Tuesday, October 04, 2011

வித்தியாசமாண கோணத்தில் ஏமாற்றப்பட்ட கும்ப கோணம் பதிவர் - உண்மை சம்பவம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு திருப்பு முனை.. ஆனால் பலருக்கு அது வெறுப்பு நிலை ஆகி விடுகிறது...நான் ஏற்கனவே பகிர்ந்த சென்னை பெண் பதிவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் படித்து அதே போல் தன் வாழ்வில் நடந்த ஒரு துக்க சம்பவம் குறித்து நண்பர் மெயில் அனுப்பினார்...


கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் தான்... ஒரு நல்ல காரியம் நடக்கனும்னா 1000 பொய் கூட சொல்லலாம் என்ற வாதமே தவறு.. 1000 முறை போய் சொல்லி.. அதாவது எல்லா சொந்தக்காரர்கள் ,நண்பர்கள் வீட்டுக்கும் 1000 முறை போய் சொல்லி விசேஷம் நிகழ்த்த வேண்டும்.. அதுதான் கல்யாணம்.. காலப்போக்கில் நம்ம ஆளுங்க ஏதோ  பொய் சொல்லி எப்படியோ கல்யாணம் நடத்துனா சரின்னு நினைக்கறாங்க.. . கும்ப கோணத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் கதை இது..

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/march/ponguniuthiram3.jpg

பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்  பொருட்டு கடினமாக படித்து, காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தான். இது போதும் என் பிறவிப்பலனை அனுபவித்தேன் என்ற நிம்மதியில் தூக்கத்திலேயே தந்தையின் உயிர் பிரிந்தது. அன்றில் பறவை போல் இணை பிரியாதிருந்த அன்னை தன் மகனுக்காக தன் துக்கத்தை விழுங்கி முன்போல் நடமாடினார். தன் தாயே தனக்காக துக்கத்தை ஜீரணித்ததைக் கண்டு, தாயிற்காக தானும் துக்கத்தை மறந்து முன்போல் இயங்க ஆரம்பித்தான்.

இப்படியே காலம் சென்றிருந்தால், நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் விதி யாரை விட்டது. அதற்கு தெரியுமா? நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன் என்று. ரஞ்சித் வாழ்விலும் விதி விளையாட ஆரம்பித்த போது அவனுக்கு திருமண வயது நெருங்கியது.



தந்தையில்லாத குறை தன் மகனுக்கு தெரிய கூடாதென்று பார்த்து பார்த்து மகனுக்கு பெண் தேடினாள் அந்த தாய். தாய் மீது கொண்ட அன்பினால் எதிலயும் தலையிடாமல், தாய் மேல் பாரத்தைப்  போட்டுவிட்டு, ஏகப்பட்ட‌ கனவுகளுடன், தரகர் மூலம் வரனாக வந்த ரேவதியை பெண்பார்க்க சென்றான். ஒரே பெண். இளங்கலை கணிதம் படித்த, சமையல், வீட்டு வேலை அனைத்தும் தெரிந்த பெண் வரனாக வீடு தேடி வந்தது.


நிமிர்ந்தும் பாராத அடக்கம் ரஞ்சித்திற்கும், எந்நேரமும் அம்மாவுடனோ, உறவுப் பெண்கள் துணையுடன் இருந்த வெட்கம் தாயிற்கும் பிடித்துப் போகவே சம்மதம் சொல்லி பிப்ரவரி 2005 திருமண தேதி குறிக்கப்பட்டது.


வருங்கால மனைவியுடன் பேச ஆசைப்பட்டு, போன் போடும்போதெல்லாம் குளிக்குறா, வெளியில் போயிருக்கா, தூங்குறா, அவளுக்கு வெட்கமா இருக்காம் என்ற பதில்கள் வந்தாலும், சரி ஆத்து தண்ணியை, கிணத்து தண்ணியா கொண்டுபோகப்போகுதுனு தன் ஆசைகளை திருமணத்திற்கு பின் என ஒத்தி வைத்தான்

மணநாளும் வந்தது, திருமணமும் நடந்தது.  எப்பவும் தோழிகளுடனோ, உறவு பெண்களுடனோ  இருந்ததைக்  கண்டு சற்று எரிச்சல் பட்டாலும், தன் மனைவி, உலகம் அறியாதவள் அவளுக்கு நாம்தான் உலகத்தை புரிய வைக்க வேண்டுமென நினைத்து. தன் சின்ன சில்மிஷங்களை ஒத்திவைத்தான்.

மோகம் தீர்க்கும் முதலிரவு அறையில் உள்நுழைந்த மனைவியை கரம்பற்றி, அருகமர்த்தி பேச முயலும்போது, திக்கி திணறி பதிலுரைத்த போது, சிறு பெண்ணிற்கு பயம் என நினைத்து, பயத்தை போக்க கட்டியணைத்தபோது, வெறிவந்தவள் போல் அவனை கீழேத் தள்ளி, படுக்கையை கசக்கி, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி மயங்கி விழுந்தவளை சற்று பயத்தோடுதான் பார்த்தான். இருந்தாலும் தாயின் மனம் கோணிடாமல் மறைத்து, விருந்து, மருந்தெல்லாம் முடித்து காஞ்சிப்புரத்திற்கு தனிக்குடித்தனம் வந்தாகிவிட்டது.

உறவினர்களெல்லாம் கலைய, தாயும், மகனும், மருமகளும் மட்டுமே. மெல்ல மெல்ல பெண்ணின் சாயம் வெளுக்க தொடங்கியது. எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை. சிறு பிள்ளைபோல டி.வி, விடியோ கேம்ஸ், தாயம் இதெல்லாம் ஆடுவதும், சாப்பிடுவதும், உறங்குவதும் தான் பிரதான வேலையே. சரி செல்லமாக வளர்ந்தப் பெண்,  குழந்தை பிறந்தால் சரியாகிடும்டா என மகனுக்கு ஆறுதல் சொல்ல, அப்போதான் மகன் வெடித்தான் அவ இன்னும் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்துவரலைனு. மகனின் எதிர்காலமே குறியென நினைத்து கஷ்டத்தையெல்லாம் தாங்கிய தாய் பொங்கியெழுந்து, மருமகளை அழைத்துக் கொண்டு சம்பந்தி வீட்டிற்கு நியாயம் கேட்க போனவளுக்கு அதிர்ச்சியும், அவமானம் மட்டுமே பதிலாய் கிடைத்தது.



ரேவதி மனதளவில் குழந்தையாகவும், உடலளவில் குமரியாகவும் இருக்கும் விஷயம் பேரிடியாய் இறங்கியது. படிப்பும் டிகிரிலாம் ஏதுமில்லை எனவும் தெரிய வந்தது. சரியென்று மனதை தேற்றிக்கொண்டு, தனக்கு மகள் இல்லை, அதனால் மகளாய் நினைத்து பார்த்துக் கொள்கிறேன் என திரும்ப அழைத்து வந்து மகனை சமாதானப்படுத்தி,மருத்துவ சிகிச்சை செய்தால் சரியாகிடும் னு மகனை தேற்ற தொடங்கினாள். அக்கம் பக்கம் வீட்டில் போய் திருடுவது, பொருட்களை உடைப்பது, மரியாதையில்லாமல் பேசுவது என நாளுக்கு நாள் ரேவதியின் அட்டகாசம் அதிகமாகியது,  அக்கம் பக்கம் வீட்டினர் வந்து புகார் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


மனம் நொந்து போன தாயும், மகனும், ரேவதியை அவள் பிறந்த வீட்டிற்கே கொண்டு போய் விட்டுட்டு, இவளை சமாளிக்க முடியலை, இவளால் எங்களுக்கு கஷ்டம்தானே தவிர , மகிழ்ச்சியில்லை, அதனால் விவாகரத்து செய்ய போறோம்னு சொல்ல, தாராளமாக செய்யுங்க, ஆனால், 50 லட்சம் ஜீவனாம்சமா குடுத்துடுங்க, இல்லைனா வரதட்சனை கேட்குறீங்கனு உங்க மேலயே புகார் குடுப்போம் என்ற மிரட்ட, மிரட்டலுக்கு பணியாததால் பொய் புகாரளித்து, தாயையும்,மகனையும் சிறையில் அடைத்தனர்.


