Thursday, June 16, 2011

சினி ராக்ஸ் .. மச்சினி ராக்ஸ்...குற்றாலம் ராக்ஸ்..,





1. மங்காத்தா படத்தில் ஏன் காமெடி சீனே வைக்கலை?

ரம்மிக்குத்தான் ஜோக்கர் தேவை,மங்காத்தாவுக்கு எதுக்கு ஜோக்கர்? அதான் கிங்க் மேக்கரே இருக்காரே?


----------------------

2. அம்மா இப்படி சொல்லுவார்னு யாருமே எதிர்பார்க்கலை. 

ஏன்?

தன்னோட போயஸ் தோட்ட பங்களாவுலயே சட்டசபையை கூட்டிடலாமா?ன்னு கேட்டாராம்#இமேஜினேஷன்

------------------------

3. ஆத்துல குதிக்கப்போன உன் மனைவியை ஏன் தடுத்தே?அவ மேல அவ்வளவு பாசமா?

ச்சே ,ச்சே,ஊர் மக்கள் பாவம்,குடி தண்ணீர்க்கு சிரமப்படுவாங்களே?

----------------------------
4. டாக்டர்,சாப்பாட்டை வாய்ல வைக்க முடியலைன்னு சொன்னதுக்கு ஏன் எம்ப்டி காப்ஸ்யூல்ஸ் தர்றீங்க?

சாப்பாட்டை இதுக்குள்ள வெச்சு விழுங்கிடுங்க

-----------------------------

5. மாண்டலின் சீனிவாஸை மீரா ஜாஸ்மின் லவ் பண்றாராமே?

ஆமா அவரு மாண்டலின் வாசிக்கிற நேரத்தை விட மீரா ஜாஸ்மினை நேசிக்கற நேரம் தான் அதிகமாம்

----------------------------





6. வாழ்க்கையின் எல்லா கேள்விகளூக்கும் நாம் பதில் தெரிந்து கொள்ளும்போது கடவுள் கொஸ்டீன் பேப்பரை மாத்திடறார்#சுடுகாட்டில் சிந்தித்தது 

----------------------------

7.  அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சோனியா ட்ரை பண்றாராமே?

உளறாதே,சோனியா அகர்வாலுக்கு டி வி ல நடிக்கவே நேரம் சரியா இருக்கு,அரசியல்க்கு வர நோ டைம்

------------------------

8. நான் நிர்வாணமாக நடிப்பதாகசொல்லப்பட்டது வெறும் புரளி, நம்ப வேண்டாம்.

ஐஸ் மேடம்,நீங்க டிரஸ் போட்டுட்டு வர்றப்பவே எவன் உங்க நடிப்பை ரசிச்சான்?

------------------------

9. உனக்கு அதிர்ஷ்ட மச்சம் 6 இருக்குடா மாப்ளே.

. உனக்கெப்பிடிடா தெரியும்?

அதான் உன் மனைவி கூடப்பிறந்தவங்க 6 பேர்னியே?#மச்சினி ராக்ஸ்

------------------------

10. டியர்,என்னைபார்க்கறப்ப உன் மனசுக்கு செம கிக்கா இருக்கா?

ஆமா,ஆனா பார்த்த பிறகு உங்கண்ணன் குடுக்கறதும்செம கிக்கா தான் இருக்கு#ஹூம் செம உதை

-------------------------------



a


டிஸ்கி -மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 
                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. 



அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   [email protected]  
அவரது செல் எண் 9442201331.
ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!

நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம். 

Wednesday, June 15, 2011

ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே

 

1. ராம்தேவை சந்தித்து ஆசி பெற விரும்பும் பெண் பக்தர்கள் பாட வேண்டிய பாட்டு - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே@பூவெல்லாம் கேட்டுப்பார்

---------------------------

2. நான் உன் மீது கோபமாக இருக்கறப்ப ,திட்டறப்ப எப்படி சமாதானப்படுத்துவே?என்றாள் காதலி.உன்னைப்பேசவே விடமாட்டேன் என்றேன்#கிஸ்ஸாலஜி

---------------------------

3. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி

----------------------

4. வாழ்க்கையின் நோக்கம் ஜாலியாய் வாழ்வது,நாம் முகமூடிகளுடன் இருப்பதால் பலவற்றை இழக்க வேண்டி இருக்கிறது#அஜால்குஜால் அழகேஷ்


-----------------------
5. நம்மளை தூக்கிட்டுப்போகத்தான் 4 பேரு, நாம தூக்கிட்டுப்போக ஒரு ஃபிகரே போதும்.. எதுக்கு அளவுக்கதிகமா ஆசப்படனும்?#ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே


--------------------------

Train Flood
Fast way to stop a train...






6. என் மனசுக்குள் என்ன நினைக்கிறேன் என கண்டு பிடி பார்ப்போம் என்றாள் காதலி.என்னைத்தவிர எதை நினைக்கப்போகிறாய்?என்றேன் #லவ்வாலஜி

---------------------


7. நாம் குறும்பு செய்யும்போது கண்டிக்கும் அம்மாவை கிண்டல் செய்து அப்பா அம்மாவை மூக்குடைக்கும்போது அப்பா டக்கர் என்போமே அதுதான் அப்பாடக்கர்

---------------------

8. 5 ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ரூ 20,000 கோடி ஜெ தகவல்#ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுட்டீங்கன்னு அய்யா கடிதம் எழுதப்போறார்

--------------------------

9.. வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என்றால் உன்னை நேசி,வாழ்வே சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் உன்னை உண்மையாக நேசிப்பவர்களை நீயும் நேசி#SMS

-----------------------------

10. தவறு செய்யும் மனிதர்களைப்பார்த்து தவறாக பேசாதீர்கள் ,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை - விவேகானந்தர்

---------------------------------

the hottest lickers08 The Hottest Lickers

புது முகம் ப்ரனீதா பிரமாதமாக ஒத்துழைத்தார்-அருள்நிதி குதூகல் பேட்டி -காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj563eLIUkr1EVo9HOmzVS_D3AOOkF0whm5mqAF3YZKaOGjDpVryMCkRjsUk2aG0wOKxuszxN8BuE9LajPDCd30Xezyu5GCahheEgSxFa0bP3sf3mUcnkXyyrHS7KXIC1cRrWZVIQhSj3R0/s1600/Praneetha-Empillo-Empillado7.jpg 
அப்போ மழலைத் தமிழ்... இப்போ மழைத் தமிழ்!


''என் முதல் படம் 'வம்சம்’ல இணை இயக்குநராக இருந்தவர் சாப்ளின். அதில் நான் அறிமுக நடிகன்தானே...  'டென்ஷன்ல ஓவர் ஆக்ட் பண்றீங்க... இயல்பா இருங்க அருள்’னு மனசில் பட்டதைப் பட்டுனு சொல்லிருவார் சாப்ளின்.

 சி.பி _ஆக்டிங்கே வர்லை.. இதுல ஓவர் ஆக்ட்னு பொய் சொல்லி இருக்கு டைரக்டர் பய புள்ள..

அப்படி அவர் மனசில் இருந்த கதைதான், இந்த 'உதயன்’!'' -

 சி.பி - மனசுல இருந்த கதையா? டி வி டி ல சுட்ட கதையா?ன்னு படம் ரிலீஸ் ஆனாத்தானே தெரியும்?



இப்போது இயல் பாகச் சிரிக்கிறார் அருள்நிதி. 'வம்சம்’ மூலம் அறிமுகமான அருள்நிதியின் அடுத்த அட்டாக்... 'உதயன்!’

சி.பி - மொத அட்டாக் வம்சம் துவம்சம் ஆச்சு... மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


''ஜாலியான கமர்ஷியல் படம்தான். ஹீரோ - ஹீரோயினுக்குக் காதல் வரும். அந்தக் காதல் விஷயம் ஹீரோயினின் அப்பாவுக்குத் தெரிய வருது. அவருக்கு உதவியா ஒரு ரௌடி குரூப் உள்ளே வர்றாங்க... இப்படிப் போகும் கதை. சாதாரணமா இருக்கேன்னுதானே யோசிக்குறீங்க?

