Tuesday, April 24, 2012

நடிகையர் திலகம் சாவித்திரி பொக்கிஷ பேட்டி - 1975

http://www.tollycircle.com/wp-content/uploads/2008/01/20060421016601.jpg 


ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங்களாகிவிட்டன.  இந்த 1975... அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. அவரைப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அந்தக் காலம் எப்படி, இந்தக் காலம் எப்படி? சாவித்திரி சொல்கிறார்.


 நான் நடிக்க வந்தபோது...


''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்தனை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த புதுசுலயே நான் எட்டுப் படங்கள்ல நடிச்சேன். சேர்ந்தாற் போல எட்டுப் படங்களில் ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறது அப்போது எல்லாம் பெரிய காரியம். அதோட அப்போ வந்த எட்டுப் படங்களும் இப்போ வர்ற 40 படங்களுக்குச் சமம்... எல்லாவிதத்திலும்தான்!''



மூணு மாதம் ரிகர்சல்!


''நான் நடிச்ச படங்களில் எல்லாம் கதைதான் பிரதானம். முழுக்கக் கதை வசனம் எழுதிடுவாங்க. பிறகு, எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஆபீஸுக்கு வரச் சொல்லி இரண்டு, மூணு மாசம் ரிகர்சலில் இருப்போம்.
இப்போ உள்ள நிலைமை? திடீர் புதுமுகங்கள் நாற்காலியைக் கையோடு கொண்டுவந்து மூலையில் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியது. இன்னும் சில பேர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுபோலக் கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு 'படிப்பது’. யாராவது, எதாவது கேட்டால், 'எங்களுக்கு எந்தவித வம்பும் தேவையில்லை’ என்று 'ஸ்டாக் பதில்’ ஒன்றைச் சொல்லிவிடுவது!''


எங்களுக்குக் கற்றுத்தருகிறார்கள்!


''அப்போதெல்லாம் ரிகர்சல் பண்ணிட்டுத்தான் செட்டுக்குள் நுழைவாங்க. இதனால், எல்லோருடைய போர்ஷனும் எல்லோருக்கும் மனப்பாடமாக இருக்கும்.


இப்போ?


எல்லாமே 'ஆர்ட்டிஃபிஷியல்’. நடிப்பு முக்கியமாப் படலை. ஒவ்வொரு சீனுக்கும் என்ன ஹேர் ஸ்டைல், என்ன டிரெஸ் சேஞ்ச் பண்றதுங்கிறதுதான் முக்கியமான விஷயமாப்போயிடுச்சு.


முன்பெல்லாம் புதுமுகம்னு வந்தா, முதல்ல ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்துடுவாங்க. ரிகர்சல் பண்ணிக்கிட்டு ரெடியா இருக்கணும்.


இப்போ வந்திருக்கிற 'திடீர்’ ஆர்ட்டிஸ்ட்டுகள் மேக்கப் போட்டுக்கிட்டு நேரே செட்டுக்கு வந்துடுறாங்க. உள்ளே நுழையும்போதே 'ஷாட் ரெடியா?’னு கேட்டுட்டே நுழையறாங்க. எங்களைப் போன்ற அனுபவம் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தால், ஒரு மரியாதை கூடக் கிடையாது. சிலர் எங்களுக்கே 'இப்படி டயலாக் சொல்லுங்க... அப்படி டயலாக் சொல்லுங்க’னு கத்துத்தர்றாங்க!''


தொழிலில் அக்கறை இல்லை!
''நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும்போது 'யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது’ என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். அப்படித் தொழில்ல அக்கறைகொண்ட நட்சத்திரங்களை இப்ப படவுலகில் விரல்விட்டுத்தான் எண்ண வேண்டி இருக்கு.


அந்தக் காலத்துல தயாரிப்பாளர், டைரக் டர்னா எவ்வளவு நடுக்கம் தெரியுமா? கேமரா மேன் நிக்கச் சொன்னார்னா, அவர் 'உட்காரு’னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ஆனா, இப்போ இருக்கிற புதுமுகங்கள், 'கேமரா லைட் நம் மீது விழும்போது எழுந்து நின்றுகொள்ளலாம்’ என்று உட்கார்ந்துவிடுகிறார்கள்.


ஐஸ் பாக்ஸ் முன்னே, நடிகை பின்னே!


இப்போ புதுமுகங்கள் கார்ல வந்தா, உடனே கார்லருந்து இறங்கி வர மாட்டாங்க. முதல்ல ஐஸ் பாக்ஸ் வரும். அடுத்தது மேக்கப் பாக்ஸ் வரும். அதுக்கு அடுத்தது நாற்காலி வரும். இதெல்லாம் வந்த பிறகுதான், ஆர்ட்டிஸ்ட் மெதுவாக இறங்கிவருவார்.
எங்களுக்கென்று தனியாக நாற்காலி  கொண்டுவரும் பழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்களே நானும் நாகேஸ்வரராவும்தான். தயாரிப்பாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றுதான் இதை ஆரம் பித்தோம். இப்படித் தனியாக நாற்காலி கொண்டுவருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா? இப்போதோ எல்லாமே சர்வ அலட்சியமாக இருக்கிறது!''



நல்ல விஷயங்களே இல்லையா?


முன்பெல்லாம் நாங்கள் நடிக்கும்போது, செட்டுக்கு வெளியே எல்லோருமாகச் சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால், 'ஷாட் ரெடி’ என்றதும் அந்த மூடுக்கு வந்து விடுவோம். இவர்களுக்கு ஷாட்டுக்கு முன்பே அந்த 'மூடு’க்கு வரத் தெரியாது. அழுகிற சீன்கள் வந்தால்கூடப் பெரிய கொண்டை போட்டுக்கிட்டு, அமர்க்களமா டிரெஸ்பண்ணிக் கிட்டு வந்து நிக்கறது... டைரக்டர் 'ரிகர்சல் பாருங்கம்மா’னு சொன்னா, 'அதெல்லாம் டேக்கிலே பார்த்துக்கறேன் சார்’னு சொல்றது... டேக் எடுக்கும்போது டயலாக் சொல்லத் தெரியாம முழிக்கிறது... டைரக்டரைப் பார்த்து, 'அடுத்த தடவை கரெக்டா சொல்றேன் சார்’னு அசடு வழியறது... இதைத்தான் இப்போ வர்ற புதுமுகங்கள் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல இவங்க எங்களுக்கு டயலாக் சொல்லித் தர்றாங்களாம்!''


தியேட்டரில் படம் பார்ப்பேன்!

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-002.jpg


''சாதாரணமாக நான் தியேட்டர்களில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். ஏனென்றால், அப்போதுதான் ரசிகர்களுடைய உண்மையான கருத்துக்களை அறிந்துகொள்ள முடியும். யாராவது தனியாகப் படம் போட்டுக்காட்டினால், நான் போவது ரொம்பவும் அரிது. அப்படிப் பார்க்கப் போனால், ஒரு சீன் நல்லாயில்லேன்னா 'என்னங்க இது... இந்த சீனை இப்படி எடுத்திருக்கீங்களே’னு வெளிப்படையாகக் கேட்டுவிடுவேன். சில பேர் இதை விரும்ப மாட்டாங்க. இதனாலேயே நான் போறதில்லை. நான் நடிச்ச படங்களைப் பார்க்கிறபோது, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்புப் பண்ணியிருக்கேன்னும் பார்ப்பேன்.


இப்போ இருக்கிற சில ஆர்ட்டிஸ்ட்டுகள் 'ஆஹா, என்னமா நாம நடிச்சிருக்கோம்’னு தங்களைத் தாங்களே பாராட்டிக்கிறாங்க!''


வதந்திகள் கிளம்பும் இடம்!


''ஒரு காலத்துல நான் குண்டா இருந்தேன். அது என்னுடைய ரசிகர்களுக்குப் பிடிக்கல. வாஸ்தவம்தான். அதை நானும் ஒப்புக்கிறேன். பிறகு, நடுவுல ஜான்டிஸ்ல படுத்து இளைச்சுப் போயிட்டேன். இப்போ 'ஃப்ளூ’ வந்து ரொம்ப இளைச்சுப் போயிருக்கேன். இளைச்சுப்போனா லும், 'சாவித்திரிக்கு என்னமோ வியாதி’னு ஒரு வதந்தி.


இந்த மாதிரி வதந்திகள் கிளம்பற இடம் எது தெரியுமா? பாண்டி பஜார். ரொம்ப மோசமான இடம். சினிமாவில் சான்ஸ் கிடைக்காத சில பேர்வழிகள் இங்கே அரட்டை அடித்துக்கொண்டு கிளப்பிவிடுகிற சங்கதிகள்தான் வதந்திகளாக உருவாகின்றன!''

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-001.jpg


உத்தரவுகள் போட்டதில்லை.


''நான் ஒரு படத்தில் நடிச்சிட்டு இருந்தபோது, ஒரு புதுமுகத்தை என்னோடு நடிக்கிறதுக்கு அழைச்சிட்டு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட என் பெரியப்பா, 'புதுமுகமா, வேண்டாம். நிறைய டேக் எடுக்க வேண்டி இருக்கும். இதை நீ ஏத்துக்காதே’ என்று என்னிடம் சொன்னார். 'பெரியப்பா! நானும் ஒரு காலத்தில் புதுமுகமா இருந்தவதான்... ஞாபகம் வெச்சுக் குங்க’னு பெரியப்பாகிட்ட சொல்லி, பிறகு அந்தப் புதுமுகத்துக்கும் தைரியம் கொடுத்தேன். யாருக்கும் கெடுதல் செய்யணும்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.


