Showing posts with label கும்பகோணம். Show all posts
Showing posts with label கும்பகோணம். Show all posts

Monday, June 30, 2014

900 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கற்சிலைகள்: @ கும்பகோணம்

சோழ மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்களில் சில மட்டுமே இன்னமும் வழிபடும் நிலையில் உள்ளன. பெரும்பான்மையான கோயில்கள் பிற்கால மன்னர்களின் படையெடுப்பு மற்றும் காலவெள்ள த் தில் கரைந்து போய் காணக் கிடைக்காமல் போய்விட்டன. 

 செருகுடியில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்தி.

எங்கேயோ எப்போதோ அக் கோயில்களின் சிதிலங்கள் வெளிப் பட்டு அதன் தொன்மைத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு சிதிலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் கிடைத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தார். 


கும்பகோணம் வட்டத்தில் கோவிலாச்சேரிக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான செருகுடியில் ஒரு குளக்கரையின் ஓரம் சிவலிங்கம், நந்தி, சண்டிகேசுவரர் ஆகிய மூர்த்திகள் காணப்படுகின்றன. 



நெடுநாட்களாகவே அவை அந்த இடத்தில் இருப்பதால் அதன் முக்கியத்துவம் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது. இந்நிலையில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட் டத்தார் இத்தகைய கோயில்களைப் புனரமைத்து பூஜைக்குரியதாக்கும் அரும்பணியைச் செய்துவருவதை அறிந்த செருகுடி ஊர்மக்கள், அவர்களை அணுகி தங்கள் ஊரில் சிவலிங்க மூர்த்தி உள்பட கோயிலின் அடையாளங்கள் இருப்பதை தெரிவித்தனர். 


இதையடுத்து செருகுடி சென்ற இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி கள் அங்குள்ள சிவலிங்க மூர்த்தி, நந்திதேவர், சண்டிகேசுவரர் ஆகியவற்றையும், அவ்வூரில் உள்ள செல்லியம்மன் கோயி லில் வைக்கப்பட்டிருந்த சூரியன், விநாயகர், பைரவர் திருமேனி களையும் பார்வையிட்டார். அவற்றை முழுவதும் ஆய்வு செய்தபோது அவை 900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும், விக்கிரமசோழன் காலத் தில் கருங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் அங்கு இருந்திருக்க வேண்டும் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

 சண்டிகேசுவரர்.

அதிலும் சண்டிகேசுவரரின் அழகு வார்த்தைகளில் சொல்ல இயலாத பேரழகுடன் இருக்கிறது. விரிசடை கேசமும், ஆழ்ந்த சிவ தியான முகமண்டலமும் கொண்டதாக வெள்ளைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது அந்தக் கால கலைநயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 


பழமைமிக்க சிவாலயம் இருந்த இடத்தை திரும்பவும் அவ்வண்ணமே ஆக்கிட ஊர்மக்களுடன் கலந்து பேசி முன்பு கோயில் இருந்த இடத்தில் புதிய கோயில் ஒன்றை நிர்மாணிக்க முதல் கட்டமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பேசிய திருவடிக்குடில் சுவாமிகள், “வழிபாடு நடக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு, அங்கு உபயம் செய்வதைவிட இப்படி தொன்மையும், தெய்வ கடாட்சமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, அழிந்துபோன நிலையிலும் உள்ள கோயில்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார். 


நன்றி - த இந்து

Sunday, September 02, 2012

கும்பகோணம் -கோயில் சொத்துக்கள் கோடிக்கணக்கில் மோசடி

ஒப்பிலியப்பன் நகை அரோகரா!


காரணமானவர்களைக் காப்பாற்றுகிறார்களா?

பலே திருட்டு அம்பலம்


ஒரு கோயில் கொள்ளை மெதுவாக மறக்கப்பட்டது. இப்​போது மறைக்கப்படும் கொடுமை நடப்​பதாகச் செய்திகள் வருகின்றன!


108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்றது கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில். தொன்​மையான இந்தக் கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மோசடி செய்திருப்பதுதான் திடுக்.