எப்படியோ போராடி, உண்மையை வெளிக்கொணர்ந்து,ஒருவழியாய் விவாகரத்து வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்தித்ததால் மனம் நொந்து போனார்கள் இருவரும். மெல்ல மெல்ல தன் கண் முன்னாலேயே தன் இயல்பை இழந்து சீரழியும் மகனைக் கண்ட தாய் மனதின் பாரம் தாளாமல் இதயம் வெடித்து இறந்தே போனாள். ( ஹார்ட் அட்டாக்)


தன் திருமண வாழ்வு பொய்த்து போனது, சமூகத்தில் தான் பட்ட அவமானம், தாயின் மரணம் எல்லாம் சேர்ந்து அவனை இன்று கவலையற்ற மனிதனாய் "மனநல காப்பகத்தில்" வாழ வைத்துள்ளது.


இதில் யார் செய்த  தவறு  ரஞ்சித்தின் இன்றைய நிலைக்கு காரணம்:?


1. பாசம் கண்ணை மறைக்க தீர விசாரியாமல் மணமுடித்த தாயின் மீதா?

2.தாய்ப்பாசம் கண்ணை மறைக்க, கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்ன ரஞ்சித் மீதா?

3. பணத்திற்கு ஆசைப்பட்டு, உண்மைகளை மறைத்து, மணமுடித்த தரகர் மீதா?


4. திருமணம் செய்தால் தன் மகள் நோய் குண்மடையுமென்று நம்பி அப்பாவி பிள்ளைத் தலையில் கட்டி, மகள் வாழ்க்கையை காசாக்க நினைத்த பெண்ணின் பெற்றோர் மீதா?


யார் மீது தவறென்றாலும், பாதிக்கப்பட்டது ரஞ்சித்தும் அவன் தாயும்தான். இனி கோடிகோடியாக செலவழித்தாலும், ரஞ்சித்தின் தாயோ, இல்லை ரஞ்சித்தின் வளைமையான எதிர்காலமும், வனப்பும் ஆரோக்கியமும் திரும்பவருமா? சிந்தீப்பார்களா ரேவதியின் பெற்றோர் போன்ற மன நிலையை கொண்டோர்.


இந்த சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

1. திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், பொண்ணும் அவசியம் சந்தித்து பேச வேண்டும்.. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் சில நிமிடங்கள் பேசினால் தப்பில்லை..

2. அக்கம் பக்கம் நல்லா விசாரிக்கனும்..

3. வரன்களின் நண்பர்கள், அக்கம் பக்கம், ஆஃபீசில் பணிபுரிபவர் என விசாரிப்பது நல்லது.

4. ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல் திருமணத்துக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியானவர்தானா ? என்பதை  அறிந்து கொள்வது அவசியம்

(ஏன் எனில் எனக்குத்தெரிந்து 24 வயதாகியும் பூப்பெய்தாமல் மணம் முடித்துக்கொடுத்து விவாக ரத்து வரை போன கதை நடந்திருக்கிறது பல இடங்களில்)

5. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகப்போயிடும் என்ற வாதம் அபத்தமானது..


டைரக்டர் நடிகையை டெவலப் செய்தாரா?

1.டியர்! நம்ம லவ் சக்ஸஸ் ஆகறதுல சிக்கல் இருக்கு.

  நான் நாமக்கல், நீ திண்டுக்கல்,இதுல தஞ்சை ,மாவட்ட சிக்கல் எப்படி வந்தது?

-------------------------------

2. கனிமொழியை விட ஆ ராசா சீனியர்னு எப்டி சொல்றே? 

அவரு 150 நாளா ஜெயில்ல இருக்கார், இவரு 225 நாளா ஜெயில்ல இருக்காரே?

----------------------------

3. சி.பி.ஐ தலைவர்ட்ட 5 மணீ நேரத்துல 500 கேள்விகள் கேட்டுதாமே? 

300 நிமிஷத்துல 500 கேள்வியா? கேள்வி கேட்டாங்களா? ஒப்பிச்சாங்களா?

-------------------------------------

4. மேடம், அடிக்கடி கூந்தலை கோதி விட்டுக்கறீங்களே? அதுதான் உங்க மேனரிஸமா? 

இல்லை, அது விமனரிஸம்

-------------------------------

5.  நடிகை- என் கேரக்டரை  டெவலப்  பண்ண டைரக்டர் ரொம்ப ஹெல்ப் பண்ணுனார்.

. வெரிகுட், அப்புறம்? என்னையே டெவலப் பண்ணிட்டார்

--------------------------------

http://img.16reels.com/pictures/news/displayimages/288.jpg

6..விலைவாசி எவ்வளவு ஏறினாலும் இன்னும் பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் தான் வைக்கப்படுகிறது

----------------------------------

7. டியர்! சீனப்பெருஞ்சுவர் ஃபுல்லா நாம 2 பேரும் வாக்கிங்க் போனா எப்படி இருக்கும்?

கால் வீங்கிடும், 6259 கி மீ மொத்த நீளம்

------------------------------------

8. மூடு (MOOD) வர வைக்க ஏதாவது மந்திரம் இருக்கா? 

ஓ! அந்த மூடு மந்திரம் எனக்கு தெரியாது.

-------------------------------------

9. கடலை மன்னன் கந்தசாமின்னு உங்களுக்கு எப்படி பெயர் வந்தது? 

அதை விடுங்க மிஸ்!உங்க பேர் என்ன? எங்கே படிக்கறீங்க? தேவதை மாதிரி இருக்கீங்களே?

-----------------------------------

10. உலக சினிமா எடுத்திருக்கறதா சொன்னீங்க, ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே? 

உலகம் பூரா ஹிட் ஆகி ஓடுன ஹாலிவுட் படத்தோட ரீ மேக்தான்.
------------------------------
http://www.chitramala.in/photogallery/d/424553-1/Swathi-200609002.jpg

11.மீடியம் ஃபிகர் என்றால் என்ன?


நாம 10 டைம் பார்க்கறப்ப பார்ட்டி 5 தடவையாவது நம் கண்களை சந்தித்தால் அது மீடியம் ஃபிகர் எனப்படும்

-----------------------------------
12. மரண ஃபிகர் யார்? 

ஒரு முறை நம் பார்வையை அவள் கண்கள் சந்தித்தாலே போதும்,அதற்குப்பிறகு இறந்தால் கூட கவலை இல்லை என நினைக்க வைக்கும் ஃபிகர்

----------------------------------------

13.  அலை கடல் என நீ ஆர்ப்பரிக்கிறாய்! பொஸஸிவ்நெஸ் எனும் சாக்கு சொல்லி என் சுதந்திரத்தை பறிக்கிறாய்!

----------------------------------------

14. மிச்சமான ஃபிகர் யார்? 

விழுங்கி விடுவது போல்  நாம்  அவள் அழகை ரசித்த பின்னும் 100% அழகையும் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கும் அழகு ஃபிகர்

-------------------------------

15. தெனாவெட்டான ஃபிகர் யார்? 

நம்மை கண்டு கொள்ளாத எல்லா ஃபிகர்ஸூம் தெனாவெட்டான ஃபிகர்ஸே!

--------------------------------

16. திமிரு ஃபிகர் யார்?

XQSமீ மிஸ், உங்க ஃபோன் நெம்பர் என்ன? என எத்தனை டைம் கேட்டாலும் சொல்லாத ஃபிகர் திமிரு ஃபிகர் எனப்படும்

--------------------------------

Monday, October 03, 2011

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்க்கே சவால் விட்ட நாயகி!!!

James Thornbrook


James Thornbrook1.ஏன் சார் பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க?உங்க மூடு அவுட்டுக்கு காரணம் யாரு? 

“ சோனா” 

சரி, இனி யாரு உங்களை காப்பாத்தப்போறாங்க? 

”நைனா”

-------------------------------------------------

2. மேடம், பட பூஜைக்குத்தானே போறீங்க?கூடவே ஒரு வீடியோகேமராமேன் எதுக்கு? 

அங்கே எவனாவது என் கையை பிடிச்சு இழுத்தா அதை ஷூட் பண்ண,விட்னெஸ்க்கு!

-----------------------------------

3. யுவர் ஆனர்! டவாலி என்னை 3 டைம் கூப்பிட்டாரு! 

கடுப்பை கிளப்பாதேம்மா! பெட்ரூமுக்கா கூப்பிட்டாரு?கோர்ட் கூண்டுக்கு த்தானே கூப்பிட்டாரு?