எங்க காலத்துல 'இந்த ஆர்ட்டிஸ்ட்டைப் போடு, அந்த ஆர்ட்டிஸ்ட் வேண்டாம்’ என்ற உத்தரவுகள் எல்லாம் இருந்தது இல்லை. இப்போ சொல்லவே வேண்டாம்.


என்ன தைரியம்?

http://www.cinegoer.com/personalities/appuchesi.jpg


இப்போ வர்ற படங்களுக்கு கதாநாயகிகள் 'கிளாமரா’ இருந்தாப் போதும். ஜீன்ஸ், பெல்பாட்டம், மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டாப் போதும். நான் நடிச்ச வரை பாவாடை, தாவணி, புடவை இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். அதான் எங்க லிமிட்!


ஒருநாள் திடீர்னு தயாரிப்பாளர் ஒருத்தர், 'ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறேன். நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நானே முன் கோபக்காரி... எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்க... போட்டுக்கங்க’னு சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பிவைத்தேன்!''

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-003.jpg


இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் 2 - வடிவேல் பேட்டி - கெடாவெட்டு

http://www.gingly.com/grpimg/201006211823vadivelu-attitude.jpg 

ரெடி... டேக்... ஆக்ஷன்!’ சொல்கிறார் அந்த 75 வயது லேடி டைரக்டர்.


 ''எட்டு மாதம் சுமந்து என்னை ஈன்றெடுத்த தாயே'' - புலிகேசி வசனத்தைப் பேசிப் புல்லரிக்கவைக்கிறார் வடிவேலு. சுற்றி வேடிக்கை பார்க்கும் உறவுகள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.


''ஏய் வடிவேலு... சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எட்டு மாசத்துலயே பொறந்த புள்ளதான். புலிகேசி டைரக்டரு அவரா இந்த வசனத்த எழுதினாரா... இல்ல நீயா எடுத்து வுட்டியா?'' - அந்த 75 வயது டைரக்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். அவர் வடிவேலுவின் தாய் சரோஜினி.


சி.பி - அவசரத்துல பொறந்த பய புள்ளையா? அதான் இப்படி அவதிப்படுது அய்யோ பாவம்..

''ஆத்தா... எந்தெய்வமே... ஒம் மொகத்துல இப்பத்தானே சிரிப்பைப் பாக்குறேன். ஊரு ஒலகத்தையே சிரிக்கவெச்ச நானு, ஓடுற ஓட்டத்துல ஒங்கள எல்லாம் மறந்துட்டேன் அம்மா. ஒன்னைய ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டுப் போனப்பதான் 'பெத்தெடுத்த இந்த ஆத்தாவை விட்டுட்டா காலுல றெக்கையக் கட்டிக்கிட்டுப் பறந்தோம்’னு மனசு குறுகுறுத்துச்சு.


 'எங்களோட வைத்தியம் முடிஞ்சிடுச்சு. இனிமே உங்க வைத்தியந் தான் வடிவேலு, அம்மாவுக்கு முக்கியம்’னு மதுரை அப்போலோ ஆசுபத்திரி டாக்ட ருங்க சொன்னப்பதான் எம் மனசு குளிர்ந் துச்சு. எந்தாயக் காப்பாத்துற பாக்கியம் எனக்கு அமையணும்கிறதுக்காகவே இறைவன் இப்படியரு இடை வெளியை உண்டாக்கி இருக்கான்.


 வழக்கம்போலவே பரபரப்பா சுத்திக் கிட்டு இருந்திருந்தா இன்னிக்கு ஒம் பக்கத்துல உக்காந்து சிரிக்கவெக்கிற பாக்கியம் அத்துப்போயிருக்கும் என்னை யப் பெத்த அம்மா!''


வடிவேலு கண் கலங்க, ஆறுதலாக அவரை மார்போடு அணைத்துக்கொள்கிறார் 

சரோஜினியம்மா.


கடந்த இரு வாரங்களாக அம்மா முன்னால் தன் காமெடிக் காட்சிகளை நடித்துக்காட்டி, அவருக்குச் சிரிப்பு வைத்தியம் செய்துகொண்டு இருக்கிறார் வடிவேலு.


''என்ன கையப் புடிச்சு இழுத்தியா..?''


''இதெல்லாம் நரம்பு இல்ல தாயி... நீங்க போட்ட நூடுல்ஸு...''


''சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு...''


பலவித பாப்புலர் பஞ்ச்சுகளையும் வடிவேலு அள்ளிவிட... வயிறு வெடிக்கிறது சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு.


http://flashnewstoday.com/wp-content/uploads/2010/03/Vadivelu-.jpg




1. ''பரபரப்பா நடிச்சுக்கிட்டு இருந்த வடிவேலு இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கிறதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?'' 



சி.பி - நல்ல வேளை வீட்டுக்குள்ளேயே இருக்காரு.. வெளீல வந்தா கைமா தான்.. ஒரு பக்கம் கேப்டன் ஆட்கள், இன்னொரு பக்கம் அம்மா ஆட்கள்..

- சரோஜினி அம்மாவிடம் கேட்டேன்.

''அவன் நடிச்சு ஓய்ஞ்சிட்டதா நீங்க நெனைக்கிறீங்களா... அடப்போங்கப்பா. அவன் சம்பாதிக்க வேண்டிய புகழும் பணமும் இனிமேதான் இருக்கு. இதுவரைக்கும் அவன் நடிச்சதெல்லாம் பத்து சதவீதந்தான்.


சி.பி - அண்ணன் இதுவரைக்கும் வாங்குன அடி எல்லாம் சாதா, இனிமே  வாங்கப்போறதுதான் ஸ்பெஷல் சாதா. ஹி ஹி 

 இனிதான் இருக்கு பாக்கி தொண்ணூறும்! எம் புள்ள திரையில நடிச்சதை நான் பாத்திருக்கேன். ஆனா, நேர்ல அவன் பண்ற கூத்தும் கும்மாளமும் கொஞ்சமா, நஞ்சமா? எங்க வீட்டுக்காரரு இறந்தப்ப புள்ளைங்க எல்லாரும் வருத்தப்பட்டாக. அப்போ நான் வடிவேலுகிட்ட சொன்னேன், 'அப்பா செத்துட்டார்னு அழாதப்பா... நம்மளோட கஷ்டத்தை எல்லாம் அவரு அங்கே கொண்டுக்கிட்டு போயிட்டாருனு நெனச்சு நிம்மதியா இரு’னு. 


இப்பவும், 'இந்த ஓய்வு நல்லதுக்குத் தான்பா... உனக்குக் கெடுதல் பண்றவங்கள நம்ம குலசாமி அய்யனார் பாத்துப்பார்’னு எம் புள்ளைக்குத் தைரியம் சொல்றேன். எம் புள்ள மார்க்கெட்டு போயி வீட்ல கெடக்கல தம்பி. அது இப்போ கோடம் பாக்கத்துக்கு லீவு விட்டிருக்கு... அம்புட்டுத் தேன்!'' - வாய்கொள்ளாத பூரிப்பில் சிரிக் கிறார் சரோஜினி.


''ஒம் பேட்டி போதும்மா... இனி நான் பேசிக்கிறேன்''- வான்ட்டடாக வருகிறார் வடிவேலு.


2. ''எப்போதான் ரீ - என்ட்ரி கொடுக்கப்போறீங்க?''


சி.பி - அதுதான் கோடம்பாக்கத்துல  நோ எண்ட்ரி கொடுத்துட்டாங்களே.. எப்படி ரீ எண்ட்ரி வர..?

''கொடுப்போம்ணே... ஏன் அவசரப்படணும்? இப்பவும் நிறையப் பேர் கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்காங்க. 


சி.பி - என்னை ஏவி எம் ல கூப்பிட்டாங்க. கோச்சடையான் டீம் கூப்பீட்டாக. ஆனா நான் ரொம்ப பிஸி.. ஹிஹி

ஆனா, இப்போதைக்கு காமெடி ரோல் பண்ண எனக்கு விருப்பம் இல்லண்ணே. இத்தன நாள் இடைவெளிக்கு அப்புறம் வாரப்ப... நம்ம என்ட்ரி டெரரா இருக்கணுமில்ல? அதுக்காகத்தான் ஹீரோ ரோல் பேசிக்கிட்டு இருக்கேன். புலிகேசி பார்ட் டூ ஒருபக்கம்... தெனாலிராமன்கிற கதை ஒரு பக்கம்னு டிஸ்கஷன் ஓடிக்கிட்டு இருக்கு. சம்மர் முடியட்டும்ணே... மக்களுக்கு பம்பர் பரிசு கொடுத்திருவோம்!''


சி.பி - சம்மர் முடிஞ்சா ராகு காலம் ஸ்டார்டிங்க்கா? இம்சை அரசன் ஓடுச்சு ஓக்கே.. இந்திர லோகத்தில்  நா அழகப்பன் ஓடலை, ஏன்? ஏதோ டிஃப்ரண்ட்டா இருந்தால் முத படம் ஓடிடும், அதே மாதிரி 2 வது படமும் எடுத்தா ஓடுமா?

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/02/senthil-son-marriage.jpg


3. ''பெத்த அம்மாவைத் தாங்குதாங்குனு தாங்குறீங்க... ஆனா, முதல்வர் அம்மாவைப் பத்தி எதுவுமே சொல்றது இல்லையே... அவங்க ஆட்சி எப்படி இருக்கு?''


