Monday, July 02, 2012

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி - கு.அழகிரிசாமி - சிறுகதை

https://www.nhm.in/img/100-00-0000-186-6_b.jpg 


கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி.

ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது வாடகை வீடுதான். ஆபீஸில் பற்றாக்குறைச் சம்பளம் என்றும் சொல்வதற்கில்லை. இத்தனையும் இருந்தும் சென்னை நகரை அவன் விஷமாக வெறுத்தான். ‘ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் விழுந்த அணுகுண்டுகள் இந்தப் பாழாய்ப்போன பட்டணத்தில் விழுந்து ஊரைத் தரை மட்டமாக்கியிருந்தால் வேறு எங்காவது தலைநகரை மாற்றியிருப்பார்கள் அல்லவா ?


மாற்றாவிட்டாலும் சுடுகாட்டிலாவது நிம்மதியாகக் குடியிருந்திருக்கலாமே ‘ இப்பொழுது சென்னையில் அல்லவா குடியிருக்கவேண்டியிருக்கிறது ? ‘ –இப்படி ஒரே வெறுப்பு. நண்பர்களிடம் பலதடவை தன் வெறுப்பைக் கொட்டி மனக் கொதிப்பை ஆற்றியிருக்கிறான். அவர்களுக்கு ராமநாதனுடைய பேச்சையும் ஆவேசத்தையும் பார்க்க வியப்பாக இருந்தது. ‘யாரையும் எதையும் வெறுத்துப் பேசுகிறவன் அல்லவே ‘ சிரித்த முகத்துடன் சுமுகமாகப் பழகுபவன்; உல்லாசப் போக்குடையவன்; அப்படிபட்டவன் இந்த மாதிரி பேசுகிறானே ‘ ‘ என்று அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.


ராமநாதனுக்கு இப்படி வெறுப்பும் கசப்பும் சிரசு முட்டிப் போனதற்குக் காரணம் அற்பமான ஒரு விஷயம்தான். சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாக இருக்கும். பட்டணம் அல்லவா ? உண்மையை நம்பத் தோன்றுமா ? அவன் குடியிருந்த மாடிவீடுதான் இத்தனைக்கும் காரணம். மனித குணங்களை, குடியிருக்கும் வீடும் உருவாக்குகிறது என்று பிரெஞ்சு நாவலாசிரியர் பால்ஸாக் ஓரிடத்தில் சொன்னது சரியோ தப்போ, இவன் விஷயத்தில் முற்றிலும் சரியாகவே இருந்தது.


அந்த மாடி வீட்டுக்கு அவன் குடித்தனம் வந்து ஒரு வருஷம் ஆகிறது. அதற்கு முன் போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாத ஒரு சிறு வீட்டில் மனைவியோடும் மைத்துனனோடும் பெற்றோர்களோடும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். கல்யாணமான புதிதில் அந்த இருட்டுக் கொட்டடியில் முன்று வருஷங்களைத் தள்ளினான். பிறகு இந்த மாடி வீட்டுக்குக் குடியேறினான். இந்த வீட்டில் காற்று இருந்தது; வெளிச்சம் இருந்தது; இடவசதி இருந்தது. வீடு பிடிக்கும் சமயத்தில் வீட்டுக்காரனின் பேச்சில் கற்கண்டும் இருந்தது. கேட்கவா வேண்டும் ? குடிவந்து விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கைக் குழந்தை இருந்ததுடன் மனைவி கர்ப்பிணியாகவும் இருந்தாள்.


இந்த மாடி வீட்டில் ஒரு பெரிய அசெளகரியம்; அதாவது தண்ணீர்க் கஷ்டம். தண்ணீரை வரவழைப்பது. உதைக்கிற மாட்டில் பால் கறக்கும் கதைதான். ‘பம்ப் ‘ அடிக்க வேண்டும். கீழே ஐந்தாறு குடித்தனங்கள்; குடும்பங்கள். காலை நாலரை மணியிலிருந்து, தண்ணீர் சப்ளை நிற்கும்வரை –அதாவது பத்தரை மணிவரை — ஒருவர் மாற்றி ஒருவர் குழாயடியிலேயே காரியம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுத்தான் காலா காலத்தில் குளிக்கவேண்டி யிருந்தது.


இந்த நிலையில் குழாயை மூடுவதற்கு எங்கே சமயம் வாய்க்கும் ? மூடாவிட்டால், மேலே எவ்வளவு அடித்தாலும் தண்ணீர் வராது என்பது வெளிப்படை. எனவே ஒரு வாளித் தண்ணீருக்கும், கீழே குழாயை மூடச்சொல்லி மாடியிலிருந்து கெஞ்ச வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ராமநாதன் ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வரை அவற்றை அவ்வளவாக உணராமல் இருந்ததற்குக் காரணம், அவனுடைய மைத்துனன் நடராஜனின் உதவிதான். அவன் வேலைத் தேடிப் பட்டணத்துக்கு வந்து அக்காள் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தான். ராமநாதன் காலையில் ஒன்பது மணிக்கே அவசர அவசரமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுத் தன் காரியாலயத்துக்கு வேலைக்கு போய்விடுவான். அதிலிருந்து நடராஜன் பம்ப் அருகில் ஒற்றைக் காலில் நின்று, சமயம் வாய்க்கும்போதெல்லாம் தண்ணீர் அடித்து வைத்துவிடுவான். வீட்டுத் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். சாயங்காலமும் இதே கதைதான்.


மூன்று மாதங்களுக்குப் பிறகு நடராஜனுக்கு சேலத்தில் வேலை கிடைத்துவிட்டது. உடனே அவன் புறப்பட்டுப் போய்விட்டான். அப்பொழுதுதான் ராமநாதன் தண்ணீர்க் கஷ்டத்தை உணர ஆரம்பித்தான். ஒன்று ஆபீசுக்குப் போக வேண்டும்; இல்லையென்றால் தண்ணீர் அடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் செய்வது என்பது விடுமுறை நாட்களில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. என்ன செய்வது ?


‘வீட்டில் பண்ட பாத்திரங்களைத் தேய்த்து வைத்து, துணி துவைத்துப் போடும் வேலைக்காரியைத் தண்ணீர் அடிக்கும்படி சொல்லி, அவளுக்கு மேற்கொண்டு இரண்டோ மூன்றோ கொடுக்கலாம்; அவளும் பிள்ளைகுட்டிகாரி; பிழைத்துப் போவாள்; வேறொருத்தியை வேலைக்கு வைத்து அவளுக்கு பணத்தைத் தூக்கிக் கொடுப்பானேன் ? ‘ என்று நினைத்து, ராமநாதன், கமலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கமலா என்பவள் வேலைக்காரி.


அன்றைய தினம் அவள் குறித்த காலத்திஒல் வராமல் அரை மணி நேரம் தாமதித்து வந்தாள். வந்தவள் விறுவிறு என்று சமையலறையை நோக்கி நடந்து சென்றாள். மீனாவை –ராமநாதனின் மனைவியை –அழைத்தாள். அப்புறம் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இந்தப் பக்கத்திலிருந்த ராமநாதனின் காதில் சரியாக விழவில்லை. ஐந்து நிமிஷத்துக்குப் பிறகு மீனா நேரே ராமநாதனிடம் வந்தாள். வந்து ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள். ராமநாதன் அதிர்ச்சியினால் அப்படியே நாற்காலியில் சாய்ந்து விட்டான்.


‘கமலா வேலையைவிட்டு நின்றுகொள்கிறாளாம். ‘

‘ஏன் ? ‘

‘அவளால் தண்ணீர் அடிக்க முடியாதாம். இந்த இரண்டு நாள் தண்ணீர் அடித்ததிலேயே கையும் நெஞ்சும் நோகிறதாம். அதனால் வேலைக்கு வரமுடியாதாம். ‘

‘இத்தனை நாளும் எப்படி தண்ணீர் அடிக்க முடிந்ததாம் ? இதுவரையிலும் நோகாத கை இப்பொழுது நோவானேன் ? ‘

‘அவள் எங்கே தண்ணீர் அடித்தாள் ? நடராஜன் அடித்து வைப்பான். அந்தத் தண்ணீரில் அவள் பத்துத் தேய்த்து, துணிகளையும் அலசிப் போட்டு விட்டுப் போவாள். ‘


‘அப்படியா சமாச்சாரம் ? சரி சரி; கமலாவை இப்படிக் கூப்பிடு ‘ என்றான் ராமநாதன்.

‘அதிகச் சம்பளத்துக்குத்தான் இந்த விதமாகக் கிராக்கி பண்ணி அடிப் போடுகிறாள்; நாம்தான் இரண்டோ மூன்றோ சேர்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறோமே ‘ என்ற எக்களிப்போடு கமலாவைப் பார்த்து,


‘நீ என்ன இப்படிச் சொல்றே ? இரண்டு வாளித் தண்ணீர் அடிப்பது அவ்வளவு கஷ்டமா ? ‘ என்று அவன் ஆரம்பித்தான்.


வேலைக்காரி பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டும், ஒரு நகத்தை மற்றொரு நகத்தால் சுரண்டிக் கொண்டும் சுவரை ஒட்டி நின்றாள்.

‘என்ன கமலா, என்ன சொல்றே ? என்னிடத்தில் விஷயத்தைச் சொல்லேன் ‘ என்றான் ராமநாதன்.

‘என்னாலே முடியாதுங்க. வேறே யாரையாவது வச்சிக்கோங்கோ ‘ என்று தலையைக் குலுக்கினாள் கமலா.

வீட்டுத் தேவை முழுவதற்குமே தண்ணீர் அடிக்க அவளை ஏற்பாடு செய்ய– அதிலும் கருணையுள்ளத்தோடு ஏற்பாடு செய்ய— நினைக்கப் போய், அவள் மாமூல் வேலையையே செய்ய முடியாது என்று மறுத்துவிட்டாள்.


ராமநாதன் என்னன்னவோ சொல்லிப் பார்த்தான். அவனுடைய மனைவியும் தாங்கினாள். ராமநாதனின் வயது முதிர்ந்த பெற்றோர்களும் கேட்டுப் பார்த்தார்கள். பருப்பு வேகவில்லை. கடைசியில், ‘இரண்டு ரூபாய் கூடத் தருகிறேன். வீட்டுக்குத் தண்ணீர் அடித்து வைத்துவிடு; நித்யப்படி வேலையையும் செய் ‘ என்று ராமநாதன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.


‘நூறு ரூபா கொடுத்தாலும் சரி, தண்ணீர் அடிக்க முடியாதுங்க. ‘

இதுவே கமலாவின் பதில்; ஆணித்தரமான கடைசிப் பதில்.


அதற்குமேல் அவளைக் கட்டாயப் படுத்துவதில் கெளரவமில்லை என்று, கொடுக்கவேண்டிய பாக்கியைக் கொடுத்து அனுப்பிவைத்தான் ராமநாதன்.

‘இப்படிப் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டுப் போய் விட்டாளே ‘ இனி தண்ணீருக்கு என்ன செய்வது ? ‘ என்று தன் கவலையை வெளியிட்டாள் மீனா. தன் நோஞ்சான் உடம்பையும் கைக்குழந்தையையும், வயிற்றுப் பிள்ளையையும் வைத்துக் கொண்டு, ஒரு செம்புத் தண்ணீர்கூட அடிக்க முடியாதே என்ற கவலை அவளுக்கு.


‘நீ ஒரு பைத்தியக்காரி, மீனா ‘ ஒரு நேரக் கஞ்சிக்கு வழி இல்லாமல் எத்தனையோ பேர் தெருதெருவாய் அலையிறாங்க. நீ பேசாமல் இரு. நாளையே வேறு ஒரு வேலைக்காரியைக் கொண்டு வந்து நிறுத்துறேன், பார் ‘ என்று மனப்பூர்வமாகவே சொன்னான் ராமநாதன்.

அதிலிருந்து இரண்டு மூன்று நாள் நண்பர்களின் வீடுகளில் சொல்லி, ஒரு வேலைக்காரியை வலை போட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான்.


புது வேலைக்காரியின் பெயர் மங்களம். நல்ல வாலிப வயது. அவளுக்கு நாலு வயதில் ஒரு பெண் குழந்தை. தோற்றத்தில் ஒரு மாதிரி அழகாகவே இருந்தாள். நல்ல நிறம். கட்டுறுதி கொண்ட உடம்பு. எந்த வேலையையும் சளைக்காமல் செய்யக்கூடியவள் என்று பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம். அவளுடைய புருஷன் அவளை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டானாம். மூன்று வருஷங்களாகத் தன் குழந்தையோடு கஷ்ட ஜீவனம் செய்து வருகிறாளாம். இதை அவளே சொன்னாள்.


‘ஐயோ பாவம் ‘ இந்தக் காலத்து ஆண் பிள்ளைகளுக்கு மனசு கல்மனசு ‘ என்று தன் அனுதாபத்தை தெரிவித்தாள் ராமநாதனின் தாயார்.