---------------------------------

4.  இசை அமைப்பாளர் தேவாவுக்கும்,SPB சரண்க்கும் என்ன வித்தியாசம்? 

அவரு கானா பாட்டுக்கு ஃபேமஸ்.. இவர் சோனா ஃபைட்டுக்கு ஃபேமஸ்

-------------------------------------------

5.  வக்கீல் - சோனா கேஸை பொறுத்தவரை........ 

அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.... அரசுத்தரப்பு வக்கீல் என் கட்சிக்காரரை கேஸ் என்கிறார்

-----------------------------------

6. கே பாக்யராஜ்க்கே சோனா சவால் விட்டாராமே? 

பின்னே ?என்னதான் திரைக்கதை மன்னனா இருந்தாலும் அவர் அளவுக்கு இவரால கதை விட முடியலையே?

-------------------------

7.  பிஸ்னெஸ் விஷயமா பேசுனதா சொல்றீங்க.. கையைப்பிடிச்சு இழுத்ததா அவங்க சொல்றாங்களே? 

-என் பிஸ்னெஸே பொண்ணுங்க கையைப்பிடிச்சு இழுக்கறதுதாங்கோவ்!!

----------------------------


funny and beautiful species pictures6

8. 2012 மார்ச் 31 வரை சோனா கேஸ் கோர்ட்ல நடக்கும்.. 

ஓஹோ.. அதுக்குப்பிறகு? அடுத்த நாள் காலைல ஐ ஏப்ரல் ஃபூல்  னு 2 பேரும் சொல்லப்போறாங்க!

------------------------------

9.  மழலைகள் இருக்கும் வீட்டுசுவர்கள் எந்த அளவு கிறுக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறதோ அந்த அளவு சுதந்திரத்துடன் அது வளர்க்கப்படுகிறதுனுஅர்த்தம்

---------------------------

10. அம்மாவுக்குப்பிறகு ஒரு குழந்தையின் அதீத அரவணைப்பு பொம்மைக்குத்தான் கிடைக்கிறது.. 

-------------------

11. தனது எல்லா உணர்வுகளையும் மொழி வழியே புரிய வைத்தால் தோழி, விழி வழியே புரிய வைத்தால் காதலி!

-----------------------------

12. சந்தர்ப்பங்கள் சாதகமாகட்டும் என காத்திருக்கும் கழுகாக ஆண், அப்படி எதுவும் அமைந்து விடக்கூடாது என ஓட்டுக்குள் நத்தையாய் பெண்!

---------------------------

13. ஆண் , பெண் நட்புகளில் எதிர்பாலை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்பும், லேசான செயற்கைத்தன்மையும் வந்து விடுகிறது!

--------------------------

14, பெரும்பாலான் ஆண்கள் தன் தாய், சகோதரி தவிர்த்து  மற பெண்களை மனதளவிலாவது எல்லை தாண்டி கண்களால் ரசிக்கிறார்கள்

--------------------------------

15. மறைக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் காதலும் மரண வலியை மனதிற்குத்தருகிறது

--
 --------------------------------------------

ஒரு மிச்சமான ஃபிகர் நம்மளை கண்டுக்கலைன்னா என்னா செய்யனும்?

1. என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள், தலையை இடமிருந்து வலமாக அசைத்தாள், காதல் கிறுக்கெழுத்துப்போட்டியில் நான் ஃபெயில், அவ்வ்வ்

------------------------------------

2. ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்கு வாய்ப்புகளை வாரி வழங்குகிறது, ஒவ்வொரு சூரிய  அஸ்தமனமும் இன்று நீ என்ன செய்தாய்? என வினவுகிறது

----------------------------

3. ஆழ்ந்த காதல் (DEEP LOVE) என்பது உலகில் உள்ள மிக மெதுவான மரணம் ( SLOW DEATH)

-------------------------------

4. பஸ்ல மிச்சமான ஃபிகர் பார்த்தேன், அது கண்டுக்கவே இல்லை, ,பியூட்டி பார்லர் போய் புருவத்தை குறைச்சு,பருவத்தை மறைச்சு எதாவது பண்ணனும்

----------------------------

5. யுவர் ஆனர், இந்தாளு என்னை பப்ளிக்ப்ளேஸ்ல கிஸ் அடிச்சுட்டாரு..

உங்க உதடு பிரைவேட் ப்ளேஸ்னு நினைச்சே, பப்ளிக் ப்ளேஸா? ஐ ஆம் சாரி

-------------------------------

6. நீ அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதே! இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதிகம் நேசிக்காதே! #இம்ப்பாசிபிள்

----------------------------------

7. அழகு ஃபிகர் என்பது என்ன?

தூங்கி எழுந்து கழுவாத முகத்துடன் பார்த்தால் கூட ஆயிரம் வானவில்லின் அழகு தெறித்தால் அது அழகு ஃபிகர் எனப்படும்

----------------------------------

8. இண்ட்டர்நேஷனல் ஃபிகர் என்பது என்ன? 

ஒரு மொக்கை ஃபிகர் எல்லா நாடுகளுக்கும் டூர் போய்ட்டு வந்துட்டால் அது இண்ட்டர்நேஷனல் ஃபிகர்  ஆகிவிடும்

-------------------------------------



9. டியர். நான் ஒண்ணு சொல்வேன். கோவிச்சுக்க மாட்டிங்களே..? 

ச்சே.ச்சே. 1,2,3,4,  இன்ஃபினிட்டி வரை நீ எந்த நெம்பரை வேணாலும் சொல்லு, நோ கோபம்

-----------------------------

10. போதி மரத்தின் அடியில் உக்காந்தா எல்லாருக்கும் ஞானம் பொறக்குமா? 

அது டவுட், மேரேஜ் பண்ணிக்கோ, குழந்தை பிறக்கும், அதுக்கு ஞானம்னு பேர் வை

---------------------------------

11 ஆண்கள் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்!!!!பெண்கள் உணர்ந்ததை வெளியே சொல்ல ஒத்தி வைப்பார்கள்

----------------------------

12. ஆணைப்போல், பெண்கள் கவர்ச்சியை ரசிப்பதில்லை, பெண்கள் அன்பையும், ஆண்கள் அழகையும் ரசிக்கிறார்கள்

----------------------------------

13. பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து  ஜெ-வை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது. # நீதி - கேஸை ஜவ்வா 10 வருஷம் இழுக்கனும்

-------------------------------

14.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி # அடுத்த அரெஸ்ட் அண்ணன் தான்னு தகவல் போயிருக்குமோ? முன் எச்சரிக்கை நடவடிக்கையோ?

-------------------------------


15. அடுத்து, திமுக ஆட்சிதான் வரும் என்று, லட்சக்கணக்கானோர் சொல்லி, அதை நம்பிக் கெட்டவன் நான் - கருணாநிதி # நீங்க மட்டுமா?ராம்தாஸ்கூடத்தான்

------------------------------------

Saturday, October 01, 2011

வெடி - சமீராரெட்டியின் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

https://lh3.googleusercontent.com/-t-DBoo60IDA/Tkj-7oo0o8I/AAAAAAAAAzo/Z_GglHL5FMQ/vedi-1.jpg 

விஷால்க்கு கதை எழுதனும்னா டைரக்டர்கள் யாரும் சிரமமே படத்தேவை இல்லை.. இடைவேளை வரை காமெடியனை வெச்சு மொக்கை காமெடி  போட வேண்டியது, ஹீரோயின் கிளாமரை வெச்சு 2 டூயட் பாட வேண்டியது.. ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவாரு.. வந்த ஊர்ல ஒரு ரவுடி கும்பலோ, தாதா கும்பலோ அந்த ஊரை ஆட்சி செய்யும், அண்ணன் அவங்க அட்டூழியத்தை, கொட்டத்தை அடக்குவாரு.. டேய்.. திருந்துங்கடா  டா டா...


படத்தை ஓரளவுக்காவது தியேட்டர்ல உக்காந்து பார்க்க முடியுதுன்னா சமீராரெட்டியின் கிளாமரும், விவேக்கின் சுமாரான காமெடியும் தான்...