சி.பி - ம்க்கும், கேள்வி கேட்டு அவரை வம்புல சிக்க வைக்கப்பார்க்கறீங்க.. அம்மாவுக்கு ஆதரவா பேசுனா அழகிரி அண்ணன் கோபப்படுவார், எதிரா பேசுனா ஓ பி எஸ் கோபப்படுவார்.. 


''ஆட்சியைப் பத்தியெல்லாம் பேசுற நிலையில நான் இல்லண்ணே..



சி.பி - ஹா ஹா ஹா அடி பலமோ.?

 ஆனா, அவங்களைப் பத்தி நச்சுனு நாலே வார்த் தையில நான் சொல்ல நினைக்கிறது இது தான். காலுக்கு உதவாத செருப்பை கழட்டி எறியுறதுல அவங்க கரெக்டான முதலமைச்சர்.''



சி.பி - அண்ணே, செருப்புன்னு நீங்க சொல்றது நெருப்புண்ணே.. கருப்பு நெருப்பு.. வீட்டுக்கு வெளீல போறப்ப செருப்பு இல்லாம போக முடியாது. கேவலமா பேசாதீங்க. 

4. ''தேர்தல் வெற்றிக்குக் கூட்டணிதான் முக்கியம்கிற இந்தக் காலகட்டத்துல ஒருத்தங்க வேண்டாம்னா, அடுத்தவங்க சேர்த்துக்கப்போறாங்க. அப்படி ஒண்ணு நடந்தா?''



''அது காலுக்கும் கேடு... அதை மாட்டிக்கிடற ஆளுக்கும் கேடு!''




5. ''நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, 'என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்’னு சொல்றாரே விஜயகாந்த்?''


''ஏங்காதுல அப்புடி ஏதும் விழலையேண்ணே... ஏங்காதுல கேட்குற குரல் என்ன தெரியுமாண்ணே... 'நா அடங்கிப் பல மாசமாச்சு... தேவையில்லாம ஏன் என்னையவே சீண்டுறீங்க. இது நல்லது இல்ல... யாருக்கு, எனக்கு!’ அப்புடின்னுதான் யாரோ புலம்புற மாதிரி இருக்கு. 


எம் படத்துல பாக்குற அத்தனை கேரக்டர்களையும் ஒருசேரப் பாக்குற மாதிரி இருக்குண்ணே... ஸ்நேக் பாபு, நாய் சேகர், கைப்புள்ளனு சிரிப்பா பார்த்த கேரக்டர் எல்லாம் ஒண்ணுசேர்ந்து சீரியஸா பேசுற மாதிரிதானே இருக்கு? சினிமாங்கிறது நிழல். நிஜ வாழ்க்கை வேறண்ணே... 


 நகைச்சுவை, இசை, ஃபைட்னு மொத்த ரத்தமும் உடலோடும் உயிரோடும் கலந்து கட்டி மெனக்கெட்டுச் செய்யிற வித்தைண்ணே சினிமா. ஒரு மாஸ்டரும் ஏராளமான ஃபைட்டர்ஸும் சேர்ந்து ரத்தம் சிந்தி நம்மள தைரியசாலியாக் காட்டுற வித்தியாசமான உலகம்ணே... அங்க நாக்கைத் துருத்தி சேட்டையக் காட்டலாம்ணே. 


 ஆனா, மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரும் அமர்ந்திருக்கிற ஒரு சபையில நாக்கைத் துருத்துறது நாகரிமாக படலையேண்ணே... நான் அன்னைக்குச் சொன்னது எல்லாம் இன்னைக்கு நடக்குறது நல்லாப் பார்த்தா தெரியும்ணே!''


http://photos.geni.com/p12/dd/04/9e/86/534448388ca1da76/dsc00341_medium.jpg


6. ''இத்தகைய விமர்சனங்களை எல்லாம் சட்டையே செய்யாமல், 'நிச்சயம் ஆட்சி யைப் பிடிப்போம்!’னு விஜயகாந்த் நம்பிக்கையோடு சொல்றாரே?''



''என்னது ஆட்சியையா... இம்புட்டுக்காணு பூச்சியைக்கூட அவரால பிடிக்க முடியாது!''


சி.பி - இப்படியே வெறும் வாய்லயே வெத்தலை போடுங்க.. வெயிட் அண்ட் ஸி.. கேப்டன் இன்னும் 10 வருஷங்கள்ல ஆட்சியை பிடிப்பது உறுதி.. 


http://vijaynet.files.wordpress.com/2006/10/pulikesi17.jpg

7. ''இன்றைய அரசியல் நிலவரங்களை எப்படிப் பாக்குறீங்க?''


''இன்னும் நாள் இருக்குண்ணே... ஏன் இம்பூட்டு அவசரப்படுறீங்க? இவ்வளவு அவசரம் உமக்கு ஆகாதையா. நான் ரொம்பப் பொறுமையா இருக்கேன். அதனாலதான், என் வூட்டுக்குப் பக்கத்துல எழுதிக்கிடக்குற கறுப்பு காமராஜரையும் கறுப்பு அண்ணாவையும் இன்னும் பல பல கறுப்புத் தலைவர்களையும் இந்தக் கறுப்பு பொறுமையோட பார்த்துக்கிட்டு இருக்கேன்!''


சி.பி .  விட்டா கருப்பு காமராஜும் நானே, அழகிய அண்ணாவும் நானே அப்டினு பாட்டுப்பாடி ஓட்டு  கேப்பீங்க போல.. 

 THANX - VIKATAN


ஃபேஸ்புக்கும் , பெண்களின் ஃபிரண்ட்ஸ் ரிக்வஸ்ட்டும் ( ஜோக்ஸ்)


திருடர்கள் ஜாக்கிரதை!
1. ஃபேஸ்புக்ல ஒரு பிரபல பெண் ட்வீட்டருக்கு ஃபிரண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்புனா “உங்களை எதிரியாக ஏற்றுக்கொண்டார்”னு  ரிப்ளை வருது, அடங்கோ


---------------------------


2. அன்பில்லாத பெண் ட்வீட்டர்களே!உங்க ட்வீட்ஸ்ஸை நாங்க படிச்சுப்பார்க்காமயே RT.ஆனா எங்க ட்வீட்ஸை நீங்க கண்டுக்கறதே இல்லை # மொய்க்கு மொய் வை


--------------------------------

3. அத்தை பொண்ணு டாப்ஸி பன்னு - கட்டிக்கிடலாம்,கட்டிக்கிடலாம் காட்டுனதுக்கு அப்புறம்.


 செத்த மண்ணு செவத்த கண்ணு -இந்தா என் சேலரி ஸ்லிப்,காட்டிட்டேன்


---------------------------

4. காலங்காத்தால உனக்கு வேலையே இல்லையா? 


மிஸ், வேலை வெட்டி இல்லாதவனுக்கு காலை என்ன? மத்தியானம் என்ன? ஹி ஹி


-------------------------------

5. 3ம் உலகப்போர் முடிந்ததும் எழுதப்போவது எது? சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். -- வைரமுத்து # அண்ணே, அது முடிஞ்சா நாமெல்லாரும் முடிஞ்சுடுவோம்


----------------------------------
அந்த "பொண்ணுக்கு" இப்படி குத்தனும்னு ஆசையா இருக்கு ..என்ன "வாய்"டா அதுக்கு :))))))


6. நீ எல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலையா? 

  நோ நோ மிஸ்.அவங்க எனக்கு முன்னாலயோ, பின்னாலயோ தான் பிறந்தாங்க, நான் தனிப்பிறவி,காதல்துறவி


-------------------

7. குருவே! நீங்க எத்தனை பேருக்கு குரு? 


. நித்யானந்தா - அதை எல்லாம் எண்ணிட்டிருக்க நேரம்  இல்லை


--------------------------------

8.டைம் லைனில் ட்வீட் போட்டுக்கொண்டிருப்பவர்கள் திடீர் என்று காணாமல் போனால் அவர்கள் டி எம் மில் பிஸி என கொள்க # ட்விட்டர் தத்ஸ்


----------------

9. பெண் பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளே! பெண்ணின் பாதம் பாருங்க,சமையல் வேலை செய்யறவங்க கால் பாதம் பித்த வெடிப்புடன் இருக்கும்


-----------------------------

10. பஸ் ஸ்டாப் வந்ததும் நான் ஃபாலோ பண்ணிட்டு வந்த ஃபிகரை விட்டுட்டு நான் கிளம்பிட்டேன் ,ஹி ஈஸ் அன்ஃபாலோடு மீ-னு நினச்சிருக்குமோ?


-------------------------

ஆஆ ஆஆஅ "கடிசுட்டா" ஆஆ :))) #இவதான் "புலி"தேவி....:))

11. பாப்பா அழகா இருக்கு...

. தாங்க்ஸ் மிஸ்.. அவ என்னை மாதிரி, என் மனைவி அவங்கப்பன் மாதிரி


-------------------

12. மேரேஜ்க்கு முன்னால என்ன வெயிட் இருந்தோமோ அதில் பாதி எடை மட்டும் இப்போ இருந்தா நாம மனைவியால் ”பாதி”க்கப்பட்டோரே!


-----------------------------


13. டாக்டர், தேள் என்னை கொட்டிடுச்சு..


 அதென்ன குற்றால அருவியா?



-------------------------------------

14. நான் அரசியலுக்கு வருவது "ஆண்டவன்" கையில் இருக்கிறது-உதயநிதி # அதாவது ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட கலைஞர் கையில் இருக்கு?


