Monday, February 20, 2012

கோர்ட்டில் சசிகலா - மெஸ்சில் ஜெ - இட்லி, ஜெட்லீ, நெட்லீ - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/01/jayalalitha-sasikala-tamil-cartoon.jpg 

64 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கணவன் - மனைவி அன்பு குறித்து இட்லி கதை ஒன்றைக்கூறினார்.


 சி.பி - இன்னொரு ஜோடியை சேர்த்திருந்தா கூட்டுத்தொகை 9 வந்திருக்கும், ராசியன நெம்பர்,.. அடடா ஜஸ்ட் மிஸ்..

"
வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சி.பி - அதெப்பிடி? இப்போவெல்லாம் மினிமம் 2 டம்ளர் அரிசி ஊறவெச்சாக்கூட  2 எடசு ( 24 இட்லி) வருமே?

சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே

 சி.பி - அது ரொம்ப ஈஸி ஆச்சே, கிச்சன் ரூம்ல போய் நங்க்னு  டம்ளரை வைக்கலாம், 3 குண்டாவை உருட்டலாம், புருஷன் புரிஞ்சுக்குவான் ( ஹி ஹி எங்க வீட்டுல அப்படித்தான்)

 இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க,

சி.பி - கணவனின் நண்பன் பேரு அண்ணாத்துரையா? சுருக்கமா அண்ணான்னு  கூப்பிடறாரா? 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-21.jpg


 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


 

கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

சி.பி - இந்தக்கதை நடந்து 50 வருஷங்கள் இருக்கும்னு நினைக்கறேன், ஏன்னா இந்தக்காலத்துல சம்சாரங்க எல்லாம் அடுப்புல 2 தோசைக்கல் வெச்சு தோசை சுட்டுட்டே டக டகன்னு கிச்சன் ரூம்லயே சாப்பிட்டு முடிச்சுடறாங்க... அவங்க எப்ப சாப்பிடராங்க அப்டிங்கறதை  கண்டு பிடிக்கவே முடியறதில்லை

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

சி.பி - போயஸ் தோட்டத்துல ஏதோ ஸ்டோரியோ போபியா பீதியா அப்டினு ஒரு பழக்கம் இருக்கு போல, சூப்பர் ஸ்டார் ஆகட்டும், புரட்சித்தலைவி ஆகட்டும் மேடை ஏறும்போதே கதை சொல்ல ரெடி ஆகிடறாங்க.. 


சொத்து குவிப்புக்கும், ஜெ.,வுக்கும் சம்பந்தமில்லை: தானே பொறுப்பு என சசிகலா கண்ணீர்


பெங்களூரு: ""ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தாலும், நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டவில்லை. நானே முழுமையாக பொறுப்பை கவனித்தேன். சொத்து குவிப்பு குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு,'' என, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலா தெரிவித்தார்; அத்துடன் கண்ணீர் விட்டு அழுதார்.


சி.பி - எனக்கு என்ன டவுட்னா புரட்சித்தலைவி முன்னாள் நடிகை அதனால அவங்க அழுதாக்கூட ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு அசால்ட்டா விட்டுடலாம், ஆனா நடிகையர் திலகம் சாவித்திரி ரேஞ்ச்க்கு அக்கா அழுது இருக்காங்கன்னா உண்மையிலேயே அவங்க நடிப்பை பாராட்டனும்.. 



http://www.envazhi.com/wp-content/uploads/2011/12/jaya-sasi-1.jpg
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது

 சி.பி - ஆமா, அந்த கேஸ் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.நடந்து வருகிறது.நடந்து வரும்.. முப்பொழுதும் உன் கேஸ்கள்


 இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, தனக்கு ஆங்கிலம் தெரியாது. தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை, தமிழில் கேட்டு பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியதை, பெங்களூரு சிறப்பு கோர்ட், கர்நாடக ஐகோர்ட் நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.


சி.பி - சசிகலா அக்கா ஒரு தப்பு பண்ணிட்டாங்க, எனக்கு தமிழும் தெரியாது, பேச மட்டும் தான் தெரியும், படிக்கத்தெரியாது, அதனால கேஸ் விபரங்களை யாராவது டெயிலி ஒரு பக்கம் மட்டும் படிச்சு காட்டுங்க  அப்டின்னு சொல்லி இருந்தா 18,780 பக்கம் உள்ள அந்த கேஸ் டீட்டெய்லை படிக்கவே  47 வருஷங்கள் ஆகி விடும் எஸ் ஆகி இருக்கலாம் ஜஸ்ட் மிஸ்..

இந்நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர், சுதாகரன் வழக்கறிஞர் சரவணகுமார், இளவரசி வழக்கறிஞர் அசோக் ஆகியோர் ஆஜராகினர். சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, மார்ச் 2ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, அவரிடம் மார்ச் 3, 4ம் தேதிகளில் விசாரணை வைத்துக் கொள்ள வேண்டும் என, அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
ஆச்சார்யா கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் அவர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. சிறப்பு கோர்ட் விசாரணை செய்ய தடை எதுவும் கூறவில்லை. எனவே, இன்றே விசாரணை துவங்க வேண்டும்' என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சசிகலா கோரிக்கையை நிராகரித்தார். இன்றே விசாரணை துவக்கப்படுகிறது' என்றார். இதையடுத்து, மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் மூலம் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் பெயர், அப்பா பெயர், முகவரி, என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.


சி.பி - என்ன தொழில்? கேள்விக்கு ஊரை அடிச்சு உலையில் போடறது, நிலங்களை அபகரிச்சு ஆட்டமா ஆடறதுன்னு உண்மையை சொல்லி இருப்பாங்களா?  
நீதிபதி: இவ்வழக்கில் சாட்சிகள் கூறிய வாக்கு மூலங்களின் விவரங்கள் உங்களுக்கு தெரியுமா?

சி.பி - சாரி யுவர் ஆனர் எனக்கு ஆதி மூலம், நதி மூலம், ரிஷி மூலம் மட்டும் தான் தெரியும் ஹி ஹி 
சசிகலா: என் வக்கீல்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளேன்.

சி.பி - அக்காவுக்கு ஒரு வக்கீல் வெச்சா பத்தாது போல, பல கேஸ்ல மாட்டுன கேஸ்ங்க எல்லாம் பல வக்கீல் வெச்சுத்தானே ஆகனும்? ஹி ஹி 


கேள்வி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக உள்ளீர்களா? ஜெயலலிதாவும் பங்குதாரராக உள்ளாரா?


சி.பி - எஸ் யுவர் ஆனர், நாங்க 2 பேரும் எல்லாத்துலயும் 50 -50 பார்ட்னர்ஸ்.. ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி சீன் போடுவோம், பிரச்சனை சரி ஆனதும் பழைய படி சேர்ந்துக்குவோம் ஹி ஹி 
பதில்: நான் பங்குதாரராக உள்ளேன். ஜெயலலிதாவும் பங்குதாரராக இருக்கிறார். நிர்வாகத்தை முழுமையாக நானே கவனித்து வருகிறேன். அவர்கள் (ஜெயலலிதா) இந்த நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை. அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்.


சி.பி - ஜெ எந்த முடிவும் எடுக்க மாட்டார், எல்லாமே இவங்க தான் எடுப்பாங்கன்னா இப்போ பொம்மை யாரு? ரிமோட் கண்ட்ரோல் யாரு?  


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/IN19_JAYA_SASI_OPS_868555g.jpg
இதைத் தொடர்ந்து, சசிகலாவிடம் சென்னை தி.நகர், ஆலந்தூர், செய்யூர், தி.வி.., தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு கட்டடங்கள், நிலங்கள், வீடுகள் வாங்கப்பட்டது குறித்தும், எந்த பணத்தில் வாங்கப்பட்டது, பல இடங்களில் சொத்துகள் வாங்கியபோது, அவற்றின் மதிப்பை குறைவாகப் போட்டு, முத்திரைத் தாள் கட்டணம் குறைவாகச் செலுத்தப்பட்டது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சசிகலா பதிலளிக்கையில், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர் பிரைசஸ் நிறுவன வருமானத்திலும் சில சொத்துகள், நமது எம்.ஜி.ஆர்., பத்திரிகை சந்தா, விளம்பரப் பணத்திலும் சொத்துகள் வாங்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன் ஒன்றரை கோடி ரூபாயும், சசி எண்டர்பிரைசஸ் 75 லட்சம் ரூபாயும், வங்கிகளில் 20 லட்சம் ரூபாயும் அதிக பற்று பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தில் தான் இந்த சொத்துகள் வாங்கப்பட்டன என்றார்.
தி.நகர், முருகேஷ் தெருவில் கோபால்சாமி என்பவரின் வீட்டை, சுதாகரன் நேரில் சென்று விலை பேசினார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 29 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, இரண்டு லட்சம் ரூபாயை கோபால்சாமியிடம் அட்வான்சாக கொடுத்தார். அப்போது இந்த வீடு, சசிகலாவுக்கு என, சுதாகரன் மிரட்டி வாங்கினார் என கேட்டதற்கு, எனக்கு ஒன்றும் தெரியாது என, சசிகலா கூறினார். செய்யூரில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கியது குறித்து கேட்டதற்கு, சிக்னோரா எண்டர்பிரைசஸ், ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் போன்ற நிறுவன வருமானத்தில் தான் வாங்கப்பட்டது என்றார்.

 சி.பி - ஆச்சரியமா இருக்கே? என்ன விலை நிலவரமோ அதுல பாதிக்கு பாதி ரேட் குடுத்திருக்காங்க, ஆனா தெலுங்கு டப்பிங்க் படத்துல  எல்லாம் அடி மாட்டு விலைக்கு வாங்கறாங்களே.. ?