சமீராரெட்டியை ஸ்விம்மிங்க் பூலில் தள்ளி விட்டதும், நனைந்த பனியனோடு அவர் எழுந்து நிற்கும்போது ஒரு பய தியேட்டர்ல கண் இமைக்கலையே... வழக்கமா டூயட் வந்தா தம் அடிக்க போற பசங்க கூட இருடா.. ஏதாவது சீன் இருக்கும்னு நம்பிக்கையா உள்ளேயே இருந்தாங்க.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/vedi-vishal-sameera-reddy-hot-photos.jpg

ஹீரோவுக்கு தங்கையா ஒரு ஃபிகரு ஹீரோயினை விட நல்லாருக்கு... பாப்பாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டுன்னு தோணுது. ஆனா பாப்பா சிரிக்கறப்ப அழகா இருக்கு.. அழும்போது பார்க்க சகிக்கலை.. நல்ல நடிகைன்னா அழும்போது கூட ரசிக்க வைக்கனும்.. 

விவேக் ஏற்கனவே வடிவேல் பண்ணுன காமெடி கேரக்டரான வெட்டி பயில்வான் கேரக்டர்.. அதாவது பலூனை அவர் டிரஸ்ஸுக்குள்ள மறைச்சு வெச்சு பாடி பில்டர்னு ஃபிகர்ங்க கிட்டே பீத்திக்குவாராம், சகிக்கலை, ஆனா தியேட்டர்ல சிரிக்கறாங்க.. 

சமீராரெட்டி ஏனோ வயசான மாதிரி நல்லாவே இல்ல.. முகத்தை தவிர மற்றதெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.. அவரது ஹேர் ஸ்டைல் சகிக்கலை..

அண்ணன் புரட்டாசித்தளபதி ஒரே மாதிரி முக பாவம்... உணர்ச்சியே இல்லாம வசனம் பேசறது.. மாடுலேஷன்னா என்னன்னு அண்ணன் கமல்ட்ட இருந்து கத்துக்கனும், அவன் இவன் பார்த்துட்டு இதைப்பார்க்கறப்ப கடுப்பா இருக்கு..



http://www.chitramala.in/photogallery/d/573912-1/vedi-movie-stills-_1_.jpg
படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  மை மதராஸ் சே ஆயா ஹூங்க்... 

விவேக் - எங்காயா கல்கத்தா.

2. ஒரு நாளுக்கு நான் 25 மணி நேரம் எக்சசைஸ் பண்றேன்..

அதெப்பிடி? 24 மணி நேரம் தானே?

3.  எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்?

நீயும் என்னை மாதிரியே தப்பு தப்பா ஹிந்தி பேசுனியே?

4.  மாஸ்டர்.. நட்ட நடுராத்திரில மொட்டை மாடில என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

மூன் பாத் டேக்கிங்க்.. 

உங்க பை செப்ஸை காண்பிங்க.. 

வேணாம்.. அது கிளார் அடிச்சு நிலால இருக்கற பாட்டிக்கு கண் கூசும்.. 

5.  ரீமா சென் - நான் உன்னை ரேப் பண்ணப்போறேன், நீ கதறிக்கதறி அழப்போறே.. 

அவன் ஏன் அழறான்..? ஒன்ஸ்மோர் தான் கேட்பான். ( அதானே?)

6.  என் பொண்ணு பூஜைல இருக்கா..

மணி ஓசை கேட்டுதுங்க்..

அவ ரொம்ப பக்திங்க..

பார்த்தேன்..!!!

7. நீங்க வீட்டுக்கு வந்திருக்கற விருந்தாளி , காபி சாப்பிட்டுட்டுதான் போகனும்.. 

அது சரி.. ஏன் வீட்டுக்குள்ள இருந்து டம்ளர் மட்டும் பறந்து வருது?

அது வந்து... விருந்தாளிங்க காத்திருக்கறது என் மனைவிக்கு பிடிக்காது.. நீங்க டம்ளரை பிடிங்க.. நான் காபியை எடுத்துட்டு வர்றேன்.. 

8. இந்த உலகத்துல எப்பவும் ஒர்க் அவுட் ஆகறது செண்டிமெண்ட்ஸ் தான்..

9.  டேய்.. பேட்டைப்பார்த்து பால் போட வேண்டியதுதானே.....

எஸ்.. அப்டித்தான் போட்டேன்..

டேய்.. என் உயிரோட விளையாடிட்டே டா....

என்ன ஆச்சு மாஸ்டர்....?
ம் .. குச் குச் ஹோத்தா ஹை..

10.  மாஸ்டர்.. நான் பாலு பேசறேன்,... 

நான் பலூன் பேசறேன்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKymyG8HrFU32I0BwBUerahFPT6rbup_ICv_42RaobMaec9ymWW6d952wiQCcplkGUjlXoMgwTrgtD-Ake0cuybhS5CINCgk0cysGW0AE8F9vVfDrbwKqi4m-EDjitgqIfyyehIkTc-a0/s1600/Sameera-Reddy-hot-pics.jpg

11.  ஏக் காவ் மே  ஏக் கிசான் ரஹதா தா 

அப்டின்னா?

ஒரு குகைல ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்.. 

12. இந்த பலூன் மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும், வெளில யார் கிட்டேயும் சொல்லிடாதே.. மீறி வெளில சொன்னே.. அநாவசியமா நான் உன் கால்ல விழ வேண்டி இருக்கும்.. 

13. ரீமா சென் - நாந்தான் மன்னிப்புக்கேட்டுட்டேனே.. ஏன் முறைக்கறே.. 

ஃபோனைக்குடு,,,

ம்.. அதை வெச்ச இடத்துல தேடு..

உன் சர்ட்டுக்குள்ள வெச்சே.. எடுத்துக்கவா?

14. ஏண்டி.. அவன் நம்மளைப்பற்றிதானே பேசறான்?

இல்ல.. உன்னைப்பற்றி..
15. ஹீட்டரை சரி பண்ணனும்...


யோவ்.. முதல்ல என்னை சரி பண்ணுய்யா.. 

16. கடைசில பொண்ணுங்க அடிக்கறது மொட்டை தானேடி.. அது காதலனா இருந்தாலும் சரி.. கழட்டி விட்டவனா இருந்தாலும் சரி..

17.  முள் படுக்கைல குப்புற படுங்க , இந்த 5 பேரும் உங்க மேல ஏறி நடப்பாங்க. வேண்டுதல் முடிஞ்சிடும்.. 

ம்க்கும், எனக்கு எல்லாம் கிழிஞ்சிடும்.. 

18.  எல்லாரையும் நாம கொல்ல வேண்டியதில்லை.. நம்ம மேல இருக்கற பயமே அவங்களை சாகடிச்சுடும்.. 

19.  என் தங்கச்சி மேல எவன் கை வெச்சாலும் நான் அவனை அடிப்பேண்டா அடிப்பேண்டா அடிப்பேண்டா டா டா டா . # புரட்டாசித்தளபதி விஷால் பஞ்ச டயலாக் @வெடி

20. என் மேல கேஸ் போட நான் அல்ப சொல்ப இல்லடா # வில்லன் பஞ்ச் டயலாக்


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-11.jpg

21.  போலீஸ்னா பயம் இருக்கக்கூடாது, பயம் இருந்தா போலீஸா இருக்கக்கூடாது..

22.  அங்கே ஒரு கேனம் இருப்பான், அவன் கிட்டே ஃபோனைக்குடுங்க.. 

இங்கே கேனம் யாரு?

அய்யாதான்

23. டாக்டர்.. விளையாடறீங்களா? உங்களை தூக்கிடுவேன்.. 

உங்க வலது கையையே உங்களால இப்போ தூக்க முடியாது.. 

24. டீ வாங்கிட்டு வான்னு சொல்லி இருந்தாக்கூட பரவால்ல.. கழுவிட்டு வாங்கிவாண்ட்டாங்களே..

25. சீக்கிரமா வந்தா உன் பொணத்தை உன் தங்கை பார்ப்பா, லேட்டா வந்தா உன் தங்கை பொணத்தை நீ பார்ப்பே,,

26.. டாக்டர்.. வலி பயங்கரமா இருக்கு.. 

கவலைப்படாதே.. நின்னுடும்.. 

எப்போ?

உயிர் போனதும்...

27. பயம் எப்படி ஸ்டார்ட் ஆகுது?

எப்படி வரும்கற டவுட்லயே ஸ்டார்ட் ஆகும்..

28. நான் செத்தாலும் நீ சொல்றதை செய்ய மாட்டேண்டா...

உல்டாவா பேசாதே.. நான் சொல்றதை செய்யலைன்னாத்தான் நீ சாவே,,

29. டாக்டர், இஞ்செக்‌ஷன் போட்டாச்சா?

