Showing posts with label MR BEEN. Show all posts
Showing posts with label MR BEEN. Show all posts

Saturday, October 01, 2011

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

http://www.allmoviewallpaper.net/wp-content/uploads/Johnny-English-Reborn-Wallpaper-06.jpgஅடிதடி ஆக்‌ஷன் ஜேம்ஸ்பாண்ட் படங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு அட்டகாசமான காமெடி கலாட்டா நகைச்சுவை படம் தான் இது.. குழந்தைகளுடன் அனைவரும் காணவேண்டிய  மிக கண்ணியமான நகைச்சுவைப்படம்

டிஸ்மிஸ் செய்யப்பட்ட சீக்ரெட் ஏஜெண்ட் ஹீரோ மிஸ்டர் பீன் எனப்படும் இங்க்லீஷ். இண்ட்டெர்நேஷனல் லெவெலில் முக்கிய தலைவர்களை போட்டுத்தள்ளும் கும்பலை பிடிக்க இங்கிலீஷ்தான் சரியானவர் என மேலிடம் நினைக்கிறது.. அவரை மீண்டும் பணிக்கு வர வற்புறுத்துகிறது.. ( இந்த சீன் விக்ரம் படத்தில் கமலை சாருஹாசன் வற்புறுத்துவதை நினைவு படுத்தியது.. )

ஓபனிங்க் எண்ட்ரியே கலக்கல் காமெடி.. 36TH ஷாலின் டெம்ப்பிள் படத்தை நக்கல் அடிக்கும் வகையில் மிஸ்டர் பீன் செய்யும் காமெடி சேஷ்டைகள் நரசிம்மராவ் பரம்பரையைக்கூட ரசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும்.. 

அதே போல் எதிராளியை துரத்திக்கொண்டு ஓடும் சேஸிங்க் காட்சியில் ஜாக்கி சானின்  படங்களில் வரும் ஜம்ப்பிங்க், தகிடு தித்த சாகஸங்களையும் வாரு வாரியிருக்கிறார்.. ஆனால் ஜாக்கிசான் ரசிகர்களும் ரசிக்கும் வகையில்.. 

வில்லனின் ஆள் 50 அடுக்கு மாடியில் இருந்து மூங்கில் கம்பங்களில் கால் வைத்து சாகஸமாக , கஷ்டப்பட்டு இறங்க, ஹீரோ அசால்ட்டாக லிஃப்டில் வந்து அவனைப்பிடிப்பது....உயரமான இடத்தில் வில்லன்  அநாயசமாக ஜம்ப் செய்ய இவர் அசால்ட்டாக கேட்டை திறந்து வெளியேறுவது எல்லாமே டாப் கிளாஸ் காமெடி.. 

http://www.johnny-english.com/images/assets/trailer_thumb.png
காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1.  நீ இப்போ இளைஞன் இல்ல.. ஆனா முதுமைல தான் பக்குவம் வரும்.. நீ இப்போ கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு..

அப்போ நான் பயிற்சில தேறிட்டேனா?

இல்லை, இருந்தாலும் நீ போய்த்தான் ஆகனும்.. மேலிட உத்தரவு.. 

2.  லேடி - கேமராவைப்பாருங்க....

எஸ்...

கேமராவை மட்டும் தான் பார்க்கச்சொன்னேன், சிரிக்கச்சொல்லலை.. 

3. லேடி - உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கோம்..

கேள்விப்படாம இருந்தாதான் ஆச்சரியம்.. 

4.  டேய்.. உன்னைப்பார்த்து எவ்ளவ் வருஷம் ஆச்சு.. நீ இன்னும் மாறவே இல்லை.. மொக்கையா அப்டியேதான் இருக்கே.. 

5.  ஹாய்.. நாம பார்த்து எவ்ளவ் நாட்கள் இருக்கும்..?

சரியாக ஞாபகம் இல்ல.. 5 வருஷம், 4 மாசம், 7 நால் ஆஇ இருக்கும்னு தோணுது.. ( நக்கலு!!)

6.  சாரி மிஸ்டர் இங்கிலீஷ்.. உங்களுக்கு எந்திரிச்சு நின்னு மரியாதையா வணக்கம் வைக்கனும்னு நினைக்கறேன்.. ஆனா ஆண்டவன் என் காலை எடுத்துட்டான்..

ஓகே நோ பிராப்ளம் சார்.. கை குடுங்க.. வீ வில் ஷேக் த ஹேண்ட்ஸ்,...

சாரி.. அதுவும் ஒரு ஆக்சிடெண்ட்ல பணால்.. இது இயந்திரக்கை தான்..

ஓ!! எனக்கு ஒரு டவுட்.. உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னா  டாக்டர்ட்ட காட்டுவீங்களா? அல்லது மெக்கானிக் கிட்டே காட்டுவீங்களா? ( இரும்புக்கை மாயாவி கேரக்டரை கிண்டலிங்க் )

7.  நாம் எப்போதும் அமைதி வழிகளையே கடைப்பிடிக்கனும்..