சி.பி - இல்ல சதா  ரணமா இருக்கே.. இவ்வளவு கேவலமா இருக்கேனு யோசிக்கறோம் அடிங்கோ.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே கதையை ஓட்டுவீங்க? 



உள்ளே, எக்கச்சக்க ட்விஸ்ட்ஸ் வெச்சிருக்கோம். உங்களால் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத அளவுக்கு திக்திக்னு திரைக்கதை இருக்கும்!''


சி.பி - படம் ரிலீஸ் ஆனதும் எத்தனை ட்வீட்ஸ் நக்கல் அடிக்க கிளம்பிடுதோ?

1. ''நல்லாப் பேசுறீங்க. இதேபோல் ஹீரோயின் ப்ரனீதாகிட்ட பேசியிருப்பீங்க. அவங்களைப்பத்திச் சொல்லுங்க?''

 சி.பி - என்னது? ஹீரோயின் பேரு பிரா நீ தா வா? கேவலமா இருக்கே?பேர் தான்யா அப்டி... ஆள் ம் ம் செமயா த்தான் இருக்கு பாப்பா.. ஹி ஹி 





'' 'பாவா’, கன்னட 'போக்கிரி’ பார்த்துட்டு ப்ரனீதாவை கமிட் பண்ணினோம்.


 சி.பி - கமிட் பண்ணுனீங்களா? எதுக்கு? ஓ.. நடிக்க வைக்க.. ம் ம் அப்ப சரி..

ஆரம்பத்தில் மழலைத் தமிழ் பேசினவங்க, இப்போ மழை மாதிரி தமிழ் பேசுறாங்க.

 சி.பி - அவங்க பேசறப்ப எச்சில் உங்க மேல தெறிக்குதா?... அடடா,.

அந்த அளவுக்கு வேகமா எல்லாத்தையும் கத்துக்கிறாங்க.

 சி.பி - கத்து தற்றது யாரு? எங்க அய்யா குடும்ப வாரிசாச்சே.. ஹி ஹி

பைக்கில் என் பின்னாடி உட்கார்ந்து வர்ற ஸீனில் ரோட்டைப் பார்க்காம, பைக் கண்ணாடியைப் பார்த்து ஹேர் ஸ்டைலைச் சரிபண்ணிட்டே இருப்பாங்க. அவ்ளோ பியூட்டி கான்ஸியஸ்!''

 சி.பி - அண்ணே.. கத்தி மாதிரி கலரிங்க் ஹேர் நீட்டிட்டு இருக்கே அது ஸ்டைலுங்க்ளாங்க்ணே.. ம் ம் ரைட்டு.. அவங்க அதை கரெக்ட் பண்றப்ப நீங்க பாப்பவை கரெக்ட் பண்ணீட்டீங்களாக்கும் ஹி ஹி 
 http://cinespot.net/gallery/d/435474-1/Praneetha+south+actress++photos+_17_.jpg

2. ''சாக்ஸபோன் இசைக் கலைஞர் கதரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த்தான் இசையமைப்பாளராமே?''


''தமிழுக்குத்தான் அவர் அறிமுகம். கன்னட ஏரியா வில் எக்கச்சக்க விருதுகள் வாங்கி இருக்கார். ஆறு பாடல்கள்... ஆஹான்னு போட்டுக் கொடுத்திருக்கார். ஒரு பாட்டை ஸ்ருதிஹாசன் பாடி இருக்காங்க. மணிகாந்த்துக்கு கர்னாடக இசைப் பயிற்சி பெரிய ப்ளஸ். ஒளிப்பதிவுக்கு விஜய்மில்டன் சார். கிராமத்தை யும் நகரத்தையும் அவ்வளவு வித்தியாசமா, அழகாப் பிரிச்சுப் பின்னி எடுத்துட்டார்!''

 சி.பி -படைப்பாளிகளைப்பற்றி சொல்லி இருக்கிங்க.. சோ நோ கமெண்ட்ஸ்.. ஹி ஹி
 

3. ''அடுத்ததா 'மௌன குரு’ன்னு அமைதியா முகம் காட்டுறீங்களே? என்ன விஷயம்?''

''தரணி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்த சாந்தகுமார், 'மௌன குரு’ கதையைச் சொன்னார். 'கதை சூப்பர். ஆனால், அந்த கருணாகரன் கேரக்டருக்கு நான் தாங்குவேனா?''னு கேட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு, என் மேல்எனக்கே நம்பிக்கை வர ஆரம்பிச்சிருக்கு!''


சி.பி - நீங்க தாங்குவீங்க்ணா.. 78 கிலோ வெயிட் உள்ள ஹீரோயினையே தங்கி இருக்கீங்க? அடச்சே தாங்கி இருக்கீங்களே?
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Praneetha-Photos/white-dress-praneetha-036.jpg

4. ''போன பேட்டியிலேயே '2011-ல் கல்யாணம்’னு சொன்னீங்க... என்ன ஆச்சு?''

''அட! நீங்க வேற சார். 'ஏன்டா இப்படி அவசரப்படுற? நீயே நேரடியாக் கேட்க வேண்டியதுதானே?''ன்னு வீட்ல பயங்கரக் கிண்டல். எங்க குடும்பத்துல கல்யாணத்துக்காக மிச்சம் இருக்கும் ஒரே மனுஷன் நான். லவ் மேரேஜ் ஐடியா எதுவும் இல்லை. அதனால், வீட்ல பார்த்துட்டே இருக்காங்க!''

சி.பி - எது? நீங்க நடிச்ச படத்தையா? பொண்ணையா?


5. ''அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தீர்களா?''


''அரசியல் பற்றி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ கிடையாது. 'மக்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்காங்க!’னு தாத்தாவே மக்களின் மன மாற்றத்தை ஏத்துக்கிட்டார். இதுக்கு மேல் நான் பேசினால், அதுக்குப் பேர்தான் அதிகப்பிரசங்கித்தனம்!''


சி.பி - நல்ல வேளை குஷ்பூ அக்கா மாதிரி ஏதாவது எக்கு தப்பா உளறுவீங்கன்னு பார்த்தோம்.. எஸ்கேப்

கடலை மன்னன் கந்தசாமி பரம்பரை ராக்ஸ் ஜோக்ஸ் பாக்ஸ்

Tumblr_lm52jdfu6i1qjkapko1_500_large
 1.கலைஞர் டிவி'க்கு வழங்கப்பட்ட ரூ.214 கோடி எங்கே? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி#நமக்கு நாமே திட்டப்படி பங்கு போட்டுக்கிட்டாங்களோ?

--------------------------


 2. கங்கையை தூய்மைபடுத்த உலகவங்கி கடனுதவி #உலகம் பூரா இருக்கற பாவிகள் வந்துதானே அசுத்தம் பண்ணாங்க?லோன்ல கன்செஷன் உண்டா?

------------------------

3. சிண்டு முடியும் பத்திரிகைகள்': கருணாநிதி பாய்ச்சல்#தலைவரே,இதை மட்டும் எங்களால நம்ப முடியாது,நீங்க விக் வெச்சாக்கூட

---------------


4. ஒருவழியாக நாளை பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் முழிப்பு#ஆஹா,ஓப்பனிங்கே அபாரம் என மாணவர்கள் களிப்பு!!