விசாரணையின் போது, இரண்டு, மூன்று முறை அனைத்து நிர்வாகத்தையும் நானே கவனித்து வருகிறேன். இதில், ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. சொத்துகள் வாங்கிய குற்றத்திற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுகளுக்கு நானே பொறுப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவும் தன்னிடம் விசாரணை நடத்திய போது தான், "சைலன்ட் பார்ட்னர்' என கூறியுள்ளார் என்பதையும் விளக்கினார். இவ்வாறு கூறிய போது, சசிகலா கண் கலங்கினார்.


சி.பி - சைலண்ட் பார்னர்னா சத்தம் இல்லாம கூட்டாளி கழுத்தை கடக்குனு வெட்டறதா?
* சசிகலாவிடம் காலை 11.35 மணிக்கு, கேள்விகள் கேட்கும் பணி ஆரம்பமானது.
* சசிகலா பதில் கூற ஆரம்பிக்கும் முன், தன் இரு கைகளையும் கூப்பி வணங்கி கொண்டார்.

சி.பி - என்னது? அக்கா வணக்கம் எல்லாம் போட்டாங்களா? அடேங்கப்பா, பணிவுதான்
* அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். குரல் வலிமை மிகவும் குறைந்து இருந்தது. அவரது சத்தம் குறைவாக இருந்ததால், கூறும் பதில், மொழி பெயர்ப்பாளருக்கு சரியாக கேட்காமல், பல முறை திரும்பிக் கேட்டார்.
* கண்களில் இருந்து கண்ணீர் வந்ததால், அடிக்கடி கைக்குட்டையால் துடைத்தபடி இருந்தார். சில நேரங்களில் கண்களில் இருந்து தண்ணீர் வடிந்தது.


சி.பி - அது என்ன பிரச்சனைன்னா கிளிசரின் போடறப்ப இங்க் பில்லர்ல 2 சொட்டு மட்டும் போடனும், அக்கா அவசரத்துல ஸ்பூன்ல நிறைய போட்டுட்டாங்களாம்.. 
* காலை 11.35 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை 25 கேள்விகளும், மூன்று மணியிலிருந்து 3.45 வரை 15 கேள்விகளும் என, மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.
* மாலை 6 மணிக்கு சென்னை விமானத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்ததால், அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்ததை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
* இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 23ம் தேதி நடக்கும் என்று அறிவித்தார்.
* சசிகலா வழக்கறிஞர் கூறுகையில், "ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது' என்றனர்.

சி.பி - ஜட்ஜய்யா வீட்ல இருந்து புளி சாதம் கழறி எடுத்துட்டு வந்து தந்து வழக்கை விசாரிக்கனும் அடங்கொய்யால
* கடந்த முறை போன்றே இம்முறையும் சசிகலா அமைதியாக வந்து, அமைதியாகச் சென்றார்.
* .தி.மு.., வினர் யாரும் வரவில்லை. இரண்டு போலீசார் மட்டும் அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.


http://s1-02.twitpicproxy.com/photos/large/475967820.jpg

 மக்கள் கருத்து 

1. மதுரை விருமாண்டி -ஹோட்டல் சாப்பாடு சசிகலாவுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, விசாரணைக்கு தொடர்ந்து வர இயலாது" என்றனர். - ஜெயில் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என்று கொடநாட்டிலே தங்குறதுக்கும் பெர்மிஷன் வாங்கியிருங்க.. இவ்வளவு செஞ்ச நீதிபதி, இதைக் கூட செய்ய மாட்டாரா என்ன ?

2. காவேரிப்பட்டனம் முனியண்டி -ஆஹா.. சசி இப்படி சொன்னதற்கான பரிசு.. இன்று அவர் கணவர் நடராஜன் கைது நாடகம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாடகமே நாட்டை ஆள்வதைப் பார்த்ததில்லை. இது தமிழனுக்கு கொடுமையிலும் கொடுமை. பெங்களூர் நீதிபதி மல்லிகார்ஜூனே மற்றும் வழக்கறிஞர் ஆச்சார்யா இருவரும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்டுக்கொண்டிருக்கும் கேனயர்களா என்ன.? இறைவன் ஒருவன் இருக்கின்றான்.. இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் பதுங்கியே இருக்கின்றான் என்பதை மட்டும் இந்த நாட்டையாளும் நாடகக் கோமளவல்லிகள் புரிந்துகொண்டால் சரி.. நீண்ட நாட்களுக்கு கிளிசரின் வேலைசெய்யாது. பாட்டியம்மா எனக்கு ஒன்றும் தெரியாதென்பாராம்.. அவரது தோழியை தன்னைவிட்டு விலக்கிவைத்து அவரையே கைகாட்டிவிட்டு அவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவாராம்.. அவரது தோழியும் அதையே ஒப்புக்கொள்வாராம்.. ஆனால் தோழியின் சுற்றங்கள் சுற்றிவளைக்கப்படுவார்களாம்.. இந்தக் கதையையும் இளிச்சவாயத் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்று நம்பி நாடகம் ஆடுகிறார்களே.. என்னத்தைச் சொல்ல.. தமிழா விழித்துக்கொள்

3. திண்டுக்கல் சாரதி -தன் கூட இருந்த உயிர் தோழி நல்லவளா கெட்டவளா என தெரிந்து கொள்ளவே இருபது வருடம் ஆகி இருக்கிறது ஒருவருக்கு. அவரை மிக சிறந்த நிர்வாகி ,administravite பவர் அதிகம் என்று சிலர் சொல்லுகிறார்கள்

4, அமெரிக்கா ஆல்பர்ட் - இந்த செய்தியை விட தமிழர்கள் இச்செய்தியை எடுத்துக்கொண்ட விதம் அதிர்ச்சியளிக்கறது. ஒன்று மட்டும் நிச்சயம், தமிழர்கள் அறிவாளிகள், புத்திசாலிகள் என்ற வர்ணனை எல்லாம் ஹம்பக். ஐ.எஸ்.ஐ குத்தப்பட்ட அக்மார்க ஏமாளிகள். எதற்க்கு இவர்களுக்காக நம் முன்னோர்கள் விடுதலையும், ஜனநாயகத்தையும் வாங்கி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு கொஞ்சம் நடிப்பு திறன் உடைய கொடூர சர்வாதிகாரியே போதும். They deserve that much. உலகத்தின் மிக பிந்தங்கிய நாடுகள், கலாசரங்கள் இன்னும் 100 அல்லது 300 வருடங்களில் வளம் பெற்றுவிடும், ஆனால் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவம் வராது. வாழ்க தமிழ் மக்கள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ2su8tlN9MGOw7wkONgUuwUc5uXDozY04L0cENJAbz1KRqEOf8qXyDvfHpcBhXAjvJJTbrWNdM8bZgTkxzEJuW2_N-eZLy7biy2F3VcwpAXacAsfbwCwUUUgR9xJI7X7LO2JcI2JsnX4F/s1600/WR_202612.jpeg

அஜித் ஏன் அரசியலுக்கு வரவில்லை? மீ கண்டு பிடிச்சிங்க் ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiyQL4v_jgrah-NErBQUgvjwOY5N-VvYtO_jFEi969Ymmnfq1qC8XGA-Bb5Cz88F6KRChlWmOqbNQrwbeCt-ODKCN50wWfZZS93Vd5xqtjWyRitvGrjVZ0ybyg06aFFjCA6RJ3lr53ehYT/s640/Nayanthara+9.jpg

1. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி :ஹன்சிகா மோத்வாணி - வதந்திகளை நம்பாதீர் - பிரபுதேவா

------------------------------

2. கேப்டன் - நான் ஆட்சிக்கு வந்தா ஒலிம்பிக்ல பாண்டி ஆட்டத்தை சேர்க்க வைப்பேன், மவனே சண்முகப்பாண்டி ,இப்போ ஓக்கேவா..

-------------------------------

3. தல அஜித் ஏன் அரசியலுக்கு வர்லைன்னு மீ கண்டு பிடிச்சிங்க் வந்தா வெளி ”நடப்பு” பண்ணிட்டே இருப்பாரு, எல்லாரும் திட்டுவாங்க, டூ அவாய்டு தட்

---------------------------------

4. கேப்டன் - அவங்களுக்கு பச்சை கலர் பிடிக்கும்கறதால கொஞ்சம் பச்சை பச்சையா பேசிட்டேன், இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

--------------------------------

5. ராம்தாஸ்-நாடு முழுக்க டாஸ்மாக் திறந்து வெச்சிருக்கீங்களே, ஏன்? 

ஜெ- குடி உயர கோன் உயரும் -படிச்சதில்லை?

-----------------------------

6. விஞ்ஞானி-2012ல உலகம் அழியப்போகுது .

.அஞ்ஞானி- சான்ஸே இல்ல, எங்க கேப்டன் 2016ல ஆட்சி அமைக்கறதா சொல்லி இருக்காரு, அதுக்குப்பிறகுதான் அழியும்

-------------------------------

7. சபாநாயகர்- சி எம் மை பார்த்து மாமு-ன்னு கூப்பிட்டீங்களாமே? 

கேப்டன் - மாண்புமிகு முதல்வரே என்பதன் சுருக்கம் தான் மாமுஹி ஹி

-----------------------------

8. ஆண்களுக்கு சிம்பல் ஆப் மேரேஜ் என்ன? 

சேது-தெனாவெட்டா இருந்தா அவன் பேச்சிலர்,பயந்தவனா, பம்மிக்கிட்டே இருந்தா அவன் மேரீடு

---------------------------------

9. ஜெ- ஆண்டவருடன் மட்டுமே கூட்டணின்னு சொல்லிட்டு ஏன் என் கிட்டே வந்தீங்க? 