‘இந்த இளம் வயதில், இவ்வளவு அழகான மனைவியையும், லக்ஷணமான குழந்தையையும் விட்டுவிட்டு எப்படித்தான் அவன் போனானோ ‘ என்று ஆச்சரியப்பட்டான் ராமநாதன்.


எப்படி போனானோ ? போய்விட்டான். இவளும் வேலைக்கு வந்துவிட்டாள்.

அன்று ராமநாதன் நிம்மதியோடு ஆபீசுக்குப் போனான்.

* * *
மங்களம் சுமார் ஒரு வாரம் வரையிலும் எல்லோரும் மெச்சும்படியாக மிகவும் சூட்டிகையாக வேலை செய்து வந்தாள். கீழே குடித்தனம் இருப்பவர்களில் ஆண்கள்— வயது முதிர்ந்தவர்கள், வாலிபர்கள், எல்லோருமே— அவள் பம்ப் அடிக்க வரும்போது, கீழே குழாயைத் திறப்பதில்லை. மேலே அவள் பம்ப் அடிப்பதை அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளுவதும், அதைக் தத்தம் மனைவிமார் கவனிக்கிறார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளுவதுமாகக் கீழே குழாயடியில் உலாவிக்கொண்டிருப்பார்கள்.

மங்களம் மேலே தண்ணீர் அடித்து முடித்த பிறகுதான் கீழே குழாயைத் திறப்பார்கள். எனவே ராமநாதன் வீட்டில் தண்ணீர்த் தரித்திரம் நீங்கிவிட்டது. இந்தச் சந்தோஷத்தில் மங்களத்துக்கு ஒரு கிழியாத பழைய புடவையையும், அவளுடைய நாலு வயதுப் பெண்ணுக்கு புதுப் பாவாடை, சட்டையும் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.


இந்தச் சமயத்தில் மங்களத்துக்கு எப்படியோ ‘ஞானோதயம் ‘ ஆகிவிட்டது. பட்டணத்து வேலைக்காரிகள், ஆயிரம் கொடுத்தாலும் செய்யாத — ‘செய்யக்கூடாத ‘ —- வேலையைத் தான் மட்டும் செய்துவரும் விபரீதம் எப்படியோ அவள் மனசுக்குப் புலனாயிற்று. அவ்வளவுதான். மாடு சண்டித்தனத்துக்குத் தயாராகிவிட்டது. பழைய வேலைக்காரியைப்போல இவளும் ஓடிவிடக்கூடாதே என்று, சாப்பாடு போடுவதிலிருந்து சகல் விஷயத்திலும் மீனா தாராளமாக நடந்துகொண்டு வந்தாள். இதைக் கண்டு வேலைக்காரி ஏமாந்து விடுவாளா, என்ன ?


ராமநாதன் பார்த்தான். சம்பளத்தைக் கூட்டித் தருவதாகச் சொன்னான். மங்களம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை. கடைசியில் மூன்று ரூபாயை அதிகப்படியாகக் கொடுப்பதாக அவன் திட்டவட்டமாகச் சொல்லவே, அவள் வேண்டா விருப்புடன் சம்மதித்தாள்.


இந்த மூன்று ரூபாய்க் கவர்ச்சியும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. ஒரு நாள் பழைய வேலைக்காரி கமலா அவளைத் தெருவில் சந்தித்து, வலிய வந்து பேசி, ‘நீ என்ன இந்த வேலையெல்லாம் செய்யிறே ? உன்னைப் போலப் பொம்மனாட்டிங்க இருக்கப் போய்த்தானே எங்களையும் கண்ட கண்ட வேலையெல்லாம் செய்யச் சொல்லி உசிரை வாங்குறாங்க. நீ தண்ணி அடிக்கிறயே, எத்தனை நாளைக்கு அடிப்பே ? எத்தனை நாளைக்கு உன் ஒடம்பு தாங்கும் ? அப்படி உனக்கு எவ்வளவுதான் அள்ளிக் கொடுக்கிறாங்களாம் ‘ ‘ என்று மனசைக் கலைத்தாள்.

அவ்வளவில் மங்களம் விழித்துக் கொண்டாள். மறுநாளே ராமநாதனின் மனைவியிடம் வந்து, ‘தண்ணீர் அடிக்க முடியாது ‘ என்று அந்த பட்டணத்துப் பல்லவியைப் பாடினாள்.


பழையபடியும் ராமநாதன் அதிர்ச்சிக்குள்ளானான். மங்களத்தின் காலில் விழுந்து கும்பிடாத குறையாக வீட்டோடு எல்லோரும் கெஞ்சிப் பார்த்தார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா ? வேலைக்காரி தண்ணீர் அடிப்பாளா ?


பாக்கி சாக்கியை கணக்குப் பண்ணி வாங்கிக் கொண்டு மங்களமும் போய்விட்டாள்.


அவள் போய், அதற்குப் பிறகு குப்பம்மாள் என்ற வேலைக்காரி வந்து சேரும் வரையில், அந்த இரண்டு வார இடைக்காலத்தில் ராமநாதன் பட்ட துன்பம் சொல்லும் தரத்ததல்ல. நான்கு நாட்கள் அவன் குளிக்கவில்லை. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு தண்ணீர் அடித்தான். இரண்டு நாள் ஆபீசுக்கு காலதாமதமாகப் போய், மேலதிகாரியால் கடுமையாக எச்சரிக்கப் பட்டான். ஒரு நாள் கீழே குடித்தனம் இருந்த ஒரு குடும்பத்துடன் சண்டையும் போட்டு விட்டான்.


தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும் என்பார்கள். ராமநாதனோ தண்ணீருக்காக மூன்று பிழை பொறுப்பது என்று மூன்றாவது வேலைக்காரியை ஏற்பாடு செய்தான். இவளும் கிராக்கி பண்ணினாள், வீட்டை மாற்றி மாட்டுத் தொழுவுக்காவது போய்க் குடியேறுவது என்று முடிவு கட்டிக்கொண்டான்.


குப்பம்மாள் என்கிற பெயரைப் பார்த்து அவளைக் கிழவி என்று நினைத்து விடக்கூடாது. அதிகமாகப் போனால் நாற்பது வயதுதான் இருக்கும். பரம ஏழை. முக்கால்வாசி நாள் கந்தலைக் கட்டிக்கொண்டே வேலைக்கு வருவாள். அப்படிப்பட்டவளும் எண்ணி இரண்டு மாதங்களே வேலை செய்தாள்; மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி சம்பளம் வாங்கியதும், அன்றோடு நின்று கொள்வதாக அறிவிப்புக் கொடுத்துவிட்டாள்.

காரணம், அதே காரணம்தான். ‘தண்ணீர் அடிக்க முடியாது. ‘ அத்துடன் வேறொரு சாக்கையும் சொன்னாள். அவள் தண்ணீர் அடிப்பது அவள் புருஷனுக்கும் பிடிக்கவில்லையாம்; கோபித்து கொள்ளுகிறானாம்; அடிக்கிறானாம்; பிடிக்கிறானாம்; ‘தண்ணீர் அடிப்பதாயிருந்தால் வீட்டை விட்டே போய்விடு ‘ என்றே துரத்துகிறானாம் ‘


ராமநாதனுக்கு உள்ளுக்குள் ஒரே எரிச்சல். அவள் பேச்சைக் கேட்கக் கேட்க ஆத்திரம் பொங்கியது. ‘இந்தா, அதையும் இதையும் சொல்லிக்கொண்டு நிற்காதே. இஷ்டமிருந்தால் வேலை செய்; கஷ்டமிருந்தால் போய் விடு ‘ என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொன்னான்.

குப்பம்மாள் மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை.

‘புருஷனுக்கு பிடிக்கவில்லையாமே ‘ வேண்டியதுதான் ‘ இவள் இங்கே வாங்கிக்கொண்டு போகும் பழஞ்சோற்றை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு ஜீவனம் பண்ணுகிற அழகில் இவனுக்கு இந்த ஜம்பம் வேறு கேடா ? ‘குடிக்கிறது கூழ்; கொப்பளிக்கிறது பன்னீர் ‘ ‘ என்று தெரியாமலா சொன்னார்கள் ? ‘


அன்று முழுவதும் ராமநாதனுக்கு எதைக் கண்டாலும் ஆத்திரம் பொங்கியது. பட்டணத்தையே சுட்டு எரித்துக் கரிக்கோட்டையாக்கிப் பார்க்கவேண்டும்போல ருத்ராவேசம் பிறந்து வீட்டைவிட்டே வெளியே போய் விட்டான். நல்ல வெயில் நேரம். எங்கே போவது என்ற குறிக்கோள் எதுவுமின்றிப் போய்க்கொண்டிருந்தான்.


‘பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்க வந்ததற்குப் பதில். கிராமத்திலேயே பிச்சை எடுத்துப் பிழைத்திருக்கலாம். இன்னும் முப்பது வருஷம் உத்தியோகம் பார்த்தாலும் கூட, என்னத்தை அள்ளிக் குவித்துவிடப் போகிறோம் ? காசு செலவாகியும் நிம்மதியான வாழ்க்கையைக் காணோம். கேவலம், வேலைக்காரிக்கு உள்ள மனத்திராணிகூட நமக்கு இல்லை.

தனக்கு அசெளகரியம் என்றால் ஒரே நிமிஷத்தில் ஓடிவிடுகிறாள். நாமோ தினந்தினமும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இந்த உத்தியோகத்தையும், இந்தப் பட்டணத்தையும் கட்டி அழுகிறோம். மகா மானங்கெட்ட பிழைப்பு… ‘ என்று மனம் கசந்து கொண்டே கண்ணில் தட்டுப்பட்ட ஒரு சினிமாக் கொட்டகைக்குள் நுழைந்தான். கவலையைக் கொஞ்ச நேரமாவது மறந்திருக்கலாம் என்று உத்தேசம். இரண்டு மணிநேர ஆங்கிலப் படம். பார்த்து முடித்து வெளியே வந்ததும், நேரே ஒரு ஹோட்டலுக்குப் போய் வயிறாரச் சாப்பிட்டுக் காபி குடித்தான். நிலாக் காலமானதால் அரை மணி நேரமாவது கடற்கரையில் உட்கார்ந்திருந்துவிட்டு வரலாம் என்று பஸ்ஸில் ஏறினான்.


கடற்கரை மணலில் உட்கார்ந்து சுகமான காற்றை அனுபவித்தான். எட்டு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி வரும்போது, பக்கத்திலேயே தன் நண்பர் ஒருவருடைய வீடு இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அங்கே போய்ச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வரலாம், அந்தப் பக்கத்தில் தண்ணீர் வசதியுடன் வீடு ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்து விட்டும் வரலாம் என்று எண்ணிப் போனான் ராமநாதன்.


நல்ல வேளையாக இவன் போய்ச் சேர்ந்த நேரத்தில் நண்பர் இருந்தார். அந்த நண்பர்தான் புரட்சிகரமாக எழுதும் பார்த்தசாரதி; பிரபல நாவலாசிரியர்; சிறு கதைகளும் எழுதுவார். ‘பார்த்தன், ‘ ‘தேரோட்டி ‘ என்ற புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு.


ராமநாதன் போய் உட்கார்ந்ததும், முதலில் சம்பிரதாயமாக ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக ‘என்ன ஸார், இப்போது ஏதாவது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ? ‘ என்று கேட்டான்.


‘ஆம ‘ என்றார் பார்த்தசாரதி.

‘என்ன நாவல் ? ‘ என்று அர்த்தமில்லாமல் கேட்டான் ராமநாதன்.

‘எல்லாம் நம் வாழ்க்கையில் தினம் தினமும் காணும் நாவல்தான் ‘ என்று பதிலளித்தார் எழுத்தாளர்.

‘எப்படி ஸார் உங்களுக்கு கதை தோன்றுகிறது ? எங்களுக்கெல்லாம் ஒரு கதைகூடத் தோன்றுவதில்லையே ‘ ‘

‘கதை தோன்றுவதாவது ? தானே எப்படித் தோன்றும் ? நெருப்பில்லாமல் புகையுமா ? நாம் வாழ்க்கையில் கண்ணாரக் காணும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிதான் கருவாக இருக்கும். அதுதான் சிறு கதையாக, நாவலாக உருவாகும். என்னைப் பொறுத்த மட்டிலும் நான் எதார்த்த வாழ்க்கையை அப்படி அப்படியே சித்தரிப்பவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ?

பாருங்கள், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலுக்குக்கூட இந்தத் தெருவிலேயே விஷயம் கிடைத்தது. ஏறக்குறைய கதை முழுவதுமே உண்மையாக நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான். அந்தக் கதைக்கு உருவம் கொடுத்து, சுவாரஸ்யம் குன்றாமல் சித்தரிப்பதுதான் என் வேலை. ‘

‘அப்படி இந்தத் தெருவில் என்ன நடக்கிறது ? ‘ என்று ராமநாதன் கேட்க, பார்த்தசாரதி நாவலையே சுருக்கமாகச் சொல்லத் தொடங்கி விட்டார்.

அது ஒரு சோகக் கதை. உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு மாதின் கதை. அதனால்தான் நாவலுக்கு ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ என்று பெயர் கொடுத்திருந்தார்.