-------------------------

5. லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' -அப்துல் கலாம்#இளைஞர் அணிச்செயலாளர் போஸ்ட் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைக்குமா?கலைஞர் கேள்வி@இமேஜினேஷன்

-----------------------------------





6. என் கனவில் வந்து இனி சில்மிஷம் பண்ணாதே என்று மிரட்டினாள் காதலி,அப்போ நேரிலாவது அனுமதித்துத்தொலை என்றேன்#ஐடியாலஜி

-----------------------------

7. ஃபிகரு லட்சுமி கடாட்சமா இருந்தா  அது ஹைக்ளாஸ் ஃபிகர் என்க,விஜயலட்சுமி கடாட்சமா இருந்தா அது லோ க்ளாஸ் ஃபிகர் என கொள்க#சீமான் மன்னிச்சூ

------------------------

8. சின்ன விஷயத்துக்குக்கூட என்னுடன் கோபித்துக்கொள்ளமாட்டாயா? என்றாள் காதலி,கோபித்துக்கொள்வது சின்ன விஷயம் அல்லவே என்றேன்#லவ்வாலஜி

-------------------------------

9. சின்ன வயசுல பிடித்தமான நொறுக்குத்தீனி பொரி கடலையா? .கடலை போடறதுல மன்னனா இருக்கியே என்றாள் காதலி#கடலை மன்னன் கந்தசாமி பரம்பரை ராக்ஸ்

--------------------------------

10.தாவணியை ஆஃப்சாரி என்று அழைக்கும் ஃபிகர்கள் எதை குவாட்டர் சாரி என்று அழைப்பார்கள்?#டவுட்டாலஜி

Cameron Diaz
Thanks, now I can see better!


 

Tuesday, June 14, 2011

சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் , ஃபிகர்கள் மடம் -என்ன கொடுமை சார் இது?


http://groups.yahoo.com/group/babes_in_blue/ 
1.ஸ்டிக்கர்பொட்டை விட சாந்துப்பொட்டே உனக்கு அழகு,ஏன் எனில் ஸ்டிக்கர்பொட்டை நீயே வெச்சுக்குவே,சாந்துப்பொட்டை நான் உனக்கெ வெச்சு விடுவேன்#லவ்வாலஜி இன் டெக்கரேஷன்

---------------------------

2. சினிமாவில் ரீமேக் மாதிரி வெற்றி பெற்ற நம் காதலை மீண்டும் வேறொரு லொக்கேஷனில் இருந்து ஆரம்பித்துப்பார்த்தால் என்ன?#ரெஃபிரஸ் லவ்

--------------------------------


3. காதலி எப்போதும் காதலனுக்கு ரியல் எஸ்டேட் தான்,அவள் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்கும்,அவன் சொல்லும் கவிதைகள் மட்டும் ரீல் அப்டேட்ஸ்


---------------------------------

http://tamilkurinji.com/images_/Aaranya-Kaandam3_110524.jpg

4.காதலியால் நிராகரிக்கபட்ட காதலர்கள் முற்றிலும் நம்பிக்கை இழப்பதில்லை,ரீ எண்ட்ரி சான்ஸூக்காக காத்திருக்கிறார்கள்#லவ்வாலஜி

-----------------------------------


5. வீட்ல மாப்ளை பார்த்துட்டு இருக்காங்க அதனால... என நீ ஆரம்பிக்கும்போதே எலிமினேஷன் ரவுண்டில் நான் அபாயமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்

-----------------------------



6. ஏமாற்றிய காதலியை பழி வாங்க வேண்டும் என எந்த காதலனும் நினைப்பதில்லை, அப்படி நினைத்தால் அது காதல் இல்லை#லவ்வாலஜி

---------------------------

7. காதல் தோல்வியில் இருந்து மீள பெண் அதிக பட்சம் 6 மாதங்களே எடுத்துக்கொள்கிறாள்,ஆண் 6 வருடங்கள் ஆனாலும் காயத்துடன் காத்திருக்கிறான்

-------------------------

8. ரசத்தில் கறிவேப்பிலை போல் காதலியின் வாழ்வில் காதலன்.ரசத்தில் சீரகம் போல் காதலன் வாழ்வில் காதலி இரண்டற கலந்து விடுகிறாள்

------------------------

9.சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் என்பது போல் ஃபிகர்கள் மடம் என்று ஒன்றை கட்டி வைத்தால் செமயா இருக்குமே?ஏற்பாடு செய்யுமா புதிய அரசு?#எக்ஸ்பெக்டேஷன்

---------------------------
10. என்னைப்பற்றி கவிதை சொல்லுங்க என்றதுக்கு ஏன் என் கையைப்பிடிக்கறிங்க? என்றாள் காதலி.நீ தானே உன்னை “பற்றி” கவிதை சொல்ல சொன்னாய் என்றேன்#கில்மாலஜி


ஆ ராசாவுக்கு ஒரு நியாயம்,கனிமொழிக்கு ஒரு நியாயமா? ஓ பக்கங்கள் ஞாநி பாய்ச்சல்,தி மு க எரிச்சல்

http://snapjudge.files.wordpress.com/2010/12/karunanidhi-azhagiri_stalin_mk_kanimozhi.jpg?w=383&h=266 

ஓ பக்கங்கள்

திருந்துங்கள்!

ஞாநி

1. தி.மு.க.வினருக்கு 

கலைஞர் கருணாநிதி திருந்துவதாகவோ தம் தவறுகளை உணர்வதாகவோ தெரியவில்லை. தோல்விக்குப் பின் தமக்கு மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னவர், அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல், மறுபடியும் அறிக்கைகள், பேச்சுகள் என்று பழையபடியே தம் தவறுகளுக்கு சுண்ணாம்படிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்.

தி.மு.க.தான் படுதோல்வியடைந்து விட்டதே, கருணாநிதிதான் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டாரே, ஏன் தொடர்ந்து அவர்களைப் பற்றி இன்னமும் எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எழுத சில காரணங்கள் இருக்கின்றன. 

முதல் காரணம், ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா எடுக்கும் சில நடவடிக்கைகள் பற்றிய சர்ச்சைகள், விமர்சனங்கள், தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து தப்பு செய்துவிட்டார்கள் என்ற ஒரு கருத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஜெயலலிதாவின் தவறுகளை நிச்சயம் விமர்சிக்க வேண்டும். ஆனால் அவையெல்லாம், தி.மு.க ஆட்சியின் அராஜகங்களை, முறை கேடுகளை நியாயப்படுத்திவிட முடியாது. 

அவற்றுக்கான தண்டனை தேர்தல் தோல்வி மட்டுமல்ல; ஊழலும் முறைகேடும் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டாவது காரணம், தி.மு.க. என்ற கட்சி அடியோடு அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாகவேண்டுமென்பதும், அது திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களின் சிறந்த கூறுகளின் கலப்பாக அமைய வேண்டுமென்பதும் என் கனவுகளில் ஒன்று. ஆனால் அப்படி ஒன்று நிகழ்வதற்கான சமூகக் காரணங்கள் கனிவதற்கும் கனிந்து வரும் வரையிலும், தி.மு.க. என்ற கட்சி புதுப்பிக்கப்பட வேண்டும்.

தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பிரதானமான காரணம் கருணாநிதி தம் குடும்பங்களின் சுயநலத்தை முன்னிறுத்தி அதற்கேற்ப கட்சியை வடிவமைத்துக் கொண்டார். தம் குடும்பம் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தம்மை அண்டிப் பிழைக்கும் ஒரு பிரமுகரின் குடும்பம் பாளையக்காரராக ஆட்சி செய்யும் முறையை அவர்தான் வலுப்படுத்திப் பாதுகாத்தார். இதையெல்லாம் மறைப்பதற்கான முகமூடியாக தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைத் தம் முழுத்திறமையுடன் பயன்படுத்தி வந்தார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.


இனி தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு அது குறைந்தபட்சம் அண்ணா காலத்து தி.மு.கழகமாகவேனும் ஆகவேண்டுமானால், கருணாநிதி உருவாக்கிய குடும்ப அரசியல் கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது. டெலி ஃபோன் நிலையத்தையே டி.வி.க்காக பயன்படுத்தியது போன்ற கருணாநிதி குடும்பத்தினரின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து, ஒவ்வொருவராக சிறை நோக்கி நெடிய பயணம் தொடங்குகிறார்கள். அவரது பாளையக்காரக் குடும்பங்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. அடுத்து அவர்கள் மீதும் நிலப்பறி, மணற்கொள்ளை போன்ற பல குற்றங்களுக்காக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

http://1.bp.blogspot.com/-dgDQYX3mz14/TcQJHF7-JXI/AAAAAAAAB7U/pc1sDNjyCBo/s1600/ECART_1304613014.jpg
சுருக்கமாகச் சொல்வதானால், இன்று தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டுமானால் கருணாநிதியைக் கட்சியிலிருந்து விலகியிருக்கச் சொல்லக் கூடிய அளவு உட்கட்சி ஜனநாயகம் மறுபடியும் ஏற்பட்டால்தான் முடியும். ஆனால், அவரோ தொடர்ந்து தம் வார்த்தை விளையாட்டுகள், பேச்சுத்திறமை போன்றவற்றின் மூலம் எஞ்சியிருக்கக்கூடிய தொண்டர்களை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். அதற்கான அடையாளம்தான் திருவாரூர் நன்றியுரை. அதில் அவர் சொல்லிய ஒவ்வொரு கருத்தையும் மயக்கமின்றி கேள்வி கேட்டால் தான் உண்மையான திராவிட இயக்கத் தொண்டனால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியும்.