கேப்டன் - நீங்க ஆல்ரெடி தமிழகத்தை ஆண்டவர் தானே?

----------------------------------

10. ஜெ- தனியா நிக்க திராணி இருக்கா? 

கேப்டன் - நான் நடிச்ச தவசி படத்தை தனியாவோ, கூட்டமாவோ முழுசா பார்க்க உங்களுக்கு திராணி இருக்கா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoYFjYTAgdL3J7QJmjE7d3CkhKQbBh2oJReisfYlUN3gJg46NFuZ1qivnFuUJKrR3kAmRmIUvJnpIWSdoz9r1M-Hj97nAB4kulXaWe10g1FvFjXiVLCyG522SAH-tjJtJXgcvR87XzGA/s1600/Actress+Hansika+beautiful+photos+in+Saree+%25282%2529.jpg

11. நான் ஒரு டியூப்லைட், டெயிலி என் சம்சாரம் கிட்டே பல பல்புகள் வாங்கறேன், எலக்ட்ரிகல்ஸ் கடை வெச்சிடலாமா? மீ யோசிச்சிங்க்

-------------------------------

12. ஜெ- விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கேட்கறீங்களே, என்ன தகுதி இருக்கு?

ஹி ஹி பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்கேன், போதாதா மேடம்?

---------------------------------

13. மேடம், உங்களைப்பற்றி எந்த கிசு கிசுவும் வர்றதில்லையே, ஏன்? 

நடிகை - ஹி ஹி ,எல்லாரும் தூங்குன பிறகுதான் நான் எந்த தப்பு தண்டாவும் செய்வேன்

--------------------------------------

14. என் சம்சாரத்துக்கு மனசுக்குள்ள கூகுள்னு நினப்பு, பெட்ரூம்ல :சேஞ்சிங்க் மை பிரைவேசி பாலிசி”ன்னு எழுதி வெச்சிருக்கா.. அடங்கோ

-----------------------------------

15.ஹெல்மட்டை பைக் பெட்ரோல் டேங்க்ல வெச்சுட்டு வண்டி ஓட்டறியே, ஏன்?

ஆக்சிடெண்ட் ஆகற மாதிரி சூழல் வரும்போது டக்னு எடுத்து மாட்டிக்குவேன்:)

--------------------------------



16. உன் ஆள் பேரென்ன?

மேரிண்ணா!

2 பேரும் எங்கே சந்திக்கறீங்க டெயிலி?

மெரீனா..

இதெல்லாம் நம்ம ஃபேமிலிக்கு சரி வராது

.. சரீங்க்ணா

--------------------------------

17. நேத்து நைட் ஒரு கெட்ட சொப்னம் கண்டேன்.. ஸ்டாலினும், கேப்டனும் சம்பந்தி ஆகிடறாங்க.. அவ்வ்வ்வ்

-------------------------------

18.  பிப்ரவரி 14 க்குள் ஜாமீனில் வெளிவர  ஆ ராசா துடிப்பு , வந்தா ஜாமீனில் வெளிவந்த ஜமீனே!னு பிளக்ஸ் பேனர் வைப்பாங்களாம்..

---------------------------

19. பால் வீதி சிறு குறிப்பு வரைக .

. ஸாரி டீச்சர், அமலா பால் குடி இருக்கற ஊர் பேரே எனக்குத்தெரியாது, இதுல வீதி பற்றி கேட்டா எப்படி?

-----------------------------

20. திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது:கருணாநிதி# அப்போ நிகழ்காலம் இல்லைன்னு ஒத்துக்கறீங்க?

-------------------------------



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbzQf3PajUssuejToR1jco09gfbNceIm0ctu6tJVL3al4hCqMdW8XYH7kd21_F8MBcdjoC6ePX9219BzFMVoB_t0QVQxoBr2MzVWZy9YbDsKJmHgEQw_spP5yInmegsSKzKdvuW5y9ylty/s1600/3.jpg

Sunday, February 19, 2012

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLJs3_5j4rQ6BDALEtNy4nir82fOFkmZOFoG6c5YKZL7WKxtOYsdhf9IP0mDvMGr6DbCsCe1dBnGVLUQucVWzcDzfhfE95I7BCCfbawtO_4KyX9J3bWzIkE7EusnC1m6FK28qCI2qCU4A/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)
http://www.virakesari.lk/cinema/cine-news-img/ambuli/ambuli-_32_.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 


http://cinema.natpu.in/wp-content/gallery/ambuli/29_full.JPG


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

Saturday, February 18, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - ஈகோ கோ கோ - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/17-02-12/Kadhalil-Sodhapuvathu-Eppadi-Movie-Review.jpg 

ஏராளமான திறமைகளை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு , தங்கள் தன்மானத்தை அடகு வைத்து, இளமையை தொலைத்து கனவுத்தொழிற்சாலை என்று வர்ணிக்கப்படும் கோடம்பாக்கத்தில் குடி இருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாய் எட்டு நிமிட குறும்படத்தையே விசிட்டிங்க் கார்டாக வைத்து  இரண்டரை மணி நேர படம் எடுக்கும் வாய்ப்பை தேடி வந்த சீதனமாய் பெற்று, பெயரை தக்க வைத்திருக்கும் நாளைய இயக்குநர் புகழ்  பாலாஜி மோகன்-க்கு ஒரு பூங்கொத்துடன் இந்த விமர்சனத்தை சமர்ப்பிக்கிறேன்.

கதை ரொம்ப சிம்ப்பிள் அண்ட் நீட்.. எம் ஜி ஆர் அன்பே வா படத்திலும், எஸ் ஜே சூர்யா குஷி படத்திலும் சொன்னதுதான்.. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்கள் அவர்கள் அன்பை குறைத்து விடாது, இறுதியில் சேர்த்து விடும்.. இந்த ஒன்லைன் கதையை 8 நிமிட குறும்படத்தில் எந்த அளவு சுவராஸ்யமாய் சொன்னாரோ அதே அளவு  சுவராஸ்யத்துடன் திரையிலும் சொல்லி இருக்கிறார்.. 

சித்தார்த்தின் காதலி அமலா பால் ஃபேமிலில அப்பா சுரேஷ் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கார்.. டைவர்ஸ் வரை போகுது.. அந்த கேசை டீல் பண்றது சித்தார்த்தின் அப்பா.. சின்ன சின்ன விஷயத்துக்காக அடிச்சுக்கற, பிரிஞ்சுக்கற சித்தார்த் - அமலா பால் காதல் ஜோடி, அது போக அவங்க நண்பர்களில் 3 காதல் ஜோடி எப்படி ஊடல் தாண்டி கூடல் வரை சுபமா சேர்றாங்க என்பது தான் கல கல காதல் திரைக்கதை.. 

தமிழ் சினிமா பயன் படுத்த தவறிய நல்ல நடிகர்களில் ஒருவர் சித்தார்த் என்பது இந்தப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது. மவுன ராகம் கார்த்திக்கிடம் பார்த்த அதே துள்ளல், இளமை என ஆள் செம கலாய்க்கும் நடிப்பு.. ஆனால் அவர் சுற்றுலா கைடு போல் ஆடியன்சை பார்த்து கதை சொல்வது, அவ்வப்போது கதை மாந்தர்களிடமிருந்து ஒரு ஸ்டெப் விலகி கேமராவைப்பார்த்து கமெண்ட் சொல்வது அந்நியம் ஆக்குகிறது.. குறும்படத்தில் சக்ஸஸ் ஆன இந்த டெக்னிக் திரைபப்டத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை.. 

http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=19422&option=com_joomgallery&Itemid=77

அமலா பால் மெழுகு பொம்மை போல் வர்றார்.. நல்ல கெமிஸ்ட்ரி.. பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.. படத்தில் வரும் 78 சீன்களில்  ஒரு சீனில் கூட துப்பட்டா போடாமல் வருவதற்கு நன்றி தெரிவிப்பதா? வாழ்த்து சொல்வதா? ( 2 சீன்ல மட்டும் போனா போகுதுன்னு துப்பட்டா இருக்கு  கழுத்து ஒண்ட.. ஹி ஹி )

குறும்படத்தில் சித்தார்த்தின் நண்பர்களாக வந்த அதே ஆட்கள் தான் இதிலும்.. மனிதர்கள் கலக்கி எடுத்துட்டாங்க.. அந்த தாடிக்காரரின் நடிப்பு செம செம.. குண்டு பப்ளிமாசாக வரும் நண்பர் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாய் ஹீரோ ஹீரோயின்  இருவர்க்கு இடையே பஞ்சாயத்து பேசும்போது மேலும் சண்டையை இழுத்து விடும் சீன் தியேட்ட்டரே அல்லோலகல்லோலப்படும் அதகளம் ஆரவாரம்.. வாட் எ ஒண்டர் ஃபுல் பர்ஃபார்மென்ஸ்.. பை டைரக்டர்.. 

 அமலா பாலின் அப்பாவாக வரும் சுரேஷ்  பாந்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்..கோயிலில் அவர் தன் மனைவியை பல வருட பிரிவுக்குப்பின் அணைக்கும் காட்சியில் சத்யா பட பாட்டு - வளையோசை  கல கல -- கலக்கல்

ஹீரோ - ஹீரோயின் இருவர் பெற்றோரையும் மிகச்சிறப்பாக கதைக்குள் கொண்டு வந்த விதம் வெல்டன்.. 

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கன கச்சிதம்.. யூத் ஃபுல்.. 

http://img1.dinamalar.com/cini/ShootingImages/12000259159.jpg

இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1.   அண்ணா என்று தன்னை அழைத்த பெண்ணை கடைசி வரை விடாமல் துரத்தி லவ் பண்ண வைத்த காதல் எப்பிசோடு இளமை.. 

