டையாடப் போனா அங்க கொஞ்ச நா தங்கி இருந்துட்டுதாம் வருவாரு. அதனால இங்க இவம்பாடு வேட்டையா இருந்திச்சி.

சாதாரண விசயமா இருந்தா பரவா இல்லாம இருக்கும். இது அதிசயமான விசயமாச்சே. எப்பிடியோ பொட்டைச்சிக மத்தீயில கிசுகிசுப்பாயி இது இன்னொரு ராணிக்குத் தெரிஞ்சு போச்சி. அவளும் ராசாவுக்குப் பிரியமான ஒரு மகாராணிதாம்.


அவ மாத்திரம் என்ன.. நான் பாக்கேண்டாமான்னு கேட்டனுப்பிச்சா
இது நாம்பாத்துக் கொண்டாந்தது. நா வச்சிருக்கேம். ஒனக்கென்ன? வேணும்னா நீ பாத்து ஒண்ணெ கொண்டாந்து வச்சிக்கயேம்னா
அது என்ன அம்புட்டு லேசாக் கிடச்சிருமா. அதெ எப்பிடிக் கண்டு புடிக்கது!

அதென்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு வேணும். அது எப்பிடித்தாம் இருக்குதுன்னு நாம் பாக்கணும்னு சொல்லி அனுப்பிச்சா அந்த இன்னொரு ராணி.


இப்பிடியே இவுகளுக்குள்ள ஒரு ‘எசலிப்பு’ ஏற்பட்டு, ராசா வேட்டையிலிருந்து திரும்புறதுக்கு முன்னாடி அவரு காது வரைக்கும் போயிட்டுது சண்டை. ராசாவுக்கு கோவமான கோவமில்ல’. அண்ட கடாரம் முட்டிப் போச்சி

‘தாயோளிது’ ஏம் அரமனைக்குள்ளாற வந்து அப்பிடி ஒரு பய வந்து இருக்க அவனுக்கு என்ன ரெண்டு ‘இதா’ இருக்குன்னு கேட்டாரு.

ஆமா ராசா…அப்பிடித்தாம் கேள்வி; அவனுக்கு ரெண்டுதாம் இருக்கும்னாங்க.

சே..இது மோசக் கேடுல்லா வந்து சேந்திருக்கு. அவனப் புடுச்சி அப்பிடியே அதும்மேல யானைய விட்டு மிதிக்க வச்சிக் கொன்னுப்புடுங்கன்னு ஆக்கின அனுப்பிச்சிட்டாரு.

இது எப்பிடியோ மகாராணிக்கு வேண்டியவன் ஒருத்தன் அங்கிருந்து ரகசியமாச் சொல்லி அனுப்பிச்சி ‘இருதலைமணியனை’ தப்பி ஓடி போகச் சொல்லிட்டா ராணி.

பயல் எங்கே போனானோ தெரியல. தல மறைவாயிட்டாம். ஏதோ வேலை செஞ்சி பொழக்க முடிஞ்சதே தவிர, முந்திய மாதிரி பொம்பளைகிட்ட போயி ‘நல்லாப் பொல்லா’ இருக்க முடியல; இருந்தாத்தாம் தெரிஞ்சி போகுமே.


ராசா முரசு அறஞ்சி தேசம் பூராவும் அறிவிச்சிட்டாரு. இன்ன இன்ன மாதிரி அடயாளம் உள்ள இளந்தாரிப்பயல புடுச்சி யாரு தர்றாங்களோ அவர்களுக்கு பதினாயிரம் களஞ்சிப் பொன் தர்றதாக!

வேலை செய்ய மாச்சப் பட்டவெனெல்லாம் மந்தை,சந்தை,வெளிக்கிருக்குத இடம் இப்பிடி எவனுக்கு ரெண்டு இது இருக்குன்னு தேடிக்கிட்டு அலையுதாங்க.

சும்மாவா பதினாயிரங்களஞ்சி பொன்னுல்லா!

இந்தப்பய யாரு கண்ணுலயும் காங்காம அலைஞ்சி திரிஞ்சதுல உடம்பு பூரா முடி காடா வளந்து போச்சு. ஒரு நா நாசுவம் கிட்ட போயி ‘ஏடே எனக்கு உடம்பு சவரம் பண்ணனும். நா ஆத்துல இந்த மரத்துக்குக் கீழ இருக்கேம். வந்து செஞ்சயனா ஒனக்கு ஒரு களஞ்சிப் பொன்னு தருவேம்னு சொல்ல நாசுவனும் சரி போங்க வர்றேம்னாம்.


இவம் போயி மரத்து எணல்ல மறைவான இடம் பாத்து மணல்ல ‘ஒண்ணைப்’ பொதச்சு வச்சி உக்காந்துக்கிட்டு இருந்தாம் கண்டுபிடிச்சிரக்கூடாதேன்னு. நாசுவன் கிண்ணத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து எதுர்க்க மணல்ல உக்காந்துக்கிட்டு தண்ணிய விட்டு நல்ல இவன தேச்சிவிட்டாம்.

பயலுக்கு ‘பாத்து’ ரொம்ப நாளாச்சி. அதுலயும் வேத்து மனுசன் கைப்பட்டதும் தேச்சதும் சேந்து, மணலுக்குள்ள தெரியாம இருக்க பொதச்சு வச்சிருந்த்து ‘படார்’னு வேகமா எந்திரிச்சதுல நாசுவம் கண்ணுல மணலு விழ, அவம் சத்தம் போட்டு ‘யப்பா…நீதானா அது’ன்னு கேட்டுட்டாம்.


பிடிச்சானே ஓட்டம்.

யய்யா எனக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் குத்தமில்ல. பதினாயிரங் களஞ்சி பொன்னு வேண்டாம். அந்த ஒத்த களஞ்சி பொன்னாவது குடுத்துட்டு போரும்னு இவம் பொறத்தாலயே ஓட, அங்க ஆத்துல குளிச்சிட்டு வேட்டியக் காயப் போட்டுட்டு இருந்தவங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க…

‘அய்யோ போகுதே பதினாயிரங் களஞ்சிப் பொன்னு போகுதேன்னு’ இவம் கூப்பாடு போட, அங்கே ஒரே அவக்காடு ஆயிட்டு.
‘பெறகென்ன…போனவம் போனவந்தாம்’
ராசா அவனத் தேடிட்டிருக்காம். ராணியும் தேடிட்டிருக்கா.

பாத்தாச் சொல்லுங்க. பதினாயிரம் களஞ்சியம் பொன்னு கெடக்கும்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifQ0HkQvTVE8mZctWcAgg0fPnszTONGR155y1_EzTd286zOvAxq0a66E55hfMSsdZXhM9H4WOlWpcmu0AJDiofnGusa4jwfkXJBljxdfunk7dBeGIYI0LN9del5ej5t4qpoY00mFkRtss/s400/Ki.Ra.bmp