அமைதி வழிகளையே கடைப்பிடிக்கனும்னு ஏன் இவ்ளவ் சத்தமா சொல்றீங்க.. ?

8.  வாய்ஸ் மாத்தற பபிள்கம்மை இங்கே வெச்சிருந்தேன், யாராவது பார்த்தீங்களா?

(ஹாலில் இருக்கும் 7 பேரும் சும்மா இருக்க அதை சாப்பிட்ட பீன் வேறொரு வாய்சில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை கணக்காய் )

இல்ல நான் எடுக்கல

http://www.stardusttrailers.com/gallery_film/Johnny_English_Reborn(movie_wallpaper_pictures_photo_pics_poster)Johnny_English_Reborn_3.jpg

9.  யாரைத்தேடறே?

இங்கே எங்காவது சோடாபுட்டி போட்ட சப்ப மூக்கு சைனாக்காரன் இருக்கானான்னு பாரு..

10.  சீக்ரெட் ஏஜெண்ட் கோர்டு வோர்டாக - உங்க பாட்டிக்கு உடம்பு சரி இல்லையா?

பீன் - அவங்க இறந்து பல வருஷங்கள் ஆச்சே?

11.  யார் நீங்க?

நான் சின்ன ஆள் தான்.. ஆனா பெரிய வேலை செய்யற சீக்ரெட் ஏஜெண்ட்...

12.  லேடி - என் பேரு ஷர்மிளா....

இருந்துட்டுப்போங்க.. அதுக்கென்ன இப்போ?

13.  பிரைம் மினிஸ்டர் ரொம்ப கவலையா இருக்கார் மிஸ்டர் பீன்....

அவர் மினிஸ்டரா இருக்கறதால மக்கள் தானே கவலைப்படனும்?

14.  எனக்கு கால்ப் விளையாடத்தெரியாம இருக்கலாம், ஆனா  பேட் எப்படி பிடிக்கறதுன்னு கூடவா தெரியாம இருக்கும்?

15.  MI - 7 ஒரு களவாணி..

இல்லை , உளவாளி..

ஒரு வேளை உளவாளியா இருக்கும் களவாணியா இருக்குமோ?

16.  மிஸ்டர் பீன்.. நீங்க பண்றதெல்லாம் ஓவர் பில்டப்பு.. ஆனா ஒரு இழவும் உங்களுக்குத்தெரியல..

 http://15img.skins.be/3/2/6/5/4/4/5/277350691-rosamundpike-johnny-english-reborn-photo.jpg


அந்நியன் படத்தில் வரும் க்ளைமாக்ஸ் சீன் போல் இந்தப்படத்திலும் கலக்கலான,ஒரு சீன் உண்டு..

வில்லன் ஹீரோவுக்கு மூளையை கட்டுப்படுத்தும் மருந்தை தந்து விடுவான்.. அதைக்குடித்தபின் ஹீரோ பிரைம் மினிஸ்டரைப்போட்டுத்தள்ள ரிவால்வரில் குறி வைப்பார்.. உள்ளுணர்வு தலை தூக்கும்போது அவரே அவரை தடுப்பார்.. இந்த சீனில் மிஸ்டர் பீனின் நடிப்பு அபாரம்..

இறந்து விடும் நிலையில் இருக்கும் பீனை ஒரு ஃபிகர்  லிப் டூ லிப் கிஸ் கொடுக்க பார்ட்டி எந்த சொரனையும் இல்லாமல் கிடக்க  அவர் விலகிச்செல்லும்போது, கண்களைத்திறக்காமல் உதடுகளை மட்டும் குவித்து ஏன் நிறுத்தீட்டீங்க? கமான் எனும்போது கிளாமரான இளமைக்கொப்பளிக்கும் காட்சி..

 உயர் அதிகாரியுடன் ஹீரோ பேசிக்கொண்டிருக்கையில் அவரது செல்லப்பூனையை ஜன்னலில் இருந்து தெரியாத்தனமாக தள்ளி விட , முதுகை அவருக்குக்காட்டியபடியே , பூனையை கையில் வைத்து நீவுவது போல் டெமோ காட்டுவதும், அப்போது உள்ளே வரும் பி ஏ கீழே விழுந்த பூனையுடன் வரும்போது அசடு வழிவதும் அக்மார்க் பீன் ஸ்பெஷல் முத்திரை.

http://www.joblo.com/newsimages1/rosamundpike2353.jpg.

பிரமாதமான பொழுதுபோக்குப்படமான இந்தப்படம் பற்றிய ஃபாரீன் விமர்சகர்களின் கருத்து படம் சராசரி, சுமார் என்ற கருத்தே நிலவி வருகிறது.. நான் 6 ஆங்கில விமர்சனங்கள் படித்தேன், அனைத்துமே அப்படியே சொல்லி வந்தன..ஆனால் தியேட்டரில் நம் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பும் , சிரிப்பும் தமிழன் என்றென்றும் நகைச்சுவைப்படத்தை அட்டகாசமாய் ரசிப்பான் என்றே கட்டியம் கூறியது..

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்.... 

Director:

Oliver Parker

Writers:

William Davies, Hamish McColl (screenplay), and 2 more credits »
\