அந்த உரையில் கருணாநிதி சொல்கிறார்: “என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ, அல்லது வேறு காரணத்தாலோ, சிறையில் உள்ளார்.”

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “தலைவா, அப்படின்னா, மத்திய அரசுல ஏன் இன்னமும் தி.மு.க. ஆட்சியில இருக்குது? அரசு அலட்சியம்னா ஏன் எதிர்த்துப் பதவி விலகாம இருக்காங்க? வேற காரணம்ன்னா என்ன? நீராராடியாவோட கனி பேசின பேச்சுல அவுட் ஆன சமாச்சாரமா? ராசா, கனி,டெலிகாம் அதிகாரிங்க, கம்பெனி நிர்வாகிங்க அல்லாரும் உள்ள இருக்கறதுக்கு சுப்ரீம் கோர்ட்டோட கண்டிப்புதானே காரணம், தலைவா?”

அடுத்து, கருணாநிதி, கட்சியினரின் அனுதாப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்காகச் சொல்கிறார்: “திஹார் சிறையில் ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் கனிமொழி இருக்கிறார்.”
தி.மு.க தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: “அதே ஜெயில்ல தானே, ராசா மூணு மாசமா இருக்காரு? அவுரு வாடமாட்டாரா ? ராசாவுக்காக நீங்க இப்பிடி உருகலியே?

தவிர திஹார் சிறையைப் பத்தி நாங்களும் எல்லா பேப்பர்லயும் படிக்கறோம் தலைவா. ருச்சி சிங்குன்னு ஒரு பத்திரிகை நிருபர். அந்தம்மாவை உளவாளின்னு சொல்லி திஹார்ல போட்டாங்க. ஆறு வருஷம் கழிச்சு நிரபராதின்னு விடுதலை பண்ணிட்டாங்க. அவங்க திஹார் ஜெயிலப் பத்தி எழுதியிருக்காங்க, படிங்க.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj76G9CChu2JRxzuqQgNxNrhLqYQwaB0ZNPr8SSdiztgm2NSSGWfe4b8wbwHRhjHIVvD0g9XqUdNohS8GK3D6u2roc-3KXGD1RHZP2-0bDOZ5ZdIng3a57QZ0qyKJ97mVNt4rGq0BnPJJM/s1600/A_Raja.jpg
‘வி.ஐ.பி. கைதிகள் மணிக்கணக்கில் அதிகாரிகளின் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். மற்ற பெண் கைதிகள் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்பப்பட்ட பிறகும் இவர்கள் அங்கேயே பொழுதைப் போக்கலாம். வி.ஐ.பி. கைதிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் அறைக்குத் திரும்பலாம். திஹார் ஜெயில் ஒரு ரிசார்ட்டைப் போல வசதியானது. அதற்கு ஒரு விலை உண்டு, அவ்வளவே. நீதிமன்றத்துக்கு விசாரணைக்குச் செல்லும்போது பியூட்டி பார்லரிலிருந்து வருபவர்களைப் போல பெண் கைதிகளை பளபளவென்று பார்க்கமுடியும்.’

அதுமட்டுமில்ல, தலைவா. வீட்டு சாப்பாடு உண்டு. தவிர கேண்டீன்ல தினசரி 200 ரூபாய்க்கு இட்லி, வடை, தோசை, சாக்லெட் எல்லாம் வாங்கிக்கலாம். கனிமொழிக்கு டி.வி, ஃபேன், தவிர அவங்க கேட்டுக்கிட்டபடி அவங்களுக்கு மேற்கத்திய கழிப்பறை தனியா தடுப்பு ஸ்கிரீன், டவல் ஸ்டாண்டோட குடுத்துருக்காங்கன்னு பேப்பர்ல போட்டிருக்குது. ஜெயலலிதாவுக்கு நீங்க மூட்டைப்பூச்சியோட கம்பளி குடுத்தமாதிரி எதுவும் குடுக்கல.”


கனிமொழி செய்த குற்றமென்ன என்று கருணாநிதி பேசியிருக்கிறார்: “கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் தான் சொன்னேன். அவர் வேண்டாமென்றார். நான் வற்புறுத்திய காரணத்தால் சேர்ந்தார். வேதனையைப் பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதற்காக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.”

தி.மு.க. தொண்டன் கேட்கவேண்டிய கேள்வி: “தலைவா, நாங்கள்லாம் சொந்தக்காரங்கன்னு இப்ப ஷோக்கா சொல்றீங்க இல்ல? இதே நினைப்பு ஏன் கலைஞர் டி.வி.ல பங்கு குடுக்கறப்ப உங்களுக்குத் தோணலே? கனியை வற்புறுத்தினா மாதிரி எங்களையும் கேட்டிருக்கலாமில்ல? பங்கு குடுக்கறப்ப அவங்க ஞாபகம் மட்டும்தான் வருது. மாட்டிக்கிட்டு கஷ்டப்படறப்ப சப்போர்ட் சேர்க்க மட்டும்தான் எங்க ஞாபகம் வருமா உங்களுக்கு?”

இனி கலைஞர் கருணாநிதி என்ன முயற்சி செய்தாலும் வரலாற்றில் அவர் பங்களிப்பு ஏற்கெனவே குறிக்கப்பட்டு விட்டது. 1917ல் நீதிக் கட்சியாகத் தொடங்கிய திராவிட இயக்கத்தின் 94 ஆண்டு வரலாற்றில் கருணாநிதி ஓர் அடிக் குறிப்பாகவே எஞ்சுவார். சமூக இயக்கமான திராவிட இயக்கத்துக்கு வலுவான அரசியல் அதிகாரம் கிடைப்பதற்கு அண்ணா காரணமாக இருந்தார். தமது குடும்ப சுயநலத்துக்காக அந்த அரசியல் அதிகாரத்தைப் பணயம் வைத்தவர் கருணாநிதி.

அவரிடமிருந்து இயக்கத்தை மீட்கும் பணிதான் இனி நிகழ வேண்டிய தி.மு.க, திராவிட இயக்க வரலாறு. அந்த மீட்பை முன்னெடுத்துச் செல்ல தி.மு. க.வுக்கு இப்போதைக்கு இருக்கும் தலைவர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின்தான் என்பது வரலாற்றின் விசித்திரம். தலைவர்கள் திருந்தாவிட்டால் அவர்களைத் தூக்கி எறிபவர்களாகத் தொண்டர்கள் திருந்தினால்தான் வரலாறு மாறும்.
2. புதிய ஆட்சிக்கு:
ஒவ்வொரு ஆட்சியும் தனக்கு முந்தைய இன்னொரு கட்சி ஆட்சியின் திட்டங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றுவது என்பது தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் மாறாத அம்சம். மாற்றுவது புதிய ஆட்சியின் உரிமையாக இருக்கலாம். ஆனால் கூடவே அதற்கு ஒரு கடமையும் இருக்கிறது. ஏன் மாற்றுகிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லி, மக்களை ஏற்கச் செய்யவேண்டியதுதான் அந்தக் கடமை. ஸ்விட்சர்லாந்தில் இருப்பது போல முக்கிய திட்டங்களை, சட்டங்களைக் கொண்டு வரும்போது ரெஃபரண்டம் நடத்தும் முறையை ஜெயலலிதா பரிசீலிக்க வேண்டும்.