கடந்த 2008-ம் ஆண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பதுபோலவே மார்க்கண்டேயருக்கும் தங்கக் கவசம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக கோயில் இருப்பில் இருந்த நகைகளோடு பாரம்பரியம் மிக்க அரிய வகையான தங்க, வைர நகைகளையும் சேர்த்து உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதாகக் கணக்குக் காட்டினார்கள். 


அதில் தில்லுமுல்லு நடந்திருப்​பதாக அப்போது புகார் கிளம்பியது. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்புப் பிரிவின் மயிலாடுதுறை துணை ஆணையர் இளம்பரிதி, திருப் பணிகள் பிரிவின் சென்னை இணை ஆணையர் திருமதி ஹரிப்பிரியா ஆகியோர் மீது இப்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.



எப்படி ஊழல் நடந்தது என்று அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''மார்க்கண்டேயருக்குத் தங்கக்கவசம் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்ததும், அதற்காகக் கோயிலில் இருக்கும் தேவை இல்லாத நகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். அதில்தான் தங்கள் கைவரி சையைக் காட்டிவிட்டனர்.

 தேவைஇல்லாத நகைகளோடு பெருமாளின் நித்யபடிக்கு என்று வைத்திருந்த அரிய, பழைமையான நகைகளையும் அதில் சேர்த்துவிட்டனர். இரட்டைவடச் சங்கிலி, பொன்சங்கிலி, ஒற்றைவட வரிமணிமாலை, திருமாங்கல்யம் குண்டு, சரடு, பொன் அரசலங்கை, மாங்கா மாலை, காசுமாலை, செண்பகப் பூ மாலை, பொன்லட்சுமி டாலர் ஆகிய மிக முக்கியமான திருவாபரணங்கள் அதில் சேர்க்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.



அடுத்து, அழுக்கு அரக்கு நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். அதாவது, மொத்தம் உள்ள 7,191 கிராம் பொன்னை அழுக்கு அரக்கு நீக்கிய பின் 6,191 கிராம்தான் இருந்ததாக ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஒரு கிலோ தங்கம் இழப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அடுத்து, நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களிலும் மோசடி செய்தனர். அந்த நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட முத்து, வைரம் போன்ற விலை மதிப்புள்ள 1,895 கற்களையும் தரவாரி​யாகப் பிரித்து வகைப்படுத்தாமல் மொத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 அதில் விலை மதிப்புள்ள கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக போலியான தரம் குறைந்த கற்களை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். அடுத்து உருக்குவதற்​காக மும்பை எடுத்துச் சென்றதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பது 7,251 கிராம் பொன். ஆனால் எடுத்துச்சென்றதோ 7,295 கிராம். ஆக அதில் 44 கிராம் தங்கத்தை மோசடி செய்திருக்கிறார்கள்.



அதேபோன்று ஆணையருக்கு அனுப்பி வைத்த நகைகள் பட்டியலில் இல்லாத 13.300 கிராம் எடையுள்ள வைரக்கற்கள் பதித்த பதக்கத்தையும் எடுத்துச் சென்று உருக்கியதாகக் கணக்குக் காட்டி இருக்​கிறார்கள். அதற்கான அனுமதியைப் பின் தேதியிட்டு வாங்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே மயிலாடுதுறை நகைகள் சரிபார்ப்புத் துணை ஆணையர் இளம்பரிதிக்கும் சென்னை இணை ஆணையர் (திருப்பணி) ஹரிப்பிரியாவுக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அதனால் மூவர் மீதும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விவரித்தார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.



செயல் அலுவலர் விஜயகுமார் மீது மொத்தம் 16 வகை குற்றச்சாட்டுகளும், துணை ஆணையர் இளம்பரிதி மீது 8 குற்றச்சாட்டுகளும், இணை ஆணையர் ஹரிப்பிரியா மீது 11 குற்றச்சாட்டுகளும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது. 2008-ல் நடந்த இந்த மோசடி குறித்து 2011 மே மாதம் தான் விஷயம் தெரிந்து விசாரணை நடைபெற்றது. விஜயகுமார் மாறுதல் செய்யப்பட்டு செந்தில்குமார் என்பவர் அதிகாரியாக வந்த பிறகுதான், இதைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஜே.சி.கல்யாணி என்ற நகை சரிபார்ப்பு அதிகாரியை அனுப்பி உறுதிசெய்துகொண்ட பின்னர்தான் நடவடிக்கைகள் தொடங்கின.