கதாநாயகியான அந்த ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘க்கு ஒரு பெண் குழந்தை. தாயையும் குழந்தையையும் தவிக்க விட்டுவிட்டான் காதலித்துக் கைவிட்ட காதகன். யாருமற்ற அனாதையாக உலகில் தத்தளிக்கிறாள் அபலை. ஊரெல்லாம் சுற்றியும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. தாயும் குழந்தையும் பல நாள் பட்டினி கிடக்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பொருட்டு உடலை விற்றே சம்பாதிக்கத் துணிகிறாள். சம்பாத்தியத்திற்காக அவள் வெளியே போய்விடும்போதெல்லாம் தனியாக விடப்பட்ட குழந்தை, தாயைக் காணாமலும் பசிக்கொடுமை தாங்க முடியாமலும் அழுது துடிக்கிறாள்…..

இப்படியே அவர் கதையைச் சொல்லிக்கொண்டு வரும்போது ராமநாதனுக்கு மூளையில் ஏதோ தட்டுப் பட்டதுபோல் இருந்தது. உடனே ‘சட் ‘டென்று, ‘உங்கள் கதாநாயகி இந்தத் தெருவில்தான் இருக்கிறாளா ? ‘ என்று கேட்டான்.

‘இந்தத் தெருவில்தான், அதுவும் எதிர் வீட்டிலேயே இருக்கிறாள். ‘

‘அப்படியா ‘ எவ்வளவு நாளாக இங்கே இருக்கிறாள் ? ‘


‘வந்து ஒரு மாதமாகியிருக்கும். ‘

‘அவளுடைய பெயர் தெரியுமோ ? ‘

‘தெரியாது. ‘

‘ஆள் எப்படி இருப்பாள் ? ‘

பார்த்தசாரதி வர்ணித்தார். வர்ணனை முடிந்தது.

‘சரி சரி ‘ என்றான் ராமநாதன்.


‘ஏன், என்ன விஷயம் ? நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், அவளைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் போல் அல்லவா தோன்றுகிறது ? ‘

‘அது இருக்கட்டும், அவளை நான் பார்க்கவேண்டுமென்றால் எப்படிப் பார்ப்பது ? ‘

ராமநாதனுக்குத் திகைப்பாகவும் இருந்தது; சிரிப்பாகவும் இருந்தது.

‘அவளிடத்தில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ? ‘ என்று எழுத்தாளர் கேட்டார்.

‘அதை அப்புறம் சொல்லுகிறேன். நீங்கள் மீதிக் கதையையும் சொல்லுங்கள் ‘ என்றான் ராமநாதன்.


எழுத்தாளருக்கு மேற்கொண்டு கதையைச் சொல்லுவதற்கு உற்சாகமில்லாமல் போய்விட்டது. எனவே ராமநாதனை சாப்பிட அழைத்துக்கொண்டு போனார். இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்து பழையபடியும் மாடியறையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும்போது, நிமிஷத்துக்கு ஒரு தடவை ஜன்னல் வழியாகத் தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்த்தசாரதி.


ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தனக்கு ஒரு வீடு தேவை என்று ராமநாதன் சொன்னதும் ‘ஏன், இப்போது இருக்கும் வீட்டில் என்ன அசெளகரியம் ? ‘ என்று கேட்டார் எழுத்தாளர்.


அவன் தன் துன்பக் கதையைச் சொல்லத் தொடங்கினான். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஒரு வேலைக்காரி அகப்படாத கஷ்டத்தைச் சொன்னான். ஒவ்வொரு வேலைக்காரியும் கிராக்கி பண்ணியதையும், உடம்பை வளைத்து வேலை செய்ய இஷ்டமில்லாமல் ஓடிவிட்டதையும் விவரித்துக்கொண்டு வந்தான். பார்த்தசாரதிக்கும் அந்த வேலைக்காரிகள் மேல் கடுங்கோபம் வந்தது. இருந்தாலும், ‘எல்லா வேலைக்காரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். வேலை செய்யாமல் சாப்பிடத்தான் எல்லோருக்கும் ஆசை. அவர்கள் காலமும் ஓடிவிடுகிறது ‘ என்றார்.



ராமநாதன் சொந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பார்த்தசாரதி குறுக்கிட்டு, ‘அதோ, அங்கே பாருங்கள், ரிக்ஷாவிலிருந்து இறங்குகிறாளே, அவள்தான்…. ‘ என்றார்.


எட்டிப் பார்த்த ராமநாதனுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. தான் நினைத்தது சரியாக இருந்துவிட்டதை எண்ணி அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவளை ரோடு விளக்கின் வெளிச்சத்தில் நன்றாகக் கவனித்துப் பார்த்தான். அவளேதான்.


‘இவளைப் பற்றித்தான் நாவல் எழுதுகிறீர்களா ? ‘ என்று ராமநாதன் கேட்டதற்கு, ‘ஆம் ‘ என்று எழுத்தாளர் ஒப்புக்கொண்டார்.


‘உங்கள் கதாநாயகி யார் தெரியுமா ? என் இரண்டாவது வேலைக்காரி மங்களம் ‘ இவள்தான் ‘வழுக்கி விழுந்த சகோதரி ‘ ‘ இவளுக்காகத்தான் கண்ணீர் விட்டுக் கரைகிறீர்கள் ‘ அரை மணி நேரம் தண்ணீர் அடிப்பதற்கு மாட்டேன் என்று நல்ல சம்பளத்தையும், சாப்பாட்டையும் உதறிவிட்டு வந்து, குழந்தையையும் தனியாகக் கதற விட்டுவிட்டுச் சம்பாத்தியத்துக்குப் போய்விடுகிறாளே, இவளுக்கு நாவலும் எழுதவேண்டியதுதான்; நாடகமும் எழுதவேண்டியதுதான் ‘ ‘ என்று ராமநாதன் ஒரு போடு போட்டான்.


எழுத்தாளர் பார்த்தசாரதி என்ன சொல்லுவதென்று புரியாமல், ‘அப்படியா ? ‘ ‘நிஜம்தானா ? ‘ ‘இவள்தானா ? ‘ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.


ராமநாதன் பேச்சை முறித்து, ‘ஏன் சும்மா அங்கலாய்க்கிறீர்கள் ? அது எப்படியும் போகட்டும், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; எனக்கு ஒரு வீடு பிடித்துத் தருகிறீர்களா ? இல்லை, இந்த நாவலைக் கிழித்துத் தூரப் போடுகிறீர்களா ? இந்த இரண்டில் நீங்கள் எதைச் செய்தாலும் அந்த உதவியை மறக்க மாட்டேன் ‘ என்றான். உடனே ‘கடகட ‘வென்று சிரித்தான்.


புரட்சி எழுத்தாளரும் சேர்ந்து சிரித்தார்.



மஹா பலி - லவ் த்ரில்லர் - சுஜாதா - சிறுகதை

http://farm4.static.flickr.com/3554/3312807515_4584031f64_o.jpg

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் ‘ஆஷோன்… ஆஷோன்’ என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக்கொள்ள… சென்னை-103-ஐச் சேர்ந்த ‘அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப்பள்ளி’யின் ஆசிரியைகள் டீசல் வேனில் இருந்து உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்துவத்தை விளக் கும்வகையில், ”இங்கதான்டி ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு’ ஷூட்டிங் எடுத்தாங்க” என்று வியக்க, கற்சிற்பிகளின் உளிச் சத்தம் எதிரொலிக்க, பிள்ளையார்களும் கொள்ளை -----------  சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்ட்டுகளுக்குக் காத்திருந்தார்கள். ‘கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?’


இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன் கரைக் கோயிலின் அருகில் வந்து கடற்கரைப் பக்கம் சென்றான். 1200 வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான்.


”கேமரா வேணுங்களா… நிக்கான், ஜப்பான்… ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?”

அவன் மௌனமாக இருக்க,

”செருப்பு வேணுங்களா? ஜோடி இருபது ரூபாதாங்க… கோலாப்பூரி…”


”…..”

”பேச மாட்டீங்களா?”

அவனுக்குப் பள்ளிச் சிறுவன் போல அறியாத முகம். கருநீலத்தில் தொளதொள சட்டை அவன் சிவந்த நிறத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. முதுகில் பட்டைவார் இறுக்கி பை வைத்திருந்தான். ஒருவேளை வடக்கத்திக்காரனாக இருப்பானோ என்று ”சேட், பந்த்ரா ரூபாய் மே லேலோ போணி!” என்றான் செருப்பு விற்ற சிறுவன்.


அவனை உணர்ச்சியில்லாமல் பார்த்துவிட்டு, கடலலைகளின் கோபத்தை மழுப்ப அமைக்கப்பட்ட கருங்கல் தடைகளில் ஒன்றில் உட்கார்ந்திருந்தவரை அணுகினான்.


”எக்ஸ்கியூஸ் மி…”

அவர் திரும்ப, ”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”என் பெயர் அஜய். நான்தான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். செக்ரெட்டரிக்கு விளம்பரம் கொடுத்திருந்தீர்கள்.”

”ஓ! நீதானா அது? ‘யங்’காக இருக்கிறாயே?!”


”எனக்கு 25 வயது!”


”எனக்கு ஏறக்குறைய 70” என்றார். ”கண்தான் சரியாகத் தெரியவில்லை. ராத்திரி கார் ஓட்ட முடியவில்லை. பொய்ப் பற்கள்… ஒருமுறை ‘பைபாஸ்’ ஆகி விட்டது. கடன் வாங்கின ஆயுள்!”

”மாடர்ன் மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.

கரைக் கோயிலின் கோபுரத்தைச் சிரத்தையாக அமிலம்வைத்துச் சுத்தம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

”ஒரு வருஷமாவது இருப்பதாக வாக்களித்தால்தான் உனக்கு வேலை. சான்றிதழ்களை அப்புறம் பார்க்கிறேன். என் புத்தகத்தை முடித்தே ஆக வேண்டும்… பிரசுரகர்த்தர்கள் கெடு.”

”என்ன புத்தகம்?”

புல் போர்வையையும் கம்பி கேட்டையும் கடந்து சாலை நோக்கி நடந்தார்கள்.

”பல்லவர் காலச் சிற்பக்கலை பற்றி ஓர் அந்தரங்கப் பார்வை…”

பஸ் நிறைய மாணவர்கள் இறங்கி, விநோதமான ‘போஸ்’களில் படம் பிடித்துக்கொண்டு, ”என்ன மச்சி… கலர்ஸ் எல்லாம் ஒரு பக்கமா ஒதுங்கிருச்சு!”

”இவர்களுக்கா பல்லவச் சிற்பக் கலை பற்றிச் சொல்லப்போகிறீர்கள்?”

”ஏன்?”

”பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசாரமற்றது.”


”நீயும் இந்தத் தலைமுறைதானே?”

”ஆம். ஆனால், வேறு சாதி.”


அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ”பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?”

”கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து இருக்கும் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.”

அவர் அவனைச் சிநேகபாவத்துடன் பார்த்து, ”ஐ லைக் யூ!”

”எப்போது வேலைக்கு வரலாம்?”

”இப்போதே என்னுடன் வா… உன் பைகள் எல்லாம் எங்கே?”


”எல்லாம் என் முதுகுக்குப் பின்னால்!”

”இவ்வளவுதானா?”

”இதில்கூடப் புத்தகங்கள்தான் அதிகம்.”

”செஸ் ஆடுவாயா?”

”சுமாராக.”

”சுமாராக ஆடி என்னிடம் தோற்பவர்கள்தான் எனக்கு வேண்டும். பேசப் பேச உன்னைப் பிடித்திருக்கிறது. லூயிஸ் தாமசும் படிப்பேன் என்று சொல்லாதே…”
”மெடுஸா அண்ட் தி ஸ்னெய்ல்.”


”கிரேட் யங்மேன். உன்னை எனக்கு நிச்சயம் பிடித்துவிடப் போகிறது. என் பெண் வினிதா சம்மதித்தால் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவேன்.”


இருவரும் வெளியே சாலைக்கு வர, அவர் கார் அருகில் சென்று, ”மாருதி ஓட்டுவாயா?”

”நான் ஓட்டாத வாகனமே இல்லை!” என்று சிரித்தான்.

”சிகரெட் பிடிப்பாயா?”

”இல்லை.”

”கல்யாணம் ஆகிவிட்டதா?”


”இல்லை.”

”பர்ஃபெக்ட்! சம்பளம் எத்தனை வேண்டும்?”

”உங்கள் இஷ்டம்.”


மாருதி காரைத் திறந்து, முதுகுச் சுமையைப் பின் இருக்கைக்குத் தள்ளிவிட்டு, முன்னால் ஏறிக் கொண்டான்.

”ஓட்டுகிறாயா?”


”இல்லை, இந்தப் பிரதேசமே எனக்குப் புதிது.”


”எந்த ஊர் நீ?”

”எதும் என் ஊர் இல்லை.”