ஜெயலலிதா முதலமைச்சர் பதவி ஏற்றதும் தி.மு.க.வின் இலவச வீட்டு வசதித் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சமச்சீர் கல்வித் திட்டம், புதிய சட்டமன்ற, செயலகக் கட்டடம், மெட்ரோ ரயில் எல்லாம் கைவிடப்படும் என்பதும் சில வேறு பெயரில் செயலாக்கப்படும் என்பதும் எதிர்பார்த்ததுதான்.
சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழுவில் அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிஞர்கள் இருக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, கால வரையறை தேவை.

எப்படிப் பார்த்தாலும் அடுத்த கல்வியாண்டில் பொதுப் பாடத் திட்டம் நடைமுறையில் வரவேண்டும். சமச்சீர் கல்வியில் அது ஒரு சிறிய அம்சம்தான். கூடவே பொதுத் தேர்வு முறையும் சேர்த்துச் செயல்படுத்தப் படவேண்டும். ஒரே பாடத் திட்டத்துக்கு வெவ்வேறு விதங்களில் தேர்வு நடத்தக் கூடாது.


மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எல்லா பொதுமக்களுக்குமாக விரிவுபடுத்தப்படும் என்றும் தனியார் முதலீடு மருத்துவத்தில் அதிகரிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறது. அப்படியானால் அரசு மருத்துவமனைகளின் வேலை என்ன? தனியார் மருத்துவ சேவைக் கட்டணம், தனியார் கல்விக் கட்டணம் போலவே எல்லாராலும் செலவிட முடியாதது.

மெட்ரோ ரயில் திட்டமும் புதிய தலைமைச் செயலகமும் இன்னமும் முடிக்கப்படாதவை. மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் ஆய்வு அளவிலேயே இருப்பதால் அதைக் கைவிடுவதில் சிக்கல் இல்லை. தலைமைச் செயலகம் கட்டி முடிக்காமலே தி.மு.க அரசு திறப்பு விழா நடத்தியது. கட்டியதில் ஊழல் பற்றி விசாரிப்பதற்காக மீதி கட்டட வேலையைக் கைவிடுவது அபத்தமானது. விசாரணை முடியும்வரை கட்டடம் பயன்படாமலே வீணாகும்.

ஜெயலலிதா அரசு அறிவித்து வரும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு திட்டத்திலும் விளக்கமான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டோம். அதனால் நாம் விரும்பியதைச் செய்தால் கேட்பார் இல்லை என்ற பழைய மனோநிலை இனி உதவாது. அந்த மனநிலையிலிருந்து திருந்தாவிட்டால், மக்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பாடத்தை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதியிலிருந்து ஜெயலலிதா கற்கவேண்டும்.


3. மீடியாவுக்கு 
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாள் நடந்தது. நாடே கொந்தளிப்பது போன்ற ஒரு மாயையை அப்போது ஆங்கில டி.வி.சேனல்கள் உருவாக்கின. அந்த மாயையில் அடுத்து பத்திரிகைகளும் சிக்கின.
அடுத்தபடியாக யோகா வணிகர் பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் அதேபோன்ற ஒரு மாயையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை.
இரண்டுக்கும் நடுவில் மேதா பட்கர் எட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதை இதே ஆங்கில டி.வி. சேனல்களும் பத்திரிகைகளும் கண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஒரு வரி செய்தி சொல்லி விட்டுவிட்டன. காரணம் மேதா பட்கரின் உண்ணாவிரதம் மும்பையில் கோல்பார் பகுதியில் 24 ஆயிரம் குடிசைவாசிகளை அகற்றி நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட்காரர்களுக்குத் தருவதைக் கண்டிப்பதாகும்.


அதில் மேட்டுக்குடி மீடியாவுக்கு அக்கறையில்லை. ஆனால் மேதாவின் உண்ணா விரதம்தான் ஜெயித்தது. காரணம் மக்கள் அவரோடு திரளாக இருந்ததுதான். மகாராஷ்டிர அரசு மேதாவின் கோரிக்கைகளை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல மீடியாவும் பத்திரிகைகளும் கூட திருந்த வேண்டியிருக்கிறது. அசல் பிரச்னைகளை விட்டுவிட்டு போலியானவற்றுக்கு முக்கியத்துவம் தருவது மக்களுக்கு இப்போது புரிய ஆரம்பித்து விட்டது.
இந்த வார அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 1450 பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒரு சதவிகிதம் கல்லூரிகளில் மட்டுமே முறையான உள்கட்டமைப்பும் ஆய்வக வசதிகளும் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்திருக்கிறது.


\நன்றி - கல்கி,ஓ பக்கங்கள் ஞாநி

லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் ...கில்மா கேள்வி

A Bengal Tiger
tiger%252520in%252520water.jpg
1.இன்று ஏன் உன் முகம் முற்றியது போல் இருக்கு என்றாள் காதலி,அமாவாசை என்றால் பைத்தியம் முற்றும் என்பது உனக்கு தெரியாதா? என்றேன்#லவ்வாலஜி


--------------------------------

2. வாங்க போங்க என கூப்பிடாமல் பெயர் சொல்லிக்கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருமா? என கேட்டாள் காதலி,இல்லை காதல் வரும் என்றேன்#லவ்வாலஜி

-------------------------------

3. நமது படைப்பை வேறு யாரும் ரசிக்காத போது நாமே மீண்டும் மீண்டும் படித்து ரசிப்ப்பதால் அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வந்து விடுகிறது#பகடி

-----------------------

4.  கமர்ஷியல் பாதையில் வெற்றிப்பயணம் செல்கையில் சில படைப்புகள் தட்டுத்தடுமாறி ”காம”ர்ஷியல் ஆகி விடுவதை தவிர்க்க முடிவதில்லை#சமாளிஃபிகேஷன்

----------------------------

5. நேரடியான தாக்குதல்கள் முகத்தில் அறையும்போது அவர்கள் நேர்மையை பாராட்ட வாய் திறக்கும்போது கண்ணீர்த்துளிகள் உதட்டை மூடிவிடுகிறது


-------------------------------

6. முயற்சி என்பது விதைகள் போல்,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம்,இல்லாவிட்டால் மண்ணிற்கு உரம்#நம்பிக்கைSMS


----------------------

7. புதிதாக வேலைகு சேர்ந்த லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் பிரின்ஸ் 


,”ஏன்பா 2 மாசமா சம்பளம் வாங்கவேவர்லை?”

”அடங்கோ.. சம்பளமும் உண்டா?”

#கில்மாலஜி


----------------------

8. இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது உண்மையானால் நமது சோகம்,வருத்தம்,கேர்ள் ஃபிரண்ட் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?

-----------------------

9. ஹாஸ்பிடலில் இருக்கும் சிநேகிதியைப்போய் பார்க்கையில் ஆறுதல்வார்த்தை எதுவும்தேவை இல்லை.விழியோரத்தில் தேங்கி நிற்கும் கண்ணீர் மட்டும் போதும்

---------------------------------

10. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி

---------------------------------

Monday, June 13, 2011

ஆரண்ய காண்டம்-எம கண்டம் - சினிமா விமர்சனம்



படத்தோட ஓப்பனிங்க்லயே ஒரு கில்மா சீன்.60 வயசு தாத்தாவான ஜாக்கி செராஃப் 20 வயசு ஃபிகர் யாஅஸ்மின் பொன்னப்பாவை அஜால் குஜால்க்கு அழைக்கிறார்..(அழைக்கவில்லை ,வலுக்கட்டாயமாக இழுக்கிறார்- பெஞ்ச் ரசிகன்)ஆனா அவர்னால முடியல.. உடனே பளார்னு ஒரு அறை விடறாரு.. அதுக்கு இந்த ஃபிகர் சவுக்கால அடிச்ச மாதிரி ஒரு கேள்வி கேட்கும் பாருங்க.. ஹா ஹா செம .. அந்த கலக்கல் வசனம் எது என்பதை வசன பகுதியில் காண்க.. 