2.  என் ஆளுக்கு ஃபோன் பண்ணப்ப  ஒரு பெண்ணோட இருமல் சத்தம் கேட்டுது, வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கும் போல என ஒரு பெண் சொல்லும்போது அவள் அருகில் இருக்கும் பெண் இருமவது.... டைரக்‌ஷன் டச்.. 

3.  பாண்டிச்சேரியில் நடக்கும் கேர்ல்ஸ் கச்சேரி நீட்.. அந்த குழுவில் இடம் பெற்ற 3 ஃபிகர்களும் இளமை, இனிமை.. 

4. ஹீரோயினின் ஸ்கூல் ஃபிரண்ட் மலையாளியுடன் பேசுவதை பார்த்து ஹீரோ  சந்தேகப்படும் சீன்  ஓக்கே 

5. தன் மனைவிக்கு காதல் கடிதத்தை தன் மகள் மூலம் கொடுக்கும் சுரேஷின் நடிப்பு துள்ளல், அதை படித்து அவர் மனைவி காட்டும் ரீ ஆக்‌ஷன் டாப்.. 

6. ஒவ்வொரு ஊடல் முடிந்த பின்னும் ஹீரோ ஹீரோயினிடம் ஐ லவ் யூ சொல்லும்போது “இதுக்கு இத்தனை நாள் ஆச்சா? என ஹீரோயின் கண் கலங்கி கேட்கும் இடம்.. 

7.  டேய் விழுங்கடா க்ளாஸ்க்கு போய், விழுந்தேன் நான் 2 பாடல்களும் இதம் , இசையில் பாடல் வரிகளில்.. 



இயக்குநர் கவனிக்கத்தவறிய  லாஜிக் மிஸ்டேக்ஸ்

1. நியூ இயரா இருந்தாலும் சரி, பிறந்த நாளாக இருந்தாலும் சரி காதலர்கள் கண் விழித்து முதல் ஆளாக வாழ்த்து பரிமாறுவதுதான் 1990-ல் இருந்து 2011 வரை நடைமுறையில் இருக்கும் யூத் ட்ரெண்ட்.. ஆனால் அமலா பால் தன் ஆள் சித்தார்த்தின் பிறந்த நாளை காலை 8 மணிக்கு செல்லில் அலாரம் வைத்திருப்பது எப்படி? ( படத்தில் மிக முக்கிய திருப்பமே அன்று ஹீரோயின் வாழ்த்து சொல்லாமல் போவதில் தான் ஸ்டார்ட் ஆகுது)

2. ஒரு சீனில் ஹீரோ பாட்டி வீட்டுக்கு குடும்பத்தோட போறார், செல்லை வீட்டில் மறந்து வெச்சுட்டு போயிடறார்.. அன்று மாலை முழுவதும் காதலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்.. அமலா பால்க்க்கு செம கோபம்,,. இந்த சீனில் லாஜிக் இடிக்குதே.. ஹீரோவோட அம்மா, அப்பா, அல்லது அங்கே பாட்டி வீட்டில் உள்ள யாராவது சொந்தக்காரர் ஃபோன் வாங்கியோ, அட்லீஸ்ட் ஒன் ருப்பி காயின் பூத்திலோ காதலிக்கு ஃபோன் பண்ணி “ இந்த மாதிரி ஃபோனை வெச்சுட்டு  வந்துட்டேன் “ என சொல்லி இருக்க முடியாதா?

3. ஒரு சீன்ல ஹீரோவோட அப்பா டேய் ஃபேஸ் புக்ல ரிக்குவஸ்ட் கொடுத்திருக்கேன், அப்புறம் ஆன் லைன் வந்தா அக்செப்ட் பண்ணிடு என்கிறார்.. அடுத்த செகண்டே “ என்னடா, உன் ஃபேஸ் புக்ல ஒரு பொண்ணோட படம் யாரு? என்கிறார்.. எப்படி அதற்குள் ஃபோட்டோ தெரிந்திருக்கும்?

4.  ஹீரோ - ஹீரோயின் தங்கள் காதலை வெளிப்படுத்தும் முன் சந்திக்கும் 4 காட்சிகளில் இருவரும் சொல்லி வைத்தாற்போல ஒரே வண்ண ஆடை அணிவது எப்படி?

5. படத்தின் பின்னணி இசையில் அந்தக்கால டாம் & ஜெர்ரி கார்ட்டூன் இசை போல் வருவது படத்தின் சீரியஸ் தன்மையை பாதிக்கிறது.. 

6. காலேஜ் செமினாரில் ஆன்சர் பேப்பர் கொடுக்கும் சீனில் 12 ம் வகுப்பு கணக்கு பாடம் இருக்கு.. மார்ஜின் இல்லாமல்..

7. பொதுவா காதலர்கள் பலர் முன் சண்டை போட்டுக்குவாங்க, ஆனா மன்னிப்பு கேட்பது,ஊடல் முடிந்து சந்தோஷமாக கட்டிப்பிடிப்பது இதை எல்லாம் படத்துல ஹீரோ ஹீரொயின் பப்ளிக்கா பலரது முன்னிலையில் செய்ய்றாங்க.. அதுவும் க்ளைமாக்ஸில் இருவரும் சேரும்போது டோட்டல் காலேஜே கூடி கிளாப்ஸ் பண்ணுவது ,வேடிக்கை பார்ப்பது ஏதோ டிராமா பார்ப்பது போல் உள்ளது.. 

இந்தப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ஒருவனுக்கு ஒருத்தி என ஒரே ஒரு உள்ளத்தை ஆயுள் முழுக்க காதலிக்க நினைக்கும் உண்மையான காதலர்கள், சின்ன சின்ன பிரச்சனைகளால் ஊடல் கொண்டிருக்கும் தம்பதிகள், கணவனை பிரிந்து வாழும் மனைவிகள், மனைவியை பிரிந்து வழும் கணவர்கள்,காதலிக்க நினைப்பவர்கள் என எல்லாரும் பார்க்கலாம்..

 யாரெல்லாம் பார்க்கக்கூடாது? பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் ஃபைட் வேணும் என்ற மசாலா பட ரசிகர்கள்,ஹீரோ ஒரு அடி அடித்தால் 56 பேர் ஆஸ்பிடலில் போய் படுக்கனும்னு நினைக்கற ஓவர் பில்டப் ஒலக சாமிகள் தவிர்க்க வேண்டிய படம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஃபிலிம்.. 

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்

இந்தப்படத்தில் வரும் கலக்கலான காதல் பொங்கும் வசனங்கள் ( 50 )அடுத்து வரும் புதன் கிழமை பதிவில்

Friday, February 17, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் - சைக்கோ லவ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/07.10.11/muk.jpg
சில கதைகளை நேரடியா சொன்னா ரொம்ப சாதாரணமான கதையா தோணும்.. ஆனா சாதா கதையையே சுவராஸ்யமா சொல்ற வித்தை வெகு சிலருக்கே கை வருது.. இந்தப்படத்தோட டைரக்டரும் டேலண்ட்டான ஆள் தான்.. ஆல்ரெடி குடைக்குள் மழை படத்துல ஆர் பார்த்திபன் சொன்ன கதையையே கொஞ்சம் பாலீஷ் பண்ணி புது கதை மாதிரி சொல்லி இருக்கார்.. 

செல்வராகவன் பாணில சொன்னா மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே, ராஜேஷ் குமார் பாஷைல சொன்னா 3 வெவ்வேற தளம் அமைச்சு மூன்றையும் ஒன்றாக இணைக்கும் கோட்டு வரிசை கதை தான் திரைக்கதை உத்தி..

அதர்வா சென்னைல கம்ப்யூட்டர் செக்‌ஷன்ல வேலை பார்க்கறார்..அந்த கம்பெனில அம்லா பால் எம் டி.. அதர்வா  படம் போட்ட முதல் ரீல்லயே அந்நியன் டைப்ல ஒரு கொலை பண்றார்.. 

பெங்களூர்ல அடிக்கடி ஃபோன் போட்டு பேசறார்.. அங்கே ஒரு அமலா பால்.. அவங்க பேரு சாரு.. அடிக்கடி ஃபோன்ல சாரு சாருன்னு உருகறார்.. சென்னைல இருக்கற அமலா பால் பேரு லதா.. அவருக்கு டவுட்.. அந்த சாரு யாரு?





http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132937593751.jpg

கடைசில பார்த்தா பெங்களூர்ல அப்டி ஒரு கேரக்டரே கிடையாது.. இவரா கற்பனை பண்ணிக்கறார்.. ஃபிளாஷ் பேக்.. அவங்கம்மா ரொம்ப அன்பா மகனை வளர்த்தறாங்க.. சின்ன வயசுல இருந்தே அதர்வா ஒட்டுண்ணியா அதாவது அம்மா கோண்டா , 24 மணி நேரமும் அம்மா பிள்ளையா வளர்றார்.. பெரிய பையன் ஆனதும் வேலைக்காக கிராமத்துல அம்மாவை விட்டு சென்னைக்கு போறார்.. 

அங்கே அமலா பால் மீட் பண்றார்.. அமலா பால் அமெரிக்கா ரிட்ட்டர்ன்... அவங்க கல்ச்சர் வேற.. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கட்டிப்பிடிச்சு , அணைச்சு ( டேய் 2 ம் 1 தான்) அன்பை , மரியாதையை வெளிப்படுத்துவாங்க.. அதை லவ்னு தப்பா நினைக்கறார்.. ஆனா அமலா பால் அவரை லவ் பண்னலை.. அவருக்கு வில்லன் கூட நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. 