கடற்கரையோரம் சென்றபோது மௌனமாக வந்தான். அருச்சுனன் தவத்தைக் கடந்து, கல்பாக்கம் சாலையைத் தவிர்த்து, ஊருக்கு வெளியே சென்று நீல, மஞ்சள் நைலான் வலைகளையும், மீன் நாற்றத்தையும் கடந்து கடலோர வீட்டு வாசலில் சென்றபோது, வெள்ளைச் சடை நாய் வந்து வாலை ஆட்டியது.


”அமைதியான இடம்… இவன் பெயர் ஸ்னோ. இங்கேயே இருப்பதில் உனக்குத் தயக்கம் ஏதும் உண்டா?”


”இல்லை.”

”அலை ஓசை பழகிவிடும். மாடியில் என் மகனின் அறை இருக்கிறது. எடுத்துக்கொள். மகன் அமெரிக்காவில் இருக்கிறான், டெக் நிறுவனத்தில். மகள் சென்னையில் படிக்கிறாள். விடுமுறைக்கு வருவாள்.”

”அப்படியா?!” – உள்ளே வந்து சித்திரங்களைப் பார்த்தான்.

”யாருக்கு ஷகால் பிடிக்கும்?”

”எனக்கு. உனக்கு..?”


”கன்டின்ஸ்கி.”


”ஏதோ ஒரு விதி என்னிடம் கொண்டுசேர்த்திருக்கிறது உன்னை. நான் இதுவரை தேடிய ஆதர்ச இந்திய இளைஞன் கிடைத்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”


அவன் புன்னகைத்தான். ”மிகைப்படுத்துகிறீர்கள்…”


‘எதுவரை படித்திருக்கிறாய்?”


”கல்லூரிக்கு முழுதும் போகவில்லை. படிப்பு தடைப்பட்டுவிட்டது. பி.ஏ. ஹிஸ்டரி படித் தேன்.”

”எங்கே படித்தாய்?”

”லண்டனில்.”

”விட்டுவிட்டாயா?”

”ஆம். பெற்றோரை ஒரு விபத்தில் இழந்த பின்…”

அவன் பையிலிருந்து சாமான்களை எடுத்துவைத்தான். பெரும்பாலும் புத்தகங்கள்… 101 கவிதைகள், லையால் வாட்ஸன் கட்டுரைகள், ரயில்வே அட்டவணை, சதுரங்கம் பற்றிய பாபி ஃபிஷரின் புத்தகம், ‘தி டவ் ஆஃப் பவர்’, மெக்கியாவல்லியின் ‘பிரின்ஸ்’, மோதியின் ‘ஜூரிஸ் புடன்ஸ்’…


”உன்னை வகைப்படுத்த முடியவில்லை.”

மறுபடி புன்னகைத்தான். பதில் சொல்ல விரும்பாதபோதெல்லாம் மையமாகப் புன்னகைப்பான் என்பது புரிந்தது.
'

முதல் மாதத்தில் அவன் முழுத்திறமையும் படிப்படியாகப் புரிந்தது.

அஜய் ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டுக் கொடுப்பான். சந்திரகுமாருக்குத் தேவையான ஐஸ் டீ, லெமன் கார்டியல் தேன் கலந்து கொடுப்பான். இரவு அவர் எழுதிவைத்திருப்பதை எல்லாம் பிழையே இன்றி மிகச் சுத்தமாக எலெக்ட்ரிக் டைப்ரைட்டரில் அடித்துக் கொடுத்துவிடுவான். ஒன்றிரண்டு திருத்தங்கள்தான் இருக்கும். புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிப் பேசவே மாட்டான். மாலை செஸ் ஆடுவார்கள். ஒரு நாள் அவன் தோற்பான். ஒரு நாள் இவர்… சில நாள் ட்ரா!

ராத்திரி அவருக்குக் கண்பார்வை மங்கியதால், படித்துக்காட்டினான். ஒருநாள், ”மாறுதலுக்காக ஏதாவது உன் புத்தகத்தில் இருந்து படித்துக்காட்டேன்” என்றார்.


”என் புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்காது.”

”நான் தற்போது எழுதும் புத்தகத்தைப்பற்றி என்ன நினைக்கிறாய்?”

”இது நம் நாட்டுக்குத் தேவைஅற்றது.”

”எப்படிச் சொல்கிறாய்?” என்றார் கோபப்படாமல்.

”மகேந்திரன் கட்டிய தூணுக்கும் ராஜசிம்மன் கட்டிய தூணுக்கும் வித்தியாசங்கள் பற்றி ஒரு அத்தியாயமே விளக்கும் புத்தகத்தால் இன்றைய இந்தியாவுக்கு என்ன பயன்?”

”நம் கலாசார மரபு தெரிய வேண்டாமா?”

”தெரிந்து..?”

”நம் இந்தியாவை ஒன்றுசேர்த்த இந்த மரபு இப்போது தேவை இல்லை என்கிறாயா?”

”இந்தியா ஒன்றல்ல! இந்த மஹாபலிபுரம் பல்லவ ராஜ்யமாக இருந்தது. அவன் விரோதி புலிகேசி சாளுக்கிய ராஜ்யம்… அது போல் சோழ மண்டலம்…வேங்கி… இந்தியாவாக இல்லை. இந்தியா பிரிட்டிஷ்காரன் அமைத்தது.”

”எங்கள் தலைமுறை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் சுதந்திர வேட்கைப்பட்டு, தியாகங்கள் செய்தோம்.”


”காரணம், உங்களை எல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நம் எதிரி நாமேதான்.”

”இருந்தும் இந்த நாட்டை ஒன்றுசேர்ப்பது கலாசாரம்.”

”இல்லை… ஏழ்மை!”

”உனக்குச் சிற்பங்கள் பிடிக்காதோ?”

”கரைக் கோயிலின் ஆர்க்கி டெக்சர் எனக்குப் பிடிக்கிறது. எனக்கு அதன் அழகை நிலவொளியில் பார்க்கப் பிடிக்கும். அதை அமைத்த பெயரில்லாத சிற்பி தான் என் ஹீரோ. மகேந்திரவர்மன் அல்ல.”

”மனம் மாறுவாய்” என்றார் சந்திரகுமார் புன்னகையுடன்.

வினிதா தசராவுக்கு வந்திருந்தபோது அவனை அறிமுகப்படுத்தினார். ”வினித், திஸ் இஸ் அஜய்… வினிதா என் பெண்.”

”ஹாய், யு லைக் மியூஸிக்?”

”பிடிக்கும்…”

”ஃபில் காலின்ஸ்?” என்றாள் எதிர்பார்ப்புடன்.

”மொஸார்ட்” என்றான்.

”யக்…” என்றாள் அருவருப்புடன்.

”புக்ஸ்? ஜெஃப்ரி ஆர்ச்சர்…”

”ஃபிக்ஷன் ரெண்டாம்பட்சம்… ஐ ரீட் போயம்ஸ்.”

”போயம்ஸ்! மைகாட்…”

”தேர் கோஸ் மை மேரேஜ் அலையன்ஸ்…” என்றார் சந்திரகுமார்.

”எங்கிருந்து அப்பா இந்தப் பிராணியைப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹி இஸ் நாட் நார்மல்!” என்றாள் வினிதா.

இருவருக்கும் ஒரே ஒரு பொது அம்சம் – மே மாதத்தில் பிறந்தவர்கள் இருவரும். அவளுடன் விகற்பமில்லாமல் பழகினான். அவளைக் கவிதைகள் படிக்கவைத்தான். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை வீடியோ பார்க்கவைத்தான்.

ஒருநாள் மாலை ‘ரொம்பப் போர் அடிக்கிறது’ என்று கட்டாயப்படுத்தி அவனை ஊருக்குள் அழைத்துச் சென்றாள். ”கடற்கரைப் பக்கம் வாக்மென் போட்டுக்கொண்டு நடக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா?”

கட்டாயத்தின் பேரில்தான் சென்றான். திரும்பி வந்ததும், ”இரவு எனக்கு நிலவொளியில் கரைக் கோயிலைப் பார்க்க வேண்டும்.”

”அழைத்துச் செல்கிறேன்!”

அவர்கள் சென்றதும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். இருவரும் நெருக்கமாகப் பழகுவது திருப்தியாக இருந்தது. ”அவனைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி விசாரிக்க வேண்டும். இவனைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது மிக அரிது.’

இருவரும் போனதும் வீடு வெறிச்சென்று இருந்தது. மேஜையில் அவன், அவளுக்குப் படித்துக்காட்டிக்கொண்டு இருந்த புத்தகத்தை எடுத்தார். காது மடங்கியிருந்த பக்கத்தில் திறந்தது… ‘How did you die?’


கவிதையின் தலைப்பே சற்று அதிர்ச்சி தந்தது.

‘Death comes with a crawl,
or comes with a pounce
And whether he is slow or spry
It is not the fact that
you are dead that counts
But only, how did you die?’


வாசலில் ஜீப்பில் இருந்து ஒருவர் மெள்ள இறங்கி வந்து, சுற்றிலும் சவுக்குத் தோட்டத்தைப் பார்த்தபடியே அணுகினார்.

”புரொஃபசர் சந்திரகுமார்?”

”யெஸ்…”

”ஐ’ம் ஃப்ரம் தி போலீஸ் ஸ்பெஷல் பிராஞ்ச்” என்று அடையாள அட்டையைக் காட்டி, ”இந்த போட்டோவில் உள்ளவனை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

கண்ணாடி போட்டுக்கொண்டு வெளிச்சத்தில் பார்த்தார். மீசை இல்லை; கிராப்பு வெட்டப்பட்டுச் சுருக்கமாக இருந்தது. இருந்தும் திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது.


”இவன் பெயர் அஜய். என் செக்ரெட்டரி…”

”இவன் உண்மையான பெயர் அஜய் இல்லை. அவன் இங்கே இருக்கிறானா?”

”என் மகளுடன் கடற்கரைக்குப் போயிருக்கிறான். இப்போது வந்துவிடுவான். ஏதோ அடையாளக் குழப்பம் போலிருக்கிறது.”


வந்தவர் மிக வேகமாகச் செயல்பட்டார் ரேடியோவில். ”சார்லி, திஸ் இஸ் தி ப்ளேஸ்… வி காட் ஹிம்!”

”விவரமாகச் சொல்லுங்களேன்?”

”இவன் யார் தெரியுமா? மை காட்! எங்கே கடற்கரைக்கா?”

”இன்ஸ்பெக்டர், இதில் ஏதோ தப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பையன் என்னுடன் இருக்கும் செக்ரெட்டரி… ரொம்ப நல்ல பையன்.”

”புரொஃபசர், இவன் யார் தெரியுமா? எல்லா போலீஸாலும் தேடப்படும் மிகப் பெரிய தீவிரவாதி… மொத்தம் 18 கொலைகள் இவன் கணக்கில் உள்ளன.”

”சம்திங் பாஸிட்டிவ்லி ராங்… ஆள் மாறாட்டம்… போட்டோ தப்பு” என்றார்.


”அவன் இங்கேதான் தங்கி இருக்கிறானா?”

”ஆம்…”

”எந்த அறையில்?”

”மாடியில்!”

”என்னுடன் வாருங்கள்…” சரசரவென்று மாடிப்படி ஏறினவரைத் தயக்கத்துடன் பின்தொடர்ந்து, அஜய் தங்கியிருந்த அறைக்குள் முதன்முதலாக நுழைந்தார். ”என் செக்ரெட்டரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மணியான பையன். மிகுந்த புத்திசாலி. அழகுணர்ச்சி உள்ளவன், படித்தவன், சிந்திப்பவன்…”

அதிகாரி அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் இரை தேடும் சிங்கம் போல அறைக்குள் அலைந்தார். ஒழுங்கான அறை. சுவரில் கலையம்சத்துடன் நவீன சித்திரம் மாட்டியிருந்தது. அலமாரிப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருந்தான். மேஜை மேல் காகிதங்கள் அடுக்காக… ஜன்னல் மலர் ஜாடியில் ரோஜா.


அதிகாரி அவன் மேஜை இழுப் பறைகளைச் ‘சரக்… சரக்…’ என்று திறந்தார். மலர் ஜாடிகள் உருண்டன. காகிதங்கள் பறந்தன. பூட்டுகள் உடைந்தன.

”புரொஃபசர், இங்கே வந்து பார்க்கிறீர்களா, உம் நம்பிக்கைக்குரிய காரியதரிசியின் சொத்துக்களை?”

சந்திரகுமார் அருகே சென்றார்.

”இது உங்களுடையது அல்லவே?”

மேஜையின் மேல்மட்ட இழுப்பறையில் துப்பாக்கி இருந்தது. கீழ் அறையில் ஒரு காலாஷ் நிக்காஃப் ரைஃபிளின் பாகங்களும், மேகஸின்களும் இருந்தன. ஒரு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் இருந்தது.


”ஐ கான்ட் பிலீவ் இட்… திஸ் இஸ் இம்பாஸிபிள்!”

”இவன் பெயர் அஜய் அல்ல… இவன் பெயர் டோனு. கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்கள் மகளுடன் எங்கே போய் இருக்கிறான்?”