2 தாதாக்கள் குரூப்..ஏதோ ஒரு சரக்கை கடத்தறப்ப தகராறு.. அந்த சரக்கை கைப்பற்ற நடக்கும் போராட்டம் தான் கதை.. கதையோட ஒன் லைன்  ரொம்ப சாதாரணம் தான், ஆனா திரைக்கதை பின்னி பெடல் எடுக்குதே.. ஆனா ஒரு வார்னிங்க்,படம் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்.. 

இயக்குநர் புத்திசாலி என்பதை எப்படி நிரூபிக்கிறார்னா அடி தடி வெட்டு குத்து மட்டுமே நடக்க வாய்ப்பு இருக்கும் இந்த மாதிரி தாதா கதைல நைஸா ஒரு கள்ளக்காதலையும்,அதனால ஏற்படும் விளைவுகளையும், ஒரு பெண் எப்படி ஆணை இளிச்சவாயனாக்கி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்கறதை செமயான த்ரில்லிங்கோட காட்டினது தான்.. 

ஜாக்கிசெராஃபின் (ரங்கீலா ஹிந்திப்பட புகழ்) பாடி லேங்குவேஜ் ஓக்கே.. அவர் அடிக்கடி க்ளோசப்பில் ஈ காட்டுவது உவ்வே.. அதே போல் பல் துலக்கும் காட்சிகளில் கொடூரமான க்ளோசப் காட்சிகள்  ஓவர்

சப்பை எனும் கிட்டத்தட்ட திருநங்கை கேரக்டரில் கேடி ரவி கிருஷ்ணா.. அவரது குரலும் பாடி லேங்குவேஜும்\ செம, கள்ளக்காதலியாக வரும் யா அஸ்மின் மாநிறமான ஃபிகர் தான் என்றாலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது,, அப்பாவி போல் சப்பையிடம் குழைவதும், க்ளைமாக்ஸில் திடீர் வில்லி ஆவதும் செம நடிப்பு.. 

சம்பத்தின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறுகிறது.. சோமசுந்தரம்,கொடுக்காப்புளியின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.. 


செண்டம் அடித்த வசனங்கள்(வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.)


1. டீன் ஏஜ் கீப் - உங்களால முடியல..... ஏன் என்னை போட்டு அடிக்கறீங்க?

கிழடு - பளார்....


2. ஆண்ட்டிங்களை கவுக்கறது ரொம்ப ஈஸி.. அவங்க ரஜினி ரசிகையா? கமல் ரசிகையா?ன்னு கேள்.. கமல் ரசிகைன்னா  ஈஸியா கவுத்துடலாம்..

3.  மேரேஜ் ஆகிடுச்சான்னு ஆண்ட்டிகள்ட்ட பேச்சு குடு.. உன்னை அவளுக்கு பிடிச்சிருந்தா இன்னும் மேரேஜ் ஆகலைனு வாய் கூசாம பொய் சொல்வா..

4. இந்த மேட்டரை வெளில சொல்லிடாதே... 

ஓக்கே.. ஏன் கட்டை விரலை கட் பண்றீங்க?



வெளில சொன்ன பிறகு கட் பண்ணி பிரயோசஜனம் இல்லையே?

5.  என் மனைவி மேலே அழுதுட்டு இருக்கா.. இந்தா பணம், அவளுக்கு ஏதாவது வாங்கிக்குடுத்து அழுகையை நிறுத்து.. அவ முகத்தை பார்க்க சகிக்கலை..முகத்தைப்பார்த்தாலே மூடு வர மாட்டெங்குது.. ( முகத்தை பார்த்தா எங்காவது மூடு வருமா? #டவுட்டு)

6.  ஏண்டி.. உன் வீட்டுக்காரரு நல்ல மனுஷனா?


போடா லூஸ்.. அவர் பேத்தி வயசு ஆகுது எனக்கு. என்னைத் தூக்கிட்டு வந்து அழிச்சியாட்டம் பண்ணிட்டு இருக்காரு..

7. ஆண்ட்டிகளை பற்றி தப்பா பேசாதே..

அப்போ ஸ்பீக்கர் ஃபோன் போட்டு அவங்க கிட்டே பேசு பார்க்கலாம்..

8.  ஹலோ.. பிஸியா?

ஆமா..

அப்புறம் ஏன் ஃபோனை எடுத்தே? அந்த வேலையையே பார்த்துட்டு இருக்க வேண்டியதுதானே?


9. எங்கே போறீங்க எல்லாரும்?

பாண்டிச்சேரிக்கு சார்..

எங்கே ஊது பார்ப்போம்..?

சார்.. இப்போ தான் போறோம்..

10. மேடம்.. உங்களுக்கு கமல், ரஜினி யாரை பிடிக்கும்?

ம்.. கமல்னு சொன்னா என்னைப்பற்றி என்ன நினைப்பேன்னு தெரியும்.. எனக்குபிடிச்சவரு விஜய்காந்த் தான்.. அவர் தானே பாகிஸ்தான் தீவிரவாதிங்க கிட்டே இருந்து நம்ம நாட்டை காப்பாற்றினாரு?



http://www.celluloidtamil.com/wp-content/gallery/aaranya-kaandam-press-meet/aaranya-kaandam-press-meet12.jpg


11.  டேய்.. பயப்படாதே.. அப்பா நான் இருக்கேனில்லை..?

போப்பா.. நீ வேஸ்ட்..

நீயும் அப்படி சொல்லக்கூடாதுடா என் கண்ணு..


12. சாராயம் வாங்கிக்குடுத்தவன் சாமி மாதிரிடா....

13.  நீ மட்டும் உயிரோட இருந்திருந்தே.. உன்னை கொலை பண்ணி இருப்பேன்..

14.  நீ ஆம்பளையா இருந்தா அவனை போட்டுத்தள்ளு உனக்கு லாலிபாப் வாங்கித்தாரேன்..

15. இப்போ நான் மட்டும் ஓடலை.. என் சாவும் என் கூடவே வந்துட்டு இருக்கு..


16. நீ ஏன் எனக்கு சமோஷா வாங்கித்தந்தே?


ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்..


17. நான் வேணா ஹிந்தி சினிமா ஹீரோயின் ஆகிடறேன்.. நீ என் மேனேஜர் ஆகிடறியா?

வேணாம்..

ஏன்? பொறாமையா?

நோ.. போஸ்டர்ல உன் முகத்தைப்பார்த்தா அய்யா கண்டு பிடிச்சுடுவாரே?

18. டேய்.. மவனே.. ஒத்துகோடா.. எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலி..

19. அண்ணே.. நீங்க மனசுக்குள்ளே 2 பூ நினைச்சுக்குங்க.. அவை என்ன?னு நான் சொல்றேன்.. ம் ம் மல்லிகையும் ,ரோஜாவும் தானே?

இல்லை பிரபூ, குஷ்பூ

20. புழுவை மீன் தின்னுது, மீனை மனுஷன் தின்னுவான். இது தான் ரூட்டு

21. யோவ் போய்யா.. நீ கட்டுன பொண்டாடியை காப்பாத்த உனக்கு துப்பில்லை.. நீ எப்படி எங்கப்பாவை காப்பாத்துவே?

22. உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?



அப்படி இல்லை.. ஆனாலும் அவர் எங்கப்பா.. ( என்னா கலக்கல் வசனம்?)

23. என்னைப்பொறுத்தவரை என் தற்காலிக காதலன் சப்பையும் ஒரு ஆம்பளை தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்








 இயக்குநர் சபாஷ் வாங்கிய இடங்கள்

1. கொடுக்காப்புளியாக வரும் சிறுவனின் பாத்திர வடிவமைப்பும்,நேர்த்தியான நடிப்பை வர வைத்த விதமும்+ அதே போல் அந்த சிறுவனின் அப்பா கேரக்டர்


2. எதேச்சையாக செல் ஃபோனை ஸ்பீக்கர் ஃபோன்ல போட்டு பேசு என்று சம்பத் சொல்ல வில்லன் அவனை போட்டுடு என ஆர்டர் பண்ண வேனுக்குள் பர பரப்பாகும் திரைச்சூழல்..