இப்போ ஒரு பார்ட்டி நடக்கறப்ப வில்லன் கோஷ்டில 3 பேரு அமலா பால் கையை  பிடிச்சு இழுத்துடறாங்க.. அதர்வா ஓவர் எமோஷன் ஆகி அந்த ஆட்களை போட்டுத்தள்ளிடறார்.. 

இந்த சைக்கோத்தனமான காதலனை அமலா பால் எப்படி சமாளிக்கறாங்க.. என்ன ஐடியா பண்றாங்க.. அப்டிங்கறதுதான் கதை.. ( யாருக்காவது கதை புரிஞ்சுதா? ஹி ஹி )

அதர்வாக்கு இது 2 வது படம்.. பாணா காத்தாடில அசால்ட்டா லவ்வர் பாயா வந்துட்டுப்போனவர்க்கு அழுத்தமான வேடம்.. சிட்டி பாய்க்கான ரிச், ஸ்டைல் எல்லாம் ஓக்கே.. நடன ஸ்டெப்களில் அடடே.. சண்டைக்காட்சிகளில் சுறு சுறுப்பு.. அப்பா முரளியை விட செம  பர்சனாலிடி தான்.. நல்ல எதிர் காலம் உண்டு.. 

அம்லா பால்.. ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, கிளாமர் இந்த 3 மட்டும் வெச்சுக்கிட்டு குப்பை கொட்ட முடியாது பாப்பா.. ஹி ஹி கொஞ்சம் நடிக்கனும்.. ட்ரை த ட்ரை.. தேவதை டிரஸ் காஸ்ட்யூம்ல ( டிரஸ்னா  என்ன?காஸ்ட்யூம்னா என்ன? 2ம் 1 தான் ) வர்ற சீன்ல லோ கட் சீன் ஹி ஹி தியேட்டர்ல செம கிளாப்ஸ்.. 

படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்..  ஆடை வடிவமைப்பு தீபாலி நார் செம கலக்கு கல்க்கிட்டாங்க.. பாடல்கள் அனைத்தும் தாமரை.. படம் ரிலீஸ் ஆகும் முன்பே 3 செம ஹிட்.. ஆனா படத்துல அது வேக தடைக்கல்

பொதுவா சைக்கோ த்ரில்லர் லவ் ஸ்டோரில பாடல்களை தவிர்க்கனும்.. ( ஆனா ஆடியோ மார்க்கெட் வேணுமே..)ஜி வி பிரகாஷ் இசை ஓக்கே.. 3 பாடல்கள் ஹிட்.. பின்னணி இசை சூப்பர்னு சொல்ற அளவு இல்லை.. ஆல்டைம் ஃபேவரைட் இன் பேக் கிரவுண்ட் மியூசிக் ஈஸ் இளையராஜா தான்.. 

http://tamil.oneindia.in/img/2011/09/06-amala-paul300.jpg

படத்தில் இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அமலா பாலின் காலை எடுத்து ( தனியா பிச்சுன்னு நினைக்காதீங்க )கிதார் மாதிரி வாசிக்கும் இடத்தில் அப்ளாஸ்... அது போக பல இடங்களில் ஹீரோ ஹீரோயின் பாடி கெமிஸ்ட்ரி  , நெருக்கம்.. எல்லாம் ஓக்கே.. ( மனசு குளிர்ந்து சொல்றேன் நல்லா இருங்கடே..  ஹி ஹி ) 

2. சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் , ஒளிப்பதிவு ,லொக்கேஷ்ன்கள் எல்லாம் பாராட்டும் விதத்தில்./. அதே போல் திரைக்கதை.. இதை நேரடியாக , சாதா கதையாக சொல்லி இருந்தால் சப்பென்று போய் இருக்கும்.. 

3.  மழை பொழியும் மாலையில், மர நிழலின் சாரலில், அவள் நினைவின் ... பாடலில் தாமரையின் வரிகள், இசை இரண்டும் நம்மை தாலாட்டும் விதம்.. செம.. ஓ சுநந்தா சுகந்தானா? பாட்டு, அன்பே உன் ( பாப்சாங்க்),யார் அவள் யாரோ..? கண்கள் நீயே.. காதல் நீயே..  ( அம்மா செண்ட்டிமெண்ட் பாட்டு) சொக்குப்பொடி போட்ட ( க்ளைமாக்ஸ் ஸ்பீடு பாட்டு) என  எல்லா பாடல்களும் கேட்கும் விதத்தில், ரசிக்கும் விதத்தில் அமைத்தது.. 




http://2.bp.blogspot.com/-kdvlTOwGWxs/ToXFavZSx9I/AAAAAAAAOPE/dBuEtFCIHNY/s400/05mptb_lead_GPA36SS_747090e.jpg

இயக்குநர் செய்த சில தவறுகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. ராங்க் கால் ராணி கம் பொய்யான சாரு அதர்வா ஃபோன்ல பேசறப்ப  சாரு மாதிரியே பேசி சமாளிக்கறார் ஓக்கே, அமலா பால் , டாக்டர் 2 பேரும்  அதர்வா கூட பேசிட்டு இருக்கறப்ப பொய்யான சாரு கிட்டே இருந்து வந்த ஃபோனை உண்மையான சாரு அமலா பால் அட்டெண்ட் பண்றப்ப அந்த பொண்ணு ஏன் உண்மையை சொல்லலை? ( ஏன்னா அப்பவே சொல்லி இருந்தா இவங்க பொழப்பைக்கெடுத்துட்டு பெங்களூர் அலைஞ்சிருக்கத்தேவை இல்லை)

2. அதர்வாவோட அம்மா தான் தனிமைல  இருக்கறதாலயும்,அழகா  இருக்கறதாலயும்தான் ஆம்பளைங்க சிலர் தன்னை அடைய அப்ரோச் ( எவ்லவ் டீசண்ட்டான வார்த்தை) பண்றாங்கன்னு  யோசிச்சு ஒரு முடிவு எடுக்கறார்.. அது இன்னான்னா அவர் மொட்டை அடிச்சுக்கறார்.. அடங்கொய்யால நம்மாளுங்க  ரேப் பண்னனும்னு முடிவு எடுத்துட்டா ரஜினியே வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. மொட்டை அடிச்சுட்டா மட்டும் ரேப் பண்ண வராம சும்மா இருந்துடுவாங்களா? ( அந்த ஊர் ஆளுங்க எல்லாம் பக்கிப்பசங்க போல. மொட்டை அடிச்ச பெண்ணை ஏறெடுத்து,  பார்க்க மாட்டாங்களாம்.. அவ்வ்வ்வ் 

3.  அதர்வா வேலைக்காக சென்னை வர்றார் ஓக்கே.. அம்மா அவரை பிரிஞ்சு ஏக்கத்துல நோய் வாய்ப்படறார்// எதுக்கு அவர் அங்கே தனியா கஷ்டப்படனும்?அன் மேரீடுதானே அதர்வா? லட்சக்கணக்குல சம்பளம் வாங்கறவர்.. அம்மாவை கூடவே கூட்டிட்டு வந்து வெச்சுக்கலாமே.. இதை ஏன் கேட்கறேன்னா கதையே அம்மா பாசத்தால, அந்த அன்புக்காகத்தான் , ஒரு தேடலுக்காகத்தான் அமலா பாலை சைக்கோத்தனமா லவ் பண்றதா வருது..

4. அமலா பால்க்கு அதர்வா மேல உண்மையான லவ் கடைசி வரை வர்லை.. அதர்வா தான் லவ்வறாரு.. இந்த மைனசை சரி பண்றதுக்காக அமலா பாலை நிச்சயம் செஞ்ச ஆள் ஒரு ஹோமோ என கடைசில லாஸ்ட் ரீல்ல காட்டி, அவனோட சகாக்கள் ஆல்ரெடி 3 கொலைகள் செஞ்சதாவும், இப்போ அமலா பாலை கொன்னுட்டா ரூட் க்ளியர் எனவும் சொல்லி ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்கு ஆசைப்பட்டு கதையோட மைய கருல ஒரு மைனஸ் கொண்டாந்துட்டீங்களே.. அமலா பால்க்கு அதர்வா மேல லவ் வர , அல்லது வந்த மாதிரி காட்டி இருக்கலாமே.. ஏன்னா ஒரு லவ் ஸ்டோரி ஓட 2 பேர் அட்டாச்மெண்ட் முக்கியம். அம்லா பால் லவ் ஏதோ ஒப்புக்குச்சப்பாணி மாதிரி இருக்கு.. 

http://www.gulte.com/content/2012/02/news/Amala-Paul-Hot-Photos-from-Tamil-Movie---Pics-1156.jpg

யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? காதல்ல தோல்வி அடைஞ்சவங்க,ஃபிகர் வேற எவனையோ உஷார் பண்ணுனாக்கூட தன்னைத்தான் லவ்வுதுன்னு  பேக்கு மாதிரி நினைக்கறவங்க,காதல் தெய்வீகமானதுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கறவங்க, சைக்கோ த்ரில்லர் ஸ்டோரியை ரசிக்கறவங்க, அமலா பால் கிளாமரையாவது பார்ப்போம்னு ஏக்கப்படற என்னை மாதிரி சின்னப்பசங்க , காலேஜ் ஸ்டூடன்ஸ், லவ்வர்ஸ் இவங்க எல்லாம் பார்க்கலாம்.. ஹி ஹி 

ட்ரெய்லர்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்துன அளவு படம் சூப்பரும் இல்லை. மோசமும் இல்லை, ஓக்கே ரகம்.. 

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன்  மார்க் - 41

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - யூத்துங்க பார்க்கலாம் ஹி ஹி 

ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.screen4screen.com/album%20main%20page/muk%20working%20stills/mywebalbum/iwebalbumfiles/46cb55eebaa44afe86f3b53a1bf3f0d2.jpg

ராகுல் சொல்றதை, கூகுள் சொல்றதை நம்புனா......