இத்தகைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்​பட்​டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான காரியத்தை சிலர் தொடங்கி இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ராஜாராமை சந்தித்து நாம் விளக்கம் கேட்​டோம். 'இதுபற்றி முழுமையாகத் தெரிந்தவர் இணை கமிஷனர் தனபால்தான். அவரிடம் கேளுங்கள்’ என்றார். தனபாலிடம் இதுதொடர்பாகக் கேட்டுக் காத் திருந்தோம். இரண்டு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை.



கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் எத்தகைய அலட்சிய மனிதர்​களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது என் பதைப் பாருங்கள்!




நன்றி - ஜூ வி

Tuesday, October 04, 2011

வித்தியாசமாண கோணத்தில் ஏமாற்றப்பட்ட கும்ப கோணம் பதிவர் - உண்மை சம்பவம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு திருப்பு முனை.. ஆனால் பலருக்கு அது வெறுப்பு நிலை ஆகி விடுகிறது...நான் ஏற்கனவே பகிர்ந்த சென்னை பெண் பதிவர் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் படித்து அதே போல் தன் வாழ்வில் நடந்த ஒரு துக்க சம்பவம் குறித்து நண்பர் மெயில் அனுப்பினார்...


கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் தான்... ஒரு நல்ல காரியம் நடக்கனும்னா 1000 பொய் கூட சொல்லலாம் என்ற வாதமே தவறு.. 1000 முறை போய் சொல்லி.. அதாவது எல்லா சொந்தக்காரர்கள் ,நண்பர்கள் வீட்டுக்கும் 1000 முறை போய் சொல்லி விசேஷம் நிகழ்த்த வேண்டும்.. அதுதான் கல்யாணம்.. காலப்போக்கில் நம்ம ஆளுங்க ஏதோ  பொய் சொல்லி எப்படியோ கல்யாணம் நடத்துனா சரின்னு நினைக்கறாங்க.. . கும்ப கோணத்தை சேர்ந்த நண்பர் ஒருவரின் கதை இது..

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/march/ponguniuthiram3.jpg

பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்  பொருட்டு கடினமாக படித்து, காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தான். இது போதும் என் பிறவிப்பலனை அனுபவித்தேன் என்ற நிம்மதியில் தூக்கத்திலேயே தந்தையின் உயிர் பிரிந்தது. அன்றில் பறவை போல் இணை பிரியாதிருந்த அன்னை தன் மகனுக்காக தன் துக்கத்தை விழுங்கி முன்போல் நடமாடினார். தன் தாயே தனக்காக துக்கத்தை ஜீரணித்ததைக் கண்டு, தாயிற்காக தானும் துக்கத்தை மறந்து முன்போல் இயங்க ஆரம்பித்தான்.

இப்படியே காலம் சென்றிருந்தால், நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் விதி யாரை விட்டது. அதற்கு தெரியுமா? நல்லவன், கெட்டவன், படித்தவன், படிக்காதவன் என்று. ரஞ்சித் வாழ்விலும் விதி விளையாட ஆரம்பித்த போது அவனுக்கு திருமண வயது நெருங்கியது.



தந்தையில்லாத குறை தன் மகனுக்கு தெரிய கூடாதென்று பார்த்து பார்த்து மகனுக்கு பெண் தேடினாள் அந்த தாய். தாய் மீது கொண்ட அன்பினால் எதிலயும் தலையிடாமல், தாய் மேல் பாரத்தைப்  போட்டுவிட்டு, ஏகப்பட்ட‌ கனவுகளுடன், தரகர் மூலம் வரனாக வந்த ரேவதியை பெண்பார்க்க சென்றான். ஒரே பெண். இளங்கலை கணிதம் படித்த, சமையல், வீட்டு வேலை அனைத்தும் தெரிந்த பெண் வரனாக வீடு தேடி வந்தது.