”கடற்கரைக்கு என்று சொன்னேனே!”


”பதற்றப்படாதீர்கள், அவனுக்கு நாங்கள் இங்கு வந்து தேடுவது தெரியாது. அவனும் உங்கள் மகளும் திரும்பும் வரை பதுங்கி இருக்கலாம்.”

ஜீப்பைப் போகச் சொல்லி ஆணை கொடுத்தார். தபதப வென்று பத்து போலீஸ்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.


”வெயிட்… யு கான்ட் டூ திஸ்… அவன் வேறு யாரையோ…”

”ஷட் அப் ஓல்ட்மேன்… கீப் கொயட்! ஒரு பயங்கரவாதிக்கு, தீவிரவாதிக்குப் புகலிடம் அளித்திருக்கிறீர்கள். வாயை மூடிக்கொண்டு நடப்பதைக் கவனிப்பது உசிதம்!”

”என்ன செய்யப்போகிறீர்கள்? காட்! என் மகள்… என் மகள் அவனுடன் இருக்கிறாள்!”

”அவளைக் காப்பாற்ற

முயற்சிக்கிறோம்.”

அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது. அலமாரியில் இருக்கும் ஸார்பிட்டால் தேவைப்பட்டது. நாக்கு உலர்ந்தது. ‘என்னவோ ஒரு பெரிய தப்பு நேர்ந்திருக்கிறது… ஆள்மாறாட்டத் தப்பு. இவன் இல்லை… தடுக்க வேண்டும்.’

”வர்றாங்க. எல்லாரும் தயாரா இருங்க. அநாவசியமா சுட வேண்டாம். நான் சொல்லும்போது சுட்டாப் போதும்!”

ஜன்னல் வழியே, வினிதாவுடன் அஜய் மெதுவாகப் பேசிக் கொண்டே வருவது தெரிந்தது. அவர்கள் கைகோத்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வப்போது அவன் தோளில் தட்டி ஆரவாரமாகச் சிரித்தாள்.

”ரெடி!”

ஒரு கணம் உலகமே நின்றது.

இங்கே துல்லியமாகத் துப்பாக்கிகளின் ட்ரிக்கரைத் தயாரிக்கும் சத்தம் கேட்டது. வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தவன், தரையில் ஈரம் இருந்ததைப் பார்த்தான். அதில் பதிந்திருந்த பூட்ஸ் அடையாளங்களைப் பார்த்தான். நின்றான். வின்னியிடம் ஏதோ சொன்னான். அவள் வியப்புடன் கீழே பார்த்தாள்.

”நாம் வந்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டான், பூட்ஸ் அடை யாளங்களைப் பார்த்து. ஓடுங்க… பிடிங்க!”

இதற்குள் அஜய், வின்னியை முன்னால் இழுத்துத் தன்னை மறைத்துக்கொண்டான்.

போலீஸார் வெளியே வெள்ளமாகப் பாய்ந்தார்கள். அங்கிருந்து கத்தினான். தன் பையில் இருந்து எடுத்த துப்பாக்கியை வின்னியின் நெற்றியில் பதித்து, ”ஸ்டாப்! கிட்ட வந்தா பெண் இறந்து போவாள்… நில்லு!”

‘சினிமாவில்தான் இந்த மாதிரி காட்சிகள் வரும்’ என்று சந்திர குமார் நினைத்தார். ‘இப்போது கூட அனைத்தும் கனவு’ என்று விழிக்கத் தயாராக இருந்தார்.

அவர் பெண்ணை அவன் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி காரில் திணித்து ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது, போலீஸார் ‘வாக்கிடாக்கி’யில் ஆணைகள் பிறப்பித்தனர். ”க்விக்! செண்ட் த ஜீப்… ஹி இஸ் ரன்னிங்…”


புரொஃபசரைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓடினார்கள். நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் கேட் வரை ஓடியது. புரொஃபசர் வெலவெலத் துப்போய், ”என் மகள்… என் மகளைக் காப்பாற்றுங்கள்…”

இரவு எட்டு மணிக்கு அவர்கள் திரும்பி வந்து, அவரைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள்.


”என்ன ஆச்சு… என் மகளுக்கு என்ன ஆச்சு..?”

”ஓ! ஷி இஸ் ஆல்ரைட்…”

”பையன்?”

”கடற்கரையில் சுட வேண்டி இருந்தது…” அவர்கள் அந்த இடத்தை அணுக, வின்னி அவரை நோக்கி ஓடி வந்தாள்.

”வின்னி, தப்பித்தாயா! வின்னி, ஆர் யு ஆல்ரைட்?” என்று அவளைக் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தங்கள் அளித்தார். ”எங்கேயாவது அடிபட்டதா?”

”இல்லை அப்பா… அவன் என்னை எதும் செய்யவில்லை.”

”எதும் செய்யவில்லையா?!”

”நான் அகப்பட்டுவிட்டேன். என்னை நிச்சயம் சுட்டுவிடுவார்கள். சாவதற்கு முன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்து விட வேண்டும்” என்றான். அதற்காகத்தான் என்னைப் பணயக் கைதியாக அழைத்துச் சென்றான். இங்கே வந்ததும் என்னை விடுவித்து விட்டான்!”

சந்திரகுமார் கரைக் கோயிலைப் பார்த்தார். அதன் விளிம்புகளில் வெள்ளி பூசியிருந்தது. தூரத்தில் கடலலைகளின் சுருட்டல்களின் மீதும் வெள்ளி பிரவாகித்தது. அலை புரளும் ஓசை அவ்வப்போது உருண்டது.

”அப்பா, அவர்கள் அவனை… அவனை…” என்று விசித்து அழுதாள்.

கடற்கரைக் கோயிலின் அருகே மணல்வெளியில், நிலவில் நனைந்துகிடந்தான் அவன். மாருதியின் ஹெட்லைட் வெளிச் சத்தில் மார்பில் பாய்ந்திருந்த குண்டின் ரத்த உறைவு தெரிந்தது. சந்திரகுமார் கிட்டே போய் அவனைப் பார்த்தார்.

‘உங்களையெல்லாம் ஒருமைப்படுத்த ஒரு பொது எதிரி இருந்தான்… இப்போது நம் எதிரி நாமேதான்!’


”மைகாட்! வாட் வென்ட் ராங்?” என்றார் சந்திரகுமார்.

”என்ன?”

”நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலி வாங்கும்படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே… எங்கே…?”

”அந்தக் கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்” என்றார் அதிகாரி!




http://www.bharatmoms.com/uploads/Image/writer-sujatha3.jpg

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 13

1 . உங்கள் முதல் பதிவு எப்போ போட்டிங்கனு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கு எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க ? அதுல மறக்கமுடியாத கமெண்ட்ஸ் எது ?(உங்க ப்ளாக் ஓபன் பண்ணி பார்காமசொல்லணும் )


ஜூலை 17, 2010 .. ஏன்னா அதுதான் என் முத போஸ்ட்.. என்ன தர்ம சங்கடமான சூழ்நிலைன்னா முத போஸ்டே என் நண்பர் பாடல் எழுதிய படம்.. ஆனா படம் டப்பா.. டைட்டில்ல விருந்தாளி - அபாயம் போகாதே -ன்னு வெச்சாச்சு.. ராங்க் செண்ட்டிமெண்ட்.. நிறைய பேரு அவ்ளவ் தான் அட்ரா சக்க ஊத்திக்கும்னாங்க.. எனக்கும் ஒரு ஒரத்துல பயம் இருந்தது.. ஆனாலும் அப்படி ஏதும் நடக்கலை.. பாடல் ஆசிரியர் திரு முருகன் மந்திரம்.. அவருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். கமென்ட்ஸ் போட்டது நல்ல நேரம் சதீஷ்னு நினைக்கறேன்.. யாருமே கமெண்ட் போடாததால நான் தான் அவருக்கு ஃபோன் பண்ணி கமெண்ட் போடச்சொன்னேன் ஹி ஹி 


2 .உங்கள் தந்தையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் அந்த பதிவை படித்து உங்களை யாராவது பாராட்டிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க ?


எல்லாருக்கும்  அப்பா இருக்கு, அப்பா பற்றிய நினைவுகள் இருக்கு.. ஆனா நான் என் அப்பா பற்றி எழுதுனதும் ஏகப்பட்ட பாராட்டு,.,. காரணம் நான் சீரியஸா எதுவும் எழுதுனதே இல்லை.. பெரும்பாலும் காமெடி தான் மொக்கை தான்.. அதனால அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம்.. மும்பை பிரகாஷ், லண்டன், இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் அதற்கு பாராட்டு தெரிவிச்சாங்க.. மனசுக்கு மகிழ்ச்சி.. அப்பாவுக்கு மரியாதை.. எழுத்துக்கு ஒரு நிறைவு..


3 . உங்களிடம் கணினியும் ,இணய இணைப்பும் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் உங்கள் அலுவலக கணினியில்தான் பதிவுகள் ,டவிட்கள், போடுகிறீர்கள், இது உங்கள் மேலதிகாரிக்கு தெரியுமா ? உங்கள் சக ஊழியர்கள் உங்கள்பதிவை படிப்பார்களா? உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்கள் முதலாளிக்கு நன்றி சொல்லி இருகிறீர்களா ?



பழைய ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியும்.. புது ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு  தெரியாது.. அடிக்கடி நான் மொபைல்ல பிஸியா இருக்கறதை பார்த்து அவங்க ஏதோ லவ் மேட்டர்னு அவங்களுக்குள்ளேயே  சிரிச்சுக்குவாங்க .. நன்றி- மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன்..


4 .இந்த பதிவை போட்டு இருக்க கூடாதுன்னு நினைச்ச பதிவு எது ?


நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும்.. ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 4 ரெண்டில் சொன்ன கருத்துக்களில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசுல பட்டதை பகிர்ந்தேன்.. அது தேவை அற்ற மனக்கசப்புகளை கொண்டு வந்தது.. இனி ஜாக்கிரதையா இருப்பேன்./. சொல்வதெல்லாம் உண்மையா இருக்கனும் அதே சமயம் எதை சொல்லனுமோ அதை மட்டும் தான் சொல்லனும்



5 .மறைக்காமல் சொல்லுங்க உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தானே ??


என் தளம் பெண்களுக்கானதல்ல... பெரும்பாலான விஷயங்கள் ஆண்களை குறி வைத்தே எழுதப்படுகின்றது .. ஆனா  பெண்களும் படிக்கும் தரத்தில் தான் இருக்கும்.. பதிவு போட்டதும் ஏதாவது கண்டனம் வந்தா சர்ச்சைக்குரிய லைனை திருத்திடுவேன்


6 . சகபதிவர்கள் பதிவை படிப்பதுண்டா , அவைகளில் பிடித்த பதிவர் &பதிவு ஒன்றை சொல்லவும் 


தினமும் 5 பதிவாவது படிப்பேன்.. கும்மாச்சி, தமிழச்சி,டாக்டர் ராஜ் மோகன், மங்கை,மெட்ராஸ் பவன் சிவக்குமார்



7 . உங்களை கலாய்ப்பவ்ர்களை திட்டிதீர்ப்பிர்களா? இல்லை ரசிப்பீர்களா ?


ரசிப்பேன்.. வரம்பு மீறாதவரை 


8 .தயவு செய்து ஜிகிடி ,பிகிடிக்கு அர்த்தம் சொல்லவும் ?


ஜிகிடி பிகிடிக்கெல்லாம் அர்த்தம்   கிடையாதுன்னு ஆயிரம் தடவை சொல்லீட்டேனே?


9 .முகநூல் , ட்விட்டர்,ப்ளாக்  எது ரொம்ப பிடிக்கும் ?


பிளாக் தான் முதல்ல  எண்ட்டர் ஆனேன்.. மார்க்கெட்டிங்க்காக ட்விட்டர், ஃபேஸ் புக் வந்தேன்.. ஆனா ட்விட்டர் தான் செம ஜாலி



10 . உங்கள் முகநூல் ,ட்விட்டர் கமெண்ட்ஸ் களுக்கு நீங்கள் பதில் சொல்வது அரிது இது ஏன் ? வேலைபளுவா ? இல்லை நிராகரித்தலா ?


 எனக்கு கிடைக்கற டைம் ரொம்ப கம்மி.. பதிவு டைப் பண்ணனும், சினிமா பார்க்கனும், வசனத்தை மறக்காம நினைவு வெச்சுக்கனும். இந்த பிசில ரிப்ளை தர டைம் இல்லை சாரி


11 . இன்னும் நிறைய  கேள்விகள் இருக்கிறது கேட்க அனுமதி உண்டா ?


கேளுங்க , கேளூங்க  கேட்டுக்கிட்டே இருங்க.  அப்புறம் நான் எப்படித்தான் பதிவை தேத்துவது?--

மேலே கண்ட கேள்விகள் அனைத்தும் Sasimohan Kumar உடையது



12. சினி பிரியன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்கீங்களே.  நமிதா வந்து ரிப்பன் வெட்டுனதுக்கு அப்புறம்தான் அதுல எழுத ஆரம்பிப்பீங்களாமே? நெசமா? - மெட்ராஸ் பவன் சிவக்குமார்


சினிமா சம்பந்தப்பட்ட மேட்டர்களை மட்டும் ஒரு தளத்துல தனியா தொடங்கலாம்னு ஆசைப்பட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சேன்.. அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..  