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTONpWJzzsFwKImBdkrFX6Oq6qN659uf4wEs0XbteQaqMvkNcsVsqN8SpbNFWD0ZVafEf42JT6iQKZ-tLpHajQ1rjcz9DatR2f9ySYxPBGjPPM3JL63uvwLaR4l2R-AUS2mSBqcbsLbzI/s400/Muppozhudhum+Un+Karpanaigal+Audio+Launch+Stills+Photos+MUK+Audio+Release+Stills+images+%25284%2529.jpg 

1. கிராமி அவார்டு எனக்கு வேண்டாம்...

ஏன் மேடம்? நான் சிட்டிலயே பிறந்து சிட்டிலயே வளர்ந்தவ,அதனால கிராமத்துல தர்றது எதுக்கு?

---------------------------------

2. சதீஷ், எப்பவும் ரோஜா பூ தருவே, இப்போ ஏன் ரேடியோ பூ தர்றே?

இன்னைக்கு இன்று உலக வானொலி தினம் .ஹி ஹி மேட்சுக்கு மேட்ச்

------------------------------------

3. "என்னைச் சீண்டினால் உண்மைகளைச் சொல்லுவேன்” - விஜயகாந்த். # அப்போ சீண்டாம விட்டுட்டா ரீலா விடுவீங்களா?

---------------------------

4. சீனாவில் சேவல் முட்டையிட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி# அதுக்கு சேவலோட சம்சாரம் கோழிதானே அதிர்ச்சி ஆகனும்?

------------------------------

5. டெயிலி ஆஃபீஸ் வந்ததும் ஃபிரண்ட்சோட கான்ஃபரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிப்பேன்.

மேடம்,நீங்க தான் வெட்டாஃபீஸ், பாவம் அவங்களாவது வேலை செய்யட்டும்


---------------------------------

6. டெயிலி ஆஃபீஸ் வந்ததும் ஃபிரண்ட்சோட கான்ஃபரன்ஸ் கால் போட்டு அரட்டை அடிப்பேன்.

மேடம், கான்ஃபரன்ஸ் ஹால்னா வாடகை ஜாஸ்தி ஆகாது?

----------------------------------

7.அணில் கடிச்ச பழம் இனிக்குது, ஆனா அணில் நடிச்ச படம் மட்டும் கடிக்குது, அது ஏன்?

-------------------------------

8. கம்பளியாய் போர்த்தி இருந்தவனை கம்பளி பூச்சி போல் உதறி விடச்செய்து விடுகிறது காதல்

-------------------------

9. கடவுளே! அடுத்த ஜென்மத்துலயும் இவளே என் மனைவி ஆகனும்.

கடவுள் - ஒரு தடவை பட்டும் உனக்கு புத்தி வர்லையா?

------------------------------

10. கேபிள் சங்கர் - நான் இன்று முதல் என் ஹேண்டிலை மாற்றுகிறேன் .

பைபிள் ஷங்கர் - அப்போ நாளை? #FEB 14. யாரை மாத்துவீங்க அண்ணே @ 13.2.12 கேட்ட கேள்வி

-------------------------------





http://www.koodal.com/cinema/koodal_reel/2012/amala-adhar-3.jpg

11. டைரக்டர் சார், அந்த நடிகை வீட்டுக்கு வாரா வாரம் போறீங்களே,ஏன்?

நான் அறிமுகம் செஞ்ச ”படத்துல”  அவரை சரியா பயன்படுத்தலைன்னு சொன்னாங்க


---------------------------------

12.டியர், உனக்கு தாடி கெட்டப் சூப்பர், பிரபுதேவா மாதிரியே இருக்கே!

நயன் தாரா மாதிரி கழட்டி விடப்போறே-னு நாசூக்கா சொல்றியா?#FEB 14


----------------------------------

13. பிச்சைக்காரர்கள் = ஈகைக்குணம் வளர்ப்பவர்கள், இரந்து வாழ்பவர்கள் என கண்ணியமாக அழையுங்கள்

விலைமாது-கட்டண சேவையில் மோகம் தீர்ப்பவர் என் கவுரவமாக அழைக்கலாம்

----------------------------------------

14. மேனேஜர் சார், நாளை எனக்கு லீவ் வேணும்,வேடிக்கை பார்க்க பார்க் போகனும்..

அது சரி, நானும் அங்கே தான் போறேன், அப்புறம் ஆஃபீசை  யார் பார்த்துப்பா?

---------------------------------

15. DR,தேங்காய் எண்ணெய் யூஸ் செஞ்சா உடம்புக்கு நல்லதா?

விளக்கெண்ணெய் போல் பேசாதீங்க, கொழுப்பு ஆல்ரெடி ஜாஸ்தி,இந்த லட்சணத்துல தே எ ?நாஸ்தி

-------------------------------------

16. உங்க படத்துக்கு ஜான்சன் -னு டைட்டில் வெச்சீங்களே, ஏன் மாத்தீட்டீங்க?

ஆட்சி மாறிடுச்சு, அதான் ஜான்”ஜெயா”-ன்னு மாத்திட்டேன்

---------------------------------

17. கேப்டன் நடிக்கும் அடுத்த பட டைட்டில் - சட்டசபையில் சலம்புவது எப்படி?

-----------------------------

18. மேடம், காதலர் தினத்துக்கு உங்க படம் 2 ரிலீஸ் ஆகுது போல..?

ஆமா, எந்தப்படம் ஹிட் ஆகுதோ அந்த பட ஹீரோவை சின்சியரா லவ்வலாம்னு  இருக்கேன்

--------------------------------------------

19. அத்தான், என் டிரஸ்ஸிங்க் சென்ஸ் பற்றி என்ன நினைக்கறீங்க?

என்னது? உனக்கு சென்ஸ் இருக்கா?

------------------------------------

20. ராகுல் சொல்றதை எல்லாம் நம்பறது நாட்டுக்கும்கூகுள் சொல்றதைஎல்லாம் நம்பறது  வீட்டுக்கும் நல்லதல்ல 


----------------------------------



http://www.koodal.com/cinema/gallery/events/2011/777/muppozhudhum-un-karpanaigal-audio-launch-stills_14_144613123.jpg

ரேப் மேட்டரை கண்டுக்காதீங்க - பம்மும் மம்தா , விம்மும் தும் ததா - காமெடி கும்மி

http://www.sudarnila.com/images/mamtha332.jpg 

கோல்கட்டா: ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கி, என ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.


 சி.பி - மேடம், நம்மாளுங்க வெறும் வாய்லயே அவல் மெல்லுவாங்க,கும்பகோணம் வெற்றிலை கிடைச்சா சும்மா விட்டுடுவாங்களா? இதை வெச்சே ஒரு மாசம் ஓட்டிட மாட்டாங்க?


மேற்குவங்க மாநிலத்தில் கோல்கட்டாவின் பார்க் ஸ்டீரிட் எனற நைட் கிளப்பிலிருந்து கடந்த 5-ம் தேதி வெளியே வந்த 35 வயது ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் வீடு திரும்புவதற்காக காரில் இருந்த சிலரிடம் லிப்ட் கேட்டுள்ளார். 

 சி.பி - பகல்லயே நடராசா தியேட்டர்ல பிட் படம் பார்க்கறவங்க மிட் நைட் மசாலா பார்க்காமயா இருப்பாங்க.. நைட் கிளப் தனியா  போனது முதல் தப்பு, மிட் நைட்;ல லிஃப்ட் கேட்டது 2 வது தப்பு.. 90% பொண்ணு மேல தான் தப்பு இருக்கு..


ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்று ஓடும் காரில் கற்பழித்தனர்.. இது தொடர்பாக கடந்த 11-ம் தேதி போலீசில் புகார் கூறப்பட்டது.


சி.பி -  - சம்பவம் நடந்தது 5 ந்தேதி.. புகார் குடுத்தது 11 ல 6 நாள் பாப்பா பேரம் பேசிட்டு இருந்துச்சா?ஏன் முதல்லயே புகார் தர்லை? அதையும் விசாரிக்கனும்.. 

 



இந்த சம்பவத்தில் முன்னாள் சபாநாயகரின் மகனுக்கு தொடர்பிருப்பதாகவும், ஆளும் கட்சி என்பதால் ஆங்கிலோ இந்திய பெண் கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை இல்‌லை என எதிர்க்‌கட்சியினர் குற்றம்சாட்டினர்.


சி.பி - பொதுவா ஆளுங்கட்சில இருக்கறவங்க யாருக்கும் அறிவே கிடையாது.. பிரச்சனை பெருசாகும்னு தெரியும்போதே ஏதாவது ஸ்டெப் எடுத்து ,பேச்சு வார்த்தை நடத்தி பைசல் பண்ணி இருக்கனும், நாம தானே ரூலிங்க் பார்ட்டி நம்மை என்ன பண்ன முடியும்னு ரூடா நடந்துக்கிட்டா இப்படித்தான் சில லட்சங்களில் முடிக்க வேண்டிய மேட்டரை இப்போ பல கோடி கொடுத்து சரி செய்யனும்..  விலைவாசி ஏறிக்கிடக்கு


இந்த சூழ்நிலையில் நேற்று முதல்வர் மம்தா கூறுகையில், ஆங்கிலோ இந்திய பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தினை அரசியலாக்க வேண்டாம். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் உண்மை நிச்சயம் வெளியேவரும். இதற்காக எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.என்றார்.