நிமிர்ந்தும் பாராத அடக்கம் ரஞ்சித்திற்கும், எந்நேரமும் அம்மாவுடனோ, உறவுப் பெண்கள் துணையுடன் இருந்த வெட்கம் தாயிற்கும் பிடித்துப் போகவே சம்மதம் சொல்லி பிப்ரவரி 2005 திருமண தேதி குறிக்கப்பட்டது.


வருங்கால மனைவியுடன் பேச ஆசைப்பட்டு, போன் போடும்போதெல்லாம் குளிக்குறா, வெளியில் போயிருக்கா, தூங்குறா, அவளுக்கு வெட்கமா இருக்காம் என்ற பதில்கள் வந்தாலும், சரி ஆத்து தண்ணியை, கிணத்து தண்ணியா கொண்டுபோகப்போகுதுனு தன் ஆசைகளை திருமணத்திற்கு பின் என ஒத்தி வைத்தான்

மணநாளும் வந்தது, திருமணமும் நடந்தது.  எப்பவும் தோழிகளுடனோ, உறவு பெண்களுடனோ  இருந்ததைக்  கண்டு சற்று எரிச்சல் பட்டாலும், தன் மனைவி, உலகம் அறியாதவள் அவளுக்கு நாம்தான் உலகத்தை புரிய வைக்க வேண்டுமென நினைத்து. தன் சின்ன சில்மிஷங்களை ஒத்திவைத்தான்.

மோகம் தீர்க்கும் முதலிரவு அறையில் உள்நுழைந்த மனைவியை கரம்பற்றி, அருகமர்த்தி பேச முயலும்போது, திக்கி திணறி பதிலுரைத்த போது, சிறு பெண்ணிற்கு பயம் என நினைத்து, பயத்தை போக்க கட்டியணைத்தபோது, வெறிவந்தவள் போல் அவனை கீழேத் தள்ளி, படுக்கையை கசக்கி, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி மயங்கி விழுந்தவளை சற்று பயத்தோடுதான் பார்த்தான். இருந்தாலும் தாயின் மனம் கோணிடாமல் மறைத்து, விருந்து, மருந்தெல்லாம் முடித்து காஞ்சிப்புரத்திற்கு தனிக்குடித்தனம் வந்தாகிவிட்டது.

உறவினர்களெல்லாம் கலைய, தாயும், மகனும், மருமகளும் மட்டுமே. மெல்ல மெல்ல பெண்ணின் சாயம் வெளுக்க தொடங்கியது. எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை. சிறு பிள்ளைபோல டி.வி, விடியோ கேம்ஸ், தாயம் இதெல்லாம் ஆடுவதும், சாப்பிடுவதும், உறங்குவதும் தான் பிரதான வேலையே. சரி செல்லமாக வளர்ந்தப் பெண்,  குழந்தை பிறந்தால் சரியாகிடும்டா என மகனுக்கு ஆறுதல் சொல்ல, அப்போதான் மகன் வெடித்தான் அவ இன்னும் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்துவரலைனு. மகனின் எதிர்காலமே குறியென நினைத்து கஷ்டத்தையெல்லாம் தாங்கிய தாய் பொங்கியெழுந்து, மருமகளை அழைத்துக் கொண்டு சம்பந்தி வீட்டிற்கு நியாயம் கேட்க போனவளுக்கு அதிர்ச்சியும், அவமானம் மட்டுமே பதிலாய் கிடைத்தது.



ரேவதி மனதளவில் குழந்தையாகவும், உடலளவில் குமரியாகவும் இருக்கும் விஷயம் பேரிடியாய் இறங்கியது. படிப்பும் டிகிரிலாம் ஏதுமில்லை எனவும் தெரிய வந்தது. சரியென்று மனதை தேற்றிக்கொண்டு, தனக்கு மகள் இல்லை, அதனால் மகளாய் நினைத்து பார்த்துக் கொள்கிறேன் என திரும்ப அழைத்து வந்து மகனை சமாதானப்படுத்தி,மருத்துவ சிகிச்சை செய்தால் சரியாகிடும் னு மகனை தேற்ற தொடங்கினாள். அக்கம் பக்கம் வீட்டில் போய் திருடுவது, பொருட்களை உடைப்பது, மரியாதையில்லாமல் பேசுவது என நாளுக்கு நாள் ரேவதியின் அட்டகாசம் அதிகமாகியது,  அக்கம் பக்கம் வீட்டினர் வந்து புகார் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