ம், நீங்க என்கவுண்ட்டர்ல போட்ருங்க

30. சின்ன வயசுல இருந்தே பயம்னா என்னன்னே தெரியாம வளர்ந்துட்டேன்.. பயம்னா என்னன்னு காட்றா.. பாக்கனும்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf4Wbbc6DLF7uzGMWtVcl8tpaHvOn2Cj_8ULqV43i3CLyFzV2sEJ2NASw9r08zqu2sL-gRAq_9skc7vO5-lIgCNj232y7KckTvRvL5w-NjvmVnBPD0okB-ujSKXDVrXEPfWWUo-XJnctSw/s1600/Hot%252520Sameera%252520Reddy-21%255B1%255D.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதலிக்கப்பெண்ணொருத்தி, என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு?, இப்படி மழி அடித்து, மேலே மேலே , இச் குடு என 5 பாடல்களையும் ஓரளவு பார்க்கும்படி படம் ஆக்கியது.. 

2. ஹீரோயின் தங்கை கேரக்டருக்கு அழகு ஃபிகரை புக் செய்தது

3. குப்பை படத்தில் கூட ரசிக்க வைக்கும் ஊர்வசி காமெடி காட்சிகள்

4. ஒரு சீனில் கூட பிரபுதேவா தலையை காட்டாமல் விட்டது

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW0dS09wsQCWa0kEoTno7dGXMP0IrW5EC1n4G-wqpxrrL5S0LQmqCnefkh163DX035I0LG5FkC2kGYHRCPsFf5oCm87w_CQZWrM1POIy7LOLqAzUEqX24PSFFnQJuQ4rkJuhi3Y5hvYKs/s1600/Vedi-Movie-Hot-Stills-Photos-Gallery-1.jpg


இயக்குநர் பிரபுதேவாவிடம் சில கேள்விகள்

1. வில்லனின் உடம்பில் ஸ்லோபாய்சன் ஊசி போட்டு பின் அவனை ஹீரோ மிரட்டி எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கும் சீனை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது?

2.  விஷால் எப்படி ஒவ்வொரு சீனிலும் 34 பேரை அடித்து துவைக்கிறார்?

3. பாத்ரூமில் ஹீரோவை டர்க்கி டவல் மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோயின் கட்டிப்பிடித்தால்தான் காதல் வருமா?

4. ஃபிளாஸ்பேக்கில் விஷாலின் தங்கையாக வருபவர் ஒரு பேட்டை ரவுடியின் மகள்.. அதற்குத்தகுந்தபடி ஆளை செலக்ட் செய்திருக்கலாம்..அவர் பணக்காரப்பொண்ணு போல அதுவும் சேட் வீட்டு பொண்ணு போல இருக்கிறார்..

5. அநாதை இல்லத்தில் தங்கையை மட்டும் தனியாக ஏன் விட வேண்டும்? அதே அநாதை இல்லத்தில் விஷாலும் வளரலாமே?வாட் லாஜிக்? அண்ணன், தங்கை இருவரும் வளர அநாதை இல்லத்தில் ரூல்ஸ் கிடையாதா?

6.. போலீஸ் ஆஃபீசராக வரும் விஷால் ஏன் எப்போதும் லை தாடியோடவே இருக்கார்?

7. கொல்கத்தா வந்த பின் விஷால் என்ன தொழில் செய்யறார்? ஹீரோயின்  பின்னால் சுற்றுவது தவிர....




ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள், பி செண்ட்டர்களில் 15 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாம், உங்களுக்கென்ன தலையெழுத்தா?
 http://www.chitramala.in/photogallery/d/573918-1/vedi-movie-stills-_4_.jpg



டிஸ்கி 1 -

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

\

டிஸ்கி 3 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

http://www.allmoviewallpaper.net/wp-content/uploads/Johnny-English-Reborn-Wallpaper-06.jpgஅடிதடி ஆக்‌ஷன் ஜேம்ஸ்பாண்ட் படங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு அட்டகாசமான காமெடி கலாட்டா நகைச்சுவை படம் தான் இது.. குழந்தைகளுடன் அனைவரும் காணவேண்டிய  மிக கண்ணியமான நகைச்சுவைப்படம்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட சீக்ரெட் ஏஜெண்ட் ஹீரோ மிஸ்டர் பீன் எனப்படும் இங்க்லீஷ். இண்ட்டெர்நேஷனல் லெவெலில் முக்கிய தலைவர்களை போட்டுத்தள்ளும் கும்பலை பிடிக்க இங்கிலீஷ்தான் சரியானவர் என மேலிடம் நினைக்கிறது.. அவரை மீண்டும் பணிக்கு வர வற்புறுத்துகிறது.. ( இந்த சீன் விக்ரம் படத்தில் கமலை சாருஹாசன் வற்புறுத்துவதை நினைவு படுத்தியது.. )

ஓபனிங்க் எண்ட்ரியே கலக்கல் காமெடி.. 36TH ஷாலின் டெம்ப்பிள் படத்தை நக்கல் அடிக்கும் வகையில் மிஸ்டர் பீன் செய்யும் காமெடி சேஷ்டைகள் நரசிம்மராவ் பரம்பரையைக்கூட ரசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும்.. 

அதே போல் எதிராளியை துரத்திக்கொண்டு ஓடும் சேஸிங்க் காட்சியில் ஜாக்கி சானின்  படங்களில் வரும் ஜம்ப்பிங்க், தகிடு தித்த சாகஸங்களையும் வாரு வாரியிருக்கிறார்.. ஆனால் ஜாக்கிசான் ரசிகர்களும் ரசிக்கும் வகையில்.. 

வில்லனின் ஆள் 50 அடுக்கு மாடியில் இருந்து மூங்கில் கம்பங்களில் கால் வைத்து சாகஸமாக , கஷ்டப்பட்டு இறங்க, ஹீரோ அசால்ட்டாக லிஃப்டில் வந்து அவனைப்பிடிப்பது....உயரமான இடத்தில் வில்லன்  அநாயசமாக ஜம்ப் செய்ய இவர் அசால்ட்டாக கேட்டை திறந்து வெளியேறுவது எல்லாமே டாப் கிளாஸ் காமெடி.. 

http://www.johnny-english.com/images/assets/trailer_thumb.png
காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1.  நீ இப்போ இளைஞன் இல்ல.. ஆனா முதுமைல தான் பக்குவம் வரும்.. நீ இப்போ கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு..

அப்போ நான் பயிற்சில தேறிட்டேனா?

இல்லை, இருந்தாலும் நீ போய்த்தான் ஆகனும்.. மேலிட உத்தரவு.. 

2.  லேடி - கேமராவைப்பாருங்க....

எஸ்...

கேமராவை மட்டும் தான் பார்க்கச்சொன்னேன், சிரிக்கச்சொல்லலை.. 

3. லேடி - உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கோம்..

கேள்விப்படாம இருந்தாதான் ஆச்சரியம்.. 

4.  டேய்.. உன்னைப்பார்த்து எவ்ளவ் வருஷம் ஆச்சு.. நீ இன்னும் மாறவே இல்லை.. மொக்கையா அப்டியேதான் இருக்கே.. 

5.  ஹாய்.. நாம பார்த்து எவ்ளவ் நாட்கள் இருக்கும்..?

சரியாக ஞாபகம் இல்ல.. 5 வருஷம், 4 மாசம், 7 நால் ஆஇ இருக்கும்னு தோணுது.. ( நக்கலு!!)

6.  சாரி மிஸ்டர் இங்கிலீஷ்.. உங்களுக்கு எந்திரிச்சு நின்னு மரியாதையா வணக்கம் வைக்கனும்னு நினைக்கறேன்.. ஆனா ஆண்டவன் என் காலை எடுத்துட்டான்..

ஓகே நோ பிராப்ளம் சார்.. கை குடுங்க.. வீ வில் ஷேக் த ஹேண்ட்ஸ்,...

சாரி.. அதுவும் ஒரு ஆக்சிடெண்ட்ல பணால்.. இது இயந்திரக்கை தான்..

ஓ!! எனக்கு ஒரு டவுட்.. உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னா  டாக்டர்ட்ட காட்டுவீங்களா? அல்லது மெக்கானிக் கிட்டே காட்டுவீங்களா? ( இரும்புக்கை மாயாவி கேரக்டரை கிண்டலிங்க் )

7.  நாம் எப்போதும் அமைதி வழிகளையே கடைப்பிடிக்கனும்..