சி.பி - ஓஹோ ,அப்பவும் உங்க கட்சி ஆளை கூப்பிட்டு கண்டிக்க மாட்டீங்க..?ஏன் இப்படி பண்ணாருன்னு கேள்வி கேட்கற எதிர்க்கட்சி ஆட்களைத்தான் மிரட்டுவீங்க..?



கோல்கட்டா போலீஸ் கமிஷனர் பி.‌கே. பச்சன்ந்தா கூறுகையில், கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் ஆங்கிலோ இந்திய பெண், கனடா நாட்டைச் சேர்ந்தவர் கடந்த ஜனவரி 2-ம் தேதி மேற்குவங்கம் வந்துள்ளார். 


சி.பி - மேற்கு வங்கம் வந்த பெண்ணுக்கு ஏற்பட்டது கற்பில் பங்கம்.. அதில் ஆளுங்கட்சி ஆட்கள்  வகித்தார்கள் அங்கம்..இனி அங்கே உருவாகப்போகுது கற்பழிக்கப்பட்டோர் நலவாழ்வு சங்கம்


சம்பவம் நடப்பதற்கு முன்பு அவரிடம் சிலர் தகாத முறையில் நடந்துள்ளதாக பார்க்ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு கொடுத்துள்ளார். பின்னர் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னரே போலீசிற்கு தெரியவந்துள்ளது.. மேலும் அவரது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்கள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


சி.பி - போலீஸ்க்கு சம்பவம் நடந்த அன்னைக்கே தெரிஞ்சுருக்கும்.. பக்கி பசங்க ஆளுங்கட்சி ஆள்ங்க கிட்டே பேரம் பேசிட்டு இருந்திருப்பாங்க. 

Thursday, February 16, 2012

பிரபல பாடகி சின்மயி ட்வீட்டர்கள் மேல் கேஸ் போடப்போகிறாரா? எதனால்? பர பரப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgupdUUT3DJhcaTZjOqJY9zsbI2yQBe5NXXwRV-yuU9ayyw0IUApF0p32VKK5nLY-2gVPINm0k7pe3P1lZYcyxf9GiNmPyeOWJFTAkscougghgaVps9SwE0TU0-WErKl-Xc-EfLl_a7A-Fv/s1600/singer_chinmayi_new_saree_photos_02.jpg

 பாடகி சின்மயி ட்விட்டரில் அக்கவுண்ட் வெச்சிருக்கார்.. நம்ம பசங்க கொஞ்ச நேரம் கடலை போட்டிருக்காங்க. அதுல ஏதோ உரசல் ஆகி சண்டை வந்துடுச்சு.. நிறைய அக்கவுண்ட்டை பிளாக் பண்ணிட்டாங்க போல..சின்னாத்தா அப்டினு செல்லமா நம்ம ஆளுங்க கூப்பிட்டிருக்காங்க, மேடம் செம காண்ட் ஆகி ஒரு அறிக்கை விட்டுட்டாங்க.. இந்த மாதிரி தொடர்ந்து கிண்டல் செஞ்சா சைபர் கிரைம்ல கேஸ் போடுவேன்னு சொல்லிட்டாங்களாம்..  அவங்க வெளியிட்ட அறிக்கை


 I'm no feminist but I see even on Twitter there are a lot of men who revel in intimidation and harassing women more than men.
I wonder what brings about that attitude. However those who ill-treat women, no matter where have a lot coming toward them.
Sadly the most abusive/haranguing pack that I have ever seen is a group of Tamil tweeters. An embarrassment for every respectable Tamil tweeter & our culture.
I have an ancestry that boasts of well known Tamil scholars - a Tamizh valarthha kudumbam -, I'm super proud of my lineage and at the same time embarrassed that some Tamil tweeters are the same ones who revel in abusing women/elders/politicians/celebrities in the crudest of languages - but for what joy?

There has to be civility even if one disagrees with the other.

I read somewhere that there was no temples of Sita but there are statues of Kannagi everywhere. Quite struck a chord.

What goes round comes around.

And when the injustice is against women, the strength of the boomerang will be manifold. http://tl.gd/fumfoi · Reply


 http://www.hindu.com/mp/2009/02/21/images/2009022161491201.jpg

1.விஜய் டிவி - அடுத்த பிரபுதேவா யார்?


 ஆ ராசா வழியில் 9தாரா -முதலில் வருபவருக்கு முன்னுரிமை, முதல் உடன் வருபவருக்கு தனிஉரிமை,காதல் பொதுவுடமை

----------------------------------

2. பிரபல பாப் பாடகி ஷகிராவை கடல் சிங்கம் தாக்கியது. # ஒரு சிங்கரை சிங்கம் தாக்கியதே அடடே!


------------------------------

 3. தலைமை ஏற்கத்தயார்-அழகிரி# மின்வாரியத்தலைவர் ஆகிடறீங்களா? - ஜெ


---------------------------------

 4. தனுஷ் - யாரும் என்னை தப்பா பேசாதீங்க, ரஜினி பொண்ணை RT பண்ணிட்டு இருக்கேன், கமல் பொண்ணை ஃபேவரைட் பண்ணி வெச்சிருக்கேன்


-----------------------------------

 5. ரஜினி மகளை கட்டிகிட்டதால என் அடையாளமே போச்சி-தனுஷ் # ஹும், தனுஷ்க்கு பொண்ணு குடுத்ததால என் குடும்ப கவுரமே போச்சு - ரஜினி


---------------------------------

 6. மீண்டும் சிம்பு - நயன் தாரா # வாழ்க்கை ஒரு கேவலமான வட்டம்டா, மிஸ் லேகா வாசிங்க்டன் நீங்க ஆல்டர்நேடிவ்வா என்ன பண்ணப்போறீங்க?


----------------------------------

 7. என் அழகுக்கு காரணம் தண்ணி தான் -ரிச்சா # என் அறிவுக்கு காரணமும் தண்ணிதான் - கேப்டன்


--------------------------------

 8. காங்கிரசுக்கு ஆதரவு என காலையில் அறிவித்து விட்டு மாலையில் பல்டி அடித்த சமாஜ்வாடி முலாயம் சிங் # ராம்தாஸை விட பெரிய டகால்டி ஆள் போல

---------------------------------

9. ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணை கூட கூட்டிட்டு போலாம்னு நினைக்கறவன் காதல் ஆதிக்கவாதியா?

--------------------------------

10. சார்,உங்க கவிதைல சம்பந்தமே இல்லாம உருப்படிங்கற வார்த்தை வருதே ஏன்?

 உருப்படியா ஒரு கவிதை கூட எழுதலைன்னு யாரும் இனி சொல்ல முடியாதே?

--------------------------------------

http://tamil.cinesnacks.net/photos/actress/Chinmayi/singer-chinmayi-hot-004.jpg

11. சட்டசபைல ஆபாசப்படம் பார்த்தீங்களாமே, ஏன்?

 யுவர் ஆனர், வீட்ல பார்த்தா சம்சாரம் துடைப்பக்கட்டையாலயே அடிப்பா..

---------------------------------

12. பிரபல பாடகி - என்னை சின்ன ஆத்தான்னு யார் கூப்பிட்டாலும் கேஸ் போடுவேன் .

மேடம், பெரிய ஆத்தான்னு கூப்பிடனும்னா 40 வயசு தாண்டனும் # be cool

---------------------------------

13. கொள்ளைக்காரர்களைஇரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்-ஜெ # உங்களுக்கு சாஃப்ட் ஹேண்ட், சரிப்பட்டு வராது,என்னை சி எம் ஆக்குங்க - கேப்டன்

---------------------------------

14. தலைவருக்கு ”இணை” யாருமே இல்லை - அன்பழகன் # குடும்பத்துல குழப்பத்தை ஏற்படுத்தாதய்யா - கலைஞர்

------------------------------------

15. மக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும் -ஜெ # மேடம், அதற்கு தடை இல்லாத மின்சாரம் வர வேண்டும், தூங்குனாத்தானே விழிக்க?

------------------------------

16. சினிமாலதான் புதுமுக நடிகைகள்க்கு அமோக வரவேற்பு, பிரபல பத்திரிக்கைகளில் புதுமுகங்களை (ட்விட்டர்) ஊக்குவிப்பது குறைவு # ?????

-------------------------------

17. ரியாஸ் - எதுக்கும் ஒரு வக்கீலை வெச்சுக்கனும் போல 

மிஸஸ் ரியாஸ் - யோவ், ஆல்ரெடி நர்ஸை வெச்சிருக்கறது போதாதா?# ஜஸ்ட் ஜோக்

-------------------------------

18.யாருமே படிக்காத மாதிரி பூட்டி வெச்சிருக்கறவங்க குணச்சித்திர ட்வீட்டராம், ஓப்பனா வெச்சிருக்கறவங்க கிளாமர் ட்வீட்டராம், அடங்கொய்யால

-------------------------------------

 19. சார் (ரு), நீங்க பெண்களை மதிக்கறதே இல்லையாமே?


 அபாண்டமான குற்றச்சாட்டு, டெயிலி 84 பொண்ணுங்களோட சேட் பண்றேன், மதிக்காமலா?