மனம் நொந்து போன தாயும், மகனும், ரேவதியை அவள் பிறந்த வீட்டிற்கே கொண்டு போய் விட்டுட்டு, இவளை சமாளிக்க முடியலை, இவளால் எங்களுக்கு கஷ்டம்தானே தவிர , மகிழ்ச்சியில்லை, அதனால் விவாகரத்து செய்ய போறோம்னு சொல்ல, தாராளமாக செய்யுங்க, ஆனால், 50 லட்சம் ஜீவனாம்சமா குடுத்துடுங்க, இல்லைனா வரதட்சனை கேட்குறீங்கனு உங்க மேலயே புகார் குடுப்போம் என்ற மிரட்ட, மிரட்டலுக்கு பணியாததால் பொய் புகாரளித்து, தாயையும்,மகனையும் சிறையில் அடைத்தனர்.


எப்படியோ போராடி, உண்மையை வெளிக்கொணர்ந்து,ஒருவழியாய் விவாகரத்து வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்தித்ததால் மனம் நொந்து போனார்கள் இருவரும். மெல்ல மெல்ல தன் கண் முன்னாலேயே தன் இயல்பை இழந்து சீரழியும் மகனைக் கண்ட தாய் மனதின் பாரம் தாளாமல் இதயம் வெடித்து இறந்தே போனாள். ( ஹார்ட் அட்டாக்)


தன் திருமண வாழ்வு பொய்த்து போனது, சமூகத்தில் தான் பட்ட அவமானம், தாயின் மரணம் எல்லாம் சேர்ந்து அவனை இன்று கவலையற்ற மனிதனாய் "மனநல காப்பகத்தில்" வாழ வைத்துள்ளது.


இதில் யார் செய்த  தவறு  ரஞ்சித்தின் இன்றைய நிலைக்கு காரணம்:?


1. பாசம் கண்ணை மறைக்க தீர விசாரியாமல் மணமுடித்த தாயின் மீதா?

2.தாய்ப்பாசம் கண்ணை மறைக்க, கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்ன ரஞ்சித் மீதா?

3. பணத்திற்கு ஆசைப்பட்டு, உண்மைகளை மறைத்து, மணமுடித்த தரகர் மீதா?


4. திருமணம் செய்தால் தன் மகள் நோய் குண்மடையுமென்று நம்பி அப்பாவி பிள்ளைத் தலையில் கட்டி, மகள் வாழ்க்கையை காசாக்க நினைத்த பெண்ணின் பெற்றோர் மீதா?


யார் மீது தவறென்றாலும், பாதிக்கப்பட்டது ரஞ்சித்தும் அவன் தாயும்தான். இனி கோடிகோடியாக செலவழித்தாலும், ரஞ்சித்தின் தாயோ, இல்லை ரஞ்சித்தின் வளைமையான எதிர்காலமும், வனப்பும் ஆரோக்கியமும் திரும்பவருமா? சிந்தீப்பார்களா ரேவதியின் பெற்றோர் போன்ற மன நிலையை கொண்டோர்.


இந்த சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

1. திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், பொண்ணும் அவசியம் சந்தித்து பேச வேண்டும்.. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் சில நிமிடங்கள் பேசினால் தப்பில்லை..

2. அக்கம் பக்கம் நல்லா விசாரிக்கனும்..

3. வரன்களின் நண்பர்கள், அக்கம் பக்கம், ஆஃபீசில் பணிபுரிபவர் என விசாரிப்பது நல்லது.

4. ஜாதகப்பொருத்தம் பார்ப்பது போல் திருமணத்துக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியானவர்தானா ? என்பதை  அறிந்து கொள்வது அவசியம்

(ஏன் எனில் எனக்குத்தெரிந்து 24 வயதாகியும் பூப்பெய்தாமல் மணம் முடித்துக்கொடுத்து விவாக ரத்து வரை போன கதை நடந்திருக்கிறது பல இடங்களில்)

5. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகப்போயிடும் என்ற வாதம் அபத்தமானது..