அமைதி வழிகளையே கடைப்பிடிக்கனும்னு ஏன் இவ்ளவ் சத்தமா சொல்றீங்க.. ?

8.  வாய்ஸ் மாத்தற பபிள்கம்மை இங்கே வெச்சிருந்தேன், யாராவது பார்த்தீங்களா?

(ஹாலில் இருக்கும் 7 பேரும் சும்மா இருக்க அதை சாப்பிட்ட பீன் வேறொரு வாய்சில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை கணக்காய் )

இல்ல நான் எடுக்கல

http://www.stardusttrailers.com/gallery_film/Johnny_English_Reborn(movie_wallpaper_pictures_photo_pics_poster)Johnny_English_Reborn_3.jpg

9.  யாரைத்தேடறே?

இங்கே எங்காவது சோடாபுட்டி போட்ட சப்ப மூக்கு சைனாக்காரன் இருக்கானான்னு பாரு..

10.  சீக்ரெட் ஏஜெண்ட் கோர்டு வோர்டாக - உங்க பாட்டிக்கு உடம்பு சரி இல்லையா?

பீன் - அவங்க இறந்து பல வருஷங்கள் ஆச்சே?

11.  யார் நீங்க?

நான் சின்ன ஆள் தான்.. ஆனா பெரிய வேலை செய்யற சீக்ரெட் ஏஜெண்ட்...

12.  லேடி - என் பேரு ஷர்மிளா....

இருந்துட்டுப்போங்க.. அதுக்கென்ன இப்போ?

13.  பிரைம் மினிஸ்டர் ரொம்ப கவலையா இருக்கார் மிஸ்டர் பீன்....

அவர் மினிஸ்டரா இருக்கறதால மக்கள் தானே கவலைப்படனும்?

14.  எனக்கு கால்ப் விளையாடத்தெரியாம இருக்கலாம், ஆனா  பேட் எப்படி பிடிக்கறதுன்னு கூடவா தெரியாம இருக்கும்?

15.  MI - 7 ஒரு களவாணி..

இல்லை , உளவாளி..

ஒரு வேளை உளவாளியா இருக்கும் களவாணியா இருக்குமோ?

16.  மிஸ்டர் பீன்.. நீங்க பண்றதெல்லாம் ஓவர் பில்டப்பு.. ஆனா ஒரு இழவும் உங்களுக்குத்தெரியல..

 http://15img.skins.be/3/2/6/5/4/4/5/277350691-rosamundpike-johnny-english-reborn-photo.jpg


அந்நியன் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் சீன் போல் இந்தப்படத்திலும் கலக்கலான,ஒரு சீன் உண்டு..

வில்லன் ஹீரோவுக்கு மூளையை கட்டுப்படுத்தும் மருந்தை தந்து விடுவான்.. அதைக்குடித்தபின் ஹீரோ பிரைம் மினிஸ்டரைப்போட்டுத்தள்ள ரிவால்வரில் குறி வைப்பார்.. உள்ளுணர்வு தலை தூக்கும்போது அவரே அவரை தடுப்பார்.. இந்த சீனில் மிஸ்டர் பீனின் நடிப்பு அபாரம்..

இறந்து விடும் நிலையில் இருக்கும் பீனை ஒரு ஃபிகர்  லிப் டூ லிப் கிஸ் கொடுக்க பார்ட்டி எந்த சொரனையும் இல்லாமல் கிடக்க  அவர் விலகிச்செல்லும்போது, கண்களைத்திறக்காமல் உதடுகளை மட்டும் குவித்து ஏன் நிறுத்தீட்டீங்க? கமான் எனும்போது கிளாமரான இளமைக்கொப்பளிக்கும் காட்சி..

 உயர் அதிகாரியுடன் ஹீரோ பேசிக்கொண்டிருக்கையில் அவரது செல்லப்பூனையை ஜன்னலில் இருந்து தெரியாத்தனமாக தள்ளி விட , முதுகை அவருக்குக்காட்டியபடியே , பூனையை கையில் வைத்து நீவுவது போல் டெமோ காட்டுவதும், அப்போது உள்ளே வரும் பி ஏ கீழே விழுந்த பூனையுடன் வரும்போது அசடு வழிவதும் அக்மார்க் பீன் ஸ்பெஷல் முத்திரை.

http://www.joblo.com/newsimages1/rosamundpike2353.jpg.

பிரமாதமான பொழுதுபோக்குப்படமான இந்தப்படம் பற்றிய ஃபாரீன் விமர்சகர்களின் கருத்து படம் சராசரி, சுமார் என்ற கருத்தே நிலவி வருகிறது.. நான் 6 ஆங்கில விமர்சனங்கள் படித்தேன், அனைத்துமே அப்படியே சொல்லி வந்தன..ஆனால் தியேட்டரில் நம் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பும் , சிரிப்பும் தமிழன் என்றென்றும் நகைச்சுவைப்படத்தை அட்டகாசமாய் ரசிப்பான் என்றே கட்டியம் கூறியது..

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்.... 

Director:

Oliver Parker

Writers:

William Davies, Hamish McColl (screenplay), and 2 more credits »
\

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்


 http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/09/muran_review_cheran_muran_movie_review-300x254.jpg
அன்பே சிவம் படத்தில் வருவது போல் 2 மாறுபட்ட கேரக்டர்கள் சேரன் + பிரசன்னா ,இருவரும் ஒரு கார் பயணத்தில் எதேச்சையாக இணைகிறார்கள்.தனது காதலியை தன் தந்தையே கெடுத்து அவளது தற்கொலைக்கு காரணம் ஆகி விட்டார், அவரைப்பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரசன்னா, கோடீஸ்வரியாக இருந்தாலும் தன் மனைவி தன்னை மதிக்காமல் பார்ட்டி, குடி என ஊர் சுற்றுகிறாளே என்ற ஆதங்கத்தில் வேறொரு காதலியுடன் தன் கவனத்தை திருப்பிய சேரன் இருவரும் எந்தப்புள்ளியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும்?



எஸ்.. அதே தான்...பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்வது, சேரனின் மனைவியை பிரசன்னா கொலை செய்வது.. யாருக்கும் சந்தேகம் வராது.. இது தான் பிரசன்னாவின் திட்டம்.. ஆனால் இதற்கு சேரன் உடன் பட வில்லை..


விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பல ட்விஸ்ட்களை சந்தித்து கடைசியில் என்ன ஆகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.. கதையோட  பேசிக் நாட் (BASIC KNOT) அமரர் சுஜாதாவின் எதையும் ஒரு முறை என்ற நாவலில் இருந்தும், திரைக்கதையை ஹாலிவுட்டின் திகில் கதை மன்னன் ஹிட்ச்சாக்-ன் STRANGERS ON THE TRAIN படத்தில் இருந்தும் சுட்டிருந்தாலும் , படத்தின் இயக்குநர் தமிழுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.. பிரசன்னாவின் காதலி அவரது தந்தையால் ரேப் செய்யப்படவில்லை,பிரசன்னாதான் ரேப் செய்தார் என்ற ட்விஸ்ட் எழுத்தாளர் சுபாவின் நீ நான் நிலா நாவலில் இருந்தும் சுடப்பட்டுள்ளது.

யதார்த்த நாயகன் என்ற பெயர் எடுத்த சேரன் என்னதான் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தினாலும், அசால்ட்டாக நடித்து பெயர் தட்டிக்கொண்டு செல்வதென்னவோ பிரசன்னா தான்.. அஞ்சாதே படத்துக்குப்பின் நல்ல வில்லன் வாய்ப்பு.. அவரது பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாம் அட்டகாசம்.. ஆர்யாவுக்குப்பிறகு தமிழில் அசால்ட்டாக நடிக்க ஒரு ஆள் ரெடி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZI94K623jmkk-fZPC3IBMppGws8NNtYOf5PWzAo6gf5ruyMbjo2M_NMTHdWjnUk4SBTNvXD22q6GLHJjHtiXNmDt-xoOictx7YL_LO5UJGpkb6HfrxdqkpA8CQrz50QeNZVj6SSMQzfof/s1600/muran+movie+pictures.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. அப்பன் காசை அழிக்கறதுக்குன்னே ஒருத்தன் இருப்பான் இல்லையா? அதுல இவனும் ஒருத்தன்...