---------------------------------


15. டாக்டர், முடி பயங்கரமா கொட்டுது.


அதென்ன தேளா? அருவியா? கொட்டறதுக்கு?


---------------------------------



இப்போதான் ரெடி ஆகுது ,,என்ன அவசரம் ...அப்பறம் பூரி கட்டதான் வரும் :)))


16. ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் நயன்தாரா # 9 தாராவுக்கு ராசியான நெம்பர் 5 போல , பிரபுதேவா,ஜெயம் ரவி 5 எழுத்து


-------------------------


17-இப்போல்லாம் தேவதாஸ் எவனுமில்ல, ஏன்?


ஏன்னா ஆனா அந்த ஃபிகர் ஆகாட்டி இந்த ஃபிகர்னு வாழ்ற காலம் இது


------------------------------


18. எனக்கு ”முகவரி” தந்தது அஸ்ஸாம் தான்-மன்மோகன் # அடடா, தல கிட்டே கேட்டிருந்தா எடுத்துக்குடுத்திருப்பாரே? ஒரு டி வி டி வாங்கவா அஸ்சாம் போனீங்க?


---------------


19.தைரியமான முடிவு எடுங்கள்: அரசு அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தல் # வீரியமான முடிவு எடுங்கள் -பிரதமரிடம் அரசு அதிகாரிகள் வலியுறுத்தல்



-------------------------------------


20. ஈரோட்டில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு: # நமீதா, கலா மாஸ்டர், குஷ்பூ வருவாங்களா?மக்கள் எதிர்பார்ப்பு


----------------------------------


ஹஹஹஹாஹ்.. நம்ம ஆளுங்க ,,நம்ம ஆளுங்கதான் ;))

Monday, April 23, 2012

ஸ்டாலின் - அழகிரி - மதுரை - என்ன பிரச்சனை? ஜூ வி கட்டுரை

துரையில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள் 17 பேருக்கு அதிரடியாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி, அழகிரியின் அஸ்திவாரத்தில் கை வைத்து இருக்கிறது தி.மு.க. தலைமை! 



'தங்கள் மாவட்டத்தில் கடந்த 15.4.2012 காலை, கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தியபோது, தாங்கள் அந்தக் கூட்டத்திலும், அன்று மாலை தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளாததோடு, தங்கள் பகுதியில் இருந்து விண்ணப்பித்து இருந்த இளைஞர்களையும் நேர்காணலில் கலந்துகொள்ளச் செய்யாதது கழகக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாகவும் தலைமைக் கழகம் கருதுகிறது.


 தங்களின் இச்செயலுக்கு உரிய காரணத்தையும் விளக்கத்தையும் இக்கடிதம் கண்ட ஒரு வார காலத்துக்குள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். தவறினால், தலைமைக் கழகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்’ என்று, தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கூரியரில் அனுப்பிய நோட்டீஸ் 17-ம் தேதி, மதுரை தி.மு.க-வினர் வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே விழுந்தது.  


முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், பொன்முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம், ரவீந்திரன், முபாரக் மந்திரி, ஒச்சுபாலு உள்ளிட்ட எட்டு பகுதிச் செயலாளர்கள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள்தான் ஷோ-காஸ் நோட்டீஸ் வாங்கிய பாக்கியவான்கள்.


 இதற்கிடையே, ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநகரச் செயலாளர் தளபதி, அழகிரிக்கு பயந்து ஏற்கெனவே தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு ஃபேக்ஸில் அனுப்பி விட்டாராம்.


கடந்த 17-ம் தேதி காலையில் அறிவாலயத்தில் ஆற்காட்டார் முன்னிலையில் கருணாநிதியிடம் வருத்தப்பட்டு பேசிய ஸ்டாலின், 'கழகத்தில் சேலமும் மதுரையும் மட்டும் தனித்தீவாக இருக்கிறது. என்னை நோகடிக்கும் விதமாகவே தொடர் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தலைவரின் நிகழ்ச்சியை நிர்வாகிகள் புறக்கணித்தால் அவர் என்ன மனவேதனையில் இருப்பாரோ, அத்தகைய வேதனையில்தான் இப்போது நான் இருக்கிறேன். என்னைப் புறக்கணித்த அத்தனை பொறுப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

இதையடுத்து, 'மதுரையில் என்னதான் நடந்தது?’ என்று அழகிரி வட்டத்து சீனியர்கள் சிலருக்குப் போன் போட்டு விசாரித்தாராம் டி.கே.எஸ்.இளங்கோவன். அவரிடம் பேசிய பொறுப்பாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா அண்ணன் - தம்பி சர்ச்சைக்குள்ள சிக்கிக்கிட்டு நாங்க படாதபாடு படுறோம். போனா இவருக்கு வருத்தம்;


போகாவிட்டால் அவருக்குக் குத்தம். நாங்க என்னதான் பண்றது? கட்டுக்கோப்பான இயக்கத்தில் தலைவரோட பிள்ளைகளே ஆளுக்கு ஒரு நிலைப்பாட்டுல இருந்தாங்கன்னா... நாளைக்கு வீரபாண்டியார் மகன் ஒரு தப்புச் செஞ்சா தலைவரால் எப்படித் தட்டிக்கேட்க முடியும்?’ என்று வேதனையைக் கொட்டினாராம்.

நம்மிடம் பேசிய மதுரை தி.மு.க-வின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ''1982-ல் இருந்து அழகிரியால் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்ட சிம்மக்கல் தாவூத், காவேரிமணியம், வேலுச்சாமி போன்றவர்கள் பிறகு, அவராலேயே ஓரம் கட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் இப்போது தளபதியும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். 'எனக்குப் பதவியே வேண்டாம்; பொழப்பைப் பாக்கவிடுங்க’ன்னு கடந்த நாலு மாசமாவே சொல்லிட்டு இருந்தாரு தளபதி.

 ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்காக, யாருகிட்டயும் கை ஏந்தாம 10 லட்ச ரூபாய் வரை செலவு செஞ்சிருக்கார். அதுதான் தப்பாப்போச்சு. கட்சி சொன்ன வேலையை செய்யலைங்கிறதுக்காக நடவடிக்கை எடுத்தா, அது சரி. ஆனா, கட்சி சொன்ன வேலையை செஞ்சதே தப்புங்கிற மாதிரி தளபதியை ராஜினாமா பண்ண வெச்சது நியாயம்தானா?'' என்று வருத்தப்​பட்டார்.

தி.மு.க. சட்டப்புள்ளி ஒருவரோ, ''ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அன்று 'எங்களைப் போக வேண்டாம்’னு சொன்னது உண்மைதான். அதை மீறி நாங்கள் வந்திருந்தால், அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து ஸ்டாலின் எங்களைக் காப்பாற்றி இருப்பாரா? ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு எங்​களைப் போகவிடமால் தடுத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும்​தானே... அப்படியானால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பும் தைரியம் தலைமைக்கு இருக்கிறதா?’  என்று சீறினார்.

ஷோ-காஸ் நோட்டீஸ் பற்றி அவைத்தலைவர் இசக்கி​முத்துவிடம் பேசினோம். ''விளக்கம் கேட்டிருக்காங்க. அழகிரி அண்ணன் வந்ததும் அவருகிட்ட கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு இருக்கேன்'' என்றார்.

பொருளாளர் மிசா பாண்டி​யனிடம் கேட்டதற்கு, ''வழக்கமா பொதுச்செயலாளர்தான் நோட்டீஸ் அனுப்​புவார். ஆனா, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்​கோவன் அனுப்பி இருக்கார். இது உண்மையான நோட்டீஸ்தானா இல்லை, யாராச்சும் டுபாக்கூரா அனுப்பி​ இருக்​காங்களான்னு செக் பண்ணணும்'' என்று கலகலப்பாக ஆரம்பித்தவர்,


 ''இளைஞர் அணி நேர்காணல் கூட்டங்களுக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் போகணும்னு கட்டாயம் இல்லை. அதனால் போகலை. கண்டனக் கூட்டத்துக்கு நாங்க போகலைன்னு யாரு சொன்னது? அந்தக் கூட்டமும் முறையாவா நடந்துச்சு? கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி அண்ணனின் பெயரை போஸ்டர்களில் போடலை. அவருக்கே இந்த நிலை என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்னு யோசிச்சோம்.


அதனால, மேடைக்குப் போகாம இருந்துட்டோம். மீறி மேடைக்குப் போயிருந்தாலும் ஏதாவது குழப்பத்தை விளைவித்து, 'இவங்களாலதான் நடந்துச்சு’னு எங்க மேல பழிபோடவும் தயங்க மாட்டாங்க. அப்படித்தானே பரமக்குடியில ரித்தீஷ் மேல பழி சுமத்தினாங்க?

துணைச் செயலாளர் சின்னம்மாளின் சொந்த அண்ணன் 13-ம் தேதி கடலூரில் விபத்தில் இறந்து விட்டார். துக்கத்தில் இருந்த அவருக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். எங்களுக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அண்ணன் இருக்கிறார். 20-ம் தேதி அவர் மதுரை வந்ததும், இதற்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு கேட்டு முடிவெடுப்போம்.


மதுரை நிர்வாகிகள் அனைவரையும் தலைமைக் கழகம் சென்னைக்கு அழைத்து, எங்கள் மீது கூறப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டுக்கு, எங்களிடமும் விளக்கம் கேட்கணும். நாங்கள் 17 பேரும் பொறுப்பில் இருந்து விலகத் தயார். ஆனால், எங்களுக்கு பதிலாக வரும் 17 பேருக்காவது இனிமேல் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற விதியை கழகத் தலைமை வகுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். 