13. காதலை  உங்களோட கண்ணோட்டத்துல நீங்க அதை எப்படி பார்க்குறீங்க?? (காதல் பற்றி உங்க கருத்து என்ன???)  - திரு எனும் சேலம் மேங்கோ சிட்டி பாய்


உண்மையான காதல் இன்னைக்கும் இருக்கு , ஆனா அளவில் குறைவா இருக்கு.. இன்னைக்கு கள்ளகாதல் தான் அதிகம் தென்படுது./.  உண்மைக்காதலுக்காக உயிரையே கொடுப்போம்னு எல்லாம் யாரும் வசனம் பேசரது இல்லை. பிராக்டிகல் லைஃப் வாழறாங்க.. கல்யாணம் ஆன பின்பு காதல் குறையக்கூடாது  .. உண்மைக்காதல்  என்பது உடலாலும், மனதாலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருத்தல்




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html

வாழ்க்கைப்பேருந்து ஸ்மூத்தா ஓட இன்னா பண்னனும்?

கேமராவோட சென்னையில சுத்தினா இதெல்லாம் கண்ணுல படுது, ”வண்டிக்கே இந்த குனியா”
1.1000 இன்ஸ்டாகிராம் = 1 இன்ஸ்டா கிலோ?



-------------------------------------


2. பெண்போலீஸ்கள் பெருகிக்கொண்டே போவதில் எனக்கு வருத்தம் தான் # அவங்களும் தொப்பையுடன் பெருகிக்கொண்டு



--------------------------


3.-ஆஃப்ரிகன் சஃபாரின்னா ஆப்பிரிக்காவில் தைக்கப்பட்ட சஃபாரி சூட்டா?


-----------------------------

4. நான் ஒண்ணாங்கிளாஸ் அட்மிஷன் போறப்போ மிஸ் காதைத்தொட்டுக்காடுன்னு சொன்னப்போ மிஸ் காதை பெஞ்ச் மேல ஏறி தொட்டேனாம் # அப்பவே அப்டி ஹி ஹி



----------------------------

5. BRILL இங்க் ஊற்றின பேனாவுல கதை எழுதுனா ”பிரில்”லியண்ட்டான கதை வருமா?



------------------------------

அந்தக் கிளி ஜோசியர் சொல்லும் பலன்கள் எல்லாம் மனுஷன் பயந்து சாகிற மாதிரி இருக்கும்."

"அப்ப 'கிலி' ஜோசியமுன்னு சொல்லு!"


6. அன்னப்பறவைன்னா பாலில் உள்ள தண்ணீரை பிரித்தெடுக்கும் பறவைன்னுதான் நிறைய பேர் நினைக்கறாங்க,அது மன்மதன் ரதியின் வாகனமும் கூட


-------------------------------


7. பிரதமர் சென்னை வந்தார் ! # சென்னை வந்த வெண்ணையே!சோனியாவை அன்னை என்று சொன்னியே! பி எம் என்றால் கொலு பொம்மை என்று ஆனியே!



-------------------------------------


8. தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் தயாராகுது! # பாகிஸ்தான் பார்டர்ல போட்டுடுங்க


--------------------------


9. நீங்க நல்லவரா? கெட்டவரா? -இந்த ஃபேமஸ் டயலாக்கை கமலே மறுபடி வைக்க காரணம் செண்ட்டிமெண்ட்டா? அவருக்கே அவர் மீது டவுட்டா? # விஸ்வரூபம்


----------------------------------


10. கணவன் டிரைவராகவும்,மனைவி கண்டக்டராகவும் இருந்தால் வாழ்க்கைப்பேருந்து நன்றாக ஓடும்


----------------------------


ஏன்ப்பா தம்பி ! ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா இத



11. கொடுத்தால் கை வலி, வாங்கினால் கன்னம் வலி # பளார்


--------------------------

12. சார், ஹாலிவுட்க்கு போக முக்கியக்காரணம் என்ன?


கமல் - இங்கே இருக்கற உதடெல்லாம் டேஸ்ட் பார்த்துட்டேன் , ஹி ஹி 



---------------------------


13. அஜித் - சகுனியும் புட்டுக்கிச்சு, ஸ்பைடர்மேனும் ஊத்திக்குச்சு.. இது நமக்கு நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?



------------------------------------


14. ரைட்டர் நாயோன் டைரக்ட் பண்ற பட டைட்டில் “ டயல் எம் ஃபார் மர்டர்.” #  சார், படத்துல ஆர் ஃபார் ரேப் உண்டா?



----------------------------


15. டியர்,உனக்கு கோதுமை ரொட்டி செய்யத்தெரியுமா?


 ஹி ஹி நீங்க ஹோட்டல்ல வாங்கிக்கொடுத்தா சாப்பிடத்தெரியும் # எ கீ



-----------------------------



16. சார், துப்பாக்கி டைட்டில் தடை பண்ணிட்டாங்க, அர்த்தம் மாறாம அதே டைட்டில் வைக்கனும், என்ன பண்ன? சின்ன பீரங்கி ஓக்கேவா?



-----------------------------


17. கமல் - எனக்கு இன்னும் சம்பளம் வர்லை !



 தயாரிப்பாளர் - படம் ரிலீஸ் ஆகட்டும்,ஏதாவது மிச்சம் ஆனா தருவோம் ஹி ஹி



-----------------------


18. நிருபர் - உங்க அடுத்த படத்தை பற்றி சொல்லுங்க !


 ரஜினி - கோச்சடையான் என்ன ஆச்சுன்னே இன்னும் எனக்கே தெரியல ,அதுக்குள்ள அடுத்ததா?


---------------------------


19. சார், விஸ்வரூபத்துல க்ளைமாக்ஸ்ல ஹேப்பி எண்டிங்கா?



கமல் - படத்துல  ஹேப்பி எண்டிங்க் தான். .... படம் தான்?????


-----------------------------


20. கோபம் இருக்கு இடத்தில் தான் குணம் இருக்கும்': விஜயகாந்த் விளக்கம் # நீங்க ஒரு குணக்குன்றுங்ணே



--------------------------------------


ஹிஹிஹிஹி... என்ன ஒரு கெத்தான நடை.............???

Sunday, July 01, 2012

என் முதல் தொலைக்காட்சி அனுபவம்! - சுஜாதா

http://b.vimeocdn.com/ts/148/621/14862184_640.jpgஸ்ரீரங்கத்துக்கு டெலிவிஷன் அம்பதுகளிலேயே வந்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்! தெற்கு உத்தர வீதியில் ‘தி ரங்கநாதா ரேடியோ அண்ட் டெலிவிஷன் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்ற போர்டு திடீர் என்று தோன்றியது. ‘ப்ரொப்: அண்ணாசாமி ஸி அண் ஜி லண்டன்’ என்று அடி வரியில் இருந்தது. நான் அப்போது எம்.ஐ.டி’யில் எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு மூன்றாம் ஆண்டு கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் படலத்தில் ஜாலியாக இருந்தேன்.


ரங்கு கடையில் இதுபற்றித் தீவிர சர்ச்சை நடந்தது. ‘‘இண்டியாவிலேயே டெலிவிஷன் கெடையாது. எப்டிரா ஸ்ரீரங்கத்தில் மட்டும் வரும்?’’


‘‘வரும்ங்கறாரே! அண்ணாசாமி சொல்றார்… அமெரிக்காவில் காட்டறது நமக்கும் தெரியறதாம்.’’

‘‘புளுகுடா. நீ என்னடா சொல்றே… எலெக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கியே?’’

‘‘சான்ஸே இல்லை!’’ என்றேன்.

‘‘அவர் வந்தா கேட்டுருவமே.

பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காராமே… ஆள் எப்படி?’’

‘‘சுமார் முப்பது வயசிருக்கும். லேசா தொந்தி முன்&னற்க வழுக்கை. சம்பா சம்பான்னு ஒரு பொண்ணு. சித்துப் பண்ணி வெச்சாப்பல இருக்குமே, நீங்கள்ளாம் பயங்கரமா சைட் அடிச்சிண்டிருந்தீங்களே… அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருக்கார்’’ என்றான் ரங்கு.’’


‘‘அமெரிக்கால படிச்சிருக்காராம். அதனால வயசு வித்தி யாசம் ஜாஸ்தியா இருந்தாலும் ஒத்துண்டிருக்கா.’’


‘‘இதைவிட அநியாயம் உண்டா ரங்கு?’’ என்று தம்பு ஆத்துப் போனான். தம்பு ஒரு காலத்தில் சம்பாவைக் காதலித்தவன்.


ஒரு முறை தெற்கு வாசலுக்கு கோயில் வழியாகப் போகாமல் தெற்கு உத்தர வீதி வழியாகச் சென்றபோது, அந்த போர்டைப் பார்த்தேன். வாசலில் பையன்கள் கோடுகிழித்து வீதி கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந் தார்கள். பெரிய திண்ணையுள்ள அகலமான வீடு. போர்டு புதுசாக எழுதியிருந்தது. அதை வெளிச்சம் காட்ட பல்பெல் லாம் இருந்தது. நெற்றியில் எலுமிச்சை > பச்சைமிளகாய் வைத்துக் கட்டியிருந்தது.


‘‘அது என்னடா ஸி அண்ட் ஜி? ஓமியோபதியா?’’ என்றான் ரங்கு.


‘‘இல்லை ரங்கு. சிட்டி அண்ட் கில்ட்ஸ்னு லண்டன்ல ஒரு இன்ஸ்டிடியூட் நடத்தற பரீட்சை. ஏ.எம்.ஐ.இ. மாதிரி இதும் ஒரு பரீட்சை. பாஸ் பண்ணியிருக்கலாம்.’’


‘‘அதில் டெலிவிஷன் எல்லாம் கத்துத் தருவாளோ?’’


‘‘இருக்கலாம். அதனால அப்படி போர்டு போட்டுண்டு இருக்கலாம். ஆனா, ஸ்ரீரங்கத்தில் டெலிவிஷன் கிடையாது; தெரியாது!’’


அவரே ரங்கு கடைக்கு ஒருமுறை வந்திருந்தார். ‘‘ரங்கு, இன்சுலேஷன் டேப் இருக்குமா?’’

‘‘இல்லை. அது கறுப்பா சேப்பான்னு கூட தெரியாது!’’


‘‘கறுப்பு. இதெல்லாம் கடைன்னா வாங்கி வெச்சுக் கணும்.’’

‘‘எப்படி இருக்கும்?’’


‘‘தொட்டா ஒரு பக்கம் ஒட்டிக்கிறா மாதிரி இருக்கும். ஒயருக்கு கனெக்ஷன் கொடுக்கறப்ப, ஷாக் அடிக்காம இருக்க டேப் சுத்தணும்.’’

ரங்கு தன் தொழில்நுட்ப அறிவை அதற்குமேல் விருத்தி செய்ய விரும்பவில்லை.

‘‘அண்ணாசாமி… என்னமோ சொல்றா, உங்காத்தில டி.வி>யெல்லாம் இருக்காமே?’’

‘‘ஒரு தடவை வந்து பாரேன்…’’

‘‘நான் எங்க கடையை விட்டுட்டு வரது!’’

‘‘ஆமா, வியாபாரம் அப்படியே தட்டுக்கெட்டுப் போறது. ஈ ஓட்டிண்டிருக்கான். போய்ப் பார்த்துட்டுத்தான் வரலாமே!’’ என்றான் தம்பு. அவனுக்கு சம்பாவை பார்க்க வேண்டும்.

‘‘சம்பா சௌக்கியமா மாமா?’’

‘‘டேய்! மாமா இல்லைடா அவர். சரி அண்ணா வரேன். அதென்னதான் சமாசாரம்னு புரியறா மாதிரி சொல்லும். என்னவோ பேசிக்கிறா… அம்மணக்குண்டி பொம்மையெல்லாம் தெரியறதாம்!’’

‘‘சேச்சே… அதெல்லாம் இல்லை!’’

‘‘பின்ன என்னதான் வெச்சிருக்கீர்?’’

‘‘எதிர்காலத்தில இண்டியா வுக்கு டெலிவிஷன் வரத்�

��ான் போறது. இப்பவே டெல்லில பரீட்சார்த்தமா ஆரம்பிச்சிருக்கா. அது நாடு முழுக்கப் பரவினதும் டி.வி. ரிப்பேர் செய்ய நெறைய பேர் தேவைப்படுவா. அதை எதிர் கொள்ள நம் இளைஞர்களைத் தயார் பண்ணப் போறேன். இப்பவே சேந்தா சலுகைல கத்துத் தருவேன்.’’

‘‘எத்தனை?’’ என்றான் ரங்கு.

‘‘அவாவா வசதிக்கு ஏத்தாப்பல.’’