------------------------------

20. காதல்ங்கறது அணில் பட ட்ரெய்லர் மாதிரி.. பர பரப்பா இருக்கும், ஆனா ஊத்திக்கும். ஊ ஊ ஊ

------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBze2bvar0kJH3V9sIzFjPmOd5aCsYQAoUjIXu8nNcEBVTPMICXYNW5Vtl5HMKf5vgI7DVXb1bLOUWXrDJdbHPtNspe06dfRJoEuKHB1hKA274B5wSni-oYhwz41ApvY0OtIQu4uiTKLtK/s1600/singer_chinmayi_new_photos_stills_pictures_05.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (17.2.2012) 6 படங்கள் முன்னோட்டம்

பிப்ரவரி 14இல் வரவேண்டிய லவ் சப்ஜெக்ட் படங்கள் கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் பிரகாரம்  வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. 

http://www.padalai.com/ak/wp-content/uploads/2012/01/KSE_01.jpg


1. காதலில் சொதப்புவது எப்படி? - கலைஞர் டி வி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அபார வரவேற்பை பெற்ற குறும்படம்.. யூ டியூப்பில் லட்சக்கணக்கான ஹிட்ஸை அள்ளியது.. சித்தார்த்- அமலா பால் ஜோடி.. இந்தக்கால இளைஞர்கள் காதலை எப்படி லைட்டா எடுத்துக்கறாங்க?எப்படி எல்லாம் ஃபிகர்ங்களுக்கு நூல் விடறாங்க? என்பதை காமெடியா சொல்லி இருக்கற படம்.. 

இயக்குனர் ஷங்கரின்  எந்திரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இரும்பிலே ஓர் 
இருதயம்’ பாடலின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக  அறிமுகமானவர்  வைரமுத்துவின் வாரிசான கார்க்கி.

குறுகிய காலத்தில் கோ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என்னமோ ஏதோ’, எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற “ நெஞ்சில் நெஞ்சில்”, 180 படத்தில் இடம் பெற்ற ‘நீ கோரினால்’உள்ளிட்ட பல வெற்றிப்  பாடல்களை இவர் எழுதியுள்ளார்.

சமீபத்தில் தன் ட்விட்டர்  தளத்தில் தன் 50-வது பாடலை இயற்றிய செய்தியை தனது  ரசிகர்களுடன்  பகிர்ந்துகொண்டுள்ளார் கார்க்கி.

சித்தார்த், அமலா பால்  நடிப்பில், தமன் இசையில், இயக்குனர் பாலாஜி இயக்கி, ஓய் நாட் நிறுவனம் தயாரிக்கும் ‘காதலில் சொதப்புவது எப்படி' என்ற முழுநீள நகைச்சுவை காதல் படத்திற்கு  கார்க்கி தன்  50-வது பாடைல எழுதியுள்ளார்.

 படத்துக்கான மார்க்கெட்டிங்க் செம, அந்தக்கால குமுதத்தில் வந்த படக்கதைகள் போல ரொம்ப எளிமையா , புதுமையா விளம்பரம் செஞ்சு இருக்காரு.. படம் காதலர்கள், இளைஞர்களை கவரும் என்பது உறுதி..ஈரோடு அபிராமியில் ரிலீஸ்

http://123tamilcinema.com/images/2011/10/muppozhudhum_un_karpanaigal_movie_poster.jpg

2. முப்பொழுதும் உன் கற்பனைகள் - எல்ரெட் குமார் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் தயாரித்துள்ள முப்பொழுதும் உன் கற்பனைகள்  ஒரு சைக்கோ லவ் த்ரில்லர் மாதிரி தோணுது..

இயக்குநர்கள் கவுதம் மேனன் மற்றும் கே வி ஆனந்த் இசைத் தகட்டை வெளியிட்டனர்.

அதர்வா, அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு காதல் கதை. எனவே காதலைக் கொண்டாடும் விதத்தில் அரங்கத்தை அலங்கரித்திருந்தனர்.

இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு ட்ரெயிலரை திரையிட்டுக் காட்டினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்ட பாடல் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

ருக்மினியின் பாலே நடனமும், படத்தின் பாடல்களை பாபா செகல், மாயா, சிதாரா ஆகியோர் மேடையில் பாடியதும் ரசிகர்களைக் கவர்ந்தன.

எல்ரெட் குமார் முதல் முறையாக இயக்கியுள்ள படம் இது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகும் முன்பே பாடல்கள் ஹிட்... படத்தோட ட்ரெய்லர்ல ஒளிப்பதிவும், லிக்கேஷன் செலக்‌ஷனும் கலக்கல்.. ஈரோடு ஆனூர், ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்

http://4.bp.blogspot.com/-hGKKSkLdrS0/TlKMyBqrXNI/AAAAAAAALz4/hBxA2zqTqxE/s1600/Tamil+3d+movie+ambuli+images_thumb%255B15%255D.jpg

3.  அம்புலி - 3 டி -
கே.டி.வி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் நிறுவனத்துக்காக லோகநாதன் தயாரிக்கும் 3டி படம், அம்புலி. முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அஜெய், ஸ்ரீஜித் ஹீரோக்கள். சனம், ஜோதிஷா ஹீரோயின்கள். இசை: கே.வெங்கட் பிரபு சங்கர், சாம் சி.எஸ்., சதீஷ், மெர்வின். ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர்.


இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் பாடல்களை வெளியிட்டனர். பிறகு இப்பட நிறுவனம் சார்பில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:


மை டியர் குட்டிச்சாத்தான் 3 டி படத்துக்குப் பிறகு விஜயகாந்த் நடித்த அன்னை பூமி 3 டி படம் வந்தது. டெக்னிக்குகள் நிறைய வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழில் ஏன் அதிகமாக 3 டி படங்கள் உருவாகவில்லை என்று தெரியவில்லை. நானும் 3 டி படம் இயக்கப் போகிறேன். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டேன். கலையை ரசிக்கும் எண்ணம் மாறி, பொழுதுபோக்கிற்காக மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வௌ;வேறு புதிய முயற்சிகள் செய்து, எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு படங்கள் தர வேண்டும். இவ்வாறு சேரன் பேசினார்.
விழாவில் பார்த்திபன், நமீதா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், யுடிவி தனஞ்செயன், டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டார், அன்னபூரணியில் ரிலீஸ்


 4. உடும்பன் -
 'உடும்பன்'படத்திற்கு தடை உத்தரவு
சென்னை, பிப்.2 (டிஎன்எஸ்)  மாடர்ன் சினிமா சார்பில் s ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'உடும்பன்'. இப்படத்தின் எழுத்து, இயக்கம், இசை s.பாலன். இதில் இந்தியாவின் பிரபல பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்த மாதம் வெளிவர தயார் நிலையில் உள்ள இப்படத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சென்னை, சூளை சார்ந்த செல்வராஜ், வனவிலங்கு ஆர்வலர் சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதி லக்ஷ்மிகாந்தன் தடை உத்தரவு போட்டுள்ளார். இதை கேட்டறிந்த தயாரிப்பாளர் s .ஜெகநாதன் அதிர்ச்சியுற்றார்.

"நங்கள் படபிடிப்பிற்க்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரிய துறையிடம் (ANIMAL WELFARE BOARD OF INDIA )அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம், மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழு (CENSOR BOARD ) " U "சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆகவே இந்த தடை உத்தரவை முறையாக எல்லா ஆவணங்களையும் செலுத்தி, இந்த தடைகளை சட்டபூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படத்தை வெற்றிகரமாக திரையிடுவோம்" என்று தயாரிப்பாளர் s .ஜெகநாதன் கூறியுள்ளார். (டிஎன்எஸ்).. ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்
 http://www.heyuguys.co.uk/images/2012/01/the-woman-in-black-vintage-poster.jpg

5. THE WOMAN IN BLACK -   ஹாரி பாட்டர் நாயகன்  டேனியல் ரேட் க்ளிப் நடிச்ச படம்.. திகில் கம்  பேய்ப்படம். இளம் வக்கீலா வர்றார்.. ஒரு கிராமத்துக்கு ஹீரோ வர்றார்.. அங்கே இருக்கும் பழி வாங்க துடிக்கும் ஒரு பெண் பேயை சந்திக்கிறார். ( பொதுவா எல்லா பேய்ப்படங்கள்லயும் ஏன் பெண்களே பேயா வர்றாங்க? ஹி ஹி , நாம படம் எடுத்தா ஆம்பளை பேயை காட்டனும் ) ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

http://static.guim.co.uk/sys-images/Guardian/About/General/2011/10/18/1318946094652/Still-from-The-Woman-in-B-006.jpg


6. காட்டுப்புலி -  அர்ஜுன் நடிப்பில் பாலிவுட்டில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குனர் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப்புலி மும்பை மற்றும் அதனைச் சுற்றிய காட்டுப் பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்டு திகில் நிறைந்த காட்சிகளாக உருவாகியுள்ளது.

http://www.filmics.com/tamil/images/stories/news/2012/February/09-02-12/kaattu-puli-movie-news.JPG

சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளான அரசியல், காவல் மருத்துவம் ஆகியவற்றில் புனிதமான துறையாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர்.


முழுக்க முழுக்க நரமாமிசம் உண்பவர்கள் (Cannibals) மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜுனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள் கொலைகள் அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜுன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் கதை. 

அர்ஜுனுக்கு ஜோடியாக பிரியங்கா தேசாயும் அவர்களது மகளாக தான்யாவும் நடித்திருக்கிறார்கள். இதில் மூன்று ஜோடிகளாக ராஜ் நீஸ், சாயாலி பகத், அமீத்- ஹனயா, ஜாஹன், ஜெனிபர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


மூன்றாவது ஜோடியாக வரும் காதலர்களுக்கிடையே வரும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கு கட் சென்சார் கொடுத்துள்ளது. . …அந்த கிறங்கடிக்கும் காட்சியை சில நொடிகளுக்கே வருமாறு குறைக்கப்பட்டதில் இயக்குனருக்கு வருத்தம் எனினும் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.


டினு வர்மா தனது கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் காட்டு புலிக்கு இசை விஜய் வர்மா. காட்டு புலி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது.

http://cinesouth.com/images/new/26052011-THN12image1.jpg


டினு வர்மா தனது சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக 7 முறை பிலிம் ஃபேர் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்