''கட்சிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் கூட்டத்துக்கு போக​விடாமல் நீங்கள்தான் கஸ்டடியில் வைத்திருந் ததாக சொல்கிறார்களே'' என்று கேட்டதற்கு,


''கஸ்ட​டின்னு சொன் னாங்களா... அடைச்சி ​வெச்​சிருந்தேன்னு சொன்​னாங்களா? என்னோட காம்ப்ளக்ஸ் வாசல்ல நான் இருக்கும்போது கட்சிக்​காரங்க என்னைப் பார்க்க வர்றாங்க. உங்களைப் போலநண்பர்​​களும் வர்றாங்க. அவங்கள உட்கார​வெச்சுப் பேசிக்கிட்டு இருந்தா, அடைச்சி​வெச்சிருக்கேன்னு சொல்றதாக்கும்'' என்று சிரித்தார் மிசா பாண்டியன்.

அழகிரி படம் இல்லாமல் போஸ்டர் அடித்தது குறித்து இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தரப்பிடம் பேசினோம். 'உங்க படத்தை போஸ்டர்ல போடலாமா?’ என்று அழகிரியிடம் ஜெயராம் கேட்டதாகவும்,  'எம் பேரைப் போட்டா கண்டிச்சு அறிக்கை விடுவேன்’ என்று அழகிரி சொல்லி விட்டதாகவும் சொல்கிறார்கள். 

ஷோ-காஸ் நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட அழகிரி, 'உங்களுக்கு எதுக்கு அனுப்புறாங்க? தைரியம் இருந்தா எனக்கு அனுப்பட்டும்’ என்று சீறியதாகச் சொல்கிறார்கள். ''நோட்டீஸுக்கு பதில் கொடுக்க வேண்டாம். எல்லாரும் ராஜினாமா பண்ணிருங் கன்னுதான் அண்ணன் சொல்லப்போறார்'' என்று சொல்லும் அழகிரி விசுவாசிகள், அழகிரியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, கடந்த 16-ம் தேதி மதுரையில் ஸ்டாலினை சந்தித்த தென்மாவட்டச் செயலாளர்கள் சிலர், 'இனிமே நீங்க அடிக்கடி மதுரைப் பக்கம் வரணும். எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தால், உங்கள் பின்னால் நிற்கத் தயார்’ என்று தெம்பு கொடுத்தார்களாம். 'எனக்கென்ன தயக்கம்? நீங்கள் அழைத்தால் கட்டாயம் வருவேன்’ என்று சொன்ன ஸ்டாலின், 'மே தினப் பொதுக் கூட்டத்தைக்கூட மதுரையில் நடத்தலாம்னு யோசிக்கிறேன்’ என்று சொன்னாராம்.

மதுரை மண்ணில் இன்னும் என்னென்ன களேபரங்கள் அரங்கேறப் போகின்றனவோ..?

டெயில் பீஸ்: 19-ம் தேதி இரவு ஷோ-காஸ் நோட்டீஸ் பெற்ற 17 பேரும் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் ரகசியமாகக் கூடிப் பேசினார்களாம். 'போஸ்டர்களில் அண்ணன் அழகிரியின் பெயர் போடாதது குறித்து மாநகரச் செயலாளர் தளபதியிடம் விளக்கம் கேட்டோம். அவர் சரியான பதிலை சொல்லாததால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என ஒரே மாதிரியானப் பதிலை அழகிரியிடம் காட்டிவிட்டு அனுப்ப அனைவரும் முடிவு செய்திருக் கிறார்களாம்.

-


 காமராஜர் - கண்ணதாசன் நட்பு எப்படிப்பட்டது? 


ஒரு கள்ளமும் இல்லாத தகப்பனுக்கும் எதிர்பார்ப்பு இல்லாத பிள்ளைக்குமான நட்பு அது. கண்ணதாசன் தி.மு.க.வில் இருக்கும்போது, காமராஜரை பொதுமேடைகளில் விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர். 'அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்று பாட்டு எழுதி, காமராஜருடன் ஐக்கியம் ஆனவர். 'காட்டுக்கு ராஜா சிங்கம், பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்’ என்று பெருந்தலைவரே பாராட்டினார். 'ராஜாவோ இல்லையோ... நான் அடிபணியும், சக்கரவர்த்தி எனக்குச் சூட்டிய மகுடம் இது’ என்றார் கண்ணதாசன்.


கவிஞரிடம் தலைவருக்குப் பிடிக்காதது... மதுவின் மீதான மயக்கம். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஒருவர் நியமிக்கப் படும்போது... மது பெர்மிட் இருந்தால் அதனை சரண்டர் செய்துவிட வேண்டும் என்பது அந்தக் காலத்து விதி. கண்ணதாசனுக்கு டெல்லியில் இருந்து நோட்டீஸ் வந்தது. 'சரண்டர் பண்ணிடப்போறேன்’ என்று காமராஜரிடம் கவிஞர் சொன்னார். 'எதை?’ என்றார் தலைவர். 'அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கார்டைத்தான்’ என்று கவிஞர் சொன்னதும் காமராஜர் சிரித்த சிரிப்பில் இருக்கிறது அவர்களின் நட்பு.


''உங்கள் பெயரை 'காமதாசன்’ என்று மாற்றலாமா?'' என்று ஒருவர் கேட்டார். ''நல்லது 'ராஜ’ என்று நடுவில் சேர்த்து 'காமராஜதாசன்’ என்று வையுங்கள்'' என்று சொன்ன பதிலில் நட்பு மட்டும் அல்ல, பக்தியே தெரிகிறது!



திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவினால் திருப்பம் உண்டா? 


இளங்கோவன் இருந்த பக்கம் ப.சிதம்பரம் திரும்ப மாட்டார். தங்கபாலு பக்கம் இளங்கோவன் திரும்ப மாட்டார். இந்தத் திருப்பத்தையா கேட்கிறீர்கள்?
 எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.


'ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது’ என்கிறாரே ஜெயலலிதா?


'யாருடைய சட்டத்தின் ஆட்சி’ என்பதையும் ஜெயலலிதா விளக்கிச் சொல்லி இருக்க வேண்டும். நாளிதழ்களில் நித்தமும் தெறிக்கிறதே ரத்தம். அது யாருடைய சட்டத்தின் ஆட்சி?


'கொலவெறி’ பாடல் இருந்தும் '3’ படம் குப்புறக் கவிழ என்ன காரணம்? 


அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு இருந்தால்... சினிமா மட்டுமல்ல, எதுவுமே கவிழத்தான் செய்யும்!


தம்மைச் சந்திக்க வந்த பா.ஜ.க. முக்கியத் தலைவர் அருண் ஜெட்லியிடம் தமது கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதாவின் ஆசை நிறைவேறுமா? 


ஆசை நிறைவேறுமா என்பது அப்புறம். ஜெயலலிதா, இப்படி ஒரு கோரிக்கை வைத்தாரா என்பதே சந்தேகம். துணை ஜனாதிபதி என்றால் யாருக்கு? தனக்கா? இல்லை கட்சியில் இன்னொரு வருக்கா? புரோட்டோகால்படி தன்னைவிட உயர்வான ஒரு பதவியை இன்னொருவருக்கு வாங்கித் தருவாரா ஜெயலலிதா? லாஜிக் இடிக்கிறதே!


இலங்கை செல்லும் குழுவில் கனிமொழி, திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருக்க வேண்டாமா? 


போன முறை போய் 'பெயர் கெட்டது’தான் மிச்சம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!




கொஞ்சம்கூட எதிர்பார்க்காத நிகழ்ச்சி ஏதாவது சமீபத்தில் நடந்ததா? 


இலங்கை செல்லும் குழுவில் தி.மு.க. இடம்பெறாது என்ற கருணாநிதியின் அறிவிப்பு!
காங்கிரஸையும் மன்மோகன்சிங்கையும் சோனியாவையும் விட்டுக் கொடுக்க மாட்டார் கருணாநிதி என்பதே இது வரையிலான நிலைமையாக இருக்க... அவரது இந்த முடிவு எதிர்பாராததுதான்.


தமிழக வாக்காளர்கள் ஏமாறுகிறார்களா? ஏமாற்றப் படுகிறார்களா? 


ஏமாறுகிறார்கள்! ஏமாறத் தயாராகவும்  இருக் கிறார்கள்.. எத்தனை முறை வேண்டுமானாலும்!!



மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளராக மூன்றாவது முறை பிரகாஷ் காரத் தேர்வானது குறித்து? 


பிரகாஷ் காரத் மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டதைவிட முக்கியமானது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாநாட்டில் போடப்பட்டுள்ள தத்துவார்த்த தீர்மானம். 'அனைத்து வகையான கேடான போக்குகளுக்கு எதிராக நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவோம்’ என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

'பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமே இந்தியாவைப் பொறுத்தவரை, வர்க்கப் போராட்டமாக அமையும்’ என்று, சீத்தாராம் யெச்சூரி பேசி இருக்கிறார். மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் காரத் இதற்கு என்ன முயற்சிகள் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்தே அவரை அளவிட முடியும்!


மூன்றாவது அணி அமைப்பதால் எல்லாம் அவர்களது தத்துவார்த்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட முடியாது!