‘‘இதா&ன வேணாங்கறது. சில்றை எத்தனை… கரெக்டா சொல்லுமேன்.’’

‘‘ஏழையா இருந்தா இலவசமா கூட சொல்லித் தருவேன். முதல் பாடம் ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் டெலிவிஷன், எல்லாருக்கும் இலவசம்!’’

‘‘பொம்மை தெரியுமா?’’

‘‘கட்டாயம்.’’

ரங்கு என்னைப் பார்த்தான். ‘‘நான்கூட சேரலாம் போலி ருக்கே. தம்பு சேர்றியா?’’

‘‘ஒரு நாள் போய்த்தான் பார்க்கணும்டா!’’ என்றான். ‘‘உன்னைக் கேட்டா டி.வி. கிடையாதுங்கறே?’’

எம்.ஐ.டி>யில் மூன்றாம் வருஷத்தில் எனக்கு பாடத்தில் டி.வி. உண்டு. அது வி.எச்.எஃப். அலைவரிசையைப் பயன்படுத்துவதும் லைன்ஆஃப் சைட் பற்றியும் படித்திருக்கிறேன். அதை ரங்குவுக்கு விவரிக்க முற்பட்டேன்.

‘‘எல்லாம் சரி. நீ நிஜ டி.வி. பார்த்திருக்கியா?’’

நிஜ டி.வி-யை ஒரு தடவைதான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கண்காட்சியின்போது பிலிப்ஸ்காரர்கள் கிண்டி இன்ஜினீயரிங் காலேஜில் ஒரு க்ளோஸ் சர்க்யூட் டி.வி. வைத்திருந்தார்கள். ஒரு ரூமில் காமிரா, மறு ரூமில் ரிசீவர் வைத்திருந் தார்கள். வந்திருந்த பெண்களையெல் லாம் காட்டினார்கள். கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரம் காத்திருந்ததால் திடுக்கிட்ட முகங்கள் தெரிந்தன.

ரங்குவுடன் தெற்கு உத்தர வீதிக்கு ஒரு நாள் சாயங்காலம் போயிருந்தேன். வாசலில் தெற்குச் சித்திரை வீதியுடன் பென்சில் மாட்ச் ஓடிக் கொண்டிருந் தது. நாங்கள் போனபோது பால்காரன் வந்து மடியில் தண்ணியடித்து பால் கறப்பதற்காக உருவிக் கொண்டிருந் தான். இடைவேளை விட்டிருந்தார்கள்.


அண்ணாசாமி, ‘‘வாங்க வாங்க… சம்பா காபி போடு!’’ என்று வரவேற் றார். உத்தர வீதிக்கு சாதாரணமாக நாங்கள் அதிகம் போகமாட்டோம். அவை எல்லாம் எங்களுக்கு அரைவீதிகள். ஒரு பக்கம்தான் வீடு. எதிர்ப்பக்கம் கோயிலின் மதில். முள்ளுச் செடியாக இருக்கும். எத்தனைதான் சொன்னாலும் யாராவது ஒருவர் அல்பசங்க்யைக்கு ஒதுங்கிவிடுவார்கள். மேலும் அந்த நாட்களில் மதில் சிதில நிலையில் இருந்ததால், தலைமேல் விழுந்துவிடும் பயமும் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டுக்கு ஒரு சாரி இல்லாததால் ஏகாந்தமான இடம்.



‘‘மாமா மண்டி போட்டுண்டு க்ளான்ஸ் பண்றப்ப மார்ல பட்டா எல்.பி. கொடுக்கலாமா மாமா?’’ என்று என்னை ஒரு சிறுவன் வந்து கேட்டான்.

எனக்கு உட&ன சொல்லத் தெரிய வில்லை. அண்ணா, ‘‘வாங்க வாங்க’’ என்று வரவேற்று, சலுகையாக பனியன் போட்டுக் கொண்டார். உள்ளே சென்றோம்.

‘‘ஈயம் பூசறீங்களா என்ன?’’

‘‘இல்லை சால்டிரிங்’’ என்றார்.

ஒரு ரேடியோ கவிழ்த்துப் பிரிக்கப்பட்டு, உள்ளே கசகச வென்று பார்ட்டுகளுடன் கிடந்தது. அதன் ஐ.எஃப். டிரான்ஸ்ஃபார்மரை ஒரு குட்டிப் பையன் பலகை மேல் நின்று சீண்டிக் கொண்டிருந் தான்.


என்னவோ சத்தங்கள் கேட்டன.


இந்த ஓரத்தில் நிர்வாணமாக ஒரு ஸ்பீக்கர் வைத்து, ரேடியோவின் பல பாகங்கள் பரவலாக இருக்க… விந்தையாக அதில் கரகரப்ரியாவில் ஒரு மாமி ‘பக்கல நிலபடி’ பாடிக் கொண்டிருந்தாள். ‘ஆர்.எஃப். ஆம்ப்ளிஃபையர்’ வெச்சா எல்லா ஸ்டேஷனும் கேக்கும்!’’ என்றார் அண்ணா.


‘‘எங்கய்யா உம் டெலி விஷன்?’’

ஜமக்காளத்தால் மூடியிருந்த ஒரு வஸ்துவைக் காட்டினார். ‘‘அதுக்குள்ள இருக்கு. பசங்க கிரிக்கெட் ஆடிண்டிருக்கான்… முடிக்கட்டும். பந்து அடிச்சா பிக்சர் டியூபு உடைஞ்சுடும்!’’


‘‘அதுல பொம்மை தெரிய�

��மா?’’ என்றான் ரங்கு.

‘‘ஆமா.’’

‘‘என்ன புருடா விடறீர்?’’ என்று என்னைப் பார்த்தான். ‘‘ஏய் நீ பொம்மை வராதுன்னுதா&ன சொல்றே?’’


‘‘ஆமா…’’ என்றேன்.

‘‘டி.வி. ஸ்டேஷ&ன இல்லாம எப்டி ஓய் பொம்மை தெரியும்? இப்ப ரேடியோவுக்கு, ரேடியோ ஸ்டேஷன் வேணும். டி.வி-க்கு டி.வி. ஸ்டேஷன் வேணுமா, இல்லையா… நீ என்னடா சொல்றே?’’


‘‘நிச்சயம் வேணும். நான் படிச்சபடி நிச்சயம் வேணும்!’’ என்றேன்.


அண்ணா என்னைப் புன்னகையுடன் பார்த்தார். ‘‘அவ்வளவுதான் நீ படிச்சது. நீங்கள்ளாம் ஏட்டுச்சுரைக் காய். டெர்மன் போட்டிருக் கறதை அப்படியே நெட்ரு. நான் பிராக்டிக்கல். இந்த ரேடியோவைப் பார்த்த இல்லை… இது முழுக்க நா&ன அசெம்பிள் பண்ணது. டிரான்ஸ்ஃபார்மர் நா&ன சுத்தினது. டிராக்கிங், அலைன்மெண்ட், ட்யூனிங் எல்லாம் நான் பண்ணது. உன்னால முடியுமா சொல்லு! எங்கிட்ட ஹாம் லைசென்ஸ் இருக்கு.’’


நான் பிடிவாதமாக, ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.


‘‘அப்டின்னு நினைச்சிண்டிருக்கே. நீ கத்துக்க வேண்டியது நிறைய இருக்குப்பா.’’


ரங்கு, ‘‘ஓய் அவன் டி.வி. எல்லாம் படிச்சவன். எதுக்கு ஊரை ஏமாத்திண்டு, வாண்டுப் பசங்களுக்கெல்லாம் டி.வி. சொல்லித் தரேன்னு, ஒரொரு கிளாஸ§க்கும் அஞ்சு ரூபா வாங்கறிராமே?’’


‘‘ரங்கு, நான் கொடுக்க வசதியுள்ள வாகிட்டதான் வாங்கறேன். என் கரிகுலம் பாரு முதல்ல. டி.வி. ப்ரின்சிப் பிள். அப்புறம் பிராக்டிக்கல். சால்டரிங், பென்ச் வைஸ், கார்ப்பெண்டரி அப்புறம் காயில் சுத்தறது. பார்க் ரேடியோ, பஞ்சாயத்து ரேடியோவெல் லாம் ரிப்பேருக்கு இங்கதான் வரது.’’



நான் பிடிவாதமாக ‘‘டி.வி. ஸ்டேஷன் இல்லாம டி.வி. தெரியாது!’’ என்றேன்.


‘‘முதல்ல அது என்ன பெட்டி… காட்டும். பார்த்தா நெல்லு கொட்டற பீப்பா மாதிரி இருக்கு.’’


அண்ணாசாமி மிகுந்த கோபத்துடன் ‘‘அரைகுறையா படிச்சவா, சந்தேகப் படறவா, கேலி பண்றவாளுக்கெல்லாம் செட்டை காட்டமாட்டேன். ஒஸ்தி செட்டு இது. ஆர்.ஸி.ஏ. தெரியுமா?’’


‘‘காட்றதுக்கு எதும் இல்லைன்னு அர்த்தம்!’’


‘‘என்னவேணா நினைச்சுக்கோ.’’


சம்பா எல்லோருக்கும் வெள்ளி தம்ளரில் காபி கொண்டுவந்து வைத்தாள்.


தம்பு, ‘‘என்ன சம்பா சௌக்யமா?’’ என்று வாத்சல்யமாக விசாரித்தான். ‘‘பழசெல்லாம் ஞாபகமிருக்கா?’’ அண்ணா அதை ரசிக்கவில்லை.


‘‘சம்பா நீ உள்ளபோ!’’ என்றார்.


சம்பா ஏறக்குறைய அவர் மகள் போல இருந்தாள்.


நாங்கள் வெளிவந்தபோது அந்த எல்.பி.டபிள்யூ. தீர்மானத்தில் மாட்ச் கலைக்கப்பட்டுவிட்டது.


தம்பு ஆத்து ஆத்துப் போனான். ‘‘இந்த சம்பாவுக்கு நான் கொடுத்த லெட்டர் எல்லாம்… அவ போட்ட பதில் எல்லாம் காட்டினா ரசாபாசமாய்டும். போனாப் போறதுன்னு விட்டுக் கொடுத்தேன்’’ என்றான்.


‘‘சும்மார்றா! பழசெல்லாம் கிளறாதே.’’


ஒரு காலத்தில் தம்புதான் சம்பாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக நிறையப் போக்குவரத்தெல்லாம் இருந்தது. அவளுக்கோ இவனுக்கோ செவ்வாய் தோஷம் என்று கல்யாணம் நின்றுவிட்டதாம். மேலும் தம்பு அவ்வளவு வசதி யுள்ளவன் இல்லை. ஒரு வருஷம் சன்யாசியாகப் போகிறதாக யோசித்துவிட்டு ஸ்ரீனிவாச நகரில் ஜெயலக்ஷ¢மி என்ற அடக்கமான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டான். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். இருந்திருந்தால் என்னைவிட ரெண்டு வயதுதான் மூத்தவன்.


‘‘சில பேருக்கு அதிர்ஷ்டம்டா!’’ என்றான் தம்பு பொதுப்படையாக. டி.வி. சர்ச்சை அத்துடன் ஓயவில்லை. அண்ணாசாமி கடைக்கு வரும்போதெல்லாம் தம்பு அவரைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தான்.


‘‘என்ன அண்ணா… டி.வி. நன்னாத் தெரியறதா? அமெரிக்காகாரன் கப்பல் கார்ல போறதெல்லாம் தெரியறதாமே!’’


அண்ணாசாமி, ‘‘நம்பாத�
��ாளுக்கு ஒண்ணும் தெரியாது. பகவான் மாதிரி அது. என்ன சொன்னாலும் நம்ப வைக்க முடியாது!’’ என்றார்.


‘‘மாடிபூரா ஏரியல் போட்டிருக் கீராமே… துணி உலத்தவா?’’


‘‘ஆமா யாகி அர்ரே. உங்களுக் கெல்லாம் சொன்னா புரியாது!’’ என்று டெக்னாலஜியை முகத்தில் வீசினார்.


அவர்போனதும், ‘‘யாகி அர்ரேன்னா என்னடா? என்ன புருடா விடறான்பாரு மனுஷன்!’’


‘‘இல்லை ரங்கு. அந்த மாதிரி ஒரு அர்ரே இருக்கு. சிக்னல் வீக்கா இருந்தா அதை அதும் பக்கம் திருப்பினா வாங்கிக்கும் > ஏரியல் மாதிரி.’’


‘‘அப்ப அவர் சொன்ன மாதிரி டி.வி. தெரியும்ங்கறே?’’


‘‘சான்ஸே இல்லை! சிக்னல் இருந்தாத்தா&ன?’’


‘‘அமெரிக்காகாரன் அனுப்பறது?’’


‘‘அதெல்லாம் இவ்வளவு தூரம் கடல் தாண்டி வராது ரங்கு’’ என்றேன்.


ஒரு நாள் ராத்திரி பத்தரைக்கு ரங்குகடையில் மூணுபேர் அலமாரிக்குப் பின்னால் ஜிஞ்சர் அடித்துக் கொண்டிருந்தபோது கடைக் கதவை மூடும் சமயம் அண்ணாசாமி சைக்கிளில் வந்து இறங்கி, ‘‘வாங்கடா எல்லாரும்!’’ என்றார்.