3. தன்னை போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்று தெரிந்ததும் செக் போஸ்ட் போலீஸ் உடன் வீண் வம்புக்கு இழுத்து போலீசிடம் மாட்டுவது போல் நடித்து வில்லன் ஆட்களிடம் உயிர் தப்பும் சீன்..

4. வில்லன் ஆளை வெட்டுவது  போல் காட்டி கோழியைத்தான் வெட்டினான் என பில்டப் சீன்

5. படத்தில் வரும் காட்சிகள் பாமர ஜனங்களுக்கு புரிய வேண்டுமே என்பதற்காக தேவை இல்லாத விளக்கங்கள் எதுவும் கொடுக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திய விதம், பக்கா எடிட்டிங்க்.

6. படத்தின் திரைக்கதை காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதைஎன அமைத்தது..

7. படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும்  யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. பாடல்களே இல்லை என்பது படத்துக்கு கூடுதல் பிளஸ்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMf_I9EG9rscGlEuicZnQfTPLgxnbldAh1S2ZRjoPz5dulz9eR4RBHZqm9yRxG0yIm-nQi9jusTHtVxJ1AbhhIK0hVttBd6PPIkx4EsIWJSqe6b5aGG3oOmN62SqGZF0mYxMUUbr-D_PXJ/s400/Aaranya-Kaandam-Stills-001.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பல காட்சிகள் இயக்குநர் மணி ரத்னம் படம் போல் இருட்டுக்குள் இருப்பது..

2. நிர்வாணமாக வரும் ஜாக்கி செராஃப்க்கு ஆயில் மசாஜ் செய்யும் சீன்

3.சம்பத் உயிர் பிழைக்க ஓடும்போது வசனம் பின்னணியில் வர அவர் கதை சொல்வதாக அமைத்தது..

4.க்ளைமாக்ஸில் சுபா கதைகளில் வருவது போல் ஹீரோயினின் கேரக்டரை ஆண்ட்டி ஹீரோயின் ஆக்கியது..


5.வன்முறைக்காட்சிகள்,ரத்தம் சிந்தும் காட்சிகளில் கொடூரம்


இந்தப்படம் ஆண்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்,

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,பி சென்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 7 நாட்கள் ஓடும்

ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்தேன்

காதலியை கழட்டி விட எளிய வழி என்ன? ஒரு அழகிய ஆராய்ச்சி

http://www.town67.com/girls/indian-girls-playing-holy-2.jpg 

1.தான் எழுதும் எல்லாப்படைப்புகளும் பிரமாதம் என நிறைய படைப்பாளிகள் மனதுக்குள் நினைத்துக்கொள்கிறார்கள்#ரைட்டராலஜி


----------------------------------

2. ரயிலில் முதல் 3 பெட்டிகளும், கடைசி 3 பெட்டிகளும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்ஸ் என்பது படித்தவர்களுக்கு கூட தெரிவதில்லை#ரயில் பயணங்கள்

--------------------------

3.  10 லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் தன் ஒரு படைப்பு வந்து விடாதா? என 10,000 பேர் ஏங்குகிறார்கள்,அதில் 10 பேர்தான் ஜெயிக்கிறார்கள்

-----------------------

4. படைப்பை வாசகன் ரசிக்கும்போது படைப்பாளி படைப்பின் கீழ் உள்ள தன் பெயரை ரசிக்கிறான்#ரைட்டராலஜி


--------------------------

5. காதலியை கழட்டி விட எளிய வழி அடிக்கடி அவளிடம் கடன் கேட்டல்,அல்லது அவளிடமே அவள் தோழிகளைப்புகழ்தல்,அவர்கள் செல் நெம்பர் கேட்டல்#ஜிகிடி


-----------------------------

http://www.egirlsmag.com/wp-content/uploads/2008/11/pakistani-girls.jpg

6. பெண்களை ஆண்கள் எளிதில் நம்பி விடுகிறார்கள்,அதிர்ஷ்டவசமாக அவர்களின் துரோகங்களை ஆண்களால் அறிய முடிவதில்லை


---------------------------

7. செகண்ட் காதலி (ரெண்டாவதா ஒரு லவ்வர்)வேண்டாம் என யாரும் சொல்வதில்லை,ஆனால் செகண்ட்ஸ் காதலியை( ஹி ஹி இதுக்கு விளக்கம் தேவை இல்லை) யாரும் விரும்புவதில்லை#ஃபிரஸ் லைக்கர்ஸ் முன்னேற்ற முன்னணி

------------------------

8. அபிமானத்தோழிகள் கவனிக்கிறார்கள் எனும்போது எழுத்தில் கண்ணியத்தை கூட்டவேண்டும்,பெண்ணியத்தைக்காட்ட வேண்டும் என்ற பொறுப்பு வந்து  தொலைத்து விடுகிறது#அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



-----------------------

9. மற்றவர் படைப்பை மனம் விட்டுப்பாராட்டாதவர்கள் கூட  தன் படைப்பை யாராவது பாராட்டுவார்களா? என ஏங்குபது மனித மன விசித்திரங்களில் ஒன்று

---------------------

10. தனது BASIC SALARY மிகவும் குறைவு என்றாலும் ஆண்கள் கேமரா வசதி இல்லாத பேசிக் மாடல் செல் ஃபோன் வாங்க விரும்புவதில்லை#வெட்டிபந்தாவெள்ளைச்சாமி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJLUUMnRxBo5YxsikOSTWvrvEU9RJsSN9p1LA5ZAL7kLVUpZ-pLccZufeDvMfN9Pzs1EBZzaLMtmnoHXNKQg9M_AYsIc-hsd5PxlTMbzgu7w-dwD0kbbOQK2UNjrm7ulNlLK2OJA__uNd2/s1600/indian+girls+resized-720588.jpg

Sunday, June 12, 2011

சூரிய பகவான் செய்த பாவங்கள் + சாப விமோசனம் பெற்ற கதை ( ஆன்மீகம்)

http://www.mazhalaigal.com/images/issues/mgl0809/im0809-63_satyabhama.jpgஎட்டு தேவதைகள் பாடிய ஸ்ரீலலிதா சகஹ்ரநாமம்!

லலிதாம்பிகையே சரணம்!

ருப்பதிலேயே மிகப்பெரிய பாவம், இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையும் செய்தார்!


சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான்;

 திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன்தான் வாலி. ஆயிற்று. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில்திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார். அருணன், மோகினியாக மாறினான். அவளது அழகில் சூரியனும் மயங்கினான். விளைவு... சுக்ரீவன் பிறந்தான்.


தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். 'ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது சாபம் தீரும்’ என அருளினார்

. இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ எனக் கேட்க... வெகுண்டாள் ஸ்ரீபார்வதி. 'உரிய காலம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார்,

 'ஏற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தால், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்குச் சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!


சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறை யில், அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார். அந்தத் திருத்தலம், திருமீயச்சூர். இங்கே, ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 அதுமட்டுமா? சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, ஸ்வாமியின் மீது தனது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் தலத் துக்கு, ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினந்தோறும் வந்தபடி இருக்கின்றனர்; சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர்.  காரணம்... இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

இந்த உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும் எனச் சொல்வார்கள், பக்தர்கள்! அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார், சிவனார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள்; இறுதியில் அவனை அழித்தொழித்தாள்.

 ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை. 'இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், 'ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள்; அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து 'வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.


'அடடா... இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?! நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்?! அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத் திருப்பது?!’ என யோசித்தாள்

. எட்டுத் தேவதைகளும் அந்தஸ்தோத்திரத்தைப் பாடப்பாட... அவளது உக்கிரம் காணாமல் போனது; அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

இதோ... இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி; சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள்! இங்கே, ஸ்ரீசதா சிவலிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம்; திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடை பெறுகிறது. நவராத்திரியில்..

. விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

 சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள்

. அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க... குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!