  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் என்ன ஆகும்? 


கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு, கருணாஸ் எல்லாரும் சேர்ந்து நடிக்கும் படம் எப்படி இருக்கும்? சகிக்காது அல்லவா? அப்படி இருக்கும் அந்தத் தொகுதி!


அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 7

ஃபிலாசபி பிரபாகரன் 2011 ஆம் ஆண்டில் அவரது தளத்தில் பகிர்ந்த பதிவு.
பதிவுலகில்  சக பதிவராக அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பி அவரை தொடர்பு கொண்டேன். அப்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே:-
(பி.கு: இது நேர்காணல் அல்ல தொலைபேசி உரையாடல்)

1.ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.

2. நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
(பலத்த சிரிப்புடன்) பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.

3. மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.

4. ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...?
கிளம்பத்தான் செய்கிறது. அவ்வப்போது படத்தின் துணை, இணை இயக்குனர்கள் போன் செய்தும் மெயில் அனுப்பியும் திட்டுகிறார்கள். இருப்பினும் நான் என்னுடைய பார்வையில் தானே படங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் மொக்கை என்று எழுதிய காரணத்தினால் எந்தப்படமும் தோல்வி அடையப்போவதில்லை.

5. சமீபத்தில் சிரிப்பு போலீஸ் ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...?
உண்மைதான். இதுப்பற்றி ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேனே. கடந்த 18 வருடங்களில் நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள். பாக்யா இதழின் மூலமாக இயக்குனர் பாக்யராஜுடன் நெருங்கிய பழக்கம் உண்டு.

நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. அப்படி என்றால் சித்து +2 பட விமர்சனத்தில் சொம்படித்திருப்பீர்களே...?
அதுதான் இல்லை. எப்போதும் போல எனது நடையிலேயே எழுதினேன். ஆனால் அதைப் படித்தபின்பு இயக்குனர் பாக்யராஜ் வருத்தப்பட்டார். பின்னர் என்னுடைய விமர்சனம் சரிதான் என்று நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.

7. விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...?
சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தலைவிரித்து ஆடியபோது கனிமொழி ஆ.ராசா பற்றி ஜோக் ஒன்றை எழுதி தி.மு.க தரப்பில் இருந்து அந்த ஜோக்கை நீக்கும்படி மிரட்டல் வந்தது. அலுவலகத்தில் இருப்பதால் வீட்டுக்கு போனதும் டெலீட் செய்துவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவசரப்படுத்த உடனடியாக பிரவுசிங் செண்டருக்குப் போய் அந்த ஜோக்கை நீக்கினேன்.

8. சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...?
கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.

9. ஆடுகளம் தான் பொங்கல் படங்களில் டாப் என்று சொல்கிறார்களே...?
ஆடுகளம் நல்ல படம்தான். ஆனால் B,C சென்டர்களில் பெறும் வரவேற்ப்பை A செண்டரில் பெறாது என்பதே எனது கணிப்பு.

10. எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்....?
காவலன் 45, சிறுத்தை 44, ஆடுகளம் 43

11. அப்படின்னா கலைஞரின் இளைஞன்....?
இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

12. கேபிள் சங்கரின் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் முரண்படுகிறதே...? குறிப்பாக காவலன் படம் பற்றிய கருத்து....? (இதுவும் ஒரு ஜாலி கேள்வியே)
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். கேபிள் சங்கர் அனுபவஸ்தர். அதைவிட முக்கியமானது, அவர் திரையுலகில் இருப்பவர். காவலன் படம் பற்றி சொல்லும்போது, கேபிள் மலையாள பாடிகார்ட் படத்தை பார்த்து அதையும் இதையும் கம்பேர் செய்திருக்கக் கூடும். 
மேலும் அவர் மேல்தட்டு மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்திருக்கலாம். திரையுலகத்திற்கு உள்ளே இருந்து பார்த்ததால் அவர் கண்களுக்கு அதிக குறைகள் தெரிந்திருக்கலாம். நான் ரசிகர்களோடு அமார்ந்து ரசிகனாகவே படம் பார்த்தேன். நான் பார்த்தவரைக்கும் பொதுமக்கள் படத்தை ரசித்தார்கள், கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக...

13. மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பட விமர்சனத்திலும் இருபது முப்பது வசனங்களை தொகுத்து வெளியிடுகிறீர்கள்...? அது எப்படி சாத்தியமாகிறது...?
சில பேர் நான் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும், பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில் பதியவைத்தே எழுதுகிறேன்.

இதை சோதனை செய்வதற்காக ஒருமுறை பதிவர் நண்டு@நொரண்டு என்னோடு திரையரங்கம் வந்திருந்தார். மேலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.

சூப்பர்ப் சிபி, உங்களுடைய மொக்கைப் படங்கள் பார்க்கும் பிஸி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்த பேட்டியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுலக, திரையுலக எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சிபியுடன் வகுப்பறைத்தோழனை போல நெருங்கிப் பழகிவரும் நான் அவரைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...?
 ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நன்றி - ஃபிலாசபி பிரபாகரன் 





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html

கலைஞர் ஆண்டாலும், ஜெ ஆண்டாலும் கரண்ட் மட்டும் காணாம போகுதே ஏன்? ( ஜோக்ஸ்)


கவுண்டர் கவுண்டர் தான் .... :))))))
1.புது ஃபிகர்களின் வரவால் ஈரோடு புத்துணர்ச்சியோட இருக்கு.... நல்ல விஷயம்.. வரவேற்போம் # சித்திரக்கனி ரிட்டர்ன் கேரளா ஃபிகர்ஸ்


--------------------------------


2. அத்தான், என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்களே? நான் அவ்ளவ் அழகா? 


 கருமமே கண்ணா இரு-ன்னாங்க


------------------------------------

3. தமிழகம் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம்: ஜெ., மீண்டும் சூளுரை # எதுல? கரண்ட் கட்லயா?விலைவாசி ஏற்றத்திலா?வெளக்கமா சொல்லுங்க


------------------------


4. காவிரியை கோட்டை விட்டது யார்; அதிமுக., - திமுக., காரசாரம் # வைகாசி பொறந்தாச்சு காவிரி சுமாரான ஃபிகர் தான்,கோட்டை விட்டா என்ன?


------------------------

5. அத்வானியைக் கண்டுகொள்ளாத மோடி # அடபோங்கப்பா.ஆனானப்பட்ட ஹன்சிகா மோத்வானியையே நாங்க கண்டுக்கலை



----------------------------


6. பொன்னேரியில் அளவுக்கதிகமாக மது குடித்த காமாட்சி எனும் பெண் இறந்தார்.# மதுவின் ஆதிக்கத்தில் இருந்த மாதுவுக்கு எமன் குடுத்த பிராது


-------------------------------


7. அவள் சோம்பல் முறித்தாள், அவனி சுறுசுறுப்பானது


-------------------


8. டியர், பப்ளிக் ப்ளேஸ்ல என்னை டேய்-னு கூப்பிடறியே, ஏன்? 


அத்தான், புருஷனை பேர் சொல்லி கூப்பிடக்கூடாது


-------------------------------


9.எளிமை தான் மிகச்சிறந்த அணிகலன்.. புன்னகை தான் அழகிய ஆபரணம் # காலண்டரில் இருந்து சுட்டது


-----------------------

10. புருஷன் சொல் பேச்சு கேட்காத சுமாரான சுந்தரியே!காலை ஏழு மணிஆச்சு கொஞ்சம் எந்திரியே! சமையலில்  உதவி செய் வந்து நீயே!


-----------------------------




11. நம்மைவிட வயதில் பெரியவர்கள் பஸ்ஸில் ஏறினால் அவர்கள் நமக்கு பழக்கமோ, இல்லையோ உடனே எழுந்து இடம் தருவதில் தயக்கம் காட்டாதீர்


----------------------------


12. கண்ணே! மக்காச்சோள சிரிப்பழகி நீ!

 நிஜமாவா? நன்றி!


கலைஞர் துண்டு கலர்ல உன் பற்கள்,தயவு செஞ்சு நல்லா பல் துலக்கவும்


------------------------------------------

13. கோட் சூட் இல்லாம நீயா? நானா கோபி வந்தா எப்படி இருக்கும்?


கோட்டை விட்டவரேன்னு கிண்டல் பண்ணுவாங்க..


----------------------------------

14. தல - நான் நடிக்கும்போது கோட் போட்டுக்குவேன்

 இளைய தலைவலி - நான் கோட் போட்டுக்குவேன் , ஆனா நடிக்க மாட்டேன் ஹி ஹி


----------------------------

15. சனிக்கிழமை அன்று சனி முகத்தில் விழித்தேன் ,ஹி ஹி அந்த சனி என் சம்சாரம் தான்


-------------------------------





16. ஃபிகருங்க  பாய்ஃப்ரெண்டோட பைக்ல போறது தப்பு இல்லை,எத்தனை ஸ்பீடு பிரேக் வந்தாலும் டச் பண்ணாம நகர்ந்து உக்காந்துக்கறாங்களே, அதுதான் தப்பு


-------------------------------

17. அத்தான், ஹேர் கட் பண்ணிக்குங்க....


 ஏன் டியர், இந்த அலை பாயும் கூந்தல் ஸ்டைல் நல்லாலையா?


 ம்க்கும், டெயிலி ஷாம்பு செலவே 25 ரூபா ஆகுது


---------------------------------

18. நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை - கலைஞர் # ஊழல் பண்றதுக்கு மட்டும் 24 மணி நேரமும் தயாரா இருப்பீங்களே!