‘‘என்ன ஓய் பதற்றமாயிருக்கீர்? ஒரு ஜி.பி. அடிச்சுட்டுப் போமேன்’’ என்றான் தம்பு.


‘‘எல்லாரும் டி.வி. தெரியாது தெரியாதுன்னு பரிகாசம் பண்ணிங் களே… உட&ன வாங்க எங்காத்துக்கு.’’


‘‘என்ன தெரியறதா?’’


‘‘அச்சுக் கொட்டினாப்பல தெரியாது. ஆனா, தெரியறது!’’


‘‘வாடா இன்ஜினீயர்!’’ என்று என்னையும் விளித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘‘திஸ் இஸ் நாட் பாஸிபிள்’’ என்றேன். அவர் வீட்டுக்குப் போனோம். மாடியில் எடுத்துக்கட்டி ஜன்னல் வழியாக சம்பா டார்ச்லைட்டை வைத்துக் கொண்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தாள் மாடிபூரா பரவியிருந்த அந்த ஏரியலை இவர் சொல்லச் சொல்ல மொத்தமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள்.


இங்கே கீழே கூடத்தில் ஒரு கறுப்பு > வெள்ளை டி.வி. இருந்தது அதில் மணல் ஓடிக் கொண்டிருந்தது.


‘‘சம்பா டியர்… திருப்பு திருப்பு!’’ என்றார்.


அவள் ‘‘தெரியறதா… தெரியறதா?’’ என்று கேட்டுக்கொண்டே மாடியில் ஏரியலைத் திருப்பினாள். ஒரு கணத்தின் பிரிவில் அந்தத் திரையில் ஒரு பிம்பம் தெரிந்தது. ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். என்ன பாஷை தெரியவில்லை.


‘‘நிறுத்து… நிறுத்து! அங்கதான் அங்கயேதான்’’ என்று இங்கிருந்து சத்தம் போட்டார்.


‘‘ரங்கு! இப்ப என்ன சொல்றே?’’


‘‘பஜ்னுதான் இருக்கு… ஆனா, மூஞ்சி தெரியறது.’’


‘‘டி.வி>யே வ்தெரியாதுன்னிங்களே… உங்க எக்ஸ்பர்ட் என்ன சொல்றார் இப்ப?’’ என்று என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.

நான், ‘‘இப்போதைக்கு ஒண்ணும் சொல்றதுக்கில்லை எங்க புரொபசரைத்தான் கேக்கணும்’’ என்றேன்.

‘‘எதையும் இப்படி அலட்சியமா பேசப்படாது. இன்னம் அர்ரே எலிமெண்ட்ஸ் போட்டா நன்னாவே தெரியும். அதும் ராத்திரி ஆக ஆக… போகப் போக…’’


மேலேயிருந்து சம்பா, ‘‘போருமா… இன்னும் திருப்பணுமா?’’ என்றாள்.


‘‘சம்பா, போதும் கீழ வா! எல்லாருக்கும் பயத்தஞ்கஞ்சி கொடு’’ என்று இவர் சொல்ல, மேலேயிருந்து தொபுக்கடீர் சப்தமும் ஐயோ சத்தமும் கேட்டது.


சம்பா எடுத்துக்கட்டிலிருந்து சுமார் பதினைந்து அடி விழுந்துவிட்டாள்.

அவளை கைத்தாங்கலாக நொண்டிக்கொண்டே அழைத்து வந்தோம். ‘‘பார்த்து நடக்கக்கூடாதோ?’’ என்றார். அவள் கால் சிவப்பாக இருந் தது. செமையாக வீங்கியிருந்தது. நிறைய வலித்திருக்கவேண்டும். தம்பு கண்ணீர் விட்டான்.


‘‘என்ன ஓய்… எங்க ஊர் பொண்ண மாடியெல்லாம் ஏறவிட்டு பாடாப் படுத்தறீர். கொடுமைப் படுத்தறீர்!’’

‘‘உனக்கு என்னடா ஆச்சு?’’ என்றார்.

‘‘என்ன ‘டா’வா? நாக்கை அடக்கிப் பேசும். எல்லா வண்டவாளத்தையும் வெளிலவிட்டா நாறிப்போய்டும்.’’


‘‘என்ன வண்டவாளம்…

அவ என் பெண்டாட்டி. அவளை நான் என்ன வேணா செய்யச் சொல்வன். அதைக் கேக்க நீ யாரு?’’


சம்பா, ‘‘போருமே… போருமே…’’ என்றாள்.

‘‘நான் யார்றா? ரங்கு… சொல்றா நான் யாருன்னு!’’


‘‘தம்பு நீ வாடா! அப்றம் பேசலாம்.’’


‘‘இவர் கேக்கறதைப் பாரு! நான் யாரா…’’ தம்பு, ரங்கு கடையில் ஜிஞ்சர்பரிஸ் போட்டிருந்தான். சுருதி ஏறியிருந்தான். நாக்கு தொளதொளத்து விட்டது.


‘‘நான் யாரு… சொல்றன். இதே சம்பா, இதேசம்பா… எனக்கு மொத்தம் எத்தனை லெட்டர் எழுதிருக்கா தெரியுமா? காட்டட்டுமா… நான் எத்தனை எழுதிருக்கேன் தெரியுமா?’’


அந்தக் கணத்தில் காலம் நின்று போகப் போகிறது என்றுதான் நான் எதிர்பார்த்தேன். இல்லை!


‘‘எல்லா பைத்தியக்கார லெட்டரை யும் சம்பா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டா… காட்டிட்டா… போடா!’’ என்றார்.


கடைசி செமஸ்டருக்கு எம்.ஐ.டி>க்கு சென்னைக்கு திரும்ப வந்தபோது பேராசிரியர் சோமயாஜுலுவை சந்தேகம் கேட்டேன். ஸ்ரீரங்கத்தில் அன்றிரவு டி.வி. தெரிந்தது எப்படி என்று கேட்டேன்.


அவர், ‘‘அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. டக்ட் (க்ஷயுஷபீ) ப்ராபகேஷன் என்று சில வேளை கடலின் இன்வர்ஷன் லேயர் இருக்கும்போது வேவ்கைடு மாதிரி ஃபார்ம் ஆகும் வி.எச்.எஃப். சிக்னல்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் கூட கடந்து வரும். அனாமலஸ் ப்ராப கேஷன் என்பார்கள். நீ பார்த்தது தெற்காசிய நாடுகளில் எதாவது ஒரு டி.வி>யாக இருக்கலாம்’’ என்றார்.


ரங்கு இப்போதும் அதை ரங்கநாதன் கிருபை என்றுதான் சொல்கிறான்.


நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர் மை பதிப்பகம்





http://static.flickr.com/46/135192726_12a198aef5_o.jpg

அவிட்டம் ஸ்டார்னு போடாம அயிட்டம் ஸ்டார்னு ஏன்யா பிரிண்ட் பண்ணீங்க?

என்ன எழவு கம்ப்யூட்டர்'டா இது.... ஃபேஸ்புக் வராதா?????
1.திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை : தீக்குளிக்க தயார்: ராமதாஸ்#ஒரே காமெடியை எத்தனை தடவைண்ணே ரிப்பீட்டுவீங்க?

--------------------------

2. விபத்தில்லா மதுரை; கலெக்டர் விருப்பம்# அண்ணன் அழகிரியை அகற்றிட்டா ஆபத்தில்லா மதுரை யாகவும் ஆகிடும்.நோட் இட்

------------------------

3. அதிமுக.அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்ணை மூடிக்கொண்டு படித்து பாராட்டலாம் - கருணாநிதி #முரசொலியை நாங்க பாராட்ற மாதிரியா தலைவரே?

-----------------------------

4. பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல A.R முருகதாஸ் உருக்கம்!! # எங்களுக்கெல்லாம் ஆறறிவுதான் சார்,நீங்க சொல்றதை புரிஞ்சுக்க ஏழாவது அறிவு வேணுமோ?

----------------------

5. மேடம்,உங்க நட்சத்திரம் அவிட்டம்,அதை ஏன் மறைக்கறீங்க?

அவிட்டம் ஸ்டார்னு போடாம அயிட்டம் ஸ்டார்னு போட்டுட்டா?

---------------------------


6. உன் காதலிக்கு டைலம்மா மைண்ட்னு எப்படி சொல்றே?

என்னை நிஜமா லவ்வறியா?ன்னு கேட்டேன், டாஸ் போட்டு பார்த்து சொல்றேன்கறா!

---------------------------

7. மொக்கை ஃபிகர்ட்ட கூட ஜாக்கிரதையா இருக்கனுமா? ஏன்?

ஏமாந்தா மொட்டை போட்டிருவாங்க

-----------------------------------

8. தலைவர் எதுக்காக கிளிண்டனை சந்திச்சு ஃபோட்டோ எடுத்துக்கிட்டாரு?

ஜெ மட்டும் ஹிலாரி கிளிண்டனை சந்திச்சு ஃபோட்டோ எடுத்துக்கலையா?தானிக்குதீனி.

----------------------------

9. டெய்லி லவ்வர் கூட பீச்சுக்கு போறியே? உன்னை சொக்குப்பொடி போட்டு மயக்கிட்டாளா?

அட நீ வேற  ,கிட்டே போனாலே மிளகாய்ப்பொடி வீசறா!

----------------------------

10. டியர், நான் ஈரோட்ல இருந்தப்ப என்னை சக்க ஃபிகர்னீங்க, இப்போ சென்னை வந்ததும் மொக்கை ஃபிகர்ங்கறீங்களே?

ஆலை இல்லாத ஊர்ல இலுப்பை பூ தானே சர்க்கரை

---------------------------




11. யாருடையாவது உள்பாவாடை காணாமல் போன கூட கேஸ் போடுவார்கள் போல-கே.என்.நேரு பேச்சு #  நீங்க கே.என்.நேருவா? கேன நேருவா?

-----------------------------

12.  கோவையின் புதிய பெயர் - க்ரைம் சிட்டி  # திமுக  செயற்குழு கூட்டம்முடிந்ததும் கழகக்கண்மணீகள் கிளம்பி விட்டார்கள்,இது அம்மையாரின் சதி - கலைஞர்

---------------

13. திட்டும்போது சரமாரியாக பதிவு போடுபவர்கள் பாராட்ட நினைக்கும்போது மட்டும் ரேஷன் கடை ஊழியர் போல் குறைச்சலாக நடந்து கொள்வது ஏன்?

------------------



14. உனக்கு லேப்டாப் வேணுமா?

நோ.

சைக்கிள்?

நோ.


அப்போ என்ன தான் வேணும்?

படிக்க ஏதாவது ஒரு புக்கை கொடுத்து தொலைங்க. #சமச்சீர் கல்வி சங்கடங்கள்

------------------


15. தினமும் ஒரு முறையாவது உன்னுடன்  நீ பேசிப்பார்,இல்லையேல் உலகின் மிகச்சிறந்த மனிதனுடனான சந்திப்பை இழந்தவன் ஆவாய்

--------------------------------




16. வெற்றிக்குத்துணையாய் இருப்பவன் நண்பன், வெற்றிக்கு காரணமாய் இருப்பவன் எதிரி,  வெற்றிக்கு உந்து சக்தியாக இருப்பவள் காதலி

------------------------
17. யாராலும் திருடிப்படித்து விட முடியாத ரகசிய  புத்தகம் தான் நாம் காணும் கனவு

-------------------------------

18. வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூ போல் மென்மையானது, தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது

-------------------------
19. தோல்வியிலிருந்து நாம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி

-------------------------

20. மரம் வளர்ப்போம் நன்று, விதை விதைப்போம் இன்று, வீட்டுக்கு வீடு ஒன்று, ஒன்று கூடி நின்று


--------------------------






21. ஸ்கூல்ல ஏன் இன்னும் புக் தர்லை? 

அதான் செப்டம்பர் 15 ல ஆடு மாடு எல்லாம் தரப்போறாங்களே? அப்புறம் எதுக்கு புக்? 

---------------------------

 22. உன்னிடம் நான் எந்த மாற்றங்களையும்  காணவில்லை, எப்போதும் போல் நீ ஏமாற்றங்களைத்தான் பரிசாக அளிக்கிறாய். #லவ் ஃபீல் 


-------------------------

 23. நான் செலுத்தும் அன்பை நீ கொஞ்சம் கூட திருப்பித்தருவதே இல்லை.உன் மீது மொய்  மோசடி வழக்கு போடலாமா? என யோசித்து வருகிறேன் # காதல் புலம்பல்

---------------------

 24. உன்னைப்பொறுத்தவரை சந்தோஷத்துல பெரிய சந்தோசமே என்னை துக்கப்படுத்திப்பார்ப்பதுதானா?

----------------------

 25. வலது கண் துடித்தால் நல்லது நடக்குமாம்.உன்னைப்பார்க்க என் 2 கண்களும் துடிக்கின்றன. என்ன நடக்குமோ?


--------------------