2. சாதாரண லெமன் சோடா .. எவ்ளவ் மப்புல இருந்தாலும் இவன் தமிழ்லயே தெளிய வெச்சுடுவான்

3. லைஃப்ல த்ரில்லிங்கா ஏதாவது செய்யனும்..

அப்படி செய்ய நான் ஒண்ணும் முட்டாள் இல்லை.. 

அப்படி செய்யாம இருக்க நான் ஒண்ணூம் கோழை  இல்லை..
4. நீங்க இப்போ பார்க்கப்போறது பயங்கர ஆக்சிடெண்ட்.. அல்லது மிரேக்கிள்..


5.  நான் எப்பவுமே லக்கை நம்பாதவன்.. அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும்.. 

அப்போ என்னை தைரியம் இல்லாதவன்கறியா?

6. உங்க ஒயிஃபை ரொம்பவே லவ் பண்றீங்க போல.. 

சாரி..   அவள் என் ஒயிஃப் இல்லை..

உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சேன்...


மேரேஜ் ஆகலைன்னு சொல்லவே இல்லையே.. அவ எனக்கு ஒயிஃபா நடந்துக்கலை.. 

7.  லேடி - சார்.. நீங்கதான் என்னோட முதல் கஸ்டமர்.. 

வாட்?

ஐ மீன், இந்த சோப் பவுடர் வாங்க.. 

8. சார்.. உங்க வீட்ல லேடீஸ் இல்லையா?

எஸ்.. இருக்காங்க.. ஆனா இப்போ இல்லை.

சார்.. உங்க துணியை நீங்க தானே வாஷ் பண்றீங்க..?எப்டி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?

9. ஏம்மா.. இந்த அபார்ட்மெண்ட்ல இத்தனை பேர் இருக்கறப்ப என்னை மட்டும் ஏன் செலக்ட் பண்ணுனே?

 வேற யாரும் என்னை உள்ளே வர அலோ பண்ணலை சார்.. 

10.  நைட் லேட்டா தண்ணி அடிச்சுட்டு இப்படி வீட்டுக்கு வர்றியே, நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அதை நீ கேட்காதே , உனக்கு எந்த தகுதியும் இல்ல.. என்னை விட நாலுல ஒரு பங்கு கூட சம்பாதிக்க கையாலாகாத ஆம்பளை நீ...





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK6EMMSa3mnqyy-f3aNYLXylYpLJOg1KkMjxkjffZRGaLexLFsUiIQVklckiCDIK4Dp2hJO6vr4NsmDktx4lzqCM-krIhWavfKQdkJEUzwByK6PbnbpYALe2w-ozL5HIaqZwiSx7S3mEnb/s1600/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.jpg

11.  என் கிட்ட அவ என் ஃபோன் நெம்பர் வாங்குனா... எனக்கு அவ கால் பண்ணுனா,அவளுக்கு நான் கால் பண்ணுனேன்.. 2 பேரும் லவ்வ ஆரம்பிச்சுட்டோம்...

12. உங்க கிட்டே ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன்.. உங்க ஒயிஃபை நீங்க லவ் பண்றீங்களா?

விதி என் லைஃப்ல விளையாண்ட மாதிரி யார் லைஃப்லயும் விளையாடக்கூடாது..

13. ஹாய்... நீ அழகா இருக்கே.. அது உனக்கு தெரியும்.. ஆனா எனக்குத்தெரியும்கறது உனக்குத்தெரியனும் இல்லையா? அதான் சொன்னேன்.. இதை நான் தான் உன் கிட்டே முதல்ல சொல்லி இருப்பேன்னும் நான் நினைக்கலை.. ( டேய், என்னதாண்டா சொல்ல வர்றே? )

14.  உன்னை மாதிரி பணக்காரப்பசங்களுக்கு என்னை மாதிரி பொண்ணுங்க வெறும் ஃபன் தான்..

15.  ஆம்பளைன்னாலே ஒரு இண்டிவிஜாலிட்டி வேணும்.. அப்பன் காசுல உக்காந்து சாப்பிடக்கூடாது.. 

ஏய்.. யார்ட்டடி பேசிட்டு இருக்கே?

யார்ட்ட பேசுனா என்ன? சரியாப்பேசறேனா? இல்லையா?

16.  என்னால இதை ஜீரணிக்கவே முடியலை./..

ஏன், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலையே? எப்படி ஜீரணம் ஆகும்?

டோண்ட் ஜோக்.. நீங்க சொன்னதை ஜீரணிக்கவே முடியலைன்னு சொன்னேன்.. 

17.  நான் இப்படி ஒரு காரியம் பண்ணுனேன்னு லாவண்யா கிட்டே சொன்னா அவ நம்பவே மாட்டா...

சொல்லப்போறீங்களா?

நோ..

18.  உங்க மனைவியை கொலை பண்ணனும்னு உங்களுக்கு எப்பவாவது தோணி இருக்கா?

இல்லை..

தோணி இருக்கும்.. ஏன் பயப்படறோம்னா விளைவுகள்.. அதனால அப்புறம் போலீஸ்.. கேஸ், ஜெயில் இதான் பயம்..  வீ ஆர் ஸ்மார்ட் பியூப்பிள்..

19.  புரிஞ்சுக்காத பொண்டாட்டி இருந்தும் உங்க காதலி கூட நீங்க  வாழலை.. ஆனா புரிஞ்சுக்கற புருஷன் இருந்தும் உங்க மனைவி உங்க கூட வாழலை..

20.  அதுல ஒரே ஒரு பிராப்ளம் இருக்கு.. நீங்க ஷூட் பண்னப்போற அதே ரோட்ல தான் கமிஷனரும் வாக்கிங்க் வர்றார்.. 



http://cinema.dinakaran.com/cinema/CineGallery/Kollywood/Movie/Muran/vm-02.jpg

21. ஏய்.. இங்கே பாருடி.. உன் கிட்டே இருந்த அழகு திமிர் 2ம் எனக்கு பிடிச்சிருந்தது... இப்போ மேட்டர் ஓவர்,. என் த்ரில் குறைஞ்சிடுச்சு.. 

22. இங்கே பாரு... 24 வயசு வரைக்கும் கோடீஸ்வரனா வாழ்ந்துட்டு திடீர்னு பிச்சைக்காரனா என்னால வாழ முடியாது.. அதான் அப்பனையே போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டேன்.. 

23. உன்னால முடிஞ்சதை பண்ணிப்பாருன்னு சவால் விட்டீங்க..  நான் பண்ரேன்.. நீ பாரு.. 

24. வாழ்றப்ப  யாரோட பரிதாபத்தையும் சம்பதிக்காம வாழறவன் வேஸ்ட்.. 
http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/muran/muran_movie_new_stills_3080.jpg


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. சேரனின் ஃபிளாஷ்பேக் கதைக்கு பி கே பி யின் நாவல் கரு, பிரசன்னாவின் ஃபிளாஷ்பேக்கிற்கு சுபாவின் கதைக்கரு, படத்தின் மெயின் நாட்டிற்கு (KNOT) சுஜாதாவின் கதைக்கரு என இயக்குநர் ரொம்பவே ஹோம் ஒர்க் பண்ணி தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.. 

2.  இதுவரை என்னை தீண்டியதில்லை பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. அதே போல் நான் கண்டேன் நேற்று இல்லா இன்று  பாடல் வரிகளும் லொக்கேஷன்களும் அழகு..

3. சேரன், பிரசன்னா இருவருக்குமான வாய்ப்புகள், கதாபாத்திரத்தின் தன்மை எல்லாம் அளந்து வைத்திருப்பது போல் சம வாய்ப்பு.. 

4. இடைவேளைக்குப்பின் கதை எப்படி பயணிக்கும் என்பதை எளிதில் யூகிக்க வைக்காத திரைக்கதை..

5. பின்னணி இசை, ஒளிப்பதிவு இரண்டும் இந்த மாதிரி   த்ரில்லர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்திய விதம்.. சபாஷ்!!

http://mimg.sulekha.com/tamil/muran/stills/muran-stills-0204.jpg

இயக்குநரிடம் சில  கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்


1. சேரனின் மனைவியின் சகோதரன் ஒரு இன்ஸ்பெக்டர்.. அவருக்கு சேரன் மீது டவுட்.. ஓப்பனாக கேட்கிறார்.. கொலை செஞ்சியா? என, விரைவில் ஆதாரத்துடன் பிடிப்பேன் என்கிறார்.. ஆனால் அந்த இன்ஸ்பெக்டரே கொலை ஆன பின்னும் போலீஸ் நிர்வாகம் எப்படி சேரனை சந்தேகப்படவில்லை?