இந்த ஆலயம், வேளாக்குறிச்சி ஆதீன மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. காஞ்சி மகான், இந்த வழியே வரும் போது, ஸ்ரீலலிதாம்பிகையைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்! ஒருமுறை, பெரியவா இந்தத் தலத்துக்கு வந்தபோது, பக்தர் கூட்டத்தில்,  மகானைத் தரிசித்த பரவசம்!


அவர்களை ஆசீர்வதித்த மகா பெரியவா, ''இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!'' என அருளினாராம்!
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataB/bakthi/images/restricted/07-04-2009/suryanar_1.jpg

மாதா ஜெயஓம்...
ஸ்ரீலலிதாம்பிகையே சரணம்!





12 ராசிகள்; 12 நாகர்கள்!   
ஸ்ரீசனீஸ்வரரின் அவதாரத் திருத்தலம்; ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங் களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும்!


ரதசப்தமி விசேஷம்!   

சூரிய பகவானின் சாபம் போக்கிய இந்தத் திருத் தலத்தில், ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. திருமலைத் திருப்பதி தலத்தில், சந்திர புஷ்கரணியிலும் திருமீயச்சூரில் சூரிய புஷ்கரணியிலும் ரதசப்தமி விழா அன்றைய நாளில் நடைபெறுமாம்! பஞ்ச மூர்த்தி புறப்பாடு, சிறப்பு வழிபாடு, சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம் ஆலயம்! அப்போது, சூரிய புஷ்கரணித் தீர்த்தக்குளக்கரையில், கல் வைத்து, எருக்கம்பூ, இலை, பஞ்சகவ்யம், மங்கல அட்சதை ஆகியவை கொண்டு சங்கல்பம் செய்து, குளத்தில் நீராடி, ஸ்வாமி- அம்பாளை வணங்கினால், ஏழேழு ஜென்மத்தில் உண்டான அத்தனைப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
கொஞ்சுகிறார்; கெஞ்சுகிறார்
க்ஷேத்திர புராணேஸ்வரர்! 


கோயில் பிராகாரத்தில் உள்ளது, ஸ்ரீக்ஷேத்திர புராணேஸ் வரரின் திருவுருவம். காண்பதற்கு அரிதான விக்கிரகத் திருமேனி இது. சூரியனாருக்குக் கடும் கோபத்துடன் சாபம் கொடுக்க உமையவள் முனைந்தாள், அல்லவா?! அப்போது அவளைச் சாந்தப்படுத்துகிறார் பரமேஸ் வரன். இங்கே... ஒரு பக்கம் பார்த்தால் தேவியின் முகம் உக்கிரமாகவும் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால், தேவி புன்னகைத்தபடியும் இருப்பதைத் தரிசிக்கலாம்! இந்தத் தம்பதியை மனதார வணங்கினால், திருமணத் தடை அகலும்; பிள்ளை வரம் பெறலாம்; பிரிந்த தம்பதியும் விரைவில் இணைவர்!

தூது செல்லும் ஸ்ரீதுர்கையின் கிளி! 

இங்கே... எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீதுர்கை ரொம்பவே விசேஷம். அவளது கையில் ஸ்ரீசுகப் பிரம்ம ரிஷியே, கிளியாக அமர்ந்தி ருப்பதாகச் சொல்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டுதல் வைப்பவர் அனைவரது பிரார்த்தனையையும் ஸ்ரீதுர்கையின் கையில் உள்ள கிளி, கொடிமரம் அல்லது விமானத்தில் இருந்தபடி, ஸ்ரீலலிதாம்பிகையிடம் சொல்லுமாம்! 'அவங்களை நீதாம்மா பாத்துக் கணும்’ என்று நமக்காகச் சிபாரிசு செய்யும் அந்தக் கிளி! எனவே, ஸ்ரீதுர்கையிடம் தங்களது குறைகளையும் பிரார்த்தனை யையும் சொல்லிச் செல்கின்றனர், பக்தர்கள்!
பிரண்டை சாத நைவேத்தியமும்

சஷ்டியப்த பூர்த்தி  சதாபிஷேகமும்! 

அப்பேர்ப்பட்ட எமதருமனே நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனை வழிபட்டான். அதுவும் எப்படி? எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டையைக் கொண்டு (வஜ்ரவல்லிச் செடி) அன்னத்தில் கலந்து நைவேத்தியம் செய்து, சங்கு மற்றும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து, வழிபட்டு வரம் பெற்றான். இன்றைக்கும், உச்சிக்காலத்தில் ஸ்வாமிக்கு பிரண்டை சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை வாங்கி உட்கொண்டால், அத்தனை தடைகளும் அகலும்; ஆயுள் கூடும் என்பது ஐதீகம்! அதுமட்டுமா? இந்தத் தலத்தில் ஆயுக்ஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது மிகவும் புண்ணியம் சேர்க்கும்; ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்!


அகத்தியர் அருளிய ஸ்ரீநவரத்ன மாலை! 

ஸ்ரீஅகத்தியர், தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கு வந்து, ஸ்ரீலலிதாம்பிகையின் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையைக் கண்டு சிலிர்த்து, ஒரு ரத்தினத்துக்கு ஒரு பாமாலை என்று நவரத்தின மாலையையும் தேவியின் மகிமையையும் போற்றும் வகையில் பாடியதுதான் ஸ்ரீநவரத்ன மாலை ஸ்தோத்திரம்! இதனைப் பாடி, ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கினால், உள்ளம் குளிர்ந்து அருளையும் பொருளையும் அள்ளித் தருவாளாம் தேவி!


'எனக்குக் கொலுசு வேணும்!’ 

பக்தையின் கனவில் அம்பிகையே வந்து,''எனக்குக் கொலுசு போடு; நீ நல்லா இருப்பே!'' என்று கேட்டாளாம். அதன்படி அம்பிகைக்கு கொலுசு அணிவிக்க... அந்தப் பக்தையின் துன்பம் அனைத்தும் தொலைந்து போனதாகச் சொல்வர்! மனதில் ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கி, காரியம் நிறைவேறப் பிரார்த்தனை செய்பவர்கள், நேர்த்திக்கடனாக ஸ்ரீலலிதாவுக்கு கொலுசு (முக்கால் இன்ச் அளவு துவாரம் கொண்ட, பதினொன்றரை இன்ச் கொலுசுதான், ஸ்ரீலலிதாம்பிகையின் சரியான அளவு என்கின்றனர்) அணிவித்து மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, வளையல், ஒட்டியாணம், திருமாங்கல்யம், தோடு - ஜிமிக்கி-'மாட்டல்’ என்று அணிவிக்கிற பக்தர்களும் உண்டு!


நன்றி -சக்தி விகடன்

வெண் பொங்கல்,கோதுமை தோசை ,வெந்தயக் குழம்பு செய்வது எப்படி?

1.கோதுமை தோசை மிக்ஸ் 


தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுகலானதும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம். .


2.  வெண் பொங்கல் மிக்ஸ்

தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உலர்ந்த கறிவேப்பிலை, காய்ந்த இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். கறிவேப்பிலை,   இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூளை சேர்த்து வறுக்கவும். எல்லாவற்றையும் அரிசி, பாசிப்பருப்புடன் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.

பொங்கல் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் பொங்கல் கலவையுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து (ஒரு பங்கு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர்) குக்கரில் வைத்து, 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். மேலாக நெய் விட்டு பரிமாற வும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 3.. மிளகு ரச மிக்ஸ் 

தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வெறும் கடாயில் புளியை நன்றாக வறுக்கவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வறுத்த புளியைச் சேர்த்து அரைத்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் பூண்டை வதக்கிச் சேர்க்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

 4..வெந்தயக் குழம்பு 

தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள், குழம்பு வடகம் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாயையும் சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டு, குழம்பு வடகத்தை சிவக்க வறுத்து... வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து விடவும். உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், வெல்லம் இதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.  

குழம்பு கொதிக்கும்போது வீடே மணக்கும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.  

குறிப்பு: சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இஞ்சி புளி 

தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நன்றி - அவள் விகடன்