------------------------------

19. அத்தான், பக்கத்து வீட்டுக்காரியை பாருங்க, ஏகப்பட்ட நகை போட்டு மினுக்கிட்டு இருக்கா..


 நான் வேணா கால் கிலோ ஜிகினா வாங்கித்தரவா?


--------------------------

20. எனக்கு பிரச்சனைகள் அல்வா மாதிரி.. ஆனா என் மனைவியும், மாமியாரும் பாகற்காய் அல்வாக்கள்



-------------------------------




அந்த ஆட்சியிலும் மாற்றம் வேணும்னு சொன்னிங்க....! இப்போ இந்த ஆட்சியிலும் மாற்றம் வேணும்னு சொல்றிங்க....! இதுக்கு மேல எங்களால மாற்றம் கொண்டு வர முடியாதுங்க.... - INIMEL MAATRATHA PATHI UNGALALA PESA MUDIYADHU... THE GAME PLAY BY IYYA & AMMA. HOW IS IT..

Sunday, April 22, 2012

நரசிம்மா நாயகரை நக்கல் அடித்த பம்மல் நாயகர் ( ஜோக்ஸ்)

1.நடப்பு என்றால் ஈழத்தமிழில்  பந்தா என அர்த்தமாம், அப்ப வெளிநடப்பு என்றால் வெளில போய் உதார் விடுவதா?


-------------------------


2. பரீட்சைக்கு முன்பு தண்ணீர் குடித்தால் நன்றாக தேர்வு எழுதலாம்- தகவல். # ஆமா, அடிக்கடி பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு பிட் பார்த்துக்கலாம்


--------------------------------

3. சதீஷ்.. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா? ஏன்?


 ஹி ஹி வீ ஆர் ஜஸ்ட் லவ்வர்ஸ்..


--------------------------------------------

4. ரசிகைகளை பார்க்க நட்சத்திரமோ, நிலாவோ வந்தால் கூடவே எஸ் ஜே சூர்யாவும் வந்துடறார் # எ கீ 


------------------------------

5. ஃபிகர் பார்க்க  செல்கையில் மட்டும் பரட்டைத் தலைக்கு எண்ணெய் வைத்து,படிய சீவி,அடக்கமான பையனாக காட்சியளித்தால் நீயும் என் தோழனே


--------------------------


6. தமிழர்கள் இரு வகை

 1. லாங்க் ஷாட்ல ஹன்சிகாவை பார்த்து அத்தை மாதிரின்னு சொல்றவன்

2. கிட்டக்கா போய் மெத்தை மாதிரிம்பவன்


-------------------------

7.  ஒரு நல்ல  சம்சாரத்துக்கும்,நாசருக்கும்  உள்ள ஒற்றுமை, 2 பேருக்கும் மூக்குக்கு மேல கோபம் வரும் 


-------------------------------

8. அழகான ஃபிகர்ங்க எல்லாம் தமிழ் சினிமா டைரக்டர் மாதிரி, பொறுக்கியைத்தான் ஹீரோவா ஏத்துக்கறாங்க (செலக்டிங்க்)


------------------------

9. உங்கள் பதிவை Copy/Paste செய்தாலும் இனி கவலை இல்லை! # எனக்கு எப்பவும் கவலையே இல்லை, ஏன்னா என் போஸ்ட்டே காபி பேஸ்ட் போஸ்ட் தான் ஹி ஹி 



-------------------------


10. எப்போதும் இரண்டாம் லட்டுக்கு ஆசைப்படுபவன் முதல் லட்டை  யார் கண்ணுக்கும் படாம ஒளிச்சு வெச்சுடுவான் 


-------------------------





11. தென்னங்கள்ளில் இல்லை போதை. பனங்கள்ளில் இல்லை போதை,உன் 2 கன்னங்களில் உள்ளதடி உண்மையான  போதை


----------------

12. லட்டு என்பது சம்சாரம் மாதிரின்னா பூந்தி என்பது மச்சினி மாதிரி ஹி ஹி 


-----------------

13. ஈ தரையில் நிறைய மொய்த்தால் அது ஈத்தரை # எ கீ 



------------------------------

14. ட்விட்டர் மாநாட்டுக்கு விகடன் வருதாம். நாம எல்லாம் கடலை போடுவோம், அதை நோட் பண்ணி புக்ல போடுவாங்க , ஐ ஜாலி


-------------------------------

15. எனக்கு முகவரி தந்தது அசாம் தான்: பிரதமர் உருக்கம் # இத்தாலியை அட்டானில ( பரண்) போட்டுட்டீங்களே!


--------------------------------




tamilnadu police rockzz..


16. ரியல் எஸ்டேட்டில் ரூ.256 கோடி மோச‌டி வழக்கு! ஜெனிலியாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! # ஜமீனிலியா?உனக்கு இனி ஜாமீன் இல்லையா?


-----------------------------

17. அத்தான், எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு, ஆனா உங்க வயசு மேல தான் நம்பிக்கை இல்லை..

 அப்போ ஏஜ் சர்ட்டிஃபிகேட் ரெடி பண்ணிக்கொண்டாந்தா போதுமா?


---------------------------


18. நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை: கருணாநிதி # சட்டசபைல போய் சாதா விவாதம் பண்ணவே தயாரா இல்லாதவங்க நாம



----------------------------


19.கேப்டன்அஞ்சா நெஞ்சன் என்றால் சபைக்கு வர அஞ்சுவது ஏன் ஓபிஎஸ் கேள்வி # பம்மல் நாயகரெல்லாம் நரசிம்மா நாயகரை நக்கல் அடிக்கறாங்க! - கேப்டன் புலம்பல்


------------------------------


20. உங்க நண்பனை நீங்க ஈசியா மாத்திடலாம், ஆனா உங்க பக்கத்து வீட்டுக்காரனை மாத்தவே முடியாது # சுட்ட தத்ஸ்


-----------------------------------


Saturday, April 21, 2012

அடுத்தது - படுத்துது - திகில் பட விமர்சனம்

http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/aduthathu/poster.jpg

பழசை என்னைக்கும் மறக்கக்கூடாது என்பதே டைரக்டர் தக்காளி சீனிவாசனின் கொள்கை.. அதனால அண்ணன் என்ன பண்ணுனாரு 21 வருடங்களுக்கு முன் கேப்டன் நடிச்ச த்ரில்லர் படமான நாளை உனது நாள் படத்தை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு படத்தை ரெடி பண்ணிட்டார். 


ஓப்பனிங் ஷாட்ல அங்காடித்தெரு பட ஓப்பனிங்க் சீன் மாதிரி ஒரு சாலை விபத்து. ஒரு கார் சாலையோரம் படுத்திருக்கும் பலரது உடம்பு மேல் வண்டி ஏத்தி ஆக்சிடெண்ட் பண்ணிடுது.. அடுத்த க்ளீப்பிங்க்ல ஒரு 15 வயசுப்பெண் ரேப்  அண்ட் மர்டர்.. இந்த 2 சீனை முடிச்சதும் கதைக்கு போறாரு. 


ஒரு தனியார் டி வி சேனல் 10 பேரை செலக்ட் பண்ணுது.. அவங்க தனியா ஒரு தீவுல தங்கனும். ( 10 பேரு தங்குனா அது ஒரு கூட்டம் ஆச்சே?).. யார் பயப்படாம இருக்காங்களோ அவங்களுக்கு கையில் ஒரு லேடி பையில் பத்து கோடி பரிசு.. தீவுக்கு 10 பேரும் போனதும் பக்கத்து சீட் பாப்பா சொல்லுது.. 10 பேரும் சாகப்போறாங்க.. அதுக்கு ரீசன் தான் ஓப்பனிங்க்ல காட்டுன 2 சாவு..

அதே மாதிரி ஒவ்வொருத்தரா சாகறாங்க. 3 பேர் செத்ததும்  எதேச்சையா டி வி போட்டா அப்போதான் உண்மை தெரியுது..எல்லாம் செட்டப். அந்த தனியார் சேனல் ரெடி பண்ணுன ஆள்ங்க, இடம் வேற.. நாம எல்லாம் மாட்டிக்கிட்டோம்னு. இடைவேளை..


http://chennai365.com/wp-content/uploads/Press-Meet/Aduthathu-Press-Meet/Aduthathu-Press-Meet-Stills-044.jpg

இடைவேளைக்குப்பிறகு அவங்க என்ன செஞ்சாங்க. எப்படி தப்பிச்சாங்க என்பதே கதை. 

படத்துல தெரிஞ்ச முகங்கள் ஸ்ரீமன், வையாபுரி, ஆர்த்தி,இளவரசு .. மற்ரவர்கள் எல்லாம் புதுசு போல.. எல்லார்க்கும் வாய்ப்பு கம்மி நடிக்க.. ஒப்பேற்றும் நடிப்பு.

அது போக  4 ஃபிகருங்க. எல்லாம் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் கேஸ்ங்க.. ( கேஸ் = வகை).. எதுவும் தேறலை.

நாசர் தான்  எல்லாம் பிளான் பண்ணி பண்ர ஆள்.. ஆனா அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம். நாலை உனது நாள் படத்துல அந்த தாடிக்காரரா வர்ற சிவச்சந்திரன் கொலை செய்யப்பட்ட ஆளா வந்து இடைவேளைக்குப்பின் எழுந்து வருவது போல இதுல ஒரு ஃபிகரு.. உல்டான்னா என்ன? ஆணை பெண் ஆக்கனும் , பெண்ணை ஆண் ஆக்கனும்.. அதானே. அதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்காங்க. 