2.  பிரசன்னா செமயா பிளான் பண்ணி சேரனின் மனைவி, இன்ஸ்பெக்டர் என இருவரையும் கொலை செய்பவர் அதே போல் வேறு ஏதாவது பிளான் பண்ணி அப்பாவை கொன்றிருக்கலாமே? ஏன் படம் பூரா சேரன் பின்னாலயே தொங்கிட்டு இருக்கனும்?

3. கதைப்படி பிரசன்னா ஒரு லேடீஸ் செலக்டர். அதாங்க பொம்பள பொறுக்கி.. சேரனின் மனைவி ஒரு கில்மா லேடி.. சேரனின் மனைவியை கொலை செய்ய 2 மாசம் அவரை ஃபாலோ செய்யும் பிரசன்னா அவரை ஏன் யூஸ் பண்ணிக்கலை?

4. கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வேணும்கறதுக்காக சேரனின் காதலி பிரசன்னாவுக்கு காதலி மாதிரி ஒரு பிட்டை டவுட் வர்ற மாதிரி போட்டு ஏன் இயக்குநர் பேக் அடிச்சுட்டார்? அது இன்னும் செம த்ரில்லிங்காவும், ட்விஸ்ட்டாவும் இருந்திருக்குமே?

5. சேரன் வீட்டுக்குள்ள தெரியாம ரிவால்வரால நிலைக்கண்ணாடியை சுடறப்ப காதலி வீட்டுக்கு வர்றாங்க... என்ன சத்தம்?னு கேட்டதுக்கு கண்ணாடி விழுந்து உடைஞ்சிதுன்னு அவர் சமாளிக்கிறார்..காதலி வீட்டுக்குள்ள வந்தும் அந்த உடைஞ்ச கண்ணாடியை கண்டுக்கவே இல்லை.. குண்டு சத்தம் பற்றி எதுவும் கேட்கலை.. ஏன்?

6.  பிரசன்னாவின் காதலியின் தோழிக்கு பிரசன்னாவின் கேரக்டர் தெரிந்தும் அவ ஏன் தோழியை எச்சரிக்கை பண்ணலை?

7. தனது எல்லா வண்டவாளங்களும் தெரிந்த காதலி லிண்டாவின் தோழியை பிர்சன்னா ஏன் உயிரோட விட்டு வெச்சார்? அந்தப்பொண்ணு சேரனை பார்த்து உண்ஐயை சொல்றப்ப  பிரசன்னா ஏன் தடுக்க முயற்சி பண்ணலை?

8. பிரசன்னாவின் தந்தையை கொலை செய்ய சேரன் ரிவால்வரை நீட்டிக்கிட்டே வர்றப்ப திடீர்னு கமிஷ்னர் பிரசன்னாவின் தந்தையை பார்க்க வந்துடறார்..அப்போ சேரன் டக்னு ரிட்டர்ன் ஆகறாரே? அப்போ கமிஷனருக்கு டவுட் வராதா? ஏன் கண்டுக்கவே இல்லை?

http://600024.com/gallery/cache/events/muran-press-meet/muran-press-meet_08_w531_h800_600024.jpg

ஆனா இந்தக்குறைகளெல்லாம் பெரிசாத்தெரியாத அளவுக்கு படம் செம விறு விறுப்பா போகுது.. 

ஏ செண்ட்டர்கள்ல 50 நாட்கள், பி செண்ட்டர்கள்ல 30 நாட்கள் ( தீபாவளி வருதே? ), சி செண்ட்டர்கள்ல 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சஸ்பென்ஸ் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்

டிஸ்கி -1

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 3 -

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

 

 




http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12331_1.jpg

Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்



ஜெவின் புதிய வளர்ப்பு மகன்!!! அழகிரி அதிர்ச்சி!!!!!!!!!!!!!!!

1.அன்புள்ள கடவுளுக்கு, எனக்கு செம ஃபிகரை லவ்வராக்கு, அல்லது என் நண்பர்கள் அனைவரையும் ஜோடியற்றவர்கள் ஆக்கு - சுயநலமற்ற தன்மானத்தமிழன்

--------------------------------

2. உன் புன்னகையின் பாஸ்வோர்டை எனக்கு சொல், உன் கண்ணீரை நான் ஹாக் செய்து விடுகிறேன்

-----------------------------------

3. வார்த்தைகள் சில சமயம் கேட்பவனை குழப்பலாம்! மவுனம் தான் எப்போதும் கன்வின்ஸ் செய்யும்

-------------------------------

4. அரேஞ்ஜ்டு மேரேஜ் என்பது நாம் வாக்கிங்க் போறப்ப எதிர்பாராத விதமா ஒரு நாய் நம்மை கடிப்பது போல , தவிர்க்க முடியாதது ,லவ் மேரேஜ்ங்கறது நாமா நாய்ட்ட போய் ஏய் நாயே நாயே.. என்னை கடி அப்டினு கேட்டு கடி வாங்கற மாதிரி

----------------------------

5. பைலட்- யோவ்,எதுக்கு என் ஹெட்ஃபோனை பிடுங்கறே? 

மாக்கான் மாடசாமி - முதல்ல ஃபிளைட்டை ஒழுங்கா ஓட்டு,FMஐ அப்புறமா மாட்டு

---------------------------------------

6. டியர், பீச்சுக்கு வர்றப்ப எதுக்கு கைல கிளவுஸ் போட்டுக்கிட்டு வர்றீங்க?


உன்னைத்தொட்டா ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு, அதான்.....

--------------------------------------

7. உறவில் தோன்றும் அன்பு, அன்பில் தோன்றும் உறவு இரண்டும் வேறு வேறானவை

----------------------------------

8. வீட்ல காக்கா கத்துனா விருந்தாளிங்க வருவாங்க என்பது ஐதீகம், சமசாரம் கத்துனா அவங்க உடனே கிளம்பிடுவாங்க என்பது பவுதீகம்

----------------------



9. சால்ட் (salt)டாக இருப்பது பெண்ணுக்கு வழக்கம், அசால்ட்டாக இருப்பது ஆணின் பழக்கம்

-----------------------

10. பிரிவும், கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல, அவர்களை அதிகமாக நினைப்பதற்கு! # திங்க் பாசிட்டிவ்

--------------------------------------

10. அசால்ட்டா இருக்கும் சில ஆண்களுக்கு எதிரான கவன ஈர்ப்புத்தீர்மானமாகக்கூட பல பெண்களின் முந்தானை சரி செய்யல் இருக்கக்கூடும் # அவதா (ளி)னிப்பு

---------------------------------------

11. படித்த அம்மாவோ, படிக்காத அம்மாவோ அவளே அன்பையும்,அரவணைப்பையும் தன் குழந்தைக்கு கற்றுத்தரும் ஆசான்

------------------------------

12. ஏண்டா அழறே? அப்பாவை ஃபிரண்டா நினைச்சு என்ன மேட்டர்னு சொல்லு.

அது 1ம் இல்ல மச்சி,  ஐஸ் க்ரீம் கேட்டதுக்கு உன் ஆளு என்னை அடிச்சுடுச்சு.

--------------------------


13. ஜெவோட புது வளர்ப்புமகன் பேரு கோகுலா? யாரைக்கேட்டாலும் கோகுல்ல பாருங்கறாங்களே?


அறிவுக்கொழுந்து அழகிரி அண்ணே! அது கோகுல் அல்ல, கூகுள் (டைட்டில் ஜோக்)

------------------------------

14.ஃபிகர்ங்க சைட் அடிச்சா யாரை சைட் அடிக்குதுன்னு எவனுக்கும் தெரியறதில்லை, ஆனா பசங்க சைட்அடிச்சா ஊருக்கே தெரிஞ்சுடுது # நீதி-ஆண் ஓப்பன்டைப்

------------------------------------

15. பெண்களுக்கு கூந்தல் ஒரிஜினலா இருந்தா மிக அழகு. சவுரி கணக்கில்சேர்க்கப்படாது. இதை ஒத்துக்கறவங்க RT பண்ணவும், ஒத்துக்காதவங்க ஃபேவரைட் பண்ணவும்!

---------------------------------------