 திகில் படம்னா ஒரு பயம் வரனும். எதுவும் வர்லை.. பின்னணீ இசை ரொம்பவே சுமார். தக்காளி சீனிவாசன் இளையராஜா இசை அமைச்ச நூறாவது நாள் படத்துல மொட்டை சத்யராஜ்க்கு எப்படி மியூசிக்லயே டெரர் கொடுத்தார் என்பதை பார்க்கவும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZuX25qMtZsAE3GKITSTf4kQA40N9KpzvawY-mJolQSJmkIrrBJhpOA3ZWvr6o8wm8Pd_DKYfmx3v5O8XVKUlRAquKxbbIXiS8b8yxnrtQqsZgAPui_wyLwLwxn9sp6I5sDxH89WrcBhw/s320/aduthathu-press-meet+%25287%2529.jpg
ரப்பர் பேண்டோ, க்ளிப்போ வாங்கி கூந்தலை சரி செய்யக்கூட வசதி இல்லாத அசதி ஃபிகர்ஸ்


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டியர். நான் பத்துக்குப்போறேன். 

பத்துக்குப்பத்து புரோகிராம்க்கு போறேன்னு சொல்லுங்க. ஏன் அபசகுனமா பேசறீங்க?

2.  இங்கே 10 வது டிக்கெட் நான் தான். 

 அடடே. 10 வது டிக்கெட் ஒரு டிக்கெட்டா? ஹி ஹி 


3. எதுக்குத்தேவையே இல்லாம இப்போ உளறிட்டு இருக்கீங்க?

ஆர்த்தி - இப்படி பட படன்னு பேசுனாத்தான் டி வி ல காட்டுவாங்கன்னு சொன்னாங்க. 


4. ஹி ஹி எனது உங்களூக்கு 24 வயசு தானா? 24 வயசுக்கு இந்த வளர்ச்சி ஜாஸ்தி தான்.


5. இட்லி, தோசையே பார்த்து போர் அடிச்சுடுச்சு.

 உங்க ஆசைக்கு இதோ ஆப்பம் வருது பாருங்க. 


6. சமையல் ரெடியா?

 விசில் வரனும்.. 

 உய்ய் உய்ய் உய்ய் 

 ஹலோ.. குக்கர்ல இருந்து வரனும்.. 


7. உன்னை மாதிரி பாய்ஸ்க்கு வெட்கமே வராதா?


 பொண்ணுங்க தான் வெட்கப்படனும். நாங்க ஏன் வெட்கப்படனும்?

8. மிஸ்.. உங்க ரூம்க்கு உள்ளே நான் வரலாமா?

வெட்டிடுவேன்.. 

 அய்யய்யோ, இருக்கறதே ஒண்ணுதான்.. அதையும் வெட்டிட்டா நான் என்ன பண்றது?


9.  போருக்கு முடிவு உண்டு, போராட்டத்துக்கு முடிவு இல்லை



10. நான் எதையும் தனியா தான் அனுபவிப்பேன். எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்.. ( தனியாதான் அனுபவிப்பீங்களா? அப்போ ஹனிமூன் போனா தனிமூன் ஆக்கிடுவீங்களா?)

http://www.top10cinema.com/dataimages/12389/15-08-2011-12389-1-3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஓபனிங்க் ஷாட் கார் விபத்துல அந்தக்கார் எல்லாரோட கால் மேல தான் ஏறுது. அதுவும் கெண்டைக்கால்ல .. அது தெளிவா தெரியுது.. ஆனா எல்லாரும் இறக்கறதா வசனத்துல வருது.. எப்படி?


2. டி வி சேனல் செலக்‌ஷன் ஒரு டிராமா என்பது ரொம்ப ஈசியா தெரியுதே. எப்படின்னா அந்த புரோகிராம் பற்றி டி வி ல எதுவும் சொல்லலை. அந்த 10 பேர்ல யாருமே அது பற்றி கேட்கலையா?


3. ஆக்சிடெண்ட் பண்ண ஃபிகரு தெரியாம தான் அதை பண்ணுது. ஆனா அடுத்த சீன்ல யே 3 அடியாளூங்களை பக்கத்துல வெச்சிருக்கு.. அவங்க எல்லாம்  13 வருஷமா குளிக்காம, கட்டிங்க், ஷேவிங்க் பண்ணாம இருக்கானுங்க.. அவனுங்களை இந்த பாப்பா ஏன் வெச்சிருக்கு?( சிங்கிள் மீனிங்க் தான்)

4. ஆக்சிடெண்ட்டை பார்த்த 15  வயசுப்பெண்ணை மிரட்டி வைக்கலாம், அல்லது கொலை பண்ணலாம்.. எதுக்கு அடியளூங்களை விட்டு ரேப் பண்ணி கொலை பண்ணச்சொல்லுது?’ அதோட மட்டும் இல்லாம வேடிக்கை  வேற பார்க்குது அந்த பாப்பா.. அந்த அடியாளூங்க.. மேடம் உங்களை ஒரு டைம் ரேப் பண்ணிக்கவா?ன்னு சான்ஸ் கேட்க மாட்டாங்களா? ஹி ஹி 

5. அடியாளூங்க ரேப் பண்ற சீன்ல டைரக்‌ஷன் டச்சா அந்த பாப்பா ஆப்பிளை ஒரு கடி கடிக்குது.. அதாவது ஒரு கடி கடிச்சா ஒருத்தன் அந்த பெண்ணை ரேப்பிட்டானாம்.. ஓக்கே அப்போ லாஜிக் படி 3 கடிதானே கடிக்கனும்? பாப்பா 2 கடிதான் கடிக்குது.. ஹி ஹி


http://img.bollywoodsargam.com/albumsbolly/Aduthathu_Movie/Aduthathu_Movie_BollywoodSargam_hot_764562.jpg

6.கதைல ஒரு சுவராஸ்யம் வரனும்னா  அந்த  10 பேருல அட்லீஸ்ட் 2 லவ் ஜோடியையாவது காட்டனும்... அவங்க காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.. இத்தனைக்கும்  படத்துல 5 ஃபிகர்ஸ் இருந்தும் நோ யூஸ் டூ ஆடியன்ஸ்.. ஒன்லி யூஸ் டூ டைரக்டர்ஸ் அண்ட் புரொடியூசர்ஸ் ஹி ஹி

7. எப்பவும் இந்த மாதிரி கதைல ஒரு பிடிப்பு வரனும்னா அந்த 10 பேரை பற்றி அல்லது அவங்களூக்கு தனித்தனி சீன் வைக்கனும்.. மக்கள் மனசுல அவங்க கேரக்டரை பதிய வைக்க.. ( பயணம் படத்துல வந்த மாதிரி) அதெல்லாம் இல்லாம அவங்க பாட்டுக்கு வர்றாங்க, சாகறாங்கன்னு காடுனா நம்ம ஆளுங்க பதட்டமே படலை.. சாகட்டும்.. அடுத்து யாரு?ன்னு அசால்ட்டா கேட்கறான்..

8. ராவணன் சிலைல 10 தலை இருப்பதும்  ஒவ்வொரு  கொலை நடக்கறப்ப ஒரு தலை அதுல கட் ஆகறதும்  நல்ல ஐடியா தான்.. ஆனா எடுத்த விதம் சரி இல்லை.. இன்னும் டெம்ப்போ ஏத்தனும்.. அந்த லேடி கொலை பண்ணிட்டு இருக்கவே நேரம் சரியா இருக்கும்.. பொழப்பைக்கெடுத்துக்கிட்டு வந்து இந்த சிலையை வந்து தலையை கட் பண்ணிட்டு இருக்குமா?

9. கொலை செய்யப்பட்ட அந்த 15 வயசுப்பெண் ஆவியா ஒரு சீன்ல வர்ற மாதிரி காட்றாங்க.. ஆனா அது ரேப்பரோட ( ரேப் செய்த ஆள் ரேப்பர்) மனப்பிராந்தியாவோ மன விஸ்கியாவோ காட்ட டைரக்டர் நினைச்சிருக்கார் போல.. அது தெளீவா இல்லை./.


10. சன் டி வி மாதிரி ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துல பணி புரியும்  காம்ப்பியர் லேடி மட்டும் நினைச்சா இவ்லவ் பெரிய தில்லு முல்லு எல்லாம் பண்ணவே முடியாது.. அதுக்கு பெரிய டீம் ஒர்க் வேணும்.. ஆனா சிம்ப்பிளா அந்த ஒரே ஒரு பெண் மட்டும் மோசடி செய்யறதா காட்டறது நம்பறமாதிரி இல்லை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1-mok-uEpocOyXAv8HYCOCqA3oxDUo5TrouUDcdzFSsgC1MHZfFl4o_y2ccimjj_OEkKg98AE6YJu5noGDvRtCFk-yu-hhjQYTz9TEzEc9f5880PebWSwBKbyvkoyPWMKS-zy7Pa1Smg6/s1600/aduthathu+_31_.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் - நாளை உனது நாள் பார்க்காத திகில் பட ரசிகர்கள்  டி வி ல இந்தப்படத்தை போட்டா பார்க்கலாம் 
 
 
 ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பயந்துக்கிட்டே படம் பார்த்தேன்.. ஏன்னா என் கூட தியேட்டர்ல 7 பேர்தான் இருந்தாங்க அவ்வ்வ்வ்